Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    19638
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    88788
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    39297
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33792
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/05/25 in all areas

  1. இன்று நடந்த 51வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலாவது பந்தில் கருண் நாயரின் விக்கெட்டைப் பறிகொடுத்து மிக மோசமாக ஆட்டத்தைத் தொடங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 12.1 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. எனினும் ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் அஷுதோஷ் ஷர்மாவும் தலா 41 ஓட்டங்களுடன் இணைப்பாட்டத்தைக் கொடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலகுவாக வெல்லலாம் என்று நினைத்திருக்க வருணபகவான் எதிர்நிலை எடுத்ததால் மழை பொழிந்து தள்ளி ஆட்டம் கைவிடப்பட்டது. முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!
  2. அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார். இந்த வரலாறு தெரியாத கந்தையர் "நீலன் பா.உவாக வரத் துடித்த ஒரு அரசியல்வாதி" என்ற அர்த்தத்தில் மேலே ஒரு கருத்து எழுதியிருக்கிறார். நீங்களும் இதை மறுக்காமல் நீலனைத் தேர்தல், பதவி அரசியல் செய்த ஒருவராக சித்திரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீலன், புலிகளின் தலைமைக்கு ஈடாக அல்லது அதை விட மேலாக மானசீகமாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முயன்ற ஒருவர் என்பதே என் புரிதல். இதற்கான சில சான்றுகளை ஐலண்ட் முன்னைய திரியில் பகிர்ந்திருக்கிறார் என நம்புகிறேன். நீலன் கொலை விடயத்தில் நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நன்னி குறிப்பிட்ட முன்னைய திரியிலேயே எழுதி முடித்தாகி விட்டது. அந்த திரியிலேயே எழுதிய நன்னி, விசுகர் உட்பட்டவர்களின் கருத்தின் படி நீலன் கொலைக்கு ஒரேயொரு காரணம் தான்: "புலிகள் கொன்றார்கள், எனவே அவர் கொல்லப் பட வேண்டியவர் தான். இதைக் கண்டிப்பது, கேள்வி கேட்பது புலிவாந்தி" அம்புட்டு தான்😂. அதை விட, அந்த முன்னைய திரியை அடித்து நூக்க ஒரு பெரிய பொய்யையும் தூக்கிப் போட்டிருந்தார்கள், "நீலன் கொலைக்கு புலிகள் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள்" என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதை யாரும் அங்கே சுட்டிக் காட்டவில்லை. மொத்தத்தில், நீலன் கொலையை நியாயம் செய்யும் குத்தி முறிதல் என்பது நாம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட ஒரு உரோமத்தையும் எங்கள் இனப் பிரச்சினையில் பிடுங்கிப் போடப் போவதில்லை எனச் சுட்டும் ஒரு நோய்க்குணங்குறியாகவே (symptom) எனக்குப் படுகிறது.
  3. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்... சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி... பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂
  4. ஹாய் நந்தன் ......... எங்களுடைய பிளான் "A " நன்றாக வேலை செய்யுது . ........ எதிரிகள் எல்லாம் கண்ணீர் விட்டு கதறாத குறை ......... நீங்கள் அப்படியே தொடர்ந்து முன்னேறவும் . ........ நான் பிளான் "B " பிரகாரம் தனுஸ்கோடியை எப்படியும் கைப்பற்றி விடுவேன் . ........ யோசிக்க வேண்டாம் சுவைப்பிரியனும் நம்முடைய ரகசிய ஏஜெண்ட்தான் ........ ! 😂
  5. என்ன அண்ணை..என்ன நடந்தது? நீங்களும் செம்பாவும் பதறுவதை பார்த்தா நான் முதல்வரே ஆகிவிட்டேனோ என நானே ஒரு கணம் ஜெர்க் ஆகிவிட்டேன். ஆனாலும் 16 டு 15 போறதுக்கெல்லாம் இந்த ரியாக்ஸன் ஓவர் சொல்லி போட்டன்🤣.
  6. அமிருக்கும் நீலனுக்கும் இடையான உங்கள் வித்தியாசப்படுத்தலை நான் ஏற்கிறேன். அமிர் போல் பொய் வாக்குறுதிகளை தந்து, உசுப்பேத்தி, இளைஞர்களை போருக்கு அனுப்பி விட்டு பின் அவர்களையே எதிர்த்து நீலன் அரசியல் செய்யவில்லை. அதே போல் அமிர் இந்திய படைகளின் அராஜகத்தை காபாந்து பண்ணியது போல், அல்லது புலிகளை கடுமையாக உலக அரங்கில் சாடியது போல் நீலன் செய்யவில்லை என்பதே என் நினைவு. ஆகவே நீலன் ஒரு பதவி மோகம் கொண்ட அரசியல்வாதி என நான் ஆமோதித்தது பிழைதான். ஆனால் அவர் 1996-99 தமிழ் மக்களுக்கு நேர்ந்த அநீதிகள் பலதை கண்டிக்காமல் - அதை செய்தவர்களோடு தனிப்பட்டும், அரசியலிலும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, கிரிசாந்தி, செம்மணி படுகொலைகள், என அப்போ அரங்கேறிய பலதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதியே என நான் கருதுகிறேன். புலிகள் அளவுக்கு அல்லது அதை விட மேலாக எமக்கான ஒரு கெளரவமான தீர்வை நீலன் விரும்பினாரா? என்றால் உண்மையில் என் பதில் எனக்கு தெரியாது என்பதே. இந்த விடயத்தில் நான் ஆம் என அறுதியிட்டு கூற கூடியது புலிகளை மட்டுமே. நீலன் ஒரு அமைதியான backroom operator போலவே எனக்கு அப்போ தென்பட்டார். கொல்லும் போது அவரின் திட்டங்கள் கூட நமுத்து போய் அதை சீண்டுவாரில்லாத நிலை வந்து விட்டது. அப்படி இருக்க ஏன் கொன்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை. இதற்கான ஒரு பதில் இருந்தாலும் - அதை இங்கே கொலையை நியாயப்படுத்தி எழுதும் எவரும் தெரிந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை.
  7. தந்தை செல்வா காலம் தொடக்கம் ஈழத்தமிழரின் பிரச்சனையை தீர்க்க யாருமே தயாரில்லை என்பது நிரூபண உண்மை. தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் பெரியார்,எம்ஜிஆர்,நேரு என பலரை சந்தித்து உதவி/உரிமை கோரினர். எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே ஏமாற்ற கதைகளாகவே இருந்திருக்கின்றது. அரசியல் போராட்டங்கள் தோல்வியில் போக ஆயுத போரட்டம் உதித்தது. ஆயுத போராட்டத்தை தொடங்கியவர்களில் விடுதலைப்புலிகள் செவ்வனே அதை செய்தனர். ஆயுத போராட்டத்தில் தோற்றுப்போன அரசியலை தேடியவர்களுக்காக விடுதலைப்புலிகள் அரசியலையும் சேர்த்து செய்தனர்.அதிலும் புலி எதிர்ப்பாளர்க்கு திருப்தியில்லை. குறை சொல்ல ஆயிரம் காரணங்களை சொல்லலாம் அப்படி சொல்பவர்கள் நிறை சொல்ல காரணங்களை தேட காரணங்களை தேடமாட்டார்கள். குற்ற பத்திரிகையாக நீலன்,சந்திரிக்கா,கதிர்காமர்,ராஜீவ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகின்றனர். சரி யுத்தங்கள் முடிந்து இவ்வளவு காலங்கள் போய் விட்டதே ஏதாவது முன்னேற்றமா என கேட்டால் புலிகள் குற்றங்கள் செய்து விட்டார்கள் என மட்டுமே கூறுகின்றார்கள். ஆனால் சிங்களம் ஏன் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கின்றது என்பதை மட்டும் பேச மறுக்கின்றார்கள். புலிகளுக்கான நிதி/தங்கம் சேகரிப்பில் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மோசடிகள் உண்டு. இதை தலைவர் நேரடியாக நின்று செய்யவில்லை. இதை செய்தவர்கள் அங்கத்தவர்களும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும். ஊரில் போராளிகள் ஈடுபட்டாலும் போராட்டம் என வந்து விட்டால்......இன்ப துன்பம் பரிவுகள் இருக்காது என நினைக்கின்றேன்.
