Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87988
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    7044
    Posts
  4. நியாயம்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    2137
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/27/25 in all areas

  1. அது மட்டும் இல்லை அதுக்கு மூளையே கிடையாது ஒன்றில் தூதுவர்களை தனியாகத்தான் சந்திப்பார் காரணம் பிட்டுகேடுகள் வெளியாலை தெரியகூடாது . இந்த முஞ்சுஉறு லண்டனில் தான் கறுப்பு கண்ணாடி காருக்குள் ஒளித்து திரியுதாம் வெளியில் வந்தால் தமிழ் சனம் கலைத்து கலைத்து கோவணத்தையும் உருவி அடி போடும் .
  2. இப்படியல்லாம் படித்திருக்கிறான் , கணக்கு வாத்தியாருக்குத்தான் ஒன்னும் புரியல்ல ....... பெயிலாக்கிப் போட்டார் ....... ! 😀
  3. நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது. மேலே குறிப்பிட்ட மண் அகழ்வுக்கான அனுமதியை வைத்திருக்கும் அம்பனில் உள்ள தனி நபர்தான் இங்கு ஏதோ சுத்துமாத்து செய்கிறார் போல் தெரிகிறது. கோவில் விவகாரங்களில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றவேண்டும் என்றுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். இப்போது நடந்து முடிந்ததை விட்டு அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு தேவையான மண்ணை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகமும் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து சுமுகமான தீர்வொன்றை காணவேண்டியது மிக அவசியம்.
  4. அதே.👍 வேறு எந்த சிதம்பர ரகசியமும் இல்லை. சம்பந்தனிடம் சாணக்கியமாவது சாணகமாவது.
  5. சம்பந்தன் மாதிரி…. நாத்தம் பிடிச்ச வேலை செய்யக் கூடாது என்றுதான், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் சுத்துமாத்து சுமந்திரனுக்கு மக்கள் நாமம் போட்டு, வீட்டில் குந்த வைத்திருக்கின்றார்கள். 😂 🤣
  6. ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால் அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.
  7. கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டம் அறிமுகம் 24 July 2025 கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, ஜூலை 23 ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார்: * கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம்: "ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார். * க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். * அமுலாக்கத்தின் தொடக்க நிலை: 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். * வகுப்பறை மாணவர் எண்ணிக்கை: ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன. கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். * ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். * முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள்: முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். * ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஊடகப் பிரிவு https://tamil.news.lk/current-affairs/kalviyai-alavitum-parampariyap-paritcai-muraikku-marraka-tokuti-murai-module-kalvit-tittattai-arimukam
  8. அப்படியே இலவசம் என்று போட்டு விடலாமே... இனி எந்த நாடு தான் பாக்கி???
  9. சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் அரசியல் ஞான சூனியங்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂
  10. கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍
  11. கள் உட்பட எதையும் அருந்தாமல் விட்டாலும் ஒரு வாரத்தில் அது மாறி விடும் என்பது தான் உண்மை!
  12. எம்மீதான இனவழிப்பிற்கெதிராகச் சர்வதேசத்தில் எந்த நாடும் செயற்படுவதை எப்படி இந்தியா தடுத்து நிறுத்தியதோ அதனையே இன்று பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பினை பிரான்ஸ் அல்லது அதே நிலைப்பாட்டினையுடைய பிற நாடுகள் நிறுத்த முயன்றாலும் அமெரிக்கா முன்னின்று அவற்றையெல்லாம் தடுத்து வருகிறது. முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்ட நேரடியான தாக்குதல்கள் மூலமான படுகொலைகள், பட்டிணியினூடான படுகொலைகள் போன்று பலஸ்த்தீனத்தில் திட்டமிட்டே இஸ்ரேல் அழிக்கிறது. 2009 சிங்கள இனவாதத்தினைக் கையிலெடுத்து, தனது சந்ததியின் அரசியல் இருப்பிற்காக தமிழினவழிப்பினை மேற்கொண்ட மகிந்தவைப்போல, தனது அரசியல் ஆதாயத்திற்காக கடும்போக்கு யூதர்களைக் கூடவைத்துக்கொண்டு நெத்தன்யாகு பலஸ்த்தீன இனவழிப்பை நடத்தி வருகிறான். இன்று நடக்கும் இனவழிப்பினைத் தடுப்பதற்கு பிரான்ஸ் மட்டுமன்றி ஏனைய நாடுகளும் பலஸ்த்தீன தேசத்தை அங்கீகரிக்க முன்வர வேண்டும். இஸ்ரேலின் போரிற்கான அமெரிக்க ஆதரவினைத் தளர்த்த இன்னும் பல நாடுகள் பிரான்ஸைப் பிந்தொடர வேண்டும்.
