Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    30
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19129
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3061
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/23/24 in Posts

  1. இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு. எனவே போட்டியில் முதலிடத்தைப் பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂
  2. “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம். 😂 🤣
  3. 🤣................ வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி................... வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு வாழ்த்து.............🤣. 🤣...................... சும்மா இருக்கின்ற அந்த மனுசனை போய் வம்புக்கு இழுக்கின்றது................... அப்புறம் அந்த ஆள் வந்து சீமானைத் தான் அடி அடி என்று அடிக்கப் போகின்றார்............ நீங்கள் அந்த சீமான் - ரஜனி திரியில் சேதம் பெரிதாக இல்லாமல் தப்பி இருப்பதே உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்.................🤣.
  4. உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்..பாடகர்கள் விழவைத்தே மானத்தை வாங்குகிறார்கள்... இன்னும் எத்தனையோ விதமான கூத்துக்கள்.. இதனைப் பார்க்கும்போது..கனடாவில் பெற்றொரின் பண்பு கற்காலத்துக்கு செல்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது.. நன்றி விசுகர் உங்கள் வீட்டுப்புரட்சிக்கு
  5. அர்ச்சுனா : கற்றுக்கொள்ள வேண்டியது! இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவைச் சட்டமன்றமாகும். இது பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தன்மையைக் கொண்டது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார் என்பது மரபு. 1972 மார்ச் 22 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து முற்று முழுதான இறைமை கொண்ட நாடாகியது. அதாவது குடியரசானது. அதனையடுத்து பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் மரபுகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றைப் பேணும் வகையில் நிலையியற் கட்டளைச் சட்டமும் உண்டு. ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு நிரந்தரமான இடத்தில் ஆசனங்கள்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏனைய உறுப்பினர்களின் ஆசன இடங்கள் அவ்வப்போது மாறுபடும். ஒரு உறுப்பினர் இன்னுமொரு உறுப்பினரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் குறித்த உறுப்பினர் உரையாற்றும் நேரம் வரும்போது அவருக்குரிய ஆசனத்தில் இருக்க வேண்டும். அந்த ஆசனத்துக்குரிய ஒலிவாங்கியில் தான் அந்த உறுப்பினர் பேசவும் வேண்டும். ஆக வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் நடைபெறும் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாத்தின்போது மாத்திரம் எந்த ஒரு உறுப்பினரும் வேறு ஆசனங்களில் இருந்து உரையாற்ற முடியும். ஆகவே இந்த மரபுசார்ந்த நடைமுறைகள் உறுப்பினர்களுக்குரிய ஒழுக்கங்கள். மற்றும் சிறப்புரிமை என்பது விசேடமானது. நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எந்த விடயத்தையும் துணிந்து பேசலாம். சுட்டிக்காட்டலாம். ஆனால் தகவல்கள் தவறாக இருக்கக்கூடாது. தகவல்கள் தவறு என்று வேறு யாராவது ஒரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சிஜனை எழுப்பினால் குறித்த அந்த உரையின் சில பகுதிகள் ஹன்சாட் பதிவுப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்குவார். ஆகவே நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகள் அவற்றின் கீழ் உள்ள நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, நாடாளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வரையறுப்பதாகும் நிலையியற் கட்டளைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் - உரிமைகளை வழங்க