ஓம் தகப்பன் பண்டாவுக்கு சிங்களம் பெரிதாக எழுத வாசிக்க தெரியாதாம்.
புனித தோமையர், பின் ஆக்ஸ்போர்ட், அதன் பின் இன்னர் டெம்பிளில் பாரிஸ்டர் என சிங்களத்தில் சொல்லும் களு சுட்த்தா (கறுப்பு-வெள்ளைகாரன்) அவர்.
ஆக்ஸ்போர்ட்டின் முதல் ஆசிய மாணவர் சங்க செயலாளர் என நினைக்கிறேன்.
அதே போல் அத்துலத் முதலி முதலாவது ஆசிய மாணவர் சங்க தலைவர் என நினைக்கிறேன்.
அனுர கொஞ்சம் மந்த புத்திதான். அஜால் குஜாலிலுல் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கட்சிக்கு போனால் அது சிலமாதங்களில் எதிர்கட்சியாகும் யோகமும் இருந்தது🤣.
தொண்டா, அஷ்ரப், டக்லஸ் அநேக காலம் ஆளும்கட்சி. அதேபோல் அனுர அநேக காலம் எதிர்கட்சி🤣.
78க்கு பின் சிறிமாவின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின் சு க வை முழுவதும் அழிந்து விடாமல் காப்பாற்றினார். சந்திரிகா விஜே குமாரதுங்கவை முடித்து, குடும்பம், கட்சி சகலதையும் விட்டு வெளியேறிய பின் தாய்க்கும், கட்சிக்கும் பலமாக இருந்தார்.
குமாரதுங்க, பிரேமதாச மறைய 1993 இல் சந்திரிக்கா நாடு திரும்பி அரசியலில் இறங்கினார். சிறிமா, சந்திரிகாவை ஏற்க, சில காலத்தில் அனுர யூ என்பிபக்கம் தாவினார்.
பின்னர் மாறி மாறி தாவினார்.
தந்தையின் கட்சியை, ஆட்சியை அவருக்கு விசுவாசமான அடிப்பொடியாக இருந்த டி ஏ ராஜபக்சவின் மகன்கள் கைப்பறிய காட்சியையும் கண்டு கண்மூடினார்.
ஆனால் கடைசிவரை மகிந்த இவரை “லொக்கா” (பெரியவர்) என்றே அழைத்தார்.