Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    1223
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38770
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/18/25 in all areas

  1. ச‌ரி உற‌வுக‌ளே மூன்று கிழ‌மை க‌ழிச்சு ச‌ந்திப்போம்👍................... நீங்க‌ள் எல்லாரும் இஞ்சோய் ப‌ண்ணுங்கோ🥰🏏🏏🏏🏏🏏🏏🏏🏏🏏..................................
  2. சுவி, நந்தன், ரசோதரன். மூவரையும் கொஞ்சம் கீழே இறக்குவதற்கு நல்ல சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். குலுக்கல் இன்றே கடைசி நாள். அம்மாமாரே ஜாயாமாரே. வாருங்கள் வாருங்கள் வந்து வாங்கிச் செல்லுங்கள். உங்கள் அதிஷ்டம் உங்களை அழைக்கிறது.
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 34வது போட்டி மழை காரணமாகத் தாமதமாகியதால் 14 ஓவர்கள் போட்டியாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் ரிம் டேவிட்டின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் விரைவாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி இலக்கை அடையக்கூடிய ஓட்டவிகிதம் குறைவாக இருந்தமையால் ஆட்டமிழக்கால் 33 ஓட்டங்கள் எடுத்த நெஹால் வதேராவின் பங்களிப்புடன் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 98 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதலாவது இடத்தை @நந்தன் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் பாதுகாப்பாகத் தக்கவைத்துள்ளார். @goshan_che மீண்டும் தனக்குப் பிரியமான இடத்திற்கு நகர்ந்துள்ளார்!
  4. தோனியாய் பிறந்திலனே இப்பூவுலகில் வீணனாய் ஏன் பனயேறி பார்த்திருப்பான் தமனாவை பக்கத்தில் இருத்தி பல் தெரிய சிரிக்கும் தோனிபோல் கிக்கெட்டை கற்றிருந்தால் கனடாவிலும் இருந்து கண்ணீர் விடவேண்டி வந்திருக்காதே அடுத்த பிறவி ஒன்றிருந்தால் தோன்றிடுவேன் தோனியாய் தோற்றாலும் சி.எஸ்.கே யில் விளையாடிடவே...
  5. Preity G Zinta · Preity Zinta 🌹" இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ....... ! 😍 ( விளையாட்டின் பெறுபேறுகள் எப்படியும் போகலாம் ....... இந்த நிமிடம் மகிழ்ச்சியாய் வாழ்வோம் ) ........ !
  6. Trump and strategy of tariffs Paresh Nath, U.T. Independent, India Trump threatens 25% tariffs on Mexico and Canada Dario Castillejos, Oaxaca, Mexico Tariffs on the neighbor Angel Boligan, El Universal, Mexico City, Www.caglecartoons.com
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எல்லன் சாங் பதவி, பிபிசி உலக சேவை 18 ஏப்ரல் 2025, 01:12 GMT மாபெரும் மேதைகள்கூட சாதாரண மனிதர்கள்தான். சார்பியல் கோட்பாட்டின் தந்தையாக, ஈர்ப்பு விசை மற்றும் ஒளியை ஆராய்ந்து விளக்கிய இயற்பியலாளராக ஐன்ஸ்டீன் இருக்கலாம். ஆனால் மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட சில நேரங்களில் தனது சொந்தக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார். தன் மீதான இந்த 'சுய சந்தேகம்', அவர் சில தவறுகளைச் செய்யவும் வழிவகுத்தது. 'மிகப் பெரிய தவறு' பொது சார்பியல் கோட்பாட்டு (General relativity) குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஈர்ப்பு சக்தி பிரபஞ்சத்தை சுருங்கச் செய்யும் அல்லது விரிவடையச் செய்யும் என ஐன்ஸ்டீனின் கணக்கீடுகள் சுட்டிக்காட்டின. ஆனால் அந்தக் காலகட்டத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனவே, 1917ஆம் ஆண்டு வெளியான பொது சார்பியல் பற்றிய தனது ஆய்வறிக்கையில், ஈர்ப்பு விசையின் தாக்கத்தைச் சமநிலைப்படுத்த ஐன்ஸ்டீன் "அண்டவியல் மாறிலி" (cosmological constant) என்ற ஒன்றைத் தனது சமன்பாடுகளில் சேர்த்தார். இதன் மூலம் பிரபஞ்சம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று பரவலாக இருந்த கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது அல்ல என்பதற்கான புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினர். உண்மையில், பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருந்தது. பின்னர், இயற்பியலாளர் ஜார்ஜ் காமோவ் 'My World Line: An Informal Autobiography' என்ற தனது நூலில் "அண்டவியல் மாறிலியின் அறிமுகம் அவர் வாழ்க்கையில் செய்த பெருந்தவறு" என்று ஐன்ஸ்டீன் குறித்து எழுதினார். பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?17 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA/J MERTEN/D COE படக்குறிப்பு,அந்தக் காலத்தில், 'பிரபஞ்சம் நிலையானது' என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது ஆனால், இதற்கு இன்னொரு சுவாரஸ்யமான திருப்புமுனையும் உள்ளது. ஒரு மர்மமான "இருண்ட ஆற்றலின்" காரணமாக பிரபஞ்சத்தின் விரிவாக்கம் வேகப்படுத்தப்படுகிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஈர்ப்பு விசையைச் சமன்படுத்துவதற்காகத் தனது சமன்பாடுகளில் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய "அண்டவியல் மாறிலி" தான், உண்மையில் இந்த இருண்ட ஆற்றலுக்குச் சிறந்த விளக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. எனவே, அது தவறு அல்ல என்று சிலர் கருதுகிறார்கள். தொலைதூர விண்மீன் குழுக்களின் அறிமுகம் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மற்றொரு நிகழ்வையும் கணித்தது. நட்சத்திரம் போன்ற ஒரு மிகப்பெரிய பொருளின் ஈர்ப்பு புலம், அதன் பின்னால் உள்ள தொலைதூர பொருளில் இருந்து வரும் ஒளியை வளைத்துவிடும். இதன் மூலம் அந்தப் பெரிய பொருள் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடி போல (பெரிதாகக் காட்டும் கண்ணாடி - magnifying lens) செயல்படுகிறது. 