Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    88738
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19583
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46962
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    15819
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/30/26 in all areas

  1. உண்மை இங்கே எந்த ஒரு அவசரமும் இல்லை எங்களால் முடிந்த அளவிற்கு ஏற்றமாதிரி உதவிகளை செய்யலாம் பேனர் தொடர்பாக நானும் முன்னர் எழுதி விட்டேன் . எனது அனுபவப்படி இப்போதைக்கு அது தேவையில்லை செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன் அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் . முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும். கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர் ஆரம்பிக்கலாம் . எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .
  2. இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம். எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.
  3. தாத்தாக்களை… அடுத்த முறை எழுத்துபிழை இல்லாமல் எழுதவும்😂
  4. கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு. எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது. கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது. மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும். மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும். ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும். வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும். வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”. புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும். Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள். பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான். சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும். ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது. மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும். என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
  5. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் . .......! 😍
  6. அப்படியே செய்யலாம் அண்ணை. முதலில் நாங்கள் ஏனையோர் கொண்டு வரும் கொடையாளிகளின் பணத்தில் வேலைகளை மெல்ல, மெல்ல செய்ய ஆரம்பிப்போம். தொடர்சியாக நீங்கள் வேலையிட பளு குறைந்த பின் உங்கள் ஆட்களை சேர்க்கலாம். அவசரப்பட்டு செய்ய எந்த அவசியமும் இல்லை.
  7. ஓ…. அப்ப நல்லதாய் போச்சு குமாரசாமி அண்ணை. அப்பிடியே அந்த ரீச்சர்மாரின், கணவர்களை நேரில் சந்தித்து… நாலு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு வாங்கோ. 🤣
  8. கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் நுளைந்திருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை வெளியேற்றும் பாரிய போராட்டத்தை அக்கட்சி எப்போது நடத்தும்.?????🤔
  9. முடியல. 😂 🤣 இவர்கள்… முத்த வெளியில், தமது பட்டுக் கச்சேரியை வைத்து எமது விருந்தோம்பலை… முழுமையாக அனுபவித்து செல்ல வேண்டும். 😂 தமன்னாவின் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு…. கனடா இந்திரனின் பேச்சு, மூச்சை காண இல்லை. தலையில் துண்டு போட வைத்து விட்டார்கள் போலுள்ளது. 🤣
  10. படத்தினை பார்க்க ஏற்றி வந்த வாகனம் Lexus LM 7 seater போல கிடக்கு. யூகேயில் £95K போகிறது. இலங்கையில் £300 க்கு கிட்ட வருமோ😱 தமன்னாவிடம் கேட்டுப்பார்க்கவும் எமது விருந்தோம்பல் பற்றி😂
  11. இவர் பாராளுமன்ற உறுப்பினராகி, இரண்டு ஆண்டுகளின் பின்... காகம் இருக்க, பனம் பழம் விழட்டும் என்ற ரீதியில்... இப்போதான், முதன் முதலாக வாயை திறந்திருக்கின்றார். 😂 அதை... "ஆஃப்" பண்ணிப் போடாதீங்க, பிறகு அவர்.. மீண்டும் கோமாவிற்கு போய் விடுவார். 🤣
  12. அமெரிக்கா வசிப்பதற்கு நல்ல நாடு தான். ஆனால், 2016 இலும், பின்னர் 2024 இலும் கிடைத்த பாடங்களின் படி அமெரிக்காவின் கட்டமைப்பில் ஒரு பாரிய "ஓட்டை (vulnerability)" இருப்பது தெளிவாகி விட்டது: ட்ரம்ப் போன்ற உள்ளூரில் பிறந்த எந்த ஒரு பன்னாடையும் கொஞ்சம் காசைச் சேகரித்தால் அமெரிக்காவில் அதிபராகலாம் என்பது தான் அந்த ஓட்டை. இது போன்ற ஒரு ஓட்டையை 1780 களில் அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய மூத்தோர் குழு எதிர்பார்க்கவில்லை. இனி இந்த ஓட்டையை அடைக்கவும் முடியாது. எனவே, படிப்படியாக அமெரிக்க டொலர், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்க தொழில் நுட்பம் என்பவற்றில் இருந்து நாடுகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும். கனடாவே இனி அமெரிக்காவுடன் பழைய நிலை உறவை நிலைநாட்டப் போவதில்லை எனும் போது, வேறு நாடுகள் விலகி ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
  13. அத தெரண கருத்துப்படங்கள்.
  14. காரைநகர் வேலைக்குரிய தகவல்களை ஏராளன் திரட்டி கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன். கொடையாளியை நாளை நேரில் சந்திக்கிறேன்.
