Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20018
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3061
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/06/25 in Posts

  1. எனக்கு இது காணும் .முதல்வர் என்ன பிரதமர் பதவியே கிடைத்த மாதிரி பீலிங்க்ஸ் .😍
  2. காற்றாடி - அத்தியாயம் ஆறு -------------------------------------------- சிவா அண்ணா சுகமடைந்து மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்தது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவன் தியேட்டரில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் திரைப்பட கருவிகள் இருக்கும் அறையிலேயே இருந்தான். அவன் இப்பொழுது தியேட்டரை கூட்டுவதில்லை. காட்சிகள் ஆரம்பிக்கும் போது கலரி வகுப்பின் முன் போய் நிற்க வேண்டிய வேலையையும் அவன் இப்போது செய்வதில்லை. செல்வம் என்னும் ஒருவர் இந்த வேலைகளுக்காக புதிதாக வந்து சேர்ந்திருந்தார். செல்வம் அவனை விட சில வயதுகள் கூடியவர். அதிகமாக கதைக்கமாட்டார். அவரைப் பார்த்தால் தியேட்டரில் வேலை செய்பவர் போல தெரிவதில்லை. அந்த தியேட்டருக்கே அவர் தான் முதலாளி போன்று தான் அவரின் உருவமும், உடுப்புகளும், பாவனைகளும் இருந்தன. சிவா அண்ணா வந்த பின்னரும் அவனை அந்த அறையிலே தங்களுக்கு உதவியாக அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டனர். சில வேளைகளில் அவனை மட்டும் அங்கே அறையில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போய் ஒரு பத்து நிமிடங்கள் கழித்தும் வருவார்கள். அவர்கள் சிகரெட் புகைக்கவே வெளியே போகின்றார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆங்கிலப்படம் ஒன்று தியேட்டருக்கு வந்திருந்தது. அது மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டிய படம் என்று பாடசாலைகளில், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து என்று கூட்டம் கூட்டமாக மாணவர்கள் காட்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவன் படித்த பாடசாலையில் இருந்தும் வந்திருந்தார்கள். அவனின் வகுப்பு மாணவர்களும் வந்திருந்தனர். அவன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முதன் முதலாக அவன் மனதில் ஒரு தயக்கமும், வெட்கமும் வந்திருந்தது. அவனுடன் படித்த மாணவிகளும் வந்திருந்ததே அந்த தயக்கத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு நாள் அன்று வரவேண்டி இருந்த படப்பெட்டி வரவில்லை. பல ரீல்களும் மிகவும் சேதமாகி விட்டது என்று அந்த தியேட்டர்காரர்கள் படப்பெட்டியை அனுப்பவில்லை. புதுப்படம் ஒன்று அடுத்த நாள் வருவதாக இருந்தது. இந்த விடயம் தெரியாமல் அவன் தியேட்டருக்கு போயிருந்தான். அங்கு செல்வமும், முகாமையாளரும் மட்டுமே இருந்தனர். வெளியில் ஒரு அறிவிப்பை போட்டு விட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு முகாமையாளர் வீட்டிற்கு போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார். செல்வமும், அவனும் இன்னும் சிறிது நேரம் அங்கிருப்போம் என்று தியேட்டரின் முன் மண்டபத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்கள். 'இங்கேயே எப்போதும் இருந்து விடப்போகின்றாயா............' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்வம். அவனுக்கு செல்வம் என்ன கேட்கின்றார் என்று புரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தான். 'இல்லை........... இது தான் நீ எப்பொதுமே செய்யப் போகும் தொழிலா...........' என்று கேட்டார் அவர். 'எனக்கு இது மிகவும் பிடித்திருக்கின்றது................' என்றான் அவன். 'எனக்கும் இது பிடித்திருக்கின்றது. ஆனால் இதில் கிடைக்கும் உழைப்பு ஒன்றுக்குமே காணாதே..............' 'அப்ப நீங்கள் வேறு ஏதாவது தொழிலும் செய்கின்றீர்களா........... நான் பகல் நேரங்களில் வயரிங் வேலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றேன்.' 'ம்ம்ம்............ அதுவும் ஒரு நிரந்தர வேலை என்றில்லை தானே...........' அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் நிச்சயம் பணத் தேவைக்காக இங்கே வரவில்லை என்பது முன்னரே தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது அவனை என்ன செய்யச் சொல்லுகின்றார் என்பது அவனுக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. 'நீ ஏன் கப்பலுக்கு போகக் கூடாது...........................' கப்பலுக்கு போவது என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். கப்பலுக்கு போய் வருபவர்கள் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் ஒரு ராஜா போலவே நடமாடுவதை அவன் பார்த்திருக்கின்றான். அவனின் சொந்தத்தில் கூட ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். அவர் ஊர் வந்து நின்ற போது அவர்கள் வீட்டில் அவனுக்கு ஒரு சூயிங்கம் பாக்கெட் கொடுத்தார்கள். இன்னொரு சொந்தக்காரருக்கு ஒரு சட்டை கொடுத்தார்கள். அந்த சட்டையில் உட்புறம் முழுவதும் வெள்ளையாகவும், வெளியில் பளபளப்பாக இருந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றான். இப்படியான ஒரு சட்டையை பின்னர் எங்காவது வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தான். அப்படி போய் வருபவர்களின் குடும்பமும் ஒரு திடீர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு தடவை போய் வந்தால் என்னவென்று அவனுக்கு தோன்றியது. 'எல்லோரும் கப்பலுக்கு போகலாமா, செல்வம் அண்ணா..............' 'ஆ................. எல்லோரும் போகலாம். கட்டுக் காசு கொஞ்சம் கொடுக்க வேண்டும். அதைவிட சில விசயங்களும் இருக்குது. நீ நல்லா படிக்கக்கூடியவன் என்று சொல்கின்றனர்................' 'படித்தனான் தான் அண்ணா, ஆனால் தொடர முடியவில்லை...........' என்று பழியைத் தூக்கி விதியின் மேல் மெதுவாகப் போட்டான். 'கொஞ்சம் படித்தாலே கப்பலில் ஆபிசராக, இஞ்சினியராக வரலாம்........... போக முன் படித்து சில சேர்டிபிக்கட்டுகளை எடுத்தால், அங்கு போய் கடகடவென்று முன்னுக்கு வந்துவிடலாம்....................' செல்வம் அண்ணா தொடர்ந்தும் நிறைய தகவல்களைச் சொன்னார். தன்னுடைய சித்தப்பா ஒருவர் கப்பல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருப்பதாகச் சொன்னார். அவரின் சித்தப்பா மூலம் அவனுக்கு அவர் உதவி செய்வதாகச் சொன்னார். அவன் கொஞ்சம் திரிகோண கணிதம் படித்து வைத்தால் நல்லது என்றும் சொன்னார். அந்த ஒற்றை வசனம் அவனை தூக்கி அடித்தது. அவன் தன் கணிதப் பிரச்சனையை அவரிடம் இன்னும் சொல்லவேயில்லை. அவரே தொடர்ந்து ஊரில் இந்த அடிப்படைகளை ஒருவர் படிப்பிக்கின்றார் என்று சொல்லி, அவனை அங்கே போகச் சொன்னார். ரவி அண்ணா என்னும் அந்த ஆசிரியர் மிகவும் மெல்லிய குரலில் பாடத்தை ஆரம்பித்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் இடம் அவனின் நண்பன் ஒருவனுடைய வீட்டின் பின்பக்கம் தனியாக இருக்கும் ஒரு அறை. அங்கு ஏற்கனவே பல மேசைகளும், வாங்கில்களும் போடப்பட்டிருந்தன. நண்பனின் அப்பா ஒரு ஆசிரியர். அவர் ஒரு காலத்தில் இங்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அவர் பாடசாலையை தவிர வேறு எங்கும் படிப்பிப்பதில்லை. பெரும்பாலும் கிரேக்க எழுத்துகளில் பாடம் போய்க் கொண்டிருந்தது. (தொடரும்.........................)
  3. முன்னர் பெரிய குடும்பி வைச்சிருந்தேன்😜 சம்பியன்ஷிப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றதால் உள்ளூர் சாதகம் இருக்கும் என்று பாகிஸ்தானை நம்பி குணா குகையில் விழுந்தவன் மாதிரி ஆகிவிட்டேன்😩 இனி மட்டன் வாங்குவதைத் தவிர்த்து வேறு ஒன்றிலும் பாகிஸ்தான்காரரை நம்பமாட்டேன்😜
  4. அவர் அடித்தா மொட்டை அல்லது குடும்பி.
  5. ஒரு பழமொழி சொல்வார்கள் " பேய்க்கு வாழ்க்கைப்படடால் புளிய மரத்தில் ஏறு " என்றாலும் ஏறவேண்டுமாம். இது கமராக் காரனின் விளையாட்டு . அதுகளும் புத்தி கெட்டுப்போய் ... இது தான் ட்ரெண்டிங் ?
  6. மெதுவா இறக்கி விடுங்க . அப்புறம் முதலிரவு வைத்தியசாலையில்த் தான். நல்லகாலம் தண்ணீர் 'ஓ' வடிவில் இல்லை. இல்லாவிட்டால் கடவுள் யானை உருவில் வந்துவிட்டார் என்று புரளியைக் கிழப்பியிருப்பார்கள்.
