Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89361
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    47139
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34065
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    15850
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/13/26 in all areas

  1. மிக அண்மையில் மகளின் குழு ஆளில்லாத எரிபொருள் நிரப்பும் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார்கள். அதன் காணொளியைத் தேடினேன் காணவில்லை.
  2. ஈரானை ஆட்சிமாற்ற போய் மத்திய கிழக்கையும் கை விடுவதோ தெரியவில்லை. மக்களின் கிளர்ச்சியைப் பார்த்து தலைமையை அழித்துவிட்டால் ஆட்சி மாறிவிடும் என்று போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.
  3. வட பகுதியில் போதை பிரச்சனைகள் வர முன்பே இப்படி குடும்பத்துக்குள்ளான பிரச்சனைகளும்,வெட்டுக்கொத்துகளும்,கொலைகளும் நடந்துள்ளன. பிள்ளைகள் திருமணம் செய்து தனிக்குடித்தனம் போன பின்...... அவர்களாச்சு அவர்கள் குடும்பமாச்சு என தாய் தகப்பன் வாயை மூடிக்கொண்டு இருக்கணும். பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைக்குள் தாய் தகப்பன் மூக்கை நுழைத்து நாட்டாண்மை பண்ணக்கூடாது.
  4. அதை ஈரான்காரன் தான் சொல்ல வேண்டும். 😂 போரை தொடங்கியது... அமெரிக்காவாக இருக்கலாம்... அதை முடித்து வைப்பதை ஈரான்தான் முடிவு செய்யும் என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார்கள். சந்தடி சாக்கில்... "ட்றம்பு", நைசாக நழுவ பார்க்கிறான். 🤣 பாவம்... இஸ்ரேல், ஈரானிடம் சணல் அடி வாங்கிக் கொண்டு இருக்குது. அமெரிக்கன் தரைப் படையை அனுப்புறது என்று, "பீலா" விட்டுட்டு, "எஸ்கேப்" ஆகிறான். அவனை விடாதீங்க.
  5. போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்! மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது. அமெரிக்கா ஏற்கனவே போரில் வெற்றி பெற்றுவிட்டது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றை மீறி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரான் எச்சரித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு வான்வழித் தாக்குதல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தப் போர், இதுவரை சுமார் 2,000 பேரைக் கொன்றுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும் போக்குவரத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளதுடன், 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எரிபொருள் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க மூலோபாய எண்ணெய் இருப்புக்களை சாதனை அளவில் வெளியிடுவதற்கான திட்டங்களைத் தூண்டியுள்ளது. இதனிடைடேய அண்மைய மோதலினால் 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள்/குழந்தைகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியம் (UNICEF), தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக கென்டக்கியில் புதன்கிழமை (12) நடந்த பிரச்சார பாணி பேரணியில் டொனால் ட்ரம்ப், அமெரிக்கா போரில் வெற்றி பெற்றதாக கூறினார். வாரத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு சுமார் $120 ஆக உயர்ந்து பின்னர் $90 ஆக நிலைபெற்ற எண்ணெய் விலை, புதன்கிழமை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது. வால் ஸ்ட்ரீட்டின் முக்கிய பங்கு குறியீடுகள் சரிந்தன, ஆசியாவில் பங்குகளும் வீழ்ச்சி கண்டன. இவ்வாறான நிலையில் ஈரான் நீண்டகால பொருளாதார அதிர்ச்சியை ஏற்படுத்த விரும்புவதாக தெளிவுபடுத்தியுள்ளது. ஈரானின் இராணுவ கட்டளையின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை அமெரிக்காவை நோக்கி, பீப்பாய்க்கு $200க்கு எண்ணெய் வாங்க உலகம் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் எண்ணெய் விலை எமது பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தது, அதை நீங்கள் நிலைகுலைத்துவிட்டீர்கள் என்று கூறினார். ஈரானிய வெடிபொருட்கள் நிறைந்த படகுகள் ஈராக்கிய நீரில் இரண்டு எரிபொருள் டேங்கர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது. வளைகுடா நீரில் மூன்று வணிகக் கப்பல்களைத் தாக்கிய பின்னர் அவை தீப்பிடித்து எரிந்தன. இதில், ஒரு பணியாளர் கொல்லப்பட்டதாக துறைமுக அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து நிறுவனங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்தன. இது தவிர ஈரான் பஹ்ரைனின் முஹாரக்கில் உள்ள ஒரு நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டிகளையும் குறிவைத்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், முக்கிய எண்ணெய் நுகர் நாடுகளைக் கொண்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம், புதன்கிழமை, 1970 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மோசமான எண்ணெய் அதிர்ச்சிகளில் ஒன்றைத் தணிக்க, உலகளாவிய மூலோபாய இருப்புக்களில் இருந்து 400 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க பரிந்துரைத்தது – இது வரலாற்றில் மிகப்பெரிய தலையீடு ஆகும். இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா தனது மூலோபாய பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை விடுவிப்பதாகக் கூறியுள்ளது. திட்டமிடப்பட்ட வெளியேற்ற விகிதங்களின் அடிப்படையில் இது வழங்க சுமார் 120 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1468065
  6. மேற்கின் கதை முடிந்தது. எல்லாரும் பெட்டி படுக்கையோடு ஈரான், ரஸ்யா பக்கம் போங்கோ😂. #வெளிக்கிடடி விளாடிவாஸ்டொக்குக்கு😂
  7. தமிழக கட்சிப் பிரமுகர்களில் எனக்கு விளங்காத விடயம்: கொள்கையை அடிக்கடி மாற்றிக் கொள்பவர்களுக்கு தவறாமல் இணை/துணை கொ.ப.செ பதவி கொடுத்து விடுகிறார்கள்! உடுப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒருவர் "மொடலாக" வருவது போல இதுவும் ஒரு மெக்கானிசம் போல😂!
