Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3061
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    10720
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/25 in all areas

  1. வ‌ண‌க்க‌ம் பெரிய‌ப்பு இந்த‌ போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நீங்க‌ள் என்னை தான் முத‌ல் கேட்டிங்க‌ள் இந்த‌ போட்டிய‌ ந‌ட‌த்துவோமா என்று நான் ஆம் சொன்னேன் ந‌டுவில் விட்டு சென்றால் அது உங்க‌ளுக்கு நான் செய்யும் துரோக‌ம் மாதிரி ஏதோ ஒரு குற்ற‌ உன‌ர்வு மாதிரி என் ம‌ன‌ம் சொல்லுது இந்த‌ போட்டி முடியும் வ‌ரை உங்க‌ளுட‌ன் இணைந்து இருக்கிறேன் பெரிய‌ப்பு🙏👍................
  2. மூலைக்கு மூலை பெரியார் சிலை வைத்ததால் தமிழகத்தில் சாதி அடியோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது .......... இனி ஈழம் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சாதிகளை அழிக்கும் நேரம் வந்து விட்டது பெரியார் சிலைக்கு கம்யூனிசிய காரர்கள் சிவப்பு வர்ணம் தீட்டினால் சிவப்பு வர்ணத்தை கடந்து அதற்குள் ஒழிந்திருக்கும் பெரியாரை பாருங்கள்.
  3. ஆம் 25 MPH இல் கிளியரன்ஸ் கொடுத்து இருக்கிறார்கள் பிளேன் ஒடுபாதையை தொடும்போது 35 MPH Crosswind (குறுக்கு) காற்று வீசியிருக்கிறது
  4. டிங் டிங்....... சிறீ : சாமி அண்ணோய் என்ன சங்கதி நாரியை பிடிச்சு கொண்டு நடக்கிறியள் சாமி : இருந்தா எழும்பே லாமல் கிடக்கு ...ஐயோ ....வந்தனெண்டா .எனக்கு வர கோவத்துக்கு ...உனக்கு பகிடியாய் இருக்கு . சிறீ : ஏன் அண்ணா சினோ வழிச்சு களைச்சு போட்டீங்களா ? இந்தமுறை ஒரு நாளிலேயே கொட்டித்தள்ளி போட்டுது சாமி : பரிமளம் ! ....இவன் தம்பி ஸ்ரீ வந்திருக்கிறான் . கொஞ்சம்கோப்பி போட்டு தாறீரோ ? இவள் கம்ப்யூட்டர் ஐ விட்டு அசையமாடடாள் . ... சிறீ : அப்பவும் சொன்ன நான் பெரிய வாசல் (drive way ) இருக்கிற வீடு வாங்க தீங்க என்று ... பரிமளம் : என்ன தம்பி விசேஷம்.? இந்தாங்கோ காப்பி சாமி : இவள் தான் பெரிய வீடு வேணும் என் இன சனம் எல்லாம் வந்து சேர்ந்தால் ஒன்றாக இருக்கலாம் என்று. .சும்மா சொல்ல கூடாது எல்லோரையும் வரவேற்று (கொஞ்ச ரூம் காசு தந்தவைதான் ) PR (permanent residence ) கிடைச்ச உடனே பறந்திட்டுதுகள். ம் சிறீ : நான் வந்ததென்ன என்றால் ...சினோ வழிச்சு கைவிறைச்சுப்போட்டுது . உங்கட ..snow blower ஐ தாறீங்களோ ? இவள் வேலையால் வரமுன்னம் வழிச்சுப்போட்டு நான் வேலைக்கு இறங்கவேண்டும். சாமி : இன்னும் இரண்டு நாளுக்கு கொட்டுமாம் ...இந்தா வழிச்சுப்போட்டு உடன் கொண்டுவந்து தா...இவன் அமேரிக்கண்ட பிளேன் விழுந்து தலைகீழபோச்சுதாம் .சிறீ : ஓம் ஓம் கேள்விப்படட நான் சாமி : ம் ம் ஊரில் இருந்தா.... இந்த சினோவும் இல்லை வழியல் உம் இல்லை ...ச் சா கை விறைச்சு போச்சு... பெஞ்சன்(pension ) எடுத்தப்புறம் ஊரோடு போய் இருந்திடனும். காலத்துக்கேற்ற உரையாடல். (சாமியாரும் சிறீத்தம்பியும் மன்னிக்கவும். )
  5. 'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்: https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/ இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள். அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால். நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.
  6. ஏது.............................. இனிமேல் பங்குபற்ற முடியாதா.................... இங்கே எழுதவும் மாட்டீர்களா................... பையன் சார், போட்ட contractஐ எடுத்துப் பாருங்கோ...... அதன்படி இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நீங்கள் பங்குபற்ற வேண்டும், எழுத வேண்டும்...... அதற்குப் பிறகும் விடமாட்டோம், புது contract போடுவம்......................❤️.
