Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points88820Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்10Points14707Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3125Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20352Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/30/24 in Posts
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
தோழர் அனுரவுக்கு எனது நட்பின் அடையாளமக உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பென்பதற்கிணங்க ஒரு இடுப்பு பட்டி எனது உபயம், 135 ஆசனங்கல் கிடைக்குமாம் என தேசிய புலனாய்வு கூறியிருக்காம் சுமோ, கஜேக்கு மொத்தமாக 15 கிடைக்குமாம், கூட்டணி அமைச்சால் 150 வருமாம், அதனால நான் உங்கள் நண்பர் (யாழ்கள உறவுகள் அனைவரும் நண்பர்களே) உங்கள் நண்பர் எனக்கும் நண்பர்தானே? அனுரவுக்கு மட்டும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் சும்மும், கஜேயும் அந்த அணியில் இருப்பதால் ஒரு பாதுகாப்பிற்கு அந்த இடுப்பு பட்டி.3 points
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அண்ணை, கடும் ரகசியம் ஒன்று........... அவர் போய் வருகிற அந்தக் கார் அரசாங்கக் கார் இல்லை...... நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது..............🤣. பெட்ரோல் வாங்க காசு கொடுத்து விட்டே பெருமை பேசும் இந்த உலகில், காரையே வாங்கிக் கொடுத்து விட்டு நாங்கள் கம்மென்று இருக்கின்றோம்...........😜 இலங்கையில் இப்ப இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான்.......... கார் பிரச்சனை மட்டுமே.......... அங்கே எந்தக் காரை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதே அங்குள்ள ஒரு பிரச்சனை..............😀 முழு இலங்கையையும் ஒரு 'சொப்பன சுந்தரி' என்று இந்திய நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.......... இப்ப எவர் வைத்திருக்கின்றார்கள் என்று கேட்பார்கள்............. கோவிட் தொற்றுக் காலத்தில் ஐங்கரநேசன் ஒரு அறிக்கை விட்டிருந்தவர். அதை வாசித்த பின், வாழ்நாளில் இனி ஐங்கரநேசனின் ஒரு சொல்லைக் கூட வாசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அடக் கடவுளே............ இன்றைக்கு விரதம் உடைந்து, வாசிக்க வேண்டியதாகப் போய் விட்டதே...........🤣.3 points
-
ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
3 points
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தாயகத்தில் தேசிய அரசியலில் குதிப்பவர்கள் சிவப்பு-மஞ்சள் வர்ணங்களின் வெவ்வேறு கலவைகளில் கொடிகள் வைப்பது போல தலீவர் விஜயும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கொஞ்சம் கடுமையான சிவப்பையும் மஞ்சளையும் (ஸ்பானிஸ் தேசியக்கொடி மாதிரி) தேர்ந்தெடுத்துள்ளார். விஜயின் கலவையான கதம்ப அரசியலுக்கு ஈழத்தமிழரும் முட்டுக்கொடுக்க இந்த வர்ணங்களே போதும்😆3 points- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந்தேன்… நீங்கள் ஏதோ சீமானின் செயல்பாடு மட்டும்தான் தமிழ்தேசியம் என்பதுபோலும் சீமான் மட்டுந்தான் தமிழ் நாட்டீல் இருக்கும் ஒரேஒரு தமிழ்தேசியவாதி என்பது போலும் எழுதிதள்ளி இருக்கிறீர்கள்… சீமான் வட்டத்தை விட்டு கொஞ்சம் வெளீல வாங்க.. தமிழ்தேசியம் பரந்தது பெரியது… சீமானுக்கு முன்னம் இருந்தே தமிழ் தேசியத்தை பேசும்பல அமைப்புகள் இயக்கங்கள் தமிழ் நாட்டில் உண்டு.. சீமான் சிலதவறுகள் தமிழ்தேசியத்தை பின்பற்றுவதில் செய்திருந்தால் விஜைபோல் இன்னொருவர் அவற்றை திருத்தி நவீன காலத்துக்கு ஏற்றமாதிரி தன்வழியில் கொண்டுபோவார்.. திராவிட சித்தாந்தம் பேசும் கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் எத்தனை இருக்கின்றன.. தமிழ்தேசியத்துக்கு மட்டும் சீமான் குத்தகையா..? எத்தனையோ பேர் இனி வருவார்கள்.. இனறு விஜய் ஆரம்பித்து இருக்கிறார்.. உங்களுக்கு தமிழ்தேசியம் மேல் வெயித்தெரிச்சல் … சீமான் மேல் அல்ல போல இருக்கிறது..3 points- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
புலவர் ஓணாண்டியார் இப்பெல்லாம் கவிதையை விட்டுட்டு நல்லா கதை எழுத ஆரம்பித்து விட்டார். விஜை எஸ் ஏ சியின் மகன் - எஸ் ஏ சி திராவிட அரசியலில் வந்தவர். விஜயகாந்த் திமுக ஆதரவில் இருந்த காலத்தில் எஸ் ஏசியும் அதே நிலைபாட்டில்தான் இருந்தார். அது மட்டும் அல்ல கருணாநிதியின் பல திரைக்கதைகளை இயக்கும் அளவுக்கு திமுகவுக்கு திராவிட அரசியலுக்கு நெருக்கமானவர், இதுதான் விஜையின் அரசியல் ஆரம்ப புள்ளி. அடுத்து விஜை பாதி மலையாளி. விஜையின் அம்மா சோபா, மலையாள பாடகர், மை மோகனுக்கு முன்பு குரல் கொடுத்த, சுரேந்தரின் அக்கா. ஆகவே சீமானின் இனத்தூய்மை திராவிட எதிர்ப்பை விஜை விரும்பினாலும் கையில் எடுக்க முடியாது. சீமானை போல் விஜை தான் மலையாளி என்பதை மறைக்கவும் முடியாது. ஆகவே விஜையால் திராவிட கொள்கையை புறம் தள்ள முடியாது. அடுத்து விஜை என்றும் தன் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்தவரில்லை. ஆகவே சீமானின் சங்கி-தமிழ்-தேசியத்தின்- தாய் மதம் திரும்பும் கொள்கையும் அவருக்கு ஏற்புடயதல்ல. அத்தோடு பெரியாரோடு முரண்படவோ, தெலுங்கு வழி சாதியினரை மூர்க்கமாக எதிர்கவோ கிறிஸ்தவ வெள்ளாள சமூகத்கை சேர்ந்த விஜைக்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவரின் நேற்றைய இரசிகர், இன்றைய தொண்டர் பலர் தெலுக்க்கு வம்சாவழியினர். ஒவ்வொரு வோட்டும் தேவை என கருதும் எந்த அரசியல்வாதியும் பெரும் இனக்கூட்டங்களை பகைக்கமாட்டார். அது சீமானை போல ஆட்சிக்கு வருவதில் ஆர்வம் இல்லாத, கொடுப்பனவுக்கு வேலை செய்யும் எஜெண்டுகள் செய்யும் வேலை. சகல அரசியல்வாதிகளும் செய்வது சகலதும் அரசியலின் பால்பட்டே. ஆனால் விஜை திராவிடத்தை உள்ளிருந்து கொல்ல முயல்கிறார் என்பது ஓணாடியார் விட்டத்தை பார்த்து எழுதிய அருமையான கற்பனை. தேள்வடிவ தாக்குதல், சிலந்தி வடிவ தாக்குதல், அரூஸ், நிலாந்த்தன், திருநாவுக்கரசு எல்லாருக்கும் கற்பனை வளத்தில் டப் கொடுக்கிறார் ஓணாண்டி. புலிகள் போராட்டம் முடிவுக்கு வரும் தறுவாயில் - தம்மை தாமே தேற்ற பலர் இப்படியான கதைகளை அவிழ்த்த்து விட்டு தாமும் பேயராகி, வாசிப்பவரையும் பேயனாக்கினார்கள். விஜையின் வரவு, பெரியாரை நடுநாயகமாக்கி அதன் மூலம் விஜை சீமனை புறம்தள்ளியமை மூலம், சீமானின் அரசியல் கிட்டதட்ட சாம்பல் கரைக்கும் நிலைக்கு வந்து விட்டதை கண்டு மனம் ஒப்பாத அவரின் ரசிக சிகாமணிகள் இப்படியான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என நான் நினைக்கிறேன்.3 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