  7. இன்னும் மூன்று நாளைக்குத்தான்! இறுதியாட்டத்தில் இந்தியா வென்றால் அத்துடன் எனது ஆட்டம் ஓவர்!! 🤣
  8. அவர் வந்தால் ராசாவாத்தான் வருவேன் என்டு அடம் பிடிக்கிறார். நாம என்ன செய்ய முடியும். இன்னும் ஒருக்கா சொல்லுங்க. நம்ம இந்தியா வெல்ல வேண்டும். 😁
  9. இல்லை அது கணவன் மனைவி உறவு ஆனால் திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு நான் உன்னை திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை அளித்து அந்த பெண்ணின் சம்மததுடன். கட்டிபிரண்டு பல தடவைகள் பல மாதங்களாக உடலுறவு கொண்ட பின். திருமணம் செய்யமுடியவில்லை முடியாது என்று சொன்னால் அது பாலியல் பாலியல் வல்லுறவு ஆகும் பெண்ணிடம் பெற்ற சம்மதம் திருமணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் திருமணம் செய்யவில்லை என்றால் பெண் சம்மதிக்கவில்லை என்று தான் பொருள் எனவே… அது பாலியல் வல்லுறவு தான்
  10. காற்றாடி - அத்தியாயம் ஐந்து -------------------------------------------- சிவா அண்ணாவும், முரளி அண்ணாவுமே அந்த அறையில் எப்போதும் இருப்பார்கள். இருவருக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த இரண்டு திரைப்படக் கருவிகளையும் இயக்கத் தெரிந்திருந்தது. அவன் திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையின் கதவோரம் நின்று எட்டிப் பார்ப்பான். சிவா அண்ணா எதுவும் சொல்லமாட்டார். முரளி அண்ணா அவன் அங்கே வருவதை விரும்புவதில்லை. 'கீழே போடா.........' என்று சத்தம் போடுவார். அந்த அறையின் கதவோரத்திலேயே வெக்கை அடிக்கும். ஒரு அடி அளவு நீளமான கார்பன் குச்சிகள் திரப்படக் கருவிகளின் உள்ளே எரிந்து கொண்டிருக்கும். அங்கிருந்து வரும் ஒளியே திரையில் ஓடும் திரைப்படமாக விழுத்தப்படுகின்றது. அந்த வெக்கை தான் முரளி அண்ணாவை எரிச்சல் படுத்துகின்றது போல என்று நினைத்துக் கொள்வான். படங்கள் ஆயிரம் அடிகள் நீளமான ரீல்களாக வரும். அநேகமாக ஒரு தமிழ்ப் படம் என்றால் 14 ரீல்கள் இருக்கும். ஒவ்வொரு படமும் 14000 அடிகள் நீளமானது என்று சொல்லலாம். ஒவ்வொரு ரீலும் தனிதனியே ஒரு வட்டமான, தட்டையான தகரப் பெட்டிக்குள் இருக்கும். எல்லா வட்ட தகரப் பெட்டிகளும் ஒரு பெரிய வெள்ளி நிறத்திலான பெட்டிக்குள் இருக்கும். ஒரு ரீல் 11 நிமிடங்கள் வரை ஓடும். பெரிய படங்கள் என்றால் ரீல்களின் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆங்கிலப் படங்கள் போல சிறிய, 90 நிமிடங்களே ஓடும், படங்கள் என்றால், அதில் எட்டு அல்லது ஒன்பது ரீல்களே இருக்கும். திரைப்படக் கருவிகளில் இரண்டு ரீல்களை ஒன்றன் பின் ஒன்றாக பொருத்தும் வசதி இருக்கின்றது. ஒரு ரீல் ஓடி முடிந்தவுடன், அதைக் கழட்டி விட்டு அடுத்த ரீலை எடுத்து மாட்டி விடவேண்டும். இப்படி மாறி மாறி செய்து கொண்டிருப்பதால், தடங்கல்கள் இல்லாமல் படம் ஓடும். இரண்டு திரைப்படக் கருவிகளையும் ஒரு காட்சிக்கு பயன்படுத்தமாட்டார்கள். இரண்டுக்கும் கார்பன் குச்சிகளை போடுவது தேவையில்லாத மேலதிக செலவு. கார்பன் குச்சிகளை கடைசிவரை எரிய விடமுடியாது. ஓரளவு எரிந்து முடிந்து கொண்டு வரும் போது, புதுக் குச்சிகளை போடவேண்டும். அவனிடம் வீட்டில் ஏராளமான எரிந்து மீதமான கார்பன் குச்சிகள் இருந்தன. காதலிக்கும் பெண் எறிந்து விட்டுப் போன பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்வது போல, அவன் சினிமா தியேட்டரிலிருந்து பொருட்களை சேகரித்து வைத்துக் கொண்டிருந்தான். ஓடிக் கொண்டிருக்கும் ரீல் இடையில் பொசுங்கி அல்லது எரிந்து போவது தான் பெரிய பிரச்சனை. ரீல் எரிவது திரையிலும் தெரியும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் சத்தம் போடுவார்கள், கூவென்று கத்துவார்கள். பதட்டப்படாமல் எரிந்து கொண்டிருக்கும் ரீலை கழட்டி, எரிந்த பகுதிகளை வெட்டி எறிந்து விட்டு, இரண்டு பக்கங்களையும் மீண்டும் பொருத்தி, ஓடவிட வேண்டும். பொருத்துவதற்கு ஒரு பசை இருக்கின்றது. அப்படி வெட்டி எறியப்படும் ரீல் துண்டுகளையும் அவன் சேர்த்து வைத்திருந்தான். சில படங்களின் ரீல்கள் அடிக்கடி எரிந்துவிடும். படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உள்ளே கதிரைகளை உடைத்தும் இருக்கின்றார்கள். பெரிய வாய்ச்சண்டையாகவும் மாறிய நாட்களும் உண்டு. ஆனால் எவரும் எவருக்கும் இதுவரை அடித்ததேயில்லை. அது திரையில் கதாநாயகனும், வில்லன்களும் மட்டுமே செய்வது என்பதில் நல்ல ஒரு தெளிவு எல்லோரிடமும் இருந்தது. அன்றோரு நாள் சிவா அண்ண வரவில்லை. அவரால் சில நாட்களுக்கு வர முடியாத ஒரு நிலையில் இருக்கின்றார் என்று சொன்னார்கள். சிவா அண்ணாவிற்கு ஏர்ப்பு வலி வந்து, அவரை மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருந்தார்கள். அவர் அருந்தப்பில் உயிர் தப்பியதாக சொல்லிக்கொண்டார்கள். எப்பவோ ஏதோ ஒரு பழைய ஆணியோ எதுவோ அவருக்கு காலில் குத்தி இருக்கின்றது. அவர் அதைக் கவனிக்காமல் விட்டிருந்ததாகவும் சொன்னார்கள். பின்னர் அவருக்கு முடியாமல் போகவே, உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தனர். அங்கிருந்து அவசரம் அவசரமாக மந்திகைக்கு அவர் அனுப்பப்பட்டார். அவனின் வீட்டில் இப்படி ஏதாவது நடந்தால், ஏதாவது குத்தினாலோ அல்லது வெட்டினாலோ, மரமஞ்சளை அவித்து குடிக்கக் கொடுப்பார்கள். சிவா அண்ணாவின் வீட்டில் கொடுக்கவில்லை போல. இல்லாவிட்டால் இந்த மரமஞ்சள் அவ்வளவாக வேலை செய்வதில்லையோ தெரியவில்லை. அவன் ஏர்ப்பு வலி என்று கேள்விப்பட்டிருந்தான், ஆனால் இதுதான் முதல் தடவையாக அந்த வலியால் ஒருவர் சாகும் வரை போனார் என்று தெரிந்து கொண்டது. கீழே குனிந்து காலைப் பார்த்தான். பாடசாலைக்கு போய் வரும் நாட்களில் செருப்பு போட்டிருந்தவன், ஆனால் இப்பொழுது போடுவதில்லை. இனிமேல் செருப்பு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சிவா அண்ணா இல்லாததால் முரளி அண்ணா அவனை உதவிக்கு வைத்திருக்க ஒத்துக்கொண்டார். முகாமையாளர் உரத்துக் கதைத்தபடியால் மட்டுமே முரளி அண்ணா சம்மதித்தார். 'சின்னப் பொடியன், அவன் அங்கே வேண்டாம்...................' என்று மட்டுமே முரளி அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். தன்னால் தனியாக சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார். ஆனாலும் முகாமையாளர் விடவில்லை. தியேட்டரில் கதிரைகள் உடைந்தால், அதற்கு முகாமையாளர் தான் முதலாளிக்கு பதில் சொல்லவேண்டும். முதல் பயிற்சியாக எரிந்து பொசுங்கிப் போன ரீல்களை எப்படி வெட்டி ஒட்டுவது என்று முரளி அண்ணா அவனுக்கு செய்து காட்டினார். மிக வேகமாகச் செய்ய வேண்டும் என்றார். பாடல் காட்சியாக இருந்தால் எவ்வளவையும் வெட்டி எறியலாம், சண்டைக் காட்சியாக இருந்தால் அளவாகத்தான் வெட்டி எறிய வேண்டும் என்று சில தொழில் ரகசியங்களையும் சொன்னார். வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தவனின் பார்வை அந்த அறையின் ஒரு மூலைக்கு போனது. அங்கே பல வெறும் போத்தல்கள் இருந்தன. 'அங்கே என்ன பார்க்கின்றாய்............. இங்கேயோ அல்லது வேறு எங்கேயுமோ இதை எதையாவது தொட்டாய் என்றால், உன்னை கொன்று போடுவேன்..........................' என்று அதட்டினார். பின்னர், 'படிப்பை விட்டிட்டு ஏண்டா இங்க வந்தாய்............' என்று மெதுவாக முணுமுணுத்தார். அவரின் குரலிலும், முகத்திலும் ஒரு மெல்லிய சோகம் தெரிந்தது. (தொடரும்................................)