  8. உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் 13 Mar, 2026 | 01:32 PM நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர். மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம். இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள். இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம். நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240871
  9. பால் நிலவு நேரம்.. ( இனி அந்த கால கிளுகிளுப்பான பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படும் ) படம் : அன்பு ரோசா ( 1975 ) இசை: சங்கர் - கணேசு வரிகள்:கண்ணதாசன் பாடியோர்: SPB & P சுசீலா
  10. ஈரான் ஹோர்மூஸ் கடல்வழி பாதையில் கண்ணி வெடிகள் வைத்தால் , ஈரான் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அழிவை எதிர்கொள்ளும் : ட்ரம்ப் ! அதாவது அணுகுண்டு தாக்குதல் கூட நடத்துவோம் என்று மறைமுகமாக சொல்றார். அதுசரி , ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்தினீங்க? ட்ரம்ப்: அது வந்து அவங்க அணு ஆயுதம் செய்யுறாங்க . அதனால் சூழல் மாசடைந்து உலகம் பாதிக்கப்படும் அதுதான். இந்த உலகம் விசித்திரமானது ! இந்த ஐ.நா சபையில் சிறுவர்களுக்கு என்று ஏதோ ஒரு பிரிவு இருக்குதே , அது ஈரானில் ஒரு பாடசாலையில் அத்தனை மாணவிகள் உயிரிழந்ததுக்கு ஏதாவது கருத்து சொல்லிச்சா ? இந்த உலகம் விசித்திரமானது! அமெரிக்காவை நம்பியதற்கு மத்தியகிழக்கு நாடுகள் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டாலும் , அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது கூறினார்களா ? அவர்கள் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க ரெடி . ஆனால் ஈரான் முன்னேறி விடக்கூடாது . காரணம் மத்திய கிழக்கில் புத்தி ஜீவிகளை அதிகம் கொண்ட நாடு ஈரான். குழப்பங்கள் அதிகம் ஏற்படாமல் விட்டால் , ஈரான் அறிவியலில் தங்களை வென்று விடுவார்கள் என்ற பயம் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு. அப்படி ஈரான் முன்னேற கூடாது என்று ஏன் நினைக்கிறார் என்பதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதை சொன்னால் இந்த பதிவை மடை மாற்றி விடுவார்கள். இப்போதைய நிலையில் நாம் தனிப்பட்ட நபர்களாக நம்மை பார்த்துக்கொள்வதும் , பெற்றோல் புல் டேங் அடித்து வைப்பதும் , சாப்பாடு தட்டுப்பாடு வந்தால் சமாளிக்கூடிய அளவு ஏற்பாடு செய்து வைப்பதுமே செய்யக்கூடியவை. செய்திகள் வாசிக்கும் , தொகுக்கும் ஆர்வம் காரணமாக இரு பக்க செய்திகளை ஆராய்ந்து போலி செய்திகளை ஒதுக்கி உண்மையான செய்திகளை எழுதினால் சண்டைக்கு வருகிறார்கள். நேற்று அப்படி சண்டை பிடித்த ஏராளமானோரை ப்ளொக் பண்ணினேன். அதற்கு முன் அவர்களின் புரோபைலை பார்த்தால் அநேகமானோர் மத்தியகிழக்கு நாட்டில் வேலை செய்வோர். ஈரான் அடிக்கும் குண்டு அவர்கள் தலைமீது விழுந்து விடுமோ என்று ஊரில் உள்ள அவர்கள் வீட்டில் குடும்பத்தார் பயந்துகொண்டு இருப்பார்கள். அவர்களால் வெளிப்படையாக அவர்கள் வாழும் நாட்டை திட்ட முடியாது. அந்த ஆதங்கத்தை என்னைப் போன்றோரை திட்டி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த யுத்தத்தால் , யாராவது