  8. GMT நேரப்படி நாளை செவ்வாய் 06 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 20 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ சுவைப்பிரியன் ஏராளன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  9. இரண்டு வாட்டி காவ்யா மேடம் கட்டிப் புடிப்பாங்க🤪
  10. கரைகள் ஓய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை🤣. அவர்கள் ஆய்வுக்கு ஓய்வு விட்டா…அவர்கள் வீட்டில் அடுப்படியில் பூனை படுத்து வாய்வு விடும் நிலமை ஆகிவிடும். ஆகவே அவித்து கொட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போ தமிழா, தமிழா பாண்டியன், டாக்டர் காந்தராஜ் என சமையல்காரர்களும் எண்ணிக்கையில் கூடி விட்டார்கள்.
  11. மனைவி சமைக்கும் பிரியாணி சரியில்லை என்றால்... கணவன் பிரியாணியை... தனக்கு ருசியாய் சமைக்க வேண்டியதுதானே. 41 வயது கணவனுக்கு 27 வயது மனைவி. இதுவே... போதும் என்று சந்தோசப் படுடா... மூ*வி.
  12. இப்ப கொஞ்நநாளா ஜெட்டியா ஜட்டியா சரி என்று ஒரே குழப்பமாக இருக்கிறது யுவர் ஆனர். அமைச்சர் ஒருவர் என்னைக் குழப்பி விட்டுட்டார்.
  13. பாவம் ஆரோ ஒருத்தர் தன்ர சுய அனுபவம் = சமூகத்தின் அனுபவம் என நினைத்து எழுத அதை ஜி யும் பகிர்ந்துள்ளார் 🤣. நானறிய யூகேயில் 90-2000 இடையே வந்து அதே வேலையில் எவருமே இல்லை. படித்தவர்கள் அந்த வழியிலும், படியாதவர்கள் முதலாளிகளாயும், குறைந்த பட்சம் சுய சம்பாத்திய தரும் ஊபர் ஓட்டிகளாயாவது ஆகி விட்டார்கள். அதுவும் வீடு - பலர் இருந்த நல்ல கவுன்சில் வீட்டையே அதீத விலை கழிவுடன் வாங்கி விட்டார்கள். இலண்டனில் இப்படி 90 களில் வந்து, இப்போ சராசரி தொழிலில் இருக்கும் பலருக்கு இருக்கும் வீடுகளை, இப்போ படித்து வெளி வரும் ஒரு மருத்துவரால் வாங்க முடியாது. சந்தை விலை அப்படி.
  14. ஒரு படத்தில் விவேக் புதியவகை இசையில் பாடல் ஒன்றை இசைக்க… வீட்டு பெருசுதான் போய்ட்டு…ஒப்பாரி வைக்கிறார்கள் என நினைத்து மயில்சாமி வாசலில் வந்து நிண்டு சாவு கூத்து ஆடுவார். பெருசு சாகவில்லை என தெரிந்ததும்…விவேக்கிடம்…. “சார் வெட்டியான் வேற சாரயத்தை கடனுக்கு வாங்கி குடிச்சுட்டான், அந்த பணத்தையாவது கொடு சார்” என்பார் மயில்சாமி🤣. அந்த வெட்டியான் போல நானும் இரெண்டு வாரமா காத்து கிடக்கிறேன்😆. சட்டு புட்டுன்னு அடி பட்டு…யார் பெரிய ரவுடி எண்டு காட்ட வேணாமா🤣. 36 மணிநேரத்தில் தாக்குதல் என செய்தி வந்தே நாலு நாள் ஆகி விட்டது😂. ஒரு வேளை ஐபிஎல் முடியட்டும் என வெயிடிங்கோ🤣. # கரப்பொத்தான் vs கொக்கிரோச்
  15. நீலன் செத்து சுண்ணாம்பாகிவிட்டார். யாரும் அவருக்கு கரிசனை காட்டி எந்த பயனுமில்லை. இங்கே எழுதுபவர்கள் நோக்கமும் அது அல்ல. அரசியல் படுகொலைகளால் நாம் ஒரு இனமாக 5% நன்மை அடைந்தால். 95 சதவீதம் அடைந்தது தீமை. அதிலும் ரஜீவ், அமிர்தலிங்கம், கதிர்காமர், நீலன் இந்த கொலைகள் எமது இனத்துக்கு தந்த பிரதி கூல பின் விழைவுகள், மிக மோசமானவை. எனவே அதை பற்றிய திரியில் அதை சிலாகிக்கிறோம். கேள்விகளுக்கு பதில் சொன்னால் உண்மையை ஒத்து கொள்ள வேண்டி வரும் என்பதால் கூட சிலர் மெளனமாக இருக்கலாம்.
  16. நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான் நீலன் தயாரிக்க உதவினார். அதை சந்திரிக்கா நீர்த்து போகவைத்தார் எனில் அதற்கு நீலன் பொறுப்பாக முடியுமா? நியாயமான தீர்வை அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனிலும், அதை முன் வைக்கவாவது தன் உழைப்பை கொடுக்கலாம், புலிகளின் பலத்தை ஒரு காரணியாக வைத்து ஒரு நியாயமான தீர்வை பெறலாம் என முயற்சிப்பது, எமக்கு விருப்பம் இல்லாத நகர்வாய் இருக்கலாம் - ஆனால் அது மரண தண்டைக்குரிய குற்றம் அல்ல. குறிப்பாக இன்னொரு மாவீரரை பலி கொடுத்து. இந்த ஆரம்ப வரைபு கொடுத்த தீர்வை ஒத்த ஒரு தீர்வைதான் புலிகள் ஆஸ்லோ பிரகடனம் மூலம் கோரி நின்றனர். நீலனோடு அதே நிலைப்பாட்டில் 1995 இருந்த சிவசிதம்பரம், சம்பந்தர், மாவை இதர ஆட்களை நீலன் கொல்லப்பட்டு இரு வருடங்களுக்குள் புலிகள் அரவணைத்தனர். இதே காலகட்டாதில் புலிகளை எதிர்த்து யாழ் மேயர் ஆகி, கடும் விமர்சனங்களை வைத்த ரவிராஜை பின்னாளில் மாமனிதர் ஆக்கினர். நீலன் மீது கட்டுரையாளர் கூட “இலங்கையின் அரசுக்கு மறைமுகமாக உதவினார்” என்பதை தவிர வேறு எந்த தமிழர்/புலிகள் விரோத நடவடிக்கை குற்றசாட்டையும் வைக்க முடியவில்லை. நீலன் அமெரிக்காவில் அதிகாரத்தில் உள்ள பலரின் உற்ற நண்பர். அனைவருக்கும் தெரிந்த உண்மை, புலிகளுக்கும் தெரிந்திருந்தது. நீலன் சி ஐ ஏ என பரவலாக சந்தேகிக்கப்பட்டது. நிச்சயம் இதுவும் புலிகளுக்கு தெரியும். அவர் இலங்கை வந்து இப்படி பட்ட அரசியலில் ஈடுபட்டதும் இதற்கே எனவும் பலர் சந்தேகித்தனர். இப்படி பட்ட அமெரிக்காவின் இலங்கை நண்பரை கொல்லுவது, கிட்டதட்ட அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவரை கொல்லுவது போன்றது. இது புலிகளால் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்றே கருதப்பட்டிருக்கும். இவ்வளவு நடந்த பின்னும், நமக்கு ஏன் அமெரிக்கா நம்மை தடை நீக்கவில்லை, உதவி வழங்கும் மாநாட்டுக்கு அழைக்கவில்லை, முள்ளிவாய்க்காலை தடுக்கவில்லை என்பது புரியவில்லை என்பது ஒரு துன்பியல்.
