Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19112
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3049
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/13/25 in all areas

  1. பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில் பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது. தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. கட்டுநாயக்கா அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார். அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார். நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர். https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS தொடரும்............
  2. காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை. எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல. ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம். விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.
  3. Web series போன்ற ஒன்றில் தொடராக எடுக்கப்பட வேண்டியது பால்ராஜ் எனும் காவிய நாயகனின் போராட்ட வாழ்க்கை. சொல்வதற்கும், வியப்பதற்கும், உருகுவதற்கும், போற்றுவதற்கும் என சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றது அவர் வாழ்வில்.
  4. https://www.youtube.com/watch?v=wEJTr_oj420 எப்படியெல்லாம் உருட்டுகிறார்கள் என்று பாருங்கள்!
  5. கிந்தியா போன்ற மனித நேயம் இல்லாத ஒரு நாட்டிற்கு அருகில் உலக பலம் மிக்க சீனா இருப்பதும் நல்ல விடயம் தான்.
  6. akhand bharat என்பதே ஆர் எஸ் எஸ் இன் கொள்கை அதன் முதற்கட்டம் காஸ்மீருக்கான சிறப்புரிமை நீக்கம், இது பற்றிய ஒரு தெளிவான கருத்தினை கோசான் கூறியுள்ளார். https://en.wikipedia.org/wiki/Akhand_Bharat யாழில் வாணிபம் பகுதியில் இதெற்கென கோசான் ஒரு திரி தொடங்கியிருந்தார்.
  7. இன்னும் பீகாரில் திருமணமான பெண்கள் இரவில் வீட்டில் நைட்டி அணிகின்றனர். தமிழ் நாட்டில் (இங்கும் தான்) நைட்டியை கை கழுவி கன காலம். இதுவும் பிறப்பு விகிதம் குறைய ஒரு முக்கிய காரணம் என சுவாமி நிழலியானந்தா சொல்கின்றார் 😃.
  8. 18 அல்லது 21 வயதுக்குட்பட்டவர் எனில், சுயமாக சிந்திக்க தெரியாத வயது என பாவம் பார்க்கலாம். ஆனால் 27 வயதில் அதுவும் ஒரு குழந்தைக்கு தந்தையுமாகிய பின்னும், ஹெரோயின் போன்ற மிக மோசமான போதைப்பொருளின் விளைவு பற்றிய அக்கறை இன்றி, பொறுப்பும் இன்றி உட்கொண்டு இருக்கின்றார். இப்படியானவர்கள் இருந்து என்ன பிரயோசனம்? படுகுழி எனத் தெரிந்தும் அதற்குள் போய் விழ விரும்புகின்றவர்களை ஒன்றும் செய்ய ஏலாது.
  9. பிகு பிரிட்டனில் friends of Israel என எம்பிகள் கூட்டு, கட்சி தாண்டி உள்ளது. அதேபோல் ஒன்றை கனடாவில் ஸ்தாபிக்க முயலலாம்.
