Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    1223
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/25/25 in Posts

  1. இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிராமல், கனடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்காமல், மூட்டை முடிச்சுகளுடன் மீண்டும் இவர்கள் இந்தியாவிற்கே திரும்பிச் சென்றால் மகிழ்ச்சி. முக்கியமாக பஞ்சாபிகள் இவ்வாறான சிறந்த முடிவை ஒன்ராரியோவில் எடுத்தால் மிக்க மகிழ்ச்சி.
  2. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 43வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மஹாத்ரேயையும் டெவால்ட் ப்ரெவிஸையும் தவிர மற்றைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்காததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களையே எடுத்தது. ஹர்ஷல் பட்டேல் 28 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இலக்கைத் துரத்துவதில் பின்னுக்கு நின்றாலும் இஷான் கிஷானின் 44 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸின் 32 ஓட்டங்களும் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைய உதவியது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் முதல்வர் நிலையை இறுக்கமாகத் தக்கவைத்துள்ளார்!
  3. புள்ளிகளில் முதல் ஜந்து பேரும் ஒரே அணியில். இது உண்மையிலேயே அதிசயம்தான். எப்டீங்க. கிளியுடனான கூட்டுத் தொடர்கிறது. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் சுவி நந்தன் இணைப்பாட்டம் மீண்டும்.
  4. ஒரு பாடைக்கு குறைந்தது 10000 ரூபா என்று பார்த்தாலும் 243 பாடைக்கும் ஏறத்தாள 2.3 மில்லியன் ரூபா தேவைப்படும். அதற்கு புலம் பெயர் நாடுகளில் திரள் நிதி வசூலிக்கப்பட்டால் அதற்கு பங்களிக்க நான் தயார். தமிழ் நாடு மக்களின் நன்மைகருதி முக்கியமாக பிரதான பாடைக்கு நான் பங்களிக்கத் தயார்.
  5. இது காகமும் இல்லை , கிளியும் இல்லை ......... இது காக்கிளி ......... (கால் கிளி , முக்கால்வாசி காகம் )....... ! 😂
  6. இதுக்கு பிறகு பதில் போடுவம் என்று பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப என்ன சொல்லுறியல். யார் யாரைத் தூக்கப் போகினம்.
  7. உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் விளையாடும் போது இந்திய தோல்வியை ரசிக்க மனம் துடிக்கும். இலங்கை அணியும் இப்படியே. அதுசரி தூக்கிறதுக்கு நான்கு பேர் தேவைதானே. மிகுதிப் பேர் நால்வரும் தூக்கப் போகிறீர்கள். உங்களில் ஒராள் இப்பவே எங்கள் ஆதரவாளர்களாகி விட்டார். கிளி பறந்தபடியால் இன்னுமொராளும் எங்கபக்கம் வரலாம்.
  8. பறிச்சதே விற்கத் தானே....😂
  9. இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல. வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம். முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா. கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁
  10. ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சு கிளியோட ஜோடி சேர்ந்தாச்சு. இனிப்பாருங்க காளிட ஆட்டத்த. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்
  11. தமன்னா யாழில் வந்து ஆடினது இந்த கட்டிடத்தை தொழில்நுட்ப கூடமாக மாற்றுவதற்கு தானே ...பிறகு என்ன் புதுசா இவர்கள் ....ரணில் ஏதோ செய்தவ்ர் அல்லோ
  12. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  13. தேவை நிறையக் கிடக்கு...தயிட்டி விகாரைக்கு வாற சிங்களவருக்கு மடமாக மாற்றிவிட்டால் புண்ணியமாகப் போகும்..
  14. சுப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றையோடை தலை முழுகிட்டன்..
  15. முதல்வர் நந்தனாருக்கும் அவர் சக புகழ்பாடிகளுக்கும் 😂 வாழ்த்துக்கள்😅
  16. நிச்சயமாக சீமான் கூட்டணி அமைத்தால் இந்தப்பந்தயம் செல்லாது கூட்டணி அமைக்காமல் தனியாக இதுவரை தேர்தல்களை சந்தித்தது போல சந்திக்க வேண்டும் நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றேன்🤜🤛
  17. பழைய கூட்டணி சேர்ந்தாச்சு
  18. GMT நேரப்படி நாளை வெள்ளி 25 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 18 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் ஐந்து பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் சுவி செம்பாட்டான் ரசோதரன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  19. டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான். வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣
  20. ஒரு கை குடுக்கிறீங்களா.நம்ம நாலு பேரும் எப்பிடி 19 பேரையும் தூக்கிறது.