  11. காற்றாடி - அத்தியாயம் நான்கு ----------------------------------------------- தனம் மாமி வீட்டுக்கு வந்திருந்தார். ஊரில் முறை தெரிந்த சொந்தக்காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் மாமா, மாமி, அண்ணா, அக்கா, அப்பாச்சி, அம்மாச்சி, இப்படி ஏதாவது ஒரு உறவுமுறை சொல்லி அழைப்பதே வழக்கம் என்றாகியிருந்தது. முறை தெரிந்த சொந்தக்காரர்களை அவர்களின் முறையை வைத்தே அழைத்துக் கொண்டார்கள். ஒரு சில அரச உத்தியோகத்தர்களைத் தவிர, வேறு எவரையும் ஒரு உறவுமுறையில் இல்லாமல் குறிப்பட்டதாகவோ அல்லது அழைத்ததாகவோ ஞாபகமில்லை. தனம் மாமி சொந்தத்தில் மாமி இல்லை. இதே ஒழுங்கையில் அவரும் குடியிருக்கின்றார். வீடு நிறைய ஆண் பிள்ளைகளை பெத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றார். அவர்களில் இருவரைத் தவிர மற்ற எல்லோருமே அவனை விட வயது கூடியவர்கள். பெண் பிள்ளை ஒன்று வேண்டும் என்றே, அடுத்து அடுத்து ஆண்பிள்ளைகளை சளைக்காமல் பெற்றதாக தனம் மாமி சொல்லியிருக்கின்றார். அவனின் வீட்டில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் மாறி மாறிப் பிறந்திருந்தார்கள். அவனின் வீட்டில் வேறு ஒரு கொள்கை வழியில் பெற்றிருக்கின்றார்கள் போல. 'என்ன, மூத்தவன் படிப்பை நிற்பாட்டி விட்டானாம்.................' என்று ஆரம்பித்தார் தனம் மாமி. அவனின் அம்மா பரீட்சை அன்று கடுமையாக மழை பெய்ததால், அவன் பரீட்சைக்கு போகவில்லை, அதனால் படிப்பு நின்று போனது என்று ஒரு வெள்ளந்தியாக கதைக்கவில்லை. அம்மா அப்படிக் கதைக்கவேமாட்டார். அவர் பிடி கொடுக்கவேமாட்டார். ஒரு ஆணாக பிறந்திருந்தால், அவர் எப்படியோ ஒரு பெரியாளாக ஆகியிருப்பார். பெண்ணாகப் பிறந்தபடியால், ஓட்டைகளில்லாத கறுப்பு புல்லாங்குழல் போல இருக்கும் ஒன்றால் சர்வ காலமும் அடுப்பை ஊதிக் கொண்டிருக்கின்றார். அவனும் அதை ஊதிப் பார்த்திருக்கின்றான். ஒரு தடவை ஊதுவதற்கு பதிலாக, அடுப்புப் புகையை உள்ளே இழுத்துவிட்டான். இருமிக் கொண்டே ஊதுகுழலை கீழே போட்டு விட்டு, அதை திருப்பி எடுக்கும் போது, அதன் அடுத்த பக்கத்தில் பிடித்து தூக்கியும் விட்டான். எந்த வேலைக்கும் அனுபவம் மிகவும் முக்கியம். 'படிப்பு என்ன படிப்பு, படிக்காதவர்கள் தான் இன்று உலகத்தை ஆளுகின்றார்கள்............' என்று தொடர்ந்தார் தனம் மாமி. ஏட்டுச் சுரைக்காயில் எங்கே கறி வைப்பார்கள், கழனிப் பானைக்குள் யார் கவிழ்ந்து விழுகின்றார்கள், இப்படி இன்னும் சில உதாரணங்கள் ஒரு மன ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டன. அவரின் பிள்ளைகள் எவருக்கும், இதுவரை, இந்தப் பழமொழிகளையும், முதுமொழிகளையும் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேவையும் வரவில்லை. நாலு மனிதர்களுடன் மட்டும் பழகுகின்றோம், அந்த நால்வரும் ஒன்றையே சொல்கின்றனர் என்றால் முழு உலகமே ஒத்த குரலில் அதையே சொல்வது போன்றே இருக்கும். இன்று இலங்கையின் பெரிய பணக்காரராக இருப்பவர், அவர் படிக்கவேயில்லை, கொழும்பில் தெருத்தெருவாக பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தாராம் என்று தனம் மாமி இலங்கையில் உள்ளவர்களிலேயே பெரிய சாட்சியாக ஒருவரை கொண்டு வந்து நிறுத்தினார். 'பிறகு............... அவருக்கு என்ன லொத்தரே விழுந்தது...............' என்று அவனின் அம்மா ஆச்சரியம் காட்டினார். அம்மா கேட்பதைப் பார்த்தால், அந்தப் பணக்காரருக்கு லொத்தர் விழவில்லை என்பது அம்மாவிற்கு ஏற்கனவே தெரிந்தே இருந்தது போன்றே அவனுக்கு தெரிந்தது. கடுமையாக உழைத்து, படிப்படியாக அவர் முன்னேறினார் என்று தனம் மாமி சொன்னார். தன்னுடைய மூத்த பிள்ளைகளும் கடுமையாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அதில் மூத்த அண்ணன் போன மாதம் இதே ஒழுங்கையில் இருக்கும் அக்கா ஒருவருக்கு கடிதம் கொடுத்து, அது பெரிய வாக்குவாதம் ஆகியது. அன்று இரவு அந்த அக்காவின் வீட்டிற்கு கல்லெறி கூட விழுந்தது. இரவு வெளியே வரப் பயந்து இருந்த அவர்கள், விடி விடியென ஆள் சேர்த்துக்கொண்டு அடிக்கப் போனார்கள். தனம் மாமி வீட்டில் என்ன நடந்தது என்றே தெரிந்திருக்கவில்லை. வேற யாரோ ஒரு கணக்குப் பண்ணி, அந்த அக்காவின் வீட்டிற்கு இரவு கல்லை எறிந்து விட்டுப் போயிருக்கின்றார்கள் போல. கொழும்பில் பேப்பர் பொறுக்கி, பின்னர் பெரும் பணக்காரராக ஆனவரும் முதலில் அவரின் சொந்த ஊரில் ஒரு கடிதப் பிரச்சனையில் மாட்டுப்பட்டிருப்பாரோ என்று அவன் நினைத்தான். அவனை அப்பொழுது தான் கண்ட தனம் மாமி, 'என்ன வேலைக்கு போகின்றாய்..................' என்றார். அவனின் அம்மா வயரிங் வேலைக்குப் போகின்றான் என்று சொன்ன அதே நேரத்தில், அவன் தான் தியேட்டரில் வேலை செய்வதாகச் சொன்னான். சில பின்னேரங்களிலும், இரவுகளிலும் அங்கே போய் தியேட்டரிலும் சும்மா நிற்கின்றவன் என்று அவனின் அம்மா, அப்படியே அவனை முறைத்துக் கொண்டே, சமாளித்தார். 'தியேட்டருக்கு எல்லாம் போகவே கூடாது, அங்கே தான் எல்லா கெட்ட பழக்கங்களையும் இந்தப் பிள்ளைகள் பழகுதுகள்...............' என்று சொல்லிக்கொண்டே மாமி நல்ல வசதியாக பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்து கொண்டார். மேடைப்பேச்சாளர் ஒருவர் தொண்டையைக் கணைத்து முழுவீச்சில் பேசுவதற்கு ஆயத்தமாக இருப்பது போன்ற ஒரு நிலையில் மாமி இருந்தார். இன்று இரவு மாமி வீட்டிற்கு யாரும் கல்லால் எறிந்தால் பரவாயில்லை என்று எண்ணம் ஒரு மின்னல் போல தோன்றி மறைந்தது. புகை, குடி, கூத்து என்று பல கெட்ட பழக்கங்கள் வரிசையாக அடுக்கப்பட்டன. எல்லாமே தியேட்டரிலேயே ஆரம்பிக்குது என்றார். ஆனால், காதல், கடிதம் என்ற சொற்கள் மட்டும் வரவேயில்லை. நல்லதோ, கெட்டதோ வெளியில் தான் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. எந்த மனிதனும் கொஞ்சமாக கண்ணை மூடி அவனுக்குள்ளே எவைகளையும் தேடுவதில்லை. (தொடரும்.........................)
  12. இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் மூச்சடைக்குது. @ரசோதரன் அண்ணனுடைய ராணுவ ரகசியத்தின் மூலமாய் உந்தப்பட்ட சிறு படைப்பு .
  13. முயற்சி பண்ணிப் பார்த்தேன். கீழே பாருங்கள்.🥰 செய்து பார்த்தோம். தலையைச் சுத்தி மூக்கத்தொடுற மாதிரி. ஆனா மூக்கத் தொட்டாச் சரிதானே. கீழே பாருங்கள்.
  14. இந்திய இராணுவத்தின் அட்டுழியங்களுக்கு சலைத்தவர்கள் அல்ல சிறிலங்கா இராணுவமும் அதன் எஜமானர்களும். என்பதயும் மறந்து விட முடியாது ...
  15. கூக்கில்ல‌ போய் இப்ப‌டி எழுதுங்கோ postimaes என்று வ‌ரும் அத‌ற்க்குள் போனால் நீங்க‌ள் யாழில் இணைக்க‌ விரும்பும் ப‌ட‌த்தை கேக்கும் அதை உப்பிலேட்செய்த‌ பின் பிற‌க்கு Direct link கொப்பி ப‌ண்ணி போட்டு இதுக்கை அந்த‌ லிங்கை போட்டால் நீங்க‌ள் தெரிவு செய்த ப‌ட‌ம் வ‌ரும்...............................
  16. @செம்பாட்டான் நீங்கள் படத்தை நேரடியாக கொப்பி பண்ணினால்.. படம் அனுமதித்த அளவைவிட பெரிது என காட்டும். அதனால்... மவுசால் இணைக்கப் பட வேண்டிய படத்தை கிளிக் பண்ணும் போது, படத்தின் அட்ரஸ் என்று ஒரு தெரிவு காட்டும். அதனை கொப்பி பண்ணி, பதியும் போது... படம் இணைக்கப் பட்டு விடும். இதே முறையில்தான் நான் செய்கின்றனான்.
