Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87988
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    3049
    Posts
  3. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10206
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/11/25 in all areas

  1. உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.
  2. 🤣........................ நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்......... கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது. நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை. பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.
  3. வரலாற்றில் முதல் 9A *************************** கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan
  4. கிழக்கினை வெளிக்கவைக்கிறோம் என்கிற போர்வையில் இருண்ட பேய் யுகத்தை கட்டவிழ்த்த பிரதேசவாத மிருகங்கள் சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரவீந்திரநாத்தைக் கொழும்பில் இருந்து கடத்திச் சென்று படுகொலை செய்த காரணத்திற்காக பிள்ளையான் என்றழைக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மனித குலத்திற்கெதிரான பாதகன் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது நடக்கிறது. இவனது வாக்குமூலங்களுக்கு அமைவாக இவனுடன் சொந்த இனத்தின்மேலேயே இரத்தக் குளியல் நடத்திய இன்னும் பல பாதகர்கள் இப்போது வரிசையாக அரசினால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இனியபாரதி, செழியன் என்று ஆரம்பித்து பல கோடரிக் காம்புகள் தேடித் தேடிக் கைதுசெய்யப்பட்டு வருகின்றன. இவர்களின் கைதுகளையடுத்து இவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் மனிதவடிவில் நடமாடிய இப்பிரதேசவாத மிருகங்களின் செயற்பாடுகள் குறித்துப் பலரும் தமது அச்சம் தவிர்த்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கிழக்கின் மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசித்துவருபவரும், பிள்ளையான் எனும் இரத்தவெறிபிடித்த பிரதேசவாதியினால் இலக்குவைக்கப்பட்டுத் தப்பி வாழ்பவருமான திரு துரைரட்ணம் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்விகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்று வெளிவந்திருக்கின்றன. பத்திரிக்கையாளர் நடேசன் உட்பட பலரை வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொன்று தனது இச்சை தீர்த்த இம்மிருகங்கள் அக்காலத்தில் கிழக்கில் ஆடிய இரத்தக் குளியல் குறித்த சதிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
  5. பூனைக்குட்டிய பிடிக்க பயந்தவர்(பகிடிக்கு தான்) வேற எப்பிடி இருப்பார் அண்ணை?!
  6. இது ஏன் "நலமோடு நாம் வாழ" பகுதியில் இணைக்கப் பட்டிருக்கிறது? யாரோ பொழுது போகாமல் முகட்டைப் பார்த்து யோசித்த பின் இணையத்தில் அலட்டும் பதிவுகளை ஆரோக்கிய ஆலோசனையாக எடுத்துக் கொள்ள முடியுமா? அடுத்த தடவை வயிற்றோட்டம், வாந்தி வந்தால் அதை அப்படியே தடுக்காமல் "நஞ்சை மூளை வெளியேற்றட்டும்" என்று வீட்டிலேயே இருந்து பாருங்கள்😂. உடலின் நீர்ச்சத்தும், கனியுப்புக்களும் சேர்ந்து வெளியேறி, சிறு நீரகம் முதல் இதயம் வரை திருத்த இயலாத சேதம் அடையும். அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருக்க வேண்டும், பின்னர் டயலிசிசோடு நாட்களைக் கழிக்க வேண்டியும் வரலாம். அடிப்படையான மருத்துவப் புரிதல் அற்ற இந்த முட்டாள் தனங்களைப் பின் பற்றுவது தனிப்பட்டவர்களின் உரிமை, ஆனால் மருத்துவ ஆலோசனை போலப் பரப்புவது சமூக விரோதச் செயல்.
  7. தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, தோட்ட உரிமையாளர் டார்ச் அடித்துப் பார்த்தபோது, பதற்றமடைந்து ஒரு கம்பத்தின் பின்னால் மறைந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. டைரக்டர் மதுரை மைந்தன்
  8. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரங்கள் வேறுபடும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு தடையும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்று விட்டது.இதையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். பால் பொருட்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதியாகின்றது. கால் நடைகளுக்கான தீனிகளும் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகின்றது. இதையெல்லாம் வளம் மிக்க தமிழ்நாட்டில் ஏன் எதற்காக என்றெல்லாம் விவாதிக்க மாட்டார்கள். இது மாநாடு அல்ல. ஒருவகை போராட்டம் மட்டுமே. மூலைக்கு மூலை மதுபானசாலைகள் இருக்கும் போது கள் உற்பத்தி செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து.
  9. மாடு என்றால் செல்வம் என்று தமிழில் ஒரு பொருள் இருக்கிறது.இந்த மனிதர்கள் எதைச் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து வாந்தி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லையே?பால் பொருடகளையே சாப்பிடாத ஆட்கள் எத்தனை பேர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். நடக்க முடியாதை நடத்திக்காட்டுபவன்தான் உண்மையான மாற்றத்திற்கு வழிகாட்டும் தலைவனாகிறான்.நக்கல் நையாண்டி மட்டும் செய்பவர்கள் செயலில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். உழுதுண்டு வாழ்வானே வாழ்வான் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. சீமான் அலர்ஜியாளர்களின் கத்தலை பெருட்படுத்தாது கடந்து போவதே நல்லது.
  10. எங்கட ஆட்களில் ஒரு பகுதியினருக்கு இன்னும் உலக வாழ்க்கையில் எது முக்கியமென்பது பற்றிய அறிவு கிடையாது என்பதைக் காட்டும் பதிவு. பிறக்கிறோம், இறக்கிறோம். இடையில் ஏனையோரை தட்டிச் சுத்தாமல், பிராண்டி வாழாமல், கொல்லாமல் வாழ முடிந்தால் அதுவே போதும். இதை விட்டு விட்டு , செத்த பின்னர் என்னைக் கொண்டாட வேண்டும், நினைவுகூர வேணும், புகழ ஒரு கூட்டம் வேணுமென்பதெல்லாம் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத பினாத்தல் ரீமின் ஐடியாக்கள். இந்தப் பதிவைக் கூட சொந்தப் பெயரில் எழுத இயலாத இந்த முகநூல் பதிவர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சம்பந்தர் செய்ததை விட எதுவும் செய்து விடாமையால் தான் ஒளிந்து நின்று எழுதுகிறார் போல இருக்கு என ஊகிக்கிறேன்😎!
