Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46791
    Posts
  3. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5063
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1747
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/12/25 in Posts

  1. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
  2. உங்கள் பெற்றோர் உங்களை வளர்த்து போல நீங்கள் உங்கள்பிள்ளைகளை வளர்க்க முடியாது . ஏனெனில் இப்போதுள்ள உலகம் வேறு விதம்
  3. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
  4. வட கொரியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது, ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடு உதவிக்கு செல்லும், இங்கு இரஸ்சியாவின் கேர்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமையால் அதில் வட கொரியா ஈடுபடுவதற்கு எந்த தடையுமில்லை. ஆனால் மறுவளமாக இரஸ்சியாவின் மீது மேற்கு நாட்டு படைகள் தாக்குவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என நினைக்கிறேன் ஏனெனில் அவர்கள் உக்கிரேனுக்கு நேட்டோவில் இணைவதற்கு கூட அனுமதி கொடுக்கிறார்களில்லை ஆனால் அவர்கள் பின்னணியில் இருந்து இரஸ்சிய படைக்கெதிராக போராடுகிறார்கள். தற்போது உக்கிரேன், போர், பொருளாதார அழுத்தம் என பல வகையாலும் அழிவினை சந்தித்துக்கொண்டுள்ளது ஆனாலும் நேட்டோவில் அங்கத்துவமோ ஐரோப்பிய ஒன்றியத்திலோ இணைக்கவில்லை. தற்போது உக்கிரேன் உடையும் தருணத்தில் உள்ளது, தற்போதுள்ள நிலை நீடித்தால் உக்கிரேன் சடுதியாக உடைந்துவிடும். அது 6 மாதத்திலும் நிகழலாம் 3 மாதத்திலும் நிகழலாம், இதனை உடனடியாக தடுக்கவேண்டுமாயின் மேற்கின் இராணுவத்தினை உதவிக்கு அனுப்பவேண்டும் அதற்கு உக்கிரேனை நேட்டோவில் இணைக்க வேண்டும் செய்வார்களா? இங்கு தத்தமது நலனையே முன்னிலைப்படுத்துவதால் நிட்சயமாக உக்கிரேனை நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்க்க மாட்டார்கள், ஆனால் தேவைப்பட்டால் இரஸ்சியாவுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை எனும் போர்வையில் உக்கிரேனை கொள்ளை அடிப்பார்கள். இங்கு வட கொரியா இரஸ்சியாவில் நிற்பது பிரச்சினை அல்ல, நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளது உக்கிரேன். வட துருவமோ, உக்கிரேனோ வளங்களை பங்குபிரிப்பதில் நிலவும் போட்டிதான் தற்போதய புதிய உலக ஒழுங்கு, இதில் வெல்பவர்கள் அனைத்தையும் எடுத்து கொள்வர்.
  5. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை. திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார். காந்திஅவர்கள் பத்தொன்பது வயதையெட்டிய 1982-ம்ஆண்டுகாலப்பகுதி. சிங்கள பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்போராட்டம் முளையிடத் தொடங்கிய காலம். பேரினவாத சக்திகள் தமிழ்மக்கள்மீது திணித்த அடக்குமுறைகள் உயர்தரக்கல்வி கற்றுக்கொண்டிருந்த காந்தி அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான கப்டன் பண்டிதர், கப்டன் றஞ்சன்லாலா, கேணல் கிட்டு ஆகியோர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டுக் காலப்பகுதியில் காந்தி அவர்கள் தன்னையும் ஒரு முழுநேர விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்டார். இயக்கப் பாசறையில்தான் இயக்கப்பெயராக சூசை என்ற பெயரைப் பெற்றிருந்தார். தொடக்கநாட்களில் கேணல் கிட்டு அவர்களின் வழிகாட்டலில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இராணுவ அரசியல் ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார். இதன்பின்னர் 1983-ம்ஆண்டின் பிற்பகுதியில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் இருநூறு போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிஅணியினர் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்றபொழுது அந்த அணியில் சூசைஅவர்களும் சென்றிருந்தார். இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருந்த முதலாவது பயிற்சிப்பாசறையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று ஒரு சிறந்த போராளியாக மட்டுமன்றி சிறந்த ஆளுமைமிக்க பொறுப்பாளராகவும் புடம்போடப்பப்பட்டு தனது பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவுசெய்திருந்தார் சூசை அவர்கள். 