'ஈர்ப்புப் புல ஒளிவிலகல் - Gravitational lensing' (ஒரு பொருளிலிருந்து வரும் ஒளி, ஒரு பெரிய பொருளின் அருகே செல்லும்போது, அந்தப் பொருளின் ஈர்ப்புப் புலம் ஒளியின் பாதையை வளைத்து, பார்வையாளருக்கு அது வேறு இடத்தில் இருந்து வருவது போலத் தோற்றமளிக்கும்) எனப்படும் விளைவு, பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக இருக்கும் என்று ஐன்ஸ்டீன் நினைத்தார். அதனால், அவர் தனது கணக்கீடுகளை வெளியிடவே விரும்பவில்லை. ஆனால் செக் குடியரசைச் சேர்ந்த பொறியாளரான ஆர்.டபிள்யூ. மாண்டல் அதை வெளியிடுமாறு ஐன்ஸ்டீனை வற்புறுத்தினார். பின்னர் 1936ஆம் ஆண்டு சயின்ஸ் இதழில் வெளியான தனது சொந்த கட்டுரையை மேற்கோளிட்டு, "மாண்டல் என்னை வற்புறுத்தி வெளியிட வைத்த இந்தச் சிறிய கட்டுரையை, நீங்கள் வெளியிட உதவியதற்கு நன்றி கூற விரும்புகிறேன். இது பெரிதாக மதிக்கத்தக்கது அல்ல, ஆனால் இந்த ஏழைக்கு மகிழ்ச்சியளிக்கிறது," என ஐன்ஸ்டீன் அதன் பத்திரிக்கை ஆசிரியருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கட்டுரையில் உள்ள கண்டுபிடிப்பின் மதிப்பு வானியலுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஹப்பிள் தொலைநோக்கிக்கு, பூமிக்குக் அருகிலுள்ள பெரிய விண்மீன் குழுக்கள் மூலம் பெரிதாக்கப்பட்ட, தொலைதூர விண்மீன் குழுக்களின் விவரங்களைத் திரட்ட உதவுகிறது. குழந்தைகளை மோசமாக பாதிக்கக்கூடிய பெற்றோரின் 4 செயல்கள் - எப்படி நடந்து கொள்ள வேண்டும்?17 ஏப்ரல் 2025 கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,NASA/ESA படக்குறிப்பு,ஈர்ப்புப்புல ஒளிவிலகல், ஹப்பிள் டெலஸ்கோப்புக்கு 'ப்ளூ ஹார்ஸ்ஷு' விண்மீன் குழுவை படம்பிடிக்க உதவியுள்ளது 'குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது' அலைகளும் துகள்களும் என ஒளியை விவரிக்கும் ஐன்ஸ்டீனின் 1905ஆம் ஆண்டின் கட்டுரை உள்பட, அவரது பணி இயற்பியலின் வளர்ந்து வரும் அந்தத் துறைக்கு அடித்தளம் அமைக்க உதவியது. குவாண்டம் இயக்கவியல், மிகச் சிறிய துகள்கள், அதாவது (அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்கள்) போன்றவற்றின் விசித்திரமான உலகத்தை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு குவாண்டம் பொருளால் ஒரே நேரத்தில் பல நிலைகளில் இருக்க முடியும் ('சூப்பர்பொசிஷனில்'). அதாவது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். ஆனால் நாம் அதை அளவிடும்போது, அது ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு (நிலைக்கு) கொண்டு வரப்படுகிறது. இதற்கான பிரபலமான விளக்கம் இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கரால் அளிக்கப்பட்டுள்ளது. 'ஒரு பெட்டியில் உள்ள பூனையை யாரோ ஒருவர் அந்தப் பெட்டியின் மூடியைத் திறந்து சரிபார்க்கும் வரை ஒரே நேரத்தில் அது உயிருடனும் இருப்பதாகவும், இறந்து விட்டதாகவும் கருதப்படலாம்' என்பதுதான் அந்த விளக்கம். மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எர்வின் ஷ்ரோடிங்கரின் முரண்பாடு ஒரு பெட்டியில் பூனை என்ற கருத்தைப் பயன்படுத்தி விளக்கப்பட்டது. ஆனால் குவாண்டம் இயக்கவியலின் நிச்சயமற்ற தன்மையை ஐன்ஸ்டீன் நிராகரித்தார். 1926இல், அவர் இயற்பியலாளர் மாக்ஸ் பார்னுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் "குவாண்டம் இயக்கவியலில் சீரற்ற தன்மை கிடையாது (God does not play dice)" என்று கூறித் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். விஞ்ஞானிகளான போரிஸ் பொடோல்ஸ்கி மற்றும் நேதன் ரோசனுடன் இணைந்து ஐன்ஸ்டீன் 1935ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், சூப்பர் பொசிஷனில் உள்ள இரண்டு பொருள்கள் ஏதேனும் ஒரு வகையில் இணைக்கப்பட்டு, பின்னர் பிரிக்கப்பட்டால், ஒருவர் முதல் பொருளைக் கவனித்து அதற்கு மதிப்பை அளிக்கும்போது, இரண்டாவது பொருளைக் கவனிக்காமலே, அதன் மதிப்பு உடனடியாக நிர்ணயிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்த யோசனை, குவாண்டம் சூப்பர்பொசிஷனுக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அது பல ஆண்டுகளுக்குப் பிறகு குவாண்டம் இயக்கவியலில் ஒரு முக்கியமான சிந்தனை வளர்ச்சிக்கு வித்திட்டது. அதை நாம் இப்போது குவாண்டம் பின்னல் (Entanglement) என்று அழைக்கிறோம். இது, இரண்டு பொருள்கள் வெகுவாக தொலைவில் இருந்தாலும் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும் எனக் கூறுகிறது. இதன் மூலம், ஐன்ஸ்டீன் புத்திசாலித்தனமாகத் தனது கோட்பாடுகளை விளக்கியுள்ளதையும், சில நேரங்களில் அவர் தவறு செய்திருந்தாலும், அந்தத் தவறுகளும் புதிய சிந்தனைகளை உருவாக்க உதவியுள்ளன, நவீன உலகில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgqvl2ng1z1o
  8. ராஜஸ்தானும் பெங்களூர், சென்னை அணிபோல் தனது மைதானத்தில் தோற்கும் அணி. ராஜஸ்தான் அணிக்கு இரண்டு இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்து அந்த அணியினை தோற்கடிக்கிறார்கள்.🤣
  9. சனி 19 ஏப்ரல் GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிலாமதி சுவி கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 18 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் 05 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி கந்தப்பு ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  10. தொடர்ந்தும் தனது முதல்வர் பதவியைத் தக்க வைத்த தளபதி நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😂. மகா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் 🤣 முதல்வரின் புகழ் பாட புலவர்களையும் தன் பரிவாரங்களுடன் அழைத்துச் செல்கின்றார் 😅
  11. நலம்.நலமறிய ஆவல். என்று எழுதுவார்கள். இது என்னடா தலைமுடி நிலையை ஆவல்? கடவுளே இன்னும் என்னென்ன கேட்கப் போறாங்களோ? எதுக்கும் கோசான் கொஞ்சம் உசாராக இருப்பது நல்லது.
