Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்11Points38754Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்7Points2951Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்7Points16477Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/09/25 in all areas
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
6 pointsசுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.6 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: யாழ் கள போட்டியின் வெற்றியாளர் இன்னும் முடிவாகவில்லை!4 points
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.4 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
3 points
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னா ஒரு மாபியா தமிழ் சிறி அண்ணா.................இவரின் வரலாறு முழுக்க எனக்கு தெரியும் ஆரம்பத்தில் வொஸ் ஒப் அனுஷன் கூட மோட்ட சைக்கில்ல சென்று புலம்பெயர் நாட்டு எம் உறவுகள் கொடுக்கும் காசை மக்களிடத்தில் சென்று கொடுத்தார் ஆரம்பத்தில் நல்ல மாதிரி செய்து விட்டு இடையில் தனது இன்னொரு முகத்தை காட்ட அதோட இவரை பலர் வெறுக்க தொடங்கிட்டினம்...............இப்ப தனது பாதுகாப்புக்காக மூன்று பேருடன் போய் தான் உதவி வீடியோ போடுறார் முந்தி தனி ஆளாய் சென்று கூட உதவி வீடியோ போட்டவர்....................வெளி நாட்டு மக்களின் பணங்களை இவர் சுருட்டி விட்டார் என்று பலர் குற்றச் சாட்டு வைக்கினம்................. 1000ரூபாய்க்கு வழி இல்லாம இருந்த இன்னொரு யூடுப்பர் இப்ப 1கோடி 30 லச்சத்துக்கு கானி வேண்ட வெளிக்கிட்டு பிடி பட்டு போனார் , ஆட்களை வீடியோ பிடிச்சு போடுவது பிறக்கு அந்த கஸ்ரப் பட்ட மக்களுக்கு அந்த உதவி போய் சேருவதில்லை பல குளறு படிகள் செய்து பலரை ஏமாற்றி விட்டார் அவர் வசிப்பது மட்டக்களப்பு தமிழ் சிறி அண்ணா விழிப்புனர்வு தேவை புலம் பெயர் ஈழத்து உறவுகளுக்கு இன்னொரு சின்ன யூடுப்பர் வயதான கஸ்ரப் பட்ட மூதாட்டிய வீடியோ பிடிச்சு போட புலம்பெயர் நாட்டு உறவுகள் அந்த யூடுப்பரை தொடர்வு கொண்டு காசை கொடுத்தவை அந்த மூதாட்டிக்கும் அவான்ட ஊனமுற்ற பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்க சொல்லி , வீடியோவில் காசை கொடுப்பதை காட்டி விட்டு கொடுத்த காசை திருப்ப வேண்டி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார் பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் என்றது போல் கடசியில் பிடி பட்டு விட்டார் அதே யூடுப்பர் மூலம் கனடாவில் வசிக்கும் அண்ணா கஸ்ரப் பட்ட பெண் பிள்ளைக்கு 3லச்சம் அனுப்ப , 3லச்சத்தை அந்த பிள்ளையிடம் கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு 1அர லச்சம் காசை வேண்டி விட்டார் காசு அனுப்பின கனடா அண்ணா மட்டக்களப்புக்கு வந்த பிறக்கு அந்த யூடுப்பருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா தம்பி வெளியில் போயிட்டு வருவோம் என்று , இந்த யூடுப்பர் உடன போக அந்த அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த 3லச்சம் காசு கொடுத்த பிள்ளையின் வீட்டை தன்னை கூட்டிட்டு போக சொல்லி , இந்த யூடுப்பவரும் கூட்டிட்டு போக , கனடா அண்ணா அந்த பிள்ளையிடம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின 3லச்சம் காசு இவர் தந்தவரா என்று அந்த பிள்ளை உண்மைய சொல்லிச்சு மூன்று லச்சம் தந்து விட்டு 1அர லச்சத்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கனடா அண்ணா அந்த யூடுப்பருக்கு அந்த இடத்திலையே நல்ல அடி கொடுத்தார்💪...................... இப்படி பல குளறு படிகள் நடக்குது தமிழ் சிறி அண்ணா இப்ப சம்முக சேவ்வை என்ர பெயரில் காசு பார்க்க பலர் கிலம்பிட்டினம் , புலம்பெயர் உறவுகள் வலு கவனமாக இருக்கனும் கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவனும் என்றால் யூடுப்பர் மார் மூலம் உதவாமல் அந்த கஸ்ரம் பட்ட மக்களின் வங்கிய வேண்டி விட்டு நேரடியா அவையின் வங்கிக்கு காசு அனுப்பலாம் , அல்லது தெரிந்த ஊர் அல்லது சொந்த ஊர் என்றால் சொந்தங்கள் மூலம் அந்த கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவலாம்..........................3 points
-
நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
நாய் என்றதும் பதிலடியை விடலாம் , ஆனால் அவர் குடுக்கிற புள்ளிவிபரங்கள் மறுக்க முடியாதவையாகத்தானே உள்ளது . ........ ஏதோ தெருவில் நின்று பத்திரிகைக்கு பேட்டி குடுக்கேல்ல .......... பார்லிமெண்டுக்குள் நின்று கர்ச்சிக்கின்றாரே ........ இது போன்று கடந்தகாலங்களில் தமிழ் மந்திரிகள் யாராவது கதைத்திருக்கின்றார்களா எனக்குத் தெரியவில்லை......... தனக்கு குடுத்த நேரத்தையும் ஒரு வினாடி கூட விரயமாக்காமல் பெருமழைபோல் பொழிந்து தள்ளி விட்டார் .......... எல்லாரும் வாங்கோ கணக்கு தெரியாட்டில் படிப்பிக்கிறன் என்று வேறு சொல்கிறார் ......... அர்ச்சுனா என்ன வைத்தியரா , ஆசிரியரா ஒன்றுமே புரியல்ல ..........! வெளியே செய்யும் குழப்படிக் கூத்துகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நல்ல மந்திரி கிடைத்திருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது . ........!3 points
-
யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம். சமூக விரோத செயற்பாடு இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சிறப்பு உரிமை பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/2 points
-
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா 9 Mar 2025, 7:34 AM லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், லண்டனில் சிம்பொனி அரங்கேற்றுவதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து இளையராஜா லண்டன் சென்றார். வேலியன்ட் என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் இளையராஜா அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர். இளையராஜா சிம்பொனி அரங்கேற்றம் முடிந்ததும் ரசிகர்கள் கரகோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். மொத்தம் 3,665 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தொடர்புடைய பதிவுகள், வீடியோக்கள் பலவற்றை பதிவேற்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கேள்விகள் 27) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குல்தீப் வந்தாரு. உடைத்தெறிந்தாரு. ரச்சின் போனாரு அறைக்கு பந்து விழுந்து மெதுவானது. ரச்சின் கணிக்கத்தவற, மட்டைக்குள்ளால காலுக்கு மேலே போய் விக்கட்டைத் தகர்த்தது. அருமையான பந்து.2 points
-
பிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika
பிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika
2 points2 points- அல்ஜசீராவில் ரணில்!
