Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20010
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/10/25 in all areas

  1. தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை Getty Images கட்டுரை தகவல் ரஃபேல் அபுச்சைபே பிபிசி நியூஸ் முண்டோ 13 நிமிடங்களுக்கு முன்னர் இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர். "அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை." "அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை 'டாக்டர் பூப்' (Dr. Poop) என அழைத்தனர்," என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார். Dr. Juliana Suárez தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் செரிமான அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சுவாரெஸ் அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார். "தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்" ("The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். "நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது." தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார். 1. அதிக உணவுகளை சேருங்கள் Dr. Juliana Suárez மருத்துவர் ஜூலியானா சுவாரெஸின் புத்தகம் தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல "அதிசய டயட்கள்" குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன. ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: "உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்." நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும். சமூக ஊடகங்களில் "நேர்த்தியான உணவுமுறையை" கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார். "பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…" Getty Images இயற்கையான உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும் என, மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார் "நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்." அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: "பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்." 2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம் Getty Images நல்ல தூக்கமும் செரிமானத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சுவாரெஸ் உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ். அதாவது நம் மனநிலை முதல் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்த நுண்ணுயிர்கள் நம் நலனுக்கு அடிப்படையான அம்சமாக திகழ்வதாக அவர் தெரிவிக்கிறார். "வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல," எனக் கூறுகிறார் அவர். மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன. "பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்." எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார். "இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்." தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், "அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்." என்கிறார். "உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது." அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள். 3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள் Getty Images பொம்மை வடிவில் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்க வேண்டும் என, மருத்துவர் சுவாரெஸ் அறிவுறுத்துகிறார் "இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன," என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல." மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். "உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்." புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார். "எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்." அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம். "சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது." 4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் Getty Images ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது." "அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்." உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும். "ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், "யாராவது முகம் சுளிப்பார்கள்" என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்." "செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c147nnmnxxpo
  2. ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂
  3. ஒரு ஐந்து பெட்டை நாயை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகாமாக மாறி மாறி ஐம்பது தரம் கொண்டு போனால் 30000 கிடைக்கலாம் ...... பிடிபட்டால் கம்பெனி பொறுப்பல்ல ......! 😃
  4. இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.தேவைப்படும் போது பொதுவான ஒரு இடத்தில் எழுதி விட்டு அங்கு ஒட்டி விடலாம்.
  5. சாவின் விளிம்பில் மீன் ........... ! 🤭
  6. நம்ம தலைக்கு கோள்வம் வாறதெல்லாம் நடிப்பு. புட்டினுக்கு தல செங்கம்பளம் விரிச்சு வரவேற்கும் போதே ரஷ்யா பக்கம் நூறுவீதம் நியாயம் இருக்கு எண்டதை விளங்கியிருக்க வேணும்.😂 இவையள் ரஷ்யா மேல பொருளாதார தடை போட்டாலும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஐரோப்பாதான். ரஷ்யன் சந்தோசமாகத்தான் இருக்கிறான். நடு றோட்டிலை நிண்டு பிச்சை எடுக்கேல்லை. இன்றும் ஆபிரிக்காவுக்கு கோதுமை இலவசமாக கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறான்.😎 மேற்குலகின் பொருளாதார தடை எனும் ஜில்மா விளையாட்டுக்களுக்கு இந்த உலகம் அஞ்சாது கண்டியளோ! 15 வருசமாய் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை போடீனமாம் போட்டுக்கொண்டே இருக்கினமாம். பொருளாதார தடைகளால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே தவிர வேறு எந்த நாடுகளும் இல்லை. மேற்குலகு இப்படியான பொருளாதார தடைகளால் இன்னொரு வலிமை மிக்க எதிரணியை உருவாக்கியதை தவிர வேறு எந்த பலன்களும் அறவே இல்லை. இந்த எதிரணியால் பலனடையப்போவது மூன்றாம் உலக நாடுகள் என்பது முக்கிய விடயம்.
  7. ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டறிந்துவிட்டதா? Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்துக் காணும் முன் புற்று நோய் குறித்து இந்தப் பதிவிற்கு சம்பந்தமான ஒரு சிறிய பார்வை புற்று நோய் என்பது குறிப்பிட்ட இடத்தில் செல்கள் சொல்பேச்சுக் கேட்க மறுத்து அதிகமான எண்ணிக்கையில் பெருகுதல் அதிகமான அளவு வளர்ச்சி அடைதல் தனக்கான காலம் முடிந்தால் மரணிக்க மறுத்தல் உடலின் எதிர்ப்பு சக்தியையும் மீறி சாகாவரம் பெற்று தொடர்ந்து கட்டுப்பாடற்று வளருதல் தனக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள சத்துக்களை சுயநலத்துடன் உறிஞ்சிக்கொள்ளுதல் குறிப்பிட்ட இடத்தில் இருப்பை நிலைநாட்டியவுடன் அருகில் இருக்கும் இடங்களை ஆக்கிரமித்தல் பிறகு ரத்தத்தில் கலந்து தூர உறுப்புகளுக்கும் பரவுதல் என புற்று நோய் என்பது சராசரி செல்களின் தன்மையில் இருந்து மாறுபட்டு நமது செல்களே நமக்கு வில்லனாக மாறுவதாகும். அதுவரை நன்றாக சொல்பேச்சுக் கேட்டு செயல்பட்டு வந்த நமது செல்கள் எப்படி இவ்வாறு மாறுகின்றன? அதற்கு அந்த செல்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அமைகின்றன. பொதுவாக செல்களில் புற்றுத் தன்மையை கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இயற்கையாகவே உண்டு. கூடவே ஒரு செல்லுடைய சுவர் மற்றொரு செல்லுடைய வெளிப்புற சுவரை மீறி வளர்தலைத் தடுப்பதற்கு, தனக்கான முதிர்ச்சி வயது வந்தால் தானாக தன்னை மாய்த்துக் கொள்வதற்கு , தேவையற்ற எண்ணிக்கை பெருக்கத்தை தடுப்பதற்கு என பல மரபணுக்கள் செல்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை தான் நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றன. எனினும் ஓரிடத்தில் தொடர்ந்து நிகழும் காயங்கள் - உதாரணம் சிகரெட் புகையால் நுரையீரலில் நிகழும் காயம், புகையிலையால் வாயில் நிகழும் காயம் அல்லது குறிப்பிட்ட வைரஸ்களால் ஏற்படும் காயங்கள் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இவற்றால் இந்த புற்றுநோயில் இருந்து காக்கும் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புற்று நோய் உண்டாகிறது. இப்போது புற்று நோய் செல்களில் மாற்றப்பட்ட வேறுபட்ட மரபணுக்கள் வேலை செய்கின்றன. இவை அடுத்தடுத்து பல்கிப் பெருகும் அனைத்து புற்று செல்களிலும் சிட்டி 2.0 போல உள்ளிருந்து கொண்டு அவற்றை இயக்குகின்றன. இவ்வாறு தான் இயங்குவதற்கு ஏற்றவாறு புற்று நோய் செல் புரதங்களை உருவாக்கிக் கொள்கின்றன. நிற்க... இங்கிருந்து தான் நமது கட்டுரை தொடங்குகிறது. புற்று நோய் செல்கள் வளம்பெற்று வளருவதற்கு முக்கியமானவை புற்று நோய் மரபணுக்கள் அடுத்து புற்று செல்களை கட்டமைக்கத் தேவையான புற்று செல்களில் உள்ள புரதம்... நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மரபணுக்களை அதன் பணியை செய்யாமல் தடுத்து விட்டாலோ அல்லது புற்று செல்கள் உருவாக்கும் பிரத்யேக புரதங்களை அழித்துவிட்டாலோ புற்றுக்கட்டிகளையும் சேர்த்து அழிக்கலாம் தானே? அந்தத் தொழில்நுட்பம் தான் "எம் ஆர்என்ஏ" என்று அழைக்கப்படும் மெசஞ்சர் ஆர் என் ஏ( m RNA அல்லது MESSENGER RNA) தொழில்நுட்பமாகும். இந்த மெசஞ்சர் ஆர் என் ஏ என்றால் யாவை? ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நியூக்லியஸ் பகுதியில் டிஎன்ஏ இருக்கிறது. டிஎன்ஏ கூறும் செய்திகளை தன்னகத்தே பெற்றுக் கொண்டு ரிபோசோம்களுக்கு அதை எடுத்துக் கொண்டு சென்று புரதங்களை உற்பத்தி செய்யத் தூண்டுவது மெசஞ்சர் ஆர்.என்.ஏவின் ( தூது செல்லும் மரபணுப் பொருள்) பணியாகும். அறிவியலாளர்கள் கடந்த முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்து மெசஞ்சர் ஆர்என்ஏவை செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து விட்டனர். மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருந்துகளைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த அறிவைத் தான் அறிவியலாளர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது தடுப்பூசி உருவாக்கத்தில் மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுக் காண்பித்தனர். உண்மையில் கோவிட் பெருந்தொற்று வந்து ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்ப தடுப்பூசிகள் வெற்றி பெறும்வரை மருத்துவ அறிவியல் உலகம் இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதும் முக்கியத்துவம் தராமல் இருந்தது. எனினும் தற்போது கடுமையான விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக "மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை கண்டறிந்து கூறிய" கடாலின் கரிக்கோவுக்கும் ட்ரியூ வெய்ஸ்மேனுக்கும் 2023 க்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர்களின் கண்டுபிடிப்பால் பல லட்சம் உயிர்கள் கோவிட் பெருந்தொற்றின் போது காக்கப்பட்டதே அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம். சரி இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு புற்று நோய் மற்றும் வைரஸ் தொற்று தடுத்தலில் உபயோகிக்க முடியும்? பெருந்தொற்றை உருவாக்கிய கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் / அல்லது புற்று நோய் செல்கள் உண்டாக்கும் புரதங்கள் இவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவுக்கு வைத்து பேக் செய்து அதை சுற்றி நானோ தொழில்நுட்பம் மூலம் கொழுப்புத் திவலைகளைப் பூசி உடலுக்குள் செலுத்தும் போது, இந்த வைரஸின் புரதம் / புற்று செல்களின் புரதம் கொண்ட மெசஞ்சர் ஆர் என் ஏக்கள் உடலின் செல்களினால் உட்கொள்ளப்படும். செல்களுக்கு உள்ளே சென்ற எம் ஆர் என் ஏ - அந்த செல்களை தன்னகத்தே கொண்டு வந்ததைப் போலவே புரதங்களை உருவாக்கக் கூறும். இவ்வாறு உருவான புரதங்களை நமது உடல் "ஆண்ட்டிஜென்களாக" பாவிக்கும் இந்த ஆண்ட்டிஜென்களை நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் உள்ள டெண்ட்ரிடிக் செல்கள் நன்குணர்ந்து அவற்றை எதிர்க்கும் திறனை அறிந்து கொண்டு அதை டி செல்களுக்கு கற்பிக்கும். டி- செல்கள் இந்த புரதங்கள் அனைத்தையும் தேடித் தேடி அழித்தொழித்து விடும். கூடவே இனி வருங்காலத்தில் இதே போன்ற புரதங்கள் நம் உடலில் எங்கேனும் வருமாயின் அவற்றையும் தேடிக் கொள்ளும். இவ்வாறு மெசஞ்சர் ஆர் என் ஏ தொழில்நுட்பத்தை வைத்து மாடர்னா நிறுவனம் நடத்திய ஆய்வில் தலை மற்றும் கழுத்துப் பகுதி புற்று நோய் இருந்த பத்து பேரில் இருவருக்கு முழுமையாக குணமானது ஐந்து பேருக்கு புற்றுக் கட்டியின் அளவு சுருங்கியது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு புற்று நோய் கட்டியின் சிறு நுண் துண்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி அது உருவாக்கியுள்ள உள்ள புரதங்களை பிரித்தெடுத்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏவில் பேக் செய்து உடலுக்குள் செலுத்தினால் அந்த குறிப்பிட்ட புரதத்திற்கு எதிராக சிறப்பான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு அந்த புரதத்தைக் கொண்ட புற்று செல்களும் அழிக்கப்படும். இத்தகைய மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசிகளில் 34 புற்றுசெல் உருவாக்கும் புரதங்களை பேக் செய்து வழங்கும் அளவு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. ஆம்.. உதாரணத்திற்கு ரஷ்யாவில் அதிகமாகக் கண்டறியப்படும் சில புற்று நோய்கள் உதாரணமாக நுரையீரல் புற்று புராஸ்டேட் புற்று மார்பகப்புற்று ரத்தப் புற்று போன்ற புற்று செல்கள் உருவாக்கும் பொதுவான புரதங்களை ஆராய்ந்து அவற்றை மெசஞ்சர் ஆர் என் ஏ தடுப்பூசியில் பேக் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் போது எதிர்காலத்தில் இந்த புற்று நோய்கள் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு சக்தி அந்த செல்களை கொன்று விடும். இதுவே இந்தத் தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்யா உருவாக்கியுள்ள தடுப்பூசியை விலங்குகளுக்கு ( PRE CLINICAL STUDIES) வழங்கி புற்று நோய் கட்டிகளையும் மெட்டாஸ்டாசிஸ் எனும் தூர பரவல்களையும் முழுவதுமாக குணப்படுத்தியதை 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறிந்தனர். தற்போது இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் முதல் நிலை பரிசோதனை 48 குடல் புற்று நோய் கண்டவர்களிடம் செலுத்தி சோதித்தத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளதை பதிவு செய்துள்ளது. குடல் சார்ந்த புற்று நோய்களுக்கு வழங்குவதால் எண்டரோமிக்ஸ் ( ENTERO - குடல் ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசியை வைத்து இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்ட சோதனை பரிசோதனைகளை இன்னும் பல ஆயிரம் பேருக்கு செய்த பிறகே அதை மக்களுக்குச் சந்தைப் படுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனினும் மருத்துவ நவீன கண்டுபிடிப்புகளில் நிலவி வரும் வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் பனிப்போர் மற்றும் வர்த்தக/ பொருளாதாரப் போரின் நீட்சியாக இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவசர நிலை இருந்தது. அப்போதும் கூட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுருக்கி விரைவுபடுத்தி முடிவுகளை வெளியிட்ட பின்னரே தடுப்பூசிகள் சந்தைக்கு வந்தன என்பதையும் பதிவு செய்கிறேன் ரஷ்யாவைப் பொருத்தவரை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை (PHASE II & PHASE III ) செய்த பிறகு முழு ஆராய்ச்சியையும் சக அறிவியலாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படும் மருத்துவ இதழ்களில் வெளியிட்டு பிறகு மக்களுக்கு வழங்குவது நல்லது. இதே தொழில்நுட்பத்தில் மெலனோமா எனும் தோல் புற்றுநோய்க்கு எதிராக 2021 ஆம் ஆண்டு BNT111 எனும் தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்டிஏ அவசர கால முன் அனுமதி வழங்கியது மே 2024இல் எப்ஸ்டின் பார் வைரஸ் மூலம் உருவாகும் புற்று நோய்க்கு எதிரான எம் ஆர் என் ஏ தடுப்பூசிக்கும் எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இந்த வகை தடுப்பூசிகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் உருவாக்க முடியும் என்பதால் புற்று நோய் கண்டறியப்பட்ட சில வாரங்களுக்குள் நோயருக்கு ஏற்ற பிரத்யேக தடுப்பூசியை (PRECISION MEDICINE) தயாரிக்க முடியும். மெசஞ்சர் ஆர் என் ஏ எனும் தொழில்நுட்பம் புற்று நோய் மற்றும் தொற்று நோய் தடுப்பில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ஆதிக்கம் செலுத்தப்போவது கண்கூடு. எனினும் மருத்துவ ரீதியாக செய்ய வேண்டிய ஆய்வுகளை சரியான நேரம் ஒதுக்கிக் செய்த பின் ஆய்வுகளை வெளியிட்டு பிறகு சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கி பார்க்குமாறு இந்த கண்டுபிடிப்பை சந்தைப் படுத்துவது சிறந்ததாக இருக்கும். நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை
  8. இந்த 100% வினைத்திறன் என்பது மனிதர்கலின் மீதான ஆய்விற்கு முந்தய மிருக ஆய்வாகும், மனித ஆய்வு 3 கட்டமாக நிகழும், இது வெறும் குடல் புற்றுநோயிற்கு மட்டுமல்ல தோல், சுவாச, மார்பு என அனைத்து கட்டி வகை புற்றுநோயிற்குமான மருந்தாக கூறுகிறார்கள், இது ஒரு தடுப்பூசி இல்லை புற்றுநோய் வந்தவர்களுக்கு வழங்கப்படும் மருந்தாக கூறப்படுகின்றது. பொதுவாக மனித ஆய்வில் இந்த 100% வினைத்திறன் எட்டப்படுவது சாத்தியமற்ற விடயமாக கூறினாலும் இது ஒரு ஆரோக்கியமான விடயம், என கூறுகிறார்கள், பல உயிர்களை காக்கும் முயற்சி இது ஏழை நாடுகளுக்கும் இதனை இரஸ்சியா இலவசமாக வழங்கவுள்ளதாக கூறுகிறார்கள், அது எந்தளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.