  12. உங்கள் வாயிலிருக்கும் கருவாடு போதாதென்று நான் வேறு கருவாடு தரவேண்டுமா?.
  13. யயார் சொன்னது முனகிறன் என்று.எனக்கு கன நாளாக முதுகு உளைவு இவளவு பேர் ஏறி மிதிக்கும் போது சொர்க்ம் தெரியுது.😂
  14. ஜயகோ. நான் முதல் போட்டியில் RCB என்றும் அடுத்த போட்டியில் PBKS என்றும் தெரிவு செய்து வைத்திருக்கிறன். எதுக்கும் பஞ்சாப்பை கொஞ்சம் தன்மையா கையாளுவம். "நமக்கு புள்ளி முக்கியம் பிகுலு"
  15. விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்புகிறார். திரைப்படத் துறையில் இருந்த காலத்தில், அவர் தனது பல படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார். பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அவதூறு செய்ய முயன்றார். இப்போது, அவர் ஒரு அரசியல் முகத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார் சமீபத்தில் அவர் ஒரு இஃப்தார் விருந்தை நடத்தி, சூதாட்டக்காரர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளை அழைத்தார், இது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நடிகர் விஜய்யுடன் கைகுலுக்கவோ, சந்திக்கவோ அல்லது அனுதாபம் கொள்ளவோ கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், நடிகர் விஜயை நம்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய்க்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த சீமான், “எனக்கு தம்பி விஜய்யை பற்றி தெரியும். அது மாதிரி உள்நோக்கம் வைத்துகொண்டு செய்யும் ஆள் அவர் கிடையாது. அவர் எதார்த்தமான ஆள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார்கள், அதனால் அவர் போயிருப்பார். விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாதா? எனக்கே தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக எங்கிருந்தோ பேசுகிறார்கள். இந்த மாதிரி குற்றச்சாட்டை எல்லாம் தம்பி விஜய் மீது வைக்காதீர்கள்” என்று கூறினார். nakkheeran“விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்”...ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன...
  16. தண்டனையே குற்றம் “மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார். இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்னொரு பரியாரியார், “நான் அவங்களைக் கலைச்சு விட்டிட்டன் , உவங்கள் சரிவரமாட்டாங்கள், எங்களை மாதிரி இப்பத்தைகள் இல்லை” எண்டு மருத்துவத்தையும் பாடமாக்கித் தள்ளீடுவம் எண்டு நம்பி வந்த பெடிபெட்டைகளை பேசிக்கொண்டு வந்தார். இதுகள் படிச்ச பள்ளிக்கூடம் தான் பிழை எண்டு முடிவுக்கு வந்தவர் அதிலேம் வாத்திமார் அடிச்சுத் திருத்தாததால தான் எல்லாம் இப்பிடித் திரியுது எண்ட புறுபுறுத்தபடி போனார். இதையும் கடந்து கிளினிக்குக்குப் போக அங்க ஒரு அம்மா மகனோட உள்ள வந்தா. அவன் தான் வீட்டுக்கு காவலோ தெரியேல்லை கூட்டுக்க நிக்கறதுக்களுக்கு கழுத்தில கட்டிறதை காதில இருந்து கால் வரை தொங்க விட்டபடி பெடியன் வந்திருந்தான். வந்தவனுக்கு ஏதும் வருத்தமோ தெரியாது பாவம் தலை மயிரெல்லாம் கறள் கட்டினமாதிரிக் கலரில இருந்துச்சுது. பதினைஞ்சு வயசு பள்ளிக்கூடத்துக்கு போறேல்லையாம் , ஆனால் பக்கத்தில எங்கயோ “ கூடப் போனதில” அடி வாங்கீட்டானாம் எண்டு உடைஞ்ச கையோட வந்தவனைப் பாக்க விளங்கிச்சுது உடைஞ்சது கை மட்டுமில்லை கன பிணைப்புக்கள் எண்டு. “ ஏன்டா பள்ளிக்கூடம் போறேல்லை ” எண்டு கேக்க அம்மா “அவன் குளப்படி எண்டு சேர் அடிச்சதாலை நிண்டிட்டான்” எண்டு பெருமைப்பட்டுச் சொன்னா. அடிச்ச அடிவாங்கின கதையெல்லாம் கேட்டு முடிய மணி ரெண்டாக, மனிசி மத்தியானம் பள்ளிக்கூடம் முடிய ஏத்த வரச் சொன்னது ஞாபகம் வர ,நேரம் போட்டுது எண்டு போட்டு அவசரமாக் காரை எடுத்துக் கொண்டுபோய் சிக்னலில நிக்க பின்னால வந்து நிண்ட மூண்டு சில்லும் , கொக்கு மாதிரி எப்பவுமே ஒண்டைத் தூக்கிக் கொண்டு நிக்கிற ரெண்டு சில்லும் “கோன் அடிச்சுது “, தான் இதுக்கெல்லாம் நிக்கேலாதாம் “என்னை விடு போப்போறன்” எண்ட மாதிரி . இவனுக்காக எப்பிடிக் காரைத்தூக்கிக் கொஞ்சம் அரக்கிப் ரோட்டுக் கரையில