Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3043Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31932Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்5Points87986Posts -
Paanch
கருத்துக்கள உறவுகள்4Points8133Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/04/25 in all areas
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
6 pointsஇது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html அம்மனும் அமிர்தமும் காட்சி 1 (அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.) அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம். பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல. அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது. லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது. பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான். அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே. பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன். அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம். உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது. (லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.) அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே) நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................ பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்............... அமிர்தம்: (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே, மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே? (பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.) அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன். லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ. அமிர்தம்: காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள். (பார்வதி உள்ளே வருகிறார்.) பார்வதி: பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம். அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய். லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது? அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது. லக்க்ஷனா: உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா. பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க. அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல. பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது. நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம். அமிர்தம்: அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது. பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும். அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன். (தொடரும்.......................)6 points
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
4 pointsகாட்சி 2 (அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.) அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே.................... (அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.) அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்? பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன். அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே..................... (பாரதம் சிரிக்கிறார்). பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. (அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்). அமிர்தம்: எந்த ஐயன்…. பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான். அமிர்தம்: இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................ பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்? அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது. கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும். பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை. அமிர்தம்: அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்................. பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன். அமிர்தம்: அது சரி தாயே............. நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை? பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு........... சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார். நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன். (இருவரும் நடக்கிறார்கள்) அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது? பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு. அமிர்தம்: ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது. பாரதம்: நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன். எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை. அமிர்தம்: என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரதம்: சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று…. அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான், அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள். உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்............... (தொடரும்........................)4 points
-
“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்” -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
“இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். அத்துடன், ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள். மற்ற எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி என்ன? நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை என கூறியுள்ளார். Tamilmirror Online || “எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்”2 points
-
அம்மனும் அமிர்தமும் (நாடகம்)
2 points
-
வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்
அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார். சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................2 points
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
கடல்நீரில் தத்தளிப்பவன் சிறு துரும்பைக் கண்டாலும் அதனைப்பற்றி தன் உயிர் காப்பாற்றவே முயல்வான். துரும்புபற்றி ஆராயமாட்டான். சொல்லவெண்ணா துன்பங்களை அனுபவித்துவரும் தமிழர்களும் அப்படித்தான். கோத்தபாயாவே அனுரா வடிவில் வந்தாலும் பற்றிக்கொள்ளவே முயல்வார்கள்.2 points
-
தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
மனித அபிவிருத்திச் சுட்டெண் போன்ற பொருளாதாரம், மருத்துவம், கல்வி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்த ஒரு அளவீட்டில் பார்த்தால் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதை தான். இதில் மொழி எங்கே வருகிறது? இந்தக் கவுண்ட லொஜிக் படி பார்த்தால் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியைப் பேசும் பீகார் தான் "மிக்க வளர்ச்சியடைந்த" மாநிலம்😂!2 points
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
நிலாவைக் காட்ட நரி நண்டுகளை அழைத்த கதையை, அம்புலிமாமாவில் என் சிறுவயதில் படித்துள்ளேன்.🤣🤣2 points
-
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
இதே நிலை தான் என் வீட்டில், நண்பர்கள மத்தியில், உறவுகள் மத்தியிலும். இன்று புலிகள் இல்லை. செயல்திறன் அற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனைய சிங்கள கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை. அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு. அனுர மீதான நம்பிக்கை, அவர் சார்ந்த கட்சி மீது இல்லை என்பதும், தனி மனிதன் மீதான நம்பிக்கை ஆபத்தானது என்பதையும் காலம் அவர்களுக்கு காட்டாமல், அவர்களின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமாகும் வாய்ப்புகள் வாய்க்கட்டும்.2 points
-
சித்தாந்த வினா விடை
1 pointசித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார் (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார். இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) அருணைவடிவேல் முதலியார் மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல் கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும், ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும் வழி நூல்களும், 'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும் சார்பு நூல்களும், 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை., “பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்” என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள், முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது. அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும். இவ்வாறாக நாம் காணும்பொழுது, முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது? ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். மேலும் உண்மை நூல் என்பது, ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும். அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்" எனத் திருமந்திரமும், “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்" என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன? ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல் நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர். அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும் சிவாகமங்களை இகழ்ந்து நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும். மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும் "புறப்புறம், புறம், அகப்புறம், அகம்" என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால், இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன. அவற்றுள் புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. புறச் சமயங்கள் :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. அகப்புறச் சமயங்கள் :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்பன. அகச்சமயங்கள் :- பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன. 'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? ஆசிரியர்: 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன. வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன. வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன. வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன . சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை, ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது. மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா? ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. மேலும் வேதம் ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்' (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால் இப்பெயர் பெற்றது. இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html1 point
