Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்9Points8907Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்8Points7051Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்5Points2954Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/25/25 in Posts
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!
4 points
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
4 pointsஉலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார். மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது? வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்4 points- அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
3 pointsஅமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது. நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது. பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது. இரந்துண்ணாக் குழந்தை. வழிநெடுகிலும் ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர், முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள். சாவீடுகளின் ஒப்பாரி. கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான். பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன. கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது. கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது: தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய் உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான். உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை. ஆனால், ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும். பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும். சிதறிய நகரங்களின் மேல் உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர் எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும் பசியும் தாகமும் எடுக்கும். நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும். சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன. அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது. தேவ அபிரா 23-06-20253 points- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
மாறாத ஒன்று புலத்தமிழர்கள் சிலரின் "போர்க்குணம்"😎 தான்! சிங்கார சுவிசில் இருந்து ஐரோப்பா முழுவதும் வகேஷன் போய் வரும் முகநூல் ஊடகவியலாளர் "இணுவையூர்"😂 மயூரன் விடு பட்ட செருப்புகளை பெருமையோடு பகிர்ந்திருக்கிறார். இது போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் முகநூல் போர்க்குணத்தால் மட்டும் தான் "விடுதலைப் போராட்டம் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது" விளங்குதோ??😎3 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
3 pointsதரமான குறிப்புகள் சிறுபான்மையாக இருக்கும்வரை லக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்பது அதுவே பெரும்பான்மையானதும் காபிர்களை மூட்டுமூட்டாக தறியுங்கள் உங்கள் கொடூரத்தை அவர்கள் காணட்டும் என்பது. முஸ்லீம்நாடுகளில் வாழமுடியாமல் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளுக்கு போய் அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு தங்களுடைய விளைநிலங்களை ஒன்றுக்கு நான்காக பெருக்கி அதை வைத்து குழந்தை அறுவடையையும் பெருக்கி அந்தந்த நாடுகளை இவர்கள் தப்பித்து வந்த இஸ்லாமிய நாடுபோல் மாற்றியே தீருவோம் என்று வீதியில் இரங்கி சூளுரைப்பது. இந்த மதவாதம் , அடிப்படைவாதம் என்று ஒரு மும்மீனை பொறுத்தவரை ஒன்றே இல்லை. எல்லா முஃமீன்களும் மத அடிப்படைவாதிகள் தான் இல்லாவிட்டால் அவர்கள் முஃமின்களாக இருக்க முடியாது. இஸ்லாத்தை முற்றிலுமாக திறந்தால் தான் அப்படி இருக்க முடியும். இன்றும் U .K யில் தெருவில் செல்லும் ஒரு சாதாரண முஸ்லிமிடம் சரியாச்சட்டம் கொண்டுவந்து முஸ்லீம் நாடாக அறிவிப்போமா என்று கேட்டுப்பாருங்கோ. உடனே சிலிர்த்துக்கொண்டு முதல் ஆளாக கையைதூக்குவினம். மத அடிப்படை என்பதே இஸ்லாத்தின் அத்திவாரம். Arebian Supremacy க்கு பிறந்த மதம் அது அப்படித்தான் இருக்கும்3 points- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
கலந்து கொள்ளாத சுமந்திரனை நானும் கண்டிக்கின்றேன் 😂 கலந்து கொண்டதிற்காக சாணக்கியன் சிவஞானத்திற்கு எனது கண்டணங்கள்2 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 pointsஇல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு, https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754 இதயம் பலவீனமல்ல மூளைதான்😉2 points- அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