  7. பையா இங்கே பலருக்கு வீட்டில் வேலை இல்லையென்றால் ஏதாவது சீமானின் திரியை கொண்டுவந்து சொருகிவிட்டு தாமே முன்னால் நின்று விளக்குப்பிடித்து பார்த்தமாதிரி கருத்தெழுதுவதே தொழிலாகிவிட்டது. அதனால் இந்த திரியை கணக்கெடுக்காமல் நகர்வதே உனக்கு நல்லது. அவரவர் தங்கள் ஆத்ம திருப்திக்கு எதையாவது எழுதிவிட்டு போகட்டும்.
  8. வாடிக்கையாளருக்கு ஒரு அரிய அறிவிப்பு!!!!! சேம்பியன்ஸ் டிராபி தள்ளுபடி ஆபர் !!! நாளை முதல் இறுதி போட்டி வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் சீமான் சம்பந்தமாக நான் கருத்தேதும் எழுதமாட்டேன் !!!!!😎 நம்பி வாங்க, சந்தோசமா போங்க 🤣 பிர்ட்ஜில் முட்டை அடுக்கும் தட்டில் ஊறுகாய் போத்தல் பக்கவாட்டாய் கிடக்குது…. எதுக்கும் கிளியர் பண்ணி வைப்பம் 🤣. எப்படியும் தேவைப்படும். முதல் போட்டியிலே கணக்கை ஆரம்பிக்க வேண்டி வரும் போலத்தான் கிடக்கு🤣.
  9. யுவர் ஆனர் விஜயலட்சுமிக்கு சீமான் முதல் கணவனா என்றும் கேட்க வேண்டுகிறேன்.
  10. சிம்மக்குரலில் ஓசை பெயர்ந்தது, தமிழின் பெருமை உலகம் உலந்தது, எல்லாம் நிசப்தம், அவன் உதிர்ந்து, அழகுதமிழின் குரல் பெருக்கியது. அழகிய மெல்லிய சொற்கள் எங்கும், ஒலிக்கும் பெரும் மகத்துவம் என்றே, புனிதமான இளமையின் கதை, தமிழின் பண்பாட்டை எப்போதும் காத்து . வெளிச்சம் வரும் நேரம் ..., தமிழின் அழகு மென்மேலும் பூத்தது, அழகுதமிழ் இப்போது உயிர் பெறுவது, சிம்மக்குரலில் ஒலித்து!
  11. உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்............... 'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.
  12. நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார். பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை. ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன். தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார். இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!
  13. சீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇 சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் வந்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. அம்பேத்கரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. ஆனா சீமான் பேச்சு பெரியாரை கொச்சைப்படுத்துவதாகவும் அவதூறுபரப்புவதாகவும் தான் இருக்கு.. அவர் வந்து கருத்தியல் ரீதியா கடவுள் இல்லைன்னு ஏன் சொன்னாரு கடவுள் இருக்கிறார் அப்படின்னு பேசுங்க.. பார்ப்பன எதிர்ப்பு ஏன் வைத்தார்.. பார்ப்பன எதிர்ப்பு தப்பு.. அவங்க சிறுபான்மையினர்.. சிறுபான்மை துவேஷம் கூடாது.. பார்ப்பனர்கள் என்ன ஆதிக்கம் பண்ணிட்டாங்க இவர் வந்து பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.. இது ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் தானே.. அப்ப பெரியார் பேசுறது ஒரு துவேஷ அரசியல்.. அதனால நான் எதிர்க்கிறேன் அப்படின்னு பேசுங்க நம்ம விவாதிப்போம்.. ஆனா பெரியார் பேசின அரசியல்தான் தமிழ் தேசியத்திற்கு எதிராய் இருக்கு அப்படின்னு சொல்றதும் பிறமொழி வெறுப்பை வந்து விதைப்பதும் எல்லாம் டோட்டலா அவர் வந்து தமிழ் தேசியம் பேசல.. அவர் வந்து ஒரு வெறுப்பு அரசியலை பார்ப்பன அரசியலுக்கு அல்லது இந்த சனாதன அரசியலுக்கு துணை போகக்கூடிய ஒரு அஜெண்டாதான் அவர்கிட்ட இருக்குது.. அவர் பேசுறது தமிழ் தேசியமே கிடையாது..