-
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையால் 5ஆம் ஆண்டாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நாள் நிகழ்வு 03/12/2025 பகுதி 11 point
-
வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்
வரைபடங்களும் மனிதர்களும் ! sudumanalDecember 1, 2025 உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல் image: washington times மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை. போர் எப்போ தோடங்கியது? உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது. பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது. சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை. ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது. இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும். நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது. 2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள். 2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள். 2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள். 2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள். 2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின) இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். 4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. 4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset) அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை. 4.2) போர்ப் பொருளாதாரம் இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும். அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது. 4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது. 4.4) அவமானம் ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது. அவர்கள் கையாளும் வழிமுறை ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள். ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள். டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன். “நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும். இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம் புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது. அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது. அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்? உக்ரைன் தோல்வி அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம். உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது. இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும். 2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம் உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும் 3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை. இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது. 3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை. 3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது. ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல் சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது. பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது. முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது. இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார். அரசியல் சதுரங்கம் மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும். இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. 2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது. ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும். தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர். அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும். ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. யதார்த்தம் உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார். ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார். உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன! ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!. ravindran.pa 01122025 Thanks: https://marumoli.com/வரைபடங்களும்-மனிதர்களும/ https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-75021 point
-
வெள்ள வாய்க்காலுக்குள் போடப்பட்ட மண் அணையை அகற்ற பணிப்பு
வெள்ளம் வரும் போதெல்லாம் அனுமதி பெறாத அனைத்தும் இடிக்கப்படும் என்பது வழமையாகிவிட்டது. கோத்தாவின் காலத்தில் கோப்பாய் பிரதேசசபை பணத்துக்காகவே வேலை செய்துள்ளனர்.1 point
-
கருத்து படங்கள்
1 point
-
“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்” -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
இந்தக் கொசுத் தொல்லை...🤣1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
எந்த திரியிலும் சிலர் ஆதாரம் பூதாரம் என்றால் நான் அப்படியே போய்விடுவேன் அவர்களுக்கு தாம் ஏதோ யால களநீதிபதி என்ற நினைப்போ என்னமோ ... அப்படியே கேட்டுவிடடால் நாம் ஓடிவந்து மகாபிரபு இதோ என்று நீட்டிட வேண்டும் என்று ஏதும் எண்ணமோ என்னமோ. இந்த பேச்சுவார்த்தை 1987 லேயே தொடங்கி மால்டா அக்ரீமெண்ட் உருவானது அதன் பின்பு ஜேர்மன் சுவர் வடையும் வரை பல பேச்சுக்கள் உடன்படிக்கைகள் எழுதப்பட்டு இருகினறன. நீங்கள் தட்டினால் கிடைக்க கூடிய வகையில் இல்லாமல் பல இப்போ இன்டர்நெட்டில் இருந்து தூக்க படுகிறது. எங்கள் ஈழ விடுதலை போர் பற்றிய விக்கி தளம் 2017 இல் பல கருத்துக்களை திணித்து இருந்த பலவற்றை அழித்து இருக்கிறது. விக்கி தளம் யூதர்களால் நடாத்தப்படும் ஒன்று. This latter idea of special status for the GDR territory was codified in the final German unification treaty signed on September 12, 1990, by the Two-Plus-Four foreign ministers (see Document 25). The former idea about “closer to the Soviet borders” is written down not in treaties but in multiple memoranda of conversation between the Soviets and the highest-level Western interlocutors (Genscher, Kohl, Baker, Gates, Bush, Mitterrand, Thatcher, Major, Woerner, and others) offering assurances throughout 1990 and into 1991 about protecting Soviet security interests and including the USSR in new European security structures. The two issues were related but not the same. Subsequent analysis sometimes conflated the two and argued that the discussion did not involve all of Europe. The documents published below show clearly that it did. At the Washington summit on May 31, 1990, Bush went out of his way to assure Gorbachev that Germany in NATO would never be directed at the USSR: “Believe me, we are not pushing Germany towards unification, and it is not us who determines the pace of this process. And of course, we have no intention, even in our thoughts, to harm the Soviet Union in any fashion. That is why we are speaking in favor of German unification in NATO without ignoring the wider context of the CSCE, taking the traditional economic ties between the two German states into consideration. Such a model, in our view, corresponds to the Soviet interests as well.” (See Document 21) எழுத்தில் இருக்கும் டாக்குமெண்ட்ஸ் இன்டர்நெட்டில் இப்போதும் இருக்கு நீங்கள் தேடினால் வாசிக்கலாம் ......... இந்த வாய் வாக்குறுதியை வைத்து பலர் குழம்பி கொள்கிறார்கள் நீங்களும் அப்படி என்று எண்ணுகிறேன்1 point- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
1 pointராஜ பக்சா கூட்டத்தை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்ப வைக்க அண்டம் காக்கை பனம் கள்ளு அருந்தி விட்டு கரைவது போல் தமிழர் இனவழிப்பு நடைபெற வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க ஆதரம்கள் இல்லை என்று உள்ள வெளிநாடுகளுக்கு தனியே பறந்து பறந்து பரப்புரை தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் இப்ப என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லுங்க அவரின் வால்பிடிகளே.................1 point- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
"Not One Inch" எனும் வார்த்தையை உதிர்த்தவர் ஜேம்ஸ் பாக்கர்.அலுவல் முடிய அந்த வார்த்தையை நிகாரித்தவர் அன்றைய் ஜெனாதிபதி ஜோர்ஜ் புஷ். M. E. Sarotte அவர்கள் எழுதிய புத்தகத்தில் நிறைய விபரங்கள் உள்ளது.1 point- போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது1 point- போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
இந்த விடயத்தில் எம் தமிழ் கடைக்காரர்களை யாரும் விஞ்ச முடியாது. காலாவதியான திகதி இருக்கும் label மேல் புது திகதி கொண்ட இன்னொரு label லை ஒட்டி சக தமிழருக்கே விற்று விடுவார்கள்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
தவறாக விளங்கிக்கொண்டமைக்கு வருந்துகிறேன். பின்னர்தான் நீங்கள் இட்ட குறியீட்டை கவனித்தேன்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு
நீங்கள் தவறாக விளங்கிவீட்டீர்கள், அனுராவிற்கு மக்கள் ஆதரவு கூடுகின்றது, அவ்வளவே. ஏன் வீட்டில் கூட அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றது, அண்மை யாழ் போன போது பலர் அவரைபற்றி நன்றாக கதைத்தார்கள்.1 point- தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
ஒரு தடவை இதே யாழ்களத்தில் தமிழ்நாடு முன்னேறவில்லை என்றேன். அதனால் நான் வாங்கிய ஊமைக்குத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல.😂 பணத்தை வைத்து ஒரு நாடு முன்னேறிவிட்டது என்பவர்களால் யார்தான் என்ன செய்ய முடியும்?😎 இந்த உலகில் தாய் மொழி அழிந்து போகும் நாடாக தமிழ்நாட்டை மட்டுமே பார்க்கின்றேன்.தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதையும்,தனியே ஆங்கிலத்தை பேசுவதையும் பெருமையாக நினைப்பதும் இந்த தமிழினம் மட்டுமே. இந்தியாவிலும் சில இனங்கள் உண்டு. அதை விட பந்தி பந்தியாக தமிழ் கட்டுரைகள் ஆராய்ச்சி விமர்சனங்கள் எழுதிக்கொண்டு இடையிடையே ஆங்கில சொற்களை உபயோகப்படுத்துவதும் ஒரு வித தற்பெருமையே இன்றி வேறொன்றுமுமில்லை. ஏனென்றால் தமிழில் உள்ள சொற்பதங்களை போல் வேறெந்த மொழியிலும் இல்லை. பல நிதர்சனமான தமிழ் ஆக்கங்களில் ஆங்கில சொற்களை பயன்படுத்துபவர்களுக்கு ஒருவித தமிழ் வரட்சி இருக்கின்றது என்பது கருத்து.1 point- தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!
