Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87990
    Posts
  2. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    1223
    Posts
  3. Thumpalayan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1515
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38769
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/08/25 in all areas

  1. இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள். நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள். வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள். மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.
  2. Century அடிக்கிறம். நின்று விளையாடுறம். நானும் என்பங்கிற்கு கொட்டிய குப்பைகளின் எண்ணிக்கை 600க்குக் கிட்ட வந்திட்டுது. 😁 (இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று சொல்லிக்கொண்டு என்ற உளமனம் கேக்குது) அட 100வது பக்கத்தைத் திறந்து வைத்ததும் நான்தான். 😁🤣
  3. ஐபிஎல் 2025இன் இன்று தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸுக்குமான 58வது போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவேகமாக 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நிறுத்தப்பட்டது. பிரியன்ஷ் ஆர்யா 70 ஓட்டங்களை 34 பந்துகளில் அடித்து ஆட்டமிழந்தார். ப்ராப்சிம்ரன் சிங் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொழில்நுட்பக் காரணங்களுக்காக போட்டி நிறுத்தப்பட்டது எனக் கூறப்பட்டாலும், இந்திய-பாகிஸ்தான் போர் அபாயம் காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. முடிவு: முடிவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கின்றது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் இல்லை):
  4. இன்றைய போட்டி தர்மசலாவில் திட்டமிட்டபடி நடைபெறும். எனினும் சிலவேளை மழை வந்து இப் போட்டியை குழப்பலாம் . ஆனால் மும்பாய்க்கு எதிரான போட்டி அகமதாபாத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாழ்கள ஐபிஎல் 2025 பதிவு 100 வது பக்கத்தினை தாண்டவுள்ளது.
  5. GMT நேரப்படி நாளை வெள்ளி 09 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் (நடந்தால்) யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. ஏராளன்.... எங்களிடம் இனி இழக்க எதுவும் இல்லை. நாங்கள் இந்தியனுக்கு நல்லெண்ணம் காண்பித்தாலும், அவன் எம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆதலால், கிடைக்கும் சந்தர்ப்பங்களில்.... இந்தியனை துகில் உரிந்து விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
  7. நிறையப் பேருக்கு உள்ளூராட்சி தேர்தலுக்கும்நாடாளுமன்றத்தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியேலை. உள்ளூராட்சித்தேர்தலில் அந்த வட்டாரத்தில் செல்வாக்கான ஒருவரை எந்தக்கட்சிநிறுத்தினாலும் வெல்லுவார். உதாரணம் எங்கள் ஊரில் காலம் காலமாக தமிழரசுக்கட்சி , தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதான் வெல்லும் (அவர்களும் செல்வாக்கான ஆளைத்தான்நிறுத்துவார்கள்). ஆனால் இந்த முறை சங்கு தான் வென்றது ஏனென்றால் தமிழரசுக்கட்சி சார்பில் செல்வாக்கான ஒருவரைநிறுத்தவில்லை (காலம் காலமாக தமிழரசுக் கட்சிக்கு போடுபவர்களே போடவில்லை). ஆனால்நாடாளுமன்றத்தேர்தலில் இந்த வாக்குகள் சங்குக்கு கிடைக்காது.
  8. கட்டுரையாளருக்கு சுமந்திரன் நல்லவர், வல்லவர், எதிர்கால அரசியல் தலைவர் என்று எழுத ஆசை ஆனா அது எடுபடாதென்று தெரியும். ஆகவே கஜேந்திரகுமார் எதிர்கால அரசியல் தலைவர் இல்லை என நிறுவ முற்படுகிறாரோ?