  10. கோத்தபாயா அரசு பொருளாதார சிக்கலால் வீழ்ந்தபோது, பெருங்குழப்பம் இலங்கையில் நடந்து கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்று அங்கு தமிழ்த் தலைவர்களாக இருந்தவர்களைச் சந்தித்தார். ஏன் சந்தித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகத் தமிழர்கள் பாவிக்கின்றார்களா என்று கூடப் பார்க்க அவர் முயற்சி செய்திருக்கலாம். ஆனால் தகுதியற்ற தலைமைகள் காரணமாக அதை நோக்கி நாம் நகரமுடியவில்லை. உலக நாடுகளுக்கு ஒரு தேவை இருக்கின்றது. எங்களுக்கும் ஒரு தேவை இருக்கின்றது. இதைப் புரிந்து நகர்வதே சிறப்பு இன்று பற்றிக் பிரவுண் மாநகர முதல்வராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் ஒன்ராரியோவுக்கான முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர். சில சதிகள் காரணமாக அது கைக்கூடாமல் போய்விட்டிருந்தது . அவர் தமிழ் மக்களுக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்று சொல்கின்ற சிங்களவர்களுக்கு சொன்ன காட்டமான பதில். அவ்வளவே
  11. T20 போட்டிகளை முதலில் உருவாக்கினது மறைந்த முன்னால் நியுசிலாந்து தலைவர் மார்டின் குரோ. அவர்தான் இங்கிலாந்து வாரியத்துடன் சேர்ந்து விளையாட்டு முறைமையை உருவாக்கினார். முதலில் இது கேளிக்கையாட்டம் என்ற வகையில்தான் ஆடப்பட்டது. முதலாவது சர்வதேசப் போட்டி அவஸ்திரேலியாவுக்கும் நியுசிலாந்திற்கும் இடையே நடைபெற்றது. வீரர்கள் எல்லாம் 80 ஆண்டு உடைகளுடன் ஒரு முசுப்பாத்தியான போட்டியாகத்தான் ஆடினார்கள். நியுசிலாந்து வீரர்கள் இப்படித்தான் வந்தார்கள். தலையில விக் வைத்து... இந்தியாவிற்கு இதில் பெரிதாக ஆர்வமில்லை. பெருந்தலைகள் எல்லாம் பெரிதாக ஆடவிரும்பவில்லை. முதலாவது உலகக் கிண்ணத்துக்கு, 2007ல், பெருந்தலைகள் ஒருவரும் போகவில்லை. தோனி தலைமையில் இளவீரர்களைக் கொண்ட அணியே சென்றது (ரோகித் எல்லாம் அப்போ வளர்ந்துவரும் இளம் வீரர்). இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றதிலிருந்து T20யின் எழுச்சி ஆரம்பித்தது. IPL பிறந்தது. மிச்சமெல்லாம்தான் இப்போ நீங்கள் பார்ப்பது.
  12. எதை சொன்னாலும் அவர்கள் ஒரு அரசு. அதற்கான கெளரவம் எங்கும் இருக்கிறது. பாகிஸ்தான் கூட இந்தியா மீது அப்படியான மரியாதை வைத்து இருக்கிறது. அப்படியே அதன் தலைமைகளுக்கும் கெளரவம் எங்கும் இருக்கிறது. இவை இரண்டும் அடிபடும், ஒன்றுக்கு ஒன்று சம நிலையில் அரசுக்களாக. (அனால் எமை அவர்கள் அரசாக, ஏன் மக்களாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை.) அதை மறந்து விடாதீர்கள்.
  13. இதை நாங்கள் நம்பணும்!!! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்குகினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன். 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார். நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார். மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார். 'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள். 9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார். 'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார். பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார். 'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம். இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது. சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஜெய்ஹிந்த்
  14. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார். இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார். வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 குற்றவாளிகள் யார்? சபரி ராஜன் திருநாவுக்கரசு சதீஷ் வசந்தகுமார் மணிவண்ணன் ஹெரன்பால் பாபு அருளானந்தம் அருண்குமார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo
  15. இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மீதான தாக்குதல் நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள். ஆனால், இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றது என தெரிவித்த பிரம்டன் முதல்வர், உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் அவர்கள் முயன்றனர். இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Tamilwinதமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்ட...இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Pa...
  16. உறவே… இந்தியாவுக்கு எதிராக மகிந்த, கோட்டாவை கூட ஆதரிக்கும் அளவுக்கு இருக்கிறது தற்போது ஈழத்தமிழர் மத்தியில் இந்திய வெறுப்பு உறவே.