1984-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சிப்பாசறை நிறைவடைந்ததையடுத்து தாயகம் வந்த சூசை அவர்கள் அதே காலப்பகுதியில் வடமராட்சிக்கோட்டப் பொறுப்பாளராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். சூசைஅவர்கள் வடமராட்சிக் கோட்டத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முனைப்புப்பெற்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலம்மிக்க ஒரு அமைப்பாக கட்டியெழுப்பும் பொருட்டு பெருமளவு இளைஞர்களை போராட்டத்தில் இணைத்து பயிற்சிகள் பெறுவதற்காக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கை காட்டுப்பகுதியிலும் பயிற்சிமுகாம் அமைத்து அங்கும் புதியபோராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கி இயக்கத்தின் ஆட்பலத்தை விருத்திசெய்து விடுதலைப்போராட்டத்தின் படிக்கல்லாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மத்தியில் போராட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறி போராட்டத்திற்கான மக்கள் ஆதரவினையும் வலுப்படுத்தினார். கிராமங்கள் தோறும் மக்கள்கடை என்ற பெயரில் வணிகநிலையங்களை நிறுவி மலிவுவிலைகளில் பொருடகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். அத்துடன் முதலுதவித் தொண்டர்களை உருவாக்கும் முகமாக கிராமங்களிலுள்ள சில படித்த இளைஞர் யுவதிகளை ஒன்றுசேர்த்து முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியதோடு பின்தங்கிய இடங்களில் முதலுதவி நிலையங்களை நிறுவி பயிற்றுவித்த முதலுதவித் தொண்டர்களை அந்த நிலையங்களில் மருத்துவத் தொண்டர்களாகப் பணிக்கமர்த்தி மக்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்தார். அன்றய நாட்களில் அந்த முதலுதவி நிலையங்களின் சேவையால் அநேகமான மக்கள் பெரிதும் நன்மையடைந்ததுவும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற குடும்பப்பிணக்குகள், காணிப்பிணக்குகள் உட்பட ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணும்முகமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த அறிவில் முதிர்ந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களுமான சிலரை இணைத்து இணக்கமன்றங்களை நிறுவி மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு அந்த இணக்கமன்றங்கள் ஊடாக உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தினருக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்திலும் நேரடியாக பங்கெடுத்திருந்தார். 1987-ம்ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கைமூலமாக வடமராட்சியைக் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்தனர். இந்தப் படைமுகாமை அழிப்பதற்கென விடுதலைப்புலிகள் 1987-ம் ஆண்டு யூலைமாதம் 05-ம்திகதி முதன்முதலாக கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தை கொன்றொழித்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப்படைமுகாமை வெற்றிகொண்டனர். இந்த தாக்குதலில் படைமுகாமின் பிரதான தடையை உடைத்து, கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய வாகனத படைமுகாமின்;தை முகாமிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு சூசை தலைமையிலான அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று சரியாக இரவு 7மணி 2நிமிடத்திற்கு சூசை தலைமையிலான அணியினர் முகாமின் தடையை உடைத்து பிரதான பாதையை ஏற்படுத்திக்கொடுக்க 7மணி 5நிமிடத்திற்கு கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து வாகனத்தை முகாமிற்கு உள்ளே கொண்டுசென்று கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டார். கரும்புலி கப்டன் மில்லர் அவர்களும் சூசை அவர்களின் ஆளுகையின் கீழ் வடமராட்சி அணியில் செயற்பட்டிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இதன்பின்னரான காலப்பகுதியில அதாவது தமிழீழத்தில் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மணலாற்றுக் காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டவேளையிலும் சூசை அவர்களும் இன்னும் சில போராளிகளும் வடமராட்சிப் பகுதியிலேயே மக்களின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இந்தக்காலப்பகுதியில் இந்தியப்படையினருக்கெதிரான கெரில்லா முறையிலான பல தாக்குதல்களை மேற்கொண்டதோடு தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக படகுகளில் கொண்டுவரப்படுகின்ற படைக்கலங்களையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்து அவற்றை மணலாற்றுக்காட்டுக்கு அனுப்பிவைப்பது உட்பட அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போராட்டப்பாதையில் மிகவும் நேர்மையுடன் பயணித்தார் சூசை. இதன்பின்னர் ஒரு கட்டத்தில் தேசியத்தலைவரின் அழைப்பையடுத்து தேசியத்தலைவரை சந்திப்பதற்காக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடர்மிகுந்த பயணத்தை; தொடர்ந்து தேசியத்தலைவரைச் சந்தித்தார். அதன்பின்னர் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழகம் சென்றார். அங்கு காயத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு காயம் குணமடைந்து உடல்நிலை தேறியபின்னர் தாயகம் வந்து தேசியத்தலைவருடன் மணலாற்றுக் காட்டில் செயற்பட்டார். 