  13. வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!
  14. வேற என்ன. அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம். அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.
  15. நான் பஸ் லைன்சன்ஸ் எடுத்ததை அந்த காலத்தில் செய்தியா போட்டிருக்கலாம், வட போச்சே🤣
  16. `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு சுகன்யா பழனிச்சாமி 1 Min Read `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Published:28 Mar 2018 4 PMUpdated:28 Mar 2018 4 PM `பால் உற்பத்தியில் முதலிடம்...ஆனால்?' - அதிர்ச்சியளித்த ஆய்வு முடிவு Join Our Channel 1Comments Share உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்து வரும் இந்தியாவில், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இந்தியாவின் பால் உற்பத்தியானது, கடந்த 1991-1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி குறித்து, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 1992ம் ஆண்டில் 55.6 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2016-2017ம் ஆண்டில் 165 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும், 2015ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா- 95 மில்லியன் டன், சீனா - 43 டன், பாகிஸ்தான் - 42 டன் மற்றும் பிரேசில் - 32 டன் பால் உற்பத்தி செய்துள்ளன. இந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும், இந்தியாவில் பால் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் பஞ்சாப், அடுத்தடுத்த இடங்களில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், பால் உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தபோதும், சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் பால்கூடக் கிடைக்கப் பெறாத நிலைதான் உள்ளது. இதிலும், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான், ஒரு நபருக்கு தினசரி 500 கிராம் அளவிலான பால் கிடைக்கப்பெறுகிறது. நாட்டின் பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 4.57 சதவீதம்:
  17. இந்த வசந்திதானே டக்கியின் தயவுடன் துணைவேந்தராக வந்தவ?
  18. வழக்குக்குத் தொடர்பில்லாத தீர்ப்பாக இருக்கலாம். உடனே நடைமுறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல் இருக்கலாம். ஆனாலும் சரியான நிலைப்பாடு எது என்பது மக்கள் சமூகத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படத்தானே வேண்டும் ? குறிப்பாக, தமிழினத்திற்கான நல்லதொரு கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.
  19. காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை, மேலும் ஒன்பது பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் போர் தொடங்கியதிலிருந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது. காஸாவிற்குள் உதவிப் பொருட்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் இஸ்ரேல், 'உதவிப் பொருட்கள் காஸாவிற்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஹமாஸே பொறுப்பு' என்று கூறுகிறது. வரும் நாட்களில் வெளி நாடுகள் காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை வீச அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை, உதவி பொருட்களை கொண்டு செல்வதற்கு திறனற்றது என்று உதவி நிறுவனங்கள் முன்பே எச்சரித்திருந்தன என இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜோர்டானும் பொருட்களை வீசும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், தங்கள் ராணுவம் இன்னும் இஸ்ரேலிடமிருந்து அனுமதி பெறவில்லை என்று ஜோர்டானின் ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS காஸாவிற்குள் வான்வழியாக உதவிப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் வழங்கியுள்ள அனுமதியை, ''மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி'' என்று ஐ.