Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31956
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/21/25 in all areas

  1. மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சரோஜா சாவித்திரி போல்ராஜ் முன்மொழியும் திட்டங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான விடயங்களாக இருக்கின்றன. இன்றே இவற்றை முன்மொழிந்து சட்டங்கள் ஆக்கினால், இனிவரும் காலங்களில் இவை பயன்களைக் கொடுக்கும். ஒரு மரத்தை நடுவது போல. ஆண்களால் சிலவற்றை சீரணிக்க முடியாமலேயே இருக்கப் போகின்றது. மனங்களை விசாலமாக்கி, இவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கிருக்கும் ஒரே வழி. சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். கனடாவில் ஓரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் ஒரு திருமண விழாவாகவே நடந்தது. ஆனால் சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு மிகப் பெரியது. ஆண்களின் எதிர்ப்புக் குரல்களே அதிகமாக இருந்தன. நாங்கள் அப்படியே அங்கங்கே தேங்கி நின்று விட்டோம் என்று தோன்றியது. ஆனால் காலம் தேங்கி நிற்பதில்லை, பின்னுக்கும் போவதில்லை. நாங்கள் தான் ஓடிப் போய் பிடிக்கவேண்டும். அந்த திருமணத்தில் நான் உணர்ந்த ஒரு விடயம்: அந்த இரு பெண்களுக்கும் உலகெங்கும் இருந்து எம் பெண்கள் கொடுத்த ஆதரவு. பிறப்புச் சான்றிதழில் ஏன் ஆணின் பெயர் அவசியமில்லை என்பதற்கான தேவைகளில் இதுவும் ஒன்று.
  2. பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது 21/07/2025 டென்மார்க்கைச் சேர்ந்த ஐங்கரன் சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த அருணேஸ் கணேஸ்குமார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள், பிஸ்கற் வழங்கப்பட்டது. இருவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வாழ்த்துகிறோம். இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடத்திய செயலாளர் திரு த.மோகன்றூபன் (PHI) முன்னாள் உபசெயலாளர் திரு இ.சிறிதரன் (அதிபர்) ஆகியோருக்கு எமது நன்றிகள். மேலும் இந்நிழவுக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் திரு இ.சிவகுமார் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் இது போல உதவிகள் வழங்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். T.P : +94 77 777 5448. ஒளிப்பதிவு திரு த.மோகன்றூபன்.
  3. ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.
  4. இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.
  5. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். சாலமன் பாப்பையா விளக்கம்: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ. வேறு எது இல்லாவிட்டாலும்….எம் ஜி ஆரிடம் இந்த விடயத்தில் வள்ளுவன் சொன்ன நல்லாண்மை இருந்துள்ளது தெளிவு.
  6. பைத்தியமாக இருந்தாலும் அவர்களை நம்பவைத்து திரள்நிதியில் வெற்றிபெற்றுவிட்டது பைத்தியம் சீமான் வந்தால் கள்ளும் உணவாகும் உணவுகள் நஞ்சாகும்
  7. 👍 சூரியனுக்கு டோர்ச் அடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை 🤣. ஆகவேதான் இதை பிற்சேர்த்தேன்👇. 🙏 அருள்நிதியின் படங்கள் பார்த்ததில்லை ஆனால் அவரின் முரட்டு மனேரிசம் பேட்டிலளில் பார்க்க வினோதமாயும், கவரும் விதமாயும் இருக்கும். 80,90 கிராமத்து ஹீரோக்கள் போல நடந்து கொள்வார். ஆனால் சிட்டி போய் என நினைக்கிறேன்.
  8. 👍.................. அருள்நிதியின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு, மு க குடும்பத்தில் இவர் யார் என்று தேடி நீங்கள் சொல்லியிருக்கும் தகவலை பார்த்திருக்கின்றேன். அதே போலவே சமீபத்தில் முரசொலி செல்வம் மறைந்த பொழுது அவர் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தன. பெரிய ஒரு குடும்பமே................