தேசியம்ங்கிற சொல்லே முதல்ல தமிழ் சொல் கிடையாது.. அப்படி பார்த்தா தூய தமிழ் வரணும்னா தேசியம்ங்கிற சொல்லே தமிழ் சொல் கிடையாது.. தமிழ் தேசம் அப்படிங்கறது தமிழரசன் பேசின அரசியல்.. அது தமிழ் தேசியம்.. எங்களுக்கு தனி தமிழ்நாடு வேணும்.. நாங்க இந்திய பேராதிக்கத்தின் கீழ இருக்க மாட்டோம்.. எங்களுக்கு இந்திய தேசியம் வேண்டாம்.. நாங்க வந்து தனி தமிழ்நாடு கோறுகிறோம் என்பதுதான் தமிழ்நாடு தமிழரசன் பேசின அரசியல்.. தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்.. இப்ப நாம பேசுறது வந்து மொழி உரிமையும் இன உரிமையும் உள்ளடங்கிய இந்திய தேசத்திற்குள் கட்டுப்பட்ட ஒரு அரசியல்… இப்ப இவர் வந்து தேர்தல்ல நிக்கிறார்…அப்படின்னா இந்த எலக்டோரல் சிஸ்டத்தை ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த இந்தியாவையும் ஏத்துக்கிறாரு.. அப்ப இந்தியாவை ஏத்துக்கிட்டாருன்னா இந்திய தேசியத்தை ஏத்துக்கிட்டாருன்னா தமிழ் தேசியம் எங்க இருக்கும்..? தமிழ்தேசியம்ங்கிறது சிங்கள பேரினவாதத்தை மட்டுமே எதிர்க்கல.. எங்களுக்கு வெறும் எங்க தமிழ் மொழியையும் ஆட்சி மொழியா வச்சு அவங்க கோரிக்கை வைக்கல.. எங்களையும் ஒரு தேசிய இனமா அங்கீகரிச்சு எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு அவரு கேக்கல..முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கேக்கல.. முதலமைச்சர் தரேன்னு சொல்லவே வேணான்ட்டாருல.. அவரு அதை வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரே ப்ராவின்ஸா மாற்றி அந்த ப்ராவின்ஸ்க்கு அவரை முதலமைச்சர் ஆக்குறோம்னு தானே சொன்னாங்க.. அதுதானே 13 அமெண்ட்மென்ட்.. அதை அவர் ஏத்துக்கல.. அப்ப அவருடைய கோரிக்கை என்ன..? நாங்க வேற நீங்க வேற.. எங்களுக்கு தனியா எங்க தாயகத்தை பிரிச்சு கொடுங்க.. அதான் தாயகம் தேசியம் தன்னுரிமைங்கிறது.. தன்னாட்சிங்கிறது.. தாயகம் தேசியம் தன்னாட்சி.. எங்கள் நிலப்பரப்பை எங்கள் தாயகமா ஏத்துக்குங்க.. எங்களுடைய அரசியல் எங்களை வந்து ஒரு தேசியமாகவும் தேசிய இனமாகவும் ஏத்துக்குங்க.. அதனால எங்களை நாங்களே ஆண்டுகொள்வதற்கான இறையாண்மையை எங்கள்ட்ட ஒப்படைங்க.. இதுதான் வந்து தமிழ் அரசியல்.. தமிழ் தேசிய அரசியல்.. இப்ப இவங்க அதை வைக்கிறாங்களா..? தாயகம் தேசியம் தன்னாட்சிங்கிறதை வைக்கிறாங்களா..? வெறும் மொழி உணர்வையும் இன உணர்வையும் பேசிட்டு இருக்காங்க.. தெலுங்கு எதிர்ப்பை முன் வைக்கிறாங்க தெலுங்கர்களால் தான் இங்க எல்லாமே போச்சுன்றாங்க.. அந்த வரிசையில பார்க்கும்போது பெரியார் வந்து ஒரு கன்னடர்.. அவரு அந்த கட்சியில இருந்தவங்க எல்லாம் தெலுங்கர்கள்.. அதனால இங்க தெலுங்கர்களால்தான் நாங்க அழிஞ்சு போயிட்டோம் அப்படிங்கிறார்கள்.. இது வந்து கருத்தியல் ரீதியாவே வரலாற்று தவறு.. வரலாற்றுப் பிழை இந்திய தேசியம் தான் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியும்.. தெலுங்கு தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியாது.. டெல்லியில் இருக்கிறது ஹிந்தி பேசக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இருக்குறாங்க.. தெலுங்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அங்க இல்லை.. எந்த வகையில வந்து தமிழ் தேசியத்திற்கு வந்து பெரியார் முட்டுக்கட்டையா இருந்துட்டாரு..? தமிழ்ங்கிற உணர்வையும் தமிழன் என்கிற உணர்வையும் அவர் சைமல்டேனியஸா சமகாலத்துல முன் வச்சிருக்கிறாரு.. தமிழை ஏன் பழிச்சாருன்னா தமிழ்ல வந்து அறிவார்ந்த செய்திகள் இல்லை.. எல்லாம் புராண குப்பைகள் இருக்குன்றதுனால ஆத்திரப்பட்டாரு..