Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39465
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89120
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8995
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16981
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/19/26 in all areas

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  2. வசி, பிடித்திடலாம் என்று சொன்னேனில்லையா. ஒரே நாளில் பெரும் பாய்ச்சல்🤣
  3. எனக்கு மிஞ்சி போனால் 60 புள்ளிகள்தான் என நினைக்கிறேன். சூப்பர் எட்டில் 7/8 அணிகளை சரியாக தேர்ந்தாலும் முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂
  4. ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣 👇🏿
  5. ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார். தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா? சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.
  6. வணக்கம், வருகைக்கு நன்றி. மங்களகரமாக வந்துள்ளீர்கள். மங்களமற்ற சொற்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
  7. ஐயா… உங்களின் பூர்வீகம் இலங்கையா, தமிழகமா. 😁 நானும் அவரின் எழுத்தைப் பார்த்து… வயது அதிகம் இருக்கும் என நினைத்திருந்தேன். அவர் பென்சன் எடுக்க… இன்னும் 25 வருசம் இருக்கு. 😂
  8. இலங்கை காவல்த்துறையும் நானும் காலம் : 2000 முதல் 2002 வரை இடம் : பிலியந்தலையிலிருந்து கட்டுப்பெத்தை வரையான பயணப்பாதை 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையின் பட்டக்கத்தரை எனும் பகுதியில் அமைந்திருந்த ஈஸ்வரன் சகோதரர்கள் நிறுவனத்தினதும் இந்தியாவின் நில்க்கமால் நிறுவனத்தினதும் பிளாத்திக்கு தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளனாகப் பணியாற்றி வரத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர்களை மட்டுமே கொண்ட அப்பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது அப்பகுதியில் வேலை நிமித்தம் வாழ்ந்துவந்த தமிழர்கள் தாக்கப்பட்டதாகவும், அத்தொழிற்சாலையில் பிற்காலத்தில் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும் இணைந்துகொண்ட அப்பகுதிச் சிங்களவர்கள் கலவரத்தின்போது தமிழர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் எனக்கு முன்னர் அத்தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் கனடா சென்றிருந்த தமிழ் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். ஆகவே மிகுந்த அவதானத்துடனேயே அப்பகுதிக்குச் சென்றுவந்தேன். என்னைப்போலவே இன்னொரு தமிழ்ப் பொறியியலாளரும் கூடவே அங்கு பணியாற்றி வந்தார். ஆறு பொறியியலாளர்களால் வழிநடத்தப்பட்டு வந்த அத்தொழிற்சாலையில் சுமார் 60 வரையான சிங்களத் தொழிலாளிகள் பணியாற்றி வந்தார்கள். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் கர்வம், நான் தமிழ‌ன் என்று தெரிந்திருந்தமையினால் இரட்டிப்பாகியிருந்தது எனக்கு நன்கு புரிந்தது. வேலை நிமித்தம் அவர்களுடன் பேசும்போது அதட்டலான தொனியில் பேசுவதும், நான் கூறும் வேலைகளை செய்ய மறுப்பதும் சிலவேளைகளில் நடப்பதுண்டு. "நீ வேண்டுமானால் இத்தொழிற்சாலையில் நடத்துனராக இருக்கலாம், ஆனால் நீ எனது வீதியினூடாகத்தான் ஒவ்வொருநாளும் இங்கு வந்து செல்லவேண்டும் என்பதை மறந்துவிடாதே" என்று அதட்டும் அள‌விற்கு அவர்களின் போக்கு இருந்தது. பெரும்பாலான சிங்களத் தொழிலாளிகள் தாமுண்டு, தம் வேலையுண்டு என்று இருந்துவிடுபவர்கள். ஆனால், பலர் வெளிப்படையாகவே இனவாதம் கக்கினார்கள். அதுவும் தமிழ்ப் பொறியியலாளர் என்று தெரிந்ததும் அவர்களின் இனத்துவேஷம் வெளிப்படையாகவே தெரிந்தது.
  9. பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா… 🙂
  10. குரூப் B யில் முதல் பிடிக்கும் அணி எது என அவுஸ்திரேலியாவை தெரிவு செய்தவர்கள் இனி கவலை படத்தேவை இல்லை. ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது. இதேபோல அடுத்த சுற்றிலும் சிம்பாவே ஒரு சில போட்டிகள் வென்றால் கவலை இல்லாமல் இருக்கலாம் 😄
  11. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.
