Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19134
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3061
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/15/25 in Posts

  1. இந்த பாடலை கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச்சொலுங்க பாடல் மெட்டில் பாடவும். கண்டா வரச் சொல்லுங்க மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல மாடி வீட்டில் பிறந்த புள்ள செல்வத்துக்கு பஞ்சமில்ல நாயக்கரு பெத்த புள்ள நல்லவழி சொன்ன புள்ள கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் அரசாங்கம், பள்ளிகூடம் அத்தனையும் மனுவின் வசம் தடி கொண்டு அடிச்சான் பாரு தகர்ந்து போச்சு நூலின் பலம் கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க ********* ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஊரெல்லாம் கோயிலப்பா போக வழி இல்லையப்பா ஒத்தையா துணிஞ்சு நின்னு பாதை செஞ்சு தந்தானப்பா கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க *********** ஆட்சியிலும் அமரவில்லை அதிகாரம் சுவைக்கவில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை அவன் செஞ்ச புரட்சியினை அசைக்க இங்க எவனுமில்லை கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வரச்சொல்லுங்க கிழவனை கையோட கூட்டி வாருங்க கோஷான் சே
  2. சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·
  3. யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே யாரார்க்கு எந்த மேடையோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா…. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா….. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா (தமிழ் தேசிய) தாய் கொண்டு வந்ததை…. (தம்பிகள்) தாலாட்டி வைத்ததை (பிஜேபி) நோய் கொண்டு போகும் நேரமம்மா….
  4. பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
  5. யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—
  6. முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.
  7. சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன். எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது. இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை. அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம். 1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன். இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள். அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை. இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன். இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.
  8. 2000க்கு மேல தான் தொடக்கம். அத்தோடு காலை பிற்பகல் பணிஸ் தேநீர் மதியம் சாப்பாடு. இடைஇடை தொலைபேசி உரையாடல். எல்லாம் பார்த்துக் கொண்டு கம் என்று இருக்கணும்.
  9. நான் பத்து வருடங்கள் புகை பிடித்து அதை விட்டு பத்து வருடங்கள் ஆகிய பின்னர் மீண்டும் புகைத்தலுக்கு அடிமையாகி 20 வருடங்கள் ஆகிய பின்னர் இப்போது பத்து மாதங்களாக பிடிப்பதில்லை எனக்குப் பத்தொன்பது வயதாகி இருந்த போது முதன் முதலில் புகை பிடிக்க ஆரம்பித்தேன் . இப்போது முக்கியமான கேள்வி..... எனக்கு எத்தனை வயது இப்போது ? 😄
  10. ஒரு நாள் வரும் அந்த நாள் நானும் @goshan_che சந்தித்த நாள். யாழ் களம் அதிரும். இவர்கள் எப்படி கட்டியணைத்து முத்தம் கொடுக்கலாம் கொடுக்க முடியும் என்று.? அண்ணன் தம்பிடா ராசாக்கள் அண்ணன் தம்பிடா. ❤️🤣
  11. பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல. நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை. அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய‌ ஆற்றலை மறைத்து விட்டது... அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது. மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம். "இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை. அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை... இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர.. யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ... அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை .. அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ... இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும் மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...
  12. பரமசிவன் (ஸ்ராலின்), பாத்திமா (பாத்திமா பாபு) கதையைத்தான் உல்டா பண்ணுகின்றார்கள் என நினைக்கின்றேன். வெளியிட்ட இருவரையும் பார்க்க… அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.
  13. திட்டம் போட்டு திருடிற கூட்டம்… திருடிக்கொண்டே இருக்கும்…. அதற்கு திட்டமில்லாமல் பலியாகும் கூட்டம்…. பலியாகி கொண்டே இருக்கும்… புலம்பெயர் மொக்கராய் பார்த்து திருந்தாவிட்டால்…. திருட்டை ஒழிக்க முடியாது.
  14. தரமான கருத்து. 👍 நாம் எமது கடையை மூடினால் அவர்களும் தமது கடையை தாமாகவே மூடுவர். பனங்காய் பணியாரம் சுடுவது எப்படி என தங்கள் காணொளிகளை காட்டட்டும்.
  15. ஒழுக்கமற்றவர்களிடம் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? தங்கள் எண்ணத்திலிருப்பதே வெளியில் வரும். தங்களையும் சமூகத்தில் முதன்மைப்படுத்துவதற்கு வேறேது அவர்களிடமுண்டு? அவர்களிடமுள்ளதை கொடுக்கிறார்கள்.
