Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    89120
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19869
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33926
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    7157
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/06/26 in all areas

  1. 🤣............... பிரளயக் கிருமி, விவிலியக் கிருமி போன்ற சொற்பதங்களை இனி வாழ்நாளில் மறக்க முடியாது............... கடஞ்சா சொந்தமாக எழுதுவது மட்டும் இல்லாமல், சொந்தமாக சொற்களையே உருவாக்குகின்றாரே, அதற்காகவாவது அவருடன் யாராவது இடையிடையேயாவது உரையாட வேண்டும் என்று நினைத்தேன்................. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பா.ரவீந்திரனின் கட்டுரைகளின் தலைப்புகள் என்னவாக இருக்கும், கடஞ்சா என்ன கதைகள் சொல்வார் என்று ஒரு புதிய எதிர்பார்ப்பு இப்பொழுது என்னிடம் வந்திருக்கின்றது..................🤣............. இருவரின் எழுத்துநடைகளில் தான் வித்தியாசம், மற்றபடி பொருள் ஒன்றே தான்....................
  2. பா ரவீந்திரனுடன் ஒப்பிடும் போது கடஞ்சா புதிய சொற்கள் ஆக்கி தமிழுக்கு வளம் சேர்க்கிறார் என ஒப்புக் கொள்கிறேன். ரவீந்திரன் போன்ற மேற்கு எதிர்ப்பு சம்பெயின் செஞ்சட்டைக் காரர்கள், "காலனியம், நவ காலனியம், சுரண்டல், பிறாண்டல்" என்று ஒரே சொற்களை வைத்தே பக்கங்களை நிரப்பி விடுவர்! creativity இல்லாத ஆட்கள்!
  3. பா.ரவீந்திரன் அவர்கள் Champagne (sipping) Socialist ஆக இருப்பதை விடுத்து கொஞ்சம் இரு பக்கமும் சாராத நிபுணர்கள் வெளியிடும் அறிக்கைகள் தகவல்களையும் வாசிக்க வேண்டும். 90% யுரேனியத்தைச் செறிவாக்கினால் சிறிய ரக, ஏவுகணை காவிச் செல்லக் கூடிய (tactical) அணுவாயுதம் செய்யலாம். ஆனால், 60% செறிவாக்கிய யுரேனியத்தின் பெருமளவினைப் பாவித்து சற்றுப் பெரிய அணுவாயுதம் செய்யலாம். ஈரான், 60% செறிவாக்கிய யுரேனியத்தை நீண்ட காலமாகச் சேமித்து வருகிறது என்பது பல்வேறு தரப்புகளாலும் உறுதியான தரவு. ஈரானே இதை மறுக்கவில்லை என்பது இன்னொரு முக்கியமான தரவு! சிவிலியன் அணுசக்தியை உருவாக்க 60% யுரேனியம் அவசியமில்லை, அது 20% இலும் குறைவான செறிவாக்கலில் சாத்தியமாகும் விடயம், என்பது இன்னொரு தரவு. அப்படியானால் "ஏன் 60% யுரேனியம் செறிவாக்கல்?" என்ற கேள்விக்கு "ஈரான் அணுவாயுதம் தயாரிக்க முயல்கிறது" என்பது தான் யாரும் ஊகிக்கக் கூடிய பதில். "இஸ்ரேலை அழிப்போம்!" என்ற கொள்கை, யேமனின் ஹூத்திகள், லெபனானின் ஹிஸ்புல்லாக்கள், பலஸ்தீனத்தின் அரை டசன் உதிரி ஆயுதக் குழுக்கள் போன்றவற்றிற்கு ஆதரவு தரும் ஒரு நாடுஅணுவாயுதம் தயாரித்தால், அது எங்கள் எல்லோருக்கும் தான் ஆப்பு! இதனால் Champagne socialists இற்கும் கூட அழிவு தான் முடிவாகும்! "வாசிப்பில்லாத கோஷங்கள் நிறைந்த எழுத்து" முகநூலுக்குப் பொருந்தலாம்😎!
  4. அத தெரண கருத்துப்படங்கள்.
