Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    19621
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88767
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    39280
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15819
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/14/26 in Posts

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் டொக்ரலின் ஆட்டமிழக்காத விளாசலான 35 (09 பந்துகள்) ஓட்டங்களோடும் 5 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இதுவே அணியொன்றின் தற்போதைய அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணியில் ஆமிர் கலீம் அதிரடியாக 50 (29 பந்துகள்) ஓட்டங்கள், ஹம்மாட் மிர்ஸா 46 (37 பந்துகள்) ஓட்டங்களைப் பெற்றபோதும் மற்றையோர் வேகமாகப் பின்தொடர நிலைத்து ஆடமுடியாததால் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியடைந்தது. முடிவு: அயர்லாந்து அணி 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, அணித்தலைவர் றிச்சி பெரிங்டனின் அதிரடியான 49 (32 பந்துகள்), மைக்கல் ஜோன்ஸின் விரைவான 33 (20 பந்துகள்) ஓட்டங்களுடன் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, டொம் பன்டனின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜேக்கப் பெத்தெல்லின் நிதானமான 32 (28 பந்துகள்) ஓட்டங்களோடும் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி, மார்க் சப்மனின் அதிரடியான 48 (26 பந்துகள்) ஓட்டங்கள், டரைல் மிற்செல்லின் விரைவான 32 (24 பந்துகள்) ஓட்டங்கள், பின் அலெனின் வேகமான 31 (17 பந்துகள்) ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்கோ ஜன்சன் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்கம் முதலில் இருந்தே பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே தொடர்ச்சியாக அடித்தவண்ணம் இருந்ததாலும், மற்றையோரும் தமது பங்களிப்பாக விரைவாக அடித்ததாலும், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர். இறுதியில் எய்டன் மார்க்கத்தின் மரண அடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 86 (44 பந்துகள்) ஓட்டங்களின் உதவியுடன் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @alvayan முதல்வர் நாற்காலியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார். எனினும் @goshan_che அனைவரையும் தாங்கும் வலிமையுடன் தான் இருப்பதால் கீழே இறங்கிவிட்டார்,
  2. இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார். இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார். தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள். இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை. பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.
  3. தலைப்பில் உள்ளது போல் உண்மையில் புலி காசை கொள்ளை அடித்த கள்ளர் பெயர் விபரம் வீடியோவில் உள்ளதா? சும்மா கவர்சிக்கா வைத்த தலைப்பு போல் உள்ளது. 2 நிமிடம் பார்த்தேன் - நான் புலிக்காசு 300,000 டொலரைத்தான் அடித்தேன், நீ புளொட் காசு 500,000 அடித்தாய் என கதை நீளுது😂. புலிக்காசை அடித்தாயா? என கேட்டால், கேட்பவரை நீ புளொட் என திசை திருப்பி விடும் பழைய உத்தியோ? வீடியோவை பார்த்தவர்கள் யாரும் இருந்தால் உண்மையில் கள்ளர் விபரம் உள்ளதா என சொல்லவும்.
  4. பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார். டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு… ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.
