Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33760
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33193
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88762
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19612
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/30/25 in Posts

  1. வினா 33) இறுதி போட்டிக்கு இந்தியா தெரிவாகுமென 11 போட்டியாளர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார்கள். 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் 2) ஏராளன் - 61 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 61 புள்ளிகள் 4) ரசோதரன் - 59 புள்ளிகள் 5) சுவி - 57 புள்ளிகள் 6) கிருபன் - 57 புள்ளிகள் 7) புலவர் - 57 புள்ளிகள் 8) வீரப்பையன் - 56 புள்ளிகள் 9) செம்பாட்டன் - 55 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 11) வாதவூரான் - 53 புள்ளிகள் 12) வசி - 51 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 14) கறுப்பி - 50 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 75).
  2. இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂
  3. அவசர வாசிப்பில் தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது எனக்கும் ........நான் இன்னும் வாசிக்கப் பழக வேண்டும் .........! 😇
  4. நீண்ட நாட்கள் கடலில் தங்கி மீன் பிடித்தொழில் செய்யும் நிலையில் விபத்து நேர்ந்துள்ளது இந்தோனேசிய மீனவர்களால் அந்த விபத்தில் சிக்கிய நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர் . காப்பாற்றப்பட்ட அந்த நால்வரும் முதலுதவி மற்றும் உணவு குடி நீர் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அருகில் இருந்த அல்லது வந்த பெரிய கப்பல் ஒன்றிற்கு மாற்றப்பட்டனர் தகவல் அறிந்த பாதுகாப்பு அமைச்சு விடுத்த கட்டளையின் பெயரில் இலங்கைக் கடற்படை தனக்குச் சொந்தமான சிதுரலவ என்ற கப்பலை உதவிக்கு அனுப்பியுள்ளதாம் கவிழ்ந்த கோசான் என்றதான் வாசிச்சனான்
  5. நீங்க வேற விளையாட்டு ஒன்றைத்தானே நினைத்தீர்கள்?😀 ஒரு பைத்தியரையே தம் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கே அனுப்பிய மக்கள் அல்லவா?
  6. பப்ஜி (PUBG) என்பது PlayerUnknown's Battlegrounds என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஆன்லைன் மல்டிபிளேயர் விளையாட்டு ஆகும், இதில் 100 வீரர்கள் ஒரு தீவில் இறங்குகிறார்கள். கடைசியாக நிற்கும் வீரரே வெற்றி பெறுவார். இந்த விளையாட்டில், வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களைத் தேடி, எதிரிகளை வீழ்த்த வேண்டும். விளையாட்டின் நோக்கம்: ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைச் சேகரித்து, எதிரிகளை வீழ்த்தி, கடைசியாக உயிர் பிழைத்தவராக இருக்க வேண்டும். விளையாட்டு முறை: வீரர்கள் ஒரு பெரிய வரைபடத்தில் இறங்கி, விளையாட்டின் போது கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் தேடி அவர்களை வீழ்த்த வேண்டும். விளையாட்டு அனுபவம்: பல வீரர்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விளையாடும் அனுபவத்தை இது வழங்குகிறது. விளையாட்டு வகைகள்: இது பல வடிவங்களில் கிடைக்கிறது, இதில் மொபைல், பிசி மற்றும் கன்சோல் பதிப்புகள் அடங்கும். விளையாட்டின் அடிப்படை: இது 2000 ஆம் ஆண்டில் வெளியான பேட்டில் ராயல் என்ற ஜப்பானியத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. நன்றி: கூகிள்.
