Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87986Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2948Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19102Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்5Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/07/25 in all areas
-
ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
3 points
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!!!முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.2 points- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வினா 9) 4 விக்கேற்றினால் இங்கிலாந்து அணி வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 19 புள்ளிகள் 2) ஏராளன் - 17 புள்ளிகள் 3) கிருபன் - 17 புள்ளிகள் 4) ரசோதரன் - 17 புள்ளிகள் 5) வீரப்பையன் - 17 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 15 புள்ளிகள் 7) வாதவூரான் - 15 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 15 புள்ளிகள் 9) சுவி - 14 புள்ளிகள் 10)புலவர் - 13 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 13 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 13 புள்ளிகள் 13)வாத்தியார் - 11 புள்ளிகள் 14)வசி - 11 புள்ளிகள் 15)கறுப்பி - 11 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 9, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.2 points- இரவில் பாம்பாக மாறும் மனைவி - புலம்பும் கணவன்
"இரவில் மட்டும் தானே?" என்று திருப்தியோடு வாழாமல், இதைப் பற்றியெல்லாம் கோர்ட்டுக்குப் போய் கொண்டு!2 points- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஐபிஎல்லில் மூச்சுவிட முடியாமல் கீழே கிடந்து மிதிபட்ட அகஸ்தியனின் காட்டில் அடைமழை பெய்வது சந்தோசமாக உள்ளது.2 points- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
2 pointsஅப்படி இல்லை, அண்ணன் நெய்தல் படை சூழ கடலில் இறங்கியதும் ஒட்டு மொத்த இலங்கை நேவியும் முகாமுக்குள் சுருண்டு கொண்டன. நீங்கள் உங்கள் சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் உண்மை இதுதான்🤣2 points- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
இப்ப கொழும்பு "கொள்ளோ"க்களின் ஆட்சி தானே புலம்பெயர் டமிழர்களிடையேயும் நடக்கின்றது🤣2 points- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல, அதில விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். அவர்களே சேடம் இழுக்கிறார்கள்.2 points- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
என்னத்த செய்ய? தமிழினத்திற்கென்றே சந்ததிக்கு சந்ததி ஒரு சகுனி உருவாகிக்கொண்டே இருக்கின்றார்கள். சேர் பொன் இராமநாதன் தொடக்கம் சுமந்திரன் ஊடாக தமிழின வில்லன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் போல் இருக்கின்றது.அதை விட அந்த வில்லன் கொம்பனிகளுடன் ஒட்டுண்ணிகளாக இருப்பவர்கள் இன்னும் வில்லங்கமானவர்கள்.மதில் மேல் பூனை ரகமானவர்கள்.😂🤣 சுமந்திரன் சிங்கள பகுதிகளில் சுமந்திர எண்ட பெயரிலை அதுவும் ஹபரண தொகுதியில் நிண்டு வாக்கு கேட்டு பாக்கட்டுமன்.😁 பதவிக்காக ஓடித்திரியிறவர் அதுக்கும் ஓமெண்டுவார் 😋2 points- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
2 pointsஏதோ உங்கட சந்தோசத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லீட்டு போங்க...நானேன் குறுக்க நிக்கப்போறன்...😂2 points- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
2 pointsவிஜையால் எப்படி பார்த்தாலும் பாதிப்பு திமுகவுக்கே என்பதில் உடன்பாடுதான் ஐயா. ஆனால் எடப்பாடி, விஜை எம் ஜி ஆர் போல அல்ல. அதே போல் அன்றைய காங்கிரஸ் போல் லோக்சபா தேர்தலில் 50:50 விட்டு தந்தால் சட்டசபையை முழுவதுமாக மாநில கட்சிக்கு தாரைவார்க்கும் கட்சி அல்ல இன்றைய பிஜேபி. இப்போ இருக்கும் நிலையில் அதிமுக+விஜை+பிஜேபி ஒரே அணியில் வரின் 2026 இல் தமிழ் நாட்டில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள். அப்போ அரசின் கொள்கை முதல் செயல்திட்டம் வரை கொஞ்சம், கொஞ்சமாக காவி மயமாகும். இது வரலாற்றில் முதன் முறை நிகழும் நிகழ்வாக இருக்கும். அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக, விஜையை முடக்கி தமிழ் நாட்டில் பிஜேபி vs திமுக என்பதே அரசியல் என்ற நிலை உருவாகி விடும். இதைதான் மஹாரஸ்டிராவில் சிவசேனா, பீஹாரில் நிதீஸ், பீஜேபி கூட்டில் அனுபவித்தனர். மேற்கு வங்கத்தில் கயூனிஸ்டை, ஒரிசாவில் பட்நாயக்கை தள்ளி விட்டு (கூட்டு வைக்காமல்) இரெண்டாம் பெரிய கட்சியாக இப்படித்தான் பாஜக வளர்ந்தது. இப்படி ஒரு நிலை வருவதை விரைவு படுத்துவதுதான் விஜையின் வேலை என்றால் - அவர் வராமலே இருந்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. பிஜேபி புகுந்து விடும் என்பது சீமான் பொய்யாக சொல்வது போல் வெறும் வெத்து மிரட்டல் அல்ல. அது ஒரு நியாயமான பயம்.2 points- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம். சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂2 points- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