  15. இவர்களுக்கு... வயது போய் விட்டது என்பதால், பக்தைகளின் பாதுகாப்புக்கு, "கியாரண்டி" கொடுக்கலாம். 🤣
  16. உண்மையில் இந்த விமான நிலையத்தை யார் வைத்pருக்கிறார்கள்.இந்தியா அல்லது இலங்கை.
  17. உண்மையில் இன்னும் நான் அதை நேரடியாக ஆரம்பிக்கவில்லை. வேலையிடத்தில் எதிர்பாராத ஒரு இழப்பு ஏற்பட்டதால் அனேகமான வேலைச்சுமைகள் என் தலையில் வீழ்ந்து விட்டது. மீண்டு வர பல நாட்கள் எடுக்கலாம் என நினைக்கின்றேன். சுடுது மடியை பிடி என அவசரப்படாமல் ஆறுதலாக சென்றால் நினைத்த இலக்கை அடையலாம் என்பது என் கருத்து. இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
  18. பலாலி முகாம் ஆட்லறி செல்களை இயக்கம் மண்டதீவை தாக்கியபோது மட்டுமே யாழ்நகர் பக்கம் ஏவியது நினைவில் உள்ளது. ஆனால் தென்மாராட்சி பக்கம் அடிக்கடி ஆட்லறி அனுப்பி உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
  19. துணைவேந்தர் ஒருவாறு எங்களை தன்னுடன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்றார். புலிகள் என்று கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மாணவர்களை துணைவேந்தரே மீளவும் பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்தமையானது சிங்கள மாணவர்களைடையே அதிருப்தியினை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவர்கள் பலரிடம் இருந்த கேள்வி, "உங்களை எப்படி போக விட்டார்கள்?" என்பதுதான். எங்களை முன்னின்று பிடித்துவந்து, பொலீஸில் கொடுத்த மாணவர்களில் சிலர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். அதில் மாணவர் சங்க தலைவனும் ஒருவன். சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியின் கம்பகா மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த அவன் பொலீஸ் நிலையத்தில் மிகவும் சாதாரணமாக உலாவந்தான். நாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள்? உங்களை என்ன செய்வதாகச் சொல்கிறார்கள்?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். "தெரியாது, எவராவது வந்து எம்மை மீட்டுச் செல்லும்வரை பார்த்திருக்கிறோம்" என்று நாம் கூறினோம். "நீங்கள் யோசிக்கத் தேவையில்லை, உங்களை விசாரித்துவிட்டு, பிரச்சினை ஏதும் இல்லையென்றால், உடனேயே விட்டுவிடுவார்கள்" என்று பாசாங்காக பதிலளித்தான் அவன். அவன் செய்வது என்னவென்று எமக்கு நன்கு தெரிந்திருந்தது. நாங்கள் அறுவரும் பல்கலைக்கழகத்தை அடைந்தபோது எம்மைச் சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் எமக்கு பொலீஸ் நிலையத்தில் நடந்தது என்னவென்பதை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால் எவருக்கும் எம்மீது அனுதாபம் இருக்கவில்லை. எம்மைக் காட்டிக்கொடுத்து, பொலீஸில் கையளித்தவர்களில் ஒருசிலர் வந்து எம்மிடம் பேசியபோது நான் வெளிப்படையாகவே "எங்களை பிடித்துக்கொண்டு வந்து பொலீஸில் கொடுத்ததே நீங்கள் தானே? இப்போது எதற்காக எங்களைப்பற்றி விசாரிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களிடம் பதில் இருக்கவில்லை. எமது கைதின் பின்னர், அதுவரை எம்முடன் சகஜமாகப் பேசும் சிங்கள மாணவர்களே எம்மிடமிருந்து விலகி இருக்கத் தொடங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், நாம் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதை அறிந்த இன்னொரு மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் எம்முடன் தொடர்பு கொண்டார்கள். கொழும்பில் வெளிவந்த அத்த எனும் சிங்களப் பத்திரிக்கை தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதிபற்றி கட்டுரை ஒன்றினை வெளியிட இருப்பதாகவும், எம்மால் எமது அனுபவங்களை அப்பத்திரிக்கை நிருபருடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா என்றும் கேட்டார்கள். சிங்களத்திலேயே பேட்டி இருக்கும் என்பதனால் என்னையும், இரண்டாம் ஆண்டில் பயின் று வந்த வெள்ளை எனும் புனை பெயர் கொண்ட இன்னொரு மாணவனையும் சொய்ஸாபுர தொடர்மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அந்தப் பத்திரிக்கை நிருபரும், மாணவர் அமைப்பின் சில உறுப்பினர்களும் இருந்தார்கள். சுமார் இரு மணித்தியால‌ங்களாவது எமது அனுபவங்களைக் கேட்டபடி இருந்தார்கள். பொறுமையாக , இடையூறுகள் இன்றி, நாம் பேசி