  11. சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
  12. #சுகர்னு docter கிட்ட போறாங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். #ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். 😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். 🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை. வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான். பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன். மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும். அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ################### ############### ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗ 1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். 3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். 4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘ உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்! மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......! - இணையத்தில் படித்தது. -
  13. இவ்வளவு புத்தகங்களையும் எழுதியவர்கள், சேகரித்தவர். பாதுகாப்பவர்,போற்றப்படவேண்டியவர்கள்.அழியாதசெல்வம் கல்வி. நூலகம் ஒரு அறிவுப்பெட்டகம்
  14. அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா
  15. குழந்தைக் குட்டி உள்ள குட்டிக் கதையாகினும் நகைச்சுவை நன்றாக இருந்தது . ........ ! 😂
  16. பிள்ளைகளின் தலையில் பூ வைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய அம்மா.
  17. ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது
  18. ஆக மொத்தத்தில சிங்களவருக்கு நிகராக தமிழரை கொன்று குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் ... தமிழர்களை இனப்படுகொலை செய்வதில் முன்னின்ற தமிழர்கள் ஒழிக! (மூன்றாவது இடம் சோனகர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது)
  19. ஒரு கேள்வி கேட்கலாமா? அமிர்தலிங்கத்தை இன்றுவரை நினைவுகூர்கிறார்கள். நீலனையும். அப்போ அவர்கள் மாறா மக்கள் அபிமானம் வென்ற தலைவர்கள்? ஆகவே அவர்களை அவர்கள் பாணியில் அரசியல் செய்யவிடாமல் போட்டு தள்ளியது தவறு?
  20. அமெரிக்காவில் அதிகாரத்தில் இருந்த பைடனும், ஹிலாரியும், ஜோன் கெரியும் "இடதுசாரிகள்" என்று நம்பும் அளவுக்கு உங்கள் அறிவு இருக்கிறது 😂- ஆனால் உங்கள் வாசிப்பு பற்றி நீங்களே இங்கே அறிக்கையிட்டிருப்பதால் இதில் அதிசயமில்லை! ஒபாமா, ஹிலாரி, பைடன், கெரி: இவர்கள் இருந்த காலத்தில் தான் ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஈழத்தமிழர் மீதான குற்றங்கள் பற்றிய தீர்மானங்கள் வந்தன (அந்த வேளையில் எதிர்த்து வாக்களித்த புரினின் ரஷ்யவைத் தான் இங்கே தமிழ் தேசியப் போர்வை போர்த்தியபடி உலாவரும் சில "யாழ் கள நடிகர்கள்" 😎விருப்பம் என்று எழுதியிருக்கிறார்கள்). ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்த மனித உரிமைகள் எல்லாம் பின் தள்ளப் பட்டு விட்டன. ட்ரம்புக்கும் ருபியோவுக்கும் சிறிலங்கா எங்கே இருக்கிறது என்பதே தெரியுமோ என்பது சந்தேகம். இனியென்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் புரிதலில் "இடது சாரிகளான" ரஷ்யாவிடமும், சீனாவிடமும் நீதி கேட்பீர்களா?
  21. அந்தப் புத்தகம் என்ன புத்தகம் என்று இணையத்தில் தேடிப் பார்த்தேன், சிறி அண்ணா........🤣. நான் இளவயதில் இருக்கும் போது ஆனந்த விகடனில் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். எங்களில் பலரும் அவற்றை அன்று வாசித்திருப்போம். கிட்டத்தட்ட அது போன்ற கட்டுரைகள் கொண்டது இந்தப் புத்தகம். 'உன்னால் முடியும் தம்பி' என்பதே உதயமூர்த்தி அவர்களின் ஒரு பிரபலமான தலைப்புத்தான்................ பின்னர் பாலச்சந்தர் - கமல் - ஜெமினி கணேசன் ஆக்கத்தில் இதே பெயரில் ஒரு படமும் வந்தது. மூன்று விரல்கள் காட்டிய அந்தக் குழந்தைக்காக அதை இங்கே எடுத்துக்கொண்டேன்..........
  22. பலி கொடுக்க அழைத்துபோகும் ஆட்டுக்குட்டியை போல( சும்மா சிரிக்க மட்டும் ) ...கனடா அமெரிக்க பக்கத்தில சில மணி நேரங்களென்றபடியால் சமாளித்து விடடீர்கள் . முதல் வேலையாக மகன்கள் சொல்லியிருப்பார்கள் இனிமேல் இப்படி புக் பண்ணாதீங்க அப்பா ...மலிவு பார்க்கப்போனால் இப்படித்தான் இசகு பிசகாக மட்டுப் படுவோம்.
  23. இவர் அவர் இல்லை............... இவர் அவராக இருப்பாரோ என்று செயற்கை நுண்ணறிவு உய்த்தறிந்து இப்படி ஒரு படத்தை கீறியிருக்கின்றது...............🤣. செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து நச்சரிக்கவும் மனது வர மாட்டேன் என்கின்றது. செயற்கை நுண்ணறிவு செயற்படும் Data Centers இருக்கும் அழகான, அமைதியான கிராமங்கள் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அங்கங்கே நீர்வளம் அருகி அல்லது கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவை கேள்விகள் கேட்கும் போது, 'Please......' என்னும் ஒரு சொல்லை ஒரு தடவை தவிர்த்தால் ஒரு சிறிய போத்தல் தண்ணீர் மிச்சமாகும் என்று Sam Altman (CEO of OpenAI) சமீபத்தில் சொல்லியிருந்தார். அப்படியாயின் மொத்தமாக எவ்வளவு நீர் இதற்கு தேவைப்படுகின்றது என்ற கணக்கு மலைக்கவைக்கின்றது. கப்பலின் ஓட்டைகளை அடைப்பது போல உலகம் போய்க் கொண்டிருக்கின்றது போல. ஒரு ஓட்டையை அடைத்தால், இன்னொரு இடத்தில் புதிய ஓட்டை ஒன்று உருவாகின்றது.