  9. ரஷ்யாவின் mRNA புற்றுநோய் தடுப்பூசி 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. அறிவியலாளர்களால் ஜூலை 29, 2025 ஆரோக்கியத்தில் 0 மாஸ்கோ, ரஷ்யா - ஜூலை 19, 2025 - ரஷ்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி இப்போது 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் என்று முன்னர் கணித்திருந்த கணிப்புகளிலிருந்து சற்று தாமதமாகும். ரஷ்ய நோயாளிகளுக்கு இலவச அணுகலை உறுதியளிக்கும் இந்த லட்சிய தேசிய முயற்சி, பயனுள்ள புற்றுநோய் நோயெதிர்ப்பு சிகிச்சைகளுக்கான உலகளாவிய இனம் தீவிரமடைந்து வருவதால், நம்பிக்கையையும் சர்வதேச ஆய்வின் அளவையும் தொடர்ந்து உருவாக்குகிறது. ஆரம்பத்தில், சில அறிக்கைகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தடுப்பூசி கிடைக்கும் என்று சுட்டிக்காட்டின. இருப்பினும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் கூறிய தற்போதைய காலவரிசை, செப்டம்பர்-அக்டோபர் 2025 இல் சிகிச்சை பெறும் முதல் நோயாளிகளைக் குறிக்கிறது.இந்த சரிசெய்தல், விரைவான வளர்ச்சிப் பாதைகளுடன் கூட, ஒரு புதிய, தனிப்பயனாக்கப்பட்ட மருந்தை சந்தைக்குக் கொண்டுவருவதில் உள்ள உள்ளார்ந்த சிக்கல்கள் மற்றும் கடுமையான ஒழுங்குமுறை தடைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அடிப்படை மேம்பாடு மற்றும் பயன்பாட்டு உத்தி நடைமுறையில் இருந்தாலும், கோடை மாதங்களுக்கு ஒழுங்குமுறை ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று ஜின்ட்ஸ்பர்க் குறிப்பிட்டார். ரஷ்ய தடுப்பூசி, COVID-19 தொற்றுநோயால் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தளமான அதிநவீன mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.வழக்கமான புற்றுநோய் சிகிச்சைகளைப் போலன்றி, இந்த சிகிச்சை தடுப்பூசி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்க உடலின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை "கற்பிக்க" வடிவமைக்கப்பட்டுள்ளது.ரஷ்ய அணுகுமுறையை வேறுபடுத்துவது என்னவென்றால், தீவிர தனிப்பயனாக்கத்தில் அதன் முக்கியத்துவம்: தடுப்பூசி ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் குறிப்பிட்ட கட்டியின் மரபணு வரைபடத்தின் அடிப்படையில் தனித்துவமாக வடிவமைக்கப்படும்.இந்த தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறை, நோயெதிர்ப்பு மண்டலத்தால் பெரும்பாலும் கவனிக்கப்படாத புற்றுநோய் செல்களால் வெளிப்படுத்தப்படும் தனித்துவமான "நியோஆன்டிஜென்களை" குறிவைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தனிப்பயனாக்கத்தின் முக்கிய செயல்படுத்தல் செயற்கை நுண்ணறிவின் (AI) ஒருங்கிணைப்பு ஆகும்.இந்த நியோஆன்டிஜென்களை அடையாளம் காணும் செயல்முறையையும் தனிப்பட்ட எம்ஆர்என்ஏ வரிசைகளையும் வடிவமைக்கும் செயல்முறையை கடுமையாக துரிதப்படுத்த நரம்பியல் நெட்வொர்க்குகள் பயன்படுத்தப்படுவதாக டெவலப்பர்கள் கூறுகின்றனர்.தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளுக்குத் தேவையான விரைவான திருப்பத்திற்கு இந்த AI- இயக்கப்படும் துல்லியம் மிகவும் முக்கியமானது, இது வடிவமைப்பு கட்டத்தை வாரங்கள் அல்லது மாதங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கும். ரஷ்யாவில் மருத்துவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் கட்டி வளர்ச்சியை அடக்குவதிலும், மெட்டாஸ்டாஸிஸைத் தடுப்பதிலும் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன, இது டெவலப்பர்களிடையே நம்பிக்கையைத் தூண்டுகிறது.மெலனோமா மற்றும் சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் போன்ற தீவிர புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆரம்பகால மனித பரிசோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன. தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் உறுதிப்பாடு, மேம்பட்ட புற்றுநோயியல் சிகிச்சையை பரவலாக அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு தேசிய உத்தியையும் எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் தடுப்பூசி வளர்ச்சியின் உலகளாவிய நிலப்பரப்பு: ரஷ்யா தைரியமான அறிவிப்புகளை வெளியிடும் அதே வேளையில், தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசிகளின் வளர்ச்சி என்பது உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வரும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த துறையாகும். COVID-19 தொற்றுநோயில் mRNA தொழில்நுட்பத்தின் வேகமும் வெற்றியும் உண்மையில் உலகளவில் புற்றுநோய் தடுப்பூசி ஆராய்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட வீரியத்தையும் முதலீட்டையும் செலுத்தியுள்ளன. அமெரிக்கா: மாடர்னா மற்றும் மெர்க் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன, அவற்றின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி (mRNA-4157/V940) மெலனோமா நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு சிகிச்சையுடன் (பெம்பிரோலிஸுமாப்) இணைந்தால் கட்டம் 2b சோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது.இந்த கலவையானது மீண்டும் வருவதற்கான அல்லது இறப்புக்கான ஆபத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பை நிரூபித்துள்ளது, இது 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்க வழிவகுத்தது. "உலகளாவிய" புற்றுநோய் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளும் உள்ளன, புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அனைத்து வகையான புற்றுநோய்களையும் அடையாளம் கண்டு நிராகரிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் அணுகுமுறையை ஆராய்கின்றனர், தற்போது ஆரம்பகால மருத்துவ பரிசோதனைகளில் உள்ளனர். ஜெர்மனி: கோவிட்-19 தடுப்பூசி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பயோஎன்டெக் , தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ புற்றுநோய் தடுப்பூசிகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.கணைய நாள அடினோகார்சினோமா போன்ற மிகவும் கடினமான புற்றுநோய்களுக்கான தடுப்பூசிகள் குறித்து மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையம் போன்ற நிறுவனங்களுடன் அவர்கள் ஒத்துழைத்து வருகின்றனர், அங்கு ஆரம்பகால தரவுகள் நோயெதிர்ப்பு மறுமொழிகளை ஊக்குவிப்பதாகவும் நோய் மீண்டும் வருவதை தாமதப்படுத்துவதாகவும் காட்டுகின்றன. யுனைடெட் கிங்டம்: இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, புற்றுநோய் தடுப்பூசி முயற்சிகளில் பயோஎன்டெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது, இந்த மேம்பட்ட சிகிச்சைகளை அவர்களின் சுகாதார அமைப்பில் ஒருங்கிணைப்பதற்கான தேசிய உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. பிற அணுகுமுறைகள்: mRNA க்கு அப்பால், பிற வகையான புற்றுநோய் தடுப்பூசிகளும் உலகளவில் வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் உள்ளன, அவற்றுள்: டென்ட்ரிடிக் செல் தடுப்பூசிகள்: இவை நோயாளியின் நோயெதிர்ப்பு செல்களை எடுத்து, புற்றுநோயை அடையாளம் காண "கற்பித்து", பின்னர் அவற்றை மீண்டும் செலுத்துவதை உள்ளடக்குகின்றன. வைரஸ் திசையன் தடுப்பூசிகள்: புற்றுநோய் சார்ந்த ஆன்டிஜென்களை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்க மாற்றியமைக்கப்பட்ட வைரஸ்களைப் பயன்படுத்துதல்.