Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3054
    Posts
  2. இசைக்கலைஞன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    22135
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/08/25 in all areas

  1. இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !
  2. தமிழ்நாடு தேர்தல் களம் விசித்திரமானது. பணம் இல்லாமல் நூறு வாக்குகள் வாங்குதல் கடினம். உதாரணம் திருமுருகன் காந்தி மற்றும் தமிழா தமிழா பாண்டியன்! திருமுருகன் காந்தி பரப்புரை செய்த வெண்ணிலாவுக்கு 222 வாக்குகள் தமிழா தமிழா பாண்டியன்: 129 வாக்குகள் இதையெல்லாம் தாண்டித்தான் வரவேண்டி இருக்கிறது. பொதுத்தேர்தல் என வரும்போது, எதிர்க்கட்சிகளின் வாக்கு அதிகரிக்கும். காரணம் பணக்காரக் கட்சிகளால் அனைத்துத் தொகுதிகளிலும் ஆயிரம் கோடிகளில் செலவு செய்ய முடியாது!
  3. வேறு எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல், வெறுமனே இரண்டு கட்சிகள் மட்டும் போட்டியிட்ட ஒரு இடைத்தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாமல் போனது உங்களுக்கு வியப்பைத் தருகிறதா இசை? இதில் அதிமுக, பா.ஜ.க போட்டியிட்டு இருந்தால் நாதக எத்தனை சதவீதம் எடுத்து இருக்கும்? திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலை உள்ளவர்களில் கணிசமானோர் கூட சீமானுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரில்லை என்பது தான் யதார்த்தம்.
  4. ஈரோடு தேர்தலில் நாதக டெபாஸிடை இழந்த போதும் தனக்குரிய தனிப்பட்ட payment போதியளவு கிடைத்த மகிழ்சசியில் சீமான்.
  5. நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர‌ தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.
  6. ஈவெரா மீதான விமர்சனங்கள் மேலும் தொடரும். இதன்மூலம் பாஜக வாக்குகளை பலவீனப் படுத்துகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள். இந்தத் தேர்தலில் பாஜக, அதிமுக வாக்குகளை நாம் தமிழர் பெற்றார்கள் என விமர்சனம் வைக்கின்றார்கள். இதை தவிர்க்கவே ஒரு மூலோபாயத்தை கடைப்பிடித்தோம்! 1) திப்பு சுல்தான், தடா ரகீம், காயிதே மில்லத் என கொண்டுவந்து வாக்கு கேட்கப்பட்டது. பாஜக அகரன் இஸ்லாமிய பெயர்களை கேட்டாலே போடமாட்டான்! அவ்வாறு பாஐக வாக்குகள் தவிர்க்கப்பட்டன. அவர்கள் திமுகவுக்கும், நோட்டாவிக்கும் போட்டார்கள். 🤣 அதேபோல அதிமுக மீதும் விமர்சனங்களை நாம் தமிழர் வைத்தது. கொடநாடு கொலைவழக்கு, தூத்துக்குடி கொலைகள் என அதிமுகவையும் குறிவைத்தார் சீமான். இதனால், அடிப்படை அதிமுக வாக்குகள் விழவில்லை. கிடைத்த 15% வாக்குகளும், சீமானுக்காகவும், கொள்கைகளுக்காகவும் மட்டுமே கிடைத்தவை. எப்பிடி super தானே விசுகு அண்ணா?! 🤩
  7. இது சொந்த செலவில் வைக்கும் சூனியம் என்று தலீவருக்கு யாரோ வடிவாக எடுத்து கூறி இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ட்ரம்பை பொறுத்தவரை அவருடைய ஆதரவாளர்களுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று ஒரு மாய தோற்றத்தை பொய்யை கூறி வந்தாலே போதும் அதைத்தான் அவர் செய்து வருகிறார் Lumber பலகை 70-75 வீதம் கனடாவில் இருந்தே வருகிறது ஏற்கனவே வீட்டு விலை ம்உச்சியில் இருக்கிறது எண்ணையும் அதே போலவே எண்ணெய் விலை ஏறினால் தலைவர் முக்காடு போட்டு கொண்டுதான் திரிய வேண்டு 25 வீதம் பலகைக்கு எண்ணெய்க்கும் வரி விதித்தால் அதன் தாக்கம் எல்லா பொருடங்களிலும் இருக்கும் (Transport + storage ) மெக்ஸிகோ நிலைமை அதைவிட மோசம் அடிப்படை உணவு அங்கிருந்துதான் வருகிறது அதைவிட பல தொழில்நுட்ப பொருட்கள் ( Technology Hardwares + Cars Parts) வாகன உரிதிகள் இரண்டு மூன்று முறை எல்லையால் வந்து வந்து போகிறது. காருக்கான என்ஜின் இங்கே செய்யப்படுகிறது இறுதி அசெம்ப்ளி மெக்சிகோவில் நடக்கிறது மெக்சிகோவும் 25 வீதம் வரி விதித்தால் அண்ணளவாக 50 வீதம் வரி ஏறும். இப்போது 50 ஆயிரத்துக்கு வாங்க கூடிய காரின் விலை 75 ஆயிரம் ஆகும் நடைமுறை சாத்தியமில்லாத விடயம் இதுவும் இன்னொரு Mexico pay for the Wall தான் ஆனால் மற்ற நாடுகள் நேரடியாக முகம் முறித்து சீன போல மாறினால் அன்று அமெரிக்க உற்பத்தியை தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் 65-70 வீதமான அமெரிக்க ஏற்றுமதி என்பது பொருட்களே அல்ல தொழிநுட்பம் வங்கி வர்த்தகம் சோஃவார் ( Tecnology, Finacial; trading, software) ஆகும். நீங்கள் விசா மாஸ்டர் கார்ட் பவித்தாலே ஒரு குறிப்பிடட வீதம் இங்கே வருகிறது Medicine + Pharma products
  8. பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
  9. சில நண்பர்கள் படித்த பாடசாலைக்கு பணம் கேட்டாலே கொடுக்க மாட்டார்கள் அதுவும் வருடத்தில் ஒருக்கா....நாங்கள் தனிப்பட்ட வகையில் தாயக மக்களுக்கு பல தொண்டுகள் செய்கிறோம் என புருடா விடுவார்கள்
  10. தட்டச்சில் ஓணான் என்று வரவில்லை என்ற மட்டில் ஆசுவாசம் அடைகிறேன்🤣.
