Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்18Points3061Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்9Points38770Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19134Posts -
அக்னியஷ்த்ரா
கருத்துக்கள உறவுகள்6Points1962Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/25/25 in Posts
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
8 pointsமூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.8 points
-
விதியற்றவர்
6 pointsஅவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.6 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவும் இடையேயான ஏழாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை): தொடர்ந்தும் @alvayan முதல்வராக நிலைக்கின்றார்!4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன செம்பாட்டான், இதுக்கே இவ்வளவு ஆச்சரியப்பட்டால்? நானெல்லாம் ஜெயசூரியா, களுவித்தாரன, டான் அனுராசிரி, ரஸ்ஸல் ஆர்னோல்ட், அவிஷ்கா குணவர்தானா, போன்றோருடன் எதிரணியில் கிரிக்கெட் விளையாடியே இருக்கிறேன். அதெல்லாம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது!!3 points
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
3 pointsஏன் இவர்களே பெரிய ஆளுமைகள் தானே தனி கட்சி தொடங்கி தமிழ் தேசியத்தை அப்படியே தூக்கி நிறுத்தியிருக்கலாமே. பெயின்டு கண்ட்ரக்டர் இப்ப கழகத்திற்கு நாதகவில் இருந்து உருவி கமிஷன் பார்ப்பது போல் தனது சொந்த கட்சிக்கு தரமான தலைகளை உருவி தமிழ் தேசியத்தை நிலை நாட்டி திராவிடத்திற்கு தர்ம அடி கொடுத்திருக்கலாம். அதற்கு பசை வேணும். இங்கே ஒரு தூய எண்ணமும் இல்லை, தமிழ் தேசிய சிந்தனையும் இல்லை. நாதக மேடையில் காட்டுக்கத்து கத்தி ஊடக வெளிச்சம் பெற்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டால் டீல் பேசி நல்ல கொழுத்த அமெளண்டை வாங்கிக்கொண்டு செட்டில் ஆக வேண்டியதுதான். தமிழ் தேசியம் என்பது இப்போது அது வேற வாய் இது நாற வாய் என்பதிலே தான் வந்து நிக்கிறது. தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இதுதான் தற்போதைய தமிழ் தேசியம்.3 points
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
2 pointsஅதுவே தான் நிழலி..................... இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன். 🤣.............. அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம். நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மெல்லிய குளிர் காலத்தில் ஒரு பிறாற் வூஸ்ட்டும் (சென்வ் அல்லது கெச்சப்) உடன் சாப்பிட கொண்டெழுப்பும்.😋2 points
-
வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
பிறகு ஏன் இவருக்கு இந்தக்கேள்வி, இரட்டை நிலைப்பாடு? நீங்கள் தமிழரை என்ன செய்தீர்கள்? அது என்ன திடீரென்று தமிழர்மேல் இவ்வளவு பாசம், கரிசனை, கவலை, முதலைக்கண்ணீர்? அனுரவை பிழையானவர் என விமர்சித்தால், நீங்கள் செய்தவைகள் மறந்து, மறைந்து விடும் என்கிற நினைப்போ? அனுரா தமிழருக்கு அதிகாரம் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால் அல்லது திஸ்ஸ விகாரையை எடுக்கப்போகிறேன் என்று சொன்னால் போதும், உங்கள் சுய ரூபம் வெளிப்படும். அதுவரை நீலிக்கண்ணீர் வடியுங்கள், நாங்கள் அதை நம்பப்போவதில்லை.2 points
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
அமைச்சர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றார். இதற்கு முதல் இருந்தவர்கள் எல்லாம் இந்த விடயத்திலும் இந்தியாவிடம் பம்மிக் கொண்டே இருந்தவர்கள். இந்த மீனவர் பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வு, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் விடுவதே ஆகும்.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் வயது போகப் போக, அப்பாக்கள் மீது பெரிய அபிமானமே பிறக்கும் என்கின்றார்கள். 'என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே தெரியும்.......' என்ற ஒரு சிறுபராயம், பின்னர் 'அவருக்கு ஒன்றுமே தெரியாது..........' என்ற இளையபராயம், கடைசியில் 'அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருந்தது........' என்று ஒரு சுற்று சுற்றி வந்து விடுவோம் போல......... ஆனாலும், ஊரிலேயே மட்டுமே வாழ்ந்த என்னைப் போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் வேறுபட்டும் இருந்தது. நான் விளையாடுவேன் என்றே வீட்டில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் எந்நேரமும் கிரவுண்டிலேயே இருந்தேன். வீட்டில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர், உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் ஒரு தகராறு வந்து, வீடு வரை விசயம் போன பின் தான், 'அட................. இவனும் விளையாடுகின்றானா...........' என்று முழித்தார்கள்................ அந்தப் பிரச்சனையிலும் 'என்னவோ................... உன் இஷ்டம்..........' என்று விட்டுவிட்டார், அப்பா......... அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருக்கின்றது............🤣.2 points- அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
புலிகளும் முஸ்லிம்களும் 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தனி பண்பாடு உள்ளதை புலிகள் ஏற்றதோடு அவர்கள் தனி இனம் என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.2 points- காளியம்மாள் .... கழகத்துக்கு?
