Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7044
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19109
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2951
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87988
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/06/25 in all areas

  1. இது ஒரு புலத்தில் இருந்து சென்ற நபரின் கட்டுரை. மேலே யாயினியும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, உள்ளூர் பயனர்களை விட வெளிநாட்டுப் பயனர்களை வித்தியாசமாகக் கவனிக்கிறார்கள் என்ற என் எண்ணம் வலுப்படுகிறது. வடக்கின் ஒரு அரச மருத்துவ மனையில் தந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த வேளையில் என் அனுபவமும் இப்படித் தான் இருந்தது. "மகன் வெளிநாட்டில் இருந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் டொக்ரர்" (நான் என்ன செய்கிறேன் என்றே என் சிறிலங்கா உறவுகளுக்குத் தெளிவில்லை😂) இப்படி முதல் இரு நாளும் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்த ஒரு மருத்துவ நண்பர் மூலமாக நிலைமையை விசாரிக்க வைத்தேன். 3 ஆம் நாள் நான் மருத்துவ மனை போய் அப்பாவைப் பார்த்த போது என்னோடு அக்கறையாக அப்பாவின் நிலைமையைப் பற்றி உரையாடினார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அதே வேளை, ஏனைய 6-7 ICU நோயாளிகள் பற்றிய நிலையை அவர்களின் உறவுகளுக்கு கேட்டாலும் தெளிவாகச் சொல்லாமல் நடந்து கொள்வதை அவதானித்தேன். ஒரேயொரு சிங்கள மருத்துவர் மட்டும் எல்லோரோடும் ஒரே விதமாக பண்பாக நடந்து கொண்டார். இளம் மருத்துவர்களாவது எல்லா நோயாளிகள், உறவுகளோடு ஒரே மாதிரிப் பண்பாக நடந்து கொள்ளும் வகையில் பழக்கப் பட வேண்டும். வெளிநாடு, அரச அதிகாரி, விஐபி நோயாளி ஆகியோருக்கு மட்டும் விசேட கவனிப்புகள் கொடுப்பது நல்லதல்ல!
  2. சொல்லாமலே அறிவார் கிழவர். அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.
  3. இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது ஒரு உணவக மேலாளராக பணியாற்றுகிறேன். திட்டமிடல், மனித வள மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் சிறந்த அனுபவம் உள்ளேன். பொழுதுபோக்காக புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன் மற்றும் சமூக சேவைகளில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 3. வணக்கம்! என் பெயர் நந்தினி. நான் ஒரு பயோடெக் பட்டதாரி மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவள். பல்கலைக்கழகத்தில் என் திட்ட வேலை நேரத்தில் நோய் எதிர்ப்பு முறை குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். உயிரியல், மருந்தியல் மற்றும் ஆய்வுக் கோட்பாடுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னுடைய குறிக்கோள் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி, ஆரோக்கிய உலகை உருவாக்க உதவுவது. 4. வணக்கம். என் பெயர் கார்த்திக். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். கலைஞர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். சிஎன்சி இயந்திரங்கள், CAD மற்றும் தொழிற்துறை தானியங்கி அமைப்புகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. தொழில்நுட்ப மேம்பாட்டை விரும்புகிறேன். பொழுதுபோக்காக வாகனங்களை பழுது பார்க்கும் ஆர்வம் உள்ளது. நான் திட்டமிடும் திறமையுடன் கூடிய குழு நபியாக இருக்கிறேன். 5. வணக்கம், என் பெயர் ஸ்ரீதேவி. நான் ஒரு ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். தமிழும் ஆங்கிலமும் மொழிப் பயிற்சி அளிப்பதில் சிறந்த அனுபவம் உள்ளது. மாணவர்கள் வளர்ச்சி என் முக்கிய கவனம். நான் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நேர்த்தியான வகுப்புகள் மற்றும் மாற்றுத் போக்குகள் என் பயிற்சியின் சிறப்பாக இருக்கின்றன. 6. வணக்கம்! என் பெயர் விஜய். நான் Chennaiயைச் சேர்ந்த IT நிபுணர். Cloud computing மற்றும் data securityயில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக ஒரு மத்திய நிறுவனத்தில் System Administrator ஆக பணியாற்றுகிறேன். வேலை நேரத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒழுக்கமும் நேர்த்தியும் எனது அடையாளங்கள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவன். 