🤣 எனக்கே அனுரகுமார திசநாயக்கவுக்காக ஈழம் தமிழ்ஸ் அடிக்கின்ற புகழ் அலம்பல்கள் இருளுக்கு எதிரான ஒளியாக வந்தவனே முடியவில்லை உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை எனக்கு கிடைத்த உளவு தகவலின்படி 23 செப்ரெம்பர் 2024 ல் இருந்து ரசோதரன் அண்ணா தன்னுடன் கூடப்படித்த தலைவருக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வைக்கும் படி தனது வங்கிக்கு standing order கட்டளை வழங்கியுள்ளார்.2 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை2 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
வடசப் குறூப்புக்களில் ஏற்கனவே தோழர் அனுராவின் வாழ்த்து செய்தி உலா வரத்தொடங்கிவிட்டது அதுவும் அலை அலையாக ...முக்கியமா 80 களில் பல்கலைகழக ங்களில் பட்டம் பெற சென்ற நண்பர்களின் வட்சப் குறூப்புக்க்க்ளில்2 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அதற்கான தேவை இருப்பதாக தெரியவில்லையே காரணம் புலம்பெயர்ஸ் ஈழம் தமிழ்ஸ் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தேவைகள் அவரது வாழ்கை தேவைகளை தாங்களே போட்டி போட்டு நிறை வேற்றுகின்றார்கள் 😂 நாளைய தீபாவளி அனுரகுமார திசநாயக்கவிடம் இருந்து கிடைக்க போகின்ற வாழ்த்தை கொண்ட ஈழதமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் வரலாற்று சிறப்பு கொண்ட தீபாவளி2 points- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பய்யன், இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்! (நேருக்கு நேர்) 😂2 points- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣............ என்ன குமாரசாமி அண்ணை..........அங்கே நாலு பேப்பர், இங்கே நாலு பேப்பர் என்று ஆடு கடிச்ச மாதிரி மேலால வாசித்து வாசித்து, கசக்கி எறிந்த கடதாசி குப்பையாகக் கிடக்குது எங்களின் தலைகளுக்குள்.......... ஏதோ பொழுது போனால் சரி தான்..............2 points- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜. 'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன். புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............ ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!2 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
2 points- பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி
2 points- கருத்து படங்கள்
2 points2 points- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
பையனின் வயசு கொந்தளிக்க வைக்குது , கொந்தளிக்கணும் அப்போதானே பையன், ஆனா பையா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு அது நாம் விரும்பாவிட்டாலும் எம்மை ஏற்றுக்கொள்ள வைக்கும். இது பையனுக்கு அறிவுரை சொல்ல இல்லை பொதுவாக மனசில் பட்டதை சொல்கிறேன், உக்ரேனுக்கான உதவிகள் என்று நேட்டோ இதுவரை செய்தது யானை பசிக்கு சோளம் பொரிதான், ஐரோப்பாவின் ஆயுத தொழிற்சாலைகள் உக்ரேனுக்காக இரவுபகல் வேலை செய்தால் உக்ரேனுக்கு ஆயிரக்கணக்கில் செய்மதியால் வழிநடத்தப்படும் ஏவுகணைகள், மல்டி பரல்கள் ஆட்லறிகள், டாங்கிகள், வெடிபொருட்கள் என்று கொடுத்திருக்கலாம், நூற்றுக்கணக்கில் F-16,F-35 கொடுத்திருக்கலாம், கொடுத்திருந்தால் உக்ரேன் படைகள் மொஸ்கோ வரை சென்றிருக்கும், ஆக குறைந்தது ரஷ்யாவின் எல்லைவரை உக்ரேனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும், .ஆனா அவர்கள் கொடுப்பதோ நூற்றுக்கணக்கில்தான் அதுவும் உக்ரேன் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிய பின்புதான், உலகின் பெரும் வலிமையான விமானபடைகளில் ஒன்றான ரஷ்ய விமானபடையை எதிர்க்க நேட்டோ கொடுத்தது ஆக 16 விமானங்கள், அதுவும் பூரண பயிற்சி பெறாத உக்ரேன் விமானிகளுடன், அதனால்தான் ஆரம்பத்திலேயே ஓரிரு F 16 விமானங்கள் உக்ரேன் விமானபடையின் தவறான இயக்கத்தால் அழிந்தது. ஆனாலும் நேட்டோவின் சிறு உதவியை கொண்டு போரிடும் உக்ரேனையே ரஷ்யாவால் இரண்டு வருடங்களாக முழுமையாக கைப்பற்ற முடியவில்லை . இறந்தவர்கள் காயப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்களென உக்ரேனின் மக்கள் தொகை இரு வருடத்தில் ஒருகோடியால் வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஐநா அறிவித்துள்ளது, காசா போரில் ஆயிரம் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வரலாம், ஆனால் பலமடங்கு வலிமைமிக்க எதிரியால் அவர்களும் அழிக்கப்படுவார்கள் அதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் அழிவுநிலைக்கு வருகிறதென்றால் அமெரிக்கா நேரடியாக களத்தில் குதிக்கும் என்பதற்கு இப்போதே அவர்கள் இஸ்ரேல் அருகே நிறுத்தி வைத்துள்ள விமானம்தாங்கி கப்பல்கள் சாட்சி, அமெரிக்கா நேரடியாக குதித்த எந்த போரிலும் ஐரோப்பியநாடுகள் அவுஸ்திரேலியா கண்ணை மூடிக்கொண்டு குதிக்கும் என்பதற்கு வியட்நாம் போரிலிருந்து,ஈராக், ஆப்கான் போர்கள் சாட்சி. அவர்களை பொறுத்தவரை தமது மேலாதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எவரும் சவாலாயிருக்க கூடாது, இருந்தால் அழித்தொழிக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலிருப்பவர்கள். இப்போது காசா நிலவரம் ஏறக்குறைய முடிவுக்கு வருகிறது, வடக்கு காசாவில் கதவு போட்டு பூட்டியமாதிரி சில லட்சம் மக்களை முற்றுகைக்குள்ளாக்கி அந்த கதவினூடாக மக்கள் அனைவரையும் பத்துநாட்களுக்குள் வெளியே வர சொல்லி ஒவ்வொருவராக பரிசோதித்து வெளியே எடுக்கபோறான், அதற்குள் வெளியேறாதவர்கள் கமாஸ் இயக்கத்தினர் என்று முடிவு செய்து அந்தபகுதி முழுவதும் பெரும் அழித்தொழிப்பு போரை ஆரம்பிக்கபோறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன, இது அச்சுஅசல் முள்ளிவாய்க்கால் முடிவுதான். எனக்கு தினமலரின் பிற செய்திகளுடன் உடன்பாடு இல்லையென்றாலும், இந்த செய்தியில் எந்த பொய்களும் இல்லையென்பதால் இணைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் காயப்பட்டவர்களென ஏறக்குறைய இரண்டரை லட்சம் காசா மக்கள் கதை முடிந்தது ,இறுதி முற்றுகையுடன் அது இரட்டிப்பாகலாம் அப்போது இழந்த மக்கள் தொகை மொத்த காசா மக்கள் தொகையில் கால் பங்கு ஆகலாம். வெறும் பூச்சாண்டி காண்பிக்கும் ஈரானை நம்பி அழிந்துபோகும் கமாஸ் தனது நிலத்தையும் மக்களையும் சேர்த்தே அழித்துவிட்டு செல்கிறது. தனது இனத்திற்காக போர் புரிவது மட்டும் போராட்டமல்ல புறநிலைகள், எதிரியின் பலம் அனைத்தும் கணக்கிட்டு புத்திசாலிதனமா செயற்படுவதும் இனத்துக்கான போராட்டம்தான். ஒருவருடமாக எகிப்து கத்தாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டாமல் வீம்பு பிடித்து இப்போ அழிவின் நிலைக்கு சென்றுள்ள கமாஸ் தனது மக்களுக்காக எதை விட்டு செல்ல போகிறது என்பதற்கு கீழே சில காணொலிகள். இங்கு சிறியவர்களின் படங்களை மட்டும் ஏன் இணைக்கிறேன் என்றால் பெரியவர்களில் ஏறக்குறைய அனைவருமே ஈரானின் உசுப்பேத்தலை நம்பி கமாசின் பின்னால் நின்று அவர்கள் செய்யும் அனைத்தையும்ஆதரித்து அல்லாஹு அக்பர் என்று கொடி பிடித்தவர்களே.2 points- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
