Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்15Points87988Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்8Points31956Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்4Points1223Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/18/25 in all areas
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
4 pointsPublished By: VISHNU 18 MAY, 2025 | 07:55 PM உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2150984 points -
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
போரினை விரும்புபவர்கள் அரசியல்வாதிகள்தான், கடந்த போர்களில் இந்திய பொருளாதாரன் பெரிதாக பாதிக்கப்படவில்லை ஆனால் இந்த போரில் இந்தியாவின் போர் வெறி எண்ணம் முதலீட்டாளர்களை அச்சுறுத்தலாம், சில கிழக்காசிய நாடுகளில் அரசியல் உறுதிதன்மை நிலவும் போது இந்தியாவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக அதன் சந்தை வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் முதலுக்கே நஸ்டம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம். பெரும்பான்மையான இந்தியர்கள் ஏதோ கிரிக்கெட் போட்டி போல இந்தியா போரிட்டு பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்ற நிலை காணப்படுவதால், அரசியல்வாதிகளும் போரினை விரும்பலாம் ஆனால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. வங்குரோத்தான ஒரு நாட்டுடன் வரிந்து கட்டிக்கொண்டு போரில் குதித்த இந்தியாவின் நிலை பரிதாபம், இதற்கு இன்னொரு காரணம் முட்டாள் இந்திய ஊடகங்கள்.2 points
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.2 points
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண் புதிய இணைப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறுகின்றது. முதலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குருவினால் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டது. பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடரினை ஏற்றிவைக்க சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியள, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தமை குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இணைப்பு தமிழினப் படுகொலையின் 16 ஆண்டு நினைவு நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுமுன்னர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆரம்பமாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு தமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாரான முள்ளிவாய்க்கால் மண்...குவிந்துள்ள மக்கள் தமிழினப் படுகொலை நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நினைவேந்தலுக்கு தயாராகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏராளமான மக்கள் நினைவு முற்றத்தில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகள் - பா.பிரியங்கன் முதலாம் இணைப்பு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது. பொதுச் சுடர் ஏற்றுதல் அதன்படி, முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும். இதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்படும். பொதுச் சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் நினைவேந்தலில் பங்கேற்பவர்கள் தீபங்களை ஏற்றுவர். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும். பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக காலை 6.30மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன. அத்துடன், “தமிழினப் படுகொலை நாளான மே 18 தினத்தில் (இன்று) நாம் அனைவரும் திரளாகக் ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் அநீதிக்கு நீதி வேண்டியும் ஒன்றுபடுவோம். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்ற விடயத்தை உரத்துச் சொல்ல இணைவோம்" என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ரோங் அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு அரசியல் கட்சிகள், பொதுக் கட்டமைப்புகள், பொது நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. தமிழின அழிப்பின் அடையாளம் தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் 4 கட்ட ஈழப் போர்களாக நடைபெற்றன. இறுதிப் போர் கட்டம் 2006 - 2009 மே வரை நீடித்தது. மோதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டனர். இறுதியாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் மக்கள் முடக்கப்பட்டபோது மனித குலத்துக்கு எதிரான விரோத செயல்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்கள் - துயரங்களை - அழிவுகளைச் சந்தித்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி தமிழின அழிப்பின் அடையாள நாளாக தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர். கொல்லப்பட்ட தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட தமது இன மக்களுக்காக நீதி கோரும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/mullivaikkal-remembrance-day-2025-may-18-1747537623#google_vignette2 points
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வெஸ்சின்டீஸ் வீரர் ஹெட்மயிர் இந்த ஜபிஎல்ல ராஜஸ்தான் அணியில் சரியாக விளையாட வில்லை...........................1 point
