Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7046
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/11/25 in all areas

  1. "சார்லி கேர்க் அமெரிக்காவில் பேச்சுச் சுதந்திரத்தின் பிதாமகன்" என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரை அவரது எண்ணங்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் கொலை செய்வது நவீன உலகில் இல்லாதொழிக்கப் பட வேண்டிய ஒரு குற்றம். ஆனால், சார்லி கேர்க் வெளிப்படுத்திய, அமெரிக்க இளையோரிடம் பரப்பிய எண்ணங்களின் உள்ளடக்கத்தை அவர் இறந்த பிறகு திரித்துச் சொல்லக் கூடாது. அவரது எண்ணங்களில் சில இவை: பெண்கள் "பெண்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்களுடைய கணவரை அவர்கள் தேடிப் பெறுவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்" "குழந்தை குடும்பமா, தொழில் வெற்றியா என்று வரும் போது குழந்தை குடும்பம் தான் முன்னுரிமை பெற வெண்டும்" அமெரிக்காவின் பல்லினத்தன்மை The great replacement theory என சில வெள்ளையின மேலாண்மையுடையோர் நம்பும் சதிக் கோட்பாட்டை கேர்க்கும் ஆதரித்துப் பரப்பினார். இதன் அடிப்படை தான், "வெள்ளையின பெண்கள் எவ்வளவு அதிகமாகக் குழந்தைகள் பெற்று வெள்ளைத் தோல், நீலக்கண் குழந்தைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவுக்கு அமெரிக்காவிற்கு நல்லது" என்ற போதனை. அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம் சில மாதங்கள் முன்னர் சார்லி கேர்க் சொன்னது :" துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், ஒவ்வொரு ஆண்டும் சிலர் துப்பாக்கி வன்முறைக்கு ஆளாகி உயிரிழப்பது தவிர்க்க இயலாதது. அது துவக்கு வைத்திருக்கும் உரிமைக்கு நாம் கொடுக்க வேண்டிய ஒரு விலை" நேற்று அவரது குடும்பமும் அமெரிக்கர்களின் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையைப் பேண அவரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். பரப்பிய பொய்த்தகவல்கள் "அமெரிக்காவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் (mass shootings) ஏராளமானவை பால் மாற்றம் செய்து கொண்டவர்களால் (trans people) தான் நடத்தப் பட்டன" தரவுகள் இல்லாத இந்தப் பொய்யை, நேற்று சுடப் படுவதற்கு 1 நிமிடம் முன்னரும் கூறியிருந்தார். அவர் பேசிய இறுதியான பேச்சே இந்தப் பொய் தான் என்பது பதிவில் இருக்க வேண்டும். கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான போலித் தகவல்களும் பரப்பினார். 2020 தேர்தலில் ட்ரம்ப் தான் வென்றார் என்று இறுதி வரை பேசி வந்தார். எப்படி உருவானார் கேர்க்? 2008 இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வந்த போது, உறுத்தல் ஏற்பட்ட வெள்ளையின மேலாண்மை கொண்ட ஒரு சிறு பிரிவில் இருந்து உருவானவர் தான் சார்லி கேர்க். 2012 இல் ஒபாமா இரண்டாம் தடவையும் வென்ற பின்னர், கல்லூரிகளில் கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சமவுரிமைத் திட்டத்தை (affirmative action) எதிர்த்து தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேச ஆரம்பித்தார். இதைக் கேட்ட பலர் "இந்த வெள்ளை இளைஞனுக்கு கறுப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதால் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது" என நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால், சார்லி கேர்க் எந்தக் கல்லூரிக்கும் தன் தகுதிகளை வைத்து விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாக தரவுகள் இல்லை. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அமெரிக்காவின் எந்தக் கல்லூரியிலும் பணம் செலுத்தி, சராசரித் தகுதிகளோடு படித்திருக்கலாம். லோயராக, எஞ்சினியராக வந்திருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் உள்ளூர் கல்லூரியொன்றில் சேர்ந்து, அங்கேயும் கல்வி கைகூடாமல் படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். வாய்ப்பேச்சை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது உருவான திட்டம் தான் "Turning Point USA -TPUSA" என்ற அமைப்பின் உருவாக்கம். இந்த TPUSA அமைப்பு மூலம், கல்லூரிகளுக்குச் சென்று திறந்த வெளிக் கூட்டங்களில் "Prove Me Wrong" என்ற தலைப்பில் மேலே இருப்பது போன்ற கருத்துக்களை Sound Bites ஆக தூக்கி வீசுவது தான் அவர் பாணி. கல்லூரி மாணவர்கள் எனும் போது impressionable age உடைய, தகவல்கள் அறியும் ஆர்வமோ நேரமோ இல்லாத பலர் இருப்பார்கள்.அத்தகைய மாணவர்களிடையே, மேலே இருப்பது போன்ற விச விதைகளை விதைத்து, அவர்கள் தகவல் அறியும் முன்னரே வலதுசாரித் தனத்தை Cool Trend ஆக மாற்றி விடுவது தான் சார்லி கேர்க் அணியின் திட்டம்- Play book. அதில் கணிசமாக வெற்றியும் பெற்றார்கள். இந்த கேர்க் வெற்றியின் பலாபலன்: 2017 இல் ட்ரம்ப், 2024 இல் மீண்டும் ட்ரம்ப் 2.0. இதனால் மாற்றியமைக்கப் பட்ட அமெரிக்க உச்ச நீதிமன்றம். சாதாரண, மிதவாதிகளான மக்கள் எங்கும் நிவாரணம் பெற இயலாத நிலை. இப்படி மக்களை மிதவாதிகளாக அல்லாமல், வலதுசாரிகளாக மட்டும் இருக்க வற்புறுத்தும் "பேச்சுச் சுதந்திரத்தின்" பிதாமகன் தான் சார்லி கேர்க். தன் வாய்ப்பேச்சினால் தனது குடும்பத்தினருக்கு ஏராளமான செல்வம் சேர்த்து வைத்து விட்டிருக்கும் அமரர் கேர்க் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்! அவர் விதைத்த நச்சு விதைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு அமெரிக்கர்கள் நாம் அறுவடை செய்வோம்!
  2. பல்லுக்குள் சிக்கிய பல்லியும் பாய்ந்து ஓடி வாழ வழி தேடுது ....... ! 😃
  3. நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்
  4. நானும் பகிடிக்குத்தான் எழுதினேன் சிறியர் . ........ ! ஒரு தகவலுக்காக . ..... எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீதியால் நாய் பிடிக்கிற கூண்டு வண்டியும் கூடவே நாலு , ஆறுபேர் கையில் கம்பி வளையம் கொண்ட தடியுடனும் வந்து தெரு நாய்களைப் பிடித்துக் கொண்டு போவார்கள் . ..... சிலசமயங்களில் வீடுகளில் வளர்க்கும் நாய்களும் அம்பிடுவதுண்டு , அதை உரிமையாளர் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு போவார்கள் ...... சுமார் ஆறுமாதம் ஒருவருடத்துக்கு தெருநாய்த் தொல்லை இருக்காது ........ இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் .......நீங்களும் பக்கத்து வீதிதானே ........ ஆனால் இப்ப அப்படியில்லை . ...... மிருக அமைப்புகள் அப்படி இப்படியென்று பல அவற்றைக் காப்பாற்றி அதனால் அவை வீதிகளில் பெருகி மனிதர்கள் சிறுவர் எல்லோருக்கும் பயத்தைக் கொடுத்துக் கொண்டு திரிகின்றன . ..... அதையும் தாண்டி முன்பு ஒரு கதை பிரபலம் . ......"