  5. இங்கே யாராவது எப்போதாவது கொமெய்னி ஒரு சர்வாதிகாரி என எழுதினார்களா? யாரும் எழுதவில்லை. அவர் ஒரு மத எதேச்சாதிகாரத்தின், தியோகிரசியின் தலைவர். இந்த முல்லாக்களின் ஈரான் மீதான பிடியை விளங்கி கொள்ள கொஞ்சம் வரலாறு தெரிய வேண்டும். இந்த ஏ ஐ உலகில் இதை தேடிபடிப்பது மிக இலகு. ஈரானின் ஷா ஒரு அமெரிக்க பொம்மையாக இருந்தார். அவருக்கு நாட்டில் எதிர்ப்பு வலுவாக இருந்தது. அப்போது, கம்யூனிஸ்டுகள், லிபரல்கள், பெண்ணியவாதிகள், இவர்களோடு இஸ்லாமிய முல்லாக்களும் சேர்ந்து ஒரு புரட்சியை நடத்தினர். அப்போது பலரும் ஜின்னா கனவு கண்ட பாகிஸ்தான் போல் ஒரு நவீனமடைந்த இஸ்லாமிய நாடாக ஈரான் வரும் என்றே உழைத்தனர். கொமேனியும் ஆட்சிக்கு வரும் வரை தன் சுயரூபத்தை காட்டாமலே நடந்தார். எந்தளவுக்கு என்றால் பிரான்ஸ், புரட்சியின் போது கொமேனிக்கு அடைக்கலம் கொடுத்து, முடிவில் ஒரு ஏர் பிரான்ஸ் தனி விமானத்தில் அனுப்பி வைக்கும் அளவுக்கு கொமேனி அமசடக்கியாய் இருந்தார். ஆனால் ஆடை அமைத்ததும் அவர் முதலில் வேட்டை ஆடியது பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்ட், லிபரல்கள், படித்த சமூகத்தைதான். அதன் பின் ஒரே அடியாக அல்ல, படி படியாக பெண்கள் மீதும், ஏனைய சிறுபான்மை மீதும் கடுமையான தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் கொமேனியின் பூட்டியை அவர்கள் கனடாவுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவர் அங்கே சுதந்திரமாக ஆடை அணிந்தார். இப்படி ஒரு இரட்டை தன்மையான நிலையில்தான் ஈரான் தலைமை இருந்தது. கொமேனி சாக, 88 முல்லாக்கள் கூடி கமேனியை தெரிந்தார்கள். அவரின் மகனும், இப்போ தெரிவாகி உள்ளவரும் கூட ஆண்மை குறைபாட்டுக்கு இலண்டன் வந்து உயர் சிகிச்சை எடுத்தார், இலண்டனில் பல மில்லியன் சொத்துக்கள் பினாமி பெயரில் வைத்துள்ளார் என அண்மையில் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் ஈரானிய முல்லாக்கள் சாம்ராஜ்யத்தின் இலட்சணம். ராஜபக்சகள் இனவாதத்தை பயன்படுத்தியது போல் மதவாதத்தை பயன்படுத்தும் மிலேச்சர்கள்தான் இந்த முல்லாக்கள். இவர்களை எதிர்த்து பல தடவை மாணவர்களும் மக்களும் போராடி அழிந்தனர். இவர்கள் ஈரானிய சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையையிம் கட்டுப்படுத்துவதால் மக்கள் பயத்தின் காரணமாக அடங்கி உள்ளனர். இதே ஈரானிய புலம்பெயர்ந்தவர்களை பார்த்தால் இஸ்ரேல் கொடியோடு நடனம் ஆடும் அளவுக்கு அவர்கள் முல்லாக்களை வெறுக்கிறனர். நானும், குசா அண்ணையும் கூட எம் அண்மைய அனுபவங்களை எழுதினோம். ஒரு காலத்தில் சதாமையும், கடாபியையும் இதை விட அதிக கூட்டம் ஆதரித்தத்து. ஆனால் அவர்கள் கையில் பவர் இல்லை எண்டதும் அதே மக்கள் கூட்டம் தெருவில் நாயை போல அடித்து இழுத்து போனது. முசோலினிக்கும் இதேதான். ஆகவே இவற்றை வைத்து மக்கள் ஆதரவை எடை போட முடியாது. நான் - இத்தனை அழுத்தத்துக்கு மத்தியில் 50 ஆண்டுகளாய் ஈரானில் போராடும் மக்கள், புலம்பெயர் தேசத்தில் பயம் இல்லாத நிலையில் ஈரான் மக்கள் எடுக்கும் நிலைப்பாட்டை பார்த்து சொல்கிறேன்- அதிகாரமும் அதன் பால் பட்ட பயமும் இல்லாமல் போகும் போது ஈரான் மக்கள் முல்லாக்களுக்கு நாயடி, பேயடி கொடுப்பார்கள். ஆனால்… அப்படி நடக்குமா என்பது கேள்வி குறியே. பிகு நான் மேலே சொன்னவை அனைத்தும் தரவுகளின் அடிப்படையிலே - ஆனால் இதை “மேற்கின் பிரச்சாரம்” என சதி கோட்பாடோடு ஒருவர் வருவார். அந்த பேய்கதைகளுக்கு எல்லாம் நான் நக்கலை மட்டுமே பதிலாக தருவேன்.
