Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46783
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3054
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/10/25 in Posts

  1. இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடுத்தல் நன்றன்று. அந்த நேரத்தில் அவரது உதட்டில் வந்த பெயர் என்றளவில் மட்டுமே அது பொருத்தமானது. மற்றும் படி எமக்காக பல தியாகங்களை செய்த, தம் சொந்த வாழ்க்கையையே அர்ப்பணித்த தமிழ் உணர்வாளர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் எவரையும் நாம் எமது சொற்களால் காயப் படுத்தி விடக்கூடாது. நன்றி.
  2. எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும் சேர்த்தே அணுக வேண்டும். ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் பிரச்சனைகள் இருக்கிறது, ஆனால் அதற்காக அவர் முற்றிலும் புறக்கணிக்கத்தக்கவரும் அல்லர். அவராலும் சமூகத்துக்கு சில பல நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதால் அவரை சீண்டாமலும் அதே சமயம் அளவுக்கு மீறி துதி பாடாமலும் விடுவதே புத்திசாலித்தனம்
  3. அதுமட்டுமில்லை சாமியார், சாதாரணமாக இந்த கால பருவத்தில் மரக்கறி, வெங்காயம், மிளகாய் பரவலாக விலை உயர்ந்துதான் இருக்கும். போன வருடம் இதே போன்று பச்சை மிளகாய் ஆயிரம் ரூபா விலைபோனது. மழைக்காலம், மேட்டுநில உற்பத்திகளே வரும். இந்த முறை அளவுக்கதிகமான மழை, காற்று, மேட்டுநில உற்பத்திகளும் பாதிப்படைந்து உள்ளது. இப்போ விவசாயம் செய்வது கொஞ்சம் கஸ்ரம். பசளை, கூலி, எரிபொருள் கொடுத்து செய்வது கட்டுப்படியாவதில்லை. மக்கள் விவசாயம் செய்ய பின்னடிப்பதற்கு இதுவும் காரணிகள். முன்பெல்லாம் உயர் படிப்பு படிக்க முடியாதவர்கள் விவசாயத்தில் இறங்கி விடுவார்கள். இப்போ வெளிநாடு போக வேணும். அந்தரத்தில் அந்நிய தேசத்தில் அந்தரிகிறார்கள்.
  4. வாங்கப்பா வாங்கப்பா... சிலோனுக்கு இரண்டு .... பேரும் சேர்ந்து.... போவமப்பா.... பிறகு. வெக்கையப்பா... வெக்கையப்பா... உடம்பெல்லாம்... புழுங்குதப்பா... எண்டு. திருப்பியும்.... கத்தக்கூடாதப்பா.....🤣
  5. சூசை அவர்கள் மட்டுமல்ல, ஏனைய தளபதிகளும், சில வன்னி அரசியல் தலைமைகளும் கூட இறுதி யுத்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த பிரமுகர்கள், செயற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்று தான் நான் அறிந்தேன். ஆனால், சீமான் குழுவுக்கு மட்டும் தான் இந்த ரணகளத்திலும் சூசை அவர்களின் உரையாடலை ஒலிப்பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்திருக்கிறது என்றால், அவர்களின் உள்ளே இருந்தது உணர்வா அல்லது இலாப நட்டக் கணக்குப் போடும் மூளையா என்பதை சொந்தமாக மூளை இருக்கும் ஒருவர் யோசிப்பார். சீமான் அடிப்பொடிகள் யோசிக்க மாட்டார்கள் என்பது அதிசயமல்ல😂!
  6. இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது. இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது. இது வீரகேசரியின் இணைப்பு December 2024
  7. தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அதன் மின்னூட்டியும் மிக அவசியம் மடிக்கணினி தேவையேயில்லை முக்கியமாக வேலைக்கணினி அது வெந்து போகட்டும் குடும்பப் படங்கள் சில கையில் கிடைக்கும் சில உடுப்புகள் இப்படி காரை நிரப்பவும் அவசியப் பொருட்கள் பல இருக்கின்றன என்ன அலைபேசியில் இப்படியொரு பயங்கரச் சத்தம் என்று பின்னுக்கு இருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் என் வீட்டுக்காரி ஆளைக் கண்டவுடன் மிக அவசியமான ஒன்று மறந்தே போயிருந்தது தெரிந்தது இப்ப காரில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பொருட்களை ஏற்ற வேண்டும்.