மறுக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் அதன் கொள்கைத் தீர்மானங்களில் தமிழர்கள் பங்குகொள்ளக்கூடிய ஏற்பாடுகள் இந்த அரசியல் யாப்பில் இல்லை என்பதும் பகிரங்கமானதுதான். ஆனால் நாடாளுமன்றம் என்பது ஒரு 'அரச சபை' அதற்குரிய 'மாண்புகள்' 'மரபுகள்' பேணப்பட வேண்டும். எந்த ஒரு எதிர்க் கருத்துள்ள நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மரபுகளை பேண வேண்டியது கட்டாயம். அது ஒரு அரசியல் பண்புடன் கூடிய நாகரிகம். எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடன் வாதிடும்போதுகூட நாகரிகம் உண்டு. வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒருவர் சபைக்குச் சமூகமளிக்காத நேரத்தில் அவரைப் பற்றிப் பேசுவதுகூட நாடாளுமன்ற மரபல்ல. இவ்வாறானதொரு கட்டமைப்பு உள்ள நிலையில் புதிதாகத் தெரிவான உறுப்பினர் அர்ச்சுனா 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூடியபோது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அது முதலாவது அமர்வுதான். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட முன்னரே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரைக்காக முதலாவது அமர்வு கூடிய முறையும் கேள்விக்குரியதுதான். ஆனாலும் மரபு பற்றிய புரிதல் என்பது மிக முக்கியமானது. 'அரச சபை' என்றால் நிச்சியமாக ஆசன ஒதுக்கீடுகள் இருக்கும் அதுவும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் பிரத்தியேகமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுவும் அனுபவமுள்ள நாடாளுமன்ற படைக்கல உதவி சேவிதர்கள் அது பற்றி விளக்கமளித்தபோதும் அதனை மறுத்துரைத்த அந்த உறுப்பினர், அதற்கு வழங்கிய விளக்கம் அரசியல் பண்பல்ல. பல மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு மாறாகச் செயற்பட்டிருக்கின்றனர் என்பது வேறு. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அரசியல் விடுதலை கோரி மெதுமெதுவாகச் சிதைவடைந்து வரும் ஒரு சமூகத்தின் புதிய பிரதிநிதியாக சபைக்குள் வந்த ஒரு புதிய உறுப்பினர் அநாகரிகமாக நடந்துகொள்வது அச் சமூகத்தை மேலும் தலைகுனிய வைக்கிறது. 1883 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்ட சபைகள் மற்றும் 1948 இன் பின்னரான நாடாளுமன்றங்களில் மாபெரும் தமிழ் சட்ட மேதைகள் உறுப்பினர்களாக இருந்த இடத்தில் சில தமிழ் உறுப்பனர்கள் நடந்துகொள்ளும் முறை அரசியல் பண்பல்ல. 2004 ஆம் ஆண்டு ஈழவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தனது எதிர்க்கட்சி ஆசனத்தை விட்டு அரச தரப்பு ஆசனங்களிலும் மாறி அமர்ந்த கதைகள் உண்டு. ஆனால் ஈழவேந்தனை அறிவுசார் உறுப்பினராக ஏனைய சிங்கள உறுப்பினர்கள் மதிப்புக் கொடுத்திருந்தனர். ஈழவேந்தன் வயது மூப்பினால் அவ்வாறு செயற்படுகிறார் என்ற வாதங்கள் அன்று இருந்தன. அப்போது சபாநாயகராக இருந்த வி.ஜே.மு லொக்குபண்டார ஈழவேந்தனின் ஆங்கில மொழி உரைகளை செவிமடுத்து அதற்கு மேலும் பொருள் விளக்கம் கேட்டதையும் மறுப்பதற்கில்லை. நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதங்கள் உண்டு. சிறப்புரிமைகள் உண்டு என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களும் தமக்கு வாக்களித்த மக்களின் சுயமரியாதையை அவமதிக்க முடியாது. அதுவும் புதிய தமிழ் உறுப்பினர்களின் செயற்பாடுகள் முற்போக்கான மற்றும் அரசியல் அபிலாஷை நோக்கில் இயங்க வேண்டியது அவசியமானது. இது ஒவ்வொரு தமிழ் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம். ”ஒருவன்” ஞாயிறு வார இதழின் ஆசிரியர் தலையங்கம் https://oruvan.com/sri-lanka/2024/11/23/what-archuna-mp-needs-to-learn
  6. சிலவேளை அந்தப் பாரிய கல்… இரத்தினக் கல்லாகவும் இருக்கலாம். வடிவாக தண்ணீரில் கழுவி விட்டு பார்க்கவும். 😁
  7. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  8. சார், ரஜினியை சீமான் சந்தித்தது பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? ஓம் சங்கியை சந்தித்த monkey நன்றி சாரே.