2 pointsகனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மாதிரித்தான். இலங்கையில் அரச செலவில் அல்லது மக்கள் வரிப்பணத்தில் நல்லா படிச்ச என்னைப் போன்றவர்களை (அடப்பாவி நீயுமா என உங்கள் Mind Voice சொல்வது கேட்குது 😆 ) தங்கள் நாட்டுக்கு கவர்ந்து இழுத்து இறங்கியவுடனேயே நிரந்தரவதிவுடமை கொடுப்பது போலத்தான் இதுவும். நாங்களும் படிச்ச பிறகு, உந்த நாடு சரிவராது என்று இலங்கையை விட்டு கிளம்பி போனது போலத்தான் காளியம்மா மற்றும் மிச்ச ஆட்களும்.2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மழை குழப்பியதால் இரண்டில் ஒன்று வெளியே போகும் ஏனெனில் இங்கிலாந்து தென்னாபிரிக்காவையும், ஆப்கானிச்தானையும் வெல்லும்💪🦾 அல்வாயனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! கீழே இறங்காமல் சறுக்குமரத்தில் பணமுடியை எடுக்கப்பார்க்கின்றார்🤣2 points- காளியம்மாள் .... கழகத்துக்கு?
2 pointsபார்க்கலாம்.....காளியாத்தாவாக தொடர்கிறாரா இல்லை கழகத்தில் கரைகிறாரா என்று. அண்ணனுக்கு ஏற்ற தங்கை இனி தம்பிக்கேற்ற அக்கா2 points- சிரிக்கலாம் வாங்க
2 points2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனப்பிரச்சனை வேறு பல தொல்லைகளை தந்தது ஆனால் விளையாட்டை விட அது காரணம் இல்லை. ஒரு கட்டத்தில் விளையாட்டுத்தான் வாழ்க்கை, ஓ எல் மட்டும் படித்தால் போதும், அதன் பின் விளையாட்டில் முழு நேரக்கவனம் - ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்வது மேர்கண்டையில் கிரிகெட், கிளப் கிரிகெட் ஆடுவது. என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தேன். இதோடு பேச்சு, விவாத போட்டிகள், புதிதாக ஆரம்பித்த அரசியல் என ஒரு 15/16 மாதம் புத்தகத்தை தொட்டு கூட பார்க்கவில்லை. ஆண்டு 11 முதல் தவணை பரிட்சையில் சராசரி 42%!!! கணிதத்துக்கு நூற்றுக்கு ஐந்து 😜. அப்போ யுத்த பகுதியில் இருந்த தந்தையார் உடனடியாக கொழும்பு வந்து வெள்ளவத்த கடற்கரையில் பாறைகளில் அமர்ந்து பேச்சுக்கள் ஆரம்பமாகின. அநேகமாக தன்னோடு ஊருக்கு கூட்டி போவதே அவர் தெரிவாக இருந்தது. பேச்சுவார்த்தை முடிவில், டிசெம்பர் சோதனை வரை கிரிகெட்டை தள்ளி வைப்பது என்றும் அதன் பின் மீள விளையாடுவது என்றும் முடிவாகியது. அடுத்து துரதிஸ்டவசமாக அல்லது அதிஸ்டவசமாக ஓ எல் பரிட்சையில் மிக திறமான பெறுபேறுகளை எடுத்தேன். தமிழ் பட ஹீரோ ஒருபாட்டில் பணக்காரன் ஆவது போல. பிறகென்ன..புறச்சூழல், நிலமையின் அழுத்தம், இன்னபல காரணிகள் சேர்ந்து, கிரிகெட்வீரனை அப்படியே அமிழ்த்தி ஏல் எல் டியூசன், பாஸ்பேப்பர், என வாழ்க்கையின் ஓட்டம் மாறி விட்டது. உண்மையை ஒத்து கொள்ளத்தான் வேண்டும் - ஆண்டு 11 முடிவில் எனக்கு கூட எனக்கு விளையாட்டை விட படிப்பு கொஞ்சம் இலகுவாக வருகிறது என்பதும், ஒரு சராசரிக்கும் மேலான வாழ்க்கையை அமைக்க படிப்பே இலகுவான வழி என்பதும் ஓரளவு புரியத்தொடங்கியது. ஆண்டு 12 இல் நான் கிளப்புக்கு திரும்பி போகவே இல்லை. வாவ்…நான் ஆர்னோல்டுடன் மென்பந்து விளையாடி இருக்கிறேன். தெகிவளை பிரேசர் கிரவுண்டிற்கு அருகில் அவர் வீடு, 1994 சென் பீட்டர்ஸ் கேப்டன் அவர். பிரெசிடென்ஸ் கப் வென்றார்கள். அப்போ, வார இறுதியில் அவர் விளையாடும் அணியில் ஆள் போதாது என்றால் சேர்த்துக் கொள்வார்கள்.2 points- கருத்து படங்கள்
2 points- மூன்று கோழிக்குஞ்சுகள்
2 pointsஎன்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே. எனக்கு வீட்டிலும் இல்லை. போன பாடசாலையிலும் இல்லை. நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?2 points- கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