  17. ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் பேரால் நிகழ்த்தப்பட்டது. நீலன் பங்களித்த தீர்வு மீது கடுமையான விமர்சனங்களும் அந்த தீர்வில் பல குறைபாடுகளும் இருப்பினும், அதை ஆரோக்கியமான விவாதங்களு உட்படுத்தப்படாமல், அதை தயாரிக்க துணை புரிந்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டார். இவரது கொலையால் தமிழ் மக்களுக்கு ஒரு சதம் கூட பிரயோசனம் ஏற்படவில்லை. ஆனால் சிங்களம் இதனை தனக்கு சார்பாக பயன்படுத்தி ராஜதந்திர ரீதியில் பயனடைந்தது. இவ்வாறு நிகழ்ந்தது முதல் தடவையும் அல்ல, இறுதித் தடவையும் அல்ல. இன்றும் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தும் அரசியலும் குரல்களும் எம்மிடம் இருந்து நீங்கவில்லை.
  18. கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம் சிவதாசன்எதிர்பார்த்தபடியே லிபரல் கட்சி வெற்றீவாகை சூடியிருக்கிறது. அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும் இவ்வெற்றி மகத்தானது. நான்காவது தடவையாக அது ஆட்சியமைக்கப்போகிறது. இத் தேர்தலில் பல திருப்பங்கள், அதிர்ச்சிகள் எதிர்பாராதவாறு கிடைத்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லியேவ் , கடந்த 20 வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த தொகுதியை இழந்திருக்கிறார். அது போலவே என்.டி.பி. கட்சித் தலைவர் ஜக்மீத் சிங்கும் தனது தொகுதியை இழந்திருக்கிறார். ட்றம்ப் என்ற புயல் வந்து இவர்களை ஒதுக்கியிருக்கிறது. லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்ணி முன் பின் எதுவித அரசியல் அனுபவமுமில்லாதவர். கனடிய மக்கள் அவரிடம் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ட்றம்ப் புயல் இன்னும் ஓயாமல் இருக்கும்போது. இது அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவா அல்லது பொய்லியேவ் மீதான நம்பிக்கையின்மை காரணமாகவா? தர்க்க ரீதியாகப் பார்த்தால் பொய்லியேவைப் பதவியிலிருந்தும் தொகுதியிலிருந்தும் துரத்தியிருப்பது பண்டம் காலம் கடந்துவிட்டது (product expired) என்பதனாலாகவிருக்கலாம். கனடியர் அனைவரையும் பிரதிநிதித்த்துவப்படுத்திக்கொண்டிருந்த புரோக்கிரஸ்சிவ் கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிராந்திய கன்சர்வேட்டிவ் கட்சியாக மேற்குக் கனடாவிற்குள் கொண்டுபோய் முடக்கியதிலிருந்து அக்கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கியிருந்தது. அக்கட்சியின் அதி தீவிரவாத அரசியல்வாதி ஸ்டொக்வெல் டே அவர்களின் அரசியல் வளர்ப்பு பிள்ளை தான் பொய்லியேவ். நீண்டகாலம அரசியலில் இருந்தாலும் எதையும் கற்காதவர். பலமான எதிரி முன்னர் அவரது பலவீனம் இனம்காணப்பட்டு விட்டது. ட்றூடோ என்ற கண்ணன் அரசியலுக்கு வந்தபோது ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. தனது வயதுக்கேற்ற இளம் தலைமுறையின் முற்போக்கு கொள்கைகளை, புரிந்தும் புரியாமலும், அவர் நடைமுறைப்படுத்தினார். கோவிட் வந்து குறுக்கே படுத்துக்கொண்ட்போதுதான் கண்ணனுக்கு விடயமே புரியவாரம்பித்தது. பொருளாதாரத்தைத் தக்க வைக்க வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் அள்ளிக்கொடுத்தார். பெரும்பாலான பணியாளர்களை வீட்டிலிருந்து பணிசெய்ய வசதி செய்து கொடுத்தார். கோவிட் முடிந்தபின் தொழில்களைத் தொடர்ந்து நடத்த கடன்களைப் பெறுவதற்காக வட்டி வீதத்தைக் குறைத்தார். பணியாளர்கள் பற்றாக்குறையைத் தவிர்க்க தற்காலிகம் என்ற பெயரில் குடிவரவாளர்களைக் கொண்டுவந்தார். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கொடுத்த அழுத்தம் காரணமாக வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக இந்தியாவிலிருந்து , தருவித்து கடற்கரைகளை நாசப்படுத்தினார். இதற்கு ட்றூடோ மட்டும் காரணமல்ல. அவர் தொடர்ந்தும் தீராமல் விளையாடிக்கொண்டிருக்க அமைச்சரவை உதவிப் பிரதமர் தலைமையில் தமக்குள் ஒரு சிற்றரசை நடத்திக்கொண்டிருந்தது. 1 மில்லியன் புதிய குடிவரவாளர்கள் நாட்டுக்குள் வந்தது பற்றி குடிவரவு அமைச்சருக்கே தெரியாது என்ற நிலைமை. பஞ்சாப்பிலிருந்து படிக்கவென்று காணி பூமிகளை விற்று கனடா வந்த பலர் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்குள் சென்று விட்டார்கள். கனடாவில் வேலை வாய்ப்பு, வீட்டு வசதிகள் எல்லாம் கைக்கெட்டாமல் போனபோது பழி ‘இந்திய’ மாணவர்களின் தலைகளில் பட்டுத் தெறித்து ட்றூடோ தலையில் விழுந்தது. எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவின் அம்புகள் சரமாரியாக வந்து ட்றூடோ கோட்டைக்குள் விழ அமைச்சர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். அவரைப் பதவியிலிருந்து இறக்கினால்தான் பொய்லியேவ் அம்புகளிலிருந்து தாம் தப்பிக்கலாம் என அவர்கள் கனவு கண்டார்கள். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால் விதி வேறு திட்டத்தை வைத்திருந்தது. கோவிட்டினால் தூக்கியெறியப்பட்ட ட்றூடோவைக் காப்பாற்ற விதி ட்றம்பை அனுப்பியது. மார்க் கார்ணியைக் கொண்டு பொய்லியேவ் படையெடுப்பை மட்டுமல்ல உள்ளக சதிகாரர்களையும் ஏக காலத்தில் தகர்த்தெறிந்து தனது அவமானத்தைத் துடைத்துக்கொண்டார். ஒரு ராஜ தந்திரிக்குரிய ஞானம் இப்போது தான் அவருக்குப் பிறந்திருக்கும் என நினைக்கிறேன். இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடையவில்லை மாறாக அதன் தலைவரே படு தோல்வியை அடைந்திருக்கிறார். மக்கள் நிதானமாகச் சிந்தித்தே வாக்களித்திருக்கிறார்கள். அறியாத, தெரியாத, முன் பின் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது அதனைக் கண்காணிப்பதற்காக பலமான எதிர்க்கட்சியையும் சேர்த்தே மக்கள் பாராளுமன்றைத்தை அமைக்க அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்க்கட்சியின் தலைவர் பொய்லியேவாக இருக்கக்கூடாது என்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே கட்சித் தலைமையை வேறு யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஒன்ராறியோ மாகாண முதல்வர் ட்க் ஃபோர்ட்டைக் கட்சியும் அதன் முன்னரங்க காவலர்களும் வேண்டுமென்றே புறந்தள்ளியமையே முக்கியமான காரணமாகப் படுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரது உள்வட்டப் பரிவாரங்கள் சில இருக்கின்றன. இவைகளில் பலவற்றை அரசியலுக்குள் கொண்டு வந்ததே முதல்வர் டக் ஃபோர்ட் தான். அப்படி இருந்தும் நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணத் தேர்தலின்போது “மாகாண கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எந்தவித உதவிகளையும் யாரும் செய்யக்கூடாது” என பொய்லியேவ் மிகவும் இறுக்கமான கட்டளை இட்டிருந்தார் எனப்படுகிறது. டக் ஃபோர்ட்டைப் புறந்தள்ளுவது கனடாவில் அதிக ஆசனங்களைக் கொண்ட (122) ஒன்ராறியோ மாகாணத்தையே முற்றாகப் புறந்தள்ளுவதற்குச் சமன் என்பதை அறியாத முட்டாளாக அவர் இருந்திருக்கிறார் என்றால் அரசியலில் ஒரு ஞானசூனியம். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள நோர்த் ஐலண்ட்-பவல் றிவர் தொகுதியில் இந்த தேர்தலில் வெற்றியீட்டிய ஆரன் கண் என்பவர் ஒரு தீவிர வெள்ளைத் தீவிரவாதி. சுதேசிகளின் உரிமைக்கோரிக்கைகளை எள்ளிநகையாடும் இவரது தீவிரவாத கொள்கைகளுக்காக மாநில லிபரல் கட்சி இவரது கட்சி விண்ணப்பத்தை 2021 இல் நிராகரித்திருந்தது. 2025 இல் இவர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு விண்ணப்பித்தபோது இவரது விண்ணப்பத்தை நிராகரிக்கும்படி பல சுதேசிய தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் பொய்லியேவிடம் கோரிக்கை வைத்தன. ஆனால் அவற்றையெல்லாம் நிராகரித்துவிட்டு இத்தீவிரவாதியை பாராளுமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார் பொய்லியேவ். எனவே கணிசமென்க் கூறமுடியாதெனினும் பல சுதேசியர்களின் வாக்குகளை அவர் இழந்திருக்கிறார். பாலஸ்தீன இனப்படுகொலை விடயத்திலும் யூதர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பாலஸ்தீனியர்களைப் பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் தமது போராட்டங்களைக் கனடியத் தெருக்களுக்குக் கொண்டுவந்து இங்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணமாகவிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார். இதன் மூலம் முஸ்லிம்கள் உட்படக் கணிசமான மிதவாதப் போக்குடையோர் லிபரல் சாய்வை எடுக்க பொய்லியேவே காரணமாக அமைகிறார். மேற்கூறிய காரணங்களை விடவும் பிரதான மாரணமான ட்றம்ப் என்ற எதிரியைத் தனது மானசீக குருவாக வழிபட்டதன் விளைவே பொய்லியேவை மக்கள் ஒரு ‘இன்ஸ்டண்ட்’ தேசத்துரோகியாக ஆக்கியமை. ட்றம்ப் பற்றவைத்தை கனடிய தேசிய எழுச்சியின் முன் ட்றூடோவின் மீது பொய்லியேவ் சுமத்திய அனைத்துப் பழிகளும் பொசுங்கிப்போகுமென பொய்லியேவ் எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலுக்கு முன் சில நாட்களில் தான் அவரது கட்சியின் விஞ்ஞாபனமே வெளியிடப்பட்டது என்றால் அவரது தலைமை ட்றம்பைத் தாங்கக்கூடிய ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தோரில் பலர் இளையோர் என்கிறார்கள். பொய்லியேவ் விற்ற வரிக்குறைப்பு – இமிகிரேஷன் – கிரைம் வாய்பாட்டை இவ்விளையோர் மனப்பாடம் செய்திருக்கலாம். அவர்கள் இன்னமும் தமது பெற்றோரின் வீடுகளில் வாழ்வதற்கு ட்றூடோவே காரணம் என அவர்கள் முற்றாக நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அப்பெற்றோரின் ஓய்வூதியங்களை வழங்குவதற்கான மூலம் இளையோர் இறுக்கும் வரியே தான் என்பதை அவர்களது முதிரா மூளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ட்றூடோ லிபரல் கட்சியை வெகுதூரம் இடது பக்கம் தள்ளிப்போயிருந்தது உண்மை. உலகம் முழுவதும் woke கலாச்சாரம் ஃபாஷனாக வந்துகொண்டிருக்கும்போது லிபரல் கட்சியின் இடது கூடாரம் ட்றூடோவின் மிதவாதப் போக்கைச் சாதகமாகப் பாவித்து கட்சியை இடது பக்கத்திற்குத் தள்ளியது. கப்பல் கவிழப்போகிறது என அறிந்ததும் அவர்கள் ட்றூடோவைத் தள்ளி விழ்த்திவிட்டுத் தப்பப் பார்த்தனர். ஆனால் கப்பல் அவர்களை அமிழவிட்டு ட்றூடோவை மட்டும் காப்பாற்றி விட்டது. மார்க் கார்ணி ஒரு practical man. அவரை உட்புகுத்தியது ட்றூடோவாக இருந்தாலும் இதன் சூத்திரதாரி, பணம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம் தான். ட்றூடோ நகர்த்திய இடது பக்கத்திலிருந்து அவர் கட்சியை மத்திக்குக் கொண்டு வருவார். பொருளாதார ரீதியில் நாட்டை ஸ்திரப்படுத்த அவர் ஆசிய, ஐரோப்பிய சந்தைகளுக்கான பாதைகளைத் திறக்க வேண்டும். எரிபொருளும், கனிமங்களும் இப்புதிய சந்தைகளைச் சென்றடைவதற்கான பாதைகளை உருவாக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சில இணக்கப்பாடுகளைக் காணவேண்டும். கார்ணியின் முதல் நடவடிக்கையாக இருக்கப்போவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது. இரண்டாவது அமெரிக்காவிடம் வாங்கிய பணமுறிகள் (Bonds), அடமானக் கடன்கள் (Mortgage Backed Securities) போன்றவற்றை