Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    4042
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    12678
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    19129
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/02/25 in all areas

  1. அவர் சுமத்திரன். அரசியல்வாதி. என்ற பெயரிலுள்ள. பிழைப்புவாதி கடந்த காலத்தில் அரசாங்கம்கள். அவரை கவனித்து கொண்டன. எனவே அவர்களின் குற்றங்கள் குறைகளை அவர் கவனிக்கவில்லை ரணில் 20 அல்லது 60. மில்லியன் ஒதுக்கீடு செய்த ஞாபகம் ஆனால் இந்த அரசாங்கம் அவரின் பாதுகாப்பு கார் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டது விடுவாரோ சும்மா இலங்கையில் பிரபல சட்டத்தரணி சுற்றவாளியை குற்றவாளி என்று நிறுவார். அதேபோல குற்றவாளியை சுற்றவாளி என்றும் நிறுவுவார். நீதிமன்றம்கள். நீதிபதிகள் அவர். நினைத்தபடி தீர்ப்பினை. வழங்குவார்கள் அவரால் முடியாத ஒன்றே ஒன்று தமிழருக்கு தீர்வை பெற முடியாது மட்டுமே
  2. சென்றவருடம் ரோகித் சர்மாவின் அணித்தலைவர் பதவியை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது . மும்பாய் ரசிகர்கள் இதனை விரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா பந்து வீசும் போதும், துடுப்பாட்டாம் செய்யும் போதும் மும்பாய் ரசிகர் அவரை கூக்குரல் இட்டு ஏளனம் செய்தார்கள். சென்ற வருடம் மும்பை அணி 4 போட்டிகள் மட்டுமே வென்று கடைசி இடத்தை பிடித்தது. யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சில எழுதினார்கள். இந்த வருடம் மீண்டும் மகேலா ஜெயவர்த்தனா மும்பாய் முதன்மை பயிற்சியாளர். ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, பூமாரா , சூரியகுமார் ஜாதவ், திலக் வர்மா போன்றவர்கள் தக்கவைக்கப்பட்டார்கள். ஏலத்தில் போல்ட், தீபக் சகார், ரயான் டிக்கெல்டன், வில் ஜாக் போன்றவர்களும் எடுக்கப்பட்டார்கள். முதல் 5 போட்டிகளில் 4 இல் மும்பாய் தோற்றது. ஏன் இங்கு யாழ் இணையத்திலும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையை ரோகித்தும் சூரியகுமாரும் விரும்பாததினால் ஏனோதானோ என்று விளையாடுகிறார்கள் என்ற பொருளில் சக கருத்தாளர் ஒருவர் எழுதியதை வாசித்த ஞாபகம். 5 வது போட்டியில் இருந்து பூமரா விளையடத்துடங்கினார். ஆரம்பத்தில் out of form இல் இருந்தாலும் மும்பையில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் இருந்து ரோகித் சர்மா சிறப்பாக விளையாட துடங்கினார். சூரியகுமார் ஜாதவ், ராஜன் ரிக்கெல்டன் போன்றவர்களின் சிறப்பான துடுப்பட்டங்களும், போல்ட், பூமாரா போன்றவர்களின் பந்து வீச்சுகளும், ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான தலைமையும், மகேலாவின் பயிற்சியும் சேர மும்பாய் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகிறது.
  3. மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்ற சம்பவங்கள் இருக்க..... விடுதலைப்புலிகள் மிரட்டி கொள்ளையடித்தார்கள் என உரிமை கோர வெளிக்கிடும் போது.... இன்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக வெறும் வாயை அசை போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு அவலும் பஞ்சாமிர்தமும் தானாக வாயில் விழுந்த மாதிரி இருக்கும்.
