Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15789
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38754
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/30/25 in all areas

  1. எனது வாக்கும் குஜராத்திற்கே! யாழ்களப் போட்டியில் முன்னுக்கு நிற்பவர்கள் மேலே ஏறக்கூடாது என்ற நண்டுக்குணம்தான்🦀. வேறு ஒன்றுமில்லை!
  2. இன்றைய இரண்டாவது Play-off Eliminator போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மாவினது புயல்வேக 81 ஓட்டங்களுடனும், ஜொனி பெயிர்ஸ்ரோவின் மின்னல்வேக 47 ஓட்டங்களுடனும் சிறந்த தொடக்த்தினாலும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களை எடுத்திருந்தாலும், அணித் தலைவர் சுப்மன் கில் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியதாலும், பின்னர் ஆடவந்தவர்களில் வாஷிங்டன் சுந்தரின் மின்னல்வேக 48 ஓட்டங்களைத் தவிர மற்றையோர் நிலைத்து ஆடமுடியாததாலும், சவாலான வெற்றி இலக்காக இருந்ததாலும், இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டி Qualifier 2 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. குஜராத் டைட்டன் அணி ஐபிஎல் 2025 இலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. யாழ்களப் போட்டியாளார்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் @நந்தன் உம், @புலவர் ஐயாவும் உறுதியாக நிலையெடுத்துள்ளனர்!
  3. அந்த நண்டு இப்ப குழம்பு சட்டிக்குள்ள
  4. கனடாவில் மாநகரசபை தன் அதிகாரத்துக்குட்பட்ட ஒன்றை செய்தால் அதனை மாகாண மற்றும் மத்திய அரசால் நிராகரிக்க முடியாது. அவ்வாறு கடும் அழுத்தம் கொடுத்து நிராகரிப்பின், வழக்கு போட்டு, அரசியலமைப்புக்கு எதிரான செயல் என தீர்ப்பை வாங்கிவிடுவார்கள். ஆகவே இலங்கை அரசு தலையைக் குத்தி தாளம் போட்டாலும், கனடிய மத்திய அரசு கடும் அழுத்தம் கொடுத்தாலும் இந்த நினைவுத்தூபியை இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் பற்றிக் பிரவுணது மேயருக்கான பதவிக் காலம் முடிவடைந்த பின் அடுத்து வருகின்றவர் நினைத்தால், மிச்ச மாநகர சபை உறுப்பினர்களும் சம்மதித்து வாக்களித்தால் இந்த நினைவுத் தூபியை ஏதும் செய்ய முடியும்.
  5. புலவருக்கும் நந்தனுக்கும் ஏதேன் கோத்து விடலாமோ. தாங்களே தங்களுக்குள்ள...... நமக்கு வேற வழி தெரியல ஆத்தா. 😁
  6. இறுதி யுத்தத்தின் போது புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு, தப்பியோடினால் கண்டு பிடிக்கும் வகையில் தலை மயிர் கட்டையாக கத்தரிக்கப் பட்டு, சில சந்தர்ப்பங்களில் இத்தகையோரை வெளியேறும் தறுவாயில் புலிகளே சுட்டுக் கொன்றது..இவையெல்லாம் அமெரிக்காவில் பனி வனத்தில் வசிக்கிற உங்களுக்கு "காணிச் சண்டை எல்லைச் சண்டை" ரேஞ்சுக்குச் சுருங்கி விட்டது அதிசயமில்லை😂. ஆனால், இந்த அனுபவங்களூடாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவை சாதாரண நிகழ்வுகளாக இருக்காது. இப்படிப் பாதிக்கப் பட்ட மக்கள்- அவர்கள் சிங்களவரால் பாதிக்கப் பட்டவர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- கவனமாகக் கையாளப் பட வேண்டியோர். யாழ் களத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் சுய வாக்குமூலங்களின் படி, இதைச் சொல்லும் நீங்களே, ஒரு காலத்தில் உங்கள் உயிர் முக்கியம் என்று விமானமேறி அமெரிக்கா வந்த ஒருவர். உங்களுக்கிருக்கும் சொந்த உயிர் மீதான அக்கறையை விட ஏன் வன்னி மக்கள் குறைவாக அக்கறை கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?
  7. பரிஸ்டா உணவமல்ல இது. ஏற்கனவே சைவ முட்டை விற்கப்படுகிறதாம்.
  8. கனடாவில் தமிழர் இனப்படுகொலை தூபி இன்றுவரைக்கும் சேதப்படுத்தப்படவோ, நொறுக்கப்படவோ இல்லை. அவ்வாறு வந்த சில சமூகவலைத்தள செய்திகள் பொய்யானவை. இப்படியான ஆதாரமற்ற வெறும் சமூகவலைத்தள தகவல்களை நம்பாதீர்கள். இதைப் பரப்புகின்றவர்களின் அரசியல் தம் வயிற்றை பாதுகாக்கும் அரசியல். பற்றிக் பிரவுண் உணர்ச்சி வேகத்தில் அப்படிச் சொல்லி விட்டார். மாநகரசபை யிற்கு இப்படியான ஒரு அதிகாரமும் இல்லை .