மீளக் கையளித்து தமது முதலீடுகளைத் திரும்பப்பெறுவது. தற்போதுள்ள அமெரிக்காவின் கடனின் பெரும்பங்கு யப்பான், சீனா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமுமே இருக்கிறது. இவற்றில் யப்பானைத் தவிர இதர நாடுகள் ஏககாலத்தில் தமது பணமுறிகளைக் காசாக்க முற்படுவார்களானால் அமெரிக்க பொருளாதாரம் ஓரிரவில் முடங்கிப்போவதற்குக காரணமாகலாம். இது மட்டும் தான் உடனடியாகப் பாவிக்கக்கூடிய கார்ணியின் துரும்புச் சீட்டு. ஏனையவற்றைப் பாவிக்க பத்து வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் இணக்கப்பாடு கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. எனவே கார்ணி தன் துரும்புச் சீட்டைப் பாவித்தாரேயானால் ட்றம்ப் சீனாவுடன் சமரசத்திற்கு வரத் தயங்க மாட்டார். ஏனெனில் பொருளாதார ரீதியாக அமெரிக்கா அமிழும்போது அது ஏனைய நாடுகளையும் இழுத்துக்கொண்டுதான் போகும். எனவே கார்ணியின் இந்த துரும்புச் சீட்டு பலனளிக்கப் போவதில்லை. சியலில் முன் பின் அனுபவமில்லாத கார்ணியின் இரைச்சல்களை உடனடியாக பகுத்துணர முடியாதுள்ளது. ஆனால் ஒன்று அவரது ஆட்சி முழுமையான நான்கு வருட ஆட்சியாக இருப்பதற்கான சாத்தியமில்லை. அதற்கடுத்த ஆட்சி கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியாக அமையவேண்டுமாகில் அதன் தலைமை மேற்கு கனடாவிடமிடமிருந்து பறிக்கப்பட்டு ஜான் ஷறே அல்லது பீட்டர் மக்கே போன்ற மிதவாதிகளிடம் கையளிக்கப்படவேண்டும். ட்றம்ப் நாட்டில் நடைபெறவிருக்கும் மத்திய தேர்தல்களைத் தொடர்ந்து அவரது சிறகுகள் கத்தரிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் கார்ணி நான்கு வருடங்களை இலகுவாகத் தாண்ட முடியும். இத்தேர்தல் மூலம் கிடைத்த இன்னுமொரு அதிர்ச்சி என்.டி.பி. கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங்கின் தோல்வி. இதற்கு ஒரே ஒரு காரணம் பாலஸ்தீனம் பற்றிய இவரது நிலைப்பாடு. இறுதி விவாதத்தின்போதும் அவர் “பாலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை” என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தவர். இதே நிலைப்பாட்டை இவர் முன்னரும் தெரிவித்திருந்தார். 2023 இல் இவருக்கு வந்த கொலை மிரட்டலுக்கும் இவரது நிலைப்பாட்டிற்கும் சம்பந்தமிருக்கலாமோ என்று ஐயப்பட்டபோது இத் தோல்வி அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கனடாவில் மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் மிகவும் கேவலமாக மதிக்கும் தொழிற் பட்டியலில் கடைசியாக இருப்பதுதான் அரசியல்வாதி. பழைய வாகன விற்பனையாளர்கூட அரசியல்வாதிகளைவிட மேன்மையாக மதிக்கப்படுபவர்கள். இனிமேல் ஜக்மீத் சிங்க் தலை நிமிர்ந்து வாழலாம். தமிழ் வேட்பாளர்களை / வெற்றியாளர்களைப் பற்றி எதுவும் இல்லையா என்கிறீர்கள். It’s party time. அடுத்தூர்வதகுதொப்பதில். (Image Credit: CNN) https://veedu.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/?fbclid=IwY2xjawKDWHxleHRuA2FlbQIxMQBicmlkETFHVnJoVnk4S1ZyWFRQTTRqAR7-2fZVNQuGUbLJjeQKxeQL-myiMvWp9kYDt53dFRd5FwEgwClMhALb4kTiWQ_aem_8PA3MO0gSJ5VN88iQICCTA#google_vignette
  19. உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430540
  20. போறபோக்குல பார்த்தால் கார்பன் கார்ணி அவர்கள் இரண்டாவது முறையாகவும் பிரதமராக வருவார் போல் உள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே ஒன்டாரியோவில் படு தோல்வி அடைந்து . இப்போது அவர் அல்பேர்டாவிற்கு சென்று, தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை பதவி விலக்கி, பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட முயற்சி செய்து கொண்டிருக்கிறார், அவர் ஒரு வெட்கம் அற்ற மனிதர் ஆவார். கன்சர்வேட்டிவ் கட்சியில் பியர் பொய்லிவ்ரே போன்ற அதி தீவிர வலதுசாரி தலைவர் இருக்கும் வரை அவர்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரப்போவதில்லை, பெரும்பாலான கனேடியர்கள் மிதவாதிகளாகவே (center left or center right) இருக்கிறார்கள். அல்பேர்டாவில் இருப்பவர்ககளில் மிக குறைந்த அளவான மக்களே (25 %) தனி நாடாக போவதற்கு ஆதரவு அளிக்கின்றார், விருப்பம் என்றால் பியர் பொய்லிவ்ரேரும் அவருடைய தீவிர ஆதரவாளர்களும் Trumpland க்கு குடிபெயரலாம்.
  21. ஆமால்ல. இனி அதையும் வைத்து உருட்டலாம். இஞ்ச, பிறகு குந்தவை எங்கே என்று வரக்கூடாது. சரியா. பிறகு திரிஷாவத்தான் பிடிச்சு இறக்கவேணும்.
  22. முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 😃
  23. செம்பாட்டு மண் பிரண்டால் போக்காட்டுவதற்கு ரொம்ப செலவு செய்யணும் வாத்தியார். எதுக்கும் யோசித்து செய்யுங்க. வழமை போல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  24. உனக்கு 47 மனைவிக்கு 27 வயது மனைவி வழக்குப்போட்டால் உன் மானமே போயிடுமே. ஐரோப்பாவில் இருந்து கொண்டு புரியாணி தேடுதா புரியாணி சரியில்லை என்றால் கடையில் வாங்கி எதையாவது சாப்பிடு.
  25. நம்ம கவலை நமக்கு. போட்டி நடக்காது போல. ஒருத்தருக்கும் புள்ளி இல்லை. தொடங்கினா, 5 பத்துப் பரிமாற்றத்தில் 42 ஓட்டங்கள் அடிக்க வேண்டி வரும்.
  26. தம்பி சந்தோசமாக இருக்கிறாப்போல. யாராவது டெல்லி குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் என்று பதிந்துள்ளீர்களா?
  27. நான் பேசினதுல கம்மின்சுக்கு ரோஷம் வந்திட்டிதுபோல! மூன்று விக்கெட், ஒரு அற்புதமான கேட்ச்! கலக்குகிறார்!