  17. நாளாக நாளாக இந்தக் கேள்வி தான் பிரதானமாக ஆகின்றது. எங்கள் நாட்டில் நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போலவே இவர்கள் சொல்லும் கதைகள் எதுவும் பொருத்தமாக இல்லை. இந்த தாக்குதல்களைச் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் உண்மையிலேயே இந்திய அரசுக்கு தெரியாது என்றால், இந்தியாவின் உளவுத்துறையை முதலில் உடனடியாக சீரமைக்க வேண்டும். ரஃபேல் விமான விடயத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
  18. கிட்டதட்ட குணா கமல் போல… அதை சொல்ல நினைக்கையில்… வார்த்தை முட்டுது….. சதாம் உசேனின் பேச்சாளர்…கெமிக்கல் அலி, பின்னாளில் கொமிக்கல் அலி என மாறி, அமெரிக்க படைகளை நாம் வெளுக்கிறோம்….என இருபது சொச்ச வருடத்துக்கு முன் செய்த கோமாளிதனத்துக்கு பிறகு …இப்போதான் ஒரு இராணுவ பேச்சாளர் இப்படி கோமாளித்தனம் பண்ணுவதை இந்த உலகம் காண்கிறது. உலகமே இந்தியாவை பார்த்து கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறது. இந்தியாவை எதிர்ப்பது = பாகிஸ்தானை ஆதரிப்பது என்பது எளியதும், தவறானதுமான சமன்பாடு. பாகிஸ்தானி தலிபான், பலூச்சி போராளிகள் என அவர்களும் இதை எதிர்கொள்கிறார்கள். கஸ்மீர் போராளி குழுக்கள், சீக்கிய போராளி குழுக்கள் போன்றவற்றை பாகிஸ்தான் ஆதரிப்பதை வைத்து இந்தியா பலருக்கு இப்படி ஒரு மூளைசலவையை செய்துள்ளது.
  19. தளபதி பால்ராஜ் அவர்கள் தனது ஆரம்ப விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது . வீர வணக்கங்கள்
  20. இந்தியாவில் டிக்டாக் கிடையாதா................ எனக்கு இது தெரியாது, பையன் சார். அதற்கு ஈடாக அவர்கள் வேறு ஏதாவது வைத்திருப்பார்கள் போல. ரீல்ஸ் என்றும் ஒன்று இருக்கின்றது தானே............. நான் இதுவரை ஒரு டிக்டாக் வீடியோ தன்னும் என் வாழ்நாளில் பார்க்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். யூடியூப்பில் 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களின் காமடிக் காட்சிகளையும், ராஜா சாரின் பாடல்களையும் இடைக்கிடை இரவுகளில் பார்ப்பேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை. பிரான்சின் ரஃபேல் போர் விமானத்தை விட நான் பழசாகவே இருக்கின்றேன் போல........... அப்படியே இருக்கட்டும். மேலும் இந்த வகையான ஊடகங்கள் மீது எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது. தெறித்துப் பறக்கும் பரபரப்பான தலைப்புகளை பார்த்தாலே சிரிப்பு தான் வருகின்றது. இதைச் செய்பவர்கள் ஏதோ தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு, வாழ்க்கையை கொண்டு செல்ல இதை ஒரு தொழிலாக செய்கின்றார்கள் போல. சில மாதங்களின் முன் ஒரு கணவனும், மனைவியும் தங்களின் யூடியூப் தளத்திற்கு போதிய ஆட்கள் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தியை பார்த்து மிகவும் கவலைப்பட்டேன். மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் மிகமுக்கிய வேறுபாடுகளில் ஒன்று வாசிக்கும், அதை கிரகிக்கும் இயல்பு. தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்பொழுது இந்தக் காணொளி ஊடகங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்கி விடும் போல.
  21. இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........ அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்..... பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்
  22. 🤣.................. போர் விமான நிறுவனத்தையே பங்குச்சந்தை சுட்டு விழுத்தி விட்டுவிடும் போல........... உலகில் இந்தப் பங்குச்சந்தை மட்டும் இல்லாவிட்டால், எங்களின் தலை ட்ரம்ப் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்.............🤣.
  23. இருக்க‌லாம் இப்ப‌ வ‌ல்ல‌ர‌சு போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் , அமெரிக்க‌ன் ஓடி வ‌ந்து போரை நிப்பாட்டும் போது ஏதோ உள் குத்து இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..................................