1 pointஅல்ஜசீராவில் ரணில்! ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியபொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அதாவது இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்திருகு ரணிலும் மைத்திரியும் பெற்றோர் ஆவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தைக் காட்டிக்கொடுத்தார். மஹிந்தவோடு இணைந்து அதற்கு எதிராகத் திரும்பினார். அதனால் பழி அவர் மீதுதான் விழுந்தது. அதாவது நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார் என்று. ஆனால் இரண்டாயிரத்தி இருபத்தி நாலாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு,யாழ்ப்பாணம் உரும்பிராயில் சுமந்திரனைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? ரணில் விக்கிரமசிங்கதான் அதைக் குழப்பியவர் என்று சொன்னார். ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை உரும்பிராயில் வைத்துச் சொல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு திருநெல்வேலியில்,யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில், ரணிலும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றும் பொழுது என்ன சொன்னார்? 2005 ஆம் ஆண்டு உங்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்கள் என்ற பொருள்பட உரையாற்றினார். இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அதற்கு ரணிலும் பொறுப்பு; மைத்திரியும் பொறுப்பு. மட்டுமல்ல அவர்களோடு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சம்மந்தரும் பொறுப்பு ; சுமந்திரனும் பொறுப்பு. 2015இல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அல்ஜசீராவின் நேர்காணலில் என்ன கூறுகிறார்? பொறுப்புக் கூறல் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகப் பதிலளிக்கின்றார்.தன்னை நேர்கண்ட மஹ்தி ஹசனை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்ன பதில்கள் அவர் பொறுப்புக் கூறலுக்கு உண்மையாக இல்லை என்பதை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அல்ஜசீராவின் “ஹெட் டு ஹிட் “என்ற அந்த நிகழ்ச்சியை ஒரு பேட்டி என்று அழைப்பதை விடவும் குறுக்கு விசாரணை என்றுதான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளை பேட்டி காணச் செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படி எல்லாம் வீட்டு வேலை செய்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு தரமான உதாரணம். வீட்டு வேலை செய்யாமல் கேள்வி கேட்கப் போகும் ஊடகவியலாளர்கள் மஹ்தி ஹசனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ரணிலைக் அவர் பல இடங்களில் திணறடிக்கிறார். ரணிலின் அரசியல் வாழ்வில் அவர் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்ட அல்லது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு நேர்காணல் இருக்க முடியாது. அந்த நேர்காணலைக் குறித்து முகநூலில், ரணிலுக்கு எதிராக முஸ்லிம் நண்பர்கள் அதிகம் விமர்சனங்களைப் பதிவெற்றி வருகிறார்கள். ரணில் அந்த நேர்காணல் முழுவதிலும் தன்னை ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பாதுகாவலனாகவே காட்டிக்கொள்கிறார். அவருடைய லிப்ரல் முகமூடியை மஹ்தி ஹசன் அவமானகரமான விதங்களில் கிழித்தெறிந்து விடுகிறார். அந்த நேர்காணல் முழுவதிலும் ரணில் ராஜபக்சக்களை பாதுகாக்க முயல்கிறார். ஆனால் அதை அதைவிடச் சரியான வார்த்தைகளை சொன்னால் அவர் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்துகிறார் என்பதே பொருத்தமானது. அவ்வாறு நியாயப்படுத்த முற்படுகையில் அவர் போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்குத் தயாரற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூறத் தயாரற்றவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர் அங்கே அவமதிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதியாக அந்த இடத்தில் தோற்றம் தருகிறார்.ஆனால் அவர்தான் 2015 ஆம் ஆண்டு நிலைமாற கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக இருந்திருக்கிறார். எனவே அந்த நேர்காணல் ரணிலை அம்பலப்படுத்தியது என்பதை விடவும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தியிருக்கிறது. லிபரல் முகமூடி அணிந்த தலைவரும் சரி அவ்வாறு முகமூடி அணிந்திராத தலைவர்களும் சரி, இடதுசாரி முகமூடி அணிந்த தலைவர்களும் சரி எல்லாருமே இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பவர்கள்தான்.