நிப்பாட்டிற எண்டு யோசிக்கப் பச்சை விழுந்திச்சுது. முன்னுக்கு நிண்ட நான் டக்கெண்டு எடுக்க ரெண்டு பக்கத்தாலேம் பாதுகாப்புக்கு போற பொலிஸ்காரன் மாதிரி வந்த ரெண்டு சில்லுக்காரன் நான் slowவாய்ப் போறனாம் எண்டு முறாய்ப்பா முறுக்கிக் கொண்டு போக அதைக் கவனிக்காத மாதிரி நான் ஓடிக்கொண்டு போனன். போற வழியில பிரபல பாடசாலையில படிக்கிறது, படிப்பிக்க விட்டது எல்லாம் பள்ளிக்கூடம் விட்டோன்ன தமன்னாவைப் பாக்கப் போன கூட்டம் மாதிரி பாஞ்சு வந்து நாலைஞ்செண்டு நடு ரோட்டால அணிவகுத்துப் போக ரோட்டின்டை கரைப் பக்கமா மண்ணுக்கால காரை விட்டன். ஒரு மாதிரி கஸ்டப்பட்டு நேரம் போகுதெண்டு அரக்கப் பறக்க வந்தா, அண்டைக்கெண்டு பாத்து போக்குவரத்தை சீராக்கிறம் எண்டு வந்து நிண்ட சீருடைக்காரார் எல்லாச் சந்தீலேம் நான் கிட்ட வரவும் என்னை மறிச்சிட்டு மற்றவயை விடவும் சரியா இருந்திச்சுது. எங்க காணேல்லை எண்டு Mrs அடிச்ச கோலை, வேணும் எண்டு “ miss” பண்ணீட்டு ஒரு மாதிரிப் போய்ப் பள்ளிக்கூட வாசலில நிக்க, வந்து ஏறினவை எல்லாரும் கதவைச் சாத்தின சாத்து காரோட சேத்து எனக்குத் தான் எண்டு விளங்கிச்சுது. ஏறின உடனயே என்னை ஒண்டும் கேக்காம பின்னால திரும்பி, “எத்தினை marks, எத்தினை மணிக்குக் கிளாஸ், எங்க தொப்பியைக் காணேல்லை” எண்ட வழமையான கேள்வி-நேரம் நடக்க “ரோட்டை” மட்டும் பாத்தபடி காரை ஓடிக்கொண்டு போனன். ஆளை விட்டாக் காணும் எண்டு பின்னுக்கு பாஞ்சு ஏறினதுகளை பாத்து மனிசி, “இதுகளை ஒண்டும் செய்யேலாது, இங்கபார் சாப்பாடு அப்பிடியே இருக்கு, அப்போத வெறும் socks ஓடித் திரியுது, சட்டையில மை , home work செய்யேல்லையாம் எண்டு complain , நாங்கள் எல்லாம் எங்கடை அம்மா சொன்னா எல்லாம் உடன செய்வம், எண்டு பஞ்ச புராணத்தைத் தொடங்க , “சரிசரி, விடும் பாவம்” எண்டு நான் சொல்ல, “கடைசியா நீங்களும் ஒண்டும் சொல்லாதேங்கோ நான் தான் எல்லாம் பாக்கோணும்” எண்டு புறுபுறுத்தபடி மனிசி வீடு வர வீட்டுக்குள்ள போக, நான் எங்க சோத்துக்கரண்டியைக் காணேல்லை சாப்பாட்டு மேசையில தேடிக்கொண்டிருந்தன். பின்னேரம் patient பாத்துக் கொண்டிருக்க உள்ள வந்த ஒருத்தர் மகனை இருத்தி வைச்சிட்டு “ அவனுக்கு கையில நோகுதாம், எழுதவே ஏலாது எண்டு சொல்லிறான்” எண்டு தொடங்கினார். நானும் அங்க நோகுதா இங்க நோகுதா எண்டு கேக்க அவன் அப்பாவைப் பாக்க அவர் தலையும் இவன்டை தலையும் ஒண்டா ஆடிச்சுது ஓமெண்டு . என்னடா இண்டைக்கு வந்த முதலாவது patientஏ இப்பிடி இருக்கு, ஒரு பிரச்சினையேம் காணேல்லை எண்டு போட்டு , ஒண்டுமில்லை சும்மா நோ தான் எண்டு சொல்ல முதல், “எனக்கு X-ray எடுக்கோணும்” எண்டு அப்பா ஓடர் போட நான் தேவேல்லை எண்ட, “இல்லை வாத்தியார் அடிச்சிட்டார் என்டை மகனுக்கு , அவருக்கு நான் ஆரெண்டு காட்டிறன், எல்லா இடமும் கடிதம் போட்டிருக்கிறன், உங்கடை report ஒண்டும் வேணும்” எண்டு என்னையும் சட்டத்தில சாட்சியா சேக்கப் பாத்தார். என்னத்தை எழுதிறது எண்டு தெரியாம எதையோ கிறிக்கிக் குடுக்க, வெளீல போய் உந்த டாக்குத்தர் சரியில்லை நான் கொழும்பில போய்க் காட்டப்போறன் எண்டிட்டுப் போனார். ஒரு நாள் இரவு திடீரெண்டு நட்பின் அழைப்பொண்டு “ உடன வந்தா எங்க patient பாப்பீங்களா, மகனுக்கு முதுகில அடிச்சிட்டார் மாஸ்டர், அவன் நோகுதெண்டு இப்ப அழுறான்”எண்டு சொல்லத்தொடங்கி பிறகு நோவை விட்டிட்டு , “என்டை பிள்ளையை எப்பிடி அடிப்பார், நான் உடனயே principalக்கும் சொல்லீட்டன்” எண்டு கதை சொல்லி முடிக்க பிள்ளை நோ மறந்து நித்திரையாகீட்டுது எண்டு நெக்கிறன். இவதான் வழக்காம வேற ஆராவது சொல்லேக்க அடிச்சது சரியெண்டு வக்காளத்துவாங்கிறவ , ஆனாலும் தன்டை மோனுக்கு எண்டோன்ன வாத்திபிழை அவன் நல்லபெடியன் சரியான அமைதி எண்டு அவனைப் பத்தின பட்டோலையை நீட்டியே வாசிச்சா. 