  8. அடிக் கணக்காக பனி கொட்டிக்கிடக்க நீச்சல் தடாகத்தில் ஈழப்பிரியன் குடும்பம். இதுவும் கலிபோர்ணியா தான்.
  9. ஆம், 2010 இல் பிறந்தவை Gen alpha! என் பிள்ளையின் தலைமுறை. ஏராளமான செல் போன் செயலிகளில் வீட்டில் இருக்கும் வயசாளிகளை விட அதிக பரிச்சயமுடையவர், இதனால் சில சமயங்களில் என் தொழில் நுட்ப ஆலோசகர்😂.
  10. வெள்ளிக்கிழமை விடியும் நேரம் இருவரும் கிளு கிளுப்பூட்டிறியள்....அடுத்த பயண்த்துக்கு அந்த ரூட்தான் எடுக்கவேணும்.. எப்படி பிரியன்சார்..எப்படி உங்கஊர் நிலைமை...உறவுகளூம் நீங்களும் நலம்தானே பேரம் பேசல் தோல்வியில் முடிந்திட்டுது போல..
  11. அது மிமிக்ரி இல்லை. ஆனால் எடிட் பண்ணப்பட்ட ஒன்று. புலம்பெயர் நாடுகளில் உள்ள ஒரு சுயநலக் கூட்டம், சீமானுடன் இணைந்து செய்த தில்லாலங்கடி வேலை அது. அண்மையில் முன்னைய செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைக்கும் போது, அவர் நடேசன் அண்ணாவின் நெருங்கிய உறவுகளுக்கு இந்த விடயம் தெரியும் என்றும் ஆனால் ஏன் மெளனமாக இருந்தனர் என்று தெரியாது என்றும் கூறினார்.
  12. 👇 கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு, யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது. 17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு. இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று பச்சைப் பொய் சொல்லி, சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை செய்யாதீர்கள். இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்... "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது. அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல், பார் லைசன்சைப் பற்றி கதைத்து, சுமந்திரனை முச்சந்தியில் வைத்து துகில் உரியப் பண்ணி விட்ட பெருமை, உங்கள் இருவரையுமே சாரும். 😂 நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான் கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது. மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால் உங்களுடன் பலர் கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும். நன்றி. 🙏
  13. அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...
  14. உங்க ஆளை பார்த்தால் நிறம்மாறும் ஓணானே தற்கொலை பண்ணிவிடும் அவ்வளவுக்கு வேகமாய் நிறம் மாறிக்கொண்டு இருக்கும் மிருகம் .
  15. தோட்டம் செய்யிறது மரியாதை இல்லை எண்டதுக்கு நல்ல பரிசு.
  16. ஆத்தை படுற பாடு இதுக்குள்ள குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.
  17. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!" [நவாலியூர் சோமசுந்தரப்புலவர்] தை மாதம் அறுவடைக்குப் பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது. தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month] மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' என்ற நம்பிக்கை! 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே. அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம். இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும். இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்: ஆடிப்பட்டம் தேடிவிதை [உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!] ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும் பொருள்: வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும். உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்? அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்
  18. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை "நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்." [மகாகவி பாரதியார்-] ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான். நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது. "யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே" என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும். நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன. வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள் மூட நம்பிக்கை என கருதியது. மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும் மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது. ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும் சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை நம்ப தொடங்கி விட்டான். ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் . "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை. இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும் [முகவுரை தொடர்கிறது]
  19. நல்லவேளை! தக்க சமயத்தில் ஓடி வந்து நினைவூட்டியிருக்கிறார். இல்லையேன்றால் இந்த கலேபரத்தில் நிரந்தரமாகவே மறந்திருப்பியள் அவரை. பாவம், அப்பாவி மனுசி போல. அதுதான் அவ்வளவு இலகுவாக மறந்து விட்டார். இல்லையென்றால்; செய்தி கேட்ட உடனேயே, வேக வேகமாக எடுத்ததும் எடுக்காததுமாக ஓடி மறைந்திருப்பார்.
