Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    88820
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19667
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    7138
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33359
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/22/24 in Posts

  1. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  2. இந்த பாராளுமன்றக் "கன்ரீன்" என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும். மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!
  3. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
  4. சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.
  5. குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் முடிவு: தினம் ஒரு மீம்ஸ். அடுத்த தலைமுறையா............ அவர்கள் தான் உருப்படாதவர்கள் ஆயிட்டுதே எல்லாமே போய் விட்டதே இனி என்ன செய்வது என்கின்றோம். உள்ளே போவது தான் வெளியே வருகின்றது.
  6. சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... இருக்கத்தானே செய்யும். சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில், அகில இலங்கையில் போட்டியிட்ட... அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர் அர்ச்சுனா மட்டும் தானாம்.
  7. 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் ########### ######### @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் @வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂 இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣
  8. அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல்
  9. 57) இலங்கை பொதுஜன முன்னணி 3 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர் கந்தையா 57. இவருக்கு 2 புள்ளிகள். 1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 55 புள்ளிகள் 3)பிரபா- 55 புள்ளிகள் 4) அல்வாயான் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 6) goshan_che - 48 புள்ளிகள் 7) நிலாமதி - 48 புள்ளிகள் 😎 தமிழ்சிறி - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள் 11) வில்லவன் - 47 புள்ளிகள் 12)நூணாவிலான் - 46 புள்ளிகள் 13) நிழலி - 46 புள்ளிகள் 14)கந்தையா 57 - 45 புள்ளிகள் 15) கிருபன் - 44 புள்ளிகள் 16) ரசோதரன் - 44 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 42 புள்ளிகள் 18) வாத்தியார் - 41 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 41 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புலவர்- 37 புள்ளிகள் 23) புத்தன் - 37 புள்ளிகள் 24)சுவி - 36 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 91)
  10. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  11. @Justin @ரசோதரன் @ragaa என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣. நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣. இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮
  12. இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.
  13. பலர் PSTSD யால் அவதி படுகிறார்கள். Post Sumanthiran Traumatic Stress Disorder🤣
  14. @வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂 பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 🤣
  15. மாவீரர் நாட்களில் கூட்டத்தினை வைக்காமல், வேறொரு தினத்தில் கூட்டத்தினை வைக்க.. மற்றைய கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது நல்ல ஒரு மாற்றம். 👍🏽
  16. 21)ஞானமுத்து - சிறினேசன் வெற்றி பெறுவார் என 22 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 54 புள்ளிகள் 3)பிரபா- 54 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 47 புள்ளிகள் 6) அல்வாயான் - 47 புள்ளிகள் 7) வீரப்பையன் - 47 புள்ளிகள் 8)goshan_che - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 11) வில்லவன் - 46 புள்ளிகள் 12)நூணாவிலான் - 45 புள்ளிகள் 13) நிழலி - 45 புள்ளிகள் 14)கந்தையா 57 - 43 புள்ளிகள் 15) கிருபன் - 43 புள்ளிகள் 16) ரசோதரன் - 43 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 41 புள்ளிகள் 18) வாத்தியார் - 40 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 40 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புத்தன் - 37 புள்ளிகள் 23) புலவர் - 36 புள்ளிகள் 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 89)
  17. ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.
  18. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  19. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
  20. என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
  21. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  22. நான் குடலை உருவி மாலையாய் போட்டிருக்கிறனே ஒழிய கடல்கறி சாப்பிட்டதே இல்லை. 😂 அயல்வீட்டு எனது பாஷையுர் நண்பன் சொல்வான் குடல் கறி கிட்டத்தட்ட கணவாய்க்கறி மாதிரி இருக்குமாம்.😎
  23. 🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர் போலும் 🤣. சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார். அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣. ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம். நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ். ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன். சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம். இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன்.
  24. DR. அர்ச்சுனா அவர்கள் சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் . முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ? அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ? அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு முன்வரமாட்டார்கள் குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில் ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
  25. 🤣.................. யாழ் களத்தில் இந்த அடு பத் கூட்டத்திலிருந்து இன்னும் பலர் இருக்கின்றார்கள்............. நீர்வேலியான், வாதவூரான்,............ எங்கள் எல்லோருக்கும் மேலே தில்லை ஐயா............ ஊரில் வீட்டில் குடல்கறி சமைத்திருக்கின்றார்கள். ஏதோ ஒரு பத்தியக்கறி போல பக்குவமாக கழுவிச் சமைப்பதாக ஒரு ஞாபகம். ஆடு அடிக்கும் நாட்களில் இது நடந்திருக்கின்றது. இங்கும் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆடு அடிக்கும் போது, இந்தக் குடல்கறி சமைப்பார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் அடுவுக்கு மேல் அடு எடுத்துச் சாப்பிடும் சிலர் இருப்பார்கள். அப்பொழுது ஒரு அடு ரூபா 1.50 என்று நினைக்கின்றேன். என்னுடைய வகுப்பிலும் இருந்தார்கள். அதில் ஓரிருவர் இப்பொழுது அடிக்கடி டயட்டில் இருக்கின்றார்கள்.......................🤣. நாங்கள் சிலர் அப்பவே டயட்டில் இருந்தோம்................🤣.
