Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3049
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    31956
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/16/25 in all areas

  1. கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.
  2. இவர்களைத் தாண்டி முன்னால் போக முடியாது போல இருக்குதே......... வீதியை மறித்துக்கொண்டு இரண்டு வாகனங்கள் போவது போல போய்க் கொண்டிருக்கின்றார்கள்............🤣.
  3. கொட நாடு கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியே எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, (ஆனால்) ரகசியம். அவ்வளவு நல்லவர் அவர். 'குத்தவைச்சு உட்கார்ந்துட்டு இருந்தவளையா நான் கொண்டு போய் வயக்காட்டில் வைத்து கற்பழித்தேன்' என்று வீறாப்பு பேசும் கண்ணியமற்ற ஒரு தலைவரைக் கொண்ட கட்சி இப்படியான தீர்ப்பு தொடர்பாக எப்படி கருத்து வைக்கும்?
  4. வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, Ealing North MP James Murray, ஓல்ட் பெக்ஸ்லி மற்றும் சிட்கப் தொகுதி எம்.பி. லூயி பிரென்ச் மற்றும் ருய்ஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் தொகுதி எம்.பி. டேவிட் சிம்மன்ட்ஸ், ஹேரோ வெஸ்ட் தொகுதி எம்.பி. காரத் தோமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். தமிழரின் அரசியல் உரிமைகள் மேலும் நிகழ்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இயக்குநர் பிரான்சிஸ் ஹேரிசன் , இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கத்தின் இயக்குநர் இவோன் ஸ்கோஃபீல்ட், Freedom from Torture அமைப்பின் Head of Accountability Roslyn Renni, Tamils for Labour அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் சமூகநீதியும், மக்களவுரிமைகளும் தொடர்பான உரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் International Tamil Youth Organisation (TYO International) ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மதுஷா குமரேசன், PEARL அமைப்பின் பேரவையின் வழக்குரைஞராக செயல்படும் சிவானி ரவீந்திரன் ,பிரான்சிலிருந்து ரூத் சாருகா தேவகுமார் ஆகிய இளம் தமிழ் செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர். நிகழ்வின் முக்கியக் கருத்தாக, நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE) துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் TGTE உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் படுகொலையின் நீதி மற்றும் தமிழரின் அரசியல் உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://tamilwin.com/
  5. ஒண்ணுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டு, செய்யிர வேலை என்ன: நந்தனையும் புலவரையும் கலைக்கிறது.
  6. எதற்காக புவியீர்ப்பு விசைக்கெதிராக முயற்சிக்கிறீர்கள், இலகுவாக கீழே போகலாம்தானே?😂 அல்லது இந்த திரிச்ங்கு சொர்க்கத்தினை அனுபவிக்கலாம். டெல்லியே அரையிறுதிக்கு போகுமா என தெரியவில்லை நீங்கள் கொல்கொத்தாவினை பற்றி யோசிக்கிறீர்கள்.🤣
  7. ஆங்கேலேயர்கள் வெளியேறிய பின், காஷ்மீரின் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும், மறு பகுதி பாகிஸ்தானிடனும் இணைக்கப்பட்டது சரியல்ல என்பதே என் பார்வையாக இருக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் இப்படியான ஒரு தீர்வு வெவ்வேறு காரணங்களுக்காக உலகின் வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து தனித்தனியேயான இரு நாடுகளாக ஆக்கிவிடுதல். ஆனால் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வேறு இரு நாடுகளுடன் அவை இணைக்கப்பட்டன. அந்த நாட்டையும், மக்களையும் சுதந்திரமான ஒரு நாடாகவே விட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகவும், ஒரு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை ஆகவும், இன்னொரு சிறிய பகுதியில் பௌத்த மக்கள் பெரும்பான்மை ஆகவும் இருப்பது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் ஒரு நாடாகவும், அதற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களாகவும் தங்கள் நிர்வாகத்தை உருவாக்க ஐநாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் உதவியிருக்கலாம். இன்றைய பாஜக அரசின் பிரச்சாரங்களும், செய்கைகளும் முழு இந்தியாவையுமே ஒரு ஒற்றைப்படைத் தன்மையை நோக்கியே செலுத்துகின்றது. இந்த இந்திய அரசும், அதன் பின் நிற்பவர்களும் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவி அடையாளத்தை போர்த்தவே முனைகின்றார்கள். மிகச் சாதரணமாக திருவள்ளுவருக்கே காவி உடையை அணிவித்து விடுகின்றார்கள் இவர்கள். உலகத் திருமறை என்று ஐயன் எழுதியது பலவும் அப்படியே வீணாகிப் போகும் இவர்களின் செயலால். வரலாற்றில் அது ஒரு இந்து அரசாக இருந்தது, பின்னர் முகலாயர்களே அதை ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய பிரதேசமாக மாற்றினார்கள், இப்போதும் மீண்டும் அதை நாங்கள் வென்றெடுப்போம் என்ற முனைப்பு தவறு என்றும் சொல்கின்றேன். அவர்களின் அரசியலை அந்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அங்கு நடைபெறும் இந்திய ராணுவ அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவர்களின் அடக்குமுறைகளுக்கு நாங்களும் ஒரு வாழும் சாட்சிகள். எவ்வளவு தான் தொழில்நுட்பமும், தொடர்பாடலும் முன்னேறினாலும், இவர்களால் என் ஊரில் நடத்தப்பட்டவையே என் ஊருக்கு வெளியே தெரியாத நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. அங்கிருந்தே இவர்கள் காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை நான் ஊகித்துக் கொள்கின்றேன். 2019ம் ஆண்டில் அந்த மக்கள் மீது முழுத் தடை ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. அது அப்பட்டமான உரிமைகள் மீறலும், அடக்கி ஒடுக்கப்படுவதும் தானே. இலங்கை அரசு எங்களுக்கு செய்தது போன்றதே இதுவும். வெறும் கண்டனங்களை மட்டும் உலகம் எழுப்பும், பாதிக்கப்படும் மக்களுக்கு கைகொடுக்க எவரும் வருவதில்லை. ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.
