Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88737
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    39259
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19582
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    16701
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/09/26 in Posts

  1. நேபாளம் அணியின் பயிற்சியாளர் struart law. அவுஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த இவர் திறமையிருந்தும் அதிஷ்டமில்லாதவர். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடினார். அதிலும் இவர் ஆட்டமிழக்காமல் 50க்கு மேல் ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக பெற்றார். 1995 இல் நடைபெற்ற இந்த போட்டியில்தான் ரிக்கி பொண்டிங்கும் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். காயமடைந்த வீரர் ஒருவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டுவர்ட் law, பிறகு அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காரணம் அக்காலத்தில் அவுஸ்திரேலியா பலம் பொருந்திய அணி. ஸ்டீவ் வோ, மார்க் வோ இரட்டையர்கள், மார்க் டெய்லர் என பல புகழ்பெற்ற வீரர்கள் விளையாடினார்கள். ஸ்டுவர்ட் லா , இங்கிலாந்து கவுண்டி சாம்பியன் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார். அக்காலத்தில் இங்கிலாந்து நாசர் குசென் ஒரு பேட்டியின் போது ஸ்டுவர்ட் law இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றால் இங்கிலாந்து அணியில் அவரைத்தான் முதலில் அணியில் எடுத்திருப்பார்கள் என்று சொல்லியிருந்தார் .
  2. இரண்டாவது நாளாகவும் முதலமைச்சரான @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  3. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 15 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்திருந்தாலும் இறுதி ஐந்து ஓவர்களில் அயர்லாந்து இறுக்கமாக பந்து வீசாததாலும் தடுப்பில் தவறுகள் விட்டதாலும், குசல் மெண்டிஸின் ஆட்டமிழக்காது எடுத்த 56 (43 பந்துகளில்) ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸின் புயல்வேக 44 (19 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி சிறந்த துவக்கத்துடன் ஆரம்பித்தாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: சிறிலங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  4. நாளை செவ்வாய் 10 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 06 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் மற்றைய 17 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா செம்பாட்டான் ஈழப்பிரியன் வாதவூரான் கிருபன் கோஷான் சே நந்தன் நெதர்லாந்து ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வீரப் பையன்26 சுவி அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ எதிர் UAE அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK எதிர் USA 22 பேர் பாகிஸ்தான் அணி வெல்லும் எனவும் ஒருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா நிலாமதி இந்தப் போட்டியில் @நிலாமதி அக்காவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?
  5. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, ஜோர்ஜ் முன்சீயின் அதிரடியான 84 (54 பந்துகளில்) ஓட்டங்களோடும், பிரெண்டன் மக்முல்லன் ஆட்டமிழக்காமல் வேகமாக எடுத்த 41 (18 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இத்தாலி அணியில் பென் மனென்டியின் 52 (31 பந்துகளில்) ஓட்டங்களைத் தவிர பிறர் சோபிக்காததால் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி, மெதுவாக ஆடியதாலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததாலும் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காமல் எடுத்த 48 (36 பந்துகளில்) ஓட்டங்களுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஓமான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி எய்டன் மார்க்ரமின் அதிரடியான 59 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது வேகமாக எடுத்த 39 (23 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 34 (19) ஓட்டங்களுடனும் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கனடா அணியில் நவ்னீத் தலிவால் மாத்திரமே 64 (49) ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தில் சோபித்தார். மற்றையோர் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததால் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நீங்கள் மட்டும்தான் தெரிவு செய்யவில்லை. இப்போது தெரிவு செய்தாலும் சேர்த்துக்கொள்ளப்படும் 😁
  6. ஆப்கான், நேபாளம் வழியாக முன்னேறி(!) சுமை தாங்கிப் போட்டியில் வெல்லப் போவது நான் தான் ........... ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்............🤣. இந்த யாழ் களத்தை சுமக்க வேண்டும் என்பது என்னுடைய bucket list இல் ஒன்று போல.........😜.
  7. கப்பல் கரையை தட்டிவிட்டது...................🤣.
  8. இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும். தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.