  9. ஆனால் அதற்குள் நானும் இருப்பதால் இவர்களுக்கு புள்ளிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகளில்லை!
  10. ஆழ்ந்த இரங்கல்கள். நல்ல குணச்சித்திர நடிகர். இவர் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். நல்ல கம்பீரமான குரல். இவர் கெட்டவனாக இருந்து பின்னர் திருந்தும் பாத்திரத்தில் நடித்த "சிறை" எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் தன் மகனது திருமணத்தை இந்த வருடம் ஆகஸ்ட் டில் நடாத்த திட்டமிடப்பட்டு இருந்தார். தன் ஆயுள் 75 இல் முடியும் என கணித்திருந்தால் அதை முதலிலேயே நடாத்த முயன்று இருப்பார். இவர் 99 வயது வரை வாழ்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பற்றி பலருக்கு ஆலோசனைகள் சொல்பவர். மரணம் என்பது கணிக்கப்பட முடியாத சூத்திரம்.
  11. சரி சரி. ஏதேன் எங்கட கையில இருந்தாப் போராடலாம். எல்லாத்தையும் முதல் நாளே எங்கட கையில இருந்து புடுங்கிப் போட்டு, போடுற பாட்டு வேற. ஏதோ வந்த வரைக்கும் இலாபம் என்டு ஓடிக்கொண்டிருக்கிறம்.😁
  12. வேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. All reactions: Thank you:Ravindran Pa https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/
  13. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  14. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂
  16. அடுத்த போட்டியில், சூர்யா அடிச்சு மும்பை வென்றால், எனக்குப் பல புள்ளிகள் கிடைக்கும். எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள்.
  17. அவர்களின் பிற இன திராவிட வெறுப்புக்களை இங்கே அடக்கி கொண்டு அவரின் அம்மாவை பிடித்து அவர் யாழ்ப்பாண தமிழன் தான் என்று அவர்கள் உரிமை கொண்டாடுவது அவர் சாதி எதிர்ப்பு பாடல்கள் பாடியவர் என்பதற்காக இல்லை இது எனக்கு பிடித்திருக்கின்றது சாதி வெறியர்களை தலையை பிய்த்து கொள்ள வைக்கும் 🤣
  18. எனது நண்பரின் ஊர் பற்றி ஒருவருக்கும் தெரியாது என நினைக்கிறேன், ஆனால் யாழ்ப்பாணம் இல்லை என்பதால்த்தான் இந்த கேள்வி எழுந்திருக்கும் என கருதுகிறேன்.
  19. மாநில, மத்திய அரசுகளின் அதிகாரம் பற்றிய என் கருத்துகள் இலங்கை அரசின் அழுத்தங்கள் இப்போதைக்கு இந்த இனப்படுகொலை நினைவுத் தூபியை ஒன்றும் செய்யாது என்பதற்காக எழுதியவை. அக் கருத்துகளுக்கும் நீங்கள் குறிப்பிட்ட நடக்காத விடயம் பற்றிய என் பதில்களுக்கும் ஏன் முடிச்சு போடுகின்றீர்கள் எனப் புரியவில்லை.
  20. தேசியம் இணையத்தில் நினைவுத்தூபி சேதமாக்கபட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பகிரப்பட்டிருந்தது..பலதும் பத்திலும் பகிர்ந்திருந்தேன்..பின் வேறு, வேறு இணையங்களில் தேடிப் பார்த்தேன்,,அப்படி ஒரு செய்தியே வரவில்லை..எதையாவது போட்டு நிரப்பும் பத்திரிகைகாரர்களை என்ன செய்வது....🤔
  21. ஆக்கிரமிப்பாளரின் அதீத போர்வெறிக்குப் பலியாவது படைகள் மட்டுமல்ல. படையினரின் குடும்பங்களுமே. ஆனால், ஐந்து பத்தடுக்குப் பாதுகாப்போடு வலம் வரும் அரசுத்தலைமைகளுக்கு இந்த வலிகள் புரியாது. அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. 12 பந்துகளில் 36 ஓட்டங்கள். அடிச்சு முடிப்பார்களா. கிருபனின் விருப்பம் நிறவேறுமா.