முடிக்கும்வரை காத்திருந்து, அடுத்த கேள்வியினைக் கேட்டார்கள் அவர்களின் முகத்தில் காணப்பட்ட உண்மையான வருத்தமும், தவறிழைத்துவிட்டோம் என்கிற கழிவிரக்கமும் எமக்கு ஆறுதலாக இருந்தது. நாம் பேசுவதைக் கேட்டுவிட்டு இறுதியாக, "உங்களை இந்த நிலமைக்கு உள்ளாக்கியவர்கள் சிங்களவர்கள். ஆனாலும், மனிதநேயம் கொண்ட‌ சிங்களவரும் இருக்கிறோம். உங்களைப் புலிகள் என்றே அனைத்து பிரதான பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் நாம் உங்களின் அனுபவங்களைச் சொல்லவிருக்கிறோம், எங்கள் இனத்தால் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக வருந்துகிறோம்" என்று சொல்லி பேட்டியினை முடித்துக்கொண்டார்கள். அப்பத்திரிக்கையின் அடுத்தவார இதழில் எமது பேட்டி வெளியாகியிருந்தது. நாம் கூறியவற்றில் பெரும்பாலான விடயங்களை அப்படியே மாற்றம் செய்யாது வெளியிட்டது அத்த பத்திரிக்கை. அத்த பத்திரிக்கையில் வெளியான எமது பேட்டி பல சிங்கள மாணவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது. இப்பேட்டியினை வழங்கியது யாரென்று அறிய அவர்கள் முயன்றார்கள். சிங்களம் பேசுக்கூடியவன் என்பதனால் என்னிடம் வந்து, "நீயா இப்பேட்டியைக் கொடுத்தது? எங்களை இரக்கமற்றவர்கள் போன்று பேசியிருக்கிறாயே?" என்று கேட்டார்கள். அந்தப் பேட்டிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நாம் மறுத்துவிட்டபோதிலும், "நீங்கள் செய்ததைத்தானே பத்திரிக்கையும் பேட்டியாக வெளியிட்டிருக்கிறது?" என்று என்னிடம் பேச வந்த சிங்கள மாணவர்களிடம் கூறினேன், அவர்களிடம் பதில் இருக்கவில்லை. இனவாதம் தலைக்கேறிய பின்னர் கூடவே படிக்கும் தமிழ் மாணவர்களையும் பயங்கரவாதிகள் என்றும், கொலைகாரர்கள் என்று அடையாளம் காணும் சிங்கள மாண‌வச் சமூகத்திலேயே எமது பல்கலைக்கழக படிப்பும் நடந்தேறியது.
  20. மன்னிக்க வேண்டும். வேலைப்பழுவினால் தொடர்ந்து எழுதமுடியாது போய்விட்டது. மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு, கல்கிஸ்ஸை பொலீஸின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரியான ஜெயரட்ணமும், நிலாப்டீனும் மொறட்டுவை பொலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். கைதுசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மாணவர்கள் அனைவரையும் விசாரிப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை. நான் உட்பட இன்னும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களை அவர்கள் தனியான அறைக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் அறுவரும் கோண்டாவில், மாணிப்பாய், பருத்தித்துறை, சித்தங்கேணி, தெல்லிப்பழை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சிலர் 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தவுடன் கொழும்பிற்கு வந்தவர்கள். நான் 1990 ஆம் ஆண்டில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கு உயர்தரத்தில் கற்பதற்காக வந்திருந்தேன். எங்களை ஒவ்வொருவராக அழைத்து விச்சரிக்க ஆரம்பித்தனர் ஜெயரட்ணமும் நிலாப்டீனும். சிறிய மரத்தினால் ஆன மேசை. மேசையின் ஒரு பக்கத்தில் ஜெயரட்ண‌ம் அமர்ந்துகொள்ள, இன்னொரு பக்கத்தில் நிலாப்டீன் அமர்ந்துகொண்டான். எங்களை ஒவ்வொருவராக அழைத்து ஜெயரட்ணத்தின் முன்னால் இருக்கச் சொல்லிப் பணித்தார்கள். அவனது கைய்யில் புகைப்பட அல்பம் ஒன்று இருந்தது. அதிலிருந்தவர்களைக் காண்பித்தவாறே அவனது விசாரணை ஆரம்பித்தது. முதலில் நான். ஜெயரட்ணமே முதலில் விசாரணையினை ஆரம்பித்தான். "எந்த ஊரடா நீ?" கோண்டாவில் என்று நான் கூறவும், உடனேயே அல்பத்தை திறந்து சில புகைப்படங்களைத் தேடினான். பின்னர் குறித்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, "இவனை உனக்குத் தெரியுமா?" என்று அதட்டியபடி கேட்டான். அப்புகைப்படம் புலிகளின் வீரர் ஒருவருடையது. கோண்டாவில் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முகாம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றிய போராளி ஒருவருடையது. ஆனால் எனக்கோ அவரைத் தெரியவில்லை. ஆகவே, "இவரை எனக்குத் தெரியாது" என்று கூறவும், நிலாப்டீன் அறைந்தான். "கோண்டாவில் எண்டு சொல்கிறாய் ஆனால் இவனை உனக்குத் தெரியவில்லையா ?" என்று