1 pointஇந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜகவும் விரும்புவதாகவும், அதற்கு தவெக துணை இருந்தால் சிறப்பாக இருக்கும். இதனால் பொறுமையாக இருக்குமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்ட ரீதியாக சிக்கல் விஜய்க்கு இந்த வழக்கில் சட்ட ரீதியாக கடுமையாக சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பாஜக தரப்பு எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் பிரச்சனையை பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம், என்று விஜய்க்கு டெல்லி பாஜக தெரிவித்து உள்ளதாம். விஜய் முடிவு என்ன? 2026 தேர்தலில் TVK தனித்துப் போட்டியிடும் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்த புதிய நிகழ்வுகள் அவரது வியூகங்களை மாற்றியமைக்கக்கூடும். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா அக்டோபர் 6 ஆம் தேதி மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் மூத்த கட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்களை சந்திப்பார். அப்போது பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை நேற்று டெல்லியில் இருந்தார். அவர் கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். இதன்பின் வரும் வாரமே கூட்டணியில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை நம்புகிறது. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒருங்கிணைக்க அது முயற்சிக்கிறது. இதில் TVK-க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திமுக இந்தச் சம்பவத்திற்கு தவெகவை முழுமையாகக் குறை கூறி வரும் நிலையில், மற்ற கட்சிகள் விஜய் மீது மென்மையாக அணுகியுள்ளன. விஜயை கடுமையாக விமர்சனம் செய்யாமல் அவரை சாந்தமாக அணுக டெல்லி பாஜக திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் அவரை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாம். விஜய்யின் பேச்சாற்றல் மற்றும் செல்வாக்கு காரணமாக, தவெக வாக்காளர்களை ஈர்க்கும் என்றும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் பாஜகவின் மதிப்பீடு கூறுகிறது. DMDK மற்றும் நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளில் இருந்து வாக்காளர்கள் TVK-வை நோக்கி நகரலாம் என்றும் பாஜக கருதுகிறது. ஆனால், அதிமுகவுடனான தனது கூட்டணியைக் குலைக்க விரும்பாததால், பாஜக கவனமாக செயல்பட விரும்புகிறது. அதிமுகவின் வலுவான அமைப்புடன் விஜய் இணைந்தால், NDA-வின் தமிழ்நாடு டார்கெட் வெற்றிபெறும் என்று டெல்லி பாஜக கருதுகிறதாம். https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-alliance-with-bjp-and-aiadmk-is-almost-confirmed-nda-twist-in-tamil-nadu-740691.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards விஜையின் கொள்கை விளக்கத்தை பார்த்து, அதனால் ஈர்க்கபட்டு, திமுக, அதிமுக, சாதிகட்சிகள், பாஜக ஏ டீம், பாஜக பி டீம் தவிர்ந்த ஒரு அரசியல் சக்தி தமிழகத்தில் உருவாக வாய்புள்ளது என கருதிய கோஷான் போன்றோரின் தற்போதைய பரிதாப நிலை 👇🤣1 point- கோமட் (Comet) பிரவுசர், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) 31 வயது இந்தியாவின் புதிய இளம் பில்லியனர்
1 pointகூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர் கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2025, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு தேடலில்தான், நாம் எளிதானது என நினைக்கும் இணையத் தேடல் மிகவும் சிக்கலானது என்பதை புரிந்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர். இவர்தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கே சவால் விடும் துணிச்சலுடன் வளர்ந்துள்ள, சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பொதுவாகவே கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பர வருவாயை பெரிதும் சார்ந்துள்ளன. ஆனால் தான் தொடங்கியிருக்கும் பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) சரியான இணையதளங்களிலிருந்து தரவுகளை தொகுத்து தருவதோடு, இவற்றுக்கான உண்மையான இணைப்புகளையும் தருவதாக நம்புகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மற்ற ஏஐ தொழில்நுட்பங்களிலிருந்து தனது பெர்ப்ளெக்சிட்டி எவ்வாறு தனித்துவமானது என்பதை விளக்கியுள்ளார். "லார்ஜ் லேங்வேஜ் மாடல் என்று அழைக்கப்படும் மற்ற ஏஐ தொழில்நுட்பங்கள், தாங்களாக சிந்தித்து வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்கும் முடிவை வழங்க முயற்சிக்கின்றன. இந்த முடிவுகளுக்கான ஆதாரத்தை வழங்குவதில்லை. மாறாக பெர்ப்ளெக்சிட்டி ஆதார இணையதளங்களையும் சேர்த்து வழங்கும்" என்று அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். இந்தியாவின் இளம் பில்லியனர் பட மூலாதாரம், Getty Images 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், இணையத்தை வசப்படுத்தத் தொடங்கிய நேரத்தில் சென்னையில் கணினி குறித்த கனவுகளோடு வளர்ந்த சிறுவன்தான் அரவிந்த். இன்று 31 வயதேயாகும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியாவின் புதிய இளம் பில்லியனராக வளர்ந்துள்ளார். M3M Hurun India Rich List 2025 தரவுகளின் படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய். இது மட்டுமல்ல, கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான குரோம் பிரவுசரை விலைக்கு கேட்கும் துணிச்சலும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்-க்கு இருக்கிறது. குரோம் பிரவுசரை விலைக்கு விற்கும் நிலையில் கூகுள் நிறுவனம் இல்லை என்றாலும் தமது ஏஐ அடிப்படையிலான கோமட் (Comet) பிரவுசர், குரோமுக்கு கடுமையான சவாலை அளிக்கும் என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நம்புகிறார். இது பற்றி குறிப்பிடும் அரவிந்த், "நீங்கள் யார், எங்கிருந்து தேடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, மாறாக உங்களின் கேள்வி என்ன என்பது தான் எங்களுக்கு முக்கியம்" என கூறுகிறார். கூகுள் டீப் மைண்ட் மற்றும் ஓபன் ஏஐ ஆகியவற்றில் பணிபுரிந்த பின்னர், இவற்றில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, இதற்கான தீர்வாக பெர்ப்ளெக்சிட்டி மற்றும் கோமட்-ஐ முன்வைக்கிறார் அரவிந்த். முனைவர் பட்டம் பெற்ற சாதனையாளர் பட மூலாதாரம், Getty Images ஸ்ரீனிவாஸின் பயணம் சென்னையில் மற்ற சராசரி மாணவர்களைப் போலவே தொடங்கியது. இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸில் படிக்க