நா விமர்சித்துள்ளது. காஸாவில் மனிதாபிமான நிலைமைகள் மோசமடைந்து வருவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், "உடனடியாக காஸாவிற்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் நீக்க வேண்டும்" என்று வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தின. "காஸாவில் நடைபெற்று வரும் மனிதாபிமான பேரழிவையும்", போரையும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர். மேலும், இஸ்ரேல் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தனது கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றும் கூறியுள்ளனர். "பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய உதவிகளை தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "சர்வதேச சமூகத்தில் பலர் காட்டும் அலட்சியம், இரக்கமின்மை, உண்மையின்மை, மனிதாபிமானமின்மை ஆகியவற்றை விளக்க முடியவில்லை" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார். அம்னஸ்டி இன்டர்நேஷனல் உலக சபையில் உரையாற்றிய அவர், மே 27 முதல் உணவு பெற முயன்றபோது 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF), ஐ.நா. தலைமையிலான அமைப்புக்கு பதிலாக உதவி பொருட்கள் விநியோகம் தொடங்கிய பின்னர் நடந்ததாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,EPA 2025 மே மற்றும் ஜூன் மாதங்களில் காஸா மனிதாபிமான அறக்கட்டளையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர், "கேள்விக்கு இடமின்றி... போர்க்குற்றங்களை நேரில் கண்டேன்" என பிபிசியிடம் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். உணவு விநியோகம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் நேரடியாக வெடிமருந்துகள், பீரங்கி, மோட்டார் குண்டுகள் மற்றும் டாங்கி மூலம் தாக்குதல் நடத்தியதை பார்த்ததாக அந்தோனி அகுய்லர் கூறினார். "என் பணிக்காலத்தில் எங்கும், பொதுமக்களுக்கு எதிராக இவ்வளவு கடுமையான, தேவையற்ற, மற்றும் கண்மூடித்தனமான வன்முறையை நான் பார்த்ததில்லை. ஆனால் காஸாவில், ராணுவம் மற்றும் அமெரிக்க ஒப்பந்த நிறுவனங்களின் கீழ் பணியாற்றியபோதுதான், இதுபோன்ற கொடூரத்தை நேரில் அனுபவிக்க நேரிட்டது" என்று ஓய்வுபெற்ற அந்த வீரர் கூறினார். "ஒரு மாதத்திற்கு முன்பு தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்ட, அதிருப்தியடைந்த முன்னாள் ஒப்பந்த வீரரரிடம் இருந்து வந்த கூற்றுகள்" எனக் கூறி, "அவை முற்றிலும் தவறானவை" என்று காஸா மனிதாபிமான அறக்கட்டளை அவரது கருத்தை மறுத்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை கத்தாரில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு, புதிய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹமாஸ் "உண்மையில் ஒப்பந்தம் செய்வதை விரும்பவில்லை" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன்," என்றும் கூறினார். அமெரிக்காவின் இந்தக் கருத்துக்களைக் குறித்து ஹமாஸ் ஆச்சரியம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடிந்து போய்விடவில்லை என்று மத்தியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு தோஹாவுக்குத் திரும்புவார்கள் என ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் காஸா நிருபரிடம் தெரிவித்தார். 2023 அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் தலைமையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் காஸாவில் போரைத் தொடங்கியது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காஸாவில் 59,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் காஸாவில் உதவிப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை, இஸ்ரேல் முற்றிலுமாகத் தடுத்தது. பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான தனது ராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கி, இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. மீதமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க, ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியது. பஞ்சம் ஏற்படப் போவதாக, உலகளாவிய நிபுணர்கள் எச்சரித்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இஸ்ரேலின் நடவடிக்கை ஓரளவு தளர்த்தப்பட்டாலும், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது. காஸாவைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 90% க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவோ, அல்லது அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பாலத்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக, பிரான்ஸ் வியாழன்று அறிவித்தது. இந்த முடிவு இஸ்ரேலையும் அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவையும் கோபப்படுத்தியது. அடுத்த நாள், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதி, பிரிட்டனும் பிரான்சை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்பதை ஸ்டார்மர் உணர்த்தியுள்ளார். இது "இஸ்ரேலுடன் பாலத்தீன நாட்டை உருவாக்கும் இரு நாடு தீர்வின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v3xpl227zo