இதில் இப்பொழுது கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அடங்கும். ரணில் அல்ஜசிராவில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே கடந்த 25 ஆம் திகதி ஜெனிவாவில் புதிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் என்ன சொல்லியிருக்கிறார்?. அதன் பின் கடந்த மூன்றாம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்ட பின் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் என்ன கூறப்பட்டுள்ளது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கு கூறத் தயாராக இல்லை என்பதே ஐநாவில் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் சாரம்.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே பொறுப்புக்கூறாது.அது ராஜபக்சக்களாக இருந்தாலும் சரி,ரணிலாக இருந்தாலும் சரி,சந்திரிகாவாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி, அனுராவாக இருந்தாலும் சரி,யாருமே பொறுப்புக் கூற மாட்டார்கள். இதில் இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் உண்டு. ஐநா கூட்டத் தொடர்களின் போதுதான் சனல் நாலு வீடியோக்கள் வெளிவந்தன.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளிவந்தன. இப்பொழுதும் ஐநா கூட்டத் தொடரின் போதுதான் ரணிலை அம்பலப்படுத்தும் அல்ஜஸீராவின் வீடியோவும் வெளிவந்திருக்கிறது. அது ரணிலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக்கூறும் பண்பு இல்லாதது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.ஐநா கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளா இவை? ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தன? அதேசமயம் மேற்கு நாடுகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன? https://athavannews.com/2025/14244731 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார் பையன் சாரே... மூன்று வருடத்துக்கு முதல் ஓட்டுக்கு மேல ஏறி நின்று கொண்டு போட்ட காணொளிகளை பாருங்கோ அவரின் உள் நோக்கம் எப்படி என்று தெரியும் 3வது காணொளீ... பனங் காணிக்கை சின்ன காடை பொரித்து சாப்பிட்டது....நானு அவர் பான் தானுங்கோ...பின்னர் தகப்பன்,மருமக்கள் , சகோதரிகள்...மச்சான்மாருடன் சேர்ந்து செய்த உருட்டல்கள்..பணப்பறிப்புக்கள் .. வீடு காணி ஒரே ஏமாற்றல்...இப்படி தொடர்கதை1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ.... குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣 20 ம் இடத்தில் நிற்கும் மர்ம ஆசாமி அடுத்த போட்டியில் பங்குபற்றுவதையிட்டு ஆழ்ந்து சிந்திக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.😎 24ம் இடம் நோ கொமன்ஸ்...😂1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 22) இலிருந்து 27) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) New Zealand 362/6 சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன் புலவர் 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) England 179 குறிப்பு: அவுஸ்திரேலியாவின் 109/1 மழையால் தடைப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது. சரியாகக் கணித்தவர்: கோஷான் சே 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) R Ravindra (NZ) 263 சரியாகக் கணித்தவர்: ஈழப்பிரியன் 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) R Ravindra (NZ) 263 சரியாகக் கணித்தவர்கள்: வசீ சுவைப்பிரியன் 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matt Henry (NZ) 10 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Matt Henry (NZ) 10 சரியாகக் கணித்தவர்: நீர்வேலியான்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் கணக்குப் பார்க்கவில்லை. மோகன் களத்தைப் புதுப்பித்து கொண்டு வந்த மாற்றத்தால் கூகிள் ஷீற்றில் இருந்து வர்ணங்களுடன் இணைக்க முடியாது. படமாகப் பதிய நேரம் எடுக்கின்றது!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியாயம் ஏற்புரை ஆற்றுவாரா. ஓரிரு வார்த்தைகள் கேட்க அவா.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன ஒரு ஒற்றுமை எங்களுக்குள்..................ஜந்து புள்ளிய தவிற வேறு புள்ளி கிடைக்க வாய்ப்பில்லை 😁👍 இங்லாந்தை தூக்கி ஓரமாய் போட்டு இருந்தால் முதல் இடம் வந்து இருப்போம் லொள் 😁😁😁😁😁 நான் நினைக்கிறேன் நியாயம் அவர் தான் இந்த போட்டியின் வெற்றியாளர்🙏.....................................1 point- போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
ஒரு வைத்தியரான நீங்களா இப்படி எழுதுவது. சீ செக்சன் புண் ஆற வரும் வேதனை கொஞ்ச நஞ்சமா? எபிடியூரல் கொடுக்கும் முதுகு வலி உட்பட்ட பிரச்சனைகள்? அத்தோடு post natal, pre natal depression ? எமக்கு 50 வருடத்துக்கு ஒருக்கா யுத்தம் வரும் சண்டைக்கு போக வேணும். அவர்கள் பிறப்பதே பிள்ளைபேறு எனும் யுத்தத்துக்காகவே. ஆனால் பெண்களை ஆட்சேர்ப்பில் முதல் ரவுண்டில் சேர்க்காமைக்கு பல காரணங்கள் உள. ஒரு ஆண் இறப்பதை விட, ஒரு பெண் இறந்தால் அது அந்த நாட்டி சனத்தொகை வளர்ச்சியில் பல மடங்கு தாக்கத்தை தரும். யுத்தத்தில் இறக்கும் ஒரு பெண்ணுடன் 3,4 எதிர்கால சிப்பாய்களும்/ பிரசைகளும் சாகிறார்கள். முன்னரங்கை விட, பின்னரங்கில் பெண்கள் வினைதிறனான செயல்படுவர். இந்த வித்தியாசம் கட்டாயமாக சேர்க்கப்படும் காலாட்படையினருக்கு மட்டுமே. தாதிகள், வைத்தியர், பைலட், மாலுமிகள் பெண்களும் முன்னரங்கு போவார்கள்.1 point- பிட்டுக்கு மனம் சுமந்து