  8. இல்லை. கடைகளில் கிடைக்கும் புளோரைட் பற்பசையின் புளோரைட்டினால் பல்லுக்கும், உடலுக்கும் ஆபத்து இல்லை. இது ஒரு போலி விஞ்ஞானத் தகவல், அண்மைக் காலமாக விஞ்ஞானத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டவர்களால் பரப்படும் ஒரு விடயம். Fact: புளோரைட் என்ற கனியுப்பு பல்லின் மேற்படையான எனாமலுக்கு அவசியமான ஒன்று. இந்த மேற்படை பலவீனமானால், பற்களிடையே தேங்கும் உணவுத் துணிக்கைகளில் பக்ரீரியா வளர்ந்து அமிலம் சுரக்க, அது இன்னும் பல்லைப் பலவீனமாக்கும் (பல்லுக் கூசுதல் இதன் அறிகுறி). எனவே, குடிக்கும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு புளோரைட் இருக்கும் படி மேற்கு நாடுகளில் நகரங்கள் பார்த்துக் கொள்கின்றன. சில நேரங்களில், நீரில் புளோரைட் சேர்ப்பார்கள். மறு பக்கம், புளோரைட் பற்பசையில் இருப்பது மிகக் குறைந்த வீதமான புளோரைட் அயன். உதாரணமாக, மிகக் கூடிய புளோரைட் % கொண்ட ஒரு பற்பசையில் கூட, ஒரு தடவை பல் விளக்கும் பசையில் 2 மில்லிகிராம் புளோரைட் தான் இருக்கிறது. இந்த அளவு பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு தரும் என ஆதாரங்கள் இல்லை. இந்தப் போலி விஞ்ஞான புளோரைட் வதந்திகளுக்கு பல தோற்றுவாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சில ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் புளோரைட் செறிந்த குடி நீர் பற்றிய தகவல்கள். உதாரணமாக சாம்பியா (Zambia) வில், சில பகுதிகளில் புளோரைட் செறிவு குடிநீரில் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், பல்லும், எலும்பும் புளோரைட் நச்சினால் பாதிக்கப் படுகின்றன அந்த மக்களில். இத்தகைய புளோரைட் நச்சு நிலைமை மேற்கு நாடுகளில் ஏற்பட சாத்தியமில்லை.
  9. வணக்கம் தமிழ்சிறி, அவரது கணக்கில் மாற்றம் எதுவும் இல்லை, எல்லாம் சரியாக உள்ளது. அவர் தனது கடவுச் சொல்லை மறந்திருந்தால் கீழுள்ள இணைப்பில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். https://yarl.com/forum3/lostpassword/ அல்லது தனது ஈமெயிலினை மாற்றியிருந்தால் புதிய ஈமெயிலினை அவரிடம் கேட்டுத் தனிமடலில் எனக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
  10. எதைச் சுத்திகரிக்கிறார்கள் என்பதைத் பொறுத்து இருக்கிறது. இந்த நிலையத்தில் என்ன முறையைப் பாவிக்கிறார்கள் (filtration or osmosis) என்று தெரிந்தால் தெளிவாகச் சொல்லலாம். அனேகமாக இலங்கையில் நீரைச் சுத்திகரிக்கும் போது வடிகட்டிகள் மூலம் பக்ரீரியாக்களை (Coliform) அகற்றுவர், இது நல்லது. பக்ரீரியாக்களும், அமீபாக்களும் குடி நீரில் இருந்தால் நோய்கள் வரும். அதை விட சில கனிமங்கள் (minerals) மிகையாக இருந்தால் உயர் தொழில் நுட்பங்கள் மூலம் அகற்றலாம், இலங்கையில் செய்கிறார்களா என்பது தெரியாது. உதாரணமாக, புளோரைட் (fluoride) மிகையாக இருந்தால் பல் ஆரோக்கியம் கெடும். அகற்றுவது அவசியமாகும். சுத்திகரிப்பில், தீங்கு தரும் என்று நிரூபணமான நச்சுக்களும் அகற்றப் படலாம். பார உலோகங்களான ஈயம், குரோமியம் என்பனவும் அகற்றப் பட வேண்டும். இலங்கையில் மிக முக்கியமான நீர் வழி நச்சாக நைட்ரஜன் உரக்கழிவு இருக்கிறது. எனவே, நைட்ரேற்றுகளை அகற்றுவதும் நீரைச் சுத்திகரிப்பதாகும். எனவே இதுவும் குடி நீரை ஆரோகியமாக்கும்.