2 pointsஇன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇 Posted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் Posted byBookday23/06/2025No CommentsPosted inPoetry Series தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள் வேடிக்கை மனிதர்கள் ****************************** ஆயுதங்கள் உங்கள் கைகளில் விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது உங்கள் தொழில்நுட்ப அதிநவீனத் தோட்டத்தில் நாங்கள் வெறும் செயற்கைப் புற்கள் உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில் எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் அரதப் பழசாகிவிட்டன எங்கள் உடலுறுப்புகள் இனி உபயோகிக்கப் பட முடியாத உலோக பாகங்களாய் உதிர்ந்து கிடக்கின்றன எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும் எங்கள் வயிறுகள் பசியின் பழைய மொழியை மறந்தபாடில்லை எங்கள் சஹாராத் தாகம் தணிக்க வற்ற வற்றக் குளித்த உங்கள் நீச்சல் குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை நாங்கள் தாகம் என்கிறோம் குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள் நாங்கள் பசி என்கிறோம் ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில் பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும் இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள் போர் என்பது பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற இன்னொரு சூதாட்டப் பத்திரம்! பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில் நிராதரவு அறிவுஜீவிகள் ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற வெட்டுப்படப்போகிற வெறும் சிப்பாய்கள்! ஜனநாயகம் சர்வாதிகாரம் கேபிடலிசம் சோசலிசம் கம்யூனிசம் எல்லாச் சொற்களுமே உங்கள் அகராதிகளில் அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது எங்கள் அரிச்சுவடிகள் உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன எல்லைத் தகராறு வயல்களில் பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் உங்களின் பழைய சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்! பொதுஜன முகமூடி எங்கள் மூளையை அழுத்துகிறது நவீன கட்டுமானமான செயற்கை நுண்ணறிவு மாளிகையை எங்களுக்கான சிறைச்சாலைகளாக மாற்றி வருகிறீர்கள் கேலிக்குரிய முரண் என்னவெனில் எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும் ‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில் அலைமோதி அலைமோதி இடம்பிடிக்கப் போகும் ஆடியன்ஸ்களும் நாங்கள்! எழுதியவர் : – நா.வே.அருள் https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/2 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 pointsஅடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும். எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம். மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும். மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது. இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம். இதை என்ன செய்வது என யோசியுங்கள். பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.2 points- அமெரிக்காவில் அகோர வெய்யில்.
2 pointsஅவர் செயற்கை மழைக்கு யூரோப்பில் உலாவும் மேகங்களைத்தான் தள்ளிக்கொண்டு போவார் ...... நீங்கள் ஒரு ஐடியாவும் குடுக்காமல் "கம் " என்று இருக்கவும் . ......... மனுசன் நோபல் பரிசுக்கு வேற அலையுது . .......! ☹️2 points- சிஸ்ட்டர் அன்ரா
1 pointநேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointபையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.1 point- மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஆணிக்கட்டைகளை வீசி மடக்கிப் பிடித்த பொலிஸார் - பளையில் சம்பவம்
1 point25 JUN, 2025 | 10:31 AM யாழ் - பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை நிறுத்த பொலிஸார் ஆணிக்கட்டைகளை டயரில் வீசி மடக்கி பிடித்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரணத்தினாலேயே பொலிஸார் டயரிற்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர். ஆணிகட்டைகள் டயரில் சிக்கியதால் கனரக வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் கனரக வாகனத்தினை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/2183851 point- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
புலம்பெயர்ந்து இருப்பவர்களை விட தாயகத்தில் இருப்பவர்களுக்குத்தான் உள் விடயங்கள் பல தெரியும். அடித்து கலைத்ததில் நியாயம் இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது. அவனவன் வலி அவனவனுக்கு மட்டுமே தெரியும்.1 point- இஸ்ரேல்- ஈரான்: எதைச் சொல்ல?