ஹி, ஹி. அதொன்றுமில்லை, சுமந்திரன் தமிழர்களால் ஒதுக்கப்பட்டு அதல பாதாளத்திற்கு போய் விட்டார். அதை தூக்கி நிறுத்த எடுக்கப்படும் முயற்சி. அப்படி தமிழருக்கு என்ன நன்மை செய்துவிட்டார் சுமந்திரன் மக்கள் அவரை தங்கள் பிரதிநிதியாக தெரிவதற்கு? அதற்கான கூலியை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரோ போக மாட்டேனென அடம்பிடித்து இனத்தை இரண்டு படுத்துகிறார். அவர் இனத்துக்கு எதிராக என்ன துரோகம் செய்கிறாரென அவருக்கும், நன்மை பெறுவோருக்கும் தெரியும். அதனால் அவர்கள் தாம் செய்வதை மற்றவர்மேல் பழிபோட்டு நிஞாயப்படுத்துகின்றனர். அவர் முறையிடவில்லையாம், பாதுகாப்பு கொடுத்தார்களாம். அவுஸ்ரேலியாவில் உள்ள ஒருவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாராம், ஆனால் சுமந்து அங்கே எந்த பாதுகாப்புமில்லாமல் போய் வந்திருக்கிறார். அப்போ இந்த புலனாய்வு அவரை போகவேண்டாமென்று தடுக்கவில்லை. நாட்டிலே இனத்துக்கெதிரான கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிக்கிறார், கூட்டங்களில் கலந்துகொள்கிறார், தடுக்கவில்லை. ஏன் முஸ்லீம் படுகொலையாளிகள் சுட்டுக்கொன்ற போலீசாரை, புலிகள் சுட்டுக்கொன்றதாக அப்பாவி இளைஞரை கைது செய்தது புலனாய்வு. உயிர்த்த ஞாயிறு குண்டுச்சம்பவம் நடைபெறப்போகிறது என பல எச்சரிப்புகள் வந்தபோதும் தடுக்க முடியாத வகையறா புலனாய்வு, சுமந்திரனை பாதுகாக்கிறதாம். ஸீரோவான சுமந்திரனை கீரோவாக்க முயற்சிக்கிறார் பாவம் ஒருவர். சிங்களத்துக்கு கழுவ வேண்டும், அதற்கு தமிழர் வாக்களிக்க வேண்டும். அவர் வந்த வேலை, கொடுக்கப்பட்ட வேலை முடிந்து விட்டது, இனி ஓய்வு பெற வேண்டியவர் அவர். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால்: சிங்களவருக்கு பயம், வெறுப்பு வருகிறதாம் என்று சொல்லும் இவர், தமிழரசை தனது கைக்குள் கொண்டுவர ஏன் முண்டியடிக்கிறார்?2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கனக்க பிரபலங்கள் இந்தக் களத்தில இருக்கினம் போல. சச்சின் வந்தாக, குலுஸ்னரோட பாத்தாக, ஜெயசூரியாவோட கும்பிட்டாக..... இப்பிடிச் சொல்வி எங்களுக்கு எரிச்சலூட்டுறதே வேலையாப்போச்சு. 😛2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். நேரில் பார்க்கும் போது வேறு விதமாக இருக்கும். இந்த இங்கிலாந்து வீரர் பென் டக்கட் - ஸ்டம்பசை விட கொஞ்சம் வளர்த்தி. அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் டிவியில் அப்படி தெரியாது. இப்படி பல சுவாரசியங்கள் உள்ளன. நான் இலங்கையில் ஒரு first class கிளப்பின் 17 வயதுக்கு கீழ் பட்ட அணியில் 1st change bowler. அப்போ எனக்கு 15+தான். இலங்கை அணி, இந்திய, மே.இ தீவுகள், தெ.ஆ, இங்கிலாந்து பயிற்சியின் போது, நெட்சில் இல்லாமல் சிலசமயம் கிரவுண்டில் பேட், போல் பண்ணுவார்கள் அப்போ பீல்டிங் நாங்கள்தான். அதே போல் மேட்சில் டிரெசிங் ரூமுக்கு அடுத்த வரிசையில் எங்களுக்கும் பேர்சிக்கும் இருக்கைகள் இருக்கும். அசாருதீனும் பேர்சியும் ஆளோடு ஆள் தனகுவார்கள். வூக்கேரி ராமன் என ஒரு தமிழக வீரர் இந்தியன் ஓப்னராக இருந்தார் - மேட்ச் நடக்கும் போதே டிரெசிங் ரூமில் இருந்து தொடர்ந்து சிகரெட் பத்தி கொண்டிருப்பார். இந்திய அணியின் ஸ்பொன்சரும் வில்ஸ் சிகெரெட். 1996 முந்தைய கிரிகெட்டில் பணம் பாயாத காலங்கள் அவை. வீரர்கள் மிக இயல்பாகவே இருந்தார்கள். தாஜ் சமுத்திரா ஹோட்டல் போனால் மிக சாதாரணமாக காணலாம். இலண்டன் வந்த பின், ஒரு நாள் அரவிந்தவை பவுண்ட இலாண்ட் எனும் மலிவு விலை கடையில் கண்டேன். கதைக்கவில்லை. ஆனால் எனது பகுதியில் குடியேறியுள்ளதாக சிலர் கூறினர். இதுதான் பைனலாக வரக்கூடிய மேட்ச்சாகவும் இருக்க கூடும். தெ. ஆ வெல்ல வாய்ப்புகள் உண்டு. உள்ளதில் அதிக மிரட்டல் உள்ளதும், balance உள்ளதும் அவர்கள்தான்.2 points- பாட்டுக் கதைகள்
1 pointமனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