  4. எட்டுக்கு கிரகங்களும் ஒரே திசையில் 😅 ஒன்பதாவது கிரகம் மட்டும் எதிர்த் திசையில் 🤣 ஆதலால் நாளை நல்ல பலன் கிடைக்கும் 😂
  5. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் புயல்வேகத் துடுப்பாட்டத்தினால் எதிரணியின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கினர். சாய் சுதர்சன் 48 ஓட்டங்களையும், சுப்மன் கில் 76 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 64 ஓட்டங்களையும் எடுத்து வலுவான நிலைக்குச் செல்ல உதவியதால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்களில் அபிஷேக் ஷர்மா மாத்திரம் மின்னல் வேகத்தில் 74 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்களையே எடுத்தனர். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  6. ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் பேரால் நிகழ்த்தப்பட்டது. நீலன் பங்களித்த தீர்வு மீது கடுமையான விமர்சனங்களும் அந்த தீர்வில் பல குறைபாடுகளும் இருப்பினும், அதை ஆரோக்கியமான விவாதங்களு உட்படுத்தப்படாமல், அதை தயாரிக்க துணை புரிந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார். இவரது கொலையால் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் ஏற்படவில்லை. ஆனால் சிங்களம் இதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி ராஜதந்திர ரீதியில் பயனடைந்தது. இவ்வாறு நிகழ்ந்தது முதல் தடவையும் அல்ல, இறுதித் தடவையும் அல்ல. இன்றும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலும் குரல்களும் எம்மிடம் இருந்து நீங்கவில்லை.
  7. திரு. நீலன் திருச்செல்வம் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அரசியலமைப்பு சட்ட நிபுணர். உலகப் புகழ் மிக்க சட்ட அறிஞர். இவரது நூல்கள், கட்டுரைகள் சர்வதேச ரீதியில் அரசியலமைப்பு சட்ட மாணவர்களால் தேடி வாசிக்கப்படும் அளவுக்கு பிரபலமானவை. அவர் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கஜகஸ்தான், தென்னாபிரிக்கா, சிலி போன்ற நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். இவ்வாறு உலகம் அறியப்பட்ட ஒருவரை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்த செயலானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்கு தானே குழி பறித்த பல செயல்களில் ஒன்றாகும். இவரது கொலையினல் பலன் அடைந்தது இலங்கை அரசு. படுகொலை நடந்த உடனேயே ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் கொபி அன்னான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்திதில் இருந்து இவரது அனைத்துலக முக்கியத்துவம் உணரப்பட்டது. சகிப்பு தன்மை அற்று தாம் செய்த படுகொலைகளை மறைக்க கொலை செய்யப்பட்டவர் மீது அபாண்டமாக பழி போடுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அனைத்து ஆயுத இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட இத்துப்போன தந்திரம் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். அதை போன்ற ஒன்றே இந்த படுகொலையின் நியாயப்படுத்தலும்.
  8. உண்மை. எப்படி பிரிதானியா இரெண்டு ஆயிரம் ஆண்டு ஐரோப்பிய இனக்கலவையோ…. அதேபோல் இரு நூறு ஆண்டு ஐரோப்பிய இனக்கலவைதான் அமெரிக்கா. பிகு உலகை கட்டி ஆளும் இனங்கள் பலரும் இப்படி கலப்பினமாக இருப்பது - ஒரு மரபணு கலப்பால் கிடைத்த அனுகூலத்தின் பலன் என்பது என் கருதுகோள். ஜஸ்டின் அண்ணா போன்றோர் என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவல்.
