Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    89120
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33926
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    39465
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33873
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/03/26 in Posts

  1. உண்மை, பொய் எல்லாம் எனக்கு சத்தியமாகத் தெரியாது யாயினி. வேறொன்றுமில்லை. பாடசாலைக்கால நினைவுகள் வந்தன. பாடசாலை செல்லும் போது ஒரு முதியவரை வீதியில் காண்பேன். மனநிலை சரியில்லாதவர். அவருக்கு அருகில் போய் அவரது பட்டப்பெயரைச் சொன்னால் போதும், அவர் கோபமாகிக் கத்தத் தொடங்கிவிடுவார். சில வேளைகளில் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்து எறியத் தொடங்கிவிடுவார். அவரது கோபம் அடங்க கனநேரமாகும். பாடசாலை முடிந்து வரும் போது அவதானத்துடன்தான் அவரைக் கடந்து செல்வோம். தற்செயலாக அந்த மனிதர் எங்களை கண்டால் போதும், கெட்ட வார்த்தைகளுடன் எங்களைத் துரத்தத் தொடங்கிவிடுவார். காதில் விழும் அந்த வார்த்தைகளை கேட்டு ரசிப்போம். எங்களுக்கு அப்போது அது பகிடியாக இருக்கும். ஆனாலும் அவரை ஏதோ வகையில் துன்புறுத்தியிருக்கிறேன். அது ஒரு காலம். அரசியலிலும் அது வேலை செய்கிறது என்பது இப்போது தெரிகிறது. ரசிக்கிறேன்.
  2. உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழ‌க்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.
  3. இன்னும் பயணிக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமானங்கள் பறக்கின்றன.
  4. நான் யாரையோ சொன்னால் உங்களுக்கு ஏன் பின்பக்கம் வேர்க்கிறது? அவர் எனக்கும் இதையே செய்ததால்தான் சொல்ல வேண்டி வந்தது! நான் எந்த திரியில் எழுதவேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்கவேண்டும். நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக நடந்தால் குறைகூறத்தான் வேண்டும்! ஏனென்றால் இப்ப ஒரு ஐந்து வருசமா யாழ், யாழ் மாதிரி இல்லை! ஒரு சிலரின் முகப்பு புத்தகமாக மாறிவிட்டது! பத்தி பத்தியாக கிறுக்கிக்கொண்டிருக்கும் உங்களை போன்றவர்களால்தான் யாழ் களம் உருண்டோடுது என்றால் அதையும் நம்பீட்டம்!
  5. மேற்கத்தைய நாடுகள் தங்கள் அரசியலுக்கு பாதமான செய்திகளையும், மக்களுக்கு உண்மை தரும் செய்திகளையும் தடை செய்பவர்கள் என்பதை தெரியாத பாலகனா நீங்கள்?🙂 இதே போல் மாற்றுக்கருத்து நாடுகளிலும் அதே நிலைதான்....எனவே..... எனவே இரண்டு பக்கமும் நாயடி....பேயடி....சணலடி.எல்லா இடமும் பிரேக்கிங் நியூஸ். உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாது.😎
  6. 2009 இல் முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகப் பெரியது. 2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009.மே.18 இல் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்து வைத்தார்கள். ஈரான், இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எம்மை அழித்ததோடு, வழங்கிய ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. எம் மண்ணில் எங்களைக் கொன்று குவித்து மகிழ்ச்சி அடைந்தவர்கள், எங்களை அழிக்க அனைத்து வகையிலும் உதவியவர்கள், எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இப்போ தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள். அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். நாங்களும் இப்படித்தான் கதறினோம். மறந்து போவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல. சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளுடன் தனித்து போராடினார்கள் விடுதலைப் புலிகள். எங்கள் மாவீரச் செல்வங்களின் கண்ணீரும், எம் தமிழ் மக்களின் சாபமும் ஒரு போதும் எம் இனத்தை கொன்றவர்களை... சும்மா விடாது. நம்ம யாழ்ப்பாணம்
  7. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை 28 Feb, 2026 | 10:03 AM பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது 'ஃபூர்னில் டிடோ' (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக அவருக்கு €4,000 (சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பேக்கட் ரொட்டிகளை வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது. வெற்றிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீபனின் கடைக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கடின உழைப்பு, பாரிஸின் பாரம்பரிய அடையாளத்தில் ஒரு காவியமாக மாறியுள்ளதாகப் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில், இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இந்தப் புகழ்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைத் தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026
  8. முதலில் உடம்பைக் கவனியுங்கள்.யார் வென்றாலும் நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
  9. உடல்நிலை தேறி வந்ததில் சந்தோசம்.
