Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    14676
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7048
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/06/25 in all areas

  1. "எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025] "பூமியிலிருந்தும் வானத்திலிருந்தும் வாழ்த்துகள் பாட எல்லையற்ற வானத்தின்கீழ் கொண்டாட்டம் நிகழ அன்புஜெயா, மகிழ்ச்சி பெருமை தருபவளே எங்கள் பொக்கிஷமே எங்கள் விண்மீனே!" "மண்ணிலிருந்து தாத்தாவின் பாசம் சூழ உங்கள் நாட்களும் ஆத்மாவும் ஒளிரட்டும் ஒவ்வொரு அடியிலும் அறிவு வழிகாட்டட்டும், அன்பும் மகிழ்வும் உங்களை அணைக்கட்டும்!". "விண்ணிலிருந்து அம்மம்மா ஆசீர்வாதம் பொழிய அவளின் பெயரில் ஆறுதல் வழங்குபவளே நீங்கள் ஒளிர்ந்து கனவுகள் பறக்கட்டும் அரவணைப்பும் வலிமையும் உலகை நிரப்பட்டும்!" "உங்கள் வாழ்க்கை நேசத்தின் பாடலாகட்டும் அமைதியும் மகிழ்வும் அங்கு பொங்கட்டும் புகழும் வாழ்வும் விண்மீன்போல் உயரட்டும் துணிவும் பலமும் வானத்தைத் தொடரட்டும்!" "அன்பு சகோதரங்கள் கலையுடனும் இசையுடனும் பாசப் பிணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் இதயங்கள் இணக்கமாக பிணைக்கட்டும், உடன்பிறப்பு பந்தம் என்றென்றும் தெய்வீகமே!" "உங்கள் இதயத்தில் கருணை பூக்கட்டும் அன்பின் கலங்கரை விளக்கே கலையின் வடிவே கொடுப்பதிலும் பெறுவதிலும் ஊக்கம் வரட்டும் நம்பிக்கை ஒன்றே உன்னை உயர்த்துமே!" அன்புடன் தாத்தா கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ❤️ "From Earth and Heaven, our wishes rise, To celebrate you under boundless skies. Dear Jeya, our joy, our pride so true, A treasure to cherish, a star to pursue. From Grandpa on Earth, my love does flow, May your days be bright, your spirit glow. In every step, may wisdom guide, And love and joy walk by your side. From Grandma in Heaven, blessings rain, For my namesake, free from pain. Shine your light, make dreams take flight, And fill the world with your warmth and might. May life for you be a cherished song, With peace and laughter all along. Reach for the stars, climb ever high, With courage and strength, touch the sky. With Kalai and Isai, your brothers dear, Share bonds of love that persevere. In harmony, may your hearts entwine, A sibling bond, forever divine. May kindness bloom within your heart, A beacon of love, a work of art. In giving and receiving, may you inspire, A world of hope, lifting it higher. With all my love, Grandpa Kandiah Thillaivinayagalingam ❤️