  6. அடேய்…புரூக்ஸ்….அநியாயப்படுவான்… எனக்கு இனி புள்ளியே வராது என்றதை விட… இந்தியா பைனலுக்கு போனதை என்னால் தாங்கி கொள்ள முடியாமல் இருக்கு😂.
  7. இன்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மின்னல்வேக 89 (42 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷிவம் டுபேயின் வேகமான 43 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷன் கிஷனின் அதிரடியான 39 (18 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஹர்திக் பாண்டியாவின் விரைவுச் சூடான 27 (12 பந்துகள்) ஓட்டங்களுடனும், திலக் வர்மாவின் அதிவேகமான 21 (07 பந்துகள்) ஓட்டங்களோடும் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 61 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து பின்தொடர ஆரம்பித்ததனால் விக்கெட்டுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. எனினும் ஜேக்கப் பெத்தெல்லின் அபாரமான மரண அடியுடன் எடுத்த செஞ்சுரியான 105 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், வில் ஜக்ஸின் வேகமான 35 (20 பந்துகள்) ஓட்டங்களோடும் வெற்றி இலக்கை அண்மித்தபோதும் இறுதி ஓவரில் ஜேக்கப் பெத்தல் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்த பின்னர் ஜொஃப்ரா ஆர்ச்சர் 3 சிக்ஸர்களை அடித்தும் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ஓட்டங்களையே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ஓட்டங்களை இறைத்திருந்தார்! முடிவு: இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது. யாழ் களப் போட்டியாளர்களில் 21 பேர் இந்திய அணி ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டி வெல்லும் எனக் கணித்திருந்தமையால், தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது! இருவர் இந்திய அணி வெல்லும் எனக் கணிக்காததால் அவர்களுக்கு புள்ளிகள் இல்லை. இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  8. பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம
  9. எங்களில் ஒராள் இப்படி முன்னுக்கு வந்து விடக்கூடாதே!🤣
  10. உங்களுக்கு "சீரியசாக" பதில் எழுதிய ரசோவை எதனால் அடிக்கலாம் என்று யோசிக்கிறேன்😂! எல்லைக்குள் நின்று ஈரான் போராடக் காரணம், ஈரானிய ஆட்சியாளர்களின் காசுக்கும், மதவாத ஆதரவிற்கும் நன்றியாக வெளியே buffer ஆக நிற்கும் ஹிஸ்புல்லாக்களும் ஹூத்திகளும் இருப்பது தான்! இப்படி "70 கன்னியர்களுக்காக சாகத் துணிந்த" பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு தராமல் இருந்திருந்தால், தற்போதைய நிலையில் ஈரானுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் மேற்கிலேயே நடந்திருக்கும். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்தது போல!
  11. இந்தியா... எவனுக்கும் உண்மையாக இருந்தது இல்லை. அவன் எமக்கு செய்த, இப்போதும் செய்து கொண்டு இருக்கும் துரோகங்கள்.... எண்ணில் அடங்காதவை. வெட்கம் கெட்டவர்கள்.
  12. இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது. முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும். இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது. ஈரானின் அறிக்கையிலும் ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள். ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது. அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.
  13. வணக்கம் வணாங்காமுடி. முகப்பு வழியாக யாழின் உள்ளே நுளைந்தவுடன் மறுபடி முகப்புக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் முகப்பில் உள்ளவை அனைத்தும் கருத்துக்களத்தில் உள்ளன. அத்துடன் முகப்பும் கருத்துக் களமும் வெவ்வேறு மென்பொருட்கள் (வெவ்வேறு இணையத் தளங்கள் போன்றவை). கருத்துக் களத்திலிருந்து முகப்புக்குப் போக வேண்டிய அவசியம் இருந்தால், மேலுள்ள "முகப்பு" என்ற இணைப்பின் மூலம் செல்லலாம் (தொலைபேசியில் "Menu" இல் உள்ளது).
  14. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் திரிசா - விஜய் ஜோடியாக கலந்து கொண்டனர் - செய்தி எங்க தல க்கு தில்ல பாத்தியா..?
  15. வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்.. படம் : சொந்தம் (1973 ) இசை :MSV பாடியவர் : ஜானகி வரிகள் :கண்ணதாசன்
  16. அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...