1 pointகாலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும். முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது. அங்கு இளமைக் காலத்தில் வசித்தாய். முப்பத்தைந்து கடந்தபின் இந்த நாட்டுக்கு வந்தாய். வயது போகப் போக உடலும் மனமும் சேர்ந்து வலிமை இழக்கும் என்பது தெரியாதா” என யாரோ கேட்பதுபோல் இருக்க, தூக்கக் கலக்கத்திலும் முகம் சிரிப்பில் விரிகிறது. ஐம்பத்தைந்து கடந்துவிட்டதா எனக்கு? திருமணமாகிப் பிள்ளைகள் பெற்று அவர்களை வளர்த்து திருமணமும் செய்துகொடுத்தபின்னும் மனமும் உடலும் அப்படியே இருக்குமா என்ன? மனதில் வலுவும் பதினெட்டு வயதேயான நினைப்பும் இன்னமும் இருக்கிறதுதான். ஆனாலும் இடைகிடை ஒன்றிரண்டு நோய்களும் வந்து உனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது என்பதை நினைவுபடுத்தியும் விடுகிறது. நாமென்ன ஆண்களைப்போல் வேலைக்கு மட்டுமா போய் வருகிறோம். சமையல் வேலை, வீடு துப்பரவாக்கும் வேலை, உடுப்பு வோசிங்கிங் மெசினில்போட்டு எடுத்துக் காயவிட்டு அயண் செய்து மடித்து வைத்து........... இன்னும் எத்தனை எத்தனை இருக்கு. என் அயலில் வாழும் பல தமிழ்ப் பெண்கள் வேலைக்கே போகாமல் வீட்டில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்தான். அவர்கள் அதிட்டசாலிக்கள்தான் என மனம் எண்ணினாலும் எப்படித்தான் அவர்களால் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடிகிறது எனவும் எண்ணியவுடனேயே அவர்கள்மேல் ஒருவித இரக்கமும் ஏற்படுகிறது. உடனேயே உன்னில இரக்கப்பட யாருமே இருந்ததில்லை. இப்ப நீ யாருக்கோ இரக்கப்படுகிறாயா என்கிறது மனம். வெளிநாடு வந்த நாளில் இருந்து கணவர் குடும்பத்துக்கு மாதாமாதம் பணம் அனுப்புவது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. நான் அதை ஒருநாளும் தடுத்ததும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்ததும் எனது சம்பளம் முழுவதுமே கணவனிடம் போய்விடும். எனக்கு எதுவும் தேவை என்றால் கூட அவரிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். என் குடும்பமும் ஊரில இருக்கு. ஒரு கொஞ்சக் காசு அனுப்புவம் என்று நினைத்தால் கூட கையில் காசு இருக்காது. ஒருதடவை மனிசன் மகிழ்வாக இருந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு ஒரு இருபதாயிரம் அனுப்பட்டே என்று கேட்டதுதான். ஏன் கொப்பா வேலை செய்யிறார் தானே. அவைக்கு எதுக்குக் காசு என்று முகத்தில அடிச்சதுபோல சொல்ல, ஏன் உங்கடை அப்பாவும் வேலை செய்யிறார்தானே. நீங்கள் ஏன் அனுப்புறியள் எண்டதுக்கு கன்னத்தில விரல் அடையாளம் வந்ததுதான் மிச்சம். அதுமட்டுமில்லாமல் ஒருகிழமை மனிசன் என்னோடை கதைக்காமல் திரிய அதுக்குப் பிறகு நான் கேட்டதுதான் தப்போ என்று எனக்கே யோசினை வந்திட்டிது. லண்டன் வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் துணிவு வந்தது. அதுக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஐந்து நாளும் மனிசன் பதிஞ்சு வேலை. எனக்கு ஓரிடத்தில களவாய் வேலை. கையில காசு தருவினம். இவர் காலையில போனால் பின்னேரம்தான் வீட்டை வருவார். இவருக்குச் சொல்லாமல் இரண்டு மணிநேரம் அதிக வேலைசெய்து சேர்த்து வச்சு அம்மாவுக்கு அனுப்பியதை இப்ப நினைக்க கோவம்தான் வருது. எப்பிடி ஒரு துணிவில்லாத ஆளாய் இருந்திருக்கிறன். பிள்ளையள் எல்லாம் வளர வளர எனக்கும் கொஞ்சம் துணிவு வந்தது. என் உள்ளக் கிடக்கையை பிள்ளையளுக்கு சொல்லி அழ, அவைதான் “அம்மா இரண்டு பேருக்கும் சமமான உரிமை இருக்கு. நீங்களும் கஷ்ரப்பட்டுத்தானே வேலை செய்யிறியள். அப்பாவுக்குச் சொல்லிப்போட்டே அம்மம்மாவுக்கு காசை அனுப்புங்கோ” என்று சொன்ன துணிவில பிள்ளையளுக்கு முன்பாக கணவரிடம் கேட்க, வழமைபோல் மறுத்த கணவரை எதிர்த்து பிள்ளையள் நியாயம் கதைக்க, ஒண்டும் சொல்லாமல் போன மனிசன் வழமைபோல் என்னோடை கதைக்காமல் திரிய, நானும் அவரைக் கண்டுகொள்ளாமல் காசை அனுப்பியது மட்டுமல்லாமல் எனக்கு அவரோட கதைக்காமல் இருக்க ஏலும் எண்டு காட்டிய பிறகுதான் மலையேறின சாமி இறங்கினது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்கள் பலரும் மனைவியருக்கு உதவி செய்கின்றனர் தான். ஆனாலும் மனமிருக்கும் எல்லோருக்கும் உதவி செய்ய நேரம் இருக்கவேண்டுமே. மனிசன் கூட என்னிலும் நன்றாகப் புரியாணி செய்வார். பிள்ளைகள் கூட அப்பாவின் புரியாணி சுவையாக இருக்கு என்று என் முன்னாலேயே கூறும்போது சிறிது கோபம் எட்டிப்பார்க்கும். இத்தனைகாலம் மூன்று