  11. 🤣................. ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....
  12. "மனமே கலங்காதே!" & "இயற்கையின் இன்ப அழகில்" "மனமே கலங்காதே!" "மனமே கலங்காதே உறுதியாக இருந்திடு தினமும் நடப்பதை விழிப்புடன் கவனித்திடு! ஈனப் பிறவிகளென யாரும் இல்லை இனம் சார்ந்த நடவடிக்கைகள் ஒழியட்டும்!" "குணம் நாடிக் குற்றமும் ஆராய்ந்து மணம் வீசும் செயல்கள் தொடரட்டும்! எண்ணம் எல்லாம் மனிதம் வளர்க்க பண்பாடு நிலைத்து மனது மலரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................................... "இயற்கையின் இன்ப அழகில்" "இயற்கையின் இன்ப அழகில் மலர்ந்தவளே மயக்கத்தின் பிடியில் உலகை மறந்தவளே தயக்கம் கொண்டு வெட்கப் படுபவளே அயலவர் உள்ளங்களில் அன்பு விதைத்தவளே வியக்க வைக்கும் விழிகள் கொண்டவளே பயம் வேண்டாம் மனம் கலங்காதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.
  14. ஏற்கனவே பாஜகவோடு அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிழகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 2 பேரும் சேர்ந்து மத்தியிலும் கூட்டணி அமைத்து மந்திரிசபையிலும் இடம்பிடித்த திருட்டுத்திமுக இப்போது சீமானை ஆதரித்தால் பாஜக உள்ளே வந்திடும் என்று பிளேட்டை மாற்றிப் போடுகிறார்கள். மறுபடியும் பாஜக வோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அமைச்சரவை சுகத்தை அனுபவித்து பல ஆண்டுகளாயிற்று காங்கிரஸ் மீண்டும் எழும்ப முடியாமல் கிடக்கிறது. இப்படி பாஜகவின் முதல்கூட்டாளிகளை விட்டு விட்டு இன்னும் யாருடனும் கூட்டணிவைக்காத நாம்தமிழரை; பாஜகவின் B ரீம் என்று எப்படி ஆருடம் கூறுகிறீர்கள் சண் நியூஸ் கேட்டு கேட்டு அவர்களின் குரலாகடவே மாறிவிட்டீர்கள் பிளேட்டை அடிக்கடி மாற்றுவது திமுகதான்.
  15. அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள் 46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள் நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.
  16. இரண்டு குதிரை ரேஸில் கட்டுப்பணம் இழந்ததை இப்படி தொடர்ச்சியாக ஸ்பின் டொக்ரரிங் செய்தால்தானே அடுத்த தேர்தலில் 234 தொகுதிக்கும் கட்டுப்பணம் செலுத்த பணம் சேகரிக்கமுடியும்😆 எல்லாம் ஏற்றம் சொல்லுவதைக் கேட்கவும் நம்பவும் ஒரு சிறுகூட்டம் இருக்கும். அடுத்த தேர்தலில் இளைஞர்கள் எல்லாம் விஜய் பின்னால் போனால் கூடாரம் காலியாகிவிடும் அல்லவா! அந்தக் கணக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் பாஜகவால் உடைக்கப்படும். பாஜக பின்னால் நேர்மையாகப் போவது பினாமிகள் பின்னால் ஒளிவதை விட நல்லது. அண்ணாமலையை புலிக்கொடியை ஆட்டவைத்தால் நமக்குத் தீர்வு கட்டாயம் கிடைக்கும் மக்களே😄
  17. திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே போய் விட்டதன. நாதகவுக்கு அதிமுக .பாஜக >வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலை விட 15 ஆயிரம் வாக்களிக்க வில்லை. நோட்டாவுக்கு 5000 பேர கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். விஜையஜயப் பகைத்ததனால் விஜை ரசிகர்களும் போட வாய்ப்பில்லை. பெரியார்பிறந்த ஊரில் பெரியாரை சகட்டு மேனிக்கு வேறு விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்க 23000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இது நாதகவுக்கு விழுந்த வாக்குகள் தான் அடுத்த தேர்தலில் இது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. வியைகாந்கட்சி>கமல்கட்சி போல் தேயந்த்து கொண்டு போகாமல் தனித்து நின்று பல கட்சி கூட்டணியை எதிர்த்து பெற்ற வாக்குகள். நாதக தெபடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. அதை தேர்தல் மூலம் நிரூபித்தும் காட்டியிருக்கிறது.