88 எண்டு நெக்கிறன் சுண்டுக்குளிச் சந்தீல இந்தியன் ஆமி எங்கடை பள்ளிக்கூட Principalஇலும் பாக்க strict ஆ இருந்த காலம். நாங்கள் கொஞ்சப் பேர் பள்ளிக்கூடத்துக்கு வேளைக்கு வந்து மூலை வகுப்பில நிண்டு “ Recky” எடுக்கிறனாங்கள்; அவங்களை இல்லை சுண்டுக்குளிப் பெட்டைகளை. ஒரு பக்கம் prefects க்கும், ஒரு பக்கம் வாத்திமாருக்கும் sentry போட்டுத்தான் Recky எடுக்கிறது. எல்லாரும் வரிசையா வாங்கில ஏறி நிண்டு பாக்கிறது. அவங்கடை புண்ணியத்தில சுண்டுக்குளிச் சந்தீல எல்லாப் பெட்டைகளும் இறங்கி வரிசையா நடந்தும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் போறதால கனநேரம் கண்ணுக்கு குளிரச்சி . பூக்களை ரசிக்கேக்க குளவிக் கூட்டுக்க கல் எறிஞ்ச மாதிரி ஆரோ ஒருத்தன் எறிஞ்ச கல்லு பொம்பிளை ஆமிக்கோ இல்லை ரீச்சருக்குப் பட்டிச்சோ தெரியேல்லை அடுத்த நாள் வகுப்பு முழுப்பேரையும் கூப்பிட்டு “ ஆர் செய்தது எண்டு சொல்லித் தாங்கோ எண்டு ஒரு கருணா இருக்க மாட்டானா எண்டு தனத்தார் தேட, கடைசிவரை முள்ளிவாய்க்காலில ஒண்டா ஒருந்த மாதிரி நாங்க நிக்க, காட்டிக்குடுக்காட்டிப் பிரச்சினை வரும் எண்ட தனத்தாரின்டை வெருட்டு எடுபடாமப் போக, நாலு பிரம்பு முறிஞ்சும் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு வகுப்புக்கு வந்தம். அடுத்த பாடம் இங்கலீஸ் படிப்பிக்க வந்த Alex Master , நடந்ததை கேட்க சரி இந்தாளும் வெளுக்கப் போகுதாக்கும் எண்டு நெக்க “ , I like you spirit “ எண்டு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. வாத்தி அடிச்சது “செய் குளப்படீக்காய்” இருந்த காலம். போன முறை செய்யாத குளப்படிக்கு அடிவாங்கினவன் இந்தமுறை தன்டை குளப்படிக்கு வேறொருத்தன் அடிவாங்க விளங்கினான் வாத்தி அடிக்கிறது ஆளுக்கில்லை சிவபருமானுக்கு பாண்டியன் குடுத்த மாதிரித் தான் இந்த அடியும் முழு வகுப்புக்குத்தான் எண்டு. Friend க்காய் வாங்கின அடி ஒரு கடி மாங்காயில் அடங்கிப் போக வாத்தீன்டை பிரம்படி இனிப்பாய் மாறிச்சுது. அதோட அடிச்ச வாத்தி அண்டே மறந்தாலும் அதைக் கேள்விப்பட்டா அம்மா அந்தக்கிழமை முழுக்க கலைச்சுக் கலைச்சு இன்னும் வெழுப்பா எண்டதால கன அடிகள் வீட்டுக்குப் போகாமல் வகுப்புக்குள்ளயே சமரசப்பட்டிச்சுது. அடிச்சவாத்தி அடுத்தநாளும் முன்னுக்குக் கூப்பிட சரி இண்டைக்கும் அடிதான் எண்டு வாத்தியையும் திட்டிக் கொண்டு கையைத் தடவித்தடவிப் போக , “புத்தகத்தை எடுத்து அடுத்த பாடத்தை வாசி” எண்டு சொல்லி முன்னால நிக்கவிட நான் சிறுக்க வாத்தியார் உயர்ந்து நிண்டார். இப்ப அடிக்கடி நடக்கிற “ மீண்டும் பள்ளிக்கூடம் போறம்” எண்ட நிகழ்வெல்லாத்திலேம் படிச்சதோ படிப்பிச்சதோ ஒருத்தருக்கும் ஞாபகமிருக்காது ஆனால் அடி வாங்கினவனுக்கும் அடிச்ச வாத்திக்குத்தன் தான் ஞாபகமும் கூட, demandம் கூட. வீடோ, பள்ளியோ கண்டிப்பும் தண்டிப்பும் மாணவருக்கு காவலாய் இருந்த காலம் அது. இப்ப என்னெண்டாத் தண்டனைகள் கண்டிக்கபட்டு, பெற்றவர் இன்று பொலிசாகி, சமூக வலைத்தளங்கள் நீதிபதியாகிப் போய், கடைசியில் தண்டனைகள் குற்றங்களாக்கப் பட்டு நிக்கிற காலம் இது. அடிச்துக்கெல்லாம் காரணம் சரியா இல்லாட்டியும் அடி வாங்கின நான் சரியாகீட்டன் ஏனெண்டால் அடி கூட தடுப்பூசி மாதிரித்தான் வருத்தம் வர முதலே போட்டால் தான் நல்லம், வருத்தம் வராது வந்தாப்பிறகு ஊசி போட்டுப் பிரியோசனமிருக்காது. இவை யாவும் நிஜமே Dr. T. Gobyshanger யாழ்ப்பாணம்
  17. 🤣............... அது சென்னை அணி இந்த வருட சாம்பியன்ஸ் ஆக வருவார்கள் என்று போட்டவர்களுக்கு................ எனக்கு அவர்கள் யார் யார் என்று தெரியாது, ஆனால் எப்படியும் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.............
  18. அய்யா ...உங்கள் நேர்மையான நிர்வாக முறைபற்றீ .. நான் ஏற்கனவே இந்த திரியில் எழுதிவிட்டேன் ..உங்கள் நேர்மை பற்றி எனக்கு எந்த அய்யப்பாடுமிலஐ ..இடையில் ஒரு ஜோக் ..அவ்வளவே.. ஐ.பி எல் ஐப் பொறுத்தவரையோ ...ஏனைய போட்டிகளைப் பொறுத்தவரையோ கொப்பி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை ....இதுவும் பிரியனுக்கு எழுதிய பகிடியே... இந்த கிரிக்கட்டு சம்பந்தமான செய்திகளை விலாவாரியாக ப்டித்து இன்புறுபவன்..அதுவும் இந்திய ரீம் என்றால் ...தேன் குடிப்பதுபோல்..
  19. அதூ. அந்த கதம் கதம் படத்த இப்ப போடவேணும். கும்பல்ல கோவிந்தாவா.... அரோகராவா. பெரிய பஜனைக் கோஷ்டியே இருக்கு.