காட்டுமிராண்டி காலத்துல இருந்த அதே மொழியாதான் இது வளர்ச்சி இன்னும் வளர்ச்சி அடையல.. ஒரு நவீனமா அப்டேட் ஆகல சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதுக்குள்ள வரல.. அதுக்கான டெர்மினாலஜி அதுக்கான சொல்லகராதிகள் இதுல இல்ல அப்படிங்கிற ஆத்திரத்துல அவர் சொன்னாரு.. ஒரு விரக்தியின் விளிம்புல இருந்து அதை சொன்னாரே தவிர கன்னட பற்று வைத்துக்கொண்டு தமிழை வந்து அவர் பழிக்கல.. சீமான் என்ன தோற்றத்தை உருவாக்குறாருன்னா அவர் கன்னடரா இருந்ததுனாலதான் தமிழர்களை கொச்சைப்படுத்தி இருக்கிறாருன்றாரு:: தமிழ் அறிஞர்கள் பங்களிப்புங்கிறது வேற..ஒரு அரசியல் களத்தில் நின்னு ஒருத்தர்செய்யக்கூடிய பங்களிப்புங்கிறது வேற.. அண்ணா பேசுனது எல்லாரும் தமிழறிஞர்கள் பேசி இருக்காங்க.. ஆனா அண்ணா ஏன் நம்ம ஒரு ஐக்கனா பார்க்கிறோம்னா அவர் அரசியல் களத்தில் நின்னு பேசினார்.. அதே மாதிரி அம்பேத்கர் பேசின அரசியலை அதுக்கு முன்னாடி எவ்வளவு பேர் பேசி இருக்காங்க.. ஆனா அம்பேத்கர் அரசியல் களத்தில் நின்று செஞ்சதுனால நம்ம வந்து தூக்கி பிடிக்கிறோம்.. அரசியல் களத்தில் நின்னு செய்யறவங்களுடைய பங்களிப்பையை நம்ம இலக்கிய தளத்தில் நின்னவங்கள கூட வந்து ஒப்பிடக்கூடாது.. மாபோசி காலத்துல பேசின அரசியல் வந்து அவங்களும் அன்னைக்கு வந்து திராவிட வெறுப்புங்கிறதை முன்னிறுத்தி தான் பேசுனாங்களே தவிர தனித்தமிழ்நாடு கோரிக்கை யாரும் வைக்கலையே.. மாபோசி தனி தமிழ்நாடு கோரிக்கை வச்சாரா அல்லது வேற யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா இப்ப இவங்களே தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா..? வைக்க முடியாது இல்லையா..? அப்ப முடியாதுன்னா நீ பேசுறது தமிழ் தேசியம் கிடையாது.. அது மொழி உரிமை.. இன உரிமை.. அவ்வளவுதான் நீங்க கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிட்டு எலக்சன்ல நிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க பேசுறது போலி.. அது தமிழ் தேசியமா இருக்க முடியாது.. நீங்க தமிழ் தேசியம் பேசுறதுனா இந்த கான்ஸ்டிடியூஷன் நான் ஏத்துக்கல இந்த எலக்சன்ல நான் நிக்க மாட்டேன் எங்க தமிழ்நாடு தனி நாடு.. எங்களை இந்த இந்தியாவுக்குள்ள வச்சிருக்காதீங்க நாங்க தனி தமிழ்நாடு வென்றெடுப்போம்னு சொல்லுங்க.. யாரும் சொல்ல முடியாது.. அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது அப்ப எதுக்காக நீங்க பெரியாரை கொச்சைப்படுத்துறீங்க..? பெரியார் எப்படி தமிழ் தேசத்துக்கு முட்டுக்கட்டையா இருக்க முடியும்..? பெரியாருடைய அரசியல் முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு.. அதனாலதான் திராவிடம் என்கிற சொல்லாடலே வருது.. திராவிடத்தை பெரியார் கண்டுபிடிக்கல திராவிடம் என்கிற சொல் வந்து பண்டிதர் அயோத்தியதாசரால தான் இங்க முழக்கத்துக்கே வருது..அவர்தான் திராவிடம் என்கிற சொல்லை முதல்ல கையாளுறாரு அதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனா ஆரியத்திற்கு எதிரான ஒரு சொல்லாடலா திராவிடத்தை கையாண்டவர் பண்டிதர் அயோத்தியதாசர்.. அப்படி துணிச்சல் இருந்தா நீங்க பண்டிதர் அயோத்திதாசர் விமர்சனம் பண்ணுங்க.. திராவிடத்தை அவர்தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. ஆதி திராவிடம் என்கிற சொல்லை இவர் இரட்டமலை சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.. ரெவரன் ஜான் ரத்தினம் திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் 1880களில் அல்லது 82, 83… அவர் இந்த அமைப்பை உருவாக்கும் போது பெரியாருக்கு மூணு வயசு நாலு வயசு.. திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் அப்ப