Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points89361Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்7Points5648Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points20141Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்6Points14737Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/23/26 in all areas
-
அப்பிள்போன் வேணும் தம்பி….
3 pointsபோன தடவை கேட்க மறந்திட்டன்… இப்ப இது அவசியமாய் இருக்கு.. இது இல்லாமல் இங்கு வாழுறதே கஸ்டம் இல்லையென்று சொல்லிவிடாதே.. மாடு .வளர்த்து ..பால் வித்த காலம் போயிட்டுது பாலுக்கு இப்ப சனம் பூட் சிற்றிக்கு போகுது பகுதிநேர உழைப்பொன்று தேடப் போறன் பார்த்து நல்ல போனா அனுப்பிவிடு… ஆடு வளர்த்து கிடாய் வித்த காலம் போயிட்டுது ஆரிப்ப ஆடடித்து பங்கு போடுகினம் ஆட்களெல்லாம் இப்ப மட்டன் திருவிழாவுக்கு போகினம் ஆரெட்டையென்றாலும் ஒரு போன் கொடுத்துவிடு.. தோட்டத்திலை கத்தரி வெண்டி போட்டாலும் போயிலையை நட்டாலும் விலை போகாதாம் கஞ்சாவும் ..குடுவும் அடிக்கிற வாய்க்கு இவை ஏன் அப்பிள் நல்லதாம் அதைத்தான் அனுப்பிவிடு மானாண்டிச் சந்தையில்..மாலை நேரத்தில் பாய் பெட்டி இழைத்து வித்த காலமும் போச்சு பாயையும் பெட்டியையும் இப்ப ஆர் தேடிகினம் பார்சலில் என்றாலும் போனை அனுப்பிவிடு அவசரம் ஆச்சிக்கு ஏன் இப்ப அப்பிள் போனென்று கேட்கிறாய் ஆச்சி டிக் –ரொக் போடப்போறன் ஆரெட்டை பழகப் போறன் என்று நினைப்பாய் அயலட்டையெல்லாம் உதுதான் தொழில் ஆயிரக்கணக்கில் காசுவருதாம்.. ஆச்சியின் அறிவுக்கும் ..இந்த குரலுக்கும் ஆயிரம் வியூஸ் வரும் … வயதுதான் போட்டுது அதுக்கும் வழியிருக்கு…மேக்கப் படிப்பது.. அப்பன் உன்னை நம்பி அயலட்டையெல்லாம் சொல்லிப்போட்டன் அவையும் ஆச்சியின் ரிக்-ரொக் பார்க்க ரெடி அப்பிள் போன்தான்..வேணும்தம்பி அதை மறக்காமல் அனுப்பிவிடு…3 points
-
அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
3 pointsஅவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞர் இல்லை வெறும் பாடலாசிரியர், அவருக்கு ஞானபீட விருது கொடுத்தது தவறு என ஆசான் ஜெயமோகனும், இன்னும் பல படைப்பாளிகளும் முழங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக சில படைப்பாளிகளும், இலக்கியம் என்றால் என்னவென்று தெரிந்த அல்லது தெரியவே தெரியாத கற்றுக்குட்டிகளும் கம்புசுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! கவிஞர் வைரமுத்து காம உணர்வுகளை அழகியலோடு, சில நேரங்களில் அதையும் தாண்டி பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரணம் ஒன்று: ஜீன்ஸ் படத்தில் வரும் அன்பே அன்பே பாடலில்.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி ஆசான் ஜெயமோகனும் தனது படைப்புக்களில் பெண்களை, காம உணர்வுகளை, கலவியை சமரசம் எதுவுமின்றி எழுதி வாசிப்பவர்களை பிரமிக்கவைத்துள்ளார்! ஆசானின் வெண்முரசு காவிய நாவல் தொடர்களைப் பல வருடங்களாகப் படித்து வருகின்றேன் (26 இல் இன்னும் நான்கு நாவல்கள் படிக்க உள்ளன!). படிக்கும்போது குறிப்புக்கள் எடுப்பது வழக்கம். 