வந்து நான் வசிக்கும் இடத்தில் குண்டு போட்டால் மட்டுமே எனக்கு பாதிப்பு வரும். மற்றப்படி எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. பொருட்கள் விலை உயர்வோ , பெற்றோல் விலை உயர்வோ என்னைப் பாதிக்கப்போவதில்லை. ஆனால் சின்ன விலை உயர்வைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத பெருமளவு மக்கள் தொகை உள்ளது. உலகம் பூராக அப்படியொரு மக்கள் கூட்டம் உள்ளது. அந்த வீட்டு பிள்ளைகளை நினைத்தால்தான் பாவம். யுத்தம் காரணமாக அமெரிக்கா பிள்ளை இறக்காது. இஸ்ரேல் மீது எத்தனை குண்டு போட்டாலும் , அந்த நாட்டு பிள்ளைகள் நிலக்கீழ் அறையில் பாதுகாப்பாக இருக்கும். இந்த யுத்தத்தில் ஈரான் எவ்வளவு பதிலடி கொடுத்தாலும் இஸ்ரேலில் ஒரு குழந்தையாவது இறந்ததா ? ஆனால் ஈரானில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளாவது இறந்திருக்கும். காசாவில் எத்தனை குழந்தைகள் இறந்தன? ஒரு காலத்தில் யுத்தம் என்றால் யுத்தப் பிரகடனம் செய்து குழந்தைகள் , முதியோர்களை எல்லாம் பாதுகாப்பாக இருக்க ஏற்பாடு செய்துதான் யுத்தம் நடக்கும்..அரச காலத்தில் இருந்த அந்த நாகரீகம் கூட இப்போது இல்லை. இதையெல்லாம் நாம் மாற்ற முடியாது. உலகத்தின் நியதி இதுதான். அமெரிக்கா அடி வாங்குது , இஸ்ரேல் அடிவாங்குது என்று சந்தோசப்பட என்னால் முடியாததுக்கு காரணம் அதுதான். மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் தாக்குதலால் வந்த இழப்பு அந்த நாட்டு தலைவர்கள் , அரசர்களின் பொக்கட் மணி. அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் செலவு என்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள முதல் 10 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 2200 பில்லியன். அதாவது அமெரிக்காவின் பத்து பணக்காரர்களின் பொருளாதார பலம் இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 25 மடங்கு அதிகம். இந்த நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை திருப்பி அடிக்க பயமென்றால் ஆட்சியை என்னிடம் தாருங்கள் என்று சஜித் காமெடி பண்ணிட்டு இருக்கார். நாமும் அமெரிக்காவுக்கு ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் நட்டம் என்று சந்தோசப் பட்டுடுட்டு இருக்கம். யுத்தம் முடிய ட்ரம்ப் வந்து இலங்கை பொருட்களுக்கு இறக்குமதி வரியை கூட்டப் போறேன் என்றால் , உங்கட வரி காசில் இலங்கை அரசில் இருந்து கொஞ்சம் பேர் போய் ட்ரம்பின் காலில்தான் விழனும் -whatsapp-
  11. மணி. இதைத்தான் கழுத்து பிடி என்பது. இதைத்தான் சொல்வது இருந்ததையும் கெடுத்தானாம் ஆண்டி என்று. ஏற்கனவே கொரோனா,உக்ரேன் போர் என்பவனவற்றால் பாரிய சறுக்கல்.இப்போது இது புதிய பிரச்சனை. இந்த மேற்குலகு 50 வருடங்களுக்கு முன்னர் தாம் இருந்த நினைப்பில் இன்றும் இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அடிமையாக்கப்பட்டவர்களோ அசுர வேகத்தில் வளர்ந்து தம்மை எதிர்ப்பவர்களை திருப்பி தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈரானின் பூகோளம் நன்றாகவே அவர்களுக்கு கை கொடுக்கின்றது. சிந்திக்க தவறியது அவசர புத்தி. இன்றைய அவசர வெற்றி நாளைய அழிவிற்கு சமம். இதுதான் இன்றைய உலகில் நடக்கின்றது.