  24. அறிவுபூர்வமான நாகரீகம் எப்போது வீழ்ச்சியடைந்தது ? வெள்ளைக்ராரன் வந்த பின்னரா அதற்கு முன்பா ? பல திரிகளிலும் நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு இங்கு பொறுமையாகப் பலர் பதில் எழுதுகிறார்கள். பதில் தரப்படாத உருட்டல்கள் எவை என்று பட்டியலிடுங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
  25. சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு Published By: VISHNU 11 JUL, 2025 | 05:43 AM சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது. இற்றைவரை இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை. இவ்வாறாணதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம். அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல் கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம். இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம். இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/219702
  26. 35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்! adminJuly 11, 2025 மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர். அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். https://globaltamilnews.net/2025/217752/
  27. இயற்கை எல்லா உயிரினங்களும் தூங்குவதற்கு சிறப்பான படுக்கைகளைத் தயாரித்துத்தான் வைத்திருக்கு . ........என்ன , அவற்றை அவைதான் தேடிக் கண்டு பிடிக்கவேணும் ......... ! 😂
  28. மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதே இங்கு முதன்மையானது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. மூனா போன்ற ஓவியர்கள் தொடர்ச்சியாக இயங்குவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. வாரம் தோறும் அன்றைய அரசியல் சூழல்களை மையப்படுத்தி யோசிக்கவும் வேண்டும், அந்த யோசனைகளை படங்களாக வெளிக்கொண்டுவரவும் வேண்டும். அவை வாசகனுக்கு புதிதாக ஒன்றை சொல்வதாகவும் இருக்கவேண்டும். எத்தனை நீண்ட, கடினமான பணி இது. ஆனாலும் மூனாவின் கரங்கள் ஒரு வாரம்கூட ஓய்வெடுத்ததில்லை. வாரம்தோறும் அவை எவ்வித தடங்கலுமின்றி வாசகர்களை சென்றடைந்துவிடும். இந்த 500 கருத்துப்படங்களும் பேசாத விடயங்களேயில்லை. சிங்கள பௌத்த மேலாண்மை மீதான கோபங்களை அவை வெளிப்படுத்தியுள்ளன. ஈழ அரசியலின் இரட்டைப் போக்குகள் குறித்து அவை விமர்சனங்களை முன்வைத்துள்ளன, ஈழத் தமிழ் சமூகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவை பதிவுகளை மேற்கொண்டுள்ளன. தமிழக, உலக அரசியல் சார்ந்தும் அவை பேசியுள்ளன. மூனாவின் ஓவியங்கள் பொங்குதமிழின் முகங்களில் ஒன்று. 2009 ம் ஆண்டின் இறுதிப் பகுதி. பொங்குதமிழை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக அவரின் வலைப்பக்கத்தை பார்க்க நேரிட்டது. அங்கு வெளியாகியிருந்த கருத்துப் படங்களைப் பார்த்தவுடன் அவரிடமிருந்து ஒரு படமாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலுடன் அவரின் மின்னஞ்சலுக்கு தொடர்புகொண்டேன். பதிலேதுமில்லை. நண்பர் இரஞ்சித் இலண்டன் ஐ.பி.சியுடன் இயங்கியவர். பலருடனும் அவருக்குத் தொடர்பிருந்தது. 'மூனா என்பவரை தெரியுமா? அவருடன் அறிமுகம் உண்டா' என்று பேச்சுவாக்கில் கேட்டேன். 'அவர் எனது நண்பர்தான், கேட்டுப் பார்க்கிறேன்' என்று மட்டும் சொன்னார் இரஞ்சித். எனக்கு ஏனோ நம்பிக்கையில்லை. ஆனால், நாம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னராகவே படம் வந்துசேர்ந்தது. அத்துடன் பொங்குதமிழின் அறிமுகம் குறித்து அவர் எழுதிய வாழ்த்தும் வந்து சேர்ந்தது. எமது வேண்டுதல்கள் எதுவும் இன்றியே தொடர்ந்தும் கருத்தோவியங்களை அனுப்பிக்கொண்டேயிருந்தார். பொங்குதமிழ் கட்டியமைக்க விரும்பிய கருத்துத்தளத்திற்கு அவரின் படங்கள் பெரிதும் துணைநின்றன. அவர் அனுப்புகின்ற படங்களில் சில வெளியாகாமலும் போனதுண்டு. ஆனாலும் அவை குறித்து அவர் எந்தக் கேள்வியும் எழுப்பியதில்லை. படைப்பொன்றை வெளியிடுவதும் தவிர்ப்பதும் பொங்குதமிழ் ஆசிரியரின் உரிமை என்ற விடயத்தில் அவர் எப்போதும் தெளிவாகவே இருந்தார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப்படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இக் கருத்துப்படங்களுடன் தொடர்பானவர்களும் மனம்கோணாத ஒரு நாகரீகமான எல்லைக்கோடு எப்பவுமே மூனாவிடம் இருந்ததுண்டு. தவிர, மூனாவின் கருத்துப்படங்கள் ஓர் உன்னதமான சமூக நோக்கில் நின்று வரையப்பட்டவை. ஆழமான கருத்துச்செறிவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால வரலாற்றின் முழுமையான பதிவுகளாகவும் அவை கொள்ளக்கூடியவை. அவரின் கருத்துப்படங்களை காலஒழுங்கில் பார்க்கின்ற ஒருவர், கடந்த ஐந்தாண்டு நிகழ்வுகள் தொடர்பான ஒரு மேலோட்டமான வரலாற்று ஓட்டத்தைப் பெற்றுவிட முடியும். அந்தளவிற்கு வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஆழமான பதிவுகளாகவும் அவை அமைந்துள்ளள என்பதே என் எண்ணம். பொங்குதமிழுக்கென அவர் வரைந்துதரும் கருத்தோவியங்களை வேறு பல இணையத்தளங்களும் பிரதிசெய்தி வெளியிட்டு வருகின்றன. கனடாவிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் பொங்குதமிழில் வெளியாகும் அவரின் கருத்தோவியங்களை வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்னர், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து மூனா வரைந்த ஒரு கருத்தோவியம் குறித்து, குமுதம் இணையத் தொலைக்காட்சியின் விவாதமொன்றில் பேசப்பட்டதையும் நானறிவேன். உண்மையைச் சொல்வதானால், ஓவியர் மூனாவுடன் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமேதுமில்லை. பொங்குதமிழுடன் அவர் இணைந்து பணியாற்றிய இந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைதானும் நான் அவருடன் பேசியதில்லை. ஆனாலும் 500 கருத்தோவியங்களை பொங்குதமிழில் பூர்த்திசெய்துள்ள சாதனை குறித்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அவரின் தனித்துவமான இயல்புதான் அதற்கான முதற்காரணம். தன்னை முன்னிலைப்படுத்தாத இயல்பு அவருடையது. மூனா என்றும் இந்த கலைஞனுக்கு ஈழத்தமிழ் சமூகம் இன்னும் முழுமையான அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. அவரின் கருத்தோவியங்கள் நூலாக்கம் பெறவேண்டும். வரலாற்றில் அவை பதிவாகவேண்டும். வாழ்த்துக்களும் வணக்கமும். http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=7ee47c90-a649-4413-ac37-6956e4cfc4c5
  29. அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂
  30. படத்தைப் பார்த்தாலே நீங்க அப்பாவியாவே இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்துமா அந்தப் பெண்ணுக்கு இரக்கம் வரவில்லை.
