Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87988
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16477
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19109
    Posts
  4. சுவைப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    8802
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/27/25 in all areas

  1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - சுப.சோமசுந்தரம் மனிதர்களில் பெரும்பாலானோர் தம் மரணத்தைப் பற்றிப் பேசுவதை, ஏன் நினைப்பதையே விரும்புவதில்லை. "அது வரும்போது வரட்டுமே !" என்று கடந்து போவதோ அல்லது நழுவி விடுவதோ எளிது. ஒரு நாள் தற்செயலாக ஒரு அருமையான நிகழ்வைக் காணும் பேறு பெற்றேன். தாத்தா ஒருவர் தம் பேரனிடம், "எலேய், தாத்தா செத்துப் போனா எப்படி டான்ஸ் ஆடுவே ?" என்று கேட்டார். அவர்கள் சமூகத்தில் வயதானோர் சாவைக் (வெளிப்படையாக) கொண்டாடும் வழக்கம் இருக்கலாம். உடனே அப்பேரன் ஆடிக் காண்பிக்கவே, அந்தத் தாத்தா கைதட்டி ரசித்தார். தம் சாவைத் தாமே கொண்டாடும் இவரின் முதிர்ச்சி எனக்கும் வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அன்று என் மரணத்தையும் கற்பனையில் ரசித்தேன். அந்த மரணத்திற்கு என்னைத் தயார் செய்வதற்கே எனது எஞ்சியுள்ள வாழ்க்கை என்று எனக்குத் தோன்றியது. எனது வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலைத் தானம் செய்வதாய் எழுதிக் கொடுத்தேன் (என் மரணத்திற்குப் பிறகுதான் !). எனது நண்பரும் குருநாதர்களில் ஒருவருமான பேராசிரியர் ஒருவர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடச் சொன்னார். முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது. இதில் நான் தனியன் இல்லையே ! பலர் இல்லாவிட்டாலும், இச்சமூகத்தில் சிலர் இதுபோல் எழுதிக் கொடுத்தது உண்டே ! என் நண்பர்கள் சிலரே உண்டு. எனவே பொதுவெளியில் நான் பதிவிடுவது சுய விளம்பரம் ஆகாதா ? இக்கேள்விகளுக்கு என் பேராசிரியர் பதிலோடு வந்தார், "எதை எதையோ பதிவிட்டு மக்கள் சுய விளம்பரம் தேடும் காலகட்டத்தில் இது இன்னொரு சுய விளம்பரமாக இருந்து விட்டுப் போகட்டுமே !இதனால் பெரும் பயன் ஒன்று உண்டு. மிகவும் சாதாரண விஷயங்கள் கூட நம்மில் பலருக்குப் பல நேரங்களில் தோன்றுவதில்லை. மற்றவர் செயல்படுத்துவதைப் பார்த்த பின்பே நாமும் செய்யலாமே எனத் தோன்றுகிறது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே !". உண்மைதான். சமீபத்தில் அநேகமாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு சாதாரணச் செயல்பாட்டிற்கு சாட்சிக் கையொப்பமிட எனது இன்னொரு குருநாதரை அழைத்தேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வந்தது மட்டுமல்லாமல் தாமும் அது போன்று விரைவில் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். என்னை விடப் பத்து வயது மூத்த என் குருவானவர்க்கு நான் வழிகாட்டியாய் இல்லாவிடினும், ஒரு நினைவூட்டலாய் அமைந்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே உடல் தானத்தின் மூலமாக இறுதிச் சங்கு வேண்டாம் என முடிவெடுத்தபின் சுய விளம்பரம் எனும் சங்கை எடுத்து நானே முழங்கி விடுகிறேனே ! இந்த உடல் தானம் தொடர்பில் மேலும் ஒரு அனுபவப் பகிர்வு உண்டு. நான் எழுதிக் கொடுத்த உடல் தானம் சிறப்பு என்றால் அச்சிறப்பின் பெரும்பகுதி என் மனைவி, மக்களையே சாரும். என் உடல் தானத்திற்கு அவர்கள் எழுதித் தந்த சம்மதம் மலையினும் மாணப் பெரிது. இறை நம்பிக்கையுள்ள என் மனைவி அந்த நம்பிக்கை இல்லாத என்னிடமும் பிள்ளைகளிடமும் தன் கருத்தைத் திணிக்க முற்படுவதில்லை. எங்களை எங்களின் கருத்துகளோடும் முன்னுரிமைகளோடும் ஏற்றுக்கொண்ட