  9. பிலிப்பைன்ஸுக்கு...போக இருக்கிற ஆட்கள் இப்பவே, உங்கள் வேலை இடத்தில், லீவுக்கு விண்ணப்பித்து வைக்கவும். பாஸ்போட், விசா, விமான சீட்டு, ஹோட்டேல், சாப்பாடு, மசாஜ்... எல்லாம் எங்களுடைய பொறுப்பு. நீங்கள்... ஒரு சூட்கேசில் உங்கள் உடுப்புக்களையும், வழக்கமாக பாவிக்கிற... பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி குளிசைகளையும் மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள். 😂 எந்த நேரமும் உங்களை விமான நிலையத்திற்கு ஏற்றிக் கொண்டு செல்ல இரண்டு பிலிப்பைன்ஸ் பெண்கள் வந்து, உங்கள் வீட்டு அழைப்பு மணியை... "டிங்... டொங்..." என்று அடிப்பார்கள். ஆயத்தமாக இருங்கள். 🤣
  10. உங்களுக்கு... சமூக ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? சுமந்திரன் பதவியில் இருக்கும் போது, மிதப்பிலை விட்ட அறிக்கைகளைத்தான்.... மேலே உள்ள பிரபல பத்திரிகைகள், தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. அதனை திரட்டிப் போட்டால்... உங்களுக்கு கோபம் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால்... அதற்கு நான் என்ன செய்ய..? அவர் சம்பாதித்து வைத்தது இவைதான். அதனால்தான்... மக்கள் சுமந்திரனுக்கு, ஒய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.😂 அவர் செய்த வேலையாலை... வீட்டில் இருந்து, கொட்டாவி விட வேண்டிய நிலை வந்திட்டுது. 🤣 இல்லாவிடில்... சுமந்திரன் நேற்று, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க முதல் ஆளாக, கோட்டு சூட்டுடன் போய் நின்றிருப்பார். 🤣 காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂 நன்றி வணக்கம். 🙏
  11. என்னிடத்திலும் பிழை இருக்கிறது. 47 கேள்விக்கு சரியான புள்ளிகள் வழங்கியிருந்தேன். ஆனால் இங்கு எழுதும் போது தொகுதி என்பதற்கு பதிலாக மாவட்டம் என்று முதலில் எழுதி விட்டேன். அதனால் ஏற்பட்ட குழப்பம் .
  12. ஓம்…. இதைவிட முக்கியமாக சபாநாயகர் தேர்வு, எதிர்கட்சி தலைவர் தேர்வு வரைக்கும் ….எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதே விதி. எனும் போது அருச்சுனா எதையும் தவறாக செய்யவில்லை. அருச்சுனா வென்றதும் வெளியே வந்து யாழில் நாங்கள் மூன்று பேரும்தான்….நான் வென்ற மகிழ்சியில் இல்லை…இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியது ஒரு மிக பெரிய விடயம்…… அருச்சுனா, “நாம் எல்லோரும் இலங்கையர்” என்ற என் பி பி யின் ஈரச்சாக்கு இனவாதத்தை தன் பாணியில் அருச்சுனா மூக்குடைப்பார் என்றே நினைக்கிறேன். மாவீரர் தினத்தை அனுர நடத்த அனுமதித்தார் எனவே அவர் ஹீரோ என காட்ட பார் சிறியும் அவரின் புலம்பெயர் அடிப்பொடிகளும் ஒரு நாடகத்தை ஆடுகிறார்கள். ஆனால் இதே அனுரவின் ஆட்கள்தான் தலைவருக்கு நன்றி சொன்னமைக்கு அருச்சுனாவை போட்டு வாங்குகிறார்கள். இதில், கோட்டா வெல்லட்டும் அப்போதான் மக்கள் மேலும் அடிவாங்கி அதன் மூலம் எமக்கு விடுதலை விரைவாகும் என்ற நிலைப்பாட்டை எடுத்த நாம் - அருச்சுனாவினால் மக்களுக்கு ஆபத்து என அதிகம் கவலைபட தேவையில்லை எண்டே நினைக்கிறேன்.