  23. எமக்கு புலிகள் எப்படியோ… அப்படித்தான் சிங்களவருக்கு ஆமி… வடமாகாண முதலமைச்சர் மாவீரர் நினைவு நிகழ்வில் “மாவீரர்” என்ற பதத்தை தவிர்த்து “போராளிகள்” என அழைத்தால் எம் எதிர் வினை எப்படி இருக்கும். எனக்கு வந்தா தக்காளி சோஸ், உனக்கு வந்தா இரத்தம் என்பதே இரு பகுதியினரதும் நிலைப்பாடு. உண்மையில் அனுர செய்தது ஏமாற்று வேலை. ஆமியை ரணவிரு என அழைக்க வேண்டாம் என எந்த தமிழரும் கேட்டோமா? சிங்கள இன மேலாண்மையை பேண, உங்களது என நீங்கள் கோரும் நிலத்தினை உடையாது பேண உயிரை கொடுத்த அவர்கள் உங்களுக்கு எப்போதும் மேன்மக்களே. நாம் கேட்பது எமது அரசியல் உரிமையை. அதை தராமால் பேய்காட்ட இப்படி ஒரு கலக நாடகத்தை அனுரா நடத்துகிறார்.
  24. சின்ன மாங்காவ அப்பவே சாகவிட்டிருக்கலாம். சவுமியா ஆன்டிக்கு புதுவாழ்க்கை ஒண்டு கிடைச்சிருக்கும்!!
  25. பிரசித் தாக்கப் பட்டார். 26 ஓட்டங்களை அடித்தார் ஜானி பெயெஸ்ரோ.
  26. வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂
  27. 80 ரூபாய்க்கு வாங்கும் உப்பை, 360 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறார்கள். இடையில் யார் கொமிசன் அடிக்கின்றார்கள் என்பதையும் வெளியே சொல்லுங்கள்.
  28. தொடர்ந்து சிறப்பாக விளையாட வாழ்த்துகள் பா.அஸ்வின்.
  29. ஆயுதமேதுமில்லாமல் தங்கள் வாழ்வை கொண்டுசென்ற மக்களை இனவழிப்பு செய்து, தப்பியவர்களை கப்பலில் ஏற்றி விரட்டியதை மனிதாபிமானம் என்பீர்களா? தங்கள் இனம் அழிக்கப்படுவதை தடுக்க ஆயுதம் ஏந்தியதை பயங்கரவாதம் என்பீர்களா? தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தனியார் காணியில் விகாரைகள் எழுவதை தடுத்தீர்களா? இனவாதம் கக்கியவர்களை தண்டித்தீர்களா? தங்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டவர்களை சொந்த இடங்களில் குடியேற்றினீர்களா? காணாமல் ஆக்கியவர்களை உறவுகளிடம் ஒப்படைத்தீர்களா? போர்குற்றவாளிகளை காப்பாற்றி அவர்களாலேயே கட்சியிலிருந்து விரட்டப்பட்டவர். கடிதம் எழுத்துவதாலேயோ, கண்டனம் தெரிவிப்பதாலேயோ நாட்டில் சுபீட்ஷத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நீங்கள் நினைத்தால்; உங்கள் அறம் பற்றியபுரிதலில் ஏதோ தவறு இருக்கிறது. உங்களுக்கு அறத்தை கற்பித்தவர்கள் தவறாக போதித்து வழி நடத்தியுள்ளார்கள். காசுக்கு வழக்கு பேசுவதற்கும், மக்கள் மேல் தொடுக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்? இதுதான் உங்களது புரிதலும் குற்றம் சாட்டுதலும். நீங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் அதன் பின் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டாரா என்பதே கேள்வி. ஆமா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சிங்களம் பாதுகாப்பு வழங்க கடமைப்பட்டிருக்கிறது. காரணம் அவர்கள் உங்கள் முகவர்களாகவே செயற்பட்டிருக்கிறார்கள். அதையே காலங்காலமாக செய்து வருகிறீர்கள், அதில் எந்த சந்தேகமுமில்லை எங்களுக்கு. சட்டத்தை, அதிகாரத்தை எல்லோருக்கும் சமமாக பயன்படுத்தும் கனடாவில் பிரிவினைவாதம் தலைதூக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அதை செய்யாமல் விட்டு, மற்றைய இனத்தின் சுதந்திரத்தை, வாழ்விடத்தை அபகரித்ததனாலேயே பிரச்சனை தோன்றியது. பிரச்சனையின் தோற்றுவாயே சிங்களம், பௌத்தம் என்கிற வெறியே. அதை ஏற்றுக்கொண்டு தீர்வுகாணாதவரை நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள். மற்றைய இனத்தின் பாரம்பரியம், உரிமையை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களை சீண்டிக்கொண்டிருந்தால் சமாதானம் ஏற்படாது. உண்மை நீதி என்றால் என்னவென்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு நீதியமைச்சர் பதவி ஒரு கேடு. சரியாக சொன்னீர்கள். நீங்கள் நாட்டில் வன்முறைகளை தூண்டுவதும், இனங்களை பிரித்தாழுவதும், இனமத முறுகலை ஏற்படுத்துவதும் நாட்டை அழிப்பதும் உங்கள் அரசியல் தேர்தல் ஆதாயங்களுக்காகவே!