  31. இந்த மாநாட்டைத் தொடர்ந்து பூச்சி புழுக்களுக்கான மாநாடொன்றினையும் செந்தமிழன் சீமான் அண்ணா நடாத்தவேண்டும்!😁
  32. இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭
  33. சுத்து மாத்துக்கு மட்டும் அல்ல பார் சிறிக்கும்…. ஒத்த கதிரை கஜனுக்கும்… இதே நிலைதான்.
  34. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர். சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம். நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன? 'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை. நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை. யாழ்ப்பாண புலனாய்வு
  35. மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.
  36. 15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,
  37. தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் July 9, 2025 — டி.பி.எஸ். ஜெயராஜ் — ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. ” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதியரசர் அமரசேகர கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து வருகின்ற ஒரு அச்சுறுத்தல் வெளியில் இருந்து வருகின்ற ஒரு சவாலை விடவும் பெருமளவுக்கு ஆபத்தானது என்று நீதியரசர் தெரிவித்த மிகவும் பொருத்தமான கருத்து பரவலாக பொருந்துவதாகும். அதற்கு பல சந்தர்ப்பங்களை கூறமுடியும். இலங்கையில் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சி நீதியரசர் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மெய்யறிவை அனுபவிக்கின்றது. இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது. கடுமையான அரசியல் சச்சரவுக்கு மத்தியிலும், தேர்தல்களில் அண்மைக் காலங்களில் தமிழரசு சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கிய போதிலும், தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தது. தேசிய மட்டத்தில் சஜித் பிரேமதாச அநுர குமார திசநாயக்கவுக்கு அடுத்ததாக இரண்டாவதாக வந்தார். ஆனால், ஒரு பிராந்திய மட்டத்தில், தமிழரசுக் கட்சியின் உறுதியான ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவே வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார். 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலிலில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களைக் கொண்ட பாசாளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். மீண்டும் தமிழரசு கட்சியே வடக்கிலும் கிழக்கிலும் “திசைகாட்டி” கட்சியை உறுதியான முறையில் எதிர்த்து நின்ற ஒரேயொரு இலங்கை தமிழ்க்கட்சியாகும். வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) தமிழரசு கட்சியில் இருந்துதெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) சமமானதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு தேசியப்பட்டியலில் இருந்து மேலதிகமாக ஒரு ஆசனமும் கிடைத்தது. அதனால் எட்டு உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசு கட்சி விளங்குகிறது. அண்மையில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளில் (மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள்) 35 சபைகளில் தமிழரசு கட்சி முதலாவதாக வந்தது. தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு டசின் சபைகளில் இரண்டாவதாக வந்த தமிழரசு கட்சி முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பெரும்பானமையாகக் கொண்ட சபைகளில் பத்து சபைகளில் வட்டாரங்களிலும் வெற்றிபெற்றது. மேலும் சில தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் உதவியுடன் தமிழரசு கட்சியினால் 34 உள்ளூராட்சி சபைகளில் ஒப்பேறக்கூடிய நிருவாகங்களை அமைக்கக்கூடியதாகவும் இருந்தது. தேர்தல் களத்தில் போட்டி தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மெச்சத்தக்க வெற்றிகளை பெற்ற போதிலும், தமிழரசு கட்சி அதன் உள்ளக அரசியல் நிலைவரத்தை பொறுத்தவரை, ஒரு பாதகமான தோற்றத்திலேயே இருக்கிறது. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் சர்ச்சைக்குரிய நடத்தையே இதற்கு பிரதான காரணமாகும். முன்னாள் பாடசாலை அதிபரான அவர் பொதுவில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் குறிப்பாக முக்கியமான நிருவாகிகளுக்கும் எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கெடுதி விளைவிக்கக்கூடிய முறையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார். மிகவும் மூத்த தமிழரசு கட்சி எம்.பி: தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் மூத்தவராக சிறீதரன் விளங்குகிறார் என்பது பிரச்சினையை மேலும் கூர்மையானதாக்குகிறது. 57 வயதான அவர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். அன்றிலிருந்து 2015, 2020, 2024 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறீதரன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறூப்பினராக இருந்துவருகிறார். 2015 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகளையும் சிறீதரன் பெற்று வந்திருக்கிறார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்ற போதிலும், பிரதானமாக சிறீதரனின் வாக்குவங்கியாக கிளிநொச்சியே விளங்குகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற இரு நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இருக்கிறது. சிறீதரனும் அவரது உதவியாளர்களும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாத பேச்சுக்கள், ஆட்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரசியல் மற்றும் வலுக்கட்டாயமான அணுகுமுறைகள் என்று ஒரு கலப்பான தந்திரோபாயத்தின் மூலமாக கிளிநொச்சி வாக்காளர்கள் மீது ஒரு வலிமையான பிடியை வைத்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலை புலிகளுக்கு சார்பான செல்வாக்குமிக்க ஒரு பிரிவினரும் சிறீதரனுக்கு பல வழிகளில் ஆதரவாக இருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளும் அவரின் ஆட்களினாலேயே