  24. வைக்கோவின் அர‌சிய‌ல் மீது என‌க்கு முர‌ன் இருக்கு ஆனால் அவ‌ர் பால்ராஜ் அண்ணா ப‌ற்றி சொன்ன‌து உண்மையில் வேத‌னையாய் இருந்த‌து தான் ஈழ‌த்துக்கு 1989க‌ளில் வ‌ந்த‌ போது த‌ன‌து பாதுகாவ‌ல‌ர் பால்ராஜ் அண்ணா என்று சொல்லி இருந்தார்................த‌ன்னை ப‌த்திர‌மாய் த‌மிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் போது இந்திய‌ இராணுவ‌ம் ஒரே செல் தாக்குத‌லாம் , ஒரு க‌ட்ட‌த்தில் த‌ன்னை கீழ‌ ப‌டுக்க‌ விட்டு பால்ராஜ் அண்ணா த‌ன‌க்கு மேல‌ ப‌டுத்தவ‌ராம் த‌ன‌க்கு காய‌ங்க‌ள் ப‌ட்டு விட‌க் கூடாது என்று.............செல் அடி ஓய்ந்த‌ பிற‌க்கு இர‌ண்டு பேரும் பாதுகாப்பான‌ இட‌த்தில் இருந்து உடுப்பு மாத்தும் போது , பால்ராஜ் அண்ணாவின் உட‌ம்பில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் காய‌ங்க‌ளாம்......................எல்லாம் எதிரியின் குண்டுக‌ள் ப‌ட்ட‌ இட‌மாம்.............. ஆனையிற‌வு நாய‌க‌ன் பால்ராஜ் அண்ணா.................எதிரின்ட‌ கையால் சாகாம‌ ப‌டுத்த‌ ப‌டுக்கையில் உயிர் பிரிந்த‌து...............மாலை ம‌ரியாதையோட‌ உட‌லை அட‌க்க‌ம் செய்த‌து ம‌ன‌துக்கு ஆறுத‌ல் ஆன‌ந்த‌ புர‌த்தில் வீர‌ச்சாவு அடைந்த‌ த‌ள‌ப‌திக‌ளின் உட‌ல்க‌ளை எடுக்க‌ கூட‌ முடிய‌ வில்லை அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் பால்ராஜ் அண்ணா தான் வ‌ழி காட்டியா இருந்த‌வ‌ர்................. வார‌ கிழ‌மையோட‌ 17வ‌து ஆண்டு எம்மை விட்டு பிரிந்து................ வீர‌ வ‌ண‌க்க‌ம்🙏🙏🙏........................
  25. முன்னர் இருந்த நீதித்துறையை விடவும் அதிகம் பொறுப்புகளும், பட்ஜெட்டுகளும் கூடிய அமைச்சு. வாழ்த்துக்கள் ஹரி !!
  26. எந்த‌ போட்டி என்றாலும் 15வீர‌ர்க‌ளை தெரிவு செய்ய‌னும் இதில் வெறும் 11வீர‌ர்க‌ள் ம‌ட்டுமே , இதில் இருப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் நீக்க‌ப் ப‌ட‌லாம் இன்னுன் 4வீர‌ர்க‌ள் இணைக்க‌ப் ப‌ட‌னும்.........................
  27. நீங்கள் என்ன பதில் வைத்திருக்கீர்கள் என்டு ஊகிக்க முடியுது. அவர்கள் தலைவர் ஒடும்பெ, போட்டிகளை விட்டுக் கொடுக்கும் ஊழளில் சிக்கிய பிறகு, அங்கு எல்லாமே மாறிவிட்டது. அவர்களிடம் பணமே இல்லை. ICC கொடுத்த பணத்தையும் அரசியல்வாதிகள் எடுத்தால், எப்படி சம்பளம் கொடுப்பது. எப்படி வீரர்களை உருவாக்குவது. அப்போது விளையாடிய நிறையப் பேர், போட்டியில் உள்ள ஆர்வத்தினால்தான் அணியிலேயே இருந்தார்கள். விளையாடிப் போட்டு, சந்தையில தக்காளி விற்கப் போய்விடுவார்கள். சுழல் பந்து வீச்சாளர் ஒபுயா அப்படித்தான் இருந்தார். மூன்றாம் உலக நாடுகளில் உள்ள எல்லா பிரச்சினைகளும் அங்கும் உண்டு. அந்த நாட்டில் எல்லா அணி விளையாட்டுகளிலும் ஊழல். உதைபந்து, கரப்பந்து, கிரிக்கட்..... இப்பிடியே அடுக்கிக் கொண்டு போகலாம்.