  20. 96 ஓட்டங்களுக்கு மேல் பஞ்சாப் அணி இலகுவாக அடைந்து விடும். இன்று எந்த அணி வென்றாலும் RCB அணியில் இன்று பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதை Tim David 🏏 வென்றுவிட்டார்
  21. அதெப்பிடி கணக்கில வரும். குறைந்த பரிமாற்றம் என்றால் குறைந்த ஓட்டம் வரலாம்தானே. 5 பரிமாற்றங்கள் வரையும் போட்டியை நடத்தலாம். ஏழாவது விக்கட்டும் போட்டுது.
  22. மகிழ்ச்சி. சேர்ந்தே பயணிப்போம்.
  23. கிருபன் கதம் கதம் என்று சொல்லிட்டார். இந்தப் பீலா எல்லாம் நடக்காது.
  24. Afreen Khan · Mahendra Singh Dhoni and CSK fans Tamanna Bhatia lovely picture after LSG vs CSK match 😘"
  25. 18 APR, 2025 | 06:03 PM இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினத்தை (18) பெரிய வெள்ளியாக உலகெங்கும் கிறித்தவர்கள் அனுஷ்டிக்கின்றனர். தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்றையதினம் நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை யாத்திரைகள் பக்திபூர்வமாக நடைபெறுகின்றன. கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா தேவாலயம் பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயத்தில் யேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைப் பாதை நடைபெற்றது. (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்) மட்டக்களப்பு - மரியாள் தேவாலயம் அதன்படி, கிழக்கு மாகாணத்திலும் பலத்த பாதுகாப்புடன் பெரிய வெள்ளி சிலுவைப் பதை யாத்திழை வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை வழிபாடுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை மட்டக்களப்பில் பழமை வாய்ந்த மரியாள் தேவாலயத்திலும் ஆலய பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் நடத்தப்பட்டன. தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப் பாதை நகரின் பிரதான வீதிகளின் ஊடாக சென்று, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது. இந்த சிறப்பு வழிபாடுகளில் அதிகளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் தேவாலயத்தின் பிரதான போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு சிலுவையில் அறையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி வழிபாடுகளில் காண்பிக்கப்பட்டன. இதன்போது பெரிய வெள்ளியின் மகத்துவம் பற்றி தேவாலய பிரதம போதரால் சிறப்புரை ஆற்றப்பட்டது. இவ்வழிபாடுகளில் அதிகளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். இயேசு ஜீவிக்கிறார் ; புனித வெள்ளி பாதயாத்திரை! கொழும்பு - 15 இல் அமைந்துள்ள இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையின் புனித வெள்ளி பாதயாத்திரை இன்று 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து மனுக்குலத்தை மீட்டு, இரட்சிக்க மனிதனாக இப்பூமிக்கு வந்து, மக்களின் பாவத்திற்காக தன்னை தியாககமாய் ஒப்புக்கொடுத்து, சகல அவமானங்களையும், நிந்தைகளையும், நோய்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்ததை நினைவுகூர்ந்து பலர் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர். பாதயாத்திரையானது கொழும்பு ஆமர்வீதி (பழைய சுலைமான் வைத்தியசாலை எதிரில்) பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்து, பஞ்சிகாவத்தை, மருதானை, யூனியன் பிளேஸ் ஊடாக விஹாரமாதேவி பூங்காவை சென்றடைந்தது. சுவி. கலாநிதி. M.R. இராஜேந்திரம் மற்றும் சுவி. டாக்டர். C.V. இராஜேந்திரம் ஆகியோரால் தேவ செய்தி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212278
  26. அந்த பெண்பிள்ளை தன் பெற்றதாய் தந்தை சக உறவுகளை நினைக்கவில்லையே? வீணாக போன உயிர் .
  27. ஓம். எனது வயதை அண்ணளவாக கணித்து விட்டீர்கள். முடி கொட்டவில்லை, தலையில் ஆங்காங்கே வெள்ளி ஓடுகிறது. ஆனால் எண்ணை வைத்து இழுப்பதால் அது தெரிவதில்லை. காதோரம் நரை கொஞ்சம் உள்ளது. ஆகவே இப்போ கிம் ஜொங் பாணியில் காதை சுற்றிலும், தலையின் பின்புறமாகவும் சீரோவில் அடிக்கிறேன். தாடி பர பர என நரைத்து விட்டது. சிலவருடம் வரை கூட சால்ட் பெப்பர் சரிசமானாக இருந்தது. ஆனால் இப்போ 75% க்கு மேல் சால்ட். கருவாடு மீனாகிறது🤣
  28. ஆமா! “கதம் கதம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு”
  29. இது. இதுதான் உண்மையான போட்டி. எதிலும் நல்லதையே பார்த்தல். அன்னப் பறவை நீரை விட்டு பாலை மட்டும் அருந்துமாம் என்று சொல்லுவினம். சுவைப்பிரியன் எங்கள் அன்னம்.
  30. என்னைப்போன்றவர்களுக்கு சில வேளை உங்களுக்குமாகவும் இருக்கலாம்.... பிள்ளையான் பிழையானவனாக தெரிகின்றார். அதற்காக நான் பிள்ளையானுக்காகவோ கருணாவிற்கோ வக்காளத்து வாங்குவதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தமிழர்களின் ஆதரவின்றி எந்தவொரு செயல்களையும் நிறைவேற்றியது கிடையாது. குறிப்பாக.... சிறிமா ஆட்சியிலும் சரி.....அதன் பின்னர் ஜேஆர் தொடக்கம் அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் தமிழ்க்கட்சிகளின் ஆதரவுடன் அல்லது தமிழ் பிரமுகர்களின் ஆதரவுடனேயே தமிழ்மக்களின் உரிமைகளையும் அதற்காக போராடியவர்களையும் சூறையாடியது. எனவே பலமும் பலவீனமும் நமக்குளேயே இருந்து தாண்டவமாடுகின்றது.👈
  31. அந்த ஐவர். இந்த ஐவர். எந்த ஐவர். யார்ரா அந்த பையன் நாந்தான் அந்த பையன் நந்தனின் ஆட்சி கவிழப்போகிறதே!!!
  32. துரோகத்தின் பரிசு!இனத்தைக் காட்டிக் கொடுத்தவன் யாருக்குமே நம்பிக்கையாளனாக இருக்கமாட்டான் என்பதையே பிள்ளையானின் கைது காட்டுகிறது.பிள்ளையானைச் சந்திக்க ரணில் அவசரப்படுவது ஏன்?பிள்ளையான் சிறைக்குள்ளேயே தீர்த்துக்கட்டப்படலாம்.அதன் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.