  17. முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர். ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே. இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார். உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள். நாமே அறியோம் 😂
  18. எல்லாம் எம்பெருமான் இஸ்ரேல் சித்தம். அது நடக்கோணும் எண்டு அவரவர் தலையிலை எழுதியிருந்தால்......அதுவும் நடக்கும். 😂 அரோகரா....வழி விடுங்கோ எண்டு சொல்லுறதுதான் இப்ப இருக்கிற ஒரே நல்ல வழி. மீறினால் விசா இல்லாமல் அமெரிக்காவில ராணுவமரியாதையோட கூட்டிக்கொண்டு போவினம் 😎
  19. கடஞ்சா, நீங்கள் எல்லா தரப்புகளையும் பார்ப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால், ஒரு தரப்பையும், மறு தரப்பையும் நீங்கள் ஒரே மாதிரி விளிப்பதில்லையே. நீங்கள் ஆதரிக்கும் தரப்பை மிகவும் மரியாதையுடனும், மறு தரப்பை மிகவும் இழிவாகவுமே குறிப்பிடுகின்றீர்கள். கருத்துகள் எழுதும் பலரும் இப்படியே செய்கின்றார்கள். இதன் அடிப்படையே நீங்கள் அல்லது அவ்வகையான கருத்துகள் எழுதுபவர்கள் ஏற்கனவே ஒரு பக்க சார்பானவர்கள் என்பதே. அவ்வாறான இடங்களிலிருந்து நடுநிலையான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. உங்களின் கருத்துகளும் அப்படியான ஒரு பக்க சார்பானதே, ஆனால் அவை நடுநிலையானவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஈரானிய சுப்ரீம் லீடர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா என்று கேட்கின்றீர்கள். ஹிட்லர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா................ இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...................... அதிபர் ட்ரம்ப் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...............மஹிந்த எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா............ இந்திய பிரதமர் மோடி எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா......................... ஆனாலும் இங்கு நானும், வேறு பலரும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கின்றோம். அதே போலவே ஈரானிய சுப்ரீம் லீடரின் நடவடிக்கைகளுக்கும் எதிராக கருத்துகளை சொல்லுகின்றோம். ஒரு சாதாரண உலகக் குடிமகன் என்றே ஒரே ஒரு தகுதியே அதற்கு போதும். உலகில் எந்த தலைவரின் இறப்புக்கு மக்கள் கூடவில்லை, துக்கம் அனுசரிக்கவில்லை.......... ஹிட்லரின் மரணத்திற்காக கூட இன்றும் துக்கம் அனுசரிப்பவர்களும் இருக்கின்றார்கள். அவர் செய்தது சரி என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள். அதன் அர்த்தம் அவர் ஒரு நல்ல தலைவர் என்பது அல்ல. எந்த நாடும் எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பதோ அல்லது அதன் தலைவர்களையோ அல்லது மக்களையோ கொல்வதையோ நாங்கள் ஆதரிக்கவில்லை. அதை மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றோம். அது எந்த நாடு என்றாலும் - அமெரிக்காவோ, ரஷ்யாவோ, இந்தியாவோ எது என்றாலும்.
  20. உலகக் கிண்ணம் ஒருவாறு முடிவுக்கு வருகிறது. சிறப்பாகச் செய்தீர்கள் கிருபன்.
  21. சின்னச் சின்ன நிகழ்வுகள்தான் போட்டியின் திசையை மாற்றியது. அக்ஸரின் இரண்டு பிடிகள். பாண்டியாவின் கடைசிப் பந்துப் பரிமாற்றம். பாண்டியாவின் எறி. பெத்தலை ஓட்டமிழக்க வைத்தது. இங்கிலாந்து தவற விட்ட சாஞ்சுவின் பிடி.