வேண்டும் என்ற தாயின் கனவால் ஊக்குவிக்கப்பட்ட அவர், மின் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கிய பலரும் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என நகைச்சுவையாக குறிப்பிடும் ஸ்ரீனிவாஸ் பிரபலமான TED Talk நிகழ்வில் பங்கேற்ற போது, "நான் ஒரு கல்வியாளர் என்று நீங்கள் சொல்லலாம்" என்று கூறினார். தனது கல்விப் பின்னணி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியும், நிஜ உலகப் பிரச்னைகளைத் தீர்க்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியுயும் ஆழமாகப் புரிந்துகொள்ள தமக்கு உதவுவதாக ஸ்ரீனிவாஸ் நம்புகிறார். பெர்ப்ளெக்சிட்டியை வேறுபடுத்துவது எது? பட மூலாதாரம், Getty Images நீங்கள் பெர்ப்ளெக்சிட்டியில் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அது இணையத்தில் நிகழ்நேரத்தில் தேடுகிறது, செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்ற நம்பகமான தளங்களிலிருந்து தகவல்களைக் கண்டறிந்து, பின்னர் அதை எளிமையான, படிக்க எளிதான பதிலாகக் குறைக்கிறது. கூடுதலாக, இது அசல் இணையதளங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியது, எனவே உண்மைகளை நீங்களே சரிபார்க்கலாம். பொதுவாக ஏஐ பொறிகள் தகவலை யூகிக்கின்றன அல்லது உருவாக்குகின்றன(Hallucination). இதற்கு பதிலாக, பெர்ப்ளெக்சிட்டி சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை கவனமாக சுருக்கமாகக் கூறுகிறது. "பெர்ப்ளெக்சிட்டியில் உள்ள ஒவ்வொரு பதிலும் மேற்கோள்கள் வடிவில் இணையத்திலிருந்து ஆதாரங்களுடன் வருகின்றன. சிறப்பான அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க உங்களை பெர்ப்ளெக்சிட்டி அனுமதிக்கிறது." என்று ஸ்ரீனிவாஸ் தனது TED Talk இல் கூறினார். இதன் பொருள் நீங்கள் ஒரு பதிலைப் பெறும்போது, தகவல் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், இது நம்பிக்கையை அதிகரிக்கிறது, மேலும் தகவல்களை அறிய உங்களை ஊக்குவிக்கிறது. இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் பல ஏஐ கருவிகள் தகவல்களை எங்கிருந்து பெற்றன என்பதை விளக்காமல் பதில்களை மட்டுமே தருகின்றன. கூகுளுக்கு சவால் விட காரணம் இதுதான்! 2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) வேகமாக வளர்ந்துள்ளது. இந்த சேவை இப்போது ஒவ்வொரு மாதமும் 780 மில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கையாளுகிறது. (https://www.perplexity.ai/help-center/en/articles/10352155-what-is-perplexity) இந்தியாவைப் பொறுத்தவரையிலும், பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மக்களை சென்றடைய முயற்சிக்கிறது. கூகுளுடன் போட்டியிடுவதில் உள்ள சவால்கள் குறித்து ஸ்ரீனிவாஸ் வெளிப்படையாகப் பேசினார், குறிப்பாக விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் கூகுள் பல பில்லியன்களை சம்பாதிக்கிறது. "அவர்கள் ஏன் Google.com ஐ பெர்ப்ளெக்சிட்டி போல மாற்றக்கூடாது? ஏனென்றால், அப்படி செய்தால் அவர்கள் விளம்பரங்களிலிருந்து வரும் அனைத்து பணத்தையும் இழப்பார்கள்," என்று அவர் ப்ளூம்பெர்க் (Bloomberg) நேர்காணலில் கூறினார். இது தான் கூகுள் குரோமை விலைக்கு கேட்கும் துணிச்சலையும் ஸ்ரீனிவாஸ்க்கு கொடுக்கிறது. பெர்ப்ளெக்சிட்டி போன்ற ஏஐ-க்கள் மனித ஆர்வத்தை ஊக்குவிக்கும், கற்றலை விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்று அவர் நம்புகிறார். "ஒவ்வொரு பதிலும் புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது, ஏஐ அவற்றை முன்பை விட சிறப்பாகவும் வேகமாகவும் கேட்க உதவுகிறது." (TED Talk மற்றும் ப்ளூம்பெர்க் டி.வி.யில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y8zvpyedro1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடுத்த மூன்று போட்டிகளிலும் பெரும்பாலும் போட்டியாளர்களின் புள்ளிகளின் தரவரிசை மாறமாட்டாது. அதன் பிறகு வரும் இங்கிலாந்து- இலங்கை, அவுஸ்திரேலியா- இந்தியாவுக்கு இடையிலான போட்டிகளில் தரவரிசை மாற்றங்கள் வரலாம்.1 point- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
1 pointஅவர் பனை மரம் ஏறி கள்ளு கொண்டுவந்து குடிப்பதை ஊக்குவிப்பதை பார்த்து சந்தோசபட தான் முடியுமா ☹️உணவாக மீனை தனது நாட்டு கடற்பரப்பில் பிடிப்பதை பார்த்து சந்தோசபட்டேன்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இதுவரை வழங்கிய புள்ளிகளில் 100/100 புள்ளிகளை பெற்றுள்ளார். இங்கிலாந்து 90 பந்துகளில் 49 ஓட்டங்கள் தேவை. ஆனால் 6 விக்கேற்றுகள் போய் விட்டது . இதுவரை வழங்கிய புள்ளிகளில் 100/100 புள்ளிகளை பெற்றுள்ளார். இன்றும் அவர் புள்ளிகள் எடுப்பாரா? இங்கிலாந்து வெற்றியில் தங்கி இருக்கிறது.1 point- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- ஜேன் குடால் (Jane Goodall) - சிம்பன்சிகளின் தோழி!
A Message From Dr. Jane Goodall | Famous Last Words Jane Goodall: An Inside Look (Full Documentary) | National Geographic1 point- சமையல் செய்முறைகள் சில
1 point- கருத்துப்படம் 07.10.2025
1 point- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
1 pointஎன்ன சொல்லவருகிறீர்கள் குமாரசாமி? சீமான் சினிமாக்காரர் இல்லை என்கிறீர்களா? அரசியலுக்கு எவரும் வரலாம். நான் யாருடைய ரசிகனும் இல்லை. விபத்து நடந்திருக்கிறது. கவலைதான். இங்கே யாரை நோவது என்பதே கேள்வியாக இருக்கிறது. முடிவு வரட்டும். நானும் நாங்களும் முட்டி மோதுவதால் என்ன பயன்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் போல வேடம் போட்டு “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டு வந்த சீமானின் நடிப்பு அபாரம். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.1 point- குட்டிக் கதைகள்.