1972 /73 களில் பத்திரிகைகளில் ஒர் செய்தியை எழுத்து கூட்டி வாசித்த ஞாபகம் ...வருகிறது.. "பயங்கரவாதிகள்(இன்றைய ஜெ.வி.பியினர்) ஆட்சிக்கு வந்தால் 60 வயசுக்கு மேல் உள்ள வயோதிபர்களை சுட்டு கொலை செய்து விடுவார்கள்" ...என அந்த காலத்தில் இருந்த பொலிஸ் ஊடக் பேச்சாளர்,மற்றும் ஊடகங்கள் செய்தியை பிரசுரித்து கொண்டிருந்தார்கள் ..அதை நானும் நம்பவில்லை காரணம் எனது தந்தையும் அதை சொன்னார் அதிகார வர்க்கம் இப்படித்தான் சொல்லும் ஆனால் அவங்கள் அப்படி செய்ய மாட்டாங்கள் எண்டு... இன்றைய இளைய ஜெ.வி.பி யின் சில கருத்துக்களை பார்க்கும் பொழுது மிருகங்களில் தொடங்கி மனிதர்களுக்கு வருவினம் போல தெரிகின்றது ... அரிசிக்கு நாய் தேங்காய்க்கு ஈ மின்சார தடைக்கு குரங்கு ஊழலுக்கு முன்னைய அரசு கல்வி சீர்குழைவுக்கு பிரித்தானிய ஏகாதிபத்தியம் தேசிய பாதுகாப்புக்கு பாதாள உலகம் தாங்க முடியல்லடா1 point- வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
இப்போ பயங்கரவாத சட்டத்தை இல்லாமல் செய்வோம் என பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்தினால்( ஒரு பேச்சுக்கு) பல்டி அடித்து எதிராக வாக்களிக்க கூடியவர்கள் தான் இவர்கள். இப்போ நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்.1 point- அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
நல்ல தகவல்கள் ......அப்படியென்றால் ஒரே மொழி பேசுகிறவர்கள். பல இனங்கள் இருக்க முடியுமா??? இது மற்ற மொழிகள் பேசுவர்களிடம். இருக்கிறதா??? சிங்கள மொழி பேசுவோர் ஒரு இனமா ??? இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட இனமா?? தமிழ்நாட்டில் முஸ்லிம்கள். தமிழ் இனம். தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் .....மற்றும் தமிழர்கள் வாழும் எல்லா நாட்டிலும். தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழ் இனமே தான் ஆனால் இலங்கையில் மட்டுமே தமிழ் பேசும் முஸ்லிம்கள். ஒரு தனி இனம் குறிப்பாக அவர்கள் தமிழ் இனமில்லை 🙏.1 point- அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
சரியாகச் சொன்னீர்கள். இதனால் அவர்கள் தமது தனித்துவம் எனக் கருதிய அனைத்தையும் புலிகள் ஏற்றனர். இல்லை 50 ஆண்டுகள் இல்லை... அதற்கும் மேல். நானறிந்த வரை இலங்கை பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு நிகழ்வு நடந்ததாம். அப்போதைய அமைச்சரவையில் பொன்னம்பலம் இராமநாதன் (இவர் என்று எனது நினைவில் உள்ளது) முஸ்லிம்களை தமிழர்கள் என்றபோது முஸ்லிம்கள் கடும் போர்க்கொடி தூக்கி தாம் தனி இனம் என்றனர் என்பது வரலாறு. இவர்கள் இவ்வாறு செய்வதற்கு ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்த சலுகையே காரணமாகும். இந்தத் தனி இனம் தொடர்பில் ஒரு வாதாட்டம் ஐ.பி.சி தமிழில் முன்னர் ஒரு காலத்தில் ஒரு ஒளிபரப்பானது என்பது கூடுதல் தகவல்.1 point- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் அரசியல்வாதியின் கோமாளிப் பேச்செனக் கடந்து போகலாம். இவர் அப்படியல்ல! இவர் தான் வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் மிருக வைத்திய மருந்தகம் நடத்தி வந்த "சக்தி டாக்டர்" எனப்படும் நிஜமான மிருக வைத்தியர்😂. அத்தோடு வவுனியாவில் சில அரிசி ஆலைகளும் இவரது குடும்பத்தினரிடம் முன்னர் இருந்தன, இப்போது என்ன நிலை எனத் தெரியவில்லை. பல்கிப் பெருகியிருக்கும் நாய்கள், மனிதர்களோடு போட்டி போட்டு கடைக்குப் போய் அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதால் அரிசித் தட்டுப் பாடு வந்திருக்கிறதெனச் சொல்லும் மிருக வைத்தியர், அந்தச் சமூகத்திற்கே ஒரு அவமானம்!1 point- மூன்று கோழிக்குஞ்சுகள்
1 pointஅந்த மூன்றாவது கோழிக்குஞ்சு யார். தொலைந்து போன அந்தக் கோழிக்குஞ்சு யார். ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.😀 பெண்களுடன் படிக்கவே இல்லை என்று சொல்லும் பொழுதே புரிகிறது.😉 நந்தன் எப்போதும் பூடகமாகவே பதில் அளிப்பார். 😃1 point- இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
ஆம், கொழும்புத்துறையை தவற விட்டிட்டேன். சமருக்கு இங்கும் பொழுது போக்குக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சைக்கிள் ஓடுகின்றனன் ( சாரத்தோடு அல்ல ) , அதனால் என்னவே பெரிய பெரிய கஷ்டமாக தெரியவில்லை.1 point- காளியம்மாள் .... கழகத்துக்கு?