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்படி ஒன்றும் நடக்க வில்லை பாக்கிஸ்தானில் உள் நாட்டு கிரிக்கேட் விளையாட்டில் இருந்து எல்லாம் வழமை போல் நடக்கிறது........................இந்தியர்கள் சில நாட்களாக பாக்கிஸ்தான் பற்றி அவதூற பரப்புகினம்......................எப்படி பாக்கிஸ்தான் அணு நிலையம் மீது தாக்கி விட்டோம் என்று சொல்லிச்சினமோ அதே போல் தான் இதுவும் பாக்கிஸ்தான் உள் நாட்டில் பாக்கிஸ்தான் ஆமிக்கும் Balochistan சிறு போராட்ட குழுவுக்கும் சில மோதல்கள் நடந்து இருக்கு..................மற்றம் படி பெரிசா அங்கை பிரச்சனை கிடையாது......................1 point
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
1 point15 ஆண்டுகளாக ஒண்ணும் தெரியாதாம் அரசியலில் குதிச்ச பிறகுதான் எல்லாம் தெரியுதாம்.இதற்கு எல்லாம் அங்சலி செலுத்தவேண்டி தமிழக அரசியல்வாதிகளுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியவர் சீமான்தான்.1 point -
நம்பிக்கை துளிர்க்கிறது
1 pointநம்பிக்கை துளிர்க்கிறது வீணையின் தந்தியை மீட்டினால் இனிய இசை பிறக்கும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால்-எம் இனத்தின் வலி தெரியும். இனத்தின் வலி உணராமல் இளந்தலைமுறை சென்றால் எம்மின அடையாளம் எங்கோ தொலைந்து போகும் இதற்காகவா எம் அன்பு உறவுகள் இளம் பருவத்து கனவுகளை உள்ளுக்குள் பூட்டி வைத்து உறுதியுடன் போராடி தம் இன்னுயிரைக் கொடுத்து மண்ணுக்கு உரமாகினார்கள்? எண்ணத்தில் ஏக்கமும் கவலையும் இணைந்து வருத்திய வேளையில் ‘இல்லை நாம் மறக்க மாட்டோம்’ என இளையோர் செயலில் காட்டுகிறார்கள் நம்பிக்கை துளிர்க்கிறது கொத்துக் கொத்தாக எம் மக்கள் கொன்றழிக்கப்பட்டதை நினைக்க மறந்து எப்படி எம்மால் வாழ முடிகிறது காலங்காலமாக எம்மினம் வதைக்கப்பட்டதும் துடிக்கத்துடிக்கக் கொல்லப்பட்டதும் அறிந்து கொள்ளாமலே எங்கள் இளையோர் நகரப்போகிறார்களா? என்ற தவிப்பு வேண்டாமே என உறுதிப்படுத்துகிறார்கள் இளையோர். இன அடையாளம் தெரியாத வெறுமையான மனிதர்களாக எங்கள் எதிர்கால தலைமுறையை தனித்து தவிக்க விட்டுச் செல்லப்போகின்றோமா? என்ற வேதனைக்கு விடைசொல்கிறார்கள் மீட்டப்பட வேண்டியது எம்மினத்தின் வலிகள் சொல்லும் வரலாற்றின் பக்கங்கள். ஊட்டப்பட வேண்டியது உயிர்ப்புடன் இனம் எழவேண்டும் என்ற உண்மைகள் தமிழின வரலாற்றுத் தந்திகள் மீட்டப்படுகின்றன இனத்தின் உயிர்ப்பு உறுதியாக்கப்படும் என்ற நம்பிக்கை விதைகள் மெல்ல மெல்ல முளைவிடுகின்றன. மந்தாகினி1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தாலும், நெஹால் வதேராவினதும், ஷஷாங் சிங்கினதும் அதிரடியான அரைச் சதங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர், ப்ராப்சிம்ரன் சிங், அஸ்மத்துலா ஒமார்சாய் ஆகியோரினது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெய்வாலினது 50 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷியினது 40 ஓட்டங்களும் கைகொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்களின் துருவ் ஜுரேலின் அதிரடியான 53 ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாக அடித்தாட முடியாத நிலையாலும், இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்ததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலின் அதிரடியான சதத்தின் (ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள்) உதவியுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனினது மின்னல்வேகத்தில் எடுத்த சதத்தாலும் (ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள்), அணித்தலைவர் சுப்மன் கில்லினது புயல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 93 ஓட்டங்களுடனும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்களை எதுவித விக்கெட் இழப்புமின்றி எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக வீரர் டி.நடராஜனின் பந்துவீச்சு பந்துவீசும் இயந்திரத்தில் இருந்து வருவது போல இருந்ததால், அவர் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களைக் கொடுத்தார். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 6 பேருக்கும், "முடிவில்லை" எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தல சில விடயங்கல நோராக பார்க்க மாட்டார். கண் கூசுவதால், என்னை பொறுப்பாக விட்டுள்ளார். எத வேணா வாயில வருது🫢1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னே ஒரு விளையாட்டு. ஒரு வித தடுமாற்றமும் இல்லாத தரமான துரத்தல். சுதர்சா நீ ஒரு வீரன்டா. இத்தொடரில் 600 ஓட்டங்களைக் கடந்தான் பையன். இப்பிடி முன்னரும் நடந்திருக்கா. ஒரு விக்கட்டும் இழக்காமல் 200 ஓட்டங்களைத் துரத்தி அடிப்பது சாதாரண விடயமில்லை.1 point
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு Published By: DIGITAL DESK 2 18 MAY, 2025 | 05:22 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் சுடர் ஏற்றி மலர் தூபி நெஞ்சறுந்த அஞ்சலியைத் தந்தனர். https://www.virakesari.lk/article/2150841 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதென்ன விளையாட்டு. இருவரும் மிக உறுதியாக நிற்கினம். எல்லாத்தையும் விட்டுட்டு போகவேண்டியதுதான். நாம தெரிவு செய்தா, அது கஷ்டப்பட்டு தோற்குது.1 point
-
அவன் நினைத்திருந்தால்....