  5. அப்ப இனி எங்கட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் கனவெல்லாம் வேஸ்ட்டா சார்? பிரான்ஸிலையும் சொத்துப்பிரிப்பு பிரச்சனையில் கார்னல் ஒருவரும் கொல்லப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட கார்ன்ல் பதவியும் வேஸ்டா சார்? 🙋
  6. இதை மிக இலகுவாக கையாளலாம். நான் 2009 மே 10 ற்கு பின் இறந்த எவருக்கும் பிரிகேடியர், கேணல், நா.ப, மா.ம எந்த பட்டத்தையும் பாவிப்பதில்லை. இயக்கம் கொடுத்த பட்டங்கள் மட்டுமே பாவிக்கபட வேண்டும். 2009 மே 19 ற்கு பின் இந்த பட்டங்கள் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
  7. சிம்பாப்வேயின் வெற்றி ஒரு குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியாது. துடுப்பாட்டம் ஆகட்டும், பந்துவீச்சு ஆகட்டும், களத்தடுப்பு ஆகட்டும், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். மிகச் சரியான தயாரிப்புடன் வந்திருந்தார்கள். துடுப்பாடும் போது, வெகப்பந்துவீச்சாளர்களை மிகவும் இலகுவாக சமாளித்தார்கள். ஒரே ஒரு முறையான சுழற் பந்துவீச்சாளரான சாம்பாவை, நிதானமாக கையாண்டார்கள். அவர்களின் முறையான பந்துவீச்சும் துல்லியமான களத்தடுப்பும் வெற்றிக்கு வழி சமைத்தது. பிளெசிங்க் முசரபாணி தனது உயரத்தை மிகச் சிறப்பாக பாவித்தார். அவர்களின் பந்துவீச்சில் ஒவ்வொரு துடுப்பாட்டக்காரருக்கும், சரியான களத்தடுப்பை அமைத்தார்கள். இங்கிலீஷுக்கு போட்ட பந்து சரியாக தாசிங்க முசாக்கியாவின் கையில் வந்து பிடியாக விழுந்தது. அவர் நின்ற இடத்தில்தான் இங்கிலீஷ் நிறைய தடவை பிடி குடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். அத்தோட களத்துடுப்பு. அபாரம். ஒவ்வொருவரும் நெருப்பாக நின்றார்கள். உண்மையிலேயே, ஒரு சிறப்பான வெற்றி.
  8. நன்றி பிரியன்சார் ...பலசாலி நன்றாகத்தான் உதவுவார் ....கடைசியில் பாய்ந்தடித்து முன்னுக்கும் நிற்பார்...பார்த்து சூதானமாக இருங்கோ ( செம்பாட்டனுக்கு நன்றி)
  9. அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.
  10. கடைசியாக எந்த திகதி இயக்கத்தால் தரநிலை வழங்கப்பட்டது. மாவீரர் பணிமனை எப்போது கடைசியாக செயல்பட்டது போன்ற தகவல்களை அறிய முடியுமா என பாருங்கள். தளபதிகள் ரமேஸ், சொர்ணம், சூசை போன்றோரை கூட நாம் தரநிலை சொல்ல முடியுமா என்பதை இட்டு நான் பலவாறு சிந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் பிரிகேடியர் தரம் என்பதை மக்களும், வரலாறும் அறியும். ஆனால் - இதை அறிவிக்க தகுதியானோர் எவரும் 2009 மே 19 இன் பின் இப்பூவுலகில் இல்லை.
  11. நன்றி கிருபஜி......நீங்கள் போட்ட படத்தின் பிரகாரம் ...இந்த முட்டுக்கொடுப்பவர் எப்ப கவிழ்ப்பாரோ என்று பயந்தபடிதான் ..இன்றும் முதலமைச்சர்...பதவியில் அமர்கின்றேன்....நன்றி கோசாஜி
  12. சுட்டது. பிழை. காரணம். சுட. முதல். அவன். குற்றவாளி இல்லை. தெரியாது. சுட்ட. பின்னர் தான் அவனைப் பற்றி. விபரங்கள். தெரிகிறது. இலங்கை. பொலிஸசாருக்கு. மோட்டர். சைக்கில். கார். வான். போன்றவற்றால். அவனை. துரத்தி. பிடிக்க. முடியாத. ? நிறுத்தமால். ஒடுபவனுக்கு. மரணத் தண்டனையா ? கள்வனுக்கு. மரணத்தண்டனையா? சாரதி அனுமதிப் பாத்திரமின்றி. வாகனம். ஒட்டுபவனுக்கு. மரணத் தண்டனையா. ? பொலிஸ. தண்டனையை. தீர்மானிக்க. முடியாது. குற்றவாளியை. நீதிமன்றில் நிறுத்தத் தான். முடியும். நீதிமன்றம். தண்டனையைத். தீர்மானிக்கும்.