1990-ம்ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தமிழீழத்திலிருந்து முற்றாக வெளியேறியவுடன் மீண்டும் வடமராட்சிக ;கோட்டத்தைப் பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வகித்தார். இந்தக்காலப்பகுதியில் கலை கலாச்சாரப்பிரிவை உருவாக்கி அதனூடாக போராட்டக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து கணிசமான இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைத்து பலமானதொரு வடமராட்சி அணியைக் கட்டிவளர்த்திருந்தார். அந்தக்காலப்பகுதியில் மண்டைதீவில் தேசவிரோதக்கும்பல் மீதான தாக்குதல,; யாழ்-கோட்டை முகாம் மீதான தாக்குதல் மண்டைதீவுப்படைமுகாம் மீதான தாக்குதல் 1991-ம்ஆண்டு யூலைமாதம் ஆனையிறவுப்படைத்தளம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட அனைத்து தாக்குதல்களிலும் சூசை தலைமையிலான தாக்குதலணி பங்கெடுத்திருந்தது. ஆகாயக்கடல்வெளிச்சமர் முற்றுப்பெற்றதையடுத்து சூசை அவர்களுக்கான திருமணம் நடைபெற்றது. முதல் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் சகோதரி சத்தியதேவி(சுதா) அவர்கள்தான் சூசையின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். தனது இல்லறவாழ்க்கையில் சிந்து என்ற ஒரு பெண்பிள்ளைக்கும் மணியரசன், சங்கர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த கடற்புறா அணி 1991-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19-ம்நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் என்ற கட்டமைப்பாக பரிணமித்தபோது அதன் சிறப்புத்தளபதியாக சூசை அவர்கள் நியமிக்கப்பட்டார். கடற்புலிகளென்றால் சூசை சூசையென்றால் கடற்புலிகள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரினுடய செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதாவது கடற்புலிகளினுடய நடவடிக்கைகள் அனைத்திலும் சூசை அவர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமாகவிருந்தது. கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலத்தை கடற்புலிகள் நிர்வகிப்பதற்காக கடற்புலிகளின் அரசியல்துறை உருவாக்கப்பட்டு மக்களுக்கும் கடற்புலிகளுக்கும் மத்தியிலான ஒரு நெருக்கமான உறவுநிலையை ஏற்படுத்தியிருந்தார். யாழ்.குடாநாட்டுக்கான பாதைகள் தடைப்பட்டு கிளாலிக் கடல்வழியாக மக்களின் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற பொழுது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கடலில் இறக்கி மக்களுக்கான பாதுகாப்புக்களை வழங்கி நிறைவான போக்குவரத்துப்பணியை நெறிப்படுத்தினார். 1993-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி-நாகதேவன்துறை படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் எதிரியின் ஐந்து நீரூந்து விசைப்படகுகளை கைப்பற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இதன்பின்னர் ஓயாதஅலைகள் நடவடிக்கையில் முல்லைத்தீவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டமை, ஓயாதஅலைகள் மூன்றில் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மீட்புச்சமர், குடாரப்புதரையிறக்கம, தொடராக ஏற்படுகின்ற கடற்சமர்கள், ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகள் என அவரின் நெறிப்படுத்தல்கள் தொடர்ந்துகொண்டே சென்றன. 2002-ம்ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதானகாலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும், சமாசங்களின் பிரதிநிதிகளை தென்மராட்சி-பளைப்பிரதேசத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.; அத்துடன் முல்லைத்தீவு, வடமராட்சிக்கிழக்கு, மன்னார்மாவட்டம் ஆகிய அனைத்து கரையோரப் பிரதேசங்களிலுமுள்ள பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடரான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவைகளுக்கெல்லாம் சுமூகமான முறைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். நித்திகைக்குளத்தில் காயப்பட்டபோது ரவையின் சிறிய பாகமொன்று அவரின் உடலில் புதைந்திருந்தது. அது உபாதைக்கு உட்படுத்தியதால் சிகிச்சைக்காக 2004-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் சிங்கபபூர் நாட்டிற்குச் சென்று சிகிச்சைபெற்று ஒரு வாரத்தில் நாடு திரும்பியிருந்தார். 2004-ம் ஆண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்கள் நிறையவே அழிவுகளைச் சந்தித்திருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் சூசை அவர்கள் நேரடியாக களத்தில் நின்று மீட்புப்பணிகளை நெறிப்படுத்தினார். சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு தொடராக மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவிலும் வடமராட்சிக்கிழக்கிலும் ஒவ்வொருவாரமும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடாத்தி சுனாமி மீளகட்டுமானப்பணிகளை நெறிப்படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார். 2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் தொடங்கியபோது படையியல் ரீதியான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டியவராகவிருந்தார். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம் நாளன்று பகல்வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகு ஒன்றைக் கடலில் பரீட்சித்துப் பார்த்தபோது தூரதிஸ்டவசமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சூசை அவர்கள் கடுமையாக காயமடைந்ததோடு அவரது ஐந்து வயது நிரம்பிய மகன் சங்கரும் அவரது மெய்ப்பாதுகாவலர் லெப்ரினன்ட் சீலனும் அந்தச்சம்பவத்தில் சாவடைந்தனர். படுகாயமடைந்த சூசை அவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதனால் ஒரு மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறியும் அவர் தனது பிரத்தியேக முகாமிற்குத்தான் வந்தார். அங்கிருந்தவாறு கடற்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். என்னதான் வேலைச்சுமைகள் இருந்தாலும் பொதுமக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் வருகின்ற கடிதங்களை உடனுக்குடன் பார்வையிட்டு அதற்கான பதில்களை சமபந்தப்பட்ட பொறுப்பாள் ஊடாக அனுப்பிவைப்பார். போராளிகளை பலதுறைகளிலும் பயிற்றுவித்து ஆளுமைமிக்க போராளிகளாக வளர்த்தெடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துடன் போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும,; வீரச்சாவு நிகழ்வுகளில் எந்தவிதமான தவறுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் வலுகண்டிப்பாகச் செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் போராளிகளின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பிலும் மிகவும் கண்டிப்பாகச் செயற்பட்டதோடு தனிப்பட்ட ஒழுக்கம் தவறியவர்கள் அவரது தண்டனைகளுக்கு உள்ளாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. 2009-ம்ஆண்டின் முற்பகுதிகளில் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை ஏற்றிச்செல்வதற்கும் போர்வலயத்திற்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருவதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் கப்பல் சேவை மேற்கொண்டிருந்தனர். இந்த கப்பல் சேவையை வன்னிக்கு எடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலமாகத்தொடர்பு கொண்டு கடமையான பிரயத்தனம் மேற்கொண்டார். வன்னியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த இனவழிப்புப்போர் தொடர்பாகவும் மக்கள்படும் துன்பங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கூறி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்திருந்தார். இயக்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் பொதுமக்களை பாதிக்கக்;கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். போரின் இறுதிநாட்களிலும் எங்களது போராட்டம் தர்மத்துக்கான போராட்டம். அது நிச்சயம் வெற்றிபெறும். என்ற அசைக்கமுடியாத உறுதி அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடிந்தது. 2009 மேமாதம 15-ம் நாளன்றும் அவர் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தபோதிலும் அவர் தளர்வடையவில்லை. மேமாதம் 16-ம்நாளன்று இரவு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் உறுதிதளராத குரலில் வன்னியின் இறுதிநேர நிலைமைகள் தொடர்பாக அறிவித்துக்கொண்டிருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது. மறுநாளான 17-ம் நாளன்று அதிகாலைப்பொழுதிலும் அவரது மெய்ப்பாதுகாவலர் புரட்சியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அவரது கம்பீரமான கட்டளையை கேட்கமுடிந்தது. அதுதான் இறுதியாக எனது செவிகளில் கேட்ட அவரது குரலாக இருந்தது. அந்த உறுதியானகுரல் மூன்று ஆண்டுகளாகியும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது. தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ
  6. இருவருக்கும் பொலிஸ் யூனிவோர்ம் கொடுத்து சந்தியில் நிற்க விடலாமே.
  7. ஜெயசந்திரனின் குரலில் பிரபல்யமான பாடல்...
  8. சிங்களம் கையில் ஏந்தி களைத்து போய் விட்டது. நீங்கள் இன்னும் அதை வாங்காமல் இருக்கும் ஆவேசம் அவருக்கு.
  9. உள் அரசியல் தெரியாமல் வெளி அரசியலை பார்த்து எழுதுகின்றீர்கள்.
  10. இது தான் தூரப்பார்வை மற்றும் எதிரியை எதிர் கொள்ள களத்தை தயாராக்குதல் என்பது. சிங்களம் அதில் பல நூறு வருடங்களாக அனுபவம் கொண்டது. உதாரணமாக இனி மேல் நீதிமன்றத்தில் எதையாவது முயலலாம் என்ற நினைப்பு தமிழர்களுக்கு வருமா என்ன??
  11. இந்த சிவப்பு தொப்பிகாரார் சொல்லுறார் 5ஆவது நிமிடத்தில் ஐன்ஸ்டீன் விளக்கம் கொடுக்கிறார்.... நன்றாகவே காதில பூ சுத்துகிறார் ...ஜெ.வி.பி பிரதிநிதி .. உயர் நீதியரசர் சிறுபான்மையினராக இருந்து ஒர் பெரும்பான்மையினருக்கு தண்டனை வழங்க வேண்டி வந்தால் அது இனக்கலவரத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் ஆகவே தான் சிறுபான்மை இனத்தினருக்கு நீதியரசர் பதவி வழங்க வில்லை ..தோழர் புத்தனிஸ்ட்
  12. சில கொன்ராக்கில் கையெழுத்திட்டால் அதிலிருந்து மீளமுடியாது.