  9. மகிந்த சகோதர்கள் போல ரணிலால் முப்படைகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரணில் மகிந்த கம்பனி போல விடாமல் யுத்தத்தை நடத்தி முடிக்கும் திறன் அற்றவர். ரணில் தந்திரமான ராஜ தந்திரி, கனவான் அரசியல் வாதி. ஆனால் மகிந்த குடும்பம் போன்ற சண்டியன் இல்லை. சில இராஜ தந்திர நகர்வுகள் மூலம் ஆளை மடக்கியிருக்கலாம். அத்துடன் ரணில் தெற்கின் ஆதரவு அற்றவர் அதனால் தான் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தோற்றார். யுத்தம் ஆரம்பிப்பதை அந்த நேரத்தில் புலிகளும் விரும்பினார்கள். அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை என்ன விலை கொடுத்தும் உடனடியாக பிடிப்பதே அவர்களது திட்டம். முகமாலைப் பகுதிகளில் பல ஆயிரம் மாவீரர்களை இதனால் இழந்தார்கள். பல முனைகளில் ஒரே நேரத்தில் சண்டை தொடங்கும் என அவர்கள் நினைத்தேயிருக்கவில்லை. மன்னாரிலே முன் லைனிலே விடக்கூட போராளிகள் இருக்கவில்லை. ஆமி ஒரு ரவை கூட சுடாமல் சில இடங்களில் முன்னேறியது.
  10. உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன். அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.
  11. ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
  12. இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?
  13. ரபேல் விமானங்களை இலகுவாக வீழ்த்த முடியாது. தரையிலிருந்து விமான ஏவுகளை ஏவப்பட்டால் அதனை உடனே கண்டுகொண்டு எதிர் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதுவும் 3 ரபேல் விமானங்கள் என்பது ஆச்சரியம். இச் செய்தி உண்மையாக இருந்தால் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்குள் நன்றாக ஊடுருவி உள்ளதாக அனுமானிக்கலாம். இந்திய விமானங்கள் வரும் என்று காத்திருந்து தாக்கியுள்ளனர். ஒரு சிறு தாக்குதலுக்கு இந்தியா பெரிய விலை கொடுத்தது அவமானம். தாக்குதல்கள் மாறிமாறித் தொடருமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது பாகிஸ்தான்தான். இந்தியா போன்று பொருளாதார உறுதி அதனிடம் இல்லை. ஏற்கனவே விளிம்பில் உள்ள அதன் பொருளாதார வீழ்ச்சி மேலும் பலவீனம் அடையும்.
  14. இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.
  15. வீட்டில முறித்திருப்பார்கள்.
  16. உண்மை இந்திய ஊடகங்களே அச்செய்தியை திருப்பிப் பெற்றுவிட்டன. இந்தியன் சாகின்ற காணக்கிடைக்கா கண்கொள்ளாக்காட்சி கண்டு மகிழுங்கள்😍🤣 எத்தனை ஆயிரம் தமிழ்ப்பெண்களை வன்புணர்ந்தவங்கள்😡
  17. @ரசோதரன் குரு எங்கை நான் இதுக்கை இருந்து போன‌தில் இருந்து உங்க‌ளை காண‌ வில்லை உற‌வுக‌ள் எழுதின‌தை மேல் ஓட்ட‌மாய் வாசித்தேன் உங்க‌ட‌ ப‌திவுக‌ளை பெரிசா காண‌ வில்லை.................இந்த‌ முறை கைய‌ முறிச்சிட்டிங்க‌ளோ😁.......................
  18. புதிய பாப்பரசர் தன்னை பதின்னாலாவது லியோ என்று அழைப்பதில் பிரச்னை இல்லை, அமெரிக்காவின் இரண்டாம் த்ரம்ப் வத்திக்கானை அமெரிக்காவுடன் இணைப்பாரா இல்லையா அல்லது ஏதாவது பிசகு இருக்கா என்று இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவரைக்கும் தெரிவான பாப்பரசர் உலக சமாதானத்தை நிலை நிறுத்த தன்னுடைய ஆளுமையை பிரயோகிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்🙏
  19. உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன் இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.