  9. சுமந்திரனால் சும்மா சவால் மட்டுந்தான் விடமுடியும், வேறெதுவும் முடியாது. அனுரா அரசால் ரொம்ப கலங்கிப்போய், கேள்விக்குறியாக இருக்கிறது அவரது பிழைப்பு. அதனாலேயே அடிக்கடி அவர்களை சீண்டுகிறார். எத்தனை தடவை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து, மேடைகளில் பேசி, மக்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். அப்பவெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருந்தவர், அப்போ தன் வீரத்தை காட்டியிருக்கலாமே, ஏன் பேசாமல் இருந்தவர்? இப்போ தேர்தலுக்காக மக்களை உசுப்பேற்ற வாய் கிழிய கத்துகிறார். அனுரா, நாட்டின் ஜனாதிபதி. வடபகுதி மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். அவர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை இவர் எப்படி தடுக்க முடியும்? முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டுமேன். மக்கள் அனுராவுக்கு வாக்களிப்பதற்கும், அவர்கள் வடபகுதிக்கு வருவதற்கும் யார் காரணம்? அதற்கு முதலில் பதிலை கண்டுபிடித்துவிட்டு சவால் விடலாமே? இல்லாத கட்சிக்கு, ஒரு பதில் தலைவர், செயலாளர். நான்குபேருக்கு ஒரு கட்சி. இந்த லட்ஷணத்தில சவால் வேற.
  10. பாகம் - 1 தனிநாடு கோரப்படுகிறது:- ஈழத் தமிழர்க்கொரு தனி நாடு வேண்டும் என்று முதன் முதலில் கோரியவர் சிலோன் நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனனாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் பதவி வகித்த செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் செப். 8, 1947 தேர்தலில் வவுனியாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார் [5.1] [1.1]. இவரைப் பற்றிய சிறு முன்குறிப்பு யாதெனில், இவர், டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையினுள் அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டு உள்வாங்கப்பட்டவராவார்; வணிகம் மற்றும் பண்டமாற்று அமைச்சு வழங்கப்பட்டது [5.1]. தமிழரை நிகராளித்துவப்படுத்தி இவர் சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு டி.எஸ் சேனநாயக்காவிற்கு ஆதரவு அளிப்பதை தமிழரசுக் கட்சியினர், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில், கடுமையாக எதிர்த்தனர் [1.2]. இருப்பினும் தனது ஆதரவை சிங்களவருக்கு கொடுத்து சிங்கக் கொடியேறுவதற்கு வழி வகுத்தார் [2]. பின்னர் தனது தவறையுணர்ந்தோ என்னவோ மார்ச் 3, 1951 இல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியைத் துறந்தார் [5.2]. இவர் மீண்டும் 1952 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார் [6]. இத்தேர்வின் போது கிடைத்த ஆசனத்தைக் கொண்டுதான் பிரிவோம் என்பதை அறிவித்தார்! 'அடங்காத் தமிழர்' செ. சுந்தரலிங்கம் | படிமப்புரவு: விக்கி இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின், தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்" என்றார், ஆங்கிலத்தில்[4]. இதன்மூலமே தான் முதன் முதலில் எமக்கு தனி நாடு வேண்டும் என்றும் அறிவித்தார். தனிநாட்டிற்காக குழுசேருமாறு முதலில் அழைத்தவர்:- இத்துடன் தனிநாட்டிற்காக குழுசேருமாறு தமிழர்களிற்கு முதலில் அழைப்புவிடுத்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார் [3.1]. தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைத்தது மட்டுமின்றி 1958இல் வவுனியாவின் எல்லைகளிலிருந்த தமிழ் சிற்றூர்களினுள் சிங்களவர் ஊடுருவுவதைத் தடுக்க தமிழரை திரட்டி சிங்களவருக்கு எதிராக சண்டைக்கு களமிறக்கியதும் இவரே ஆவார். தமிழருக்கு வேட்டைச்சுடுகலன்களை இவர் வழங்கியதாக கூறக்கேள்வி. அதற்காக இவர் 'அடங்காத் தமிழர் முன்னணி' என்றவொரு அமைப்பையும் தோற்றுவித்திருந்தாராம். இதன் மூலம் தான் இவருக்கு "அடங்காத் தமிழன்" என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றதாக கருத்தப்படுகிறது. இதன் பின்னர் 1959 இல் 'ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி' என்றவொரு தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத அரசியல் கட்சியினையும் தோற்றுவித்தார். தனிநாட்டிற்காக சண்டைக்கு வருமாறு முதலில் அழைத்தவர்:- தனிநாட்டிற்கான சண்டைக்கு வருமாறு தமிழர்களிற்கு முதன் முதலில் அறைகூவல் விட்டவரும் செ. சுந்தரலிங்கமே ஆவார். "Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents" (1967) என்ற நூலின் பின்குறிப்பில் [3.2] இல் இவ்வாறு எழுதியுள்ளார்: தமிழ் மொழிபெயர்ப்பு: சிலோனின் பிரிவினைக்கும் 1802 ஆம் ஆண்டு அமியன்ஸ் உடன்படிக்கைக்கு முன்னரிருந்த தமிழ் அரசை மீட்டெடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஈழத் தமிழர்களை, ஈழத் தமிழ் தேசத்தின் பரியுடைமையானதும் (freedom) பந்திலாமையானதுமான (Independence) சண்டைக்கு சேர முன்வருமாறு அழைக்க முன்மொழிகிறேன். 'கிளாப்' என்பவர் வகைப்படுத்திய 17 வகையான நாயகன்களில் இவரை "குமுகாய மரபொழுங்குக்குப் புறம்பானவர்"/Bohemian என்று எழுதுவினைஞர் சச்சி சிறிகாந்தா அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் வகைப்படுத்தினார், தனது நூலான "The Pirabhakaran Phenomenon" இல் [7.1]. எனினும் இவர் "தேசத் தந்தை" எனப்படாமைக்கு இவர் செய்த ஊத்தை நாச வேலைகளே காரணமாகும்! உசாத்துணை: The Fall And Rise Of The Tamil Nation (1995) - V. Navaratnam Chapter 2 pg. 41-42 It Happened 65 Years Ago: When two independent Tamils pawned Eelam rights - Sachi Sri Kantha, October 12, 2012 Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73 C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005 Sri Lanka: The Untold Story - K T Rajasingham Chapter 12: Tryst with Independence Chapter 14: Post-colonial realignment of political forces 1952 Election Result The Pirabhakaran Phenomenon - Sachi Sri Kantha Part 53 ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
  11. இந்த சுப்பர் கிங்ஸ்சைநம்பினால் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும்தான்....தோனி செய்த மாயம் அனுபவிக்க வேண்டிக்கிடக்கு
  12. GMT நேரப்படி நாளை சனி 03 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 08 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 15 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி குமாரசாமி புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  13. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  14. பைத்தியருடன்... இவர் வாக்குவாதப் படும் போதே, ஊசி ஏத்துவார் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். 🤣
  15. ராஜபக்ஷ குடும்பம் விற்பனை செய்து தங்களது வங்கி கணக்கில் வைப்பிலிடவில்லையா.?? இன்றைய நிலையில் அர்ச்சுனா விடம். ஒப்படைத்தால். அவர் உரிமையாளர்களுக்கு. கொடுக்கும் ஒழுங்குக்குகளை செய்வார் ...இது எங்கள் நகை என்று உறுதிப்படுத்தினால். புலிகளிற்கு உதவியது என்று பயங்கர வாத சட்டத்தின்படி பிடித்து சிறை வைக்கலாம் இப்படி இருபது முப்பது வருடம் சிறைப்படுத்தியே உயிரிழப்பு எற்பட்டுவிடும்.
  16. பட்லரின் இரண்டு கேட்சுகளை விட்டார்கள்! மேட்ச் முடிஞ்சுது!
  17. செந்நிறத் தொப்பியை மீண்டும் தனதாக்கிக் கொண்டார் சாய் சுதர்சன். மும்முனைப் போட்டி: சாய், சூரியா, கோலி
  18. ஆறாவது தடவையாக 50 ஓட்டங்களைக் கடந்துள்ளார்கள் ஆரம்ப துடுப்பர்கள் இருவரும். தற்போது 82 ஓட்டங்கள் 6வது பரிமாற்றம் முடிவில்.