அவருடைய. கட்சியின். பெயர். நாம். தமிழர். என்பது. எந்தக்கட்சியும். வைக்க. துணியவில்லை. பெரும்பாலன. தமிழருக்கு. இரத்தம். ஒடுவது. சீமானின். பேச்சைக் கேட்டுத் தான். இல்லையேல். அவர்களுக்கு. இரத்தம். ஒடாது. ஒடாவிடில். உடலில். கலங்களுக்கு. உணவு. சக்தி. எடுத்துச்செல்லப்படாது. அவர்கள். சோம்பேறிகளாத் தான். இருப்பார்கள். சீமான். வீட்டில். தெலுங்கில். பேசலாம். பிள்ளைகள். ஆங்கிலத்தில். படிக்கலாம். ஆனால். சீமான். உணர்ச்சி வசப்பட்டு. பேசாவிடில். தமிழர்களின். ஒரு. பகுதியினர். இயக்கமற்றுப் போவார்கள். ஆகவே. அவர். பேசட்டும். ஒரு. இந்தியா. கடவுச்சீட்டு. வைத்துள்ள. நபர். நான். தமிழன். என்று. சொல்வதா ? இல்லை. நான். இந்தியன். என்பதா. ? உண்மை.1 point- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
அண்ணா, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பூர்வீகக் குடிகளை அழித்து, குடியேற்றங்கள் நிகழ்த்தி, இன்று வல்லாதிக்கம் செய்வோர்................... ஐரோப்பியர்களே, அண்ணா. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களே. ஆங்கிலயர்களும், ஜெர்மனியர்களும், ஸ்கண்டினேவியர்களும், வேறு பல ஐரோப்பியர்களுமே அமெரிக்கர்கள். அன்றைய ஐரோப்பாவின் நீட்சி தான் இன்றைய அமெரிக்கா. முன்னர் ஜெர்மனியும், இங்கிலாந்தும், பிரான்சும், ஸ்பெயினும், இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் செய்த வல்லாதிக்கத்தையும், கொடுமையையும் தான் இன்றைய அமெரிக்கா வேறு வழிகளில் தொடருகின்றது . இவை எல்லாமே பாவப்பட்ட நிலங்கள் தான். கனடா, ஆஸ்திரேலியா கூட அதுவே. நான் முன்னர் வேறு ஒரு இடத்தில் எழுதியிருந்தது போல, புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கருத்துகளை எழுதும் நாங்கள் எவரும் இதே கருத்துகளை இவ்வளவு வெளிப்படையாக ஊரிலிருந்தால் எழுதியிருக்க முடியாது. மேற்கு நாடுகளில் குடிபுகுந்திருக்கும் நாங்கள் அனைவருமே பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்புகள் தான். மேற்கு நாடுகள் கொடுக்கும் வசதிகளும், சுதந்திரமும், பாதுகாப்புமே எங்களுக்கு துணிவைக் கொடுக்கின்றன. இதே காரணங்களே, வசதி - சுதந்திரம் - பாதுகாப்பு, எங்களை இந்த நாடுகளை நோக்கி புலம்பெயர வைத்ததற்கான பிரதான காரணங்கள் கூட. இவை எங்களுக்கும், எங்களின் பின்னால் எங்களின் சந்ததிக்கும் கிடைக்காது என்று கருதப்பட்ட தேசங்களை நாங்கள் குடியேறுவதற்கு உகந்தவை அல்ல என்று தவிர்த்தோம். இந்த மேற்கு நாடுகளில் எங்களினதும், குடும்பத்தினதும், அடுத்த சந்ததிகளினதும் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்து விட்டு, தார்மீக மற்றும் ஆத்மாந்த ஆதரவுகளை எங்களுக்கு பிடித்தமான தேசங்களுக்கும், தலைவர்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். இது மிகச் சாதாரண ஒரு மனித இயல்பு. ஒரு நாட்டில் குடி இருந்து கொண்டு இன்னோரு நாட்டுக்கு எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்பது ஒரு கேள்வியே அல்ல. இது மிக இயல்பானது. ஈழத்தமிழர்களுக்கு தீர்வு என்று இன்று கல்விச் சமூகம் என்ன சொல்கின்றது என்று வசீ சொல்லியிருந்ததை மட்டுமே மேற்கோளாக எடுத்திருந்தேன். இணைந்த மாகாணசபை போராட்டத்தின், நோக்கத்தின் ஒரு மைல் கல்லாக இருந்திருக்கலாம் என்று தான் சொல்லியிருந்தேன். மற்றபடி இந்த விடயத்தில் கருத்து சொல்வதற்கு என்னால் முடியாது. அதற்கு திராணியும், மனப்பலமும் இல்லை. ரஷ்ய - உக்ரேன் போரை ஆதரிக்கவில்லை என்னும் உங்களின் நிலைப்பாடு மிகவும் சிறந்தது. இங்கு அமெரிக்காவிலும் அப்படியானவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அதிபர் ட்ரம்ப் கூட போர்களில் நம்பிக்கை அற்றவர் என்றே தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். ஆனால், உக்ரேன் தோற்று தன் நிலத்தை இழந்து, ரஷ்யா வென்று தான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கு எதிராகவே நான் கருத்துகளை முன்வைக்கின்றேன். இந்தப் போரை ஆதரித்தல்ல.1 point- யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு
புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மூலமாக அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான 50 லக்ரோஜன் மாப்பெட்டிகள், 50 சமபோச பொதிகள் யாழ்ப்பாணம் சிற்றி மெடிக்கல் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய தனுசன் தலைமையிலான மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு 84250 ரூபா. நன்கொடையாளர்கள் விபரம் 1) செல்வி மதுரா சிவகுமார் [டென்மார்க் (சுழிபுரம் கிழக்கு)] அவர்களின் 9 ஆம் ஆண்டு (01/12/2025) நினைவாக 30000 ரூபா தந்தையார் இராசையா சிவகுமார் வழங்கியுள்ளார். 2) சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளை (அமரர் திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் ஞாபகார்த்தமாக) ஊடாக 30000 ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றது. 3) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம் (சுழிபுரம் கிழக்கு, ஏழாலை) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸ்மா றுக்மன்(UK) 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளார். இந்த பணிகளுக்கு உதவிய நன்கொடையாளர்களுக்கும் சகோதரர் கொலின், உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய மாணவர்கள் தனுசன் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள். இந்த நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கு எடுத்து சென்று வழங்கப்படும்.1 point- ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ - வரலாற்றின் குற்றக் கிடங்கு
