Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    34
    Points
    8975
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88812
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3666
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33807
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/22/25 in all areas

  1. 1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.
  2. பாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.
  3. மட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?
  4. மட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!
  5. நேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.
  6. எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.
  7. வீரப் பையன், இந்தத் திரியில் நீங்கள் பல பொய்யான தகவல்களை எழுதியுள்ளீர்கள். மேற்கோள் காட்டியுள்ளது போன்று ஆதாரமற்ற சமூக வலைத் தளங்களில் உலாவும் குறுஞ்செய்திகளை நீங்கள் நம்புபவராக இருக்கலாம். அவற்றை யாழில் கொண்டு வந்து ஒட்டி அதன் நம்பகத் தன்மையைக் கெடுக்காதீர்கள். நன்றி.
  8. சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.
  9. கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரண‌ச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திற‌மைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
  10. மண்ணுக்குள் பொன் தேடும் எலிபன் .......... ! 😂
  11. காணாமல் போனோர் என்றபடியால் எவருமே கண்டு கொள்ளவில்லையோ? இதுவே சீமானைப்பற்றி எழுதியிருந்தால் எல்லா இலையான்களும் இங்கே மொய்த்திருக்கும். நன்றி சிறி.
  12. ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍
  13. Labrinth - Jealous [Verse 1] I'm jealous of the rain That falls upon your skin It's closer than my hands have been I'm jealous of the rain I'm jealous of the wind That ripples through your clothes It's closer than your shadow Oh, I'm jealous of the wind [Chorus] 'Cause I wished you the best of All this world could give And I told you when you left me There's nothing to forgive But I always thought you'd come back, tell me all you found was Heartbreak and misery It's hard for me to say, I'm jealous of the way You're happy without me [Verse 2] I'm jealous of the nights That I don't spend with you I'm wondering who you lay next to Oh, I'm jealous of the nights I'm jealous of the love Love that was in here Gone for someone else to share Oh, I'm jealous of the love
  14. பேஸ்போலின் ப‌ந்து சின்ன‌ன் அண்ணா நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி என‌ ப‌டுது , பேஸ்போலின் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் வேக‌மாக‌ எறிவின‌ம்.................பேஸ்பேல் ப‌ந்தை எப்ப‌டியும் பிடிக்க‌லாம் அத‌ற்க்கு விதிமுறைக‌ள் ஒன்றும் இல்லை , ம‌க்க‌ள் பார்வையிடும் இட‌த்தில் கூட‌ பாய்ந்து பிடிப்பின‌ம் உல‌க‌ அள‌வில் பேஸ்போலுக்கு பெரிய‌ வ‌ர‌வேற்ப்பு இல்லை , ஆனால் அமெரிக்காவில் இந்த‌ விளையாட்டை பெரிய‌ தொட‌ரா ந‌ட‌த்துவின‌ம் , இப்ப‌ கூட‌ ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கு விளையாட்டு👍.....................................
  15. பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்.... இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍
  16. ரஞ்சித் அவர்களே, எவளவு கடுமைகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். மனம் கரைந்துபோகிறது. உறவுகளைக் கடந்த தூய உள்ளங்களால் இந்த உலகு நகர்வதாக நான் சிந்திப்பதுண்டு. அப்படியான ஒருவராக உங்கள் அன்ரா இருக்கிறார். உங்களோடும், அவர் உதவிய பலரோடும் என்றும் நிலையாக வாழ்வார்.
  17. தமக்குள் ஒற்றுமை மற்றும் ஐக்கியம் அற்ற எந்த நாடும் எந்த இனமும் வெற்றி பெற்று விடமுடியாது. நாமே சாட்சி.
  18. @வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.
  19. எனது கருத்துப்படி ...யூனியர் சரிகமாப சிறார்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கும். அவர்களுடான் கூட வந்த பெற்றார்களுக்கும் தான். சனிக்கிழமையாக இருந்தால் மறு நாள் வைத்திருக்கலாம் ...விதி செய்த சதியா? அதிஷ்டமின்மையா ? காலநிலை செய்த கோலமா ?
  20. எங்களை அழிக்கத் துணை நின்றவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். தயாளன் கனியன்
  21. பாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.