  11. காஷ்மீர் காஷ்மீரிகளுகே சொந்தம். இந்துப். பயங்கரவாதம் காஷ்மீரை வல்வளைப்புச் செய்திருக்கின்றது. இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் நடந்தும் பாலியல் வன்முறைகளும் மனிதவுரிமை மீறல்களும் எண்ணிலடங்கா. உடனடியாக பன்னாட்டுச் சமூகம் தலையிட்டு காஷ்மீரை காஷ்மீரிகளிடம் கையளிக்கவேண்டும். காஷ்மீரிகள் பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறிவிட்டு அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் அரேபிய வம்சாவளிப் பயங்கரவாதிகள் போன்றவர்கள் அல்லர். மாறாக தமது மரபுவழித் தாயகத்தினை வல்வளைப்புச் செய்துநிற்கும் இந்துஸ்தான் பயங்கரவாததிடம் இருந்து விதலைகோரி நிற்கும் அந்த நிலத்துக்கே உரித்தான மக்கள். இதே நிலைமைதான் ஈழத்திலும் தமிழர் தாயகத்தினை வல்வளைப்புச் செய்திநிற்கும் பௌத்த சிங்களப் பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலைபெறுவதற்காகவே எமது விதலைப்போராட்டம் தொடங்கப்பட்டது. எனவே எமது முழு ஆதரவும் காஷ்மீரிகளுக்கே தரப்படவேண்டும். கொடிய கீழ்த்தரமான மனிதநேயமற்ற இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும்!
  12. அண்ணை, தமிழரசுக் கட்சியின் ப.பொ.செ அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு தவிசாளர் பதவி அளிக்க முனைவது உண்மை. வலி.மேற்கில் முன்னாள் பா.உ உதயன் உரிமையாளரின் வலது கை இப்போ ப.பொ.செ இன் விசுவாசி, அவருக்கு தான் தவிசாளர் பதவி வரும் என அவரின் நட்பு வட்டம் அலப்பறை கிளப்பிறாங்கள். உதயன் உரிமையாளர் திட்டிக்கொண்டு திரிகிறாராம்.
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... கழுதையாரின் முழிவியலம் வெகு சிறப்பானது . ........ இனி விளையாட்டுகள் நன்றாக நடக்கும் . ........ எல்லோருக்கும் நல்லதே நடக்கும் . ....... ! 😂
  14. Beltஆல அடிக்காதீங்க அண்ணா.. ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு.. ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது. மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்... சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது... ஜெயிலுக்குள்ளே சாகட்டும்... Ranjith Priyan
  15. Published By: VISHNU 16 MAY, 2025 | 03:18 AM இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார். புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ளும் விகிதம் குறைவடைந்து வருகிறது. உண்மையில் இது கவலை தருகின்ற விடயமாகும். பொது அறிவு என்பது அனைத்து வகையிலும் எதிர்காலத்திற்கு பங்காற்றக்கூடியது. அதனை வளர்த்துக்கொளள அக்கறை செலுத்தவேண்டும். உயர் பதவிகளை வகிப்பதற்கான அடிப்படைகூட பொது அறிவுத் தேடல் தான் என்றால் அது மிகையில்லை என்றும் மேலும் தெரிவித்தார். புளியங்கூடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் இன்று இலவச குடிநீர் வழங்கும் திட்டம் திறக்கப்பட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. இன்றைய சூழலுக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் சமூக அக்கறை கொண்ட மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். இதனை பயன்படுத்துபவர்கள் இதன் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ஙில் மண்டபத்தில் நடைபெற்ற தையல் பயிற்சி ஆரிவேக் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கும், வினாடி விடை போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர் உட்பட்ட அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/214848
  16. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT 13 மே 2025, 05:26 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி சற்று முன்பு தீர்ப்பு வழங்கினார். 9 பேர் மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபித்திருப்பதாக நீதிபதி தெரிவித்தார். அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த இந்த பாலியல் வழக்கு காரணமாக, அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிமுக பின்புலம் இருப்பதாக தொடர்ந்து திமுக குற்றம் சாட்டி வந்தது, எனினும் அதை அதிமுக மறுத்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியது என்ன? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன், "கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதை காரணம் காட்டி குறைவான தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் கேட்டுள்ளனர். அரசுத் தரப்பில் கடுமையான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அரிதான வழக்கு. பெண்கள் தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம் கடும் தண்டனை வழங்க வேண்டும்" என தெரிவித்தார். இவ்வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 276 (2)(N) (தொடர்ந்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவது) ஆகிய இரு முக்கியமான பிரிவுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் நண்பகல் 12 மணிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெண்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்தார் சுந்தர மோகன். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 பேரும் இறுதிவரை பிறழ்சாட்சிகளாக மாறவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சுரேந்திரமோகன் தெரிவித்துள்ளார். வழக்கில் அழிக்கப்பட்ட ஆதாரங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். விஞ்ஞானப்பூர்வமாக அடையாளம் காணுதல் உள்ளிட்ட பலவற்றுக்கு வழக்கில் தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் 8 பேரை விசாரித்ததாக கூறினார். பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரி, நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பிய பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வழக்கின் பின்னணி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது சகோதரரிடம் அது பற்றி கூறவே, தங்கையை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த அவரது சகோதரர் அவர்களை விசாரித்திருக்கிறார். அப்போது அந்த இளைஞர்கள் வைத்திருந்த செல்போன்களில் ஏராளமான இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துன்புறுத்தப்படும் காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டவுடன் திருநாவுக்கரசு, சபரிராஜன் என்கிற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடித்து துன்புறுத்தப்படும் காணொளிகள், பொதுமக்கள் மத்தியில் பரவி வந்த நிலையில், இதில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாரிசுகளும் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு,தீர்ப்பையொட்டி பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் வழக்கு கடந்து வந்த பாதை * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்த நாள்: 2019 பிப்ரவரி 12 * முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட நாள்: 2019 பிப்ரவரி 24. அதன் அடிப்படையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். * திருநாவுக்கரசு என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த அவர், ''தனக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பு இல்லை'' என வீடியோ வெளியிட்டார். 2019 மார்ச் 5 அன்று அவர் கைது செய்யப்பட்டார். * திருநாவுக்கரசின் ஐஃபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதுவே இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக, திருப்புமுனையாக அமைந்தது. * வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் மிக முக்கியமான மற்றொரு ஆதார ஆவணமானது. * 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போன்கள், லேப்டாப் போன்றவற்றில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன. * பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக கைதான சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக 2019 மே 24 அன்று முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. * சிபிஐ வசம் வழக்கு வந்தபின்பு, இந்த வழக்கில் அருளானந்தம், ஹெரன்பால் மற்றும் பாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு, அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளானது. * இந்த 3 குற்றவாளிகள் மீதும் 2021 பிப்ரவரி 22 அன்று இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிக்கை, கோவை மகிளா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. * வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபராக அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றப்பத்திரிக்கை, 2021 ஆகஸ்ட் 16 அன்று, கூடுதல் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 48 பேர் மட்டுமே, சிபிஐ அதிகாரிகளால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். * பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவானபோது, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரகாஷ் முதல் விசாரணை அதிகாரியாக இருந்தார். சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட பின்பு, எஸ்பி நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தினார். அதன்பின் சிபிஐ அதிகாரிகள் விஜய் வைஷ்ணவி, ஆய்வாளர் பச்சையம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். * இவ்வழக்கில் எலக்ட்ரானிக் பொருட்களே முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. ஐஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து குற்றம் நடந்த தேதி, நேரம் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன. * வாட்ஸ்ஆப் குழுவை தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. * பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் புகார் கொடுக்க அச்சப்பட்டுள்ளனர். இவர்களை அச்சுறுத்துவதற்காக சில ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். விசாரணையின்போது அவை நீக்கப்பட்டன. * இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, வழக்கு பதியப்பட்ட நாளிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை. * பாதிக்கப்பட்ட 8 பெண்களில் ஏழு பேர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி சாட்சியம் கூறினர். இவர்களிடம் நீதிமன்ற அறையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் * குற்றப்பத்திரிகைகளில் இவர்கள் மீது 76 விதமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 12 ஆவணங்கள் குறித்துத் தரப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்த்து நீதிமன்றம் தானாக 11 ஆவணங்களை எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கு விசாரைணயில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்கள் ஆதார ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. * பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. * முதல் குற்றப்பத்திரிகை துவங்கி இறுதிவரை மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு, அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT * இந்த வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகிறார். இடையில் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டு, உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. * இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 குற்றவாளிகள் யார்? சபரி ராஜன் திருநாவுக்கரசு சதீஷ் வசந்தகுமார் மணிவண்ணன் ஹெரன்பால் பாபு அருளானந்தம் அருண்குமார் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy6482jyjgo
  17. ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் க‌ணிப்ப‌து ஈசி குரு ஜ‌பிஎல் போட்டியில் அதிஷ்ட‌ம் கை கொடுக்க‌னும்.................. பெரிய‌ பெரிய‌ வீர‌ர்க‌ளை தெரியும் ஒவ்வொரு ஜ‌பிஎல்லும் ப‌ல‌ இந்திய‌ன் புது முக‌ங்க‌ள் விளையாடும் போது அவ‌ர்க‌ளின் திற‌மைக‌ளை அவ‌ர்க‌ள் விளையாடும் போது தான் தெரியுது....................14ய‌து சின்ன‌ப் பெடிய‌னின் அடிய‌ பார்த்து இருப்பிங்க‌ள்........................அதுவும் கொக் ப‌ந்தில் விளையாட‌ துணிவும் வேனும்....................2003ம் ஆண்டு முத‌ல் முறை நானும் என‌து ந‌ண்ப‌னும் டென்மார்க்கில் இருக்கும் சின்ன‌ கிரிக்கேட் கில‌ப்புக்கு விளையாடினோம் , கொக் ப‌ந்தில் கிரிக்கேட் விளையாடுவ‌து மிக‌ சிர‌ம‌ம் அண்ணா......................................