அவன் கத்தினான். "எனக்குத் தெரியாது " என்று மீண்டும் கூறினேன். அதன் பிறகு இன்னும் சில புகைப்படங்களைக் காண்பித்து அவர்களைத் தெரியுமா என்று ஜெயரட்னம் கேட்கவும், அவர்களில் ஒருவரையும் தெரியாது என்று மீண்டும் கூறினேன். தொடர்ந்தும் நான் எவரையும் தெரியாது என்று கூறவும், "எப்பயடா கொழும்பிற்கு வந்தனீ?" என்று ஜெயரட்ணம் கேட்டான். "1990 ஆம் ஆண்டு" என்று நான் கூறவும், "சரி, போ" என்று என்னை விட்டுவிட்டான். அதன் பின்னர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபாவின் முறை. அவனது தம்பி புலிகள் இயக்கத்தில் இணைந்து சிலாவத்துறைச் சண்டையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தவன். மாவீரர் குடும்பமாதலால் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோது பிரபாவினால் இலகுவாக கொழும்பிற்கு வர முடிந்திருந்தது. மாவீரர் குடும்பத்தைச் சாராதவர்கள் சரியான காரணங்கள் இன்றி கொழும்பிற்கு வருவதென்பது அக்காலத்தில் புலிகளால் தடுக்கப்பட்டிருந்தது. ஆகவே பிரபா 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கொழும்பிற்கு வந்தமையானது அவன் மீது கடுமையான சந்தேகத்தை ஜெயரட்ணத்திற்கும், நிலாப்டீனுக்கும் ஏற்படுத்தி விட்டிருந்தது. முதலில் புலிகளின் புலநாய்வுப்பிரிவினரால் அனுப்பப்பட்டவன் என்று கூறி அவனை இருவரும் கடுமையாகத் தாக்கினார்கள். அவன் "இல்லை, நான் பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததினால்த்தான் கொழும்பிற்கு வந்தேன்" என்று கூறவும், "அப்படியானால் நீ மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான், உண்மையை ஒத்துக்கொள்" என்று கூறி மீளவும் தாக்கினார்கள். அடி தாங்காமல் அவன் அழத் தொடங்கினான். பின்னர் அவனைத் தனியாக ஒரு மூலையில், தரையில் இருத்திவிட்டு, "விடியும் முன்னர் நீ எப்படி கொழும்பிற்கு வந்தனீ எண்டதைச் சொல்லிப்போடு, இல்லையெண்டால் காலையில உன்னை நாலாம் மாடிக்கு கொண்டுபோவோம், அங்க போன பிறகு நீ உயிரோடு திரும்ப இயலாது" என்று மிரட்டினார்கள். அடுத்தவன் லீலாகிருஷ்ணன். பருத்தித்துறையைச் சேர்ந்தவன். பல்கலைக்கழக மல்யுத்த அணியில் இருந்தவன், அதனால் உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அவனும் கொழும்பிற்கு வந்திருந்தமையினால் அவனையும் தாக்கியபடியே விசாரித்தார்கள். அவனது குடும்பம் மாவீரர் குடும்பமா என்று எனக்குத் தெரியாது. இவ்வாறே தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆனால் கொழும்பில் வெகுகாலம் வாழ்ந்துவந்த புஸ்ப்பாகரன், சித்தங்கேணியைச் சேர்ந்த ரமேஸ் என்று மீதியாய் இருந்தவர்களையும் விசாரித்தார்கள் இடையிடையே தாக்கினார்கள். எல்லோரையும் நாலாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்றே நாம் நம்பியிருந்தோம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மொறட்டுவைப் பொலீஸ் நிலையத்திற்கு வந்தார். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களை புலிகள் என்று தவறாகப் பிடித்து வைத்திருக்கிறீர்கள் என்று அதிகாரி பீரீஸுடன் அவர் வாதிட்டார். "உன்னைப்போன்ற‌ சிங்கள துரோகிகளால்த்தான் புலிகள் கொழும்பில் குண்டுவைக்கிறார்கள். இவங்களை என்னிடம் விட்டுவிட்டு உனது வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவருடன் கர்ஜித்தான் பீரிஸ். ஆனால் அவர் விடுவதாய் இல்லை, "இவர்களில் இறுதியாண்டில் படிக்கும் ஆறு மாணவர்களையும் என்னுடன் அனுப்பி வைய்யுங்கள், இவர்களுக்கான பரீட்சை நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நானே இவர்களை பரீட்சை முடிந்தவுடன் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என்று மன்றாட்டமாக அவர் பீரிஸிடம் கெஞ்சினார். சிங்களவராக இருந்தும் தமிழ் மாணவர்கள் பரீட்சையினைத் தவறவிடக் கூடாது என்ற அக்கறை அவருக்கு இருந்தது. அவருடன் சில நிமிடங்கள் தர்க்கித்துவிட்டு, "சரி, அழைத்துச் செல், ஆனால் இவர்களால் ஏதாவது தீங்கு ஏற்படுமாக இருந்தால் நான் உன்னை வந்து கொல்வேன்" என்று கத்தியவாறே எங்களை அவருடன் அனுப்பி வைத்தான். ஆனால் எங்களைத் தவிரவும் மூன்றாம், இரண்டாம் வருடங்களில் படித்துக்கொண்டிருந்த இன்னும் நாற்பது மாணவர்களை பீரிஸ் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தான்.