என் மனைவி எங்களுக்கான வரம். அவள்தன் சாமியால் (!) எங்களுக்காகவே படைக்கப்பட்டு இருப்பாளோ என்னவோ ! எனவே என் கருத்தையும் உணர்வையும் அறிந்து என் உடல் தானத்திற்கு அவள் எழுதிக் கொடுத்த சம்மதம் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. பகுத்தறிவாளர்களாகவே வளர்ந்த எனது இரு பெண் பிள்ளைகளும் முதலில் தயக்கம் காட்டியது நான் எதிர்பாராத ஒன்று. இறையிலும் மதத்திலும் நம்பிக்கை இல்லாத அவர்களுக்கு ஈமச்சடங்குகள் முதலிய சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டே அல்ல. அவர்களது தயக்கத்திற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது, அவர்கள்தம் தந்தையின் மரணத்தை இப்போதே நினைத்துப் பார்ப்பதினால் ஏற்படும் அதிர்வு; இரண்டாவது, தம் தந்தையின் உடல் கூறு போடப்படுவது அவர்கள் நினைத்தே பார்க்க விரும்பாதது. இவற்றில் முதலானதை நான் எளிதாய் எதிர் கொண்டேன். "இவ்வாறு எழுதித் தரும் மகிழ்ச்சியில் நான் நூறு வருடங்கள் வாழலாம். உதாரணமாக ஒருவர் தம் பிள்ளைகளுக்கு உயில் எழுதி வைத்த பின்பு உடனே மரணிக்க வேண்டும் என்பதில்லை; எச்சரிக்கையாய் இருக்கிறார் என்று பொருள்". இரண்டாவது காரணத்திற்குப் பின்வருமாறு கேட்டேன், "தந்தையின் இறந்த உடல் செந்தழலில் வேகும்போது உங்களுக்குச் சுடாதா ? உடல் வேகும்போது சுருண்டு கொள்ளுமே, அப்போது சுடுகாட்டில் வெட்டியான் எனப்படும் அத்தொழிலாளி கழியால் அடித்துச் சமன் செய்வாரே ! அப்போது உங்களுக்கு வலிக்காதா ? மின் மயானம் எனின் உங்கள் உடலில் அந்த மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படாதா ?". போதாக்குறைக்கு எனது தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களை என் பிள்ளைகளிடம் பேசச் சொன்னேன். அவர் மீது அவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. "மண்ணோ நெருப்போ உண்ணப் போகும் உடலை வைத்து மாணாக்கர் சிலர் படித்துவிட்டுப் போகட்டுமே ! சமூகத்திற்கு அவர்கள் கற்றது பயன்படும். அவர்கள் படித்தபின் மீண்டும் அவ்வுடல் மண்ணில் புதையுண்டு மரத்திற்கு உரமாகும். ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தபின் அழியும் உடலுக்கு இதற்கு மேல் என்ன மரியாதை இருக்க முடியும் ?" - இவை அவர் பேசியவை. இவற்றை முழுமையாக ஏற்றுக் கொண்டு என் பிள்ளைகளும் மன நிறைவோடு தம் சம்மதத்தை எழுதித் தந்தார்கள். நான் கற்றவையும் பெற்றவையும் நன்றாகவே அமைந்த நிறைவு எனக்கு. இந்த அனுபவப் பகிர்வு உங்கள் அனைவருக்கும் உதவும் எனும் நோக்கத்திலேயே ! எல்லாம் சரிதான். ஆனால் இறை நம்பிக்கை, மதச் சடங்குகளில் நம்பிக்கை என நம்பிக்கைகளிலேயே வாழும் மனிதர்களுக்கும் இது தொடர்பில் சமாதானம் உண்டா ? உண்டு. இறந்தபின் நீங்கள் உங்கள் இறைவனை சந்திக்க அல்லது இறைவனிடத்தில் கரைந்திட இந்த உடலை எடுத்துக் கொண்டா செல்வீர்கள் ? உங்கள் கூற்றின்படி உங்கள் ஆன்மாதானே இறை தேடும் ? இந்தப் பாழும் உடலை வைத்துக்கொள்ள முடியாமல்தானே அதனை மண்ணில் புதைக்கிறீர்கள் அல்லது சிதையில் தள்ளுகிறீர்கள் ? எனவே யாராக இருந்தாலும், வாழும்போது ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தோமோ என்னவோ, செத்த பின்பு உறுதியாய் ஒரு பயனுள்ள புத்தகமாய் அமைவோமே ! உடல் தானம் எழுதிக் கொடுத்தபின் இந்த மன நிறைவுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்வோமே ! https://www.facebook.com/share/p/1Xm7GdHGzi/
  2. ம‌ன‌ உளைச‌ல் , க‌வ‌லைக‌ளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்ப‌டியான‌ BGM இசைய‌ கேட்டால் மன‌தில் ம‌கிழ்ச்சி வ‌ரும்👍🥰❤️😍 , இசை தான் ந‌ல்ல‌ ம‌ருந்து......................