  7. வினா 33) இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தெரிவாகுமென ஈழப்பிரியன் அவர்கள் சரியாக கணித்து 3 புள்ளிகளை பெற்றுள்ளார். 1) அகஸ்தியன் - 65 புள்ளிகள் 2) ஏராளன் - 58 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 58 புள்ளிகள் 4) ரசோதரன் - 56 புள்ளிகள் 5) சுவி - 54 புள்ளிகள் 6) கிருபன் - 54 புள்ளிகள் 7) புலவர் - 54 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 54 புள்ளிகள் 9) வீரப்பையன் - 53 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 52 புள்ளிகள் 11) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள் 12) வாதவூரான் - 50 புள்ளிகள் 13) கறுப்பி - 50 புள்ளிகள் 14) வசி - 48 புள்ளிகள் 15) வாத்தியார் - 46 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 32, 33(1/2), 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 72).
  8. நான் புள்ளிகளை பற்றி கவலைப்படுவதில்லை, ஒரு சுவாரசியத்திற்காக எழுதுவது, அவ்வலவுதான்.
  9. 1) அகஸ்தியன் - 68 புள்ளிகள் முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.
  10. வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர் காலம் தெரிகின்றது } (2) ஆண் : { புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது } (2) ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ஆண் : { அன்பு என்னும் கோயில் தன்னிலே ஆசை என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : உள்ளம் ஒன்று பறந்து வந்தது { உறவு கொள்ள பிறந்து வந்தது } (2) ஆண் : { தாய்மை என்னும் கோயில் தன்னிலே பாசம் என்னும் தீபம் தன்னிலே } (2) ஆண் : தர்மம் ஒன்று மயங்குகின்றது { தன்னை எண்ணி கலங்குகின்றது } (2) ஆண் : புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது ஆண் : புது மேகம் எழுகின்றது பூந்தோகை அசைகின்றது ........! --- மெழுகுவர்த்தி எரிகின்றது ---
  11. வைகோவும் சீமானும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிபிடித்து கொண்டனர் என்ற செய்தியை படித்து நானும் யோசித்து கொண்டிருக்க இப்படியும் ஒரு செய்தி.
  12. 30 Oct, 2025 | 05:06 PM போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை வழங்க முடியும். https://www.virakesari.lk/article/229074
  13. ஜெமைமா பேட்டியில் சொன்னது: இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் — நான் இதை தனியாக செய்யவில்லை. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், என்மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது, இது ஒரு கனவுபோல் உணர்கிறேன், இன்னும் நம்ப முடியவில்லை. (என்னை மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாட சொல்லியபோது) நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. குளித்துக் கொண்டிருந்தேன், “சொல்லும்போது சொல்லுங்கள்” என்றேன். மைதானத்திற்குள் செல்வதற்கு ஐந்து நிமிடம் முன்பு, நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று கூறினார்கள். இது எனக்காக அல்ல — இந்தியாவுக்காக இந்தப் போட்டியை வெல்லவேண்டும் என்பதற்காக எல்லாம் அமைந்தது (முன்பு கடினமான போட்டிகளில் தோற்ற அனுபவம் இருந்தது). இன்றைய நாள் எனது 50 அல்லது 100 பற்றி அல்ல, இந்தியா வெல்வது பற்றிதான். இதுவரை நடந்தது எல்லாம் இதற்கான முன்னோட்டம் போல. கடந்த வருடம் நான் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நன்றாக துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்தன, எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போது தினமும் கண்ணீர் விட்டேன். மனதளவில் நன்றாக இல்லை, கவலை நிறைந்த நாட்கள். ஆனால் எனக்கு தெரியும் — நான் மைதானத்தில் நிற்கவேண்டும், மீதியை கடவுள் கவனிப்பார். ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருந்தேன். இறுதியில், பைபிளிலிருந்து ஒரு வசனம் நினைவு வந்தது — “நிமிர்ந்து நில்; கடவுள் உனக்காகப் போராடுவார்.” நானும் அப்படித்தான் நின்றேன், அவர் எனக்காகப் போராடினார். என்னுள் பல உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன, ஆனாலும் அமைதியாக இருக்க முயன்றேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹாரி அக்கா வந்தபோது, நன்றாக ஒரு கூட்டணியை உருவாக்குவது மட்டுமே நினைத்தோம். தீப்தி ஒவ்வொரு பந்துக்கும் என்னுடன் பேசினார், ஊக்கமளித்தார். நான் முடியாவிட்டாலும், என் கூட்டாளிகள் என்னை ஊக்குவிக்கிறார்கள். எனக்காக எதையும் எடுத்துக்கொள்ள முடியாது — நான் ஒன்றும் தனியாக செய்யவில்லை. (பார்வையாளர்கள் பற்றி) ஒவ்வொரு ரசிகரும் கத்தி, ஆரவாரம் செய்து, நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் — அவர்கள் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் கத்தும்போது அது என்னை மேலும் ஊக்குவித்தது.