  10. நீங்கள் இருவரும் என்னையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் . ..... நான் இந்தப் பகுதியில் எழுதிய கவிதை பற்றித்தான் குறிப்பிட்டேன் ....... வேறொன்றுமில்லை . .......! புஷ்பா தங்கதுரை ஒரு மாபெரும் எழுத்தாளர் . ......அவருடன் என்னை ஒப்பிடுவதே, எனக்குத்தான் பெருமை .......அது எனக்கு மகிழ்ச்சியே .......மன்னிப்புக்கு அவசியமே இல்லை ஜஸ்ட்டின்.......! இந்த யாழ்களத்திலேதான் ஏதோ எழுதுகிறேன் .......வேறெங்கும் நான் எழுதியதே இல்லை . ...... அன்று எனது தம்பி முறையானவரும், டென்மார்க் (அடுத்தடுத்த வீடுகள் ) எனது சொந்த அத்தானும் ஜெர்மனி, காலமாகி விட்டனர் ....... அங்கு போய் இன்றுதான் வந்தனான்.......ஒரு அப்பாயின்மென்டுக்காக . ....... சில சமயம் ஓரிரு நாட்களில் மீண்டும் போகவேண்டி வரலாம் . .......! நான் எழுதுவேன் . ..... எனக்கு குறையொன்றுமில்லை . ......!
  11. இருப்பு 128,778.62+363.71=129,142.33. சேமிப்பு வட்டி 363.71. 129,142.33-36.37=129,105.96 தற்போதைய வங்கி மீதி 28/02/26. பிடித்து வைத்தல் வரி 36.37. இன்றைய தினம் 03/03/26 நமது கள உறவு ஒருவர் 10,649.52 ரூபா வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளார். முந்தைய இருப்பு 129,105.96+10,649.52=139,755.48 ரூபா தற்போதைய வங்கி மீதி. பொன்னாலை ஏரம்பு ஐயாவின் எஞ்சியுள்ள சீமந்து பைக்கற்றுகள், மணல், சல்லி என்பன கல் அறுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது முன்னோடி அமைப்பிற்கு உறுதுணையாக உள்ள யாழ் கள உறவு ஒருவர் தாயகம் வருகை தந்துள்ளார். விரைவில் இரண்டு வேலைத்திட்டங்கள் நடந்த இடங்களுக்கு விஜயம் செய்த பின் மேலதிக தகவல்களை தருகிறேன். காரைநகர் வேலைகள் சம்பந்தமாகவும் நேரடியாக கொட்டப்புலம் பிரதேசத்திற்கு சென்று தகவல்கள் தருவதாக என்னுடைய வீட்டிற்கு நேற்று வந்து சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.
  12. உங்களுக்குப் பிடித்த பிளேயர் இருக்கட்டும், நீங்கள் நலமாக இருக்கிறீர்களா .......கவனமாக இருங்கள் ......!
  13. போன மாதம் சந்தித்தார்கள், இந்த மாதம் சந்திக்கிறார்கள், வாற மாதமும் சந்திப்பார்கள். சுமந்திரனும், சாணக்கியனும்.... பல வருடங்களாக வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து, பத்திரிகைகளில் படம் போடுகின்றார்கள். இந்த சந்திப்புக்களால் இதுவரை ஏதாவது ஒரு பலன் கிடைத்ததா? வெளிநாட்டு தூதுவர்களுக்கு... தமிழ் மக்களின் பிரச்சினை இதுவரை என்ன என்று தெரியாதா? அதை... வருடக் கணக்கில் இவர்கள் அவர்களுக்கு விளங்கப் படுத்தியும் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்றால்... இந்த படம் காட்டும் குரூப்புக்கு விளங்கப் படுத்த தெரியவில்லையா... முதலில்... இவங்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினை என்னவென்று ஆரும் சொல்லிக் கொடுங்கப்பா. 😂
  14. இனவாதம், வன்முறை மற்றும் யுத்தம் ஆகியவற்றுக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம். சகல விதமான வன்முறைகளையும் எதிர்க்கிறோம். மத்திய கிழக்கு நாடுகளும்,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆயுதங்களை கைவிட்டு சமாதானத்தை கையில் எடுக்க வேண்டும். நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல். Ceylon Focus News ·
  15. சுப்பரப்பு...அமெரிக்கக் காரன் கண்டுபிடிக்கிற காரணம் மாதிரி ....பழைய நேர்ஸ்மாரை சந்திக்கிறதுக்கு ரோசா முள்ளை கண்டுபிடிச்சிருக்கிறியள் .... பரவாயில்லை எனக்கும் இடது ஆட்காட்டி விரல் மொழியிலை ஒருகாய் வளர்ந்திருக்கு...சிறியரைப்போல ஒரு கை பார்ப்பம் என்று மனிசியையும் கூட்டிக்கொண்டு தமிழ் பெண்வைத்தியரிடம் போனேன் .. அவ சிரித்தபடி வேறை வருத்தம் இருந்தால் சொல்லுங்கோ என்று கேட்டா...இதுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும்...