  16. அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.
  17. 1 வெளிநாட்டு காசுல சொகுசா வாழ பழகிவிட்டினம் 2. உடலைவளைச்சு வேலை செய்ய விருப்பமில்லை. 3. இப்ப பெண்கள்க்கு சமைக்க விருப்பமில்லை ஓடர் பண்ணி பிள்ளைகளுக்கு கொடுத்திட்டு சாப்பிட பழகிவிட்டினம் 4. டிக் டொக் க்கும் செல் போன் உம கெடுத்துவிட்ட்து .
  18. பரமசிவன் அங்கால ஒரு டீசரை வெளியிட்டு இருக்க இங்கால பாத்திமா ஒரு புது டீசரை வெளியிட்டு இருக்காங்க! 😂
  19. இவ்வளவு எல்லா கூத்துக்களும் அடித்தது இன்னமும் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஆனாலும் ஏதோ கரடுமுரடான வாழ்வு இருந்திருக்கிறதென நம்புகிறார்கள். இதனால் எனது பழைய நண்பர்களை சந்தித்தால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று பிள்ளைகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடுவார். இவைகளை விட்டதனால் இன்றுவரை தாக்கத்தைக் காணவில்லை. ஆனாலும் எனது பேஸ்மன்ற் ரொம்ப வீக் நீண்டகாலம் உங்கள் எல்லோருடனும் வாழ முடியாது என்று சொல்லி நினைப்பூட்டிய படியே இருப்பேன்.
  20. வேதனையுடன் எழுத வேண்டாம் அண்ணா. சந்தோசமாக எழுதுங்கள்.உங்களின் மன உறுதிக்கு ஒரு சபாஸ் சொல்லுங்கள். எனது யூத நண்பர் தொடர்ந்து சிகரட்டை குடித்து கொண்டே இருப்பார். 13 வயதில் புகைக்க தொடங்கி இப்போ 40 ஆகி விட்டது. சில தடவை புகைத்தலை விட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்து விடுவாராம். மனைவி, அம்மா எல்லோரும் சொல்லியும் தன்னால் விட முடியவில்லையாம். இப்போ தனது 8 வயது மகள் அப்பா புகை மணம் தாங்க முடியவில்லை. புகைத்தால் தனக்கு கிட்ட வர வேண்டாம் என கூறினாராம். இப்போ 3 மாதமாகிறது புகைத்தல் விட்டு. உடம்பின் நிறை கூடுகிறது என்றார். உடற்பயிற்சி செய். மீண்டும் புகைக்காதே என்று சொல்லி உள்ளேன். பார்க்கலாம்.
  21. எம்பி அர்ச்சுனா தலைமையில் தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள்… ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா.உ.அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா,வம்பன் டொட்கொம் போன்ற பக்கங்கள், ஈழப் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகின்றன… வட கிழக்கில் வாழும் பெண்கள் எப்படிச் செயல்பட வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்றெல்லாம் இந்த இணைய பக்கங்களை நடத்தும் காவாலிகள் தீர்மானிக்கிறார்கள்... இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது... இது தலிபான்கள் செயல்களைப் போல் ஆபத்தானதாக மாறி வருகிறது…. எல்லாவற்றிலும் காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்... அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது... தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள், டாக்டர் அர்ச்சுனா, வன்னி ஊழல் தடுப்பு அணி, அதை இயக்கும் அர்ச்சுனா அடிப்பொடி லண்டன் தமிழ் அடியான் குழுவினர் ஈழப் பெண்களை இலக்குவைத்து பிளக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.... பொட்டம்மான் போன்ற மிகச்சிறந்த புலநாய்வுப் போராளிகள் வாழ்ந்து மடிந்த மண்ணில் அடுத்தவன் வீட்டு கழிவறையையும் படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கும் இந்தப் பரதேசிகள்தான் புலனாய்வுப் புண்ணாக்குகளாம்.. ஈழப் பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்.. ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா, வம்பன் டொட்கொம், போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது….
  22. எனக்குத் தெரிந்த பல நாட்டவர்கள், இளவயதில் சிகரெட் புகைத்து… ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திய பின் 60 வயதுகளில் சுவாசம் சம்பந்தப் பட்ட பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள். முக்கியமாக அயலவர் ஒருவர் அதனால் படும் சிரமத்தை நேரில் கண்டேன். நேர காலம் இல்லாமல் நள்ளிரவில் அம்புலன்ஸ் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கும். இறுதிக் காலங்களில் அவர் ஒட்சிசன் சிலிண்டருடன் தான் நடமாடினார். அவரின் நோயால்… அவரின் குடும்பத்தவர்களும் மிகவும் சிரமப் பட்டு விட்டார்கள். சிகரட் புகைப்பவர்கள் யாராவது இருந்தால்… தயவு செய்து அதனை நிறுத்தி விடுங்கள்.