  14. இதனால @ரசோதரன் அண்ணை விரட்டப்படவோ மிரட்டப்படவோ மாட்டார் தானே?!
  15. எனக்கும் மூன்று புள்ளிகள் கிட்டுமாக்கும்🥳😆
  16. இதுதான் சரியான பதிலடி. அவுஸை இப்பிடித்தான் வெல்ல முடியும். என்னே ஒரு போட்டி.
  17. எதுக்கும் ஜெமைமாவை ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க 😁
  18. முடிச்சு விட்டாங்க. ஜெமைமா. நீ எங்கள் ஜக்கம்மா சொல்லி வைச்சு அடிக்கிறது என்றால் இதுதான்
  19. இந்தியாவுக்கு வெற்றி மணக்குது.
  20. இதனோடு தொடர்புடையதால்... ஒரு தகவலை இணைத்துச் செல்கிறேன். இந்த "முஸ்லிம் வெளியேற்றம்" நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தலைநகரின் கிண்ணியா பரப்பில் வாழ்ந்த தமிழருக்கு முஸ்லிம்கள் செய்தவை: "தமிழரின் பொருட்களை முஸ்லிம்கள் எவ்வாறு நயவஞ்சகமாக பிடுங்கினர் என்று உள்ளது" முஸ்லிம்கள் செய்த நாச வேலையாக புலிகளே வெளியிட்டவை இந்தத் தகவல்கள் உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர் இந்து நடப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், 1986 மே மாதம் 4 திகதி கிண்ணியில் நடந்த மற்றொரு வெளியேற்றம். சரிநிகரில் "விவேகி " என்பவர் எழுதியது:
  21. போய்ச்சேர்ந்தான் நண்பனும் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான அகீபன்!!! அவன் இறந்துவிட்டான் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான். அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு அடிமையாகி பண இழப்பினால் உயிர்மாய்த்தான் என்று. ஆனால் நாம் உண்மையையும் ஆராய்ந்து இவன் தற்கொலைக்கு பின் எம் சமூகத்தில் இப்படி இனியொரு ஆபத்து ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வூட்டுவதும் அவசியம் அல்லவா! அகீபன் நல்ல பண்பான குணமுள்ள நண்பன். யாருக்கு உதவி என்றாலும் முன்நிற்பவன், "அண்ண அண்ண" என எப்போதும் அரசியல் ரீதியாகவோ நட்புரீதியாகவோ பேசும் போது அவன் அழைக்கும் வார்த்தைகள் ( எப்போதும் என் பேர் சொல்லி அவன் அழைத்ததில்லை), ஓர் சிறந்த கிரிக்கெட் வீரன், இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகளை நிகழ்த்தி அவர்களை வேறுபாதைகளுக்குள் உள்நுழைய விடாமல் பார்த்து கொண்டவன். பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் ஓர் பண்பாளன். இலங்கை மின்சார சபையின் ஓர் உத்தியோகத்தன். விளையாட்டு வீரனாக இருப்பவன் அதுவும் மக்கள் பிரதிநிதியாக தலைமைத்துவ பண்பு கொண்டவன் ஏன் இப்படி தற்கொலை செய்யும் எண்ணுமளவு பலவீனமாகி போனான் என்பதை யோசிக்கையில் அவனின் இறப்பு செய்தி கேட்டதும் இரா நித்திரைகள் தொலைத்தேன்! முன்மாதிரியாக திகழ்ந்தவன் ஏன் இப்படி ஓர் முடிவெடுத்தான் என அதிர்ந்தே போனேன். ஆக