  16. மத்திய கிழக்கில் பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கு. இவங்கள் வேறை... குறுக்க, மறுக்க ஓடிக் கொண்டு இருக்கிறாங்கள். குண்டு அடிபட்டு சாகப் போறீங்கள். போய்.. ஓரமா விளையாடுங்க(டா) 😂
  17. இலங்கையை விட்டு வெளியேறமுடியாமல் அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் இலங்கை வீசா இலவசமாக இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கப்படுவதாக ஒரு தகவல் அறிந்தேன்.
  18. முன்பு போல்... பொறுமையாக இருந்து, கோர்வையாக எழுதுவதற்கு நேரம் கிடைத்தாலும்... ஏனோ தெரியவில்லை, மனம் ஒன்றிப் போக மறுக்கின்றது. கூடிய விரைவில்.... இரண்டாம் பாகத்தை எழுத முயற்சிக்கின்றேன். அதுவரை பொறுமை காக்கவும் நண்பர்களே... ❤️
  19. ஈரானை அண்மித்து 32 முஸ்லீம் நாடுகள். அதில் 20 நாடுகள் தங்களது விமான படைத் தளத்தையும், கப்பல் படைத் தளத்தையும்... ஈரானுக்கு அடிக்க, அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளார்கள். இது எல்லாம்... நம்ம ஊர் **** முஸ்லீம்களுக்கு தெரிந்தும், தெரியாத மாதிரி... நடிப்பார்கள். நம் ஊர் முஸ்லீம்கள்.... தமிழனை, சிங்களவன் அடித்தால்... வெடி கொளுத்தி கொண்டாடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் பேசுவதும் தமிழ். ஆனால்... தமிழனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களவனுடன் சேர்ந்து கொலை செய்து வந்தவர்கள். சக தமிழனின் இறப்பில் மகிழ்ச்சி அடைந்தவர்கள்.... எங்கோ பல ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும்... 80 வயது கிழவன் செத்ததுக்கு துக்கம் கொண்டாடுகின்றார்கள். இந்த முஸ்லீம்களால்... உலகமே நிம்மதி இன்றி தவிக்கின்றது. நேர்மையும், அறமும்... அறவே அற்ற இனம் இது.
  20. பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (04 பெப்), நாளை மறுதினம் வியாழன் (05 பெப்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், தென்னாபிரிக்கா எதிர் நியூஸிலாந்து SA எதிர் NZ போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் AUS எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் இந்தியா ENG எதிர் IND போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் SL வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் IND எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா ENG நிலாமதி AUS நந்தன் IND இரு அரையிறுதிப் போட்டிகளிலும் உள்ள தெரிவுகளின்படி: தென்னாபிரிக்கா அணி வெல்லும் 04 பேர் கணித்துள்ளனர். நியூஸிலாந்து அணி வெல்லும் என எவரும் கணிக்கவில்லை. இங்கிலாந்து அணி வெல்லும் என 06 பேர் கணித்துள்ளனர். இந்திய அணி வெல்லும் என 21 பேர் கணித்துள்ளனர். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  21. சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு நான் வேலை செய்யும் உணவகத்தில் ஈரானியர்களால் நிரம்பி வழிந்தது.கிட்டத்தட்ட 50,60 பேர் வரும். சிலர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஆட்டு இறைச்சி,கோழி,வாத்து இறைச்சியென ஒரு புடி புடித்தார்கள். சாப்பாட்டின் பின்னர் பழங்கள் கலந்த ஐஸ்,தனி ஐஸ் என ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எங்களுக்கு அந்தமாதிரி வருமானம்.😂 இப்பிடி நாளுக்கொரு அயத்துல்லா போனால்........😎
  22. கண்ணிலே இருப்பதென்ன ........! 😍
  23. வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் .........! --- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---
  24. சிறிதரன் ஜெகநாதன் என்ற தமிழரும் இலங்கை அணியில் விளையாடி இருக்கிறார். இவர்தான் முதலில் இறந்த இலங்கை அணியின் டெஸ்ட் விளையாட்டு வீரர். 44 வயதில் காலமானார். ரவி ரத்நாயக்காயின் தாய் தமிழ். ரவிந்திரா புஷ்பகுமாரா பாதி தமிழ். ரோய் டையஸ் சிங்களவர் என்று சொன்னாலும் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மாதிரி அவரின் முன்னோர்கள் தமிழர்கள் . வினோதன் ஜோன் விளையாடிய காலத்தில் அவுஸ்திரேலியா அணி முதன் முதலாக இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடவந்தது. கண்டி அஸ்கிரியா மைதானத்தில் புனித பூமியில் தமிழர் விளையாடலாமா என்று முக்கிய பிக்கு ஒருவர் சொன்னதால் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று முன்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்
  25. நடராஜன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த படம் ஜீவா. இது துடுப்பாட்டம் சம்பந்தமான திரைப்படம் . 10 வருடங்களுக்கு முன்பு வந்தபடம். இதில் தமிழகத்தில் இருந்து இந்தியா அணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 14 பேரில் 12 பேர் பிராமணர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த பிராமணர்கள் என்றால் நாமம் போட்ட ஐயங்கார்கள்தான்.