  17. ஒரு சந்தேகம். எப்படி படங்களை இவ்வாறு இணைக்கிறீர்கள். சாதாரணமாக வெட்டி ஒட்ட முடியவில்லை. file size பெரிதாக இருக்கிறது என்ற தகவல் வருகிறது
  18. எனது தந்தை திரையரங்கு ஒன்றில் முகாமையாளராக இருந்தவர். சிறு வயதில் அங்கு போவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எரிந்த காபன் குச்சுக்களையும் வெட்டி எறியப்படும் றீல் துண்டுகளையும் சேகரிப்பது வழக்கம். இரவில் டோச் ஒளியை றீல் துண்டுகளில் பாய்ச்சி அதன் விம்பங்களைப் பார்த்து இரசித்ததை ஞாபகப் படுத்தியுள்ளீர்கள். இது போன்ற பல சாதாரண சம்பவங்களைக் கடந்து வந்துள்ளோம். இவற்றைச் சுவையாக எழுத்துக்களால் கோர்த்து எழுதி, வாசிக்கும்போது விபரிக்க முடியாத இனிய உணர்வுகளைத் தரக் கூடியதாக இச் சம்பவங்களுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள்.
  19. ஏதாவது செட் ஆகுமா?? ஷோபாசக்தி கதைகள் 1997-2024 தீக்குடுக்கை - அனோஜன் மணிமேகலை - அ.மார்க்ஸ் இடபம் - கண்மணி தாயைத்தின்னி - தில்லை சிவப்புச் சட்டைச் சிறுமி - ஸர்மிளா செய்யத்
  20. பெரிதாக உருவத்தைக் காட்டிக் கொள்வது நாய்களைப் பின்வாங்க வைக்காது என நம்புகிறேன். இதன் காரணம், நாய், கரடி, புலி ஆகியவை வித்தியாசமான கூர்ப்புப் பாதையில் (evolutionary behavior) வந்தமையாக இருக்கலாம். நாய், காட்டு விலங்கான ஓநாய்களில் இருந்து வந்தது. ஓநாய்கள் கூட்டமாகச் (pack) சேர்ந்து வேட்டையாடுபவை. பெரிய இரை விலங்கையும் சுற்றி வளைத்து தாக்கும் ஓநாய் மூதாதையரின் பழக்கம் நாய்களில் "உருவம் பெரிதானாலும் பரவாயில்லை" என்ற பயமின்மையை பதித்திருக்கக் கூடும். புலி, தனியாக வேட்டையாடும். நிச்சயமாக தனக்கு சேதமில்லை என்று உறுதியான இடங்களில் மட்டுமே தாக்கும் (அதுவும் பதுங்கி, இரைக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தாக்கும்). கரடி வேட்டையாடும் விலங்கல்ல. ஆபத்தை எதிர் கொண்டால் தாக்கும், மற்றபடி சத்தம் உட்பட்ட வேறு அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும். இது என் ஊகம் தான், இதற்கு ஆதாரங்கள் எவையும் என்னிடம் இல்லை.
  21. ஓம். பெளசர் 6 புத்தகங்கள் எடுத்து வைச்சிருக்கின்றார். பெருமாள் முருகனையும் பாத்ததாகவும் இருக்கும்!
  22. பிரான்ஸில் உள்ள சில தமிழர்களின் நிலையும் இதுதான். எனது குடும்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளில் இங்கு வந்தவர்கள் சிலர் ஒரு வசனம் கூடச் சரியாக பிரெஞ்சில் பேச மாட்டார்கள். ஆயுட்காலத்தில் பெரும்பாலான வருடங்கள் பிரான்சில் வாழ்ந்தவர்கள் - கிட்டத்தட்ட அரை நுற்றாண்டுகள் - பிரெஞ்சு தெரியாமல் இருப்பதற்கான காரணங்கள் : வேலை செய்யும்போது வேறு நாட்டவர்களுடன் பழகுவதில்லை. ஓரிரு தமிழர்கள் கூட வேலை செய்தால் தமிழிலேயே கதைத்துக் கொள்வது. வீட்டில் தமிழ் தொலைக்காட்சி, படங்களை மட்டுமே பார்ப்பது தற்போதும் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தமிழ் யூரியூபர்களையும் சாத்திரிகளையும் தொடர்வது ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று உலாவ விரும்பாமல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை தொலைபேசியில் வீணாகச் செலவிடுவது (அல்லது லா சப்பலுக்குச் செல்வது) பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் இருந்தால் மொழிப் பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள என்று பொறுப்பின்றி இருப்பது மறுபடி இலங்கை திரும்ப விரும்பாதவர்கள் இனிமேல் இதுதான் தமது நாடு என்பதை ஏற்றுக் கொண்டு இங்குள்ள மொழி வரலாறு கலாச்சாரம் அரசியல் போன்றவற்றை ஓரளவாவது அறிந்து கொள்ள வேண்டும்.
  23. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் முடிந்தும் பாதிக்கப்பட்ட இனத்துக்கு நீதி வழங்க முடியாத தலைவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? போர் நடந்தபோது தவறுதலாக குண்டு போட்டீர்கள் என்றால் போர் முடிந்து சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றது எந்த விதத்தில் நிஞாயம்? சர்வதேச சட்டத்திலேயே சரணடைந்தவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தானே சொல்கிறார்கள். தலைவரின் மகன் என்பதற்காக பாலகனை விசுக்கோத்து கொடுத்து சுட்டுக் கொன்றீர்களே இதுவும் தவறுதலாகவா நடந்தது? இதற்கெல்லாம் என்றோ ஒருநாள் பதில் சொல்லயே ஆகணும்.
  24. மரத்தின் மீது, கலியாண புகைப்படம். 😃
  25. விகடன் எப்போ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியால் முக்கால்வாசி பங்குகள் வாங்கபட்டனவோ அப்போதில் இருந்து சரிவுதான் முக்கியமான நபர்கள் மதன் போன்றவர்களை துரத்தி விட்டு விகடன் நிர்வாணமாக நிக்குது .
  26. நீங்கள் எப்போ…. சீமானை எதிர்த்து இங்கே எழுதுபவர்கள், புலிகளுக்கு எதிராக முன்னர் வேலை செய்தவர்கள், தமிழ் தேசியத்தின் எதிரிகள், இவர்கள் சீமானை எதிர்பதே அவர் தலைவர் படத்தை போட்டது சகியாமல்தான்.. என்ற ஆதாரமற்ற அவதூறை கைவிடுகிறீர்களோ… அன்றே நானும் இதை கைவிடுவதாக உள்ளேன். பிறகு சதவீத கணக்கை பார்க்கலாம்.
  27. ஆமாம் நிச்சியமாக அதாவது திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி இதில் எங்களுக்கு தெரியாமல் நிறைய விஷயங்கள் உண்டு” .......எனவே… நீதிமன்றத்தில் இது விசாரிக்கப்பட வேண்டும் ஆனால் சீமான் இதனை நீதிமன்றம் விசாரிக்கபடாது என்கிறார் அது மட்டுமல்ல தடையையும். வங்கி விட்டார் அந்த பெண் நான் சுற்றவாளி என்று எங்கே போய் நிறுவ முடியும் ??? எனக்கு தெரிய பல பெண்கள் திருமணம் செய்வேன் என்ற வாக்குறுதிகளை நம்பி திருமணத்துக்கு முன். உடலுறவு கொண்டுள்ளார்கள் ..வயற்றில். மூன்று நான்கு மாதம் பிள்ளையுடன் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்கள். அவர்கள் நேர்மையான ஆண்கள் சீமான் போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும் சீமான் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் விரும்பி தானே என்னுடன் வந்து படுத்தாய். என்று கேட்கிறார். .....இங்கே யாழ் கள உறவுகள் சீமான் அவளுடன் படுக்கவில்லை என்று அடித்து சொல்கிறார்கள் ஏன் சொல்ல வேண்டும் ??? இந்த பெண் ஏழு தடவைகள் கரு. கலைத்து உள்ளார் அது ஒரு பிழையான. விடயம் ஜேர்மனியில் பிள்ளையை பெத்து போட்டு மாத மாதம் ஆயிரமாயிரம் ஆக. 18. வருடங்களுக்கு பணம் கறப்பார்கள். ஜேர்மனியில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு” இந்தியாவில் பிறந்ததாக பெண்கள் கவலைப்பட வேண்டும் அதுவும் சீமான் போன்ற ஓடு காலிகள். உள்ள நாட்டில் சீமானை ஆதரிப்பவர்கள் ஏன் அவர் வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தடை வேண்டினார் என்பதை விளங்குங்கள். நான் குற்றவாளி இல்லை என்பதை நிறுவ முடியாத ???? இப்படி ஒருவனை தமிழர்கள் தலைவன் என்று ஏற்பது சுத்த மோஷம். ....அதுவும் இலங்கை தமிழர்கள் பிரபாகரனை தலைவர் என்று எற்றுக்கொண்டவர்கள். இவர்கள் பிரபாகரனுக்கு செய்யும் துரோகம் தெரிந்து கொண்டு செய்யும் துரோகம் ஆகும் நன்றி வணக்கம்
  28. சாரி! சில்லறை வாங்கிப் பழக்கமில்லை..😂 மொத்தமாக வாரிச் சுருட்டித்தான் பழக்கம்😝
  29. நியுசிலாந்து வென்றால், மிச்ச எல்லாரும், ஆளுக்கு இரண்டு புள்ளி போட்டு, கிருபனுக்குக் குடுப்பம். அப்ப என்டாலும் அவர் மேல வாறாரோ என்டு பார்ப்போம்.