  13. இது கூட நல்ல ஆலோசனையாக தான் உண்டு. எனினும் புலிகள் தரநிலை வழங்குவதை நிறுத்திய திகதியோடு நாமும் நிறுத்துவது என்பது நனிநன்றாக இருக்கும். ஏனெனில் அதுவே அதிகாரப்பூர்வ நிறுத்தம் ஆகும். அத்திகதி தெரிந்தால் அதற்குப் பின்னர் புலம்பெயர் தமிழரால் வழங்கப்பட்ட எதனையும் பாவிக்கவேண்டியதில்லை. பகரத்திற்கு மாவீரர் என்றோ இல்லை நடைமுறையரசால் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்களின் மேற்பகுதியில் பொதுவாக எழுதப்படும் "வீரவேங்கை" என்ற சொல்லையோ பாவிக்கலாம். வந்தவன் போனவனுக்கெல்லாம் மாமனிதரும் நாட்டுப்பற்றாளரும் கொடுப்பதற்கு இதுவொன்றும் சத்திரத்தில் போடும் சாப்பாடல்ல. எமது தேசத்தின் மதிப்புமிக்க விருதுகள். இவற்றில் விளையாட எவருக்கும் உரிமையில்லை, எமக்கென்றொரு அரசு அ (புலிகள் போன்று) மக்கள் ஆணை கிடைத்த அமைப்பு அமையும்வரை. குறிப்பு: 14ம் திகதியோடு போராளிகள் அனைவரையும் தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  14. அது பெரும் சிரிப்பு. 2023 ம் ஆண்டு கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் நிகழ்ந்த மாவீரர் நாள் நிகழ்வின் படமொன்றை Facebook இல் கண்டேன். அப்படத்தில் மாவீரர்களின் புகைப்படத்திற்கு நடுவில் இந்த இழவெடுத்தவனின் படமும் போட்டு இவனிற்கு நாட்டுப்பற்றாளர் விருதும் கொடுத்து வைத்திருந்தார்கள்... 🤦‍♂️ பாக்கவே மனமெரிந்தது. பெரும் விடுதலைக்கு பகைப்புலத்தில் வாழ்ந்து உயிர்கொடுத்தவர்களுக்கு (பெரும்பாலும்) வழங்கப்பட்ட இந்த உன்னதமான விருது, ஊரறிந்த பரவலறியான ஒரு கொள்ளைக்காரனுக்கு 2019 இலேயே வழங்கப்பட்டதென்பதை அறிந்த போது மனவேதனையாக இருந்தது. இப்போதெல்லாம் நாட்டுப்பற்றாளர் விருதும் மாமனிதர் விருதும் தத்தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கேவலம். எவ்வளவு உயர்வான விருதுகள் இவ்வளவு மலிந்து இறங்கிவிட்டன!! குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான்
  15. இராசதுரையை இப்படி கேவலப்படுத்த கூடாது. சிறிதரன் ஈழதமிழர் அரசியலில் ஒரு மிக்சர் மாமா 😂
  16. இம்முறை பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்து விட்டது ........அவை சிங்கம் , புலி , கரடி என்று ஒன்றையும் விடாமல் கடித்துக் குதறுகின்றன . ........!
  17. அத தெரண கருத்துப்படங்கள்.
  18. முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.
  19. அருமையான கருத்து. ஏன் அண்ணை முன்பு போல் இப்போ யாழுக்கு வருவதில்லை?
  20. நாளை ஞாயிறு 15 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் வாத்தியார் இப்போட்டியில் போட்டியில் @வாத்தியார் க்கு புள்ளிகள் எடுக்க யோகம் உள்ளதா? 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 13 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் 10 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா ஏராளன் வசீ புலவர் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் கறுப்பி வாதவூரான் கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் நியாயம் எப்போதும் தமிழன் நந்தன் ஐக்கிய அமெரிக்கா செம்பாட்டான் சுவைப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கந்தப்பு ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20 பேர் இந்தியா அணி வெல்வதாகவும் மூன்று பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் புலவர் ஈழப்பிரியன் பிரபா இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
  21. ரசனிக்கு... கட்டிய கோயிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை செய்த ரசிகர். காணொளி: 👉 https://www.facebook.com/reel/2564899520615829 👈
  22. Leela Ramesh ·orneSstdpo4f0:vfguu 4t3u1é3hfaec029hrg187u63mi2ar2fi 0h1i,a8 · 🦟ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்.. #பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு.. ஆண் கொசு : கண்ணே.. உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்.. பெண் கொசு : சரி.. சரி.. மொதல்ல தூங்கப்போ டார்லிங்... ஆண் கொசு : உன்ன நான் மெர்சிடஸ் கார்ல உட்கார வச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்.. பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.. காலையில பேசலாம் போய் தூங்கு.. ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா..? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு.. பெண் கொசு : நான் நம்புறேன் டியர்.. நீ இப்போ தூங்கப்போ.. ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு.. ஆண் கொசுவை ஓங்கி அறைந்தது பெண் கொசு..🙄 "குடிகாரனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்".......!