  20. ஒரு விடுகதை? இங்கே எனக்கு எதிராகவும்,சீமானுக்கு எதிராகவும் எழுதியவர்களுக்கு முள்ளிவாய்கால் இறுதி நிகழ்வுகளும் சீமானைப்பற்றிய உள் விபரங்களும் தெரிந்திருக்கு! 🤣 ஈழத்தமிழர் போராட்ட வரலாறுகளும்/மாவீரர் வரலாறுகளும் தெரிந்திருக்கு.. ஆனால் முக்கியமான ஒரு விடயம் மட்டும் தெரியவில்லை அது என்ன விடயம்?
  21. தோட்டம் செய்யிறது அருமையான வேலை. மனதுக்கு சந்தோசம் தரக்கூடியது. ஒவ்வொரு பயிரும் வளர்ந்து வரும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.மழை,வெய்யில்,லீவு நாட்கள் ஏதுமில்லாத வேலை என்றாலும் யாருக்கும் அடிமை இல்லாத தொழில் அது.யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.தானதர்மம் செய்வதிலும் தோட்டக்காரனை மிஞ்ச ஆட்கள் இல்லை. தோட்டம் என்றால்..... ஐ மீன் மை கார்,மை பெற்றோல், மை றோட்டு சிஷ்ரம் அது. அனுபவிச்சவனுக்கு மட்டுமே அதன் சுகம் தெரியும். 😂
  22. இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை... ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். ஆனால் அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது... இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள்.. அந்தப் பாடல்... கந்த சஷ்டி கவசம்... சஷ்டியை நோக்கச் சரவண பவனார்.. சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.. கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை... சரணம் சரணம் சண்முகா சரணம்.. சரணம் .. Paranji Sankar
  23. இரண்டு பைத்தியம் பிடித்த பேய்கள் சந்திப்பது செய்தியல்ல அபாய எச்சரிக்கை.
  24. இங்கு படம் தொடர்பாக கருத்து வைத்தது தாங்கள். கபிதன் மீண்டும் சொல்கிறேன் இங்கு சும் இன் மீது எவருமே சேறடிக்கவும் இல்லை வன்னமும் இல்லை. சும் மினால் நடந்ததை அல்லது ஏற்படுத்தப்பட்டதையே கூறுகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்து இன்று தமிழரசுக் கட்சியையும் உடைத்து விட்டார். சும் இன் மீதான உங்களின் ஈர்ப்பு இவற்றை / யாதார்த்தத்தை ஏற்க மறுக்கின்றது.
  25. Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை பொலிஸார் வரவழைத்துள்ளனர். ஜோனியை அழைத்து வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரணசிங்க (90426) தேடுதல் நடவடிக்கைகாக மின்கலத்துடன் பொருத்தப்பட்டிருந்த முனையத்தை நாய்க்கு வழங்கினார். நாய் அதனை மோப்பம் பிடித்து வாரியபொல ஊடாக கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த விளக்கடுபொத்த பகுதியில் வீடொன்றுக்கு சென்றுள்ளது. அங்கு ஐந்து மின்கலங்களுடன் கையும் களவுமாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/203412
  26. இருக்கலாம். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கும் பாதகங்கள் உண்டு. இதனைத் தவறாகவும் பயன்படுத்தலாம் என்பதை உங்கள் 2 அனுபவங்கள் காட்டுகின்றன. செயற்கை நுண்ணறிவைப் புகுத்தாவிட்டால் நான் தற்போதுள்ள வேலையில் நின்றுபிடிக்க முடியாது என்பது எனது நிலமை. 2025 ஆம் ஆண்டிலிருந்து பிறக்கப்போகும் குழந்தைகள் Generation Alpha என்று வகைப்படுத்துகிறார்கள். இவர்களின் பௌதீக வாழ்வையும் மின்னியல் தொழில்நுட்பத்தையும் இணைபிரிக்க முடியாது என்று கணிப்பிடுகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் தாக்கங்களை மிக விரைவில் காணப் போகிறோம்.