  18. மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்கள் இதை எல்லாம் அவர்கள் செய்தமைக்கு காரணம் " சீமானின் எழுச்சியை தடுப்பது " தான் . நேரடியாகவே சொன்னார்கள் " தங்களுக்கு வர வேண்டிய வாக்குகளில் 30 லட்சம் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு போகுது . இதை நாம் அனுமதிக்க முடியாது என்றார்கள் . இதுவரை திராவிட பெயர் சொல்லி சேர்ந்த வாக்குகள் முதன் முறை வேறு ஒரு பெயரால் திரள தொடங்குகியது அவர்களுக்கு அச்சத்தை கொடுத்திருந்தது . அந்த பெயர் " மேதகு" . எந்த பெயரால் அங்கு வாக்கு திரள்கிறதோ அந்த பெயரை பூச்சியமாக்கி விட்டால் வாக்கு திரள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் நினைத்தே " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியமாக்கும் " பரப்புரையை முன்னெடுத்து வந்தார்கள் காலம் உருண்டோடியது . இன்று . எந்த போராட்டத்தை களங்கப்படுத்த முயற்சித்தார்களோ , எவரை பூச்சியமாக்க வெளிக்கிட்டார்களோ அதை எல்லாம் புனிதமாக்கும் பணியை தி மு க IT விங் செய்து வருகிறது . விடுதலை புலிகள் திராவிடர்கள் பற்றி சொன்ன வரலாறுகளை எல்லாம் தோண்டி எடுத்து , அவர்களே சொல்லி இருக்கிறார்கள் என்று அவர்களை உயரத்துக்கு கொண்டு போய் வைக்கிறார்கள் எந்த டி விகளில் " ஈழத்தமிழர்களில் போராட்டத்துக்கு ஏதிரானவர்களை தேடி பிடித்து பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ அதே டிவியில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் , முன்னாள் போராளிகள் " என்று பலரை பிடித்து பேட்டிகளை ஒளி பரப்புகிறார்கள் இந்திய - இலங்கை கூட்டு சதியால் கொல்லப்பட்ட கேணல் கிட்டு வின் வரலாறுகள் கலைஞர் டிவி யில் பரப்புரை செய்யப்படுகிறது . விதி வலியது . நன்றி: சிவ ரதன் காலம் எம்மை விடுதலை செய்யும் https://www.facebook.com/share/18imsftho7/
  19. இனி வரும் வாரத்தில் இருந்து கனடாவோ, மெக்சிக்கோவோ அல்லது உலகில் எந்த நாடுமோ அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் அவசரப் பிரச்சனை இனி உள்நாட்டில் தான். எட்டு மாத சம்பளம் கொடுக்கின்றோம், வேலையை விட்டுப் போங்கள் என்று சொன்ன பின்னும், 40000 பேரே மத்திய அரசின் வேலையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்கனவே இந்த வருடம் ஓய்வடையும் நிலையில் இருந்தவர்கள் தான் என்கின்றனர். அவர்கள் போகும் போது போனஸுடன் போகின்றார்கள். ட்ரம்பும் எலானும் கொடுத்த கெடு முடிந்துவிட்டது. ஆனால், ட்ரம்பும் எலானும் எதிர்பார்த்த 200000 பேர்கள் வேலையை விட்டுப் போகவில்லை. வழக்குகள் தான் போட்டிருக்கின்றார்கள். நீதிபதிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவுகளை போட ஆரம்பித்திருக்கின்றார்கள். வேறு சில விடயங்களிலும் இப்படி நீதித்துறையும், அரசும் முரண்டுபட்டுக்கொண்டு நிற்கின்றது. நான் என்ன வழக்கு போடலாம் என்று எனக்கே ஒரு யோசனை வருகுது என்றால் பாருங்களேன்................🤣.
  20. எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாயின் எல்லோருடனும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக புறகணித்திருக்க வேண்டும். அமித் ஷா அழுத்தத்துக்கு பயந்து அதிமுக, நாதக வுக்கு விட்டு கொடுத்ததின் பலன் - சில ஆயிரம் அதிமுக/ நடுநிலை வாக்காளர் நாதகவுக்கு போட்டுள்ளனர். ரெய்டுக்கு பயந்து கட்சி நடத்தாமல் ஜெ போல் லேடியா, மோடியா என மோதினால்தான் கட்சியை காப்பாற்றலாம். பிஜேபி கூட்டணியை முறித்தமை போல் இதிலும் எடப்பாடி கடும் நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும்.
  21. பிகு இனி தமிழகத்தின் இரெண்டாம் பெரிய கட்சி நா. த. க மூன்றாம் பெரிய கட்சி நோட்டா இதை கேள்வி கேட்பவன் தெலுங்கு வந்தேறி.
  22. உயிரோடு இருப்பவரை போட்டுத் தள்ளலாமா?! நீங்கள் சொல்பவர் சுப முத்துக்குமார் அண்ணை.
  23. வெகுசில தகவல் பிழைகளைத் தவிர முன்னர் கேள்வியுற்றிராத வரலாறுகளைக் கொண்டுள்ள கட்டுரையாகும்.
  24. உங்கட கணிப்பு நிச்சயம் பொய்க்கும், 10% வந்தேறிகளின் வாக்குகளை தவிர மீதமுள்ள 90% உயர்தர சுத்தமான தமிழர்களின் வாக்குகளை பெற்று, அனைத்து தொகுதிகளையும் வென்று தமிழ்நாட்டின் அதிபராக முடிசூடுவார்.
  25. இது என்ன... புது புரளியாய் இருக்கு. மேற்குலக நாடுகள்தானே... ஸ்ரீலங்காவிற்கு ஆயுதங்களும், போர்ப் பயிற்சிகளும், ஏன் பலமுறை நேரடியாகவே களத்தில் நின்று இராணுவத்திற்கு உதவி புரிந்தன. மகிந்தவால்... இந்திய, மேற்குலக நாடுகளின் உதவி இல்லாவிடில், புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியுமா? அரசியல்வாதிகள் எப்போதும் பொய், பிரட்டுக்களை அவிழ்த்து விட்டு, சுய இன்பம் காண்பதில் கில்லாடிகள்.
  26. இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.
  27. இன்று யூ டியுப்பர்கள் பலர் பல்கிப் பெருகி இருந்தாலும் ஒரு சிலரின் நல்லதோ, கெட்டதோ வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. அதில் தமிழ் அடியானும் ஒருவர். அதற்காக எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.😁
  28. தமிழ் அரசியல்வாதியின்... phd. பட்டத்தின் விளக்கம் அருமை. 😂
  29. இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவ‌ருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ?
  30. அதுதானே ஒன்று வலது மற்றது இடது... யார் இவர்களின் அந்த பொது எதிரி? காந்திஸ்ட்கள்... அல்லது ஹாமாஸ்யிட்கள்..ஜிகாதிகள்..