  23. சிங்கள குடியேற்றத்தை செய்யப் போகிறார்கள் என ஆர்ப்பாட்டம் செய்த தமிழரசுக் கட்சி இதற்காக ஒதுக்கிய பல மில்லியன் ரூபா பாதீட்டின் போது அதை எதிர்க்காமல் நடுநிலமை வகித்தார்கள். தெற்கில் ஆதரவு. வடக்கில் தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கை.
  24. உங்களை இங்கே அனுரகாவடி என விமர்சிப்பவன் நான் மட்டுமே. அனுரகாவடி என விமர்சிப்பவர் புலிக்காசை அடித்தார் எனவும் என்னை சொன்னார் என நீங்கள் எழுதியதால் அப்படி விளங்கி கொள்ளப்பட்டது. கீழே நான் குவோட் பண்ணியுள்ள, நீங்கள் குறிப்பிட்ட பதங்கள் அனைத்தும் நான் மட்டுமே பாவிப்பவை. குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுதினால் நல்லம். நீங்க புளொட்😂
  25. அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  26. முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.
  27. ஒரு வர்ணணையாளருக்குரிய ஆழத்துடன், மிக நேர்த்தியான அலசல். 1996 வட்மோர் இலங்கை அணியில் ஏற்படுத்திய மாற்றம் போல இது இருக்கிறது. ஆனால் ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது. Consistency இருக்குமா ? இது கடவுளுக்கே நடந்த பிறகுதான் தெரியுமாம்😂 நல்ல விடயம்தான் அண்ணை. வழமையாக எங்காத்துகாரரும் கோர்ட்டுக்கு போறார் என போட்டிக்கு வரும் சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற full members உம் இந்த முறை உத்வேகமாக விளையாடுகிறார்கள். 20 இல் கடைசி 12 நாடுகள் தமக்குள் அடிக்கடி விளையாட வேண்டும்.
  28. இங்கே அனுரவை யாரும் நீதிபதி வேலை செய்ய சொல்லவில்லை. மாறாக பொலிஸ் ஒரு அரச அமைப்பு. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பொலிஸ் நடவைக்கையை விசாரிக்க அனுரவுக்கு முடியும். ஏனைய கொலைகளுக்கும், பொலிஸ் செய்யும் கொலைகளுக்கும் வித்தியாசம் உண்டு. என்ன உண்மை வெளி வந்தது? நீங்கள் மேலே பத்தி பத்தியாக, அதாம் இதாம் என்று அனுரவுக்கு கவர் எடுத்ததை தவிர இங்கே எந்த உண்மையும் வெளிவரவில்லை. தனது இருப்பை தக்க வைக்க, பொலிஸ் அராஜகத்தை நம்பி இருக்கும் இன்னொரு அரசியல்வாதிதான் அனுர.