1 pointநம்மெல்லோரைப் போலவே அவனுக்குமொரு குடும்பம் இருந்தது. அதுவும், மதிவதனி என்றால், மதி(நிலவு) போல வதனம்(முகம்) உடையவள் என்று பொருள். அப்பேர்ப்பட்டவளை ஆசையாசையாய் காதலித்துக் கரம்பிடித்து, அவள் அமைத்துக்கொடுத்த அழகான குடும்பம் அது. ஆஸ்திக்கொன்று. ஆசைக்கொன்று. இரண்டும் கலந்தவொன்று என மூன்று மொட்டுகளால் மலர்ந்த குடும்பம் அது. அவன் நினைத்திருந்தால், தானுண்டு தன் குடும்பமுண்டு என்றிருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், தன் காதல் மனைவியை ஒரு மஹாராணி போல் வாழ வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், உள்ளூரிலேயே விலைபோய் தன் குடும்பத்தோடு சுகவாசியாய் இருந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குடும்பத்தோடு புலம்பெயர்ந்து ராஜாவைப்போல் வாழ்ந்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், இந்நேரம் மந்திரிசபையோ மாகாணப் பதவியோ ஏற்றுக்கொண்டு குழந்தைகளை பெரும் பதவிகளில் அமர வைத்திருக்க முடியும். அவன் நினைத்திருந்தால், குறைந்தபட்சம் குடும்பத்தோடு உயிரோடாவது இருந்திருக்க முடியும். ஆனால் அவன் நினைத்ததெல்லாம்... தமிழ்த்தேசியம். அவனுக்கொரு பெரும் கனவு இருந்தது. தமிழ்மண் தமிழருக்கானது என்ற ஒரே கனவு. அவனது இலக்கும் வெறியும் இலட்சியமும் அதுவொன்றே. முப்பது வருடகாலமும்-தினமும் முழிப்பது கூட மரணத்தோடு என்றிருந்தவன் மண்ணுக்குள் போவதற்குள்-தமிழ் மண்ணை அடைந்திட நினைத்தான். அதற்குள் மாவீரனாகி விண்ணை அடைந்தான். நம்மெல்லோரின் மன்னை அடைந்தான்.! 'அவன் நினைத்திருந்தால்' என்பதிருக்கட்டும். இத்துயர் தடுக்கப்பட்டிருக்கலாம். இம்முடிவு மாற்றப்பட்டிருக்கலாம். இவனோடு சேர்த்து இலட்சோப இலட்சம் உயிர்கள் இன்றிருந்திருக்கலாம். நாம் நினைத்திருந்தால். நம்மை ஆள்வோர் நினைத்திருந்தால்.! ------------------ குறிப்பு: இரண்டுநாள் ஈழத்து பகிர்வு செய்ததற்கு ரீச் குறைந்து "தம்பி, நோ தீவிரவாதம்..!" என்று நோட்டிஃபிகேஷன் வந்தது. இதோடு மொத்த ரீச்சும் அம்பேல் ஆகுமென்று தெரியும். 'நான் நினைத்திருந்தால்' லேசாக வேறொன்று எழுதியிருக்கலாம். மனம் வரவில்லை. Writer Charithraa's1 point
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
1 point
- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
விடுங்க கவலைப்படாதேங்கோ சிறியர் . ........ கொஞ்சம் நஷ்டமாயிட்டுதுதான் ......... அறிவியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ........ ! 😂1 point- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
காணொளிய பார்க்க கண் கலங்குது இந்த மண்ணுக்காக தானே போராடினவர் என மூதாட்டி சொல்லி அழும் காட்சி கண்ணீரை வர வைக்குது🙏😥...............1 point- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
தலைவருக்கும், அவருடன் தோளோடு தோள் நின்று போராடி வீரச்சாவைடைந்த போராளிகளுக்கும் வீரவணக்கம். சொல்லெணா துன்பங்களை அனுபவித்து இறுதிப்போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். இன்னொரு முள்ளிவாய்க்கால் வராமல் தடுப்பதே அம்மக்களுக்கு செய்யும் பரிகாரம் ஆகும்.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"நான் ஆணையிட்டால்" திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலின் நடுவே, "அடிமைப் பெண்" திரைப்படத்திற்காக எம்ஜிஆர் புதுமையாக ஒரு விளம்பரத்தைச் செய்திருந்தார். "நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்..." என்ற பாடல் வரிகள் வரும் போது, திரையில் ‘விரைவில் வருகிறது அடிமைப் பெண்’ என்ற விளம்பரம் வரும். அடிமைப்பெண் திரைப்படத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, ரத்னா, கே.ஆர். விஜயா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்தனர். "அடிமைப் பெண்" திரைப்படத்திற்கான குதிரைச் சவாரிப் பயிற்சியில் நடிகை ரத்னா, குதிரையில் இருந்து தவறி விழுந்து காலை முறித்துக் கொள்ள, எம்ஜிஆரை எம்.ஆர். ராதா சுட, படம் நின்று போனது. சில காலம் கழித்து, ஜெயலலிதா மற்றும் ராஜஶ்ரீ,ஜோதிலட்சுமி போன்ற நடிகைகளை இணைத்து, எம்ஜிஆர் இப்படத்தை மீண்டும் தயாரித்தார். எம்ஜிஆர் இலங்கை சென்று திரும்பியபோது, அவரை வரவேற்கும் வகையில், "பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக..." என்ற பாடல் எழுதியிருந்தார் ஆலங்குடி சோமு. இந்த பாடலை எம்.எஸ்.வி இசையமைக்க சுசிலா பாடியிருந்தார். அந்தப் பாடலை ஆர்.எம். வீரப்பன் மெரீனா கடற்கரையில், நடந்த வரவேற்பு விழாவில் ஒலிக்கவிட்டார். பின்னர் இந்த பாடலை, ஆர்.எம். வீரப்பன் தனது தயாரிப்பான "நான் ஆணையிட்டால்" படத்திலும் பயன்படுத்தியிருந்தார்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று ஞாயிறு 18 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 59) ஞாயிறு 18 மே 10:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 21 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் இரண்டு பேர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் பஞ்சாப் கிங்ஸ் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 60) ஞாயிறு 18 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் 15 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் இரட்டையர்கள் ஜோடி "முடிவில்லை" எனவும் கணித்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் கந்தப்பு நுணாவிலான் அகஸ்தியன் குஜராத் டைட்டன்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வீரப் பையன்26 நிலாமதி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே "முடிவில்லை" நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன் இன்றைய போட்டியில் நாம் தெரிவு செய்த அணி விபரம் தெரிவிக்காமையால் எந்த அணியிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது.🤣1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- 10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