  22. திருமண விழாவிற்கு சோடியாக வந்த விஜய், திரிஷா. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1406221364085514 👈 சோடிப் பொருத்தம் எப்படி உள்ளது... ப்ரோ. 😂
  23. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபாரன் தகிசாதே பிபிசி பாரசீக சேவை 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது. தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய முடக்கம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள இரானியர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முயன்று வருகின்றனர். இரானுக்குள் இருப்பவர்களுடன் பேசுவது கடினமாக இருந்தாலும், சில இரானியர்கள் தாங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் பேசியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது அடையாளங்கள் மாற்றப்பட்டுள்ளன. "கடந்த ஆண்டு இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது நாங்கள் அனுபவித்ததை விட இப்போது நடப்பவை மிகவும் மோசமானவை" என்று கூறிய சலார், "வெடிப்புகளின் எண்ணிக்கை, அழிவு, இப்போது என்ன நடக்கிறது என்பது எல்லாமே நம்ப முடியாததாக இருக்கிறது" என்கிறார். சலார் தெஹ்ரானில் வசிக்கிறார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் போரின் முதல் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, இரானியத் தலைநகரம் பல்வேறு கட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,EPA சமீபத்திய வான்வழித் தாக்குதல் ஒன்றை விவரித்த சலார், "வெடிப்பு அதிர்வுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை உலுக்கின. கண்ணாடி உடைந்து சிதறாமல் இருக்க நான் ஜன்னல்களைத் திறந்து வைத்தேன். வீடு முழுவதும் அதிர்ந்தது..." என்றார். மேலும், "ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போலத் தோன்றுகிறது. தாக்குதல்களின் அளவு மிக அதிகமாக உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். தெஹ்ரானில் வசிக்கும் பாபக் என்பவர், தாக்குதல்கள் தொடங்கியபோது மக்கள் உணவைச் சேமித்து வைக்க வெளியே செல்வதைக் கண்டதாகத் தெரிவித்தார். கடந்த 12 நாள் போரை விட இப்போதைய தாக்குதல்கள் மிகவும் தீவிரமானவை என்றும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்குதல்கள் நடப்பதாக அவரும் உணர்ந்தார். "கடந்த முறை, வான் பாதுகாப்பு அமைப்பின் பதில் தாக்குதல் சத்தம் கேட்டபோது, தாக்குதல் நடந்து கொண்டிருப்பதை நாங்கள் அறிந்தோம். இப்போது வித்தியாசமாக உள்ளது. திடீரென்று எங்கோ ஒரு வெடிப்பு அதிர்வும் அழிவும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது" என்கிறார் பாபக். தெஹ்ரானுக்கு வடமேற்கே சுமார் 275 கிமீ தொலைவில் உள்ள ஜஞ்சானில் காவே வசிக்கிறார். "முதல் மூன்று நாட்களில், எங்கள் நகரம் கடுமையாகக் குண்டுவீசித் தாக்கப்பட்டது. போர் விமானங்கள் இடைவிடாது கடந்து செல்லும் ஒரு பகுதியில் நாங்கள் வசிக்கிறோம்," என்று காவே கூறினார். மேலும், வான்வழித் தாக்குதல்கள் நடந்த இடங்களிலிருந்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் புகைப் படலங்கள் எழுவதால், போரின் முதல் நாளுக்குப் பிறகு வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் காவே தெரிவித்தார். "ஒரே நேரத்தில் அழகாகவும் பயங்கரமாகவும் இருக்கும் ஒரு காட்சி இது" என்கிறார் காவே. பட மூலாதாரம்,Majid Saeedi / Getty Images படக்குறிப்பு,ஒரு வெடிப்பு ஏற்பட்ட பிறகு புகை மூட்டம் எழும்பும் காட்சியை, மலைச்சரிவிலிருந்து பார்க்கும் ஆண்கள் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் சலார் தனது நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பைப் பற்றி, குறிப்பாகத் தனது தாய் மற்றும் தந்தையைப் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளார். "நான் எனது பெற்றோரை வடக்குத் திசைக்கு அனுப்பி வைத்தேன்," என்று அவர் கூறினார். இருப்பினும் அங்கிருக்கும் ஆபத்தின் அளவு குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. "ஆனால் தெஹ்ரானில் உள்ள அவர்களது வீட்டை விட அது பாதுகாப்பானது" என்கிறார் சலார். அவரது பெற்றோரின் வீடு வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் பல ராணுவத் தளங்கள் உள்ள ஒரு பகுதியில் அமைந்துள்ளது. "எனது அம்மா மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவர் மிகவும் பயந்திருந்தார்," என்று கூறிய அவர், 1980-களில் நடந்த எட்டு ஆண்டுகால இரான்- இராக் போரின் போது அவர் அனுபவித்த எதையும் விட தற்போதைய