  13. நான. கூறியது ஒட்டு மொத்தமான ஒரு இனத்தை பிரதிநிதித்துவம் செய்த அரசியல் தலைமைகள் எல்லாம் அரசியல் ரீதியில் மக்களை பலம் பெற செய்யும் அரசியல் நடவடிக்கைகளை செய்யாமல் தொடர்சசியாக பின்னடைவை கண்டு அரசியல் பலவீனமான இனமாக தமிழரை மாற்றிய கண்ணெதிரே நடந்த நிகழ்வுகளை பற்றியதே. நீங்கள் கூறுவது இராணுவ பலத்துடன் மட்டும் செய்யப்பட்ட தற்காலிக சாதனைகளை மட்டுமே . சர்வதேச அரசியலில் பலம் பெறாமல் எதை செய்தாலும் அது இறுதியில் பொல பொல என்று உதிர்ந்துவிடும் என்பதே இன்றைய உலக ஜதார்ததம். மக்களுக்கு நிரந்தரமாக எந்த பலனும் இல்லை. அதை புரிந்து கொள்ளாமல் விட்டால் அழிவுகளும் அவலங்களும் மட்டுமே எமக்கு மிஞ்சி நிற்கும். அது தான் எமக்கு நடந்தது.
  14. அப்படியானால் உங்கள் தலைவர் சீமான் போற்றி புகழும் மபொசி போன்ற பல பச்சை தமிழர்கள் புலிகளை முற்றாக எதிர்கக, பெரியார் வழி வந்த இயக்கத்தினர் பலர் தன்னிச்சையாக புலிகளுக்கு சட்ட விரோதமாக கூட பல உதவிகள் செய்து பல வருட சிறை வாசம் அனுபவித்தது ஏன்? 1982 ல் பிரபா- உமா சென்னையில் கைது செய்யப்பட்டபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்க ஜே. ஆர் கேட்ட போது அதை கடுமையாக பெரியாரிஸ்டுகள் எதிர்தது போராடியது ஏன்? சீமான் போற்றும் பச்சை தமிழர் மபொசி சென்னை வந்த இந்திய இராணுவத்தை வரவேற்றது ஏன்? ராஜீவ் கொலையின் பின்னர் பெரியார் திடல் சோதனையிடப்பட்டது ஏன்? பெரியாரிஸ்டான பேரறிவாளன் தனது வாழ்ககை முழுவதையும் சிறையில் கழித்தது ஏன்? பிரபாகரனை கொண்டு வந்து இந்தியாவில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சீமான் கொண்டியது ஏன்? அதை அன்று சபாநயகராக இருந்து நிறைவேற்றி தீர்மானத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய சீமானின் மாமனார் காளிமுத்துவை சீமான் கண்டிக்காதது ஏன்? கண்டித்தால் வீட்டில் சோறு கிடைக்காது என்பதாலா? தான் ஈழம் சென்ற போது தன்னிடம் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பார்தது தான் தனக்கும் போராடும் உத்வேகம் ஏற்பட்டதாக பிரபகரன் கூறியதாக சீமான் கூறியது ஏன்?
  15. இடப்பக்கத்தில் நிற்பவர் அச்சொட்டாகத் தமிழ்சிறி தான். சனாதிபதியை எப்போ சந்தித்தார்??🤔
  16. தாரளமாக. இந்தப் படத்தை அவதாராக சின்னதாக்கிப் பார்க்க நானும் ஆவலுடன் இருக்கின்றேன் ஒரு மனிதன் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு இயக்கம் நடத்தி ஒரு நூற்றாண்டைக் கடந்தும் பேசப்படுகின்றார் என்றால் ஏதோ இருக்கத்தானே வேண்டும். தேடுங்கள் கிடைக்கும்
  17. யதார்த்தமான,நேர்மையான பதில்கள் வரும் வரைக்கும் கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
  18. யோவ் கோசான் நீங்களும் விட்ட பாடில்லை… இவங்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. இவங்கள் ஒருபோதும் மாற மாட்டாங்கள்.
  19. இவ் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. இன்று இந்திய புலம் இல்லாதவர்கள் நாளை இந்திய புலம் உள்ளவர்களாக மாற முடியும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இன்று சாணக்கியனின் செருப்பில் தொங்கி / பயணம் செய்து அரசியல் செய்ய வேண்டிய நிலை. சும் மின் மீதான உங்களின் அடிமைத்தனம் உங்களை ஒருபோதும் விட்டகலாது. பிகு : கனியின் திகார் சம்பவத்தை மறந்து விட்டீர்கள்.