  21. உழைப்பு இருக்கும் அளவுக்கு நம்மைப் போல வாய் அடக்கமும் இருந்திருந்தால்....???
  22. சமீபத்தில் கொழும்பின் ஒரு பிரபல பாடசாலையில் இடம்பெற்ற விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், வெறும் ஒரு செய்தியாக மட்டும் இதைப் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. ஒரு பாடசாலையின் 'தலைமை மாணவன்' மற்றும் 'ஆசிரியைகள்' சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம், நம் நாட்டு கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாரிய ஒழுக்கச் சீரழிவின் 'Tip of the iceberg’ மட்டுமே. இப்படியான சம்பவங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. 90-களில் நாம் கல்வி கற்ற காலத்திலும் இவ்வாறான வக்கிரங்கள் அரங்கேறின. ஆனால், அவை பாடசாலை கௌரவம் என்ற பெயரில் மூடி மறைக்கப்பட்டன. ஆசிரியை - மாணவன் துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவி துஷ்பிரயோகம். ஆசிரியர் - மாணவன் துஷபிரயோகம். ஆசிரியை - மாணவி துஷபிரயோகம். பாடசாலை பணியாளர்களால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள். இவை அனைத்தும் இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. அரசாங்கமும் கல்வி அமைச்சும் இந்தச் சூழ்நிலையின் தீவிரத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. பிரித்தானியா (UK) போன்ற நாடுகளில், ஒரு ஆசிரியர் மாணவருடன் பாலியல் ரீதியான தொடர்பை வைத்திருப்பது 'Abuse of Position of Trust' (வழங்கப்பட்ட அதிகாரத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்) என்ற சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. அங்கு 'சம்மதத்தோடுதான் நடந்தது” என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தப் பதவிக்கான பொறுப்பே முக்கியமானது. ஆனால் இலங்கையில், இவ்வாறான சம்பவங்களின் போது சட்டத்தின் ஓட்டைகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது, அவர்கள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையில்தான். ஆசிரியர்களைத் தங்களின் பிள்ளைகளுக்கு அடுத்த பெற்றோராகவே பார்க்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதைத்து, பிள்ளைகளைத் தமது காமவலைக்குள் வீழ்த்தும் ஆசிரியர்கள், எதிர்காலச் சந்ததியையே அழிப்பவர்கள் ஆவர். இவர்கள் மீதான தண்டனை வெறுமனே பணியிட மாற்றமாகவோ அல்லது தற்காலிகப் பணிநீக்கமாகவோ இருக்கக் கூடாது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் ஆசிரியர் தொழிலைச் செய்ய முடியாதபடி கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். மக்களாகிய நாம் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். Position of Trust' என்பதைத் துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக விசேட கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். பாடசாலை நிர்வாகத்தின் தலையீடு இல்லாத, மாணவர்களும் பெற்றோரும் அச்சமின்றிப் புகார் அளிக்கக்கூடிய ஒரு மத்திய முறைப்பாட்டுப் பிரிவு (Reporting Unit) அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்வித் தகுதியைத் தாண்டி, அவர்களின் மனநலம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் கற்கை நெறிகள் அவசியமாக அறிமுகப்படுத்த வேண்டும். நாலந்தா கல்லூரிச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. கல்விக்கூடங்கள் காமக் கூடங்களாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அரசாங்கம் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, இந்த "நம்பிக்கை துரோகத்திற்கு" முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலச் சந்ததி எவரையும் நம்பத் துணியாத ஒரு சமூகமாக மாறிவிடும். Mukinthan Thurairajasingham
  23. சாதாரணமாக இப்படியான செய்திகளுக்கு... @விசுகு , @குமாரசாமி , @தனிக்காட்டு ராஜா போன்றவர்கள் பாய்ந்தடித்து வருகின்றவர்கள். இப்போ அவர்களுக்கு... வயது போய் விட்டது போலுள்ளது. கோயில், குளம் என்று... திரிகிறார்கள் என நினைக்கின்றேன். 😂 🤣
  24. இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
  25. ஆட்களை பொறுக்கியா இல்லையா என்பதை கண்டு பிடிக்கும் உங்கள் அளவீடு பிரமிக்க வைக்கின்றது.