  18. 14 விளையாட்டில் நான் 12மைச் சென்னை வெல்லும் என்று தெரிவு செய்த‌ நான்.....................ஆப்புக்கு மேல‌ ஆப்பு என‌க்கு ஹா ஹா.........................
  19. இந்த‌ ஜோடி சூப்ப‌ர் ஜோடி குரு இவ‌ர்க‌ள் தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் கூட‌ வென்று இருக்கு....................நான் கூட்டி க‌ழிச்சு பார்த்தால் 68புள்ளிய‌ தாண்ட‌ மாட்டேன் அத‌ற்க்குள் தான் என‌ நினைக்கிறேன் போட்டி தொட‌ங்கி 10நாள் வ‌ரை தொட‌ர்ந்து 4புள்ளியோட‌ நிக்க‌ க‌ந்த‌ப்பு அண்ண‌ பைய‌னுக்கு ச‌னி என்று , ஒரு க‌ட்ட‌த்தில் நான் அவ‌ருக்கு மேல‌ நின்றேன்................................. டெல்லி மூன்று மைச்சில் ஒன்றை வென்றாலும் அவ‌ர்க‌ள் 4வ‌து இட‌த்தை பிடிப்பின‌ம்............................
  20. அண்ண‌ யார் எதையும் சொன்னால் ந‌ம்பும் ப‌ழ‌க்க‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ளிட‌ம் இல்லை , எம் முன்னேர்க‌ள் சில‌ர் அந்த‌க் கால‌த்தில் இந்தியா அவுட்டு விட்ட‌ பொய்க‌ளை உண்மையேன‌ ந‌ம்பி இருக்க‌லாம்..........................பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் அறிவில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்.......................நாங்க‌ள் மின்சார‌ம் இல்லாத‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள்.......................க‌டும் போர்.............விமான‌ தாகுத‌ல்க‌ள் இவைக‌ளுக்கு ம‌த்தியில் தான் வ‌ள‌ந்தோம்....................நாங்க‌ள் சினிமா கூத்தாடிக‌ளை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடின‌து கிடையாது.................எங்க‌ட‌ போராட்ட‌த்தை நாங்க‌ளா நேசித்து வ‌ர‌லாறுக‌ளை ப‌டித்து தெரிந்து கொண்டோம் ப‌ல‌ ஆயிர‌ம் உயிர் தியாக‌ங்க‌ளை செய்து எம் போராட்ட‌ம் மெது மெதுவாய் வ‌ள‌ந்து நின்ற‌ போது தான் நீங்க‌ள் ஆத‌ரிக்கும் ஹிந்தியா எம் போராட்ட‌த்தையும் எம் உற‌வுக‌ளையும் சிறு வ‌ட்ட்ட‌த்துக்கை வைச்சு அழித்தவை......................சும்மா ஜெய் ஹிந் என்று வீர‌ வ‌ச‌ன‌ம் இணைய‌த்தில் எழுதும் கூ முட்டைக‌ள் நாங்க‌ள் கிடையாது............................இந்திய‌ர்க‌ளின் அறிவை போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ பாக்கிஸ்தான் போரில் பார்த்து விட்டோம்......................உல‌கில் அதிக‌ம் ப‌டிக்காத‌ புரித‌ல் இல்லா கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு இந்தியா...........................சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி இருந்தால் உல‌க‌ அறிவு உண்மை த‌ன்மை பொய்க‌ள் இவை அணைத்தும் எங்கை தெரிய‌ப் போகுது😁😛...........................
