Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39311
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88794
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    53012
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1427
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/19/25 in all areas

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 61வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்சல் மார்ஷினதும், எய்டன் மார்க்கத்தினதும் வேகமான அரைச் சதங்களுடனும், பின்னர் வந்து அதிரடியாக 45 ஓட்டங்கள் எடுத்த நிகொலஸ் பூரனினது ஆட்டத்துடனும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக் குவிக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் அபிஷேக் ஷர்மாவினது மரண அடியான 20 பந்துகளில் எடுத்த 59 ஓட்டங்கள் இலக்கை துரத்துவதை இலகுவாக்கியது. ஹென்றிக் க்ளாஸன், இஷான் கிஷான், கமிந்து மெண்டில் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடன் 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  2. நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும் நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.
  3. உஸ் ........ சத்தம் போடாதேயுங்கோ ........... இது செம்பாட்டானுக்காக அவ மேக்கப் போடமுதல் இரவோடு இரவாக அவசரமாக எடுத்துப் பதிந்த படம் . .......... நல்ல வடிவான மேக்கப்புடன் எடுத்த படம் கிருபன் போட்டிருக்கிறார் . ........ ! 😂
  4. நாளைக்கு இரட்டையர் ஜோடியை சவட்டுறம்😃
  5. கிருபன், பேசாம நந்தனுக்கும் புலவருக்கும் அவர்களோட சேர்ந்த ஏராளனுக்கும் புள்ளியக் குடுத்துட்டு, கடைய சாத்தி விடுங்க. உங்களுக்கும் நாளைக்கு வேலை மிச்சம். சென்னை வேற சுதப்புது. நந்தன் புலவர் கை வைச்சதெல்லாம் துலங்குது. ஒன்றையும் ஒன்றையும் கணக்குப் போட்டுப்பாருங்க. எல்லாம் சரியா வரும். எனக்கும் அந்த இருவரோட சேர்ந்தா ஆகாது. பிறகென்ன. சென்னை கதி அதோகதிதான்.
  6. ந‌ந்த‌ன் அண்ணைய‌ இப்ப‌வே நிர‌ந்த‌ர‌ முத‌ல்வர் என்று அறிவிக்க‌லாம்........................ என‌து விருப்பம் எனது குரு ர‌சோத‌ர‌ன் அண்ண‌ கிட்ட‌ நெருங்க‌னும் ஆக‌ தூரத்தில் நான் நின்றால் அது என‌து க‌வுர‌வ‌த்துக்கு வெக்க‌க் கேடு லொள்😁😛......................
  7. திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல. உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................ ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை. சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.
  8. அண்ணை கிட்டடியில பானிப்பூரி ஏதும் சாப்பிட்டனியளோ? அல்லது கொசு கடித்து தொற்று ஏற்பட்டுவிட்டதோ🤣.
  9. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தாலும், நெஹால் வதேராவினதும், ஷஷாங் சிங்கினதும் அதிரடியான அரைச் சதங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயர், ப்ராப்சிம்ரன் சிங், அஸ்மத்துலா ஒமார்சாய் ஆகியோரினது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் யஷஸ்வி ஜெய்வாலினது 50 ஓட்டங்களும், வைபவ் சூர்யவன்ஷியினது 40 ஓட்டங்களும் கைகொடுத்தாலும், பின்னர் வந்த வீரர்களின் துருவ் ஜுரேலின் அதிரடியான 53 ஓட்டங்களைத் தவிர பிறர் வேகமாக அடித்தாட முடியாத நிலையாலும், இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிந்ததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலின் அதிரடியான சதத்தின் (ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள்) உதவியுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனினது மின்னல்வேகத்தில் எடுத்த சதத்தாலும் (ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்கள்), அணித்தலைவர் சுப்மன் கில்லினது புயல்வேகத்தில் ஆட்டமிழக்காமல் எடுத்த 93 ஓட்டங்களுடனும் 19 ஓவர்களில் 205 ஓட்டங்களை எதுவித விக்கெட் இழப்புமின்றி எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தமிழக வீரர் டி.நடராஜனின் பந்துவீச்சு பந்துவீசும் இயந்திரத்தில் இருந்து வருவது போல இருந்ததால், அவர் 3 ஓவர்களில் 49 ஓட்டங்களைக் கொடுத்தார். முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 6 பேருக்கும், "முடிவில்லை" எனக் கணித்த இரட்டையர் ஜோடிக்கும் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  10. அடைக்கலம் தருவதற்கு இந்தியா ‘தர்ம சத்திரம்’ அல்ல- ஈழ அகதி வழக்கில் உச்சநீதிமன்றம்! 19 May 2025, 7:24 PM உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு இந்தியா ஒன்றும் ‘தர்ம சத்திரம்’ அல்ல என்று ஈழ அகதி சுபாஷ்கரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2015-ம் ஆண்டு ஈழத் தமிழரான சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுபாஷ்கரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், சுபாஷ்கரனின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்தது சென்னை உயர்நீதிமன்றம். 2022-ம் ஆண்டு தண்டனைக் காலம் முடிவடைந்ததால் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட சுபாஷ்கரை, விரைவாக இலங்கைக்கு நாடு கடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுபாஷ்கரன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது சுபாஷ்கரன் தரப்பில், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது; ஆகையால் சுபாஷ்கரன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இந்தியாவில் குடியேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் ஆகியோர், உலக நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குடியேறுவதற்கு இந்தியா தர்ம சத்திரம் (Dharamshala) கிடையாது; 140 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா ஏற்கனவே திணறிக் கொண்டு இருக்கிறது; இந்தியாவில் குடியேறுவதற்கு என்ன உரிமை உள்ளது? என கேள்வி எழுப்பினர். மேலும், இலங்கைக்கு திருப்பி அனுப்பும் போது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாடுகளை அணுகலாம் என்றும் தெரிவித்து சுபாஷ்கரனின் மனுவை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். https://minnambalam.com/india-is-not-a-dharamshala-to-grant-asylum-to-all-supreme-court-in-eelam-refugee-case/#google_vignette
  11. பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில் பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது. தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. கட்டுநாயக்கா அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார். அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார். நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர். https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS தொடரும்............