😀 அவற்றில் காமரசம் ததும்பும் வரிகளை ஒன்றாக்கி AI மூலம் பாடல் ஒன்றை உருவாக்க கடந்த சில நாட்களாக முயற்சித்தேன்😍. தமிழில் லகர, ளகர, ழகர, ந,ன, ண போன்ற இடையினம், மெல்லினங்களில் AI தடுமாறியதால் எதிர்பார்த்த மாதிரி பாடலைக் கொண்டுவருவது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பொதுவான தமிழ்ச் சொற்களைக் கொண்டு பாடல் உருவாக்குவது இலகு என்று தெரிந்தது. AI எப்படி வேலை செய்யும் என்பது AI நிபுணர்களுக்கே தெரியாது என்பதால் எப்படியான இசை வாத்தியங்களை அது தேர்வு செய்யும், எப்படிப் பாடல் அமைக்கும் என்பதை அறியமுடியாது. கிடைப்பதில் விருப்பமானதுடன் திருப்தியடையவேண்டியதுதான். அதிகம் பொருத்தமான பாடல்களை உருவாக்க வேண்டும் என்றால் இலவசமான limited model களை விட்டுவிட்டு கட்டணம் செலுத்தி தரமான model களை, AI agent களைப் பாவிக்கலாம் என்று நினைக்கின்றேன். எனக்கு அப்படி எல்லாம் கட்டணம் செலுத்த மனமில்லை! சரி எப்படிப் பாடலை உருவாக்கினேன் என்று கீழே விளங்கப்படுத்துகின்றேன். முதலில் AI tools களைப் பார்ப்போம். பாடல் வரிகளை உருவாக்க பொருத்தமான AI tools: Claude AI (sonnet 4.6 extended) - இலவசம். கட்டணம் செலுத்தி இன்னும் நல்ல tools ஐ பாவிக்கலாம் Gemini AI Pro: இலவசம் ஆனால் ஒரு நாளில் பல தடவைகள் பாவிக்கமுடியாது. கட்டண version உள்ளன. பாடல் உருவாக்க பொருத்தமான AI Tools: Suno AI: பாடல்களை இலகுவாக உருவாக்கலாம். வேறு சில AI tools உள்ளன ஆனால் நேரம் விரயமானதுதான் மிச்சம். படங்களை உருவாக்க: Gemini AI pro, Copilot படங்களில் இருந்து காணொளிகளை உருவாக்க: Grok, Meta AI, Runway போன்றவற்றை 5 செக்கன் காணொளிகளை உருவாக்கப் பாவிக்கலாம். பாடல்வரிகளை உருவாக்குதல்: நான் Claude, Gemini Pro இரண்டையும் பாவித்தாலும் Gemini Pro தான் பிடித்திருந்தது. எனது கேள்விக்குப் பின்னர் வெண்முரசு நாவல்களில் இருந்து எடுத்த குறிப்புக்களை அப்படியே ஒட்டிவிட்டேன்! கொடுத்த Prompt: Suno AI இல் ஒரு பாடல் கீழே உள்ள குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கவேண்டும். அழகிய இளம்பெண்ணைக் காணும் இளைஞன் ஒருவனின் ததும்பும் காம உணர்வுகளை வெளிப்படுத்தும் நான்கு நிமிடங்கள் வரக்கூடிய பாடலாக உருவாக்க உதவி தேவை. Suno AI இல் உணர்வு பூர்வமாகவும், சரியான தமிழ் உச்சரிப்புடனும் பாடலை உருவாக்க பொருத்தமான பாடல் வரிகளையும், தேவையான tags களையும், பாடலுக்குப் பொருத்தமான Styles களையும் தரமுடியுமா? அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய, வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணலலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. நீரைப்பிளந்து எழுந்து கரைநோக்கிச் சென்ற ஒரு செந்நிறப்பேரழகியைக் கண்டான். அவள் உடல் தழலாக இருந்தது. கூந்தல் அதன் புகையென நெளிந்தது. செந்தாமரை இதழிலென நீர்த்துளிகள் ஆடையற்ற அவள் உடலில் ஒளியுடன் உருண்டு வழிந்தன. மலர் சுமந்த பனித்துளிகள் போல முலைகள் ததும்பின. இரையை இறுக்கும் மலைப்பாம்பு போல அசைந்தது இடை. நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத்தசைகள். செம்பொற்தாலத்தில் ஏந்திய அகல்விளக்கின் சுடரென அல்குலின் செந்நிற மென்மயிர். வைரத்தால் செதுக்கப்பட்ட பெண்ணுடல் Gemini AI தந்த பாடல்வரிகள். சில இடங்களில் பொருத்தமான சொற்களை நான் மாற்றினேன்.. கீழே உள்ளது பிந்திய வரைபு.. [Intro] [Seductive Flute with Deep Bass] [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 1] நீலப் பட்டாடை இடையில் மெல்ல நழுவ... வெண்யானை மத்தகம் என விரிந்தது அவள் இடை...! மலர்தார் தொடைகள் நடுவே மான் குளம்பு சிமிட்டக் கண்டேன்...! என் மூச்சே உறைந்தது ஒரு கணம்..! [Build Up] என் நெஞ்சினிலே... புரவிக் குளம்பு ஓசை! [Pre-Chorus] செந்தாமரை இதழில் பனித் துளிகள் போலே... ஆடை இல்லா மேனியில் நீர்த் தாரை உருள... தழல் உடலோடு அவள் என்னை நோக்க... பனியாகக் கரைந்து போனேன்... அந்த அனலின் சூட்டிலே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Verse 2] மூச்சில் மார்புகள் மெல்ல மெல்ல ஏறி இறங்க… மலர் சுமந்த பனித்துளிகள் போல அவை ததும்ப…! மலர்முலை