Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8907
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87988
    Posts
  3. நிலாமதி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    11531
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    20010
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/03/25 in all areas

  1. மாவீரர் நாளினை அனுஷ்ட்டிப்பதை அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போரில் கொல்லப்பட்டவர்களை உறவினர்கள் நினைவுகூர்வதைத் தாம் தடுக்கப்போவதில்லை என்றே கூறுகிறது. போரில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறும்போது பொதுமக்கள், போராளிகள் என்று அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள் என்பதை அரசு தெரிந்தே வைத்திருக்கிறது. தலைவரின் மறைவு குறித்த தெளிவான, தீர்க்கமான வெளிப்படுத்தலினை சிங்கள அரசைத் தவிர வேறு எவருமே இதுவரை செய்யத் தவறியிருக்கும் நிலையில் அவருக்கான அஞ்சலியினைச் செலுத்துவது குறித்த தயக்கம் தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இது அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பும் அல்லது அவ்வாறு எண்ண விரும்பும் ஒரு தரப்பினரிடையே இருந்துவரும் அழுத்தங்களினால் ஏனைய தரப்புக்கள் இதுகுறித்து எதுவும் பேசாது மெளனமாகக் கடந்து செல்வது நடக்கிறதாகவே நான் எண்ணுகிறேன். தாயகத்தில் தலைவரின் உருவப்படம் வைப்பதற்கு இருக்கும் அரச எதிர்ப்பு என்பது சாதாரண போராளி ஒருவரின் மறைவினை நினைவுபடுத்த வைக்கப்படும் ஒளிப்படத்திற்கு நிகரானது என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவரின் திருவுருவப் படத்தினை தாயகத்தில் எவர் வைத்து வணக்கம் செலுத்தினாலும் நிச்சயமாக அரசு அவர்மீது தனது கவனத்தைத் திருப்பும். தலைவர் வாழ்ந்த வீட்டினை முற்றாக இடித்தழித்து, அவரது வாழ்வுகுறித்த சிறிய அடையாளங்கள் கூட தாயகத்தில் இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அரசு, அவரது திருவுருவப் படத்தினை வெளிப்படையாகவே வைத்து கெள‌ரவிக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஆகவேதான் தாயகத்தில் இதுகுறித்த முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் புலத்திலோ அவ்வாறான அரச அழுத்தங்கள் இல்லாதபோதிலும், நான் மேலே கூறிய அவர் இருக்கிறார் என்று நம்பும், நம்ப ஆசைப்படும் ஒரு தரப்பினரிடமிருந்து வரும் எதிர்ப்பும், அவரது மறைவினை வெளிப்படுத்துவதினால் தனிப்பட்ட நலன்கள் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் ஒரு குழுவினரும் இதனை வெளிப்படையாக அனுஷ்ட்டிப்பதை எதிர்க்கிறார்கள். தனிப்பட்ட ரீதியில் தலைவருக்கான அஞ்சலியினை ஒவ்வொரு தமிழரும் தமது மனதில் செய்தாலே போதுமானது என்று நான் எண்ணுகிறேன். அவர் எப்போதும் எமது மனங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரை நினைவுகூர நாம் நாள்ப்பார்ரபதைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வதே அவருக்குச் செய்யும் உயர்ந்த கெளரவிப்பாக இருக்கும்.
  2. எப்போழுதெல்லாம் தமிழர்களுக்கு சாதகமான சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் இந்த *** ****** தமது சுயரூபத்தை காட்ட தொடங்கி விடுவார்கள்.....