  26. அது சரி ஆரப்பா இந்த நியு பலன்ஸ்? போட்டியில பெயர் குடுத்தது மட்டும்தான். சத்கம் இல்லை. 3ம் இடத்தில நிக்கிறார்.
  27. ஹா ஹா..... நான் தான் அவர்களின் வழக்குகளை கையாள்கிறேன், எனக்கு பிரதம மந்திரியாக பதவியேற்பதற்கு அழைப்பு வருமென காத்திருப்பதாக அறிவித்திருந்தார், இப்போ இப்படி ஒரு கதை விடுகிறார். கொஞ்ச நாளாய் அமைதி நிலவுகிறதே என நினைத்தேன், அவர் கற்பனையில் இருந்திருக்கிறார் பாவம். ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வாக்காளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது இனவாதமாம். ஆனால் மாகாணசபைத்தேர்தலில், பாராளுமன்றத்தேர்தலில் தமிழர் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அதுதான் தமிழரின் ஏகோபித்த கட்சி என்று சொல்வது என்ன வாதம்? அது இருக்க, ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க கேட்டு விட்டு, அனுராவிடம் பதவி எதிர்பார்க்கிறார். அமைதியாக இருந்த கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்தி, தெருவுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு நீதியமைச்சர் பதவியை எப்படி இவர் எதிர்பார்க்கிறார்? சிலர் இப்படித்தான் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது, கிடைக்காத போதுஎச்சரிப்பது, சவால் விடுவது, பயமுறுத்துவது. பின் சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்பார்கள். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்பாடு இல்லாமல் பதவிக்காக சாயும் இவருக்கு அனுரா பதவி தருவேன் என்று சொன்னாராம். என்று இவர் சொல்வதிலிருந்து இவர் கடந்த காலங்களில் எதற்காக முண்டு கொடுத்தார் என்பது தெரிகிறது. எந்தக்காலத்திலும் இவர் தனக்கு வாக்கு போட்ட மக்களின் கவலைகளை தேவைகளை முன்னிறுத்தியதேயில்லை, இப்போ அவருக்கு பதவிக்காக மக்கள் நினைப்பு வருகிறது. தமிழ் மக்கள், தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் தாங்களாகவே அனுராவை தேர்ந்தெடுத்தனர், யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே தமிழரின் கவலைகளை, அபிலாசைகளை, உணர்வுகளை மதித்து அவற்றிற்கு தீர்வு வழங்குவது அனுராவின் கடமை. அதைவிட்டு சுமந்திரனுக்கு பதவி வழங்குவதால் தமிழரின் பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது அனுராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரியும். இப்போ தெரிகிறதா யார் பதவிக்காக நாக்கைத்தொங்க போட்டுகொண்டு அலைவது என்பது? இருங்கோ. யார் வேண்டாம் என்றது? அதற்காக என்ன செய்தீர்கள்? அனுரா நீதியமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ எதுவும் நிகழாது.