  23. ஸ்டாலினை அடிக்க வேண்டும் என்பதற்காக அநாவசியமாக பாத்திமா பாவுவை அவதூறு செய்வது ஏற்புடையதல்ல. பாத்திமா பாபு பொது வெளியில் இதை மூன்று தரம் மறுத்துள்ளார். அதன் பின் ஜெ ஆட்சியில் ஜெ க்கு நெருக்கமாக இருந்த போதும் கூட பாத்திமா இதை உண்மை என சொன்னதே இல்லை. அவரே இல்லை எனும் போது இதை நாம் காவி திரிவது அவர் மீதான அவதூறுதான். அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள். மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள். Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது. 1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி 2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி 3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது. முழு கட்டுரையின் லிங்க்👇 Fact Crescendo Tamil | The leadi...பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்...30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக...தினமணியில் பாத்திமா பாபுவின் விளக்கம்👇. Dinamaniஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து...திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்த
  24. அருமையான எழுத்தாளர் . ......... பல இடங்களில் தனது வாழ்க்கையையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார் . ........ யோகி ராம்சுரத்குமாரின் பக்தனுமாவார் . ........!
  25. சும்மா இடைக்கிடை வந்து கொட்டிவிடுகிறேன். குப்பை கொட்டுறது சுலபம். ஆனால், அணிகளைத் தெரிவு செய்வது எட்டாக் கொம்பாத்தான் இருக்கு. உண்மையிலேயே முயற்சி செய்தேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உருட்டலாம். ஆனால் இவ்வளவு உருட்டல் செய்ய முடியவில்லை. சர்வதேசப் போட்டிதான் எனக்குச் சரி.
  26. அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்… இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.. சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்.. “சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்.. சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்... சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது... இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை.. சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்... சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்… சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system) சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு… விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்… விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்… ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது… இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது... இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்... இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇 1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing): சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்... 2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement): சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்... 3. புதிய பொருட்கள் (Advanced Materials): ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்... இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்.. இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்… புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்… விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது… ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..! இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…! -பாலபத்திரஓணாண்டி
  27. @Kavi arunasalam நீங்கள் எழுதியது தெளிவாக விளங்கியது அய்யா அனால் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு வெளிநாட்டில் வாழும் கணவர்மார் பிரச்சனை என்ன என்பது தான் விளங்கவே இல்லை 😂
  28. என்னைவிட இலங்கை விடயங்கள் அதிகம் தெரிந்தவர்கள் சொன்னார்கள் அண்ணா
  29. ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........! 1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) . 2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........! 3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........! எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂
  30. இதுக்கை நான் நேர‌த்தை ஒதுக்க‌ கார‌ன‌ம் எம் உற‌வுக‌ள் இப்ப‌டியான‌ க‌ள்ள‌க் கூட்ட‌த்திட‌ம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ஏமாற‌க் கூடாது என்ர‌ ப‌டியால்.................நான் டென்மார்க்கு வ‌ந்து 26வ‌ருட‌ம் ஆக‌ போகுது , இதுவ‌ரை சிறு துளி பொறாமை கூட‌ ப‌ட்ட‌து கிடையாது ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மேல் இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌👍..........................
  31. இன்று.. குரங்கு, யானை, மர அணில் போன்றவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
  32. சித்திரவதை செய்து படுகொலை செய்ய உதவிய ரணில்,இனப்படுகொலை செய்த ராஜபக்சாக்கள்,தொழிற்சாலைகள் எரித்து இனக்கலவரங்களை தூண்டி சோசலிசம் வளர்த்த கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமர்களாகவும் இருக்கும் நாட்டின் ... கிராமத்திலிருந்து போனவான் பாராளுமன்றத்தில் உளறுவதால் படித்த யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்.... தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..