பிரெஞ்சு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான டிரான்ஸ்ஜீன், NEC கார்ப்பரேஷனுடன் இணைந்து, கருப்பை மற்றும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு இதை ஆராய்ந்து வருகிறது. கட்டி லைசேட் மற்றும் நியோஆன்டிஜென் அடிப்படையிலான பெப்டைட் தடுப்பூசிகள்: குறிப்பிட்ட புற்றுநோய் புரதங்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு மறுமொழிகளைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய நிலப்பரப்பு நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீரக புற்றுநோய்கள் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு தொடர்ச்சியான ஏராளமான மருத்துவ பரிசோதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது.தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகளுக்கான சாத்தியக்கூறுகள் மகத்தானவை என்றாலும், அதிக உற்பத்தி செலவுகள், கட்டி உயிரியலின் சிக்கலான தன்மை மற்றும் செயல்திறன் மற்றும் நீண்டகால பாதுகாப்பை உறுதிப்படுத்த வலுவான, பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளின் தேவை உள்ளிட்ட சவால்கள் உள்ளன என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.உகந்த இலக்குகளை அடையாளம் காண்பது முதல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது வரை இந்த செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான கருவியாக AI இன் ஒருங்கிணைப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆராய்ச்சி முயற்சிகளின் ஒருங்கிணைப்பு புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. ரஷ்யாவின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்றாலும், அவை தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பயனுள்ள புற்றுநோய் சிகிச்சைகளின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான பரந்த, கூட்டு உலகளாவிய உந்துதலின் ஒரு பகுதியாகும். குறிப்புகள் GxP செய்திகள். (2025, ஜூன் 3). ரஷ்யாவில் mRNA புற்றுநோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலவரிசை . https://gxpnews.net/en/2025/06/expected-timeline-for-the-mrna-cancer-vaccine-launch-in-russia/ இலிருந்து பெறப்பட்டது. டாக்டர் தடுப்பூசிகள். (இரண்டாவது). ரஷ்யாவின் புதிய mRNA புற்றுநோய் தடுப்பூசி 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டது - புற்றுநோய் சிகிச்சையில் ஒரு திருப்புமுனை . https://www.drvaccines.com/blog/russias-new-mrna-cancer-vaccine-launching-in-2025-a-breakthrough-in-cancer-treatment இலிருந்து பெறப்பட்டது. இமேஜ் இதழ். (2025, பிப்ரவரி 6). ரஷ்யா 2025 ஆம் ஆண்டில் புரட்சிகரமான இலவச mRNA புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்த உள்ளது .https://imageusa.com/russia-to-launch-revolutionary-free-mrna-cancer-vaccine-in-2025/ இலிருந்து பெறப்பட்டது. நியூஸ்வீக். (2025, ஜூலை 24). புற்றுநோய் தடுப்பூசி முன்னேற்றம்: 'அற்புதமான' ஆரம்பகால தரவு பற்றி நமக்குத் தெரிந்தவை . https://www.newsweek.com/cancer-vaccine-breakthrough-data-2102133 இலிருந்து பெறப்பட்டது. MDPI. (2025, ஜூன் 4). RNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசிகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்கள்: 2025 புதுப்பிப்பு . https://www.mdpi.com/2072-6694/17/11/1882 இலிருந்து பெறப்பட்டது. குளோபல்ஆர்பிஹெச். (2025, ஜூன் 10). சிகிச்சைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள்: 2025 இல் அறிவியல் தடைகளை உடைத்தல் . https://globalrph.com/2025/06/cancer-vaccines-for-treatment-breaking-through-scientific-barriers-in-2025/ இலிருந்து பெறப்பட்டது. Labiotech.eu. (2025, மே 5). 2025 ஆம் ஆண்டில் பார்க்க வேண்டிய 11 நம்பிக்கைக்குரிய புற்றுநோய் தடுப்பூசி நிறுவனங்கள் . https://www.labiotech.eu/best-biotech/cancer-vaccine-companies/ இலிருந்து பெறப்பட்டது. ஆன்காலஜி நியூஸ் சென்ட்ரல். (2025, ஜூலை 28). புற்றுநோய் தடுப்பூசிகள் இறுதியாக திருப்புமுனையை எட்டுகின்றன என்று நிபுணர் கூறுகிறார் . https://www.oncologynewscentral.com/oncology/cancer-vaccines-finally-reach-turning-point-says-expert இலிருந்து பெறப்பட்டது. CancerNetwork®. (2025, ஜூலை 25). தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசிகள் சிறுநீரக புற்றுநோயில் சிகிச்சை விருப்பங்களை மாற்றக்கூடும் .https://www.cancernetwork.com/view/key-advances-across-kidney-cancer-research-and-management-at-kcrs-2025 இலிருந்து பெறப்பட்டது. ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட mRNA அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பூசியான Enteromix, மருத்துவ பரிசோதனைகளில் 100% செயல்திறன் மற்றும் பாதுகாப்பை நிரூபித்துள்ளது, இது புற்றுநோய் சிகிச்சையில் ஒரு சாத்தியமான திருப்புமுனையை வழங்குகிறது. COVID-19 தடுப்பூசிகளைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது, இது கடுமையான பக்க விளைவுகள் இல்லாமல் புற்றுநோய் செல்களை அகற்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கிறது. இந்த தடுப்பூசி பொதுமக்களுக்குக் கிடைப்பதற்காக சுகாதார அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும் அறிய கீழே படிக்கவும்! மேலும் படிக்க பட உரிமைகள்: எக்ஸ் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான உயிர்களை மேம்படுத்தி காப்பாற்றும் ஒரு அதிசயமாக இருக்கக்கூடியது, ரஷ்யாவின் mRNA- அடிப்படையிலான தடுப்பூசி Enteromix மருத்துவ பரிசோதனைகளில் 100% செயல்திறன் மற்றும் பாதுகாப்பைக் காட்டியுள்ளது. இது தீவிரமான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் அவற்றைத் தடுப்பதற்கும் எதிரான ஒரு நம்பிக்கையாக இருக்கலாம்."ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி இப்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என்று மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் (FMBA) அறிவித்துள்ளது. MRNA அடிப்படையிலான தடுப்பூசி முன் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்து, அதன் பாதுகாப்பு மற்றும் உயர் செயல்திறனை நிரூபித்துள்ளதாக FMBD தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா கூறினார். இந்த தடுப்பூசி கட்டிகளைச் சுருக்குவதிலும் அவற்றின் வளர்ச்சியைக் குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டியது, மேலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் தனிப்பட்ட RNA க்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படும் என்று ஸ்க்வோர்ட்சோவா கூறினார். தடுப்பூசியின் முதல் வடிவம் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் என்றும், மற்றொரு பதிப்பு கிளியோபிளாஸ்டோமா - ஒரு மூளை புற்றுநோய் - மற்றும் குறிப்பிட்ட வகை மெலனோமா, ஒரு தோல் புற்றுநோய்க்கு உருவாக்கத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்," என்று உலகளாவிய கம்பி மற்றும் டிஜிட்டல் செய்தி சேவையான ஸ்புட்னிக், X இல் பதிவிட்டுள்ளது.நிபுணர்கள் கூறும் 10 பொதுவான ஊட்டச்சத்து நம்பிக்கைகள் முற்றிலும் தவறானவை. கோவிட்-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி என்டோரோமிக்ஸ் உருவாக்கப்பட்டது. புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிப்பதன் மூலம் இது செயல்படுகிறது. கூடுதலாக, இது ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பயனாக்கப்பட்டுள்ளது.சுவாரஸ்யமாக, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு போலல்லாமல், தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை மற்றும் நோயாளிகள் அதை நன்கு பொறுத்துக்கொண்டனர். பட உரிமைகள்: எக்ஸ் முன்னதாக, ரஷ்யா 48 தன்னார்வலர்களுடன் இணைந்து புதிய என்டோரோமிக்ஸ் ஆன்கோலிடிக் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்தது. இந்த மருந்தை நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கதிரியக்க மையம், ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனத்துடன் (EIMB) இணைந்து உருவாக்கியது.