  21. அப்ப சோனகர்களை விரட்டுவதற்கு வழிசமைத்த தென் தமிழீழத்தில் சோனகர்களால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கட்டாய விரட்டியடிப்புகள், ஊர் வன்வளைப்பு, தமிழ் பெண்கள் மீதான வன்புணர்வுகள் எல்லாம் என்னவகை? சோனகருக்கு வந்தால் ரத்தம் தமிழருக்க வந்தால் தக்காளி சட்னியோ? அதுதான் இனப்படுகொலை
  22. சங்கு சின்னத்தில்... இவர்கள் போட்டியிட்டதற்கு, விளக்கம் கேட்டு எப்போ சுமந்திரன் கடிதம் அனுப்பப் போகிறார். நீங்களும், உங்கடை சுத்துமாத்து அரசியலும். 😂 உங்களுக்கு வெள்ளை அடிக்கவும்.. "நட்டு கழண்டதுகள்" இருக்கிறாதாலை தான் இந்தப் பிரச்சினை. 🤣
  23. பார்டரில் மீண்டும் பிரச்சினையாம். 😂 🤣
  24. தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் 16 MAY, 2025 | 03:37 PM தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவுகூருவதற்காக நான் உரையாற்றுகின்றேன். இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர், உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள், தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம். இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும்கவனம் செலுத்தவேண்டும். அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும், தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும். மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும். நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம். https://www.virakesari.lk/article/214905
  25. நானும் சிறுவனாக இருக்கும்போது ஒரு சில பெரியவர்களின் புளுகு கதையை வியந்து கேட்டிருக்கிறேன்! முன்னேறிப் பாய்தலுக்கு எதிர்ச்சமரான புலிப்பாய்ச்சலின்போது காட்டில் ஆக்களையே சந்திக்காமல் உள்ள மூர்க்கமான சண்டை அணி ஒன்றை வைத்து தான் புலிப்பாய்ச்சல் செய்து உடனடி வெற்றி கிடைத்ததாக கொக்குவிலில் இடம்பெயர்ந்து இருக்கையில் ஒரு அண்ணை அள்ளிவிட்டார்! அங்கிருக்கையில் தவறுதலாக சக்கை பேரோசையுடன் வெடித்து அந்த பகுதியே அதிர்ந்ததை நேரில் உணர்ந்தேன்.
  26. ரஷ்யா தயாரிப்பான SAM ( 9K38 Igla) ஏவுகணையால் கடாபி அவர்களினால் 28-04-1995 மற்றும் 29-04-1995 ஆகிய நாட்களில் இரண்டு அவரோ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவாகும்.
  27. பையா கைத்துப்பாக்கியால் விமானத்தை சுட்டு விழுத்த முடியாது. அதனுடைய ஆகக்கூடிய சுடும் தூரம் 50யார் தான். விமான எதிர்ப்புத் துப்பாக்கி அல்லது ஏவுகணை மூலமாக வீழ்த்தப்பட்டிருக்கலாம்.
  28. என்ன‌த்த‌ சொல்ல‌ எப்ப‌டி சொல்ல‌ 2009க்கு முத‌ல் ந‌ல்ல‌ ஒற்றுமை இங்கை எல்லாரும் இப்ப‌ ?...................
  29. தமிழரசுக்கட்சி, ஈ பி டி ஐ தவிர்த்து மற்றைய கட்சிகளோடு இணைந்து கஜேந்திரன் பொன்னம்பலம்செயற்படலாமே? சுமந்திரனை வெளியேற்றாவிட்டால், தமிழரசுக்கட்சி வெகு விரைவில் காணாமல் போய்விடும். தாழுகிற கப்பலில் பயணம் செய்ய ஏன் நினைக்கிறார்?
  30. குடிநீர் என்பது மனிதர் உட்பட சகல உயிரினங்களினதும் வாழ்வாதரப் பிரச்சினை ........அவற்றை நிவர்த்தி செய்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........ ! 👍 நன்றி ஏராளன் ...........!
  31. வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கஞ்சி பரிமாறல் 16 MAY, 2025 | 10:15 AM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது. இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செ.கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/214856
  32. நாளை போட்டி மீண்டும் தொட‌ங்குது பாக்கிஸ்தான் PSL போட்டியும் நாளைக்கு தொட‌ங்குது.....................உந்த‌ ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் முடித்து ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளுக்கு ப‌ழைய‌ ப‌டி முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌னும் , இப்ப‌ எல்லாம் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் குறைந்து விட்ட‌து😁...............................