  12. இப்போது எமது காலத்தைய அரைச்சுவர் வகுப்பறைகள் கட்டப்படுவது இல்லை போல. அரை சுவர் என்றாலும் இரும்பு நெட் எல்லாம் அடித்து சிறை போல் உள்ளது. ஒரு விதத்தில் பாதுகாப்பு என பார்த்தாலும் இன்னோர் விதத்தில் அவசரம் ஆபத்திற்கு வெளியேற முடியாது.
  13. இவரது தொலைபேசி இலக்கம் புதுக்குடியிருப்பு ·என்ற ஒரு பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.இப்போதும் அந்தப் பக்கத்தில் வேலை தேவைப்படுவோருக்காக இணைப்புக்கள் குடுக்கப்பட்டு இருக்கிறது.தப்பான இடம் என்று தெரிந்தும் உடல் உறுப்பை கூட இழக்கும் அளவுக்கு போனவர்களுக்காக என்ன செய்வது..மன்னார் பகுதிக்கு அரசாங்கத்தின் உதவி தொகை போய் உள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது என்றும் எழுதுகிறார்கள்.அந்த துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் அழுத்தம் குடுத்தால் மட்டுமே பணத்திற்கு என்ன நடந்தது என்பது வெளி வரும். சிலரோடு தொடர்பு வைத்தால் அனுப்பும் பணம் முடிந்ததும் மீளவும் தொடர்பு கொண்டு உதவி கேட்பார்கள் கவனம்.தொலைபேசி இலக்கம் - 077 763 2388.
  14. உருவம் வித்தியாசமாக இருந்தாலும் உள்ளடக்கம் ஒன்று தான். யாரும் தப்பவே முடியாது.
  15. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035
  16. ப‌ழைய‌ நினைவுக‌ள்..............அந்த‌ கோயில் நிக‌ழ்ச்சி என‌க்கு மிக‌வும் பிடிக்கும்....................எங்க‌ட‌ ஊர் கோயில்லை போன‌ வ‌ருட‌ம் இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌து அண்ணா🙏....................
  17. அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம். 'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள். இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள். யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.
  18. இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசியிருந்தனர், இலங்கை அணி புத்திசாதுரியமாக இறுதி ஓவர்களை சுழல் பந்து வீச்சிற்கு பயன்படுத்தினார்கள், அது ஒரு துணிச்சலான சிறப்பான முடிவாக கருதுகிறேன். இலங்கை அணி கடினமான புதிய பந்தில் நல்ல சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தார்கள் 1-6 ஓவர்கள் விக்கெட் இழப்பில்லாமல் 60 ஓட்டங்கள் வரை எடுத்திருந்தார்கள் (55 ஓட்டம் சிறப்பான தொடக்கமாக இருக்கும் என கருதியிருந்தேன்). சிம்பாவே 1-6 ஓவர்களுக்கு 55 ஓட்டங்களை விக்கட் இழப்பின்றி எடுத்திருந்தது. இலங்கை அணியில் துடுப்பாட்ட மத்திய வரிசை ஆடுகளத்தின் போக்கினை பந்து மாற்றத்திற்கேற்ப உள்வாங்க சிரமப்பட்டாலும் சிறப்பாக செயற்பட்டார்கள், இந்த போட்டியில் தோல்வியினடிப்படையில் இலங்கை அணியினை பார்க்கவில்லை மாறாக அதன் ஏதுவான நிலைக்கு சிறப்பாகவே செயற்பட்டதாக கருதுகிறேன்.
  19. நாளை வெள்ளி 20 பெப் பிரித்தானிய நேரப்படி ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெல்லுவதை பல்லேகலவில் மழை வந்து தடுக்குமா?
  20. புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக
  21. பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா ௩௰௯ என்பது தமிழெண் முறையில் 39 (முப்பத்தி ஒன்பது) ஆகும். இது திருக்குறளின் 4-வது அதிகாரமான அறன்வலியுறுத்தலில் உள்ள 39-வது குறளைக் குறிக்கிறது. இக்குறள், அறநெறியில் வாழ்வதன் மூலம் வரும் இன்பமே உண்மையானது, மற்றவை இன்பம் தராது மற்றும் புகழும் இல்லை என்று கூறுகிறது. எனது மகனின் வயதைவிட குறைவாக இருக்கிறாரே.