  20. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை முருகானந்தன் தவம் இலங்கை வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் கொளுந்து விட்டெறிந்த தமிழர் சொத்துக்களும், இதயங்களை உறைய வைத்த கொடூர தாக்குதல்களும் உயிருடன் கொளுத்தப்பட்டவர்களின் கதறலும், காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை தலைநகர் வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? வருடத்தின் 12 மாதங்களில் ‘கறுப்பு ஜூலை’யாக தமிழர் குருதி குடித்த மாதமாகத் தமிழர் மனங்களில் ஆழமாகவும் ஆறாத ரணமாகவும் பதிந்துவிட்ட அந்த தமிழினப் படுகொலை நடந்து ஜூலை 23ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடையாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் சிங்களக் கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்ட, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும். தமிழ் மக்­க­ளுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளினதும் ஆசிர் வா­தத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட இனக் கலவர வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை இனக்கலவர படுகொலைகள் அரங்­கேற்­றப்­பட்­டன. 1983 ஜூலை 23, 24, 25, 26 ஆகிய தினங்களில் திட்டமிட்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலை இலங்கைத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக, தீராத வலியாகக் கனன்று கொண்டிருக்கின்றது. இந்த ஜூலைக் கலவரம் நடந்தேறி 42 வருடங்கள் கடந்து விட்டாலும் அது தமிழரின் மனத்தோடு ஆழமாகப் பதிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வரும்போதும் ஜூலை என்றதுமே தமிழரின் மனங்களில் 83இன் தமிழர்களின் இரத்தக் கறைபடிந்த கறுப்பு ஜூலை நினைவிற்கு வந்து கலங்க வைப்பதைத் தவிர்க்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படையில், இனங்களுக்கிடையில் வேறுபாட்டை நோக்காத நேர்மையான சிங்களவர்களின் மனசாட்சிகளை இருளாக்கிய அந்த ‘ஜூலைக் கலவரம்’ எனப்படும் தமிழினப்படுகொலையே 30 வருட யுத்தத்துக்கு வழிகோலி இலட்சக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்ததுடன், உடைமைகளை அழித்து இலட்சக்கணக்கான தமிழர்களை அகதிகளாக்கி, சிங்களவர், தமிழர்களை இன்றுவரை பரம எதிரிகளாகவும் இணக்கப்பாட்டுக்கு வர முடியாதவர்களாகவும் வைத்திருக்கின்றது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகர் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக இந்த தமிழினப்படுகொலை அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பல சூறையாடப்பட்டு, கொழும்பு நகரின் அனைத்து தெருக்களிலும் இயங்கிய தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள், தமிழர்களின் வீடுகள் மற்றும் வாழ்விடங்கள், வாகனங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன . வீதியில் சென்றோர், வீடுகளில் இருந்தோர், வயோதிபர், பெண்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என பாகுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். தீயிட்டு எரிக்கப்பட்டனர். தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட சிங்களக் காடைக்கூட்டத்துக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ, பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரக்கால சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி, கொலை செய்யப்பட்டவர்களை மரண அல்லது நீதி விசாரணை இல்லாமல் தகனம் செய்ய பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. தமிழினப் படுகொலைகளைத் தலைநகரில் ஆரம்பிப்பதற்கென முன்கூட்டியே தயார் செய்யப்பட்டது. இதற்காகவே யாழ்., திருநெல்வேலியில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்படுமென அரசு அறிவித்தது. அது சிங்களக் காடையர்கள் தமிழினப் படுகொலைக்காக அணிதிரள விடுக்கப்பட்ட அரசின் ஒரு உத்தியோகபூர்வ அழைப்பாகவே இருந்தது. ஜூலை 