  12. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இன்றைய அரசியல் உலகில் உண்மைகளையும், தோல்விகளையும் வெளிப்படையாக கூறும் போது அதியுச்ச கோபம் வருகின்றது. Jeffrey Epstein பற்றிய பேச்சுக்களும் குற்றச்சாட்டுகளும் அது சம்பந்தப்பட்டோரின் அறிக்கைகள் வெளி வரும்போதே இல்லாதது பொல்லாதது நடக்கப்போகின்றது என நினைத்திருந்தேன். ஒரு கோட்டுக்கு முன் இன்னொரு பெரிய கோட்டை கீறிவிடும் தந்திரம் அவர்களுக்கே உரியது.
  13. பொய் சொல்வதில் தம்பருக்கு நிகர் தம்பர்தான்.போரின் முதல்நாளே ஈரானின் தலைவரைப் போட்டவுடன் போர் முடியும் என்று சம்பிய அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 நாட்களாக தலைவன் இல்லாத நாட்டை அடக்க முடியாமல் படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்காவை நம்பிய அரபுநாடுகள் தேவையில்லாமல் அடிவாங்குகின்றன.இஸ்ரேலும் அடிவாங்குவதும் அடி கொடுப்பதுமாக இருக்கிறது.இரானுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினை .அவர்கள் எந்த எல்லை வரையும் போவார்கள். அமெரிக்கா இந்தப் பேரில் பெரிய பொருளாதார இழப்பைச் சந்ததித்ததுடன் உக்கிரைனிடம் உதவி கேட்கும் நிலைக்குப் போய்விட்டது. எண்ணை விலை அப்பொழுது உச்சத்துக்குப் போய்விட்டது. இன்னும் போர்நீடித்தால் கொரோனா போன்ற முடக்கநிலை ஏற்பட வாய்ப்புண்டு. எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக விநியோகச்சங்கிலி தாறுமாறாகப் பாதிக்கப்படப் போகின்றது.புட்டினும. இப்பொழுது கொடுக்கின்ற எண்ணெய் வழங்கலை தடுக்கப் போவதாக வேறு மிரட்டுகிறார்.. தம்பர் வெனிசுலாவைக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் அவருக்கு எண்ணெய் பற்றிக் கவலை இல்லை.ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும். மக்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை வரும்.பொருட்களின் விலை கட்டுப்பாடுகளின்றி அதிகரிக்கும்.சீனாவுக்கு இது பெரிய பாதிப்பைக் கொடுக்கலாம். சீனா அதற்காக இந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்கான நகர்வுகளைச் செய்ய வேண்டி வரலாம். அதனை ஈரானுக்குடாகவும் செய்ய முயற்சிக்கலாம். போர் அமெரிக்கா எதிர்பார்த்த மாதிரி போகவில்லை. அமெரிக்கா அணுக்குண்டை வீசினாலும் ஆர்சரிப்படுவதற்கில்லை.இப்போதைக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.
  14. நானும்.... சீனா, தனது ஆயுதங்களை இஸ்ரேலில் பரீட்சித்துப் பார்க்கிறது என்றே நினைக்கின்றேன். 48 மணித்தியாலத்தில் போர் முடியும் என்று கணித்து, களத்தில் குதித்தவர்களுக்கு... இரண்டு கிழமை ஆகியும், இழுபறியில் நிற்பது அதிர்ச்சியாக உள்ளது.
  15. இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து நீக்காத வரை ஓயமாட்டோம் என்ற அறிவிக்க பட்ட கொள்கையில் இருந்து, ஈரான், அதன் அல்லகைகளான ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மாறினால் - சாத்தியம்.