  27. பொழைப்பு கெட்டுடுமே சாமியோவ்....இது நடக்கிற காரியமா?>..பார்ப்போம்
  28. பறக்கின்ற விமானத்தில்... பாலியல் வன்புணர்வு செய்த ஆள் என்றால், எப்படிப்பட்ட கில்லாடியாக இருப்பான். நிச்சயம் சிங்களவனாகத்தான் இருப்பான். தமிழன் என்றால்... பெயர், ஊர், விலாசம் எல்லாம் பத்திரிகையில் போட்டிருப்பார்கள். 😂
  29. வருகின்ற செவ்வாய்க்கிழமை (14.01.2025) அன்று தைப்பொங்கல்.
  30. 😂 சாடியில் பூ கன்று வளர்ப்பதிற்கு பதில் மிளகாய் கன்று களை வளர்க்களாம்
  31. இந்த வீடியோ காட்சி பார்க்கும் போது சுவாரசியமாக இருந்தது.அதிலையும் கமலா அக்கா விட்ட பெரு மூச்சு இருக்கே சொல்லி வேலையில்லை 🤣 மற்றும் படி ஆளுக்காள் முழுசிக்கொண்டு இருந்திச்சினம்.😃
  32. வெறி வெறி கொட்டப்பா வேர்க்குது வாடியப்பா ரயேட்டா இருக்குதப்பா கொம்பிளேன் எகேன் கொட்டப்பா கோ வாக்ரு லண்டன் சூனப்பா இப்படியே கத்தி போட்டு பிளைட் ஏற வேண்டியது தான் குமாரசாமி அண்ணன். நான் குளிருக்கு எழுத நீங்கள் வெக்கைக்கு எழுதுறியள் அப்படி போடுங்கோ நல்லாத் தான் இருக்கு.😂👍
  33. அநேகமாக, மாரி காலத்தில் தோட்ட வயல்களெல்லாம் நீரில் மிதந்துவிடும். மேட்டுக்காணிகள், வீட்டுத்தோட்டங்களில் இருந்தே இவைகள் சந்தைக்கு எடுத்து வருவார்கள். இப்போ வீடுகளுக்குள் வீடு, அதைவிட பாரிய வெள்ளம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய நிலை. தோட்டக்காரர் சிலவேளைகளில் அதிக லாபம் எடுத்தாலும், பலவேளைகளில் பருவம் பிந்திய முந்திய மழை, வறட்சி அவர்களை நிலையான சந்தோஷத்தில் இருக்க விடுவதில்லை. இயற்கையால் அதிக அழிவுகளை சந்திப்பவர்கள் விவசாயிகளே!
  34. அப்படியே இருந்தாலும்… அது சூசை என்ற தனிமனிதன், என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெளிவற்ற, வாழ்வின் இறுதி கணங்களில், யார் எதிரி, யார் கூட இருந்தே குழிபறிக்கும் துரோகி என்பதை பிரித்தறிய முடியாத சூழலில்…நினைத்த நினைப்பு என்பதே உண்மை. சூசை நல்ல தளபதி, மாவீரன். ஆனால் அன்ரன் பாலசிங்கமோ, தலைவரோ, பொட்டு அம்மானோ அல்ல. சீமான் போன்ற ஐந்தாம் படைகளை கையாள கூடிய ராஜதந்திரம் அவருக்கு இல்லை. அந்த வேலை அவருக்கு கொடுக்க்கப்பட்டதும் இல்லை. அவர் புலிகளின் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். இது உங்களுக்கு அனைவரையும் விட தெளிவாக தெரியும். இதை எழுத வேண்டாம் என நினைத்தேன்…இதே காலலட்டத்தில்தான் சூசை குடும்பம் படகில் தப்பித்து நேவியிடம் சரணடைந்ததாகவும், அதில் சூசையின் பங்கும் உண்டு எனவும் சொல்லப்படுவதும் நீங்கள் அறியாததல்ல. இப்படி பலவிதமான அளுத்தங்களுக்கு ஆட்பட்டு, செய்வதறியாது நின்ற ஒரு மனிதனின் இறுதிக்கண கூக்குரலை (அது மிமிகிரி இல்லை எனில்), வெட்டி ஒட்டி, அதன் மூலம் சீமானுக்கு பரிசம் கட்டி விட துடிப்பவர்கள், புலிகளின் முதுகில் அல்ல நெஞ்சிலேயே குத்துபவர்கள். சூசையின் ஆன்மா கூட இவர்களை மன்னியாது.