  33. மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு சிறிய புன்னகை தமிழன் என்பதை ஒத்துக் கொண்டது. “நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களோ?” தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். சைகையால் மட்டும்தான் பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவும் செய்தான். “உங்களை எனக்குத் தெரியும். அடிக்கடி கண்டிருக்கிறன்” நான் இருக்கும் நகரில் இப்பொழுது பல தமிழர்கள் வசிக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு வார இறுதியிலும், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா... என்று ஏதாவது நம் மத்தியில் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றுக்கும் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு விழாவுக்குப் போய் இன்னொன்றுக்குப் போகாவிட்டால் பிரச்சினை ஆகிவிடுகிறது. எங்களது கொண்டாட்டங்கள் வரம்பு வரையற்றவை. அதனால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு நான் வசிக்கும் நகரத்தில் யாரும் மண்டபங்களைத் தருவதில்லை. நாங்களும் விடுவதாயில்லை. எங்கள் நகரத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இப்படியான அசௌகரியங்களால் நான் முற்று முழுதாக விழாக்களைத் தவிர்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் பலரது தொடர்புகள் எனக்கு இல்லாமற் போய் விட்டன.. புதிதாக வருபவர்களும் என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் பலரை எனக்குத் தெரியவில்லை. “வேலையாலை வாறீங்களோ?” “இல்லை அண்ணா. நேற்று ஒரு விசயமா வந்தனான். இப்ப திரும்பப் போறன்” “ அப்ப நீங்கள் இந்த Stadt (நகரம்) இல்லையோ?” “முந்தி இங்கை தான் இருந்தனான். இப்ப கிறைல்ஸ்ஹைம் எண்ட இடத்திலை இருக்கிறன்” “அங்கையோ வேலை செய்யிறீங்கள்?” “இல்லை, வேலை இல்லை” “ஏன்?” ஏதோ சொல்ல நினைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சனிக்கிழமை அதுவும் காலை நேரம் என்பதால் ஆட்கள் இன்றி பஸ் வெறுமையாக இருந்தது. பஸ்ஸுக்குள் எனது இருக்கையைத் தாண்டிப் போக எத்தனித்தவன் என்னை ஒரு தரம் உற்று நோக்கினான். “இதிலை இருங்கோவன்” எனது இருக்கைக்கு நேரெதிரே இருந்த இருக்கையை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தவன் போல் சட்டென்று அதில் அமர்ந்து கொண்டான். “உங்களுக்கு என்னதான் பிரச்சினை? என்னத்துக்கு இந்தக் கோலம்?” “நான் நாட்டுக்குத் திரும்பிப் போறன்” அவன் இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவோ சிரமங்களைச் சமாளித்து, பல இலட்சங்களைச் செலவழித்து வெளிநாடு போக வேண்டும் என்று நாட்டில் பலர் இருக்கும் போது, இவன் எதிர்மறையாக இருக்கிறானே என எண்ணிக் கொண்டேன். அவனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தலை குனிந்திருந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். “என்னை அவள் டிவோர்ஸ் எடுத்திட்டாள். இப்ப எனக்கு விசாவும் இல்லை” அவனுடைய நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன். ஆனால் எதற்காக விசா இல்லாமல் போனது? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன். “அவள்தான் கல்யாணம் கட்டுறதுக்கு ஸ்பொன்சர் பண்ணி என்னை இஞ்சை கூப்பிட்டவள். கலியாணம் கட்டி வேலையும் செய்து கொண்டிருந்தனான். பிறகு இப்பிடி ஆகிப் போச்சு… டிவோர்ஸ்க்குப் போட்டுது…” பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது. அவனே தொடர்ந்தான், எனக்கு விசா முடிஞ்சு போட்டுது. விசாவைப் புதுப்பிக்கப் போனால், அங்கை வைச்சே பிடிச்சு அனுப்பிப் போடுவாங்கள் எண்டு வேலையிடத்திலை சொன்னாங்கள்” “யார் சொன்னது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீங்கள். உங்களை ஏன் பிடிச்சு அனுப்பப் போறாங்கள்?” கோபத் தொனியில் வந்த என் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான். “என்னோடை வேலை செய்யிற தமிழாக்கள்தான் சொன்னவையள்” யாரை நோவது என்று எனக்குத் தெரியவில்லை. “சரி.. டிவோர்ஸ் கேஸ் என்னாயிற்று?” “அது முடிஞ்சு