  12. "முள்ளிவாய்க்கால் கஞ்சி" ஓயாத எறிகணை வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களின் காது கேளாத எதிரொலிகளுக்கும் மத்தியில், முள்ளிவாய்க்கால் தமிழ் உணர்வின் இறுதி கோட்டையாக நின்றது. ஒரு காலத்தில் பசுமையான, உயிரைக் கொடுக்கும் வன்னி நிலங்கள், தரிசு நிலமாக, இரத்தத்தில் தோய்ந்து மூழ்கிய வயல்களாக மாறிவிட்டன. நம்பிக்கை உயிருடன் அங்கு இல்லை, பலவீனமாக இருந்தது, மங்கிப்போய் இருந்தது, அணையப் போகும் நெருப்பில் கடைசியாக ஒளிரும் நெருப்பைப் போல. என்றாலும் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு என்ற வீர உணர்வுமட்டும் எரிந்துகொண்டே இருந்தது. பெருமைமிக்க மக்களின் வெடித்து சிதறிய எச்சங்கள் பதுங்கு குழிகளில் ஒன்றாகக் குவிந்தன. இன்னும் அந்த அவலங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டு எஞ்சி இருக்கும் வன்னி மக்களின் உடல்கள் மெலிந்தன. ஆனால் அவர்களின் ஆன்மா உறுதியாக இருந்தது. அது உடைக்கப்பட முடியாதது. இந்த பேரழிவு நிலப்பரப்பில்தான் அறிவு மற்றும் வான்மதியின் காதல் கதை முட்கள் நிறைந்த வயலில் ஒரு உடையக்கூடிய மலராக மலர்ந்தது! அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த சத்தங்கள் ஓயவில்லை, முறிந்து விழுந்த மரக்குற்றி ஒன்றின் மேல் அமர்ந்தபடி, அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்த வான்மதி, பல மணி நேரமாக தூங்காத கண்ணுக்கு ஓய்வுகொடுத்து சற்று தன்னை மறந்து, அயர்ந்து தூங்கி விட்டாள். மூதாதையர்களின் கடுமையான மன உறுதியை இன்னும் தாங்கிய கண்களைக் கொண்ட இளம் தமிழ் மருத்துவர் அறிவு தற்செயலாக, அந்த வழியால் போகும் வேளையில், காலை சூரியனைப் போல மென்மையான இதயம் கொண்ட துடிப்பான தன்னார்வலரான வான்மதி மரக்குற்றியின் மேல், சரியான களைப்பில், தன்னையே மறந்து, தூங்கிக்கொண்டு இருக்கும் சங்கடமான நிலையைப் பார்த்து குழம்பினான். அங்கே கொஞ்சம் தூரம் தள்ளி மக்கள் குழப்பத்தின் மத்தியிலும், தங்கள் உயிரைப் பிடித்து வைத்திருக்க ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை குடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட அவன், இரண்டு தேங்காய் சிரட்டைகளில், பலருக்கு இறுதி உணவாக மாறிய உயிர்வாழும் உப்பில்லா கஞ்சியை தானும் பெற்று அவளை நெருங்கினான். அவன், அவள் அருகில் வர, அவளும் கண் திறக்க சரியாக இருந்தது. எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அவனைக் கண்டு அவள், தன் களைப்பிலும் சோர்விலும் பசியிலும் கூட சொக்கித் தான் போனாள். வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் மத்தியிலும் மனம் தளரா கம்பீர நடை. அவனை வைத்த கண் வாங்காமல், அருகில் வரும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் அருகில் வரும்பொழுது தான், அவள் யார் என்று உற்றுக் கவனித்தான். அப்படியே ஒருகணம் தன்னை மறந்தான். 'கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்' ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடைய அவள், அந்த கண்களை இன்னும் மூடவில்லை. ஆனால் அப்படியே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் ஒன்று மரக்குற்றியின் மேல் செதுக்கியது போல, ஒய்யாரமாக ஒரு மரக்கிளையுடன் சாய்ந்து இருந்தாள். அவள் கண்கள் விழித்து இருந்தாலும் அதில் சோர்வைக் கண்டான். பசியின் ஏக்கத்தைக் கண்டான். அவன் தான் கொண்டுவந்த, தேங்காய் சிரட்டையில் உள்ள அந்த காஞ்சித் தண்ணீரில், மிதந்து கொண்டு இருந்த சோற்றைக் கிளறிக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவன் ஒரு மருத்துவன், அவனுக்கு அவளின் பசிக்கொடுமை மற்றும் பயம் புரிந்துகொண்டது. அவளின் தலை முடியை தடவிக் கொடுத்துக் கொண்டு, அந்த கஞ்சியில் கலந்து இருந்த சோற்றை பிரித்தெடுத்து அவளுக்கு முதலில் ஊட்டினான். முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கும் நையாற்றின் நீரோட்டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல, அவளின் கூந்தல் அவனுக்கு இருந்தது. அவள் நாணமிகுதியால் அவனை கள்ளப்பார்வையால் நோக்கி சாய்ந்திருந்தது கழுத்து. காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள், அவனை தடுக்க முற்பட்டு, ஆனால் மனமும் வயிறும் இடம் கொடுக்காமல் போராடிக் கொண்டு இருந்தது. சாதாரண நேரம் என்றால், அவள் கஞ்சியைத் தானே, அவனிடம் இருந்து எடுத்து சாப்பிட்டு இருப்பாள். ஆனால், இன்று எனோ அவனை ஊட்ட விட்டுவிடடாள். அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை. ஏன், குண்டுகள் கூட அமைதியாக இருந்துவிட்டது. அவர்கள் இருவரும் வெறும் வார்த்தைகளை விட, அதிகமாகப் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை உள்ளத்தால், கண்களால் பரிமாறிக் கொண்டனர். அவர்களின் மௌனப் பார்வைகள் சொல்லப்படாத எதோ ஒன்றை ஒருவரின் மேல் ஒருவர் தேடிக்கொடு இருந்தன. அவள் ஒரு சிறிய புன்சிரிப்புடன், அவனைப் பார்த்தாள். பின் அவன் வைத்திருந்த கஞ்சி சிரட்டையை ஒருமுறைத் தொட்டாள். அவள் மனதில் சில வேதனைகள் ஊசல் ஆடுகிறது என்பதை அவன் அறிந்தான். அவள் அதை உணர்ந்தது போல, இரு நாளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கூறத் தொடங்கினாள்: "அன்று சிறிய பதுங்கு குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக் கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது. என் கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்து உருண்டது. கஞ்சி மண்ணோடு மண்ணாய்க் கலந்து. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒருவர் பதுங்கி குழிக்கு அருகில் நிற்பதைப் என்னால் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது. என்றாலும் அவர் அதைப் பொருட் படுத்தாமல், என்னை கத்திக் கூப்பிட்டார். நான் கிடங்கின் அருகில் ஓடிச் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காக மாறிக் காட்சியளித்தது. அங்கே, என்னோடு சற்று முன் கஞ்சி அருந்திக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்." என கண்ணீருடன் அவனுக்கு கூறினாள். அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வந்தது. "காதல் ஹார்மோன்" [The love hormone] என்று அழைக்கப்படும் ஆக்சிடாசின் (Oxytocin) கசிந்து அவர்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது. 'உயிரும் உணர்வும் சங்கமிக்கும் பார்வையே பருவத்தில் பூத்து மாற்றிடும் மனதையே வேம்பும் கரும்பும் சேர்ந்தக் கலவையோ காமத்தின் பாதையில் புனிதப் பயணமோ இயற்கை உதிரும் இன்பச் சருகோ தெளிவாய்த் தெரியுதே குழம்பிய பார்வையில்! அவன் ஓர் மருத்துவன், நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தவன். தொட்டவன், ஆனால் இன்று அது ... அதன் தாக்கம் அவனால் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் அவளுக்கு உப்பில்லா கஞ்சியை ஊட்டிய பின், அவளை ஒரு மரத்தின் கீழ் தரையில் படுக்க விட்டுவிட்டு, தானும் ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை ஒரு பாறைக் கல்லில் இருந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே குடித்தான். பின் அவளையும் அழைத்துக் கொண்டு, தன் கடமையை செய்ய புறப்பட்டான். தன் மருத்துவப் பணியை அடுத்த கிராமத்தில் தொடர, அங்கு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் அகழிகளில் குறுகிய, ஆபத்தான நடைப்பயணங்களை மேற்கொண்ட போது, தமிழ் காவியங்களிலிருந்து அல்லது தானே இயற்றிய சில வரிகளை வான்மதிக்கு, அவளை உற்சாகப்படுத்துவதற்காக, பயத்தை நீக்குவதற்காக அடிக்கடி கூறிக் கொண்டு போனான். அவன் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டினான். கண்ணகியின் தளராத மனப்பான்மைக்கும் தமிழ் மக்களின் உயிர்வாழ்வுப் போராட்டத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை வரைந்து காட்டினான். புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். அங்கு அந்த இறுதி நாளில் மிக சொற்ப மருத்துவர்களே கடமையாற்றினார். அவர்களில் ஒருவனே இந்த அறிவு! அவன் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் அருகில் சென்றதும், கண்ணகி என்ற பத்தினித் தெய்வத்தை அவளுடன் சேர்ந்து வணங்கி விட்டு, வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இருக்கும் கண்ணகி முன்னால், தன்னை வான்மதியுடன் இணைத்த உப்பில்லா முள்ளிவாய்க்கால் காஞ்சிக்கும் நன்றி தெரிவித்தான். பின் அவன் அங்கு காயப்பட்டிருக்கும் எல்லோருக்கும் ஆலய முன்றலில் தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். இம் முறை வான்மதியும் அவனுக்கு உதவியாக அங்கு கடமையாற்றினாள். ஆனால் அந்த அவலம் நிறைந்த சூழலிலும், அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மணப்பதையே லட்சியமாக்கினாள். வைகாசி மாதத்தில் பூரணை நாளை அடுத்து வரும் திங்கள் நாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் நிகழும் பொங்கல் விழாவில் தான் அவனுடன் கலந்து கொள்வேன் என்று தன் மனதில் வேண்டிக் கொண்டாள். நாள்பட நாள்பட, பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, நிலைமை மேலும் இருண்டது. சக்திவாய்ந்த சர்வதேசத்தின் அமைதியான உடந்தையால் இலங்கை அரசாங்கம் தங்கள்ப் பிடியை இறுக்கிக் கொண்டன. கொத்து குண்டுகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் மழை பெய்தன, அவற்றின் வெடிப்புகள் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் நெரிசலான பதுங்கு குழிகள் வழியாகச் சென்றன. பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடங்கள் கூட பொறிகளாக மாற்றப்பட்டன, அப்பாவிகளை அவர்களின் கொடிய வலையில் சிக்க வைத்தன. ஒரு மாலை, புகை மூட்டம் நிறைந்த அடிவானத்திற்குப் பின்னால் சூரியன் மறையும் போது, அறிவு மற்றும் வான்மதி இருவரும் தங்கள் கடைசி உணவாக இருக்கலாம் என்று அஞ்சியதை பகிர்ந்து கொண்டனர் - அது ஒரு சிறிய சிரட்டை முள்ளிவாய்க்கால் கஞ்சி. அவர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, உள்ளக சுதந்திரம் பெற்று, 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் சுயாட்சிப் பிரிவு அமைந்து, மீண்டும் கட்டப்பட்ட அந்த தமிழ்த் தாயகம் ஒன்றில், ஒரு நாள் தெளிவான வானத்தின் கீழ் சுதந்திரமாக ஓடிவிளையாடும் குழந்தைகள் பற்றிய கனவுகளை கிசுகிசுத்தனர். பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று விழும் அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்ல, கஞ்சிக்கு கை ஏந்தியவர்களும் கொன்று குவிக்கப் பட்டனர். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்த காலம் அது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் காலையில், அருகிலுள்ள குழியிலிருந்து தண்ணீர் சேகரிக்க வான்மதி மற்றவர்களுடன் வரிசையில் நின்றபோது, திடீரென குண்டுகள் அந்த வரிசையைத் தாக்கின. குண்டுவெடிப்பு, சதை மற்றும் எலும்பைக் கிழித்து, காற்றில் ஒரு இரத்தம் கலந்த சிவப்பு மூடுபனி தொங்கியது. அருகில் இருந்த அறிவு, புகையை நோக்கி விரைந்தான். அவனது இதயம் பயத்தால் துடித்தது. ஒரு காலத்தில் மனித உருவங்களாக நடமாடியவர்களின் சிதைந்த எச்சங்களுக்கு மத்தியில் வான்மதியைக் கண்டான். அவளுடைய இடது கால் சேதமடைந்திருந்தது. அவளுடைய உடல் துண்டுகளால் சிக்கியிருந்தது. ஆனாலும் அவள் உயிருடன் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தாள், அவளுடைய கண்கள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டிருந்தன. அவன் அவளை ஒரு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று, எதோ கையில் கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். சங்க இலக்கியங்கள் போற்றிய பண்டைய வசனங்களின் சிலவரிகளை, அவளை உற்சாகப்படுத்த காதில் கிசுகிசுத்தான். ஆனால் அவளுடைய இரத்தம் அவன் சட்டையில் ஊறி, எதை எதையோ வரையத் தொடங்கியது. அவளுடைய பிடி தளர்ந்தது, அவளுடைய மூச்சு மங்கியது, அவளுடைய கண்கள் பளபளப்பாக, அவனால் எட்ட முடியாத தூரத்தைப் பார்த்தன. அறிவு அவள் உடலை குளிர்ந்த பூமியில் கிடத்தி, இறுதி விடை கொடுத்தான்! "அழகான என் குட்டிச் செல்லமே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ?" "வாய் மடித்து கண் சுழன்று வான் உயர கை அசைத்து வாட்டம் இன்றி துள்ளிச் சென்றவளே வான்வழியால் உன்னை பொசுக்கியவன் யாரோ?" "மணலால் கதிரவன் எழும் காலையில் மனதை உறுதியாக்கி தண்ணீருக்கு நின்றவளே மரணப் பயமின்றி தொண்டு செய்தவளே மண்பானையில் கஞ்சி கொதிப்பது தெரியாதோ?" "செவ்வாய் நீயோ என்னைச் சந்தித்தாய் செவ் இதழ் கொண்டு கஞ்சி பருகினாய் செந்தமிழ் நிலைக்க துன்பம் சுமந்தாய் செல்லடித்து உன்னைச் சிதைத்தவன் யாரோ ?" முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு அடையாளமாக, உயிர்வாழ்வின் அமிர்த சுவையாக, துரோகம் செய்யப்பட்ட மக்களின் உப்புக் கண்ணீராக, சுதந்திரம் மீண்டும் மலரும் நாளைய தினம் பற்றிய அழியாத வாக்குறுதியாக, இன்று 'அறிவு'க்கு மட்டும் அல்ல, எல்லா ஈழத் தமிழர் மனதிலும் ஒட்டி நிற்கிறது! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  13. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரிகின்றது, அண்ணா................ இங்கு களத்தில் எழுதப்படும் பல கருத்துகளை அவரவர் சொந்த விருப்பங்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் எப்போதோ வந்துவிட்டது. அவை நடைமுறை உலகில் இல்லாதவை, எத்தனை தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டாலும். நேற்று தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை. ஒரு இடத்தில் இலங்கை தமிழர்களின் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து விட்டது என்று செய்தியில் காட்டினார்கள். அங்கு குடியிருப்பவர்கள் அந்த ஊரில் இருக்கும் அங்கன்வாடியில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் செய்தியாளர்களிடம் கதைத்தார். அவருடைய தமிழில் ஈழ அடையாளம் எதுவுமே இல்லை. அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை போல. இது தான் நிஜ உலகம்.
  14. ஆசிய தொடர்களை மட்டுமல்ல பன்னாட்டுத் தொடர்களையும் இந்துஸ்தான் புறக்கணிக்கவேண்டும்.
  15. அதிபர் ட்ரம்ப் என்ற மனிதரைப் பற்றிய உங்களின் பார்வை மிகச் சரியானது. அவர் ஒரு தனிமனிதராக தன்னுடைய இலாப - நட்டக் கணக்கையே எங்கெனும் பார்க்கின்றார். நண்பர்கள், எதிரிகள் என்று இல்லாமல், இலாபம் வருகின்றதா, இல்லையா என்றே எண்ணுகின்றார். ஆனல் அவரின் பின்னால் ஒரு கூட்டம் இருக்கின்றது. நடு அமெரிக்காவில் இருக்கின்றனர்; வருமானம் பெரிதும் குறைந்தவர்கள்; ஒரு அடையாளம் கொண்டவர்கள். வேறு சிலர் மிகப் பெரும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். இவர்கள் இலாப நட்டக் கணக்கு பார்ப்பவர்கள் இல்லை. இங்கிருக்கும் குடியேறிகளை மனிதத்தன்மை அற்ற முறைகளினூடு வெளியேற்றிக் கொண்டே, தென் ஆபிரிக்காவில் இருந்து வெள்ளை இன மக்களை புதிய குடியேறிகளாக கொண்டு வருபவர்கள் இவர்கள். ஆங்கிலம் மட்டுமே இங்கு ஒரு மொழி என்பவர்கள் இவர்கள். DEI வேண்டாம் என்பவர்கள் இவர்கள். அதிபர் ட்ரம்ப் இந்த விடயங்களில் அக்கறை இல்லாதவராக இருக்கக்கூடும். ஆனால் அதிபரின் வாக்கு வங்கி இவர்கள் தான். அதனாலேயே இந்தக் கொள்கைகள் இன்று இங்கு முன்னிறுத்தப்படுகின்றன. இதன் வேர்கள் நீண்டு, அது இறுதியில் ஒரு இனப் பாகுபாடாக வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. ஆமாம், மோடி அவர்களில் ஒருவர், அவர் பாடம் கற்றதே ஆர் எஸ் எஸில் தான். அதன் பின்னர் தான் அரசியலுக்கே வந்தார்.