முட்டாள் பெரியண்ணனின் சமயோசித புத்தி. இவர் எத்தனை நாளைக்கு அதிகாரம் செலுத்த முடியும்? அதன் பின் குடியேறியவர்களின் நிலை என்னாவது? தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடைபோடும் இவர், இன்னொரு நாட்டில் எப்படி இவர் முடிவெடுக்க முடியும்? முதலாவது பாலஸ்தீனியர்கள் லிபியாவில் குடியேற விரும்புவார்களா? அல்லது அவர்கள் நாட்டை அவர்களிடமிருந்து பறித்தெடுப்பதற்கு ஏற்கெனவே போட்ட திட்டமா இது?1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதேதான். முடிக்கிறாங்கள் இல்லையே. இரண்டு இரண்டு போட்டியா வைத்தா ஒரு கிழமையிலேயே முடிச்சிருக்கலாம். அவங்கள் அதை மாற்றுவதாகவே இல்லை. இரண்டு போட்டி வைத்தாலும் வருமானத்தில் ஒரு குறைவும் வராது. வேற என்ன காரணம் என்று புரியவில்லை. அங்கால திறந்த கடை எப்பிடி ஓடுது. வந்து பாக்கிறன்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
சென்னைல மீன் மார்கெட்டுக்கு போய் மீன் வாங்க போறீங்களா அப்ப இந்த அஞ்சு ரூல்ஸ பாலோவ் பண்ணுங்க. ரூல் நம்பர் 1 ; என்ன மீன் வாங்கனும்ன்கிறத வீட்லயே முடிவுபண்ணிட்டு போங்க... இல்லன்னா அங்க போய் என்ன மீன் வாங்குறதுன்னு முழிச்சீங்கன்னா என்ன அப்படியே மீன் அல்லாத்தையும் வாங்குறமேரி நிக்கிற ஒன்னு வாங்குனா வாங்கு இல்ல இடத்த காலி பண்ணுன்னு மீன் விக்கிற அக்கா சவுண்டு விடும்.... ரூல் நம்பர் 2 ; மீன எடபோட்டு வாங்குற வரைக்கும் மீன கைல தொடக்கூடாது அப்படி மீறித் தொட்டா அந்த அக்காங்களுக்கு சண்டாலமா கோபம்வரும் பேண்டு சட்டயில்லாம் போட்டு ரீசண்டா கீரியே மீன எப்படி கைல தொடலாம்னு சண்டைக்கு வரும்... ரூல் நம்பர் 3 : எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீங்க... அப்புறம் அந்த அக்காங்க மம்மி பாவம் தாத்தா பாவம்... ஆதாம் ஏவா பாவம் அளவுக்கு தர லோக்கலுக்கு இறங்கி திட்டுவாங்க... வேணும்னா எட போடும்போது ஒரு மீன சேத்து போடுங்கன்னு கேட்டா போடுவாங்க அதுக்காக ஒரு வஞ்சீரத்த வாங்கிட்டு இன்னொரு வஞ்சிரத்த ஃபிரியா போடுன்னு கேட்டுறாதீங்க அப்புறம் எத்தன லிக்குட் சோப் ஊத்தி கழுவினாலும் காது தீஞ்சது தீஞ்சதுதான்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே மீன் விக்கிற அக்கா நாவினால் சுட்ட வடு... ரூல் நம்பர் 4: நீங்க ரெகுலரா மீன் வாங்குற ஆளா இருந்தா ஒரே அக்காட்ட வாங்குற பழக்கத்த வச்சுக்குங்க... அப்படி ஒரே ஆள்ட்ட மீன் வந்குறதால மீன் விலை கம்மியாலாம் கிடைக்காது... ஓரளவு நல்ல மீன் கிடைக்கும் நீங்க தேர்ந்தெடுக்கிற மீன் சரியில்லன்னா அவங்களே ரிஜெக்ட் பண்ணி அய்யே நல்ல மீனா எயித்து போடுன்னு சொல்லுவாங்க... ரூல் நம்பர் 5 : மீன் வாங்கிட்டீங்கன்னா அப்புறம் நடுவுல வீட்டுக்கு வர்ற வழில சைக்கிள்ல, கூடையில மீன் வித்துட்டு போறவங்ககிட்ட மீன் விலைய கேட்டு கிராஸ் செக் பண்ணாதீங்க... அப்புறம் நாம அறுநூறு ரூபாய்க்கு வாங்குன மீன அவங்க நானுறுன்னு சொல்லி நமக்கு ஹார்ட்அட்டாக்கை வரவச்சிடுவாங்க... பொம்மையா முருகன்1 point- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
மீன்காரி செந்தமிழ்ல அர்ச்சனை செய்ததிலை நியாயமிருக்கு......🤣 கருவாட்டு விலை கேக்கிறதுக்கும் இடம் வலம் நேரம் இருக்கு...😁1 point- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கடைஞ்சா நல்லா கடையிறார்! கோஷான் இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!!1 point- 10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
யாருடைய காணிக்குள்…. யார், யாரை… குடியமர்த்துவது. 😎1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான இன்றைய 55வது ஐபில் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது! முடிவு: முடிவில்லை! இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவரும் “முடிவில்லை” என்று கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!1 point- சிரிக்கலாம் வாங்க
1 point👉 https://www.facebook.com/100076314756096/videos/1032250969007183 👈 நல்ல காலம்.... இதையும், ஒருவரும் பார்க்கவில்லை. 🤣 @suvy 😂1 point- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
கவி அருணாசலம் உங்களது முதல் அனுபவம் இப்படி ஒரு சோகத்தில் முடிந்தது கவலை என்றாலும், நல்ல வர்ணனையுடன் மண்வாசனைக்குரிய கதையை கேட்ட திருப்தி ஏற்பட்டது.1 point- உங்கள் காதில் சேரும் அழுக்கு சொல்லும் ஆரோக்கியத்தின் ரகசியம்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 11 மே 2025 அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் அந்த பொருளுக்கு செருமென் (cerumen) என்று பெயர். செவிக்குழாயில் உள்ள செருமினஸ் மற்றும் செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் சுரப்புகளின் கலவையே இது. முடி, இறந்த செல்கள், மற்றும் இதர உடல் கழிவுகளோடு ஒன்று சேர்ந்து மெழுகு போன்ற பதத்தை இது அடைகிறது. செவிக்குழாயில் இது உருவான உடன், கன்வேயர் பெல்ட் பொறிமுறையில், தோலின் செல்களோடு ஒட்டிக் கொள்ளும் இந்த அழுக்கானது காதின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறத்துக்கு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லிமீட்டரில் 