அவங்க எல்லாம் வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக இருந்தாங்களா..? அன்னைக்கு மதராஸ் மாகாணத்துல எல்லா மொழியும் பேசக்கூடியவங்களா இருந்தாங்க அந்த காலத்துல நாம பிறந்திருந்தாலும் அப்படித்தான் இயக்கத்தை உருவாக்கி இருப்போம்.. இன்னைக்கு திராவிடர் என்கிற சொல்லு தேவையில்லை தமிழன்னு சொன்னா போதும் தமிழர் தேசியத்தை பேசினா போதும்னா அது ரைட்.. நமக்கு திராவிடம் என்கிற சொல் தேவையில்லைன்னா அத சொல்லலாம்.. ஆனா அதுதான் தமிழ் தேசிய தேசியத்தையே வந்து முட்டுக்கட்டையா இருந்துச்சு.. பெரியாரால தான் அங்க தமிழர்களே எழுச்சி பெறாமல் போனாங்க.. பெரியாரை ஒழிச்சாதான் தமிழ் தேசியத்தை கொண்டு வர முடியும்ங்கிறது தவறு.. மேலும் அவர் பேசியது 👇
  14. "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]] சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய் சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய் ! மாடு இரத்ததைப் பாலாய்க் கொடுக்கும் மாமனிதன் நீயோ இரத்தத்தை பாசமாக மாறாத அன்பை வியர்வை உழைப்பாக மாட்சிமை கொண்ட வாழ்வு தந்தாய்! நல்லூரில் பிறந்து அத்தியடியில் வாழ்ந்தாய் நட்பு உலகில் 'க க' என்று பெயரெடுத்தாய் நம்பிக்கை ஒன்றே உன் ஆயுதம் நன்மை ஒன்றே உன் நோக்கம்! மானம் பெரிதென எமக்கு போதித்தாய் மாதா பிதா இருவருமே கடவுளென்றாய் மாலுமியாய் எமக்கு வலி காட்டி மாயை உலகிற்கு விடைகொடுத்தது எனோ? சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய் சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்! அக்கினி உன்னுடலை மட்டுமே எரிக்கும் அன்போ எம்முள்ளத்தில் என்றும் வாழும் அயராத உழைப்பு அடிமையில்லா வாழ்வு அணையாத தீயாய் எமக்குள் எரியும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. சிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱
  16. பரவாயில்லை நன்றாக தூங்குங்கள். ஆனாலும் பரிசில்கள் கொடுக்கும் நேரத்துக்கு எழும்பி வந்தால்ச் சரி. ஊரில் திருவிழாக்களில் சிலர் தூங்குவார்கள். சின்னமேளம் என்றவுடன் துடித்து பதைத்து எழும்பி இருப்பார்கள்.
  17. பையன் சார், உங்களை இங்கு எல்லோரும் நன்கு அறிவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத, எந்த வித கணக்குகளும் போடாமல், அப்படியே நினைப்பதைச் சொல்லும், கள்ளம் கபடமற்ற ஒரு மனிதன் நீங்கள். என்னூரில் 'அவன் ஒரு அப்பிராணி......' என்று இப்படியானவர்களை சொல்லுவார்கள். ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்ல நட்பின் அடிப்படையே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.............. மற்றவர்களும் அப்படியே அவர்களாகவே இருந்து கொள்ளட்டும். மிகவும் முயன்று தமிழில் நீண்ட பந்திகள் எழுதுகின்றீர்கள்.......👍. சில சொற்களை தவிர்க்க முடிந்தால் தவிர்க்க முயலுங்கள்.....🙏. சிவப்பு புள்ளிகள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமேயில்லை, பையன் சார்............... ஒன்றை விரும்புவதை விட, வெறுப்பதற்கே மனிதனுக்கு அதிக வலு தேவைப்படுகின்றது. ஒரு மனிதன் வெறுக்கும் விடயங்களே அந்த மனிதனை அறியாமல் அந்த மனிதனை ஆட்கொள்கின்றது. வெறுப்பதனால் மனிதன் தன்னையே அழிக்கின்றான். 'விருப்பம்' அல்லது 'விருப்பம் இல்லை' என்று எதையும் சாதாரணமாக கடந்து போவது நல்ல ஒரு நிலை........ இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களின் செய்கைகளாலும், சொற்களாலும் எங்களை கட்டுப்படுத்துவது போலாகி விடும்.....🤝.