1 pointஉலக இந்துமத மகா சபை · Kulenthiran Uthayakumar ·porontsdSe0896e:3t2cl5099c368b1l71uc t2o1ra9 ii,t3mmh1ml8ot8 · 1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். 3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். 4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், 5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்? -படித்ததில் பிடித்தது.........!1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointஇரவு 10:00 மணிக்குமேல் சாப்பிடாதே, தண்ணி குடிக்காதே ........நாளை காலை 8:00 மணிக்கு அறுவை சிகிச்சை உண்டு .......! 🙂1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 pointBolavip Soccer · ROBERTO CARLOS, RONALDINHO, CAFÚ, RONALDO AND DIDA 🤯"1 point- நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம். ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம். அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள். 2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது. இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார். https://akkinikkunchu.com/?p=3435931 point- நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பிரான்சில் நிற்கின்றார், சுவிசிக்கு செல்கின்றார் என நினைக்கின்றேன். இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் இம்முறை நிகழ்வு செய்திகள் சற்று வித்தியாசமாக வரலாம். சரி பார்ப்போம்.1 point- தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
இரண்டாவது கீழுள்ள காணொளி தமிழில் பேசப்படுகின்றது துரை.1 point- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
1 pointஉங்களுக்கு விசயம் தெரியாதே… அஜித் அரசியலுக்கு வராமைக்கும், அப்பத்துக்கு வச்ச மா புளித்தமைக்கும்… ஆறு மணிக்கு முன் வானம் வெளிக்கவும் கூட…. சீமான் தான் காரணமாக🤣. பிகு ஏனையோரை போல ரஜனியிம் சீமானின் காட்டு கத்தலை லெட்ப்ட் ஹாண்டில்தான் டீல் பண்ணினா. ரஜனி அரசியலுக்கு வராது போக முக்கிய காரணம்கள் தன் மீதே நம்பிக்கை இன்மை / அல்லது சரியான சுய மதிப்பீடு தொடை நடுங்கிதனம் சினிமா பணம், புகழை ரிஸ்க் எடுக்க விரும்பாமை மகள்கள் அட்வைஸ் கொவிட் கொவிட் வந்து மக்களை சந்திப்பது உயிராபத்தாக முடியலாம் என்ற அச்சம் ஏற்பட்டிராவிடின் வந்தே இருப்பார். வந்து விட்டேன் என்று அறிவிப்பே விட்டார். இந்த பனம் பழம் வீழ்ந்ததில் இந்த அண்டங்காக்காவுக்கு ஒரு சம்பந்தமுமில்லை.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
15 பேரில் ஒரு 10 பேர்கள் வரை, நான் உட்பட, சும்மாதான் கிறுக்கியிருக்கின்றோம் போல...... ஏதோ இப்போதைக்கு காற்று என் பக்கம் வீசுது..............🤣. அதுவே தான்....... கடந்த ஐபிஎல் அது ஒரு சரித்திரம், பையன் சார்............. அதில் 5, 6, 7 என்று தொடராக முட்டைகள் வாங்கியவர்கள் பலர்................ ஆனால் நந்தனும், புலவரும் அப்படியே ஒன்று, இரண்டாகவே நின்றார்கள்................1 point- யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
இதில் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் பதவிகளில் இருப்பவர்கள் எனவும் அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
வாசித்தவுடன் சத்தமாக சிரித்துவிட்டேன். முதல்வரியே சிரிக்க வைத்தது. இரண்டாவது வரி அதற்கு மேல். நல்ல நகைச்சுவயை கேட்டு நாளாயிற்று என்ற கவலை இன்று வாசித்ததில் தீர்ந்து விட்டது.1 point- ஜேன் குடால் (Jane Goodall) - சிம்பன்சிகளின் தோழி!
அமெரிக்கர்களோடு ஒப்பிடும் போது பிரிட்டிஷ் பிரபலங்கள், நிபுணர்கள் பலரிடம் நான் காணும் ஒரு பண்பு படாடோபம் இல்லாத அமைதி. குடாலின் இயல்பும் இதே போன்றது தான். கீழே, நேச்சர் இதழில் இன்று வெளியான ஜேன் குடாலின் நினைவுக் கட்டுரையை இணைத்திருக்கிறேன். https://www.nature.com/articles/d41586-025-03227-w அவரது 60 ஆண்டு காலப் பணி இன்னும் ஒரு 60 ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. "வேர்களும் தளிர்களும் - Roots & Shoots" என்ற ஒரு சிறுவர்/இளையோர் மட்ட அமைப்பை உருவாக்கியதன் மூலம் வனப் பாதுகாப்பு, உயிர்களின் பல்லினத் தன்மையின் (biodiversity) பாதுகாப்பு என்பவற்றை இன்னும் 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தியிருக்கிறார். ஏன் 60 ஆண்டுகள் என்றால், இனிப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த அக்கறைகளைப் போதிக்கும் முன்மாதிரியான பெரியவர்கள் அருகி வருகிறார்கள். "தொழிலைத் தேடு, பணத்தை உழை, சேமித்து இளைப்பாறு, அப்படியே சத்தம் சந்தடியில்லாமல் ஒரு நாள் உலகை விட்டு நீங்கு" என்று ஆலோசனை கொடுக்கும் பெரியவர்களும், இணைய பிரபலங்களும், ஜேன் குடால் போன்றோரின் முன்மாதிரிகளை உருவாக்கப் போவதில்லை என அஞ்சுகிறேன்!1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
Group therapy session நடக்குது போல😂! எல்லோரும் நலம் பெற்றால் சந்தோஷம் தான்.1 point- தைவான் மீதான PRC படையெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடிய PLA வான்வழி பட்டாலியனை சித்தப்படுத்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ரஷ்ய திட்டங்களை கசிந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.
இது RUSI என்ற சிந்தனை கூடம் (think tank) பிரசுரித்து இருந்தது சுருக்கமாக. அனால், ஏன் அது செய்தியாக பிரச்சாரப்படுத்தபட வேண்டும்? உ.ம். அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானை தாக்கி தொடங்கிய சண்டைக்கு / யுத்தத்துக்கு, இஸ்ரேயல்க்கு அருகில் விமனந்தாங்கியை நிறுத்தி, இரானின் ஏவுகணைகளை தடுப்பதில் பெரும் பங்காற்றியது. இஸ்ரேலின் எர்பார்ப்பன அணு துறை சார்ந்த நிலைகாலை தாக்கியது கபட விமானம், மற்றும் நீர்மூழ்கியில் இருந்து ஏவுகணையாலும். ஆகவே ருசியா, சீனாவுக்கு இராணுவவத்துறையில் பயிற்சி அளிப்பது, துறைசார் நிபுணத்துவத்துவதை கற்பிப்பது எந்தவொரு ஆஹாரிய செய்தி அல்ல. அதே போல இரானனுக்கோ (அல்லது வேறுநாடுகளுக்கோ) சீன அதன் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை ஏற்றுமதி செய்து இருந்தால், அதுவும் மேற்கு நாடுகளுக்கு பூதாகரமான பிரச்சனை. அதே போல இரானனுக்கோ (அல்லது வேறுநாடுகளுக்கோ) சீன அதன் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை ஏற்றுமதி செய்து இருந்தால், அதுவும் மேற்கு நாடுகளுக்கு பூதாகரமான பிரச்சனை. இவை சிறிய இப்போதைய உதாரணங்கள், காலதிகாலமாக மேற்கின் இப்படியாக தாம் செய்வதை, மற்றவர் செய்யும் போது பபூதாகாரம் ஆக்குவது, கண்டிப்பது போன்றவை . மேற்கின் வழமையான பாணியான, தம செய்வதை, மற்றவர் செய்யக்கூடாது, அப்படி செய்யவிடக் கூடாது என்ற (காழ்ப்பான) சிந்தனை தான்.