  9. அனுர, ஷபாஸ் ஷெரிபுடன் பேசிய பிந்தான் விளையாடும் முடிவை பாக்கிஸ்தான் எடுத்ததாம்.
  10. CP24Man charged with criminal harassment after multiple filmi...Toronto police say a man has been arrested following a Criminal Harassment investigation involving multiple alleged incidents which included filming people across the city.
  11. நான் எந்த பதிவிலும் ரஞ்சித்துடன் தனிப்பட்ட முறையில் மல்லுக்கட்டவில்லை. அவருடன் தனிப்பட பகையும் கிடையாது. அவரது கருத்துகளை விமர்சிக்கும் போது அவர் கோபப்படுகிறார். பொதுவெளியில் இங்கு வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கிறேன். விமர்சனங்களை வைக்கிறேன், கேள்விகள் கேட்கிறேன். ரஞ்சித் இங்கு பொது வெளியில் வரலாறுகள் என்ற பெயரில் ஒருதலைப்பட்ச தகவல்களை அடிப்படையாக கொண்டு அவற்றை முழுமையான உண்மை போல் இங்கு எழுதும் போது அது தொடர்பாக கேள்வி கேட்க கூடாதா? பொது வெளியில் எழுதும் எவரும் இவ்வாறான கருத்தியல் விவாதங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அவரது கருத்துகள் புனிதமானவை, அவற்றுக்கு எவரும் விமர்சனம் வைக்க கூடாது என்பது அவரது கொள்கையாக இருக்கலாம். அதற்கு நான் கட்டுபட முடியாது சிறிமா பண்டாரநாயக்காவை புகழந்தேனாம். அதை ஒரு குற்றமாம். சிறிமாவின் உள்ளூர் உற்பதி கொள்கையை யாழ்பாண விவசாயிகள் பாரிய நன்மையடைந்ததும், யாழ்பாண விவசாயிகளின் குடிசை வீடுகள் அவரது காலத்தில் கல்வீடுகளானதும் அதற்காக அவர்கள் அவரை ஒட்டு மொத்தமாக புகழ்ந்ததும் அந்த நன்றியறிதலுக்காக 1982 ல் அவரது மாமன் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு தன்னிச்சையாக பெருவாரியாக வாக்களித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அத்தனை யாழ் விவசாயிகள் மீதும் குற்றம் சாட்டுவாரா? யாழ் பலகலைகழகத்தை சிறிமாவோ திறந்த போது முழுமையாக எதிர்த்தது தமிழரசுக்கட்சி தனது அரசி யல் ஆதாயத்துக்காக. தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி ஒன்றும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. பிரச்சனைகளை தீர்வு காண்பதை விட அதை வைத்து காலாகாலமாக அரசியல் செயத்து தமிழரசுக்கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மீது விமர்சனம் செய்யக்கூடாதா? தேசியத்துக்கு எதிரானவனாம். அடுத்த குற்றச்சாட்டு. என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது, கல்வி/ தொழில்நுடப/ வர்த்தக / பொருளாதார பலத்தை உயர்ததுவது, வட கிழக்கில் தமிழரின் சனத்தொகையை குறையவிடது காப்பது. இவற்றை ஜனநாயக நீரோட்டதில் இணைந்து ஆளும் அரசுகளோடு தந்திரோ உறவுகளோடாவது மேற்கொள்ளுவது இன்றைய அவசர தேவை. அதை விடுத்து உசுப்பேற்றுவது, சாத்தியமற்ற வெற்று கோசங்களை வைத்து வினைதிறனற்ற, மக்களுக்கு உபயோகமற்ற அரசியல் நடத்துவது, அதை தூண்டுவிடும் புலம்பெயர் தேசிய வியாபாரிகளும் செய்வது தமிழ் தேசியம் என்றால் அதற்கு நான் எதிரானவன் தான். அது வெளிபடையாக கூறுகிறேன். அந்த கருத்துகளை எதிர் கொள்ள இயலாமல் துரோகி, கோடரிக்காம்பு, இழிந்த இனத்தவர் போன்றவற்றையே அவர் போன்றவர்களால் கூற முடியும். ஏனென்றால் அவர்கள் கற்ற அரசியல் என்பது எதிர் கருத்துடையவர்களை வன்முறை மூலம் அகற்று அது முடியாத போது மீது அவதூறு கூறி அவரை அகற்று என்பதே.