  19. இன்று மேட்ச் அகமதாபாத்தில் அதுவும் கறுப்பு நிற பிட்சில் நடக்கிறது! யார் நாணய சுழற்சியில் வெல்கிறார்களோ அவர்களுக்கே இன்று வெற்றி!
  20. உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்! உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் (Ethel Caterham), புதன்கிழமை (01) 116 ஆவது வயதில் உயிரிழந்த பிரேசிலிய கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் புதிய சாதனையை கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் உலகின் வயதான மக்களின் தரவுத்தளமான லாங்கிவிகுவெஸ்ட் (LongeviQuest) உறுதிப்படுத்தியுள்ளன. எதெல் கேட்டர்ஹாம் 1909 ஆகஸ்ட் 21 அன்று ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு குழந்தைகளில் இரண்டாவது இளையவராகப் பிறந்தார். அவர் தற்போது தெற்கு இங்கிலாந்தின் சர்ரேயில் அமைந்துள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு மகள்களையும் விட நீண்ட காலம் உயிர் பிழைத்துள்ளார். அவரது சகோதரிகளில் ஒருவரான கிளாடிஸ் 104 வயது வரை வாழ்ந்தார். டைட்டானிக் கப்பல் மூழ்கியது, முதலாம் உலகப் போர், ரஷ்யப் புரட்சி, பெரும் பொருளாதார மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றை கேட்டர்ஹாம் கடந்து வந்துள்ளார். https://athavannews.com/2025/1430282
  21. யார் அந்த மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்? மூன்று கோமாளிகள் என்று சாணக்கியன், சத்தியலிங்கம், சிவஞானத்தையும், பைத்தியம் என சுமந்திரனையுமா குறிப்பிட்டுள்ளார்கள்? "இடயனால கெட்டான் மடையனாம்."
  22. அப்பாடா ....... ஒருமாதிரி சிந்தா வைப் பதிந்தது பிரீதியாய் இருக்கு . ......... ! 😂
  23. ‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ - ட்ரம்ப் எச்சரிக்கை ‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். தற்போது ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் , ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ இரசாயன பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும். ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது இரசாயனங்களை வாங்கினாலும், அந்த நாடு அல்லது நபர் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும். என்று கூறியுள்ளார். https://athavannews.com/2025/1430359
  24. உண்மையில் இவர் எல்லோரினதும் தாய் வீடு - இத்தாலியின் ரோம், ஸ்கெண்டிநேவியன் நோர்ஸ், ஜேர்மனியின் சக்சனியும், பிரான்ஸின் நோர்மண்டியும் எண்டும் சொல்லலாம். ஒரு காலத்தில் செல்டிக் அல்லது கெல்டிக் எனப்படும் குழுவே பிரிதானிய+ஐரிஷ் தீவுகளில் இருந்தது. இவர்களின் கடைசி அரசி பூடீக்கா. இவர்களை ரோம சாம்ராஜ்ய படை வெற்றி கொண்டு, அதேபோல் வட பகுதிகளை வைகிங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி, ரோம் விலக, சக்சனியில் இருந்து வந்தோர் ஆண்டு, அதன்பின் நோமன் படை எடுத்து வந்து ஆங்கிலோ சக்சனை வீழ்த்தி - இப்படியாக, ரோமன், வைகிங், ஜேர்மன், பிரெஞ் + உள்ளூர் செல்டிக் எல்லாம் கலந்த கலவைதான் நாம் அறியும் ஆங்கில இனம். ஓரளவு கலப்பு இல்லாதவர்கள் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மக்கள். அதிலும் பின்னாளில் ஆங்கிலேய கலப்பு உண்டு.