7. என் பெயர் அனுஷா. நான் ஒரு கிராபிக்ஸ் டிசைனர். Photoshop, Illustrator மற்றும் Canva போன்ற மென்பொருட்களில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. கலை மற்றும் வடிவமைப்பில் சிறந்த விழிப்புணர்வு உள்ளவள். வாடிக்கையாளர் தேவைகளை புரிந்து, தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்குவது எனது சிறப்பு. சமூக ஊடக கம்பெயின்கள் மற்றும் பிராண்டிங் பற்றிய தெளிவும் எனக்கு உள்ளது. 8. வணக்கம், நான் ராஜேஷ். நான் ஒரு இளம்வயது தொழில் முனைவோர். Ecommerce தளங்களை உருவாக்கி விற்பனையை மேம்படுத்துவதில் ஆர்வம் உள்ளது. Shopify மற்றும் WordPress தளங்களில் சிறந்த அனுபவம். வாடிக்கையாளர் பக்கவாதம், சந்தை ஆய்வு மற்றும் மாறும் நுகர்வோர் பழக்கங்களை புரிந்து கொள்ளும் திறன் எனக்குள்ளது. அடிக்கடி புத்தகங்களை வாசித்து வழிகாட்டுதல்களை செயல்படுத்துவேன். 9. என் பெயர் லதா. நான் புள்ளியியல் பட்டதாரி. தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறனில் சிறந்தவள். Excel, SPSS, R மற்றும் Python போன்ற கருவிகளில் வேலை செய்துள்ளேன். சமூக ஆய்வுகளுக்கான தரவுகளை சேகரித்து, தீர்வுகளை பரிந்துரைக்கும் அனுபவம் உள்ளது. திட்டமிடல் மற்றும் நேர நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவள். 10. வணக்கம்! என் பெயர் இம்ரான். நான் ஒரு கணக்காளர். Tally, QuickBooks மற்றும் GST தொடர்பான நடவடிக்கைகளில் அனுபவம் உள்ளது. நிறுவன நிதி மேலாண்மை, வருமான வரி தாக்கல் மற்றும் ஆண்டுத் திட்டங்களில் சிறந்த பங்கு வகித்துள்ளேன். ஒழுங்கும் நம்பிக்கையும் எனது வேலை நெறிமுறைகள். நேரம் காப்பதும், தவறின்றி கணக்கிடுதலும் எனது பலம்.
  4. 'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது. ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள். எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை. தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள். நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள். நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.
  5. சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே. அவரவர் தெரிவு.
  6. எனக்குச் சிரிப்பாய் இருக்கு இந்தக்கருத்தை வாசிக்கும்போது காரணம், கூறியது யாழ் வைத்தியசாலையின் அதிகாரி வருபவர்கள் அநேகமாக குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் ஒன்னும்தெரியாத பாப்பாக்கள் சிங்களம் திட்டமிடுகிறதாம். எல்லோருக்கும் சுயமாக சிந்திக்கத் தெரியாதாம் அப்பன் ஆத்தை சரியில்லை வளர்ப்பு சரியில்லை.
  7. படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,
  8. ஒரு டெஸ்ட் கிண்ணத்துக்கான கணிப்பு போட்டி, வெறும் 8 கேள்விகளுடன் 5 ஓவர் போட்டி போல அமைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான கேள்விகளை வெறும் 2 நிமிடத்தில் பதிந்து விடலாம். மேகி நூடில்ஸ் துரித உணவு போல, இது துரித கணிப்பு போட்டி. வெறும் இரெண்டே நிமிடத்தில் வெற்றியை தட்டிச்செல்லுங்கள். போட்டி முடிவு - ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கியராச்சிய நேரம் 23:59. பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம். யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்)
  9. இன்னொரு சோதிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது நாங்கள் நிற்கின்ற புகைபடம் ஒன்றை பார்த்துவிட்டு இன்னொருவர் கோபபட்டாலோ அல்லது சபித்தாலோ எங்களுக்கு கான்சர் போன்ற நோய்கள் வரலாம் அல்லது கார் விபத்து விமான விபத்து கூட வரலாம் .அதனால் நான் நிற்கின்ற குரூப் படங்களை ஒருவருக்கும் அனுப்பி போடாதையுங்கோ என்று நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு சொல்லிவைத்துள்ளேன்.
  10. போதை மாத்திரைகள் என்றால் இவை fentanyl மாத்திரைகளா......... அழிந்தது முழுநாடும். இவை பவுடர் அல்லது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியமானவை. இதை பல நாடுகள் இன்று உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவே பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்கின்றது. சிரியா செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும் இது ஒரு பெரும் பிரச்சனை. சமீபத்தில் கண்மூடித்தனமாக அமெரிக்கா கனடாவை இந்த விடயத்தில் குற்றம் சாட்டியது. இது இலங்கை அரசையே மீறிய ஒன்று. அமெரிக்காவில் இது அமெரிக்க அரசையே மீறிய ஒன்று. இந்த விடயங்களில் அவரவர்களே அவரவர் குடும்பங்களுக்கு பொறுப்பும், காவலும். அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன. இங்கு இருக்கும் பலர் இவற்றை உங்களின் வாழ்க்கைகளில் ஒரு தடவை கூட கண்டிருக்கமாட்டீர்கள். ஆனாலும் அவை வந்து போய்க் கொண்டிருந்தன.