  12. மேலே எழுதியதை தயவு செய்து அப்படி விளங்கி கொள்ள வேண்டாம். அந்த திரியில் நீங்கள் இத்தனை கெட்ட அனுபவதின் பின்னும் சிங்களவர் மீது தனிப்பட்டு இனக்குரோதம் காட்டாத நபர் என்பதை, பிள்ளைகளை கூட அப்படியே வளர்க்கும் நபர் என கண்டேன். ஆனால் வெளிநாட்டில் கூட இங்கே வளரும் பிள்ளை கூட இனக்குரோதியாக வளர்கிறதே எனும் உங்கள் ஆதங்கத்தையும் கண்டேன். நானும் இத்தனை கசப்புக்கு பின்னும் தனிப்பட்டு எவரிடமும் இன வன்மம் பாராட்டுவதில்லை, பிள்ளைக்கு அநீதியை சொல்லிகொடுத்தாலும் அது கண்மூடித்தனமாக இன வன்மத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லியே வளர்கிறேன். அப்படி பட்ட ஒருவர் “ முஸ்லிமுகெல்லாம் பதில் சொல்ல முடியாது” என எழுதுகிறாரே என்பதே நான் சொல்ல வந்தது. மனம் புண்பட்டால் மன்னித்து கொள்ளவும்.
  13. சிவ...சிவா ...சிறித்தம்பி ...அவருடைய அட்ரஸ் .. இருந்தால் தாங்க ...தேடிப்பிடித்து அதை அழிப்பிப்பம் ...புடின் ..பில்கேட்ஸ் ..கூல் ..வரிசையில் ..பின்னுக்கு கயிட்டப்படவேணும்..
  14. உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன். அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀). உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.
  15. டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀 படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.
  16. @goshan_che @ரசோதரன் சுமை தாங்கி போட்டியில் உங்க‌ள் இர‌ண்டு பேரில் வெல்வ‌து யார்😄😃...........................
  17. அப்பிடியா. பஞ்சாப் அணியில இருந்திருக்கிறார். ஆனால் விளையாடின மாதிரி தெரியேல. தேடிப் பார்த்தேன், விளையாடின விபரம் தெரியவில்லை. இனி அவரைத் திரும்பவும் கூப்பிடலாம். இன்று நல்ல பெறுபேறு.
  18. இனி வ‌ரும் ப‌ரிட்சைக‌ள் வெறி டிவிக்க‌ள் எப்ப‌டித் தான் பாஸ் ஆகப் போகிறோமோ தெரியாது லொள்😛😁......................
  19. உலகக் கிண்ண அறிமுக அணி இத்தாலியை இலகுவாக வெற்றிகொண்டது ஸ்கொட்லாந்து; இத்தாலி அணியில் இலங்கை வம்சாவளி கிரிஷான் 09 Feb, 2026 | 05:02 PM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. தமது அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்து பங்களாதேஷ் அணியை இந்த உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விலக்கிக்கொண்டதை அடுத்து அவ்வணிக்கு பதிலாக ஐசிசியினால் சி குழுவில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய பிராந்திய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இத்தாலியிடம் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றண்டன் மெக்முலென் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் மைக்கல் லீஸ்க் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ஸ்கொட்லாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன. இதேவேளை, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இத்தாலி அணித் தலைவர் வெய்ன் மெட்சன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நேரிட்டது. இது இத்தாலி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற சாதனையை ஸ்கொட்லாந்து படைத்தது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 83 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோர்ஜ் மன்சே 54 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மைக்கல் ஜொன்ஸ் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ப்றெண்டன் மெக்முலென், அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலபபடுத்தினர். ப்றெண்டன் மெக்முலென் 18 பந்துகளில் 4 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரிச்சி பெறிங்டன் 15 ஓட்டங்களைப் பெற்றார். மைக்கல் லீஸ்க் 5 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஜஸ்டின் மொஸ்கா (0) ஆட்டம் இழந்த பின்னர் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றார். அன்தனி மொஸ்கா (13), ஜோன் - ஜோன் ட்ரவோ மட்ஸ் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (40 - 3 விக்.) தொடர்ந்து ஹெரி மனென்டி (37), பென் மனென்டி (52) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய 5 விக்கெட்கள் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. இந்தப் போட்டியில் இத்தாலி சார்பாக இலங்கை வம்சாவளி வீரரான கிரிஷான் ப்ரியன்த பெர்னாண்டோ கலுகமகே விளையாடியமை விசேட அம்சமாகும். அவர் ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238239
  20. இப்ப கொஞ்சநாளா கடின உழைப்பாக இருக்கிறார். ஒரு முட்டைக் கோப்பியை குடித்து ஆறுதலாக சந்தோசமா இருக்கட்டும்.