  25. இரண்டாம் வருட மாணவனுக்கு பகிடிவதைநடக்க சந்தர்ப்பம் இல்லை. ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கும்
  26. நான் போட்ட அணிகளில் இரண்டு ஏற்கனவே வெளியாலை. சன்ரைசேர்ஸ் எப்பிடியும் இண்டைக்கு வெளியாலை போகும் அடுத்தது கேகேஆர் அதுவும்நாளைக்கோ தெரியாது. எப்பிடியிருக்கு என் தெரிவு!
  27. ஆனால் கார்னி பிரித்தானிய பிரஜை ஆகியது இந்த வழியில் அல்ல. அவர் முன்பு கனேடி சிட்டிசனாக இருக்கும் போதே பாட்டன்/பாட்டி வழியில் ஐரிஸ் சிட்டிசன். Common Travel Area விதிகளின் படி பிரிதானியா, ஐரிஷ் பிரசைகள் அவரவர் நாட்டில் எந்த தடையும் இன்றி வாழலாம், தொழில் செய்யலாம். ஆகவே கார்னி கவர்னாகிய போது ஏலவே ஒரு ஐரிஸ் சிட்டிசனாக அவருக்கு யூகேயில் வாழ, வேலை செய்ய முழு சுதந்திரம் இருந்தது. அதன் மூலம் 5 வருடத்தை பூர்த்தி செய்து - விண்ணப்பித்து, பிரித்தானிய பிரசை ஆகினார்.
  28. க,.கா,...கு,.......கோ,...........நாலு பேர். தான் உண்டு” மற்ற எழுத்துகளில் எவருமில்லை இவர்களில் எவரையும் சொல்ல நான் விரும்பவில்லை 🤣
  29. இப்பிடி சங்கூதிட்டீங்களே. அப்பிடியே CSK பக்தாலையும் கணக்குப் போட்டால், 5 பேர்தான் மிஞ்சும் போல. என்னமோ போங்க.
  30. அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது. கந்தையா அண்ணா சொன்னதை வைத்து இங்கே பலருக்கு பிளட் பிரசர் உயரத்திற்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் அப்படி அவர்கள் பதட்டமடைய வேண்டிய களநில இல்லை என்று சொல்கின்றார்கள். சிங்கல மக்கள் கூட ஜேவிபியின் ஏமாற்றுகளை விளங்கி கொள்ள தொடங்கிவிட்டனராம் ஆனால் தமிழர்களுக்கு ஜேவிபி தான் தமிழர் காப்பாளன் என்ற நம்பிக்கை. இது வரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவுக்கு பொய் புரட்டுக்களை தமிழர்களுக்கு ஜேவிபி அள்ளி வீசுகின்றதாம். தமிழர்களுக்காக பல உயிர் தியாகம் செய்து கடந்த காலங்களில் போராடிய கட்சி தான் ஜேவிபி என்று மட்டும் தான் இன்னும் சொல்லவில்லை.
  31. அவருடைய பெயர்... "க" வரிசையில் தொடங்குகின்றது. உதாரணம்: க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ. இதற்கு மேல்... உதவிகள் வழங்கப்பட மாட்டாது. நீங்களாக கண்டு பிடிக்க வேண்டும். 🤣
  32. ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்! ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே மிஷுஷ்டின் இதனை தெரிவித்தார். அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன எனவும் இதற்கான சின்னமாகவே புதிய பாலம் திகழும்,” எனவும் மிஷுஷ்டின் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Athavan Newsரஷ்யா - வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள்...ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழா...
  33. ரஞ்சித், ஜஸ்டின் இன்னும் பல பெரதெனிய காய்கள் (மன்னிக்கவும் பேச்சு வழக்கில்) சாட்சியாக உள்ளார்கள்.எனது மச்சானுக்கு பேரும் பிரபாகரன் தான். இதே பல்கலைகளகத்தில் படித்தவர் . வடக்கு கிழக்கில் எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும் அறை கதவை திறந்து சாத்துவது அவரை தான் இந்த ஜே வி பி குண்டர்களால் . ஒரே காரணம் இந்த காடையர்கள் சொல்வது அவரது பெயரும் பிரபாகரன் என்பதாகும். சில நோய்கள் அவரை சூழ்ந்து கொண்டாலும் அதே கண்டி மாவட்டத்தில் அதி உயர் பதவி வகிப்பதோடு எனக்கு அடிக்கடி சொல்வது " என்னை ஒரு முறை தான் கொல்ல முடியும்" என்று.