  21. கனடாவின் சில விடயங்கள் எனக்கு இன்னும் புரியாத புதிர் தான். அவற்றுள் சில: பொருட்களின் விலைகள் அதிகம். இது அரசு போடும் விற்பனை வரி என்று நான் நினைத்திருந்தேன். அண்மையில் ஒரு பிபிசி கட்டுரையில் இன்னொரு முக்கிய காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவில், அமெரிக்காவை விட வர்த்தகப் போட்டி குறைவு எனவே, ஒரு சில வியாபாரிகளே மேலாண்மை (monopoly?) செய்து விலைகளையும் உயர்வாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் இருப்பது போல, ஒன்ராறியோவில் பல உணவுப் பொருள் விற்கும் கடைகள் (Grocers) இல்லாமல் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அடுத்த அதிசயம், வீட்டுக் கடன் எடுக்கும் போது ARM எடுப்பது எங்கள் கனேடிய உறவுகளிடையே நான் அவதானித்திருக்கிறேன். மாதாந்த செலவு குறைவு என்பதால் கனடாவில் பிரபலம் என்பார்கள். "வட்டி அடுத்த அட்ஜஸ்ட்மென்ரில் கூடாது என்று என்ன நிச்சயம்?" என்று கேட்டால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். வீட்டுக் கடனில் அடுத்த 5 வருடத்தை திட்டமிடாத அதே ஆட்கள், "பெற்றோல் விலை 5 சதம் அதிகரிக்கப் போகிறதாம்" என்று செய்தி வந்ததும், வீதியை மறித்து பெற்றோல் நிரப்பும் நிலையங்களில் வாகன வரிசை கட்டுவதும் இன்னொரு புதிர்😂!
  22. Catches win matches. என்னமா பிடிச்சான்!! தலை வந்து விட்டார்!! நானூறாவது மாட்சாம்!!
  23. இந்தியாவும் தனது தேவைக்காக பல போராளிக்குழுக்களை பயன்படுத்தியது, அதே போல் இதுவும் ஒன்று.
  24. இங்கே இங்கிலாந்திலும் இப்பிடித்தான். மருத்துவத்துக்கானநிதி ஒதுக்கீடு காணாது. அதைவிட மனிதாபிமானம் குறைந்த உலகில் வாழ்கிறோம்
  25. சென்னைக்கு யாரும் ஆறு கடக்கக் கூடாது என்று ஒரு தடை போட்டிருக்கிறார்கள் . ....... விதிவிலக்கு தோனிக்கு மட்டும் .......கடைசி ஓவரில் வந்து ஓரிரு ஆறு அடித்து விட்டு சுபம் போட்டு விடுவார்கள் . ........! 😂
  26. காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் . ........ ! 😍
  27. தர்மத்தின் தலைவன் படம் என்று நினைக்கிறேன் ......... !