  2. ஹிகாமா (ஜக்கம்மா😎) வை ருசிப்பதில் தவறில்லை! தோலைக் கவனமாக நீக்கிச் சாப்பிட வேண்டிய "இன்னொரு கிழங்கு", அவ்வளவு தான். (தோலை நீக்கா விட்டாலோ அல்லது ஏனைய தாவரப் பகுதிகளை அதிகளவில் உட்கொண்டாலோ, கிட்டத்தட்ட 'சயனைட்" சாப்பிடுவது போல ஒக்சிசன் இல்லாமல் மரணிக்க வேண்டி வரும்) ஆனால்: "இனுலின் இருப்பதால் குடல் பக்ரீரியாக்களுக்கு நல்லது", அல்லது "ஒட்சியேற்ற எதிரிகள் இருப்பதால் பல நோய்களைத் தவிர்க்க உதவும்" - இந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. உண்மையில், இனுலின் குடல் பக்ரீரியாக்களை மாற்றுகிறது என்று செய்த ஆய்வுகள் பல போலியான, விஞ்ஞான முறைமையற்ற ஆய்வுகள் என நிரூபித்திருக்கிறார்கள். குடலில் இருக்கும் பக்ரீரியாக்கள் தளைக்க வேண்டுமெனில், எந்த தாவர நார்ச்சத்துடைய உணவையும் எடுத்துக் கொள்ளலாம், "றிஸ்க்" எடுத்து ஜக்கம்மாவைச் சாப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. Steven Gundry யின் போலி விஞ்ஞானத் தகவல்கள் பற்றியும் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும். "The Plant Paradox" என்று இவர் எழுதிய புத்தகம் சக்கை போடு போட்டது விற்பனையில். பின்னர் மருத்துவ உலகம் புத்தகத்தில் மேற்கோள் காட்டப் பட்ட ஆய்வுகளைத் தேடிய போது, அப்படி ஒன்றையும் காணவில்லை. அப்படியான ஆய்வுகளே நிகழ்ந்திருக்கவில்லை. ஒப்ரா அறிமுகம் செய்த Dr. Oz போலவே, தனக்குத் தெரியாத விடயங்களை வியாபார நோக்கத்தில் "அற்புத நிவாரணிகளாக" பிரபலப்படுத்தி காசு பார்க்கும் இன்னொரு மருத்துவர் இவர்!
  3. செய்தியில் இருக்கும் தகவல்கள் சரியானவையல்ல. HMPV என்பது இன்புழுவன்சா, RSV போன்ற ஏனைய வைரசுகள் அதிகம் உலாவரும் குளிர்காலங்களில் சேர்ந்து வரும் ஒரு சாதாரண வைரஸ். சாதாரண சளிக்காய்ச்சலைத் தரும் இந்த வைரஸ் குளிர்காலம் நிலவும் சீனாவில் மட்டுமன்றி, அமெரிக்கா, ஐரோப்பாவிலும் வருடாவருடம் நோயை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, இந்தியா உட்பட்ட பல தெற்காசிய , தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்கனவே இருக்கும் வைரஸ். இது முதன் முறையாக இப்போது கண்டறியப் பட்டதல்ல!
  4. கூகிழ் போக்குவரத்து வழிகாட்டி செயலியே காவல்துறை முன்னால் நிற்பதை எச்சரிக்கை செய்கின்றதே. இது சட்டவிரோதமானது இல்லை போலும்.
  5. குமாரசாமி அண்ணை…. ஆபிரிக்க ஆம்பிளையள் சாப்பிடுகிற கிழங்கு என்றால், கட்டாயம் நாங்களும் அந்த மரத்தின்ரை விதையை… உடையாரிடம் வாங்கி, வளவுக்குள்ளை நடத்தான் வேணும். 😂
  6. திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
  7. நீங்கள் ஜக்காம்மாவ உருட்டி பிரட்டியெல்லாம் பாத்திருக்கிறியள்! குடுத்து வைச்சனியள்😃 சிறித்தம்பியோ @தமிழ் சிறி நானோ அதை கண்ணாலை காணவேயில்லை 🤣
  8. இங்கு இது கடைகளில் கிடைக்கின்றது. மத்திய, தென் அமெரிக்க மக்கள் புழங்கும் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றது. 'இது என்ன வஸ்து, புதுசா இருக்குதே............' என்று எடுத்து ஒரு உருட்டு உருட்டு விட்டு, எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வருவது ஒரு வாடிக்கை. இந்த வருடத்தையும் தவற விட்டாயிற்று............. அடுத்த ஆங்கில புதுவருடத்தில் ஆரோக்கியமாக வாழ்வதாக ஒரு உறுதிமொழி எடுத்து, ஹிகாமாவை வீட்டை கொண்டு வரவேண்டும்.................🤣.
  9. இது புரையோடிப்போனதொன்று...அதுவும் நம்ம பகுதியில்...மாற்றவே முடியாது......பணம்தான் பிரதான காரணி..
