Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    10103
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1488
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/07/25 in all areas

  1. தேவையில்லாமல் எல்லாவற்றுளுள்ளும் மூக்கை நுழைப்பது, சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கிறது, பிறகு தமிழேண்டா என்று தலைவரின் பெயரை இழுக்கிறது, காணாமற் போன உறவுகளுக்கு தீர்வு சொல்லுறது, தையிட்டி விகாரை விடயத்தில் தீர்வு சொல்லுறதுக்கு யார் இவர்? இவருக்கு மேலேயே ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், வழக்குகள். இதில தேவையில்லாத பிரச்சனைகளை காவிக்கொண்டு திரியிறார். காணொளி பைத்தியம் என்று நேரடியாகவே சொல்லி கேலி செய்கிறார்கள்.
  2. இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.
  3. "நான் வரைந்த முதல் ஓவியம்" & "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "நான் வரைந்த முதல் ஓவியம்" "நான் வரைந்த முதல் ஓவியம் நாணம் கொண்ட அவளின் உடல் நாட்டிய தாரகையின் தாமரை முத்திரை நாடித் தேடி கீறிய படம்!" கோடு போட்டு அளந்து பார்த்து ஏடு வாசித்து மனதில் பதித்து நாடு எங்கும் காணாத அழகு ஆடு மகளின் வண்ணக் கோலம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... "உள்ளமெனும் ஊஞ்சலிலே" "உள்ளமெனும் ஊஞ்சலிலே ஆடும் ஆட்டியே கள்ளமற்ற நெஞ்சைத் தேடும் தேவதையே வெள்ளமாக பாயும் அன்பின் அணங்கே குள்ளப்புத்தி உனக்கு வந்தது எனோ?" "மெல்ல நடந்து விலகிப் போறவளே சொல்ல மறந்த வார்த்தைகள் எதுவோ நல்ல இதயம் கொண்ட கோதையே இல்லம் அமைக்க என்னைத் தழுவாயா?" "காதணி இரண்டும் மின்னி ஒளிர காம விழிகள் வித்தைகள் காட்ட கால்கள் நான்கும் பின்னிப் பிணைய காதல் இணைய தாலாட்ட வருவாயா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍 முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது. அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள். ஆனால் இப்போ... எங்கும் ஊழல் பரவி உள்ளது என நினைக்கின்றேன். பாடசாலை அதிபர்களே... ஊழல் செய்யும் அளவிற்கு நாடு புரையோடிப் போயுள்ளது.
  5. K என்ற வார்த்தை நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றிப் பல விஷயங்கள் நடந்தாலும் அதனைக் கவனிக்காமல் கடந்து செல்கிறோம். உதாரணத்திற்குப் புதிதாக கார் ஓட்ட கற்று கொள்வார்கள் வண்டியின் பின்னாடி 'L' என்று சிவப்பு நிறத்தில் போர்டு ஒட்டப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! | அதனை அறிந்து கொள்ளவும் விரும்புவதும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட. அதுபோன்று 1000 என்ற எண்ணிற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த தொகுப்பில் பார்க்கலாம். பொதுவாகவே சமூக வலைத்தளங்களிலும் சரி பணத்திலும் சரி, மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ‘1000’ என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் ஆயிரம் (Thousand) என்பதன் சுருக்கத்தை T என்று தானே குறிப்பிட வேண்டும். ஆனால் ஏன் ‘K’ என்று குறிப்பிடுகின்றோம்.இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் (1000) என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ(Kilo) என்று சுருக்கப்பட்டது. அதன் பின் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணிதத்தில் "K" என்ற எழுத்து ஆயிரத்தைக் குறிக்கிறது. எனவே, "1K" என்பது 1,000 க்கு சமம் ஆகும். இதன் காரணமாகத் தான் 'Kilo' என்பதற்காகத் தான் ‘K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது. எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை படித்ததில் பிடித்தது