  16. சீனாவோ அல்லது இன்னொரு மிகப்பெரிய வளமுள்ள நாடு விரும்பி, இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கினால், நிச்சயம் இந்தியா திணறும். ஆனால் இன்றைய உலகில் தங்களுக்கு சேதாரம் அதிகம் இன்றி எந்த ஒரு நாடும் இதைச் செய்வார்களா, செய்ய முடியுமா என்பது ஒரு கேள்வி. உக்ரேன் போன்ற ஒன்று கிடைத்ததால் அமெரிக்காவும், மேற்குலகும் ரஷ்யாவிற்கு இதையே செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவால் ஒரு முனையில் போரை நடத்த முடியுமா என்பதே இப்பொழுது கேள்விக்குறியாகி இருக்கின்றது. பல முனைகளில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தால், இந்தியாவால் சமாளிக்கவே முடியாது. மற்றும் இன்றைய இந்தியாவின் பொருளாதாரமே உலகிற்கு சேவைகளை வழங்குதலில் தங்கியிருக்கின்றது. யுத்தமும், சேவைகள் வழங்குதலும் ஒன்றாக இருக்கமுடியாது. இந்தியா உடைந்து போக வேண்டும் என்பது ஈழத்தமிழர்களின் பெரும்பாலானவர்களின் விருப்பமே. அதன் மூலம் இந்திய வெறுப்பை காட்டவும், பிரிவதால் எங்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர். அதனாலேயே பலரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக மாறியுள்ளார்கள். நான் நடைமுறைகளையும், உலகின் போக்கையும் அடிப்படையாக வைத்தே எனது கருத்துகளை எழுதுகின்றேன். எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை இங்கு தவிர்த்து விடுகின்றேன். 'நீங்கள் எந்தப் பக்கம்..................' என்ற கேள்விக்கு முன்கூட்டிய பதில் இது..................🤣
  17. லண்டன் 🇬🇧" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம் லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 1...3,410 个心情 · 421 次分享 | லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150...லண்டன் 🇬🇧 மாநகரின் மத்தியில் 150 மாணவர்கள் ஒன்று திரண்டு ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடனம்
  18. உண்மைகளை ஒவ்வொன்றாக சிறப்பாக உங்கள் கருத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள் [திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். ] இந்தியா என்றுமே உடையாது என்ற உண்மையை ஏற்று கொள்ள முடியாமல் இந்தியா உடையும், இந்தியா சிதறும் என்று வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கனவு கண்டுகொண்டிருப்பதால் 200 வருடங்கள் சென்றாலும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் நடைபெற போவது இல்லை. 💯 உண்மை
  19. GMT நேரப்படி நாளை செவ்வாய் 20 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) செவ்வாய் 20 மே 2:00 pm GMT டெல்லி - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 20 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் கோஷான் சே அகஸ்தியன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏராளன் நந்தன் புலவர் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  20. அதேதான். கிருபனும் இதைப் பத்திச் சொன்னவர். எனக்கும் அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை.
  21. அதுவும் ச‌ரிதான்👍...................... ந‌ட‌ந்து முடிந்த‌ ச‌மிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் இவ‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ வில்லை................ போன‌ வ‌ருட‌ம் க‌ர்விய‌ன் தீவில் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை போட்டிக‌ளில் விளையாடின‌வ‌ர் , பெரிசா அடிச்சு ஆடா விட்டாலும் ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்ச‌வ‌ர்.........................
  22. 18 MAY, 2025 | 08:08 PM பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 வருடங்கள் ஆகிவிட்டன. 26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும் சிதறிப்போன குடும்பங்களையும் பேரழிவடைந்த சமூகங்களையும் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகின்றோம். அத்துடன் தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனேடிய தமிழ்ச் சமூகத்தையும் கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற்கொள்கின்றோம். பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கின்றது. இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும் போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215099
  23. இதைத்தான் உங்களிட்ட இருந்து எதிர்பார்த்தது. நீங்கள் என்ன என்டா, அவ உங்களுக்கு தனிப்பட அனுப்பினத இங்க போட்டு விட்டீங்கள் (அந்த makeup இல்லாத படம்). பரவாயில்லை. என்னைச் சாட்டி, எல்லாருக்கும் இனிப்பு குடுங்கோ. சமுகம் நல்லா சந்தோசமா இருந்தாச் சரிதானே.
  24. தந்தையின் ஆசை நிறைவேறியது.
  25. இந்தியர்கள் ஒப்பாரியே வைப்பார்கள்🤣 இதுவரை போரில் மட்டும் அல்ல ஒரு சின்ன கைக்கலப்பில் கூட சீனாவை இந்தியா வெல்லவில்லை. சீனாவை சீண்டினால் இந்தியா நினக்கமுடியாத வழியில் எல்லாம் அடி விழும்.
  26. சீனா துருக்கி ரஷ்யா நாட்டவர்களுன். நான் வேலை செய்துள்ளேன் தங்களுடைய நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்று அழுவார்கள். ஆயுதம். பரிசோதனை செய்து பார்ப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் ஆனால் இந்தியா இடம் இனிமேல் முறையாக அடி வேண்டுவார்கள். சீனாவில் இளைஞர்கள் இல்லை குறைவு வயோதிபர்கள். தான் கூட. இந்தியாவை வெல்ல முடியாது எங்களுக்கு இந்தியா உதவி செய்யவில்லை அந்த கவலை எனக்கும் உண்டு” அதற்காக இந்தியா தோற்கடிபபட வேண்டும் என்பது நான் ஏற்கவில்லை ஏன் இந்தியாவை கைப்பற்றவில்லை???? மாறாக தண்ணீரை தாருங்கள்” என்று ஏன் கொஞ்ச வேண்டும் ?? இந்தியா தோற்கடிக்கப்பட்டால். இலங்கை தமிழர்கள் அடையும் நன்மை தான் என்ன???
  27. இந்த சஜித்துக்குத்தான்... சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுத்து, தனது "சுமந்திரம்" எனும் பத்திரிகையின், முதல் பதிப்பை... சஜித்தின் கையாலே வெளியிட வைத்தவர்.
  28. தமிழ்க்கவி, நிலாந்தன் போன்றவர்களிடம் எனக்கு நன்மதிப்பு இல்லை. அவர்கள் இயக்கத்தோடு இருக்கும் வரை பிரசார பீரங்கிகளாகவும், ஊதுகுழலாகவும் இருந்தவர்கள்( 2009 முன்னைய காணொளிகளையும், அச்சு ஊடகங்களை பார்த்தால் தெரியும்) , போர் முடிந்த பின்னர் புதுவை இரத்தனதுரை, பாலகுமார் போன்றவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டும், இன்னும் பலர் ஆயுத ஏந்தாமல் இயக்கத்தில் இருந்தவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் (கண்ணதாசன் சேர் - சிறுவயதில் நான் அவரிடம் மிருதங்கம் பழகியிருக்கின்றேன், மிகவும் இனிமையானவர்), ஆனால் இவர்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் செய்து 180 பாகை திரும்பி கருத்து சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள், இதைத்தான் சாத்தன் வேதம் ஓதுவது என்பதா?
  29. சிங்க கொடியின் நிழலில் நாட்டை ஆள்வது முக்கியமல்ல. அனைத்து இனங்களும் தத்தமது பாதுகாப்பை உணரும் ஒரு அரசியல் பொறிமுறையை கொண்ட அரசியலமைப்பை உருவாக்காதது இவரது பாரிய தோல்வியாகும். இதுவே ஶ்ரீலங்கா நாட்டின் படிப்பினை. இப்போதைய ஆட்சியளர்கள் உணர வேண்டிய மிக முக்கிய விடயம். தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வெற்று கோஷங்களை விடுத்து இதை வலியுறுத்தி நடைமுறை சாத்தியமான அரசியலுக்கு வரவேண்டும்.
  30. லேட்டஸ்ட் அப்டேட்ஸ்: பாகிஸ்தான் இன்னும் இரெண்டாகவில்லை. இந்தியா அப்பிளை, நிறுத்தினாலும், சாம்சுங்கை நிறுத்தினாலும் துருக்கிக்கு அதிக தேசாரம் இல்லை. இந்தியா துருக்கியிடம் வாங்குவதை விட துருக்கிக்கு விற்பது அதிகம். ஒவ்வொரு வருடமும் இந்திய மொத்த ஏற்றுமதியில் துருக்கிக்கு போவது 1.5% ஆம்.