  30. சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,க.போத்திராஜ் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது. லாகூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது. இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபையில் நடக்கும் ஃபைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது. 'சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்? ஆஸ்திரேலியாவின் வியூகத்தை தகர்த்த கோலி - இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த 5 விஷயங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்தியா - இந்த வெற்றியின் சிறப்பு என்ன? கோலி அசத்தல், ஷமி அற்புதம்! 5-ஆம் முறையாக முத்திரை பதித்த இந்தியா 2வது முறை மோதல் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது. ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு கெடு விதித்தது ஏன்? நாடாளுமன்ற உரையின் 7 முக்கிய அம்சங்கள்5 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?5 மார்ச் 2025 7-வது ஐசிசி ஃபைனல் ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது. நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது. ரவீந்திரா 5வது சதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார் நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர். சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும். ரவீந்திரா அடித்த 5 சதங்களும் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட தொடர்களில் அடிக்கப்பட்டவை. அதாவது, 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களும், இந்த தொடரில் 2 சதங்களும் ரவீந்திரா அடித்துள்ளார். இதுநாள் வரை, எந்த கிரிக்கெட் வீரரும் தனது முதல் 5 சதங்களை ஐசிசி தொடர்களில் மட்டும் அடித்தது இல்லை. வங்கதேசத்தின் மகமதுல்லா 4 சதங்கள் மட்டுமே ஐசிசி தொடர்களில் அடித்தநிலையில் அதையும் ரவீந்திரா முறியடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபியில் மட்டும் ரவீந்திராவின் சராசரி 67 ஆக இருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நேற்று 3வது சதத்தை வில்லியம்ஸன் பதிவுசெய்தார் வில்லியம்ஸனின் ஹாட்ரிக் சதங்கள் கேன் வில்லியம்ஸன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சதத்தை பதிவுசெய்தார். ஏற்கெனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் சதத்தையும் (109), பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2வது சதத்தையும் (133), நேற்று 3வது சதத்தையும் வில்லியம்ஸன் பதிவுசெய்தார். அது மட்டுமல்லாமல், வில்லியம்ஸன் இந்த போட்டியில் முதல் 57 பந்துகளில் மெதுவாக பேட் செய்து 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் மட்டுமே சேர்த்து 70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அடுத்த 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து சதம் விளாசினார். இது தவிர, நடுவரிசை பேட்டர்கள் டேரல் மிட்ஷெல்(49), கிளென் பிலிப்ஸ்(49) இருவரும் கேமியோ ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லாகூரின் தட்டையான மைதானத்தை நன்கு பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும், கேப்டன் சான்ட்னர், முக்கிய விக்கெட்டுகளான பவுமா, வேன்டர் டூ சென், கிளாசன் விக்கெட்டுகளைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?5 மார்ச் 2025 ரமலான் நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு முறை என்ன?5 மார்ச் 2025 நியூசி-தெ. ஆப்ரிக்கா பந்துவீச்சு ஒப்பீடு நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 28 ஓவர்களை வீசி, 143 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய அளவு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைகூட சாய்க்கவில்லை, 93 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி 269 ரன்களை வாரி வழங்கினர். இதில், 3 ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 70 ரன்களுக்கு மேல் வழங்கினர். தென் ஆப்ரிக்க அணியின் டாப்ஆர்டர் பவுமா(56), வேன்டர் டூசென்(69) ஆகியோர் தவிர, நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு முக்கியக் காரணம். 21-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்தது, 116 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதேசமயம், இதே ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்து, டெத் ஓவர்களை அருமையாகப் பயன்படுத்தியது. ஆறுதல் தந்த மில்லர் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு நேற்று ஒரே ஆறுதலான அம்சம், டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தது மட்டும்தான். சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த பேட்டர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். இதற்கு முன் சேவாக் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அதை மில்லர், இதற்கு முன் ஜோஸ் இங்கிலிஸ் முறியடித்தனர். டெய்லெண்டர் லுங்கி இங்கிடியை வைத்துக்கொண்டுதான் மில்லர் தனது சதத்தில் 96 சதவிகித ரன்களையும் சேர்த்தார். 10-வது விக்கெட்டுக்கு இங்கிடி, மில்லர் 56 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 54 ரன்கள் சேர்த்தபோது இங்கிடி ஒரு ரன் சேர்த்தார். மில்லர் தனது கடைசி 26 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தார் தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு காரணம் என்ன? தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் தோல்வியும் பிரிக்க முடியாததாகவிட்டது. இதுவரை பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்றிருந்தாலும், அரையிறுதி கடந்தது மிகச்சிலமுறைதான். அரையிறுதியோடு தென் ஆப்பிரிக்கா தனது போராட்டத்தை, பயணத்தை முடித்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. இதுவரை 11 முறை ஐசிசி நாக்அவுட் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அதில் 2 முறைதான் வென்றுள்ளது. 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இதைக் கடந்து பெரிதாக கோப்பையை வெல்லவில்லை. 2வது கோப்பையை நோக்கிய பயணம் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் தொடர்கிறது. கடைசி 5 அரையிறுதிகளில் ஒன்றில்கூட தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை. வலிமையான வேகப்பந்துவீச்சு, விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் இதுபோன்ற முக்கியத்துவமான போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஆடுகளத்தைப் பயன்படுத்தி நேற்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யவில்லை, லைன் லென்த்தில்கூட பெரும்பாலும் வீசவில்லை, தட்டையான ஆடுகளத்தில் வேகத்தை அதிகப்படுத்தி, பவுன்ஸராக வீசியது நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எளிதானது. தென் ஆப்பிரிக்க பேட்டிங்கும் தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கேப்டன் பவுமா, வேண்டர் டூ சென் ஆடினர். 143 ரன்களுக்கு 2 விக்கெட் என, நியூசிலாந்து ரன்ரேட்டுக்கு இணையாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது. ஆனால், டூசென் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் தொடர்நது விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக 161 ரன்களில் இருந்து 218 ரன்களுக்குள், அதாவது 57 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணம். நடுவரிசை நம்பிக்கை பேட்டர்கள் மார்க்ரம் (31), கிளாசன்(3), முல்டர்(8), யான்சென்(3) ரன்கள் சேர்த்து ஏமாற்றினர். லாகூர் ஆடுகளம் தட்டையானது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்கூட நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் இருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். இதே மைதானத்தில்தான் இங்கிலாந்தின் 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. தென் ஆப்பிரி்க்காவின் கிளாசன், மார்க்கரம் ஆகிய இரு பெரிய பேட்டர்களும் நிலைத்து பேட் செய்திருந்தால் அடுத்தடுத்து அழுத்தத்தைக் கொடுத்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருக்கலாம். க்ளோயி ஸாவ்: 'நான் மனிதனாக நடத்தப்பட வேண்டும்' - ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கக் கட்டிகளை உடலில் மறைத்து வைத்து கடத்தி வந்தாரா? என்ன நடந்தது?5 மார்ச் 2025 பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிளாசன் 'பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம்' தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், "நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு சற்று அதிகம்தான். நாங்களும் சிறப்பாகவே பேட் செய்தோம் என நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 350 என்பது அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். இன்னும் இரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், டூசென், எனக்கும் தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 35 ஓவர்கள் வரை நானும், டூசெனும் பேட் செய்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பேட்டிங்கில் நடுவரிசை ஏமாற்றமளித்தது" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vydkwx8ezo
  31. கொழும்பிலிருந்து புறப்படும்போது யாழ்ப்பாணத்தில் ரிக்கட் ரெடியாக இருக்கும்.
  32. ஏதாவது...ஒரு கேள்விக்கு 26 புள்ளி கிடைக்குமோ ..ஒருவர் தொடங்கின நாள் முதல் அடியில் முதலாவது ஆளாய் இருக்கிறார்...அல்லது போட்டி நடத்துபவர் என்ற தார்மீக சிந்தனையில்...பிழையான விடைகளை எழுதி பின்னடிக்கிறாரோ..
  33. எல்லோரும் வழக்குகள் விசாரணை செய்ய கூடாது என்றால் இந்தியாவில் நீதிமன்றம்களும். சட்டக்கல்லுரிகளும். சட்டத்தரணிகளும். தேவையில்லை அனைவரும் விருப்பம் போல் வாழ்ந்து விட்டு போகலாம்
  34. போட்டி எப்பிடிப் போனாலும், அவன் அவனுக்கு அவனின் கவலை. விளையாட்டின் புதிர்களில் ஒன்று.
  35. வாழ்த்துக்கள் முதல்வர் எப்போதும் தமிழன் ..........!
  36. தென்னாப்பிரிக்கா வென்று இருந்தால் 3 புள்ளிகள் கிடைத்திருக்கும். அத்துடன் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா இருந்திருக்கும். நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் 🤔
  37. @Eppothum Thamizhan தான் இப்போதும் முதல்வர். வாழ்த்துக்கள் சகோதரம்.