ஒரு வருசமாச்சு. இப்ப அவள் இந்தியாவுக்குப் போய் கலியாணமும் கட்டிக் கொண்டு வந்திட்டாள். எங்கடை ஊர்க்காரன்தான். பேஸ்புக்கிலை படங்கள் போட்டிருக்கிறாள்” பேச்சை முடித்துக் கொண்டு அமைதியாகிப் போனான். அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பஸ் நகரத்தை அடைந்திருந்தது. என்னை முதலில் இறங்கவிட்டு பின்னால் இறங்கினான். “தம்பி. ஒரு லோயரை வைச்சு உங்களின்ரை விசாப் பிரச்சினையைச் சரி செய்யலாம். டைவோர்ஸ் பிரச்சினையாலை நீங்கள் மன அழுத்தத்திலை இருந்ததாகச் சொல்லலாம். அதாலைதான் விசாவைப் புதுப்பிக்கப் போகேல்லை எண்டு… இன்னும் வழி இருக்கு" “நன்றியண்ணா. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, எனக்கு ஒரு இந்தியன்தான் தன்ரை ரெஸ்ரோரண்டிலை வேலை தந்தவன். வேலை களவுதான். அவனின்ரை ரெஸ்ரோரண்டிலைதான் தங்கியிருந்தனான். போதும். ஒரு இடமும் போக வரேலாது. நான் முடிவெடுத்திட்டன். போன கிழமை பொலிஸிட்டைப் போய் நாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னன். அவையள் வெளிநாட்டு அலுவலகத்துக்குப் போகச் சொல்லிச்சினம். அங்கை போய் அவையளோடை கதைச்சன். தங்கிறதுக்கு கிறைல்ஸ்ஹைமிலை ஒரு இடம் ஒழுங்கு செய்து தந்து வெள்ளிக்கிழமை வரச் சொல்லிச்சினம். நேற்றுத்தான், வெள்ளிக்கிழமை போனனான். சிறிலங்காவுக்குப் போறதுக்கு ரிக்கெற் செய்து தந்திருக்கினம். 18ந்திகதி பிளைற்” “இப்பவும் நீங்கள் இங்கை இருக்கிறதுக்கு வழி செய்ய முடியும். அவசரப்படாதையுங்கோ” “இல்லையண்ணா. போறதெண்டு முடிவெடுத்திட்டன். தாங்ஸ் அண்ணா” இதற்குமேல் நான் அவனை வற்புறுத்த விரும்பவில்லை. “ உங்களுக்குத்தானே கிறைல்ஸ்ஹைமிலை தங்கிறதுக்கு இடமிருக்கு. இஞ்சை, சனிக்கிழமை அதுவும் காலைமை வெள்ளென, என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?” “நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை படுத்திட்டன். சரி அண்ணை..” அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். கிறைல்ஸ்ஹைம் போகும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை.
  34. உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை. முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது. பிகு எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.
  35. இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நன்றி பாணபத்திரரே.
  36. என்ன தம்பி இஞ்சாலை? சீமானைப்பற்றி இனிக்கும் செய்தி ஒன்றுமில்லைப் போல.
  37. 🤣............... அண்ணா, இந்தப் பெரிய அமெரிக்க கிணற்றுக்குள் விழ முன், ஊர் என்னும் குட்டிக் கிணற்றுக்குள் எங்களை விட்டால் ஆளே இல்லை என்று இருந்தோம் என்று சொல்லவந்தேன்................ எங்கள் ஒவ்வொருவரினதும் முதல்நாள் வெளிநாட்டு அனுபவங்களை எழுதித் தொகுத்தால், அது நல்லதொரு முழுநீள நகைச்சுவை நாவலாக வரும்............. என்னுடைய முதல்நாளில், அந்த ஊரில் இருக்கும் ஒரு சின்ன விடுதியில் அறை ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். அது சரியான குளிர் பிரதேசம். காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. நான் வருவதற்கு சில நாட்கள் பிந்திவிட்டன. காலையில் குளிப்பம் என்று போனால், தண்ணீர் விறைக்கும் குளிரில் வந்தது. அன்று அதுகூட எனக்கு தெரியாது............... ஓடிப்போய் சில வேலைகளை முடித்து, வகுப்புகளுக்கும் போய் விட்டு, அங்கிருந்த உணவு விடுதிக்கு சாப்பிடப் போனால், அவர்களின் மொழியே சுத்தமாக புரியவில்லை....... ஆனாலும் இரண்டு பக்கங்களும் ஆங்கிலமே பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தன.........🤣. ஒரு கிளாஸ் பாலாவது கொடுங்கள் என்று நான் சொன்னதை தட்டுத்தடுமாறி அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படியே, 'இரண்டு வீதமா, ஒரு வீதமா அல்லது முழுப்பாலா................' என்று கேட்டார்கள்................. ஏற்கனவே இருந்த பசி மயக்கத்தை விட, அந்தப் பால் கேள்வி என்னை அப்படியே சரித்து விழுத்தியது..................🤣.