  31. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. கவலைப் படாதீங்க...இதைப் பார்க்கத்தன் விடாப்பிடியாகத் தொடருகின்றோம்☺️
  32. இந்தாள் சிலவேளை தெளிவாகப் பேசுகிறார் பலவேளைகளில் குழப்பமாகப் பேசுகிறார் . ஒரே குழப்பமாக இருக்கிறது.அந்த நேரத்தில் வாய்க்கு எது வருகுதோ அதைப் பேசிவிடுகிறார்..இரந்தாலும் பாராளுமன்றத்தில் செய்தியாகி விடுகிறார். வைத்தியாசாலை ஊழலில் தொடங்கி தானே ஊpழ் செய்கிறதாயும் சொல்கிறார். எந்த அரசியல்வாதி ஊழல் செய்ய விi;லை? கோணான் சொன்ன மாதிரி சின்ன ஊழல் என்றாலும் அதை பகிரங்கமாகப் போட்டு உடைக்கிறார்.இவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். தங்கம்தான்பாவம் இடையில் கிடந்து கஸ்ரப்படுகுது.
  33. காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
  34. ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே . ..........! 😍
  35. நான் ssc படித்தபின் விடுமுறையில் கொழும்பில் அத்தானின் கடைக்குப் போயிருந்தேன் . அப்போது அரைக் காற்சட்டைதான் அணிவது வழக்கம் . அன்று கொல்பிட்டியில் பிரபலமான சாப்பாட்டுக்கடை ......... அதற்கு பெற்றா சந்தையில் தேவையான மரக்கறி சாமான்கள் எல்லாம் வாங்கி வானில் ஏற்றிவிட்டு வரும்பொழுது அத்தான் நேராக ஒரு அவரது வாடிக்கையான தையல்கடைக்குப் போய் அங்கு எனக்கு அளவுகள் எடுத்து மூன்று நீளகாற்சட்டைகளும் (ஜபார்ஜி பிரதர்ஸ் துணியில் ) தைக்க சொல்லிவிட்டு ரெடிமேட்டாக மூன்று ஹென்லி சேர்ட்டுகளும் எடுத்துக் கொண்டு வந்தோம் . ....... அடுத்தநாள் கடைக்கு சென்று அவற்றைப் போட எனக்கு ஒரே கூச்சமாய் இருந்தது ......பின் அதைப் போட்டுகொண்டு யாழ்ப்பாணம் வர வீட்டிலும் சரி நண்பர்களும் சரி என்னை பகிடிபண்ணி ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ....... பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் பழகிவிட்டது. அந்த நாட்கள் இன்றும் மறக்க முடியாதவை ............! 😇
  36. வாழும்வரை போராடு . ........ 03. பின்பு நாகலிங்கம் மகனைப் பார்த்து என்ன தம்பி நேற்றிரவு வீட்டுக்கு வர நேரமாயிட்டுது போல. ஓமப்பா நேற்று மாலை நானும் இராகவனும் முனியப்பர் கோயிலடியில் இருந்து, படிப்பும் முடிந்து போட்டுது இனி நாங்கள் என்ன செய்யலாம் என்று கதைத்துக் கொண்டிருந்தனாங்கள் அதுதான் நேரம் போட்டுது. --- அப்ப நீ மேற்கொண்டு படிக்கேல்லையோ.பெரியப்பா கேட்க, இல்லையப்பா, அதுக்கு நிறைய பணம் செலவாகும். இப்ப எங்களிடம் அவ்வளவு வசதி இல்லையென்று எனக்குத் தெரியுமப்பா. தம்பியும் இரண்டு வருடங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விடுவான்.... ஒரு விரக்தியில் சிரிக்கிறான். --- ஏனப்பு ஒரு மாதிரிச் சிரிக்கிறாய். தந்தை வினவ சந்துரு சொல்கிறான் அதில்லையப்பா மேலே படிக்க என்னிடம் மார்க்ஸ் இருக்கு மணி இல்லை......இராகவ்விடம் மணி இருக்கு ஆனால் மார்க்ஸ் இல்லை. அதுதான் என்னையுமறியாமல் சிரிப்பு வந்து விட்டது. --- அப்ப என்ன செய்யப் போகிறாய். --- அவன் ஜவுளி வியாபாரம் செய்யப் போகிறானாம். அதற்காக அவன் பெற்றோர்களும் அவனுக்கு மூன்று லட்சம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னையும் விரும்பினால் கூட்டு சேரும்படி சொன்னான். இராகவனுக்கும் எங்கள் நிலைமை தெரியும்தானே. அதனால் என்னால் முடிந்தளவு பணம் போடு வரும் லாபத்தைப் பார்த்துப் பிரித்துக் கொள்ளலாம் என்று. என்ன செய்வது அவனுக்கும் மனம் கேட்கவில்லை. சிறுவயது முதல் இன்றுவரை நாமிருவரும் ஒன்றாய் இருந்து விட்டோம். இனியும் என்னைத் தனியே விடாமல் வியாபாரத்திலும் சேர்ந்து இருக்கலாம் என்று நினைக்கிறான். --- அப்ப நல்லதாய்ப் போச்சு நீயும் அவனுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். பணத்துக்கு அதிகம் யோசிக்காதை, நானும் கொஞ்சம் பணம் தருகிறேன். மனிசியின் நகைகளும் இருக்கு என்று பெரியப்பா சொல்கிறார். நீங்கள் என்னப்பா சொல்கிறீர்கள். சந்துரு கேட்கிறான். ஆனால் நாகலிங்கம் ஏதோ யோசனையில் இருந்து விட்டு சொல்கிறார். எனக்கென்னமோ இது அவ்வளவு நல்லதாய்ப் படேல்ல என்று சொல்லும்போது மேலே இருந்து பல்லியும் உச்சுக் கொட்டிவிட்டு போகிறது. --- நான் அதுக்கு சொல்லவில்லை அண்ணா, பங்கு வியாபாரம் ஒருநாள் இல்லை ஒருநாள் பிரச்சினையில் கொண்டுவந்து விடும். "நட்போடு ஊடாடிய