  28. மன்னிக்கவும் பிராமணர் அல்லாத தமிழர் என எழுதி இருக்க வேண்டும். ரெட்டி, பதானி தமிழ்நாட்டுக்கு விளையாடிவர்கள். பாலாஜி, வாஷிங்டன் பிராமணர் என நினைக்கிறேன். நட்டு தமிழ் ஆனால் டெஸ்ட் விளையாடினாரா? இனத்தூய்மைவாதம் பேசவில்லை, ஆனால் தமிழ் நாட்டு கிரிகெட் சபையில் பிராமணர் ஆதிக்கம் மிக அதிகம். அதை அரிதாக தெலுங்கர் உடைப்பார்கள். ஏனையோருக்கு சான்ஸ் இல்லை. 2ம் உலக யுத்தகாலத்தில் எனது உறவினர் குடும்பம் ஒண்டு பர்மாவில் இருந்து கால் நடையாக இந்தியா வந்து பின் இலங்கை வந்தார்கள். ரங்கூனில் குதிரை அது இது எண்டு வசதியாய் இருந்த ஆட்களை கொண்டு வந்து யாழில் விட்டு விட்டார்கள். அப்போ அவர்கள் பாடுவார்களாம்…. வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே… நாடி நிற்குதே அநேக தீமையே… சோப்பும் இல்லை சீப்பும் இல்லை யாழ்ப்பாணத்திலே😂
  29. சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்... சிற்றுவேஷன் சாங்க். என்னை மதுரையில கேட்டாக… மன்னார்குடியிலும் கேட்டாக… அந்த மாயவரத்தில கேட்டாக.... அனுரா மாத்தையாவும் கேட்டாக.....
  30. சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂 பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣 கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣
  31. எனக்கு அறிமுகம் இல்லாத 86 வயது தாத்தா ஒருவர் ஈரானில் கொல்லப்பட்டு உள்ளார். தாத்தாவின் இறப்பை கொண்டாடுவது உங்கள் பிரச்சனை. இதற்கு ஒப்பாரி வைக்கும் அளவிற்கு நான் வெட்டியாக இல்லை.
  32. 70 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்! @வாதவூரான் சுமைதாங்கிக் கல்லில் @நிலாமதி அக்கா குந்தவிடாமல் தடுப்பதில் வெற்றிகண்டுள்ளார்!
  33. இவ்வளவு காலமும் இதற்காகக் தான் திருமணம் செய்யாமல் இருந்தா?
  34. ஜோதிடம் பலிக்காததால்... ஜோதிடரை கூலிக்கு ஆள் வைத்து கொன்ற பெண்.
  35. இந்த வார முடிவில் எனக்குத் தெரிந்தவர்களின் ஆலோசனை உடன் வருகிறேன்
  36. RS Vijayakumar ·edrospntSorm91i9719 8370i5,0me8ulm4lr6cf11f003:h14m780v é536 · இணையத்தில் பார்த்த புகைப்படம்... இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் உடல்நலக்குறைவாக இருந்ததால் CT ஸ்கேன் அவசியமாக இருந்தது. ஆனால் அந்தப் பெரிய இயந்திரம் இருக்கும் அறைக்குள் தனியாகச் செல்ல அவன் தயங்கியிருக்கிறான். 2–3 மணி நேரமாக பெற்றோர், மருத்துவர்கள்—எல்லோரும் முயன்றும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை. அப்போது அவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அழைக்கப்பட்டான். நண்பன் வந்தவுடனே மாயம் செய்தது போல அவனின் பயம் பாதியாக குறைந்தது. இருவரும் சேர்ந்து CT ஸ்கேன் போக வேண்டும் என்று முடிவு செய்து இருவரும் கண்களை மூடி படுத்துக்கொண்ட புகைப்படம் தான் நாம் பார்ப்பது. இருவருமே சிறுவர்கள் தான்.. இருவருக்குமே பயம் தான் ஆனாலும் அசாத்தியம் சாத்தியமானது... இயந்திரப் பயத்தை எதிர்கொள்ள ஒருவருக்கொருவர் தைரியமாக மாறியவர்கள் தான் இந்த நண்பர்கள்.. இந்தக் காட்சி நமக்கு ஒன்றை மட்டும் நினைவூட்டுகிறது — வெளிச்சத்தில் சேர்ந்து ஓடுவதற்கு மட்டுமல்ல இருளான நேரங்களில் ஒருவருக்கொருவர் விளக்காக இருப்பதே உண்மையான நட்பு. உலகில் உள்ள அனைத்து நட்புகளும் இவ்வளவு தூய்மையானதும் உடைக்க முடியாததுமானவையாக இருக்கட்டும்....!
  37. நான் கடந்த சனி வைத்pய சாலை போய் இன்று தான் வீடு வந்தேன்.என்டாலும் புள்ளி கிடைக்காது என்டதுக்குமா அறிவிப்பாங்கள்.☹️🤣மற்றது றோய் டயஸ் எனக்கு பிடித்த ஸ்ரிலிஸ் பிளையர்.
  38. ஒரு மனிதனுக்கு கறை ஏற்படுத்துவது வெகு சுலபம். ஆனால் கறையை ஏற்படுத்தி விட்டால் அது அவனது அஸ்தி கரைந்த பின்னரும் அந்த கறை இருக்கும். சொந்த அனுபவங்களில் ஒன்று.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.