  38. அண்ணனுக்குப் பின்புலம் பெரும்பலம் என்பதால் நிச்சயம் தமிழீழம் சாத்தியமாகும். அதனால்தானே அண்ணன் அறப்பிழை செய்தாலும் காணாமல் இருக்கின்றோம், முட்டுக்கொடுக்கின்றோம்..🤭 நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.. நம் கனவு அண்ணன் தயவால் பலிக்கும்🥳
  39. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி ரச்சின் ரவிந்திராவினதும் கேன் வில்லியம்ஸினதும் செஞ்சுரிகளுடனும் க்ளென் பிலிப்ஸின் அதிரடியான 49 ஓட்டங்களுடனும் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி சவாலான ஓட்ட இலக்கை அடித்தாட முடியாதவாறு நியூஸிலாந்து சுழல் பந்துவீச்சு இருந்தது. டேவிட் மில்லர் மாத்திரம் அடித்தாடி செஞ்சுரி அடித்தாலும் பிற வீரர்களின் ஒத்துழைப்பின்மையால் 312 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்த @சுவைப்பிரியன் க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  40. சமாதான தேவதையும் பிசாசுகளும்! sudumanal கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு. இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளிலும் காலங்காலமாக தொடர்கிற ஒன்று. இந்த இரட்டைத்தன்மை வாய்ந்த இராஜதந்திர வடிவத்தின் சம்பிரதாய மீறலானது வெளிப்படையில் செலன்ஸ்கியை அவமானப்படுத்தியதாக எம்மை வந்தடைகிறது. கணவன் மனைவி சண்டையை வீதிக்கு கொண்டுவருவது போன்ற செயல்தான் அன்று நடந்தது. இது திட்டமிடப்பட்டு ட்றம்ப் குழுவால் நிகழ்த்தப்பட்டதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கள்ளத்தனமான செயற்பாட்டை செலன்ஸ்கி ஓர் இராஜதந்திரியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தவிர்த்திருக்க முடியும். அதே பாசாங்கை அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் நேரடித்தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். போரில் நலிந்துபோய் செய்வதறியாது பரிதவிக்கும் ஒரு நாட்டுத் தலைவரின் உளவியல் அழுத்தத்தை நாம் புரிந்துகொண்டால், அவர் அவ்வாறு பேசத் தலைப்பட்டதையும் புரிந்துகொள்ளலாம். இந்த உளவியலை ஒரு கருவியாக ட்றம்ப் குழு பாவித்து உணர்ச்சிமயமான சூழலுக்குள் தள்ளினார்கள். அவரது உடை குறித்தும்கூட அங்கு நின்ற செய்தியாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) பிரஸ்தாபித்து, அது அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றது என்று முட்டாள்தனமாக சொல்லவும் செய்தார். இந்த ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்குள் செலன்ஸ்கி வீழ்ந்தார். ட்றம்ப் “உன்னிடம் துருப்புச் சீட்டு இல்லை. அது என்னிடமே இருக்கிறது” என சொன்னபோது, செலன்ஸ்கி அதை தனது நிலையில் நின்று புரிந்து, “இது துருப்புச் சீட்டு விளையாட்டல்ல. நான் சீரியஸாக பேசுகிறேன்” என அர்த்தப் பிறழ்வோடு சொல்ல நேர்ந்தது. அதை நாம் புரிந்துகொண்டே ஆக வேண்டும். ஐரோப்பாவில் நின்று வீரம் பேசிய பிரான்சின் மக்ரோனும் பிரித்தானியாவின் ஸரார்மரும் தனித்தனியாக ட்றம்பை சந்தித்தபோது சம்பிரதாய நடிப்பை செவ்வனே செய்துவிட்டுத்தான் வந்தார்கள். அடிக்கடி ஒவ்வொரு கோணத்தில் கையைப் பிடிப்பது, தோளில் தட்டுவது, தடவுவது, துடையில் தொட்டு கதை சொல்வது, வெகுளித்தனமாக இளிப்பது என அவர்கள் காட்டிய உடல்மொழி கேவலமாக இருந்தது. இது செலன்ஸ்கிக்கு வாய்க்கப் பெறவில்லை. ஓவல் அலுவலக சந்திப்பிலிருந்து கோபத்தோடு வெளியேறிய செலன்ஸ்கியை அந்த சூடான வார்த்தைப் பரிமாறல்களின் ஈரம் காயுமுன்னர், பிரித்தானிய பிரதமர் ஸ்ராமர் அழைத்து கட்டியணைத்து வரவேற்றார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் கனடா தலைவர் ஆகியோருடனான ஒரு திடீர் சந்திப்பை இலண்டனில் நிகழ்த்திக் காட்டினார். “இந்தா பார் நீ உதாசீனப்படுத்திய செலன்ஸ்கியை நாங்கள் கௌரவித்துக் காட்டுகிறோம்” என ஒரு வீம்புச் செய்தியை ட்றம்ப் க்கு காட்ட வேண்டும் என்பது போல் அது இருந்தது. அதைத் தாண்டிய பிரச்சினை என்னவென்றால் இந்த சுடுதண்ணிச் செயற்பாடானது செலன்ஸ்கியை இன்னொரு பொறியுள் விழ வைத்திருக்கிறது. ஒரு கையால் இராணுவ உதவிகளை கொடுத்தபடி, இன்னொரு கையால் சமாதான முயற்சி செய்யும் விநோதமான அணுகுமுறை ஸ்ராமரினதும் மக்ரோன் இனதும் திட்டமாக இருப்பது ஒரு முரண்நிலை செயற்பாடாகும். அத்தோடு சமாதானப் படை என்ற பெயரில் ஸ்ராமரும் மக்ரோனும் உக்ரைனுக்கு படை அனுப்ப துடியாய்த் துடிக்கிறார்கள். ஒரு நிழல் போரை நடத்தி உக்ரைனை இந்தப் பேரழிவுக்குள் விட்டுவிட்டவர்கள் அவர்கள்!. உக்ரைனுக்கு படையனுப்பி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்நிபந்தனையாக சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு ஐநா என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. இவர்கள் நினைப்பதுதான் சர்வதேச விதிகள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். ஐநா அனுப்பிய அப்படியான படைகள் பிரச்சினைக்குள் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு செக்குமாடாய் செயற்பட்டது இன்னொரு வரலாறு. உருப்படியாக எதுவும் நடந்ததில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றால் பண்பாட்டு ரீதியில் பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது. அத்தோடு சமாதானப்படை அனுப்பும் முயற்சியை ரசியா நேற்றோவின் விஸ்தரிப்புவாதமாக எடுத்துக் கொள்ளவே செய்யும். இது சமாதானத்தை கேள்விக் குறியில் நிறுத்திவிடும். சமாதானம் என்பது இப் பிரச்சினையின் மூலவேர்களை கண்டறிந்து அதை களைவதில்தான் நிலைத்து நிற்கும். ஐரோப்பாவின் செயற்பாடு இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமாதானம் அல்ல முக்கியம். “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்ற தமது இலக்கை முடிந்தவரை உக்ரைன் மக்களின் சாம்பலிலிருந்தாவது உயிர்ப்பித்து அடையத் துடிப்பதுதான். “ரசியா சோவியத் யூனிய சாம்ராச்சியத்தை மீண்டும் நிறுவத் துடிக்கிறது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அழித்தொழிக்கக் கூடியது. உக்ரைனின் போராட்டமானது எங்களுக்கும் (ஐரோப்பாவுக்கும்) சேர்த்த போராட்டம்தான்” என அவர்கள் மக்களின் மூளைக்குள் கட்டியெழுப்பத் துடிக்கும் கதையாடலில் உண்மையில்லை என்பது இந்தத் தலைவர்களுக்குத் தெரியும். இதற்கு புட்டின் போர் ஆரம்பித்தபோதே பதில் கூறியிருந்தார். “சோவியத் இன் அழிவு குறித்து கவலைப்படாதவருக்கு இதயம் இல்லை. சோவியத் மீண்டும் உருவாகும் என சொல்பவர்களுக்கு மூளை இல்லை” என்றார். சோவியத் இன் அழிவு 1990 இலிருந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை நிறுவியது. எதிர்க் கடை இல்லாத வியாபாரமாய் அடுத்தடுத்து அமெரிக்கா போர்களை உற்பத்திசெய்து விற்றது. இவைதான் இந்தக் காலப் பகுதியில் நடந்த துயர நிகழ்வுகள். இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இறைத்த இராணுவ உதவிகளானது போரில் ரசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோதும் கூட, இப்போ அமெரிக்கா இல்லாத இந்த கூட்டணியால் என்னத்தை பிடுங்கிவிட முடியும். அது அவர்களுக்குத் தெரியாததல்ல. இது செலன்ஸ்கிக்கு தெரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. அன்றைய இலண்டன் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அரைவாசி நாடுகளுக்கு மேல் பங்குபற்றவில்லை. அநேகமும் அந்த நாடுகள் ஏழை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஹங்கேரியின் பிரதமர் விக்ரன் ஓவன் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் “போர் வெறியர்கள்” என பேட்டியொன்றில் மிக அண்மையில் சொல்லியிருக்கிறார். இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் ட்றம்ப் க்கு ஆதரவாக இருக்கிறார். ஜேர்மனி சமாதானப் படை அனுப்ப தயங்குகிறது. இவ்வாறாக, பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் பெரியண்ணன் இல்லாத நேற்றோவானது பலத்தை இழக்க நேர்ந்துள்ளது. (அது சிலவேளை ட்றம்ப் ஆட்சிக் காலத்தின் பின் மீண்டும் தடத்தில் ஓடலாம்). இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய நிதி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட அதிகமானதாகும். சுயத்தை அமெரிக்காவிடம் அடகுவைத்திருக்கும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதம் அரைவாசியும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவுக்கென சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்ளை கூட இல்லை என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள். இந்த சீத்துவத்துள் தோல்வியடைந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு (பிரித்தானியா உட்பட்ட) ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதாக செலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். தலைவர்கள் தேர்தலில் முளைத்து தேர்தலில் மறைபவர்கள். அவர்கள் வருவர், போவர். உக்ரைன் போரால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. அந்த நாட்டின் இராணுவம் உட்பட மக்களின் உயிர்கள் திரும்ப முளைக்கப் போவதில்லை. எல்லாமே சுரண்டல்தான். எரியிற நெருப்பில் எஞ்சியதை பிடுங்கிற எத்தனம். பெரும் கனிம வளங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிற உக்ரைனின் வளங்களை கொள்ளையிடும் நுட்பம் தெரிந்தவர்கள் அவர்கள். உதவியளிக்கிறோம் என சொல்லி உக்ரைனுக்குள் ஆயுதங்களை இறைத்துவிட்டு, இப்போ தாம் வழங்கிய உதவிக்கு உக்ரைனின் வளங்களை பிய்ச்சுப் பிடுங்கிற போட்டியில் இறங்கியிருக்கிறார்கள், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும்!. இனி ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கிளம்பலாம். போரில் அழிவுண்ட ஒரு நாடு தன்னை கட்டியெழுப்ப அதன் கனிமவளங்கள் உதவும் என்ற ஓர் அறம்கூட இந்த நாடுகளிடம் கிடையாது. காலனிய காலத்திலிருந்து அவர்களின் மூளையைத் தொடரும் களவு மனநிலையும் அதிகாரத்துவ உளவியலும் நீங்கப் போவதில்லை என்பதை இது காட்டுகிறது. பிரித்தானியா இப்போ பார்த்திருக்கும் வேலை இன்னமும் உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற வேலை. ரசியா மீதான பொருளாதாரத் தடை மூலமாக உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசிய சொத்துகளிலிருந்து (சர்வதேச விதிமுறைகளை மீறி) 2.84 பில்லியன் பவுண்ட்ஸ் இனை எடுத்து உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. இது புதிய சிக்கல்களை உருவாக்க வல்லது. சமாதானப் பாதைக்கு குறுக்கே போடப்படுகிற பாறாங் கற்கள் இவை. மக்ரோன் ட்றம்ப் இனை சந்தித்தபோதும் ரசியாவின் உறைநிலை சொத்துக் குறித்து தடுமாற்றத்துடனும் வெகுளித்தனமான அவரது உடல்மொழியுடனும் ஒன்றைச் சொன்னார். தாம் உறைநிலையில் வைத்திருக்கும் ரசியாவின் சொத்துக்களை தாம் எடுப்பது சர்வதேச விதிமுறைக்கு முரணானதுதான் என்றாலும், தாம் உக்ரைனுக்கு அளித்த உதவிக்காகவும் உக்ரைனை ரசியா அழித்ததற்காகவும் அதை தமக்கு விட்டுக் கொடுத்தால் super என சொன்னார். அதன்போதுதான் ட்றம் “ஓம் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கடை பணத்தை திருப்பி எடுக்கப் பார்க்கினம்.. எடுப்பினம்” என நையாண்டி செய்யும் உடல் மொழியில் சொன்னார். உடனே மக்ரோன் “இல்லையில்லை. நாம் உக்ரைனுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் உதவியாகவும் அதாகவும் இதாகவும்..” என சொற்களை தடுமாறவிட்டுக் கொண்டிருந்தார். உக்ரைனின் கனிமவள பேரத்தில் (அமெரிக்காவுடன்) பிரித்தானியாவும் பிரான்சும் பங்கெடுக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து ஐரோப்பா சார்பாக சமாதான வரைவு ஒன்றை தயாரித்து அதை நேரில் ட்றம்ப் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம் என்கிறார்கள். உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை தந்தால், தான் கையெழுத்திடுகிறேன் என செலன்ஸ்கி சொல்லியிருந்தார். ட்றம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.கனிமவள உடன்படிக்கையில் செலன்ஸ்கி கையெழுத்திடாமல் அமெரிக்காவிடமிருந்து தப்புவது கடினம். அதேபோல் அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு செலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டாவிட்டால் அவரின் பதவி கைமாறப்பட்டு செய்துமுடிக்கப்பட அமெரிக்க உளவுத்துறைக்கு நேரம் ஆகாது. அதனால் செலன்ஸ்கி “மீண்டும் வருகிறேன்” என ட்றம்புக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். தலையை முந்நூற்றி அறுபது பாகையில் திருப்பித் திருப்பி பார்த்தாலும் இதற்குள் ஒளிந்திருக்கும் இரத்தப் பிசாசை கண்டறிய முடியாமல் இருக்கிறது. திரைமறைவில் என்னவெல்லாம் அரங்கேறுகிறதோ தெரியவில்லை. இன்று இறைமை என்பது களவாடப்பட்டு அழகாக உச்சரிக்கப்படுகிற வார்த்தையாக உருமாறியிருக்கிறது. வலிமையற்ற நாடுகளுக்கு இறைமை என்பது சொல் அலங்காரம் மட்டுமே. ஐரோப்பாவே அமெரிக்காவை விட்டு இறைமையுள்ளதாக மாற வேண்டும் என குரல் எழுப்புகிறபோது, வலிமையற்ற நாடுகளுக்கு இது எம்மாத்திரம். வலிமையுள்ளவர்களை சார்ந்திருப்பதே வலிமையற்றவர்களின் இறைமை என்பதுதான் ஓரவஞ்சனையான அரசியல் நியதியாக உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காப்பாற்ற உக்ரைனுக்குள் -அதாவது ரசிய எல்லைவரை- படையனுப்பத் துடிப்பவர்கள், ரசியா தனது பாதுகாப்பு உத்தரவாதம் கருதி உக்ரைன் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருக்கக் கோருவதை எந்த தர்க்கம் கொண்டு நிராகரிக்கிறார்கள். உதாரணத்துக்கு பிரான்ஸின் எல்லையோரம் ஏதாவதொரு நாட்டில் ரசியாவோ சீனாவோ படைத்தளம் அமைத்து ஏவுகணையை அல்லது அணுவாயுதத்தை நிற்பாட்டினால், பிரான்ஸ் அமைதியாக இருந்துவிடவா போகிறது. ஆக, போரற்ற உலகில்தான் சமாதானம் உயிர்வாழும். மனிதகுலம் மேம்படும். இது யதார்த்ததில் சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது. வலியவர்களின் உலகம் இது. அவர்களுக்கொரு நீதி. மற்றவர்க்கொரு நீதி. எனவே இதற்குள் இராஜதந்திரம் என்ற வெட்டியோடல்தான் ஜனநாயக மேக் அப். “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என எந்த நாடோ விடுதலை இயக்கமோ பயணிக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. உக்ரைனுக்கும் இது விதிவிலக்கல்ல. எதிர்கால உக்ரைனாக மாறும் அபாயமுள்ள தாய்வானுக்கும் இது விதிவிலக்கல்ல. சோவியத் அழிவோடு வார்சோ ஒப்பந்த நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோதே “நேற்றோ” மரணப் படுக்கைக்குப் போயிருக்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க நேற்றோ விஸ்தரிப்பு தேவைப்பட்டது. கம்யூனிச பூச்சாண்டி கலைந்தபின் மற்றைய நாடுகள் மேல் அதிகாரம் செலுத்த அவர்கள் தொடர்ந்து காப்பாற்றிய இராணுவ அரக்கன்தான் நேற்றோ அமைப்பு. 1990 க்குப் பின்னான எல்லாப் போர்களையும் இந்த அரக்கனையும் அதன் சாரதியான அமெரிக்காவையும் தவிர்த்து வியாக்கியானப் படுத்தவே முடியாது. எனவே இந்த மேற்குலகிடமிருந்து விடுபட்டு ரசியாவும் உக்ரைனும் -இருவரும் உடன்படக்கூடிய- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பிரச்சினையின் மூல வேர்களைக் களைந்து சமாதானத்தை நோக்கி இயன்றவரை முயற்சிப்பதுதான் சிறந்த வழி! ravindran.pa https://sudumanal.com/2025/03/04/சமாதான-தேவதையும்-போர்ப்/
  41. விபுலாநந்த விலாசம் "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது. பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது." ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன. தமது ஐந்தாம் வயதில் காரை தீவு நல்லரத்தன ஆசிரியரால் எழுத்தறிவிக்கப்பெற்ற மயில்வாகனம், 10 வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் கல்வி கற்று வருகையில் தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச் செய்தார். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர் கொழும்பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென் கோவை கந்தையாப்பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம்.பத்தரிசியார் உயர்தரக் கலாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரியானார். அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார் ( பண்டிதமணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை -1963) அடிகளாரின் சமூகப் பணி வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகளில் சமூகத்துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகித் துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு "செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார். கல்லடி உப்போடையில் தாம் அமைத்த ஆங்கிலப் பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது இவரது ஞாபகார்த்தமாகவே. அதன் பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி, கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலீடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலாநந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். "நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்" என்றார். "பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்" என்றுமுரைத்தார். ஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் 1917-1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். கடமையொழிந்த வேளைகளில் வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் "பெரியகோயில் வாத்தியார்" எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது இந்த மனித நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலாநந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள் , நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன. தாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒருகாலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வி தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார், அறிவியற் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடனும் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் விபுலாநந்தர். மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலாநந்த அடிகளாரின் 60 வது நினைவை முன் கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கெளரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அடிகளாரின் இலக்கியப் பணி "சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர். "சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. "ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்" என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது. (செ.க.சித்தனின் மே 22, 2006 வலைப்பதிவில் இருந்து) அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார். 1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கின்றார். அதில் நூலாசிரியர் ஈழத்துப் பூராடனார் விபுலானந்த அடிகளாரை நேரிற் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லையாயினும், அவரது நேரடி வாரிசான புலவர்மணி. ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றதும், அடிகளாரின் சகோதரியின் புதல்வன் திரு பூ.