யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் மாத்தறை உள்ளிட்ட 10 நகரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உகந்த திறமையான, நிலையான நகர வலையமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் தொடக்கப்பணிகளுக்காக ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. திடக் கழிவுகளை முறையாக அகற்றும் மற்றும் பராமரிக்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ. 900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத்தளை நகரத்தில் நெரிசலைக் குறைப்பதற்காக சாலை 4 வழித்தடங்களாக விரிவுபடுத்தப்படும். ஹட்டன் நகரத்தில் கடுமையான போக்குவரத்தை சமாளிக்க 2026 இல் நகரத் திட்டம் தயார் செய்யப்படும். இதற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தித் திட்டங்கள் 2026 முதல் ஆய்வுகளின் அடிப்படையில் திட்டமிடப்படும். யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் மாத்தறை உள்ளிட்ட 10 நகரங்களில் சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தொடங்க ரூ. 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு உகந்த விலையை உறுதி செய்வதற்காக அரசாங்கம் போட்டித் திறனுடைய டெண்டர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ருவான்புரா அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான நிலம் கையகப்படுத்தலுக்காக ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. குருணாகல்–தம்புள்ளா அதிவேக நெடுஞ்சாலையின் நிலம் கையகப்படுத்தலை நிறைவு செய்ய ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையான சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூடுதலாக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை அபிவிருத்திக்காக ரூ. 34,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொத்துஹெராவிலிருந்து கலகேதர்வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ரூ. 10,500 மில்லியன் உட்படுகிறது. ருவான்புரா அதிவேக நெடுஞ்சாலையின் (கஹத்துடுவாவிலிருந்து இங்கிரியாவரை) பணிகளை மறுமதிப்பீடு செய்வதற்கும் நிலம் கையகப்படுத்தலுக்குமான பணிகளுக்காக ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்திற்கான குறுகியகால தீர்வுகளுக்காக ரூ. 250 மில்லியன் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொத்துஹெராவிலிருந்து கலகேதர்வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரா–ரம்புக்கான பகுதி 2027 முதல் காலாண்டில் முடிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 10,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ரம்புக்கான–கலகேதர பகுதியின் பணிகளைத் தொடங்க ரூ. 20,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை (SLTB) டிப்போக்கள் மற்றும் பணிமனைகளுக்கு புதிய கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்க ரூ. 790 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே துறைக்கு 5 புதிய டீசல் மல்டிபிள் யூனிட்கள் (DMUs) வாங்குவதற்கான ஆரம்பப் பணிகளுக்கு ரூ. 3,300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் SLTB பேருந்துகளில் kulaintha என்ஜின் யூனிட்களை மாற்ற ரூ. 2,062 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் நீண்ட தூர சேவைப் பேருந்துப் படையில் 600 புதிய பேருந்துகள் சேர்க்கப்படுகின்றன; இதற்காக ரூ. 3,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் உயிர் காப்பாற்றும் உபகரணங்களை வழங்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வளைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக்காக ரூ. 350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ் மல்வத்து ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. செனாநாயக்க சமுத்திரத்தின் வாய்க்கால் (Sorowwa) புதுப்பிப்பு உள்ளிட்ட மற்ற நீர்வழி அமைப்புகளை மீட்டமைக்க ரூ. 6,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக ரூ. 91,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தேனி ஆறு திட்டத்தின் தொடக்கப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ. 50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. Milco ஆலை புதுப்பிப்பிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாடு மற்றும் பன்றி இனப்பெருக்கத் திட்டங்களுக்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைமுக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 500 மில்லியன், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் மீன் பிடிப்பு பகுதிகளை அடையாளம் காணும் முறைமையை உருவாக்க ரூ. 100 மில்லியன், மேலும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையங்களை மேம்படுத்த ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண தேங்காய் முக்கோணப் பகுதி அபிவிருத்திக்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளா குளிர் சேமிப்பு நிலையத்தில் சோலார் மின்சாரம் அமைக்க ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்க ரூ. 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டப்படும் வீட்டு திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். 2030க்குள் உள்ளூர் பால் தேவையின் 75 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் உட்பட தொடக்கப் பணிகளுக்கு ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகளுக்கு ரூ. 24,000 மில்லியன் மற்றும் கிராமப்புற பாலங்களுக்கு ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ரூ. 2,000 மில்லியன், 2026இல் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.