சங்கானை சந்தையில் வசித்து வந்த நாய் ஒன்று இந்த பஸ்சுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வாறதையும் போறதையும் பார்த்து தானும் ஒருக்கால் யாழ்ப்பாணப் பார்க்க வெளிக்கிட்டு தனது சொந்தபந்தத்துக்கெல்லாம் சொல்லி முதிய நாயன்மார் தடுக்கவும் கேளாமல் கிளம்பிச்சுது . ..... முதல் சண்டிலிப்பாயில் ஒரு தாக்குதல் அடுத்து மானிப்பாய்த் தாக்குதலில் மருதடி வயலுக்குள்ளால் விழுந்து எழும்பி ஒருமாதிரி ஆணைக்கோட்டையில் வந்து நிமிர்ந்தால் அங்கு அகோரமான தாக்குதல் ...... இனித் தாங்கேலாது என்று யாழ்பாணக் கனவும் கலைந்து நடுநிசியில் மீண்டும் தட்டுத் தடுமாறி சங்கானை சந்தைக்கே வந்து படுத்து அனுங்கிக் கொண்டு கிடந்தது . ......காலையில் மற்ற நாய்கள் வந்து இதன் நிலையைப் பார்த்து ஆங்காங்கே கிடந்த நாறின மீன்கள், எலும்புகளைக் கொண்டுவந்து இதுக்கு குடுத்து "ஏனனை நீ நேற்று போயிட்டு அதுக்கிடையில வந்திட்டாய் எப்படி இருக்கு யாழ்ப்பாணம் என்று குசலம் விசாரித்தன ...... அதுக்கு இது சொல்லுது நான் எங்கே யாழ்ப்பாணம் போனேன் ....... ஏன் மனுசர் உனக்கு அடிச்சு திரத்திப் போட்டினமோ என்று கேட்க . ......சீச்சீ ....அப்படியே அவங்கள் அடிச்சிருந்தால் கூட என் மனம் ஆறியிருக்கும் ......ஒருத்தரும் என்னைத் தொடேல்ல ஆனால் நம்ம இனம் இருக்கே அதுதான் நமக்கு எதிரியாய் இருக்கு . ....... காணுற இடமெல்லாம் கடி கடி என்று கடித்து உடம்பை ரணமாக்கிப் போட்டுதுகள் , ஆணைக்கோட்டையோட என் கொட்டமும் அடங்கி அங்கால போக முடியாமல் இங்கால வந்திட்டன்" .......அந்த மாதிரி இப்ப நாய்களே நாய்களுக்கு எதிரிகளாய் இருக்குதுகள் . ........! 😘
  5. கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?
  6. நாம் வாழும் காலத்திலே இவற்றையெல்லாம் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று.....கொல்லும். ...இப்போது எல்லாம் சுடச்சுட ....
  7. 💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Sujatha Jaganathan ·teonSpodsr 0au5ug3221739g036h5cg8392fh9af7l5f665f4uuhc1h7ial · படித்து ரசித்த ஒரு அருமையான கதை. ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, "அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு." அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?" அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு." ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝" Voir la traduction
  8. திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் தேர் தீர்த்தம் முடியமுதல் பல ஜோடிகள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
  9. கொலை செய்யப்பட்டவர் யாராயினும் கண்டிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சில ட்றம்ப் ஆதரவு அரசியல்வாதிகள் இவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் அரசியல் வன்முறைப் பேச்சும் ஒருவித அராஜகம்தான். அதனை ஐரோப்பிய பாராளுமன்றம் அனுமதிக்கக் குடாது என்கிறார்கள். பார்க்கலாம். எமது வலதுசாரித் தமிழர்கள் ஆதரிக்கக் கூடிய எல்லாத் தகுதியும் இவருக்கு உள்ளது போலுள்ளதே 😁
  10. சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்.... இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்... ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.