எம் சமூகத்தின் மத்தியில் பல அடிமைத்தனமான விடயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றினை பொதுவெளிக்கு கொணர்ந்து சமூகத்தை விழிப்புணர்வடைய செய்ய வேண்டும். நண்பன் அகீபனின் தற்கொலைக்கு " பப்ஜீ" வீடியோ கேமிற்கு அவன் அடிமையானதாகவும் அதற்காக அதிக பணம் கடன்பட்டு இழந்ததாகவும் அதனால் தான் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் சமூக ஊடகங்கள் பூராகவும் கொட்டி கிடக்கின்றன. அவன் இறப்பின் பின் பல நண்பர்களோடு கலந்துரையாடியதன் விளைவாக அவன் எதற்கு உண்மையில் அடிமையாகியிருந்தான் என்பது வெளிச்சமாகியது. அவன் கிரிக்கெட் வீரன், கிரிக்கெட்டை ஆழமாக நேசித்தவன், பல உள்ளூர் வெளியூர் மட்ட கிரிக்கெட் சுற்று போட்டிகளை முன்நின்று நடாத்தியவன். அந்த கிரிக்கெட் எனும் போதையே அவனுக்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம்! உள்ளூர் மட்டங்களில் தற்போது பிரபலமாக நடைபெறும் கிரிக்கெட் சுற்றுபோட்டிகளில் தானும் ஓர் அணியை தயார் செய்து அந்த அணியை லட்சம் ரூபா செலவு செய்து "ஸ்பான்சர்" எடுத்து விளையாட விடுவதும் அவன் பழக்கமாக இருந்திருக்கிறது. அதாவது அந்த போட்டிகளில் தான் ஸ்பான்சர் பண்ணிய அணி வெல்லும் என்ற நோக்கில் அதை ஸ்பான்சர் பண்ணினால் போட்ட பணத்தை விட அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கமும், அதைவிட கிரிக்கெட் மீதான மோகமுமே ஆகும். ஸ்பான்சர் என்றால் சாதாரண விடயமல்ல அந்த அணிக்கு ரீசேட் அடிப்பது, பனர் அடிப்பது, சப்பாத்துக்கள், பந்துகள், மட்டைகள் தொடக்கம் உணவு சிற்றுண்டி எல்லாமே பொறுப்பேற்க வேண்டுமானால் அதன் செலவு இலட்சங்களை தாண்டும். போட்டியில் அணி தோற்றால் அந்த பணம் இல்லாமல் போகும். ஆக கடன் படவேண்டி வரும். இப்படி பல கிரிக்கெட் அணிகளினை ஸ்பான்சர் பண்ணியும் பணம் இழந்துருக்கிறான். அதவிட இன்னொன்று கிறிக்கெட் மேலான அதீத ஈடுபாடும் மோகத்தினால் ஒன்லைன் கிறிக்கெட் பந்தயங்களில்(கிறிக்கெட் சூதாட்டம்) பல லட்சங்களில் பணங்களை போட்டு பங்குபற்றியிருக்கிறான். இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கிறிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார்கள் தோற்பார்கள் என்ற பல ஒன்லைன் பந்தயங்களில் பணத்தினை லட்சக்கணக்கில் போட்டுவிட்டு அந்த போட்டியை விடாது பார்த்துகொண்டுமிருப்பானாம். அந்த ஒன்லைன் சூதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து பணமும் இட்டியிருக்கிறான் அந்த மோகத்தில் இன்னும் பல இலட்சம் பணங்களினை ஒன்லைன் கிரிக்கெட் சூதில் போட்டிருக்கிறான். அது தான் அவனுக்கு விபரீதமாயிருக்கிறது . ஒரு போட்டியில் வென்றால் அடுத்ததில் பெற்றுவிடலாம் என்பது போல, அதாவது மகாபாரதத்தில் பாண்டவர்கள் சூதில் தோற்றுகொண்டிருக்க