உறவு பொருளோடு உறவாடக் கெடும்" என்று ஆகிவிடக் கூடாது. இவன் எங்கட பிள்ளைதான் ஆனால் தனித்து ஒரு கைத்தொழிலும் தெரியாது. இந்தப் பிள்ளைகளின் நட்பும் இரு குடும்பங்களின் அந்நியோன்னியமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இராகவன் தந்தையுடன் இருப்பதால் வியாபார அனுபவம் கொஞ்சமாவது இருக்கும். ஒருவேளை நட்டமேற்பட்டாலும் அவர்களால் சமாளித்துவர முடியும். ஆனால் இருக்கும் கொஞ்ச விதைநெல்லையும் இழந்தபின் நம்மால் மீளவே முடியாது போகலாம் இல்லையா. தந்தையின் பேச்சை சந்துரு உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். --- அப்ப அவன் என்ன செய்யலாம் என்று சொல்கிறாய், அதை முதல்ல சொல்லு.பெரியப்பா கேட்கிறார். --- ம்....முதலில் இவன் ஓரிரு வருடங்கள் ஒரு தொழிலைப் பழகட்டும். அதில் நல்ல அனுபவம் பெறட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.....அதுவரை நாங்கள் இப்ப வழமைபோல் செய்கிற பாய் பெட்டி இழைத்து விக்கிற வேலையை செய்து கொண்டிருப்போம் என்று முடிவாகச் சொல்கிறார். அன்று மாலை அவர்கள் வீட்டில் எடுத்த முடிவை இராகவ்விடம் சொல்வதற்காக சந்துரு இராகவ் வீட்டிற்கு செல்கிறான். வழியில் சிறு தோப்பு உண்டு. அதனூடாக சந்துரு செல்லும்போது எதிரில் இராகவனின் தந்தை தாமோதரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு நடந்து வருகின்றார்.அவரைக் கண்டதும் மிகவும் பணிவாக வணக்கம் சொல்கின்றான் சந்துரு. --- அவரும் இயல்பாக என்ன சந்துரு நலமா ........ எங்கே இராகவனைப் பார்க்க வீட்டுக்குப் போகின்றாயா என்று விசாரிக்கின்றார். --- ஓம் ஐயா. அத்துடன் உங்களையும் ஒருக்கால் பார்த்து விட்டு வரலாம் என்றுதான் வருகின்றேன். --- என்ன விஷயமென்றாலும் சொல்லு, உங்களின் வியாபாரம் சம்பந்தமாகவா...... --- ஓம் ஐயா..... --- இதோ பார் சந்துரு, நீயும் என் பிள்ளை போலத்தான்.எதுவாயினும் என்னிடம் தயக்கமின்றிக் கேட்கலாம். மகன் சொன்னவன் உனக்கும் மேற்கொண்டு படிப்பதற்கு வசதி இல்லையென்று சொன்னதாக. நீ விரும்பினால் நான் அதற்கும் உதவி செய்கின்றேன். அல்லது அவனோ வியாபாரம் செய்வதென்று பிடிவாதமாய் இருக்கிறான். அப்படியென்றால் கூட உனக்கு நான் கொஞ்சம் பணமும் தருகின்றேன். --- உங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஐயா. ஆனால் நான் அவற்றுக்காக உங்களைக் காண வரவில்லை என்று சொல்லியபின் அன்று மதியம் அவர்கள் வீட்டில் நடந்த விவாதங்களை சொல்கின்றான். --- அதைக் கேட்டதும் அவரும் உன் தந்தை சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். இதையேதான் நாங்கள் சிறுவயதில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது என் தந்தையும் எனக்கு சொன்னவர். இராகவ்வும் அவன் தாயாரும் கஷ்ட நஷ்டம் தெரியாமல் வளர்ந்தவர்கள். அதனால் பிடிவாதம் கொஞ்சம் அதிகம். சரி.....நீ இப்போது அவன்கூட சேர்ந்து வியாபாரம் செய்யப் போவதில்லை என்றால் என்னிடம் என்ன மாதிரியான உதவி எதிர்பார்கிறாய். --- நீங்கள் சொல்வது சரி ஐயா..... நான் இப்போது உங்களிடம் கேட்பது, எனக்கு ஒரு தொழில் கற்றுக் கொள்வதுபோல் ஒரு வேலை வேண்டும். --- இது நல்ல யோசனை......நீ நல்லா வருவாய்..... இப்போது நான் உனக்கு எனது கடையில் கூட வேலை தரலாம்.....கொஞ்சம் யோசித்து ஆனால் அது சரிவராது. பின்னாளில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். பின்னும் கண்களை மூடி யோசிக்கிறார். சந்துருவும் அவர் அருகே பவ்யமாக நிக்கிறான். சற்று நேரத்தின் பின், ம்....அதுதான் சரி என்று தெளிந்து, சந்துரு எதற்கும் நீ நாளை காலை ஏழு மணிக்கு மாணிக்கம் ஜுவல்லரிக்கு வந்துவிடு. நானும் அங்கு வந்து விடுகின்றேன் எனச் சொல்லிவிட்டு தனது நடைபயிற்சியைத் தொடருகின்றார்.....! சந்துருவும் அவரது வீடு நோக்கிப் போகின்றான்...........! வாருங்கள் போராடலாம் ............ 🐇 🐇 🐇.
  37. அதே. எழுத நினைத்தேன். பிறகு சிலர் டிரிகர் ஆகி விடுவார்கள் என்பதால் விட்டு விட்டேன்🤣 இந்தா எழுதாமலே ஆயிட்டார் அண்ணை 🤣. ——- ஓம் கருணாநிதிதான் தமிழ் நாட்டில் ஊழலின் பிதா, சுதன்,பரிசுத்தாவி, பேரன், பூட்டன் எல்லாமே 🤣. அதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் தமிழ் நாட்டுக்கு அப்பால் ஊழல் இந்தியாவின் ஒவ்வொரு படி நிலையிலும் வியாபித்து இருப்பதற்கு அவர் பெரிய காரணம் இல்லை.