  6. காற்றாடி - அத்தியாயம் ஒன்று ---------------------------------------------- மழை இன்னும் விட்டுவிடவில்லை, ஆனால் முன்பிருந்ததை விட நன்றாகக் குறைந்து விட்டது போன்று தோன்றியது. மழையின் சத்தம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. கூரையில் இருக்கும் ஓட்டைகளினூடாக வீட்டுக்குள் விழுந்து ஓடும் மழை நீர் முற்று முழுதாக அவனைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. அவன் படுத்திருக்கும் இடத்திற்கு சரி மேலாக கூரையில் எந்த ஓட்டைகளும் இல்லாதபடியால், மழைநீர் அவன் மேல் இன்றும் விழுந்திருக்கவில்லை. வீட்டிலிருந்த ஒரு அகலமான மா பலகையை தரையின் மேல் போட்டு அதன் நடுவிலேயே அவன் படுத்திருந்தான். தரையில் விழுந்து தெறிக்கும் சில மழை ஒழுக்குகள் தன்னில் விழுவதை தவிர்க்க, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்தபடி, இரண்டு கைகளையும் இரண்டு கால்களுக்கும் இடையில் வைத்து, கால்களை வயிறு நோக்கி இழுத்து, முழு உடலையுமே குறுக்கி வைத்திருந்தான். சில மழைக் காலங்களை இதே வீட்டில் இப்படியே கடந்து வந்து விட்டபடியால், ஒழுகும் மழையை ஏமாற்றி எப்படி இரவில் தூங்குவது என்று அவன் நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தான். இப்படி ஏராளமான விசயங்களில் அவனுக்கு சமயோசிதமும், அறிவும் இருந்தாலும், அவனுக்கு கழுத்தில் கத்தி வைத்தாலும் வரவே வராது என்று சில விசயங்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் எல்லாம் வந்து விடுமா என்ன, எந்த மனிதருக்கும் சிலது வரும், சிலது வராது, சிலது வரவே வராது. அவனுக்கு வரவே வராது என்ற வரிசையில் முதலாவதாக வராமல் இருப்பது கணிதபாடம். சாதாரணமான இரண்டு தெரியாக் கணியங்களும், இரண்டு சமன்பாடுகளும் இருக்கும் கணிதம் கூட அவனுக்கு தலைச்சுற்றலைக் கொடுக்கும். அவன் போன வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதியிருந்தான். எட்டுப் பாடங்களில் ஏழு பாடங்களில் சித்தி பெற்றிருந்தான். கணிதத்தில் படுதோல்வி. விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்தி பெற்றிருந்தான். ஆங்கிலத்தில் சாதாரண சித்தி, ஆனால் கணிதத்தில் எஃப் வந்திருந்தது. கணிதமோ அல்லது எந்தப் பாடங்களுமோ என்றுமே அவன் வீட்டில் படித்ததேயில்லை. ஊரில் இருக்கும் பாடசாலைக்கு போவான், பின்னர் வீட்டுக்கு வருவான், அவ்வளவு தான் அவனுடைய கல்வியின் எல்லையும் தேடலும். வீட்டில் எதையும் படிப்பதோ அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போவதோ கிடையாது. மற்ற நேரங்களில் ஊர் விதானையார் போல ஊரை சுற்றிக்கொண்டு திரிவான். அவன் ஏழு பாடங்களில் நல்ல சித்திகள் பெற்றிருந்தபடியால், அவன் வீட்டில் அவனை அடுத்ததாக இன்னும் மேலே படிக்கச் சொன்னார்கள். இதுவரை அவர்களின் குடும்பங்களில், அவனின் அம்மா மற்றும் அப்பாவின் குடும்பங்கள், முதலாவதாக உயர்தர வகுப்புகளுக்கு போகும் ஆள் என்ற பெருமை எவருக்கும் கொடுக்கப்படாமல் அவனுக்காகவே காத்துக்கொண்டு கிடந்தது. கணித பாடத்தில் தவறி இருந்தபடியால், பாடசாலையில் கலை அல்லது வர்த்தகப் பிரிவுக்கு அவனைப் போகச் சொன்னார்கள். அதுவும் கூட அடுத்து நடக்கும் சாதாரண பரீட்சையில் கணித பாடத்தில் சாதாரண சித்தியையாவது அவன் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன். அரைக்காற்சட்டையில் இருந்து அப்போது தான் முழுக்காற்சட்டைக்கு மாறியிருந்தான். வெள்ளை நிற முழுக்காற்சட்டை. அதை தைக்கும் தையல் கடைக்காரர் அவனின் அப்பாவிற்கு மிகவும் தெரிந்தவரே. பாடசாலைக்கு தேவையானது போலவும் இல்லாமல், அன்றைய நாயகர்களின் அகன்ற கால்கள் உடையது போலவும் இல்லாமல், இரண்டுக்கும் மத்தியில் ஒன்றை தைத்துக் கொடுத்திருந்தார் அந்த தையல்காரர். அவனின் ஆலோசனை தான் அது. அந்த முழுக்காற்சட்டையுடன் முதன்முதலாக பாடசாலை போயிருந்த போது, அப்பொழுது தான் கணிதபாடத்தில் சித்தி அடையவே வேண்டும் என்று பாடசாலை அதிபர் சொன்னதற்கு, உடனேயே தலையை ஆட்டியிருந்தான். உயர்தர வகுப்பில் படிக்கின்றோம் என்பதே அவனுக்கு ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது. ஒன்று அல்லது இரண்டு அப்பியாசக் கொப்பிகள் மட்டும், அதையும் சைக்கிளின் பின் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஏதோ சில மணிநேரங்கள் பாடசாலைக்கு போய் வருவது நல்ல ஒரு அனுபவமாகவே அவனுக்கு இருந்தது. அப்படியே அருகிலேயே இருக்கும் தனியார் கல்வி நிலையத்திலும் சேர்ந்திருந்தான். பாடசாலை விட்டு வந்தவுடன் தனியார் கல்வி நிலையத்திற்கு போய்விடுவான். அங்கே போய் அதை நடத்திக் கொண்டிருப்பவருக்கு ஒத்தாசையாகவும் நின்றுகொள்வான். தனியார் கல்வி நிலையத்திற்கு என்று வெள்ளையில் இல்லாத இன்னொரு முழுக்காற்சட்டை, 