  3. எல்லாம் சொல்லி போட்டியள் இந்த virtue signaling க்கு தமிழ் என்ன எண்டும் சொல்ல முடியுமா? நியாயம் நான் ஆங்கில வார்த்தைகளை தூவுவதாக குறைபடுகிறார் (அரபு என்றால் ஓக்கேயாம்🤣). வச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.
  4. சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் விவசாயிகள் அதை பயிரிடுவதையே நிறுத்தி வேறு பயிர்களுக்கு மாற வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே வேர் அழுகல் நோய்த்தாக்கத்தால் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதை நிறுத்தி விட்டார்கள்.
  5. 1998 - இந்த BGM இசையை கேட்ட நொடியில் இருந்து எனக்கும் இதே உணர்வு தான்... மென்மையான மனதைக்கு வருடும் இசைத் துகள்..
  6. சிறிது தேடல்கள் செய்து பார்த்தேன். இது உண்மை இல்லை போல தெரிகின்றது. தெண்டூல்கர் தனது மகனை கிரிக்கெட்டில் முன்னிலைக்கு கொண்டு வர பாடுபட்டார். சரிவரவில்லை. தற்போதைய இந்தியன் கிரிக்கெட் கப்டனுக்கும் இவர் மகனுக்கும் ஒரே வயதுதான். மகள் மகனை விட வயதில் மூத்தவர் என நினைக்கின்றேன்.
  7. எங்கள் மென்ரல் டிசைனை சரியாகக் சொல்லியிருக்கிறீர்கள். மேற்கு நாடுகளில் வசித்து வேலை செய்கிற நாம் எல்லோருமே மேற்கின் பெருவணிக, முதலாளித்துவ சிஸ்ரத்தில் இருந்து உறிஞ்சி தங்கள் உடலையும் குடும்பத்தையும் வளர்ப்போர் தான் (cogs in the wheel/machine). ஆனால், சிலர் மட்டும் நீங்கள் சுட்டியிருப்பது போல, "சுரண்டுறான், பிறாண்டுறான்" என்று சொல்லிக் கொண்டு தாங்கள் கூட்டுப் பண்ணை வாழ்வில் இயற்கையோடு ஒன்றிப் பகிர்ந்து வாழ்வதாக ஒரு தோற்றம் காட்டுவர். எல்லாம் ஒரு "வில்டப்" தான்😎!
  8. லூசு கூட்டங்கள் இப்படி எப்போதும் காடைத்தனங்கள் செய்வது இயல்பானது தானே. தமிழரிடையே அரசியல் கட்சிகள் இல்லை. வெறும் வன்முறை காடைக்குழுக்கள் மட்டுமே உள்ளன. அந்த காடைக்குழுக்களுக்குள் இப்படியான வன்முறை அடிபாடுகள் நடப்பது வழமை. முன்பு கையில் ஆயுதங்கள் இருந்ததால் ஆளையாள் சுட்டு கொலை செய்தன. இப்போது அவர்களின் வால்கள் இப்படி காடைத்தனம் புரிகின்றன. இதை தமிழ் ஊடகங்கள் ஊதி பெருப்பித்து காடையர்கள் செயலுக்கு மக்கள் மீது பழி போடுகின்றன.