  29. தமிழ் போதைப்பொருள் கும்பல்கள் இலங்கைக்குள் மரணத்தையும் அழிவையும் கொண்டு வருவதை தடுத்த வீர பணி செய்த பொலிஸ் அதிகாரிகள் என்று அவர் பொலிசாரை பாராட்டவில்லை தானே 🙄
  30. சரியாச் சொன்னியல். எதுக்கும் பாத்து சூதானமா இருந்துக்குங்க. 😁
  31. சிறிதரன் இப்போ பதவிகள் பறிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுள்ளார், அவருடன் யாராவது சந்திப்புக்கு போயிருந்தால் கூடபோனவர்களின் பதவியும் பறிக்கப்படும், சிறி நேசனுக்கு என்ன நடந்தது என்பது சிலர் அறியாதது ஆச்சரியமே. ஆனால் சுமந்திரன் யாரையும் கூப்பிடுவதில்லை. அதற்கு வேறு காரணம் கூறுவார். சிறிதரன் என்ன கதைக்கிறார் என்பதை அறிய பிரதேச சபையினர் சாட்சியாக உள்ளனர், அவர் அதைவிட இரகசியமாக என்ன கதைக்கப்போகிறார்?
  32. இது நான் முதல்வராக வந்த பிற்பாடு என நினைகின்றேன்....இது அர்ஜூன் ரேஞ்சாக்கும்
  33. நீங்களும் ஒரு மார்க்கமாத்தானிருக்கிறியள்.🤣
  34. சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
  35. இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், தடிவனஷே மருமனியின் 35 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் பேர்ளின் 35 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்ததால் நிலைகுலைந்தனர். மற் றென்ஷோ 65 (44 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிளென் மக்ஸ்வெல் 31 (32 பந்துகள்) ஓட்டங்களுடனும் நிலைகொள்ள முயன்றும் விக்கெட்டுகள் சரிந்ததால் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து அதிர்ச்சியான தோல்வியைத் தழுவியது. பிளெஸிங்க் முஸர்பனி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். முடிவு: ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, ஹர்ஷ் தாக்கரின் 50 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், நவ்னீட் தலிவாலின் 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஜுனைட் சித்திக் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, அர்யன்ஷ் ஷர்மாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 74 (53 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷொஹைப் கானின் புயல்வேக 51 (29 பந்துகள்) ஓட்டங்களோடும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஐக்கிய அமீரகம் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். கனடா அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கா அணி, சைடெஜா முக்கமல்லாவின் அதிரடியான 79 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷுபம் ரஞ்சனேயின் ஆட்டமிழக்காமல் மின்னல்வேகத்தில் எடுத்த 48 (24 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஹர்மீட் சிங் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: ஐக்கிய அமெரிக்கா அணி 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: இன்று முதல்வர் நாற்காலியை @alvayan அலங்கரிக்கின்றார் 😆
  36. இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு கொன்றது என கேள்விபட்டுள்ளேன். புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது. ஆனால் எல்லாமும் அரசியல், இராணுவ சம்பந்த பட்ட கொலைகளே. கோழி கள்ளன், மாட்டுக்கள்ளனை எல்லாம் சுட்டார்கள் என்பது - சோபா சக்தி போன்றோரின் மிகைபடுத்தல் மொழி என்றே நான் நினைக்கிறேன்.
  37. பெயர் தெரியாத முகநூல் தளத்தில், யாரோ நா... தாரி (மொக்கை) கருத்தை இப்படி ஒரு சமூகத்தின் கொள்கை தீர்மானமாக நீங்கள் எடுத்து காவித்திரிவது சிரிப்பை உண்டாகிறது சகோ. இதை எழுதியவன் நோக்கம் கூட இந்த சமூகத்தை அசிங்கப்படுத்திடுவதாகவும் இருக்கலாம்.