  28. சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
  29. சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் 0.482 என மும்பையைவிட குறைவாகவே இருக்கிறது. மும்பை அணி அடுத்து ஓர் ஆட்டத்தில் வென்றால் 2வது இடத்திற்கே நகர்ந்துவிடும் அளவுக்கு நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் தொடர்ந்து சந்திக்கும் 5வது தோல்வி இது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது. ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில் பெங்களூருவில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டத்தை மாற்றிய ஒரே ஓவர் இந்த ஆட்டத்தில் சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது. அந்த அணிதான் வெல்லும் என்று ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அனைத்தும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவர் வரைதான். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர்தான் ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி ஆடி வந்த துருவ் ஜூரெல்(47) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழக்கவே, ஹேசல்வுட் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் வெற்றியை ராஜஸ்தான் கரங்களில் இருந்து ஆர்சிபி பறித்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் வீசிய ஓவரில் ஷுபம் துபே, ஹசரங்கா ஆட்டமிழந்து, 5 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது. பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை24 ஏப்ரல் 2025 சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன?21 ஏப்ரல் 2025 தொடர்ந்து 3வது முறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது இந்த சீசனில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங்ஸில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதற்கு முன் லக்னெள அணிக்கு எதிராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் 17 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் தோற்றது. ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்டர்கள் வெளுத்துவிட்டனர். ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆனால் நடுப்பகுதியில் குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் ராஜஸ்தான் ரன்ரேட்டுக்கு பிரேக் போட்டனர். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகிய பெரிய விக்கெட்டுகளை குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்க்க உதவினர். அடுத்த 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15வது ஓவரில் 150 ரன்களை எட்டிய நிலையில் அதன் பிறகு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இருப்பினும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரெல் 22 ரன்களை விளாச, ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 திருப்புமுனையான ஹேசல்வுட்டின் 2 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஹேசல்வுட் வீசிய 17வது மற்றும் 19வது ஓவர்தான் ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தது. செட்டில் பேட்டர் ஷிம்ரன் ஹெட்மயரை(11) தனது 17வது ஓவரில் ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எந்த நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய ஹெட்மயரை வீழ்த்தி ஹேசல்வுட் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்ததாகத் தனது 19வது ஓவரில் மற்றொரு செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல் விக்கெட்டுக்கு ஹேசல்வுட் குறிவைத்தார். ஏனென்றால் புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்ததால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருவ் ஜூரெலுக்கு துல்லியமான யார்க்கரை ஹேசல்வுட் வீசினார். யார்க்கரில் இருந்து தப்பிக்க ஜூரேல் பேட்டால் தடுக்கவே பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, பந்து துருவ் ஜூரெல் பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. விக்கெட் உறுதியானதால் பெரிய விக்கெட்டை வீழ்த்திய நிம்மதி ஆர்சிபிக்கு கிடைத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சருக்கு டெஸ்ட் லென்த் பந்தை வீசிவே வேறுவழியின்றி கேட்ச் கொடுத்து ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தினார். ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜெய்ஸ்வால் இருக்கும் வரை ஹேசல்வுட் ஓவரை குறிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். ஆனால் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய பிறகு மற்ற பேட்டர்களுக்கு ஹேசல்வுட் சிம்ம சொப்பனமாக மாறினார். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்4 மணி நேரங்களுக்கு முன்னர் '3 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்' – கோவை ஈஷா பள்ளி முன்னாள் மாணவருக்கு என்ன நேர்ந்தது?24 ஏப்ரல் 2025 ராஜஸ்தானுக்கு நெருக்கடியளித்த குர்னல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துருவ் ஜூரெல் 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்தால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியதில் இருந்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை கொண்டு சென்றது. ஜெய்ஸ்வால், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி(16ரன்கள்) இருவரும் சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை விளாசித் தள்ளினர். ராஜஸ்தான், 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து தனது கடமையைச் செய்துவிட்டுச் சென்றார். 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ராஜஸ்தான் வலுவாக இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் வீசிய 8 ஓவர்களுக்கு ராஜஸ்தான் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார். ஆனால் நிதிஷ் ராணா களத்தில் இருக்கிறாரே என்ற துணிச்சல் இருந்தது. ஆனால், நிதிஷ் ராணா(28) விக்கெட்டையும் 14வது ஓவரில் குர்னல் பாண்டியா எடுக்கவே ராஜஸ்தானுக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு, சூயஸ் ஷர்மா, குர்னல் இருவரும் ராஜஸ்தான் பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடி கொடுத்துப் பந்துவீசினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 கோலி, படிக்கல் அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்(26) பவர்ப்ளே முடிந்ததும் ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் கோலி, சால்ட் இருவரும் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த படிக்கல், கோலி ஜோடி ஸ்கோரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியின் கணக்கில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். படிக்கல் தனக்கு இருமுறை கேட்ச் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா கூட்டணி 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்கள் கடக்க உதவினர். இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?24 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 முதல் 10 ஓவர் வரை நம்பிக்கையில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் "எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக, எதிர்பார்த்தது போல் இருந்தது. பத்தாவது ஓவருக்கு பிறகுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. இதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். ஆட்டத்தை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்களின் துணிச்சல் அபாரமானது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடக்கத்தில் பார்த்து நம்பிக்கையிழந்தேன்," என்று கூறினார். மேலும், "ஆட்டம் நெருக்கடியாகச் செல்லும் என்று முதலில் கணித்தேன். ஆனால், 10வது ஓவருக்கு பின் விக்கெட்டுகளை எடுத்த பிறகு, என் கணிப்பு மாறியது. விக்கெட் எடுத்தால்தான் ரன்களை தடுக்க முடியும் என்று நினைத்தேன் அதற்கேற்றார்போல் திட்டமிட்டோம்," எனத் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் கண்டெடுத்த முத்து: டெல்லியை மிரட்டிய 23 வயது இளம் வீரர் அனிகேத் வர்மா யார்?31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஆட்டத்தைத் திசை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்கள் துணிச்சல் அபாரமானது" என்றார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்) விராட் கோலி(ஆர்சிபி)392 ரன்கள்(9 போட்டிகள்) நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள்(9 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 16 விக்கெட்டுகள்(9 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1wd43xrj1go
  30. "கிளீன் ஸ்ரீலங்கவுக்கு" வந்த சோதனை. 😂
  31. ஜயகோ. எதுக்கும் மனதைத் திடப்படுத்தி வையுங்க. பழைய பன்னீர்ச்செல்வமா திரும்பி வருவாரா. இல்லை என்றுதான் நினைக்கிறன்.