நிரப்பப்படடிருக்கிறது. கிளிநொச்சியில் அவரின் அரசியல் ஆதிக்கத்தை தமிழ் ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அவரை “கிளிநொச்சி ஜமீந்தார்” என்று வர்ணிக்கின்றன. தெளிவாகக் காணக்கூடிய திடடம்: தற்போதைய இலங்கை அரசியல் விவகாரங்களின் ஆய்வாளர்களும் அவதானிகளும் தமிழரசு கட்சி தொடர்பான சிறீதரனின் செயற்பாடுகளில் தெளிவாகக் காணக்கூடிய ஒரு திட்டத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஒரு மட்டத்தில், அவரும் அவரது ஆதரவாளர்களும் தமிழரசு கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். இன்னொரு மட்டத்தில், அவரின் உதவியுடனும் ஆதரவுடனும் செயற்படுகின்றவர்கள் கட்சிக்கு பாதகமானதும் கட்சியை மலினப்படுத்தக்கூடியதுமான வெளிப்படையானதும் மறைமுகமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த இரு அணுகுமுறைகளிலுமே முனானாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தற்போதைய பதில் பொதுச் ஙெயலாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மீதான சிறீதரனின் கடுமையான வெறுப்பு பொதுவான ஒரு காரணியாக இருக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான இந்தத் தகராறு குறித்து கடந்த காலத்தில் நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். இந்த விவகாரம் பல்பரிமாணங்களையும் பல அடுக்குகளையும் கொண்டது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இலங்கையிலும் இருக்கின்ற சுமந்திரனுக்கு எதிரான பிரிவினரிடமிருந்து சிறீதரனுக்கு கிடைக்கின்ற பரந்த ஆதரவு சுமந்திரனுக்கு எதிரான சிறீதரனின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாகும். இது விடயத்தில் சுமந்திரனுக்கு எதிரான தன்னல அக்கறைச் சக்திகள் தங்களுக்கு வசதியான கருவியாக சிறீதரனைப் பயன்படுத்துவதாக சிலர் உணருகிறார்கள். உட்கட்சித் தேர்தல் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நடந்தது சாராம்சத்தில் இதுதான். 2020 பாராளுமன்ற தேர்தலில் இருவரும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்தார்கள். இருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். ஆனால், இந்த உறவுமுறை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலுக்கு பிறகு முறிவடைந்தது. தலைவர் பதவிக்கு சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிட்டார்கள். 2024 ஜனவரி 21 திருகோணமலையில் நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் 321 பொதுச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 184 வாக்குகளைப் பெற்ற சிறீதரன் சுமந்திரனை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுமந்திரனுக்கு 137 வாக்குகள் கிடைத்தன. ஜனவரி 27 தமிழரசு கட்சியின் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புடைய மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து திருகோணமலையைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினரான பரா. சந்திரசேகரம் கட்சியின் யாப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுச்சபை கொண்டிருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தார். கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையில் கட்சி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலின் சட்டபூர்வத்தன்மை சவாலுக்கு உட்டுத்தப்பட்டது. இடைக்காலத்தடை ஒன்றை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது. நீதிமற்றத்தின் உத்தரவு 2024 ஜனவரி 21, 27 ஆம் திகதிகளில் பொதுச்சபை யின் கூட்டங்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு தீர்மானமும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரிய மனுவின் விசாரணை முடிவடையும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் நிருவாகிகளோ அல்லது மத்திய செயற்குழுவோ செயற்பட முடியாது என்பதே நீதிமன்ற உத்தரவின் அர்த்தமாகும். கட்சி யாப்பின் பிரகாரம் பொதுச்சபையின் 150 — 160 உறுப்பினர்கள் மாத்திரமே கட்சி தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..ஆனால், 2024 ஜனவரியில் 321 பேர் வாக்களித்திருந்தார்கள். பழைய கரங்களில் அதனால், விதிவசமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் தலைவரும் ஏனைய நிருவாகிகளும் பதவியேற்பதில் இருந்து தடுக்கப்பட்டனர். “புதிய” மத்திய செயற்குழுவும் இயங்க முடியவில்லை. “பழைய” மத்திய செயற்குழுவும் நிருவாகிகளுமே தொடர்ந்து செயற்படுகின்றனர். அதனால் தமிழரசு கட்சி “பழைய” மத்திய குழுவினதும் நிருவாகிகளினதும் கரங்களிலேயே இருக்கிறது. பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த “மாவை”சேனாதிராஜா அதற்கு பிறகு தனது பதவியை துறந்தார். கட்சியின் மூத்த துணைத் தலைவரான சி.வி.கே சிவஞானம் மத்திய செயற்குழுவினால் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இன்னொரு நிகழ்வுப் போக்காக கட்சியின் செயலாளர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகவே அவரின் இடத்துக்கு சுமந்திரன் செயலாளராக வந்தார். இடைக்கால தடையுத்தரவு கோரும் தமிழரசு கட்சியின் வழக்கு இழுபட்டுக் கொண்டுபோகும் நிலையில், “பழைய” நிரவாகிகளும் மத்திய செயற்குழுவுமே கட்சியின் விவகாரங்களை கவனித்தது. கட்சியை மறுசீரமைத்து அதன் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக தலைவர் சிவஞானமும் செயலாளர் சுமந்திரனும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழு வின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆதரவை வழங்கினார்கள். கட்சியின் சகல தீர்மானங்களுமே மத்திய செயற்குழுவினதும் அரசியல் குழுவினதும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டன. செல்வாக்கமிக்க நால்வர் தலைவர் சிவஞானம், செயலாளர் சுமந்திரன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய நால்வரும் தமிழரசு கட்சிக்குள் செல்வாக்கு மிகுந்தவர்களாக மாறினார்கள். சிறீதரனும் மத்திய செயற்குழுவில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையான அவரது ஆதரவாளர்களும் உண்மையில் அதிகாரமற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் போனார்கள். கட்சிக்கு எதிராக போட்டித்தனமான தந்திரோபாயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக சிறீதரன் மேலும் நிலைவரத்தை பழுதாக்கினார். 