  10. சுமந்திரனுக்கு… மக்கள் வாக்குப் போட முன்வர வேணுமே. 😂 சுமந்திரனின் பெயரையும், திருட்டு முழியையும் பார்த்தவுடனேயே மக்கள்… காலில் உள்ளதை, கழட்டி அடிக்க விரும்புகின்றார்கள். 🤣
  11. உதவி செய்யப் போய்…. உபத்திரவத்தை வாங்கியுள்ளார். இனிமேல்… கீழே கிடந்ததை எடுத்து மற்றவர்களிடம் கொடுக்காமல், சம்பந்தப் பட்டவரை கண்டு பிடிக்கும் மட்டும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில்… அனாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கி விடுங்கள். மூன்றாம் நபரிடமோ, காவல் துறையிடமோ… ஒப்படைப்பது எல்லாம் நம்பிக்கை அற்ற செயல்கள்.
  12. இயற்கை வளங்களை நீங்களே அழித்துவிட்டு, உவர் நீரை உள்ளே வர விட்டுவிட்டு, பிறகு கிளிநொச்சியில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து... நீரை கொண்டு போகப் போறம் என்றால், யாரில் பிழை இருக்கிறது? இயற்கையை பாதுகாத்தாலே வாழ்வும் வளமும் சிறப்பாய் இருக்கும்! Kilinochchi Podiyan
  13. இதனை ஒரு முஸ்லீம் இனத்தை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற பாராளுமன்ற உறுப்பினர் சொல்லியதில் வியப்பு எதுவும் ஏற்படவில்லை. அவர்களுக்கு எப்படியாவது…. நாட்டில் முஸ்லீம் சனத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதே முதல் குறி. இந்த 100 ரோஹிங்கியா முஸ்லீம் மக்களும் இன்னும் பத்து வருடத்தில், பல ஆயிரமாக பெருகி நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களை… பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் நாடுகளே வரவேற்பதில்லை. இந்த விடயத்தில் அரசு அவர்களை நாடு கடத்த எடுத்த தீர்மானம் சரியானது. கிழக்கு மாகாணத்தில்… தமிழ், முஸ்லீம் மக்கள் அடுத்தடுத்து வாழும் பிரதேசங்களை… அறிவு இல்லாத தமிழ் அரசியல்வாதிகள் எமது கண்முன்னாலேயே… புட்டும் தேங்காய்ப்பூவும் என்று புகழ்ந்து பேசி, இன்று அந்த முஸ்லீம்களால் தமது அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குப் பிறகும்… இந்த ரோஹிங்கியா முஸ்லீம்களையும் தமிழ் பகுதிகளில் குடியேற்றி புதுப் பிரச்சினைக்கு வழி வகுக்காமல் உடனே திருப்பி அனுப்புவதுதான் புத்திசாலித்தனமானது. நமது நாட்டில் இருக்கும் முஸ்லீம்களின் தொல்லை போதும்.
  14. அதுதான் ..ஹேரத்..சொல்லிவிட்டார் ..கடுமையான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.. எதுக்கும் மக்கலை ரெடியாக இருக்க வேண்டுமென்று..
  15. கனடாவுக்கும் ..இரண்டு கிழங்குக்கு ரெகமெண்ட் பண்ணிவிடுங்க சிறியர்
  16. இனித்தான் எம்மவர்கள் சிறப்பாக அரசியல் செய்ய வேண்டும் ,,சிறிலங்கா தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்(ஜெ.வி.பி) தங்கள் செல்வாக்கை சிறிலங்கா ஜனாதிபதியிடன் பயன்படுத்தி தாயக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.....மாகாணசபையை மக்கள் ஆளும் சபையாக மாற்ற வேணும் என்ற கோரிக்கையை வைக்க வேணும் ..சிறிலங்கா ஜனாதிபதி மறுக்க முடியாது ... அதே போல தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்யும் கட்சிகள் இந்தியாவிடம் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு முதல் முழு அதிகாரம் கொண்ட ஆட்சியை அமைக்க உதவ வேணும் எண்டு ...30 வருடங்களாக செய்யாத செயலை மூன்று மாதத்தில் செய்து காட்ட சொல்லவேணும்... இந்தியாவின் சொல் கேட்காமல் நம்மவர்கள் ஆளுனரின் சொற்படி இனிமேல் நடக்க வேணும் அப்பதான் இந்தியா விழித்துக்கொள்ளும்....இந்தியா அனுராவுக்கு செம்கம்பல வரவேற்பு கொடுத்து உறவு வளர்க்கின்றனர்...