  20. பெரியாரின் பல தசாப்த சமூக போராட்டங்களை ஒரு வரியில் கூறிவிட முடியாது. நீங்கள் இன்று தொலை பேசியில் எழுதும் யூனிகோட் முறை தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை 1934 ல் ஆண்டிலேயே தனது பத்திரிகையில் பாவித்து அதை தொடர்ந்து வலியுறுத்தி அதன்தாக்கமே 1978 ல் எம்ஜியார் அரசு அதனை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வைத்தது. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முதன் முதலாக திருத்தி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தியது பெரியாரின் தொடர் போராட்டங்கள் தான். இதே திரியில் இணைக்கப்பட்ட காணொளியில் நாம் தமிழர் கட்சி ஸதாபிக்கப்பட்ட போது அதில் உறுப்பினராக இணைந்த தமிழ் தேசியவாதியான இன்றும் தமிழ் தேசியத்தை வலியுற்றும் திரு. அய்யநாதன் கூறுவதை கேளுங்கள்.
  21. அதிக தூரமோ,தமிழர் வரலாறுகளோ தேவையில்லை. 2009க்கு பின்னர் நீங்கள் சார்ந்தோர் இலங்கையின் அரசியலில் சாதித்தது என்ன?
  22. பெரியார் சாதித்தது எதுவென கேட்டால் சகலரும் ஹொலிடேக்கு போய் விடுவார்கள்.
  23. இல்லை அண்ணா. உக்ரேன் தனியாக நின்றால், அதிபர் புடின் சொன்ன மூன்று வாரக் கணக்கு சரியாகவே இருந்திருக்கும். இன்னும் கொஞ்சம் உக்ரேன் தனியாக இறுதிவரை போராடி இருந்தால், மூன்று மாதங்கள் வரை போயிருக்கலாம். இந்த சண்டை ஆரம்பிக்கும் போது நான் யாழ் களத்தில் இணையவில்லை. ஆனால் சில குழுமங்களில் எழுதியிருந்தேன், மூன்று வாரங்கள் ரஷ்யாவிற்கு போதுமென்று. அதே போன்றே சீனாவிற்கும் இந்தியாவுடன் ஒரு சண்டை வந்தால் மிகக் குறுகிய காலமே போதும் என்றும் எழுதியிருந்தேன். நான் சொன்ன இழுக்கு இலங்கை இளைஞர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருப்பதைப் பற்றி. அது முற்றிலும் தேவையே இல்லாத ஒரு விடயம் ரஷ்யாவிற்கு........... எங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக ஒருவரை கண்மூடிக் கொண்டு ஆதரிக்க தேவையில்லை, அவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த தேவையும் இல்லை, அண்ணா............. அமெரிக்கா, ரஷ்யா என்பதையும் தாண்டி, எங்களுக்கு ஒரு பெறுமதி இருக்கின்றது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதன் வழியே தான் என் பார்வையும், கருத்துகளும் அமைகின்றன............... இதை ஒரு மூன்று வார கால Special Operation என்றே புடின் ஆரம்பத்தில் ஆரம்பித்திருந்தார். முதலாவது குளிர்காலத்தில் எல்லாம் தலைகீழானது, அத்துடன் மேற்கு நாடுகளின் உக்ரேனுக்கான இடைவிடாத உதவிகளும் எதிர்பார்க்காத சிக்கல்களை கொண்டு வந்துவிட்டன. எந்த நாடும் நீண்ட ஒரு போரை விரும்பப் போவதில்லை.............................