  22. இதை மிஞ்சிய பைத்தியகாரத்தனம் இருக்க முடியாது. குறிப்பாக கிரிகெட் போல form ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில், சுற்று போட்டி ஆரம்பிக்க முன்பே இப்படி 2ம் சுற்றை தீர்மானிப்பது எவ்வளவு உசிதமானது? இங்கிலாந்து தொத்துபறியில் சூப்பர் 8 வந்தது. இப்போ உள்ளதில் 3 தரம் இல்லா அணிகளுடன் சூப்பர் 8 விளையாட போகிறது. இப்படியே செமிக்கு போய்விட்டால், அடுத்து இரெண்டு கேம் சரியாக விளையாடினால் உலக சாம்பியன் 🤦‍♂️. இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதை தவிர்க்க என்ன கோக்குமாக்கு வேலை எல்லாம் செய்யவேண்டி உள்ளது.
  23. எல்லாம் ந‌ப் ஆசையில் பெரிய‌ப்பு ஹா ஹா😄😛.................
  24. நன்றி அன்பு உறுப்பினர். நம் சுதந்திரம் கிட்ட வந்து விட்டது என்று நினைக்கோணும் அன்பு தமிழ் மக்கள். ௧. நமசிவாயம் அன்பு சிவசக்தி ௐ ஆகும். ௨. உயிர் எழுத்து அ (ஆனா | அகர) எட்டு (௮) ஆகும். முடிவு இல்லையோ இது உங்களுக்கு அன்பு ஈழ மக்கள் ? எண்களே தமிழ் எழுத்துக்கள். அன்பே சிவம் சிவமே அன்பு. நமசிவாயம் ௐ முருகா
  25. வணக்கம் நமசிவாயம், உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது.
  26. நன்றி அன்பு சகோதரன்! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தமிழ் மூவாயிரத்தின் பாடல் ௲௮௱௨௰௩ (ஆயிரத்தி எண்ணூற்றி இருவத்தி மூன்றாம்) உண்மையும் ரகசியமும் ஆகும். அன்பு மாசித்தர் எம் மகா குரு தேவா திருமூலர் அவர்களின் திருவடிகளை போற்றுகின்றேன். சிவ சிவ ஹர ஹர ௐ முருகா
  27. ந‌ம‌க்கு முட்டை தான்😄😛.............வ‌சி ம‌ட்டும் தான் ச‌ரியா க‌ணித்து இருக்கிறார் வாழ்த்துக்க‌ள் வ‌சி அண்ணா😍....................
  28. ச‌ரியாக‌ சொன்னீங்க‌ள் நீங்க‌ள் சொன்ன‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் சிற‌ப்பாக‌ விளையாடுகின‌ம் இல‌ங்கை க‌ப்ட‌னின் விளையாட்டு ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாது................. இல‌ங்கை ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் தோத்து வெளிய‌ போவின‌ம் இவ‌ர்க‌ள் சிமி பின‌ல் வ‌ரை போவார்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இல்லை பாப்போம் எவ‌ள‌வு தூர‌ம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் வ‌ருகின‌ம் என‌..................
  29. நமசிவாயம் முருகா வாருங்கோ தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏
  30. நான் நினைத்த‌தை விட‌ மூன்று ர‌ன்ஸ் கூட‌ அடித்து விட்டின‌ம் ஹா ஹா 178ர‌ன்ஸ்😄😛 சிம்பாவே அணியால் இந்த‌ ஸ்கோரை அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது...................................
  31. இங்கும் எனது இந்திய நண்பர்கள் ஒவ்வொருவரும் பெரிய கிளப்புகளில் விளையாடுவதாக கூறுவார்கள், அவர்கள் கூறும் அணிகளின் பெயர் பிக்பாஸில் விளையாடும் அணியின் பெயரில்; இருக்கும் ஆச்சரியமாக இருக்கும் (அப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது). எமது வீட்டிற்கு ஒரு 500 மீட்டர் தொலைவில் ஒரு பயிற்சி மைதானம் உள்ளது, அந்த வழியாக செல்லும் போது பெரும்பாலும் இந்திய ஆண்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களையும் ஒழுங்கு செய்கின்றார்கள்.