  17. ஏற்கனவே வடக்கில் எந்த கூட்டங்கள் நடைபெற்றாலும் இந்திய துணைத் தூதரகத்துக்கு தெரியாமல் நடைபெறாது கூடாது என்கிறார்கள்.
  18. கள்ள சேர்டிவிக்கட் பிரின்ட் பண்ணுவது இலகுவான விடயம் இல்லை தானே ...அது தான் தாமதம் போல...அல்லது இனித்தான் கலாநிதி பட்டம் எடுக்க‌ தீசீஸ் எழுதப்போகின்றாரோ
  19. இளங்குமரன் எம்.பி.க்கு சொல்லுங்கோ அதிரடி நடவடிக்கை எடுப்பார் ... சிவப்பு தொப்பியும் ,சிவப்பு கோவணமும் ,சிவப்பு நட்சத்திரம் போட்டு கொண்டு கட்சி நடத்துற விடயம் இல்லை ...அதை இலகுவாக செய்துவிடலாம் .. ஒரு நாட்டை நடத்துவது கடினமான விடயம்...
  20. ஆகலாம் ,ஆனால் தோழர் அனுராவின் புலனாய்வு துறை இவர் மீது ஒர் கண் வைத்திருக்கும்....இந்தியா பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்ற பயத்தில் ...என்ன தான் இடதுசாரியாக இருந்தாலும் இந்தியா டமிழன் என்ற பயம் இருக்கத்தான் செய்யும்..
  21. கொஞ்சம் பொறுங்கோ அவரின் சேர்ட்டிபிக்கற்றை தேடி கொண்டு இருக்கிறார்கள், விரைவில் கிடைக்கலாம்.
  22. சிறித்தம்பியர்! ஆபிரிக்க ஆம்பிளையள் விரும்பி சாப்பிடுற கிழங்கு எண்ட மாதிரி கதைக்கிறாங்கள்.🤭 எதுக்கும் அடக்கி வாசிப்பம்...😎 உடையார் எங்களுக்கு இரண்டு கிழங்கு அனுப்பாமலே இருப்பார்?😂
  23. இப்படி நீங்கள் கேள்வி கேட்பதால் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது அது கதைதான் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம் . கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்.. கழுதை ஒன்று புலியிடம் கூறியது "புல் நீல நிறமானது" என்று . புலி அதற்கு "இல்லை, புல் பச்சை." என்றது. விவாதம் சூடுபிடித்தது, இருவரும் நடுவர் மன்றத்தை நாட முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர். கழுதை உடனே கத்த ஆரம்பித்தது "அரசே, புல் நீல நிறம் என்பது உண்மைதானே?". சிங்கம் "ஆம். உண்மை, புல் நீல நிறமானது." என்றது. "புலி என்னுடன் உடன்படவில்லை மற்றும் முரண்படுகிறது மற்றும் என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்" என்றது கழுதை. "புலிக்கு 5 ஆண்டுகள் மௌன தண்டனை விதிக்கப்படும்" என்று அரசர் உத்தரவு போட கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சென்றது. புலி அரசரின் தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் புலி சிங்கத்திடம் தண்டனையை கடைபிடிக்கும் முன் கேட்டது "அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, எல்லாவற்றிற்கும் மேலாக, புல் பச்சையாக இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை". அதற்கு சிங்கம் "உண்மையில், புல் பச்சைதான் என்றது. "அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?". சிங்கம் பதிலளித்தது.. "புல் நீலமா அல்லது பச்சையா என்ற கேள்விக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான உயிரினத்துக்கு உகந்ததில்லை என்பதால்தான் இந்தத் தண்டனை." உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும். ஆனால் அவர்களது நம்பிக்கைகள், மாயைகளினால் அடையும் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்... எவ்வளவோ ஆதாரங்களை நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில்லாதவர்களும் இருக்கிறார்கள், மற்றவர்கள் மீது ஈகோ மற்றும் வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் எப்போதும் சரி என்று நினைப்பதுதான். அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும். அறிவாளியாகிய உங்கள் அமைதி அதிக மதிப்புடையது என்பதை உணர்ந்து நடந்தால், வாழ்வு வளமாகும்..!. நன்றி . சுமத்திரன் எனும் முட்டாள் விசரனால் தமிழரின் அரசியலை பலவருடங்கள் பின்னோக்கி தள்ளியுள்ளான் அதை புரிந்து கொள்ளாது சுமத்திரன் நல்லவன் வல்லவன் என்று புல் நீல நிறம் போல் வாதிடும் உங்களுடன் இனி இந்த திரியில் வாதிப்பதில் பலனில்லை நன்றி வணக்கம் .