  9. நானும் குடித்திருக்கேன்… குடிப்போனை பார்த்திருக்கேன்… நல்ல புத்தி வருவதில்லை குடியிலே… ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே… -கண்ணதாசன்- குடியால் வீழ்ந்த மு.க.முத்து.. ஊற்றி கொடுத்து கெடுத்தது ‘இந்த’ நடிகரா? அந்த நடிகையின் தாத்தா ஆச்சே! Rajkumar RUpdated: Sunday, July 20, 2025, 13:26 [IST] சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து நேற்று மரணம் அடைந்தார். அரசியல் திரை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் எம்ஜிஆருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட மு.க.முத்து, வீழ்ந்தது குடிப்பழக்கத்தால் தான் எனவும், அவருக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே அவரது உறவினரான பிரபல நடிகர் எனக் கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமது. ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாகவே உடல் நல கோளாரால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இதை அடுத்து மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அடுத்த எம்ஜிஆர், அடுத்த கலைஞர் என அரசியல் வாரிசாகவும் கலைவாரிசாகவும் பார்க்கப்பட்ட மு.க.முத்து குடிப்பழக்கத்தால் வீழ்ந்தார். இந்த நிலையில் தான் ஏன் அப்படி ஆனேன் என்பது குறித்து பிரபல பத்திரிகையாளரான இர்ஷாத் அகமதுவிடம் தெரிவித்திருக்கிறார் மு.க.முத்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூருக்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் இர்ஷாத் அகமது, முக முத்துவை பேசுயிருக்கிறார். அப்போது பேசிய அவர்," சென்னையில் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்ததால் திருச்சியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் அங்கும் ஒழுங்காக படிக்கவில்லை. எனது அப்பாவை போலவே நானும் பத்தாம் வகுப்பில் பெயில். ஆனால் அவர் போராடி ஜெயித்தார். நான் தோற்றுவிட்டேன். Recommended For You என்னை வாழ்க்கையில் முன்னேற வைக்க வேண்டும் என அப்பா முயற்சி செய்தார். ஆனால் நான் பேச்சை கேட்டு நடக்கவில்லை. சினிமாவில் என்னை எம்.ஜி.ஆர் போல் ஆக்க வேண்டும் என அப்பாதான் கொண்டு வந்தார். அந்த முதல் படம் பிள்ளையோ பிள்ளை. அந்த படத்தை தொடங்கி வைத்ததே பெரியப்பா எம்ஜிஆர் தான். அப்பாவின் பேச்சை கேட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென பெரியப்பா எம்ஜிஆர் அடிக்கடி சொல்வார். ஆனால் நான் கேட்கவில்லை. அவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அரசியல் என்னையும் என் அப்பாவையும் பெரியப்பாவையும் பிரித்து விட்டது. குடி என் வாழ்வையே திருப்பிப் போட்டுவிட்டது. நடிகர் ரவிச்சந்திரன் தான் ( நடிகை தன்யாவின் தாத்தா) முதன் முதலில் எனக்கு தண்ணீ அடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்கள் உறவினர். அவர் எனக்கு மாமா முறை வேண்டும். முதன் முதலில் அவர் கற்றுக் கொடுத்த பிறகு தினமும் குடிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது. அதே நேரத்தில் அப்பா உள்ளிட்ட யாருமே என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை" எனக் கூறியிருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/m-k-muthus-life-tragedy-how-actor-ravichandran-introduced-him-to-alcohol-721905.html