  31. நடந்து வந்த பாதையிலே ........... ! 😁
  32. த‌லைவ‌ரே இவா மேக்க‌ப் போட்டு இருப்ப‌து வெளிச்ச‌மாய் தெரியுது கிழ‌விய‌லுக்கு நினைப்பு த‌ங்க‌ட‌ இள‌மை இப்ப‌வும் ஊஞ்ச‌ல் ஆடுது ஹா ஹா😁😛.......................
  33. ஆட்சியில் இருந்தபோது அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லையே ? பெரும்பான்மை இனத்தவரின் வெறுப்பு அரசியலில் நிர்ப்பந்திக்கப்படும் எந்தவொரு இனக்குழுவும் தனிநாடு கேட்டுப் போராடுவது உலக நியதிதானே ! சரி, தனிநாடு இல்லாவிட்டாலும் சுயாட்சி அதிகாரத்தோடு தனிமாநிலத்துக்கான நகர்வினை ஏற்படுத்தித் தமிழினம் தன் அடையாளத்தோடும் உரிமைகளோடும் வாழ வழி செய்திருக்கலாம். அதிகாரத்தை ஒன்றியத்தில் குவித்து மையப்படுத்தும் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எந்த நாடும் விதிவிலக்கில்லை போலும் - இலங்கை, இந்தியா, பழைய சோவியத் யூனியன் .....................
  34. எம்மை கடந்து சென்ற, நாம் கடந்து வந்த பெருந்துயரம். மீண்டும் இப்படியோர் காலம் வரக்கூடாது.
  35. எமக்கு போராடுவதை நாமே செய்ய வேண்டும். ஆனால், இந்திய அதிகார பீடங்கலில் இருக்கும் தேவை இல்லாத பயமான, இலங்கைத் தீவின் வடக்குகிழக்கில் பிறிம்பான ( சுய) அதிகார அரச அதிதிகார பீடம் அமைவது ஒரு போதும். British Raj princely states நிலைக்கு கொண்டுவராது என்று அவர்களின் மதியில் இருக்கும் தேவை இல்லாத இருளை, பயத்தை தெடர்ந்து, பரந்த அதிகார பீடங்களுக்கு மீளமீள எடுத்து சொல்லி, இலங்கைத்தீவின் வடகிழக்கில்அரச அதிதிகார பீடம் உருவாக இந்திய அரசில் ஏது நிலையை தோற்றுவிக்க நீங்கள் முற்சி செய்யுங்கள். இது உங்களின் அரசியலை முன்னெடுக்கவும் உதவும் - ஒரு அட்டவணை அடிப்படையில் - ஒவொரு மாதமும் எதாவது 1 மத்திய அதிகார பீடம் 1 வேறு மாநில அதிகார பீடம் என்று சந்திப்பு , தமிழ் நாடு விடயங்களையும் சேர்த்து. உங்கள் சந்திப்பில் அரசியல் வாதிகளையும் சந்திப்பது (ஏனெனில் அப்படி பாரிய மாற்றத்துக்கு இரு பகுதியின் இணக்கமும் அவசியம் - அரசியல்வாதிகள், அதிகார பீடங்கள்) (இப்படியே இந்தியாவில் மிலிந்த மொரகொட செய்தது, தமிழருக்கு ஓன்றும் கொடுக்க கூடாது என்று. இந்தியா பிரிந்து இடும் என்று)
  36. இந்த மாதிரி ஜெய்கிந்த் அரோகரா குறூப் அப்பர் மிடில் கிளாசில் உள்ளவர்கள் தான், போரில் இருந்து மிக தூரமாக இருந்து கொண்டு தமது தேசபற்று என நினைத்து செய்யும் குறழி வித்தைகள் இது, போரினால் எந்த பாதிப்பும் இவர்களை எட்ட போவதில்லை, தமது பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு வடிகால் அமைக்கும் வலது சாரி அரசுகளின் விளம்பர உத்தியான தேசப்பற்று அதன் வழி போர் என தமது நோக்கங்களுக்கும் விருப்பங்களுக்கு உதவி செய்யும் வலது சாரி அரசிற்கான தேவைகளை நாடாளாவிய ரீதியில் உருவாக்கும் கோமாளிகள்.
  37. போரினை விரும்புபவர்கள் அரசியல்வாதிகள்தான், கடந்த போர்களில் இந்திய பொருளாதாரன் பெரிதாக பாதிக்கப்படவில்லை ஆனால் இந்த போரில் இந்தியாவின் போர் வெறி எண்ணம் முதலீட்டாளர்களை அச்சுறுத்தலாம், சில கிழக்காசிய நாடுகளில் அரசியல் உறுதிதன்மை நிலவும் போது இந்தியாவில் ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக அதன் சந்தை வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் முதலுக்கே நஸ்டம் ஏற்பட்டால் இந்த நிலை மாறலாம். பெரும்பான்மையான இந்தியர்கள் ஏதோ கிரிக்கெட் போட்டி போல இந்தியா போரிட்டு பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகின்ற நிலை காணப்படுவதால், அரசியல்வாதிகளும் போரினை விரும்பலாம் ஆனால் அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. வங்குரோத்தான ஒரு நாட்டுடன் வரிந்து கட்டிக்கொண்டு போரில் குதித்த இந்தியாவின் நிலை பரிதாபம், இதற்கு இன்னொரு காரணம் முட்டாள் இந்திய ஊடகங்கள்.
  38. "பல்லாயிரக்கணக்கான" என்று இங்கு குறிப்பிடுகின்ற சொற்பதம் தவறு. "பல லட்சம்" என்பதே சரி. 1990 யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்னால் நடந்த 'தேனிசைச் செல்லப்பா' நிகழ்ச்சிக்குப் பிறகு 2003 வவுனியாவில் நடந்த 'பொங்கு தமிழுக்குப்' பிறகு அதிக அளவிலான தமிழ் மக்கள் ஒன்று கூடியது இன்று நடைபெற்ற 'முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்வில்' தான். மேலே கூறிய இரண்டுக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். இன்றைய நிகழ்வுக்கு மக்களை யாரும் அழைக்கவில்லை. மக்கள் தாமாகவே வந்தனர். இன்று கூடிய சுமார் இரண்டு லட்சம் மக்களை ஒழுங்குபடுத்த யாரும் இல்லை. அப்படி இருந்தும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் தாமாகவே அமைதியாக ஒன்று கூடிப் பின்னர் தாமாகவே அமைதியாகக் கலைந்து சென்றனர். அங்கு ஸ்ரீலங்கா காவல்துறைக்குப் பெரிதாக வேலை இருக்கவில்லை! 16 வருடங்களுக்கு முன்னர் இதே மண்ணில் மண்ணுக்காய் மாண்டு போன மண்டியிடா வீரனின் ஆன்மா இந்த மக்களை வழி நடத்துகிறது என்று நான் கூறினால் மிகையில்லை! Kunalan Karunagaran
  39. தங்கள் கனவுகளைத் தொலைத்து மண்ணுக்காய் மடிந்த மா வீரச்செல்வங்களுக்கு என் வீர வணக்கம். இருந்தால் தலைவன் மடிந்தால் இறைவன். சிந்திய ரத்தமும் கண்ணீரும் தியாகமும் என்றோ ஒரு நாள் மண்ணை விடுதலையாக்கும்.