தாக்குதல்கள் மோசமானவை என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாள் கடக்கும்போதும், அதிகமான மக்கள் தெஹ்ரானை விட்டு வெளியேறுவதை சலார் காண்கிறார், இருப்பினும் இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. "எனது நண்பரின் பாட்டி நோய்வாய்ப்பட்டுள்ளார், அவர்களால் அவரை இடமாற்றம் செய்ய முடியாது." காவே தானும் தனது நண்பர்களும் தங்களது வீடுகளுக்கும் இடையே மாறி மாறிப் பயணம் செய்து வருவதாகக் கூறினார். "ஒரு நண்பரின் வீட்டிலிருந்து வெளிப்பகுதியை அதிகம் பார்க்க முடியாது என்பதால், அது ஒருவித மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்ற உணர்வையும் தகவல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வையும் உருவாக்குகிறது. உயிர்பிழைக்கப் போராடுவதோடு சேர்த்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது பேணுவதும், நம்பகமான செய்திகளுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதுமே எங்களது மிகப்பெரிய கவலையாக உள்ளது" என்று அவர் கூறினார். போரின் முதல் நாளில் அவரது இணையத் தொடர்பு நண்பகலில் துண்டிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் கிடைத்தது. "என்னால் எப்போதெல்லாம் இணையத்தில் இணைய முடிகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாத இரானுக்கு வெளியே இருக்கும் நண்பர்களுக்கு, தகவல்களை அனுப்ப முயற்சித்தேன்," என்று அவர் கூறினார். காவே மற்றும் சலார் இருவரும் விபிஎன்-களை பயன்படுத்துகின்றனர். இவை இரானிய அரசாங்கத்தால் முடக்கப்பட்ட இணையதளங்களை அணுக அவர்களுக்கு உதவும் சேவைகள். ஆனால், அதுவும் எளிதாக இல்லை. "இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. விபிஎன் மூலம் என்னால் எப்போதாவதுதான் இணைய முடிகிறது. அதுவும் பொதுவாக நண்பகல் வேளையில்தான்" என்று சலார் கூறினார். பட மூலாதாரம்,BBC / Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் தாக்குதல் நடந்த பிறகு, மீட்பு பணியாளர்கள் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்கின்றனர் குறுஞ்செய்தி மூலம் வரும் எச்சரிக்கைகள் "ஒவ்வொரு நாளும் அவர்கள் (இரானியப் பாதுகாப்புப் படைகள்) குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்புகிறார்கள், நாங்கள் வெளியே சென்றால் எங்களை மிகக் கடுமையாகக் கையாளுவோம் என்று எச்சரிக்கிறார்கள்" என்று சலார் கூறினார். "உங்களில் யாராவது வெளியே வந்து போராட்டம் நடத்தினால், 'உங்களை இஸ்ரேலியக் கூட்டாளிகளாகக் கருதுவோம்' என்று ஒரு செய்தி வந்தது" என அவர் குறிப்பிட்டார். கீழ்ப்படியாத எவரும் வலுக்கட்டாயமாக ஒடுக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதை அந்தச் செய்தியின் தொனி உணர்த்துவதாக அவர் கருதுகிறார். மக்கள் பொருளாதாரா ரீதியான அழுத்தங்களையும் எதிர்கொள்கின்றனர். "ஜனவரி மாதம் ஏற்கனவே கடினமாக இருந்தது" என்கிறார் பாபக். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் அதிகாரிகளால் இணையம் முடக்கப்பட்டமை போன்ற காரணங்களால் ஆண்டின் தொடக்கத்தில் பணிக்குச் செல்வது நிறைய பேருக்கு கடினமாக இருந்தது. "அரசு ஊழியர்கள் போன்ற மாதச் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர, பலரால் குளிர்காலத்தில் வருமானம் ஈட்ட முடியவில்லை. இது பல குடும்பங்களைப் பாதித்துள்ளது." பட மூலாதாரம்,supplied அதி உயர் தலைவரின் மரணம் அன்றாட ஆபத்துகள் மற்றும் பிரச்னைகளுக்கு மேலாக, இந்தப் போர் தங்களது நாட்டின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தத்தை குறிக்கும் என்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சனிக்கிழமையன்று நடந்த வான்வழித் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட பிறகு அவர்கள் அதுகுறித்து சிந்தித்து வருகின்றனர். "நாங்கள் முதலில் அதை நம்பவில்லை" என்று கூறிய காவே, "அந்தத் தருணம் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நான் எப்போதும் கற்பனை செய்திருந்தேன், ஆனால் அப்படி இருக்கவில்லை," என்றும் கூறினார். இதுகுறித்துப் பேசிய சலார், "ஒரு தனி நபரின் மாயையாலும் பைத்தியக்காரத்தனத்தாலும், எனது வாழ்நாளின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்டுகளும், என்னைப் போன்ற கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். ஆனால் அவர் மட்டும் ஒரே நொடியில் அகற்றப்பட்டுவிட்டார் என்ற எண்ணம் எனக்கு உண்மையான கோபத்தை ஏற்படுத்தியது." "அவரது மரணச் செய்தி இரவு 10:30-11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் உற்சாகக் குரல்களுடன் கூடிய