20-ல் ஒரு பங்கு என்ற அளவில் இது நகர்கிறது. பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இவ்வாறு அடையும் அழுக்கின் முதன்மை பணி என்ன என்பது விவாதத்துக்குரியது, ஆனால் பெரும்பாலும் இது செவிக்குழாயை சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகள் போன்றவை நம்முடைய தலைக்குள் நுழைவதை தடுக்கும் ஒரு பொறிமுறையாக இது செயல்படுகிறது. விரும்பத்தகாத தோற்றம் காரணமாக உடலில் உள்ள சுரப்புகளில் காதுகளில் சுரக்கும் இந்த சுரப்பு ஆராய்ச்சியாளர்களால் அதிகம் கவனிக்கப்படவில்லை. ஆனால், தற்போது இது மாறத் தொடங்கியுள்ளது. பல ஆச்சர்யமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நன்றி. காதில் அடையும் மெழுகு போன்ற பொருட்களை வைத்து ஒரு நபரின் சாதாரணமான மற்றும் முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள இயலும். எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய அல்லது ஆப்பிரிக்க மரபைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் காதுகளில் சேரும் மெழுகு ஈரத்தன்மை கொண்டது. மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். ஆனால், கிழக்காசிய மக்களில் 95% பேர் காதில் உலர் தன்மையுடைய சுரப்பைக் கொண்டிருக்கின்றனர். இது சாம்பல் நிறத்திலும் ஒட்டாத வகையிலும் இருக்கிறது. ஈரமான அல்லது உலர்ந்த காது மெழுகை உற்பத்தி செய்வதற்குப் பொறுப்பான மரபணு ABCC11 என்பதாகும். இது ஒருவரின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுகிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் காரணியாகவும் இருக்கிறது. சுமார் 2% பேர், பெரும்பாலும் உலர்ந்த காது மெழுகைக் கொண்டவர்கள் - இந்த மரபணுவின் பதிப்பைக் கொண்டுள்ளனர். அவர்களின் அக்குள்களில் துர்நாற்றம் வீசுவதில்லை. நம் காதுகளில் சுரக்கும் இவை நம்முடைய ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன என்பதே இது குறித்த கண்டுபிடிப்புகளில் பயனுள்ளதாக இருக்கும். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,காதில் மெழுகு போன்ற அழுக்கு உருவாகி அது நம்முடைய புறக்காதுகளை அடைய ஒரு மாதம் ஆகும் முக்கிய அறிகுறிகள் 1971ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான நிக்கோலஸ் எல் பெட்ராகிஸ், அமெரிக்காவில் "ஈரமான" காது அழுக்கைக் கொண்ட ஐரோப்பிய வம்சாவளியினர், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மன் பெண்கள் மார்பக புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் கண்டறிந்தார். "உலர்ந்த" காது அழுக்கைக் கொண்ட ஜப்பானிய மற்றும் தைவானிய பெண்களை விட மேலே கூறிய மக்களுக்கு தோராயமாக நான்கு மடங்கு ஆபத்து அதிகம் இருப்பதாகவும் அவர் கண்டறிந்தார். 2010ஆம் ஆண்டில், டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மார்பக புற்றுநோயால் (invasive breast cancer) பாதிக்கப்பட்ட 270 பெண்கள் மற்றும் ஆரோக்கியமான 273 பெண் தன்னார்வலர்களிடமிருந்தும் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டனர். மார்பக புற்றுநோயால் அவதிப்படும் ஜப்பானிய பெண்கள், ஆரோக்கியமான தன்னார்வலர்களை விட ஈரமான காது 'மெழுகுக்கான' மரபணு குறியீட்டைப் பெற்றிருக்க 77% வரை வாய்ப்புகள் அதிகமாக இருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவுகள் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு முடிவுகள் ஈரமான மற்றும் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களிடையே நிலவும் மார்பக புற்றுநோய் அபாயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்று உறுதி செய்தது. இருப்பினும், இந்த நாடுகளில் உலர்ந்த காது அழுக்கைக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், சில நோய்களுக்கும் காது மெழுகில் காணப்படும் பொருட்களுக்கும் இடையிலான தொடர்பு விரிவாக நிறுவப்பட்டுள்ளது. உணவில் காணப்படும் சில அமினோ அமிலங்களை உடைப்பதைத் தடுக்கும் ஒரு அரிய மரபணு கோளாறான 'மேப்பிள் சிரப் சிறுநீர்' (maple syrup urine disease) நோயை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதனால் இரத்தத்திலும் சிறுநீரிலும் மோசமான சேர்மங்கள் அதிகரிக்கும். இதனால் சிறுநீருக்கு மேப்பிள் சிரப்பின் நாற்றம் ஏற்படும். இனிப்பு மணம் கொண்ட சிறுநீருக்கு காரணமான மூலக்கூறு சோடோலோன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயைக் கொண்டிருக்கும் மக்களின் காதுகளில் சேரும் அழுக்கிலும் இந்த மூலக்கூறு காணப்படும். சோதனையே தேவையில்லை என்றாலும், இந்த நோய் இருப்பதை அறிந்து கொள்ள ஒரு காதில் இருந்து ஒரு சிறிய அளவு அழுக்கை பரிசோதிப்பது, மரபணு சோதனைகளை மேற்கொள்வதைக் காட்டிலும் எளிமையானது, மலிவானது. "மேப்பிள் சிரப் போன்ற வாசனை காது அழுக்கில் இருந்து வீசுகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தை பிறந்து வெறும் 12 மணி நேரத்தில் அவரிடம் இருந்து வெளிப்படும் இப்படியான தனித்துவமான வாசனை, அவர் பிறக்கும் போதே இத்தகைய வளர்சிதை மாற்ற குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார் என்பதை கூறுகிறது," என்று லூசியானா மாகாண பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் வேதியியலாளர் ரபி ஆன் முசா கூறுகிறார். கோவிட்-19 சில நேரங்களில் காது அழுக்கில் இருந்தும் கண்டறியப்படலாம், மேலும் ஒரு நபரின் காதில் அடையும் அழுக்கைக் கொண்டு அவர்களுக்கு டைப்-1 அல்லது டைப்-2 நீரிழிவு நோய் உள்ளதா என்பதையும் உங்களால் கூற இயலும். இரத்தப் பரிசோதனைகள் மூலமாக ஒருவருக்கு இதய