  26. இது வன்னியை 2009 க்கு முன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒர் தலைவனின் முத்தான கொள்கை லஞ்சம் கிஞ்சம் வாங்கினால் துலைச்சு போடுவன் என சொல்லாமல் சொல்லுறார் ..போல.... ஆனால் பாருங்கோ சில பெடியள் தமண்ணவையும் ,சில கிழசுகள் ஹிருணிக்காவையும் கனவு காண்கின்றனர் ...அந்த கனவை நீங்கள் நிறைவேற்ற முடியாது...
  27. உரு மறைத்தாலும்…திரு மறையாதே ஜி🤣
  28. செய்த பாராளு மன்றத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியைக் கட்டுப்படுத்தவும் அல்லது அறிவுறுத்தும் தகுதி சபாநாயகருக்கு மட்டும் உள்ளது அது தெரியாமல் அந்த சாதாரண பாராளுமன்ற ஊழியர் மக்கள் பிரதிநிதிக்கு அறிவுறுத்த வந்ததன் நோக்கம் என்ன மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் குரல் கொடுப்பதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் தான் இங்கே எங்கே நாகரீகம் அடிபட்டது சபா நாயக்கர் தெரிவு முடிந்த பின்னர் அவர்ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர்களுக்குத் தெரிந்த விடையம் உங்களுக்குத் தெரியவில்லை அர்ச்சுனா பாராளுமன்றம் என்றது பலருக்கும் பிடிக்கவில்லை குற்றம் காண்கின்றார்கள்
  29. அஞ்சு வரியத்தில் அஞ்ஞாத வாசம் முடிய இன்னும் பெருகும்😍
  30. போற போக்கை பார்த்தால் எல்லா அரசியல் விற்பன்னர்களும் 100க்கு 60க்கும் குறைய எடுத்து போட்டியில் தோல்வியடைவார்கள் போலுள்ளது.
  31. வினா இலக்கம் 35 ) 17 போட்டியாளர்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி திருமலை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 1)வாலி - 55 புள்ளிகள் 2)வாதவூரான் - 53 புள்ளிகள் 3)பிரபா- 53 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 46 புள்ளிகள் 6) அல்வாயான் - 46 புள்ளிகள் 7) வீரப்பையன் - 46 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 9) goshan_che - 46 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 45 புள்ளிகள் 11) வில்லவன் - 45 புள்ளிகள் 12)நூணாவிலான் - 44 புள்ளிகள் 13) நிழலி - 44 புள்ளிகள் 14)கந்தையா 57 - 42 புள்ளிகள் 15) கிருபன் - 42 புள்ளிகள் 16) ரசோதரன் - 42 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 41 புள்ளிகள் 18) வாத்தியார் - 39 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 39 புள்ளிகள் 20)அகத்தியன் - 38 புள்ளிகள் 21)குமாரசாமி - 38 புள்ளிகள் 22)புலவர் - 36 புள்ளிகள் 23) புத்தன் - 36 புள்ளிகள் 24)சுவி - 34 புள்ளிகள் 25) வசி - 26 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 20, 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 88)
  32. நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது?
  33. கவிதையில் வரும் எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. அந்த நம்பிக்கையை நான் நம்ப மாட்டேன். எல்லா இனவாத முகங்களையும் பார்த்து விட்டோம். தற்போதைய ஆட்சியாளர்களின் முன்னாள் இனவாத முகங்கள் உட்பட...... இன்று பழைய கட்சிகளின் செயல்களை விட இந்த புதுமைவாத கட்சி என்ன செய்கிறதென்பதையும் பார்க்கலாம். இளையவர்களும் பழையவர்களைப் போல் அப்படித்தான் என இந்த தோழர் ஆட்சியில் நிறுவுவார்களா என சிலமாதங்கள் பொறுத்திருந்து காத்திருப்போம்.