2 points- ரசிக்க... சில, ஹாலோவீன் (Halloween) சோடனைகள்.
2 points- ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது?
ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது? 👆🏿 ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார். ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓர் சரியான தலைமை இல்லாமல், இருந்த கட்சிகள் எல்லாம் குழிபறிப்பு வேலைகளைச் செய்து தமக்குள்ளேயே மோதிச் சிதறிச் சின்னாபின்னமாகி பல்வேறு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குச்சீட்டில் உள்ள சின்னங்களைப் பார்த்தே குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் தமக்குப் பரிச்சயமான அல்லது பரிச்சயமற்ற சின்னங்களில் ஒன்றுக்கு வாக்களிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதால் எவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக்கூடும் என்பதைக் கணிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. இத்தகைய அரசியல் சூழலில் தெற்குப் பகுதியில் சிங்கள மக்களினால் உண்டாக்கப்பட்ட அநுர அலை வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள்மீதும், மலையகத் தமிழ் மக்கள் மீதும் அடித்து, மக்கள் அலையில் அள்ளுண்டுபோகச் சாத்தியம் உள்ளது. எனினும் தமிழ் மக்கள் வாக்கைச் செலுத்தும் முன்னர் நிதானமாகச் சிந்தித்து தமது ஜனநாயகக் கடைமையைச் செய்யவேண்டும். அநுர திசநாயக்கா ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின்னர் தினமும் அரசியல் ஆய்வாளர்களாலும், சமூகவலை ஊடகங்களில் கருத்துரைப்போர்களாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகவும், எதிராகவும், சந்தேகத்துடனும், குழப்பமாகவும் கருத்துக்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அறகலயப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கோத்தபாயவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கியிருந்தும், பொதுமன பெரமுனவின் கைப்பொம்மையாக ரணில் ஜனாதிபதியாக வந்ததை தடுக்கமுடியவில்லை. போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பலமான அரசியல் கட்டமைப்பு நாடெங்கிலும் இல்லாதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் சிங்களப் பகுதி முழுவதிலும் பலமான அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தேசிய மக்கள் சக்தியினுள் இணைந்து அறகலயப் போராட்டத்தின் விளைச்சலை அறுவடை செய்துள்ளனர். ஊழல் நிறைந்த ராஜபக்ஷர்களையும், மேற்தட்டு உயர்குழாமின் நலன்களைக் காக்கும் ரணிலையும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது உறுதியான முடிவுகளை எடுத்து தலைமைதாங்காத சஜித்தையும் சிங்கள மக்கள் பின்னே தள்ளி, சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அநுரவை தமது தெரிவாக்கி ஜனாதிபதியாக்கியுள்ளனர். அநுரவின் தேசிய மக்கள் சக்தி, அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் தக்கவைக்க காத்திரமான வேலைத் திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்தி, அதன் பலாபலன்களை அவருக்கு வாக்களித்த கீழ்த்தட்டு, மத்தியவர்க்க மக்கள் அனுபவிக்க மிகவும் கடினமாக வேலை செய்யவேண்டிய நிலை உள்ளது. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைத் திட்டங்கள் இடதுசாய்வாக இருந்தாலும், திறந்த பொருளாதாரக் கொள்கையினுள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நாட்டை, உலக நாணய நிதியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து தலைக்கு மேல் கடன்பெற்ற நாட்டை நிமிர்த்துவதும், பிற சிங்கள கட்சிகளை தலையெடுக்காமல் பார்ப்பதும் சவால் மிக்க செயல்கள். எனவே, தேசிய மக்கள் சக்தியானது ஈசலைப் போல குறுகிய ஆயுள் இல்லாமல் நீண்டகாலம் அரசை நடாத்த பல சமரசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுடனும் செய்யவேண்டிய யதார்த்த நிலையை உணர்ந்தே செயற்படுவர். இதனால் அவர்களது “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் வாக்குறுதிகளிலும், கொள்கைகளிலும் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள தேவையானதை மட்டுமே முன்னெடுப்பார்கள். சிங்கள மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றப்பாட்டை உடனடியாகக் கொடுக்கக் கூடிய செயற்திட்டங்களும், பிற அரசியல் கட்சிகளை முடக்க அவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும், குற்றங்களையும் விசாரிப்பதும், இந்தியா, சீனாவோடு சீரான உறவுகளைப் பேணுவதும், உலக நாணய நிதியத்துடன் இணைந்து அவர்கள் நிபந்தனைகளுக்கமைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகளாக இருக்கும். ஶ்ரீலங்கா முழுமையாகவே சிங்களவர்களின் தீவு என்ற தம்மதீபக் கொள்கை மகாவம்ச துட்டகைமுனு காலத்தில் இருந்து சிங்கள மக்கள்மீது படியவைக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்த சிங்கள பெருந்தேசிய உணர்வும், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட மிதப்பும் சிங்களவர்களிடமிருந்து அகலும் என்று எதிர்பார்க்கக்கூடாது. “நாம் எல்லோரும் ஶ்ரீலங்கன்” என்ற கொள்கை சிங்களவர்களைச் சிங்களவர்களாகவே வைத்திருக்கவும், சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பறங்கியர் தமது தனித்துவங்களை இழந்து, இன அடையாளங்களைத் துறந்து “ஶ்ரீலங்கன்” என்று சிங்களவர்களுடன் கலந்துகொள்ளவே வழிசமைக்கும். தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் தீர்வு என்பது முதலில் இனப்பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தி, தமிழர்களின் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினை எனக் குறுக்கி, தீர்வை புதிய யாப்பை உருவாக்குவது மூலம் கொடுக்கப்படும் அதிகாரப் பரவலாக்கம் மூலம், அதிக பட்சம் மாகாணசபைகள் மட்டத்தில், தீர்க்கவே முயலும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தையும், கட்டளை வழங்கிய அதிகாரிகளையும் பாதுகாக்கவே