கண்களில் மென் மயிர்கள் சிலிர்க்க….! வெண்மேனி விலாவினிலே பாலை மணல் அலை ஆகுதே…! [Verse 3] இரையினை இறுக்கும் பாம்பென நெளிந்தது இடை….! நடையின் அசைவில் இறுகி நெகிழ்ந்தன தொடைத் தசைகள்…! செம்பொன் தட்டில் தவழும் விளக்கின் சுடரென… செந்நிற மென் மயிர் தூவல் என் தேகத்தை அனலாய் சுடுதே….! [Bridge] அவள் விழிகள் என்னை நோக்கி அகல விரிந்தன…! என் ஆண்மை சிறகு விரித்தது…! காம நெருப்பின் கலசமே…! என் தாகம் தீர்க்கும் நதியே…! உன் தீண்டலில் உயிர்த்தெழ ஏங்கித் துடிக்கின்றேனே...! [Chorus] அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை... நீரைப் பிளந்து எழுந்த செந்நிறப் பேரழகி...! உடல் தழலாக... கூந்தல் புகையென நெளிய... என் உள்ளம் எரிக்கும் காதல் தீ அழகி...! [Outro] தழல் உடலே...! ஆஹா...! பனித்துளியே...! ம்ம்ம்...! வைரம் தகிக்கும் கனலே...! என் உயிரே...! உன் விரிந்த விழிகளில்.. நான் வீழ்ந்தேனே...! [Fade out: Sensuous flute and echoing vocals] Styles: Passionate Male Tenor Vocal, Sensual Tamil Cinematic Pop, Seductive Groove, Deep Bass, Traditional Indian Percussion With Modern Synth, Carnatic-Inspired Strings, Tabla Rhythm, Flute Melody, Romantic, Emotional Intense Erotic Vibe, A.R. Rahman Style Fusion, Young Expressive Voice, Accurate Tamil Diction. Pronounce Tamil Words Clearly Without Mistakes, Native Tamil Phonetics. No Accidental Hindi/English Accent In Tamil Lyrics பாடலை உருவாக்குதல்: Suno AI இல் Simple மற்றும் Custom என்று இரு தெரிவுகள் உள்ளன. Custom தெரிவுக்குள் உள்ள Lyrics பெட்டிக்குள் Gemini Pro தந்த பாடல்வரிகளை (tags உடன்) ஒட்டவேண்டும். சரியான தமிழ் உச்சரிப்பு வர நான் சில இடங்களில்: - (hyphen) - syllables ஐ சரியாகப் பிரிக்க , காற்புள்ளி - இடைவெளி விட ! ஆச்சரியக்குறி - நிறுத்த … (ellipses) - நீட்டிப் பாட பாவித்திருந்தேன். இவற்றை பாடல்களின் Suno இணைப்புக்களில் பார்க்கலாம். Styles பெட்டிக்குள் Gemini AI தந்த styles களை அப்படியே ஒட்டவேண்டும். பின்னர் Advanced Options இல்: Style Influence: 100 80 க்கு மேல் கொடுத்தால் கேட்ட style களுக்கு கிட்டவரும் Weirdness: 0 10க்கு கீழ் கொடுத்தால் AI வித்தியாசமாக முயற்சி செய்வதைக் குறைக்கும் எனத் தெரிவு செய்தேன். ஆனால் இவற்றை இப்படியான extreme ஆக தெரிவு செய்வதும் நல்லதல்ல. பாடலுக்கு ஒரு தலைப்பையும் Titles இல் கொடுக்கலாம். இரண்டு பாடல்களை உருவாக்கினேன். அவற்றை தரவிறக்கி Files இல் சேமித்த பின்னர், Copilot AI ஐப் பாவித்து ஒரு பொருத்தமான படத்தை உருவாக்கினேன். படத்திற்கான prompt ஐ ஆசானின் வரிகளை Claude AI இல் கொடுத்துக் கேட்டிருந்தேன்😁 Prompt: Create an image of A Tamil girl, a red enchantress rising from the water. Her body like fire, her hair coiling like smoke, a fiery beauty burning with love. A blue silk saree gently slipping from her waist, revealing her hips like a white elephant’s forehead. Water droplets like dewdrops on red lotus petals, streams of water rolling on her body. Her fiery body gazes at me, and I melt like snow in the heat of that fire. Her reddish black hair floats in the breeze கிடைத்த படத்தை Meta AI, Runaway AI ஐப் பாவித்து 5 செக்கன்கள் வீடியோ உருவாக்கி, அதையே loop ஆக ஓடவிட்டு iMovies இல் காணொளிகளைக் தயாரித்தேன். கீழே உள்ள பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதைச் சொல்லுங்கள்😊 ஒன்று 4 நிமிடங்கள் 19 செக்கன்கள் Suno: https://suno.com/s/PsdURePRy1Ahzj8b இரண்டு: 6 நிமிடன்கள் 28 செக்கன்கள் Suno: https://suno.com/s/GohzmvqVFQbeBnvc3 points