ஜூன் 18 முதல் 21 வரை வடக்கு ரஷ்யாவில் நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் (SPIEF 2025) மருத்துவ பரிசோதனையின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள ரோஸ்காங்கிரஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் ரஷ்யாவின் முன்னேற்றத்தை காட்சிப்படுத்தியது.மெட்பாத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, புற்றுநோய் கட்டிகளைத் தாக்கி அழிக்க என்டோரோமிக்ஸ் நான்கு பாதிப்பில்லாத வைரஸ்களைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் நோயை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல வருட சோதனைகளுக்குப் பிறகு, வளர்ச்சியைக் குறைப்பதிலும், சில சமயங்களில் புற்றுநோயை முற்றிலுமாக அழிப்பதிலும் இது செயல்திறனைக் காட்டியுள்ளது.சோதனைகள் முடிந்த நிலையில், மீதமுள்ள ஒரே படி ஒழுங்குமுறை அனுமதி மட்டுமே. அங்கீகரிக்கப்பட்டால், என்டோரோமிக்ஸ் பொதுமக்களுக்குக் கிடைக்கும் முதல் தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசியாக மாறும். எழுத்தாளர் பற்றி
  10. யாழ்ப்பாணத்தில் தமிழ் பெண்கள் சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரித்து வருவதாக ஒரு செய்தியைப் பார்த்தேன். அதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஆனால் அதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளது . ஒரு தமிழ் பெண் தமிழரை திருமணம் முடிப்பதை விட ஒரு சிங்களவரை திருமணம் முடிக்கும் பொழுது திருமணத்தின் பின் அவளுக்குக் கிடைக்கின்ற சுதந்திரம் அதிகமானது. ஒப்பீட்டளவில் தமிழ் ஆணை மணமுடிக்கும் பொழுது வருகின்ற சீதனப் பிரச்சனை, சாதிப் பிரச்சனை போன்றவை ஒரு சிங்களவரை மணம் முடிக்கும்போது போது குறைவாகத்தான் வரும். ஜாதகம் பார்ப்பது சிங்களவர்களிடேயும் இருந்தாலும் இறுக்கத்தன்மை மிகக் குறைவு. முக்கியமாக மணமகன் வீட்டில் இருக்கும் பெண்களால் மணப்பெண்ணுக்கு வருகின்ற அழுத்தங்கள் சிங்கள குடும்பங்களிலே மிக மிகக் குறைவு. ஒரு தமிழ் பெண் மனமுடிக்கும் பொழுது கணவனின் தங்கை ,அக்கா , அம்மா எல்லோரும் அந்த பெண்ணை ஒரு அடிமை மனநிலையிலேயே பார்க்கின்றார்கள். அண்மையில் இந்தியாவில் ஒரு ஆடியோ பதிவு லீக்காகி இருந்தது அதிலே ஒரு கணவன் தன் மனைவியை சீதனம் கேட்டு எவ்வாறு அடித்து கொடுமைப்படுத்துவேன் என்று தங்கையிடம் பேசும் பொழுது, அந்தத் தங்கை கணவனை பாராட்டி அவளுக்கு அப்படித்தான் இன்னும் அடிக்க வேண்டும் என்று செல்கிறார். இலங்கையில் அவ்வாறான ஓடியோக்கள் இல்லாவிட்டாலும் பல குடும்பங்களில் அவ்வாறு நடக்கின்ற ஆதாரங்கள் என்னிடமே இருக்கின்றன. அவர்களின் அடையாளம் வெளிப்படும் என்பதற்காகவும் , சில விவாகரத்து வழக்குகள் இப்பொழுது நிலுவையில் இருப்பதாலும், சிலவேளை அந்த ஆண் மகன்கள் மனசு மாறி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற சின்ன நம்பிக்கையிலும் அவை எதையும் நான் வெளியிடுவதில்லை. நான் சிங்களவர்களோடு பழகி அவர்களின் திருமணங்களுக்கு சென்ற பொழுது பார்த்த விடயம், திருமணத்தை தம்பதியினரே பிளான் பண்ணுகிறார்கள். அங்கு அவர்களுடைய பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் இருக்கின்ற அழுத்தம் தமிழ் பெற்றோருக்கு இருக்கின்ற அழுத்தத்தை விட மிகக் குறைவு. குறிப்பாக சிங்கள இளைஞர்கள் அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும் தங்கள் துணையை தாங்களே தீர்மானித்து கொள்ளவே விரும்புகிறார்கள். குறிப்பிட்ட வயது வந்ததும், குறிப்பாக பல்கலைக்கழகம் வந்ததும் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளவே விரும்புகின்றார்கள். அங்கு புரோக்கர், சாதி, ஜாதகப் பொருத்தம் போன்றவை மிக குறைவாகவே செல்வாக்கு செலுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு அந்த தம்பதியினரின் வாழ்க்கையில் மண மகனின் குடும்பத்தார் அளவுக்கு அதிகமாக செல்வாக்கு செலுத்துவதில்லை. அவர்கள் புதுமணத் தம்பதிகளை தனித்து சுதந்திரமாக வாழ அனுமதி கொடுப்பது தமிழர்கள் விட சிங்களவர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அக்காவுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், தங்கச்சிக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண்ணை கொடுமை படுத்துவதும் அங்கு ஒப்பிட்டளவில் மிக மிகக் குறைவு. இந்தச் சுதந்திரங்களை அறியும் பொழுது நிச்சயமாக தமிழ் பெண்கள், தமிழ் மணமகனை மணமுடிப்பதை விட சிங்கள மணமகனை மணமுடிப்பதை விரும்புகின்ற போக்கு அதிகரிக்கும். Sivachandran Sivagnanam ·
  11. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446390
  12. நானும் பகிடிக்குத்தான் எழுதினேன் சிறியர் . ........ ! ஒரு தகவலுக்காக . ..... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீதியால் நாய் பிடிக்கிற கூண்டு வண்டியும் கூடவே நாலு , ஆறுபேர் கையில் கம்பி வளையம் கொண்ட தடியுடனும் வந்து தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள் . ..... சிலசமயங்களில் வீடுகளில் வளர்க்கும் நாய்களும் அம்பிடுவதுண்டு , அதை உரிமையாளர் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போவார்கள் ...... சுமார் ஆறுமாதம் ஒருவருடத்துக்கு தெருநாய்த் தொல்லை இருக்காது ........ இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் .......நீங்களும் பக்கத்து வீதிதானே ........ ஆனால் இப்ப அப்படியில்லை . ...... மிருக அமைப்புகள் அப்படி இப்படியென்று பல அவற்றைக் காப்பாற்றி அதனால் அவை வீதிகளில் பெருகி மனிதர்கள் சிறுவர் எல்லோருக்கும் பயத்தைக் கொடுத்துக் கொண்டு திரிகின்றன . ..... அதையும் தாண்டி முன்பு ஒரு கதை பிரபலம் . ......"சங்கானை சந்தையில் வசித்து வந்த நாய் ஒன்று இந்த பஸ்சுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறதையும் போறதையும் பார்த்து தானும் ஒருக்கால் யாழ்ப்பாணப் பார்க்க வெளிக்கிட்டு தனது சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி முதிய நாயன்மார் தடுக்கவும் கேளாமல் கிளம்பிச்சுது . ..... முதல் சண்டிலிப்பாயில் ஒரு தாக்குதல் அடுத்து மானிப்பாய்த் தாக்குதலில் மருதடி வயலுக்குள்ளால் விழுந்து எழும்பி ஒருமாதிரி ஆணைக்கோட்டையில் வந்து நிமிர்ந்தால் அங்கு அகோரமான தாக்குதல் ...... இனித் தாங்கேலாது என்று யாழ்பாணக் கனவும் கலைந்து நடுநிசியில் மீண்டும் தட்டுத் தடுமாறி சங்கானை சந்தைக்கே வந்து படுத்து அனுங்கிக் கொண்டு கிடந்தது . ......காலையில் மற்ற நாய்கள் வந்து இதன் நிலையைப் பார்த்து ஆங்காங்கே கிடந்த நாறின மீன்கள், எலும்புகளைக் கொண்டுவந்து இதுக்கு குடுத்து "ஏனனை நீ நேற்று போயிட்டு அதுக்கிடையில வந்திட்டாய் எப்படி இருக்கு யாழ்ப்பாணம் என்று குசலம் விசாரித்தன ...... அதுக்கு இது சொல்லுது நான் எங்கே யாழ்ப்பாணம் போனேன் ....... ஏன் மனுசர் உனக்கு அடிச்சு திரத்திப் போட்டினமோ என்று கேட்க . ......சீச்சீ ....அப்படியே அவங்கள் அடிச்சிருந்தால் கூட என் மனம் ஆறியிருக்கும் ......ஒருத்தரும் என்னைத் தொடேல்ல ஆனால் நம்ம இனம் இருக்கே அதுதான் நமக்கு எதிரியாய் இருக்கு . ....... காணுற இடமெல்லாம் கடி கடி என்று கடித்து உடம்பை ரணமாக்கிப் போட்டுதுகள் , ஆணைக்கோட்டையோட என் கொட்டமும் அடங்கி அங்கால போக முடியாமல் இங்கால வந்திட்டன்" .......அந்த மாதிரி இப்ப நாய்களே நாய்களுக்கு எதிரிகளாய் இருக்குதுகள் . ........! 😘
  13. இதோ, உங்கள் ஆவலுக்கு "அவல்!அருமையான பின்னூட்டங்கள் வீடியோவின் கீழே! (அவை காசாவை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்போடவே "உப்புக் கிணறு கிண்டினோம்"😎 என்று எங்கள் யாழ் கள ட்ரம்ப் விசிறிகள் போல அழ ஆரம்பித்து விட்டார்கள்).