  20. @vasee மும்பை இந்திய‌ன் அணிக்காக‌ விளையாடும் Tilak Varma இவ‌ரும் வ‌ய‌தை குறைச்சு கொடுத்த‌தாய் 2020ம் ஆண்டு விம‌ர்ச‌ன‌ம் எழுந்த‌து 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையின் போது................. நான் நினைக்க‌ வில்லை Vaibhav வ‌ய‌து குறைச்சு கொடுத்து இருப்பார் என்று...................... இந்த‌ சிறுவ‌ன் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ஆசிய‌ கோப்பையில் போன‌ வ‌ருட‌ம் 13சிக்ஸ் அடிச்ச‌வ‌ர் ஒரு போட்டியில் ம‌ட்டும் ,இந்த‌ சிறுவ‌னை ப‌ற்றி மூன்று மாத‌த்துக்கு முத‌ல் யாழில் ஏராள‌ன் அண்ணாவும் நானும் விவாதிச்சு இருக்கிறோம்........................ அந்த‌ விளையாட்டோட‌ தான் ஜ‌பிஎல்லுக்கை வ‌ந்த‌வ‌ர் , ஆனால் ஆர‌ம்ப‌த்தில் விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து , இப்போது கிரிக்கேட் ர‌சிக‌ர்க‌ளுக்கு இந்த‌ சிறுவ‌ன் என்றால் எல்லாருக்கும் தெரியும்...................நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ச‌ர‌ப் ப‌டுகிறார் நிதான‌மும் தேவை வ‌ய‌து கூட‌ கூட‌ கிரிக்கேட் உல‌கில் சூப்ப‌ர் கீரோவா வ‌ல‌ம் வ‌ருவார்............................... டென்மார்க்கில் அண்ணா👍............................
  21. என்னதான் வெளில திட்டினாலும் இந்தியா இந்தப்போரில் வெல்லவேணும் எண்டு எட்டி எட்டி நியூஸ் எல்லாம் பாத்துக்கொண்டிருக்கிறன்.. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்… பாகிஸ்தனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்.. ஆனா இந்தியா.. அதுவும் தமிழ்நாடு எங்கள் வாழ்வோடு பிரிக்கமுடியாதது.. மற்றது அடிப்படைவாத சோனி உலகத்தில் எந்த மூலையிலும் வெல்லக்கூடாது.. உலக அமைதிக்கே கேடு அவர்கள்.. அதுவும் ஒரு பைத்தியக்கார மதவெறியர்களிடம் அணுகுண்டு இருப்பது மனிதகுலத்துக்கே ஆபத்தானது.. மேற்குலக நாடுகள் மட்டும் பலமானதாக இல்லை என்றால் இந்த சோனி நாடுகள் முஸ்லீம் அல்லாத நம்மை எல்லாம் காபீர்கள் என்று எப்பவோ கொன்று புதைத்து அங்கு புல்பூண்டு முளைத்திருக்கும்.. புலிகள் இதில் கெட்டிக்காரர்கள்.. ஜெய்கிந்..😆
  22. Robert Prevost - எனும் அமெரிக்க கார்தினெலே பாப்பரசராக தெரிவாகியுள்ளார். இவர் பதின்நான்காம் லியோ என அறியப்படுவார்.
  23. வடக்கன் செத்துக்கிடக்கிற காட்சி: (இந்த மாதிரி முல்லாக்களையும் பாக்கனும்)
  24. பிளடி... அன்ரி இண்டியன், சேம் சைட் கோல் போட்டிருக்கிறான்.
  25. காணொளி. 👉 https://www.facebook.com/watch?v=1798746520691915 👈 தாவடி - ஆலயத்திற்கு கொண்டு வந்த யானை மிதித்து பக்தர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது தெற்கில் இருந்து யானை கொண்டு வரப்பட்டு மஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. மஞ்சம் முன்பாக தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்.com உங்களுக்கு பணம் மிஞ்சினால், அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். யானையை கொண்டு வந்து பகட்டுக் காட்டி... இருக்கின்ற மக்களை கொலை செய்யாதீர்கள்.