நேரமும் சமைத்துக் கொடுக்கிறேன். ஒருநாள்க் கூட இப்படிக் கணவரோ பிள்ளைகளோ புகழ்ந்ததில்லை. நன்றி கெட்டவர்கள் என்று அவர்களைத் திட்டவேண்டும் என்று மனதில் சிறிது கோபம் கூட எழும். சரி போகட்டும் என அடக்கிக் கொள்வேன். நான் எழுந்து பல் தீட்டிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் முடங்கிக் கொள்கிறேன். இன்று வேலை இல்லை. இன்னும் சிறிது நேரம் படுத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அதையும் இதையும் நினைத்தபடி படுத்திருக்க கணவரின் போனில் அலாரம் அடிக்கிறது. நான் கேட்காததுபோல் கண்களை மூடியபடி கிடக்கிறேன். எழுந்த கணவர் பல் தீட்டிவிட்டு வந்தவர், அறையின் திரைச் சேலைகளை இழுத்து ஒதுக்க வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. “இன்னும் நீ எழும்பேல்லையே. நான் தேத்தண்ணி ஊத்தியிருப்பாய் எண்டு நினைச்சன்” “இண்டைக்கு எனக்கு வேலை இல்லை. நீங்கள் ஊத்த ஏலாதே” “நீ ஊத்துறமாதிரி வராது. உன்ர கையால குடிச்சாத்தான் குடிச்சமாதிரி இருக்கும்.......எழும்பு. சுடுதண்ணிப் போத்தலிலும் போட்டு வை. நான் வெளிக்கிட்டு வாறன். சாப்பாடுப் பெட்டியும் என்ர பாக்கில கிடக்கு. கழுவிப்போட்டு சாப்பாட்டையும் போட்டு வை” ஒரு நாளைக்கு எண்டாலும் கொஞ்ச நேரம் படுக்க விடாயினம். ஏன் அவர் ஊத்தினால் தேத்தண்ணி கோப்பியாய் மாறீடுமோ? வேலைக்குப் போக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு. நீங்களே போட்டுக்கொண்டு போக ஏலாதா என்று கேட்போம் என்று எண்ணியும் வார்த்தைகள் மனதுள்ளேயே சிக்கிக்கொள்கின்றன. எனக்கும் யாராவது தேத்தண்ணியோ கோப்பியோ ஊத்திக்கொண்டுவந்து ஒருநாளாவது தராயினமோ என்ற ஆசை அப்பப்ப எழுவதுதான். எனக்கு கொண்டுவந்து தாங்கோ என்று வாய்விட்டுக் கேட்கவும் என் தன்மானம் இடம்கொடுத்ததில்லை. கணவர் என்று இருக்கிறீர்கள். இத்தனைகாலத்தில ஒருக்காத்தன்னும் நீங்களாகத் தேநீரோ கோப்பியோ போட்டுத் தந்திருக்கிறியளா? இல்லை சும்மாதன்னும் கேட்டாவது இருக்கிறியளா? என எண்ணும்போதே அம்மாவின் முகமும் அப்பாவின் முகமும் கண்முன்னே வருகிறது. இருவருமே ஆசிரியர்கள். காலையில் அம்மா எழுந்து காலை உணவு, மதிய உணவு இரண்டையும் தயார் செய்ய வேணும். அதற்குள்ளும் எனக்கும் தம்பிக்கும் கட்டிலில் தேநீரைக் கொண்டுவந்து எழுப்புவார். எனக்கு ஒரு பன்னிரண்டு வயதுவரை இது தொடர்ந்தது. அப்பா அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுப்பது முதல் பல உதவிகளைச் செய்து கொடுப்பார். ஆரம்பத்தில் துலாவில் தண்ணீர் அள்ளித் தொட்டிக்குள் நிறைத்து எங்களைக் குளிப்பாட்டுவதுகூட அப்பாதான். அவர்கள் நினைவில் என் கண்கள் நிறைகிறது. என் கணவர் கூட உதவியே செய்யாதவர் அல்ல. எத்தினையோ உதவிகள் நான் கேட்காமலே செய்திருக்கிறார். ஆனாலும் உணவு விடயத்தில்த் தான் அதிகம் தலையீடு செய்வார். அதுதான் எனக்கு அதிக சினத்தைக் கொடுக்கும். நான் ஒரு சமையலைத் திட்டமிடும்போது அவர் வேறொரு விதமாய் சமையல் குறிப்புச் சொல்லுவார். என் சமையலை என் நண்பர்கள் உறவினர்கள் பாராட்டுவதோடு மட்டுமில்லாது மிச்சம் இருந்தால் தாடி என்று வீட்டுக்கும் எடுத்துச் செல்வதும் என் சமையலின் சுவையினால்தானே. பிறகு எதற்கு இவர் திருத்தம் சொல்கிறார் என்று கடுப்பாக இருக்கும். அதுவும் இப்ப கொஞ்ச நாட்கள் என் போனுக்கு சமையல் குறிப்புகளும் யூடியூப் லிங்குகளும் கணவர் போனில் இருந்து என் வற்சப், மெசெஞ்சர் என்று வந்து விழும்போது கடுப்பு அதிகரிக்கும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். அதோடை இதைச் சேர்த்துக் கறி வைத்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லும்போது ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாது நீங்களும் நல்லாச் சமைக்கிறீங்கள் தானே. நீங்களே இவற்றைச் சமைத்துத் தாருங்கள். என்றதுடன் மனிசனும் பேசாமல் இருப்பதும் அடிக்கடி நடப்பதுதான். அம்மா முன்னரெல்லாம் உப்புமா செய்வார். நெய்யில் வறுத்து உதிரி உதிரியாய் குழைந்து வராமல்...... எமக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் அந்த உப்புமா மிகவும் பிடிக்கும். உப்புமாவோடு முட்டைப் பொரியாலோ அல்லது அவித்த முட்டையோ இருக்கும். பள்ளி முடிந்து வந்து உடுப்பை மாற்றி முகம் கழுவியவுடன் சமையலறைக்குச் சென்று மிகுதி உப்புமா இருக்கா என்றுதான் தேடுவேன். ஆனால் அம்மா எப்படித்தான் எல்லோருக்கும் அளவாக மிகுதியே வாராததுபோல் சமைப்பார் என்பது இன்றுவரை எனக்கு விளங்கக்கவே இல்லை. என்னடா இவள் தேவையில்லாமல் உப்புமாவைப் பற்றிக் கதைக்கிறாளே என்று உப்புமாவைப் பிடிக்காத உங்களுக்கு எரிச்சல் வரும்தான். ஆனாலும் அதிலும் ஒரு பெரிய விடயம் இருக்கு. திருமாணமான பின் நானும் உப்புமா செய்து பழகினேன் என்று கூறுவது தவறு. அம்மாவிடம் கேட்டுச் செய்தேன். கண்பார்த்தால் கை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எனக்குக் கை