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மீண்டும் உங்களை இந்த திரியில் கண்டது மகிழ்ச்சி வசி அண்ணா..............நீங்கள் எழுதுவதை பார்க்க விளையாட்டுக்களை பார்க்க நேரம் இல்லை போல் தெரியுது...............நானும் அவுஸ்ரேலியா இந்தியா விளையாட்டை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்...................நான் அந்தக் காலம் தொட்டு மகளிர் கிரிக்கேட் பார்க்கிறேன் அதனால் அந்த ஆர்வம் இப்பவும் என்னை விட்டு போகல அண்ணா......................என்ன இந்த உலக கோப்பையில் அதிக மழை மற்றம் படி விளையாட்டுக்கள் பார்த்து ரசிக்கும் படி இருக்கு.......................1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂 தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣1 point- கருத்து படங்கள்
1 pointஹம்பாந்தோட்டையில்.... ஒரே "ஐஸ்" போதை வஸ்து. பென்குயின் எல்லாம் உண்மையான ஐஸ் என்று நம்பி.... சறுக்கி விளையாட வந்திருக்குது. 😂1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சம்பந்தன் உயிரோடு இருக்கும் மட்டும்... சுமந்திரனை பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் கூட்டிக் கொண்டு போனார். சம்பந்தன் செத்த பின்.... சுமந்திரனுக்கு பாராளுமன்ற பின்கதவும் அடைக்கப் பட்டு, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂 சென்ற பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்விய பின்.... பாராளுமன்றத்துக்குள் நுழைய... வென்ற பாராளுமன்ற உறுப்பினரான சத்தியமூர்த்திக்கும் வேறு சிலருக்கும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேறு பதவி பெற்றுத் தருவதாகவும், அவர்கள் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணி.. அந்த இடத்தை தமக்குத் தரும்படி பல வழிகளில் கெஞ்சி, ஆசை வார்த்தை காட்டியும்... சுமந்திரனை நம்பி அவர்கள் நடுத் தெருவில் நிற்க தயார் இல்லாததால்... அவர்கள் சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். 😅 சம்பந்தன் செத்தவுடன்.... சுமந்திரனின் பின்கதவு பாராளுமன்ற ராசியும் கை விட்டுப் போய் விட்டது. இனி சுமந்திரன் தனது வாழ்நாள் முழுக்க பாராளுமன்றத்துக்கு வெளியில் நின்று பாராளுமன்றத்தை "ஆ" வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காய் இருந்திருந்தால் சிங்கள இனவாத கட்சிகளுக்கு தமிழர்பகுதிகளில் எப்படி இடம் கிடைத்திருக்கும்? சிங்கள கட்சிகள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெற முடிகின்றது. அதே போல் தமிழ் கட்சிகள் சிங்கள பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா?1 point- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுத்துமாத்து சுமந்திரன் தானாக பதவி விலக மாட்டார். விலக்கி வைக்கப் பட வேண்டும். மயிலே… மயிலே… இறகு போடு என்றால் போடாது. புடுங்கி எடுக்க வேண்டும். 😂 வருகின்ற வட மாகாண சபைத் தேர்தலில்… ஆபிரஹாம் சுமந்திரனுக்கு போட்டியிடுகிற எண்ணம் இருக்கின்றது போலுள்ளது. ஏற்கெனவே சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள். அதற்குப் பிறகும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் இல்லாமல்… தானும் ஒரு ஆள் என்று, பல்லை காட்டிக் கொண்டு சூடு, சுரணை இல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு திரிகிறார். ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சுத்துமாத்து சுமந்திரன்…. தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு…. இனி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. அதனையும் மீறி, போட்டியிட்டால்…. தமிழ் மக்கள் தமது வாக்குகளால் கொடுக்கும் செருப்பு அடியில்… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.1 point- கருத்துப்படம் 04.10.2025
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
1 point- கூடியம் குகைகள் : 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்!
1 pointகூடியம் குகைகள் ( vikatan ) இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகின் முதல் மானுடன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவன் பிற நிலப்பரப்புகளுக்குப் பரவினான் என்றுமே இதுவரை படித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டியிருக்கிறது. இந்தக் கற்குகைகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த மனிதர்கள் பயன்படுத்திய ஏராளமான கற்கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் நிலவியல் ஆராய்ச்சியாளர்களும், இந்திய தொல்லியல் துறையும் இதன் பழைமையை உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பல்வேறு அறிவியல், வரலாற்று ஆய்விதழ்கள் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. லெமூரியா, கீழடி என நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற அத்தனை ஆதார வரலாறுகளுக்கும் முந்தைய, பரிணாமத்தின் தொடக்கநிலை மனிதர்கள் வாழ்ந்த அந்தக் குகைகள், தமிழ் நிலத்தின் தொன்மைக்குச் சான்றுசொல்லி அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருக்கின்றன. கூடியம் குகைகள் உலகில் எழுத்துச்சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய வரலாற்றை, 'தொல் பழங்காலம்' அல்லது 'பழங்கற்காலம்' என்பார்கள். எழுத்துச்சான்றுகள் தோன்றிய பிறகான காலம் வரலாற்றுக்காலம். கற்காலத்துக்கும் வரலாற்றுக்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவில் பல்வேறு படிநிலைகளை எட்டினார்கள். உலோகங்களின் பயன்பாட்டை உணர்ந்து பயன்படுத்தினார்கள். மனிதர்கள், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 'Paleolithic Age' எனப்படும் கற்காலத்தின் தொடக்கத்தில்தான் தங்கள் அறிவைப்பயன்படுத்தத் தொடங்கினார்கள். கைகளில் கிடைத்த கற்களை எரிந்து விலங்குகளை வீழ்த்துவதில் இருந்த