  21. எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சன‌ங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாக‌ப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.
  22. இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம். யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா? அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்? அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்? அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது. முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும். உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.
  23. ஒரு பிரச்சனையும் இல்லை. நானே இங்கு, இருவரை தமிழர் அல்லாதோர் என கூறுபவந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுத்துள்ளேன். முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன். ஆனால் ஐலண்ட் முஸ்லிம் என்பது அப்பட்டமானதும், ஆதாரமற்றதுமான புரட்டு. அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது. அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன். தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை. பிகு உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏.
  24. இதன் பின்னால் ஒரு உலக மகா உளவியல் இருக்கிறது. வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு எப்போதும் ஒரு எதிரி தேவை. எதிரியே இல்லாவிடிலும் அவர்கள் பொய்யாக ஒரு எதிரியை சிருஸ்டித்த்தாவது கொள்வார்கள். பிரெக்சிற் காரருக்கு ஐரொப்பியர், ஹிட்லருக்கு யூதர், சீமானுக்கு தெலுங்கர்… யாழ்கள அண்ணையளுக்கு நீங்கள். உங்களை முஸ்லிம் அல்லது புளொட் அல்லது இரெண்டும் என கடந்து போனால் - நீங்கள் கேட்கும் அசெளகரியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வராது. எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும். இப்போ நீங்கள் அனுரவை தவிர வேறு வழி இல்லை என சொல்லி ஐலண்டின் வழிக்குதானே வந்துள்ளீர்கள். டக்லசும், ஐலன்டும், சம்பந்தனும் பல வருடம் வந்த வழிக்கு இப்போ வந்த நீங்கள், அவர்களை எப்படி குறை சொல்லலாம்?
  25. உங்க்ளுக்கு மீண்டும் முட்டை த‌லைவ‌ரே ம‌ர‌க்க‌றி முக்கிய‌ம் த‌லைவ‌ரே லொள்😛😁......................
  26. அவ‌ர் பிற‌ந்த‌து தென் ஆபிரிக்காவில் ஆனால் ப‌ல‌ வ‌ருட‌மாய் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடின‌வ‌ர்...................திற‌மை இருந்தும் இர‌ண்டு நாட்டு ச‌ர்வ‌தேச‌ அணியில் இட‌ம் பிடிக்க‌ வில்லை இத்தாலி அணியின் க‌ப்ட‌னாய் அவ‌ரை தெரிவு செய்த‌து பாராட்ட‌ த‌க்க‌து...........க‌ப்ட‌ன் பொருப்புக்கு த‌குதியான‌ வீர‌ர்😍..................
  27. ந‌ம்ம‌ பெரிய‌ப்புக்கு முட்டை.............. ஓமான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் அடிக்கும் என‌ தெரிவு செய்தேன் 5விக்கேட் அவுட் ஆகின‌ பிற‌க்கு நிதான‌மாக‌ ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்டின‌ம்.........................