  34. சரி. பாத்துப்போம். எனது அடுத்தடுத்த தெரிவுகள் எல்லாம் பக்காவா இருக்கு. இன்னும் 20 போட்டிகள் இருக்கு. இதுவரை 24 வெற்றி 25 தோல்வி 1 சமநிலை. அந்த இரண்டு பேரோட மட்டும் சேர்ந்திடாதீங்க சார்!!!!!
  35. பேபி பொடியனுக்காக ஆர் .ஆர் வெல்லும் என்று ஒரு ஆசை இருந்தது...அது கனவுதான்...என்றாலும் புள்ளிக்காக மும்பை வென்றதில் சந்தோசம்...நாம தோஸ்துதானே முன்னாலும் பின்னாலும் நிக்கிறம்...பிரியன் சார்தான் கயிற்றை விட்டுவிட்டார் ...கீழை போறார்
  36. ரஞ்சித் அண்ணா இந்த காட்டுமிராண்டிகளின் செயல்கள் தனது அனுபவம் பற்றி பதிந்திருந்தார் இவ்வளவு காலம் வரை ஒரு நடவடிக்கைகளும் இல்லை. சக மாணவனை வதைத்து கொன்ற கொலைகார மாணவர்கள் மீது பொலிஸ் கைது நடவடிக்கை கூட கிடையாதா
  37. எதை எடுத்தாலும் கன்ட உடனே வாய்க்குள் வைப்பதா?எப்படியும் ஏதாவது எழுதி இருப்பார்கள்.வாசித்துப்பார்க்க வேண்டியதுதானே.
  38. மேடை வீராவேச பேச்சுக்களில் இன்னும் 70,80களில் இருந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் நம்ம சுமந்திரன். இவருக்கு பாடம் எடுத்த வாத்தியார் அந்த மாதிரியான ஆள் தானே 😁
  39. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 50வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ரியான் ரிக்கெல்ரன் (61 ஓட்டங்கள்), ரோஹித் ஷர்மா (53 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்), ஹார்டிக் பாண்டியா (ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்கள்) மின்னல் வேகத்தில் ஓட்டங்களை எடுத்தமையால் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் திணறி விரைந்து ஆட்டமிழந்தனர். பின்னணி வீரரான ஜொஃவ்ரா ஆர்சர் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறியனர். இறுதியில் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களுக்கு சுருண்டனர். முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் knock out க்குச் செல்லும் தகுதியை இழந்து வெளியேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடரின் ஆரம்பத்தில் பல நாட்கள் முதலாவது இடத்தில் நின்ற @suvy ஐயா பத்தாவது நிலைக்கும் கீழே இறங்கியுள்ளார்!
  40. இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது. அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார். அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.
  41. சிரிப்பு என்னவென்றால்.... இந்தியா, பாகிஸ்தான் இருவருக்குமே ஆயுதத்தை விற்றுக் கொண்டு, சமாதான பேச்சு வார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபடும். இந்தியாவும், பாகிஸ்தானும் எமக்குச் செய்த அநியாயத்துக்கு... இவங்கள் சண்டை பிடித்தே அழிய வேண்டும்.
  42. உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத, குரங்கு சேட்டை இது. இவர்களின் இந்த விளையாட்டை மற்ற நாட்டவர்கள் பார்த்து பைத்தியம் முற்றி விட்டது என்று சிரிக்கின்றார்கள்.
  43. இந்த படத்தில் வந்த அத்தனை பாடல்களும் சூப்பார்👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.