  28. தம்பி நீங்கள் வர வர யூரியூப் ஆய்வாளராகவே மாறிக்கொண்டு வாறீங்கள்.🤣 சுத்துமாத்து எஸ்கே கிருஸ்ணாவை வெளியில விட்டாச்சாம். இனியென்ன காசு அனுப்ப வேண்டியதுதானே? 😁
  29. காலதாமதம் என்றாலும் இப்போதாவது தீர்ப்பு கிடைத்துள்ளது. வரவேற்கத்தது.
  30. இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் விடியும், மூன்று வேளை உணவு கிடைக்கும், பாலியல் உறவுக்கு சக ஆண் கைதிகள் கிடைப்பர், நித்திரை கொள்ள வசதி கிடைக்கும், இடைக்கிடை சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து போதைப்பொருளும் கிடைக்கும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தம் வாழ் நாள்முழுதும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவர தினமும் போராட வேண்டி இருக்கும். ஆகக் குறைந்தது இந்த குற்றவாளிகளுக்கு ஆண்மையகற்றமாவது செய்ய வேண்டும். ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும்.
  31. அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.
  32. அது நான் அல்ல chatgpt யின் பதில்கள் தமிழில் கேள்வி கேட்டால் கூட தமிழில் பதில்கள் வருகின்றன. நேற்று Cupboard அடிக்க வந்த கிந்தி மட்டுமே தெரிந்த இருவர் வந்தனர் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வது ஒன்றும் புரியவில்லை chatgpt மூலம் நாம் தமிழில் சொல்வதை ஹிந்தியில் மொழி மாற்றி மொபைல் சொல்லியவுடன் புரிந்து கொண்டார்கள் உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது இந்த கேட்டுக்குள் சிங்களம் படி கிந்தி படி என்று ஒரு கூட்டம் அலையுது .
  33. என்ன நடக்கும்…. எக்ஸ்ராவா மூணு ரபேலையும் சேர்த்தே கொடுப்போம்…ஆங்🤣 ஏற்கனவே இரெண்டு முறைக்கு அப்பால் ஒருவர் பிரதமராக கூடாது என ஆர் எஸ் எஸ் மோடிக்கு சொல்லி விட்டதாம். அமித்தை அடுத்த பிரதமர் என மோடி முன் தள்ள அதையும் ஆர் எஸ் எஸ் ரசிக்கவில்லையாம். தளபதி பட வில்லன் போல இருக்கும் யோகி ஆதிநாத்தை விரைவில் பட்டாபிஷேகத்துக்கு தயாராக்கிறரதாம் கான்பூர்.
  34. துருக்கியால் அர்மேனியா மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை அசர்பைஜான் மீது என மாறி எழுதிவிட்டேன். உங்கள் விளக்கமான தரவுகளுக்கு நன்றி பெருமாள்.
  35. ஆகா மனைவிக்கு இதை படமெடுத்து அனுப்பப் போகிறேன்.
  36. ஆகா நல்ல ரேஸ்ற் கிடைத்திருக்கு. மதியநேரத்தை ஒரு மாதத்திற்கென்றாலும் ஒரு மணிநேரம் கூட்டித் தர விண்ணப்பிக்க வேண்டும். மாணவிகளையே பிய்த்து உதறித் தள்ளுகிறார்களே ஐயாவுக்கு தெரியாதோ? சிலவேளை நம்ம நாட்டான் எதுவும் செய்யலாம். அடுத்த நாட்டான் தொடக் கூடாது என்கிறாரோ?
  37. 'பருத்தி மூட்டை குடோனுக்குள்ளேயே இருந்திருக்கலாம்.................' என்ற தமிழ்ச்சினிமா காமடி இது..................................🫣. தொழிற்சாலைகளை ஆரம்பித்து, உற்பத்திகளை உற்பத்தி செய்யப் போகின்றார்கள் என்று நினைத்தவர்களுக்கு, மீண்டும் கிடைக்கப் போவது 'Made in China' தான்................ இன்றைய உலகில் வேற தெரிவே இல்லை. உலகத்திற்கு அமெரிக்கா விமானம் செய்யும், சீனா ஊசி செய்யும், இந்தியா மனிதர்களை உற்பத்தி செய்யும்.....................