1 pointஎதைச் சொல்ல? sudumanal இஸ்ரேல்- ஈரான் கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது. இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது. அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர். அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். 2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார். அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது. இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது. அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ? ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது. ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல். ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர். வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான். ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும். ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது. ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?. ravindran.pa 23062025 https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇது சிந்தனையில்லாத பேச்சு! நீங்கள் கடலுக்கடியில் தேடாமல் இணையத்தில் தேடி தகவல் சரி பார்க்கிறீர்கள்! இது இங்கே செல்லாது☺️!1 point- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
தெய்வமே, நீங்கள் கட்சி மாறி விட்டியள் போல இருக்கே😂? அல்லது சில யாழ் கள மெம்பர்சிடமிருந்து flip-flop-itis வியாதி உங்களுக்கும் மெய்நிகர் வழியாகத் தொற்றி விட்டதா😂?1 point- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை
செம்மணி “அணையா விளக்கு” போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் Published By: DIGITAL DESK 3 25 JUN, 2025 | 05:46 PM யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/2184601 point- செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி
திலகநாதன் கிந்துஜன் 56m · சற்றுமுன் - செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்1 point- நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
மம்தானியின் பலஸ்தீன விடுதலை ஆதரவு நிலை, இஸ்ரேல் மீதான விமர்சனம் வைக்கும் துணிவு ஆகியவை பாராட்டுக்குரியவை. ஆனால், அவரது இலவச வீட்டுத் திட்டம், இலவச குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் நியூ யோர்க் நகரில் சாத்தியமற்ற "ஆகாயக் கோட்டைகள்". அனேகமாக இந்த முறை நியூ யோர்க் நகர நிர்வாகம் சிவப்புக் கட்சியிடம் போய் விடும். சாத்தியமில்லாதவற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேர்தல்களைச் சந்திக்கும் நீலக் கட்சியினருக்கு இன்னொரு பாடம் கிடைக்கும் போல் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்1 point- மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!
1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஉங்களுக்கு இந்த தெளிவு, இங்கே பந்தி பந்தியாக எழுதுவோருக்கு புரியவில்லை என்பது தான் ஆச்சரியம். உண்மையில், ஈரான் அதன் முதல் படி கேந்திர இலக்குகளை அடைந்து உள்ளது. பேச்சுவார்த்தை நடந்தால், அணுத்துறை பற்றி மட்டும்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇஸ்ரேல்-ஈரான் யுத்தம் ஈரானிய மக்களின், குறிப்பாக பெண்களின் சுதந்திரத்துக்கான போர் என நான் எங்கும் எழுதவில்லை. அது இஸ்ரேலின் பாதுகாப்பு, நெதன்யாஹுவின் அரசியல் இருப்பு சம்பந்தமானது. ஆனால் ஈரானியர் நீங்கள் நினைப்பது போல் பிற்போக்குத்தனத்தை கலாச்சாரமாக கொண்டவர்கள் அல்ல. மேலே துருக்கி, மலேசியா என இரு உதாரணங்களை தந்துள்ளேன். இவை இரெண்டும் அமேரிக்க அடிவருடிகள் அல்ல. ஆனால் முற்போக்காக மிதவாத இஸ்லாமிய நாடுகள். இப்படித்தான் முல்லாக்கள் பதவிக்கு வரமுன் ஈரானும் இருந்தது. அதே நிலைக்கு திரும்பவே மீண்டும், மீண்டும் போராடி மடிகிறார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஈரானிய இளையவர்கள். நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣, தமது நாட்டில் தம் சுதந்திரவாழ்வுக்காக அவர்கள் போராடி மடிகிறார்கள், நீங்கள் சொல்வது போல் ஆடைகளையும் ஆசையில் அல்ல.1 point- ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
நூற்று நூறு / உண்மை இவரால் தான் இந்தியா அணி பல வெற்றிய பெற்றது.............................1 point- கருத்து படங்கள்
1 point1 point- அமெரிக்காவில் அகோர வெய்யில்.