  38. வாழும்வரை போராடு . ........ 02. --- உனக்கு எங்கட நண்பன் ஸ்ரீ காந்தை நினைவிருக்கா. --- யார் அவன், சென்ற வருடம் கணக்கு ஆசிரியருடன் பிணக்குப் பட்டு பாடசாலை வருவதையும் விட்டு விட்டானே அவனா. --- ஓமடா சந்துரு அவனேதான்.... அவனை சிலநாட்களுக்கு முன்பு லிங்கம் கூல்பாரில் சந்தித்திருந்தேன். இப்ப அவன் நல்ல நிலைமையில் மிகவும் வசதியாய் வாழுறானடா. இந்த இரு வருடங்களில் இரண்டு புதிய லொறிகள், அவனது ஊரில் அழகான பெரிய வீடு, கார், ஹோண்டா மோட்டார் சைக்கிள் எல்லாம் அவனிடம் இருக்குடா. --- அப்படியா எனக்குத் தெரியாதே, அப்படி என்ன வேலை செய்கிறானாம். --- எல்லாம் ஜவுளி வியாபாரம்தான் என்று கண்ணடித்துக் கொண்டே சொல்கிறான் இராகவ்.....ம்....நாங்களும் அவன்கூட சேர்ந்து செய்யலாமடா. --- என்னது கள்ளக் கடத்தலா ...... இது உனது அப்பாவுக்குத் தெரியுமா. --- தெரியாது.....ஆனால் நான் நேற்றிரவு வீட்டில் அப்பா அம்மாவுடன் கதைத்திருந்தேன்..இவையெதையும் சொல்லவில்லை. பொதுவாக வியாபாரம் செய்யப்போகிறேன் அதற்கு எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் என்று மட்டும் சொன்னேன். அப்பா முதலில் சம்மதிக்கவில்லை. நிறைய புத்திமதி எல்லாம் சொன்னார். ஒரே போர்.... வியாபாரத்தில் பலப்பல நுணுக்கங்கள், தந்திரங்கள் எல்லாம் உண்டு.இப்ப ஏமாற்றும் பேர்வழிகள் அதிகமாகி விட்டார்கள். நீ ஓரிரு வருடங்கள் எங்கள் கடையில் வேலை செய். கொஞ்சமாவது வியாபாரத்தைக் கற்றுக்கொள், பின் தனியாக வியாபாரம் செய்யலாம் என்று. அதைக் கேட்டு கேட்டு எனக்கு ஒரே சலிப்பாகி விட்டது. பின்பு அம்மாதான் எனக்காக அப்பாவுடன் வாதாடி அவரை இறங்கி வரப் பண்ணிவிட்டா. --- அட இவ்வளவும் நடந்திருக்கா. நல்லா இருக்கு. பிறகு என்னடா நடந்தது சொல்லடா இராகவ். --- பிறகென்ன அப்பா சமாதானமாகி எனக்கு வியாபாரம் செய்ய இரண்டு இலட்சம் ரூபா தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மாவும் என்னைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அப்பாவுக்குத் தெரியாமல் தானும் ஒரு இலட்சம் ரூபா தருவதாக சொல்லியிருக்கிறா. --- அட.... பரவாயில்லையே, நீ கெட்டிகாரனடா இராகவ். --- அதுதாண்டா சந்துரு நானும் சொல்கிறேன், நீ ஒரு இலட்சம் ரூபா போட்டால் கூடப் போதும், போட்ட பணத்துக்கு தகுந்த மாதிரி இலாபத்தைப் பிரித்துக் கொள்ளலாம். --- எனக்கு உடனடியாய் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எதற்கும் வீட்டில் கதைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன், ஒரு வாரம் அவகாசம் தா என்கிறான். இருவரும் இராகவனின் மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் செல்கிறார்கள். அடுத்தநாள் மதியம் கடந்து இரண்டு மணியிருக்கும் சந்துருவின் தந்தை நாகலிங்கம் வீட்டின் பின்னால் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்த்து படலையால் தெருவில் விட்டு விட்டு சாப்பிட வீட்டுக்குள் வருகிறார். உள்ளே நிலத்தில் புற்பாய் விரித்து அதில் உணவுகளை சட்டிகளுடன் கொண்டுவந்து வைத்துவிட்டு வந்து சாப்பிடும்படி அழைக்கிறார் பெரியப்பா பழனிவேல். சந்துருவோடு அவரது மகனும் சேர்ந்து நாலைந்து வாழையிலையுடன் வந்து அமர்கின்றார்கள். நாகலிங்கமும் வந்தமர பெரியப்பாவும் அவர்களுக்குப் பரிமாறி விட்டு தனது இலையிலும் சோறும் கோழி இறைச்சிக் கறிகளையும் போட்டு விட்டு பிள்ளையள் இந்த எலும்பு ரசத்தைச் சூட்டோடு குடியுங்கோ நெஞ்சுக்கு பிலமாய் இருக்கும் என்று சொல்லி எல்லோருக்கும் கிளாசில் ஊற்றி வைக்கிறார். அவர்களும் சூடான அந்த ரசத்தை ஊதி ஊதி குடித்துக் கொண்டு எலும்புகளையும் கடித்து சுவைக்கின்றனர். அப்போது பக்கத்து வீட்டில் குஞ்சாச்சி சத்தம் போடுவதும் கந்தப்பு வேலிக் கதியாலால் இடறுபட்டுக்கொண்டு இவர்கள் வீட்டுக்கு ஓடிவரவும் சரியாய் இருக்கு. என்னனை குஞ்சியப்பு நெத்தி வீங்கிக் கிடக்கு முழங்கால் சில்லாலை இரத்தம் ஒழுகுது என்று சந்துரு கேட்க, அத விடுடா அப்பப்ப நடக்கிறதுதானே என்று சொல்கிறார்.அப்போது பெரியப்பா தனக்கு கிளாசில் ஊற்றி வைத்திருந்த ரசத்தை எடுத்து இந்தா முதல்ல இதைக் குடி என்று குடுக்கிறார்.