  28. இந்த திரி தொடங்கியதில் இருந்து இறுதியுத்த மக்கள் அழிவுக்கு சம்பந்தர் மட்டும் தான் முதன்மை காரணிபோல் வழமையான பாணியில் தேசியர்களால் திரிக்கப்பட்டது. தம்மால் ஏன்ற்கனவே பரப்ப்பட்ட உலக மகா பொய்களை எல்லாம் புலவர் போன்றவர்கள் இங்கு கொண்டுவந்து கொட்டினார்கள். நீங்களும் கனடாவில் இருந்து ஒரு சென்றிமென்ற் நடிகர் தத்துரூபமாக நடித்ததை இங்கு கொண்டுவந்து இணைத்தீர்கள். அப்போதேல்லாம் அது 2009 ல் நடந்த சம்பவங்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தும் அவற்றை எல்லாம் ரசித்த உங்களால் அந்த உருட்டுகளை உடைந்து தர்ககரீதியாக கேள்விகளை பல உறவுகள் கேட்க தொடங்கியதும், ஏன் 2009 ல் நிற்கின்றீர்கள் அதற்கு பின்னரான காலத்துக்கு வாருங்கள் என்று புலம்புகினீர்கள். ஏற்கனவே இருந்த அரசியல் பலத்தையும் சிதைத்து சுக்குநூறாக்கி விட்டு ஒன்றுமே இல்லாத ஒரு இருண்ட காலத்தை உருவாக்கி விட்டுருப்பதே 2009 ல் இருந்து இன்று வரை உள்ள நிலை. ஆயுத போர் வரும்வரை தமிழரின் சனத்தொகை அதிகரித்து சென்றது. ஆயுதப் போராட்டம் அதை அழித்தது. இப்போது மீண்டும் வளர்சியடைகிறது. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையில் தமிழரை விட்டு சென்ற பிறகு திரும்பவும் அரசியல்ப் பலம் பெறுவது என்பது எனது, உங்களது வாழ்ககைக்காலத்தில் காலத்தில் நடக்கப்போவதில்லை. எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கி புகழ்ந்து பக்கம்பக்கமாக எழுதுவது, அதில் ஒருவன் தவறுகளை சுட்டிக்காட்ட வெளிக்கிட்டால் ஐயோ! பழசை கிளறுறான், மாவீரரை கொச்சை படுத்தி போட்டான் என்று துள்ளி குதிக்கிறது. போராளிகளின் தியாகத்தை உபயோகித்து தமது தரப்பு அரசியல் தவறுகளை மறைத்து அடுத்தவர் மீது பழி போடுவது . இந்த அயோக்கிய அரசியல் தமிழருக்கு விடிவை தராது என்று தெரிந்தும் அதை செய்யும் நீங்கள் எப்படி தாயகத்தில் தமிழரின் அரசியல் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பீர்கள்? கோசான், Multiple choice கேள்விகளில் நான்கு பதில்களில் இறுதியாக தேர்வாக “மேற்கூறிய எவையும் இல்லை” என்று ஒரு தேர்வு இருக்கும். நீங்கள் ஏன் அதை இங்கு சேர்ககவில்லை. 😂
  29. அந்த காலத்திலேயே மனுசன் வாழ்ந்து ரசித்து சிலை வடிச்சிருக்கானப்பா.. இடம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்..
  30. ஆளுவது. என்பது. தான். சரி. ஆழுவது. கண்ணீர். விடுவது. இவ்வண்ணம். தமிழ். ஆசான். கந்தையா.
  31. இனவாத சிங்கள அரசுகள் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதங்களை மூடி மறைப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்.... குறிப்பாக பிரேமதாச ஆட்சிக்காலத்தில் இந்திய ஆக்கிரமிப்பாளர்களை முறியடிக்க புலிகளுடன் செய்த ஒப்பந்தங்கள்.....மற்றும் பல விடயங்கள். பட்ட அனுபவங்களே பல முடிவுகளை எடுக்க வைக்கும். தலைவர் பிரபாகரன் இனவாத சிங்கள அரசுகளை நம்பக்கூடாது என அன்று சொன்னார்.அவர் சொன்னது போல் சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்களோ கிழிந்த இசைத்தட்டு போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்.
  32. இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
  33. திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது? நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை. அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!
  34. சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.