1 pointஐயா எமது வீட்டில் கோடைகாலம் வரும்போது யன்னலில் தூக்கி வைப்போம். குளிர்காலம் வரும்போது கழட்டி கறாச்சினுள் வைப்போம். இந்த குளிராக்கி 200-300 டாலர்கள் காணும். பணமிருந்தால் இன்னும் பெரிது வாங்கி யன்னலிலேயே பூட்டலாம். நாள் முழுக்க வாகனத்தில் இருக்க முடியுமா? இரவு நிம்மதியாக தூங்க முடியுமா?1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஅமெரிக்க இஸ்ரேல் - ஈரான் போர் எதற்காக நடக்கின்றது? மனித உரிமைகளுக்காகவா அல்லது ஆயுத பலத்திற்காகவா? ஒவ்வொரு இனத்திற்கும் மதத்திற்கும் அது சார்ந்த நடைமுறைகள் இருக்கும். அதற்காக மனித உரிமைகள் எனும் பெயரில் மேற்குலகு ஓநாய் ஊளையிடத்தேவையில்லை.இதுதான் நாடு.இதுதான் சட்டம். விரும்பினால் இருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள் எனும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன சுதந்திரம் வேண்டும்? மேற்குலகை போல் அவிழ்த்து விட்டு ஆடும் கலாச்சாரத்தை ஏற்கவில்லை என்றால் அது அவர்கள் தனிமனித சுதந்திரம் தானே? அமெரிக்காவினது ஆயுதங்களை களைந்துவிட்டால் அதன் பலம் தெரியும்.🤣1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointநல்ல கருத்து! நம்பிக்கைகளுக்கு வலு உள்ளது, சிலர் தமது நம்பிக்கைக்காக மற்றவர்களின் உயிர்களையே எடுக்கிறார்கள், பொதுவாக சாவிற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்கும் விடயம், தமது நிலைப்பாடு தவறு என உணரும் நிலை, இதற்கு காரணமாக கூறப்படுவது எமது கல்வி முறை, தவறாக இருப்பதில் தவறில்லை எனும் உனர்வினை சாதாரண மனிதர்களிடம் ஏற்படுத்துவது கடினம். Bigger loser win என்பது தற்கால நவீன வியாபாரத்தின் மாதிரி, அதனாலேயே அவர்கள் நஸ்டத்தினை உடனடியாக வெட்டி விடுகிறார்கள், தனது முடிவு தவறென தெரிந்தவுடன் அதிலிருந்து எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் வெளியே வருபவர்களால்தான் சரியான முடிவினை இறுதியில் எடுக்க முடியும், தான் எடுத்த தவறான முடிவினை நியாயப்படுத்த அதனை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஒரு சூதாடியின் மனநிலை, பெரும்பாலும் படித்தவர்களிடம் (மரபு சார்) இந்த வியாதி உள்ளது.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை, கேள்வி கேட்டால் அதற்Kஉ ஏதாவது காராம் என கூறி கொல்லுகின்ற நிலை காணப்படுகிறது, மத அடிப்படைவாத ஆட்சியினை இதனாலேயே பலர் வெறுக்கின்றனர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- அமெரிக்காவில் அகோர வெய்யில்.
1 pointநேற்றிலிருந்து 4 நாட்களுக்கு முழு அமெரிக்காவும் மிகவும் வெப்பநிலையாக உள்ளது. கனடாவும் இதே காலநிலையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது ஏரியாவில் நேற்று 160000 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. இரவு 12-1 மணி போல நின்ற மின்சாரம் 12 மணிநேரம் கழித்து தான் மீண்டும் வந்தது. இப்போதும் எமது பகுதியில் பல வீதி சமிக்கைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நேற்றைய நாளைவிட இன்று அதிக வெப்பமாக உள்ளது. 100 காட்டுகிறது37-38.ஆனாலும் இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். இன்னும் 2நாட்கள் இதே காலநிலை.