2024 ஜனாதிபதி தேர்தல் இதற்கு தெளிவான ஒரு உதாரணமாகும். தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவை வெளிப்படையாக ஆதரித்த அதேவேளை, சிறீதரன் பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனை வெளிப்படையாக ஆதரித்தார். இது கட்சிக்கு எதிரான வெளிப்படையான ஒரு செயலாகும். தனியாள் 2024 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது சிறீதரன் தமிழரசு கட்சிக்குள் இருந்த அதேவேளை தனியாளாகவே செயற்பட்டார். கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரக் கூட்டங்களில் அவர் பங்குபற்றவில்லை. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களில் இருவர் மாத்திரமே அவரது மேடைகளில் பங்கேற்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது. சிறீதரனின் பிரசாரம் தமிழரசு கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்கு அல்ல, தனக்கு மாத்திரமே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதை மறைமுகமாக உணர்த்தியது. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியில் இருந்து அவர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராகவும் வந்த சிறீதரன் அரசியலமைப்பு பேரவையின் (Constitutional Council) ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக உயர்ந்த போதிலும், அவரால் கட்சிக்குள் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. தமிழரசு கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கூட, இருவர் அவரது ஆதரவாளர்களாகவோ அல்லது எதிராளிகளாகவோ இல்லை. தற்போது சிறீதரனின் ஆதரவாளராக கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே கருதப்படுகிறார். 37 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசு கட்சியின் மத்திய செற்குழுவிலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் சிறீதரனின் முகாமில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழரசு கட்சியின் மத்திய செயற் குழுவையும் அரசியல் குழுவையும் சேர்ந்த பெருமளவு உறுப்பினர்கள் தமிழ்த்தேசியவாத இலட்சியங்களை தங்களுடன் வரித்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவோ அலாலது விடுதலை புலிகளுக்கு சார்பானவர்களாகவோ இல்லை. அதனால் அவர்கள் சிறீதரனின் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெற்றுக் கடும்போக்கு ஆரவாரப் பேச்சுக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை. சிறீதரனை அறிவாழமும் செயற்திறனும் நேர்மையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக பலர் நோக்கவில்லை என்பது மற்றைய காரணமாகும். அவரை அவர்கள் ஒரு வாய்ச்சொல் வீரராகவே பார்க்கிறார்கள். வாக்குகளைப் பெறுவதில் சிறீதரன் கெட்டிக்காரராக இருக்கலாம், ஆனால், ஆக்கபூர்வமானதும் அறிவார்ந்ததுமான தலைமைத்துவத்தை வழங்க இயலாதவராக அவர் விளங்குகிறார். தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர இயலாதவராக சிறீதரன் கட்சியை மலினப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார். அதையும் வெளிப்படையாகச் செய்வதற்கு பதிலாக அவர் தனது ஆட்களையும் ஆதரவாளர்களையும் பயன்படுத்தி எதிர்மறையான காரியங்களைச் செய்ய வைக்கிறார். செம்மணி சம்பவம் யாழ்ப்பாணத்தில் அரியாலை பகுதியில் செம்மணியில் சித்துப்பாத்தி மயானத்தில் மனித புதைகுழிகளில் தோண்டியெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பில் உலகின் அனுதாபத்தைக் கவரும் நோக்கில் நடத்தப்பட்ட “அணையா விளக்கு” அமைதிவழிப் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவம் இதை பளிச்சிட்டுக் காட்டுகிறது. சிறீதரனின் ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் இருந்து இருபது பஸ்களில் செம்மணிக்கு வந்தனர். கிளிநொச்சியில் இருந்து ஜீவராஜா என்று கூறப்படும் ஒருவரின் தலைமையில் வந்தவர்களில் சிலர் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் போராட்ட அரங்கில் இருந்து வெளியேறியபோது அவரை எதிர்கொண்டு ஆபாச வார்த்தைகளில திட்டி துரோகி என்று கூச்சல் போட்டனர். எண்பது வயதைக் கடந்தவரான சிவஞானம் எதிர்த்து எதையும் கூறாமல் மிகுந்த நிதானத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பெருவாரியான யூரியூப் அலைவரிசைகளில் வெளியானது. தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானத்தை பொதுமக்கள் அணிதிரண்டு விரட்டியடித்த ஒரு சம்பவமாக அது தவறான முறையால் காண்பிக்கப்பட்டது. ‘பாதுகாவலர்’ சி.வி.கே. சிவஞானம் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஒரு துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கட்சிக்குள் சிறீதரனைப் “பாதுகாப்பவராக” சிவஞானமே இருந்து வருகிறார். தமிழரசு கட்சிக்குள் சிவஞானம் ஒரு மத்திய பாதையை கடைப்பிடிக்கிறார். ஒரு புறத்தில் அவர் சுமந்திரனுடன் கட்சி விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் சிறீதரனைப் பழிவாங்க வேண்டும் என்று கூச்சல்போடுகிறவர்களையும் அடக்கி வைத்திருக்கிறார். அதனால் சிறீதரன் சிவஞானத்துடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு அவசரப்பட்டு ஓடினார். சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு செம்மணி சம்பவம் இவ்வருடம் பெப்ரவரியில் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த இறுதிச்சடங்கின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த சிறீதரன் இரங்கல் உரை நிகழ்வுக்கும் தலைமை தாங்கினார். சேனாதிராஜாவுக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி இரங்கலுரை ஆற்றுவதற்கு விரும்பிய சிலரை சிறீதரன் தடுத்ததாகக் கூறப்பட்ட அதேவேளை, தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கு