  9. நாடு அனுராவோடு வீடு உறவோடு
  10. இது பலவருடமாகவே எனக்கு பிடித்த பொழுது போக்கு. நீண்ட சவாரிகளின் போது அருமையாக இருக்கும். புன்னகை மன்னன் BGM, 7ஜி ரெயின்போ காலனி, தாளம், இருவர்…கேட்டுப்பாருங்கள்.
  11. ஆமா.... உங்களுக்கு மட்டுந்தான் கௌரவம் உண்டு, மற்றவர்களுக்கு மரியாதை அதெல்லாம் இல்லையென்று நினைத்தா நீங்கள் மற்றவர்களை விமர்ச்சிக்கிறீர்கள். தனக்குத்தனக்கென்றால் சுளகு படக்கு படக்கென்று அடிக்குது. அங்கு வந்த எல்லா அரசியல்வாதிகளையுமே அவர்கள் வெளியேற்றினார்கள், அவரவர் தமக்கு என்று எடுத்து கருத்து வெளியிடுவதைப்பார்த்தால் இவர்களது உள்நோக்கம் புரியும். மக்களின் எல்லாப்பிரச்னைகளிலும் நீங்கள் அவர்களுடன் கூட இருந்திருந்தால், இப்படியான அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லையே. பாவம் இவர், வெளிவந்த காணொளிகளை பார்க்கவில்லைபோலும். சுமந்திரன் பாணியில் செய்தியாளரை சாடுகிறார். சரி, அப்படியொன்றுமே நடக்கவில்லையென்றால் ஏன் அதே பத்திரிகையாளரை கூட்டி புலம்புகிறார்? அதுதான், மக்களின் போராட்டத்தை தங்களின் போராட்டம் போல் தம்பட்டம் அடிப்பது மட்டுந்தான் கட்சியின் பொறுப்பு. முதலில் கட்சிக்குள் இருக்கும் புடுங்குப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியை பொது அமைப்புகள் ஏற்பாடு செய்ய, இடையில் புகுந்து தங்களது ஏற்பாடுபோல் முதலாளித்தனம் காட்டிய நீங்கள், எதையும் செய்ய மாட்டீர்கள் யாரவது முயற்சியில் இடையில் புகுந்து பெயரெடுக்க வேண்டும். மக்கள் அழிக்கப்படும்போது உங்கள் பொறுப்பு எங்கே போனது? அப்போ எங்கே போயிருந்தீர்கள்?
  12. நான் லூசுத்தனமாக எழுதுறதால தான் பல இடங்களில் நல்ல தகவல்களும் கருத்துக்களும் பிறக்கின்றன.
  13. சாய் சுதர்சன் இங்லாந் உள்ளூர் கில‌ப்புக்கு போன‌ வ‌ருட‌ம் விளையாடின‌வ‌ர் , இங்லாந் மைதான‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே விளையாடின‌ அனுப‌வ‌ம் இருக்கு...................அடுத்த‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்....................................
  14. சிறந்த முன்னுதாரணமான செயல் ஐயா. எனக்குள்ளும் இந்த ஆசை இருக்கிறது, இறந்தபின் எனது உடல் கற்றலுக்கு பயன்படுமா என மருத்துவர்களிடம் அறிந்தபின் உயிலை எழுதுவம்.
  15. நல்ல விடையம் ஒன்றை சொல்லி இருக்கிறீர்கள் அய்யா..அவ்வப்போது இப்படியான நினைவூட்டல்கள் மிகவும் தேவையானது தான்.நன்றி பகிர்வுக்கு.
  16. மறைமுக கரும்புலி கப்டன் பிரேம் மேஜ். ஜெனரல். ரஞ்சன் விஜயரட்ன மீது கரும்புலித் தாக்குதல் மேற்கொண்டார்
  17. குசா அண்ணை வீட்டில சரி கட்டி கொடுத்தனியளோ?
  18. விளையாட்டை ப‌ர்க்க‌ 5 நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விடும் போல் இருக்கு.........................அவுஸ்ரேலியா ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் நிலைத்து நின்று ர‌ன்ஸ் அடிக்கின‌ம் இல்லை...............வெஸ்சின்டீஸ் இந்த‌ மைச்சை வெல்ல‌க் கூடும்....................