  34. நான் நினைப்பது இந்த NPP யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அதாவது அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து வெளியேறும் பொழுது அடுத்த நூறு வருடங்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .
  35. கேட்க வாசிக்க நன்றாக இருந்தாலும் இவர்கள் மீதான நம்பிக்கை என்பது மட்டும் என்னவோ இன்னும் என் போன்ற பலரதும் மனதிலும் தோன்றவில்லை நம்பிக்கையே வாழ்க்கை என்று தொடரவும் முடியவில்லை. சிங்கள பௌத்த அரசுகள் பல இவர்களுக்கு முன்னே வந்து பல வாக்குறுதிகளை ஈழத் தமிழ் மக்களின் முன் வைத்து ஏமாற்றிய காயங்கள் இன்னும் ஆறவில்லை.
  36. சீனாவின் பருத்திதுறை விஜயம் ....அதை போய் மோடியிடம் சொல்லி ஏதாவது வத்தி வைச்சு...😅
  37. போட்டோ ஷொப் அவ‌தூறு எடுப‌டாது அண்ணா................முன்ன‌னி ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌ உண்மை த‌க‌வ‌ல் ஆன‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் க‌ம்ம‌ன்னு இருப்பார்க‌ள் என்ன‌ இனி வேறு மாதிரி ப‌ழைய‌ க‌தைய‌ அவுட்டு விடுவின‌ம் சீமான் ர‌ஜ‌னியின் அர‌சிய‌ல் வ‌ருகைய‌ எதிர்த்தார் இப்போது ர‌ஜ‌னி கூட‌ ச‌ந்திப்பா என‌ ஹா ஹா ஒரு வ‌ரி போய் ஓர‌மாய் நின்று குரையுங்கோ என்று க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான் வைக்கோ திருமாள‌வ‌னை விட‌ சீமான் கேடு கெட்ட‌ அர‌சிய‌ல் செய்ய‌ வில்லை😁...........................
  38. முட்டாளாக இருங்கள்..!! ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார்... கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” பையன் சொன்னான்”தங்கம்” அவர் கேட்டார் “பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” பையன் சொன்னான், “தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை, அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்… இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்”. “நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!! வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால், நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம். “எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” நன்றிகள் - G. காவியா
  39. நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.
  40. பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜
  41. ஆமாம்... இரண்டு பேரும் ஓட்டகங்கள். சின்ன இடம் கேட்டு உள்ளே வந்து... முழுக் கூடாரத்தையும் காலி பண்ணி விட்டுத்தான் போவார்கள். 😂
  42. இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
  43. தெற்காசிய தீவான பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 3 வார காலத்தில் 5 புயல்கள் கரையைக் கடந்துள்ளன. கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் ‘மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாகவும், காற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு 240 கி.மீ. வரை சென்றதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைப்பொழிவு அதிகளவில் இல்லாமல் போனாலும், காற்றின் வேகம் அசுரத்தனமாக இருந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு விவரஙக்ள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இதன் காரணமாக, கடலில் அலைகள் சுமார் 7 மீட்டர் (23 அடி) உயரத்துக்கு ராட்சஷ அலைகளாக எழும்பியதால் கடற்கரைப் பகுதிகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டன. ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், மின் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளதால் மாகாணம் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்குப் பாதி பேர், சுமார் 80,000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையைக் கடந்துவிட்ட போதிலும், ஞாயிற்றுக்கிழமை வட மேற்கு திசையில் நகர்ந்து, லூஸான் பகுதியை தாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312371
  44. டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)
  45. தாய்லாந்திலுள்ள "முத்துராஜாவின்" உடல்நிலையில் முன்னேற்றம் Published By: DIGITAL DESK 3 17 JUL, 2024 | 11:31 AM இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட முத்துராஜா யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு முத்துராஜா யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்தது. முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்தது. அதனை தொடர்ந்து இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், யானை தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடமாகிய நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இது தொடர்பில் தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளதாவது, யானையின் பின்பகுதியின் இருபுறமும் வீங்கி சீழ் வடிகிறது. யானை நடையின்றி இருப்பதால் வளைக்கப்படாத மற்றும் கடினமான இடது முன்காலுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் யானை ஊனமாகிவிடும். இந்நிலையில், காயம் மற்றும் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வழக்கமான சிகிச்சைகளினால் இடுப்பின் இருபுறங்களிலும் உள்ள வீக்கம் முழுமையாகக் குணமடைந்துள்ளன, ஆனால் மிகவும் நுட்பமான சிகிச்சையாக நடையை சரிசெய்வது உள்ளது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/188657

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.