Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19663
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3118
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88807
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    39325
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/25 in Posts

  1. இது எதிர் கட்சிகளின் அவதூறு உறவே. நம்ப வேண்டாம்🤣 பிறகு சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு எங்களை பழி சொல்லுங்கோ🤣 நாளைக்கு அவுஸ் வென்றால்…. அன்புமணி ஆகிய நான்….🤣
  2. தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே. இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.
  3. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  4. நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
  5. யாழ்களத்தில் நல்லவனாக இருந்தாலும் அடிக்கிறீர்கள் கெட்டவனா இருந்தாலும் அடிக்கிறீர்கள் . ஏன் வில்லங்கம் என்று உங்களை மாதிரியே இருந்து கொள்கிறோம் என்றாலும் அடிக்கிறீர்களே ....... எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா? இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரம் அதுக்கும் அதை முன்னின்று நடத்தியவர்களுக்கு வக்காலத்து வாங்கியர்களையும் பற்றி எழுதியபோது கிரிகெடையும் இனப்படுகொலையையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் விடுதலைப்போரை கொச்சைப்படுத்தும் விதமாக பின்பு சினிமா எனும் போர்வையில் படங்கள் எடுத்தபோது அதுபற்றி எழுதும்போது சினிமாவையும் போரையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் ஏன் வில்லங்கம் என்று நாம் வேறு வேறாக பார்த்து பழகுவதற்கு முடிந்த அளவில் முயறசி செய்யும்போது இப்போ இப்பிடி எழுதுகிறீர்கள் .........
  6. உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்
  7. தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.
  8. பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):
  9. மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣. அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣 இந்தா ஆயிடுச்சே🤣
  10. தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.
  11. போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும். கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.
  12. எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும். ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.
  13. அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.
  14. "நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. அப்பவே, 2011ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றினார்கள் என்று தான் விஜயலட்சுமி சொல்கின்றார். சமயாசாரப்படி நடந்த விவாகம் என்று ஒன்று ஊரில் இருப்பது போல. நீங்கள் சொல்லியிருப்பது தான் அண்ணா மிக எளிய தீர்வு. இருவருமே ஒன்றாக வாழ்ந்திருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு போவது தான் சரி. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒரு மனைவியா அல்லது ஒன்றுக்கு மேலா என்பதெல்லாம் பிரபலங்களுக்கும், அரசியலுக்கும் ஒரு பொருட்டே அல்ல. மேலும் சீமானின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எவரும் அவர் இதை ஒத்துக் கொண்டால் கூட, அவரை விட்டு நீங்கப் போவது கிடையாது. தமிழ் தமிழ் என்று சொல்லி விட்டு, அவரின் மகனே தமிழில் படிக்கவில்லை என்பது வெளியில் தெரிந்த போது, அவரின் ஆதரவாளர்கள் எவராவது அதன் காரணமாக விலகினார்களா............ இல்லைத்தானே, மாறாக அவரின் தெரிவை நியாயம் தான் செய்தார்கள். யார் முதல் மனைவி, அதன் காரணமாக சொத்துரிமை என்பதில் சிக்கல் வரும் தான். கயல்விழி வீட்டில் இருந்து வந்ததவைகள் அவருக்கே சொந்தமாகும், ஆனால் இவர் சேர்த்தவைகளை பிரிக்கத்தான் வேண்டும். திமுக இதை வேண்டும் என்றே தான் செய்கின்றது. இது மட்டும் இல்லை, இன்னும் பல வழக்குகள் இவர் மேல் சமீபத்தில் போடப்பட்டன. நேற்று இன்னொரு சம்மனும் ஈரோட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கின்றார்கள். 'வெடிகுண்டு எறிவேன்.................' என்று சமீபத்திய இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதால் வந்த வழக்கு அது. இதைவிட பெரியார் பற்றி இவர் பேசியதை ஒட்டி பல ஊர்களில் வழக்கு போடப்பட்டிருக்கின்றது. வருண் ஐபிஎஸ் வழக்கும் இருக்கின்றது. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக, மேடையில் எதையும்பேசலாம் என்றில்லை. எவரையும் எந்த சொல்லாலும் இழிவுபடுத்தலாம் என்றில்லை. இணையத்தில் அநாகரீகமாக தனிமனிதர்களையும், குடும்பங்களையும் சித்தரிக்கலாம் என்றில்லை. மீறி, இவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அதுவே பூமராங் போல சுழன்று கொண்டு திரும்பி வருகின்றது இப்பொழுது .........................