  38. கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். Kunalan Karunagaran
  39. இவர் தமிழ்நாட்டில் ஸ்டாலினை 1௦௦௦ பேரில் கூட்டதோடு கூட்டமாய் நின்று செல்பி எடுத்து விட்டு இங்கு வந்து தமிழர் பிரச்சனையை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் கதைத்தோம் என்று அடித்து விட்ட தமிழர்களை ஏமாற்றும் சோணகிரி . அங்கு அமெரிக்க அவுஸ் தூதரங்களில் டொய்லெட் அடைப்பு எடுத்து இருக்கும் இவர் விழுந்தடித்து நாலு பிளம்பருடன் போய் அடைப்பெடுத்து விட்டு விட்டு வெளியாலை வந்து சமகால தமிழர்களின் விடயம் பற்றி கதைத்தேன்என்று அடித்து விட்டுருப்பார் .
  40. வேண்டாப் பெண்டாட்டி, கைபட்டாலும் குற்றம். கால்பட்டாலும் குற்றம்
  41. அது ஒன்றுமில்லை தேர்தல் செலவுக்கு காசு வாங்கப் போயிருப்பார்........🤣🤣. அது சரி நீங்கள் ஏன் கோபம் கொள்கிறீர்கள். ??? ...இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் வாக்கு போட்டால் எவரும் பாராளுமன்றம் போகலாம்” ......
  42. ஒவ்வொருவர் பின் வரிசையில் அமர்வதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பின்வரிசையில் யாருக்கும் தெரியாமல் போவோர் வருவோரை விடுப்பும் பாக்கலாம்.
  43. ஏன் வாத்தியார்? நெடுந்தீவுக் கரையில நிண்டால், இவையின்ர ரோலர் சத்தம் கேக்கும். இதுக்கு ஏன் கருவி தேவை? சாதாரண கண்கள் கூடப் போதுமே? தெரிந்து தான் செய்கிறார்கள்…!
  44. போட்டியில் வெற்றி பெற்ற முதல் அறுவருக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்த அடுத்த இருவருக்கும் மூன்றாம் இடத்தைப் பிடித்த அந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் . கிருபர் ஜீ மீண்டும் சளைக்காமல் போட்டியைத் திறம்பட கொண்டு நடாத்தியுள்ளார் 🙏 வாழ்த்துக்கள் பந்து போட்டவர்கள் சமனாக விக்கெட்டுக்களை கைப்பற்றி அத்துடன் சமனான ஓட்டங்களை கொடுத்ததால் ஓட்ட விகிதம் தான் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இது எப்போதும் நடைமுறையில் உள்ளதா அல்லது இந்திய அணியினர் அதை தங்களுக்குச் சாதகமாகப் பாவித்துள்ளார்களா
  45. போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய @கிருபன் கிருபனுக்கு மிக்க நன்றி. @வீரப் பையன்26 பையன் சார், சொல்லி அடித்து விட்டீர்களே......... வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சியும்...........❤️. முதலிடத்தை பகிர்ந்து கொண்ட செம்பாட்டான், எப்போதும் தமிழன், புலவர், நீர்வேலியான் மற்றும் கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். @செம்பாட்டான் செம்பாட்டான், முதல் போட்டியிலேயே தூள் கிளப்பியது மட்டும் அல்ல, போட்டிகளை கலகலப்பாக வைத்திருந்தமைக்கும் மிக்க நன்றி..........👍. பிற்குறிப்பு: இங்கு வல்லுநர்களால் கூறப்பட்ட பல தகவல்களை தொகுத்து சுருக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்புவதாக உள்ளேன்.................🤣.
  46. https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.htmlதமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு By Mathivanan Maran Updated: Sunday, March 9, 2025, 17:04 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. AD தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இந்த துறையில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் உள்ள மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனையில் ரூ1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரும் தந்திருந்தார். Also Read விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. அஷ்டம சனி ஓவர்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் முழு விவரம் இதோ இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல், விற்பனை தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். AD அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது; தற்போது ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சோதனையில் பெருமளவு பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. Recommended For You "டாஸ்மாக்கில் ரூ.1லட்சம் கோடி ஊழல்?அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் ஆளுநரிடம் 'டாக்டர்' தந்த பட்டியல்? " அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நள்ளிரவுக்கும் பின்னும் தொடர்ந்தது. டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.