  26. இலங்கை ஊடகங்கள் ஊடக தர்மம் என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைக் கூட பிரசுரிக்க மறுக்கின்றது. இதுவே கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட பிரச்சனை என்றால், கூசாமல் அத்தனையையும் பிரசுரிப்பர். குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பிணையில் வெளியாவனர் பெயர்: சங்கரன் படம்: ராஜேஸ்வரி கல்வி நிலையத்தின் உரிமையாளரும் மாணவியின் தற்கொலைக்கு தூண்டப்பட்டவர் எனச் சொல்லப்படுகின்றவரும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாராயணபிள்ளை சிவராஜா படம்: பிரபல பாடசாலை என்று குறிப்பிடப்படும் பாடசாலையின் பெயர்: இராமநாதன் மகளிர் கல்லூரி
  27. வானில் விமானப்படை, தரையில் இராணுவம் – இந்தியாவின் இருமுனை தாக்குதல்! ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஒரு தீர்க்கமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இரு முனைகளைக் கொண்டது. இதில் வானத்தில் விமானப்படை மற்றும் தரையில் இராணுவம் ஈடுபட்டதாக அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படை (IAF) ஆகாயத்திலிருந்து தரைக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய அதே வேளையில், இந்திய இராணுவம் ஒரே நேரத்தில் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவியதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹமட், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் நடந்த இந்த நடவடிக்கையில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த பன்முக தாக்குதல், பயங்கரவாத இயந்திரங்களை ஆதரிப்பதை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகும், இது பாகிஸ்தானின் பயங்கரவாத இயந்திரத்தை முடக்கும் என்று இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதை நிறுத்துமாறு இஸ்லாமாபாத்திற்கு தெளிவான செய்தியை அனுப்புவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு, புது டெல்லி முக்கிய உலக சக்திகளிடமிருந்து இராஜதந்திர ஆதரவைப் பெற்றதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவு கிடைத்தது, சீனாவின் பதில் நடுநிலையானது என்று விவரிக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதைக் காண முடிந்தது. இதனால் பாகிஸ்தான் இராஜதந்திர முன்னணியில் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டது. துருக்கியைத் தவிர, வேறு எந்த நாடும் இஸ்லாமாபாத்தை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இது இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க இராஜதந்திர வெற்றி என்று கூறியது. தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை “அப்பட்டமான போர் நடவடிக்கை” என்று கூறி, பொதுமக்கள் உயிரிழப்புகளைக் கூறினார். பாகிஸ்தான் “அதன் விருப்பப்படி சரியான நேரத்தில் மற்றும் இடத்தில்” பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பதிலடி கொடுத்தால் இந்தியா கடுமையாக பதிலளிக்கத் தயாராக உள்ளது என்று இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். எவ்வாறெனினும், இந்தியாவின் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதில் அசாரின் உறவினர்கள் பத்து பேர் அடங்குவர் என்று பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஒரு விளையாட்டு மைதானத்தில் அவரது இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து. “அல்லாஹ் அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று கோஷமிட்டனர். மேலும் பிற மத கோஷங்களையும் எழுப்பினர். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொடூரம் அனைத்து விதிமுறைகளையும் மீறியுள்ளது” என்று அந்தக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “துக்கமும் அதிர்ச்சியும் விவரிக்க முடியாதவை”. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் என்றும், மற்றவர்களில் அசாரின் சகோதரி மற்றும் அவரது கணவர் அடங்குவதாகவும் அது கூறியது. பல ஆண்டுகளாகக் காணப்படாத அசார் மற்றும் அவரது சகோதரர், குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரவூப் அஸ்கர் ஆகியோர் இறுதிச் சடங்கு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தாக்குதலுக்குப் பின்னர் அந்த இடத்திற்குச் செல்லும் சாலை முற்றுகையிடப்பட்டது. மேலும் வடக்கே, நள்ளிரவுக்குப் பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, நான்கு இந்திய ஏவுகணைகள் முரிட்கேயில் உள்ள ஒரு பரந்த வளாகத்தை ஆறு நிமிடங்களுக்குள் தாக்கியதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் ஒரு மசூதியையும் அருகிலுள்ள நிர்வாகக் கட்டிடத்தையும் இடித்து, மூன்று பேரை இடிபாடுகளுக்குள் புதைத்தது. https://athavannews.com/2025/1431218 ################### ################## ################### 😂 🤣
  28. இந்தியன்… வாயாலை வடை சுடத்தான் லாயக்கு. இப்படி நடக்கும் என்று, கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருந்த மானமும் கப்பல் ஏறி விட்டது. 😂
  29. நேற்றிரவு மட்டும் மொத்தம் 8 வண்டுகளை (பல வகை) பாக்கிகள் வீழ்த்தியுள்ளார்கள்: படங்கள் வெளியாகியுள்ளன : ஒரே இரவில்: 5 தாரை வானூர்திகள் 8 வண்டுகள் ... அம்மாடியோவ் ... இந்தியருக்கு மொங்கிற்றாங்கள் 🤣
  30. ஓடியாங்கோ ஓடியாங்கோ இரண்டாவது ரபேல் விழுந்ததற்கான ஆதாரத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சிறிநகருக்கும் பஞ்சாப்பிற்குமான தொலைவு ~500 கிமீ!!!