  13. மேலே ரசோதரன் சொல்லுவது போல மஞ்சளில் கழுவி சமைத்தது என இங்கே இலண்டனிலும் தந்தார்கள் - அடியோடு மறுத்துவிட்டேன். எவ்வள்வு நல்ல பார்ட்ஸ் எல்லாம் இருக்கு, exhaust pipe தான் வேணும் என்பது சிலரின் ரசனை போலும்🤣
  14. Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.
  15. முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.
  16. (நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் பதவி மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் செனுஜ வெகுங்கொடவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஆரம்பமாகிறது. கடைசிப் போட்டி டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறும். 17 வயதின்கீழ் இலங்கை குழாம் கித்ம வித்தானபத்திரன (தலைவர்), செனுஜ வெகுங்கொட (உப தலைவர்), ஜேசன் பெர்னாண்டோ, ஜொசுவா செபஸ்தியன், ரெஹான் பீரிஸ், துல்சித் தர்ஷன, ஜனிந்து ரணசிங்க, செத்மிக செனவிரத்ன, சலன தினேத், ராஜித்த நவோத்ய, விக்னேஸ்வரன் ஆகாஷ், கெனுல பிலியங்க, ரெயான் கிரகறி ரசித் நிம்சார, ஓஷந்த பமுதித்த https://www.virakesari.lk/article/199461
  17. மன அழுத்தம் காரணமாக கஷடபடட மகனைக்கவனித்து உரியசிகிச்சை கொடுத்து அவதானமாக இருந்திருக்க வேண்டும். வீண் பழியை சுமந்து காவலில் வாழப்போகிறார். தந்தைக்கு அஞ்சலிகள்.
  18. எனக்கு மிகவும்பிடிக்கும். இனிப்பான அரைப்பதமான கொய்யப் பழம் பார்சல் பிளீஸ்
  19. முன்னர் ஐரோப்பாவில் மன்னர்கள், பேரரசுகளுக்கு மேல் போப் இருப்பார் என கூறப்படுகிறது? இலங்கையின் பேரினவாதத்தின் அடிநாதமாக பெளத்த மதம் உள்ளது, எவ்வாறு தமிழர்கள் தமிழ் தேசியத்தினை தமது இருப்பிற்கான அடையாளமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல சிங்கள பேரினவாதத்தின் அடையாளமாக பெளத்தம் உள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுவதன் மூலம் வழமையாக இருந்து வந்த தமிழ் தேசிய கோட்பாட்டிலிருந்து வெளியே வந்து சிங்கள பேரினவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் இருக்கலாம் ( இந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள்தான் தெரிவு செய்தார்கள், சிங்கள மக்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் ஏன் காலில் விழுந்தார்கள் என்று). இலங்கையில் இரண்டு மதங்கள் பெரும்பாலும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றன ஆனால் மற்றய இரு மதங்கள் அரசியலில் எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை, ஆனால் தமிழ் அரசியலில் இதுவரை இருந்த தேசிய கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் ஆரம்ப அறிகுறியாக இது இருக்கலாம்.
  20. 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் "வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️ கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣 அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂
  21. எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும்.
  22. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.
  23. க‌ந்த‌ப்பு அண்ணா என‌து பெய‌ருக்கு முன்ன‌ள் 😎 சிமாயில் போட்டு இருக்கிறீங்க‌ள் அண்ணா எத‌ற்காக‌ அண்ணா என‌க்கு கீழ‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் இருப்ப‌தால் தானா அல்ல‌து என்னை க‌லாய்க்க‌வா லொள்😁.......................