  24. இதை சற்று முன்யோசனையுடன் வாசியுங்கள். இவர் யார்? தன்னை ஏதோ தமிழ்தேசியன் எனக்காட்ட, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப பாவிக்கும் யுக்திகள் விளங்கும்!
  25. காகத்திற்கு கனவிலும்.... கிளிநொச்சி நினைப்புத்தான். இதுவரை வரை வடக்கு, கிழக்கு பாடசாலை மாணவர்களிடையே இருந்த போதை மாத்திரை பழக்கத்திற்கு காரணமானவர்களைப் பற்றி ஓரு கருத்துக் கூட வைக்க முடியாத சுமந்திரனின் செம்புகளுக்கு வேறு தொழில் இல்லை என நினைக்கின்றேன். கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு பிடிபடும் போதை வஸ்து கடத்தல்காரர்களுக்காக வாதாடி சிறையில் இருந்து வெளியே எடுத்துவிடும் சுமந்திரனைப் பற்றி எழுத தன்மானம் இடம் கொடுக்குது இல்லையோ. நீங்கள் எவ்வளவுதான்... சுமந்திரனுக்கு வெள்ளை அடித்தாலும், அந்த நிறத்தையும், குணத்தையும் மாற்ற முடியாது என்பதே கள நிலைமை. மக்கள் அந்தளவுக்கு... தெளிவாக சுமந்திரனை தோல்வியடையச் செய்துள்ளார்கள். சுமந்திரனை... ஆளுமை, மண்ணாங்கட்டி என்று... பப்பாவில் ஏற்றி, கீழே விழுத்தியதில் உங்களைப் போன்றவர்களின் பங்கும் முக்கிய காரணம். அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சிக்கு மரண அடி விழ இருக்கு. வாங்கிக் கட்ட ரெடியாய் இருங்கோ.
  26. இதென்ன கொடுமை இருவரும் மனமொத்து உறவு வைத்து விட்டு இப்ப வழக்குப் போடுவது என்ன நியாயம்.ட்ரம்பிடம் இல்லாத பணமா எதுக்கு கள்ள உறவுக்கு கள்ளக கணக்குக் காட்டி பணம் கொடுக்க வேண்டும் பணம் தர முடியாது பண்ணுவதைப்பண்ணிப்பார் என்று சொல்லி விட வேண்டியதுதானே.
  27. ஜீ காமா கொடி போல வளரும் என எண்ணுகிறேன். பச்சையாகவே சாப்பிடலாம் போல .கவர்ச்சியான (?) தலைப்பு .....😄
  28. எனக்கும் இதுபற்றி அவ்வளவாகத் தெரியவில்லை . ........ யாராவது சமைத்துப் பார்த்து வீடியோ போடுங்கப்பா .........! 😁
  29. தலைப்பைப் பார்த்து திக்குமுக்காடி விட்டேன் உடையார்.