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் கமல் போட்டு வருவதைப் போன்ற ஒன்று, வைத்திருந்தான். அவனுடைய சித்தப்பா ஒருவர் பெறாமகன் பெரிய படிப்புகள் படிக்கின்றானே, தான் எதையாவது செய்தே ஆகவேண்டும் என்று, இந்த இரண்டாவது முழுக்காற்சட்டைக்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தார். அதுவே சித்தப்பா முறை என்றபடியால் அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருந்தார்கள். இதையே ஒரு மாமன் முறை உள்ளவர் செய்யக் கேட்டிருந்தால், அவன் வீட்டில் ஒத்துக் கொண்டிருக்கவேமாட்டார்கள். இதுவே ஒரு கடமையாகி, அது எங்கே போய் முடியுமோ என்ற பலமான ஒரு காரணம் இதன் பின்னால் இருந்தது. அவனுக்கு சொந்தத்தில் ஏழு எட்டு மச்சாள்மார்கள் இருந்தனர். இன்று இப்பொழுது விடியப் போகும் காலையில் சாதாரணதர கணிதபாட பரீட்சை. மழை தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்து கொண்டிருந்தது. போன தடவை அவன் கணிதபாட பரீட்சை எடுத்ததிற்கும், இன்றைக்கும் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றதா என்ற யோசனை அவன் மனதில் ஓடியது. போன தடவை மழை பெய்யவில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. இந்த காலப்பகுதியில் அவன் ஒரு நாள் கூட கணிதம் படித்திருக்கவில்லை. போன தடவை வந்த அதே பரீட்சை முடிவு தான் இந்த தடவையும் வரப் போகின்றது என்பது தெளிவாகவே அவனுக்கு தெரிந்தது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைத்தபடியே நிமிர்ந்துபடுத்தான். நிலத்தில் விழுந்த மழை ஒழுக்கு ஒன்று தெறித்து அவன் முகத்தில் வந்து விழுந்தது. அது விழுந்த இடம் சில்லென்று குளிர்ந்தது. (தொடரும்....................)
  7. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .
  8. நான் ஊரில் இரண்டு தவணை ஏ எல் படித்தேன். ஹாட்லியில் கணேசலிங்கம் மாஸ்ரரிடம் தூய கணிதம், உடுப்பிட்டி பீக்கோன் ரியூசனில் நல்லையா மாஸ்ரரிடம் தூயகணிதம், பிரயோக கணிதம், தில்லையம்பலம் மாஸ்ரரிடம் தூயகணிதம் என்று எல்லோரையும் போல ஓடுப்பட்டுப் படித்தேன். ஓ எல் ரிசல்ட்ஸ் தந்த செருக்கும், கூவிற வயசில் இருந்ததாலும் ஏ எல் படிப்பில் அக்கறை காட்டவில்லை. கெமிஸ்ற்றி, பிஸிக்ஸ் படிக்க வந்த பெண்பிள்ளைகள் மேல்தான் முழு நாட்டமும் போனது!🥰 பாடசாலையில் முதல் வரிசையில்தான் இருப்பேன். கணேசலிங்கம் மாஸ்டர் வந்து முதல்நாளே மற்றைய இடங்களில் படிப்பிக்காத தூயகணிதத்தில் கடினமான graph sketching (தமிழ் இப்ப தெரியாது) கேள்விகளைத் தந்தார். சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரித்தான் இருந்தது. பின்னால் திரும்பி அவரிடம் ரியூசனில் படிக்கும் நண்பனை எப்படிச் செய்வது என்று கேட்டேன். அவன் மெதுவாக சொல்ல ஆரம்பிக்க, கணேசலிங்கம் மாஸ்ரர் எனது மேசையை நோக்கி வந்தார். கன்னம் பழுக்கப்போகின்றது என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் வந்து எனது மேசையில் சோக்கால் இரண்டு கோடுபோட்டுவிட்டு கரும்பலகைக்குப் போய் ஒரு கேள்வியை விளங்கப்படுத்தினார். அதை அவர் எனக்காகத்தான் செய்தார் என்று புரிந்துகொண்டேன். மிச்சக் கேள்வி எல்லாவற்றையும் நான் கிறுகிறுவென்று செய்து முடித்தேன்😎 அவர் சொல்லித்தந்த method ஐ நான் இன்னமும் மறக்கவில்லை. பலருக்குச் சொல்லிக்கொடுத்திருக்கின்றேன், எனது வாரிசுகள் உட்பட! கணிதத்தில் இன்றுவரை குன்றாத காதலுக்கு ஓ எல் வரை படிப்பித்த சர்வானந்தா மாஸ்ரர், நம்ம ஊர் அரசன் வாத்தி, ஏ எல்லில் குறுகிய காலம் என்றாலும் கணேசலிங்கம் மாஸ்டர், நல்லையா மாஸ்டர், தில்லையம்பலம் மாஸ்டர் ஆகியோர் எனது ஆசான்கள். அதே போல இலண்டனிலும் இரண்டு ரீச்சர்கள் எனது மதிப்புக்குரிய ஆசான்களாக இருந்ததால் 100க்கு கீழே இலண்டன் ஏ லெவலில் எடுத்ததில்லை!
  9. மேலோட்டமாக் நாங்கள் பார்த்தால் இதை சும்மா கடந்து போகலாம்....யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு மருத்தவர் (எதற்கு எடுத்தாலும் தேசிய தலைவரையும்,மாவீரர்களையும் துணைக்கு இழுப்பவர்)இப்படி சொல்லுவது யாழ்மாவட்ட மக்களை கரக்க்டர் அசசினேசன் செய்யவோ என எண்ண வைக்கின்றது. இந்த பைத்தியத்தை வைத்து காணோளி போட்டுபணம் சம்பாதித்த யூடியுப் பைத்தியங்களும் உண்டு..