வரலாற்றின் குற்றக் கிடங்கு November 29, 2025 — கருணாகரன் — ‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள். இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழப்படுகிறது. இதில் இதுவரையில் 225 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெண்கள், குழந்தைகளுடையவையும் உண்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 1990களில் இலங்கைப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1996 இல் இதே இடத்தில், இப்படியொரு புதைகுழியில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பள்ளிக்கூட மாணவி, படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டாள். அவளைத் தேடிச்சென்ற அவளுடைய தாயும் தம்பியும் அயலவரும் கூடக்கொன்று புதைக்கப்பட்டனர். இந்தக் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியும், இதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்திய சூழலும் வரலாற்று முக்கியவத்துக்குரியது. இந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்டவரான இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், செம்மணி புதைகுழியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார். இது மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். இதையெல்லாம் குறித்து முன்பொரு கவிதை நூல் ‘செம்மணி’ என வந்தது. இப்பொழுது ‘வாசலிலே கிரிசாந்தி’ என இன்னொன்று வந்துள்ளது. இதற்கு முன் 1990 ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில், யாழ்ப்பாண நகரத்திற்கு கிட்டவாக உள்ள – இன்னொரு பக்கத்தில் இருக்கும் தீவுப்பகுதியில் (லைடன் தீவிலும் மண்டைதீவிலும்) இலங்கை அரச படைகளின் ‘திரிவித பலய’ கூட்டுப்படை நடவடிக்கையின்போது 163 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கைக்கும் படுகொலைக்கும் தலைமை தாங்கியவர் இலங்கை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிய மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ. (இவர் பின்னாளில் (1992.08.02) கண்ணிவெடித் தாக்குதலொன்றில் இதே தீவுப்பகுதியில் இறந்தார்). இந்தப் படுபாதகச் செயலைக் குறித்த ஒரு நூல் ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என எழுத்தாளர் ஷோபாசக்தியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஷோபாசக்தி, இந்தக் கொலைகள் நடந்த கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், இந்தப் படுகொலை நடந்தபோது ஷோபாசக்தி, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். (அந்த நாட்களில் அல்லைப்பிட்டியில் இருந்திருந்தால் அந்தப் படுகொலையில் அவரும் சிக்கியிருக்கக் கூடும்). அதில் தப்பிப்பிழைத்ததால் இப்பொழுது, இந்தப் படுகொலைகள் நடந்து 35ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படுகொலைகளை அதற்கான சாட்சியங்களோடும் விவரங்களோடும் தொகுத்து ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என வெளியிட்டிருக்கிறார். இந்த நூல் அநீதியிழைப்பொன்றின் சான்றாதாரமாகவும் நீதி கோரும் மக்களின் ஆன்மாவாகவும் இருநிலைகளில் தொழிற்படுகிறது. இந்த நூலில், ‘இந்தப் பேரழிப்பின்போது இராணுவத்தினரால் உண்டாக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மண்டைதீவில் உள்ளன’ எனப் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் பகிரங்கச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ‘இந்தக் கொலைகளையும் புதைகுழிகளையும் குறித்து வெவேறு இடங்களிலும் வெளிவந்த ஆவணங்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும்’ இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷோபாசக்தி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பதைப்போலவே, இந்த நூலின் அனைத்து விவரங்களும் தெளிவாகவும் சான்றுகளோடும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசைப்படுத்தி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. படுகொலைகளின் பின்னணி, பணயக்கைதிகள், படுகொலைக்களம், காணாமலாக்கப்பட்டவர்கள், லைடன் தீவில் படுகொலையான பொதுமக்கள், மண்டைதீவில் படுகொலையான பொதுமக்கள், உண்மையைப் புதைத்த குழிகள் என்ற ஏழு அத்தியாயங்களின் தலைப்புகளே போதும் இந்தப் படுகொலைகளின் சித்திரத்தை உங்களுடைய மனதில் எழுப்புவதற்கு. இவற்றுக்கு அப்பால், இவற்றைச் சான்றாதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் நிழற்படத் திரட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடவே, நீதி மிகத் தொலைவில் என்ற முற்பகுதியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது தலைப்புகள். இது நீதிகோரும் ஒரு முதன்மையான வெளிப்பாடு. சமனிலையில் நீதியின்மைக்கான எதிர்ப்புக் குரல். இலங்கை அரசினதும் அதனுடைய படைகளினதும் மானுட விரோத, அரசியல் விரோதச் செயலை உலகின் முன்வைக்கும் வலுவான ஆவணம். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்தக் கொலைகளைப்பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தங்களுக்கு நீதிகோரிப் பலரையும் சந்தித்திருக்கின்றனர். நடந்த சம்பவங்களைப்பற்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியிருக்கின்றனர். ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்களுடைய மனதில் அந்தத் துயரமும் அங்கே சுவாலை விட்டு எரிந்த நெருப்பும் அவர்களுடைய மனதிலும் நினைவுக் கண்களிலும் அப்படியே ஆறாச் சூட்டோடுதான் உள்ளன. ஆனால், ‘இந்தக் கொலைகள் எதற்குமே நீதி வழங்கப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரச படைகள் செய்த இந்தப் படுகொலைகளுக்கு இலங்கை அரசு இதுவரையில் பொறுப்புக் கூறவில்லை’. ஷோபாசக்தியே இந்த நூலில் கூறியிருப்பதைப்போல, இந்தப் படுகொலைகள் வரலாற்றின் இருண்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டு விடக் கூடாது. அப்படியொரு எண்ணத்தோடுதான் இவை அந்தக் கொலைகளுக்கு எதிரான சாட்சியமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைக் கோரும்போது தமக்கேற்பட்ட பாதிப்புகளையும் தமக்கிழைக்கப்பட்ட அநீதியின் சான்றுகளையும் வலுவாகத் திரட்டி முன்வைக்க வேண்டும். அறத்துக்குப் பதிலாக நலன்களே முதன்மை நோக்கமாகக் கொண்டியங்கும் உலகில், உலோகத்தையும் விடக் கனத்துத் தடித்திருக்கும் இதயத்தின் சுவர்களை உடைகக் கூடிய கூரிய ஆயுதங்களாக இருப்பவை பாதிப்புகளின் – அநீதிகளின் சான்றுகளே! ஆகவே அவற்றை நீதியைக் கோரும் மக்கள் தமக்கான வலிய கருவிகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஈழத்தமிழ்ச் சூழலில் இது மந்தநிலையில் (மந்தைத் தனமாக) உள்ளது. இந்த மந்தைத் தனத்தையே கொலையாளிகளும் அரசும் அதையே விரும்புகின்றன. இதற்கு எதிராக இயங்குவதே, எதிர்ப்புச் செயற்பாட்டை எந்த நிலையிலும் மேற்கொள்வதே கொலை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான ஒரே நீதிச்செயற்பாடாகும். ஷோபாசக்தி இவற்றை அந்த நீதியுணர்வோடும் அது எதிர்நோக்கும் அறிவியல் – அற வினாக்களோடும் இங்கே திரட்டி முன்வைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்தக் கொலைகளைப் பின்னணியை கொரில்லா நாவலில் ஒரு அத்தியாயத்திலும் தேசத்துரோகி என்ற கதையிலும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி. இதைவிட இந்தக் கொலை ஷோபாசக்தியினால் வலுவான இலக்கியப் பிரதியாக்கப்பட்டிருப்பது மிக உள்ளக விசாரணை என்ற சிறுகதையில். அந்தக் கதை தமிழில் மட்மல்லாமல், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படுகொலை நடந்த ஊர்வாசியாகவும் படுகொலைக்கு எதிரான மனித உரிமைப்போராளியாகவும் அநீதிக்கு எதிரான இலக்கியப் படைப்பாளியாகவும் என வெவ்வெறு நிலைகளில் நின்று இந்தப் பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷோபா. முந்தியவை புனைவின் வழியானவை. இது நேரடியான சான்றுகள், சாட்சியங்களோடானவை. ஆக ஷோபாசக்தியினுள்ளே அந்தக் கொலைகள் தணலாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இப்படி வேறு சில எழுத்தாளர்களும் தங்களுடைய காலத்திலும் சூழலிலும் எதிர்கொள்ள நேரிட்ட இத்தகைய கொலைகளையும் அநீதிச் செயல்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரதரின் கற்பு கதை தொடக்கம், நிலாந்தனின் கடலம்மா கவிதை உள்ளடங்கலாக இதற்கான ஒரு நெடும் பாரம்பரியமே ஈழத்திலக்கியத்தில் உண்டு. அவை வெறுமனே பதிவுகளல்ல. நீதிக்கான குரல்கள். சிங்கள ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வரலாற்றின் முன்னே நிறுத்தி விசாரணை செய்யும் கலகப்பிரதிகள். ஆனால் இவை புனைவும் நிஜமும் கலந்த இலக்கியப் பிரதிகள். இங்கே இப்பொழுது ஷோபாசக்தி திரட்டி அளித்திருப்பது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றிய நிஜமான ஆவணம். இப்படி ஒரு ஆவணத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டி முன்வைக்க முயற்சிக்கும்போது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, இவை அல்லது இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்பட்ட சூழல் என்பது ஒன்றில் போர் நிகழ்ந்த பகுதியாக இருக்கும். அல்லது ஒடுக்குமுறைத்தரப்புகளான அரச படைகளும் அவற்றின் துணை இராணுவக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளாக இருக்கும். இதனால் முறையான தகவல்களை – விவரங்களை – ப் பெறுவதில் (சேகரிப்பதில்) சிரமங்கள் உண்டு. அடுத்தது, இந்தச் சம்பவங்களின்போது உடனிருந்து தப்பியவர்கள், இவற்றை அறிந்தவர்கள், இவை பற்றிய விவரங்களைத் திரட்டிய ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எல்லாம் கால நீட்சியில் மரணித்தும் வேறு இடங்களுக்குச் சென்றும் விட்டதாகும். மட்டுமல்ல, இந்தக் கொலைகளைப் பற்றியும் இவை போன்று ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் உள்ள தகவல் – விவர – ஆணமாக்கல்களில் குழப்பங்களும் குறைபாடுகளும் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு அவலச் சூழலில் இருந்து கொண்டே இந்த மாதிரியான சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. போரினாலும் மிக மோசமான ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் தனக்கான தீர்வையும் நீதியையும் கோரும் போராட்டத்தில் – அரசியல் முன்னெடுப்பில் தீவிரமாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக முன்வைக்கக் கூடிய இவ்வாறான