அவர் அனுமதித்தார். மேலும் கிளிநொச்சியில் இருந்து வாகனங்களில் கூட்டி வரப்பட்டதாகக் கூறப்பட்ட கறுப்புச்சட்டை அணிந்த கும்பல் ஒன்று இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலரை அச்சுறுத்தியது. அவ்வாறு அச்சுறுத்தப்பட்டவர்களில் பலர் கட்சிக்குள் சிறீதரனை விமர்சிப்பவர்களாக கருதப்படுபவர்கள். தமிழரசு குழப்பம் இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக தமிழரசு கட்சி இருக்கலாம், ஆனால், அது பிளவுபட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது என்ற உண்மையை மறுதலிக்க முடியாது. அது உள்ளிருந்து வருகின்ற சவால்களுக்கும் வெளியில் இருந்து வருகின்ற சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு கட்சியாக இருக்கிறது. நீதியரசர் அமரசேகர குறிப்பிட்டதைப் போன்று உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு கெடுதியை விளைவிக்கக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கின்றன.” யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் எவ்வளவு காலத்துக்கு கட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தொடரப்போகிறார்? 1949 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட அந்த கட்சி அதன் வைரவிழா வருடத்தில் என்ன செய்யப்போகிறது? (நன்றி ; வீரகேசரி ) https://arangamnews.com/?p=12147
  38. Posted inStory மாதா எழுதிய “முதுமை” சிறுகதை Posted byBookday07/07/2025No CommentsPosted inStory “முதுமை” சிறுகதை – மாதா அந்த முதியவருக்கு எண்பது வயதாகிறது. அவரது மனைவிக்கு எழுபது. அவர்கள் கிளையில் தொங்கிக்கொண்டிருக்கும் பழுத்த மாம்பழங்கள். ஒரு நாள் திடீரென்று பலத்த காற்று வீசும் போது ஒன்றன் பின் ஒன்றாக பூமியில் விழுந்து விடும். தனது மனைவியை விட தான் வயது மூத்தவர் என்பதால் தார்மீக அடிப்படையில் அவளுக்கு முன்பாகவே தான் காலமாகிவிட வேண்டுமென்று எண்ணினார். ஆனால் கடவுள் அந்த வயது முதிர்ந்தபெண்ணுக்கு அணுக்கமாகவே நடந்து வருகிறார். வயதான காலத்தில் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விரும்பியதை எல்லாம் கடவுள் வழங்கியிருப்பதாகவே நம்பினார்கள். தேவைகள் குறைவாக இருப்பவரே பெரிய செல்வந்தர். நலக்குறைவில்லா வாழ்க்கை. மூதாட்டிக்கு கடவுளிடம் ஒரே ஒரு பிரார்த்தனைதான். நூறு ஆண்டுகள் வரை கணவர் உயிரோடு வாழ வேண்டும். அவருக்கு முன்பு அவள் உயிர் பிரிய வேண்டும். நலமுடன் இருக்கும் போதே கடவுள் அவளை அழைத்துக் கொள்ள வேண்டும். அவரை விட்டால், அவள் யாரிடம் முறையிட முடியும்? தேவைப்படும் நாளில் உதவிக்கரம் கிடைக்காத சூழலில் மனிதன் கடவுளை எண்ணுகிறான், தன்னை மீட்டெடுப்பான் என்று நம்புகிறான். ஆனால் அளவான இறை நம்பிக்கையுள்ள முதியவர் ஆண்டவனிடம் இதுபோன்ற கோரிக்கை வைப்பதில்லை. பக்தர்களை கவனிப்பதை விட கடவுளுக்கு உலகில் ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. அவளுடைய வேண்டுகோளை கடவுள் எவ்வாறு நிறைவேற்ற முடியும்? இருப்பவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுத்து தங்கி விட்டால், மற்றவர்களுக்கு பூமியில் இடமில்லாமல் போகுமே… சராசரி அயுளுக்கு மேல் நீணட கால வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. வாழ்க்கையின் இறுதிப் பகுதி துயரத்தின் வலி மிகுந்ததாகவே இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடு அந்த மூத்த தம்பதிகளின் வயதை விட பழமையானது. மூன்று தலைமுறையை தாங்கி நிற்கிறது. பழமையான அந்த வீட்டில் பழமையான இரு மனிதர்கள் வசித்து வருகிறார்கள். நூற்றி ஐம்பது ஆண்டு வயதுடைய அந்த வீட்டை மராமத்து செய்யவோ, நவீனப்படுத்தவோ அவர்கள் வரும்பவில்லை. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து தங்காத வீட்டை புதுப்பிக்கவில்லை. பிள்ளைகளின் வாழ்வை கரை சேர்த்துவிட்டு மீண்டும் வாழத்தொடங்கி இருக்கிறார்கள். மூத்த தம்பதிகள் நீண்டகாலம் வாழ்வதால் முதுமைக்கால பிரச்சனைகள் துன்புறுத்தும். அவர்களை பராமரிப்பதற்காக செலவு ஏற்படும். பிள்ளைகள் ஒதுக்கி வைத்ததால் அவர்கள் தங்களிடம் சேர்ந்து கொண்டார்கள் மூத்த தம்பதிகள். முதுமைப் பருவம் என்பது பிறப்பு, இறப்பு எல்லைகளுக்கு இடையிலான விளிம்பு நிலை பருவம். கடந்து சென்ற வாழ்க்கைப் பாதையின் அனைத்து அனுபவங்களையும் அசை போட்டு, அடுத்த தலைமுறைக்கு சுவடுகளை விட்டுச் செல்லுகிற உன்னத பருவம். அவர்கள் ஏற்கனவே நீணட காலம் வாழ்ந்து விட்டார்கள். அந்த ஊரிலேயே அவர்கள்தான் வயதானவர்கள். அவர்கள் வயதையொத்தவர்கள் எல்லாம் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அதனாலேயே அவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிய மனதளவில் தயாராகி விட்டார்கள். மரணம் யாரிடமும் அனுமதி கேட்பது இல்லை. மரணத்தை விட்டு ஓட முடியுமா? ஒருவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும். நிறைவான வாழ்க்கையில் மரணம் இருக்காது. கிழவரும், அவருடைய மனைவியும் மரணத்தைப் பற்றி சிந்திப்பதே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொள்கிறார்கள். தங்களின் தேவைக்கு யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. தினமும் ஒரு நேரம் மட்டுமே ரேஷன் அரிசியை சமைத்து இரண்டு வேளைக்கு சாப்பிடுகிறார்கள். பல நாட்களில் வயதான வயிறு ஒத்துழைக்க மறுக்கிறது. உண்ட உணவை செரிக்க முடியவில்லை. தினமும் குறைந்த அளவே உண்ணுகிறார்கள். உடலில் உயிரையும், ஆன்மாவையும் வைத்திருப்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டிற்காக அவர்கள் ஏங்கியதே இல்லை. அக்கம், பக்கத்து குடித்தனக்காரர்கள் அவர்களை பொறாமையோடு பார்ப்பார்கள். இந்த வயதான காலத்திலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? வெளியூர்களில் வசிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவில்லையே, பராமரிக்கவில்லையே எனற கவலைகள் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் இந்த கிராமத்திற்கு வந்து நமது முன்னோர்கள் கட்டிய இந்த வீட்டில் தங்கிச்செல்லலாம் என்று