  10. ஓஎல் காலம்தான்...பிரக்ரிக்கலுக்கு லாப் போகவேணும்..இரசாயன வாத்தியார்..படிச்சு படிச்சு பொசுபரசு பற்றி விளங்கப் படுத்திவிட்டுத்தான் ..லாப் போக விட்டவர்..அங்கு பொசுபரசு தண்ணீரில் இருந்தால் எரியாது...வெளியில் இருந்தால் தீப்பற்றும் ..என்று உதாரணங்களுடன் விளங்கப் படுத்தியும் ...பிரக்டிக்கல் முடிய இரண்டுபாவிகள்...முடிந்தபொசுபரசை அமத்திப் போட்டங்கள்... அடுத்தபாடம் வகுப்பில்...உயிரியல்பாடம் வாத்தியார் படங்கீறி விளக்க..ஒருதனின் புத்தகத்துகீழை புசு புசு என்று நெருப்பு...பக்கத்து மேசை நான்.. நெருப்பை கண்ட மற்றவன் ..தீயணைப்பு படைவீரன் மாதிரி..பாய்ந்து சீ.ஆர் கொப்பியால் அடிக்க ..பறந்த பொசுபரசு..வலது புறங்கையில் ஆழமாக எரித்துவிட்டது...அதிபரின் காரில் காரில் ஆசுப்பத்திரிபோய் ..இரண்டுநாள் வாசம்...ஒழித்தவனும் இப்ப கனடாவில்...சூடு பட்டவனும் இப்ப கனடாவில்தான் இருக்கிறம்..இப்படி கனக்க..
  11. உங்கள் நட்பு பறவா இல்லை..போன வருசம் ஒரு மருத்துவனைக்கு தன்னார்வத் தொண்டுப் பணிக்கு போயிருந்தேன்.கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் ஒரு டச்சு பெண்மணியின் மேற் பார்வையில் பணியாற்ற வேணும்.மருத்துவமனையின் அத்தியாவசிய தொலைபேசிகளை இணைக்கும் இலக்கங்களை பாடாமக்கிக் கொண்டு போய் செய்ய வேணும்.பாடமாக்கிக் கொண்டு போவேன் அவாவைக் கண்டதும் எல்லாம் மறந்துடும்.சின்னப் பிழை என்றாலும் இது சரிப்பட்டு வராது..மண்டைக்குள் உனக்கு ஏதாவது இருக்குதா என்று எல்லாம் கேட்பா..காலப் போக்கில் அங்கு போகும் நாள் இரவு வந்தாலே நித்திரை வராது.இப்போ தனியாக செய்ய தொடங்கி விட்டேன் கடந்த வருடம் கிட்டத் தட்ட நான்கு மாதங்கள் மொழி பெயர்ப்பு வேலை ஒன்றும் வராமலிருந்த காரணத்தினால் தன்னார்வத் தொண்டுப் பணியாவது செய்வோம் என்று இணைந்து தேடிக் கொண்டது.இப்போ நான் இரண்டு வேலை செய்கிறேன்.அது வேறு விடையம்.தற்சமயம் இரத்த அழுத்த மாத்திரை எடுக்க வேணும் என்று வைத்தியரால் பரிந்துரைகப்பட்டுள்ளேன்.அந்த பெண் ஆரம்ப காலத்தில் எங்கள் நாட்டில் தேயிலை உற்பத்தியை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய பரம்பரைச் சேர்ந்தவர்.எங்கள் நாட்டு நடப்புக்கள் எல்லாம் தெரியும் விளங்கும்.
  12. பெரிசுகள் விளையாடுற திரிக்குள்ள உள்ள வந்துட்டமோ 🤣
  13. ஆகா ஆகா எப்பிடிடா நான்கு கால்கள் என்று நீண்ட நேரம் யோசித்தேன். தில்லை நீங்க ஒரு காதல் மன்னன்.
  14. இங்கு எங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கழுவி ஊத்துகிறோம். கழுவி ஊத்தப்படுகிறவர்களோடு எத்தனைபேர் ஒருதாய் பிள்ளைகள்போல் உண்டு, உறங்கி அவர்களை அறிந்து விமர்ச்சிக்கிறோம்?? பெரும்பாலும் ஊடகச் செய்திகள் மூலமாகத்தானே அறிந்து விமர்ச்சிக்கிறோம். ஊடகங்கள் எவருடைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறோமா? அவசரத்தில் எங்கள் அறிவைக்காட்ட, முடிவறியாது கழுவி ஊத்துகிறோம்.
  15. ஊழலின் பிதாமகனே கருணாநிதிதான். சர்க்கரை ஊழல் என்று ஆரம்பித்து... கூவம் ஆற்று ஊழல் என்று வேறை லெவலில் விஞ்ஞான ஊழல் செய்த ஆள். முதல் முறையாக ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப் பட்டதும் தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி தான்.