படுகொலைகள், இனவழிப்புச் செயற்பாடுகள், ஒடுக்குறைச் சான்றுகள் போன்றவற்றைச் சரியாக உருவாக்குவதில் பின்னடைந்தே இருக்கிறது. இதைச் செய்வதற்குத் தாராளமான – ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளோடு ஈழத் தமிழ்ச் சமூகம் உலகம் முழுவதிலும் பரந்திருக்கிறது. ஆனால், செயற்பாட்டில் மிகப் பிந்தங்கிப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இதனை நடைமுறையில் இந்தப் பிரதியின் உருவாக்கத்தின்போது ஷோபாசக்தியும் உணர்ந்திருக்கிறார். ‘வரலாற்றை ஆவணமாக்கி வைத்திருப்பதில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெருமளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது…. இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிவதற்காக அல்லது ஆய்வு செய்வதற்காக தமிழ் இணையச் செய்தி ஊடகங்களை நாடிச் செல்லும் ஒருவர் ஏராளமான தவறான மற்றும் குழப்பமான தகவல்களைக் கண்டடைய முடியும்..’ எனக் கவலையோடு அவர் சொல்வதைப்போல, வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) திரட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ஆவணமாக்கல் – வெளிப்படுத்தல் மூலங்களிலும் தகவல் பிழைகள் உள்ளன. ஆனாலும் இவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. இவற்றிலிருந்தும் நேரடியான வாய்மொழிச் சாட்சியங்கள், பிற அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், மனித உரிமை அமைப்புகள், நிர்வாக ரீதியான அரசாங்கப் பதிவேடுகள் எனப் பலவற்றிலிருந்தும் பெறக் கூடிய தகவல்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு காலத் தாமதம் கூடாது. அப்படியே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது இதை உணர்கிறோம். அத்துடன், இவற்றின் ஊடாக நாம் மிக மோசமான முறையில் நம்முடைய காலடியின் வழியே கடந்து சென்ற காலத்தை மீளத் திறந்து பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு. எல்லாக்கொலைகளும் ஒன்றல்ல. மரணம் வேறு. கொலை வேறு. மரணம் தரும் துக்கம் வேறு. கொலை உண்டாக்கும் துக்கம் வேறு. கொலையினால் ஏற்படும் துக்கம் கோபத்தையும் தன்னுள் கொண்டெரிவது. அந்தக் கோபம் அநீதியினால் உருவாகியது. அநீதிக்கு எதிரானது. ஈழத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பல நூறு கூட்டுக் கொலைகளின் நினைவாகவும் அவற்றுக்கு எதிரான அடையாளமாகவும் பல்வேறு இடங்களிலும் நினைவுத்தூபிகளும் கல்வெட்டுகளும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைக்குள்ளான பதினொரு பேரின் நினைவுச் சின்னம் யாழ்ப்பாண நகரத்தில் வீரசிங்கம் மண்டபதற்கு முன்பாக, முற்றவெளியில், கோட்டைக்கு எதிர்த்திசையில் உள்ளது. இப்படியே மட்டக்களப்பு மகிழடித்தீவில், முல்லைத்தீவு மாத்தளனில், முள்ளிவாய்க்காலில், நாகர்கோயிலில், நவாலியில், மன்னார் – முருங்கனில் வல்வெட்டித்துறையில்.. எனப் பல இடங்களிலும் உள்ளன. இன்னொரு நிலையில் எழுத்தாவணங்களும் வீடியோப் பதிவுகளும் ஒளிப்படங்களும் ஏராளமாக உண்டு. வல்வை ந. அனந்தராஜ் தொகுத்துப் பதித்த ‘வல்லைப் படுகொலைகள்’ கலாநிதி முருகர் குணசிங்கத்தின் “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்” மற்றும் நிஜத்தடன் நிலவன் எழுதிய “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)”போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல கொலைகளைப் பற்றிய ஆவணப்படங்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆவணப்பிரிவும், நிதரம்சனமும் அரங்கம் நிறுவனமும் தயாரித்து வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பை சோமீதரன் ‘எரியும் நினைவுகள்’ (Burning memories) ஆவணப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசின் மீதும் அது மேற்கொண்டுவரும் இனவாத அரசியலின் மீதும் அதற்கு எந்தக் கேள்வியுமற்று ஆதரவைக் கொடுத்து நிற்போரின் மீதும் தங்களின் எதிர்ப்பு அடையாளத்தைப் பதிவு செய்கின்றன. நீதியற்ற ஆட்சியே நீடித்தது என்பதற்கான சாட்சியங்களே அவை. அத்தகைய சாட்சியங்களில் ஒன்றே 1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும் ஆகும். இது புதைகுழிகள் தோண்டப்படும் காலம். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரமும் பேசப்படும் நாட்களிவை. நீதியைக் கோரும் மக்களுக்கு – பாதிக்கப்பட்டோருக்கு – இவை, இந்தச் சான்றாதாரங்கள் வலுவானவை; மிக மிக அவசியமானவை. ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்கள் மீண்டும் தங்களுடைய ஊர்களில் மீளக் குடியேறி விட்டார்கள். (எல்லோரும் அல்ல. எல்லா இடங்களும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டவையும் அல்ல). ‘மாற்றத்துக்கான ஆட்சி’யை நடத்துவதற்குப் புதிய அரசாங்கம் (NPP) வந்து விட்டது என்று பலரும் கருதவும் கூடும். வெளித்தோற்றத்துக்கு இப்படித் தெரியலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதே நிலையில்தான் உள்ளனர். அவ்வாறுதான் நடத்தப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாற்றப்பட்டுள்ளன. குண்டுச் சத்தங்களும் சுற்றிவளைப்புகளும் கொலையும் இடப்பெயர்வும் இப்போதில்லைத்தான். ஆனால், ஏனைய அனைத்து நெருக்குவாரங்களும் சுமைகளும் ஒடுக்குமுறைகளும் அந்நியமாக்கலும் அப்படியேதான் உள்ளன. புத்தர் சிலைகளை முன்னிறுத்தி நில ஆக்கிரமிப்பு நடக்கிறது. படைகள் எல்லாம் ஊர்களில் சாவகாசமாகவே