  14. தொடர்ச்சியாக குறளிசை காணொளிகள் இணைக்கப்படுகின்றன. சித்திரா அம்மா, சுசீலா அம்மா. நித்யசிறி, சுதா ரகுநாதன் என நாம் அறிந்த ஏராளம் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இளையராஜாவின் புதல்வி பவதாரிணி அவர்களின் குரலிலும் ஒரு குறள் இன்று பார்த்தேன். பவதாரிணி அவர்கள் மறைந்துவிட்டாலும் அதற்கு முன்னரே அவர் குரலில் குறள் ஒன்று பதிவு செய்யப்பட்டது சிறப்பு.
  15. மூவாயிரம் யூரோ செலவாகும் மருந்தை "சும்மா கொடுப்பதை" சொல்கிறீர்களா? ஒரு தடவை யோசித்துப் பாருங்கள்: உலகத்தில் ஏதாவது மருந்து இலவசமாக யாருக்காவது கிடைக்கிறதா? பெற்றுக் கொள்பவர் விலையைக் கொடுக்கா விட்டால் அது சும்மா வருகிறது என்று அர்த்தமல்ல. எங்கோ இருந்து வேறொருவர் விலையைக் கொடுத்திருக்கிறார் , பெறுனர் பயன் பெற்றிருக்கிறார் என்று தான் அர்த்தம். சில வளர்ந்த நாடுகளில் இது பெறுனரே வேறு வழிகளில் செலுத்தும் வரியாக இருக்கும், இலங்கை போன்ற நாடுகளாக இருந்தால், செல்வந்த நாடுகள் கொடுத்த நன்கொடையாக இருக்கும். ஒரு முதலைப் போட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு பொருளை உருவாக்கி, அதை சும்மா கொடுத்தால், இந்தப் பொருளை தொடர்ந்து எப்படி உற்பத்தி செய்வது? இதைச் செய்யும் மாயாஜாலம் எதுவும் முதலாளித்துவத்திலோ, சோசலிச, கம்யூனிச அமைப்பிலோ கண்டு பிடிக்கப் படவில்லை. எனவே, வேலை செய்யும் மருந்துகள் விலைக்குத் தான் கிடைக்கும் (வேலை செய்யா போலி மருந்துகள் சும்மா கிடைக்கலாம், அது வேறு கதை😎). ஆனால், பெறுனருக்கு பொருளாதார வசதியில்லா விட்டால், அரசு தலையிட்டு மருந்தைப் பெற்றுக் கொடுக்கும் படி செய்யலாம். அமெரிக்காவிலேயே இந்த மாதிரியான நிவாரணங்கள் இருக்கின்றன.
  16. எங்கட வீட்டு பெண் நாயைப் பிடித்தால் தகுந்த சன்மானம் தருவோம் அண்ணை! இலவச விசர்நாய்த் தடுப்பூசி போட அம்பிடுதில்லை(தண்டப் பணம் 25000 ரூபாவாம்), மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்திருக்கிறார்கள் யாரோ புண்ணியவான்.
  17. இப்படி அங்கிருந்து முழங்கிவிட்டு ஜெனீவா வந்து தனிப்பட்ட முறையில் மூடிய அறைகளுக்குள் கூட்டம் நடத்திவிட்டுப் போன எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகளைப் பார்த்துவிட்டோம்.
  18. என்ர பெடியன் சைனிஸ் காரியை கட்டியிருக்கிறான், என்ர பிள்ளை டொமினிகன்காரனை கட்டியிருக்கிறாள் என்று சொன்னால் அதுக்குமேல் கேள்வியில்லை. ஆனால் சிறிலங்காவில கட்டியிருக்கிறார் என்றால்தான் அடிமடியில கைவைக்கும் ஆயிரம் கேள்வி. எந்த இடம், என்னசாதி, ஏன் அந்தச்சாதி, ஏன் இந்தச்சாதி ?வடக்கா ? கிழக்கா? வேற இடம் கிடைக்கலியா ? ஐயையோ . “தமிழர் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு “
  19. உங்கள் டெக்னிக் என்னவென்று சொன்னால் அங்கு விடுமுறைக்குப் போய் வெட்டியாகத் திரிபவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும்.
  20. எல்லோரும் ஏறிய குதிரையில் அர்ச்சுனாவும் ஏறி விழப் போகிறார். அங்கே போய் முறையிட்டு பிரச்சனை தீர்க்க முடியுமா?
  21. இப்போதும் வந்திருக்க மாட்டீர்கள். ஊசி போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள். இதுவே கடேசி பயணம் என்று பிள்ளைகளும் சொல்லியிருப்பினம்.
  22. என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.
  23. அண்ணை, இது தடுப்பூசி அல்ல. நோய் வந்தவர்களுக்கு போட்டால் சுகம் வருதாம்.