  32. வீரப்பையன்தான் உங்களையும் என்னையும் குழப்பி விட்டார்.
  33. அவருடைய ஓட்டத்தினை விட அதிகமான பந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்ட ஒரே வீரராக அவர் இருந்திருந்தார், கடந்த போட்டிகளின் தோல்வியின் போது ராஜஸ்தான ரசிகர்கள் அவரில் கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்தார்கள், இந்த போட்டியின் பிறகு கொலைவெறியில் இருப்பாகள்.🤣 குருணலின் பந்து வீச்சிற்கு ஒற்றை ஓட்டம் எடுக்கமுடியவில்லை🤣, அவர் தேவையில்லாமல் ஏற்படுத்திகொண்ட அழுத்ததினை பார்த்து கேசல்வூட்டின் ஓவரை இறுதி ஓவருக்கு சேமித்து வைத்தார்கள் (அப்போது 2 ஓவர்கள் அவரிடம் இருந்தது), அதனால் பின் பகுதியில் அவர்கள் நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. சரி உங்களுக்காக இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டிருக்கு என்பதனை ஜுரலிடம் கூறுங்கள்.😂
  34. எனது அபிப்பிராயம் துருவ் ஜுரல்தான் ராஜஸ்தானின் தோல்விக்கு காரணம் என கருதுகிறேன் (யாருடைய தலையாவது உருட்டத்தானே வேணும்🤣), 8.75 ஓட்ட விகிதம் உள்ள நிலையில் களத்திற்கு வந்தவர் தடுப்பாட்டத்தில் இறங்கினார். ஓவருக்கு குறைந்தது 6 ஓட்டங்களை இலகுவாக எடுக்கும் நிலையில் கூட அதனை எட்டவில்லை, ஜுரல் தோனியினை போல விளையாடுபவர் என இணையத்தில் அவர் மேல் இரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் (தேவையில்லாமல் அதிக ரன் ரேட்டிற்கு உயர்த்திவிட்டு பின்னர் 6 கள் அடித்து கதாநாயகனாக ஆட்டத்தினை முடிப்பது). அதனால் அவருடன் கூட்டணியில் இருந்த நிதிஸ் ரானாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு தனது தவறான ஆட்ட தெரிவின் மூலம் தேவையற்று ஆட்டமிழக்கும் நிலை உருவானது. விக்கெட் விழுந்ததனால் மேலும் அழுத்தம் அதிகரித்து விக்கெட்டினை காக்கும் முயற்சியில் மேலும் ஓட்ட விகிதம் அதிகரித்தது. நல்ல தொடக்கத்தினால் ஏற்பட்ட சாதாரணமாக விரட்ட வேண்டிய இலக்கை கடினமாக்கியவர் ஜுரல். இதே போலவே முந்தய போட்டிகளிலும் செய்தார், சாம்சன் அணிக்குள் மீண்டும் வந்தால் ஜுரலை நீக்கி விடலாம் என கருதுகிறேன். நிச்சயமாக ட்ராவிட் ஜுரலுடன் கதைப்பார் என கருதுகிறேன். SRH தரமான அணி, சென்னை அணி பல அணி வீரர்கள் போர்மிற்கு வர உதவுகின்ற அணி இன்று கைதராபாத்திற்கும் அந்த உதவியினை செய்வார்கள் என கைதராபாத் ஏன் எதிர்பார்க்கக்கூடாது?🤣
  35. இவரின் பேரும் போப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறேன். எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை.