எல்லாம் இழந்த பின் இறுதியில் ஒன்றுமே இல்லை என்ற நிலை வந்த பின் தம் மனைவியான திரெளபதையினையே சூது வைக்கும் அளவிற்கு அந்த சூதாட்டம் மிக கொடியது. அப்படி தான் இவனும் அடுத்ததில் பெறலாம் பெறலாம் என கடன் பட்டு கடன் பட்டு கிறிக்கெட் சூதில் முதலிட்டிருக்கிறான். அந்த விளையாட்டு வினையாகி போகவே எப்படி மனைவியை சூது வைத்தும் மானமும் மண்ணும் இழந்து பாண்டவர்கள் நிர்க்கதியானார்களோ! அதுபோல அகீபனும் தன் பணத்தினையும், வீட்டார் பணத்தினயும், அதுபோக பல லட்சங்களில் கடன் பட்டும் ஈடுபட்ட கிறிக்கெட் சூதாட்டத்தில் எல்லாமுமே இழந்தான். அதனால் எல்லாம் இழந்தவனாக தற்கொலைக்கு துணிந்துவிட்டான். இப்போது இறந்தும் விட்டான். ஓர் விளையாட்டு வீரன் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு உறுதியாக இருப்பான். ஆனால் அவனை இந்த ஒன்லைன் சூது விளையாட்டு அடிமையாக்கி அழித்தொழித்து விட்டது. கடந்த மாதமும் யாழ் போதனா வைத்தியசாலையில் ஓர் இளைஞன் ஒன்லைன் கிரிப்ரோ கரன்சியில் பல கோடி முதலிட்டு நட்டமாகி தற்கொலை செய்து ஒரு மாதத்திற்குள் அடுத்த ஒன்லைன் சூது மரணம். அதுவும் ஓர் பிரதேச சபை உறுப்பினராக இருந்த தலைமைத்துவ பண்பு கொண்டவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் இந்த ஒன்லைன் வியாபாரங்கள் எவ்வளவு எம்மை அடிமைப்படுத்தி பணம் பொருள் உயிர் என எல்லாம் பறித்துவிடும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். எம் சிறுவர் பராய சமூகமும் ,இளைஞர் சமூகமும் விழிப்புணர்வடைய வேண்டும் , விழிப்புணர்படைய செய்ய வேண்டும் என்பது அத்தியாவசிதமான ஒன்று. பெற்றோர்களே! ஒரு போதும் உங்கள் பிள்ளைகளுக்கு வீடியோ கேம் விளையாட அனுமதிக்காதீர்கள்! அவர்களை சின்ன பராயத்தில் இருந்தே கல்விக்கு புறம்பாக கிரிக்கெட்டோ/ உதைபந்தோ/ கரப்பந்தோ/ கூடைப்பந்தோ/ மேசைப்பந்தோ/பூப்பந்தோ/ நீச்சலோ/ கராத்தையோ/ செஸ் போன்ற இணைவிதான விளையாட்டுகளில் ஈடுபட வையுங்கள். அத்தோடு பாடல்/ நடனம்/ சித்திரம்/இசை போன்ற கலைத்துறைகளில் அவர் அவர் திறமைக்கு ஏற்றால் போல சின்ன வயசில் இருந்தே இணைத்து விடுங்கள். (சும்மா ஒரே பாடத்திற்கு ஒன்பது இடத்திற்கு ரீயூசன் ஏத்தி இறக்காமல்) அப்போது தான் அவர்கள் தேவையில்லா வீடியோ கேம்களில் ஆரவம் காட்ட மாட்டார்கள். போதைபொருளுக்கும் அடிமையானவர்களாக மாற மாட்டார்கள். அதைவிட எம் அன்பான இளம் தலைமுறை நண்ப நண்பிகளே! ஒருபோதும் ஒன்லைன் கிரிப்டோ கரன்சிகளில் முதலிட வேண்டாம், ஒன்லைன் சூது விளையாட்டுகளில் பெரும் பணம் போட்டு விளையாட வேண்டாம். பிறகு பணம், சொத்து, மரியாதை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்க வேண்டி வரும். அதற்கு தான் யாழில் இடம்பெற