  22. கொழும்பை வந்தடைந்ததும் பம்பலப்பிட்டி, லொறிஸ் வீதியில் அமைந்திருக்கும் கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவுடன் தங்கியிருந்தோம்.எங்களை எப்படியாவது நல்ல பாடசாலைகளில் சேர்த்துவிடவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நான் 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும்போதே மட்டக்களப்பில் போர் ஆரம்பித்திருந்தது. அக்கா உயர்தரப் பரீட்சைக்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தாள். கன்னியாஸ்த்திரிகள் மடம் அமைந்திருந்த பகுதியில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலையான புனித மரியாள் மகாவித்தியாலயத்தில் அக்காவைச் சேர்த்துவிட்டார். எனக்குப் பாடசாலை கிடைப்பது கடிணமாகவிருந்தது. 1979 ஆம் ஆண்டில் இருந்து 1982 ஆம் ஆண்டுவரை நான் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியில் எனது சிறுபராயத்தைக் கழித்திருந்தேன். ஆகவே அங்கு சென்று, பழைய மாணவனான எனக்கு அனுமதி தருகிறார்களா என்று பார்க்கலாம் என்று ஒரு காலைப்பொழுதில் என்னையும் அழைத்துக்கொண்டு அக்கல்லூரிக்குச் சென்றார் சிஸ்ட்டர் அன்ரா. நான் படித்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் கல்லூரி மிகவும் மாறிப்போயிருந்தது. விசாலமானதாகவும், நவீனமானதாகவும் காணப்பட்டதாக ஒரு பிரமை. கல்லூரி அதிபராகவிருந்த பாதிரியார் ஒருவருடன் என்னை கல்லூரியில் இணைக்க முடியுமா என்று இரைஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டு நின்றார் அன்ரா. ஆனால் அதிபருக்கோ அதில் சிறிது விருப்பமும் இருக்கவில்லை. கத்தோலிக்கப் பாடசாலையான அக்கல்லூரிக்கு இணையும் மாணவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள். ஆகவே இணையும்போது பாடசாலை வளர்ச்சி நிதிக்கென்று பாடசாலை நிர்வாகம் கேட்கும் பணத்திற்கு அதிகமாகக் கொடுத்து இணைந்துகொள்பவர்கள். அப்படியிருக்கும்போது கன்னியாஸ்த்திரி ஒருவர் கூட்டிவந்திருக்கும் ஏழ்மையான மாணவனை கல்லூரியில் ஏற்றுக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. "மன்னிக்க வேண்டும் சிஸ்ட்டர், தமிழ் மொழி வகுப்புக்களில் இடமில்லை, எல்லா வகுப்புக்களும் நிரம்பி வழிகின்றன, நீங்கள் வேறு பாடசாலை பாருங்கள்" என்று கூறினார். "பாதர், அவனுக்குத் தேவையான மேசையையும், கதிரையினையும் நானே வாங்கித் தருகிறேன், ஏதோ ஒரு மூலையில் அவனையும் இருக்க விடுங்கள்" என்று வேண்டத் தொடங்கினார். எனக்கு முன்னாலேயே எனது அன்ரா அப்பாதிரியாரிடம் இரைஞ்சிக் கேட்பதைப் பார்த்தபோது மிகுந்த கவலையாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியாரோ விடாப்பிடியாகவே மறுத்துவிட்டார். "உங்களுக்கென்று தனியான தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின்றனவே, அங்கு சென்று கேட்டுப்பாருங்கள்" என்று கையை விரிக்க மிகுந்த ஏமாற்றத்துடன் அன்ராவின் மடம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். சரி, இனி என்ன செய்யலாம்? கல்கிஸ்ஸையில் இருக்கும் தோமஸ் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் அல்லது ஜோசப் கல்லூரியில் கேட்டுப்பார்க்கலாம் என்று தனக்குத் தெரிந்த கன்னியாஸ்த்திரிகள், பாதிரிகள் ஊடாக அவர் முயன்று பார்த்தார். இவை எல்லாமே பெருந்தொகைப் பணத்தை பெற்றுக்கொண்டே அனுமதியளிப்பார்கள், பணமின்றி எவருமே உள்ளே வர முடியாது, உங்களின் பெறாமகன் எவ்வளவுதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே அனைவரினதும் பதிலாக இருந்தது.