  16. நானும் இப்படி எழுதுவதால் விளக்கம்: சீமான் இனதூய்மைவாதம் பேசாவிடில் இதை நான் கதைக்கபோவதில்லை. ஆனால் அவர் தூய (இனத்தூய்மை) தமிழர் மட்டுமே ஆளவேண்டும் என்கிறார். ஆனால் அவரோ மலையாளி, அவரின் மனைவியோ தெலுங்கு+தமிழ் கலப்பின வழித்தோன்றல். இது கபடத்தனமாது. இதை சுட்டுவது இனவாதம் ஆகாது. உதாரணமாக நைஜல் பராஜ்தான் ஜேர்மன் பெண்ணமணம் முடித்து, தன் பிள்ளைகளுக்கு ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்தப்படியே, பிரெக்சிற்றினை நடத்தினார். அதை விமர்சித்தோம். அதேபோலத்தான் இதுவும். தமிழர் தலையில் மிளாகாய் அரைக்கபார்க்கிறார்.
  17. ஒரு மாதிரி கோசானின் முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டீர்கள், இந்த மழை திருப்பத்தினை நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் கோசான் முதலைம்ச்சராகலாமா? இந்த் போட்டியில் கோச்சானை வாழ வைத்த தெய்வமும் காலை வாரினால் என்ன ஆகும்?
  18. இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂. கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது. அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன். கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.
  19. சுவிஸ் நாட்டில் ப்ராட்பூஸ்ட் டும் ஒரு சாதாரண பாணும் சின்ன சின்ன ஊர் திருவிழாக்களில் விற்பார்கள் அதை ஒத்த ருசியை வேறு எங்கும் நான் இதுவரை சுவைத்ததில்லை. அதுபோல இத்தாலியில் சால்சித்தா என்று அழைப்பார்கள் அதுவும் ஒரு தனி சுவை. அதே நினைப்பில் ஒரு முறை ஜேர்மன் ரயிலில் உள்ள உணவகத்தில் ப்ராட்பூஸ்ட் பார்த்துவிட்டு ரொம்ப பசியில் ஆசைப்பட்டு வாங்கினேன் உண்ணவே முடியவில்லை அவ்வளவு கேவலமாக இருந்தது பத்தியில் நிறுத்தி விட்டிட்டேன் சுவிஸ் ப்ராடவூஸ்ட் இத்தாலிய சால்சித்தா சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் வாங்கி சுவையுங்கள் Italian Salsiccia St. Galler Bratwurst
  20. தலை மேல் கத்திதான் எப்போதுமே. பாவப்பட்ட ஜென்மங்கள். இப்போது இருக்கும் நடைமுறையில் காசு குடுத்து முடிச்சு வைக்கிறதெல்லாம் மிகக் கடினம். ஆனாலும் இந்தக்கேள்வி எப்போதுமே தொக்கிநிற்கும். அந்தநாட்டில் ஒரு கிரிக்கெட் கட்டுமானமே இல்லை. அதுதான் பெரும் பிரச்சினையே. அங்கே நல்லதொரு வீரரை உருவாக்குதல் மிகக் கடினம். நமக்குத் தெரிந்த, அநேகமான பாக்கிஸ்தான் வீரர்கள் எல்லாம் பிறவி வீரர்கள். அவர்கள் உருவாக்கப் படவில்லை. அண்மையில் வந்தவன் பாபர் ஆஸாம். துரதிஷ்டவசமாக, வேறு ஒருவரும் வரவில்லை. தனி ஒருவனாக அவன் எவ்வளவுதான் தாங்கமுடியும். பின் அவங்களின் அரசியல். நாம் நம்நாடுகளில் பாக்கின்ற அதே அல்லது அதுக்கும் மேலான மோசமான அரசியல். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே வண்டிய ஓட்டிறது. அவர்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். அட, வசியும் ஞானும் இம்முறை ஒரே கோட்டில். யாயும் ஞாயும் யாராகியரோ. 🤣😉
  21. சரி... வண்டியில ஏறுங்க, பேசிக்கிட்டே போவோம். 😂 🤣
  22. இந்திய இராணுவ பட்டறை🤣 குடுமி வெளியில் தெரிந்து விட்டது…எப்படியாவது மறைக்க படாதபாடு படுகிறார்கள்🤣. சீமானுக்கு ஆதரவாக இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரிகள் (முன்னால் என்ற போர்வையில்) களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோவில் பேசுபவர், கூட நிற்பவர் அத்தனை பேரின் தலை வெட்டை பாருங்கள். அத்தனை பேரிலும் “அதிகாரிகள்” தோறணை அப்படியே தெரிகிறது. ரஜனி, கமல், வைக்கோ, திருமா, இராமதாஸ், அஜித், விஜை இப்படி சீமானை விட பலமடங்கு ஆபத்து உள்ளவர்கள் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கூட ஆயுத பாதுகாப்பில் வருவதில்லை. இவர் ஓசூரில் இருக்க, நீலங்கரையில் ஏன் துப்பாக்கிதாரி? குஞ்சு மாவீரனை பாதுகாக்கவா? அப்பட்டமாக இந்திய இராணுவ, புலனாய்வு அமைப்புகள் சீமானை சூழ நிற்பதை கண்டும், புலம் பெயர் தம்பிகள் திருந்த போவதில்லை. தமிழ் தேசியவாதிக்கு, Indian Rapist Army யோடு என்ன வேலை?