நோய் இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்றாலும் கூட, காதில் அடையும் அழுக்கைக் கொண்டு குறிப்பிட்ட வகையான இதய நோய் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய முடியும் என்பதை ஆரம்ப கால ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. மெனியர்ஸ் என்பது ஒரு காதின் உட்பகுதியில் ஏற்படும் நோயாகும். இது மக்களை தலைச்சுற்றல் மற்றும் கேட்கும் திறனை இழக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. "இந்த நோயின் அறிகுறிகள் ஒருவரை மிகவும் பலவீனப்படுத்தும்," என்று முசா கூறுகிறார். "கடுமையான குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். வாகனம் ஓட்டுவதும் சவாலாகிவிடும். இறுதியாக பாதிக்கப்பட்ட காது முழுமையாக கேட்கும் திறனை இழக்கும்," என்று அவர் கூறுகிறார். ஆரோக்கியமானவர்களைக் காட்டிலும் மெனியர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காதில் அடையும் அழுக்கில் 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பதை முசாவின் குழு ஆய்வில் கண்டறிந்துள்ளது. இந்த நிலைக்கு ஒரு உயிரியக்கக் குறிப்பானையைக் (biomarker) கண்டுபிடிப்பது இதுவே முதல்முறையாகும். அனைத்தையும் தவிர்த்துவிட்டு இந்த நோயைக் கண்டறிய பல ஆண்டுகள் தேவைப்படும். எதிர்காலத்தில் இந்த நிலையை விரைவாகக் கண்டறிய மருத்துவர்கள் காதில் அடையும் அழுக்கை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது முசா குழுவின் கண்டுபிடிப்பு. "வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீர், மூளை தண்டுவட திரவம் கொண்டு கண்டறிவதற்கு கடினமாகவும், நீண்ட காலத்தையும் எடுத்துக் கொள்ளும் நோய்களை கண்டறிய காதில் அடையும் அழுக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் தான் எங்களின் ஆர்வம் இருக்கிறது," என்று முசா தெரிவிக்கிறார். ஆனால் அவ்வாறு காதில் அடையும் அழுக்கில் எந்த அம்சம், ஒருவரின் ஆரோக்கியம் பற்றிய தகவலை வெளிப்படுத்தும் புதையலாக செயல்படுகிறது? ஒரு நபரின் வளர்சிதை மாற்றமான, உடலுக்குள் நடக்கும் உள் வேதியியல் எதிர்வினைகளை பிரதிபலிக்கும் சுரப்புகளின் திறனே அது. புற்றுநோயைக் கண்டறிய காது மெழுகில் உள்ள 27 சேர்மங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "உயிரினங்களில் உள்ள பல நோய்கள் வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டவை" என்று பிரேசிலில் உள்ள கோயாஸ் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் நெல்சன் ராபர்டோ அன்டோனியோசி பில்ஹோ கூறுகிறார். நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களை அதற்கு எடுத்துக்காட்டுகளாக பட்டியலிடுகிறார். "இந்த சந்தர்ப்பங்களில், லிப்பிடுகள், மாவுச்சத்து மற்றும் புரதங்களை ஆற்றலாக மாற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான செல்களில் செயல்படுவதைக் காட்டிலும் வித்தியாசமாக செயல்படத் தொடங்குகின்றன. அவை வெவ்வேறு வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, சில நேரங்களில் மற்றவற்றை உற்பத்தி செய்வதை கூட நிறுத்தக்கூடும்," என்று கூறுகிறார். அவருடைய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வழக்கமான உயிரியல் திரவங்களான இரத்தம், சிறுநீரகம், வியர்வை மற்றும் கண்ணீரைக் காட்டிலும் பன்முகத்தன்மை கொண்ட பொருட்களை காதில் அடையும் அழுக்கு கொண்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. உண்மையில் இது குவிந்து வருகிறது. எனவே நீண்ட காலமாக ஒருவரின் வளர்சிதை மாற்றங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய இது சரியானதாக இருக்கும் என்பதை நம்ப காரணம் இருக்கிறது என்று கூறுகிறார் ப்ரூஸ் கிம்பால். அவர் மொனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தில் வேதியியல் சூழலியல் நிபுணராக பணியாற்றுகிறார். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,குழந்தைக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடு இருப்பதை உங்களால் கண்டறிய இயலும் நோயறியும் முறை இதனை மனதில் வைத்துக் கொண்டு அன்டோனியோசியும் அவருடைய குழுவினரும் செறுமனோகிராமை (cerumenogram) உருவாக்கி வருகின்றனர். காதில் சேரும் அழுக்கை வைத்து ஒருவருக்கு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த கருவி உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர். 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 52 நோயாளிகளின் காது அழுக்குகளை சேகரித்தது அவரின் குழு. அவர்கள் லிம்போமா என்ற ஒரு வகை புற்றுநோய் (Lymphoma), கார்சினோமா அல்லது இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். காற்றில் எளிதில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் இருப்பதை துல்லியமாகக் கண்டறியும் ஒரு முறையைப் பயன்படுத்தி ஆய்வை மேற்கொண்டனர். அதில் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையாக 27 சேர்மங்கள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த 27 மூலக்கூறுகளின் சேர்மங்களின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு லிம்போமா, கார்சினோமா அல்லது இரத்தப்புற்று நோய் இருக்கிறதா என்பதை 100% அவர்களால் அனுமானிக்க முடிந்தது. சுவாரஸ்யமாக, புற்று நோய்களில் வேறுபாட்டை சோதனையால் உறுதி செய்ய இயலவில்லை. இந்த மூலக்கூறுகள் இந்த புற்றுநோய் செல்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் உருவாகியிருக்கலாம் என்பதை சோதனை முடிவு உறுதி செய்தது. "நூற்றுக்கணக்கான புற்றுநோய் வகைகள் இருக்கலாம். ஆனால் வளர்சிதை பார்வையில் இருந்து பார்க்கும் போது, புற்றுநோய் என்பது ஒரு ஒற்றை உயிர்வேதியல் நிகழ்வாகும். புற்றுநோயின் எந்த நிலையிலும் எளிதில் காற்றில் ஆவியாகக் கூடிய குறிப்பிட்ட கரிம சேர்மங்களின் (VOC) பகுப்பாய்வு மூலமாக அறிய இயலும்," என்று அன்டோனியோசி கூறுகிறார். 