  16. சிந்தித்து பார்ததால், அவ்வாறு இந்தியாவின் தென் பிரதேசத்தை பிரிட்டிஷ் தொடர்ந்து தனது ஆளுமைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கை, தமிழருக்கு மிக பெரிய நல்விளைவுகள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியப்பாட்டை இயல்பாகவே உருவாக்கியிருக்கும். நாடுகளை கொலனிப்படுத்தும் வரலாற்றுக்காலம் 20 ம் நூற்றாட்டில் முடிவுக்கு வந்ததால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நீண்ட காலம் இப்பிரதேசத்தை தன் ஆளுமைக்கு கீழ் வைத்திருக்க முடிந்திருக்காது. எப்படியும் சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே வட இந்திய பார்ப்பன வர்ககதிற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகள் நீதி கட்சியாலும் அதை தொடர்ந்த திராவிடர் கழகத்தாலும் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அந்த நிலையும், பரப்புரையும் தென் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ந்திருந்தாலும் நடந்திருக்கும். எனவே, அந்த விழிப்புணர்வானது, அம்மக்களிடையே சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சுதந்திர வேட்கையை தானாகவே உருவாக்கியிருக்கும். அவ்வாறான நிலையானது, இந்திய துணைக்கண்டம் ஐரோப்பிய நாடுகள் போல் தன்னிச்சையாக பல சுதந்திர நாடுகளாக பரிணமிக்கும் சாத்தியப்பாட்டை அதிகரித்திருக்கும். மக்களிடையே சுதந்திர வேட்கையும் போராட்ட குணமும் இருக்கும் நிலையில் இந்திய இராணுவம் இப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நிலைக்கு எதிரான சர்வதேச சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆகவே, கோவா போன் ற பிரதேசங்களை ஆக்கிரமித்ததை போல் தென் இந்தியாவை ஆக்கிரமிப்பது இந்திய இராணுவத்துக்கு இலகுவாக இருந்திருக்காது. உண்மையில், எமது சுதந்திரத்தை வட இந்திய பார்ப்பன வர்க்கத்திடம் கையளிப்பதால் தமிழருக்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை அப்போதே பெரியார் சுட்டிக்காட்டி இருந்தார். இது பெரியாரின் தீர்கக தரிசனப்பார்வை என்று கூறலாம். ஏனெனில் ஈழப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான முக்கிய பங்களிப்பை அனைத்துலக அளவில் செய்தது இந்திய ஆளும் பார்ப்பன கும்பலின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளே. எமது எதிரிகளை அன்றே அடையாளம் காட்டியவர் பெரியார். அன்றைய இந்திய சுதந்திரத்தின் பின்னர் அதிகாரவர்ககத்தால் உருவாக்கிய “இந்திய தேசபக்தி” என்ற மாயையின் முன்னால் இந்திய தேசத்திற்கெதிரான எந்த போராட்டமும் வெற்றி பெற்றிருக்காது. அந்தளவுக்கு “பாரத மாதா” என்ற போலி பிம்பம் கிட்டத்தட்ட பக்தி உணர்வு போலவே கட்டி வளர்க்கப்பட்டது. அதுவே தமிழக தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் ஆப்பாக அமைந்தது.
  17. அனுரவைப் பிடித்தும் ..காரியம் கைகூடவில்லை...ஆமா அந்த பதகை வைத்தது மாவைதான் என்று சொல்லிவிட்டால்...கேஸ் முடிந்தது..😆
  18. அருச்சுனா புலிக்கொடியை ஆட்டினால் அவரும் நம்ம ஆளுதான் 😜
  19. சுமத்திரன் தனது குள்ளநரி ஆட்டத்தை; தொடக்கிவிட்டார்.மாவைக்கு மன உளைச்சலைக் கொடுத்து இறுதிக்காலங்களில் அவரது நிம்மதியைக் குலைத்தது மட்டுமல்லாமல் அவர் இறப்புக்குப் பின்னரும் சுமத்திரன் விட்டபாடில்லை. தமிழருக்கட்சிதை; தலைவர் ஆவதுதான் அவர் குறிக்கோள். இப்படி நரிவேலை செய்து அவர் தலைவராகும் போது தமிழரகு;கட்சிக்கு என்று எந்த ஆதரவாளர்களும் இருக்கமாட்டார்கள்.
  20. இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து வாழமுடியாமல் இந்தியாவுக்கு சென்று அகதி தஞ்சம் கேட்ட தமிழரை எப்படி இந்திய நடுவண் அரசு நடாத்தியது ?