  18. நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு... 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. கறந்த பால் காம்பில் ஏறாது. 8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை. 9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான். 11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?) 17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.) 18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான். (அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்). 19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம். 20. இறுகினால் களி. இளகினால் கூழ். 21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. (யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்) 22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு. (பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது) 23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது). 24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்). 25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். (நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.) 26. காற்றில்லாமல் தூசி பறக்காது. (நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி) 27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும். (நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்). 28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது. (துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?) 29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது. (பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி) 30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது. 31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான். (தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது. 32. வாங்குகிற கை அலுக்காது. (வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.) 33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும். (என்ன சாமர்த்தியம் பாருங்கள்!) 34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா? 35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு. 36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது. 37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி. 38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது. 39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான். 40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா? 41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்? 42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்? 43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது. 44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன? 45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.
  19. என்னுடைய நேரப்படி நடுச்சாமம் 1:00 மணிக்கு ஆரம்பிக்கின்றது................. நான் நல்ல நித்திரையில் இருந்தாலும், என்னுடைய அணி உசாராகவே விளையாடும்................. இப்பவே எட்டுப் பேருக்கும் புள்ளிகளை போட்டு விடலாம்.......................😜.
  20. ஏராளன் அம்மாவுக்கு பக்க பலமாக இருங்கள். அம்மாவின் கவலையும் நியாயமானதே. காலத்தின் கொடுமை.
  21. எடுப்பது என்று முடிவெடுத்தால் எதற்குள் எடுத்தால் என்ன? நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.
  22. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பிரித்தானிய நேரப்படி நாளை 19 பெப் 09:00 க்கு ஆரம்பிக்கவுள்ளன. நாளை புதன் (19 பெப்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 08 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் 16 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் ஈழப்பிரியன் ரசோதரன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் வாதவூரான் பிரபா கிருபன் நியூஸிலாந்து ஏராளன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே நீர்வேலியான் கந்தப்பு முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  23. கவலையை விடுங்கள் பிரியன் அண்ணா. பெற்றோரின் செத்தவீட்டிக்கு போக முடிந்தும் போகாதவர்கள், பணம் அனுப்பி விட்டு இருந்தவர்கள் பலரை தெரியும். போரின் தாக்கம் பலரை பல முனையில் தாக்கி உள்ளது.
  24. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் போல் புலம்பெயர்ந்த பலருக்கு நடந்திருக்கின்றது. எனக்கும் நடந்திருக்கின்றது.அது என் வாழ்வில் தவற விட்ட கடமைகளில் ஒன்று. உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி.🙏
  25. இல்லை பையா, மூன்றாம் நபர் அல்ல. வாசகர். நீங்கள் வாசகர் பேயர், மொக்கர் என்ற ரீதியில் எழுதியாதால் வந்த எதிர்வினை அது. நீங்கள் போட்டிகளில் இருந்து விலகினால் - அது பயம் அல்ல ஆனால் என்னை பொறுத்தவரை குற்ற உணர்ச்சி. தன்நெஞ்சறிய பொய்கற்க கற்றபின் தன்நெஞ்சே தன்னை சுடும். எனக்கு தேவை கீழே உள்ள கேள்விக்கு ஆம் இல்லை என்ற பதில் மட்டுமே. நீங்கள் என் மீது வைத்த குற்றசாட்டு -நான் இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினேன், இலங்கை வென்றதும் தாயக பாடல் பாடினேன் என்பது. இது தவறான குற்றசாட்டு என்பதை ஏற்கிறீர்களா? ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல கூடிய கேள்வி இது. நான் இதை இழுத்தடிக்க விரும்பவில்லை. ஆம் இல்லை என பதில் சொல்லிவிடுங்கள். இருவரும் நகரலாம்.