  38. இவை தென்சீன கடல், தாய்வானில் தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு சொன்னது போல சீனாவின் அணுகுமுறை 2 வழிகளில் - ஒன்று மேற்கிட்ம் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஒத்தது, மற்றது எதிரானது , 2 ஐயும் விருத்தி செய்கிறது. அத்துடன் , அது எண்ணிக்கை / தரம் என்ற சமன்பாட்டையும் முழு துறைகளுக்கும் பிரயோகிக்கறது. (இதை பல அமெரிக்கா தளபதிகளே உத்தியோக பற்றற்ற முறையில் ஏற்றுக்கொள்கிறார்கள்) அனால், எல்லாவற்றையும் விட, மேற்கு முன்பு தொழில்நுட்பத்தை எதிராக பாவித்த தரப்புகள் சமச்சீர் இல்லை - ஒன்று தொழில் நுட்பத்தில் குன்றியவை, அதை அடைவதில் விருப்பம் இருந்தாலும், பண, வள வசதி இல்லாதவை. இப்பொது தான் மேற்கு அரசுக்கள் - அவற்றை தொழில்நுட்பத்தில் விஞ்ச வேண்டும் என்ற அவாவும் , அதுக்கு வேண்டிய மதி, மன, பணம், மற்றும் வளங்கள் கொண்ட அல்லது பெறக்கூடிய பெரிய மக்கள் கூட்டத்தை கொண்ட அரசை வரலாற்றில் காண்கிறது. அதன் இயற்கையான ஆரம்ப தாக்கங்களே இவை. (முன் சொல்லிய தென்சனா கடலில் நடந்தது - அமெரிக்கா அணி முடக்கப்பட்டது , Nancy Pelosi தைவான் வந்ததை சீனா தடுக்க முடியாமல் போனதன் விளைவாக, சீன தொழில்நுட்பம சார்ந்த தடுக்கும் முறைகளை ஆராய்ந்ததில் வந்த ஒரு வவிளைவு) .
  39. chatgpt பதில்கள் . ✅ 1. அர்மேனிய இனப்படுகொலை (Armenian Genocide) – 1915-1923 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: பெரும்பாலான நாடுகள் 2000களுக்குப் பிறகு மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஏற்றன. இனப்படுகொலை செய்தது: ஒட்டோமன் எமிரேட் (துருக்கி) மரணங்கள்: 1.2–1.5 மில்லியன் அர்மேனியர்கள் நடப்பு நிலை: துருக்கி இன்னும் இது இனப்படுகொலை என்பதை மறுக்கிறது. ✅ 2. ஹொலோடோமோர் (Holodomor) – 1932-1933 பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2006–2020களில் மேற்கு நாடுகள் ஏற்றன. இனப்படுகொலை செய்தது: சோவியத் ஒன்றியம் (உக்ரைனியர்களுக்கு எதிராக) மரணங்கள்: 3–7 மில்லியன் நடப்பு நிலை: ரஷ்யா மறுக்கிறது; உக்ரைன் அதை இனப்படுகொலையாக அறிவித்துள்ளது. ✅ 3. ஹெரெரோ மற்றும் நாமா இனப்படுகொலை (1904–1908, நமீபியா) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஜெர்மனி 2021ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இனப்படுகொலை செய்தது: கெய்சர் ஜெர்மன் எமையர் (German Empire) மரணங்கள்: ~80,000 ஹெரெரோ மற்றும் நாமா மக்கள் நடப்பு நிலை: இப்போதும் நஷ்ட ஈடு குறித்து விவாதம் நடக்கிறது. ✅ 4. ரூவாண்டா இனப்படுகொலை (1994) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: ஒரே ஆண்டிலேயே பலர் ஏற்றனர், ஆனால் மேற்கு நாடுகள் தாமதமாகவே பதிலளித்தன. இனப்படுகொலை செய்தது: ஹூதூ எக்ஸ்ட்ரீமிஸ்ட் அரசு மரணங்கள்: ~800,000 துட்சி மக்கள் நடப்பு நிலை: ஐ.