சிக்கலைக் கலைய, அவற்றைக் கூர்மையாகச் செதுக்கி, கோடரிகளாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதுதான் மானுட குல வரலாற்றில் நிகழ்ந்த மிகமுக்கிய பரிணாமம். அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கும் கருவிகளைக் கொண்டே அப்பகுதியில் வாழ்ந்த மனித இனம் பற்றியும் காலம் பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இடங்களில் செய்யப்பட்ட அகழ்வுகளில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தின் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அல்லிக்குழி மலைப்பகுதிகளில் செய்யப்பட்ட அகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஆங்கிலேயர்களின் ஆராய்ச்சிகளும், இந்திய தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் உறுதி செய்திருக்கிறது. ஆதிமனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ள அல்லிக்குழி மலையில், இன்னும் பல ஆயிரம் கற்கருவிகள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கிக் கற்களைத் துளாவினாலே ஐந்தாறு கற்கருவிகளைக் கண்டெடுத்து விடமுடிகிறது. கூடியம் குகைகள் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பிரதான சாலையில், 18 கி.மீ தொலைவில் உள்ளது சித்தஞ்சேரி. இங்கிருந்து, பிளேஸ்பாளையம் செல்லும் இடதுபுறச் சாலையில் திரும்பி 12 கி.மீ பயணித்தால் மரங்களடர்ந்த 'கூடியம்' என்ற கிராமம் வரும். இதுதான் அல்லிக்குழி மலையின் வாசல். கூடியம் கிராமமே அமானுஷ்யமாக இருக்கிறது. பிரதான சாலையில் இருந்து ஊருக்குள் நுழைய கரடுமுரடான மண்சாலைதான். உள்ளே 20 வீடுகள் மட்டுமே உள்ளன. பெரும்பகுதியாக இங்கு இருளர் பழங்குடிகள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்திலிருக்கும் வீடுகளே மிகப்பழைமையானவையாக இருக்கின்றன. வட்ட வடிவத்தில் புல்கூரை வேயப்பட்டு மண்ணால் பூசப்பட்ட அந்த வீடுகளின் தன்மையே நம்மை தொன்ம வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. கூடியம் கிராமம் வரைதான் வாகனங்கள் செல்லும். அதற்குமேல் நடந்துதான் போகவேண்டும். 6 கிலோ மீட்டர். இருபுறமும் செடிகளடர்ந்த ஒரு ஒற்றையடிப்பாதை. தொடக்கத்தில், சற்று அகலமாக இருக்கிறது. கீழே முனை நீட்டி நிற்கும் சரளைக்கற்கள். ஒரு கிலோ மீட்டரில் இந்தப் பாதை முடிவுக்கு வருகிறது. எரிமலை வெடித்துக் கொதித்தெழுந்து வந்து உறைந்து நிற்பதைப் போல ஆங்காங்கே பெரிய பெரிய கற்குவியல்கள்... பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றன. இடையிடையே கூழாங்கற்கள் பொதிந்திருக்கின்றன. கூடியம் குகைகள் பரபரப்புக்குத் தொடர்பில்லாத, உறைந்த நிலப்பரப்பில் நிற்பதுபோன்ற உணர்வு... அந்த இடமே அமானுஷ்யமாக இருக்கிறது. மனதை மெல்லிய அச்சம் கவ்வுகிறது. அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, சாகசப் பயணம். செடிகளை விலக்கி, விலக்கி மனிதர்கள் நடந்த தடமறிந்து கால் வைக்க வேண்டும். ஓரடி விலகினாலும் முற்கள் கால்களைக் கோர்த்துக்கொள்கின்றன. 'பின்செல்...', 'பின்செல்...' என்று கால்களைத் தள்ளுகின்றன கூர்முனைகொண்ட சரளைக்கற்கள். கூடியம் குகைகள் காட்டுப்பன்றிகள், முயல்கள், பாம்புகளின் தடங்கள் ஆங்காங்கே அச்சமூட்டுகின்றன. வளைவுகளும் நெளிவுகளும் கொண்ட, நுழைந்தும் தவழ்ந்தும் செல்லக்கூடிய ஒற்றைக்காலடிப் பாதையில் 4 கிலோ மீட்டர் நடந்தால் முதல் குகை கண்முன் விரிகிறது. உயர்ந்த மலையிலிருந்து ஒரு பகுதி, கிருஷ்ணருக்குக் காளிங்கன் விரித்த தலைபோல அகலக் குவிந்து நிற்கிறது. 200 பேர் வசதியாக அமரலாம்; உண்ணலாம்; உறங்கலாம். எங்கும் காணவியலாதப் பாறை அமைப்பு. சரளைக்கற்களை உள்ளே வைத்து மண் கொண்டு இறுக்கிப்பூசி இயற்கை நெய்த விசித்திர மலை. மேலே ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருக்கிற கற்கள் பெயர்ந்து தலையில் விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் 13 கோடி ஆண்டுகளாக அதன் நிலையிலேயே நிற்கின்றன கற்கள். கோடரி கொண்டு வெட்டினாலும் சிதையாத உறுதி. குகையின் முன்னால் சாம்பல் குவிந்திருக்கிறது. நம் மக்கள் சமைத்துச் சாப்பிட்ட தடம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதைகளுக்குக் குடிலாக இருந்த இந்தக் குகையின் மகத்துவம் அறியாமல் குகையெங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைத்து சிதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இளைஞர்கள். குகையின் ஒரு பகுதியில் மத்திய தொல்லியல்துறை அகழ்வு செய்த தடம் தெரிகிறது. தன் நண்பர்களோடு குகையைக் காண வந்த, பாறை ஓவிய ஆராய்ச்சியாளர் காந்திராஜன், இந்தக் குகை குறித்து சிலாகித்துப் பேசினார். கூடியம் குகைகள் "மானுட வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்சின்னம் இது. உலகின் மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று. மானுட வரலாறு என்பது, அவர்கள் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. முதல் கற்காலம் என்பது, 5 லட்சம் ஆண்டுகள் முதல் 2.50 லட்சம் ஆண்டுகள்வரை. இந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களை 'ஹோமினாய்ட்' (Hominid) என்று அழைப்பார்கள். இவர்கள், கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய முதல் தலைமுறை மனிதர்கள். கென்யா, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த கற்கருவிகள் இந்தக் குகைகளிலும், அருகில் கொற்றலை ஆற்றுப்படுகையில் உள்ள அதிரம்பாக்கம் கிராமத்திலும், பல்லாவரத்திலும் கிடைத்துள்ளன. 'கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மனிதர்கள் உலகெங்கும் பரவினார்கள்' என்பதுதான் இதுவரை நம்மிடமிருக்கும் தியரி. ஆனால். இந்தக் குகையில் கிடைக்கும் தரவுகள், 'இங்கிருந்தே ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்கு நகர்ந்திருக்க வேண்டும்' என்ற புது வரலாற்றை உருவாக்குகின்றன. அல்லது ஆப்பிரிக்காவில் மனிதர்கள் உருவான அதேக் காலக்கட்டத்தில் இங்கும் மனிதர்கள் உருவாகியிருக்க வேண்டும். தொல் பழங்காலத்தில் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் ஒரே கண்டமாக இருந்ததாக நிலவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இந்தக்கருத்து இன்னும் வலுப்படும். தற்போது டி.என்.