  11. உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். https://athavannews.com/2025/1446773
  12. உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா! முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார். இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறவுள்ளார். https://athavannews.com/2025/1446792
  13. To achieve an effective western toilet sitting position, keep your knees higher than your hips, sit up straight, and lean forward slightly with your elbows resting on your thighs or knees, similar to a squat. A footstool can be used to raise your feet to achieve the ideal knee elevation. This posture lengthens the rectum and relaxes the pelvic floor, facilitating a bowel movement. ஒரு பயனுள்ள மேற்கத்திய கழிப்பறை உட்கார்ந்த நிலையை அடைய, உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்பை விட உயரமாக வைத்து, நேராக உட்கார்ந்து, உங்கள் முழங்கைகள் உங்கள் தொடைகள் அல்லது முழங்கால்களில் ஊன்றி, குந்துகை போல, சற்று முன்னோக்கி சாய்ந்து கொள்ளுங்கள். சிறந்த முழங்கால் உயரத்தை அடைய உங்கள் கால்களை உயர்த்த ஒரு கால் ஸ்டூலைப் பயன்படுத்தலாம். இந்த ஆசனம் மலக்குடலை நீட்டி, இடுப்புத் தளத்தை தளர்த்தி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. எனது நண்பரும் மாணவப் பருவத்தில் முதன்முதல் அவ்வாறு இருந்ததாக கூறுவார். நார்ச்சத்து அதிகம் உள்ள சில உணவுகள்: பழங்கள்: ஆப்பிள், கொய்யா, பீச், ஆரஞ்சு, பெர்ரி வகைகள் காய்கறிகள்: கேரட், ப்ரோக்கோலி, கீரைகள், பீன்ஸ் பருப்பு வகைகள்: கருப்பு பீன்ஸ், பயறு வகைகள், கொண்டைக்கடலை முழு தானியங்கள்: ஓட்ஸ், குயினோவா, பழுப்பு அரிசி, முழு கோதுமை கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள் நார்ச்சத்துள்ள உணவுகளின் நன்மைகள்: செரிமான ஆரோக்கியம்: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை மேலாண்மை: அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, நிறைவாக உணர உதவுகிறது. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் குறைப்பு: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது. இந்த நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
  14. புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்! “ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், “ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது, தொடர்புடைய வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஜனாதிதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். அத்துடன், “ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் நீக்குதல்” சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும். https://athavannews.com/2025/1446719
  15. பல நாடுகளிலும் இந்த மானிய விலை மருந்து நடைமுறையில் உள்ளது. இந்த புற்றுநோயிற்கான மருத்துவ முறை மிகவும் விலை கூடிய ஒன்றாகவுள்ளது, ஆரம்ப கட்ட மரபணு தரநிலைப்படுத்தலுக்கு கோவிட் தடுப்பூசியினை விட பலமடங்கு விலை செலுத்தவேண்டும், பின்னர் அந்த தகவலின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் மரபணு தொகுக்கப்பட்டு மருந்து தயாரிக்கப்பட வேண்டும், அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து வினியோகம் செய்யவேண்டும் என மிக பெரும் செலவான உற்பத்தி முறை. அவுஸ்ரேலியாவில் கெரி பெக்கர் எனும் தொழிலதிபர் இருதய நோயினால் மருத்துவ ரீதியாக மரண நிலையினை எட்டி உயிர் பிழைத்தார், அப்போது AED உபகரணம் இருந்திருந்தால் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என நம்பினார், அதனால் மக்கள் கூடும் இடங்களில் தனது செலவிலே அந்த உபகரணங்களை வைத்தார் அத்துடன் அனைத்து நோயாளர் காவு வண்டியிலும் அதனை வைத்ததாக கூறுவார்கள். சீனாவில் மெடிக்கல் கப் எனும் முறைமையினை பயன்படுத்தி மக்கள் அதிகளவில் குறைந்த செலவில் பயன்பெறும் முறை உள்ளது, அதே போல இந்த மருந்து தயாரிப்பு வினியோகத்திற்கும் அதனை பயன்படுத்தலாம், அத்துடன் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோட்டிக் முறையிலான உற்பத்தி முறை உற்பத்தி செலவினை குறைக்கலாம் என முயற்சிகள் சில நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என கருதுகிறேன். 3000 யுரோவில் உற்பத்தி விலையினை குறைத்தால் அது மிக பெரும் சாதனைதான்.
  16. அற்புதன் கொலை செய்யப்படுவதற்கு முன் புலிகளின் ஆதரவாகவே எழுதினார். நன்றாகவே தெரியும் இது டக்கிளஸ் எனும் இடி அமீனின் வேலை என்பது. தீவுப்பகுதி கிணறுகளை தோண்டுங்கள். அங்கே பல எலும்புக்கூட்டு கதைகள் உள்ளன. தங்கள் கோடடையாக பாவித்து அந்த மக்களை, வீடுகளை பார்க்க சென்ற மக்களை கொன்று குவித்து மறைத்தவர். கேட்டால்; ஜனநாயகம் பற்றி பாடம் எடுப்பார். தீவுப்பகுதியால் இராணுவத்தை வரவழைத்தவரும் இவரே!