  30. இன்றைய போட்டியில் மும்பை அணி பெயரளவில் பலமான அணியாக இருந்தாலும் குஜராத் அணி வெல்லும் என கருதுகிறேன் . மும்பை அணி வெல்லும் என கருதுபவர்கள் மும்பை எனவும் குஜராத் அணி வெல்லும் என கருதுபவர்கள் குஜராத் எனவும் குறிப்பிடவும், பெரும்ப்பான்மையானோர் இந்த் போட்டியில் இரு அணியினை தெரிவு செய்யாதமையால் இந்த முயற்சி. அந்த 5 நபர்கள் விதிவிலக்கு ஆனாலும் மும்பை வெல்லும் என குறிப்பிட்டு மும்பையினை வாக்குகாளால் ஆவது வெல்ல வைக்கலாம். உறுதியாக மும்பாய்க்கு 5 வாக்குகள்தான் கிடைக்கும்.🤣 எனது வாக்கு குஜராத்திற்கே! GT 1 VS MI 0 தற்போது குஜராத் முண்ணனியில் உள்ளது.😂
  31. வாழ்த்துக்கள் அஸ்வின். சுவிஸ் உலகின் முன்ணணி கால்பந்தாட்ட நாடு, அங்கே சோபிப்பது சாதாரண விடயமல்ல. விரைவில் தேசிய அணிக்கு விளையாட வாழ்த்துக்கள்.
  32. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂
  33. அற்ப சொற்ப நன்மைகளை காட்டி எங்களை அடிமைகளாக்க வேண்டாம், எங்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கவேண்டாம், எங்களை விட்டு விலகி இருக்கச்சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு நன்மையானதை நாங்களே பெற்றுக்கொள்வோம். வலிய வந்து எங்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி அரசியல் செய்வது இந்தியா எனும் சகுனி. தாங்கள்சேர்ந்து அழித்ததை புனரமைப்புசெய்கிறார்கள். எதற்காக? பிராயச்சித்தமா? அழித்தவர் அதற்கான விலையை செலுத்துகிறார், இதற்கு உதவி என்கிற பெயரா? மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் மனிதாபிமான்களாம்? அழித்த உயிர்களை திரும்ப தர முடியுமா இவர்களால்? கோரிக்கைதான் வைக்க முடியுமா இவரால்? குட்டக்குட்ட குனிந்துகொண்டு, குட்டுகிறவனை புகழ்ந்து கொண்டே, தட்டிகேட்க்கிறவனை குற்றஞ்சாட்டிக்கொண்டே இருப்போம்!
  34. ஒற்றுமையே பலம்............. நாளைக்கு குஜராத் வெல்லுது............. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முட்டைகளை வாங்குகின்றோம்......................😜.
  35. லண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..
  36. ஆங்கிலத்தில் வெள்ளை யானை என்பார்கள். ஒரு விடயத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கும் போது இப்படி சொல்வார்கள். மத்தள விமானநிலையம் சீனா கட்டிய வெள்ளையானை. இது இந்தியா கட்டிய வெள்ளையானை. மேனாடுகளில் p3 model அல்லது public private partnership PPP என்பார்கள். அரச அமைப்பும், தனியாரும் பரஸ்பர நன்மை அடையும் வகையில் ஒரு விடயத்தை நிர்வகிப்பது. மாநகரசபை இதை ஒரு கலியாணமண்டபமாக/கச்சேரி சபாவாக/ இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு எவரேனும் தனியார் நிறுவனத்துடன் போகலாம். அப்படியும் மாநகரசபையால் பராமரிக்க முடியாதளவு எண்டால் அதை பல்கலைகழகத்துக்கு கொடுக்கலாமே.