வந்த கலை. நானே உண்டு பார்த்துவிட்டு என்னை மெச்சிக்கொண்டேன். கணவருக்கு ஆசையுடன் போட்டுக்கொண்டு போய்க் கொடுத்தவுடன் இரண்டு வாய் உண்டவர் “என்ன இது அவியாமல் இருக்கு. தண்ணீர் கூட விட்டு கிண்டினால்த்தான். சாப்பிடலாம். அம்மா அப்பிடித்தான் செய்து தாறவ” என்றவுடன் என் உற்சாகம் வடிந்து போக “அம்மா இப்பிடித்தான் செய்யிறவ. நல்லாய் இருக்குத் தானே என்றவுடன். “எனக்கு வேண்டாம். தொண்டைக்குள்ள சிக்குது. இடியப்பம் அவி” என்றுவிட்டு திரும்பிக்கொள்ள நான் உப்புமாவை கொண்டுபோகிறேன். இப்போதென்றால் என் பதில் வேறாக இருந்திருக்கும். திருமணமான புதிதில் புது மாப்பிளை சொன்னால் கேட்கத்தானே வேண்டும் என்று எண்ணி இடியப்பம் அவித்துக் கொடுத்தது மட்டுமின்றி. பின்னர் எப்போதும் அம்மா செய்வதுபோல் செய்ய எண்ணியது கூட இல்லை. தண்ணீர் அதிகம் விட்டு அவருக்காக அவரின் அம்மா செய்வதுபோல் செய்து குடுத்துக் குடுத்து அதையே நானும் உண்டு பழகி உப்புமா என்றாலே அதுதான் என்று எனக்கும் பழகிப் போச்சு. அது மட்டும்தான் என்று நினைக்காதேங்கோ. அம்மா நிறையத் தேங்காய்ப்பூப் போட்டு அவிக்கும் பிட்டுக் கூட என் ஆசைக்கு அவிக்கேலாமல் போச்சு. அம்மா கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணீர் விட்டு சிறிதாகக் குற்றி அவிக்கும் பிட்டின் வாசனை இன்றும் மனதை நிறைக்கிறது. நான் கணவருக்கு முதல்முதல் அவித்தபோது “என்ன புட்டு அவிக்கிறாய். அம்மா தண்ணீர் அதிகம் விட்டு கையால உதிர்த்துத்தான் புட்டு அவிப்பா. உப்பிடி சில்வர் கப்பால குத்துறேல்லை என்றபோது“ உங்கட வீட்டில சிவர் கப் இல்லையாக்கும்” என்று கூறி முடியமுதலே “தேவை இல்லாமல் வாய்க்கு வாய் காட்டாதை” என்றதோடை நில்லாமல் “இண்டைக்கு ஓகே. இனிமேல் அம்மா அவிக்கிற புட்டுமாதிரி அவிச்சுப் பழகு” என்று முடித்ததுதான். முப்பத்தெட்டு ஆண்டாய்த் தொடருது. இன்று மாலை என்ன சமைக்கலாம் என்று யோசித்தபோது அம்மா அவிக்கும் பிட்டுப்போல் வெள்ளைமாப் பிட்டு அவித்தால் என்ன என்று எண்ணியவுடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பிக்கிறது. கணவருக்கு தனியாகவும் எனக்குத் தனியாகவும் அவித்தால் என்ன என்ற யோசனைவர அதுவும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது. கணவர் ஆறு மணிக்கு வேலையால் வந்தாலும் எட்டு மணிக்குத்தான் இரவு உணவை உண்பார். நானோ ஆறு மணிக்குள் உண்டுவிடுவேன். பிட்டை எனக்கு மட்டும் அவித்து மதியம் வைத்த மீன் குழம்புடன் கடையில் வாங்கிய மாம்பழத்தையும் சீவி வைத்தபடி உணவு மேசையில் அமர்ந்து உலிர் பிட்டை ஆற அமர உண்டபோது மனதே நிறைந்துபோகிறது. கணவர் உணவு மேசைக்கு வருவதாகக் கட்டியங் கூறியவுடன் மளமளவென்று பிட்டை அவித்து மீன்குழம்பு மாம்பழத்துடன் பரிமாற, அரை வயிறு நிறைந்தபின்தான் “என்ன கொம்மான்ர புட்டு அவிச்சிருக்கிறாய்” என்கிறார். இத்தனை காலம் உங்கள் விருப்பத்துக்கு அவிச்சாச்சு. இனிமேல் இந்தப் பிட்டுத்தான் என்று கூறியபடி அப்பால் நகர்கிறேன் நான். அன்று இரவு எல்லா வேலையும் முடித்துக் களைத்து நாளை காலை வெள்ளண வேலைக்குப் போக எழுவதற்காக ஆறுமணிக்கு அலாமை வைத்துவிட்டு அக்கடா என்று கட்டிலில் சாய்கிறேன். கட்டிலுக்கு வந்த மனிசன் நித்திரை கொண்டிட்டீரோ என்றபடி கைகளால் துழாவ, நான் நித்திரை கொள்ளப்போறன், இண்டைக்கு ஏலாது என்றபடி திரும்பிப் படுக்கிறேன் நான்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதை தான் நானும் நினைத்தேன் பெரியப்பு லேட்டா போடுவார்.................................... கூட்டி கழிச்சு பார்த்தால் நானும் நீங்களும் 1 , 5 க்குள் நிப்போம் , நிந்தியா தந்த 5 புள்ளியால் சிறு முன்னேற்றம் ஒரு விக்கேட்டு ஜயர் இன்னும் கூடுதல் ரன்ஸ் அடிச்சு இருந்தால் 6 புள்ளி இன்னும் கூடி இருக்கும்......................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி வேட்டி எல்லாம் தோய்த்து வையுங்கோ அடுத்த திருவிழாவுக்கு கட்டவேணும் 😀1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா மாட்சை வென்றாலும் எல்லா தனிப்பட்ட பரிசில்களும் நியூஸிலாந்துக்குத்தான் போல இருக்குது! டீமுக்கான அதிக ஓட்டங்கள், தனிநபருக்கான அதிக ஓட்டங்கள்,அதிக விக்கெட் எடுத்தது என்று எல்லாமே அவர்கள்தான்!1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவர் பெரிய ரவுடி அண்ணா ரிக்ரொக்கில் இவரை கழுவி ஊத்தாத ஆட்களே இல்லை எங்கட புலம்பெயர் மக்களுக்கு இப்ப தன்னும் நல்ல புத்தி வந்து இருக்கே என்று பெருமை படனும் இவர் பயங்கர மோசடி வேலைகள் செய்யும் நபர் மட்டக்களப்பில் ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கைய நாசம் ஆக்கின தறுதலை , இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு👍 ஆரம்பத்தில் இவரின் காணொளிகள் பார்ப்பேன் , இப்ப