  23. ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள். இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியலீளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது! ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுதுபார்த்ததற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார். "என்ன?!" என்று ஆச்சரியமாக உரிமையாளர் கேட்டார். "நீங்கள் ஏறக்குறைய எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு விரிவான பில் கொடுங்கள்." பதில் எளிது.... சுத்தியலால் தட்டுவதற்கு: $2 எங்கு தட்ட வேண்டும், எவ்வளவு தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தட்டுவதற்கு : $19,998 ஒருவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பாராட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது... ஏனெனில் அவை நீண்ட நெடிய போராட்டங்கள், சோதனைகள் மற்றும் கண்ணீரின் முடிவுகளால் பெறப்பட்டது. நான் ஒரு வேலையை 30 நிமிடங்களில் செய்கிறேன் என்றால், அதை 30 நிமிடங்களில் எப்படி செய்வது என்று 20 வருடங்களாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் பல ஆண்டுகளுக்கானது. சில நிமிடங்களுக்கு அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். Fun Drop
  24. சிறைச்சாலை என்பது உல்லாச விடுதி அல்ல. உங்களது தண்டனைக் காலத்தில், அங்கு தரப்படும் களியை தான் தின்ன வேண்டும். அரசியல்வாதிகள், பிக்குகளுக்கு... சிறைச்சாலையில், "சோக்கு" கேட்குதோ... 😂
  25. ஆப்கானிஸ்தான் அடித்த ரண்ஸ் காணாது! கோஷானுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி நிச்சயம்😁 @வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணவில்லை! ஐபில் வேறு தொடங்குகின்றது! இன்னொரு போட்டித்திரி திறக்க பையன் வந்து ஆதரவைத் தரவேண்டும்☺️
  26. Arms Act of 1959 allows citizens of India to get Non-Prohibited Bore (NPB) guns. NPB licenses can be issued to anyone of Indian Nationality who can claim a licensee status under the following: Self Defence - Individuals who could be prone to being attacked for reasons including being wealthy, being under threat, etc. General Security - which includes the provision of security for Banks, Institutions, etc. This can also cover the gunmen and protection squad of VVIPs and politicians. Crop Protection - Those who have agricultural or similar lands which need protection from Non-Scheduled pests and vermin, like boars, etc. Sports Shooting - Those under sports shooting discipline who need guns for sports purposes. Returning NRI - Any Indian who is returning to India and has owned a gun in his foreign residence for over 2 years, can apply for an Indian license and bring back the gun they owned abroad. Foreign National Status - Any foreign National is allowed to own and bear arms for a maximum period of 6 months during their stay in Tamil Nadu, given valid reasons. Eligibility Criteria to get gun license (firearm license) in Tamil Nadu The following are the eligibility criteria for getting gun license in Tamil Nadu. The applicant should not have any past records of any kind of criminal activity. Police will gather a lot of information about the applicant such as asking the people in the surroundings or neighborhood if they see any kind of malicious treatment or if they have seen the person getting involved in fights due to anger or burst out. An interview will be conducted with the applicant to check if the person is mentally or physically ill or not. Documents Required to get gun license (firearm license) in Tamil Nadu The following are the documents required for getting gun license in Tamil Nadu. Two passport size copies of the latest photograph of the applicant (in white background):- to be submitted at the time of appointment Proof of date of birth Proof of identification -Aadhar Card or in case the applicant does not have Aadhar Card, a written declaration to be submitted in the form of an Affidavit along with an alternative identification proof which may include-Passport;Voter identification Card, PAN Card or Identity Card issued to the employees. Residence Proof: In case the applicant does not possess Aadhar Card or Passport, which may include Voter ID Card or Electircity bill or Landline telephone bill or Rent deed or Lease deed or property documents or any other documents to the setisfaction of the Licensing Athority. Firearm training certificate in form S-1 (whenever made applicable by the Central Government by passing a general or special order); Safe use and storage of firearms undertaking in(Form S-2). Self attested copies of the educational and professional qualification certificates from professional category applicants as specified in clause (a) of sub-rule (3) of rule 12 of the Arms Rules, 2016. Medical certificates about mental health and physical fitness in form S-3, issued by a registered MBBS Doctor on prescribed proforma. Self attested copy of the proof of date of birth (e.g. Matriculation certificate or School leaving certificate, Passport etc). in case of protection for destruction of wild animals which do injury to human beings or cattle and damage to crops, permit from the authority empowered under the Wild Life (Protection ) Act, 1972 (53 of 1972). How to apply for a gun license (firearm license) in Tamil Nadu? The applicant should clearly mention the purpose(s) for which the licence is required; such as use, self protection, acquisition, possession, carrying, sport, display, destruction of wild animals which cause injury to human beings or cattle and damage to crops etc. as per the category of licence applied (Form II, III or IV). Instructions for filing gun license (firearm license) Before applying online, keep the scanned copy of every required documents in pdf format (each pdf not exceeding 1 mb) and photograph in JPG format ( each JPG not exceeding 50 KB). After successful online registration of the application, upload the photograph and take the printout of the application. The signed application form along with the required documents are to be submitted in the concerned issuing authority for want of processing. Please note your online registration number for record and future reference. Concealing any material facts and/ or submitting false information will lead to cancellation of such application. Procedure Follow the below steps to apply for gun license in Tamil Nadu. Visit Arms License Online website. https://www.tesz.in/guide/gun-license-firearm-tamil-nadu எனது புரிதலின்படி சுயபாதுகாப்பிற்கு என அனுமதி எடுத்து வைத்திருக்கலாம் என்றுள்ளது போல அண்ணை. எதற்கும் எனக்கு வாசித்து தெளிவுபடுத்துங்கோ.
  27. ரனிலை மக்கள் இனி தெரிவு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார். மேற்குலகு, இந்தியாவின் செல்லப்பிள்ளை என்பதால் ரனில் துரும்பாக பயன்படுத்தப்படுவார்.