  16. உடையார்ரை திருவிழாவில ஆரோ ஒருத்தன் வெடி கொழுத்தி வாணம் விட்டானாம் எண்ட மாதிரி.....அமெரிக்க-ஈரான் திருவிழாவில சீனா புகுந்து விளையாடுது போல கிடக்கு.....சீனாவும் தன்ர விளையாட்டு சாமான் எல்லாத்தையும் ரெஸ்ற் பண்ணி பாக்குது போல.....🤣
  17. இனிய காலை வணக்கம்.🙏 புட்டின் அருமை தெரியாதவர்களுக்கு சம்பலின் அருமையும் தெரியாது. 😎
  18. தம்பருக்கு மூக்கை உடைக்கத்தான் வேண்டும்… ஆனால் தம்பரும் அமெரிக்க சண்டித்தனமும், தடிமன் மாதிரி…கொஞ்ச நாளில மாறிடும். பிறகு வரும் போகும் ஆனால் உயிரை எடுக்காது. ஆனால் அடிப்படைவாத முல்லாக்கள் கான்சர் மாதிரி…வெட்டா விட்டால் உயிராபத்து. கூடவே இவர்கள் பிடியில் இருந்து விடுபட அடிக்கடி போராடி, மிருகதனமாக நசுக்கப்படும் ஈரானியர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே இதில் முல்லாக்கள் தோற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
  19. தம்பரின் உலகு தனி உலகு… அங்கே கச்சா எண்ணை பரலுக்கு 40 டொலர் போகிறது😂 தெஹ்ரானில் சிங்க கொடி பறக்கிறது…😂 தம்பருக்கு நோபல் பரிசை கமிட்டி அறிவிக்கிறது😂 ஏதோ இஸ்ரேல் காரன் கூட போயிருக்கிறான் எண்டது மட்டும்தான் ஒரே நம்பிக்கை. இல்லாட்டில் தம்பரும், வான்சும், ஹெக்செத்தும், ரூபியோவும் சேர்ந்து…அமெரிக்காவின் கோவணத்தையே முல்லாக்கள் கையில் கொடுத்து விடுவார்கள் 😂
  20. தேசிய இலங்கையில் ஏன் பிரிவினை ?தெற்கின் விளைச்சலை வடக்கு தராமல் விடுவார்களா? 🤣 என்னப்பா யாழ்ப்பாணம் தனிநாடா? அதற்கு ஒர் தூதுவரா....சொல்லவே இல்லை🤣
  21. ஐக்கிய நாடுகள் சபை… எப்போதும், அமெரிக்கா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பக்கமே நிற்கும். இந்தச் சபை இதுவரை… பாதிக்கப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கியதே இல்லை. இதனை இழுத்து மூடி விடுவது நல்லது. 😂
  22. காளான் மிளகு வறுவல் . ...... மாமிச கறி சுவையை அடிச்சு தூக்கிடும் .......! 😂
  23. இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!
  24. அவசரத்திற்கு கறிகாய் இல்லையா ..? இதோ ..
  25. sSdtornoepag1ga686f crh,1eh438hhimtf1 :7uff4r7v817i2uég0186l · " வதந்தி "....ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். 'திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.. காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான்.. இரவில் வீடு திரும்புகிறான்.. ஒரு வேளை அவன் திருடனாக இருப்பானோ' என நினைத்தார். இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், 'அவன் அப்பாவி' அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்".. ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. 'நான் என்ன திருடனா' என்னைப் போய் கைது செய்து விட்டார்களே.. எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன் முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன் அவ்வளவு தான் ". டிரைவரோ, போலீஸால் தான் அலைக் கழிக்கப்பட்டது, அந்த அவமானத்தால் மனது பாதித்தது பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான். நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’’ என்றார். அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"? "ஆமாம் ஐயா"... "நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்.. அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’. "அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும் அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?" "முடியாதில்லையா? அப்படித் தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார். பகிர்வு பதிவு. #likecommentsharefollowsupport.....!
  26. சுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் தலைநகர் பெர்னில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க்கின் மேற்கு வலயத்தில் சுமார் 5,000 மக்கள் வசிக்கும் கெர்சர்ஸின் மையத்திற்கு அருகிலுள்ள வீதியில் இடம்பெற்ற 6 பேர் உயிரிழந்ததுடள் 5 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரில், யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதி அஞ்சலி செலுத்தினர் இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. IBC Tamilசுவிட்சர்லாந்தில் பேருந்து தீ விபத்து : யாழ் இளைஞன் பரிதா...சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தக...#################### ################# சுவிற்சர்லாந்தின் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இணுவிலை பூர்வீகமாககொண்ட இளைஞர் தினேஸ் கனகரத்தினம் (தவராசா) சாவடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்! 😥 சுவிஸ் காவற்துறை தரப்பினால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை. இது உறவுகளினூடாக கிடைத்த தகவல். Inuvaijur Mayuran வாழ வேண்டிய இள வயது. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  27. தனக்கு தீ மூட்ட முடிவு எடுத்த இவர் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு சென்றோ அல்லது றோட்டிலியோ தனக்கு தானே தீ மூட்டிக்கொள்ள வேண்டியது தானே சாக்குகளை தன்னுடன் தூக்கி கொண்டு பஸ்சில் ஏறினாராம்
  28. இவரது மரண அறிவித்தல் லங்காசிறியிலும் குடும்பத்தினரால் பகிரப்பட்டுள்து. சாதரணமாக நடந்த ஏதோ விபத்தாக இருக்கலாம் என்று நினைத்தேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.