  33. சிங்கத்துக்கு எண்ணை வைத்து, தலை வாரி விட்ட போது .... 😂
  34. தமிழ் தேசியத்தை பேசுகிறோம் பேசுகிறோம் என்று சிறப்பாக பேசிக்கொண்டு தமிழர் இருப்புக்கு கொள்ளி வைத்ததே உண்மையில் நடந்த விடயம். சிறுபான்மை இனங்கள் தம்மை காத்துகொள்ளவும் பேரினவத ஒடுக்கு முறைகளில் இருந்து தப்பி பிழைக்க இயல்பான மக்கள் தொகை அதிகரிப்பு மிக அவசியம். ஆனால் இலங்கையின் மக்கள் தொகையில் தமிழரின் வீதம் கடந்த 40 ஆண்டுகளில் மிக குறைந்தே வருகிறது. உதாரணத்துக்கு யாழ் மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் 1963 ல் இருந்து 1981 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட சனத்தொகை ஏறத்தாழ 35 வீதத்தால் அதிகரித்தது. 2025 ல் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. வடமாகாணம் முழுவதையும் பார்ததால் 1963 - 1981 வரை கிட்டத்தட்ட 49 சத வீத வளர்சசி. 2025 ல் 45 வருடங்களின் பின்னர் அதே எண்ணிக்கை நகரமல் அப்படியே உள்ளது. மக்கள் தொகை இவ்வாறு வீழ்சசியடைந்தால் இன பரம்பல் குறைவடையும். யாழ் மாவட்ட மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு 1970 களில் இலங்கை அரசு செய்த ஊக்குவிப்பை கூட( படித்த வாலிபர் திட்டம் போன்ற) தமிழர் தேசியம் பேசியவர்கள் செய்யவில்லை. குறைந்தது 1977 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கு வந்த மலையக மக்களை கூட பாரிய இடவசதி இருந்த வன்னி பகுதியுல் குடியேற்ற தமிழ் தேசியவாதிகள் எவரும் முயற்சி எடுக்கவில்லை. அவர்களில் மிக பெரும்பானமையானோர் திரும்பி மலையகம் சென்றார்கள். உண்மையில் தமிழ் தேசியத்தை விரும்பி இருந்தால் அதை செய்திருப்பார்கள். தமிழ் தேசியம் பேசிய தலைமைகள் எல்லோருமே தமது தவறான கொள்கைகள் மூலமும் வரட்டு பிடிவாதத்தின் மூலமாகவும் கடந்த பல தசாம்பங்களாக தமிழ் தேசியத்தை தொடர்ந்து சிதைத்தே வந்துள்ளனர் என்பதைக் கடந்த காலங்களை நடு நிலையுடன் பார்ததால் தெளிவாக தெரியும். இதில் அரசியல்வாதிகள் ஆயுத போராளிகள் என்று எவரும் விதி விலக்கு இல்லை. அனைத்து தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். மக்களின் அனைத்து பிரிவினரையும் வெவ்வேறு அரசியல் திலைப்பாடு இருந்தவர்களும் இணைத்து மக்களின் வாழ்வியலூடாக ப நிலை நாட்டியிருக்க வேண்டிய தமிழ் தேசியத்தை வெறும் அரசியல் சுலோகமாக மாற்றி இன்று சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட துரோகி என ஆளையாள் திட்டி தீர்ககும் நிலை. துரோகி என்ற சொல்லுக்கான அர்த்தமே கேள்விக்கிடமாக்குள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்கள் பலவேறு பிரிவுகளாக பலிந்து கிடக்கிறார்கள்.
  35. நாங்க புதிய முதலமைச்சரை வெளிக்கிடுத்தி நீங்க புள்ளிகள் போடுமட்டும் காவலிருக்க திரையரங்கில் படுத்துக் கிடந்து அன்ரிமாரை ரசித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் உடனுக்குடன் புள்ளிகளைப் போட்டுவிட்டு யாரையாவது ரசியுங்கள்.
  36. காற்று வாங்கப் போனேன் ........ ! 😍
  37. பிள்ளையான் ராக்கெட். 😂
  38. தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட........ தேச பந்து வீட் டிலிருந்து சாப்பாடு கேடடது போல தனக்கும் வீட்டு கட்டில் மெத்தை ஏ சி கேட்க்கிறாரோ ?
  39. அப்பாவி சிறுவர்கள் பாலியல் வதைக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் வதைக்குள்ளாகிய சிறுவர்களின் உளவியலிலும், ஆரோக்கியத்திலும் ஏற்படும் தாக்கம் அகல நீண்ட காலம் எடுக்கும். சிலருக்கு அதுவே ஆறாத ரணமாக வாழ் நாள் பூராவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் அந்த சிறுவர்களைப் பற்றி பெரியளவில் அக்கறைப்படாமல், குற்றம் செய்த காமுகன் எந்த கட்சியில் இருந்தான், எந்த கட்சிக்காரன் அதை மறைத்தான் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றோம். நாங்கள் வெறுக்கும் கட்சியையும் கட்சி உறுப்பினர்களையும் இதனையே சாக்காக வைத்து தூற்றுகின்றோம். உண்மையான அக்கறை எமக்கு இருக்கின்றதா என யோசிக்கின்றேன்.
  40. ஒன்று வரி செலுத்துங்கள், இல்லையேல் உடலை வருத்துங்கள். எப்படியென்றாலும் உங்கள் உடல் உழைத்தாலேயே வரியும் செலுத்த முடியும். புல் பிடுங்குவது ஒரு பொழுது போக்கு, உடற்பயிற்சி. ஒரு உழவாரம் வாங்குங்கள், முதலில் ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் முப்பது நிமிடம் செருக்குங்கள், பின் நீங்களாகவே உங்களையறியாமல் நேரம் போவது தெரியாமல் செருக்குவீர்கள். அல்லது அயலில் யாராவது மாடு வைத்திருந்தால் செருக்கி எடுக்கும்படி சொல்லுங்கள். அதுவும் இல்லையென்றால், உழுது விட்டு புல்லை வேரோடு அரித்து எடுத்து எரித்து விடுங்கள்.