  40. போக்காளி (நாவல்) sudumanal எனது வாசிப்பு ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு). இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது. புலம்பெயர்ந்தபின் இவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுக்கின்றன. மேற்குலகுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழிவழி, கலாச்சாரவழி என ஆதரவுத் தளம் ஏதும் கிடைக்கவில்லை. ஓர் அந்நியமாதல் நிலவியது. ஆனால் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் உத்தரவாதம் கிடைத்தது. அந்நியர்களாக, இந்த நாடுகளுக்கு புதியவர்களாக, காலநிலைக்கு புதியவர்களாக, பழக்க வழக்கங்களுக்கு புதியவர்களாக, முன்னுதாரணம் ஏதுமற்ற வாழ்வியலுள் புகுபவர்களாக வாழ்வு தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து நிறவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய புதிய பிரச்சினை சேர்ந்துகொள்கிறது. ஆனாலும் காலனிய மனோபாவத்துக்குப் பலியான மனநிலையில் நிறவாதத்தின் அரசியலை அதன் நுண் களங்களை புரிய முடியாதவர்களாகவும், அதுகுறித்த அறிவு விளக்கம் அற்றவர்களாகவும் கணிசமானோர் இருந்தனர், இருக்கின்றனர். மேற்கூறிய காரணிகளின் திரட்சி தோற்றுவித்த உள நசிவுகளை சுமந்து கொண்டு வாழும் நிலை அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பின்னணியில் வாழ்வு அவர்கள் எண்ணியபடி இல்லாமல், ஊகித்தறியமுடியாத திருப்பங்களுடன் நகர்கிறது. புதிய புதிய பிரச்சினைகளையும் கலாச்சார ஒழுங்கமைவுகளையும் எதிர்கொண்டு அவர்கள் தனியர்களாய், பின் இணையர்களாய், பின் பிள்ளைகளோடு குடும்பங்களாய் ஆகின்றனர். இந்த வளர்ச்சி நெடுகிலுமே முன்னுதாரணமற்றதும் அவை குறித்த அனுபவமோ அறிவோ அற்றதுமான நிலை வாழ்வின் இறுதிவரை துரத்திக் கொணர்ந்து முதுமைக்குள் தள்ளி வீழ்த்திவிடும் வரையான கதையை போக்காளி நாவல் விபரிக்கிறது. சுமார் 30 வருட அகதி வாழ்வின் இந்தக் கதையை வாசிக்கும்போது அதேவகை அனுபவங்களை தரிசித்த அல்லது தரிசித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளின் பொதுத் தன்மையை இன்னொரு நாட்டில் இருக்கும் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன். வாசிப்பின்போது பழைய ‘நான்’ உடன் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பொருளாதார ரீதியில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளத்தில், இன்னும் சொன்னால் வறுமைக் கோட்டின் மேலும் கீழுமாய் இயங்கும் ஒரு பொருளாதாரத்தில், வாழ்க்கை நடத்தும் நிலையில்தான் புகலிட வாழ்வு நகர்கிறது. ஒரு சுவிஸ் பிராங் அல்லது நோர்வேஜிய குரோணர் ஒரு இலங்கை ரூபாவுக்கு சமமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யுத்தம் இந்த எல்லைவரை வந்திருக்கவே இடமில்லை. அதைவிட இந்த அகதியர்களது குடும்பங்கள் இலங்கையில் என்ன நிலையில் இருந்திருப்பார்கள். இலங்கைக்கு எடுத்த எடுப்பிலெல்லாம் போய் வர பணவசதி இருக்குமா. சுருங்கச் சொன்னால் இந்த பணப் பரிவர்த்தனை (கரன்சி) மாற்றம் இல்லையெனின், போராட்ட வரலாறு இந்தப் பிரமாண்டத்தை அடைந்திருக்காது. அதேநேரம் இந்தப் பேரழிவையும் சாத்தியப்படுத்தியிருக்காது என்றுகூட யோசிக்க வைக்கிறது. இந்த நாவலின் நாயகன் குணா. நாவலாசிரியர் நவமகன் 1988 இலிருந்து தொடங்கி 2019 வரையான தனது புகலிட வாழ்வு அனுபவங்களை கட்டிச் சுமந்து நாவலில் ஏற்றியிருக்கிறார் என நினைக்கிறேன். புலம்பெயர்வது என்பது உடல் சார்ந்த -பௌதீக ரீதியிலான- பிரதேச மாற்றம் மட்டுமல்ல. உளம் சார்ந்த ‘நான்’ இனதும் மாற்றமும் போராட்டமும் ஆகிறது. ‘நான்’ என்பதே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே புலப்பெயர்வு என்பது அந்த ‘நான்’ இனைப் பிரிந்து -ஒரு வீட்டை கட்டுவது போல்- வாழ்வை கட்டுதலல்ல. அந்த ‘நான்’ இன் இடப்பெயர்வானது ஒரு தொலைதூரத்தில் எல்லாவழியிலும் அந்நியத்தை உணர்ந்தபடியும், புதிய புதிய சிக்கல்களை எதிர்கொண்ட படியும் எப்படி நகர்கிறது என்பதை ஆசரியர் நவமகன் குணாவினூடாகவும் அவரது மனைவி ஆதிரா ஊடாகவும் சொல்கிறார். எனவே அவர் விட்டுவந்த போராட்ட பூமியின் எண்ணங்களோடு அவரது பழைய ‘நான்’ இங்கும் வருகிறது. அந்த பழைய எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தபடி நகரும் ‘நான்’ க்கு இப்போ நேரடி சாட்சிகளோ அனுபவங்களோ கிடையாது. அந்தப் எண்ணப் பசிக்கு விடுதலைப் புலிகள் குறித்த மாயைகளும் உண்மைகளும் பிரச்சாரங்களும் தீனியாகின்றன. இந்த நான் அல்லது நான்களின் திரட்சியாக இந்த நாவல் சொல்வனமாகிறது. புகலிடத்தாரை போராட்டம் பாதிக்கிறது. போராட்டத்தை புகலிடத்தார் பாதிக்கின்றனர். அதன் அடிப்படையில் இரு வரலாறும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன இந் நாவலில். நாவலின் அத்தியாயங்களே ஆண்டுகளால்தான் குறிக்கப்படுகின்றன. 1988 இலிருந்து 2009 வரையான விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தாக்குதல்களை, தனிநபர் கொலைகளை, வெற்றியை தோல்வியை, அவைகள் குணாவிடமும் அவனது நண்பர்களிடமும் ஏற்படுத்துகிற உற்சாகத்தை சோர்வை, குருட்டு நம்பிக்கைகளை, விசுவாசத்தை, நியாயப்படுத்தல்களை, மொக்குத்தனங்களை, மனிதாபிமானத்தை, சாகசங்களை, கொலைகளை கொண்டாடுவதை, அரசியற்ற சிந்தனை முறையை என பெரும் வெளியை இந் நாவல் பூராவும் காண முடியும். இந்த வழியிலேயே எழுச்சியும் வீழ்ச்சியுமான எண்ணங்கள் அவர்களது ‘நான்’களை கட்டமைத்தபடியே செல்கிறது. வெவ்வேறு இயக்கங்களுடன் சம்பந்தப்பட்ட மாறுபட்ட பாத்திரங்களினூடாக இக் கதைகளை சொல்லி நகர்த்துகிறார் நவமகன், தனது போக்காளி நாவலில்!. இந்தப் பொதுப் போக்கின் ஒரு வகைமாதிரியாக குணாவின் பாத்திரம் வருகிறது. மேற்குலக புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை ஆதரித்த பலரினதும் ஒரு வகைமாதிரியான பொதுமகன் குணா. இதற்கு வெளியில் சிந்திக்கிற அரசியல் புரிதல் கொண்ட அழுத்தமான ஒரு பாத்திரம் விஸ்வா. விஸ்வாவும் குணாவின் நண்பனாக இருக்கிறான். அவனது தாக்கமும் குணாவின் மனிதநேய பண்புகளும் அவனது ‘நான்’ இனை பாதித்தபடியே இருக்கிறது. ஆனாலும் குணாவின் உணர்ச்சிவகை நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் அவனை சூழ்ந்தபடி நகர்வதுதான் அவனது வாழ்வு என்றாகிறது. 2009 பேரிடியாய் தாக்கிய தோல்வியை ஒப்புக்கொள்வது என்பதை அவனது ‘நான்’ ஏற்க மறுத்து அவனை சிப்பிலியாட்டுகிறது. அந்த உளவியல் சிதைவு குடும்பத்தை சமாந்தரமாகவே பாதிக்கிறது. அவன் முன்னரைப் போல் இல்லை. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவதும், எரிஞ்சுவிழுவதும், ஒரு கட்டத்தில் (முதன்முறையாகவும் கடைசிமுறையாகவும்) தனது மனைவி மீது வன்முறை பிரயோகிக்குமளவுக்கு போவதும், எப்போதுமான பதைபதைப்பும் என மாறிக்கொண்டிருந்தான். அது குடும்பத்தை பாதிக்கத் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் பிறந்து, அதன் கலாச்சாரத்துள் வாழுகிற, அந்த கல்விமுறையுள் வாழ்க்கையை தொடங்குகிற தனது பிள்ளைகளை எதிர்கொள்வது சிக்கலாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவனவாகவும்கூட அமைந்துவிடுகிறது. எமது கலாச்சார மனத்தையும் பிள்ளைவளர்ப்பு முறைமையையும் தலைக்குள் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை புரிந்துகொள்வது, அவர்களுடனான முரண்பாடுகளை தீர்ப்பது சிக்கலாக இருக்கிறது. பாலியல் ரீதியிலான, ஏன் காதல் குறித்தான மதிப்பீடுகளையெல்லாம் பிள்ளைகளில் ஏற்றிப் பார்த்து பதட்டப்படுகிற நிலை இருக்கிறது. கல்யாண விடயத்தில் சாதியை தாண்டி செயற்பட முடியாமல் அவதிப்படுகிறான். பிள்ளைகளோ இந்தப் புதிரை அவிழ்க்க முடியாதவர்களாக, அதேநேரம் பெற்றோர் மீதான அன்பை இழந்துவிடாதபடி இருக்கப் போராடும் மனமுள்ளவர்களாக இரண்டு கலாச்சார மனங்களுக்கு இடையில் நசிபவர்களாக அந்தரிக்கிறார்கள். இவற்றை அற்புதமாக நாவல் விபரிக்கிறது. இந்த புது அனுபவங்களை பெறாமல் புகலிட வாழ்வு அமைந்திருக்க வாய்ப்பே இல்லை. கள்ள விசாவில் ஜேர்மன் வந்து, பின் பிரான்ஸ் க்கு போய், அங்கிருந்து ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின் டென்மார்க் ஊடாக நோர்வேயை சென்றடைகிற அகதிவழிப் பயணம் என்பது ஆபத்தான வழி கொண்டது. புகையிரத கழிவறையின் கூரைக்குள் மறைந்தபடி முடங்கிக் கிடந்து எல்லை கடப்பது, விமானத்தின் சக்கரத்தை அணைத்தபடி எல்லை கடப்பது, பவுசர்களுக்குள் ஒரு சிறு துவாரக் காற்றை பகிர்ந்து கும்பலாய் எல்லை கடப்பது, பாரவூர்தியின் கொன்ரைனருக்குள் குறுகியிருந்து எல்லை கடப்பது என்பது போன்ற பயங்கரமான சாகசமான பயணங்களை மேற்கொண்டு அகதிகள் வருவது நிகழ்கிறது. இந்தவகைப் பயணங்களில் இறந்துபோனவர்கள் கணிசமானோர். இதையெல்லாம் தாண்டி வந்து இறங்கி தஞ்சக் கோரிக்கையை கேட்டபின்னும் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இதை மேவிய இன்னொரு அச்சம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நாவலின் நாயகன் குணா புகையிரத கழிவறைக் கூரைக்குள் ஒளித்து பயணித்த அனுபவத்தை இந்த நாவல் பதட்டத்துடன் வாசிக்க வைக்கிறது. தனியாக தொடங்கும் குணாவின் அகதிப் பயணம் பின் திருமணத்தோடு அவனைப் பிணைக்கிறது. பின் வாழ்வு குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளோடு ஏற்படும் இடைவெளி தலைமுறை இடைவெளி என்ற எல்லையைத் தாண்டி நகர்கிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருப்பது உலகப் பொதுமையானது. ஆனால் ஒரு அகதிக்கு இதனுடன் சேர்ந்து புதிய மொழி, புதிய கலாச்சாரம், முற்றாக வேறான சமூகம், பழக்கவழக்கங்கள், ஒழுங்குகள் என மேலதிக தடைகள் வருகின்றன. இவை இந்த சமூகத்துடன் மட்டுமல்ல, பிள்ளைகளுடனும் இணைவாக்கம் அடையவோ அவர்களை புரிந்துகொள்ளவோகூட விடாமல் படுத்துகிற கொடுமையை இந் நாவல் பரந்த அறிவுடன் சொல்லிச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி அடையாத, அதன் சமூகப் பெறுமதியை அறியாத சிந்தனையுடன் இலங்கையிலிருந்து வந்த ஓர் அகதியானவர் -வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற- முதலாளித்துவ சிந்தனை முறைக்குள் தன்னை பொருத்திக் கொள்வதில் சந்திக்க வேண்டியிருக்கிற இடர்ப்பாடுகள் உளநசிவுகள் இன்னொரு புறமாக திக்குமுக்காட வைக்கிறது. தாம் புலம்பெயர்ந்து வந்தபோது தமது தாய் தந்தையர் சகோதரம் நண்பர்கள் என்போரின் விம்பங்களை நினைவுச் சட்டகத்துள் தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். தனது குடும்ப நிலையை அந்த மனோரம்யமான மனநிலையை (சென்ரிமென்ரை) காவி வருகிறார்கள். தான் வாழ்ந்த சமூகத்தின் அசைவியக்கத்தை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எதையும் மாறா நிலையில் கற்பனை செய்துகொண்டு, அதனதன் இயங்கியலையும் இற்றைப்படுத்தல்களையும் கண்டுகொள்ள முடியாதவர்களாக மாறா எண்ணங்களுடன் வாழ்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு காலம் கழித்துச் சென்றுவிட்டு வந்து “அங்கை இப்பிடி மாறிப் போய்ச்சு அப்பிடி மாறிப் போய்ச்சு… நாங்களெல்லாம் முந்தி…” என ஒப்பீட்டு கதையாடல்களை தொடங்கி விடுகின்றனர். தாம் நாட்டைவிட்டு வெளியேறியபோது காவி வந்த கலாச்சார மதிப்பீடுகளை கட்டிக் காக்கும் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதை கொண்டாட்டங்களில் பிரமாண்டத்தினூடாகக் கட்டிக் காக்க கலாச்சார மனம் வழிகாட்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் வளர்ந்து, தமது கலாச்சார மதிப்பீடுகளை அச்சுறுத்துவதுபோல பிரமை கொள்கிறார்கள். இந் நாவலில் விஸ்வா தவிர நாவலின் நாயகனான குணா உட்பட மற்றைய எல்லோரும் இதை பிரதிபலிக்கிறார்கள். இதை நேர்த்தியாக நாவலில் பல இடங்களிலும் காண முடியும். ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நூலை வாசிக்கிறபோது புலம்பெயர் வாழ்வின் கதை என்றளவில் நாவல் தரும் அழகியலை மேவி, விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் கதையாடல்கள் ஓர் ஆவணம் போல எழுகிறதான உணர்வு எனக்குப் பட்டது. அது செய்திகளாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தகவல்களின் மிகுதி காரணமாக இருக்கலாம். இந்த புலம்பெயர் வாழ்வில் நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் எனக்கு வாசிப்பு அனுபவம் இந்த பார்வையைக் கொடுக்கிறதாகவும்கூட இருக்கலாம். இதைத் தாண்டிய மாறுபட்ட வாசிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும். மேற்குலகின் ஐரோப்பிய மையவாதமும், வெள்ளை மேலாதிக்க பெருமிதமும் சேர்ந்து -காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியம் வரையாக- நிறுவி வைத்திருக்கும் நிறவாதம் நாம் கடக்க முடியாத ஒன்று. அதுகுறித்த அனுபவங்கள் எனது வாசிப்பில் தவறிப் போயிருந்தது. நாட்டுக்கு நாடு இதன் அளவும் தாக்கமும் வேறுபட்டு இருக்கிறபோதும், ஐரோப்பிய மக்களின் பொது மனநிலையில் அதன் வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுவது இன்றும்கூட நாம் காணும் அனுபவம். நாவலில் நான் அதை தரிசிக்கவில்லை. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த எதிரம்சங்கள் நிராகரிப்பதில்லை. அந்த அச்சம் தேவையற்றது. நாவலின் உள்ளடக்க இயங்குதலையும், அது கொண்டலைக்கிற மனதையும் தாண்டி நாவல் இப்படியோர் முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பட்டது. அந்த முடிவை ஒரு குறியீடாய்க் காணவும் முடியவில்லை. இது எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த கருத்து மட்டுமே. மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த அகதி வாழ்வினை அதன் தடங்களை ஒரு பெரும் விரிந்த பார்வையில் விரிந்த பரப்பில் முன்வைக்கிறது போக்காளி. நாவல்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. வரலாற்றின் வேர்களினூடாக பயணிக்கும் ஆற்றல் கொண்டது. அந்தக் காலகட்டத்தின் ஒரு சமூகத்தை, அதன் மாற்றங்களை, அழிவுகளை, உருவாக்கங்களை, நிலைப்படுத்தலை என பலதையும் அது வரலாற்றினுள் சேர்த்துவிடுகிறது. மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்த மூத்த தலைமுறையின் வாழ்வுப் பயணத்தை மிக விரிவாகவும், பல தளங்களுக்குள் உள் நுழைந்தும் சித்தரிக்கும் நாவல் போக்காளி. நவமகனின் பெரும் உழைப்பும், கடந்த காலத்தோடு மீண்டும் வாழ்ந்து எழுதலும் இன்றி இந் நாவல் 680 பக்கங்களில் விருட்சமாகி இருக்க வாய்ப்பில்லை. புகலிட இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தேடிக்கொண்ட படைப்பு இது. வாழ்தல் என்பது புறத்தால் மட்டுமன்றி, அகத்தாலும் மேற்கொள்ளும் பயணம் என்பதை புரியாமல் அல்லது சக மனிதர்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல், புகலிடத்தாரை வெறும் காசு மரங்களாகப் பார்ப்போர் முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவுமொன்று!. ravindran.pa 09052025 போக்காளி (நாவல்) நவமகன் (ஆசிரியர்), நோர்வே. கருப்புப் பிரதிகள் (வெளியீடு) 680 பக்கங்கள் https://sudumanal.com/2025/05/09/போக்காளி-நாவல்/#more-7140