  28. இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா. இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன். ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா. 😂🤣
  29. ஆனால் அதை மீள மீள நாம் உலகிற்கு நியாபக படுத்தி, நடை முறையில் உதாரணங்கள் மூலம் காட்டி கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் - இவர்களுக்கும் வேறு வழியில்லை என அரசுகள் இல்லாவிடினும், ஏனைய நாடுகளில் உள்ள பொது நோக்கர்களாவது சிந்திப்பார்கள். இல்லாமல் தீர்வை எழுத உதவினார் என்பதால் நாம் ஒரு தமிழரையே போட்டோம்- பழி முழுக்க எம்மீது. எல்லோரும் பிக்குகளை மறந்தே போனார்கள். இது மிகவும் உண்மை. அமிருக்கும் நீலனுக்கும் இது அவர்களின் பதவி, அதிகாரம் சம்பந்தபட்ட விடயம். ஆனால் புலிகளுக்கு இது ஒரு இறுதி இலக்கு சம்பந்தபட்ட விடயம். புலிகள் இந்த இனத்தின் நீடித்த சுதந்திர வாழ்வின் மீது சொந்த பிள்ளைகள் மீது பெற்றார் கொள்வது போல கரிசனை கொண்டிருந்தார்கள். அமிர், நீலனுக்கு இது வெறும் பதவி அரசியலுக்கான பாதை. ஆனால்…. அவர்களை அரசியலின் மூலம்தான் டீல் பண்ணி இருக்க வேண்டும் கை வைதால் ஆபத்து என்பதை உணர்ந்திருக்கவும் வேண்டும்
  30. மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂 உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி, இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣
  31. தமது இராணுவ தகவல்களை எதிரிக்கு வழங்கும் ஒற்றர்களுக்கு, துணை, ஒட்டு படைகளுக்கு மரண தண்டனை வழங்குவதும்…. ஒரு குறித்த பிரச்சனைக்கு தம்மை விட வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கும், ஆயுதம் தரிக்காத, நன்குஅறியப்பட்ட அரசியல் தலைவர்களை கொல்லுவதும் ஒன்றல்ல. தமிழ் ஈழம் வேண்டும் என்பது எப்படி ஒரு நிலைப்பாடோ…அதே போல் தமிழ் ஈழத்துக்கு மாற்றாக பிரியாத இலங்கையுள் ஒரு தீர்வை பெற நாம் தயார் என்பதும் இன்னொரு நிலைப்பாடே. இதில் ஒரு பகுதியை இன்னொரு பகுதி போட்டுதள்ளியது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. ஒரு தீர்வு திட்டத்தை தயாரிக்க உதவியது எப்படி விடுதலை போருக்கு எதிரான செயலாகும்? இதற்கான பதில் மேலே சொல்லப்பட்டுள்து. எதிரியோடு அடிபட சிலர் வேண்டும். எதிரியோடு நட்பாக இருந்து (முஸ்லிம் அமைச்சர்கள் போல்) காரியம் சாதிக்க சிலர் வேண்டும். இதில் நீலன் இரெண்டாம் வகை.
  32. இதில் மறுக்க ஏதும் இல்லை. ஆகவேதான் நான் ஒரே தராசில் நிறுக்கவில்லை என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். நான் சொன்னது இதைத்தான் 👇 அந்த வெள்ளமாளிகை சந்திப்பும், தலைவரின் அசோக்கா ஹோட்டல் சந்திப்பும் ஒன்றே என. சந்திப்பின் போதும், பின்னும் இந்த இரு தலைவர்களும் எடுத்த முடிவுகள், அணுகுமுறைகள், அவர்கள் தலைமைதாங்கும் தேசிய இனங்களின் எதிர்காலத்தை தீர்மானித்தன, தீர்மானிக்கும். ரஜிவின் (அநியாய) இந்தியா மீது தலைவர் எடுத்த அணுகுமுறையை ஒத்த அணுகுமுறையை டிரம்பின் (அநியாய) அமெரிக்கா மீது கோமாளி செலன்ஸ்கி எடுத்தால் - உக்ரேனியர்களுக்கு முள்ளிவாய்க்கால் நிச்சயம்.
  33. நம்பிக்கைகளும் கிராமிய வாழ்க்கையும்: ஒரு பார்வை ஆய்வுக் குறிப்பின் நோக்கம்: இந்த ஆவணம், வழங்கப்பட்ட தமிழ் மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருப்பொருள்கள், யோசனைகள் மற்றும் உண்மைகளை விரிவாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமிய வாழ்க்கையில் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. முக்கிய கருப்பொருள்கள்: பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள்: கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பது முக்கிய கருப்பொருளாகும். லியோன் யுரிஸின் 'றினிற்றி' நாவலில் அயர்லாந்து கிராமப்புற மக்களின் நம்பிக்கைகள், மூலத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் கிராமப்புற மக்களின் நம்பிக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. "ஐதிகங்களின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்து வியப்படைந்தேன்." என்ற வரி இதை எடுத்துக்காட்டுகிறது. பயம் மற்றும் அறியாமை: அறியாமை மற்றும் அனுபவமின்மை ஆகியவை பயத்தை எவ்வாறு உருவாக்குகின்றன என்பது மற்றொரு முக்கிய கருப்பொருள். குறிப்பாக மின்சாரம் இல்லாத காலங்களில், மரங்கள் மற்றும் சில இடங்கள் பயமுறுத்தும் காட்சிகளாகத் தோன்றின. பேய் கற்கள் போன்ற விசித்திர நிகழ்வுகள்: திடீரென்று நிகழும் கல் வீச்சு போன்ற விசித்திரமான மற்றும் விளக்க முடியாத நிகழ்வுகள் கிராம மக்களிடையே எவ்வாறு அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்குகின்றன என்பது விவாதிக்கப்படுகிறது. இது அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து, குடும்பங்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. மந்திரவாதிகள் மற்றும் சூனியம்: விளக்க முடியாத நிகழ்வுகளுக்கு சூனியம் காரணமாக இருக்கலாம் என்ற நம்பிக்கை மற்றும் அதை முறிப்பதற்கு மந்திரவாதிகளின் உதவி நாடப்பட்டது என்பது விவாதிக்கப்படுகிறது. உரு வருதல் மற்றும் ஆவேசம்: குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் (குறிப்பாக இளம் பெண்) உரு வந்து ஆடுவது, தெய்வத்தின் பெயரால் படையல்கள் கேட்பது போன்றவை கிராமப்புற நம்பிக்கைகளின் மற்றொரு அம்சமாக காட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் படிப்பையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. "‘உரு வாற பிள்ளை’ என்று கதை பரவியவுடன்..." என்ற வாக்கியம் இந்த நிலையை விளக்குகிறது. சகுனங்கள் மற்றும் நிமித்தங்கள்: பூனை குறுக்கே செல்வது, பல்லி சொல்வது, தும்மல் போன்ற அன்றாட நிகழ்வுகள் சகுனங்களாகவும் நிமித்தங்களாகவும் பார்க்கப்பட்டு, திட்டமிடப்பட்ட செயல்களை ரத்து செய்யும் அளவிற்கு அவை செல்வாக்கு செலுத்தின என்பது விவாதிக்கப்படுகிறது. "அப்பாவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது." என்ற வரி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. உண்மையான நிகழ்வுகளை தவறாகப் புரிந்துகொள்வது: சுடலையில் நடந்த தேத்தண்ணிக் கடை நிகழ்வை பேய்களாகப் புரிந்துகொள்வது போன்ற, உண்மையான நிகழ்வுகளை பயத்தின் காரணமாக தவறாகப் புரிந்துகொள்ளும் போக்கு காட்டப்பட்டுள்ளது. இது கிராமிய