  28. இதுவரை மழை இல்லையாம். அப்புறமென்ன ஆப்கானிஸ்த்தானா அவுஸ்திரேலியாவா எப்போதும் தமிழனா கோசானா காத்திருங்கள். முடிவு விரைவில்
  29. அவசியமற்ற அலம்பல். HuffPostHere’s Exactly What Happens When Someone Dies On A Plane...In-flight deaths are rare, but there's a process for handling the situation when it does arise.There are specific procedures for securing the deceased person’s body in a way that respects their dignity and shows sensitivity to their travel companions and others on the plane. “To handle the body with dignity and respect while ensuring minimal disruption to other passengers, the crew covers the deceased passenger with a blanket,” Alves said. “Nearby passengers may be moved to other seats if space permits. The body may be moved to a less populated area, such as an empty row, if available. Otherwise, the body is secured in the original seat with the seatbelt fastened to prevent movement during the flight.” Dead body placed beside Australi...Dead body placed beside Australian couple on Qatar Airway...Cabin crew placed the body of a passenger who died mid-flight in an empty seat beside the pair.செய்தியின் அடிப்படையில் இறந்தவரை இவர் அருகில் கொண்டுவந்து வைத்துள்ளனர். Mr Eustance said that, while he was not being judgemental as he did not know the full situation, he was surprised that the crew did not move Mr Ring if there had been spare seats. "I would expect the crew would do all they could to avoid that. You are creating potential future liabilities in terms of the trauma of the people next to whom the body was placed," he said. "In my experience the crew would normally try to isolate the body, so there is no passenger exposure to the body and vice versa, for respect and privacy but also for medical reasons. You have a dead body that is uncontained and all that goes with it." சிலவேளை விமான ஊழியர்களுக்கு வழங்கப்படாத ஸ்பெஷல் ட்ரைனிங் இன் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் மிஸ்டர் நியாயத்திற்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கலாம்
  30. செம்பாட்டான் உங்கள் பேராசைக்கு குறுக்கே கோசான் உள்ளார் (கோசானின் ஆசை).🤣
  31. இல்லை…நாம் வெல்லவில்லை ஆகவே செலன்ஸ்கியும் வெல்லகூடாது என்பதே காதல்-தோல்வி-தாடி அண்ணாக்களின் ஒரே எண்ணம் 🤣.
  32. கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு காவல் நிலையத்தின் காவல் அதிகாரி, கொலைத் திட்டம் குறித்து ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பொலீஸ் அதிகாரி கைதை குறிப்பிடுகிறார்கள் அண்ணை.
  33. சிறு வயதில் கேட்ட இசையும் கதையும் நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது. உங்கள் பாணியில் சரித்திரத்தையும் இலக்கியத்தையும் இடையிடையே தொட்டு வித்தியாசமான முறையில் எழுதியுள்ளீர்கள். நன்றி.
  34. அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்
  35. நாங்களா 💪 ஜனநாயக நாடுகளில் வாழ்கின்ற ஜனநாயக முறைமைகளை நிராகரிப்போர் சங்கத்தவர்கள்
  36. புதிதாக பதவி ஏற்றவர் "காசு "விடயத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.விற்பனை முகவராய் இருந்தவருக்கு "காசு" தானே குறி ...
  37. செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது. ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை? ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு: 1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன. 2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. 4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது. 6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம். 8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.
  38. பார்க்கலாம், இந்த நிகழ்வு நடந்தால், அதனை குழப்ப பெரியார் தொடர்பான கூட்டட்தை குழப்பிய மறத் தமிழ் காவாலிகள் வருவார்களா என.
  39. இந்தக் அருந்தமிழ் இடம்பெற்ற நிகழ்ச்சி மீது எனக்கு வெறுப்பிருந்தாலும்..... அந்த தமிழை மீண்டும் மீண்டும் கேட்க ஆர்வமூட்டியது.💪 பகிர்வுக்கு நன்றி அன்புத்தம்பி 👈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.