செய்யும். இதனை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் எண்ணம் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் தமிழர்களின் அரசியல் திக்கற்ற கடற்பயணமாகியுள்ளது. தமிழ் அரசியலில் 2009 க்குப் பின்னர் விரிசல்கள் காணப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுடன் அது சுக்குநூறாகத் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்கும் நீண்ட பாரம்பரியத்தை உடைத்து, தமிழ் வாக்குகள் முழுமையாகப் பிளவுபட்டுள்ளன. இது தமிழர்களின் அடிப்படையான இனப்பிரச்சினை மற்றும் அதிகாரத்தை பகிரும் அபிலாஷைகள் மீதான பேரம் பேசும் நிலைகளைத் தடுக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அதிகபட்சம் 16-17 தமிழ் உறுப்பினர்களே தெரிவு செய்ய்யப்படும் நிலை உள்ளது. பல்வேறு கட்சிகளும், சுயேட்சைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தேர்தலின் பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று அகதி விண்ணப்பங்களில் தேர்தலில் போட்டியிட்டமையால் தமக்கு நெருக்கடி உள்ளது என்று காரணம் காட்டவும் சிலர் போட்டியிடுகின்றனராம்! இப்படித் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப் பிரியும்போது அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்படவும், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இது வடக்கு-கிழக்கில் 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படக்கூடிய நிலையை உருவாக்கலாம். அதிலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறியுள்ளமையால், அவர்கள் மீதான வெறுப்பு பிற தமிழ்க் கட்சிகளுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் வாய்ப்புக்களைக் கொடுக்கவும் கூடும். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டமுனைந்த பொதுக்கட்டமைப்பு, பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களுக்கு வழிகாட்டமுடியாத அளவுக்கு மூக்குடைபட்டுள்ளது. இது தமிழர் சிவில் சமூகக் கட்டமைப்பின் பாரிய தோல்வியாக உள்ளது. எனவே, மக்கள் தங்களது ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் உணர்ந்து, தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்களை குப்பையில் குன்றிமணியைப் போல அடையாளம் கண்டு வாக்கைச் செலுத்தவேண்டும்.1 point- ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
1 pointஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது October 30, 2024 ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை (27.10) மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர இருப்பதாகச் சர்வதேச மட்டத்திற்குக் கூறியுள்ளார்.’ ‘அந்த அரசியலமைப்பு 2015 ஆம் ஆண்டு. மைத்திரிபால சிறிசேன ரனில் விக்ரமசிங்க அவர்களுடைய காலப்பகுதியிலே. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சி.’ ‘அந்த காலகட்டத்திலே அந்த முயற்சிலே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு ஸ்தம்பிக்கபட்டது காரணம் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார்.’ ‘அந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உச்ச நீதிமன்றம் ரணில் விக்ரகமசிங்காவின் பதவிநீக்கம் பிழை என்று தீர்ப்பளித்து மீண்டும் அவர் பிரதமர் ஆனார். ஆனால் அந்த குழப்பம் நடைபெற்றதற்குப் பிற்பாடு அந்த புதிய அரசியலமைப்பிற்கான முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆகவே இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிற அனுர குமார திசாநாயக்கா மிகத் தெளிவாக எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் அந்த 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த முயற்சியைத் தான் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாகக் கூறியுள்ளார்.’ ‘இதிலே நாங்கள் தெளிவாக பார்க்கக் கூடியது. அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு அறிமுகப்படுத்துகிறதா இல்லையா என்று.’ ‘அந்த இடைக்கால அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அறிக்கையினுடைய முன்னுரையாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதிலே செய்த முதலாவது உரையைத்தான் அதனுடன் அவர்கள் இணைத்து இருக்கிறார்கள்.’ ‘காரணம் அதுதான் அந்த முயற்சியினுடைய நோக்கத்தை குறிக்கின்ற. ஒரு பேச்சு. அந்தச் சட்டத்தினுடைய இலக்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு அறிமுகம் என்பது இருக்கும். அந்த வகையிலே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியிலே மைத்திரிபால சிறிசேனவுடைய பேச்சை தான். முன்னுரையாக அவர்கள் அதிலே இணைத்தார்கள்.’ ‘அந்த முன்னுரையில் மைத்திரிபால சிறிசேன தெளிவாகக் கூறுகின்றார் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சி நாடு. இலங்கையினுடைய இன்றைய அரசியல் அமைப்பு மாத்திரம் அல்ல. கடந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பாக தான் இருந்துள்ளதென்று.’ ‘இன்று அந்த ஒற்றையாட்சி முறைமையைத்தான் புதிய ஜனாதிபதி நிறைவேற்ற இருக்கின்றார்.’ ‘அதுதான் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் அதை எதிர்ப்பதாக இருந்தால் அதை செய்யக்கூடிய செய்ய தயாராக இருக்கின்ற ஒரே ஒரு அணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே அவ்வாறு நிகழ வேண்டும் என்றால் வடகிழக்கிலே சைக்கிள் சின்னம் குறைந்தது 10 ஆசனங்களை பெற வேண்டும். 18 ஆசனங்களில் 10 என்றால் மட்டுமே பெரும்பான்மை. அதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களைச் சைக்கிள் கட்சி பெற வேண்டும். ‘ ‘வன்னித் தேர்தல் தொகுதியிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் தெரிவு செய்தே ஆக வேண்டும். வன்னியிலே தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த நான்கு பேரில் இரண்டு பேர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளாக இருந்தால் மட்டுமே. ஒற்றை ஆட்சியை எதிர்க்கக் கூடிய பலத்தோடு நம்முடைய அணி பாராளுமன்றத்திற்கு செல்லும். அது ஒரு சாதாரண விடயம் அல்ல.’ ‘நாங்கள் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு எத்தனையோ ஆசனங்களை வென்று இருக்கிறோம் என்று புகழ் பாடுகின்ற ஒரு அமைப்பு அல்ல. எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிற ஒரு அமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த இரண்டு ஆசனங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் மன்னார் மாவட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்த மண்ணிலே சாதிக்காத ஒரு விடயத்தை தமிழ் இனத்துக்காக நாம் சாதித்தே ஆகவேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா. கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் ஆசிரியர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டச் செயளாளர் விக்ரர் தற்குரூஸ் மற்றும் அக்கட்சியின் மன்னார் வேட்பாளர் சோமநாதன் பிரசாத் உட்பட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். (வாஸ் கூஞ்ஞ) https://www.supeedsam.com/208415/1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிடதேசியத்துக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கிக்றன. 50 ஆண்டுகால அரசியல் அதிகாரத்தையும் வைத்திருக்கின்றன். அவர்கள் பெயரில் திராவிடம் என்று வாக்குகளைைைக் கவர்வதற்காக வைத்திருந்தாலும் தமிழ்தமிழ் என்றே பேசி நடித்து தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்மக்களின் வாக்குககைளக் குறிவைத்து அரசியல் நடத்திவருகிறார்கள். விஜய் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிந்து கூட்டணிக்கு அழைக்கிறார். திராவிடத்தேசியம் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வராது என்று சீமான் முதல் ஆளாக கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். சீமானைக்கழித்துப்பார்த்தால் 2 சீற்றுக்கு அதிமுக திமுக என்று தாவும் கம்னிஞ+ஸட்டுகளும் திருமா>வைகோ.காங்கிரஸ் தான் மிச்சம். விஸை பாஜகவோடு சேரமாட்hர் என்று பேசினாலும். திமுகவே பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து பாஜக எம்எல்லேக்களைப் பெறவும் பாஜக அரசில் பங்கெடுத்த வரலாறும் எல்லோரும் அறிந்ததே.திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாகச் சாடும் விஜய் அந்த ஊழல்கட்சிகளைத் தாங்கிப்பிடித்த ஊழலுக்குத் துணைபோன அதற்கு வெள்ளையடித்த கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைக்கிறார். இவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?முதலில் மாநாட்டுக்கு வந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கதிரைகளை உடைக்காமல் போகச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும். இலருந்தாலும் தம்நாட்டுத்திரை உலகின் தலைமகன் ஈழத்தின் மருமகன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். திராவிட வாக்குகள் சிதறட்டும்.1 point- ரஷ்யாவுக்கு 10,000 இராணுவ வீரர்களை வடகொரிய அனுப்பியதாக குற்றச்சாட்டு!
நான் நேற்று பார்த்து விட்டேன். கு.மா அண்ணாவின் இணைப்பில் அது தெரியவில்லை. எடுத்து விட்டார்கள்(இங்கு) என நினைத்தேன்.1 point- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
தேச வழமை சட்டம் என ஒர் சட்டம் இருந்தது அது தற்பொழுது இல்லை...என நினைக்கிரேன் சோசலிச குடியரசு ஆன பின்பு பல சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டது என அறிந்தேன் என்க்கும் உண்மை நிலை தெரியாது,,, திட்டமிட்ட குடியேற்றங்களை தடை செய்ய இந்த அதிகாரம் தேவை என நினைக்கிறேன்..அர்சியல்வாதிகள்.புத்த பிக்குமார் நினைத்த இடத்தில் குடியேற்றங்களை தடை செய்ய சில அதிகாரங்கள் தேவை...1 point- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அனுர தமிழர்களின் உரிமையை மதித்து/ஏற்று ஆட்சி செய்வாராயின் நூறு வருடங்களும் ஆட்சி செய்யட்டும்.1 point- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
நேர காலத்துக்கு படுத்து எழும்பினால்த்தான் உடம்புக்குள்ள இருக்கிற சுரப்பிகள் ஒழுங்காய் சுரக்குமாம். இத நா சொல்லல. வைத்தியர்கள் சொல்லுறாங்க.😂1 point- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
1 point- புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
இனி என்னத்த கேட்டு? என்னத்த சொல்லி?? என்னத்த செய்து??? 😜1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... எங்கள் ஊரில் போசா என்று தான் சொல்லுவோம்......... அண்ணன் தான் தெர்மகோல் என்ற சொல்லையே எனக்கு அறிமுகப்படுத்தினார்.............. அண்ணனை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.........1 point- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
இது தான் அமெரிக்கா, மேற்கின் பிரச்சனை சீன innovation செய்கிறது, செய்ய முயற்சிக்கிறது. நிறுவங்களை தடை செய்வதன் மூலம், சீனாவை முடக்கலாம் என்பது. குறிப்பாக ப்ளூம்பெர்க் இதை ஆய்வு சொல்வதில், விடயம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது (https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise) (அமெரிக்கா. மேற்கு சீனாவுடன் யுத்தத்துக்கு ஆயத்தமாக, சீன ராஜதந்திர போரியல் தத்துவ ஞானி சுன் ஸ்ஈ (Sun Tzu, மண்டரின் உச்சரிப்பு Sun (சுன்) Tzu (Zi, ஸ்ஈ) இன் வழியே, அதாவது யுத்தத்தை வென்று விட்டு சண்டையை தொடங்க வேண்டும் என்ற வழியே சீன செல்கிறது. இவரை (Sun Tzu, (சுன்) (Zi, ஸ்ஈ) ), இவரின் தத்துவங்களை அறியாதவர்கள் வாசிக்கவும் Internet இல் பரவலாக இருக்கிறது). மேற்கில் எமது தலைமுறையின் எதிர்காலம், மேற்கின் கொள்கைகளால் கேள்விக்குறி ஆகிறது. (கிடைக்கும் pie சிறியதாகும் போது, அடிப்படை தேவைகளே முன்னுரிமை எடுக்கும், பெரும்பான்மை அல்லாதோர் ஒதுக்கப்படும் நிலை வரும். பெரும்பான்மை கூட படிநிலைக்கு (hierarchy) தள்ளப்படும்.) குறிப்பாக ப்ளூம்பெர்க் இதை ஆய்வு சொல்வதில், விடயம் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது (https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise) ப்ளூம்பெர்க் இதை ஆய்வு https://www.bloomberg.com/news/newsletters/2024-10-30/us-china-tensions-latest-dc-is-struggling-to-contain-beijing-s-tech-rise The US Is Failing to Contain China’s Push for Tech Supremacy Solar panels at a photovoltaic power station at the Dunhuang Photovoltaic Industrial Park in Dunhuang, Gansu Province, China, on Wednesday, Oct. 16, 2024. Photographer: Qilai Shen/Bloomberg Gift this article In this Article By Malcolm Scott 30 October 2024 at 12:05 GMT I’m Malcolm Scott, international economics enterprise editor in Sydney. Today we’re looking at US efforts to contain China’s industrial advance. Send us feedback and tips to ecodaily@bloomberg.net or get in touch on X via @economics. And if you aren’t yet signed up to receive this newsletter, you can do so here. Top Stories The euro area’s economy expanded more