  31. இந்தியா இஸ்ரேலும் அல்ல. பாகிஸ்தான் லெபனானும் அல்ல. விரைவில் நிலமை அமைதி அடையும் என ஊகிக்கின்றேன்.
  32. நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??
  33. முச பிடிக்கிற நாய் தனது தொகுதியில் எப்படி தோற்றார் என்ற கேள்விக்கு பதில் என்ன? திரும்பவும் அரசியலுக்குள் வர இன்னொருவரின் தலை உறுள வேண்டும் என்பது எத்ததைய வெ ட்க கேடாக உங்களுக்கு தெரிக்கிறது? தற்போதைய நிலையில் கார்ணி தான் சரியான தேர்வு. பொருளாராதாரத்துக்கு பின் எதுவும். நீங்களும் மனைவியும் பியர் பொலிவியர்ருக்கு வாக்களித்ததால் மொத்த கனடாவும் அவர்களுக்கு வாக்களித்து வெல்ல வேண்டும் என்பது இ;ல்லை தானே. மக்கள் உங்களை விட கெட்டிக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு.
  34. தரமான செய்தி... அதிலையும் அந்த 3 ejection தான் அதிசிறப்பு செய்தி 🤣🤣
  35. நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும் எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை ( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂 சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣 இப்படிக்கு உங்கள் தம்பி இயங்காக் குமாரன் 😜
  36. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 57வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுனில் நாரைன், அங்கியா ரஹானே, மனிஷ் பாண்டே ஆகியோரின் 25 க்கு மேற்பட்ட ஓட்டங்களாலும் மற்றும் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்த அண்ட்ரே ரஸல்ஸினாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. நூர் அஹமெட் 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்திருந்தாலும், உர்வில் பட்டேலினதும், டெவால்ட் ப்ரெவிஸினதும் புயல்வேகத்தில் முறையே எடுத்த 31 ஓட்டங்களுடனும், 52 ஓட்டங்களுடனும், பின்னர் நிதானமாக விளையாடி 45 ஓட்டங்கள் எடுத்த ஷிவம் டுபேயின் ஆட்டத்தாலும் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அரசாமல் நிற்கின்றார்.
  37. அந்த சந்ததியின் வலிகளை அப்படியே படம்பிடித்து காட்டி உள்ளீர்கள். மோகன் கதை சோகத்திலும் இழையோடிய சிரிப்பு.
  38. வணக்கம், அண்மைக் காலமாக செய்திகளில் (ஊர்புதினம், தமிழக, இந்திய மற்றும் உலகச் செய்திகளில்) சகட்டு மேனிக்கு பலவகையான மீம்ஸ்கள் ஒட்டப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவற்றில் பல செய்திளின் தரத்தை, அதன் நம்பகத்தன்மைகளை பாதிக்கும் வண்ணம் அமைந்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இன்னும் சில, அரசியல் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாக அமைந்துள்ளதையும் உணர முடிகின்றது. இனி வரும் காலங்களில் செய்திகளில் இவ்வாறான மீம்ஸ் கள் ஒட்டப்படுவதை கூடிய வரைக்கும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரம் மீம்ஸ்களை விட தரமான செய்தித்தளங்களில் இருந்து கார்ட்டூன்கள் / கருத்துப்படங்கள் பகிரப்படுவதை வரவேற்கின்றோம். நன்றி
  39. எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்
  40. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  41. பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரின் கொட்லி, முசபரபாத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் தாக்குதலாம். டிஸ்கி இரெண்டு கிழமையாக ஆ…ஊ…என சீன் போட்ட பிராந்திய வாலரசு….பாகிஸ்தானில் மூன்று குடிசைகை கொழுத்தி விட்டு ஏதோ பெரிய வெற்றி போல் பில்டப் கொடுக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.