  3. ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் உருவாகாமல் ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் கூறுவது மிகவும் சிக்கலானது. முதலாவது, ஜெருசலேம் நகரில் இருக்கும் முஸ்லீம்களின் அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்திருக்கும் அதேவிடத்தில் யூதர்களின் வணக்கத்தலமும் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு இப்பகுதி எவ்வளவு முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது யூதர்களுக்கு. ஆகவே ஜெருசலேத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்த்தீனம் என்பது ஆரம்பத்திலேயே சிக்கலாகப் போகிறது. அடுத்தது, இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் ஹமாஸினால் சுதந்திரமான பலஸ்த்தீனத்தை ஆயுத ரீதியில் அடைந்துகொள்வது சாத்தியமானதா? இன்று சர்வதேசத்தில் பலஸ்த்தீனர்களுக்குச் சார்பாக திரும்பியிருக்கும் நிலைப்பாடானது அங்கிருக்கும் மக்களின் பட்டிணிச் சாவை ஒட்டிஏற்படுத்தப்பட்டது என்பதே ஒழிய ஹமாஸின் இராணுவ வல்லமையினால் ஏற்பட்டதொன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் பலஸ்த்தீன மக்கள் தமது உயிர்த் தியாகத்தினாலும், குருதியினாலும் சர்வதேசத்தில் ஏற்படுத்திய இத்திருப்பத்தை ஹமாஸ் தனது பிடிவாதத்தினால் நீர்த்துப் போகச் செய்ய எத்தனிப்பதாகவே எனக்குப் படுகிறது. கிழக்கு ஜெருசலேமில் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து, சர்வதேசம் விரும்பும் சுதந்திரப் பலஸ்த்தீனம் அல்லது இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டு பலஸ்த்தீனர்களுக்கான தீர்வை வழங்குவதை விடுத்து ஆயுதப் போராட்டத்தினை நீட்டித்து அழிவுகளையே ஹமாஸ் எதிர்ப்பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
  4. ஆம், இப்படியாக அன்றாட வாழ்க்கையில் கட்டாயம் இயங்குவதை உடல் பயிற்சி ஆக்குவது, நேரமொதுக்கி உடற்பயிற்சி என்று ஈடுபடுவதில் உள்ள தெவிட்டல் அல்லது சலிப்பை குறைக்கும் அல்லது நீக்கி விடும். நான் செய்வது, வாராந்த மளிகை பொருட்கள் வாங்க செல்லும் போது, கடடையில் இருந்து அதிக தூரத்திலே வண்டியை தரிப்பது. காவு வண்டில் எடுப்பது இல்லை. மளிகை கடைக்குள் கூடையில் பொருட்களை காவுவது அதே போல வண்டிக்கும் மளிகை பொருட்களை காவி வந்தே ஏற்றுவது. (இது தான் இப்போது இங்கே gym களில் சொல்லப்படும் farmers walk, யாழ்ப்பாணத்தில் யுத்த நேரத்தில் எல்லாரும் செய்தது வாளியில் தண்ணி காவி). இவற்றுக்கு இயன்ற அளவு வேகமான நடை. என்ன 2 தரம் மளிகை பொருட்கள் வாங்க செல்ல வேண்டி வரலாம். அது பரவாயில்லை.
  5. இந்த விசாரணை தேவை என்பதைவிட ...தமது அரசியல் இருப்பு பாதுகாக்கக்ப் படவேண்டும் என்ற முசுலிம் அரசியல்வாதிகளின் தூண்டலே தற்சமயம் உடனடியாக ...இந்த விசாரணைத் தூண்டல் ...இதனை செய்து குழப்பியடிப்பதன் மூலம் அரசுடன் அண்டுவதே இவர்களின் நோக்கம் ...இதற்கு இம்மக்கள் பகடைக்காய்கள்...சிலவேளைதமிழருக்கான ஏதோ தீர்ப்புவந்தால் ..அதை வைத்தே இவர்கள் வாதிடமுடியும்...ஆனால் அவர்கள் விசாரணை கேட்பது .. நீங்கள் குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் சுயநலம் கருதி என்பது என்னுடைய கருத்து
  6. இதே போன்ற ஒரு போராட்டத்தினை மட்டு-அம்பாறை வாழ் தமிழர்களும் முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல்படையினர், காடையர்கள் மற்றும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களாலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோர வேண்டும்.