  11. எப்படி திறமைசாலிகள் வித்தைகள்(மஜிக்) செய்து உங்கள் கண்களே நம்பும்படியாக உங்களை ஆச்சரியப்பட வைக்கின்றார்களோ அப்படித்தான் ஜோதிடமும் உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லையும் வைத்து அவர்கள் உங்கள் நிலையைக் கணித்து உங்கள் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொண்டு உங்களை தன்வசமாக்கிவிடுவார்கள் பின்னர் அவர் கூறியது எல்லாமே சரியாக இருக்கும்
  12. இது ஏதோ ஆங்கிலத்தில் இருக்கும் சுயவிபரத்தை மொழிபெயர்ப்பு செயலி மூலம் தமிழுக்கு மாற்றியது போல தெரிகிறதே?
  13. முதலாம் எண், சிம்ம ராசி இப்படியான ஒரு சிங்கத்தை நான் சிறு வயதில் இருந்தே மிக நன்றாக அறிந்திருந்தேன். அந்தச் சிம்மம் என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ அவ்வளவாக முயற்சி எதுவும் செய்யவில்லை. அந்த மனிதனின் கடைசி இரு நாட்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அவர் வாயாலேயே, வாயால் மட்டும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று எல்லா கோள்களுக்கும் போய் வரும் ஆற்றல் கொண்டிருந்தார். ஞாயிறில் கூட (சூரியன்......!) இறங்கி ஏறுவேன் என்பார். ஒரு மண்டைதீவுச் சாத்திரியார் பற்றி முன்னரே இங்கு களத்தில் எழுதியிருக்கின்றேன். ஒரு பக்கம் மண்டைதீவுச் சாத்திரியார், இன்னொரு பக்கம் சிம்மம்.................. தப்பிப் பிழைத்ததே ஒரு சாதனை தான்.......................🤣.
  14. அவசர தேவைகள் சார்ந்த சுயநலக்காதல் இவ்வாறு தான் நிறைவு பெறும்
  15. அவசியம் என்று நானும் சொல்லவில்லை😎. பொய் சொன்னார் எனவும் சொல்லவில்லை 🤣. ஓம்
  16. நீங்க மட்டும் தான் குரூப் போட்டொ எடுப்பீங்களா ? நாங்களும் எடுப்போமில்ல 😃
  17. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) - Australia முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) - South Africa முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - South Africa இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) - Australia போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Usman போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) - Keshav போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) - South Africa போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - South Africa
  18. விலை இல்லா மாளிகையில் – உன்னை மீட்டவும் விரல் இல்லையோ?? நான் யார் உன்னை மீட்ட – வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
  19. வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄 இதுக்குள்ள..... இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂
  20. கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.
  21. உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா. அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது. எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன். தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம். இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.
  22. சோதிடம் கூறும் ஒரு சாமியாரிடம் சேர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் வழங்கிய பேட்டி ஒன்று பார்ததேன். பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா என்று யாராவது தம்பதிகள் வந்தால் ஒரு துண்டு சீட்டில் பெற்றோர் பெயருடன் பெண்பிள்ளை என்று எழுதி அதை ஒரு உறையில் போட்டு பூஜை செய்துவிட்டு, தம்பதியினரிடம் மாற்றி கூறுவாராம். அதாவது ஆண்பிள்ளை என்று கூறுவாராம். பின்னர் அந்த கவரை கடவுள் சிலைக்கு கீழ் வைத்து விட்டு உங்கள் குழந்தைக்காக தினமும் பூஜை செய்யப்போவதாக கூறுவாராம். ஆண்பிள்ளை பிறந்தால் அவர் சொன்னது பலித்து விட்டது என்று அந்த கவரை திரும்ப உடைக்காமல் அப்படியே அமுக்கிவிடுவாராம். தற்செயலாக பெண்பிள்ளை பிறந்தால் அவர்களிடம் நான் பெண்பிள்ளை என்று தானே உங்களுக்கு கூறினேன் என்று கதையளப்பாராம். பெற்றோர் நம்பவில்லை என்பதால் கவரை அவர்கள் முன்பாகவே பிரித்து அதில் பெண்பிள்ளை என்று எழுதியிருப்பதை காட்டுவாராம். பெற்றோரும் நாம் தான் தவறாக விளங்கி விட்டோம் சாமி சரியாக தான் சொல்லியிருப்பார் என்று திருப்தியடைவார்களாம்.
  23. 1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன். ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.
  24. நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.