  23. நேற்றிரவு ஈரானை தாக்கிய B-2 விமானம் பற்றி உலகமே பேசுகின்றது, முழுமையாக தெரிந்துகொள்வோம்! அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் 1989 ஜூலை 17-ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது. B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும். B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும். B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999-ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003-ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017-ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம். மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது. அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - ஸ ©️Vaanam.lk
  24. மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் புரையோடியுள்ள இந்துக் கடவுள்களின் நம்பிக்கையைப் பொய் என்று மக்கள் இலகுவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புராணங்கள் பொய்யாக இருந்தால் புராணக் கதாநாயகர்களான கடவுள்களும் பொய் என்றாகும். இதேபோல் இலங்கையிலும் என்றாவது ஒருநாள் மகாவம்சம் கூறும் பொய்களும் உடையும்.
  25. தூக்கம் குறைவு என நீங்கள் முன்னர் குறிப்பிட்டதற்கும் சிறுவயதில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கும் தொடர்பிருக்கலாமோ? தொடருங்கள் சகோதரா.
  26. ரஞ்சித், உங்கள் மனதிலுள்ள சுமை ஒன்றை இறக்க முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களது இலங்கைப் பயணக் கட்டுரையில் சித்தி பற்றி எழுதியவை நினைவுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.
  27. வாழ்க்கையில் சிலரை ம றக்க முடியாது ஆயுள் வரை அவர்களின் நினைவு இருக்கும் .அவர்கள் செய்த நன்மையை நெஞ்சார வாழ்த்தும். நல்லதோர் கையில் அடைக்கலமாகி இருக்கிறீர் . கதைப்பகிர்வுக்கு நன்றி. ( முன்பும் ஒரு தடவை இது பறறி சொன்னதாக ஞாபகம்) .
  28. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வள‌ர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென‌ போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.
  29. வசியவர்களே, எப்படி எண்ணெய் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்வது போன்றா? இது இன்னும் நிலைமையை மோசமாக்குவதோடு மேலும் கொதிநிலைக்கான வழியாக மாறாதா?
  30. ஈரான் இந்த தீவிர மதவாத ஆட்சியில் இருந்து விடுதலை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வந்துள்ளது, மன்னராட்சி தற்போதுள்ள ஆட்சியினை போல மிக மோசமாக இருக்காது என நம்புகிறேன், கெட்டதிலும் ஒரு நல்லது நடைபெறுகிரது.
  31. இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும் மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம். (பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்). மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது. வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது. இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா. 8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும் ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல். ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்) இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது). Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)
  32. அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்! இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. https://athavannews.com/2025/1436584
  33. அச்சோ... பெரிய மன்னர் பரம்பரை, மண்ணாங்கட்டி பரம்பரை என்டெல்லாம் ஈரான் கதைச்சுது... கடைசில அமெரிக்கன் மாவுக்கட்டு பரம்பரை ஆக்கிட்டான்... 🤣🤣 ஒரே ஒரு அடிதான்... மொத்த ஈரானும் சோலி முடிஞ்சுது! https://www.nytimes.com/live/2025/06/21/world/iran-israel-trump
  34. 😃 அது தானே பார்த்தேன் இரண்டும் கடுவன்கள். காலமாற்றத்தில் நாயும் பூனையும் நட் பாகி விடடனர் ...இந்த மனித ஜாதி தான் திருந்தவே இல்லை.
  35. https://www.facebook.com/share/r/1Ao1i3ENjC/?mibextid=wwXIfr தலைவரின் தாய்பற்றி வாலியின் கவிதை.
  36. அந்த பயத்திலும் உங்களிடம் இருந்தது " ஜீவகாருண்யம் " உயிர்களின் மீதான கரிசனை. துணைவியை அழைத்தது உங்களுக்கு எதும் ??? என்ற குடும்பத்தின் மீதான அக்கறை . என்றாலும் குட் சப்போர்ட்.