  7. ரஜீவின் மரணம் தொடர்பான இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிர்த்து இந்தியாவிலிருந்து எவருமே படம் ஒன்றினை எடுக்கமுடியும் என்று யாராவது நம்புகிறீர்களா? இன்றுவரை இந்தியாவும் அதன் ஊடகங்களும் கூறிவரும் ரஜீவின் மரணம் தொடர்பான கதைகளுக்கும் இப்படத்திற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? அல்லது இது எவ்விதத்தில் வேறுபடப் போகின்றது? இந்திய அரசின் தணிக்கைக் குழுவினைத் தாண்டி ஏதாவது உண்மைகளோ, ரஜீவின் மரணத்திற்கான உண்மையான காரணமோ, அல்லது ரஜீவ் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட படுகொலைகளோ இப்படத்தில் காட்டப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்றால், இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தினை நாம் கொண்டாடி மகிழவேண்டிய தேவை என்ன?
  8. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடைமுறை குறித்து அறிவுறுத்தல் 03 Aug, 2025 | 06:45 PM ஒரு வருடத்திற்கும் மேலாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்தால், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அந்த நாட்டிற்கான சாரதி அனுமதி பத்திரம் வைத்திருந்தால், இந்தக் கிளை அலுவலகத்திலிருந்து சாரதி அனுமதி பத்திரங்களைப் பெறலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகஅறிவுறுத்ல்ள், அவர்களின் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் விசா காலத்தின் அடிப்படையில், 5 நிமிடங்களுக்குள் செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தைப் பெற உதவும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க, விமானப் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் தலைவர் (ஓய்வு) ஹர்ஷா அபேவிக்ரம, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAAS) தலைவர் சுனில் ஜெயரத்ன மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை இந்த அலுவலகங்களில் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம், இந்த திட்டம் பத்திரங்களை வழங்குவதற்கான நேரத்தை மேலும் குறைக்கும். சில மாதங்களில், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசி வழங்கப்படும் என்றும், பின்னர் இந்த அலுவலகங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கான செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு வேரஹெராவில் உள்ள மோட்டார் வாகனத் திணைக்களத்தின் சாரதி உரிமக் கிளைக்குச் செல்ல வேண்டியிருந்தது , இதற்காக அவர்கள் தங்கள் பயண நேரத்திலிருந்து சில நாட்களை ஒதுக்க வேண்டியிருந்தது என மேலும் தெரிவித்தார். முதல் சாரதி அனுமதி பத்திரம் ஒரு இந்திய நாட்டவருக்கும், இரண்டாவது சாரதி அனுமதி பத்திரம் ஒரு இத்தாலிய நாட்டவருக்கும் அமைச்சரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221723
  9. முற்றான இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்டு, தமக்கான நீதிகோரி, கைகளில் இறந்த தமது உறவுகளின் உருவப்படங்களை ஏந்தி கண்ணீருடன் வீதிகளில் அலைந்து திரியும் ஒரு இனம், மற்றையவர்ளைக் கடத்திச் சென்று கொன்றுதள்ளும் கொடூரமான மனோநிலையினைக் கொண்டவர்கள் என்று எவ்வாறு இந்தியர்களால் படமாக்க முடிகிறது? இதனை தமிழர்களே ஆகா ஓகோ என்று கொண்டாடி மகிழ்வது எப்படி? இக்குப்பைக்கும், பமிலி மேன்‍-2, மட்ராஸ் கபே ஆகிய அபத்தங்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? தயவுசெய்து இக்குப்பைகளைக் கொண்டாடுவதைத் தவிருங்கள்.