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point👉 https://www.facebook.com/watch?v=642941725424207&locale=de_DE 👈 👉 https://www.facebook.com/watch/?v=30034306726214809&locale=de_DE 👈 👆 இன்று காலை... இஸ்ரேலை பதம் பார்த்த, ஈரானின் குண்டுகள்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஈரான் இன்று காலை இஸ்ரேலுக்கு நல்ல தாக்குதல் கொடுத்து , போர் நிறுத்தத்துக்கு ஓம் என சொல்லி இருக்கினம் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அடிய ஈரானிடம் இருந்து வேண்டி கட்டி இருக்கினம் , வான்பாதுகாப்பு கருவி இல்லாம இருந்து இருக்கனும் பாதி இஸ்ரேல ஈரான் அழித்து இருக்கும்..................ஈரான் இந்த தாக்குதல ஆரம்பிக்க வில்லை , கொடிய மிருகம் நெத்தனியாகு ஆரம்பிச்சார் ஈரான் முடிச்சு வைத்து விட்டது🙏👍................................1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஉலகத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களும், கலகத்தை விளைவித்துக் கொண்டு இருந்தவர்களும், காலம் மாறிவிட்டது என்பதை... காலதாமதமாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தயாளன் கனியன்1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பாதுகாப்பில் அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகவும், ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்தது. ஈரான் அதை முதலில் நிராகரித்தது, பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவின் போர் நிறுத்தக் கூற்றினை ஆரம்பத்தில் நிராகரித்தார். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், அந்த அறிவிப்புக்கு பின்னர், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது. Athavan Newsட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள...1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஉண்மையாவா... 😂 இதையும், அமெரிக்காதான் சொல்லியிருக்கும். 🤣 அப்ப ... நோபல் பரிசு, நிச்சயம் கிடைக்கும். 😂 🤣1 point- கருத்து படங்கள்
1 point1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointகடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரணச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திறமைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointபாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointபாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointமட்டக்களப்பில் ஒரு சில நாட்கள் சிஸ்ட்டர் அன்ராவின் மடத்தில் தங்கவைக்கப்பட்டேன். அதன்பிறகு புளியந்தீவில் இயங்கிவந்த சிறுவர்களுக்கான விடுதியில் சேர்க்கப்பட்டேன். நோர்வேயில் இருந்து யாரோ ஒருவர் அநாதைகளுக்கென்று அனுப்பிய பணம் எனக்குபடிக்கவும், உயிர்வாழவும் உதவியது. மாதத்திற்கு 450 ரூபாய்கள். சிஸ்ட்டர் அன்ராவே வந்து விடுதியில் கட்டிச் சென்றார். அப்படி ஒவ்வொருமுறையும் வரும்போதும் தன்னைப் பார்க்க வருவோர் கொண்டுவரும் பழங்கள், இனிப்புக்கள் என்று கொண்டுவந்து தருவார். அவரைக் காண்பதற்காகவே நாட்கணக்கில் காத்திருக்கத் தொடங்கினேன். எனக்கான பணத்தினை விடுதிப் பராமரிப்பாளரிடம் கட்டிவிட்டு, வெளியே விருந்தினர்க்காகப் போடப்பட்டிருக்கும் வாங்கில் என்னுடன் இருந்து சிறிது நேரம் பேசிவிட்டு, தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அவர் தாண்டவன்வெளி நோக்கிச் செல்வார். அவர் சென்றபின்னரும் அவர் போன வழியே கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கு எனக்கிருந்த உறவு அவர் மட்டும்தான். எனது அன்னையே என்னைப் பிரிந்துபோவது போன்று துக்கம் கழுத்தினுள் இறுககிக் கிழிக்க, வேறு வழியின்றி விடுதிக்குள் நுழைந்து, தொலைந்துபோவேன். இப்படியே மாதம் ஒருமுறை வருவார், சில நிமிடங்களாவது