ஆரவாரத்தைக் கேட்க முடிந்தது," என்று தெரிவித்தார். மேலும், "நான் அத்தகைய எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் சூழல் மிகவும் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்ததாக இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது" எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து நடந்து வரும் போர் மற்றும் இரானில் நிலவும் கடுமையான பாதுகாப்புச் சூழல் காரணமாக, காமனெயி மரணம் குறித்த பரவலான எதிர்வினையை கணிப்பது சாத்தியமில்லை. சில மக்கள் கொண்டாடுவதற்காகத் தெருக்களில் இறங்கினர், மற்றவர்கள் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட்ட பொது துக்க ஊர்வலங்களில் இணைந்தனர். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தெஹ்ரானின் மையப்பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதல்களுக்கு பின் அழிக்கப்பட்ட கட்டடங்களை பார்வையிடும் காவல்துறையினர் எதிர்காலம் குறித்த பார்வை இந்தப் போர் அவர்களுக்கோ, அவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது அவர்களது நாட்டிற்கோ எத்தகைய அர்த்தத்தைத் தரும் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. "எங்களால் முன்பு போல இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்ற சலார், "பலர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்" எனக் குறிப்பிட்டார். மேலும், இரானின் முன்னாள் அரச குடும்பத்துடைய மகனின் ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு, "வெளிநாடுகளில் இருப்பவர்கள், குறிப்பாக முடியாட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள், உண்மையில் நாங்கள் எதை அனுபவிக்கிறோம் என்பதை அறியவில்லை" என்று கூறிய அவர், "தாக்குதல்களை இன்னும் சரியாகத் தொடங்கவில்லை என்று டிரம்ப் கூறி வருகிறார். வேறு எதை அல்லது எப்படி தாக்க போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார். "நான் அடிக்கடி வெளியே செல்கிறேன். பக்கத்துக்கு வீட்டாருடனும் கடைக்காரர்களுடனும் பேசுகிறேன்," என்று கூறிய அவர், "எல்லாவற்றிற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் நம்புகிறார்கள். போர் நீண்டதாகவோ அல்லது ஆபத்தானதாகவோ மாறும் என்று அவர்கள் உண்மையில் கற்பனை செய்து பார்க்கவில்லை" என்கிறார். அதேபோல், "நாங்கள் நினைத்தது போல இந்தப் போர் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது என்று நான் உணர்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். "ஆனாலும், எனது நம்பிக்கை குறையவில்லை, சொல்லப்போனால், அது ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது" என்ற அவர், "ஒரு கடினமான அறுவை சிகிச்சையின் அபாயங்கள் மற்றும் வலியை முழுமையாக உணர்ந்து, அதைச் செய்து கொள்ளத் தீர்மானித்த ஒரு முதியவரைப் போல நான் உணர்கிறேன்" மேலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், "இந்த 'அறுவை சிகிச்சைக்குப்' பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் இதைச் செய்யாவிட்டால், நிச்சயமாக இதைவிட மோசமான ஒன்று நடந்திருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." "குறைந்தபட்சம் இந்த வழியில், வாழ்வதற்கும் எதிர்காலத்தை நோக்கிச் செல்வதற்கும் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பிபிசி பாரசீக சேவை என்பது பிபிசி நியூஸின் பாரசீக மொழிச் சேவையாகும். இது இரானிய அதிகாரிகளால் முடக்கப்பட்டாலும் அல்லது தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் - உலகம் முழுவதுமுள்ள 24 மில்லியன் மக்களால் பெரும்பான்மையாக இரானில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. 'ஒவ்வொரு நாளும் ஒரு மாதம் போல உள்ளது' - இரானியர்களின் பயமும் நம்பிக்கையும் என்ன?
  24. இலங்கை அருகே நிற்கும் ஈரான் கப்பல் பற்றி தி கார்டியன் வெளியிட்டுள்ள தகவல்கள். இது போர்கப்பல் அல்ல. ஆழ்கடல் கேபிள்களை பதிக்கும் கப்பல். கப்பல் இலங்கையின் territorial waters இனுள் நிற்கிறது. எஞ்சின் பழுது என கேப்டன் இலங்கையில் ஒரு துறைமுகத்தில் தரிக்க அனுமதி கோரியுள்ளார். என்ன முடிவு என ஜனாதிபதி+அமைச்சரவை கூடி ஆராய்கிறது. பிகு இதை இலங்கையில் கட்டிப்போட்டால் அதை இட்டு அமெரிக்கா பெரிதாக அலட்டி கொள்ளாது என நினைக்கிறேன். கடலில் பழுதடைந்த கப்பலில் உள்ள மாலுமிகளை பாதுகாக்கும் கடமை இலங்கைக்கு உள்ளது என்பதை அமெரிக்கா உட்பட அனைவரும் ஏற்பார்கள். இந்த கப்பலை அமெரிக்க நீர்மூழ்கியும் இலக்கு வைக்கவில்லை.