  33. ஆப்பிள் நிறுவனத்தில் சீனா, தாய்வான், இந்தியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சங்கள் என்று ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் இந்த வகையான மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே இரண்டரை லட்சங்கள் தான். அவர்களின் ஊதியமோ பல மடங்குகள். இன்று ஆயிரம் டாலர்களாக இருக்கும் ஒரு ஐஃபோன் இங்கு அமெரிக்காவில் செய்யப்பட்டால் அதன் விலை 2500 டாலர்கள் ஆகும் என்கின்றனர். கணிதமும், விஞ்ஞானமும் படிப்பதென்றாலே மேசைக்கு கீழே குனிந்து மறைந்து ஓடும் நிலை தான் அமெரிக்காவில் இருக்கின்றது. இன்று ஒரு மாற்றம் ஆரம்பித்தால் கூட, இன்னும் சில தலைமுறைகள் போக வேண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை இங்கே உருவாக்கிக் கொள்ள. அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களின் நிலை இதுதான். அமெரிக்க அதிபர் 'வெதர் ரிப்போர்ட்' போல தினமும் ஒன்று சொல்வார். அவற்றை அவ்வளவாகக் கணக்கில் எடுக்காமல், பெரிய பல்தேச நிறுவனங்கள் சீனா, தாய்வான், இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மெக்சிக்கோ என்று அவர்களின் பொருட்களின்/சேவைகளின் உற்பத்தி தளங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இதையே தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
  34. நன்றி கடஞ்சா. ஒரு காலத்தில் இவர்கள் பற்றி நிறையவே வாசித்திருக்கின்றேன். தொடர்ந்து வாசித்துப் பார்க்கின்றேன். சிலவற்றை வாசிக்கும் போதே அவை பிரதானமாக ஒரு பக்கசார்பான பிரச்சாரங்கள், பரப்புரைகள் என்று தெரிந்துவிடும். தரவுகளற்ற தகவல் குவியல்களாக, அனுமானங்களாக அவை இருக்கும். உலகில் சில நாடுகளில் நடப்பவை மிகக்குறைவாக வெளியே தெரியும். சீனா, ரஷ்யா, வட கொரியா, மியான்மார், பாகிஸ்தான் என்பன சில உதாரணங்கள். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. ஆதலால் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் காஷ்மீர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தும், ஆச்சரியமும் இல்லை. ஓரளவாவது ஜனநாயகமும், உரிமைகளும் உள்ள நாட்டில் வெகு சிலராவது கேள்விகளை கேட்பார்கள்.
  35. சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரியது தமிழ்த் தேசிய பேரவை! http://seithy.com/img/icons/photo.png http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(3).jpg வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டி விகாரை விவகாரம் என்பன தொடர்பில் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், இவ்விடயங்களில் சர்வதேச சமூகம் தலையீடு செய்து, உரிய அழுத்தங்களை வழங்கி, தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் உருவாகியிருக்கும் தமிழ்த்தேசிய பேரவையில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் மு.ப 9.00 மணிக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திலும், இலங்கைக்கான இந்தியத் துணை உயர்ஸ்தானிகர் பாண்டேவுடன் மு.ப 10.15 மணிக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சேவுடன் மு.ப 11.30 மணிக்கு கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திலும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுடன் பி.ப 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயத்திலும் நடைபெற்றது. இச்சந்திப்புக்களில் தமிழ்த்தேசிய பேரவையின் சார்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா, தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் கலந்து கொண்டிருந்தனர். இராஜதந்திரிகளுடனான இச்சந்திப்புக்களின்போது பிரதானமாக 3 விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. முதலாவதாக வடமாகாணத்திலுள்ள உரிமைகோரப்படாத சுமார் 6000 ஏக்கர் காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதியிடப்பட்டு வெளியான வர்த்தமானி அறிவித்தல் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், அதனை அரசாங்கம் உடனடியாக மீளப்பெறவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வெறுமனே 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பான உரித்தை நிரூபிப்பதில் தமிழ்மக்கள் முகங்கொடுத்திருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அதேபோன்று காணி உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் உரிமையாளர்களிடம் இல்லாத நிலையில், அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அக்காணிகளை சுவீகரிப்பதை நோக்காகக்கொண்டே அரசாங்கம் அவசர அவசரமாக இவ்வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இரண்டாவதாக கடந்த ஆட்சியின்போது குருந்தூர் மலையில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 79 ஏக்கர் காணிக்கு அப்பால், விகாரையை நிர்மாணிப்பதற்கு மேலும் 325 ஏக்கர் காணி தேவைப்படுவதாக அதனுடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் அக்காணிகள் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர், கடந்த வாரம் அக்காணியில் விவசாயத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் கூட, சம்பந்தப்பட்ட பௌத்த தேரர் உள்ளிட்ட தரப்பினர் அதற்கு முரணாக செயற்படுவது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. மூன்றாவதாக தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் விகாரை குறித்து இராஜதந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அத்தோடு ஏனைய பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் சட்டவிரோத கட்டடங்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றதோ, அதுபோன்று இவ்விகாரையும் அகற்றப்படவேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் எனவும், இவைகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்படவேண்டும் எனவும் இராஜதந்திரிகளிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(1).jpg http://seithy.com/siteadmin/upload/TNC-met-ambasidors-150525-seithy%20(2).jpg
  36. கஞ்சா கப்ஸா கதைகளை ஏனைய உறுப்பினர்களும் இனம் கண்டு கேள்வி கேட்ப்பதால் கொஞ்சம் அமைதியாக இருக்க எண்ணுகிறேன். ஆனால் வழமை போல் ஆதாரம் எதையும் கொடுக்காமல், நான் வாசித்த அறிவின் படி, அல்லது நீங்களே வாசித்து அறியுங்கள் போன்ற பதில்களும், அதை சுற்றி கருத்தாளரின் கற்பனையில் உருவாக்கிய பத்திகளும், கதைகளும் நீட்டி வளத்தபடுவது கண்கூடு. # விக்கிராமாதித்தன் போல் முயலும் கருத்தளர்களுக்கு வாழ்த்துக்களும், அனுதாபங்களும் ஒரு சேர🤣.