போதனா வைத்தியசாலை ஊழியர் கிரிப்டோகரன்சியால் தற்கொலை செய்தமை. தற்போது அகீபன் எனும் ஆளுமை ஒன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் தற்கொலை புரிந்தமை உதாரணங்களாக அமைகின்றன. மேற்சொன்ன இருவரும் வட்டிக்கு கடன்பட்டு கோடிகளில் ஒன்லைனில் போடாமல் அதை நிலமாக/ தங்கமாக வாங்கி வைத்திருந்தால் கூட இப்போது கடன் காரன் கேட்டால் கூட கடனை அடைத்து விட்டு நின்மதியாக இருக்கலாம். கண்ணுக்கு தெரிந்த முதலீடுகளில் முதலிடுங்கள். உங்கள் கண்ணுக்கு புலப்படா ஒன்லைன் வியாபரங்களில் பணம் போடாதீர்கள், அதைவிட கடன் வாங்கி பணம் போடாதீர்கள். யாழ்பாணத்தில் ஒன்லைன் வியாபாரத்தினால் போன கடைசி உயிராக அகீபனின் உயிர் இருக்கட்டும். இன்னொருமுறை கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்கும் பேர்போன யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு துர்சம்பவம் நிகழாதிருக்க அனைவரும் விழிப்புணர்வோடு செயலாற்றுவோம். ஓம் சாந்தி மதுசுதன் 29.10.2025
  22. ❤️.......................... ஏராளன், பையன் சார் - நானும் ஒரு பகிடியாகவே கேட்டிருந்தேன்...............👍. கடவுள்கள் மனிதர்களை தண்டிக்க ஆரம்பித்தால், பூமியில் கை விரல்களால் எண்ணக்கூடிய மனிதர்கள் கூட மிஞ்சுவார்களோ தெரியவில்லை............ 3 x 3 = 9 என்று கணக்கு சரியாகத்தான் இருக்குது...........ஆனால் முடியாது............🤣.
  23. ஏற்கெனவே... "ஆசன வாயிலில்" வைத்து தங்கம் கடத்தும் கோஷ்டிகள் தானே இவர்கள். 😂
  24. பைத்தியர்... பாராளுமனத்துக்குள் நுழையும் மட்டும், கொஞ்சம் ஒழுங்காக.. மக்கள் பிரச்சினை சம்பந்தமாக அதிரடியாக களத்தில் இறங்கி குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தவர். அது தொடரும் என்ற நம்பிக்கையில்... மக்கள் வாக்களித்து அனுப்பினார்கள் என கருதுகின்றேன். அவர்.... பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதல் நாளே... எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து, அடாவடி பண்ணும் போதே... அவருக்கு ஏதோ சுகயீனம் இருக்கு என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள். 🤣 இனி ஒரு தேர்தலில்... இவர் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும்... எங்களது மக்களை நம்பி, எதுவும் உறுதியாக கூற முடியாது. 😂
  25. இளகின இரும்பை கண்டால் கொல்லர் எதையோ…தூக்கி…தூக்கி அடிப்பாராம் என்பது போல் இருக்கிறது சில முஸ்லிம் “தலைவர்களின்” அறிக்கை அக்கப்போர். எமது தலைவர்கள் போலவே அவர்களின் தலைவர்களும் தம்மக்களின் அவலத்தை வைத்து ஆதாயம் தேடுவதில் சூரர். இதில் புலிகள் கழட்ட முடியாத நகையை வெட்டி எடுத்தனர் என ஒரு புது புரளியை இவர் கிளப்பி உள்ளார்.