  25. 👇"மருத்துவ சோதிடம் - Medical Astrology " என்ற துறையில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் போட்டிருக்கிறார். ஆனால் "மருத்துவ சோதிடம்" என்ற துறையே மருத்துவத்திலோ, விஞ்ஞானத்திலோ ஒரு துறையாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை (இப்படி செயற்கை நுண்ணறிவு சொல்கிறது). செயற்கை நுண்ணறிவு இப்படிச் சொல்லாமலே, இது கஞ்சா கப்சா என்று முனைவர் பட்ட ஆய்வு பற்றிப் பரிச்சயம் உள்ளோர் எவரும் உடனே கண்டு பிடித்து விடுவர். இதெல்லாம் எடு கோள் எடுத்து ஆராய இயலாத விடயம். நீங்கள் குறிப்பிட்ட பல்கலைகள் எந்த சோதிடருக்காவது முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறதாமா? "தமிழர் வாழ்வில் சோதிடத்தின் பங்கு" என்று ஒருவர் சமூகவியல் ஆய்வு செய்தால் , அது "சோதிடத்தில் முனைவர் பட்டம்" என்று கொள்ளப் பட வும் முடியாது. "சமூகவியல் முனைவர் பட்டம்" என்று தான் எடுத்துக் கொள்ளப் படும். சுருக்கமாக, சோதிடர் ஒருவர் தனக்கு சோதிடத்தில் PhD இருக்கிறது என்று சொன்னால், அதை "permanent head damage" 😎என்று எடுத்துக் கொண்டு நகர்ந்து விடலாம்!
  26. மாம்பழத்தை ஏலம் எடுக்க குடுத்த காசை ஏதாவது சிறு பிள்ளைகளை முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு குடுத்திருக்கலாம்.
  27. இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!
  28. மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
  29. நானும் நீங்களும் தமிழர்கள் அல்லவா? ஆகவே உங்கள் மனநிலைதான் எனதும். உங்களை போலவே, நானும் நேரடியாக கண்டும், அனுபவித்ததுமான அடிப்படையில் உருவான மனநிலை இது. ஆனால் சிங்கள மக்களில் மிக பெரும்பான்மையானோருக்கு ஆமியுடன் இந்த அனுபவம் இல்லை. அவர்கள் அறிந்தது எல்லாம், அறந்தலாவ, அனுராதபுரம், புறக்கோட்டை, மத்திய வங்கி போல சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை செய்பவர்கள் புலிகள், அவர்களிடம் இருந்து சிங்கள இனத்தையும், சிங்கள நாட்டையும் காப்பாவர்கள் ஆமி. கொஞ்சம் சிங்களவர்களுக்கு ஜேவிபி காலத்தில் தமக்கு என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அனுரா. உண்மையில் அவர் ஆமியை ரணவிரு என அழைக்காமல் இட இதுவும் (நாடகம் ஆடுவதும்) ஒரு காரணம். தன் தோழர்களை, சகோதரனை கொண்ட ஆமியை ரணவிரு என அழைக்க அனுர விரும்பவில்லை. எம்மை கொண்டதால் அல்ல.
  30. இறுதி யுத்தத்தின் போது புலிகளால் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப் பட்டு, தப்பியோடினால் கண்டு பிடிக்கும் வகையில் தலை மயிர் கட்டையாக கத்தரிக்கப் பட்டு, சில சந்தர்ப்பங்களில் இத்தகையோரை வெளியேறும் தறுவாயில் புலிகளே சுட்டுக் கொன்றது..இவையெல்லாம் அமெரிக்காவில் பனி வனத்தில் வசிக்கிற உங்களுக்கு "காணிச் சண்டை எல்லைச் சண்டை" ரேஞ்சுக்குச் சுருங்கி விட்டது அதிசயமில்லை😂. ஆனால், இந்த அனுபவங்களூடாக வாழ்ந்து வந்த மக்களுக்கு இவை சாதாரண நிகழ்வுகளாக இருக்காது. இப்படிப் பாதிக்கப் பட்ட மக்கள்- அவர்கள் சிங்களவரால் பாதிக்கப் பட்டவர்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- கவனமாகக் கையாளப் பட வேண்டியோர். யாழ் களத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் சுய வாக்குமூலங்களின் படி, இதைச் சொல்லும் நீங்களே, ஒரு காலத்தில் உங்கள் உயிர் முக்கியம் என்று விமானமேறி அமெரிக்கா வந்த ஒருவர். உங்களுக்கிருக்கும் சொந்த உயிர் மீதான அக்கறையை விட ஏன் வன்னி மக்கள் குறைவாக அக்கறை கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?
  31. யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கமரன் கிரீன் போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) கெய்சோ ரபாடா போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா நீங்கள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பவர் (against the herd), அதனால் அதிர்ஸ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
  32. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Travis Head போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Keshav Maharah போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) தென்னாபிரிகா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) தென்னாபிரிகா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.