  25. நீங்கள் சொல்வது போல்... இப்போது பயணத்தை தொடர்ந்தால் கப்பலுக்கு எப்படியும் அடி விழும். இலங்கையில் நிற்க அனுமதி கொடுத்தால்... இலங்கைக்கு பிரச்சினை வரும். ஸ்ரீலங்கா எமக்கு எதிரான போரில்... அமெரிக்காவிடமும், ஈரானிடமும் மிகவும் கடமைப் பட்டுள்ளார்கள். என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்து இலங்கைக்கு அடி விழப் போகுதோ தெரியாது. 😂 இந்த வருச... நல்லூர் திருவிழாவுக்கு போக ஏலாது போல கிடக்கு. 🤣
  26. ஆணாகப் பிறந்ததெல்லாம் ......... படம் : சபாஷ் மீனா , நடனம் : சரோஜாதேவி & ஜெமினி சந்திரா . ......பாடியவர்கள் : பி . சுசிலா & கே . ஜமுனாராணி ........ இசை : T . G லிங்கப்பா ......! 😍
  27. இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம். இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
  28. இஸ்ரேல் & இரான் யுத்தத்தின் போக்கு பற்றி ரகசிய மாநாடு .......! 😂
  29. @Kadancha , நீங்கள் சமீபத்திய நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் போல தெரிகின்றது. ஏதாவது சில வகைகளில் ஆறுதல் அடைய முயற்சி செய்யுங்கள். இந்த தலைவர்கள் எவருமே நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை தொலைத்து இவர்களுக்காக துக்கம் அனுசரிக்கும் அளவுக்கு புனிதர்களோ அல்லது நல்ல மனிதர்களோ கிடையாது. நீங்கள் தொடர்ந்தும் தமிழில் எழுத முயற்சி செய்வது பாராட்டுக்குரிய ஒரு விடயம்............👍.
  30. இது ஒரு ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதல் .நிராயுதபாணிகளாக வந்த கப்பலைத்தாக்குவதும். பாதையில் போவோரை பெரிய வாகனங்களில் வந்து அடித்துக் கொல்வதும். கத்திக்குத்துத் தாக்குதல் செய்வதும் பெரிய வித்தியாசம் இல்லை.முஸ்லிம் செய்தால்பயங்கரவாதம் அமெரிக்கா செய்தால் யுத்தம் என்பது ஏற்புடையதல்ல. அமெரிக்கா ஈரானோடு யுத்தம் செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். அது யுத்தம். ஆனால் இது கோழைத்தனமான தாக்குதல். இனி ஈரானின் எப்படிப்பட்ட யுத்த நெறிமுறைகளை மீறிய தாக்குதல்களையும் இது நியாயப்படுத்தும். அது சரி ஐநா என்று ஒரு அமைப்பு இருந்ததே. ஒருவாரமாக பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது. செத்து விட்டதா?
  31. நல்ல விடயம்.👍 இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளை தடை செய்வதற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
  32. அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் நீர்க்குண்டு மூலம் ஈரானிய கப்பலை இலங்கை அருகில் மூழ்கடித்தது கிந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிகையாக எடுக்கலாமா?
  33. வாள் என்பது கையாள்வதற்கு ஏதுவாக நீண்டகூர்மையான உலோக அலகு கொண்ட ஒரு பழங்கால ஆயுதம் இது வெட்டுவதற்கும் குத்துவதற்கும் பயன்படுகிறது. இன்று அது அறிவியல் உலகம் கண்டுபிடித்த துப்பாக்கியையும் வென்றுள்ளது. பல நூற்றாண்டுகளாகப் போர்க்களங்களில் முக்கிய ஆயுதமாக இருந்த இதுதற்காலத்தில் வாள்வீச்சு என்ற ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. எம்ஜீஆர் அவர்கள் ரசிகர்களிடம் பிரபலம் அடைவதற்கு இந்த வாள்வீச்சும் ஒரு காரணமாக இருந்துள்ளது.🤺

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.