2019-ஆம் ஆண்டில் அவர்கள் 27 வகையான கரிம சேர்மங்களைக் கண்டறிந்தனர். தற்போது தனித்துவமான வளர்சிதை மாற்றத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் செல்களால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கரிம சேர்மங்களை ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு ஏற்படும் வளர்சிதை மாற்ற தொந்தரவுகளை அவர்கள் கண்டறிந்த செருமெனோகிராம் மூலமாக அறிய முடியும் என்பதை, இன்னும் வெளியிடப்படாத ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக அன்டோனியோசி கூறுகிறார். புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செல்கள் அசாதாரண மாற்றத்தை சந்திக்கும். அவை புற்றுநோய்க்கு வழிவகை செய்யும். ஆனால் புற்றுநோய் செல்களாக அவை அப்போது இருப்பதில்லை. "புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் 90% ஆக இருக்கிறது என்ற நிலையில், புற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய கட்டத்தைக் கண்டறியும் போது, சிகிச்சையின் வெற்றி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார். நரம்புச் சிதைவு நோய்களான பார்கின்சன் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களையும், ஆரம்ப கட்ட வளர்சிதை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கருவியின் மூலம் கண்டறிய இயலுமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும் அதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. வருங்காலத்தில் செருமெனோகிராம் வழக்கமான மருத்துவ ஆய்வு செயல்முறையாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒரு முறை சிறிய அளவில் காதில் சேரும் அழுக்கை வைத்து நீரிழிவு, புற்றுநோய், பார்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களைக் கண்டறியவும், மற்ற ஆரோக்கிய சீர்கேட்டினால் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பிடவும் இந்த கருவி பயன்படலாம்," என்று அன்டோனியோசி தெரிவிக்கிறார். பிரேசிலில் அமைந்துள்ள அமரல் கர்வல்ஹோ மருத்துவமனையில் செருமெனோகிராம் நோய் கண்டறிதல் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மேற்பார்வை பொறிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறார் அன்டோனியோசி. தற்போது சிகிச்சை முறை ஏதும் இல்லாமல் இருக்கும் மெனியர்ஸ் என்ற உள்காது பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தன்னுடைய ஆராய்ச்சி வருங்காலத்தில் உதவிகரமாக இருக்கும் என்று முசா நம்புகிறார். முதலில் அதிக அளவில் நோயாளிகள் மத்தியில் தன்னுடைய பரிசோதனை முறையை பயன்படுத்தி, முடிவுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் நோயறிதல் பரிசோதனையை அறிமுகம் செய்ய அவர் விரும்புகிறார். கோவிட்-19 நோய் கண்டறியும் கருவிகளை எப்படி கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்களோ அதேபோன்ற கருவிகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்று முசா தெரிவித்தார். பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/ BBC படக்குறிப்பு,கோவிட்-19 நோய் கண்டறியும் கருவிகளை எப்படி கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்களோ அதே போன்ற கருவிகளை உருவாக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது காது மெழுகை புரிந்து கொள்ளுதல் இயல்பாக காது மெழுகில் காணப்படும் மூன்று கொழுப்பு அமிலங்களின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முசா தெரிவிக்கிறார். "எதனால் இந்த நோய் ஏற்படுகிறது அல்லது அதற்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை அறிந்து கொள்ள இது உதவும்," என்று முசா கூறுகிறார். இயல்பான, ஆரோக்கியமான காது மெழுகில் உள்ள ரசாயனங்கள் மற்றும் நோயின் பல்வேறு கட்டங்களில் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் புரிந்து கொள்ள நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முசா கூறுகிறார். இன்று இரத்த மாதிரிகள் எவ்வாறு நோய் அறிதல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறதோ அது போன்று ஒரு நாள் காது மெழுகும் பயன்படுத்தப்படும் என்று அவர் நம்புகிறார். "லிபிட் வளர்சிதை மாற்றத்தால் நிறைய நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில், காது மெழுகில் அதிக அளவில் லிபிடுகள் இருப்பதால் இது ஒரு சிறப்பான பொருளாக நோய் அறிதல் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தலாம்," என்று கூறுகிறார் முசா. பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி பேராசிரியராகவும், வேதியிலாளராகவும் பணியாற்றி வரும் பெர்டிதா பாரேன், காது மெழுகு குறித்து தனியாக ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆனால், உயிர் மூலக்கூறுகளை பகுப்பாய்வு செய்து அதனை நோய் கண்டறிதலில் எப்படி பயன்படுத்த இயலும் என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோட்பாட்டளவில், காது மெழுகு என்பது நோய்களின் அறிகுறிகளைக் கண்டறியும் சிறப்பான பொருளாக இருக்கலாம் என்று ஒப்புக் கொண்டார். "இரத்தத்தில் காணப்படும் சேர்மங்கள் நீரில் கரையக் கூடியவை. ஆனால் காது மெழுகு கொழுப்புகளால் ஆனது. தண்ணீரோடு பொருந்தாதது. இரத்தம் குறித்து மட்டும் ஆய்வுகளை மேற்கொண்டால், உங்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைக்காது. ஆனால் கொழுப்புகளில் தான் மாற்றங்கள் தொடங்குகிறது," என்று அவர் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgm83w7n193o1 point- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