  36. அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேணுமல்லோ....🤣 அனுராதபுரத்தில் டோழர் கோஸ்டி துறைமுகம் கட்ட போயினம் என சொன்னாலும் நாங்கள் நம்புவோமல்ல
  37. 'கிளிக்கு றெக்கை முளைச்சிட்டுது.........................' 🤣..................... சிவாஜி போல ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கின்றன இந்த இரண்டு அணிகளும்............ டி-20 இல் சிக்ஸரும் அடிக்கலாம், அதில் எந்த தப்புமே இல்லை என்று சென்னை அணிக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கின்றார்களாம்...........................
  38. மரதன் ஓட்டப் போட்டியில் ஆரம்பத்தில் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. கடைசியில் யார் முன்னுக்கு வருகிறார்கள் என்பதே வெற்றி. இதே கோட்பாட்டோடு @goshan_che மெதுவாக முன்னேறிக் கொண்டே வருகிறார். வழமையான போட்டிகளில் @Ahasthiyan முன்னணியில் நிற்பார். இந்த தடவை ஒரேயடியாக கீழே நிற்கிறார். தம்பி கிளியைத் தூக்கியாச்செல்லோ!
  39. பொட்டுவைத்திருந்தால் போதும் அடி விழும்...இன்று பொட்டு,விபூதி,குல்லா போட்டவன் எல்லாம் சிறிலங்கன்ஸ் என அடிச்சு துவசம் பணிணைனவையளே கூவிக்கொண்டு திரியினம் ... மோடி ஜீ இது கிரிக்கட் விளையாட்டு அல்ல.... பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...
  40. இந்தப் போலி தமிழின இனத்துவேசிக்கு...இந்த கர்தினால் பட்டமே ..தேவையற்றது
  41. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 42வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராட் கோலியும் டேவ்தட் படிக்கலும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புயல்வேகத்தில் 49 ஓட்டங்களை எடுத்து சவாலான வெற்றி இலக்கை அடையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 18 ஓவர்கள் முடிவில் வெற்றிபெற 18 ஓட்டங்களே தேவைப்பட்டிருந்தது. எனினும் 19வது ஓவரில் ஜொஷ் ஹேஸல்வூட் இரு விக்கெட்டுகளையும், 20 ஓவரில் யஷ் தயால் ஒரு விக்கெட்டையும், இன்னொரு விக்கெட்டை ரண் அவுட் மூலமாகவும் அதிக ஓட்டங்களைக் கொடுக்காது எடுத்ததனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪
  42. 🤣 குறிகாட்டுவான் பெயர் பொருத்தம் அந்தமாதிரி. அது சரி குறிகாட்டுவான் புங்குடுதீவுதானே? முதலில் செய்யும் ஜட்டியை கதிர்காம கந்தனுக்கு காணிக்கையா அனுப்புங்கோடாப்பா. அந்தாள் வருச கணக்க்கா வெயிட்டிங்🤣🤣🤣
  43. காணொளி: 👉 https://www.facebook.com/reel/9840218522704246 👈 👆 குறிகாட்டுவானில்... ஜட்டி தொழிற்சாலை வரப்போகுதாம். 😅 இன்றே வாங்கிப் பாவியுங்கள்... குறிக்கட்டுவான் ஜட்டிகள். 🤣 @குமாரசாமி , @goshan_che , @suvy , @ஈழப்பிரியன் , @alvayan , @satan , @nunavilan , @Kandiah57 , @putthan, @நிழலி , @உடையார், @புலவர் , @ஏராளன் , @கிருபன் , @விசுகு , @பாலபத்ர ஓணாண்டி, @பெருமாள், @புங்கையூரன், (குறிகாட்டுவான் படகுத்துறை | kurikadduvan jetty)
  44. அன்பின் சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  45. ஒரு சொல் வாழ்க்கையை மாற்றும் .......... மாற்றியது . .......... ! 👍
  46. பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்தவுடன் என்னை தனிமடலில் வரவேற்ற பாசக்கார உறவு நிலாமதி அக்கா!
  47. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வளத்துடன் வாழ்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.