இருக்கின்றன. என்பதால்தான் இவற்றையெல்லாம் – தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் – நாம் வலுவோடு பேச வேண்டியுள்ளது. அந்த வகையில்தான் ஷோபாசக்தியும் இந்த நூலை மிகக் கடுமையாக உழைத்து, மிகுந்த சவால்களின் மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இது எளிய பணியல்ல. இந்தக் கொலை நாடகம் நடந்த நாட்களில் நான் யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் (ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில்) பதறும் நெஞ்சோடிருந்தேன். சிறைப்பிடிக்கப்பட்ட மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை அன்றிருந்தது. புங்குடுதீவிலிருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போக முடியாமல் யாழ்ப்பாண நகரில் தவித்தலைந்து கொண்டிருந்தார் கவிஞர் சு. வில்வரெத்தினம். வீட்டுக்குப் போக முடியாமல் மட்டுமல்ல, அங்கே உள்ள தன்னுடைய குடும்பத்தின் நிலை என்ன என்பதையே அறிய முடியாமல் தவித்தார். அந்தத் தவிப்பில் இரவெல்லாம் அவர் எழுதிய கவிதைகளைச் சைக்கிள் மிதித்து வந்து படிப்பார். அவருடைய கண்களும் நெஞ்சும் மட்டும் கலங்கவில்லை. எங்களுடைய கண்களும் நெஞ்சும் கலங்கியது. அந்தக் கவிதைகள்தான் பின்னாளில் ‘காற்றுவழிக்கிராமம்‘, ‘காலத்துயர்‘ என்ற கவிதை நூல்களாகின. அதில் ஒரு கவிதை இப்படியிருந்தது – உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம் உமியின் கரிச்சட்டி ஒருபுறம் ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள் கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி. வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு சுடலைக்கே பாத்திரமாய்ப் போக நானிங்கு எதனுடைய முதிசம் காக்க? யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில் எல்லாவழிகளும் மயானத்திற்கே இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில் உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு… இதையே – இந்த அவல நாடகத்தையே – ஷோபாசக்தி, தன்னுடைய பல கதைகளில் புனைவாக்கினார். இன்னும் அவை இலக்கியமாக வரலாம், வரும். அந்தப் புனைவுகளில் பேசியவற்றுக்கும் அப்பால் இந்த உண்மைகள் இன்னொரு வகையில் உலகோடு பேச விளைகின்றன. அதற்கு உலகம் தயாராக உள்ளதா? இந்த நூலைப்படிக்கும்போது அந்த நாட்கள் பதற்றத்தோடு நினைவில் எழுகின்றன. அப்பொழுது (1994 இன் முற்பகுதியில்) யாழ்ப்பாணக் குடாநாட்டைப் படைகள் முற்றுகையிட்டுச் சிறைப்பிடிக்க முயன்றன. இதனால் குடாநாட்டைச் சுற்றி முற்றுகைப்போர் மூண்டது. அதை முறியடிக்கும் முனைப்போடிருந்தனர் புலிகள். இரண்டு தரப்புக்குமிடையில் பெரும்மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த மோதல்களில் படையினரும் புலிகளும் மட்டும் பலியாகவில்லை. பொதுமக்களும் கொல்லப்பட்டனர். படைகள் திட்டமிட்டே பொதுமக்களைப் படுகொலை செய்தன. “ஆயுதமேந்திய தரப்புகள் மோதிக் கொள்வதற்குப் பதிலாக ஏன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? போராளிகளை இலக்கு வைப்பதற்குப் பதிலாக எதற்காக மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்?“ என்று இன்றைய வாசகர்களும் இளைய தலைமுறையினரும் கேட்கக் கூடும். காஸாவில் மக்களின்மீதும் அவர்களுடைய வாழிடங்களின் மீதும் இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதையேதான் இலங்கையில் – இந்தத் தீவுகளில் – இலங்கைப் படையினர் செய்தனர். உள்நாட்டுப்போரில் எப்போதும் மக்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில்தான் அதிகமாக மக்கள் கொல்லப்படுவதுமுண்டு. மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு தரப்பும், அந்த ஆதரவை இல்லொதொழிப்பதற்காக இன்னொரு தரப்பும் இலக்கு வைப்பது மக்களேயே. ஆகவேதான் மக்கள் எப்போதும் தங்களுடைய தலைகளை இழக்க வேண்டியேற்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒன்றும் வெறும் புள்ளி விவரக் கணக்கல்ல. அல்லது இந்த மாதிரிப் படுகொலைகள், புதைகுழிகளைப் பற்றிய கதைகள் வெறும் செய்திகளோ தகவல்களோ அல்ல. அதற்குமப்பால், இந்த நவீன உலகில் நாமெல்லாம் நீதி, அறம், விழுமியம், வாழ்க்கை குறித்த பல்வித நோக்குகள், மனித மாண்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு முன்னே நிகழ்ந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் பெருக்கெடுக்க நிகழ்த்தப்பட்ட மனித அழிப்பு நடவடிக்கைகளாகும். அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அப்பாவிச் சனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், காணாமலாக்கப்படுதல்களாகும். அதாவது கீழ்மை அரசியலின் வெளிப்பாடுகள். இந்த அநீதியை – கொடூரத்தை – மானுட அழிப்பை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாரும் மறந்து விட முடியாது; மறந்துவிடக் கூடாது. இதைப் பேசியே ஆக வேண்டும். அநீதியை, கொடூரத்தை, மானுட அழிப்பை, மனித விரோதத்தைப் பேசாமல் விட்டால் அது அநீதிக்கும் கொடூரத்துக்கும் மனிதகுல விரோதத்துக்கும் உடன்பட்டுப்போவதாகவே இருக்கும். என்பதால்தான் ஷோபாசக்தி இதைப்பேசுகிறார். புனைவிலும் இவ்வாறான ஆவணப்படுத்திலும் என இரு தளங்களிலும் இவற்றைப் பேசியுள்ளார். இது அவருள் அடங்காதிருக்கும் தாகமும் அணையாதிருக்கும் நெருப்புமாகும். இரண்டினுடைய