  10. 9 கிலோ சங்கிலியை போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகின்ற ஆள் என்றால்... மண்டை பழுதான ஆளாக இருக்க வேண்டும். 🤣 அதுசரி... இவர் போட்டிருந்த துலா கயிறு போன்ற அந்த யானை கட்டுகின்ற சங்கிலியை... அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரும் கவனிக்காமாலா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய உள்ளே அனுப்பியவர்கள். @ஈழப்பிரியன் இது உங்க ஏரியா. 😂 இதை... ட்ரம்ப் ஐயா கேள்விப்பட்டால், ரொம்ப கடுப்பாகப் போகின்றார். 😜
  11. அண்ணை எனக்கொரு சந்தேகம், வவுனியா சென்று வந்த நம்ம ஊரவர்கள் எல்லோரும் சலக்கடுப்புக்கு ஏற்பட்டதாக கூறுவார்கள், அது ஏன்? கொதித்து ஆறிய நீரைப்பருகினால் வருவதில்லையாம். நன்றி அண்ணை. 2015 முன்பே மக்கள் குடிநீர் அள்ளும் கிணறுகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஈகோலி அளவு கூடுதலாக இருப்பதால் அடிக்கடி குளோரின் கலப்பார்கள். எதனால் ஈகோலி அளவு கூடுதலாக இருக்கிறது என வினவியபோது சுண்ணக்கற்பாறைகளூடாக கசிந்து கிணற்று நீரை அடைவதாகவும் யாழில் உள்ள எந்த கிணறும் தப்பவில்லை என்றும் கூறினார்கள். முதல் இரண்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, கல்சியச் செறிவு யாழ்ப்பாணத்தவர்களுக்கு பழகிய ஒன்றே. மலசலக்கூட குழிகள் மண்ணுக்குள் கலக்கும் வகையிலேயே உள்ளன. இப்போது இறுக்கமான சட்டம் இருந்தாலும் பொதுச்சுகாதார பரிசோதகர் பரிசோதித்து சென்றபின் கிடங்கின் உள்ளே உடைக்கிறார்கள்.
  12. நீர் உவராதல், சலக்கடுப்பு/சிறு நீர் கடுப்பு, கிணற்று நீரின் குடிக்கும் தகுதி, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். நீர் உவராதல் என்பது கடல் நீரின்/பாறைகளின் உவர்த்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக நன்னீர் நிலைகள், கிணறுகளுக்குள் பரவுதல். இது இலங்கை போன்ற சிறிய தீவுகளில், கடலுக்கு அண்மையில் இருக்கும் நீர் நிலைகளில் நிகழக் கூடியது. இது நிகழும் வேகம் மட்டுமே வேறுபடும். உதாரணமாக, உள்நாட்டு யுத்த காலத்தில் எரிபொருள் தட்டுப் பாட்டினால் வடக்கில் கிணறுகளை இறைக்கும் செயல்பாடுகள் குறைவாக இருந்தமையால், அந்தக் காலப்பகுதியில் ஒரு அவகாசம் ஏற்பட்டு நீர் உவராதல் தாமதமாகி இருக்கலாம். இப்போது அந்த வேகம் அதிகரித்திருக்கலாம். இதை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தள்ளிப் போடலாம், முற்றாக இல்லாமலாக்க இயலாது. சலக்கடுப்பு என்பது எங்கள் உடல் நீரைச் சேமித்து முக்கிய தேவைகளுக்காக பத்திரப் படுத்தும் போது, சிறு நீர் வெளியேறும் அளவு குறைவதால் சிறு நீர் வெளியேற்றும் பாதைகளில் ஏற்படும் வலி. இது நீரிழப்பின் (dehydration) ஒரு தற்காலிக அறிகுறி. இதற்கும் நீரில் இருக்கும் கல்சியத்திற்கும் தொடர்பில்லை. இலகுவான தீர்வு, ஒரு தேக்கரண்டி சீனியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இந்த சீனி கலந்த தண்ணீர், குடல் நீரை உறிஞ்சிக் கொள்ள உதவுவதால் உடல் சாதாரண நிலையை உணர்ந்து சிறு நீரை வெளியேற அனுமதிக்கும். சலக்கடுப்பும் நீங்கும். சலக்கடுப்போடு நீரில் இருக்கும் கல்சியத்திற்குத் தொடர்பில்லா விட்டாலும், குடி நீரில் கல்சியம் இருந்தால் சிறு நீரகக் கல் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கல்சியம் அதிகரித்த குடிநீர் தீங்கற்றது என்று சொல்ல முடியாது. ஒரு கிணற்று நீரின் குடிதண்ணீர் தராதரம் அப்படியானால் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? மேற்கத்தைய நாடுகளில் கிணற்று நீர் சில பகுதிகளில் குடிநீராக இருக்கிறது. அங்கே, குடி நீரில் இருக்கும் வயிற்றோட்டம் தரக் கூடிய பற்றீரியாக்களின் அளவு (Coliform count), கல்சியம், புளோரைட் போன்ற கனியுப்புக்களின் அளவு, என்பவற்றுடன் தீங்கு தரும் இரசாயனங்களின் அளவுகளும் பரிசோதிக்கப் படும். இவற்றை