  19. மேற்குலக நாடு ஒன்றில் செற்றிலாகிவிட வேண்டும் என்பது கனவு தனிப்பட்ட உயிர் விருப்பு அது நிறைவேறி அங்கே பாதுகாப்பான வாழ்வு அமைத்து கொண்ட பின்பு சும்மா ஜாலிக்காக சர்வாதிகளுக்கு ஆதரவு முல்லாக்கள் ஆதரவு எழுத வேண்டியது. முஸ்லிம்களின் குரான் அவர்களுக்கு யூத வெறுப்பு வெறியை ஊட்டி வருகின்றது இலங்கையில் இனவாத முஸ்லிம்களுடன் சிறிதும் பழக்கம் அற்றவர்கள் அவர்களுடன் வாழ்ந்திருக்காதவர்களே இப்படியான புரளிகளை ஒரு போதும் நம்ப தயார் இல்லாத போது இலங்கையில் பல காலம் வாழ்ந்த இவர்கள் எப்படி புரளியை நம்பினார்களாம்
  20. தற்போதைய முதல்வர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க ஆயத்தமாகிறார். ரம்பும் இவருக்கு பூரண ஆதரவு கொடுக்கலாம். இதன் மூலம் ஜனநாயகட்சியை பிளவுபடுத்தி குடியரசு வேட்பாளரை வெல்ல வைக்கலாம். ஏற்கனவே ஒரு இந்தியன் முஸ்லீம் எப்படி நியூயோர்க்கை ஆளலாம் என்று தொடங்கிவிட்டார்கள். தற்போதய முதல்வர் ஏற்கனவே ரம்பிடம் சரணடைந்துள்ளார்.
  21. அமைதிக்கான நோபல் பரிசை மட்டும் அல்ல, கொடுக்கப்படும் மற்ற நோபல் பரிசுகளும் தனக்கே வேண்டும் என்று அடம்பிடிப்பார் அதிபர் ட்ரம்ப். அடுத்த மூன்று வருடங்களில் ஏதோ ஒரு நாள் காலையில் இந்த மனிதன் வேறு ஒரு எழுத்தாளரை வைத்து எழுதிய கவிதையோ அல்லது கதையோ கூட இவரின் பெயரில் வெளிவரலாம், இலக்கிய பரிசுக்காக. இவரின் பெயரில் வந்த 'Art of the Deal' போல. 'He doesn't have a soul...........' என்று பின்னர் சொல்லியிருந்தார் இந்தப் புத்தகத்தை உண்மையில் எழுதிய எழுத்தாளர். 'ஆன்மா அற்ற ஒரு மனிதன்...............' என்ற இந்த வசனம் இதை வாசித்த அந்தக் கணத்தையே அப்படியே சில்லிடவைத்தது. இவரால் உலகத்திற்கு பெரும் அழிவு கிட்டும் என்று யாழ் களத்தில் இவர் மீண்டும் வருவதற்கு முன்னர் எழுதியிருக்கின்றேன். இவரின் முன்னைய ஆட்சியில் கூட உலகம் சமாதானப் பூங்காவாக இருந்துவிடவில்லை. இவரின் முன்னைய ஆட்சிக் காலத்திலேயே அமெரிக்கா மிக அதிகமான ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. அப்போது ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய முழுமையான செய்திகள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவே அமெரிக்காவின் வெளியே வாழும் ஈழத்தமிழர்கள் பலருக்கும் பைடன் மற்றும் ஜனநாயகக்கட்சியை புறம் தள்ளி, ட்ரம்பை சமாதானத்தின் தூதுவராக நினைக்கவைத்தது. அதிபர் ட்ரம்ப் வெறும் வாக்குறுதிகளைக் கொடுப்பவர், அடுத்த நாட்களிலேயே அவற்றை மறந்து விடுபவர், இந்த இயல்பு அவருடன் கூடவே என்றும் இருக்கின்றது. அவருடைய உண்மையான அக்கறை அவரின் மேலே மட்டுமே என்ற விடயத்தை எம் மக்கள் காணத் தவறினார்கள். உக்ரேனின் மீதோ, ரஷ்யாவின் மீதோ அல்லது உலகத்தின் மீதோ அல்ல. எங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளைக் கொண்டு, நிகழ்வுகளையும், மனிதர்களையும் கணிப்பது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும்.