  24. ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைக்க வேண்டும் என சிறியர் தொடங்கி இருக்க மாட்டாரோ??🙂
  25. அப்படி இல்லை, அண்ணா.......... இவை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியே பராமரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊர்களிலும் அல்லது பிரதேசங்களிலும் இதற்கென தண்ணீர் பெரிய தேக்கங்களில் இருக்கும். அது மிக அதிக அழுத்தத்துடன் எரியும் நெருப்பை அணைப்பதற்கு வரவேண்டும். வீட்டுக்கு வரும் தண்ணீரை விட மிக அதிக அழுத்தத்துடன். மாலிபு பகுதியில் இருந்த தண்ணீர் தேக்கத்தில் தண்ணீர் முடிந்து போனது. அதுவே தான் காரணம். வீட்டுக்கு வரும் தண்ணீரையும், அந்த அழுத்தத்தையும் கொண்டு நெருப்பை எதுவும் செய்ய முடியாது. என்னுடைய நண்பர்கள், இலங்கைத் தமிழர்கள் தான், லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் நீர் வழங்கும் அமைப்பின் பிரதம பொறியியலாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
  26. 👍.............. ரஷ்யாவின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்துகின்றது. எங்களுக்கு உதவியாக வட கொரியாவில் இருந்து 11 ஆயிரம் வட கொரிய துருப்புகள் வந்து சண்டையில் ஈடுபட்டுள்ளன என்று ரஷ்யா சொன்னால் எவரும் எதுவும் செய்ய முடியாது................அது அவர்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம்........... ஆனால் ரஷ்யா அப்படிச் சொல்லாது............... 'கெத்து' ஒன்று இருக்கின்றதல்லவா.............. இலங்கையிலிருந்து பிடித்து, உக்ரேன் எல்லைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியிருக்கும் இலங்கை இளைஞர்களை, 500 அல்லது அதற்கு மேலே??, ரஷ்யா விடுதலை செய்து விடலாம்............. அந்த இலங்கைக் குடும்பங்கள் பாவம் தானே.......... பெரிய பெரிய இராணுவ பலமுள்ள நாடு என்று சொல்லிக் கொண்டே ரஷ்யா இப்படிச் செய்வது இழுக்கு தானே........... மற்றபடி, உலக ஒழுங்கில், உக்ரேன் மேற்கு நாடுகளின் ஒரு சின்னக் கருவியே. முடிவில் உக்ரேன் என்னவானாலும் எவரும் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. ரஷ்யாவை கொஞ்சமாவது பலவீனமாக்கினால் அதுவே அமெரிக்காவிற்கும், மேற்கு நாடுகளுக்கும் போதும்............ இவர்கள் அதற்காக செலவழிக்கும் தொகை அப்படி ஒன்றும் பெரிது கூட இல்லை.............. பொல்லாத உலகமும், பொல்லாத மனிதர்களும்...............
  27. இது ஒரு மலையாளத்திரைப்படம் தமிழ் மொழியிலும் தரமான பிரதி இணையத்தில் உள்ளது. இந்த திரைப்படத்திலும் படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியுடன் திரைப்படம் ஆரம்பமாகும் அந்த காட்சி பின்னர் படத்தின் முடிவில் இனைக்கபட்டுள்ளது. இது சத்திய ஜித்திரே கூறியதான ஒரு திரைப்படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் வீட்டின் முன் வந்து நின்றால் அந்த படத்தின் இறுதியில் துப்பாக்கி சுடுவதுடன் முடிவடையும் எனும் கோட்பாடு பரவலாக இந்திய திரைப்படங்களில் அதிகம் இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் ஆரம்ப காட்சியினை முடியும் போது மறந்துவிடுவதுண்டு ஆனால் படத்தின் குறித்த காட்சியினை மறக்காமல் இருக்க அதனூடு காட்சியினை விபரிப்பதான ஒரு காட்சி அமைப்பு ஒரு சில நொடிகள் மட்டும் நீடிகின்ற அந்த காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது. சத்தியஜித் ரே செக்கோவின் துப்பாக்கி(அன்டன் செக்கொவ்) எனும் கதையமைப்பினை உள்வாங்கி இவ்வாறான ஒரு காட்சி அமைப்பினை உருவாக்கினாரோ என எண்ணத்தோன்றுகிறது (சத்தியஜித் ரேஇன் படங்களை பார்த்ததில்லை கேள்விப்படதனடிப்ப்டையில்). இந்த படத்தில் உள்ள முக்கியத்துவத்தினை குறிப்பிட விரும்பவில்லை, அதனை குறிப்பிட்டால் இந்த படம் ஏற்படுத்தும் உண்மையான அந்த அனுபவத்தினை குறைத்துவிடும். ஆனால் பாத்திர கட்டமைப்புக்கள், அதற்க்காக தேவையற்ற காட்சிகளற்ற (செக்கோவின் துப்பாக்கி), விறு விறுப்பான காட்சி அமைப்புக்கள் என மிகவும் சுவாரசியமான படம் முழு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த குடும்ப படம். இப்படிப்பட்ட திரைப்படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை?
  28. நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். இந்த(நான்) மரமண்டைக்குதான் ஒரு கோதாரியும் புரியல..
  29. பிபிசியும் படம் காட்டுறன் படம் பார் சீன் போடுது.உப்பிடி படம் காட்ட இந்த தொழில் நுட்பகாலத்திலை எல்லாராலையும் ஏலும் ...