பிள்ளைகளிடம் கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகளுக்கு தந்தியோ, தகவலோ கொடுப்பதில்லை. ஆனால் கிழவிக்கு முதுமைக்கால புலம்பல்கள் அவ்வப்போது வரும். பெண்கள் எதற்காக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்? பெற்றோர்களை முதுமைக் காலத்தில் கவனித்து பராமரிப்பதற்குத்தானே…என் பிள்ளைகள் எனக்கு கடிதம் கூட எழுதுவதில்லை. இப்படியான பேச்சு வரும்போதெல்லாம் கிழவர் சட்டென்று சொல்லிவிடுவார்;. எந்த மனிதனும் எவரையும் காப்பாற்ற முடியாது. கடவுள் மட்டுமே நமக்கு நல்லது செய்ய முடியும் என்பார். அவரவர்க்கு ஏராளமான சொந்த பிரச்சனைகள். நமது பிள்ளைகளுக்கும் அப்படித்தான். அவர்கள் நமக்கு கடிதங்கள் எழுதுவதாலேயே நம்முடைய பிரச்சனைகள் மறைந்துவிடுமா? பிள்ளைகளைப் பற்றி தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பது தாய்மார்களுக்கு. வாடிக்கையாகிவிட்டது. அவர்களெல்லாம் நம்மைப் பார்க்க வந்து தங்கிவிட்டால், உன்னால் சமாளிக்க முடியாது. பத்துப் பனிரெண்டு தட்டுகளுக்கு உன்னால் சமைத்து பரிமாற முடியுமா? அவர்கள் எப்போது விரும்புகிறர்களோ அப்போது வந்து பார்க்கட்டும். சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. இதைக் கேட்டதும் பாட்டிக்கு பல்லில்லா வாயில் கனிவான புன்னகை பூக்கும். கண்டிப்பு கலந்த வார்த்தைகளை கணவன் உச்சரித்தாலும் அதில் ஒரு ஈர்ப்புத் தன்மை இருக்கும். சில நேரங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதற்காக அவள் புலம்பினாலும், கணவன் அவளை அதட்டி கட்டுப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதாகி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி, தம்பதிகள் முதுமையாகி தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வரும் இந்த வீடு பழமையானாலும் கம்பீரமாக நிற்கிறது. பொலிவுடன் தொன்மையான மரபின் அடையாளமாகத் திகழ்கிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஒரு பிரமாண்டத்தை அளிக்கிறது. மனிதருக்கு வீடும், உலகமும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. தனித்துவமாகவும் இருக்கிறது. சிலருக்கு வீட்டிற்கும், உலகிற்கும் பெரிய இடைவெளி உள்ளது. வீடு உங்களை எளிதாக அங்கீகரித்தாலும், உலகம் உங்களை எளிதில் அங்கீகரிக்காது. வீடும் அங்கீகரித்து, உலகமும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. உலகிலேயே வீடுதான் மனிதனுக்கு பாதுகாப்பானது. வீடு என்பது வெறும் சுவர்கள் அல்ல. அது வாழ்வின் அடையாளம். முதுமையை கழிப்பதற்கு பாதுகாப்பான இடம் வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர்களது உடம்பு முதுமையாகி தளர்ந்து விட்டது. முதுமை அவர்களுக்கு சுமையாகிப் போனது. சிரமமும், வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்கள் தூசிக்குள்ளும், சிலந்தி வலைக்குள்ளும் அடைந்து கிடக்கிறார்கள். இருந்தும் தங்களைத் தாங்களே மென்மையாகப் பாதுகாத்துக்கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். அண்மைக் காலமாக முதியவர் உடம்பு கூன் விழுந்து பலவீனமாகி, முதுமைக்கால தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. கட்டிலில் இருந்து இறங்கக் கூட யாரேனும் கைத்தாங்க வேண்டிய காலத்தில் புரிகிறது அவளுக்கு நானும், எனக்கு அவளும்தான் கடவுள் என்பது. முதலில் பிறந்த மனிதன் பழையது ஆகிறான். பின்னால் பிறந்தவன் புதியவனாகிறான். ஆனால் ஒவ்வொருவரும் பழமையாகி, பயனற்றதாகி விடுகிறார்கள். இந்த முறையும் லீவுக்கு வரமுடியாதுன்னு தபால் வந்திருக்கு. ஒரு தடவையாவது அவன் வந்து பார்க்கக் கூடாதா என்று கிழவி கேட்டதற்கு, கிழவர் அமைதியாய் பதிலளித்தார். ஒருவன் பழையவர்களை அழைத்துச் செல்ல வருவான். யார் அவன்? அவன் புதியவற்றை வளரவிட்டு, பழமையாக்குபவன்;. நம்மை அழைத்துச் செல்ல எப்போது வேண்டுமானாலும் வரட்டும். அவள் நெற்றியைத் தடவிக்கொண்டே கூறினார். லௌகீக வாழ்வுக்கு தேவைப்படும் உதவி எங்கிருந்து கிடைக்கிறதோ அந்தப் பருப்பொருள்தான் கடவுள். ************* எழுதியவர் : ✍🏻 மாதா @ மே-பா மா.தங்கராசு சிஐடியு தேனி மாவட்ட கைத்தறி சங்க செயலாளர் 75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி ஆண்டிபட்டி- அஞ்சல் 625512 தேனி- மாவட்டம் https://bookday.in/muthumai-tamil-short-story-written-by-matha/
  39. சம்பந்தனை... செத்த பிறகுதான் தமிழ்ச் சமூகம் மறந்தது... ஆனால், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானத்தை... உயிரோடு இருக்கும் போதே, தமிழ்ச் சமூகம் மறந்து விட்டது.
  40. அவர் தம் மக்களுக்கு எல்லாம் செய்தார் . ........... தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் .......... நினைவில் வைத்திருப்பதற்கு .......! 😒
  41. சம்பந்தன் மறைவுடன் அவர் வரலாறுகளும் மறைந்து / அழிந்து விட்டது. ( ஏதாவது நல்லது செய்தால் தானே பெயர் நிலைத்து நிற்க) இது இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். ஆண்டவரே! சம்பந்தனின் அதிசய கண்டு பிடிப்பான சுமந்திரன் தெளிவு பெற்று உணர்வாராக.....
  42. அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁
  43. சாத்தான்... நான் கொண்டு வந்த பொருட்கள்.... மிளகாய்த்தூள், அரிசி மா, ஓடியல்மா, புழுக்கொடியல், பினாட்டு, வடகம், மோர்மிளகாய், மாசிக் கருவாடு, பாரைக் கருவாடு, இறால் கருவாடு, கட்டா சம்பல், இறால் சம்பல், பயத்தம் பணியாரம், பருத்துறை வடை, மிக்சர், காராசேவ், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், பொரித்த கடலை, மில்க் ரொபி, கோகனட் ரொபி, கல்பணிஸ், எள்ளுருண்டை, பொரித்த கடலை, தொதல், மஸ்கற், குளுக்கோரச, தோடம்பழ இனிப்பு, பல்லி முட்டை இனிப்பு, இராசவள்ளிக் கிழங்கு, கரணை கிழங்கு, முருங்கக் காய், தாமரை கிழங்கு, கோகிலா தண்டு, லாவுளு பழம், ரம்புட்டான், மங்குஸ்தான், கருவேப்பிலை, திருநெல்வேலி சந்தையில் வாங்கிய சின்ன வெங்காயம் போன்றவையுடன் சில பருத்தி உடைகள் மட்டுமே. 😂
  44. புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.