  26. விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/
  27. இனி அந்த கால கிளுகிளுப்பான பாடல்களை பதிவு செய்வதாக உறுதி பூண்டுள்ளேன்.. படம்:பூவா தலையா (1969) இசை:MSV பாடியோர் :p.சுசீலா & LR ஈஸ்வரி வரிகள்: பாலாடை மேனி
  28. எங்க ஊர் ஏரியின் வழி திருவண்ணாமலையார்..
  29. உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
  30. கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் 19 வயது தலைமை மாணவ தலைவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு ஆசிரியர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள வீடியோ கடந்த வாரம் கசிந்துள்ளது, இதனால் நான்கு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அதே நேரம் அந்த மாணவனது மாணவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அவரது நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடசாலையின் Head Prefect. படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டில் வீரன், ஆசிரியர்களுக்குப் பிடித்தமான கீழ்ப்படிதலுள்ள மாணவன். சுருக்கமாகச் சொன்னால் "Perfect Gentleman". 2025-2026 ஆம் ஆண்டின் அந்தத் தலைமைப் பதவியை அவன் ஏற்கும் போது முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டியது. ஆனால் அந்தப் புனிதமான சீருடைக்குள்ளே ஒளிந்திருந்த மற்றொரு முகம் யாருக்கும் தெரியாது. அது அவனுடைய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எப்படி காலம் மாறிவிட்டது என்று பாருங்கள், புனிதமான ஆசிரியர்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு ஆசிரியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துயுள்ளார்கள். Crimenews
  31. 🔥 பாடசாலையா? இல்ல… ஒழுக்கம் புதைக்கப்பட்ட அரங்கமா? ஒரு காலத்தில் ஒழுக்கம் கற்பித்த இடம் இன்று ஒழுக்கமே கேலி செய்யப்பட்ட இடம். கொழும்பு மருதானையில் உள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் நடந்த இந்த சம்பவம், ஒரு மாணவனின் வீழ்ச்சி மட்டும் அல்ல — 👉 முழு கல்வி அமைப்பின் முகத்திரையை கிழித்த சம்பவம். ⸻ 🎓 “Perfect Gentleman” – புனித வேஷத்தின் பின்னால் என்ன? 📌 படிப்பில் கெட்டிக்காரன் 📌 விளையாட்டில் வீரன் 📌 ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை 📌 2025–2026 Head Prefect முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டிய அந்த நிமிடம், ஒரு நாடகத்தின் முதல் காட்சி தான் என்பதை யாருக்கும் தெரியவில்லை. அந்த புனிதமான சீருடை, 👉 ஒழுக்கத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட கவசமாக மாறியிருந்தது. ⸻ 📱 ஸ்மார்ட்போன் – புதிய குரு, புதிய தேவன் அவன் கையில் இருந்தது, 📵 புத்தகம் அல்ல 📵 ஒழுக்கம் அல்ல 👉 ஸ்மார்ட்போன். அதில் பதிந்திருந்தது, 👉 பாடங்கள் அல்ல 👉 மதிப்புகள் அல்ல 👉 ரகசிய உறவுகள். அந்த ரகசியங்கள் இன்று சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாணமாகி விட்டன. ⸻ 🧑‍🏫 “ஆசிரியர்கள்” – யார் இவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தது? ஒரு கேள்வி மட்டும் போதும்: மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டியவர்கள் மாணவர்களிடமே எல்லை மீறினால் அடுத்த தலைமுறைக்கு எதை கற்பிப்பார்கள்? சில ஆசிரியர்கள், 👉 பதவியை மறந்து 👉 பொறுப்பை மறந்து 👉 சீருடையை மறந்து ஒரு மாணவனின் அதிகாரத்தை அனுபவிக்கும் கருவியாக மாறியுள்ளனர். இது தவறு அல்ல… 👉 குற்றம். ⸻ 📹 வீடியோ கசிவு – குற்றவாளி யார்? “வீடியோ வெளியிட்ட நண்பன் தவறு” “சமூக ஊடகம் ஆபத்து” ஆம்… ஆனால் உண்மையான குற்றவாளிகள்? ❓ எல்லை மீறியவர்கள் ❓ கண் மூடி ரசித்த அமைப்பு ❓ காலம் காலமாக மறைத்த நிர்வாகங்கள் ⸻ 🏫 கல்வி அமைச்சு – எத்தனை அறிக்கைகள்? எத்தனை மறைப்புகள்? “விசாரணை நடக்கிறது” “அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” இந்த வார்த்தைகளை நாம் எத்தனை தடவை கேட்டிருக்கிறோம்? 