  26. கொஞ்சம் பொறுங்கோ , இப்பதானே AI ரெக்னிக் வந்திருக்கு பேஸ்பால் மட்டையை கிரிக்கட் மட்டையாய் மாத்தினால் போச்சு . ......... ஆனால் என்ன அந்தக் கறுமத்தைச் செய்ய எனக்குத் தெரியாதே . .......! 😂
  27. கடைசி இடத்திற்கா முதல் இடத்திற்கா?🤡
  28. அட... பாவிங்களா.... அப்பாவி குரங்குகளை, மாட்டி விடப் பார்த்திங்களேடா...... 😂 அனுமாரின் சாபம்... உங்களை சும்மா விடாது. 🤣
  29. சட்டுபுட்டுன்னு முடிவுக்குவாங்கப்பா இப்போ போஸ்கோவை வெளியில எடுக்கிறதா வேணாமா ...? யோவ் போஸ்கோ உனக்கு எதுக்குயா இந்த தேவையில்லாத வேலை ...? மின்னாடி வெளிநாட்டில பயர் விட்டு இலங்கை எயார்போர்ட்டில் மாட்டுவானுவோ . இப்போது அந்தந்த நாட்டில் பயர் விட்டு அந்தந்த நாட்டு காவல்துறையிடமே மாட்டுறானுவோ. பயர் வேணும்னா என்னை போல் பெயரில் மட்டும் வச்சுக்கோ அதை விட்டு எதுக்கு இப்படி ஒத்தபைசா பிரயோசனமல்லாத விடயத்திற்கு போய் வாழ்க்கையை அடமானம் வைக்குற
  30. காற்றாடி - அத்தியாயம் ஆறு -------------------------------------------- சிவா அண்ணா சுகமடைந்து மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்தது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவன் தியேட்டரில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் திரைப்பட கருவிகள் இருக்கும் அறையிலேயே இருந்தான். அவன் இப்பொழுது தியேட்டரை கூட்டுவதில்லை. காட்சிகள் ஆரம்பிக்கும் போது கலரி வகுப்பின் முன் போய் நிற்க வேண்டிய வேலையையும் அவன் இப்போது செய்வதில்லை. செல்வம் என்னும் ஒருவர் இந்த வேலைகளுக்காக புதிதாக வந்து சேர்ந்திருந்தார். செல்வம் அவனை விட சில வயதுகள் கூடியவர். அதிகமாக கதைக்கமாட்டார். அவரைப் பார்த்தால் தியேட்டரில் வேலை செய்பவர் போல தெரிவதில்லை. அந்த தியேட்டருக்கே அவர் தான் முதலாளி போன்று தான் அவரின் உருவமும், உடுப்புகளும், பாவனைகளும் இருந்தன. சிவா அண்ணா வந்த பின்னரும் அவனை அந்த அறையிலே தங்களுக்கு உதவியாக அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டனர். சில வேளைகளில் அவனை மட்டும் அங்கே அறையில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போய் ஒரு பத்து நிமிடங்கள் கழித்தும் வருவார்கள். அவர்கள் சிகரெட் புகைக்கவே வெளியே போகின்றார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆங்கிலப்படம் ஒன்று தியேட்டருக்கு வந்திருந்தது. அது மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டிய படம் என்று பாடசாலைகளில், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து என்று கூட்டம் கூட்டமாக மாணவர்கள் காட்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவன் படித்த பாடசாலையில் இருந்தும் வந்திருந்தார்கள். அவனின் வகுப்பு மாணவர்களும் வந்திருந்தனர். அவன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முதன் முதலாக அவன் மனதில் ஒரு தயக்கமும், வெட்கமும் வந்திருந்தது. அவனுடன் படித்த மாணவிகளும் வந்திருந்ததே அந்த தயக்கத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு நாள் அன்று வரவேண்டி இருந்த படப்பெட்டி வரவில்லை. பல ரீல்களும் மிகவும் சேதமாகி விட்டது என்று அந்த தியேட்டர்காரர்கள் படப்பெட்டியை அனுப்பவில்லை. புதுப்படம் ஒன்று அடுத்த நாள் வருவதாக இருந்தது. இந்த விடயம் தெரியாமல் அவன் தியேட்டருக்கு போயிருந்தான். அங்கு செல்வமும், முகாமையாளரும் மட்டுமே இருந்தனர். வெளியில் ஒரு அறிவிப்பை போட்டு விட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு முகாமையாளர் வீட்டிற்கு போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார். செல்வமும், அவனும் இன்னும் சிறிது நேரம் அங்கிருப்போம் என்று தியேட்டரின் முன் மண்டபத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்கள். 'இங்கேயே எப்போதும் இருந்து விடப்போகின்றாயா............' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்வம். அவனுக்கு செல்வம் என்ன கேட்கின்றார் என்று புரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தான். 'இல்லை........... இது தான் நீ எப்பொதுமே செய்யப் போகும் தொழிலா...........' என்று கேட்டார் அவர். 'எனக்கு இது மிகவும் பிடித்திருக்கின்றது................' என்றான் அவன். 'எனக்கும் இது பிடித்திருக்கின்றது. ஆனால் இதில் கிடைக்கும் உழைப்பு ஒன்றுக்குமே காணாதே..............' 'அப்ப நீங்கள் வேறு ஏதாவது தொழிலும் செய்கின்றீர்களா........... நான் பகல் நேரங்களில் வயரிங் வேலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றேன்.' 'ம்ம்ம்............ அதுவும் ஒரு நிரந்தர வேலை என்றில்லை தானே...........' அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் நிச்சயம் பணத் தேவைக்காக இங்கே வரவில்லை என்பது முன்னரே தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது அவனை என்ன செய்யச் சொல்லுகின்றார் என்பது அவனுக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. 'நீ ஏன் கப்பலுக்கு போகக் கூடாது...........................' கப்பலுக்கு போவது என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். கப்பலுக்கு போய் வருபவர்கள் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் ஒரு ராஜா போலவே நடமாடுவதை அவன் பார்த்திருக்கின்றான். அவனின் சொந்தத்தில் கூட ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். அவர் ஊர் வந்து நின்ற போது அவர்கள் வீட்டில் அவனுக்கு ஒரு சூயிங்கம் பாக்கெட் கொடுத்தார்கள். இன்னொரு சொந்தக்காரருக்கு ஒரு சட்டை கொடுத்தார்கள். அந்த சட்டையில் உட்புறம் முழுவதும் வெள்ளையாகவும், வெளியில் பளபளப்பாக இருந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றான். இப்படியான ஒரு சட்டையை பின்னர் எங்காவது வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தான். அப்படி போய் வருபவர்களின் குடும்பமும் ஒரு திடீர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு தடவை போய் வந்தால் என்னவென்று அவனுக்கு தோன்றியது. 'எல்லோரும் கப்பலுக்கு போகலாமா, செல்வம் அண்ணா..............' 'ஆ................. எல்லோரும் போகலாம். கட்டுக் காசு கொஞ்சம் கொடுக்க வேண்டும். அதைவிட சில விசயங்களும் இருக்குது. நீ நல்லா படிக்கக்கூடியவன் என்று சொல்கின்றனர்................' 'படித்தனான் தான் அண்ணா, ஆனால் தொடர முடியவில்லை...........' என்று பழியைத் தூக்கி விதியின் மேல் மெதுவாகப் போட்டான். 'கொஞ்சம் படித்தாலே கப்பலில் ஆபிசராக, இஞ்சினியராக வரலாம்........... போக முன் படித்து சில சேர்டிபிக்கட்டுகளை எடுத்தால், அங்கு போய் கடகடவென்று முன்னுக்கு வந்துவிடலாம்....................' செல்வம் அண்ணா தொடர்ந்தும் நிறைய தகவல்களைச் சொன்னார். தன்னுடைய சித்தப்பா ஒருவர் கப்பல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருப்பதாகச் சொன்னார். அவரின் சித்தப்பா மூலம் அவனுக்கு அவர் உதவி செய்வதாகச் சொன்னார். அவன் கொஞ்சம் திரிகோண கணிதம் படித்து வைத்தால் நல்லது என்றும் சொன்னார். அந்த ஒற்றை வசனம் அவனை தூக்கி அடித்தது. அவன் தன் கணிதப் பிரச்சனையை அவரிடம் இன்னும் சொல்லவேயில்லை. அவரே தொடர்ந்து ஊரில் இந்த அடிப்படைகளை ஒருவர் படிப்பிக்கின்றார் என்று சொல்லி, அவனை அங்கே போகச் சொன்னார். ரவி அண்ணா என்னும் அந்த ஆசிரியர் மிகவும் மெல்லிய குரலில் பாடத்தை ஆரம்பித்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் இடம் அவனின் நண்பன் ஒருவனுடைய வீட்டின் பின்பக்கம் தனியாக இருக்கும் ஒரு அறை. அங்கு ஏற்கனவே பல மேசைகளும், வாங்கில்களும் போடப்பட்டிருந்தன. நண்பனின் அப்பா ஒரு ஆசிரியர். அவர் ஒரு காலத்தில் இங்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அவர் பாடசாலையை தவிர வேறு எங்கும் படிப்பிப்பதில்லை. பெரும்பாலும் கிரேக்க எழுத்துகளில் பாடம் போய்க் கொண்டிருந்தது. (தொடரும்.........................)
  31. எல்லாவற்றையும் பார்த்த பின் எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால்.............. ஒன்றுமே தோன்றவில்லை, பயமாகத்தான் இருக்கின்றது................. ஐந்து வருடத்திற்கு பின் வந்து ஏதாவது விளக்கம் கேட்டாலும் என்று இப்பவே தயாராக இருக்க வேண்டும் போல..................🤣.
  32. இந்தியா சென்று வரும் தெரிந்தவர் சொன்னார். இந்தியாவில் இருந்த ஒரு தொழிலாளி குடும்பம் ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் கிடையாது அதனால் வேறு வேலை செய்து வாழ்க்கையை கொண்டு சென்றனர் உடல் இயலாமல் வந்துவிட்டது. கடுமையான வறுமை. வேறு வழி இல்லாமல் கணவன் 2 மகள்களும் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் கேட்கவே கடினமாக இருந்தது. இந்தியாவின் கேவலம் தெரியும் உறவே
  33. இந்த நிலைவரக்குடாது எண்டுதான் நான் ஊரில் இருக்கும் முடிவை எடுத்திருப்பது..
  34. பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுப்பதற்க்கு புண் தேவைதான். அம்மண்ணின் மக்களிடம் கேட்டு பாருங்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு வட்டுவாகல் பாலம் எவ்வளவு முக்கியமானது என்று.
  35. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான்!
  36. நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.💐
  37. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் அண்ணை, வளத்துடன் வாழ்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.