  37. இளகிய மனது, வெள்ளை மனது என்பதை விட பயந்த மனது என்று சொல்வது தான் சரி போல.........🤣. உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஒரு பூனைக்குட்டியைக் கூட தூக்கி விட துணிவில்லாமல், மனைவியை துணையாகக் கூட்டிக் கொண்டு போனதை வேறு என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை............. அதுவும் ஓடும் போது கையில் ஒரு துவாயையும் எடுத்துக் கொண்டே ஓடினேன் பாருங்கள்........... அந்த நாலாவது பூனைக்குட்டியை விட நான் தான் ஒரு பயந்தாங்கொள்ளி...............🤣. கொஞ்சம் வெளியே நின்று ஒவ்வொருவரும் எங்களை நாங்களே கவனித்து பார்த்தால் சரியான வேடிக்கையாக இருக்கும் போல...............
  38. அவர் இப்போ அமைச்சர் மட்டுமல்ல பொறப்புள்ள தமிழ் விடுதலை போராளியுமாவார்
  39. என்ன நீங்க இப்படிச் சொல்லீட்டீங்க. அதுதான் 'ஆனையிறவு உப்பு' என்று மாத்தியாச்சாமே. உப்புச்சப்பில்லாத விடயங்களைச் செய்தவாறு விகாரங்களையும், தாதுகோபுரங்களையும் மறைமுகமாக விரைந்து அமைத்து ஐ.தே.க,சி.சு.க, இ.பொ.முன்னணி போன்றவற்றைமிஞ்சியோர் என்று அதிகமாகத் தமிழரது நிலங்களைப் பிடித்துள்ளோம் எனச் காட்ட வேண்டாமோ. எங்கட சனமும் ஏடேய் நல்ல அரசு பெயரையே மாத்தீட்டாங்கள் என்று புளங்காகிதமடைந்து மீண்டும் குப்பறப் படுத்துவிடுவர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அத்துடன் கஞ்சா மற்றும் போதைப்பொருள்களின் பரவலாக்கம் கரணியமாக இருக்கின்ற இளசுகளுக்கு எப்பிடி நாட்டம் வரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  40. பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம். பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.
  41. தெம்பா பவுமாவும் ரிசர்வேசனும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது. அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா பெறும் போது உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம். காரணம் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் - கேப்டனாக இருந்து கோப்பையை வெல்வார் என்று சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால் இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது. எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட இனத்தில் இருந்து தலைவன் தோன்றி இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை. ஆம்... தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ரிசர்வேசன் எனும் கோட்டா முறை உண்டு. ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில் ஐந்து பேர் - வெள்ளையரும் மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது??? என்னங்க இது விளையாட்டுல எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... அப்போது நான் மூன்று பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன் முதல் பதம் சமூக நீதி (SOCIAL EQUITY) இரண்டாவது பதம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS) மூன்றாவது பதம் முறையான/சமமான/ சரியான பிரதிநிதித்துவம் ( EQUAL REPRESENTATION) தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். கல்வி பொருளாதாரம் கலை / இலக்கியம்/ விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். இதனால் அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை. இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் அணியில் இடம்பெற்றாலும் அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர் இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றை அறிந்தால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும். அதன் நியாயங்களும் விளங்கும். அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் "வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார். என்னைப் பொருத்தவரை மனிதன் ஒரு சமூக விலங்கு சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். இதில் சா*தி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும் தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். மேற்கூறிய விசயங்களால் வாய்ப்புகள் கிடைப்பதிலும் வாய்ப்புகளை ஒடுக்குவதிலும் பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்" இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். இது இயற்கை. உலகின் பெரும் புரட்சிகளும் போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்தவரை சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி.. மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால் அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. அதற்குக் காரணம் கருப்பு நிற வீரர்கள் அல்லர் அவர்களை வெளிக்கொணராத அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால் நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இதை உணர்ந்தால் நமக்கு நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி மெய்யான வெற்றியே தூய்மையான மகிழ்ச்சி அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும் பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும் கிடைத்த இந்த கோப்பை உண்மையில் மிகவும் வலிமையானது. இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்... தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன். டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம். ஏலேய் மக்கா எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம் "டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. " இங்க தெம்பா என்றால் வலிமை / strength மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது . ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார் அதையே நானும் வழிமொழிகிறேன்.. நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா E-mail

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.