சுந்தரம்பிள்ளையுடன் உடன்சாலை மாணாக்கனாக நெருங்கிய நட்புக்கொண்டிருந்ததும் இந்த நூல் உருவாக்கத்திற்கு உசாத்துணையாக அமைந்ததாகக் கூறுகின்றார். அடிகளாரின் மதங்க சூளாமணியை ஆய்வு செய்து ஆய்வு செய்தும், மறு பதிப்பு செய்தும் அதன் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு 800 வெண்பாக்கள் அடங்கிய கூத்தர் வெண்பா என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல், மதங்க சூளாமணியின் இரண்டாவது பாகமான வடமொழி நாடகவியலின் தமிழாக்கத்தின் உரை நடையை விருத்தங்களாகச் செய்து கூத்தர் விருத்தம் ஆகிய நூல்களையும் செய்துமுடித்திருக்கின்றார் ஈழத்துப் பூராடனார். விபுலாநந்தர் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு செய்யுட்களிலும்: 1. அடிகளாரின் வரலாறு 2. அடிகளாரின் தாயக வளம் 3. அவரின் போதனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஈழத்துப் பூராடனார் இந்த விபுலானந்தர் பிள்ளைத் தமிழில் "நான் கண்ட விபுலாநந்த அடிகளார்" என்ற தலைப்பின் கீழ் இப்படித் தருகின்றார். மீன் பெண்ணுருவில் நீரரர்கள் மீட்டு மிசையில் விளரிப்பண் மிளிருஞ் சேதி விபுலானந்தர் மிடையக் கேட்டேன் இளம் வயதில் தேன் மது சொரியும் இலக்கியத்தின் திகழுஞ் சுவைக்கோ ருரைப்பகுதித் திரட்டா நமுரைநடைச் சிலம்பதிலே திருவடி பொழிவதன் சுவைகண்டேன் மான்கள் மருளும் மதர் விழி வாழ் மட்டக்களப்பின் திருமகனை மற்றும் நேரிற் கண்டிடாத மருளிற் காலம் மடிய நின்றேன் வான்மழை எனவவர் வருவார் ஓர் கால் வந்தித் திடுவேன் எனவிருந்து வள்ள லமரராய் ஆன பின்னே வாய்த்ததி தருணம் வலிந்துருட்டே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழி இலக்கிய பாடத்திற்குத் தோற்றும் மாணவர்களுக்கு அருட்டிரு விபுலாநந்த அடிகளாரின் "கங்கையில் விடுத்த ஓலை" ஒரு பாடப் பகுதியாக இருந்தது. அந்தக் கவிதை நயத்தை மாணவர்களுக்கு உதவும் வகையில் பொழிப்பும், விளக்கமும் கொண்ட உபநூலை இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்) எழுதி சிறீ சுப்ரமணிய புத்தகசாலை வெளியீடாக அக்டோபர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் முகவுரையில் நூலாசிரியர் திரு த.துரைசிங்கம் அவர்கள் இவ்வாறு கூறிச் செல்கின்றார். அடிகளாரின் "கங்கையில் விடுத்த ஓலை" தனிச்சிறப்பு வாய்ந்தது. இமய மலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலை தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப்புலமையும், தூய்மையான வாழ்வும், சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாடய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது. நெருங்கிய ஒருவர் இறந்தகாலை அவர்க்கிரங்கிப் பாடிய கையறு நிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் "கங்கயில் விடுத்த ஓலை" புதுவகையில், புதுமெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்று முழுதாகக் கையறு நிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குண நலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையினை நினைவு கூருகின்றார். "எழுத்தறிந்து கலைபயின்றோ நின்றமிழினிய நூல் எத்தனையோ வந்தனையு மெண்ணியாழங் கண்டோன் பழுத்த தமிழ்ப் புலமையினோர் பேரவையில் முந்தும் பணிந்தமொழிப் பெரும் புலவன் கனிந்த குணநலத்தான்" "சொல்வகையும் சொற்றொகையுஞ் சொல்னடையுமுணர்ந்தோன் சொல்லவல்லான் சொற்சோராத் தூய நெறியாளன் பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள் பலவெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்" அன்பினால் பிணைக்கப்பட்ட அவரது உள்ளம் நண்பனை நினைந்து நினைந்து உருகுகின்றது. இத்துயரினை ஆற்ற வழியின்றித் தவிக்கின்றார். இமய மலையிலிருந்து வங்கக் கடலை நோக்கிச் செல்லும் புனிதமான கங்கை நதியின் சாரலையடைந்து அதன் அரவணைப்பில் சோகத்தாற் கொதிக்கும் தம்முளத்தை ஆற்றிக்கொள்ள முற்படுகின்றார். "பொங்கியெழுந் துயர்க்கனலைப் போக்குதற்கும் மாயப் பொய்யுலகி னுண்மையினைப் புலங்கொளற்குங் கருதிக் கங்கையெனுந் தெய்வநதிக் கரைப்புறத்தை யடைந்து கல்லென்று சொல்லிவிழும் நீர்த்தரங்கங் கண்டேன்" பொங்கிவரும் கங்கை நதியின் நீரலைகள் போன்று அடிகளாரின் உள்ளத்திலிருந்து துயர அலைகள் பொங்கியெழுகின்றன. அவை கட்டுமீறிப் பாய்கின்றன. "உள்ளத்திருந்தெழும் உணர்ச்சிப் பெருக்கே பாட்டுக்கு நிலைக்களன்" என்னும் ஆங்கிலப் புலவர் வோட்ஸ்வோத்தின் கூற்றுக்கமைய அடிகளாரின் உள்ளத்துணர்வினைப் பாடல்கள் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன. வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும். இதனை அடிகளார் பின்வரும் பாடலில் அழகுற விளக்கியுள்ளார். "இன்பவிளை யாட்டினிடை மேலெழுந்து குதிப்பார் எமக்கு நிக ராரென்பர் இருகணத்தி னுளத்தில் துன்பமுற மண்ணில்விழுந் திருகண்ணீர் சொரியச் சோர்ந்தழுவார் மயக்கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்" நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சியுடன் மனித வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கின்ற அடிகளார் இன்ப துன்பச் சூழலில் அகப்பட்டுத் தவிக்கும் மனிதன் மரணமெனும் கரையில் ஏற்றுண்டு கிடப்பதையும், பின்னர் மறுபிறவியாகிய திரை கவர மீண்டும் பிறந்து இன்பதுன்பங்களில் மூழ்கித் தவிப்பதையும் நினைவூட்டுகின்றார் இப்படி: "மரணமெனுந் தடங்கரையி லெற்றுண்டு கிடப்பார் மறுபிறவித் திரைகவர வந்தியையுங் கருவி கரணமுறு முடலெடுத்து மண்ணுலகி னுழல்வார் காதலிப்பா ரெண்ணிறைந்த வேதனையுட் புகுவார்" ஆசையே துன்பத்திற்குக் காரணமாகும். இந்த உண்மையை "காதலிப்பார் எண்ணிறைந்த வேதனையுட் புகுவார்" என்னும் அடியில் அடிகளார் அழகாகப் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறெல்லாம் வாழ்க்கை நிலையாமையினையும், கல்விச் சிறப்பினையும் தந்து எடுத்துக்கூறியிருக்கின்றார் அடிகளார்.இவ்வுலகில் உள்ளார் அன்னத்தை, கிளியை, முகிலைத் தூதாக அனுப்புவது மரபு. இம்மரபுக்கமையவே அடிகளார் தாம் வரைந்த ஓலையைச் சிவபெருமானின் செஞ்சடையில் வீற்றிருக்கும் கங்கையெனும் தெய்வ நதிமூலம் அனுப்பத் துணிகின்றார். "உள்ளத்திலே உண்மை ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்னும் பாரதியின் வாக்குக்கிணங்க அடிகளாரின் உள்ளத்தெழுந்த உண்மை ஒளி கங்கையில் விடுத்த ஓலையில் நன்கு பிரகாசிக்கின்றது. அடிகளாரின் கவித்திறனை, கற்பனையாற்றலை, தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் கங்கயில் விடுத்த ஒலை, தமிழ் உள்ளவரை அடிகளாரை நினைவூட்டும் என்பது திண்ணம். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும். அடிகளார் விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது அன்னார் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் "யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது. பாரிசவாத்தினால் தாம் பீடிக்கப்பட்டிருந்தும் தமது 45 வருடக்குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில் இருந்த சுவாமி விபுலானந்தர் "யாழ் நூல்" அரங்கேறிய அடுத்தமாதமே முடிவுற்றது. 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி அவர் விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட "வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது" என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. "மஹாகவி" உருத்திரமூர்த்தி அவர்கள் தந்த மெய்யான கவிவரிகளை மீள ஒப்பித்து யூலை 19 அருட்டிரு விபுலானந்த அடிகளாரின் நினைவு நாளில் அவர் தம் சிறப்பைப் போற்றுவோம். "ஆங்கி லத்துக் கவிதை பலப்பல அருமை யாகத் தமிழ்செய்து தந்தனன்; நாங்கள் மொண்டு பருகி மகிழவும் நன்று நன்றென உண்டு புகழவும், தீங்க னிச்சுவை கொண்டவை தானுமே தீட்டினான்: தெய்வ யாழினை ஆய்ந்ததால் ஓங்கி னானின் உயர்வைப் பருகுவோம்! உண்மை யோடவன் நூலும் பயிலுவோம்" வரும் யூலை 19 ஆம் திகதி அருட்டிரு விபுலாநந்த அடிகளின் அறுபதாவது நினைவு தினத்தையிட்டு இப்பதிவை வழங்குகின்றேன். இந்தத் தொகுப்பிற்கு உசாத்துணை மற்றும் புகைப்பட உதவிகள்: 1. அட்டைப்படக்கட்டுரை, மல்லிகை இதழ் மே 1992 2. த.துரைசிங்கம் எழுதிய "கங்கையில் விடுத்த ஓலை" விளக்கவுரை, அக்டோபர், 1991, வெளியீடு: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை 3. ஈழத்துப் பூராடனார் எழுதிய "விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்" மூலமும் உரையும், புதுக்கிய மூன்றாம் பதிப்பு யூலை, 1991, வெளியீடு: நிழல் வெளியீடு கனடா 4. மரகதா சிவலிங்கம் எழுதிய "நாடறிந்த பெரியோர்கள்", ஜனவரி 2002, வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம். 5. சுவாமி விபுலாநந்தர், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, கொழும்பு, தந்துதவியவர்: கனக சிறீதரன் அவர்கள் 6. செ.க. சித்தனின் வலைப்பதிவுக் குறிப்புக்கள் மேலதிக வாசிப்பு மற்றும் கேட்டலுக்கு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலர் - PDF வடிவில் (தந்துதவியவர்: கனக சிறீதரன்) யாழ் நூல் அரங்கேறிய 60 ஆண்டு நினைவில் பி.பி.சி தமிழோசையின் பெட்டக நிகழ்ச்சி தமிழ் விக்கிபீடியா கட்டுரை மற்றும் நூலகத் திட்டத்தின் தொகுப்பு இணைப்பு http://www.madathuvaasal.com/2007/07/
  42. தமிழ்நாட்டில் சித்தர்கள் - பிரமிக்கவைக்கும் வரலாறு - கனல்மைந்தன் https://web.facebook.com/FullyNewsy/videos/6521663491269257/?mibextid=VI5BsZ&rdid=cQbikKgeEdm7xg7G

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.