  41. இவ்வளவு பெரிய நாயா? திடுக்கிட்டுப் போனேன். அது ரொம்ப சாது, சொன்னார்கள் உறவினர்கள், நண்பர்கள், பெரியவர்கள். எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. உது தற்செயலாய் மிதிச்சாலே ஆபத்து அல்லவா? சாச்சாய், அப்பிடி நடக்கவே நடக்காது அரசியல் வல்லுநர்கள் ராஜதந்திரிகள் பாடம் எடுத்தனர். அதற்கு ஒரு மணம் இருந்தது. அது எங்கு போனாலும் அதன் மணம் முன் தோன்றியது பிறகு அதன் பின்தொடர்ந்தது... ஒரு நாள் அதன் எசமான் சூக்காட்டியதும் பாய்ந்து விறாண்டியது கடித்துக் குதறியது மற்றும் பல சொல்ல முடியாத அவலங்களையும் அரங்கேற்றியது. அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது... இப்போதெல்லாம் அது உலா வரும்போது, ஊரடங்குது, கதவடைக்குது, மூச்சும் அடைக்குது. இது நடந்து 38 வருசமாச்சு ஆனா அந்த மணம் இருக்கே இப்பவும் மூச்சடைக்குது. @ரசோதரன் அண்ணனுடைய ராணுவ ரகசியத்தின் மூலமாய் உந்தப்பட்ட சிறு படைப்பு .
  42. ராணுவ ரகசியம் --------------------------- நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன. ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார். ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன். வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம். அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம். அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம். எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள்.
  43. எங்கள் வயது மட்டத்தினருக்கு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட காலம் என்றால் இந்த இந்திய இராணுவக் காலம் தான். ஏற்கனவே நான் சில தடவைகள் "மண்டையன் குழு" தொடர்பாக அங்காங்கே எழுதியிருக்கிறேன். கணக்கு, விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் என்று சகல பாடங்களிலும் திறமையாக இருந்த பல சக வகுப்பு மாணவர்கள் இந்திய இராணுவப் பிரச்சினையோடு ஊரை, நாட்டை விட்டு நீங்கினார்கள். சிலர் படிப்பை விட்டு ஐரோப்பாவில் கிடைத்த தொழில்களைச் செய்ய ஆரம்பித்து தற்போது நன்றாக இருக்கிறார்கள். சிலர் இந்தியாவில் படிக்க ஆரம்பித்தார்கள். குடும்பங்கள் சிதறிப் போன காலமும் இது தான். எங்கள் சின்ன அண்ணருக்கு, ஷெல், ஹெலி, சியாமாசெட்டி, ஆமி என்றால் மிகவும் பயப்படுவார். இந்தியன் ஆமிக்கு இவரது பயமே சந்தேகமாகத் தெரிந்திருக்கும் போல, 3 தடவைகள் சுற்றி வளைப்பில் கைது செய்து கொண்டு போய் ஒரு நாள் வைத்திருந்து விடுவித்தார்கள். அந்த நேரங்களில் அப்பாவும், அம்மாவும் எதுவும் செய்ய இயலாமல் அந்தரிக்கும் நிலை எனக்கு இன்னும் நினைத்தால் சோகம் வரும். இதனாலேயே சின்ன அண்ணரை, அவரது அரசாங்க வேலையையும் விட்டு விலக்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். "உனக்கும் மீசை அரும்பீற்றுது, நீயும் வீட்டோட இரு" என்று என்னையும் வீட்டோடு பொத்தி வைத்துக் கொண்டார்கள். பொழுது போக்க வேற வழியில்லாமல் தான் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிற பழக்கம் வந்தது. பிறகு அந்தப் பழக்கமே, சராசரியாக இருந்த படிப்பை உயர்த்திக் கொடுக்கக் காரணமாக இருந்தது. துன்பத்திலும் ஒரு silver line என்று சொல்லலாம்!
  44. சந்தேகம் வேண்டாம். தியரி பிழை😂. நாய் போன்ற வேட்டைக்குப் பழக்கமான மிருகங்களை முன்னே நின்று நேரே கண்களைப் பார்த்தால், அவை உங்களை அச்சுறுத்தலாகத் தான் பார்க்கும்! அதனால் நிச்சயம் கடிக்கவே செய்யும். ஏராளன் சொல்வது போல, ஓடினால் நாய் துரத்துவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில், வளர்ப்பு நாய்க்குக் கூட, ஓடும் ஒன்றைத் துரத்த வேண்டுமென்ற default setting இருக்கிறது. இதனால் தான் வளர்ப்பு நாய் உள்ள வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எனவே, கடி வாங்காமல் இருக்க ஒரே வழி, கடி நாய்/தெரு நாயைத் தவிர்ப்பது தான். அப்படித் தவிர்க்க முடியா விட்டால், பையப் பைய (கூலாக ஒரு பாட்டை முணுமுணுத்தபடி) சாதாரணமாக நடந்து போக வேண்டும்😂. திரும்பிப் திரும்பி பார்த்து வேகமாக நடந்தால், கடி வாங்கும் வாய்ப்புகள் அதிகம். என் அனுபவத்தில் சுவாரசியமான விடயம்: நான் மிருக வைத்தியராக வருவதற்கு முன்னர் 3 தடவைகள் நாய்க் கடி வாங்கியிருக்கிறேன். மிருக வைத்தியராக வந்து நூற்றுக் கணக்கான நாய்களைக் கையாண்ட போது, ஒரு தடவை கூடக் கடி வாங்கவில்லை. எந்த விலங்கை எப்படி அணுக வேண்டுமென்ற பயிற்சியை முதல் வருடத்திலேயே தந்து விடுவார்கள்.
  45. ஓட வெளிக்கிட்டாலோ பயந்து பின்வாங்கும்போதோ நாய்கள் கடிக்க முனையும் என நினைக்கிறேன். ஒரு தடவை தான் கடிவாங்கினேன். அது கடிநாய் வீட்டிலே தான் இருப்பது. ஒரு முறை எமது முச்சந்தியில் எதிர்பாரத விதமாக எதிரே வந்துவிட்டது. அதனை கண்டவுடன் பயத்தில் நான் அலற, வேகமாக வந்து பாய்ந்து தொடையில் கவ்விவிட்டது. இப்போது எனது முச்சக்கரவண்டியில் மிகமெதுவாக(10-12 கி.மீ/மணி வேகம்) பயணித்தாலும் இலகுவான கடிக்கும் வாய்ப்புள்ளதால் உடனடியாக நிறுத்தி சத்தமிடுவேன், பின்னர் இன்னும் மெதுவாக நகர்ந்து அவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.