ஏ சோதனைகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுகள் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்..." என்கிறார் அவர். கூடியம் குகைகளை முதன்முதலில் கண்டறிந்து உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர், ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote). 'தொல்லியலின் தந்தை' என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் நிலவியலாளராகப் பணியாற்றிய ப்ரூஸ்க்கு, தென்னிந்தியாவில் நிலக்கரி, கனிம வளங்கள் உள்ள பகுதிகளைக் கணக்கெடுக்கும்பணி தரப்பட்டது. தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ப்ரூஸ், பல்லாவரம் பகுதியில் ஆய்வுசெய்தபோது, உலகின் ஆதி தொல்குடி பயன்படுத்திய கல் ஆயுதம் ஒன்றை கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் வட்டாரத்தில் ஆய்வுசெய்தபோது, இந்தக்குகையின் வடிவம் அவரை ஈர்த்தது. அல்லிக்குழி வனப்பகுதியில் தங்கி தீவிரமாக ஆய்வுசெய்து, 'தொல் மனிதன் வாழ்ந்த இடம் இதுதான்' என்பதையும் இந்தக்குகை, 'டைனோசர்கள் வாழ்ந்த ஜூராசிக் காலத்தைச் சேர்ந்தது' என்றும் பதிவு செய்தார். இது நடந்தது 1864-ல். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசு, தொடர்ச்சியாக இதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை. வி.டி.கிருஷ்ணசாமி, பீட்டர்சன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியாளர்கள் தன்னார்வத்தில் சிறுசிறு ஆய்வுகளை மேற்கொண்டார்கள். அதன்பிறகு, 1962 முதல் 1964 வரை, மத்திய தொல்லியல்துறை சார்பில், ஆர். டி. பானர்ஜி இந்தக் குகையின் ஒரு பகுதியை அகழ்ந்து ஆய்வுசெய்தார். அதில், ஏராளமான கல் ஆயுதங்கள் கிடைத்தன. கூடியம் குகைகள் அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்து, 'இது தொல்மனிதர்கள் பயன்படுத்திய குகைதான்' என்பதை உறுதி செய்தது மத்திய தொல்லியல் துறை. கற்கருவிகளின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவிகள் 'சென்னைக் கோடரிகள்' (மெட்ராஸ் ஆக்ஸ்) என்று வகைப்படுத்தபட்டன. மேலும் அருகில் உள்ள பூண்டி நீர்தேக்கம் அருகே ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாநில தொல்லியல்துறை அவற்றையெல்லாம் பாதுகாக்கிறது. இந்தியாவிலேயே பழங்கற்கால அகழ்வுப் பொருள்களைக் கொண்டிருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான் என்கிறார்கள். ஆனால், குகையை கைவிட்டுவிட்டது மத்திய தொல்லியல் துறை. மாநில அரசும் இதில் ஆர்வம் காட்டவில்லை. வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. வனத்துறை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, எளிதில் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டது. பத்தோடு பதினொன்றாகிப் போனது இந்த மலையும் குகையும். பாலித்தீன் குப்பைகளாலும், மதுப்பாட்டில்களாலும் நிறைந்திருக்கிறது குகை. குகைக்கு மேலே கரடுமுரடான பாறைகளின் வழி ஏறினால், நடுவில் அழகிய ஒரு சுனை. எக்காலமும் இதில் நீர் வற்றுவதேயில்லையாம். அடர்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அருந்த சுவையாக இருக்கிறது. அதைக்கடந்து மேலே ஏறினால், உலகின் ஒரு அரிய நிலக்காட்சி கண்முன் விரிகிறது. நான்கு புறமும் பச்சை... எதிரில் புதர்களால் மறைந்துபோன ஒரு பிரமாண்ட குகையின் தோற்றம். ஒரு சிறுகோடாக மனிதத்தடம் தெரிகிறது. மேலே விதவிதமான கற்கள். எல்லாம் கனிமங்கள். நான்கைந்து வண்ணங்கள் கொண்டவை, சுட்ட செங்கலைப் போல செக்கச் சிவப்பாக இருப்பவை, பளீரென்ற வெள்ளைக்கல் என திறந்தவெளிக் கண்காட்சியைப் போல இருக்கிறது. ஆங்காங்கே நுனி கூராகவும், அடி கனத்தும் காணப்படும் கோடரிக்கற்கள். லேசாக பட்டாலே கிழித்துவிடும் அளவுக்கு கூராக்கப்பட்ட சிறு சிறு கல் ஓடுகள்... என ஒரு கல்லாயுதத் தொழிற்சாலை போலவே இருக்கிறது. "உண்மைதான். இதை 'கல்லாயுதத் தொழிற்சாலை' என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாதாரணமாக கீழே குனிந்தபடி நடந்தால் பத்து கோடரிகள், ஐந்து கிழிப்பான்களை கண்டுபிடிக்கலாம். கூடியம் குகைகள் இந்த மாதிரிப் பாறைகள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. இந்த மலைகளும், குகைகளும் எரிமலை வெடிப்பில் உருவாகியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நிலவியலாளர்கள், பெருமழைக்காலத்தில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கின் விளைவாக பாறைகள் திரண்டுவந்து இறுகியே குகைகளும் கற்களும் மலையும் உருவானது என்று தீர்க்கமாக கண்டறிந்து பதிவு செய்திருக்கிறார்கள். வெறும் கல்லை விட்டெரிந்து விலங்குகளை வேட்டையாடப் போராடிய மனிதன், அறிவு விருத்தியடைந்து கல்லைச் செதுக்கி, கூராக்கி ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி. தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் செய்யும் கற்கள் இங்கே கிடைப்பதால்தான் இந்தப்பகுதியை தங்கள் வாழிடமாக தொல்மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவில்லை. அல்லிக்குழி மலையில் 16 குகைகள் இருப்பதாக பிரிட்டிஷ் குறிப்புகளில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு குகைகளுக்குத்தான் நாம் செல்லமுடிகிறது. அந்தக் குகைகளையும் கண்டறிந்து, ஆய்வு செய்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்..." என்கிறார் ரமேஷ் யந்த்ரா. சென்னை ஓவியக்கல்லூரியில் படித்த ரமேஷ், கூடியம் குகைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். அந்தப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில், குரும்படப் பிரிவில் திரையிடப்பட்டது. அதன்பிறகே ஊடகங்கள் இந்தக் குகைகளை ஏறெடுத்துப் பார்த்தன. இன்றும் தீவிரமாக இந்தக்குகைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார் ரமேஷ். முதல் குகையிலிருந்து, இரண்டாவது குகைக்குச் செல்லும் பாதை இன்னும் சவாலானது. மிகவும் குறுகலாகவும் முற்கள் அடர்ந்ததாகவும் இருக்கிறது. விதவிதமான பூரான்கள், பாம்புகள், சிலந்திகள், தேள்கள், செய்யான் போன்ற ஆபத்தான பூச்சிகள் ஊர்ந்து பீதி கிளப்புகின்றன. வழியில் பெரிய உருண்டைக்கல். மஞ்சள், குங்குமமிட்டு அதை வழிபடுகிறார்கள், கூடியம் மக்கள். கோழி அறுத்துப் பலியிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன. அதைக்கடந்து, நடந்தால் பிரமாண்டமான இரண்டாவது குகை. 