👉 ஒவ்வொரு முறையும் 👉 ஒரு அறிக்கை 👉 சில நாட்கள் அமைதி 👉 பின்னர் மறதி. இந்த முறை அப்படியா? அல்லது உண்மையான நடவடிக்கையா? ⸻ ⚠️ இது ஒரு சம்பவம் அல்ல… எச்சரிக்கை! இது, ❌ ஒரு மாணவனின் தவறு மட்டும் அல்ல ❌ சில ஆசிரியர்களின் வீழ்ச்சி மட்டும் அல்ல 👉 முழு கல்வி அமைப்பு அழுக ஆரம்பித்திருப்பதற்கான சைகை. இன்று வீடியோ, நாளை என்ன? ⸻ 🧨 கேள்வி ஒன்று மட்டுமே மிஞ்சுகிறது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இனி யாரை நம்புவது? ஆசிரியர்களை தெய்வமாக பார்த்த சமூகம் இனி எதை போற்றுவது? ⸻ 📢 வதந்தி வேண்டாம். மறைப்பு வேண்டாம். கருணை வேண்டாம். 👉 உண்மை வேண்டும். நடவடிக்கை வேண்டும். பாடமாக மாறும் தண்டனை வேண்டும். யாழ்ப்பாணம்
  32. நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது. பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம். கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.
  33. யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .
  34. என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣
  35. @கிருபன் எனது தெரிவுகளில், வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்கொட்லாந்தை போட்டுவிடுங்கள். அவர்கள் பின்வரும் இரு போட்டிகளில் வெல்வார்கள் என்றே கணித்திருந்தேன். அப்படியே ஆகட்டும். வேறு ஒரு மாற்றமும் இல்லை 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA SCOT 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP SCOT
  36. இன்றைய Tages Blatt கட்டுரையின் தமிழாக்கம். ஜெயகுமார் துரைராஜா – செங்காலனின் புதிய உயரிய தலைவர் «20 முறை இறந்திருக்கலாம்» புதிய ஆண்டின் முதல் அமர்வில் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பல பதவிகள் புதிதாக நிரப்பப்பட்டன. இதில், பசுமைக் கட்சி (Grüne) சார்ந்த ஜெயகுமார் துரைராஜா, நகர பாராளுமன்றத்தின் புதிய தலைவராக – அதாவது செங்காலனின் உயரிய பதவியாக – தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அகதியாக வந்த, ஒருகாலத்தில் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லாத ஒரு தமிழர், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் செங்காலன் நகர பாராளுமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் ஜெயகுமார் துரைராஜா. தேர்வுக்குப் பிறகு அவர் கூறியதாவது: «என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை இதுவே.» ஜெயகுமார் துரைராஜா 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார். 2016ஆம் ஆண்டு முதல் செங்காலன் நகர பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் சார்பில் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மூன்று உறுப்பினர்கள் விலகியதைத் தவிர, எந்த எதிர்ப்பு வாக்குகளும் இன்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், பசுமைக் கட்சி மற்றும் இளைய பசுமைக் கட்சியின் பிரிவு தலைவர் கிறிஸ்டியான் ஹூபர், தேர்தல் பரிந்துரையை வழங்கினார். அவர் கூறியதாவது: «செங்காலன் நகரில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமானோர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோருக்கு குடியேற்றப் பின்னணி உள்ளது. எனவே இன்று ஒரு ‘கெல்லர்’ அல்லது ‘முல்லர்’ அல்லாமல், ஒரு ‘துரைராஜா’ செங்காலனின் உயரிய பதவிக்குத் தேர்வாகுவது விசேஷமான ஒன்றல்ல. இது இந்த நகரத்தின் மற்றும் இந்த நாட்டின் உண்மையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.» இந்த யதார்த்தம் எளிதாக உருவானதல்ல; அது முன்பும் இன்றும் போராட்டங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயகுமார் துரைராஜாவின் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல; அவை சுவிட்சர்லாந்தின் குடியேற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும். 