1 pointஉங்கள் உண்மையான நாம் தமிழர் வளர்ச்சி பற்றிய கவலையில் 😅 நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Wurst களின் சுவை…. வித்தியாசமாகவும், மிக அருமையாகவும் இருக்கும். பொரிக்க, அவிக்க, கிறில் பண்ண, அப்படியே சாப்பிட என்றும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனிச் சிறப்பாகவும் Wurst வகைகள் உண்டு.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பல வருடங்களின் முன், இங்கு ஒரு வீடில்லாமல் வாழ்ந்த (homeless and then foster homes) பிள்ளை ஒன்று Princeton பல்கலைக்கு தெரிவானது. இங்கு Princeton போன்ற சில பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விசயம். ஆனால் இந்தப் பிள்ளைக்கு கிடைத்தது. உங்களின் அப்பா, அம்மா மேல் எந்தக் கோபமும் இல்லையா என்பது போல ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் இடையில் பிரிந்து போக, இந்தப் பிள்ளை தெருவிற்கு வந்திருந்தது. 'அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள்.......' என்று சுருக்கமான ஒரு பதிலை இந்தப் பிள்ளை சொன்னது. நாங்கள் ஊரில் வளர்ந்த காலகட்டமும் ஒரு நிலையில்லாத காலம் தானே....... எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் சிரமப்பட்டுப் போனார்கள் பல பெற்றோர்கள். பல விடயங்களில் எங்களை அப்படியே விட்டுவிட்டார்கள்...................1 point- மூன்று கோழிக்குஞ்சுகள்
1 point🤣................ நீங்கள் பரவாயில்லை, அண்ணா.......... அக்காவை உங்களுக்கு முன்னரே தெரியும் தானே........ நாங்கள் பலர் உலகத்தின் ஒரு பக்கம் என்னவென்றே தெரியாமலேயே வளர்ந்தோம்..................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முரளி, சதீசன் (சென்ஜோன்ஸ்), குகன் (கொக்குவில் ஹிந்து), திலீபன், பார்த்தி, புருடி (jaffna ஹிந்து) எல்லோரும் பீட்டர்சன்ஸ் கிளப்பிற்காக செகண்ட் டிவிசன் கிரிக்கெட் விளையாடினோம்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@alvayan மீண்டும் முதலமைச்சராக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முரளி (செஞசோன்ஸ்? நெட்டை),ப்ருடி நியாபகம் உள்ளது. ப்ருடி அப்போ கொழும்பு இந்துவில் பயிற்றுவிப்பாளர் ஆகி இருந்தார் என நினைக்கிறேன். ஏனையோரை கண்டால் தெரியலாம். அப்போ நான் ரொம்ப சின்ன வயது. அங்கே தொத்தி கொண்டு இருப்பேன். அநேக நாட்கள் பீல்டிங் மட்டும் கிடைக்கும் 😀.1 point- அர்ச்சுனா ராமநாதனின் இனவாத கருத்துக்கள் பாராளுமன்ற உரை குறிப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்
முஸ்லிம்கள் தாங்கள் ஒரு தனிப்பட்ட இனம் என கூறிக்கொள்வது 50 வருடத்துக்குள் தான் இருக்கும். அதெப்படி இச்சிறிய காலத்தில் தனிப்பட்ட இனமானார்கள்?1 point- காளியம்மாள் .... கழகத்துக்கு?