  35. அந்தக் கோப்புகளில் பெயர் இடம்பெற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று நியாயமில்லை. ஆனால் ஒரு கொரடூரமான குற்றவாளிக்கு இவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறது.இவர்களைச் சிபாரிசு செய்யும் அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒரு நெருடலான விடயம்.எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை.இப்பொழுது வரை அவர்கள் இந்த விடயத்தில் நிபராதிகள்.
  36. ஜாலியன் வாலா பக் படுகொலையில் ஜெனரல் டயர் தான் உத்தரவிட்டவன் மிகுதி எல்லாம் படுகொலையை அரங்கேற்றியவர்கள் இந்திய பிரிட்டிஷ் கை கூலிகளே சொந்த மக்களை கொன்றாலும் அடிமையாக இருப்பதே சுகம் என்று வாழ்பவர்கள் . அதே பிரிட்டிஷ் இராணுவம் கிழக்கு ஆசியா பக்கமும் ஆட்சி பரம்பலை செய்தது அங்கு எல்லாம் இந்தியா போலவோ ஸ்ரீ லங்கா போலவோ அடிமை படைகள் அவர்கள் நாட்டுக்கு எதிராக பெரிதாக சேரவில்லை .இது வரலாறு . இங்கு என்னவென்றால் எப்போதோ மவுனித்த அமைப்பு மேல் சிங்களவனை விட கேவலமாய் காறி உமிழும் தொடற்சியான வண்மம் என்ன ? புலிகள் இல்லையென்றால் பாலும் தேனும் ஓட வைப்பம் என்று சொன்னவர்களிடம் கேள்வி கேட்க வக்கற்று குறுகிய மனப்பான்மையில் புலிகளை வசைபாடுவது ஒன்றே முழு நேர தொழில் போல் யாழை உபயோகிப்பது சரியா என்று தெரியவில்லை .
  37. எதிலும் இராணுவத்தை பொதுச்சேவைகளில் வலிந்து புகுத்தி அவர்கள் மக்களுக்கு சேவை செய்கின்றனர் என மக்களாலும் சர்வதேசத்தாலும் புகழப்படவேண்டும், அவர்கள் செய்த கொலைகள், குற்றங்கள் மறக்கப்பட, மறைக்கப்பட வைக்கவேண்டும், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை, விசாரணை நடத்தப்படக்கூடாது. பாருங்கள்! சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, நாமல், பிக்குகள் இனி மேல் பிரச்சாரம் எப்படியிருக்குமென்று. நமது மக்களுக்கெல்லாம் இப்படியான கட்டிடங்கள் கட்டத்தெரியாது. இதற்கு முன் தமிழர் பிரதேசங்களில் எத்தனையோ பாடசாலைகள், கோயில்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டனவே, அப்போதெல்லாம் இல்லாத ஆரவாரங்களும் பாராட்டுகளும் இப்போது ஏன்? ஒன்றை மறைக்க இன்னொன்று. பாடசாலைகளையும் கோவில்களையும் வீடுகளையும் வைத்தியசாலைகளையும் இடித்து தரை மட்டமாக்கியவர்கள், மக்களை அழித்து ஏதிலியாக்கியவர்கள், காணாமல் ஆக்கியவர்கள் இப்போ முன்னிலையில். நாளைக்கு இதற்கு பக்கத்தில் ஒரு விகாரையும் கட்டுவார்கள். முன்பே இங்கு விகாரை கட்ட திட்டமிட்டு சலசலப்பு ஏற்பட்டது, இப்போ தானாகவே சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கிறார்கள் தட்டு வைத்தழைத்து.
  38. அத தெரண கருத்துப்படங்கள்.
  39. 1700s தமிழர்கள் கொத்தடிமைகளாக மொரிசியஸ் அழைத்து செல்லபட்டனர்.. "
  40. மண்டகப்பட்டு குடவரை கோவில்..😊
  41. பண்டைய காலத்து அறிவு இப்போது இல்லை.தொழில்நுட்பங்களே இல்லாத காலத்தில் செய்தவைகளை பார்த்து இன்றும் வியக்கிறோம். இப்போது தமிழர்கள் செய்வதைப் பார்க்க காறி துப்பத்தான் மனம் வருகிறது. இணைப்புக்கு நன்றி சிறி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.