  30. @கிருபன் ஜீ நீங்க டக்கியரின் ஆளென்டு தெரியாமல் போச்சே!
  31. முதன் முதலாக இப்போதான்... ஜக்கம்மாவை பார்க்கின்றேன். 😂 விதையை நட்ட உடையார்... சிலவருடங்களின் பின் காசு கொடுத்து மரத்தை தறிக்கின்றாரோ தெரியாது. 🤣
  32. கீழே முதலாவது வீடியோ முறையில் கற்றாழையை பயன்படுத்தி பல கன்றுகளை உருவாக்கலாம், நான் கொய்யாவை இந்த முறையில் செய்து 1 மாதத்தில் அரும்பு விட்டத்து, இப்ப கொத்து மல்லிகையை வெட்டி நட்டுள்ளேன். முட்டையையும் அடித்து மண்ணுடன் கழந்துவிடுங்கள், நல்ல சத்து
  33. யாழ்ப்பாணத்தின் அனுமதியுடன் சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம் என்று சொன்னால்.. நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் வரவேற்று நாசம் செய்கிறோம் என்று அர்த்தம். அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும். யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விஷேச புவியியல் அமைப்புக் காரணமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும். நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம். முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான். இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளுக்குள் வந்தால் பிறகு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி கதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு. Sivakumar Subramaniam
  34. தமிழ் நிலம் ...சிறிலங்காவில் தமிழர் ஒர் தேசிய இனம் என்ப‌தை சிறிலங்கன்ஸ் ஏற்றுக்கொள்ள வேணும் ..அது பிரிவினை அல்ல என்பதை ஏனைய தேசிய இனங்கள் புரிந்து கொள்ள வேணும் .... நாங்கள் சிறிலங்கன்ஸ் எண்டு போட்டு ஏனைய தேசிய இனங்களை அழித்து எண்ணிக்கையில் அதிகமான ஒர் இனம் சிறிலங்காவை உரிமை கொண்டாட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது ..... அணுரா தோழர் இந்தியாவிலிருந்து வந்தவுடன் பெளத்த பீட தலைவரை சந்திக்கின்றார் .. ஆனால் அமைச்சர் சந்திர சேகரம் வடமாகாணத்தில் ஒர் நிகழவின் பொழுது விபூதி பூச மறுக்கின்றார் ...அதே வட மாகாணத்தில் ஜெ.வி.பி பா .உக்கள் பெளத்த மதகுருவின் காலில் விழுந்து வணங்கின்றனர்.. மொழி பெரும்பான்மையை ஆயுத /அதிகார ஊடாக அழித்த சிங்கள சிறிலங்கன்ஸ் ... இப்பொழுது மதபெரும்பான்மையை (சைவ /இந்து) இடதுசாரி தத்துவங்கள் ஊடாக அழிப்பதில் முயற்சிக்கின்றனர்.... தமிழனின் தனித்துவ அடையாளங்கள்😅😅 ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழ்பவன் ...பல தடவைகள் விட்டு கொடுத்து வாழந்தவன்,வாழ்பவன் .. ஒற்றுமையாக வாழ்பவன்... போராடியவன .. சக தமிழனை வீழ்ந்த மாட்டான் சாதி பார்க்க மாட்டான் பிரதேச வாதம் பேசமாட்டான் ...
  35. மக்கள் முறையிடாமல் இளங்குமரன் அங்கு வந்திருக்க நிஞாயமில்லை. அதோடு குறிப்பட்ட அளவிற்கு அனுமதி பெற்று, அதற்கு மேலும் சுரண்டுபவர்களும் உண்டு. அதற்கு முறையான விசாரணை வேண்டும். கள்ளன் யார், நிஜமானவன் யார் என்று எவருக்கும் தெரியாது. சரியாக ஆராய்ந்து உண்மையை கண்டறிவது சம்பந்தப்பட்டவரின் கடமை. இதை பெரிய விடயமாக்கி பிரபல்யம் தேடுவதால் களவாக செயற்படுவோர்க்கு தைரியம் அளிக்கப்படுகிறது. அதோடு இளங்குமரன் போன்றோர் இனிமேல் சமூக விரோத செயலை கண்டிக்க தயங்குவர்.