  35. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சொந்த தேவைகளுக்கு இயற்கை முறையிலையே வீட்டுத்தோட்டங்கள் மாதிரியாவது செய்யலாம் என நினைக்கிறேன்.
  36. சும்மில் இவ்வளவு குற்றம் ஏன் என்றால் இனபடுகொலை என்பது நடந்தது என்பதையே மூடி மறைத்து அப்படி நடக்கவில்லை என்று வெளிநாட்டு துதுவர்களை தனியே சந்தித்து நம்ப வைத்து போர் குற்றம் களில் இலங்கை சிங்கள அரசை காப்பாற்றியது.
  37. இந்தியாவிற்கும் அமெரிகாவிற்குமிடையே தற்போது நிகழும் இராஜதந்திர நெருக்கடிக்கு ஒரு இந்திய நண்பர் கூறிய காரணம், அமெரிக்காவின் அப்கானிஸ்தான் விலகலின் பின்னர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் போதைவஸ்து உற்பத்தி செய்யப்பட்ட விளைநிலங்களில் 95% மீண்டும் உணவு பொருள்கள் உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக மாறிவிட்டமையால் மீண்டும் அமெரிக்க போதை பொருள் நடவடிக்கைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் CIA இயின் முன்னய போதை பொருள் கடத்தல் நாடான பர்மாவிலிருந்து இந்திய எல்லை பகுதியினூடாக போதை பொருள் கடத்தலுக்கு (மிசோராம், மணிப்பூர் என நினைவுள்ளது) இந்தியரசு தனது சோதனையினை அதிகரித்து நெருக்கடி கொடுப்பதன் மூலம் அமெரிக்காவின் தென்னாசியாவில் மேற்கொள்ள விரும்ம்பும் செயற்பாட்டுகளுக்கான நிதி வழங்கலை இந்தியா கட்டுப்படுத்துவதனை விரும்பாதமையால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார். நீங்கள் கூறும் அமெரிக்க வெள்ளை மா அதுவாக இருக்குமோ😁?
  38. 😀 சுவாரஸ்யமான தகவல் அறிந்திருக்கிறேன். நன்றி.எல்லா நாடுகளிலும் பாவிக்கின்ற ஒரு செக் முறை பின்பு அது இல்லாமல் போனது அதிசயம் தான்
  39. 🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்.. ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣. பிகு ஆம் அது செரினாவேதான்.
  40. நீர்வேலியான், ஈழப்பிரியன் அண்ணாவின் மகள், நான் ஆகிய மூவரும், எனக்குத் தெரிந்த வரையில், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கின்றோம். இங்கு தான் சில இடங்களில் நெருப்பு. வெளியில் இருந்து பார்க்கும் போது உங்களில் பலருக்கு ஒரு பயங்கரம் போன்று இது தோன்றலாம். ஆனால் இது ஒரு நிகழ்வு மட்டுமே இங்கிருப்பவர்களுக்கு. இரண்டு நாட்களாக விளையாடவில்லை. யார் யார் இன்று விளையாட வருகின்றீர்கள் என்று ஒரு கேள்வியை ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில் போட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றேன். இன்றும் Bad air quality என்று சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள். விடக்கூடாது, வீடுகளுக்கு போய் ஆட்களைச் சேர்க்க வேண்டும்.............🤣.