  37. இன்றைய முதலாவது Play-off Qualifier 1 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டியில் வெல்லும் நோக்கோடு விளையாட வந்ததாகத் தெரியவில்லை! தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபில் சோல்ற்றின் புயல்வேகத்தில் ஆட்டமிழக்காது எடுத்த 56 ஓட்டங்களுடனும் மயங் அகர்வால், ரஜட் பரிடாரின் கமியோ ஆட்டங்களுடனும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் என சரியாக கணித்த இருவருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  38. இந்த சிறிய கிராமத்தில் உறவினர்களாக இருப்பவர்களுக்கு அரிய நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/CAROLINE SOUZA படக்குறிப்பு,செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும் வைட்டர் டாவரெஸ் பதவி, பிபிசி பிரேசில் செய்தியாளர்கள், செரின்ஹா டோஸ் பிண்டோஸிலிருந்து 29 மே 2025, 11:58 GMT இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற ஒரு சிறிய நகரத்தைச் சில்வானா சாண்டோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அங்கு, குழந்தைகள் பலர் நடக்க முடியாத நிலையில் இருந்தனர். அந்த ஊரின் நுழைவுவாயிலுக்கு அருகில் இருந்த லோலோவின் மகள்கள், சாலையின் முடிவில் இருந்த ரேஜேன், பெட்ரோல் நிலையத்துக்குப் பிறகு இருந்த மார்க்வினோஸ், பள்ளிக்கூடத்தின் அருகில் பவுலின்ஹா போன்ற பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர். வடகிழக்கு பிரேசிலில், 5,000 பேர் கூட வசிக்காத ஒரு சிறிய தொலைதூர நகரம் தான் 'செரின்ஹா டோஸ் பிண்டோஸ்'. அங்கு சென்ற உயிரியலாளரும் மரபியல் நிபுணருமான சாண்டோஸ், இதுவரை அறியப்படாத ஒரு நோயை கண்டறிந்து, அதற்கு 'ஸ்போன் நோய்' (Spoan Syndrome) என்று பெயரிட்டார். மரபணு மாற்றத்தால் உருவாகும் இந்த நோய் நரம்பு மண்டலத்தை பாதித்து, படிப்படியாக உடலை பலவீனமடையச் செய்கிறது. ஒரு குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, அது அந்த குழந்தைக்குக் கடத்தப்பட்டால் மட்டுமே இந்த நோய் உருவாகும். உலகளவில் இந்த நோய் குறித்து முதன்முறையாக சாண்டோஸின் ஆராய்ச்சி தான் விவரித்தது. அதற்காகவும், அவரது பிற செயல்பாடுகளுக்காகவும், 2024-ஆம் ஆண்டு பிபிசி வெளியிட்ட உலகின் 100 முக்கியமான பெண்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டோஸ் வருவதற்கு முன், எந்த நோயினால் தங்களது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான விளக்கம் அந்த மக்களிடம் இல்லை. ஆனால் இன்று, அங்கு குடியிருக்கும் மக்கள் ஸ்போன் நோய் மற்றும் மரபியல் குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். "நாங்கள் இந்த நோய்க்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தோம். சாண்டோஸ் தான் அதனை கண்டறிந்தார். மக்களின் உதவி, நிதி உதவி, சக்கர நாற்காலி போன்ற அனைத்து உதவிகளும் அவரது ஆராய்ச்சிக்குப் பிறகு தான் கிடைத்தது" என்று அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மார்கினோஸ் கூறுகிறார். செரின்ஹா டோஸ் பின்டோஸ்: தனி ஒரு உலகம் பிரேசிலின் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமான சாவோ பாலோவில் சாண்டோஸ் வசித்து வந்தார். அவரது தெருவில் வசித்து வந்த பலர், 'செரின்ஹா டோஸ் பின்டோஸ்' எனும் ஊரில் இருந்து வந்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் ஒருவருக்கொருவர் தொடர்புடைய உறவினர்கள். சிலர் அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்திருந்தனர். "எங்கள் ஊரில் நடக்க முடியாத பலர் உள்ளார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது" என்று அங்கு வசித்த மக்கள் சாண்டோஸிடம் தங்களது சொந்த ஊரைப் பற்றி கூறினார்கள் . சாண்டோஸின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தின் மகள்களில் ஒருவரான சிர்லாண்டியா, ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறு வயதில் அவரது கண்கள் தன்னிச்சையாக அசைந்தன. நாட்கள் செல்லச் செல்ல, அவரது கை, கால்களில் வலிமை குறைந்தது. பின்னர் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எளிமையான வேலைகளைச் செய்யக்கூட, அவருக்கு மற்றவரின் உதவி தேவைப்பட்டது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,இனஸ் என்பவரின் இரு மகன்களும் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் குறித்து பல வருடங்களாக ஆராய்ச்சி நடைபெற்றது. இதுவரை ஆவணப்படுத்தப்படாத மரபணு கோளாறான 'ஸ்போன் நோயின்' அறிகுறிகள் தான் இவை என்று சாண்டோஸும் அவரது குழுவும் கண்டறிய அந்த ஆராய்ச்சிகள் வழிவகுத்தன. அதன் பின்னர் உலகின் பிற பகுதிகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 82 பேரை