strongly than expected in the third quarter — with even Germany avoiding the recession it was widely tipped to endure. UK Chancellor Rachel Reeves delivers her first budget this afternoon, set to include a package of tax hikes and extra borrowing. Follow our TopLive blog here. Coming up: The US will issue its first estimate of third-quarter gross domestic product, and South Africa’s budget is also due. China Rising When then-President Donald Trump announced tariffs on Chinese exports in March 2018, he said the levies would make the US a “much stronger, much richer nation.” Six-and-a-half years on — and less than a week ahead of a US election that may see Trump reclaim the White House — exclusive analysis from Bloomberg Economics and Bloomberg Intelligence finds that it’s China that has become stronger in many key industries since those tariffs triggered what’s now an entrenched trade war. Beijing’s industrial policies — notably Made in China 2025 — are succeeding in advancing China across an array of technologies and its export might has only increased, taking its manufactured goods surplus relative to global GDP to the largest of any country since America’s own supremacy right after World War II. China’s Achieving Growing Clout in Key Made in China 2025 Industries China has achieved a global leadership position in <b>five key technologies</b> Sources: Bloomberg Intelligence and Bloomberg Economics Now, the next leg of the race against China looms, and either Trump or Kamala Harris, his rival in the Nov. 5 presidential election, must run faster to catch it or try harder to trip it up. But while the broad mission is shared, the policies set to mark Act III in the containment effort are starkly different. Trump is proposing even more drastic tariffs of 60% on Chinese exports, something Bloomberg Economics says would effectively end trade between the two nations. Harris says such moves equate to a tax on the middle class, with analysts expecting she’d continue Biden’s policies to lure production back to the US with industrial subsidies and tax breaks while curbing exports of cutting edge chips to China. Analysts aren’t convinced either approach will do the trick. “China’s technological rise will not be stymied, and might not even be slowed, by US restrictions,” said Adam Posen, president of the Washington-based Peterson Institute for International Economics, who has conducted research for governments and central banks around the world. “Except those draconian ones that simultaneously slow the pace of innovation in the US and globally.” China, meantime, has doubled down on its quest for self sufficiency in the face of US protectionism, investing massively in electric vehicle, battery and solar technologies. That means the world outside the US is increasingly driving Chinese EVs, scrolling the web on Chinese smartphones and powering their homes with Chinese solar panels. For Washington, the risk is that policies aimed at containing China end up isolating the US — and hurting its businesses and consumers. Stella Li, an executive vice president at EV giant BYD Co., sums up China’s bravado. “We don’t need to enter the US market,” she told Bloomberg in August from the company’s headquarters in Shenzhen. “We’ve got a lot of opportunities to become a great company with the many markets outside of the US.” Need-to-Know Research Decisions on where companies invest are increasingly shaped by geopolitics, according to new European Central Bank research. Dividing the world into three blocs — a US-centered western one, a China-centered eastern one, and a neutral third — economists found that western firms have ramped up investments in friendly countries in recent years while lowering them in politically distant ones. Frequent mentions on earnings calls of “friendshoring” corroborate the findings, they said. Outflows from the euro area seem especially tilted to the US, which the ECB speculates may be due to incentives created by the country’s Inflation Reduction Act. But it works the other way around as well, with US companies turning their backs on China to the benefit of friendly and neutral nations. What all that means for trade and growth is still uncertain. While euro-area domestic production could be hit by shifting operations abroad, income generated there may also protect high-quality jobs at home. However, to the extent that a change in global investment patterns along geopolitical lines “foreshadows an accelerating fragmentation of global trade networks, the trends detected may prove detrimental to global and euro area output,” according to economists Lukas Boeckelmann, Lorenz Emter, Isabella Moder, Giacomo Pongetti and Tajda Spital.1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
செந்தமிழன் சீமான் சீறிப்பாய்ந்து உறுமி வழக்குத் தொடுத்திருப்பார்😁🤣1 point- டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்
மிச்சத்தை ஊகித்து அறியவேண்டும் . ....... எனது வாயில் இருந்து பிடுங்கி எனக்கே சூனியம் வைக்கக் கூடாது கந்தையர் . .......! 😢1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
ஈழப்பிரியன் அண்ணா வாங்கோ தமிழ் நாட்டில் போய் நாங்களும் ஆளுக்கு ஒரு கட்சில சேர்ந்து இந்த மென்டல் கூட்டத்துடன் சேர்ந்து நாங்களும் மென்டல் ஆகுவோம் லொள்😁......................... குருநாதர் @ரசோதரன் ஆதிமுக்காவில் இணைத்து விடுவோம்🥰🫶😍.....................1 point- ரசிக்க... சில, ஹாலோவீன் (Halloween) சோடனைகள்.