பார்க்காம விட்டு இரண்டு வருடம் ஆக போகுது இவன்ட சகோதரங்கள் ஆளுக்கு ஒரு யூடுப் வைச்சு புலம்பெயர் நாட்டு மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழுகினம் , இவேன்ட சகோதரங்கள் தங்களுக்குள் பிடிக்கும் சண்டைகளை பொது வெளியில் கொண்டு வந்து போடுங்கள்......................... கிருஷ்னா சம்முக சேவை செய்யும் நோக்கில் தொடங்க வில்லை தனது நண்பனை பார்த்து தானும் காசு உழைக்கலாம் என்று தொடங்கினவன் , மூன்று வருடத்துக்கு முதல் 1லச்சம் ரூபாய் கூட இல்லாம இருந்தவனுக்கு , 2அர வருடத்தில் இலங்கை காசுக்கு 6 கோடி எப்படி வந்தது , பருத்திதுறையில் இவன் வேண்டின கானி கட்டின வீட்டின் பொருமதி 6 கோடிக்கு மேலாம்...............இதை எனக்கு சொன்னது இவனின் ஒன்ட விட்ட தம்பி................இந்த 6 , 7 கோடி வீட்டு கதை ரிக்ரோக்கிலும் பலர் கதைச்சும் இருக்கினம் இவனின் குளறு படிகளை சொன்னால் யாழ்ப்பாணத்தில் ரவுடிகளை வைச்சு ஆட்களை மிரட்டுவாராம் இப்படி சொல்ல நிறைய இருக்கு பெண் பிள்ளைகளுடன் கதைக்கும் விதம் சரியே இல்லை அதுகள் வளந்து நல்ல குடும்பத்தில் வாழப் போர பிள்ளைகளை உதவி என்ர பெயரில் அதுகளை கேவலப் படுத்துவது தான் இந்த பொம்பிளை பொருக்கியின் வேலை பிடிச்ச மக்கள் ஊமை குத்து குத்தி விட்டு காவல்துறையிடம் பிடித்து கொடுத்து இருக்கனும்................. ஒரு வரியில் சொல்லப் போனால் இவன் ஒரு பிராடு😁................................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவின் தொடக்கமே இடியும் மின்னலுமாய் இருக்கு ஹாஹா நியுசிலாந் அடிச்சு பிடிச்சு பினலுக்கு வந்து தோப்பது தொடர் கதை மாதிரி போகுது...............இலங்கையாவது பல வாட்டி ஆசியா கப்பை தூக்கி இருக்கு 50 ஓவர் / 20 ஓவர் உலக கோப்பையும் தூக்கி விட்டினம்..........................நியுசிலாந் ?....................................................1 point- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
1 pointநிலாமதி, உங்கள் கருத்து உண்மையானது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் மிச்சம் சொற்பம் எங்களிடம் இருக்கத்தான் செய்கிறது. . இந்தக் கதை உண்மையானது. நான் வசிக்கும் மாநிலத்தில் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது. இப்பொழுது காஞ்சனா மறுமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று கேள்விப்பட்டேன்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
"யூ ரியூப்", "ரிக் ரொக்" காரருக்கு... இப்ப கஸ்ரகாலம் போலை இருக்கு. பின்னை.... கிடைத்த சுதந்திரத்தை அளவுக்கு மீறிப் பாவித்தால், இதனையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் . .......... ! 😂1 point- சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
கொடுமை என்னவென்றால் பெண்கள் தினத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்தாராம் 🤣 பிசாசு வேதம் ஓதியது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- 'விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதளஉலககுழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன"- முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா
வடக்கில் இருப்பது பயங்கரவாதமென எல்லோரும் சேர்ந்து ஒரு இனத்தை அழித்து வெற்றி விழா கொண்டாடினீர்கள், இப்போ அதன் விளைவை அனுபவிக்கிறீர்கள். மனம் வருந்தி, திருந்தி, மன்னிப்புக்கேட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும் உத்தரவாதமும் அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு, சம உரிமை வழங்காதவரை நல்லிணக்கமோ, சமாதானமோ, அமைதியோ நாட்டில் வர வாய்ப்பில்லை.1 point- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
1 pointஇங்கு பெட்டைகள் திருமணம் என்றால் குறைந்த பட்சம் உயர்தர வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பார்கள். இங்கு பல்கலைக்கு படிக்க வந்தவர்களை வேண்டாம் என்பார்கள்.1 point- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
1 pointஇந்தக் கதையின் சாயல் சற்று முன்னைய காலமாக இருக்கலாம். இப்போது சற்று விழித்து விடடார்கள் பெண்கள். முகம் தெரியாத அறிமுகம் இல்லாத பழகாத ஆண்களை நம்பி கழுத்தைக் கொடுக்க தயாரில்லை.1 point- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கெட்டிக்காரர்....சுடச் சுட..1 point- இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!
நாளைய தினம் ஸ்ரீதரனை, கட்சியை விட்டு நீக்குகிறார்கள், 😂 நானே ராஜா... நானே மந்திரி... என்ற சுமந்திரனுக்கு, சி.வி.கே. சிவஞானம் முடிசூட்டி வைக்கிறார். 😅 அதோடை... தமிழரசு கட்சிக்கு, பால் ஊத்தி, இறுதிச் சடங்கு செய்து வைக்கப் படும். 🤣1 point- இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை!