1 pointஇங்கே எனது கேள்வி இவர்கள் அண்ணன் திருடன் என்று கன்டுபிடித்து வெளியேறும்போது தமிழ் தேசிய பரப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மாறியபின்னர் தான் வெளியேறுகிறார்கள். இன்னுமொரு வகையில் அதாவது ஆளுமைகளாக புகழ் வெளிச்சம் தங்கள் மீது பட்டபின்னர்தான் அண்ணனை திருடன் என்றே கண்டுபிடிக்கிறார்கள். இவர்கள் வெளியேறும்போது இவர்களது தமிழ்த்தேசிய பரப்பிலான அறிமுகம் என்பது அண்ணன் நாதகவை ஆரம்பித்தபோது அவருக்கு இருந்த அறிமுகத்தை விட அபரிமிதமானது. நிற்க, இவர்கள் ஜனநாயக பொதுவெளியில் ஒருகட்சியை ஆரம்பிப்பது என்பது டெலோ புளொட்டில் சேர்ந்த இளையவர்கள் புதிய இராணுவ இயக்கம் கட்டுவதை விட மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். நான் விளங்கிக்கொண்ட வரையில் நதகவில் சேர்வது கழகத்தில் உள்ள கடைக்கோடி, நடுக்கோடி ,முதற்கோடி தொண்டர்களை ஓவர்டேக் செய்து இலகுவாக முன்வரிசை ஆசனத்தை பிடிக்கும் ஒரு Smart & short route. இந்த ஆளுமைகள் எல்லோருமே கழகத்தில் இருந்து தங்களது கன்னிப்பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்றும் பசைவாளி போஸ்டருடன் வாழ்க ஒழிக கோஷம் போடும் ஒரு கடைநிலை, நடுத்தர உபிக்களாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த ஆளுமைகளின் இறுதிச்சரணாலயம் அவர்களது நோக்கங்களை தெளிவாக காண்பிக்கிறது. தமிழ்த்தேசியத்தை பயன்படுத்தி வயிறு வளர்க்கும் சீமானை எதிர்த்து வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் நாம் அதே தமிழ்தேசியத்தையும் சீமானையும் பயன்படுத்தி வயிறுவளர்க்கும் இவர்களது தவறுகளை சீமான்மீதே சுமத்தி நகர்கிறோம்.1 point- ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
அதேதான்! போனதடவை உள்ளூராட்சி தேர்தல் என அறிவிக்கப்பட்டபோது, தமிழரசு தனித்து போட்டியிடும், மற்றயவர்கள் தாம் போட்டியிட்டு தேர்தலின் பின் ஒன்று சேரலாம் என சட்டாம்பி பத்திரிகைகளுக்கு வஞ்கமாக அறிவித்தார். ஆனால் கூட்டுக்கட்சிகளுக்கு அறிவிக்காதது ஏன்? உண்மையிலேயே பிற கட்சிகளுக்கு விழும் வாக்கை தடுப்பதாக இந்த முடிவு எடுத்திருந்தால், அதை மற்றவர்களுக்கு விளக்கி கூறுவதில் என்ன தப்பு இருக்கிறது? தமிழரசுக்கு அதிக வாக்கு விழும், மற்றய கட்சிகளை கழற்றி விடவே இந்த முடிவு எடுத்தார் சுமந்திரன். இப்போ அவர்களை சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். தங்கள் முன்னைய முடிவை தவறாக புரிந்து கொண்டார்களாம் என இந்த சிவஞானம் கருத்து சொல்கிறார். பிரச்சாரங்களில் தங்களை விமர்ச்சிக்க கூடாதாம். தலைமை கட்சிக்கு கட்டுப்பட்டு செயற்படவேண்டுமாம். எதற்கு? மற்றயவர்களை தேர்தலின் போது விமர்ச்சித்தவர் யார், சுமந்திரன்தானே? இப்போ மற்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இவர்கள் யார்? நிற்க, கஜேந்திரன், செல்வத்தையும் சிறிதரனையும் சந்தித்து ஒன்று சேர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். கஜேந்திரனோடு சேர்வதையோ அல்லது கஜேந்திரனை இணைப்பதையோ சுமந்திரன் விரும்ப மாட்டார். காரணம் தன்னை விட திறமையானவர் வந்தால் தான் சர்வாதிகாரம் பண்ண முடியாது. அதே நேரம் சிறிதரனையும் ஓரங்கட்ட வேண்டும். எல்லோரும் இணைந்தால், தாங்கள் தனித்து விடப்படுவோம் என்பது நன்றாகத்தெரியும். ஆகவே அவர்களை தவிர்த்து மற்றவர்களை இணைக்க முயற்சிக்கிறார். சிவஞானம் எந்த முடிவும் எடுக்க வல்லமையற்றவர், சுமந்திரனின் ஊதுகுழல். அவர் சொல்வதை, தான் சொல்வதுபோல் வாயசைக்கிறார். பத்திரிகையாளர் கேட்ட பல கேள்விகளுக்கு மறுமொழி இப்போ கூற முடியாது என்றுவிட்டார். டக்கிலஸை சேர்க்கிற எண்ணமுமுண்டு. இந்த கூட்டு ஊர்போய் சேராது. ஆகவே இவர்களோடு சேர்வதை பலமுறை யோசனை செய்யவும். சுமந்திரன், சிவஞானம், சத்தியலிங்கம் உள்ள கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.1 point- ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