1960களில் வந்த இத்தாலிய காலாண்டுத் தொழிலாளர்கள் முதல், 1980களின் அகதி கொள்கைகள், பால்கன் நாடுகளிலிருந்து வந்த அகதிகள், இன்றைய போர் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள் வரை—குடியேற்றம் பெரும்பாலும் ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டதே தவிர, ஒரு செல்வமாக அரிதாகவே கருதப்பட்டது. இருந்தாலும், குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது; அது இன்றைய சமூகத்தின் இயல்பான ஓர் அங்கமாக உள்ளது. «என் இலக்கு வாழ்க்கைத் தப்பிப்பதே» பதவியேற்பு உரையில், பயிற்சி பெற்ற செவிலியராக இருந்து தற்போது சமூக ஆலோசகராக புதிய பாதையில் தன்னை அமைத்துக்கொண்டு வரும் ஜெயகுமார் துரைராஜா, உள்நாட்டுப் போர் நிலவிய தனது தாயகத்திலிருந்து தப்பியோடிய ஒரு இளைஞனின் கதையை கூறினார். அது உண்மையில், அவர் இளமையில் அனுபவித்த தனது சொந்தக் கதையே. «நான் என் குடும்பத்தை, நண்பர்களை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் விட்டுவிட்டு புறப்பட்டேன். பெற்றோர்களும் இல்லை, உடன் பயணிக்க யாருமில்லை. என் இலக்கு ஒரு பதவி அல்லது தொழில்முறை வாழ்க்கை அல்ல; உயிர் தப்பிப்பதே என் ஒரே நோக்கம்.» அவர் தொடர்ந்து கூறினார்: «போரின் நடுவிலும், தப்பியோடும் பயணத்திலும், அறியாத எதிர்காலத்தை நோக்கிச் சென்ற வழியிலும், நான் 20 முறை இறந்திருக்கலாம். இருந்தும் உயிர் தப்பினேன்.» அவரது வார்த்தைகள் மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தின. அவை பாராளுமன்ற உறுப்பினர்களின் மனங்களை ஆழமாகத் தொட்டன. செங்காலனில் அவர் தன்னை வளர்த்துக்கொள்ளவும், ஒரு குடும்பத்தை அமைக்கவும் முடிந்தது. அவர் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னை நம்பிய மனிதர்களை அவர் சந்தித்தார்; அந்த நம்பிக்கையே அவரை இன்று செங்காலனின் உயரிய பதவிக்கு கொண்டு வந்தது. «இந்த நாட்டிலும், இந்த நகரமான செங்காலனிலும் வாழ முடிவது ஒரு பெரும் பாக்கியம். நன்றி, செங்காலன்» என்று அவர் கூறினார். அவர் ஒரு புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரியை (திருக்குறளை) மேற்கோள் காட்டி, அதன் பொருளை விளக்கினார்: «நன்றி உணர்வு கொண்டவர்களே முன்னேற முடியும்; மற்றவர்கள் முன்னேற முடியாது.» பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக நோக்கி அவர் கூறினார்: «உங்கள் இந்தத் தேர்வின் மூலம், நீங்கள் எனக்கு ஒரு பெரிய மரியாதையை மட்டுமல்ல, ஒரு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளீர்கள்.» பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதோடு, செங்காலன் நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடமையும் தன்னிடம் இருப்பதாக அவர் நினைவூட்டினார். செங்காலன் ஒரு குடும்பநேய நகரம் என்றும், சமூக உணர்வும், விளையாட்டு-பண்பாட்டு சங்கங்களும், புதுமை, பசுமை, நிலைத்தன்மை மற்றும் பல்வகைத் தன்மையும் கொண்ட நகரம் என்றும் அவர் பாராட்டினார். «இந்த பல்வகைச் செங்காலனையும், செங்காலனுக்குள் உள்ள பல்வகைத் தன்மையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்» என்று அவர் கூறினார். மரியாதை, நம்பிக்கை, மதிப்பு மற்றும் நன்றி – இவைதான் நம்மை முன்னேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமார் துரைராஜாவுக்கு நீண்ட நேரம் கரகோஷம் எழுந்தது. நன்றி: Tages Blatt தமிழில்: AI உதவியுடன் இணுவையூர் மயூரன். Inuvaijur Mayuran
  37. யாரப்பா நீ ? இந்த மனிதருள் மாணிக்கத்தை பார்த்தே ஆகணும்..
  38. தமிழரின் இழிநிலை தெரியாமல் தமிழருக்கு தாயகம் வேண்டும் என்று போராடி உயிர்நீத்த மாவீர்ர்கள், பொதுமக்களை நினைத்தால் கவலையாக உள்ளது. இப்படியான கயவர்கள். அவர்களின் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களை புறக்கணிப்பதன் மூலம் இவர்களை உளரீதியாக, சட்டம் தண்டிக்கமுதல் கனடாவாழ் மக்கள் தண்டிக்க வேண்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.