  37. கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கு மட்டும் இருந்த சிறப்பு உரிமைச் சட்டங்களை (சட்டம் 370 மற்றும் 35A) நீக்கியதற்கான பிரதானமான காரணமாக இந்திய ஒருமைப்பாட்டையும், காஷ்மீரினூடாக முழு இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு/பயங்கரவாத பிரச்சனைகளையுமே காரணங்களாக முன்வைத்தது. ஒரு தேசத்துக்குள் இரண்டு தேசங்கள் இருக்க முடியாது என்பதே பாஜகவினதும், இதை ஆதரித்த இந்திய மக்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முடிவை பல தமிழர்களும் ஆதரித்தார்கள். பலரினதும் பார்வையில் ஒரு பொதுவான இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இருந்தது. ஒரு வரலாற்றுப் பார்வை அல்ல. இன்று இதே போன்று தான் எம் மக்களிடையே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானிற்கு ஆதரவான பார்வையும் உள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேச வழமைச் சட்டம் போன்ற கூறுகளும் இங்கே சிறப்பு உரிமைகளாக இருப்பதால், காஷ்மீர் மக்கள் தவிர்ந்த ஏனையோர் அங்கு நிலம் வாங்க முடியாது. காஷ்மீரின் அபிவிருத்தியை இது தடுக்கின்றது என்ற பொருளாதாரக் காரணியும் சொல்லப்பட்டது. இந்தச் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்ட பின், காஷ்மீர் அபிவிருத்தி அடைந்து உள்ளதா? காஷ்மீரிய மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்று இப்போது சொல்கின்றார்களா? ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், அன்று பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்தே அன்றைய சுதந்திர நாடான காஷ்மீர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தங்களே இந்த சிறப்பு உரிமைகள். இன்று அவர்களுக்கு இரு பக்கங்களாலும் நெருக்கடிகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எனக்கு ஒரு காஷ்மீரிய குடும்பம் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள். இந்துக் குடும்பம். எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களைத் தனியே விட்டுவிடுங்கள் என்று தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். ஏனைய காஷ்மீர் மக்களின் அபிப்பிராயம் எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய அபிப்பிராயமும் இதுவே.
  38. எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”
  39. பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு... - முழு விவரம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/2 இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. 3/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/3 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 3 குற்ற பத்திரிகைகள்: சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2/2 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/2 கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். 4/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 1/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 2/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு 3/4 பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பூட்டிய அறையில் வாசித்தார். அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்ததை, வரவேற்கும் விதமாக, நீதிமன்ற வளாகத்தில் அனைந்திந்திய மாதர் சங்கம் கோஷமிட்டு வரவேற்றனர். `சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’ - கோரிக்கை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், அருளானந்தம், மணிவண்ணன், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார். அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டதால், 8 பேரில் ஒருவர் கூட பிறழ் சாட்டசியாக மாறவில்லை. குறைந்தபட்ச தண்டனை என்றாலே 20 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்படும். இதில் பெண்கள் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளோம். வயது, ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என எதிர்த்தரப்பு சார்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படவுள்ளது." என்றார். 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவு. 1) திருநாவுக்கரசு - 5 ஆயுள் தண்டனை 2) சபரி ராஜன் - 4 ஆயுள் தண்டனை 3) சதிஷ் - 3 ஆயுள் தண்டனை 4) வசந்தகுமார் - 2 ஆயுள் தண்டனை 5) மணிவண்ணன் - 5 ஆயுள் தண்டனை 6) பாபு - 1 ஆயுள் தண்டனை 7) ஹெரோன் பால் - 3 ஆயுள் தண்டனை 8) அருளானந்தம் - 1 ஆயுள் தண்டனை 9) அருண்குமார் - 1 ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முழு தண்டனை விவரம்! - Vikatan
  40. அந்த மனு, இந்த மனு என தண்டனை குறைக்காமல், மேல்முறையீட்டில் விடுதலை செய்யாமல் - வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழிக்குமாறு உறுதி செய்ய வேண்டும். வெளியில் வரும் போது தொங்கி போய் இருக்க வேண்டும். தலை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.