  10. ‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்ய பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது. மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்தரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா.?” “..யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்ட படுவோர், உடன் கைது செய்ய பட்டு. இராணுவ ட்ரக்கில், ஏற்ற பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்ல பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்க பட்டு, கொல்ல பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடர பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டு உள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்..” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது; கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐநாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” இன்று நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு இராணுவதை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சோமரத்ன-ராஜபக்ச-மனைவியின்-கோரிக்கையை-ஏற்று-அனுர-தன்னை-நிரூபிக்க-வேண்டும்-மனோ/150-362216
  11. நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570
  12. அவுஸ்ரேலியாவில் உள்ள குவின்ஸ்லான்ட் எனுமிடத்தில் ஒரு சூறாவளியின் போது சுறா ஒன்று வீதிக்கு வந்ததாக செய்தி வந்தது நினைவிலுள்ளது, அமெரிக்க அன்பர்களுக்கு சுறா வர வாய்ப்பில்லாவிட்டாலும் முன்னால் இரஸ்சிய அதிபர் வாய்கொழுப்பில் கதைத்ததிற்கு பதிலடியாக இரண்டு அணு நீர்மூழ்கியினை இடம் குறிப்பிடாத இடத்தில் நிலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார், இந்த வெள்ளத்தினால் நியுயோர்க் நகரவாசிகளின் கால்களில் இந்த இரண்டு அணு நீர்மூழ்கிகள் இடறவாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.🤣
  13. நான் கடந்த மாதத்தில் நடந்த தூரம் 118.6 KM. இந்த ஆண்டு இன்று வரைக்கும் நடந்த தூரம்:1011 KM
  14. பழமையும் புதுமையும் Santha Batumalai ·entdpsSoroc 0559f07t:ih2gef077103a1lil uctu193681u13fl9,9u0j · சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரை எனது தொழில் நிமித்தமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. அவர் ஒரு ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்டும்கூட! � தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது.. அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போகவேண்டும்போல அவரின் அடிவயிறு முட்டிக்கொண்டு இருக்கிறது.. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்துவிடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும்தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது. டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர்தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘‘நான் இப்போது புறநகர்ப்பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணிபோல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர். ‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்னார் அந்த நேரம் பார்த்து இன்னொரு போன். அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.. போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக்குள்ளாகும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈ.என்.டி. மருத்துவர். ‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா? கவலைப்படாதே.. சரி, நான் சொல்வதுபோல செய், வந்துவிடும்! என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார். ‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும்போது உன் ரெண்டு கையையும் அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பதுபோல ஆக்ஷன் செய்! இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார். என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈ.என்.டி. மருத்துவருக்கு!! ‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடிவிட்டார். அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்! நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன். மருத்துவர் பெற்ற பலன் இவ்வுலகும் பெற வேண்டி பகிர்கிறேன் படித்ததில் பகிர்ந்தேன் 🙏" ........! பிரச்சினை வரும்போது முயற்சித்துப் பார்க்கலாம் .......... !
  15. எனது ஊரில் உள்ள சில சமூக அக்கறை இல்லாத சில பொடியளை அங்குள்ள இராணுவம் போலீஸ் தமது வலைக்குள் இழுக்கும், இராணுவத்தின் நட்பு கிடைத்ததும் இவர்கள் அந்த ஊரில் பெரிய மனிதர்களாகிவிடுவார்கள். சண்டித்தனம், அடாவடி. அவர்களுக்கு வக்காலத்து வாங்க போலீஸ் வேற துணைக்கு. போலீசாரிடம் முறைப்பாடு அளித்தாலும் இந்த போக்கிலியள் சார்பாகவே போலீஸ் கதைத்து முறைபாடளித்தவர்களை அச்சுறுத்தும். இதனால் யாரும் அவர்களுக்கெதிராக முறைபாடளிக்க முன்வருவதில்லை. அவர்களை வைத்து, ஊரில் யாரெல்லாம் புலிகள் சார்பானவர்கள் ,யார் இராணுவத்துக்கு எதிரானவர்கள், போராளிகுடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள், அவர்களின் குடும்ப விபரங்களை திரட்டுவது. இதனால் இப்படிப்பட்டவர்களை ஊரவர் ஒதுக்கி விடுவர். அதன் பின் அவர்களை வைத்து இப்படியான கதைகளை புனைவது, போதைப்பொருள் தரகராக்குவது, பின் இள வயதிலேயே மரணம். ஒரு வேளை நிலைமை புரிந்து விலக நினைத்தாலும் முடியாது. நீர்ச்சுழியில் சிக்கியதுபோல அவர்கள் எதிர்காலம். இது புரியாமல் ஆமிக்காரன் சிரிக்கிறான், உதவுகிறான் என்று உறவு வைத்தால் அவ்வளவுதான். அது ஒரு விஷ ஜந்து என விலகி ஓடிவிட வேண்டும் இராணுவத்தை கண்டால்.