1 pointசத்தியலிங்கத்தின் இடத்துக்கு பாராளுமன்றம் போகலாம் என்றே பலராலும் எதிர்வு கூறப்பட்டது. உள்ளூராட்சிசபையில் சிறிது முன்னேற்றம் கண்டவுடன் மாகாணசபையிலும் இதேமாதிரி ஒரு வெற்றி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறார் என எண்ணுகிறேன். சங்குக்கு விழுந்த பலத்த அடி அம்மணவாகவேனும் வீட்டுக்குள் ஒழிக்க வேண்டிய நிலை. கில்லாடி சுமந்திரன் சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்கிறார். உள்ளூராட்சி சபையில் பொத்திக் கொண்டு ஆதரவு கொடுத்தால் மாகாணசபையில் சங்கு வீட்டுக்குள் போகும். சங்குக்கும் வேறு வழியில்லை. ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ நினைப்பதில் தவறில்லையே.1 point- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
கவி அருனாசலம் அவர்கள் கவிதை எழுத எங்கு கற்றார் என்பது இப்போது புரிந்தது.😁1 point- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
2004இல “சந்தைக்கு வந்த கிளி” என்ற தலைப்பில் யாழில் எழுதியிருந்தேன். தேடிப் பார்த்தேன் கிளி அகப்படவில்லை. எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது. எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும். முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம். மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும். இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள். இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள். இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள். ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும். சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள். எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார். நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே, „ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா. ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா. நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது. கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன். தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன். "வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?" வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன். ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது. " பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி. " என்ன விலை?" விலையைச் சொன்னார். அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது. வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன். இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன். பெரிதாக இடி விழத் தொடங்கியது. இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான். தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா? கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது. "...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................." பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன். " என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..." அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன. ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன். பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.1 point- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
அண்மையில் பிரிதானியாவில் பீட்டர் சலவன் எனும் ஒருவர் 38 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். இப்போ 70 வயதை நெருங்கி உள்ள இவர், அவரின் இருபதுகளில் ஒரு 19 வயது பென்ணை, வன்புணர்ந்து, சித்திரவதை செய்து கொலைசெய்தார் என சிறைக்கு அனுப்பப்பட்டார். 38 வருடம் கடந்து டின் என் ஏ சாட்சி இதை செய்தது இன்னொருவர் என நிறுவியாதால் வெளியே வந்துள்ளார். நினைத்துப்பாருங்கள் இது எந்த பெரிய அநியாயம்? 38 வாழ்வின் முக்கியமான வருடங்களை சிறையில் அநியாயமாக வீணடித்துள்ளார். ஆனால்….. இவருக்கு மரண தண்டனை கொடுத்திருந்தால்? இப்போ அவரை மீள கொண்டுவந்திருக்கவா முடியும்? அல்லது ஆண்மை பறிப்பு போல மீட்க முடியாத தண்டனையை கொடுத்திருந்தால்? உலகின் முதல்தர குற்றவியல் நீதி அமைப்பு உள்ள இங்கிலாந்திலேயே இப்படியான தவறுகள் நடக்கும் போது, இந்தியா இலங்கையில் ? ஆகவேதான் இப்படியான தண்டனைகளை பெரும்பாலும் கொடுப்பதில்லை. இன்னும் பல காரணங்கள் உள்ளன. https://uk.news.yahoo.com/peter-sullivan-victim-longest-running-141720495.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAMrP_qR2PangmUiNQwTTlrAfP9x-Twx44jpSfe4VwxyNorqNopkznGLj8N8pFWH8ZtNqL5PCM2ovuQBKQHDhp0odXPju-dEuYCQid6StxlOb3oyzYi0cDf7g3ZOTqbn7V7o-YYeH6dpX9PRyjSYgi_RXV14sHoKAob5eRbjz_d1-1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றால் அரசாங்கம் ஏன் சர்வதேச விசாரணைகள் எதிர்கொள்வது குறித்து இவ்வளவு தூரம் அச்சமடைகின்றது ? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
https://www.facebook.com/share/v/16KcLPuZ8N/?mibextid=wwXIfr1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
1 pointஇவர்களது முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்க மட்டும் வாங்க