  30. கொஞ்சம் பொறுங்கள். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான விபரம் இன்னும் வெளிவரவில்லை. சிறீதரன் என்கிறார்கள், ஈ. பி .டி .பி என்கிறார்கள், மாவீரர் போராளிகள் குடும்ப காப்பகம் என்கிறார்கள். இந்தப்பிரச்சனைக்கு கடந்த மாவீரர் தினத்திலேயே அடிக்கல் போட்டாயிற்று. சிறிதரனை இலக்கு வைத்து பல பிரச்சனைகள், சேறடிப்புகள் பல பக்கத்தாலும் அரங்கேறுகிறது. சொந்த புத்தி இல்லாமல் இரவல் புத்தியில் கொஞ்சம் ஆடுதுகள். மாவீரர், எங்கள் நிம்மதிக்காக உணவிழந்து, உறக்கமிழந்து, உறவிழந்து, போராடி இப்போ, அமைதி கொள்கிறார்கள். அங்கேயும் அவர்களை அமைதியாக உறங்க விடக்கூடாதென எதிரி அவர் உடல்களை கிளறினான். இப்போ, இன்னொரு கூட்டம் அந்த வேலையை ஆரம்பிச்சிருக்கு. வேலையில்லாததுகளின் தேவையில்லாத வேலையிது. எங்களுக்காக உழைத்து, இன்று தங்கள் வாழ்வை கொண்டுசெல்ல முடியாமல் ததத்தளிக்கும் முன்னாள் போராளிகளுக்கு உதவுவதற்கு இவர்கள் முண்டியடிக்கட்டும் பாப்போம்! மாவீரர் துயிலும் இல்லத்தில் அரசியல் செய்யும் தேவை யாருக்கோ இப்போது எழுந்திருக்கிறது.
  31. “தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே…” என்ற தியாகராஜ பகவதரின் அப்பட்டமான ஒரு கொப்பிதான் “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா..”
  32. கண்ணிரண்டும் மின்ன மின்ன .........! 😍
  33. அதுதானே..இராமலிங்கம் அமைச்சரும் ,இளங்குமரன்..எம்பியும் ...இதற்காக காத்திட்டிருக்கினமே😄
  34. இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு. தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது? புலிப்படம் போட்டு பிரசுரம் வந்திருப்பதால் நானும் ஒன்றைச் சொல்லலாம். யேர்மனியில் நான் வாழும் மாநிலத்தில் யாராவது கோயில் கட்டினால், இங்குள்ள புலிகளின்(?) செயற்பாட்டாளர்கள் தங்களுடைய ஆட்களை அனுப்பி உறுப்பினர்களாக்கி, செயற்பாட்டுக்குழுவில் இடம் பெற வைத்து, வாக்கெடுப்பில் தலைவரையே மாற்றி கோயிலையும் தம் வசமாக்கி விடுவார்கள். இவ்வாறான செயற்பாடுகள் கோவில்களுக்குள் மட்டும் என்றில்லை. கட்சிகளுக்குள்ளும் செய்வார்கள். ‘சங்கு’ ,’பார்’ எல்லாம் அதற்குள் அடங்கி இருக்கலாம். இது பற்றி பஞ்ச் அவர்களுக்கு என்னைவிட நன்கு தெரியும். விரும்பினால் எழுதட்டும். ஆக இவர்கள் வந்து அறிக்கை விட்டு என்னவாகப் போகிறது?
  35. ரத்தினசுருக்கம். முன்பும் எழுதியதுதான். ஈழத்தில் தலைவரை, தமிழ்நாட்டில் பெரியாரை இகழ்ந்து விட்டு அரசியல் செய்ய முடியாது. இருவரும் சில தவறுகளை (வேறு வேறான) விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்த நல்லதுகள் அதன் பல மடங்கு. அவர்கள் இதயசுத்தி மீது மக்கள் இன்றும் வைத்துள்ள நம்பிக்கை மிக பெரிது.
  36. இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? தன்னை தானே உயர்ந்தவன் என்று போற்றி மற்றவரை இகழும் இது நீங்கள் குறிப்பிடும் மதவெறி நோயை விட கொடுமையான கொடூரமான நோய். மற்றவரை நோக்கி விரல் நீட்டும் முன் இதிலிருந்து நீங்கள் சுகமடைந்து வெளியே வாருங்கள். டொட்.
  37. உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம். சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர் 1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவர்களிடமோ இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு வைரஸ் தாக்குவது போல் இவர்களுக்கு சீமானின் தாக்கம் வந்து விடுகின்றது. 2) மத வெறியர்கள் இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள்
  38. எனது ஒரு சில அல்லது பல கலாய்ப்புகளை தனிமனித தாக்குதல்களாகவும்,சீண்டல்களாகவும் உருவமைத்துள்ளீர்கள். 👈 இதை ஊரில் விளங்காத்தனம் என்று கூறுவர். இப்படியான பிரச்சனைதான் வல்வை சகாறாவிற்கும் ஏற்பட்டது.அவர் சக தோழர்களை கலாய்ப்பதிலும் பதிலடி கொடுப்பதிலும் வல்லவர். கலாய்ப்புகளினால் வந்த சீண்டல்களினால் தான் அமைதியாக இருக்கின்றாரோ தெரியவில்லை.☹️
  39. ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.