  38. குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
  39. ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? -- -- --- *ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக்கரம் நீட்டும் சீனா! *இலங்கையை முழுக் கட்டுப்பாட்டில் எடுக்க இந்தியா முயற்சி *தமிழ்தரப்பின் உள்ளக மோதல்கள் டில்லிக்கும் கொழும்புக்கும் சாதகம்! --- --- --- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது. அதாவது -- டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் பொய் கூறுகிறார் என்றும், அமெரிக்கா இல்லையேல் ஐரோப்பிய நாடுகள் இயங்காது என்ற அவருடைய பார்வையும் மிக அழுக்கானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை, ஒரு "சிறிய கோரிக்கை" என்று டொனால்ட் ட்ரப் விளக்கம் அளித்தமை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன. 1940 களிற்கு முன்னர் டென்மார்க் ஜேர்மனியிடம் சரணடைந்தது. இதனால் நாஜிக்கள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அதனை அமெரிக்காவிற்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் டென்மார்க் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் -- கிரீன்லாந்தின் தனி இறைமை கிரீன்லாந்துக்கு உரியது என்றும், அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல்ல என்பதும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஆனாலும் ஒப்பந்தத்தின் பிரகாரம், கிரீன்லாந்தில், அமெரிக்க இராணுவத் தளங்கள், படைகள் அங்கு அமைக்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு தான், ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை மீண்டும் கைப்பற்ற தற்போது முற்படுகிறார். ஆகவே -- அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தவறுகிறதா அல்லது டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுக்கிறாரா என்ற கேள்வி நியாயமானது. ஐநா சபை அவசியம் அற்ற ஒன்று என ட்ரம்ப் கூறியிருக்கின்றமை, தன்னிச்சையான முடிவை பகிரங்கப்படுத்தியுமுள்ளது. ஆகவே -- பலமுள்ள மேற்கு நாடான கனடாவும், ஐரோப்பிய நாடுகளும், டொனால்ட் ட்ரம்பின் இத்தகைய செயற்பாடுகளுக்கு அஞ்சும் ஒரு சூழலில் அல்லது தயக்கம் காண்பிக்கும் பின்னணியில், வளர்ச்சியடைந்து வரும் மற்றும் இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகள் மத்தியில் சீனா தனது செல்வாக்கை காண்பிக்க முயற்சிக்கிறது. சீனாவின் குளோபல்ரைம்ஸ் (globaltimes) ஆங்கில செய்தி ஊடகத்தில் சென்ற வியாழக்கிழமை வெளியான ஆசிரியர் தலையங்கம், ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக் கரம் நீட்டியுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த சில வாரங்களாக சீனாவுடன் நெருக்கமாக உறவுகளை கையாள ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே வர்த்தக உறவு இந்த நாடுகளுடன் சீனாவுக்கு இருந்தது. ஆனால்-- மிகச் சமீபகாலங்களில், அரசியல் ரீதியான உறவுக்கும் அதனை மையப்படுத்திய இராணுவ தொடர்புகளுக்கும் வழி வகுக்கக் கூடிய ஏதுநிலைகள் தென்படுகின்றன. குறிப்பாக -- அஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தபோது, முரண்பாடுகளை தவிர்த்து இணக்கப்பாடான அம்சங்களில் ஒன்றித்துச் செயலாற்றுவது என கூறியிருந்தார். ஆனால் -- சீனாவுக்கு எதிராக இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய அக்கியுஸ் (Aukus) ஒப்பந்தம் அவுஸ்திரேலியா அரசுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் -- டொன்ல்ட் ட்ரம்ப் சுவிஸ்லாந்தில் நிகழ்த்திய உரையின் பின்னர், சீனா நோக்கிய கரிசனை உருவாகியுள்ளது போல் தெரிகின்றது. குளோபல் ரைம்ஸ் ஊடகத்தின் சர்வதேசச் செய்திகளில் இத் தொனி வெளிவர ஆரம்பித்துள்ளது. அஸ்திரேலியா தனது நாட்டின் நலன்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், சீனா மீதான கொள்கையை வரையறுத்துப் பிராந்திய நாடுகள், சீனாவுடனான உறவைக் கையாள்வதற்குரிய மாதிரியை வழங்கும் என்று சீன வெளியுறவு விவகார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீஹைய்தோங் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் -- பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டத்தில், பல