அடையாளம் கண்டனர். சாண்டோஸின் அண்டை வீட்டாருடைய அழைப்பின் பேரில், விடுமுறையின்போது அவர் செரின்ஹாவுக்குச் சென்றார். அவர் அந்த ஊருக்குச் சென்ற அனுபவத்தை "அதன் சொந்த உலகில் அடியெடுத்து வைப்பதாக" சாண்டோஸ் விவரிக்கிறார். அப்பகுதி பசுமையான இயற்கை காட்சிகள் மற்றும் மலைகளைக் கொண்டிருப்பதால் மட்டுமல்ல, அங்கு குறிப்பிடத்தக்க சமூக மாற்றமும் காணப்பட்டது. உள்ளூர் மக்களுடன் சாண்டோஸ் அதிகமாக பேசி பழகியபோது, அந்த மக்கள் பரவலாக உறவினர்களுக்குள் திருமணம் செய்துள்ளார்கள் என்பது அவரை ஆச்சரியப்படுத்தியது. செரின்ஹா எனும் அந்த ஊரின் தனிமையான சூழலும், மற்ற இடங்களிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருவதும், அங்குள்ள பெரும்பாலான மக்கள் உறவினர்களாக இருப்பதற்கு காரணமாக அமைகிறது. இதனால் உறவினர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கின்றது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,செரின்ஹா டோஸ் பின்டோஸின் நுழைவுவாயில் பல தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளும் வரை அவர்கள் உறவினர்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. சிலருக்குத் தெரிந்திருந்தாலும், அத்தகைய உறவுகள் நீண்டகாலம் நிலைத்து வலுவான குடும்ப ஆதரவை வழங்கும் என நம்பியிருந்தனர். உறவினர்களுக்கு இடையேயான திருமணங்கள் உலகளவில் பொதுவானவை. இந்த வகையில், சுமார் 10% திருமணங்கள் நடைபெறுகின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று உறவினர்களுக்குள் செய்துகொள்ளும் திருமணங்களிலிருந்து பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றம் குடும்பத்துக்குள் பரவுவதற்கான ஆபத்தை இத்தகைய திருமணங்கள் ஏற்படுத்துகின்றன. "உறவினர் இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்பவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது, அரிதான மரபணுக் கோளாறு அல்லது மாற்றுத்திறனுடன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு சுமார் 2-3% ஆக இருக்கும். ஆனால், உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொண்டவர்கள், ஒவ்வொரு முறை கர்ப்பம் தரிக்கும்போதும் இந்த ஆபத்து 5-6% வரை உயர்ந்துவிடும்," என்று பிரேசிலின் ரியோ கிராண்டே டூ சுலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் நிபுணர் லூசிவன் கோஸ்டா ரீஸ் விளக்குகிறார். செரின்ஹாவில் உள்ள தம்பதிகளில் 30% க்கும் அதிகமானோர் உறவினர்கள் என்றும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறைந்தது மாற்றுத்திறன் கொண்ட ஒரு குழந்தை உள்ளது என்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. நோய் குறித்து அறிந்துகொள்வதற்கான நீண்ட பாதை செரின்ஹாவைச் சேர்ந்த மக்கள் எந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய சாண்டோஸ் புறப்பட்டார். அது தொடர்பாக ஒரு விரிவான மரபணு ஆய்வை மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். இதற்காக பல பயணங்கள் மேற்கொண்டு, இறுதியில் அந்த பகுதிக்கே இடம்பெயர்ந்தார். அவர் ஆய்வைத் தொடங்கிய காலங்களில், சாவோ பாலோவிலிருந்து செரின்ஹாவுக்கு 2,000 கிமீ தூரம் வரை, சாண்டோஸ் பல முறை பயணம் செய்துள்ளார். வீடு வீடாக சென்று அந்த மக்களின் மரபணு (டிஎன்ஏ) மாதிரிகளை சேகரித்து, அவர்களுடன் காபி குடித்துக்கொண்டே அவர்களது குடும்பக் கதைகளை கேட்டார். இந்த முயற்சிகளின் போது, நோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தைக் கண்டறிய முயன்றார் சாண்டோஸ். மூன்று மாத களப்பணியாக தொடங்கிய ஆராய்ச்சி, பல வருடமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட செயலாக பின்னர் மாறிவிட்டது. ஸ்போனின் நோய் குறித்து ஆய்வு செய்த ஒரு குழு, 2005 இல் பிரேசிலின் புறநகர்ப்பகுதியில் ஸ்போன் நோய் பரவியிருக்கிறது என்று அறிக்கை வெளியிடுவதற்கு சாண்டோஸின் முயற்சிகள் வழிவகுத்தது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,தனது ஆராய்ச்சியைத் தொடர, ரியோ கிராண்டே டோ நோர்டேவில் சாண்டோஸ் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்.பின்னர் பரைபாவின் உட்பகுதிக்கு இடம்பெயர்ந்து, அங்கு அவர் பிற நோய்களை கண்டறிந்தார். இந்த மரபணு மாற்றம் ஒரு குரோமோசோமின் சிறிய பகுதியை இழப்பதனால் ஏற்படுவதாக சாண்டோஸின் குழு கண்டறிந்தது. மரபணு மூளை செல்களில் முக்கியமான புரதத்தை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கிறது. "எங்கள் குடும்பத்தில் மாக்சிமியானோ என்று ஒரு நபர் இருந்தார். முறையற்ற வழியில் பல பெண்களுடன் உறவு வைத்திருந்த அவரிடம் இருந்து இந்நோய் ஏற்பட்டதாக மக்கள் கூறினார்கள்," என்று விவசாயி லோலோ நினைவு கூர்ந்தார். அவருடைய மகள் ரெஜேனும் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர். தற்போது 83 வயதாகும் லோலோ, தனது உறவினரையே திருமணம் செய்து கொண்டவர். அவர் செரின்ஹாவை விட்டு ஒருபோதும் வெளியே சென்றதில்லை. இன்று வரை கால்நடைகளை மேய்த்துவரும் அவர், அன்றாட செயல்களை செய்வதற்கே சிரமப்படும் தனது மகள் ரீஜேனைக் கவனிக்க குடும்ப உறுப்பினர்களின் உதவியை நம்பியுள்ளார். ஆனால், ஸ்போன் நோய்க்கு பின்னால் உள்ள மரபணு மாற்றம், மாக்சிமியானோ குறித்து கூறப்படும் கதையை விட பழமையானது. 