  21. “சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும். வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது குறித்துப் பேசவும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் துணிவற்றும் வாழும் நிலையே அவர்களிடம் இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் கடந்த 2009-இல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி மனிதர்களான சாமானிய ஈழத் தமிழர்கள் 70 ஆயிரம் பேர் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ என்று ஒட்டுமொத்த உலகமும் ஓர் இனப்படுகொலைக்குப் பெயர் சூட்டிவிட்டு, நீதிகேட்டு ஈனக்குரல் எழுப்பிய எஞ்சியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மவுனத்தை மட்டும் பதிலாக அளித்தது. அந்த ‘மாஸ் கில்லிங்’ இனப் படுகொலையில் இதயம் நொறுங்கி ரத்தம் கொதித்த ஒருவனின் நீதி கேட்கும் குரல், கோபம் கொந்தளிக்கும் எளியவர்களுக்கான மொழியாடலாக வெடித்துச் சிதறத் தொடங்கியது. அந்த மொழியும் குரலும்தான் சீமானுடையது... சாமானிய வியாபாரிகள், தினக்கூலிகள், சீரியல் பார்க்கும் பெண்கள், சினிமாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று ஒரு கூட்டம் சீமானின் அந்த மொழியாடலால் ஈர்க்கப்பட்டு, மொழிவழி தேசியமும் அதன் வழியான அரசியல் இறையான்மையும் தமிழர்களுக்கும் உரியதே; அதை ஏன் இழந்தோம் என அறிந்து தெளிந்து அரசியல் கற்றுக்கொண்டு, சீமான் பேசுவதைக் கூர்ந்து கேட்கத் தொடங்கியது. சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் இணையாவிட்டாலும் அந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பெரும் ஆதரவு சக்தியாக அவர்களை உருமாற்றியிருக்கிறது. அந்த வகையில், சீமானைத் தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதும் யாரும், ‘சீமானின் குரல் என்பது சீமான் என்கிற தனி மனிதனின் குரல் அல்ல; அது உரிமையிருந்த, வாய்ப்பிழந்த, வேலையும் அதிகாரமும் மறுக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களின் குரல்’ என்பதை அறிந்தே உள்ளனர். திராவிடக் கட்சிகளின் திராவிட மாடல் அரசியல், விஜய் முன்னெடுத்துள்ள திராவிட - தமிழ் தேசிய அரசியல், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு நடுவேதான் தமிழ்த் தேசியமும் வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் ஆணிவேராக இருக்கிறது சீமான் முன்வைக்கும் ‘உரிமை இழந்தவர்களுக்கான அரசியல்’. அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய புரிதலோடு நாம் தமிழர் கட்சியையும் அதன் முக்கிய இலக்கான தமிழரின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுத்தல் என்பதையும் நோக்கி தனது மொழியாடலைக் கூர் திட்டி வருகிறார். அந்தக் கூர்தீட்டலில் இப்போது பெரியார் ஈ.வே.ராவை மறுதளித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. பெரியார் மறுப்பையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டது. பெரியார் மறுப்பைச் சாமானியர்களுக்கான மொழியில் சீமான் முன்வைத்த காரணத்தாலேயே இன்று வெகுமக்களிடம் அது பேசுபொருளாகியிருக்கிறது. பெரியாரைக் கடந்த காலத்தில் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சட்டை செய்யப்படாத எதிர்ப்பு, இப்போது எழக் காரணம், சீமானின் எளியவர்களுக்கான மொழியாடலே. அந்த மொழியாடலே அவரது அரசியல் எதிரிகளுக்கு கோபத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது. - சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர், அரசியல் விமர்சகர். | தொடர்புக்கு: Krishjai2006@gmail.com சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்? | about seeman way of speeching was explained - hindutamil.in
  22. வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.
  23. 🤣...................... இலங்கையில் எல்லா வீதிகளும் போடப்பட்டாலும், இந்த வீதியை மட்டும் போடவே மாட்டம் என்று அடாத்தாக நின்றார்கள்................ பழி வாங்குகின்றார்களாம்.................🫣.
  24. சிங்கள தெற்கு ஒர் றொட்டு அமைத்து பூநகரியை மேடுறுத்தி பாலமைத்து சிங்கள நன்நாட்டிளம் பெண்களுடன் சுந்தர பாளியில் பாட்டெழுதி கார்கள் ஓட்டி விளையாடிடுவோம்... என்ன பாரதி மட்டுமா சிங்களவ்ருடன் உறவாட முடியும் நாஙகள் வல்வை மைந்தர்கள் சலைத்தவர்களா என்ன?
  25. அப்ப நைக்கி,போலோ போன்ற பெயர்பெற்ற உடுப்புகள் போட முடியாதா? தனியே கிப்ஸ்சோடு நிற்க வேண்டியது தான்.
  26. சி.வி.கே. க்கு…. கொம்பிளைண்ட் கொடுக்கச் சொல்லி, “கீ” கொடுத்து விட்டவர் மகா கிறுக்கர். 😂 🤣
  27. சரி சரி வந்துட்டீங்க. ஒரு மாணவனாக இருந்து குறிப்புகளை எடுங்கள். அதுக்காக பிறக்ரிக்கலாக ஏதும் செய்ய முனையாதீங்க. அப்புறம் ஆசிரியர்கள் பொறுப்பல்ல.
  28. வாழும்வரை போராடு . ........ 03. பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல. ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது. --- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க, இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான். --- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது. --- அப்ப என்ன செய்யப் போகிறாய். --- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான். --- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான். ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது. --- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். --- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார். --- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார். அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு. --- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார். --- ஓம் ஐயா. அத்துடன் உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன். --- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா...... --- ஓம் ஐயா..... --- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன். --- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான். --- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய். --- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும். --- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின், ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....! சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........! வாருங்கள் போராடலாம் ............ 🐇 🐇 🐇.
  29. சீமானை ஆதரிக்கும் தமிழக மக்கள் பேச்சிற்கு மயங்கும் "விசிலடிச்சான் குஞ்சுகள்" என்று மறைமுகமாகச் சாடியிருக்கிறார்😂!