பேசுவார், அம்மாவின் குரல் அவரிடமும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும், அம்மாவுடன் பேசுவதுபோன்ற பிரமை ஏற்படும். அன்றிலிருந்து எனக்கு அம்மா அவர்தான் என்று நினைக்கத் தொடங்கினேன். கொடுமையான தகப்பனாரிடமிருந்து என்னை விடுவித்து, தனது சொந்த முயற்சியில், கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதிலும் என்னை மட்டக்களப்பிற்குக் கூட்டிவந்து, விடுதியில் இடம் எடுத்து, எனக்கான செலவுகளைச் செய்து, பாடசாலையிலும் தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக படிக்க உதவிய அவர் அன்னையன்றி வேறு யாராக இருக்க முடியும்?1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointமட்டக்களப்பில் இருந்து விடுமுறைக்காக அக்கா வந்து தங்கியது வெறும் 2 வாரங்கள்தான். அவ்விரு வாரங்களிலும் அக்காவும், எனது சித்தியும் (கன்னியாஸ்த்திரி) எனது தகப்பனாரிடம் மன்றாடாத நாளில்லை. "அவனை என்னுடன் விடுங்கள், நான் படிப்பிக்கிறேன், பாவம், அவனது படிப்பைக் குலைக்கவேண்டாம்" என்றெல்லாம் அவர் மன்றாடிப்பார்த்தார். தகப்பனாரோ சிறிதும் இளகவில்லை. "அவன் போனால் ஆர் வீட்டில வேலையெல்லாம் பாக்கிறது? தென்னை மரங்களுக்கும், பூக்கண்டுகளுக்கும் ஆர் கிணற்றிலை இருந்து தண்ணி அள்ளி இறைக்கிறது? ஆர் புல்லுப் பிடுங்கிறது? ஆர் கடைக்குப் போறது? அவன் இங்கேயே இருக்கட்டும், ஒரு இடமும் விடமாட்டன்" என்று பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். ஆனால் அக்காவும், சித்தியும் தொடர்ச்சியாகக் கெஞ்சவே, "ஒரு சதமும் தரமாட்டன், கூட்டிக்கொண்டு போறதெண்டால், கூட்டிக்கொண்டு போங்கோ" என்று இறுதியாகச் சம்மதித்தார். சிஸ்ட்டர் அன்ரா எனக்காகச் செய்த முதலாவது நண்மை, தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து , தழைகளில் இருந்து என்னை விடுவித்தது. தினமும் கொடுமைகளையே சந்தித்து, பழக்கப்பட்ட இருண்ட வாழ்வினுள் இருந்து எனக்குக் கிடைத்த முதலாவது விடுதலை. எதற்காக அடிவாங்குகிறேன், எதற்காகத் திட்டப்படுகிறேன் என்கிற தெளிவே இல்லாது தினமும் வாழ்வில் சித்திரவதைகளை அனுபவித்த எனக்குக் கிடைத்த விடுதலை. ஆகவே மகிழ்ந்துபோனேன். அக்காவுடனும், சிஸ்ட்டர் அன்ராவுடனும் மட்டக்களப்பிற்குச் சென்று வாழப்போகிறேன் என்கிற உணர்வே என்னை மகிழ்விக்க, புறப்படும் நாளிற்காகத் தவமிருக்கத் தொடங்கினேன். ஆனால் மனதினுள் இனம்புரியாத அச்சம் ஒன்று தொடர்ச்சியாக இருந்துவந்தது. அதாவது, தகப்பனார் என்னை விடுதலை செய்யச் சம்மதித்திருந்தத்போதும் , கடைசி நாளில்க் கூட அவர் அதனைத் தடுத்து நிறுத்திவிடலாம். தனக்கும் தனது புதிய மனைவிக்கும் சேவை செய்ய என்னை வீட்டிலேயே மறித்துவிடலாம். தெய்வாதீனமாக அது நடக்கவில்லை, இடையிடையே "நீ அங்கை போனால் வீட்டில ஆர் வேலை பார்க்கிறது? ரஞ்சன வேலை செய்யச் சொல்லி ஏவ ஏலாது, அவனுக்கு இன்னும் 10 வயசுதான்..." என்று இடையிடையே சுருதி மாற்றிப் பேசியபோதும் என்னை அவர் மறிக்கவில்லை. போக அனுமதித்துவிட்டார். முதலாவது வெற்றி. எனக்கு, சிஸ்ட்டர் அன்ராவிற்கு, அக்காவுக்கு!1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointநான் இப்படித்தான் செய்வதுண்டு .சமைத்து இறக்கும்போது நெத்தலியை இரண்டாக்கி பொரித்து போடடால் சுவை இன்னும் தூக்கலாய் இருக்கும்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointநிஜமாகவே ஒரு சுவையான காளான் குழம்பு . .......... கெதியாய் செய்யலாம் . ....... செய்து பாருங்கள் . ........! 👍1 point - ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.