நாளையதினம் சத்தியமூர்த்தி பதவி துறக்கிறார்...நாளை மறுதினம் ச்மந்திரன் எம்பியாகிறார்....எதிர்பாருங்கள்1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மிக்க நன்றி திரு.சுவி.. எப்படி சுகங்கள்..? பேரப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்திருங்கள்.. (விருப்பப் புள்ளி ஒன்றுதான் இடமுடியுமென எனக்கு மறுக்கிறது, யாழ் களம்.)1 point- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
இந்த அணில் பற்றி எனது முகநூலில் வந்ததன் ..பிரதி பண்ணி போட்டிருக்கின்றேன் யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர். ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான். நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும். இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள். நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது. எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன். ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார். ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம். ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும். காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும். சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார். உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும். அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து மீண்டும் அரகல போல ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும். தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல பெரும் கனவோடு சென்றிருந்தார். ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார். ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது. ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow poison" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை. இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள். என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று! Via அருண் செல்வராஜ்1 point- பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
80 களில் வந்த அநேகர் 25/30 வயதை தாண்டியவர்களாக இருந்திருப்பார்கள் அத்துடன் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருந்திருப்பார்கள் ..இரண்டு வேலை பார்த்து ஊரில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்பி தங்களையும் கவனிக்க வேண்டிய ஒர் இக்கட்டான சுழலில் இருந்திருப்பார்கள் ....ஆகவே அவர்களுக்கு மொழியை அறிந்து கொள்வதை விட பணம் சம்பாதிப்பதிலதான் அதிக ஆர்வமாக இருந்திருக்கும் ... ஆனால் தங்கள் வாரிசுகளை அந்த நிலையில் வைக்கவில்லை அவர்களை விட பலமடங்கு உச்சத்துக்கு ஏற்றி வைத்துள்ளனர்...மொழி தெரியாமல் தங்கள பிள்ளைகளை கல்வியில் ஒர் நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ளனர் .. இறுதியில் கேட்டு பாருங்கள் 6 தலமுறைக்கு பின்பு தமிழ் பேச தெரியாதாம் ஆனால் ஒர் தமிழ் பாட்டு திரிபடைந்து பல தலைமுறைகளாக கடத்தப்பட்டு வந்துள்ளது...இந்த நிலை எமக்கும் ஏற்படும் ...1 point- யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
1 pointமிகவும் விளக்கமான சுருக்கமான செய்தி ( அல்லது கட்டுரை) இவ்வாறான விளக்கமான செய்திகள் தமிழில் வாசிப்பது பார்ப்பது என்பது மிக மிக அருகிக்கொண்டு வருகிறது. ஜர்னலிசம் அடிப்படை எழுத்து உருவாக்கம் பற்றிய அறிவே இல்லாதவர்கள் செய்தியாளர்களாகவும் எழுத்தாளர்கள் ஆகவும் பெருகிவருவதே அதற்கான காரணம் என்று எண்ணுகிறேன். இந்த செய்தி அல்லது விவகாரம் பற்றிய முழு தகவல்களையும் இந்த ஒரு செய்தியை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.1 point- குட்டிக் கதைகள்.
1 pointகோணல் புளியங்காய் .......! ஒருநாள் ஒரு அரசன் வீதியால் கண்காணிப்பு செய்து கொண்டு போகும்போது அங்கே ஒரு இளம்பெண் கோணற்புளியங் காய் விற்றுக்கொண்டு இருப்பதைப் பார்க்கின்றான் ....... பின் அவளைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அப்பெண்ணையும் தன் தேரில் ஏற்றிக்கொண்டு அரண்மனை சென்று அவளை அந்தப்புரத்தில் சேர்த்து அரசிக்கு இணையாக அவளைப் பராமரித்து வாழ்ந்து வருங்காலையில் .......பல ஆண்டுகள் சென்றபின் ஒருநாள் அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு அவ் வீதியால் வருகின்றான் ........ அப்போது அங்கு வேறு சிலர் கோணற் புளி விற்றுக் கொண்டிருப்பதை அந்தப் பெண் பார்த்து அரசனிடம் ...... அரசே அதோ அங்கே ஏழைப் பெண்கள் கோணல் கோணலாய் ஒரு காய் விற்றுக் கொண்டு இருக்கிறார்களே அது என்ன காய் என்று கேட்கிறாள் .......... உடனே அரசனும் "ஓ" உனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்து விட்டன போல , நீ தேரில் இருந்து இறங்கிப் போய் அது என்ன வென்று விசாரித்து தெரிந்துகொள் என்று சொல்ல அவளும் இறங்கி அங்கு செல்லும்போது இனி நீ அங்கேயே இரு என்று சொல்லிக்கொண்டு அரசனும் அங்கிருந்து சென்று விட்டான் .........அவளும் தனது திமிர் பேச்சால், வந்த வளமான வாழ்வு தொலைந்து போச்சுதே என்று தூரத்தே செல்லும் தேரையே பார்த்து "ங்ஏ" என்று விழித்துக் கொண்டு நின்றாள் ........! 😂 பி . கு : எனக்கு இந்தப் படத்தைப் பார்த்ததும் மிக மிகச் சிறிய வயதில் ஆச்சி சொன்ன இந்தக் கதை ஞாபகம் வந்தது கூடவே ஆச்சியும் ..........! 😇1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 pointIshrath Imtiaz Sdoeoptsrnt9l4974f6i0 1u0l938812th325c1u2fah5m2m3fmlf6070m6c · 14,000 runs in ODI Cricket 🏏" 1. Sachin Tendulkar 🇮🇳" 2. Kumar Sangakkara 🇱🇰" 3. Virat Kohli 🇮🇳" - End of list1 point - அல்ஜசீராவில் ரணில்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.