-
செய்தியாய் சொல்லுங்கடா…
3 pointsஉண்மை பொய் தேவையில்லை உன் செய்தியில்… உண்மையை உரக்கச் சொல்ல தேவையில்லை பொய் செய்திதானென்று பயம் தேவையில்லை கண்ணசைவும் கையசைவும் இருந்திட்டால் உலகம்பூராவும் உன்காலடியில் எடுத்த விடையம் என்னவானாலும்…. எதுகை மோனை உனக்குத் தேவையுமில்லை.. உண்மையோ எள்ளளவும் வேண்டாம் எடுத்தை தூக்கிப் போட்டாலே காணும் கைப்பேசி உன்னை படமெடுக்கும் கண்டதை கதைத்தாலும் கண்டிக்காது சொன்னதை அப்படியே சொல்லும் சொரணை கெட்டசனம் சொக்கிப்போய் திரும்ப திரும்ப பார்க்கும் பார்வைக்கு ஒரு விருப்பும் ஒரு ஏற்பும் இருந்தாலே நீ ஒரு செய்தியாளன் சொந்தமாக சொத்து சேர்த்து விட்டால் மகா செய்தியாளன் செய்திக்கு .ஒரு தாற்பரியம் இருக்கு ஒரு தார்மீகமும் இருக்கு சொல்வதில் ஒரு செம்மையும் இருக்கு சொல்வடிவமும் இருக்கு… இவை இல்லையெனின்… அது செய்தியல்லடா… செய்தியை…சொல்லுங்கடா..உண்மை செய்தியாய் சொல்லுங்கடா…3 points
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
சாதாரணமாக மலிவான விமானச் சீட்டைத்தான் சாதாரணர்கள் எல்லோரும் தெரிவு செய்வது. கடந்த ஆண்டு ஸ்ரீலங்கன் விமானத்தில் நேரே செல்வோம் என்று நூற்றைம்பது பவுண்டஸ்கள் அதிகம் கொடுத்து கொழும்பில் இறங்கியபோது விரைவில் வந்து சேர்ந்தாச்சு. இனிமேல் இதிலதான் வாறது என்று முடிவெடுத்து, திரும்ப வரும்போது மலசலகூடம் சுத்தம் செய்யப்படாமல் நாறிக் கிடந்ததில் இனிமேல் அதில் போவதில்லை என்று முடிவெடுத்து ஒன்லைனில் தேடினால் எல்லாம் 700 பவுண்சுக்கு மேலே காட்ட, “ஸ்கைவிங்ஸ்” மூலம் கடவுச்சீட்டைப் பதிவு செய்து ஐப்பசி மாதம் பதினெட்டாம் திகதி கட்டார் ஏயார்வேஸ் விமானத்தில் டோகா வழியாக இலங்கை போய் இறங்கியாச்சு. ஒரு கட்டுமான வேலைக்காகத்தான் முதலில் போக யோசித்தது. ஆனால் இம்முறை சரியான மழை என்று எல்லோரும் கதைத்ததனால் சரி தை மாதம் அளவில் செல்லலாம் என்று எண்ணியிருக்க, கணவரின் அண்ணன் அழைத்து கடைசி மகளுக்கு இன்னும் இரு மாதத்தில திருமணம் செய்துவைக்க இருக்கிறம். குடும்பத்தோட வாங்கோ என்றுவிட, நான் இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு வர ஏலாது. போக வெளிக்கிட்டனி இப்பவே போவன் என்று மனிசன் எனக்குக் கூற, எனக்கோ பெரிதாக விருப்பம் வரவில்லை. கணவரின் தமையன் மகளும் போன் எடுத்து சித்தி கட்டாயம் வாங்கோ என்று கூற மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறி போனை வைத்தபின் மனிசனை வீட்டில் விட்டுவிட்டுப் போகவும் மனமின்றி நீங்கள் தான் கட்டாயம் போகவேணுமப்பா, நீங்களும் வாங்கோ என்கிறேன். எமது வீட்டின் பின்னால் ஒரு மேலதிக அறையும் மலசலக்கூடமும் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதனால் தான் விட்டுவிட்டு வரமுடியாது. நீ மட்டும் போ என்கிறார். சரி என்று அங்கிருப்பவர்களுக்குக் கொண்டுபோவதற்கான சொக்லற்,பிஸ்கட் என வாங்கி அடுக்கி, எனக்கும் ஐந்தாறு மாதங்கள் நிற்பதற்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வாங்கி நிரப்ப இரண்டு பெரிய பொதிகள் ஒவ்வொன்றும் 23 கிலோக்கள். கையில் கொண்டுபோவது ஏழு கிலோ என எல்லாம் நிரம்ப, “எப்ப பாத்தாலும் அள்ளி கொண்டு போய் தானதருமம் பண்ணு” என்று திட்டும் மனிசனைக் கணக்கெடுக்காமல் எல்லாவற்றையும் கச்சிதமாக முடித்து, செல்லும் நாளுக்காகக் காத்திருந்து யாழ்ப்பாணமும் போயாச்சு. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் குளிர், மழை, புயல் என்று ஓய, கார்த்திகை மாதக் கடைசியில் வீடு திருத்தும் வேலை ஆரம்பித்து அத்தனை பேருடன் மல்லுக்கட்டி ( அதை விபரமாக இன்னொரு பதிவில் போடுறன் ) இன்னும் வேலை முடிந்தபாடில்லை. மாசி மாதம் 15 போட்ட விமானச் சீட்டை பங்குனி 11 ற்கு வீணாக 70 பவுண்ட் கட்டி மாற்றிய பின் ஈரான் போர் தொடங்க என்ன செய்றது எந்த யோசனையும் ஓடிது. மாதக் கடைசியில் யாழ்ப்பாணம் வரவிருந்த கணவரும் கடவுச்சீட்டு மூன்று மாதங்களே இருந்த காரணத்தால் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுதான் சாட்டென்று வீட்டு வேலை முடிய கிளம்பி வா. இங்கை ஒரு அசுமாத்தமும் இல்லை என்கிறார். எனக்கு இன்னும் பயணத்துக்கு நான்கு வாரங்கள் இருக்க, மூன்று வாரங்களில் கிளம்பவேண்டும். வேலையை விரைவாக முடியுங்கள் என்கிறேன், இரு வாரங்களின் பின் எனக்குக் கடவுச் சீட்டை மாற்றித் தந்த ஸ்கை விங்ஸ் இலங்கை முகவருடன் தொடர்புகொண்டு என்ன நிலமை என்று கேட்க, அக்கா எனக்கு இன்னும் சொல்லத் தெரியேல்லை. எதுக்கும் 9 ம் திகதி உங்கள் விமானம் பற்றிக் கூறுகிறேன். மறக்காமல் எனக்கு போன் எடுங்கோ என்கிறார். மனதில் சிறு பயம் எட்டிப் பார்க்கிறது. கணவர் பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் போகுமோ என்னும் யோசனையும் எழ மூத்த மகளுக்குப் போன் செய்கிறேன். அம்மா நீங்கள் போன் செய்ய முதலே நான் பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். நேரில் வரும் விமானம் எல்லாம் 1500/ 2000 பவுண்டஸ் போடுகிறார்கள். டெல்லி வந்து துருக்கி போய் லண்டன் வர 800 பவுண்டஸ் டிக்கற் இருக்கு. புக் செய்யவோ என்கிறாள். வீணாக ஏன் அவ்வளவு காசு. எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பொறும் என்றுவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கிப்போகிறேன். காசைப் பார்த்து போர் அதிகமானால் என்ன செய்வது? நான் தனிய இங்க மாட்டுப்படப் போறேனோ என்று யோசனையாகவும் இருக்க இரண்டாவது மகள் அழைக்கிறாள். கோவிட் நேரம் போல பொருட்கள் எல்லாம் கடைகளில் தட்டுப்பாடோ என்று கேட்க. யாரும் எதையும்பற்றிக் கவலை கொள்ளவில்லை. எல்லாம் சாதாரணமாகத்தான் போகுது. வீட்டுவேலைகள் முடிந்துவிட்டதா? என்கிறாள். இன்னும் ஒருவாரத்தில் முடிப்பதாகச் சொல்கிறார் பொறுப்பானவர். பார்ப்போம் என்கிறேன். காசைப் பார்க்காதைங்கோ. நான் டிக்கற் போடுறன் என்றவளைத் தடுத்து எதுக்கும் ஒன்பதாம் திகதிவரை பார்ப்போம் என்கிறேன். ஏழாம் எட்டாம் திகதிகளில் வேலையாட்களுடன் பொழுது போய்விட, இரவில் பிரையாணம் சரிவருமா என்ற குழப்பத்தில் தூக்கமே வரவில்லை. அடுத்தநாள் காலை ஒன்பதுக்கு கொழும்புக் கிளைக்குத் தொலைபேசியில் அழைத்தால் என்னுடன் பேசவேண்டியவர் தற்போது இல்லை. மதியம் இரண்டு முப்பதுக்குப் பின் போன் செய்யுங்கள் என்கின்றனர். அதுவரை காத்திருந்து போன் செய்தால் உங்கள் விமானம் 11 ம் திகதி ஓடாது அக்கா. இப்ப மூன்று நாட்களாக எதுவும் ஓடவில்லை என்கிறார். ஓடவில்லை என்றால் ஒடுற விமானமாப் பார்த்து நீங்கள் தான் டிக்கற் மாற்றிப் போட்டுத் தரவேணும் என்கிறேன். நான் பார்க்கிறன், பார்த்திட்டு இண்டைக்கு நான்கு மணிக்கு உங்களுக்கு போன் செய்யிறன். எதுக்கும் உங்கள் இலங்கை இலக்கத்தைத் தாங்கோ என்று கூற, நான் இப்ப கதைக்கிற இலக்கம் தான் என்கிறேன். ஒருக்காச் சொல்லுங்கோ அக்கா நான் எழுதிறன். இந்த போனில காட்டாது என்று கூற நான் இலக்கத்தைச் சொல்கிறேன். நேரம் நான்கு ஆகி நாலரை ஆன பின்னும் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. நான்இரண்டு மூன்று தடவைகள் போன் செய்தும் யாருமே எடுக்கவில்லை. விடாமல் பத்து நிமிட இடைவெளியில் ஒரு பத்துத் தடவையாவது