  24. திருகோணமலையில் விடுதலைப் புலிகள் கலை விழாவை நடத்தினர் 08/04/2003 உவர்மலை விவேகானந்தா கல்லூரி, திருகோணமலை
  25. நீங்கள் கூறியபடி... பாராளுமன்றத்தில் "எனக்கு நடந்தது என்று... அவர் அழுது ஒரு வீடியோ போடும் நாள் வரும்" என்றே நினைக்கின்றேன். (அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதே.. எனது பிரார்த்தனை.)
  26. இந்தப் பிள்ளை பிலிப்பைனஸ் பிள்ளை மாதிரி இல்லை. பிலிப்பைன்ஸ் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்கள். முதலாவதாக வருபவர் கவனம்.
  27. மற்ற தலங்களுக்கும் சென்றுள்ளார்கள் சரி - ஆக குறைந்தது நல்லூர் கந்தனிடம். அனால், மற்ற மத குருமார்களிடம் ஆசி பெற்றதற்கு படம் இருக்கிறதா? அனால், இப்படியாக காலில் விழுந்து ஆசி பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ரா கலாசாரம் வர வேண்டும். அல்லது சிங்களவர் தவிர்ந்த மற்றவர்கள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. அவர் தமது பெற்றோரின் , பெற்றார் வழி மூத்தோர, மற்றும் ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்று இருந்தால் வரவேற்று இருப்பேன்.
  28. 44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 60 புள்ளிகள் 2) பிரபா- 60 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) வில்லவன் - 52 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 51 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள் 😎 வீரப்பையன் - 50 புள்ளிகள் 9) நிலாமதி - 50 புள்ளிகள் 10) அல்வாயான் - 49 புள்ளிகள் 11) goshan_che = 48 புள்ளிகள் 12) நிழலி - 48 புள்ளிகள் 13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள் 14)கந்தையா 57 - 46 புள்ளிகள் 15)நூணாவிலான் - 46 புள்ளிகள் 16)கிருபன் - 44 புள்ளிகள் 17) ரசோதரன் - 44 புள்ளிகள் 18) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 19) வாத்தியார் - 42 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)
  29. நான் 30 கேள்வி என்று மாறி நினைத்துவிட்டேன்! மன்னிக்கவும் @கந்தப்பு. திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் அதிகம் என்று நினைத்தது தப்பாகப் போய்விட்டது☺️
  30. 47) திருமலை தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1) வாதவூரான் - 58 புள்ளிகள் 2) பிரபா- 58 புள்ளிகள் 3) வாலி - 56 புள்ளிகள் 4) வீரப்பையன் - 50 புள்ளிகள் 5) வில்லவன் - 50 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 49 புள்ளிகள் 7) அல்வாயான் - 49 புள்ளிகள் 😎 ஈழப்பிரியன் - 49 புள்ளிகள் 9 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 49 புள்ளிகள் 10)goshan_che = 48 புள்ளிகள் 11) நிழலி - 48 புள்ளிகள் 12) நிலாமதி - 48 புள்ளிகள் 13) கந்தையா 57 - 46 புள்ளிகள் 14) நூணாவிலான் - 46 புள்ளிகள் 15) சுவைபிரியன் - 45 புள்ளிகள் 16)கிருபன் - 44 புள்ளிகள் 17) ரசோதரன் - 44 புள்ளிகள் 18) சசிவர்ணம் - 43 புள்ளிகள் 19) வாத்தியார் - 42 புள்ளிகள் 20) புலவர் - 39 புள்ளிகள் 21) அகத்தியன் - 39 புள்ளிகள் 22) குமாரசாமி - 39 புள்ளிகள் 23)புத்தன் - 38 புள்ளிகள் 24)சுவி - 37 புள்ளிகள் 25) வசி - 28 புள்ளிகள் 26) தமிழன்பன் - 22 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 43, 45 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 94)