  41. எதுக்கும் பொறுத்துப் பார்ப்போம்... அனுர சீனா போறார்தானே...பால்சோறு செய்யிற அரிசி 50 கிலோ என்றாலும் கொடுப்பினம்தானே...🤣
  42. இனிமேல்... உங்களுக்கு கிட்ட வந்து கதைக்க, நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது. 😂
  43. அண்மையில் பெற்ற இரு அனுபவங்கள் இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு முட்டாள் தலைமுறையை உருவாக்கி விடுமென்ற அச்சத்தை எனக்குத் தந்திருக்கிறது. 1. ஒரு மாணவர் ஆராய்ச்சி பழகுகிறேன் என்று வந்தார். ஆனால், வரவேண்டிய நாட்களில், நேரங்களில் வருவதில்லை. நானே அவர் சம்பந்தப் பட்ட வேலைகளை முடித்து விட்டு இருந்த போது புள்ளிகள் பெற கடைசி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலம் வந்தது. வேலை செய்யாமல் எப்படி அறிக்கை எழுதுவது? எனவே இரக்கப் பட்டு "ஒரு தியரிப் பேப்பர் எழுது, புள்ளிகள் தரலாம்" என்று சலுகை கொடுத்தேன். மாணவரின் அறிக்கை, கிடைக்க வேண்டிய இறுதி நாளில் வந்தது. ஒரு பிழையுமில்லாமல் திறமாக இருந்த அறிக்கை சந்தேகம் தரவே, 4 வெவ்வேறு AI detectors மூலம் சோதித்துப் பார்த்தேன். நான்கிலும் "இந்த ஆவணம் 98 முதல் 100 வீதம் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப் பட்டது" என்ற தீர்ப்பு வந்தது. அப்படியே அந்த தீர்ப்பை அவரது மேற்பார்வையாளருக்கு அனுப்பி விட்டு "இனி இங்கே வராதே" என்று துரத்தி விட்டேன். 2. சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்க முதல் குறைந்தது 2 பேர், துறை அனுபவம் இருப்போர் (peer reviewers) பரிசோதித்து பிரசுரிக்க தகுதியானதா என்று சோதிக்க வேண்டும். சீனாவில் இருந்து அப்படி அனுப்பப் பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை என்னிடம் பரிசீலிக்க அனுப்பி வைத்தார்கள். ஒரு இலக்கண, எழுத்துப் பிழை கூட இல்லாமல் இருந்த கட்டுரை சந்தேகம் தரவே, சஞ்சிகை இதை பரிசோதிக்க வேண்டுமெனக் கேட்டேன். சஞ்சிகையின் பரிசோதனையில், "80 முதல் 90 வீதம் செயற்கை நுண்ணறிவு எழுதிய கட்டுரை" என முடிவு வந்தது. என்னுடைய துறை/வேலைப் புலம் சாதாரண உலகத்தில் இருந்து ஒரு மூலையில் (niche) இருக்கலாம். ஆனால், இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை துஷ்பிரயோகம் செய்வதால் வரும் விளைவுகள் பெரும் எண்ணிக்கையானோருக்கு அநீதி விளைவிக்கும். உழைத்து எழுத வேண்டிய அறிக்கைகளை, இப்படி உழைக்காத சோம்பேறிகள் உரிமை கொண்டாட செயற்கை நுண்ணறிவு இலகுவாக வழி செய்திருக்கிறது. 10 வருடங்களில், பொதுவான சமூகத்தில் இதன் விளைவுகள் வெளிப்படும்.
  44. 🤣.................. கந்தையா அண்ணாவின் விருப்பப்படியே அதையே வைத்துக் கொள்ளட்டும், விசுகு ஐயா........... நமக்குத் தேவை தலைக்கு மேல் ஒரு கூரை, அடுப்படியில் சாப்பாடு, அதைவிட்டால் பந்தடிப்பதற்கு ஒரு இடமும், சில ஆட்களும்................... இவைகளை குறைவில்லாமல் தந்துவிட்டு என்ன பெயரையாவது வைத்துக் கொள்ளட்டும்...........🤣.
  45. 'யெஸ் சார்..............மார்வலஸ் ஐடியா.........' என்று சுற்றி இருப்பவர்கள் தலையாட்டிக் கொண்டு இருப்பார்கள் போல..................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.