  24. குருவியை விட மீன் பெரிசாக இருக்குது. சாவின் விளிம்பில்... குருவி என்று வர வேண்டும். 🤣
  25. வெளிநாடுகளில வெள்ளைகளை முடிச்சதை பற்றி வாய் தொறங்க துர சிறி அண்ணை இந்த கலியாணம் கட்டுன தமிழ் ஆம்பிளைகளை சிங்களப்பிள்ளைகள் திரும்ப கல்யாணம் கட்டுமா கேட்டுச்சொல்லுங்க wea are waiting 😎😎😎😎
  26. குறட்பா: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். விளக்கம்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது சமமானது அல்லது ஒன்றே. சிறப்பொவ்வா: சிறப்புத்தன்மையில் வேறுபாடு இருக்கும். செய்தொழில் வேற்றுமை யான்: செய்யும் தொழில்களில் உள்ள வேறுபாடுகளால் மட்டுமே இது அமையும். சுருக்கமாக, நாம் பிறந்ததில் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த குறள் வலியுறுத்துகிறது. ஆனால், நாம் செய்யும் செயல்கள், நமது திறமைகள், நாம் செய்யும் தொழில் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளால் தான் சமூகத்தில் ஒருவரின் சிறப்புத்தன்மையும், மதிப்பும் அமைகின்றன. இது, சமூக வேறுபாடுகள் பிறப்பால் அல்லாமல் செயல்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
  27. மேலுள்ள கட்டுரையில் கூட இது ஒரு Therapeutic vaccine என கூறப்படவில்லை அதனால் பொதுவாக எல்லோருக்கும் குழப்பம் நிலவியிருந்தது, ஆனால் ஆரம்பத்திலேயே இது வழமையான Prophylactic vaccine இல்லை என கூறியதாக நினைவுள்ளது. அதனால் சாதாரண தடுப்பூசி போல இதனை அனைவரும் போட முடியாது, நோய் ஏற்பட்டவர்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. அதனாலேயே இந்த தடுப்பூசிகள் மிக விலை அதிகமாக உள்ளது பொதுவாக கோவிட் தடுப்பூசி போல பெருமளவில் ஒரே தொழில்னுட்பத்தில் பெருமளவில் விலை குறைவாக இதனை தயாரிக்க முடியாது. மொர்டேனாவின் தடுப்புசியும் இரஸ்சியாவின் இந்த தடுப்பூசியும் கிட்டதட்ட ஒரே மாதிரியானவை என கூறப்படுகிறது, மனித ஆராய்ச்சியில் மொர்டேனா இரண்டாம் கட்டத்தினை முடித்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த இரு தடுப்பூசிகளிலும் இரஸ்சியா கூறும் உற்பத்தி செலவுதான் பெருமளவான சர்ச்சையினை கிளப்பியுள்ளதாக கருதுகிறேன், 3000 யூரோவிற்கு இதனை தயாரிக்க முடியாது, மொர்டேனா தடுப்பூசி ஒரு நோயாளருக்கு 50000 -100000 டொலர் வரை உற்பத்தி செலவாகலாம் எனவும், மொர்டேனா ஒரு வர்த்தக நிறுவனம் என்பதால் ஒரு நோயாளியின் தடுப்பூசி 150000 வரை செல்லலாம் என கருதுகிறேன். சில நிறுவனங்கள் இதன் உற்பத்தி செலவினை குறைப்பதற்கு வேறுபட்ட பிளட்போர்மினை பயன்படுத்துவதில் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள் என கருதுகிறேன். இவ்வாறு விலை அதிகமான ஒரு தடுப்பூசியினை இலவசமாக கொடுத்தால் யார்தான் வரவேற்கமாட்டார்கள்?
  28. நான் ஊரில் இருக்கும் போது வாய்க்கால்,குளங்கள் என தூர்வாரும் பணிகளில் சிரமதானமாக முறையில் ஈடுபட்டுள்ளேன். ஒரு குளத்திற்கு நான்கு பக்கமும் சீமேந்து அணைகள் இருக்குமேயானால் தூர்வார வேண்டிய அவசியம் வராது. தனியே அதனை சுத்தம் செய்வதாகவும் கழிவுகளை அகற்றுவதாகவே அமையும். ஆனால் தூர் வாருவது என்பது வெளி மண் குளத்திலோ குட்டையிலோ மழை வெள்ளங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் வந்து நிரம்புவதை வெளியேறுவதை தான் சொல்வது... அதை விட.... சில வருடங்களிற்கு முன்னர் யாழ்களத்தில் தூர்வார்வது பற்றிய திரியில்....எப்படித்தான் குளங்களை தூர்வாரினாலும் நன்னீருக்குள் கடல் உப்பு நீர் உட்புக நூறுவீதம் சாத்தியம் உள்ளது ஒரு இணைப்பும் இணைக்கப்பட்டது.
  29. கைத்தொலைபேசி வைத்திருப்பவர்கள் எல்லாம் நிருபர்களாகவும் செய்தியாளர்களாகவும் உருவெடுத்தன் விளைவு.
  30. இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது போல் தெரிகின்றதே.
  31. ஆகா என்பி கடைசியாக உங்கள் முயற்சி பயலளித்துள்ளது. பாராட்டுக்கள். மீண்டும் ஒரு வேண்டுகோள். காணொளிகளைப் பதியும் போது பாடலின் முதல் வரியையும் எழுதிவிடுங்கள். நன்றி.
  32. ஒரு பெரும்படையே பிணை எடுக்க தயாராயிருக்கும்...சட்டமா அதிபர் திணக்கள அலுவலர்கள் பாடு பெரும் கொண்டாட்டம்
  33. பார்வை ஒன்றே போதுமே பாய்ந்து விலங்குகள் ஓடவே ......! 😃
  34. பரவாயில்லை மோகன். தனிமடல் பகுதி எப்போதாவது தானே எழுதுவது.கருத்துக் களத்தில் எழுதிவிட்டு வெட்டி ஒட்டினால் சரிதானே. உங்கள் கரிசனைக்கு மிக்க நன்றி மோகன்.
  35. சிலருக்கு... புட்டின் என்ன செய்தாலும் பிழை கண்டு பிடிப்பதே முழு நேரத் தொழில். அவர்கள்... கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதில் ஒரு அற்ப திருப்தி. அதுக்கு ஜால்ரா போட பின்னாலை இரண்டு பேர் திரியும் போது.. அவர்களுக்கும் குசி வந்து பினாத்திக் கொண்டு இருப்பது வாடிக்கை. இதுகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கடந்து போவதே புத்திசாலித்தனம்.
  36. மேலே நீங்கள் காண்பித்த பதிலெழுதும் பெட்டியே உங்களுக்கு காண்பிக்கவில்லை என்று ஒரு குழப்பம் இருந்தது. உங்களுக்கு களத்தில் கருத்துக்களுக்கு பதில் எழுதும் போது காண்பிப்பது போன்று தமிழில் எழுதுவதற்கு உரிய பகுதி காண்பிக்குவில்லை என்று விளங்குகின்றேன். முன்னைய பதிப்பில் அவ்வாறான ஒரு தெரிவு இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன். புதிய பதிப்பிற்கு மாறிய பின்னர் அந்த பகுதி தனிமடல் பகுதியில் இல்லை. மாற்று வழி ஏதாவது உள்ளதா எனப் பார்க்கின்றேன்.
  37. ஹ... ஹா... ஹா.... ராஜபக்ச கோஷ்டியின் சிவப்பு சால்வைகள் கழட்டப் பட்டு, சிறைச்சாலை சீருடை (Uniform) வழங்கப் பட இருக்கின்றது.
  38. இதை உங்களுக்கும், "நோபல் பரிசுக் குழுவில்" இருக்கும் தமிழ்சிறிக்கும் 😎 விளக்கி எவ்வளவு பயன் இருக்குமோ தெரியாது, ஆனாலும் ஏனைய வாசகர்களுக்காக: புற்று நோய்க்குத் தடுப்பூசி (cancer vaccine) என்று அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. அது ஆரோக்கியமான ஒருவரில் புற்று நோய் வராமல் தடுக்கிறது என்பதால் அல்ல, உடலின் நோயெதிர்ப்பு சிஸ்ரத்தை ஏற்கனவே உருவாகி விட்ட புற்று நோய்க்கெதிராகத் திருப்பி விடும் வேலையைச் செய்வதால் தடுப்பூசி என்கிறார்கள். இதைப் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் நடக்கின்றன. கடந்த 2023 இல், அமெரிக்காவின் ஒரு முன்னணி ஆய்வு நிறுவனம் கணையப் புற்று நோய்க்கெதிராக எம்.ஆர்.என் ஏ தடுப்பூசியை நீங்கள் குறிப்பிட்ட 3 நிலை ஆய்வுகளுள், முதலாவது Phase 1 ஆய்வை செய்து முடித்திருக்கிறது. Memorial Sloan Kettering Cancer CenterIn Early-Phase Pancreatic Cancer Clinical Trial, Investig...Learn how MSK researchers are deploying mRNA vaccines against pancreatic cancer.https://www.nature.com/articles/s41586-023-06063-y 👆இந்த அமெரிக்க ஆய்வுக்கும், மேலே இருக்கும் "ரஷ்ய வக்சீன்" செய்திக்கும் ஒரு பாரிய வித்தியாசம் என்ன? அமெரிக்க ஆய்வை விஞ்ஞான முறைகளின் படி சஞ்சிகைகளில் peer review செய்து வெளியிட்டிருக்கிறார்கள். யாரும் சென்று பார்க்கலாம். ரஷ்யாவின் என்ரெறோமிக்ஸ் பற்றி எந்த ஆய்வு அறிக்கையும், peer review இற்கு உட்பட்டு வெளிவரவில்லை. எனவே, விஞ்ஞான உலகைப் பொறுத்த வரை, என்ரெறோமிக்ஸ் என்பது மாநகரசபையின் பைப் தண்ணீர் தான். அதை சும்மா கொடுத்தால் என்ன, அரையணாவுக்குக் கொடுத்தால் என்ன😂? புத்தியுள்ளோர் எடுத்துக் கொள்ளப் போவதில்லை!