  41. இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு. கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா? கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள். முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை. ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும். இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. "ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். திகைத்து நின்றார் அவர். சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். "அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன். படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான். இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா? வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html
  42. பருப்பு கீரை வளர்ப்பும் கறியும் செய்முறையுடன் . ...... அருமை .......... ! 👍
  43. அம்பாறை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு கல்லோயாக் குடியேற்றத்திட்டம் காரணமாயிருந்தது போல திருகோணமலை மாவட்டத்தின் அல்லை, கந்தளாய் ஆகிய பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும், புதிதாக ஏற்படுத்தப்பட்ட மொறவெவ, மஹதுவுலுவெவ ஆகிய குடியேற்றங்களும் காரணமாய் அமைந்திருந்தன. வவுனியா மாவட்டத்தின் தமிழர் சனத்தொகை வீதத்தை வெகுவாகக் குறைக்கவும், சிங்களவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் பதவிய எனும் சிங்களக் குடியேற்றம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. தமிழரின் பூர்வீகத் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கான தனியான சிங்களத் தேர்தல்த் தொகுதிகளையும் சிங்கள அரசு அறிவித்தது. தமிழரின் பாரம்பரிய வாழிடங்களான அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்லை எனும் புதிய தேர்தல் தொகுதியும், திருகோணமலை மாவட்டத்தில் சேருவில எனும் புதிய தேர்தல் தொகுதியும் ஏற்படுத்தப்பட்டது. 1976 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்தத் தேர்தல் தொகுதிகள் மூலம் 1977 ஆம் பொதுதேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து இரு சிங்களவர்கள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் இதனால் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 1978 இல் ஏற்படுத்தப்பட்ட வீதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் இச்சிங்கள ஆசனங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதுபோல் வவுனியா மாவட்டத்திலிருந்தும் மேலதிகமாக ஒரு சிங்களவர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. 1977 இல் தந்தை செல்வா அவர்கள இறந்ததையடுத்து தமிழர் தாயகத்தில் அரச ஆதரவில் ஏற்படுத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அரசியல் - ராணுவப் பின்புலத்துடன் அசுர கதியில் முடுக்கிவிடப்பட்டன.தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கின் நிலத்தொடர்பினைத் துண்டிப்பதன் மூலம் அவர்களைன் தாயக் கனவைக் சிதைக்கவும் , தமிழ்ப் போராளிகளை வடக்கிற்குள் முடக்கி முற்றாக அழிக்கும் நோக்கிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாற்றுப் பகுதியில் "வலிஓயா" எனும் பெயரில் முற்றான ராணுவப் பலத்துடன் சிங்களக் குடியேற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதுபற்றிப் பிரபாகரனின் கதையில் நாம் மேலும் பேசலாம். அதிகாரங்களைப் பகிர்தல் அரசாங்கத்தில் தமக்கு நீதியாகக் கிடைக்கவேண்டிய அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் முற்றாக இழக்கும் சந்தர்ப்பம் உருவாகிவருவதுபற்றி தந்தை செல்வா அச்சம் கொண்டிருந்தார். ஒற்றையாட்சியின் கீழ் மொத்த ஆளும் அதிகாரமும் எண்ணிக்கையில் பெரும்பானமையினரான சிங்களவர்களிடமே குவிக்கப்படும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். தமது பெரும்பான்மைப் பலத்தினூடாக தமிழர்களை அடக்கவும், வஞ்சிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு இதனால் ஏற்படுத்தப்பட்டது. தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியினூடாக அவர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறைமையினை நீக்கி, அதிகாரங்களைப் பகிரும் சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் திட்டமொன்றை முன்வைக்குமாறு அவர் அரசைக் கேட்டுக்கொண்டார். அவரது தீர்மானத்தின் சாராம்சம் கீழே..... தமிழருக்கான சுயாட்சி அதிகாரமுள்ள பிரதேசம் ஒன்றினை சமஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் பெற்றுக்கொள்ளுதல்...... சமஷ்ட்டிக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951 ஆம் ஆண்டு சித்திரை 12 இலிருந்து 15 வரை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே தீர்வு சம்ஷ்ட்டி ஒன்றியமான இலங்கைக்குள் அவர்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் ஒன்றினை உருவாக்குவதுதான் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் தமது தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழருக்கான சுயாட்சிப் பிரதேசம் எனூம் கோரிக்கையினை தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழரிடம் முன்வைத்ததோடு ஒற்றையாட்சி முறைமையினை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்தனர். ஆனால் இத்தேர்தலில் இந்தக் கோட்பாட்டினைக் கண்டுகொள்ள மறுத்த தமிழர்கள் தமது தவறை உணர்ந்து 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் இக்கோரிக்கைக்கான தமது ஆதரவினை நல்கினர். இத்தேர்தலில் வடக்குக் கிழக்கின் 14 இடங்களில் போட்டியிட்ட தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒற்றையாட்சிக்கெதிரான தமிழ் மக்களின் முற்றான நிராகரிப்பை பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களான பங்குனி 1960, ஆடி 1960 மற்றும் 1965, 1970 ஆகிய தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கெதிரான தமது எதிர்ப்பினைக் காட்டியிருந்தனர். இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், 1977 ஆம் ஆண்டுப் பொதுதேர்தலில் தமிழருக்கென்று தனியான சுதந்திர நாடொன்றினை உருவாக்குவதற்கான தமது ஆணையினை தமிழ்மக்கள் வழங்கினர்.
  44. ரஞ்சித் உங்கள் நேரத்திற்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி. திருகோணமலையில் 1901´ம் ஆண்டு இருந்த தமிழரின் சனத்தொகை விகிதத்திற்கும், தற்போது (2022) உள்ள நிலைமையையும் நினைக்க கவலையாக உள்ளது. இது... மெதுவாக... புதிய விகாரைகள் அமைப்பதன் மூலம் தமிழரின் இருப்பு... மற்றைய மாவட்டங்களுக்கும் பரவிக் கொண்டுள்ளது. இதனை... ஒரு பெரிய விடயமாக, தமிழ் அரசியல் கட்சிகள் சர்வதேசத்திடம் கொண்டு செல்லாதது.. மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது.
  45. மூன்டு நாலு பிள்ளைகள் பெற்ற குடும்பத்தை கீழ்த்தனமாக பார்ப்பதை முதலில் எங்கடையாக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மட்டுமன்றி, அதை ஊக்கப்படுத்த வேண்டும். அப்பதான் எமது சனத் தொகை உயரும்.
  46. பிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.