  22. அது அறுகம் பே அல்ல, அறுகம் குடா. இது கிழக்கில் உள்ள இனவாத முஸ்லிம்களால் கிளப்பி விடப்ப்ட்ட புரளி. நான் நேரில் போய் பார்த்துள்ளேன். அப்படி அங்கே பெரிய எடுப்பில் எதுவும் இல்லை. அங்கே இருக்கும் முஸ்லிம்களும் சந்தோசமாக அவர்களுக்கு வியாபாரம் செய்து வாழ்கிறார்கள். வழமையாக இலங்கையில் ரஸ்யர்கள், உக்ரேனியர் இருப்பதை விட இந்த யூதர் அளவு குறைவே. இதை விட பல மடங்கு இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிகள், போரா முஸ்லிம்கள், பாய்கள் என இலங்கை வெளிநாட்டு முஸ்லிம்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் அதை எதையும் அடிப்படைவாத முஸ்லிம்கள் கதைக்க மாட்டார்கள். சும்மா ஒரு கொஞ்சம் யூதர் இலங்கையில் சட்டபடி வீசா எடுத்து வாழ்ந்தால், தமக்கென ஒரு பிரார்தனை குடிலை கட்டினால் - தாம் தூம் என குதிப்பார்கள். இலங்கையர் யூதரை வெளியேற்ற போராட தேவை வர பல நூறு வருடங்கள் முன்பே அது ஒரு இஸ்லாமிய நாடாகி விடும். இதுதான் உண்மை.
  23. எதைச் சொல்ல? sudumanal இஸ்ரேல்- ஈரான் கடந்த 13 ம் தேதி முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன. அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது. இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க ஜெட் போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் தரிப்புகளில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் (எம்-16) சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம் இந்த அணுசக்தி நிலையம் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஓர் உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது. அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர். அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அதைச் சிலர் விளங்கப்படுத்துகின்றனர். அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (deep state) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் என்பதும் அரசு அல்லது ‘ஆழ்-அரசு’ என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை -‘ஆழ்-அரசுடன்’ முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி- செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாட்டை ஆள பொறுப்பேற்றவர் என்ற வகையில் அவர் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். 2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார். அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன், அதி பணக்காரக் குழு (billionare) / மேட்டுக்குடிகள் (elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். இந்த ‘ஆழ்-அரசுப்’ பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல், இந்த ‘ஆழ்-அரசு’ மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ‘ஆழ்-அரசு’ ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது. இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல. அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய, உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது. இதெல்லாம் ‘ஆழ்-அரசு’ கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ‘ஆழ்-அரசுக்’ கும்பலான சிஐஏ உம் ‘எம்-16’ உம் ஆவர். (எம்-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது. அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே அவர்களின் நோக்கம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ? ட்றம் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ‘ஆழ்-அரசின்’ நோக்கமாக இருந்தது. இருக்கிறது. இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது. ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, சற்று தொலைவிலுள்ள ஹவுதி அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி, லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி, தனது ‘ஒற்றை-அரசு’ (one state) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல். ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர். வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான். ஈராக் காலம் போல் தொழில்நுட்பம் இன்றைய காலத்தை நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். எது எப்படியோ வடகொரியா தன்மீதான மேற்குலகின் நொட்டுதலை அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதுதான் நிகழும். ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது. ஆக மொத்தம் ஒற்றைத் துருவ அதிகாரம் பல் துருவ அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையில் (அதாவது இன்னோர் கோணத்தில்) ஈரான் நிலைமையை பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளை பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?. ravindran.pa 23062025 https://sudumanal.com/2025/06/23/எதைச்-சொல்ல/
  24. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலிருந்தே இஸ்ரேலியர்களின் ஆலோசனைப்படியே இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படியாகவே இருக்கலாம்.
  25. ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.
  26. அந்த பயத்திலும் உங்களிடம் இருந்தது " ஜீவகாருண்யம் " உயிர்களின் மீதான கரிசனை. துணைவியை அழைத்தது உங்களுக்கு எதும் ??? என்ற குடும்பத்தின் மீதான அக்கறை . என்றாலும் குட் சப்போர்ட்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.