மக்களின் அறியாமையையும் பயத்தையும் வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமான யோசனைகள் / உண்மைகள்: நம்பிக்கைகளின் எதிர்மறை விளைவுகள்: "‘நம்புங்கள். நம்பிக்கை வாழ வைக்கும்' என்றால் எங்கள் இந்த நம்பிக்கைகள் வாழ்க்கையையே சிதைத்துவிடும்." என்ற முக்கிய வரி, சில நம்பிக்கைகள் வாழ வைப்பதற்கு பதிலாக வாழ்க்கையை சீர்குலைத்துவிடும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. உரு வந்த பெண்ணின் படிப்பும் உடல்நிலையும் பாதித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அறியாமையே பயத்தின் மூலம்: மின்சாரம் இல்லாத காலம், அடர்ந்த புளிய மரத்தின் தோற்றம் போன்ற காரணங்கள் பயத்தை உருவாக்கின. தேத்தண்ணிக் கடையை பேய்களாகப் பார்த்ததும், இருட்டில் அல்லது அறியாமையில் உருவான ஒரு தவறான புரிதலே. சமூகத்தின் தாக்கம்: கல் வீச்சு போன்ற நிகழ்வுகள் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையையே சிதைத்துவிடுகின்றன. உரு வந்த பெண்ணோடு பழகுவதற்கே நண்பர்கள் தயங்குவது சமூகத்தின் பயம் மற்றும் ஒதுக்குதலைக் காட்டுகிறது. காலம் மாறினாலும் சில நம்பிக்கைகள் நீடிக்கின்றன: கட்டுரை எழுதும்போது அடுத்த வீட்டுக்காரர் தும்மியதை ஒரு சகுனமாகப் பார்ப்பதும், புதிய தொலைபேசி இணைப்பு எடுத்தவர் கோயிலுக்கு முதல் அழைப்பு எடுப்பதும் "காலம் ஒன்றும் மாறிவிடவில்லை." என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. மேற்கோள்கள்: "அயர்லாந்து நாட்டு கிராமிய மக்கள் எங்களி இளமைக்காலவாழ்க்கையைப்போலவே ஐதிகங்களின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்றறிந்து வியப்படைந்தேன்." (ஆரம்பப் பகுதி) "வஞ்சனைப்பேய்கள் என்பார்.. அந்த மரத்தில் என்பார் இந்தக் குளத்தில் என்பார்.. துஞ்சுது முகட்டிலென்பார் மிகத் துயர்ப்படுவார்... எண்ணிப் பயப்படுவார்" (பாரதியின் பாடல் மேற்கோள்) "புளிய மரத்தில் முனி இருக்கிறதென்றால் அவ்வளவுதான். புளிய மரம் காய்த்து குலுங்கினாலும் யாரும் தொடமாட்டார்கள்." "எறிபவர்கள் அயல் வீட்டுக்காரராக இருக்கலாம். கோபக்காரராக இருக்கலாம். எது எப்படியோ அந்தக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையே சிதைந்து போய் விடும்." "அந்த வீட்டுக்காரரின் நடு வயது மகள் உரு வந்து ஆடுவாள். தனக்கு படையல் போடுங்கள் என்ற ஆவேசமாக காளியின் சார்பாக கேட்டுக்கொள்வாள்..." "‘உரு வாற பிள்ளை’ என்று கதை பரவியவுடன், ‘காணமல் போன பசுமாடு எங்கு நிற்கிறது’ ‘கடைசிப்பொடியன் படிப்பு குழப்புவானா’ என்றெல்லாம் கேட்பதற்கு ஆட்கள் எலுமிச்சம் பழத்தடன் வரிசையாக வருவார்கள்." "‘நம்புங்கள். நம்பிக்கை வாழ வைக்கும்' என்றால் எங்கள் இந்த நம்பிக்கைகள் வாழ்க்கையையே சிதைத்துவிடும்." "அப்பா சைக்கிள் பின்காரியரில் இருந்து வரும் சித்தப்பாவை 'அந்தப்பக்கம் பார்க்காதை பார்க்காதை' என்று சொல்லித்தடுத்து விட்டாராம்." "காலம் ஒன்றும் மாறிவிடவில்லை." "ஏனென்று கேட்டதிற்கு முதல் அழைப்பு கோயிலுக்கு எடுத்தால் நல்லது என்றார். முடிவுரை: வழங்கப்பட்ட மூலமானது, பாரம்பரிய கிராமிய சமூகங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் தனிநபர்களின் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சில நம்பிக்கைகள் வாழ்வாதாரமாக இருந்தாலும், அறியாமை மற்றும் பயத்தின் அடிப்படையில் உருவாகும் பல நம்பிக்கைகள் வாழ்க்கையை சீர்குலைத்து, தேவையற்ற துயரத்தையும் அச்சத்தையும் உருவாக்குகின்றன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காலம் மாறினாலும், சில வகையான நம்பிக்கைகளும் சகுனங்களும் இன்னும் சமூகத்தில் நீடிக்கின்றன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வு குறிப்பு மூலத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய கருத்துக்களைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது கே.எஸ் பாலசந்திரனின் சூ மந்திரகாளி என்னும் பதிவின் தரவுகளின் அடிப்படையில் இந்த செயற்கை நுண்ணறிவு பாத்திரங்களை பேச வைத்திருக்கிறேன் கேட்டுபாருங்கள்
  34. ஈழ தமிழினத்தின் நியாயமான போராட்டத்திற்கு யார்? எந்த நாடு வெளிப்படையாக உதவியது என்பதை கூற முடியுமா? உதாரணத்திற்கு இந்தியா எமது விடுதலைப்போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு/அங்கீகாரம் வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? இந்தியாவின் பரிந்துரையின் படியேதான் இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப்புலிகளை தடை செய்தார்கள்? விடுதலைப்புலிகள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செய்த பாவங்கள் என்ன? இந்த கூட்டு அரசியல் உங்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன். நிற்க.... கோமாளி செலென்ஸ்கி வளைந்து நெளிந்து தம் அரசியல் நலனை முன்னெடுப்பதாக கூறுகின்றீர்கள். இப்படி...எப்படியெல்லாம் உங்களால் சிந்திக்க முடிகின்றது? ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து இராச்சியங்களும் செலென்ஸ்கியின் பின்னால் நின்று உரம் கொடுப்பது உலகறிந்த விடயமல்லவா? அப்படியிருக்கும் போது ஈழப்பிரச்சனையும் உக்ரேன் பிரச்சனையும் ஒரே தராசில் வைப்பது ஒத்தே வராது.
  35. ஒருவர் நகைகளைக் கேட்டால் பிரச்சனை வரும் என்கிறார் இன்னொருவர் திரும்பக் கேட்பவர்கள் சிறைக்குப் போக வேண்டும் என்கிறார் நான் பாவப்பட்ட மக்கள் சிறைக்குச் செல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் எனக் கூறினேன். இதை விளங்காமல் பலரும் பல மாதிரி விளக்கம் தருகின்றார்கள் நிழலி கூறியது போல 2002 இல் எனக்கு நேரடியாக மிரட்டல் வந்தது அடுத்த முறை இந்தப்பாதையால் நீங்கள் யாழ் செல்வதாக இருந்தால் உங்கள் பெயர் எங்கள் பட்டியலில் நிதி உதவி அளிப்பவர் என இருக்க வேண்டும் என்றார்கள் . நானும் சரி எனக் கூறிவிட்டு கடந்து சென்று விட்டேன். பின்னர் எங்களிடம் நிதி சேகரிக்க வந்த அந்த நல்ல மனிதர் 2009 க்குப் பின்னர் கேரளாவில் பல கோடி வியாபாரம் செய்து வருகின்றார். அதில் எனது பங்கும் இருக்கும் ஆனால் கேட்டாலும் திரும்பாத தரமாட்டார்😂
  36. நான் படுற வேதனை காணாது என்று நீங்களும் அதுக்குள்ள சேரணுமா. அந்த இரண்டு பேருக்கும் தெரியும். சேர்ந்திடாதீங்க. ஜோடி மட்டும் சேர்ந்திடாதீங்க. அட இந்தச் சேர்மதி நல்லாருக்கே. எல்லா பெரிய கையும் ஒரு இடத்தில. அப்ப நாம மூன்றாவதா வாறத ஆண்டவனாலும்......