  17. அர்ச்சனா அடுத்த தடவையும் பாராளுமன்றம் செல்வார் போலவே தோன்றுகின்றது.
  18. செமிபாடு அடையும் உணவுகளை உட் கொண்டாலே மலப்பிரச்சனை வராது என்பது என் அனுபவம். அத்தோடு மேலைத்தேய கழிவறை முறைகளை தவிர்த்து ஆசிய நாட்டு முறையில் குந்தியிருந்து மலம் கழிப்பதும் வயிற்று உள் உறுப்புகளுக்கு நல்ல அழுத்தம் தரும்.அதனால் பல பிரச்சனைகள் தீரலாம். இதெல்லாம் என் அனுபவங்கள் மட்டுமே.
  19. ஈரான் கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமுக்கு அடிச்சால் நாங்களும் அந்த இலக்கை நோக்கி அடிக்கும் வல்லமை இருக்கு என இஸ்ரேல் செய்து காட்டியிருக்கு போல... என்னமோ... ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இன்றி இந்த உலகம் இயங்காது என்றொரு நிலை இருந்தது.அது இன்றில்லை என என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிகின்றது. உலக அரசியல் பொருளாதார மாற்றங்கள் இன்னொரு சக்தியை நம்பி இருக்கப்போவதில்லை என தெரிகிறது. இருந்தாலும் நான் பெரிது நீ பெரிது...எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற குண்டுச்சட்டி சுழியோட்டங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்.
  20. 😂 ஒரு காலத்தில் வயல்,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடித்து அஞ்சு பத்து சம்பாதிச்சவர்களும் உண்டு. இதே சிஷ்டத்தை பாவிச்சு தான் ஜேர்மனியில வெறும் பிளாஸ்ரிக் போத்திலை சேகரிச்சு குடுத்தால் நல்ல காசு வரும் எண்ட சட்டத்தை கொண்டு வந்தவங்கள்😜. ஒரு பிளாஸ்ரிக் போத்திலுக்கு 25 சென்ற்.நூறு போத்தில் சேகரிச்சால் எவ்வளவு வருமெண்டு கணக்கு பண்ணி பாருங்கோ.ஜேர்மனியிலை இப்ப எங்கையாலும் ரோட்டிலை தெரிவிலை பிளாஸ்ரிக் போத்தில்களை கண்டனீங்களே? குப்பை தொட்டியிலை கூட ஒரு போத்திலை காணேலாது. இதே மாதிரி உலகம் முழுக்க சட்டம் ஒழுங்கு முறைகளை கொண்டு வந்தால் குப்பைகளும் இருக்காது.கட்டாக்காலி நாய்களும் இருக்காது. கட்டாக்காலி மாடுகளும் இருக்காது. என்ன நான் சொல்லுறது சரிதானே?😎 🤣
  21. அனைவரும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு . ..... !
  22. என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.
  23. ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂
  24. குறட்பா: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். விளக்கம்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது சமமானது அல்லது ஒன்றே. சிறப்பொவ்வா: சிறப்புத்தன்மையில் வேறுபாடு இருக்கும். செய்தொழில் வேற்றுமை யான்: செய்யும் தொழில்களில் உள்ள வேறுபாடுகளால் மட்டுமே இது அமையும். சுருக்கமாக, நாம் பிறந்ததில் அனைவரும் சமம் என்ற கருத்தை இந்த குறள் வலியுறுத்துகிறது. ஆனால், நாம் செய்யும் செயல்கள், நமது திறமைகள், நாம் செய்யும் தொழில் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளால் தான் சமூகத்தில் ஒருவரின் சிறப்புத்தன்மையும், மதிப்பும் அமைகின்றன. இது, சமூக வேறுபாடுகள் பிறப்பால் அல்லாமல் செயல்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
  25. படையப்பா கோழி செத்தாலும் ஸ்ரைலு அடங்கல...
  26. அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.