போன் எடுத்தும் யாரும் எடுக்கவில்லை. அவர்களின் இலக்கம் சாதாரணமாது. அதனால் எந்த செய்தியையும் கூட அனுப்ப முடியாமல் டென்ஷன், கோபம் எல்லாம் எழ, கணவருக்குப் போன் செய்து விடையத்தைக் கூற அவர் வேலையில் நிற்பதாகவும் வேலை முடிய லண்டன் முகவரிடம் போய்க் கதைக்கிறேன் என்கிறார். இரவு பதினொரு மணிக்குக் கணவர் வற்சப்பில் வருகிறார். இந்தா உன்னோடை கதைக்கவேணுமாம் என்கிறார். நான் அவர்களுக்கு விபரத்தைக் கூறுகிறேன். என்னை போனில் வைத்துக்கொண்டே கொழும்புக்குப் போன் செய்கின்றனர். கஷ்டமருக்கு சரியான தகவல் சொல்ல வேணுமல்லா? நிறையத் தடவை போன் செய்தும் நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க அந்தப்பக்கம் ஏதோ சொல்கிறார். பதினொரு மணிவரை Office இல் நிக்கவேணும். வேறை அலுவல் பார்க்கப் போகக்கூடாது என்று திட்டிவிட்டு, அக்கா இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள உங்களுக்கு மெயில் போடுறம் என்றுவிட்டு கணவரிடம் போனைக் குடுக்க, அப்ப சரி பிறகு கதைக்கிறன் என்றுவிட்டு மனிசன் போனை நிறுத்த, எனக்கு முன்னர் இப்பிடித் திட்டுவதாக நடித்துவிட்டு என்ன செய்யப்போறாங்களோ என்ற யோசனை ஓட வேறு வழியின்றிக் கண்ணயர்கிறேன். அடுத்தநாள் காலை எழுந்து பார்த்தால் கொழும்பு முகவர் எனக்கு 18ம் திகதிக்கு அதே டோகா வழியாக டிக்கட் போட்டு இது ஓகே என்றால் மெயில் செய்யுங்கள் என்று தகவல் அனுப்புகிறார். அவரைப்பற்றி முறைப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் அவருக்கு போன் செய்யவும் ஒரு மாதிரியாக கிடக்க, ஒன்பதரைக்கு அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கதைக்க, நீங்கள் அவரிடம்தான் கதைக்கவேண்டும். அவர் இன்று மூன்றரைக்குத்தான் வருவார் என்கிறா. வீட்டில் வேலைகள் நடந்துகொண்டிருக்க இன்னும் எத்தனை நாட்களில் முடித்துத் தருவீர்கள் தம்பி என்று பொறுப்பானவரைக் கேட்க இன்னும் ஒரு நாளில் உள் வேலை முடிந்துவிடும். அதுக்கு அடுத்தநாள் வெளிவேலை முடித்து உங்களிடம் திறப்புத் தாறன் அக்கா என்கிறார். அன்று பத்தாம் திகதி. 18 என்றால் கொழும்பு போக ஏழு நாட்கள் இருக்கு. இரண்டு நாளில் திறப்புத் தந்தால் ஒருநாள் சினிமாவுக்கும் போகலாம். திரியாய்ப் பாரைக் கருவாடும், மிச்சசொச்சச் சாமான்களும் வாங்கவும் நேரம் போதுமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டபடி மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அப்பப்ப அவர்கள் செய்யும் வேலைகளையும் கண்காணித்துவிட்டு மீன்காறருக்காகக் காத்திருக்கிறேன். பதினொரு மணிக்கு அவர் வர அவரிடம் பொரிப்பதற்கு நான்கு சிறிய மீன்களும் குழம்புக்கு ஒரு விளை மீனும் 700 ரூபாய்களுக்கு வாங்கி சுத்தம் செய்து வளவில் கிடந்த மரவள்ளியை இழுத்து அதிலும் ஒரு கறியை வைத்துவிட்டு நிமிர 12.30 ஆக சுடச் சுட உண்டபின் ஒருமணிநேரம் போனில் நாடகங்கள் ஓடஓடப் பார்த்துக்கொண்டிருக்க, வேலை செய்யும் எட்டுப் பேரும் கடையில் வாங்கிவந்த உணவுப்பொதிகளைத் திறக்க, சரி அவர்கள் உண்டு முடித்து ஓய்வெடுத்து மீண்டும் வேலை தொடங்க ஒரு மணித்தியாலம் ஆகிவிடும். நானும் ஒரு மணித்தியாலத்துக்கு அலாம் வைத்துவிட்டுக் கட்டிலில் சாய்கிறேன். 2.30 இற்கு அலாம் அடிக்க எழுத்து உடனேயே கொழும்பு முகவருக்குப் போன் செய்ய, அவர் இன்னும் வரவில்லை ஒரு மணிநேரம் கழித்து எடுங்கள் என்கிறார் அந்தப் பெண் மீண்டும். ஒரு மணி நேரத்தில் பின் மீண்டும் அழைக்க அந்த ஆண் குரல் போலவே ஒருவர் கதைக்கிறார். ஆனால் வேறு பெயர் சொல்கிறார். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறாரா என்ற ஐயம் எழ, அவர் எங்கே என்கிறேன். அவர் ஒரு அரைமணி நேரத்தில் வந்துவிடுவார். வந்ததும் உங்களுக்குக் கட்டாயம் போன் செய்யச் சொல்கிறேன் என்கிறார். சொன்னதுபோலவே அரைமணி நேரத்தில் போன் வருகிறது. என்ன தம்பி 18 விமானம் ஓடுமா? அல்லது சும்மாதான் டிக்கட் புக் செய்திருக்கா? உள்ளதைக் கூறுங்கள். என் மகளுக்கு 18 ம் திகதி சிவில் வெடிங்க் இருக்கு. நான் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அங்க நிக்கவேணும். தயவுசெய்து எனக்கு டிக்கட்டை மாத்தித் தாருங்கள் என்று அழுவாரைப்போல் சொல்கிறேன். அக்கா அவங்கள் எங்களுக்குத் தந்ததைத்தான் உங்களுக்குப் போட்டிருக்கிறம். “நீங்கள் இப்ப எங்க நிக்கிறியள்? கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா? “நான் யாழில்தான் நிக்கிறன்” “அப்ப உடனம் வெளிக்கிட்டு கொழும்பு வாங்க. இங்க வந்து கட்டார் ஏயாயர்வேஸ் நிறுவனத்துக்கு நேரில் சென்றீர்கள் என்றால் அங்க மாத்திக் குடுக்கிறாங்கள் எண்டு சொல்லினம்” “சரி அப்ப இண்டைக்கே கிளம்புறன், நன்றி தம்பி” ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று கண்களை மூடி யோசித்தவுடன் முக்கியமான வேலைகள் முடிந்திட்டுது. இங்க நிக்க நிக்க பிரச்சனை கூடினாலும். கிளம்புவதே நல்லது என்று முடிவெடுத்து பொறுப்பான பெடியனுக்கு போன் செய்ய அவரும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்கிறார். பின்னர் இரவு கொழும்பு செல்லும் வான்களுக்கு அடித்து ஒரு இடம் தருமாறு கேட்க, இரவு எழு மணிக்கு ஒரு வான் வெளிக்கிடுவதாகக் கூற சரி என்றுவிட்டு உடனேயே அறைக்குச் சென்று தேவையானவற்றை எடுத்துக்கொண்டு எனது மிச்சக் கறிகள், மற்றும் அனைத்து உணவுப் பொருட்களையும் வீட்டின் மாற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு,எனது சமையல் உபகரணங்கள் மற்றும் மண்வெட்டி கடப்பாரை, அலவாங்கு என்பவற்றையும் உள்ளே எடுத்து வைத்துவிட்டு அனைத்துக் கதவுகள் யன்னல்களையும் மூடித் திறப்பெடுக்க பொறுப்பானவர் வருகிறார். அவரிடம் முன் கதவுத் திறப்பைக் கொடுத்துவிட்டு வேலை முடிந்ததும் கணவரின் தங்கையிடம் திறப்பைக் கொடுக்குமாறு கூறிவிட்டு பிக்மீ மூலம் ஓட்டோவை வரவழைத்து வேலையாட்கள் முதற்கொண்டு அனைவரிடமும் விடைபெற்று வீட்டில் நின்ற உடையுடன் ஓட்டோவில் ஏறி அமர கண்களில் நீர் முட்டுகிறது. ஐந்து மாதங்கள் சும்மா நின்ற என்னை விதி இப்படி ஓட விடுகிறதே என எண்ணியபடி இணுவிலுக்கு சித்தி வீட்டுக்குக் கிளம்புறேன். போகும் வழியில் கணவரின் தங்கைக்கு விபரத்தைக் கூறி இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவேன். திரித்து வைத்த அரிசிமா, மிளகாய்த்தூள், குரக்கன, கோப்பித்தூள் என்பவற்றை சித்தி வீட்டுக்குக் கொண்டுவரும்படி கூறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த வீட்டில் தான் சித்தி இருக்கிறார். வயதானவர். அங்குதான் நான் போய் இறங்குவது. எனது பயணப் பொதிகளும் அங்குதான் வைத்திருந்தேன். போய் இறங்கியவுடன் சித்தியிடம் விடையத்தைக் கூறிவிட்டு சூட்கேசைத் திறந்து பிள்ளைகளுக்கு வாங்கிய உடைகளை எல்லாம் எடுத்து வைக்க நிரம்பிவிடுகிறது. திரும்பிப் போகும்போது போடவேண்டிய குளிராடைகள், காலனி எல்லாம் எடுத்து வைத்துவிட்டு நிறுத்துப் பார்க்க 23 kg காட்ட அதைப் பூட்டி வைத்துவிட்டு அடுத்ததைத் திறக்க மச்சாள் உணவுப்பொதிகளுடன் வந்து சேர அதையும் வைத்துவிட்டு நிறுக்க அது 23.6 என்று காட்ட, அட இனி வேறு எதுவுமே வைக்க முடியாதே என்றபடி கையில் கொண்டு போகும் சிறியதை எடுத்து முக்கியமான ஆவணங்கள் சில ஆடைகள் துவாய்கள், எண்டு அடுக்க அதுவும் ஏழு கிலோ எனக் காட்டுது. இனிமேல் உந்த அரிசிமா, மிளகாய்த்தூள் எதுவும் கொண்டுபோவதில்லை என எண்ணியபடி நேரத்தைப்பார்க்க