  31. இலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#
  32. பழக்கம் இல்லாவிட்டால் இவற்றை சாப்பிடுவது முடியாத ஒரு காரியம் தான்........... அருவருப்பும், ஒவ்வாமையும் இருக்கும்................👍. மஞ்சள் என்றவுடன் ஞாபகத்தில் வந்த ஒரு நிகழ்வு. நாங்கள் பல நண்பர்கள் ஒரு ஒன்றுகூடலை திருகோணமலைப் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே முதல் நாள் மட்டி வறுவல் செய்து கொடுத்திருந்தார்கள். எக்கச்சக்கமான மஞ்சள் மற்றும் மசாலாக்களும் போட்டு. யாழ்ப்பாணத்தில் நாங்கள் மட்டி அவ்வளவாக சாப்பிடுவதில்லை. கடலோரம் பிறந்து வளர்ந்த நான் கூட சும்மா விளையாட்டாக சில மட்டிகளை சுட்டுச் சாப்பிட்டிருக்கின்றேனே தவிர கறியாகவோ அல்லது வறுத்தோ சாப்பிட்டதில்லை. ஆனாலும் எங்களில் சிலர் 'நாங்கள் பார்க்காத மட்டியா..............' என்று அள்ளி அள்ளிச் சாப்பிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பார்க்கும் மட்டியும், அந்தச் சூப்பும் வேறு, எங்களூர் மட்டியும், எங்கள் சமையலும் வேறு என்று நான் சொல்ல முயன்றும் பலனில்லை. அதன் பின்னர் சிலர் அறைக்கு ஓடினவர்கள் ஓடினவர்கள் தான்................ மூன்று நாட்களின் பின்னரே ஓட்டம் நின்றது.................🤣. அதில் ஒரு நண்பன் மூன்று நாட்களாக அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்ததில், எங்கள் எல்லோருக்கும் பலத்த சந்தோசம்...............🤣.
  33. DR. அர்ச்சுனா அவர்கள் சிங்கள மக்களுக்கு இன்னும் பல செய்திகளைக் கூறிவிட்டுத்தான் தமிழ் மக்களின் அபிவிருத்தியில் கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் . முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் எதிர் கட்சித் தலைவர் எங்கே இருப்பார் என்று முதன் முதலாகப் பாராளுமன்றத்திற்குச் சென்றவர் யாருக்காவது தெரியுமா ? அப்படி இருக்கும் பொது ஒருவர் அமர்ந்த இடத்திலிருந்து அவரை அகற்றுவதற்கான முயற்சி ஒரு சாதாரண அரச ஊழியரால் முன்னெடுக்கப்படுவது சரியா ? அப்படியான நிலைமையில் யாரும் இடத்தைவிட்டு அகல்வதற்கு முன்வரமாட்டார்கள் குறைந்தது சஜித் அவர்கள் கூட இதைப்பற்றி வாய் திறக்காத நிலையில் ஊடகங்களும் ஒட்டுண்ணிகளும் இந்த நிகழ்வைப் பெரிதாக்க முயல்வதில் இருந்து அவர்களின் நோக்கம் மக்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது
  34. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் நியூட்டன், மாதுளன் | 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுக்கு எதிரான இலங்கை அணியில் ஆகாஷ் (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை கனிஷ்ட அணிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர். கனிஷ்ட இலங்கை அணிகளில் ஒரே நேரத்தில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடடைவயாகும். சில வருடங்களுக்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். யாழ். மத்திய கல்லூரியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாலிங்க பாணி வேகப்பந்துவீச்சாளர் கே.மாதுளன் ஆகிய இருவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் வீ. ஆகாஷ் 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறுகிறார். இந்த மூன்று வீரர்களும் தம்புள்ளை பிராந்திய அணியில் திறமையை வெளிப்படுத்தியதன் பலனாக இலங்கை கனிஷ்ட அணிகளில் இடம்பிடித்துள்ளனர். இது இவ்வாறிருக்க, இந்த மூன்று வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்களை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்வான்களில் ஒருவரான குமார் சங்கக்கார அன்பளிப்பு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/199324
  35. 4. மேலே சுட்டிய விடயங்கள் இலங்கையில் இரு வேறு தமிழர் பகுப்புகள் உள்ளதை காட்டி நிற்கிறன. இந்த பகுப்பு ஒன்றும் தனியே 1815 ஐ ஒட்டிய தொழில் நுட்ப பகுப்பு மட்டும் அல்ல. பண்பாடு, மதம், சாதிய கட்டமைப்பை போலவே இந்த ஒரு பகுப்பினரதும் அரசியலும் மிகவும் வேறுபட்டதாக உள்ளது. இலங்கை வம்சாவழியினர் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்கிறனர். வடக்கு கிழக்கை தம் பாரம்பரிய வாழிடமாக கருதுகிறனர். இதன் அடிப்படையில் சுயநிர்ணய உரிமையை கோரி நிற்கிறனர். இந்த எந்த அபிலாசைகளும், பாரம்பரிய வாழிடத்துக்கான உரிமை கோரலும் இந்திய வம்சாவழியினரிடம் இல்லை. ஆகவே இலங்கை அரசியல் என வரும் போது இவ்விருதரப்பையும் ஒரே சட்டியில் வறுக்க முடியாது. இந்திய வம்சாவழிக்குள் கூட மேலக, மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் வேறுபட்டாலும், நிலத்துடன் பிணைந்த இலங்கை வம்சாவழியின் தமிழ் தேசிய அரசியல் அங்கே இல்லை. இந்த அடிப்படையில்தான் இலங்கை வம்சாவழியை குறிக்கும் போது பிரக்கெட்டில் வடக்கு-கிழக்கு என எழுதினேன்.
  36. இலங்கை வம்சாவழி என்பதை வரைவிலக்க்கணப்படுத்த முன்னம், இந்திய வம்சாவழி தமிழர் யார் என்பதை வரைவிலக்கணம் செய்வது அவசியம் என நினைக்கிறேன். 1. இலங்கைக்கு 1815 (ஒன்றுபட்ட இலங்கை ஆங்கிலேய ஆட்சி) இன் பின், இந்தியாவில் இருந்து வந்து, குடியேறி வாழ்பவர்களின் சந்ததிகள் இந்திய வம்சாவழி தமிழர்கள் எனலாம். இவர்கள் இலங்கையின் எந்த பகுதியில் வசித்தாலும் - இவர்களின் அடையாளம் இதுவாகவே இருக்கும். இவர்கள் மலையகத்தில் பெருமளவிலும், மேற்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க அளவிலும், இதர தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசிக்கிறனர். இவர்களில் சிறிய தொகையினர் இனவன்முறை, நாடு கடத்தலில் தப்பிக்க என வடக்கு கிழக்கில் வந்து வாழ்ந்து, பதிவு அடிப்படையில் அந்த மாகாண வாக்காளர்/மக்கள் என உருமாறிவிட்டனர். எனிலும் இவர்களை சமூக பார்வையில் அவர்களை சூழ இருக்கும் இலங்கை வம்சாவழி தமிழ் சமூகம் இன்றும் இந்திய வம்சாவழி என்றே கருதுகிறது. இந்த இந்திய வம்சாவழி மக்கள் பண்பாட்டில் தற்போதைய தமிழ் நாட்டு மக்களின் கண்ணாடி பிரதிகளாக இருக்கிறனர். குறிப்பாக இவர்களின் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டை, சாதி பெயர்களை குறிப்பிடலாம். 