  16. அவர் என்புமூட்டு சிகிச்சை நிபுணர். அவரின் கதைகளை நம்ம @நிழலி அண்ணை இணைக்கிறவர்.
  17. பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌
  18. உங்களின் மாமி இப்பொழுது சுகமாகி இருப்பார் என்று நினைக்கின்றேன், அண்ணா. கனடாவில் நண்பன் ஒருவனின் அம்மாவிற்கும் இப்படி நடந்துவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கின்றார். அந்த நினைவும், அலுவலகத்தில் நடந்த விடயமும் சேர்ந்து தான் இப்படி ஒன்றை எழுத வைத்திருக்கின்றது போல.................... சும்மா பகிடியாகவே எழுதினேன். தெரிந்தவர்கள் சிலருக்கு இப்படி நடந்திருப்பது இப்பொழுது வரிசையாக ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஒருவர், அவர் இலங்கையில் ஓரளவு பிரபலமானவர். குளியலறையில் விழுந்த பின் சென்னைக்கு கொண்டு போனார்கள் என்று நினைக்கின்றேன். அல்லது கொழும்பில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையோ என்று சரியாக ஞாபகம் இல்லை. அங்கு சில மாதங்கள் இருந்தார் போல. நிறைய செலவாகியது. ஆனால் அவர் சுகப்படவே இல்லை.
  19. ஹன்ட் ( The Hunt )என்னும் பெயரில் ராஜீவ் காந்தி கொலை விசாரணை பற்றிய வெப் தொடர் ஒன்று வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அது பற்றி எழுத முடியவில்லை. ஆனால் பொதுவாக இவ்வாறான நடந்த சம்பவங்களை படமாக்குபவர்கள் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து படமாக்குவதில்லை. பொலிஸ் என்ன சொல்கிறதோ அதையே ஊடகங்கள் வெளியிடும். ஊடகங்கள் என்ன வெளியிடுகின்றனவோ அதையே இவர்கள் படமாக்குவார்கள். உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரணம் பற்றி ஊடகங்கள் உண்மையை கண்டறிந்து எழுதவில்லை. கமிசனர் தேவாரம் தலைமையில் 300 பொலிசார் பாதுகாப்பில் வேதாரணியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார் என்று தேவாரம் கூறியதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. நீதிமன்றம்கூட அது குறித்து கேள்வி எழுப்பாமல் அது தற்கொலை மரணம் என்று ஏற்றுக்கொண்டது. ஆனால் உண்மை என்னவெனில் விசாரணையின்போது கோடியாக்கரை சண்முகம் வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் பெயரைக் கூறிவிட்டார். ராஜேந்திரன் மூப்பனாரைக் கைகாட்டுவார். அதனால் ராஜேந்திரனையும் மூப்பனாரையும் காப்பாற்றுவதற்காக கோடியாக்கரை சண்முகம் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார் என்றே அன்று பேசப்பட்டது. தோழர் பாலன்
  20. அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். இந்த கதைக்கு பல இடத்தில் நானும் சாட்சியாக இருக்கிறேன்.இன்றுதான் வாசித்தேன் .