500 பேர் வசதியாகத் தங்கலாம். அகன்று விரிந்து, குடை மாதிரி நிற்கிறது. ஆங்காங்கே நீர் சுரந்து சொட்டுச்சொட்டாக வழிகிறது. ஒரு சூலாயுதம் நட்டு, அம்மன் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். கூடியம் குகைகள் - மணாச்சியம்மன் மணாச்சியம்மன் என்கிறார்கள். அவ்வப்போது வந்து கிடா வெட்டி பூஜை போடுவார்களாம். ஆனால், மலையின் அமைப்பும், அந்த நிலக்காட்சியும் பிரமிப்பூட்டுகின்றன. நம் மூதாதைகள் நடந்து திரிந்த அந்தத் தடத்தின் நிற்க சிலிர்ப்பாக இருக்கிறது. சுற்றிலும் அடர்ந்த காடு. பாறைகளில் கண்படும் இடமெல்லாம் தேன்கூடுகள். தேனிக்களின் ரீங்காரமும், தேன்கூடுகளில் அலகு நுழைந்து உரிஞ்சத் துடிக்கும் தேன்கிளிகளின் குதியாட்டமும் அந்த சூழலை வாழ்வின் உன்னதமான தருணமாக்குகின்றன. இந்த மலையின் தொடர்ச்சியாக, உயர்ந்து நிற்கிற கூழாங்கல் மலைகள் அதிசயமாக இருக்கின்றன. அடுத்த குகைக்கு நடக்கும் முயற்சியை தேனிக்களும், விதவிதமான பூச்சியினங்களும், குத்தீட்டி போல நீட்டி நின்று கொக்கி போல குத்தியிழுக்கும் முட்களும் கைவிடச் செய்கின்றன. தேனீக்களின் சத்தமும், பறவைகளின் ஒலியையும் தவிர ஓர் இறுக்கமான மௌனம் அந்த வெளியைச் சூழ்ந்திருக்கிறது. அங்கு உலவும் அதிசுத்தக் காற்றில் ஆதிமனிதனின் அழியாத ஆன்மா உறைந்திருப்பதை உணரமுடிகிறது. 'ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இண்டியா' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் குமரகுரு, பல்வேறு நிலவியல் ஆய்வுகளின் முடிவில் இந்தக் குகை 13 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதுதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். மத்திய தொல்லியல் துறையில் மேற்கு மண்டல கண்காணிப்பாளராக இருந்த ஆர்.டி.பானர்ஜியும் அதையே கூறியிருக்கிறார். காலங்களைத் தின்று செரித்துவிட்டு சிறிதும் பங்கமின்றி உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நிற்கிறது இந்தக்குகை. இந்தக் குகையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்திரம்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் உள்ள இந்தக் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தி பப்பு ஒரு அகழ்வாய்வு மேற்கொண்டார். அங்கு 3000 கல்லாயுதங்கள் கிடைத்தன. அவற்றை அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது 16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தெரியவந்தது. இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சி இதழ்களில் எழுதினார். அதன்பிறகே உலகம் அறிவியல்பூர்வமாக இந்தக்குகையின் பழைமையை உணர்ந்தது. உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட மானுட வரலாற்று ஆராய்ச்சி நூல்களில் இந்தக் குகைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழில் தொல்லியல் துறை வெளியிட்ட மிகச்சிறிய நூலைத்தவிர இதுபற்றிப் படிக்க எதுவுமே இல்லை. கூடியம் குகைகள் "70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் மனிதக்குடியேற்றம் நடந்தது என்று உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் மைக்கேல் வுட் தெரிவித்திருந்தார். கூடியம் குகைகளும் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளும் அந்த தியரியை மாற்றுகின்றன. கூடியம் குகைகளைப் போல தமிழகத்தில் ஏராளமான தொன்மையான இடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் வரலாறு மாறும்" என்கிறார் தொல்லியலாளர் சாந்தி பப்பு. "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க. இதுவே அமெரிக்காவுலயோ, இங்கிலாந்திலயோ இருந்திருந்தா இதை உலகத்தோட வரலாற்றுச் சின்னமா மாத்தி கண்காட்சியே வச்சிருப்பாங்க. நாம அதை குடிக்கிற இடமா மாத்தி வச்சிருக்கோம். பொழுதுபோக்காக வர்ற பசங்க, குகையில பெயின்ட்ல பேரு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. நாங்க வாழ்ந்துக்கிட்டிருக்கிற இந்த மண்ணுல உலகத்தோட முதல் மனுஷன் நடந்து திரிஞ்சிருக்கான்னு நினைக்கிறபோதே நெகிழ்ச்சியாயிருக்கு. இதை அரசுகள் பாதுகாக்கணும்..." என்கிறார் இந்தப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கமலக்கண்ணன். இரண்டாயிரமாண்டு இலக்கியங்களையும் ஆயிரமாண்டு கல்வெட்டுகளையுமே சான்றாகக் காட்டி நம் தொன்மையைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இதோ, நமக்கு அருகாமையில், தலைநகரலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரலாற்றுச்சான்று இருக்கிறது. அதைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதோடு வரலாற்றை மீட்டிருவாக்கம் செய்ய வேண்டிய பணியை எவரும் முன்னெடுக்கவில்லை. உலகின் முதல் ஆதிப்பெருங்கலை, ஆயுதத் தயாரிப்புதான். கூடியம் மலைப்பகுதி மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு, பெண்களுக்கு, வலது கைப் பழக்கமுள்ளவர்களுக்கு, இடது கையாளர்களுக்கு என வகைவகையாக இங்கே கற்கருவிகள் செய்திருக்கிறார்கள். தகுதிவாய்ந்த கற்களைத் தேர்வுசெய்து சூடாக்கி தட்டிப் பெயர்த்து கைபிடி அகன்றும் முனைப்பகுதி கூர்மையாகவும் அவ்வளவு நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வடிவத்தில் ஏராளமான ஆயுதங்கள் இங்கே கிடக்கின்றன. கூடியம் குகைகள் சில பெரிய கற்களில் ஒருவித குறியீடுகள் இருக்கின்றன. இவை காலம் கிறுக்கியதா, ஆதி மனிதன் கிறுக்கியதா என்று தெரியவில்லை. இன்னும் 10க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாக பதிவுகள் இருப்பதால் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்தால் ஆதி மனிதனின் எலும்புகள், கிறுக்கல்கள்கூட கிடைக்க வாய்ப்புண்டு. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில், 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றியது தமிழ்நிலமும் தமிழ்க்குடியும் என்பது வெறும் வார்த்தைகளில்லை... வரலாறு என்பது தெளிவாகும்...! கூடியம் குகைகள் : ஒரு திக் திக் பயணம்! | Know the history and secrets of the Gudiyam Cave - Vikatan1 point- ஜேன் குடால் (Jane Goodall) - சிம்பன்சிகளின் தோழி!
https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!0 points- சிந்தனைக்கு சில படங்கள்...
0 pointsதனது குடும்பம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிர் தப்பிப்பிழைத்த காசாவின் பிஞ்சொன்று இடம் பெயர்வின் போது சோர்வடைந்து மணலில் தூங்குகிறது.☹️😭0 points - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.