ஆண்டுகளாக, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 'விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள்' (extensive consultation, joint contribution, and shared benefits,) என்ற கொள்கைகளை கடைபிடித்துள்ளன, இருதரப்பு வர்த்தகம் இராஜதந்திர உறவுகளின் தொடக்கத்தில் $ 2.4 பில்லியனில் இருந்து 2025 இல் $828.1 பில்லியனாகவும், பரஸ்பர முதலீட்டு பங்கு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து $280 பில்லியனாகவும் அதிகரித்தாக குளோபல்ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவை 120,000 பயணங்களை இயக்கியுள்ளது, 26 ஐரோப்பிய நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், காலநிலை மாற்றம் குறித்த கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நலன்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் புள்ளி விபரங்களை காண்பித்துள்ளது. இப் புள்ளி விபரங்கள், சீனாவுடன் வர்த்தக உறவில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதரக இணையங்களிலும் உண்டு. ஆகவே -- இப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய தன்னிச்சையான அணுகு முறைகள், சர்வதேச உலக ஒழுங்கில் புதிய மாற்றத்துக்கு வழி வகுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ரசிய - உக்ரெய்ன் போர், இஸ்ரேல் காசா மோதல் போன்ற விவகாரங்களில், டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமாக இல்லை. ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு அறிக்கையை ரசியா வரவேற்றுள்ள பின்னணியில், உக்ரெய்ன் அரசை அமெரிக்கா கைவிட்டுள்ளது என்ற செய்தி வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் -- வெனிசுலா ஜனாதிபதியை கடத்திச் சென்ற விவகாரம். டென்மார்க் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளையும் அமெரிக்கா கட்டுப்படுத்தும் அல்லது சொல்வதை செய்யுங்கள் அல்லது ஒத்துழைக்கவும் என்ற அதிகாரத் தொனியை புடம் போட்டுக் காண்பித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுடன் பல விடயங்களில் இணங்கிச் செல்ல மறுத்த பிரான்ஸ், ட்ரம்பின் செயற்பாடுகளின் பின்னர், சீனாவுடன் இணைந்தால் என்ன என்ற மன நிலைக்கு வந்துள்ளது. இந்த இடத்தில்தான் -- அமெரிக்க - சீன - ரசிய அரசுகளுடன் சமாந்தரமான முறையில் அதாவது சர்வதேசரீதியாக இரட்டை வெளியுறவுக் கொள்கையை இந்திரா காந்தி காலத்தில் இருந்து பின்பற்றி வந்த இந்திய அரசுக்கு, வாய்ப்பான ஒரு புவிசார் அரசியல் பின்ணியை உருவாகி வருகிறது. ரசிய - உக்ரெய்ன் போரில் இருந்து வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டது வரையும் அடக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த இந்தியா, அமெரிக்காவையும் பகைக்காமல், ஐரோப்பிய நாடுகளையும் கையாளக் கூடிய தனது இராஜதந்திர உத்தியை தொடர்ந்து பின்பற்றக் கூடிய வாய்ப்பு தடையின்றி கிடைத்திருக்கிறது. இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமரிக்கா செய்து கொண்ட அக்கியுஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி பிராந்திய இராணுவ விவகாரத்தில் அவுஸ்ரேலிய அரசு, சீனாவுடன் பகைக்காமல் இருக்கக் கூடிய உத்தி பற்றி ஆராயும் நிலையில், அது இந்திய அரசுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகளை அவதானிக்கவும் தடுக்கவும் உருவாக்கப்பட்ட குவாட் இராணுவ அணியில் இந்தியா பிரதான பங்கு வகித்திருந்தது. ஆனால் -- சில வருடங்களாக அதன் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி வரும் நிலையில், ட்ரம்பினுடைய சமீபகால உத்திகள், சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடாக செல்லக் கூடிய சூழலை உருவாக்கலாம். ஏற்கனவே சீன - இந்திய வர்த்தகம் உலகில் முன்னிலை பெற்றுள்ளது. எல்லை விவகாரத்தை தவிர, இந்தியாவுடன் வேறு பிரச்சினை இல்லை என்று சீன ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் இந்தியா அதனை மறுக்கிறது. இப் பின்புலத்திலே தான் -- தலைகீழாக ட்ரம்ப் நின்றாலும், இந்தோ - பசுபிக் விவகாரத்தில், அவுஸ்திரேலிய - இந்தியா ஒத்துழைப்பு அவசியமானது. ஆகவே, இதனையே ட்ரம்ப்புடனான பலமான உறவுக்கு இந்தியா பயன்படுத்தும் சாத்தியம் உண்டு. ரசியா ஊடாக சீனாவையும் கையாள முடியும். ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு தான், இப்போது இலங்கைக்கு குறிப்பாக ஜனாதிபதி அநுரவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகில் மேலும் குழப்பங்களை ட்ரம்ப் உருவாக்க முன்னர், இந்தோ - பசுபிக் விவகாரத்தில் தனக்கு சாதகமான, அதேநேரம் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட தற்போது இந்தியா தீவிரமாக ஈடுபடுகிறது. இதன் காரண- காரியமாக சிறிய நாடாக இருந்தாலும், இலங்கை அரசை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. 1980 களில் இருந்து இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனாலும், ட்ரம்பின் தற்போதைய குழப்பமான நகர்வுகளுக்கு மத்தியில், அந்த நிலைப்பாட்டை இந்தியா மிகவும் அவசர அவசியமாக தீவிரப்படு்த்தியுள்ளது. ஏனெனில் -- ஐரோப்பிய நாடுகளுடன் சீரான உறவை வலுப்படுத்த சீனா கையாளவுள்ள நகர்வு, தமக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று இந்தியா கருதக் கூடும். இப் பின்னணியில் தான் -- இலங்கையில் புதிய அரசியல் யாப்பு என்ற கதைகள் உலாவுகின்றன. வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற தமிழ்த்தரப்பின் உறுதியான கோரிக்கைகளுக்கு முன்னர், சும்மா ஒப்பாசாரத்துக்கு மீள் நல்லிணக்கம் என்று கதை சொல்லக் கூடிய புதிய அரசியல் யாப்பு அல்லது யாப்புத் திருத்தம் பற்றி கொழும்பில் சில உரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவனத்தை திசை திருப்ப தமிழ்தரப்பின் மத்தியில் பிளவுகள் - மோதல்கள் திட்டமிட்டுத் தூண்டப்படுகின்றன. அதற்குப் பலியாகி சமகால புவிசார் அரசியல் சூழலை அவதானித்துத் திட்டமிட்டுச் செயற்பட தமிழ்த்தரப்பும் தவறியுள்ளது. ஆகவே --- இப்பின்னணி விளைவுகளும், தேர்தல் அரசியலில் மாத்திரம் அக்கறை செலுத்தியமையும், இந்திய - இலங்கை அரசுகளுக்குத் தமது தேவைகளை நிறைவேற்றச் சாதகமாக்கியுள்ளன. --- --- குறிப்பு ---இக் கட்டுரை வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது. ஆனால் சனிக்கிழமை காலை தான், அதாவது சுவிஸ் நேரப்படி வெள்ளி மாலை தான் Board of Peace என்ற புதிய சபை ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியானது. 1) சுவிஸ்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதார மன்றக் கூட்டத்தில் டொனால்ட் ரம்ப், தனது புதிய 'சமாதான சபை' (Board of Peace) ஒன்றை உருவாக்கியுள்ளார். 2) ஐநாவில் வீட்டோ அதிகாரமுள்ள ஏனைய நான்கு நாடுகள் இதில் கைச்சாத்திடவில்லை. 12 நாடுகள் சிறிய கைச்சாத்திட்டுள்ளன. 3) இஸ்ரேல் - காசா போன்ற மோதல்கள் மற்றும் உலகின் ஏனைய விவகாரங்களை தீர்ப்பது இச் சபையின் நோக்கம் 4) தலைவராக ட்ரம்ப், அதாவது அமெரிக்கா... 5) ஐநா சபை உடைந்ததா என்ற கேள்வியுடன் சீன - ரசிய, கனடா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் கடும் விமர்சனம். -அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  40. உங்களுக்கும் எனக்கும் நல்ல வழி பிறக்கட்டும் .
  41. எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர். ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா. மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர். ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர். அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல். ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை. இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும். சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும். கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார். பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது. பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம். -------- என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார். ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம். Wishing you long life Ilayarajah
  42. நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.