அவர் அதைக் குடிக்கும் பொழுது தனக்குப் பக்கத்தில் அவருக்கும் ஒரு இலை போட்டு சோறும் கறிகளையும் பரிமாறி வைக்கிறார். பிறகு அண்ணை உந்த இரத்தத்தை துடையனை என்று ஒரு துண்டைக் குடுக்கிறார். அவரும் அதை வாங்கி துடைத்துக் கொண்டே அவளும் பாவம்தான், என்ன செய்யிறது நான் கலியாணம் கட்டேக்க எனக்கு இருபது வயது அவளுக்கு பதினாலு வயது இருக்கும். இப்ப எனக்கு எழுபது வயதாகுது. அம்மாவின்ர கையால சாப்பிட்டதை விட அவளின்ர கையாள சாப்பிட்ட காலம்தான் அதிகம். அவளிலும் பிழையில்லை கண்டியளோ. அவள் ஆசையாய் வளர்த்த சேவலை காலையில் இருந்து காணேல்லை என்று தேடிக் கொண்டிருக்கிறாள், அந்த நேரம் நானும் குடிச்சுட்டு வெறியில வீட்ட வந்ததும் ஏதோ நான்தான் அதை பிடித்துக் கொண்டுபோய் வித்துட்டு குடிச்சுட்டு வாறன் என்று நினைத்திட்டாள். உன்னாணை அதைநான் கண்ணிலும் காணேல்ல. --- சரி சரி உதை விடு, அது உங்கனேக்கைதான் எங்காவது மேயப் போயிருக்கும் என்று பெரியப்பா சொல்லிவிட எல்லோரும் சாப்பிடுகிறார்கள். கந்தப்பு அங்கேயே குந்தில துண்டை விரித்துப் படுத்துக் கொள்கிறார். நாகலிங்கமும் பழனியும் முற்றத்தில் கை கழுவும்போது, அண்ணை நான் மாட்டுக் கொட்டிலில கோழிச் செட்டைகளைப் பார்த்தேன், இனி இதுபோல செய்ய வேண்டாம் என்று சொல்ல பழனி தலை கவிழ்ந்து கொள்கிறார்............! வாருங்கள் போராடலாம் . ........ 🐶 🐶 .
  39. எல்லோரது வாயையும் அடைப்பதற்காக நெத்தன்யாகு ரம் மூலமாக இதை உலகுக்கு தெரிவித்துள்ளார். ஒரு கிழமைக்கு ஐயோ குய்யொ முறையோ என்பார்கள்.
  40. இதில் இவர்களுக்கு அப்பிடி என்ன வெற்றி கிட்டியது? இவ்வளவு பணத்தை செலவிட வைத்து, அமெரிக்க எல்லையை கண்காணித்து அப்பிடி என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இந்த எல்லையால் அமெரிக்காவுக்கு வரும் fentanyl இல் அளவு மொத்தத்தில் வெறும் 0.2%. கிட்டதட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். சட்டவிரோத குடியேறிகளும் அங்கிருந்து வருவது குறைவு. Trump இற்கு கை சுட்டு விட்டது, தான் வெற்றி பெற்றேன் என்று அவரது மறைகழண்ட ஆதரவாளர்களுக்கு காட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. மேலே நிழலி எழுதியது போல, இதன் விளைவு கனடா மக்களை இன மதம் பார்க்காமல் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவைத்தது. இதன் பொருளாதார அடி கொஞ்ச நாட்களில் இங்கு எதிரொலிக்கும். தற்போது இவருக்கு வாக்கு போடாத blue states எனப்படும் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கை வைக்கத்தொடங்கியுள்ளார்.
  41. நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை. புலிகளின் பேட்டிகள் வீடியோக்கள் மற்றும் படங்களை கொண்டு வந்து தற்போது இங்கே கொட்டுபவர் அனைவரும் இங்கே இது நாள் வரை புலிகளை கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி கழுவி ஊற்றியோரே. அவ்வளவும் நஞ்சு. அத்துடன் உங்களுக்கு தெரியாததல்ல இதுவரை புலம்பெயர் அமைப்புகளை வெறுக்கத்தக்க வேண்டாம் அவர்கள் அனைத்து அடுக்கு முறை மற்றும் துரோகிகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நான் மட்டுமே தொடர்ந்து எழுதி வந்தேன். நேற்றுவரை அவர்களை கள்ளர் வியாபாரிகள் கொள்ளைக்கூட்டம் என்றவர்கள் இன்று அறிக்கை தரட்டுமாம். போன கிழமை கூட ஒரு நா... ஒன்று தர்மம் தேடிய பருதியண்ணை அதனாலையே கொலையுண்டதை பங்கு பிரிப்பில் என்று கொக்கரித்தது. அதைக் கூட ஒருவரும் கண்டு கொள்ளவில்லை கண்டிக்கவில்லை.
  42. இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். நீங்கள் நாலுபேர் இங்கு காட்டுக்கத்து கத்துவதால் எதுவும் ஆகப்போவதில்லை! அது சீமானுக்கோ அல்லது புட்டினுக்கோ!!
  43. அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம்.
  44. அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர். இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள். பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர். இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல விடயம்தான்.