1 point- "விடிவை நோக்கி"
1 point"விடிவை நோக்கி" "விடிவை நோக்கி புறப்படும் மனிதா அடி வருடுவதை மறந்து விடடா குடித்து கும்மாளம் அடித்தது போதும் இடித்து முழங்கி விடியலைத் தேடடா !" "படிப்பு ஈன்ற அறிவைக் கொண்டு நடிக்கும் தலைவனை விலத்தி விடடா துடிக்கும் இதயத்தில் துணிவை ஏற்றி கூடி ஒன்றாய் விடிவை நோக்கடா!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
நான் கொள்ளை என்று வாசித்துவிட்டு முழுசுகிறேன். திரும்ப வாசிக்கும் போதுதான் புரிந்தது.1 point- வழிபாட்டுத் தலங்களில் குப்பையாகும் பூக்கள், பூங்காவுக்கு உரமாக மாறுவது எப்படி?
உண்மையில் அந்த மாநகராட்ச்சியைப் பாராட்டிட வேண்டும் . ........எல்லா இடமும் குப்பைகள் சேர்வதைத் தடுப்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் நிரந்தரமான வருமானத்தையும் உருவாக்கி விட்டார்கள் ........! 👍 அந்தக் காணொளியின் கீழ் இன்னொரு காணொளி ........ஒரு 700 ஆண்டுகள் பழமையான அழியும் நிலையில் இருந்த ஆலமரத்தை மனிதருக்கு இணையாக வைத்தியம் செய்து மீட்டெடுத்திருக்கிறார்கள் . ........! 👏1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அத்திப்பழத்தைப் பார்க்க பார்க்க அழகுதான் ..........! 😍 மனோரமா , சுருளிராஜன் & ரவிச்சந்திரன் நல்ல நகைச்சுவைப் பாடல் .........!1 point- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அனுரா மாத்தையா இப்ப புலட்புரூவ் காரில போக தொடங்கிட்டாராம்...அவரின்ட காருக்கு பெற்றோல் காசு "நானும் புலம்பெயர்ஸ் தான்" என்ற வகையில் அனுப்புகிறேன்... நாளைக்கு எதிர்கட்சிகள் சொல்லக்கூடாது இவர் அரசாங்க காசில் பெற்றோல் போடுகிறார் எண்டு .... முடிந்தால் "புலம்பெயர்ஸ் நிதியம்" ஒன்றை தொடங்கி அவரது பெற்றோல் செலவை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்....😅1 point- தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
முப்படையின்ருக்கும் கட்டளை கொடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவன் அனுரகுமார திசநாயக்கவின் மீதான பாசத்தால் நிதி அனுப்பி இருக்கிறீர்கள் புல்லு அரிக்குது அண்ணா1 point- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
தமிழரசுக்கட்சி, தற்போது புதியதொரு கண்டுபிடிப்பை பிடித்திருக்கிறார்கள். கனடாவில் குளிர் அதிகமானால் சுமந்திரனையும் சம்மந்தனையும் சொன்னார்களாம், ஊரில் யாருக்கும் குழந்தை பிறக்காவிட்டால் அதற்கும் அவர்களையே காரணமாக சொல்வார்களாம். ஏன் கனடாவுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? பிள்ளை பிறக்காவிட்டால் ஏன் இவர்களை குற்றம் சொல்லவேண்டும்? அதாவது பிழையை சுட்டிகாட்டி காரணம் கேட்டால்; அவர்களை கேலி செய்து தங்களை மறைத்துக்கொள்வது. மக்களுக்கு தெரியும், எதுக்கு யாரை காரணம் கேட்கவேண்டுமென்று. ஏதோ நகைச்சுவை விடுவது போல் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்கிறார்கள். அவர் குறிப்பிட்டு நகைச்சுவை பண்ணும் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவரும் தாயக மக்களின் உரிமைகளில் தலையீடு செய்து, தமது நலன்விரும்பிகளின் தவறுகளை மூடி மறைப்பதும் வக்காலத்து வாங்குவதும் அவரது தலையாய கடமை. யாராவது சுமந்திரன் என்றால் போதும் வந்து விடுவார் வரிஞ்சு கட்டிக்கொண்டு தூள் கிளப்ப1 point- அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
ஏராளன் நீங்கள் கூறியது போல இலங்கை 5.9 பில்லியன் அன்னிய செலாவணி இருப்பை கொண்டுள்ளது மாதம் ஒன்றிற்கு 200 மில்லியன் தொடக்கம் 350 மில்லியன் வரை அன்னியசெலாவணி இருப்பு அண்ணளவாக அதிகரிக்கிறது https://tradingeconomics.com/sri-lanka/foreign-exchange-reserves அவ்வாறாயின் பேராசிரியர் கூறியதாக கூறிய 700 மில்லியன் (1.4 பில்லியன் ஆண்டிற்கு வரும் என கருதுகிறேன்) கொடுப்பனவுகள் 3 -4 ஆண்டுகளுக்கு பிரச்சினை ஏற்படாது என கருதுகிறேன் (இலங்கையில் ஒரு குழப்பமும் நிலவாவிட்டால்). ஆனால் கத்தியில் நடப்பது போலவே நிலமை இருக்கிறது, தற்போதய அரசின் செலவீடுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிலமை மோசமாகலாம்.1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உறவாடிக் கெடுக்கவேண்டும் அல்லது சேலையில் முள்விழுந்தால் சேலை கிழியாமல் எடுக்கவேணும் முள்ளை.. விஜய் திராவிடம் பேசி திராவிட விசுவாசிகளையும் தம் பக்கம் இழுக்கவேண்டும்.. பின் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் மெதுவாக தமிழ்தேசியத்தை ஊட்டவேண்டும் அவர்களுக்கும்.. அவர் அதை செய்வார்.. ஏனெனில் விஜய் இயல்பில் ஒரு தமிழ்தேசியவாதி திராவிட சித்தாந்தங்களை உள்வாங்கியவர் அல்ல.. அது அவருக்கு ஒத்தும் வராது.. தேர்தலுக்காக அதை பேசுகிறார்.. பேசி ஆட்களை சேர்க்கட்டும் பின் தமிழ்தேசியத்தை ஊட்டட்டும்.. அதை செய்வார்.. அதை செய்யவைப்பதும் ஈசி.. ஏனெனில் விஜை பின்னால் இருந்து இயக்குபவர்களும் திராவிட சிந்தனையாளர்கள் அல்ல பூரா தமிழ்தேசியவாதிகள்.. வெல்லும் தமிழ்..💪1 point- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
விளக்கத்துக்கு நன்றிகள் ...ஆனால் "டயஸ்போரா. புலம்பெயர்ஸ்" என்ற பதங்கள் மொத்த தமிழர்களையும் உள்ளடக்கும் சொற்பதம்..என நான் நினைக்கிரேன்...அடுத்த தடவை முட்டை யெரியும் கோஸ்டிகளுக்கு "முட்டையடி புலம்பெயர்ஸ்" என எழுதினால் சிறப்பாக இருக்கும்.. போர் முடிவடைந்த பின்பு வடக்கு கிழக்கு பகுதியில் புலம்பெயர்ஸ் செய்த ,செய்து கொண்டிருக்கிற வேலைகள், இதுவரை அரசாங்கள் செய்த வேலையை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும் ..முக்கியமாக தனிநபர்களின் முன்னேற்றங்களுக்கு ,பாடசாலைகள் மற்றும் பல...😅 "முட்டையடி புலம் பெயர்ஸ்" தானே சொல்லுறீயல்1 point- தீபாவளி... சிரிப்புகள்.