சிவஞானத்துக்கு... தோல்விப் பயம் வந்திட்டுது. அதுதான்... ரெலோவுக்கு அழைப்பு விடுக்கிறார். சுமந்திரனை... மடியில் கட்டி வைத்துக் கொண்டு இருந்தால், தமிழரசு கட்சி குப்புற விழுந்து, மண் கவ்வுவது உறுதி. 😂1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிருபன் ஜீ....நான் என்னுடைய எல்லாப் புள்ளிகளையும் உங்களுக்கே உரித்து எழுதி வைத்து விடுகின்றேன்...உங்களுக்கு இல்லாததா..🙃1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டி முடிய 60 புள்ளிகள் வித்தியாசம் வந்தாலும் வரலாம்😜1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வரட்டும் அண்ணா இவர்களும், இந்த வடிவான பிள்ளைகளும் நிற்கும் படங்கள்................ அதே படத்தில் இவர்களை துக்கிப் போட்டு, எங்களைப் போட்டு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.............🤣. கொஞ்சம் சகிப்புத்தன்மை வேண்டும் தான் போல.................😜.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புலவருக்கே உந்த கெதி எண்டால்…நான் சொன்ன கதையளுக்கு😜. அப்போ படம் எடுப்பதென்றால் அப்பாவிடம் கமெராவை கேட்டு வாங்க வேண்டும், அதில் ஒரு கீறல் பட்டாலும் வீட்டை போக ஏலாது 😀. ஏனோ ஆட்டோகிராப் வாங்க தோன்றவில்லை. ஆனால் கிளப் மெம்பர்சிப் கார்ட்டை இன்றளவும் பாதுகாத்து வைத்துள்ளேன். நாளைக்கு கோஷானும் டேவிட் வார்னரும் கதை சொல்கிறேன் 😂. இப்ப எல்லாரும் அச்சா பிள்ளையா போய் தூங்குவீங்களாம்😁.1 point- கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
என்னப்பா இவர் சொல்லுறார் ... போர் போக்கை பார்த்தால் சஞ்ஜீவ் படுகொலைக்கு காரணம் புலம் பெயர் தமிழர்கள் என கேசை திசை திருப்பி எழுதுவார் போல கிடக்கு1 point- 'யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும்" - மக்கள் போரட்ட முன்னணியின் ரஜீவ்காந்
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 01:09 PM இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை செய்துள்ளார்கள்.கொலைசெய்துள்ளார். இப்படி பல தடவைகளில் பல தடவைகளில் இப்படியான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நாங்கள் கூறவில்லை ஏற்கனவே அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்றத்தில் ' ஒருவர் ஆயுதம் இருக்கென்று கூறுவார் அவரை அழைத்து செல்வார்கள்,அவர் அந்தஆயுதத்தை எடுத்து பொலிஸாரை சுடுவதற்காக முயற்சி செய்வார் பின்னர் பொலிஸார் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுட்டார்கள் என்று இந்த கதையை கூறுவார்கள்,என தெரிவித்திருந்தார். இந்த கதை வந்து பல தடவைகள் தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்ட ஒன்று, இது பொய்யான கதை என்பது அனைவரும் அறிந்தது,பலரும் பல தடவைகளில் இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரும் எப்படி ஆயுதம் இருக்கின்ற இடத்திற்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்கள்?அழைத்து சென்றார்கள் என்பது தொடர்பில் பூரண விளக்கமில்லை. 2023ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கிலே குற்றவாளிகள் யாரையாவது எந்த இடத்திற்காக கொண்டு செல்லவேண்டும் என்றால் அதனை வீடியோ வடிவிலே பொலிஸார் பதிவு செய்யவேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆதாரம் இருக்கவேண்டும், எங்கே கூட்டிச்சென்றார்கள் என்ன நடந்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் இது எதுவுமே,செயற்படுத்தப்படவில்லை இவர்கள் குற்றவாளிகள் தான? இல்லையா? எதற்காக கொலை செய்தார்கள் யாரின் தூண்டுதலின் பேரில் கொலை செய்தார்கள் என்ற விடயங்கள் என்பது எல்லாம் தெரியவராமலே இருவரும் உயிரிழந்துவிட்டனர். பொலிஸாரை பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதாகயிருந்தால்,நாளை எங்களில் எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் செல்லவும் நீதிமன்றம் செல்லவும் குற்றவாளியென்றால், அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குமான அனைத்து சட்டதிட்;டங்களும் இலங்கையில் இருக்கின்றது. இவ்வளவு அவசரஅவசரமாக பொலிஸார் இவர்களை கொலை செய்வதற்கான காரணம் என்ற கேள்வியை அரசை நோக்கி நாங்கள் எழுப்புகின்றோம். இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக பல சந்தர்ப்பங்களிலே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. எங்களை போன்ற செயற்பாட்டாளர்கள் பல தடவை கைதுசெய்யப்பட்டிருக்கின்றோம், எந்த வித பாரிய வன்முறையிலும் ஈடுபடாத எங்களையே கைவிலங்குகளை போட்டுத்தான் அழைத்துச்செல்வார்கள். ஆனால் இரண்டுபேர் கொலைகளை செய்த இரண்டுபேரை எந்த கைவிலங்கும் இல்லாமலா அழைத்து சென்றார்கள் என்ற கேள்வி எங்களிற்குள்ளது. அதுமட்டுமல்லாது தொடர்ச்சியாக எத்தனை காலம்தான் ஆயுதத்தை காட்டஎடுத்துச்சென்றார்கள் ஆயுதத்தை எடுத்து தங்களை சுட முயன்றார்கள் அவர்களை நாங்கள் கொலை செய்தோம் என தெரிவிப்பார்கள். அவர்களிற்கு சரியான பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லையா அல்லது இந்த ஒரு பொய்கதைதான்அவர்களிடம் இருக்கின்றாதா என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் உள்ளது. உண்மையிலேயே இந்த நாட்டில் உள்ள குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய காலமாக உள்ளது, சுமார் இரண்டு நாட்களில் ஆறுகொலைகள் இடம்பெற்றுள்ளன, ஜனவரியிலிருந்து இன்றுவரை 17 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,. இன்று நேற்றல்ல இலங்கையில் பலகாலமாக பாதாளஉலகம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்; என இந்தசூட்டு சம்பவம் இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் கொலைகள் மலிந்துபோகின்றநாடாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த கொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்,அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் , பொலிஸார் கொலைகாரர்களாக மாறுவதை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த அரசாங்கம் ஏற்கனவே எதிர்கட்சியாகயிருந்தபோது தீவிரமாக எதிர்ப்பை தெரிவித்தஒரு அரசு. https://www.virakesari.lk/article/2074421 point- பெரியார் தொண்டர்
1 pointஎனது அப்பாவின் அப்பாவின் காலத்தில் தோட்டம் செய்வதற்காக கிணறு தோண்டியபோது சூலம் ஒன்று வெளிப்பட்டதாம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் சைவ சமயம் ஒடுக்கப்பட்டபோது புதைத்தார்களா தெரியவில்லை). தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வீதியருகில் கொட்டில் போட்டு சூலத்தை பிரதிட்டை செய்தனர். அப்பாவின் அப்பாவும், அதன் பின்னர் எனது அப்பாவும் தமக்குத் தெரிந்தவகையில் பூசை செய்து வந்தனர். 80களின் ஆரம்பத்தில் கோயிலாகக் கட்டப்பட்டு, சைவ மேனிலையாக்கம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பிராமண ஐயர் பூசை செய்துவருகின்றார்.. கொழும்பில் இறுதிக்காலத்தில் நினைவு பிறழ்ந்த நிலையிலும் வைரவர் என்ற சொல்லைக் கேட்டால் அப்பா “என்ரை” எனச் சொல்லுவார்.. அவருக்கு திரும்பவும் ஊருக்குப் போகவோ, எள்ளங்குளச் சுடலையில் வேகவோ சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனது கடவுள் மறுப்புக்கொள்கையால் நான் கோயில் சம்பந்தமாக எதுவும் செய்வதில்லை. ஆனால் கொழும்பில் இருந்த அக்கா ஏதாவது உதவி செய்யக் கேட்டால் ஐயர் குடும்பத்திற்கு “உதவி”யாக இருக்கட்டும் என்று ஏதாவது கொடுப்பதுண்டு. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஊருக்குப்போனபோது ஐயர் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்தபின்னர் சின்ன “உதவி”யையும் செய்வதில்லை! இப்போது கோயில் ஊரில் உள்ள 12 குடும்பங்களின் (அதுக்கும் அடிபாடு) பண உதவியுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. அக்காவும் பரம்பரைக் கோயில் என்பதால் ஒரு “உரித்து” வைத்திருக்கின்றார். இந்த வருடம் அவருக்குத்தான் “பட்டோலை” பொருட்கள் வாங்கும் கெளரவம் கொடுத்தார்களாம். இனிப் பன்னிரன்டு வருடங்களுக்கு பின்னர்தான் திரும்ப எங்களுக்கு வருமாம். எங்கள் குடும்பத்தின் “உரித்தை”க் காக்க என்னை பட்டோலை பொருட்கள் வாங்கும் சடங்கை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டார்.. இங்கு பெரியாரின் கொள்கைகளுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு பட்டோலைக் கெளரவத்தை வாங்க நான் ஒன்றும் கலைஞர் கருணாநிதி போல மஞ்சள் துண்டு போடுபவன் இல்லையே!😆 நான் அக்காவுக்கு எனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது. இப்படி எல்லாம் கோவிலுக்கு செய்ய வெளிக்கிட்டால், எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக முடியும். அதிலும் உரிமைப்போர் செய்யபவர்கள் பலர் இருக்கும்போது இது எல்லாம் தேவையில்லாத ஆணி. எனக்கு பட்டோலையும் வேண்டாம்; பனையோலையும் வேண்டாம் என்று பதில் எழுதினேன்! “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்று எழுதி என்னவாவது செய்யுங்கோ விடயத்தைக் கைவிட்டுவிட்டார்.. நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!1 point- பெரியார் தொண்டர்
1 point👍................ சரியாகவே சொல்லியிருக்கின்றார்.......... ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்..... நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............1 point - இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.