  32. அப்படியெல்லாம் கேட்கக்கூடாது! அவர் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்றுதான் கேட்கவேண்டும். இவரைவிட Fakhar Zaman நல்ல அதிரடி ஆட்டக்காரர்!!
  33. கால் நகத்தையும் விட்டு வைக்காத தமிழன்.. யம்புலிங்கேசுவரர் கோயில் - திருவானைக்காவல்
  34. நான் 2003ம் ஆண்டு டென்மார்க்கில் இருக்கும் கில‌ப்பில் ஒன்றான‌ Aalborgக்கு விளையாடினேன்.................ரெனிஸ் ப‌ந்தில் விளையாடின‌ என‌க்கு கொக்பொல் ப‌ந்தில் விளையாடும் போது தான் தெரிந்த‌து கிரிக்கேட் விளையாடுவ‌து எவ‌ள‌வு சிர‌ம‌ம் என்று.................தொலைக் காட்சியில் கிரிக்கேட்டை பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்...................டென்மார்க் அணி பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது அணிக்கு க‌ப்ட‌னாய் இப்ப‌ இருக்கும் சின்ன‌ப் பெடிய‌ங்க‌ளில் ஒருவ‌ர் க‌ப்ட‌னாய் இருப்பார்....................இந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட் விளையாட்டை இன்னும் அங்கிக‌ரிக்க‌ வில்லை அதுவும் டென்மார்க் அணிக்கு பின்ன‌டைவு.............................
  35. வணக்கம் நமசிவாயம் அவர்களே. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். ருத்ரன் என்பது தமிழ்ப் பெயரா? அது சிவனைக் குறிக்கும் வடமொழிப் பெயர் அல்லவா.
  36. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, தென்னாபிரிக்கா அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அலிஷான் ஷரஃபு நிதானமான ஆடி 45 (38 பந்துகள்) ஓட்டங்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, டெவால்ட் பிறெவிஸின் வேகமான 36 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், றயான் றிக்கெல்டனின் அதிரடியான 30 (16 பந்துகள்) ஓட்டங்களுடனும் 13.2 ஓவர்களிலலேயே 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 123 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சஹிப்ஸடா ஃபர்ஹானின் ஆட்டமிழக்காத புயல்வேக செஞ்சுரியான 100 (58 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சல்மான் அக்ஹாவின் அதிரடியான 38 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷடாப் கானின் ஆட்டமிழக்காத வேகமான 36 (22) ஓட்டங்களோடும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. இந்த ஓட்ட எண்ணிக்கை தற்போதைய அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, ஷிவம் டுபேயின் மின்னல்வேக 66 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் சூரியகுமார் யாதவ்வின் நிதானமான 34 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் நிதானமான 31 (27 பந்துகள்) ஓட்ட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் வேகமான 30 (21 பந்துகள்) ஓட்டங்களோடும் விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அபிஷேக் சர்மா விளையாடிய மூன்று போட்டிகளிலும் முட்டை வாங்கி சாதனை படைத்துள்ளார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை எனினும் பலரின் பங்களிப்புடன் வேகமாக அடித்தாடி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை!
  37. இது வரவேற்கத்தக்க செயல். இதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம். கள்ள மண் ஏற்றிக் கொண்டு… அசுர வேகத்தில் செல்லும் பார ஊர்திகளால், விபத்து ஏற்பட்டு தினமும் பலர் சாகின்றார்கள். இதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  38. பகிடி வதை செய்வதே தவறு. அதை பல்கலைக்கழத்தில் சிறிய அளவில் செய்தாலும் கடந்து போய் விடலாம். ஆனால் பல்கலைக் கழகத்திற்கு வெளியே… புதிய மாணவர்களை தமது தங்கும் விடுதிக்கு அழைத்து… பாலியல் சீண்டல் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  39. அது எல்லாத்தையும் விட அநுரகுமார திசாநாயக்க அரசுக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்டாயம் செய்வார்கள்.
  40. அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?
  41. ரசனிக்கு... கட்டிய கோயிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை செய்த ரசிகர். காணொளி: 👉 https://www.facebook.com/reel/2564899520615829 👈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.