  21. பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார். அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்ல தயாராகிறார். அந்த தீவில் உள்ளவர்களை வைத்து நடைபெறும் கடத்தல் தொழிலை எப்படி ஒழிக்கிறார், தன் அண்ணனை கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் படத்தின் சாராம்சம். பட மூலாதாரம்,X@THEDEVERAKONDA 'சிறப்பாக நடித்துள்ள விஜய் தேவரகொண்டா' தி இந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள திரைப்பட விமர்சனத்தில் "முதல் பாதியில் கதையை நன்கு 'செட்' செய்தத்தில் இயக்குநர் கவுதம் தின்னனூர் கவனிக்க வைக்கிறார். அதீத ஹீரோயிசங்கள் பெரியளவில் எதுவுமின்றி ஓரளவு நம்பகத்தன்மைகளை காட்சிகளில் இடம்பெறச் செய்தது ரசிக்க வைக்கிறது. ஆனால், படத்தின் பிரச்னையே இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. முதல் பாதியில் எந்த தொய்வுகளும் இன்றி நேர்கோட்டில் சென்று கொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் தடுமாறத் தொடங்கிவிடுகிறது" என்று குறிப்பிடுகிறது. விஜய் தேவரகொண்டாவுக்கு நடிகராக முக்கியமான படம் இது என்று குறிப்பிடும் தி இந்து தமிழ், " போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் இலங்கைக்கு சென்ற பின் அவருள் ஏற்படும் மாற்றம் என தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதீத உழைப்பை கொட்டி நடித்திருக்கிறார். அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பு." என்று குறிப்பிடுகிறது. படத்தின் உண்மையான ஹீரோக்கள் இசையமைப்பாளர் அனிருத்தும், ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி.ஜான் ஆகியோரும்தான் என்றும் குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் வரும் பிரிட்டிஷ் காலத்து காட்சியில் ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அட்டகாசம் என்றும் தி இந்து தமிழ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, இசைக்கு குவியும் பாராட்டு தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள விமர்சனத்தில், "கதாநாயகிக்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவு, முக்கியத்துவமும் குறைவு! ஆனால் வந்த நேரத்தில் கதை கேட்கும் இடங்களை நிரப்பியிருக்கிறார். அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். வில்லனாக வலம் வந்த வெங்கிடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். சில முகம் தெரிந்த நடிகர்கள் வந்தாலும், பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாதவர்கள்தான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு சில ஊடக விமர்சனங்களில் குறிப்பிட்டிருப்பது போலவே, தினமணியிலும் படத்தின் இரண்டாம் பாதி தொய்வாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. "முதல்பாதியில் ஒரு 30 நிமிடம் விறுவிறுப்பாகவும், கதைக்கு நேர்மையான நடிப்பு மற்றும் திரைக்கதையாலும் படம் நல்ல தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இருவரும் நல்ல வேலைபாட்டைக் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் 'கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்' எனத் தோன்றினாலும், சண்டைக் காட்சிகள் அனைத்திலும் சிறப்பான வேலையைச் செய்துள்ளனர். சண்டைக்காட்சிகளையும் மிக நன்றாகவே உருவாக்கியுள்ளனர்" என்று தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இரண்டாம் பாதி தள்ளாடுகிறது' தி இந்து ஆங்கில நாளிதழ், "எரிந்த சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் நிறைந்த நீரஜா கோணாவின் ஆடை வடிவமைப்பு, கதையின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது. அனிருத் ரவிச்சந்தரின் இசை அதன் பங்கை வகிக்கிறது, தேவைப்படும்போது படத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மௌனம் தேவைப்படும் இடங்களில் அதையும் அனுமதிக்கிறது. படத்தின் பெரும்பாலான நேரத்தில் விஜய் தேவரகொண்டா பேசுவதில்லை, எனினும் இதுவரை இல்லாத அளவிலான சிறப்பான நடிப்பை தந்துள்ளார். காட்டில் துரத்தி செல்லும் ஒரு காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் கதாபாத்திரமான ஷிவா, ஹீரோவாக சிறப்பாக காட்டுவதற்காக எழுதப்படாமல், அர்த்தமுள்ளதாக எழுதப்பட்டுள்ளது" என்று படத்தைப் பற்றி வெளியிட்டுள்ள விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. மேலும், "இரண்டாம் பாதியில் படம் சற்று தள்ளாடுகிறது. சண்டைக் காட்சிகள் மேலும் வன்முறையாகவும், அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கக் கூடியதாகவும் அமைகின்றன. க்ளைமாக்ஸ் காட்சிகள் அவசரமாக நடைபெறுவதாக தோன்றுகிறது. முந்தைய காட்சிகளில் மௌனமே பலமாக இருந்த நிலையில், இறுதியில் வாய்ஸ் ஓவரை அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA தி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் விமர்சனத்தில், " இடம் பெயர்த்தப்பட்ட மக்கள் தங்கள் மூதாதையரின் ஞானம் கொண்ட ஒருவர் வந்து தங்களை ஒரு நாள் விடுவிப்பார் என்ற நம்பிக்கையை" வலியுறுத்துகிறது இந்தப் படம் என்று கூறுகிறது. "சூரி கதாபத்திரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா துயரத்தையும் பதில் கிடைக்காத கேள்விகளின் பாரத்தையும் ஏந்திக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். தனது சகோதரராக நடித்துள்ள சத்யதேவ் உடன் அவர் நடித்த காட்சிகள் படத்தின் சிறந்த காட்சிகள் ஆகும்" என்றும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn43xplrz9ko
  22. மரணச்சடங்கு சரியான நேரத்தில் சரியானவர்களால் நடத்தப்படும். அதை இரு கண்களால் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் அல்லவா?