நா. உட்பட உலகம் இனப்படுகொலையாக ஏற்றது. ✅ 5. சுதான் – தர்ஃபூர் இனப்படுகொலை (2003–தொடர்பது) பொதுவாக ஏற்கப்பட்ட ஆண்டு: 2000களில், ஐ.நா. மற்றும் பல மனித உரிமை அமைப்புகள் இனப்படுகொலை செய்தது: சுதான் அரசு, ஜஞ்ஜவீட் படைகள் மரணங்கள்: ~300,000+ நடப்பு நிலை: சில நாடுகள் மட்டும் இனப்படுகொலையாக அறிவித்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் காலத்திற்குப் பின் மட்டுமே பொதுவாக ஏற்கப்பட்டது. இது போல ஏராளமான "ஏற்றுக்கொள்ளப்படாத" அல்லது விவாதிக்கப்படும் சம்பவங்களும் உள்ளன (உதா: தமிழீழ யுத்தம், சீனாவின் ஜின்ஜியாங் நிலைமைகள், ரொஹிங்க்யா மேன்முறைகள்). இங்கு யாரும் துள்ளி குதிக்கவும் இல்லை அழவும் இல்லை தமிழர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் அழுது தொலைப்பது சிலரின் வாடிக்கை .
  40. கனடாவில் போன வருடம் இலங்கையர் துள்ளிக்குதித்து போது, கனேடிய அமைச்சர் ஒருவர் கூறியது, எங்களுடைய நாட்டின் சட்டத்தில் தலையிட முடியாது, வேண்டுமென்றால் கொழும்பில் போய் செய்யுங்கள் என்று கூறியவுடன் அவர்களின் எதிப்புக்குரல் அடங்கிவிட்டது. வழமையாக கனேடிய அமைச்சரை வரவழைத்து தமது கண்டனங்களை தெரிவிப்பவர்கள் அதையும் செய்ய மறந்து விட்டனர். தமது நாட்டு சட்ட திட்டங்களை எதிர்ப்போரை அவர்கள் நாடுகடத்தலாம், அந்த உரிமை, எங்கள் நாட்டின் இறையாண்மையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் இலங்கைக்கு கிடையாது.
  41. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஜார்விஸின் முயற்சிகள் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினத்தை முறையாகக் கடைப்பிடிக்க வழிவகுத்தன. இது தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த நாள் மனமார்ந்த நன்றியுணர்வின் அடையாளமாக கருதப்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பூக்கள், கையால் செய்யப்பட்ட அட்டைகள் மற்றும் பரிசுகளை வழங்குகிறார்கள். அதே நேரத்தில் குடும்பங்கள் உணவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் நீடித்த நினைவுகளை உருவாக்கவும் ஒன்றுகூடுகின்றன. இந்தியாவில் அன்னையர் தினம் ஒப்பீட்டளவில் சமீபத்திய கலாச்சாரமாக இருந்தாலும், அது தலைமுறைகளாக அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த கொண்டாட்டம் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மட்டுமல்லாமல், பாட்டி, அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் வளர்ப்புப் பாத்திரத்தை வகிக்கும் எந்தவொரு பெண்ணையும் அங்கீகரிக்கிறது. https://tamil.newsbytesapp.com/news/lifestyle/mother-s-day-2025-on-may-11-history-significance-and-traditions/story
  42. தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும், அங்கீகாரமும் கிடைக்ககூடாதென்பதுதான் நானாக்களின் டிசைன்!
  43. நம்ம தலைவரையே போட்டுவிட்டோம் என்று 80 களிலேயே சொன்னவர்கள் தானே.