2. இவர்கள் அல்லாத - 1815 க்கு முன்பிருந்தே மூதாதைகள் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை வம்சாவழி. இவர்கள் பண்பாடும், மத அனுஸ்டானங்களும், உணவுகளும், சாதிய முறைகளும் தமிழ் நாட்டு/ இந்திய வம்சாவழி தமிழர்களை விட பெரிதும் வேறுபட்டும், சில இடங்களில் மலையாளிகளோடு ஒத்தும் இருக்கும். இவர்களைத்தான் 1815 க்கு முன் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தரும், போத்துகேயரும் தமது பதிவுகளில் மலபாரி வசிப்பாளர் Malabari inhabitants என்றனர். இவர்களின் சந்ததியினரே இலங்கை வம்சாவழி தமிழர். யாழ்பாணம், வன்னி, திருமலை, மட்டு-அம்பாறை என இவர்கள் இருப்பது யாரும் அறிந்ததே. பலர் அறியாத விடயம், முந்தல் போன்ற இடங்களில் இன்றும் உள்ளவர்களும், நீர்கொழும்பு-மன்னார் வரையான கடலோரத்தில் ஒரு காலத்தில் தமிழர்களாக இருந்து இன்று கீழ்நாட்டு சிங்களவராக அடையாளம் மாறிய தமிழரும் இலங்கை வம்சாவழியே (1815 க்கு முன்). ஆகவே இவர்களும் ஒற்றை பண்பாட்டில் உள்ளவர் அல்ல. 3. இந்த பகுப்பு வெறும் மூதாதைகள் இலங்கைக்கு வந்த காலத்தின் அடிப்படையிலானது மட்டுமே. ஆங்கிலத்தின் since records began என்பார்கள் - இந்திய வம்சாவழியினர் இலங்கை வந்தது பதிவுகள் ஆரம்பமான பின். இலங்கை வம்சாவழியினர் பதிவுகள் ஆரம்பிக்கும் போதே (when records began) இந்த மண்ணில் வாழ்கிறார்கள் (குளக்கோட்டன், யாழ்பாண அரசு, வன்னிமைகள்). அவர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் (time immemorial/ pre historic times) தொட்டு வாழும் பூர்வகுடிகளா என்பது இன்னும் விடை கிடைக்காத கேள்வி. ஆனால் திசமாராம தொல்பொருட்கள் - இப்படி இருக்கலாம் என ஊகிக்க வைக்கிறன.
  37. ஆனானப் பட்ட சுமந்திரனே... சுயேட்சை வேட்பாளர்களாக நின்ற ... அர்ச்சுனா, கௌசல்யாவை விட குறைய வாக்குகள் எடுத்த மாதிரி... ஈழப்பிரியன். 😂
  38. நரி! ஒரு நாளும் சும்மா மினைக்கெட்டு போகாது. அணில் இப்பவும் தமிழர் பிரச்சனையை வைச்சு ஏதாவது நரி வேலை செய்யும்.இதுதான் இந்தியாவுக்கும் வேணும். ஹிந்தியனும் தமிழர் பிரச்சனையை வைச்சுத்தானே சிறிலங்காவுக்குள்ள சேட்டை விடுறான்.
  39. கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣
  40. அடுத்த 5 வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்களையும் மகிழ்வூட்ட ஒரு clown 🤡 ஆக இருக்கப் போகிறார் அர்சசனா. ஒரு சர்க்கஸிற்கே மகிழ்வூட்ட ஒரு clown தேவைப்படும் போது தொடர்சசியாக சீரியஸாக பேசி டென்சன் ஆகும் உறுப்பினர்களுக்கும் தேவை தான். NPP க்கு ஆதரவு நல்கிய யாழ்ப்பாண மக்கள் அவர்களை மகிழ்விக்க ஒரு clown ஐயும் அனுப்பியுள்ளனர். 😂
  41. தமிழரசு கட்சிக்கு சுமந்திரன் மாதிரி, அவங்க கட்சிக்கு… ரணில். இரண்டையும்…. குழி தோண்டி புதைக்காமல் போக மாட்டார்கள் போலுள்ளது. 🤣
  42. சபாஷ்... பலே... அனுரவுக்கும், டிரம்புக்கும் சரியான போட்டி. 😂 ஹ்ம்ம்... நடக்கட்டும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.