  23. தம்பி, ஒரு சில காலம் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கணத்திலே நினைத்து பார்க்கிறேன். உன்னை தோளில் தூக்கிய நாட்களில் இருந்து மிடுக்காக நடந்துவரும் காலம் வரை நினைத்து பார்க்கிறேன். துடிப்பான உனது குழப்படிகளை உன் அம்மா என்னிடம் சொல்லும்போது உன் முகத்தை பார்க்கிறேன். எந்த உணர்வுகளுமே காட்டாத உன் முகத்தில் உன் தந்தையை மிஞ்ச உன்னால் மட்டும் தான் முடியும். உன் அக்காவை சீண்டும் குழப்படிகளை உன் அக்கா அடுக்கி செல்லும்போது இல்லை என்ற ஒற்றை வரி மறுப்பு மட்டுமே உன்னிடம் இருந்து வருகிறது. படிக்கும் நேரத்தில் விளையாட கூடாது என்று உன் அம்மா சொன்ன காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு எழும்பி, கணனியில் சுட்டு விளையாட என்னை எழுப்பியதை இன்றும் கனவாகவே பார்க்கிறேன். சாப்பாட்டை கொண்டுவந்து தந்துவிட்டு சாப்பிடும் வரை என் முகத்தை பார்க்கும் உன் கருணை உள்ளத்தை பார்க்கிறேன். உந்து உருளியில் இரணைமடு குளக்கரையில் நாங்கள் பயணித்த நாட்களை மகிழ்வாக காண்கிறேன். அணி நடையில் சக தோழனின் தொப்பியை சரி செய்த வருங்கால தளபதியை உன்னில் கண்டேன். கையில் வைத்திருந்த சுடு கருவியின் சுடு குழல் மேல் நோக்கி இல்லாமல், இன்னொருவரை நோக்கி இருக்கிறது என்று சரி செய்த ஒரு வீரனை உன்னில் கண்டேன். .......... .......... .......... இறுதி நேரத்திலும் கலங்காத உன் விழிகள் இப்பொது என்னை கலங்க வைக்கிறது. கடைசி வரை உன் கூட வராமைக்காக இன்றும் வருந்துகிறேன். உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை கொன்றவர்களுக்கான முடிவு காலம் தொலை தூரத்தில் இல்லை அன்பு தம்பியே.
  24. பாகம் இருபத்திரண்டு அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்.. இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்.. நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்.. ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ... கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு .. மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே.. எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு.. ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது.. மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள். வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்.. குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்.. சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்.. மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது.. எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்... கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது. சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான். நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன... அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்.. சொல்லுங்கள் உறவுகளே... உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் .. உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ... தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ... சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்.. ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்.. அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது.. அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன். அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்... எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது... ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார். அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்.. இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க ..இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி .. என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா .. சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா .. ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் .. அந்த வேளையில் .. எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .. ஈர குலையே கருகியது.. குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் .. கருகி மடிந்தார்கள் .. என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்.. மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்.. எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் .. இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை... இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது.. சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்.. மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன.. இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..?? (தொடரும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.