  30. எத்தனை பேருக்கு இதை இணைத்தது பிழம்பா என்று சந்தேகம் வந்தது?😀😀
  31. 🤣.................... இந்தப் பூமிக்கு ஒரே ஒரு சூரியன் தான்........... நான் எழுதியிருப்பதும் அவரே தான்........ எனக்கு பாடசாலையில் அவர் தான் பிரயோக கணித ஆசிரியர். ஆனால் அத்துடன் இல்லாமல், ஊரில் இருந்த வல்வைக் கல்வி மன்றம் என்னும் தனியார் கல்வி நிலையத்திலும் தூய கணிதம், பிரயோக கணிதம் இரண்டும் படிப்பித்தார். நான் அங்கே தான் ஏலெவல் ரியூசனுக்கு போனேன். ரியூசனில் இன்னும் உக்கிரமாக இருந்தார். அந்த நாட்களில் நல்லையா மாஸ்டர் எதிர் வெக்டர் வேலாயுதம் மாஸ்டர் எதிர் இன்னும் சில ஆசிரியர்கள் என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ரியூசன் வகுப்பில் வேறு எந்த ஆசிரியர்களிடமாவது ரியூசன் படிப்பவர்கள் எழும்பி நில்லுங்கள் என்றார். வகுப்பில், என்னைத் தவிர, எல்லோரும் எழும்பி நின்றார்கள். அவ்வளவு பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் அன்று வகுப்பு நடந்தது............... கிறுங்கவே கிறங்காத, பயமறியா மனிதன் அவர்.................. சில வருடங்களின் முன், கனடாவில் பழைய வகுப்புத் தோழி ஒருவரைச் சந்தித்தேன். நீங்கள் வார்த்தகப் பிரிவில் தானே படித்தீர்கள்............ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஆரம்பத்தில் நான் உங்களுடன் கணிதப் பிரிவில் தான் இருந்தேன். ஒரு நாள் கணேசலிங்கம் மாஸ்டர் எனக்கு கணக்கு சரிவராது என்று என்னை வர்த்தகப் பிரிவிற்கு கலைத்துவிட்டார்....................🤣.
  32. நம்மளுடன் ஒருவன் படித்தான் கணிதம் என்றாலே அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது வாய்ப்பாட்டை வாத்தியார் பாடமாக்கி நாளைக்கு சொல்ல சொன்னால் ஆள் லீவு எடுத்து விடுவான்
  33. புட்டும் தேங்காய் பூவும். முன்னரும் இருந்திருக்கும் சமூகவலைத் தளங்கள் செல்போனுகள் இல்லாததால் முடங்கியிருக்கும்.
  34. அந்தக் காலத்திலிருந்து பெண்களுக்கு இதே வேலையாக போய்விட்டது. வசிட்டரில தொடங்கியது இப்போதும் தொடருது.
  35. முனிவரின் தவத்தை கலைத்த பெண். 😂
  36. இல்லை, இவர் அனுரா அரசாங்கத்துக்கு கேக்காமலே வக்காலத்து வாங்கி, தன்னை முதன்மைப்படுத்தவும், தான் பழிவாங்க நினைப்பவர்களை பழிவாங்கி, கெத்துக்காட்டவும் நினைத்தார் அது நடைபெறவில்லையென்றவுடன், தலைவரை இழுத்து மக்களை அரசுக்கு எதிராக கிளப்ப முனைகிறார். ஆயனில்லா மந்தைகள் தங்களை மீட்ப்பார் என நம்பி, ஓநாய்களை தெரிவு செய்கிறார்கள், மக்கள் தான் பாவம். இவருக்கு காரில சுத்துவதும், காணொளி வெளியிடுவதும், அடுத்தவர் பேச்சுக்களில் குறுக்கிடுவதும், அமளி பண்ணுவதும், வீண் வம்புகளில் மாட்டுப்படுவதும் வேலையாய் போச்சு. வெகு விரைவில் பாராளுமன்ற பதவியை இழக்கும் அபாயமுமுண்டு. கவுசலியா, இவருக்கு வக்காலத்து வாங்கி தன் நன்மதிப்பையும் எதிர்காலத்தையும் வீணடிக்காமல், தன் வேலையை பார்ப்பது நல்லது. இல்லையேல் அவர் மேலும் வீண் பழி சுமத்தி சேறடிப்பார்.
  37. UNHRC இலிருந்து அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு சாதகம் – சட்ட நிபுணர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 58 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு இந்த மாற்றமானது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படுவதிலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கூடிய கலப்பு நீதிமன்றங்கள் போன்ற பொறிமுறைகளுக்காக வாதிடுவதிலும் அமெரிக்கா தொடர்ந்து முன்னணி பாத்திரத்தை வகித்து வருவதாக கலாநிதி மஹாநாமஹேவா சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், UNHRC இருந்து அமெரிக்கா வெளியேறுவது புவிசார் அரசியல் நிலப்பரப்பை இலங்கைக்கு சாதகமாக மாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வளர்ச்சியின் மூலம், எங்களின் சொந்த மனித உரிமைகள் திட்டத்தை முன்வைக்க எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பானது, எங்கள் கதை மற்றும் எதிர்கால கொள்கைகளுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கும். இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1420255
  38. இல்லை - கார் 15 வருடம் பாவனை, மைல்லேஜ்ஜுக்கு பிறகும் வாங்கிய விலையை விட (2011 நாணய மாற்று வீத அடிப்படையில்) அண்ணளவாக 1. 5 இலட்சத்தால் (£1000) கூடியுள்ளது. ஏனைய நாடுகளில் முதல் 3 வருடத்தில் ஷோ ரூம் விலையில் 45-50% போய்விடும். மேலே அக்னி சொன்ன இன்றைய மதிப்புக்கு இலங்கையில் £30,000 பெறுமதியான கார் யூகேயில் £500-1000 தான் போகும்.