முக்கியத்துவமும் பெறுமதியும் வேறு. இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்துச் சுதந்திரமான, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணைகளை விரைந்து நடத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் காலம் கடந்து இப்போதாவது நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் மீதான மவுனமும் புறக்கணிப்பும் மூடி மறைத்தலும் தட்டிக் கழித்தலும் உண்மையான சமாதானத்தை உண்டாக்கிவிடாது. கடந்த காலங்களில் போர்கள் நிகழ்ந்து இன்று அமைதி நிலவும் உலகிலுள்ள பல்வேறு நிலங்களில் பொறுப்புக் கூறலும் நீதி வழங்கலுமே நீடித்த சமாதானத்தையும் பகை மறப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. இலங்கையிலும் அது நிகழ வேண்டும்.” என்ற நோக்கில் இதனுடைய வரலாற்று முக்கியத்துவமும் பெறுமானமும் அமைகிறது. ஆம், நீதியைப் பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. நீதி நமக்குக் கிடைப்பதற்காக – நாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக – நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த உண்மைகளை, ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தனக்குச் சாத்தியமான வழிகளில் ஷோபாசக்தி அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்போல சாத்தியமான அனைவரும் தொழிற்படுவது அவசியம். விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் கூட்டுச் செயற்பாட்டின் விளைவாலானவை. கூட்டுச் செயற்பாடு, கூட்டுக் குரல் போன்றனவே உலகத்தின் கவனத்தைப் பாதிக்கப்பட்டோரின் பக்கமாகத் திருப்புவதற்கான அழைப்பு அடையாளமாகும். இந்த நூல் மேலும் பல குரல்களை – உண்மைகளை – மேலுர்த்திப் பேச வைக்கும் என நம்புகிறேன். அதற்கான தூண்டல்களை, முன்மாதிரிகளை உருவாக்குகிறது. இதனைச் சரியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘கருப்புப் பிரதிகள்‘ பதிப்பகத்துக்கு பாராட்டுகள். ஷோபாசக்திக்கு நன்றி. நீதிக்கான பயணத்தில் இப்படிப் பல தரப்புகளும் இணைந்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘ (பக்கங்கள்: 144). நூல் கிடைக்குமிடம்: கருப்புப் பிரதிகள் பதிப்பகம் – சென்னை (WhatsApp : +91 9444272500). https://arangamnews.com/?p=124641 point- அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
நான்கு வருடத்தை நெருங்குகின்ற இந்தப் போர்... ட்ரம்பின் பொதியுடன், முற்றுப் பெற்றால் மகிழ்ச்சி. 🙂1 point- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது 25/10/25. சங்கானையை பிறப்பிடமாகவும் சுழிபுரம் கிழக்கு மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31 ஆம் நாள் ஞாபகார்த்தமாக மகன் திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்கள் 30000 ரூபாவிற்கு இயலாமையுடைய 14 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அரிசி, பருப்பு, சோயாமீற் என்பவற்றை வழங்கி உதவியுள்ளார். திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எமது புலர் அறக்கட்டளை சார்பாகவும் விசேடதேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளைச் செய்ய இணைப்பாளராக செயற்பட்ட திருமதி நவறஞ்சினி குமார்(பிள்ளை அக்கா) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். பொருட்களை வழங்கிய முதியோர் சங்கத் தலைவர் திரு சிவரஞ்சன் அவர்களுக்கும் முதியோர் சங்க கட்டடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதியோர் சங்க நிர்வாகிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். கலந்து கொண்ட நிர்வாகிகள் பொருட்களை வாங்கித் தந்த மதிகிருஸ்ணா லாண்ட்மாஸ்ரரில் எடுத்து வந்து உதவிய யது ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். நன்றி வணக்கம். ஒளிப்பதிவு திரு இ.பரணீதரன்.1 point- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
பூலோகதேவி அறக்கட்டளை மூலமாக தொல்புரம் மேற்கில் குடிநீர் வழங்குவதற்கு உதவி செய்யப்பட்டது 19/10/2025. செல்வி மகாலிங்கம் நிரோஜினியின் வீட்டிற்கு குடிநீர் தேவைக்காக ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் எமது புலர் அறக்கட்டளைக்கு விடுக்கப்பட்டது. அதற்கமைவாக இந்தப்பணிகளை செய்ய 78820ரூபா நிதியுதவி திருமதி பூலோகதேவி ஆண்டியப்பன் அம்மையார் (திரு S.A.உமாபதி அவர்களின் அம்மா) ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட சுழிபுரம் பூலோகதேவி அறக்கட்டளையினரால் வழங்கப்பட்டது. இது அவர்களுடைய மூன்றாவது உதவி வழங்கும் திட்டமாகும். இப்பணிகளைச் செய்கிற அவர்களுடைய பேரன் குடும்பத்தினர் திரு திருமதி அபிஷேக் திவ்யா தம்பதியினருக்கு எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். ஒளிப்பதிவு திரு இரா சிறிதரன்.1 point- புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
புலர் அறக்கட்டளையின் நன்கொடையாளர் கௌரவிப்பும் நான்காம் ஆண்டு நிறைவு விழாவும் 10/10/2025. மரக்கன்றுகள் வழங்கலில் உதவிகள் புரிந்த திரு ந.கோபிக்குமரன், செல்வன் யது ஆகியோருக்கும் வீட்டுத்தோட்டம் செய்வதற்காக விதைகள் வாங்க உதவிய திரு து.வினோதரன் ஆகியோருக்கும் எமது நன்றிகள். ஒளிப்பதிவு திரு ஜெ.ரஞ்சித். வீட்டுத்தோட்டம் செய்ய விதைகள் வழங்கப்பட்டது.1 point - அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.