  44. பாகிஸ்தானின் விமானப்படைத் தளபதி அவுரங்கசீப் (என்னே பெயர் பொருத்தம்!) கிட்டதட்ட ஒரு இண்டெர்நெட் லெஜண்ட் ஆகி விட்டார். இன்று அவரிடம் ரபேல் பற்றி கேட்டதும்… அவர் சொன்ன பதில்…. எம்மிடம் இருப்பதற்கு நிகரான, மிக வினை திறனான போர் விமானம் ரபேல்… சரியாக பாவிக்கத்தெரிந்தால் 🤣. இந்த போரில் வெற்றி பாக்கிஸ்தானிடம் என்பதே வெளிப்படையாக தெரியும் உண்மை. ஜெய்சங்கரும், அஜித் டோவலும் வாசிங்டனை தொடர்பு கொண்டு, இப்படியே யுத்தம் மேலே மேலே படி ஏறிக்கொண்டே போனால்…அணு யுத்தம் வர வாய்ப்புண்டு என சொன்ன பின்பே டிரம் தலையிட்டதாக சொல்கிறார்கள். இது உண்மையாயின் இந்தியாதான் யுத்த நிறுத்தத்தை கோரி உள்ளது. தானே தொடங்கி, தானே நிறுத்த கோரும் அவமானகரமான நிலை. பல காலமாக இந்தியா காஸ்மீர் விடயத்தில் யாரையும் தலையிட விடுவதில்லை. ஆனால் மோடி விட்டுள்ளார். அது மட்டும் அல்ல மோடி சொல்ல முன்பே போர் நிறுத்தம் என அமெரிக்கா சொல்லி விட்டது. இந்தியாவுக்கு சரியான இராணுவ, இராஜதந்திர மூக்குடைவை, பின்னடைவை தந்துள்ளது இந்த ஆப்பரேசன் சிந்தூர். உலக அரங்கில் கூட ஒரு நாடும் துணைக்கு வரவில்லை. இதற்கு பெரும் பங்கு - ஆர் எஸ் எஸ் சித்தாந்த வழியில் மோடியின் பிஜேபி அரசியல் தலைமை, ஜெய்சங்கர் எடுத்த வெளிநாட்டு கொள்கை முடிவுகள்தான். 2019 இல் அப்போதே ராகுல் காந்தி எதிர்வுகூறியது இப்போ சரியாகி உள்ளது. காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் அரசியல் கனவு. அதை பிஜேபி நடத்தி காட்டியது. இது சீனாவிற்கு ஏற்புடையது அல்ல (காஸ்மீரை சீனாவும் உரிமை கோருகிறது). அதே போல் மேற்குடன், இஸ்ரேலுடன் முன்பை விட அதி நெருக்கம் காட்டி கிட்டதட்ட அணி சேரா கொள்கையை கையேவிட்டார் மோடி. கஸ்மீரில் தன்னிச்சையா நடந்தது, ரபேல், இஸ்ரேல் டிரோன் உட்பட மேற்கோடு இராணுவ அரசியல் ரீதியில் நெருங்கியது - இந்த அரசியல் நகர்வுகளை மோடி அரசு எடுத்தமை… முன்பை விட பாகிஸ்தான்+சீன உறவை பலப்படுத்தி விட்டது. கார்கில் யுத்த நேரம் இந்தளவுக்கு சீனா பாக்கிஸ்தானுக்காக இறங்கவில்லை. இப்போ இறங்க மோடி அரசின் தப்பான நகர்வுகளே காரணம். மோடி அரசு காஸ்மீருக்கு உள்ள அரசியல் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நேரம் - இது எப்படி பட்ச விளைவை தரும் என ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றில் ஆற்றிய உரை. பப்பு என நாமெல்லாம் கிண்டல் செய்தாலும்…இப்படிதான் இப்போ நடந்துள்ளது.
  45. இந்த சனம் மட்டுமல்ல பருத்தித்துறையில உள்ள கனபேர் இப்ப NPP பக்கம் மாறி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் கணிசமான வாக்குகள் போய்விட்டது. பழைய JVP அனுபவங்களாள் நான் உட்பட அனுரவை விரும்பவில்லை. ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்து இனவாதத்தை கையில் எடுக்காமல் ஐனாதிபதியாவது லேசுப்பட்ட விடயமில்லை. நல்லதே நடக்கும் என நம்புவோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.