எப்படி நாம் சிறி லங்காவில் பயன்படுத்தலாம்? நகரப் பகுதிகளில் கிணற்றிற்கும், septic tank (?) எனப்படும் மலசலக் குழிக்குமிடையிலான இடைவெளி குறைந்து வருகிறது என்கிறார்கள். இதனால், நகரக் கிணறுகளின் தண்ணீரை நிச்சயம் Coliform count செய்து தரத்தை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். எங்கள் நாட்டில் பாரிய தொழிற்சாலைகள் இல்லாமல், விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதனால், விவசாய உரங்களில் இருந்து வரும் கழிவுகள், நைற்ரேட் போன்றவை, பரிசோதிக்கப் பட வேண்டும். நகரங்களுக்கு வெளியே இருக்கும் கிணறுகளுக்கு இந்த உரக்கழிவுப் பரிசோதனைகள் முக்கியமாக இருக்கும். எனவே, கிணற்று நீரைக் குடிக்கலாமா என்ற கேள்விக்குப் பதில், வடக்கைப் பொறுத்த வரை 1. பற்றீரியாக்களின் செறிவு. 2. உரக்கழிவின் செறிவு 3. கல்சியத்தின் செறிவு ஆகிய 3 காரணிகளில் தங்கியிருக்கும் ஒரு பதில்.
  13. முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே. அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள். நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. (உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்). இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே. ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது. இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக. செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன? தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான். Vs அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான். வேறவாய் vs நாறவாய் 🤣 இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣
  14. பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌
  15. எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் . ......... ! 😍
  16. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு July 21, 2025 10:50 am வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/annual-festival-of-nallur-kandaswamy-temple/
  17. வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (21) இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காடில் வசிக்கும் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும். https://athavannews.com/2025/1439950
  18. "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம் 21 Jul, 2025 | 10:53 AM கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக, தேசிய சமாதான பேரலை எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில் இதணை நாம் முன் எடுக்க உள்ளோம். எமது மாதாந்த அமர்வு மற்றும் பல்வேறு வகையான செயலமர்வுகளில் நாம் சகோதர இனம் என்ற சொல்லையே பயன் படுத்துகிறோம். பெரும் பான்மை, அல்லது சிறுபான்மை என்ற பதங்களைப் பயன் படுத்தும் போது ஒரு இனத்தை உயர்த்துவது போன்ற மன நிலையும் மற்றும் ஒரு இனத்தை தாழ்த்துவது போன்ற மன நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம் சகோதர இனம் என்று கூறும் போது சகோதர உணர்வு ஏற்படுகிறது. எனவே அத்தகைய சொற்பிரயோகத்தை பிரபல்யப்படுத்தும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகிறோம். அதில் ஒன்றாகவே மேற்படி ஸ்டிகர் போராட்டமும் அமைந்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220516
  19. பெயரை மாற்றி வைத்தால் மட்டும் போதாது. சகோதர இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் மாறவேண்டும்.