  39. ஜேர்மனி தமது வெற்றி அரசியலுக்காக எதை எதையெல்லாமோ செய்ய ஆரம்பித்து இன்று பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள். உக்ரேன் ஜேர்மனிக்கு தேவையில்லாத சாக்கடை.👈 ஜேர்மனிக்கு உக்ரேன் போருக்கு பின்பும் ரஷ்யாவிலிருந்து எரிசக்தி வேறு வழியில் பலமடங்கு விலையில் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை இங்கு யாழ்களத்தில் எழுதிய போது என்னை சொல்லால் அடித்தார்கள். என்ன செய்ய?அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்!
  40. 150 வருடம் உயிர் வாழ்வது, பெருங்குடல் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி என்று ரஷ்யா வேறை லெவலில் குதிரைப் பாய்ச்சல் பாய்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கின்றது. 😂 அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம்… முடியை புடுங்கிக் கொண்டு நிற்கிறார்கள். 🤣
  41. ரசியாவுக்கு தடைவிதித்த நாடுகள் விரிசையில் போய் நிற்கப் போகிறார்களே?
  42. நன்றி தமிழ் சிறி அண்ணா யாழ் இணையத்திற்கும் எனக்குமான தொடர்பு குறைந்து கொண்டே போகிறது ஆனால் அந்த நாளில் யாழிணையத்தில் இணைந்த பலர் முகநூலில் ஒரு சில சந்திப்புக்களின் படங்களைக் கண்டு தொடர்பு கொள்வார்கள் அப்போது இருந்த புனைப்பெயரான முனிவர் ஜீ சொன்னால் அது நீதானாடா என்ற கேள்வியுடன் நண்பராக பழகி கொண்டதுதான் அஜிவன் அண்ணையின் நட்பு இறந்த செய்தி முகநூலில் தான் கண்டேன் ஆனால் அதற்கு முதல் கிழமையில் ராஜன் ஆஸ்பத்திரில இருக்கன் மூச்சு விட முடியல நுரையீரல் பிரச்சினை என சொன்னார். படங்களையும் அனுப்பி இருந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் அஜிவன் அண்ணா அநேகமாக சிலருடன் நட்புக்காகவாது யாழ் நண்பர்களுடன் பேசி வருகிறேன் நலன் விசாரிப்பு நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் கொன்டு செல்ல போவதில்லை அவரவர் நினைவுகளையாவது சுமந்து கொள்ளலாம் . அழைப்பின் வரிசையில் எல்லோரும் ............................................ யாழ் நண்பர்கள் அனைவரும் நலமாக இருங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். J.Rajah
  43. புலிகள் கொலன்னாவை எண்ணெய் குதங்களை தாக்கிய போது கண்டனம் தெரிவித்த மேற்கு நாடுகள் இப்போ உக்ரைன் தினமும் ரஷ்சியாவின் சர்வதேச எண்ணெய் வழங்கல் பாதைகளை தாக்குவது குறித்தோ இஸ்ரேல் மத்திய கிழக்கில் எண்ணெய் குதங்களை தாக்குவது குறித்தோ மூச்சும் விடுவதில்லை. ரஷ்சியாவின் எண்ணெய் என்னென்ன வடிவம் எடுக்கிறது.... ஆச்சரியம் தான். புட்டின் சாதிக்கிறார்,,,, இவை மேற்கினர் சாயினம்.
  44. சரியான பராமரிப்பின்மை.. காலாவதியான உதிரிப்பாகங்களுடன் இயங்குதல்.. தரமற்ற பிரதேசத்துக்கு உகந்ததற்ற வாகனங்களின் பயன்பாடு.. சாரதிகளின் பொறுபற்ற செயற்பாடுகள்..இவை தான் முக்கிய காரணங்கள்...
  45. என்னை வரவேற்றதற்கு மீண்டும் நன்றிகள். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன். பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினேன். நான் yarl.com வாசிப்பதற்க்கு காரணம், yarl.com ஊடக பல ஆக்கங்கள், தகவல்கள் மற்றும் செய்திகளை கிடைக்க பெறுகிறது. பலர் சிறந்த ஆக்கங்கள் எழுதுகின்றனர், மேலும் பல்வேறு மாறுபடட கருத்துக்களையும் எழுதுகிறார்கள். பலவற்றை நான் விரும்பாமல் போகலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக yarl.com சிறந்த ஒரு ஊடகம் என்றே சொல்லுவேன். முன்பாக, நான் சேராமல் இருந்ததற்குக் காரணம், நான் விவாதிப்பதில் அடிமையாகிவிடுவேனோ என்ற பயம். ஆனால் இப்போது சேருவதற்கு கரணம் பலர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு எழுதுகிறார்கள் / பங்களிக்கிறார்கள். எனவே, நான் குறைந்தபட்சம் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்றகாக. மேலும், எனக்கு சில துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளதாக்க நம்புகிறேன் ஆகவே நானும் பங்களிக்க முடியும்.
  46. நான் இப்போது மேற்குக் கரையில் ரசோதரனின் மாநிலத்தில். அடபாவிகளா பப்பாவில ஏறும் வயசா?
  47. தமிழருக்கும் சிங்களவருக்குமான கலப்பு பலகாலமாகவே இருந்துள்ளது, மரபணு ஆய்வறிக்கைகளும் அதையே கூறுகின்றன. இருவரும் பிறரது பின்புலத்தை மதித்து, விரும்பி செய்தால், இது நல்ல விடயமே.
  48. இலங்கையில் இனப் பிரச்சனை நாட்டையே இரண்டாக்கும் முன் இருந்த காலத்தில், வடக்கில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே சாதியப் பாகுபாடுகள் உச்சத்தில் இருந்தது. அன்றைய நாட்களில் சில தமிழ் வியாபாரிகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் வியாபாரங்களும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மீதான கட்டுப்பாடுகளும் மிகவும் அதிகமாக இருந்த காலகட்டம் அது. ஆனாலும் அன்று சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே திருமண உறவு மிகக் குறைவாக இருந்தது. காவல்துறை தலைவர் நடேசன் போன்ற ஓரிருவரே அப்படிச் செய்ததாக தெரிந்திருந்தது. போராட்டம் தீவிரமாக இருந்த காலம் வேறு. முற்று முழுதான சந்தேகமே இரண்டு பக்கங்களிலும் இருந்தது. இனப் பாகுபாட்டை மீறி எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்தும் ஒரு சாதகமான நிலை இருக்கவில்லை. மிகவும் சிலவே நடந்தன. இன்றைய போக்கு மாறி இருந்தால், அதற்கான பிரதான காரணம் வடக்கு மக்களின் பரம்பலே பிரதான காரணமாக இருக்கவேண்டும். வடக்கிலிருந்து வெளியேறிய மக்கள் நாட்டின் வேறு பகுதிகளில் நிரந்தரமாக , முக்கியமாக கொழும்பு போன்ற இடங்கள், வாழ ஆரம்பித்துவிட்டனர். அங்கு அவர்கள் வேறு இன மக்களுடன் அதிக இணக்கத்துடன், முன்னருடன் ஒப்பிடும் போது, இருக்கின்றார்கள் போல. இது இன்று உலகின் பல பெரு நகரங்களிலும் காணும் ஒரு நடைமுறையே. சென்னையில் கூட அவர்களின் மிகவும் இறுக்கமான சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி புதிய உறவுகள் அதிக அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. கிழக்கு மாகாணமோ மூவினங்களும் ஒரே அளவில் வாழும் ஒரு பிரதேசமாக மாறிவிட்டது. காலப்போக்கில் இன மற்றும் வேறு அடையாளங்களை தாண்டிய உறவுகள் அங்கே அதிகமாவது தவிர்க்க முடியாத ஒன்றே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.