  36. திடீர் கோடீஸ்வர யோகம் தரும் சனி. அள்ளி கொடுக்கும் சனி. சுழற்றி அடிக்கப் போகும் சனி. முதல் சனியால் மாற்றம் முன்னேற்றம். ஜென்ம சனியால் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம். விஸ்வரூபம் எடுக்கும் சனி. 😂
  37. மேலைநாட்டுகளில் ஈழதமிழர்கள் வேலை பார்ப்பது போன்று மேலைநாட்டு இராணுவம் பொலிஸ்சிலும் வேலை பார்க்கின்றனர். தமது சகோதரர் உறவினர் அங்கே வேலை பார்பதை பெருமையாகவும் சொல்கின்றனர்.இலங்கையில் இருந்து மேற்குலக நாட்டுகளுக்கு செல்ல விரும்பிய ஈழதமிழர்களை ஏமாற்றி பிள்ளைபிடிகாரன் போன்று ஈழதமிழர்கள் தீண்டவே விரும்பாத ரஷ்யாவுக்கு கொண்டு சென்று புதினுடைய இராணுவத்தில் யுத்தம் செய்ய விடப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.கம்யுனிச சோசலிச கோட்பாட்டை வரித்துக்கொண்ட இலங்கை அரசு புதின் என்ற பிள்ளைபிடிகாரனிடம் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
  38. பல விடயங்கள் சொல்லலாம் . விவேக் மீடியாவில் உச்சகட்ட வெளிசத்தில் இருந்தவர் . 1. சுசிர் பாலாஜியின் கொலையா தற்கொலையா தெரியாது அவர் என்ன சொன்னார் a1 வாடிக்கையாளர்கள் இருந்தே தரவு திருட்டு நடை பெறுகிறது என்று . அதே போல் சில கேள்விகளுக்கு விடை தெரியவில்லை யாழ் உறவுகளுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் . 2.குறைந்த விலையில் மொபைல் டீல் பிராட் பாண்ட் டீல் கிடைக்கும் சில வருடங்களில் சராசரி விலையையும் விட அதிக பணம் நமது பாங்கில் எடுத்து கொள்கிறார்கள் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் குறைந்தது ஒரு மணி நேரம் காக்க வைப்பார்கள் இணைப்பு வாங்க போகையில் உள்ள வேகம் இந்த பிரச்னையை சொல்லி வெளியேற போகையில் உள்ள வேகத்தையும் கவனியுங்கள் . 3. ஒரு பொருளை வோசிங் மிசினை வாங்க முடிவு செய்து குடும்பத்தாருடன் கதைத்து போனில் உள்ள முக நூலை திறந்தால் வோசிங் மிசின் விளம்பரம் வருவது தற்செயல் ஆனதா ? 4.நமது வீட்டின் பின்புறம் ஆப்பிள் மரங்கள் உள்ளன நவம்பரில் குளிர் தொடங்கி யவுடன் பழம்கள் கொட்டி மரமும் மொட்டையாகி நிக்கும் அந்த கீழே விழுந்த பழங்களை அள்ளி வைப்பது ஒவ்வொரு விண்டரிலும் பெரிய வேலை ஆனால் சுப்பர் மார்கெட்களில் விண்டர் பொழுதுகளிலும் ஆப்பிள் பழம் விற்கிறார்களே எப்படி ? 5. gmail,ஹாட் மெயில் போன்றவை எமக்கு இலவசமாக தருகிறார்கள் அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ? இப்படி நிறைய இருக்கின்றன கேள்விகளின் விடையில் உங்களுக்குரிய பதில் இருக்கும் .
  39. தனிப்பட்ட ஒவொருவரும் கண்காணிப்பில் உள்ளோம் ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒரு புது ஐடியை பார்வையில் இடுவது நல்லது . உதாரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மெயில் ஐடியை மாற்றுவது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.