500 ஆண்டுகளுக்கு முன், பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் குடியேறிய முற்கால ஐரோப்பியர்கள் வழியாக இந்நோய் வந்திருக்கலாம் . "மரபணு குறித்து வெளியான ஆய்வு முடிவுகள் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் வலுவான ஐரோப்பிய வம்சத்தின் கூறுகள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது, இந்தப் பகுதியில் இருந்த போர்த்துகீசியர், டச்சுகள் மற்றும் செபார்டிக் யூதர்களின் வரலாற்றுப் பதிவுகளை ஆதரிக்கின்றன," என்று சாண்டோஸ் விளக்குகிறார். இரண்டு ஸ்போன் நோயாளிகள் எகிப்தில் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அந்த நோயாளிகளும் ஐரோப்பிய வம்சத்தையே பகிர்ந்து கொள்கின்றனர் என்பது பிந்தைய ஆய்வுகளில் உறுதியாகியது. அதனைத் தொடர்ந்து இந்தக் கோட்பாடு மேலும் வலுவடைந்தது. இதனால், ஸ்போன் நோயின் தோற்றம் ஐபீரிய தீபகற்பத்தில் இருக்கலாம் என்பது தெளிவானது. "இந்த நோயானது 15 ஆம் நூற்றாண்டுகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளால் தங்களது கோட்பாடுகளை நம்பாதவர்களை தேடி கண்டுபிடித்து தண்டிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்களிடமிருந்து தப்பி ஓடிய ஸ்பெயின் பிராந்தியத்தை சேர்ந்த யூதர்கள் அல்லது மூர்களுடன் வந்திருக்கலாம்" என்று சாண்டோஸ் கூறுகிறார். மேலும் உலகளவில், குறிப்பாக போர்ச்சுகலில் இந்த நோயால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். அபாயங்களைப் புரிந்துகொள்வது பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,சியூ லோலோ என அழைக்கப்படும் மனோயல் ஃபிர்மினோ, அந்த நகரத்தில் ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தனது மகள் ரெஜேனுடன் வசிக்கிறார். இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவ முறைகளில் பெரிதாக முன்னேற்றம் இல்லை என்றாலும், நோயாளிகளை கண்காணிப்பது சமூக அணுகுமுறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. "முன்பு எங்களை 'மாற்றுத்திறனாளிகள்' என்றார்கள். இப்போது, ஸ்போன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அழைக்கிறார்கள்" என்கிறார் ரெஜேன். சக்கர நாற்காலிகள் சுதந்திரத்தை மட்டும் அல்ல, உடல் சார்ந்த குறைபாடுகளைத் தடுக்கும் வழியையும் வழங்கியுள்ளன. கடந்த காலங்களில், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் படுக்கையில் அல்லது தரையில் படுத்திருக்கும் நிலை இருந்தது. ஸ்போன் நோயின் பாதிப்புகள் அதிகரிக்கும்போது வயதுக்கு ஏற்ப உடல் தகுதியும் மோசமடைகிறது. 50 வயதுக்குள், கிட்டத்தட்ட அனைத்து நோயாளிகளும் முழுமையாக மற்றவரை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இனெஸின் குழந்தைகளின் நிலையும் இவ்வாறு தான் உள்ளது. செரின்ஹாவில் உள்ள வயதான மக்களில் அவர்களும் அடங்குவர். 59 வயதான சிகின்யோவால், இனி பேச முடியாது, 46 வயதான மார்கின்யோஸ் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதில் சிரமப்படுகிறார். "'மாற்றுத்திறன்' கொண்ட ஒரு குழந்தையை வளர்ப்பது கஷ்டமான காரியம். நாங்கள் அவர்களை ஒரே மாதிரியாக நேசிக்கிறோம், ஆனால் அவர்களுக்காக நாங்களும் கஷ்டப்படுகிறோம்," என்கிறார் உறவினரை மணந்த இனெஸ். பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,தொழில்சார் சிகிச்சை முறை கொண்ட ஆராய்ச்சியின் காரணமாக, பவுலா மற்றும் பல நோயாளிகள் ஏற்கெனவே மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளைப் பெற்றுள்ளனர். சிக்கினோ மற்றும் மார்க்கினோ ஆகியோரின் உறவினரான 25 வயதாகும் லரிசா குவெய்ரோஸும் அவரது தொலைதூர உறவினரை மணந்து கொண்டார். அவரும் அவரது கணவரான சாலோவும், பல மாதங்கள் பழகிய பின்னர் தான், தங்களுக்கு பொதுவான மூதாதையர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். "செரின்ஹா டோஸ் பிண்டோஸில், நாங்கள் அனைவரும் உறவினர்கள். எங்களுக்கு எல்லோருடனும் தொடர்பு உள்ளது," என்கிறார் லரிசா . லரிசா மற்றும் சாலோ போன்ற தம்பதிகள் சாண்டோஸ் ஈடுபட்டுள்ள புதிய ஆராய்ச்சி திட்டத்தின் மையமாக உள்ளனர். பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்த திட்டம் 5,000 தம்பதிகளை தீவிரமான நோய்களுடன் தொடர்புடைய மரபணுக்களுக்காக பரிசோதிக்கின்றது. பட மூலாதாரம்,MARIANA CASTIÑEIRAS/BBC படக்குறிப்பு,சில்வானா சாண்டோஸ் அந்தப் பகுதியில் வசிக்கவில்லை, ஆனால் அந்த ஊருக்கு தொடர்ந்து சென்று வருகிறார். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதை நிறுத்துவதல்ல இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள். ஆனால், தங்களது மரபணுக்களால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கு தம்பதிகளுக்கு உதவுவதாக சாண்டோஸ் கூறுகிறார். இப்போது பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ள அவர், மரபியல் கல்வி மையத்தையும் வழிநடத்தி, வடகிழக்குப் பகுதியில் இப்பரிசோதனையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் செரின்ஹா டோஸ் பிண்டோஸில் வசிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு முறை அந்த ஊருக்கு வரும்போதும் சொந்த வீட்டுக்கு வருவது போல் உணர்கிறார். சில்வானா சாண்டோஸ் எங்களது குடும்பத்தில் ஒருவரைப் போல" என்கிறார் இனெஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygnj5g5p2o
  39. யாழ்பாண தமிழ் வேர் என்பது அவரது பெருமை அல்ல. அவரது திறமையே அவருக்கு பெருமை. யாழ்பாணத்தில் இருந்திருந்தால் ஜாதீய ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இன்று போற்றப்படுகிறார். வாழ்த்துகள் வேடன்.
  40. ஓம் உதய்நிதிதான் அந்த சார் என்றும் ஒரு சந்தேகம் ஓடுகிறது. அதே போல் சும்மா பொலிசை மிரட்ட போனில் “சார்” என யாரிடமோ பேசுவது போல் குற்றவாளி பாவனை செய்ததாக மாநில அரசின் கீழ் உள்ள பொலிஸ், மத்திய அரசின் கீழ் உள்ள நீதி துறை எல்லாரும் சாதிக்கிறார்கள். யார் அந்த சார்? மாநில, மத்திய அரசுகள் சேர்ந்து அமுக்க நினைப்பதால் அவர் ஆளுனராக இருக்கவே வாய்புள்ளதாக நான் நினைக்கிறேன். ஆனல் உதய் ஆகவும் இருக்கலாம். காதலன் படத்தில் வரும் கார்கர்லால் சத்யணாராயணா எனும் வில்லன் கரெக்டர் - சென்னா ரெட்டியை அவமானபடுத்த ஜெ சொல்லு உருவாக்கப்பட்டதாம்.
  41. இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள். இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை. விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.
  42. தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது. இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும். தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார். அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார். பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள். இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும். இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்
  43. இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும் வணக்கம். ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும். நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும். இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள். அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம். இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது. 1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது. அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர். இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம். இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம். ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல. ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன். இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும். ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது. ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும். இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு: இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம். அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம். இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது. ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள. இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies). மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம். இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே. இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும். இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும். ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா. இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன். நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.