  45. மார்கழி 8, 2003 தென்னிலங்கை அரசியட் சிக்கல் குறித்து பேச்சுக்களில் ஈடுபட்ட ரணில் சந்திரிக்கா புத்தளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரவி கருணநாயக்க, "எமது அரசாங்கத்திடமிருந்து முக்கியமான மூன்று அமைச்சுக்களை பிடுங்கி எடுக்கும் முன்னர் புலிகளுடனான எமது சமாதான ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று சந்திரிக்கா கூறிவந்தார். ஆனால் தற்போதோ சமாதான ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைய ஒழுகுமாறு இராணுவத்தினரையும் ஏனைய அரச படைகளையும் அவர் கேட்டிருக்கிறார். ஆக நாம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் தற்போது சட்டத்திற்கு அமைவானது என்று அவர் கூறுகிறார்". தனது அடியாட்கள் சந்திரிக்காவை ஏளனம் செய்து பிரச்சாரம் செய்துவரும் வேளையில் தன்னை ஒழுக்கமானவராகவும், நாட்டிற்காக எத்தகைய தனிப்பட்ட தியாகத்தினையும் செய்யும் பொறுமையுடையவராகவும் சர்வதேசத்தின் முன்னால் காட்டும் கைங்கரியங்களில் ரணில் இறங்கியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை புத்தளத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ரணில், "நான் ஜனாதிபதியோடு சண்டை பிடித்திருக்கலாம். ஆனால் நாட்டின் நலன்கருதி அதனைத் தவிர்த்துவிட்டேன். தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல்ச் சிக்கலில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான பேச்சுக்களில் ஜனாதிபதியுடன் நான் ஈடுபட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்குத் தேவையானதும் அவசியமனாதும் என்னவென்றால் சமாதானப் பேச்சுக்களை மேலும் முன்கொண்டு செல்வதே" என்று கூறினார். "ஜனாதிபதியுடன் நான் நடத்தும் பேச்சுக்கள் பலந்தருவனவாக இருந்தால் நாடு ஒரு புதிய அரசியல்க் கலாசாரத்திற்குள் செல்லும். அவ்வாறில்லாமல் பேச்சுக்கள் தோல்வியடையுமாகவிருந்தால் முழு நாட்டு மக்களுமே மிகவும் பாரதூரமான‌ சூழ்நிலைக்குள் தள்ளப்படுவார்கள்" என்றும் கூறினார். கடந்த சனிக்கிழமை குருநாகலில் பேசும்போது, "நான் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்து அவர்களின் இலட்சியமான ஈழக்கோரிக்கையினை கைவிடப்பண்ணியிருக்கிறேன். சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு அவர்களை இணங்கச் செய்யும் அதேவேளை, அவர்களது யோசனைகளையும் முன்வைக்கும்படி அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அதன்படி புலிகள் முதன்முதலாக தமது அரசியல் யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். அவற்றுள் சிலவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இறுதித் தீர்வொன்றினை அடையும் சந்தர்ப்பத்தினை இது எமக்கு வழங்கியிருக்கிறது. நான் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன சிந்தனை, நவீன நடைமுறைகளினாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால் ரணிலின் உண்மையான நோக்கம் என்னவென்றால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அதற்கான முழுப் பழியினையும் சந்திரிக்காவின் மீது சுமத்திவிட்டு தான் தப்பிக்கொள்வதுதான். கொழும்பில் சர்வதேச இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது, சந்திரிக்காவினால் பலவந்தமாக தனது அரசிடமிருந்து பிடுங்கப்பட்ட மூன்று முக்கிய அமைச்சுக்களையும் மீளப்பெற்றுக்கொள்வதில் தனக்கு அக்கறையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்திச் சென்று, எடுக்கப்படும் முடிவுகளை அமுல்ப்படுத்துவதற்கான அதிகாரம் தனக்கு இருந்தாலே போதுமானது என்று அவர் கூறினார். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் சந்திரிக்காவுடன் கடந்த வெள்ளியன்று 40 நிமிடங்கள் பேசிய ரணில், தனது நிலைப்பாட்டினை மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வது நாட்டின் அதிமுக்கிய தேவை என்று சந்திரிக்காவிடம் கூறிய ரணில், பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதில் ஏற்படுத்தப்படும் எந்த கால விரயமும் நாட்டிற்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். பின்னர் சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினை சந்திரிக்காவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் கோரினார். ரணிலின் கோரிக்கையினை நிராகரித்த சந்திரிக்கா, பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்துமாறு ரணிலைக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பேச்சுக்களை முன்னெடுக்க சம்மதித்த ரணில், பாதுகாப்புத்துறையினை சந்திரிக்கா வைத்திருக்கலாம் என்றும், ஆனால் பேச்சுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பலம் தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் கோரினார். சமாதானப் பேச்சுக்களில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பேசப்படும் விடயங்களின்போது சந்திரிக்காவும் பார்வையாளராக அமரமுடியும் என்றும் ரணில் கூறினார். மேலும் பேச்சுவார்த்தைகளில் சந்திரிக்காவும் காத்திரமான பங்கினையாற்றும் பதவியொன்றினை தன்னால் உருவாக்கித்தர முடியும் என்றும் கூறினார். இதுதொடர்பாக சமரவிக்கிரம - தித்தவல ஆணைக்குழு ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். தென்னிலங்கை அரசியற் சிக்கல் தொடர்பான பேரம்பேசல்கள் நீண்டகாலம் இழுபட முடியாது என்று ரணில் சந்திரிக்காவிடம் கூறினார். இதனால் நாட்டிற்கு பாதகமான விளைவுகளே உருவாகும் என்று கூறிய ரணில், ஐக்கியதேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டினை மனதிற்கொண்டு, இவ்வரசியட் சிக்கலுக்கான தீர்வு மார்கழி 15 ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நடைபெற்று வரும் அரசியட் பேரணிகளில் தான் கலந்துகொள்ளப்போவதாகவும், இன்னொரு தேர்தலுக்காக ஆயத்தமாகும்படி நாட்டு மக்களையும், தனது கட்சி ஆதரவாளர்களையும் தான் கேட்கப்போவதாகவும் சந்திரிக்காவிடம் அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த சந்திரிக்கா, அரசியட் சிக்கலுக்கான தீர்வு விரைவாக உருவாவதைத் தானும் விரும்புவதாகவும், ஏதோவொரு வழியில் இதனை அடைந்தே தீருவது என்று தான் முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.