  26. 💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்றும் உன்னுடன் நிற்பாரே ஈழத்தின் கரையிலிருந்து இங்கிலாந்தின் வானம்வரை தாத்தாவின் மங்கா வாழ்த்துக்கள் ஒலிக்குமே! அம்மம்மா வானத்தில் இருந்து ஆசீர்வதிக்க அவளின் கருணை உள்ளம் ஒளிகொடுக்க விண்மீன்கள் அவளின் முகத்தைக் காட்டிட ஆரினின் தொட்டிலை ஆசீர்வதித்து ஆட்டுவாளே! ஆரினே பேரனே வலிமையாக கனிவாக வளர்ந்து மனதில் அன்பையும் நம்பிக்கையையும் பதித்திடு உன்னை உருவாக்கிய ஒவ்வொரு குடும்ப வேரிலும் அன்பு உணர்வு நிறைந்த கதைகள் அடங்குமே! வெல்வின் தோட்டத்தில் [Welwyn Garden] மலர்ந்த மழலையே நேசிப்பவருக்கு இன்ப மகிழ்ச்சி கொடுப்பவனே மூன்று காலமும் அன்பும் நம்பிக்கையும் பொங்க காலம் பிணைத்த பிணைப்பு நீதானோ! உங்கள் வாழ்வின் புதுப்பாடல் ஆரம்பிக்க ஆரின் குட்டியே மெழுகுவர்த்தியை ஊதுங்கள் காலடித் தடங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் அடைய சொர்க்கத்தின் புன்னகை முகத்தில் ஒளிரட்டுமே! தாத்தா 'கந்தையா தில்லைவிநாயகலிங்கம்', அத்தியடி, யாழ்ப்பாணம். 💙 ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32083417654640132/?
  27. ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........! 💐
  28. அதெல்லாம் ஏமாற்று அண்ணை. அதனால பயம் வேண்டாம்! பையன் சொன்னதற்கு நகைச்சுவைக்காக பகிர்ந்தேன்.
  29. பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு தேவயிலை என்று நினைக்கிறவர் நிச்சயமாக சுமந்திரனுடந்தான் பேசுவினம்
  30. சாம்பார் சாதம் செய்து பாருங்கள் . ...........! 👍
  31. அததெரண கருத்துப் படம்.
  32. அதற்குப் பிறகு தானே தென் ஆபிரிக்கா அணிக்காக ஈழப்பிரியன் அண்ணா கேட்டு நாங்கள் ஒரு யாகம் செய்தோம்...................🤣. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அஞ்ஞாத வாசம் போக வேண்டியது தான்............🤣. ஆனாலும் இந்தியாவில் நம்பிக்கை இருக்கின்றது, அது எப்படியும் தோற்று விடும் என்று...........😜.
  33. பேரன் ஆரினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  34. இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-
  35. நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல். அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?
  36. தமிழ் மட்டும் என.... ஒரு தடியெடுக்க.... சாதிகள் எனும்.... பனிமலைகள் தானாகவே... உருகிப்போகும். சாதிகள் இல்லையடி பாப்பா. -பழைய ஏற்பாடு-
  37. சாதியச் செருக்கு… ஊர்ப்பெருமை… ஆசாரவாதம்… ஆண்-இன வாதம்… பிரதேசவாத பித்து… சுயநலனே கெத்து… என்று களவை போற்றும் கபடம்… இத்தனையும் குரோமசோமில் குடிகொண்ட இனத்தின் பழைய ஏற்பாடுகளை பஸ்பமாக்குவதால்… நன்றே…நன்றே… நையாண்டி நன்றே. -புதிய ஏற்பாடு-
  38. ஐஸ் வேண்டாம் என்றதால் கவிதை எழுத முடிந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.