  39. தமிழ் தேசியத்திற்கு விரோதமான கருத்தை சிலர் ..எப்பொழுது தமிழ் தேசியம் எழுச்சி பெற தொடங்கிச்சோ அப்பொழுது இருந்து விதைத்து வருகின்றனர்... தமிழர் விடுதலை கூட்டனி தொடங்கிய காலத்தில் ,அமிர்தலிங்கம்,செல்வா,ஜீ.ஜீ போன்றோரை வசை பாடினார்கள்... பிறகு பிரபாகரனை வசை பாடினார்கள் இன்று சிறிதரனையும் ,குமார் பொண்ணம்பலத்தையும் வசைபாடுகின்றனர்... அர்ஜூனா ராமனாதன் ...நான் தேசிய தலைவரின் வழிவந்தவன் என கூறி கொண்டு பாராளுமன்றில் செய்யும் கூத்துக்களை பாருங்கள் ...இதுவரை ஒர் சாதாரண எம்.பி கூட செய்யாத,பேசாத இழிவான ,தரக்குறைவான செயல்களை செய்கின்றார்...இவரின் உள்நோக்கம் என்ன என தெரியவில்லை...சிங்கள பா.உ..க்களே இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேணும் என பாராளுமன்றில் கூறியுள்ளனர்...
  40. ரொம்பவும் பெருமையாக இருக்கிறது தில்லை. தொடர்ந்தும் நல்ல நல்ல படைப்புகளைத் தாருங்கள்.
  41. டிரம்பின் நடவடிக்கைகள் ரசியா, சீனா போன்ற இராணுவ பலம் கொண்ட நாடுகளும் சர்வதேச உலக ஒழுங்குக்கு எதிராக அவர்களும் சுயநலத்துடன் நடக்க முடியும் என்ற சமிக்ஞையையே கொடுக்கும். கிரின்லாண்டையும் கனடாவையும் அமெரிக்காவுடன் இணைப்பதும், பனாமா கால்வாயை ஆக்கிரமிப்பதுடன் காசாவிலிருந்து பலஸ்த்தீன் மக்களை விரட்டி அவர்களது நாட்டை கைப்பற்றும் திட்டத்தை அறிவிப்பதும் சர்வதேச ஒழுங்கில் எவ்வளவு பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர் அறியாததல்ல. உண்மையில் டிரம்ப் ஒரு அரசியல்வாதி அல்ல அவரின் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களும் அவருக்கு கொம்புசீவிவிட்டு தூபம்போடுவோராகவே உள்ளனர். ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான கல்வியையோ அல்லது அரசியல் அனுபவத்தையோ கொண்டிராத ஒரு மனிதர். பதவிக்கு வந்தவுடனேயே கனடா, கிரின்லாந்து விடயங்களில் ஒரு காணி விற்பனை தரகர் போல செயற்பட்டதை இந்த உலகமே கண்டது. இனிவருங்காலங்களில் உள்நாட்டுக்குள்ளேயே டிரம்புக்கு எதிராக குரல்களும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். காசாவிலிருந்து அடாவடியாக பாலஸ்தீன் மக்களை டிரம்பால் விரட்டமுடியும் என்றால் உக்ரேனில் இருந்து உக்ரேனியர்களை புட்டினால் ஏன் விரட்ட முடியாது. டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்கா இப்போது இருக்கும் மதிப்பு மரியாதையையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும்போது காலம் 4 வருடத்தைக் கடந்திருக்கும்.
  42. கதைகளுக்கிடையே கவிதைகளும் அவற்றின் விளக்கங்களும் வாசிக்க சுவையாக இருக்கின்றன ...........! 👍
  43. அவசரத்துக்கு செய்ய தக்காளி கார சட்னி ........! 👍
  44. நியாமாய்யா இது 🤣… தலைப்பை வாசித்து விட்டு…. ஆதாரத்தோட சிங்கன் களமிறங்கீட்டான் என்றல்லவா ஓடோடி வந்தேன்🤣🤣🤣.
  45. பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 02: முகவுரையின் இரண்டாவது பகுதி தொடர்கிறது ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று சொல்லுவாங்க.அது பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க ஓடுது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.வேடிக்கையாக இல்லையா? இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"[sneeze]ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203 தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. விக்கலும்[hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. "சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்! "மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது." பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர் "வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே" [பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் படம்: அரசிளங்குமரி, 1957] இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்: [புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]: "எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின் செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......" [பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.] நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்: "மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!" இதற்கு மாமி கூறுகிறாள்: "அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு[பெண்மை]அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!" இறுதியாக சங்க கால உரையாடல் ஒன்று : தோழி[தலைவியை.பார்த்து ]: "அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? " தலைமகள் [தோழியிடம்]: "தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்". "கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுற மரீஇ வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30 நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. அடுத்த அடுத்த இதழ்களில் பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடிய வரை " பழ மொழிகள் :,+ சங்க இலக்கியம்" துணையுடன் பார்ப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03: "ஆடி மாதம்" தொடரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.