1 point1 point- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல............... தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை
கட்சியாக மரத்தினையும் அந்த மனிதாராக அந்த பெருச்ச்சாளியினை மாற்றினால் அதிக பொருத்தமாக இருக்குமா?1 point- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
கட்சியிலுள்ள மற்றவர்கள் என்ன துறவிகளா? யாரும் எதுவும் வெட்டி வீழ்த்துவதில்லை அவர்களாவது ஏதாவது முயற்சிக்கிறார்களா என ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தாலென்ன? கட்சி ஒன்றும் ஒருவருடைய தனிச்சொத்தால்லவே, பலவந்தமாக பதவிகளை பறிப்பதும், கையகப்படுத்தி தனக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடவும், அங்கத்தவர்களை விரட்டவும். இவரைப்பற்றி சரியாக அறியாமல் கட்சிக்குள் சேர்த்தவர்கள் தவறு, அதையே இப்போ அனுபவிக்கிறார்கள். முதலில் விக்கினேஸ்வரனை விரட்ட மாவை, சிவஞானம் போன்றோரை கைக்குள் போட்டு, "அண்ணை நீங்கள்தான் முதலமைச்சராக வரவேண்டியவர், விக்கினேஸ்வரன் வந்தது சரியில்லை." என கொம்பு சீவி, அவரின் தலைவர் பதவிக்கு காத்திருந்தார். அதற்கடுத்து சிறீதரனை பாவித்து மாவையரின் பதவியை வலிந்து தனதாக்கிக்கொண்டார். இப்போ, சிறிதரனை பழிவாங்கும் நேரம். சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைக்கு. இவர் யாரையும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க விடமாட்டார். இவரை அறிமுகப்படுத்தியதே மாவையர். ஆனால் இவரின் தகிடுதத்தங்களை அவர் மௌனமாக தாங்கிக்கொண்டார். இவரோ தான்தான் விக்கினேஸ்வரனை கட்சிக்கு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் பகிரங்கமாக உளறியத்திரிந்தார். இவர் ஒரு உளறுவாயன். ஜெனிவா கூட்டத்தொடருக்கு போய் கலந்து உண்மைநிலவரங்களை தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொண்டபோது, ஆமாம் என்று சொன்ன சம்பந்தரும் சுமந்திரனும் பின்னர் போகவில்லை. காரணம், அமெரிக்கா சொன்னதாம், நீங்கள் ஒன்றும் வரவேண்டாம், அது நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இவருக்கு சொன்னதாம். பின்னர் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்தபோது, பதறியடித்து ஓடிப்போய் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டார். அது ஏன் வாக்களித்த மக்களின் பிரச்சனையை, துயரை, இழப்பை சொல்ல பின்னடிப்பு? சிங்களத்துக்கு கால அவகாசம் வேண்டிக்கொடுக்க அவசரம்? இப்போ சொல்கிறார், "தாங்கள் அரசுகளை நம்புவதில்லையாம்." காலையில் ஒன்று சொல்வார் மாலையில் வேறொன்று புளுகுவார், தென்பகுதியில் ஒன்று சொல்வார், வடக்கில் வேறொன்று சொல்வார். பின்னர் பத்திரிகையாளரை குற்றம் சுமத்துவார். தன்னைவிட திறமை சாலிகள் வந்தால் அவர்களை விரட்டுவதிலேயே கவனமாக இருப்பார். உண்மையாகவே அவர் திறமை சாலியாக இருந்தால், ஏன் மற்றவர்களை கண்டு பயப்படவேண்டும், விரட்ட வேண்டும்? யாரோடும் இணைந்து, திறமைகளை ஏற்று, பகிர்ந்து வாழத்தெரியாதவர். உறுப்பினர்களை கூட்டிக்கொண்டுபோய், சிக்க வைத்து ஆதாரங்களை திரட்டி அவர்களின் வாயை அடைப்பது, தனது கூலியை தனியாக பெற்றுக்கொள்வது, அதற்கு ஆதாரம் இல்லை. நான் தனியாக கதைத்தேன், முடிவுகளை எடுத்தேன் என்று தன்னைத்தானே பீற்றுவார். ஒரு கட்சியின் பேச்சாளர், மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்பவர் தனியாக கதைக்கலாமா முடிவுகளை எடுக்கலாமா? அதற்கான ஆதாரங்களை சமர்பித்தாரா? இவ்வளவு செய்த இவருக்கு இன்று வந்தவர்களால் இவரை கேள்வி கேட்கமுடியுமா? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொன்று சொல்வார். ரவிராஜ், மக்களுக்காக கட்சியில் இருந்து அகாலமாக கொல்லப்பட்டவர். உண்மையை பேசியதால் கொல்லப்பட்டவர். தான் கொலை செய்யப்படுவேன் என்று தெரிந்தும் பேசினார். அவரின் மனைவிக்கு தேர்தலில் நிற்க முடியாதாம். ஆனால் செல்வநாயகத்தின் பேரன் அந்த கழகத்தில் இருந்தார், இந்த கழகத்தில் இருந்தார் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியும், தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. கேட்பவர்களை அநாகரிகமாக தெருவில் நின்று விமர்சிப்பார், சவால் விடுவார் சபிப்பார். தன்னை யாரும் குற்றம் சொல்லாமல் மற்றவரை குற்றவாளியாக்கி அவமானப்படுத்தி தனது குற்றங்களை மறைத்துவிடுவார். மற்றவருக்கு ஒரு மரியாதை உண்டு, கௌரவம் உண்டு, நாகரிக மானவர்கள் துஸ்ட்டனை கண்டால் தூர விலகிவிடுவார்கள். இவர் காட்டில் மழை. இந்த தேர்தல் முடிய இவருக்கு பின்னால் நிற்பவர்கள் என்ன ஆவார்கள் என்று பாப்போம். ஒருவர் சொன்னால் அலட்சியப்படுத்தலாம், இருவர் சொன்னால் யோசிக்கலாம், பலர் சொல்லும்போதும் அலட்சியப்படுத்திவிட்டு அவமானப்பட்டே தீருவோம் என்று கங்கணம் கட்டுபவர்கள் பட்டுத்தெளியட்டும்.1 point- ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
சிறிதரன் தோற்றாலும் சுத்து மாத்து எப்படியும் தகிடு தத்தம் பண்ணி வென்று விடும் .1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.