23ஆம் திகதியில் இருந்து காடையர் கும்பல்களும் அவர்களுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளில் ஈடுபட்ட பொலிஸாரும் இராணுவமும் ஒன்றரை நாட்கள் சுதந்திரமாகத் தமிழர்களைத் தேடித் தேடிக் கொல்லவும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், தமிழர் சொத்துக்களை அடியோடு அழிக்கவும் இடமளித்ததன் பின்னர், ஜூலை 25ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கே ஜனாதிபதி கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களுக்கும் செல்லுபடியான விதத்தில் அன்று மாலை 6 மணிக்கே ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது . முதலில் கொழும்பிலும் பின்னர் மேல் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், சிங்களக் காடையர்கள் மாகாணங்களுக்குள் ஊடுருவி தமது படுகொலைகளை முன்னெடுக்க வழங்கப்பட்ட ஒரு அரச ஆணையாகவே இருந்தது. ஜூலை 26ஆம் திகதி கண்டி, நுவரேலியா, திருகோணமலை, குருநாகல், இரத்தினபுரி, பலாங்கொடை முதலான பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக தமது காடைத்தனங்களை அரங்கேற்றினர். திருகோணமலை சந்தை தரைமட்டமாக்கப்பட்டது. சிங்களவர்களின் அரக்கத்தனம் முதலில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பின்னர். ஏனைய நகரங்கள், மத்திய மலைநாட்டுப் பகுதியில் என தொடர்ந்து ஏழு நாட்களாக அரங்கேற்றப்பட்டன. அது மட்டுமன்றி, கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் பொலிஸார், சிறைக் காவலர்களின் ஒத்துழைப்புடன் சிங்களக் கைதிகள் , காடையர்களினால் கண்கள் தோண்டப்பட்டும் கொடூர சித்திரவதைகள் செய்யப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தமிழினப்படுகொலையால் தலைநகரில் உள்ள பாடசாலைகள், கோவில்கள் தமிழ் அகதிகளால் நிரம்பி வழிந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கப்பலேற்றி ‘’உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்’’ என கூறி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினர். ஜூலை 23இல் ஆரம்பித்த தமிழினப்படுகொலை மாதத்தின் இறுதி வரை நீண்டு சென்றது. 83 கலவரம் என்ற பெயரில் நடந்த தமிழினப் படுகொலையில் 3,000 பேர் வரையானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்விடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன எனவும், கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன எனவும் தரவுகள் கூறுகின்றன. தமிழர்களை அழிக்க வெறியோடு ஒரு கூட்டம் விரட்டினாலும், அதே சிங்கள இனத்தைச் சார்ந்த மனிதாபிமானம் உள்ளவர்களினால் துணிவோடு பல தமிழர்கள் காப்பாற்றப்பட்டமையும் பல சிங்களக் குடும்பங்கள் தமது வீடுகளில் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியமையும் இன்றும் தமிழர்களால் நன்றியுடன் நோக்கப்படுகின்றது. இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம­ப­வங்­க­ளுக்கு அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தத்து. அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டனர் . இந்த 1983 ஜூலை கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழினப்படுகொலையே பல வரலாறுகளை எழுதியது. பல வரலாறுகளை மாற்றியது. தமிழர்களின் ஆயுதப் போராட்டம் விடுதலைப்புலிகள் தலைமையில் தீவிரம் அடைவதற்கு ஜூலைக் கலவரம் பிரதான காரணமாக அமைந்தது. தமிழர்கள், பெரும்பான்மையினமான சிங்களவர்கள் மேல், சிங்கள ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கையிழந்தனர். இந்த நாட்டிலே சிங்களவர்-தமிழர்கள் ஒன்றாக இணைந்து வாழ முடியாது என்கின்ற நிலைமையை ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. அந்த நிலைதான் இன்றுவரை தொடர்கின்றது. கறுப்பு ஜூலையின் பின்னர் தேசிய பிரச்சினை என்பது இலங்கை அரசியலில் ஏனைய விடயங்களை விட பிரதான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. 42 வருடங்களுக்கு முன்னர் அப்போதைய அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்காதது போலவே இலங்கையின் தேசியப் பிரச்சினையாக மாறிய தமிழ்மக்களின் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புக்களும் இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-மக்களின்-பிரச்சினைக்கு-தீர்வு-கிடைக்கும்-வாய்ப்புக்கள்-இல்லை/91-361693

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.