  20. ஒரிஜினல் தமிழன் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக இருந்த போதே தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று இருக்குதெண்டால்......பிரச்சனை வேறை எங்கையோ இருக்குது எண்டு அர்த்தம். அடுத்தது தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்களும் கட்சிகளும் நிறையவே இருக்கின்றனர்/இருக்கின்றன. அவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.எனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் மீதும் வஞ்சத்தை தீர்க்கும் மனப்பான்மையை நான் தவிர்க்கின்றேன். அத்துடன் நாம் எப்படி அவர்கள் மீது வன்மத்தை தெரிவிக்கின்றமோ அதே மாதிரி அவர்களும் வன்மத்தை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழகத்திற்கான ஈழத்து சுற்றுலா பயணிகள் இந்திய விமான நிலையங்களில் பட்ட அவலங்களை தேடிப்பிடித்து வாசியுங்கள் .யூ ரியூப்பில் உள்ள காணொளிகளை பார்த்து தெளிவடையுங்கள்.
  21. சரியான நிலைப்பாடு ஆனால் வசன அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக இந்தியக் கடற்கொள்ளையர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்!
  22. நான் செய்த பூஜாபலன் ............ ! 😍
  23. இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள். ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை. இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன். சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள். இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள். அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள். அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.
  24. ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா ......... ! அழகான வில்லனும் (நம்பியார் ) அழகிய ராட்சசியும் (எம் . என் . ராஜம் ) கனிவுடன் பாடும் ஜோடிப்பாடல் ....... கண் மூடி ரசிக்கையில் விண்மேவிச் சிறகடிக்கும் நினைவலைகள் .........! 😍
  25. 3) வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவுவதற்காக திரு கந்தையா சிவராசா (சுழிபுரம் கிழக்கு) பிரான்ஸ்) குடும்பத்தினர் 25000 ரூபாவை திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 104970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  26. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் .......... ! 😍
  27. பட மூலாதாரம்,@GOOGLE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன. கட்டுரை தகவல் சாரா இப்ராஹிம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது. உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா? ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது? சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன். ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர். கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது. 10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது. ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை. இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ. 2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. "நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார். ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன. கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன. இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது. ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம். அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது. ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன. பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும். 2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது. இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது. இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம். வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்? சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது. ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது. சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார். நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன. அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது. மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது. குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா? உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார். மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன. தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ? ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது. ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார். பட மூலாதாரம்,META படக்குறிப்பு, சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார். பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார். "நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்." "நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன? கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார். நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது. ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் . - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdjxpg7x22lo
  28. "பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற் போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப் பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள்” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை யொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சிக்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  29. அவலத்தை விவிலியம், சிலம்பு, கலித்தொகை என்று கலந்து அளித்த தங்களின் சான்றாண்மையை எடுத்து இயம்புதல் எளிதன்று. தங்களின் சொல்லாட்சியிலும், கருத்துச் செறிவிலும், அவற்றின் வழி கடத்தப்படும் அவலச் சுவையிலும் அசைவற்ற சிலையாகிறோம்.
  30. இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.
  31. சொல்லத்தான் வந்தேன் தேவையில்லை என்றாகி விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அன்று அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது, இன்று அது அப்படி நடந்திருக்காவிட்டால் இன்று இதை தவிர்த்திருக்க முடியாதுஎன எண்ணத் தோன்றும். அன்று உண்மை தெரியாமல் தவித்த உள்ளம் இன்று அது வெறும் தந்திரம் என தெளிவடைகிறது. நாம் ஒரு நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறோம், காலம் தன் நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறது. அறியப்படாத உண்மையுமில்லை, வெளிவராத ரகசியமுமில்லை. அன்று காதோடு காதாக பேசியது, இன்று கூரை மீதிருந்து அறிவிக்கப்படுகிறது. நேற்று தீயாகி எனப்பட்டவன் இன்று துரோகம் வெளிப்பட்டு நிற்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.