  37. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் ராமனுல்லா குர்பாஸ், அன்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் ஆகியோரின் கமியோ ஆட்டங்களினாலும், அண்ட்ரே ரஸல்ஸின் அதிரடிப் புயல்வேக 25 பந்துகளில் அடித்த 57 ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பித்தாலும் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததால் துரத்துவதில் சறுக்கி 5 விக்கெட்டுகளை 71 ஓட்டங்களில் இழந்திருந்தது. எனினும் மோயின் அலியின் மூன்றாவது ஓவரில் ரியான் பராக் 5 சிக்ஸர்களை அடித்தபோது ஆட்டம் திசைமாறியது. ரியான் பராக் புயல்வேகத்தில் 95 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார். ஷிம்ரொன் ஹெட்மயர், ஷிவம் டுபேயின் அதிரடி ஆட்டங்களால் வெற்றிக்கோட்டுக்கு அண்மித்து, இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ராப்சிம்ரன் சிங்கின் மின்னல்வேக 91 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங் போன்றோரின் கமியோ ஓட்டங்களுடனுன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பவிலியனுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததால் வெற்றி வாய்ப்பு கடினமாக இருந்தது. ஆயுஷ் படோனியும், அப்துல் சமட்டும் முறையே 74 ஓட்டங்களையும், 45 ஓட்டங்களையும் விளாசியும் இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  38. ஒரு முக்கியமான கேள்வி? யாரும் பதில் சொல்ல விழையலாம். ஜூலை 99 இல் நீலனை கொல்கிறார்கள். டிசம்பர் 2000 தில் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிக்கிறார்கள். இது ஏப்ரல் 2001 இல் முறிந்தாலும் - விரைவிலேயே 2002 தொடக்கதில் சமாதான உடன்படிக்கை எழுதி விடுகிறார்கள். இடையே 2001 தேர்தலுக்கு முதலே கரிகாலன் மூலம் புலிகளின் மறைமுக ஆசி தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க சிவராமுக்கு கிடைக்கிறது. இதன் பின் கூட்டமைப்பு உருவாகி 2001 தேர்தலுக்கு பின் புலிகள் அதை தம் அரசியல் முகமாகவும் பயன் படுத்தி, அதற்காக செல்வம், சுரேஸ் என மிக மோசமான தமிழர்/புலி விரோதிகளை கூட மன்னித்து ஏற்று கொண்டனர். இவை எல்லாம் நீலன் கொல்லப்பட்டு இரு வருடத்துள் நிகழ்ந்து விட்டன. நீலனை விட்டு வைத்திருந்தால் - அவர் பின்னாளில் புலிகளுக்கு சார்பான ஒரு எம்பியாக கூட ஆகி இருக்கலாம். அதேபோல் சங்கரி முறுகிகொண்டு நிண்டபோது கூட அவரை கொல்லவில்லை. ஆனால் சர்வதேச அரங்கில் கதிர்காமருக்கு அடுத்து பாரிய பின்னடைவை புலிகளுக்கு ஏற்படுத்தியவர் சங்கரி. அவர் மீது ஒரு கல்லை கூட எறியவில்லை. நீலனுக்கு அமெரிகாவில் உள்ள நட்பு வட்டம் பற்றி தெரிந்து கொண்டே, தற்கொலை போராளியை பாவித்து கொல்லும் அளவுக்கு அவர் விளைவித்த, அல்லது விளைவிக்க போகும் ஆபத்து என்ன என புலிகள் கருதினார்கள்? ஏன் இதை செய்தார்கள்?
  39. படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஏராளன் ......... ! 😁
  40. யாரும் இந்த கேள்வியை நீலனிடம் கேட்டதாகவோ அவர் பதில் சொன்னதாகவோ நான் அறியவில்லை. ஆனால் இரெண்டு விடயங்கள் சாத்தியம். 1994/95 இல் சந்திரிகா ஒரு நேர்மையான தீர்வை தர முயல்வார் என சகல வகையான தமிழ் மக்களும் நம்பினார்கள். சந்திரிகா அனுப்பிய பாலபட்டபெந்தி தலைமையிலான சமாதான குழுவுக்கு யாழில் ஹெலிகொப்டர் இறங்கிய பல்கலைகழக வளாகத்திலேயே மக்கள் கூடி ஆரவார வரவேற்பு கொடுத்தனர். புலிகளின் ஆளுகைக்கு வெளியே இருந்த தமிழர்களும் ஏகோபித்து சந்திரிகாவை வாக்கு போட்டு ஆதரித்தனர். இப்படி பலர் தனிப்பட்டும் நம்பினர். பிபிசி சிங்கள சேவை சந்தேசியவின் பணிப்பாளர் வசந்தராஜ இலங்கை திரும்பி ரூபவாகினியை பொறுப்பேற்றார். ஆனால் சில காலம் போக, வெறுத்து போய் இலண்டன் திரும்பி தமிழ் கார்டியனில் எழுத தொடங்கினார். இப்படி ஒரு நம்பிக்கை. அல்லது அமெரிக்கா மூலம் சந்திரிக்காவை பணிய வைக்கலாம் என நீலம் நம்பி இருக்கலாம். சாகும் போது நீலனும், சந்திரிகா இனவாதிகள் குறிப்பாக ரத்வத்தை, பீடாபதிகள், கொட்டகதேனிய போன்றோரின் பேச்சுக்கு ஆடுவதால் நீலன் வெறுப்படைந்து இருந்தார் என்போரும் உளர். முழுக்க முழுக்க பொய்யான நாடகம் ஒன்றை சந்திரிகாவுடன் சேர்ந்து ஆடி இருக்கலாம். அப்படி இருப்பினும் கூட, அரசியல் கொலைகள் சரியா பிழையா என்பதற்கு அப்பால், நீலன் யாரின் ஆள் என தெரிந்தே அவரில் கைவைத்தது அறிவார்ந்த செயலா?
  41. சம்மர் கட் ..😄😄😄 சம்மர் கட் ..😄😄😄
  42. இறுதி யுத்தத்த வெற்றிக்காக என று கூறி மக்களிடம் இருந்து புலம் பெயர் தேசியவாதிகள் என்று அழைப்பவர்களால் 2008/2009 காலப்பகுதியில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான ஈரோ பணமும் இப்படி பொட்டலம் கட்டி வைத்திருந்தால் பிடிபட்டிருக்கும். 😂 😂 மக்களுக்கு சிறு பகுதியேனும் திரும்ப கிடைத்திருக்கலாம். ஆனால் கெட்டிக்காரர்கள் என்றதால் பினாமிகள் பெயரில் பல் வேறு இடங்களை கைமாற்றப்பட்டு அத்தனை பணமும் பணத்தை சேர்ததவர்களாலே ஆட்டையை போடப்பட்டது. பணத்தை சேர்தத நோக்கம் நிறைவேறாமல் விட்டாலும் கிடைத்த பணத்தை அப்படியே அமுக்கியதில் வெற்றி பெற்று விட்டார்கள்.
  43. இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 😂 🤣
  44. குறைகள் இல்லாத ஆட்சி இல்லை. ஆனால், டிரம்ப் ஐயா வந்த பின்னர்தான் பலருக்கு சுயபுத்தி வேலை செய்கின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.