மாலை ஆறு மணி என்கிறது மணிக்கூடு, இன்னும் ஒருமணிநேரம் இருக்கு. சாப்பிட்டுவிட்டுப் போவதுதான் நல்லது என எண்ணி மச்சாளிடம் சொல்ல அவர் கொண்டுவந்த இடியப்பத்தைத் தருகிறார். இடியாப்பம் உண்டபடியே சித்தி மற்றும் கேள்விப்பட்டு வந்த முன்வீட்டு அக்கா ஆகியோருடன் கதைத்துக்கொண்டிருக்க வான்காரர் இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக போன் செய்கிறார். அப்பதான் எனது ஸ்கூட்டி அங்கு வெளிப் விறாந்தையில் நிற்பது தெரிய எப்படி அதை உள்ளே தூக்கி விடுவது என்று யோசித்துக்கொண்டிருக்க, என் ஒன்றுவிட்ட அண்ணா ஓட்டோ ஒன்றில் வந்து இறங்குகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்கூட்டியை உள்ளே தூக்கி வைத்த சிறிது நேரத்தில் வானும் வர உடை மாற்ற மறந்துவிட்டது அப்போதுதான் நினைவில் வருகிறது. எல்லாவற்றையும் வைத்துப் பூட்டிவிட்டேன். திரும்பத் திறந்து எடுக்க நேரம் போய்விடும். ஒரு பிஜாமாவும் முழுக் கைச் சட்டையும் போட்டிருந்ததானால் அப்படியே போவோம். இரவுப் பயணம் தானே என முடிவெடுத்து காலணியை அணிய வான் வந்து நிற்கவும் சரியாகிறது. ஓட்டுனர் இருக்கைக்குப் பின்னால் எனக்கு இடம் கிடைக்க ஜன்னலில் தலையணையை சாய்த்து வைத்துவிட்டு தூங்க முயல, அப்பதான் கொழும்பில் தங்குவதற்கான ஒழுங்கை இன்னும் செய்யவில்லை என்கிற நினைவு வருகிறது. போனில் Hotel சிலதைத் தேடிப் பார்த்தால் அந்தஇரவு எதுவும் காலி இல்லை என்று காட்ட பயமும் எட்டிப் பார்க்க, தெரிந்த வான் ஓடும் ஊர் பெடியன் ஒருவருக்கு போன் செய்ய தான் தேடிப் பார்த்துச் சொல்வதாகக் கூறுகிறார். அரை மணி நேரம் செல்ல எல்லா கொட்டேலும் இடம் இல்லை என்கின்றனர். எனக்குத் தெரிஞ்ச இடம் ஒண்டு இருக்கு. அது உங்களுக்கு சரிவருமா என்று தெரியவில்லை என்கிறார். எதுக்கும் அதை புக் செய்யுங்கோ. பிறகு நான் பார்க்கிறேன் என்கிறேன். அவர் தொலைபேசி இலக்கத்தைப் போட்டு எதுக்கும் நீங்களும் கதையுங்கோ என்றதும் நான் போன் செய்கிறேன். அட்டாச் டாய்லெட் பாத் இருக்கா, ஏசி இருக்கா என்று கேட்க எல்லாத்துக்கும் ஓம் என்கிறார். ஒரு நாளுக்கு நான்காயிரம் என்றதும் காலை 3.30 -4.00 இக்குள் வருவேன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். 3.45 இற்கு வான் என்னைக் கொண்டுபோய் இறக்க ஆளரவமற்ற இடத்தில் நிற்பது போல் இருக்க போன் செய்கிறேன் அவர் எடுக்கவில்லை. பதட்டமும் சேர எனக்கு புக் செய்தவருக்கு போன் செய்ய அவரும் உடனே எடுத்துக் கதைப்பதாகக் கூறி வைத்துவிட கொட்டாவி விட்டபடி ஒருவர் வந்து கதவைத் திறக்கிறார். வான்காரரும் அவருமாக எனது பொதிகளை இழுத்துவந்து முதலாம் மாடியில் அறைக்கு முன்னால் வைத்துவிட்டுச் செல்ல சசி என்பவர் கதவைத் திறக்கிறார். உள்ளே சென்று fan போட்டதும் காற்றோட்டம் இல்லாத அறை என்று மணம் சொல்ல டாய்லெட்டீன் உள்ளே சென்று பார்க்கிறேன். பரவாயில்லை என்று எண்ணியபடி திரும்ப பக்கத்திலும் ஒரு கதவு தெரிய குளியலறைதான் தனியாக இருக்கோ என்றபடி திறந்தால் அது இன்னொரு அறை. ஆனால் நல்ல வேளை யாரும் அங்கில்லை. உடனேயே என்ன தம்பி தனி அறை என்று சொன்னீர்கள். இரண்டு அறைகள் இருக்கு. என்னால் இங்கு தங்க முடியாது. வேறை அறை மாற்றுங்கள் என்கிறேன். இப்ப மாற்ற முடியாது அக்கா. அந்த அறையில் யாரும் இல்லை. அதன் திறப்பையும் பூட்டி உங்களிடமே தருகிறேன். நீங்கள் கொண்டியையும் போடுங்கள். யாரும் வர முடியாது என்கிறார். கணவரிடம் விபரம் கூற சரி நாளைக்கு வேற இடம் பாரான் என்றுவிட்டு அவரும் தூக்கக் கலக்கத்துடன் போனை வைக்கிறார். வானில் 7 மணிநேரம் இருந்து வந்ததில் முதுகு வலிவேறு. கொண்டுவந்த துவாயை தலையணைக்குமேல் விரித்துவிட்டு காலை 6.30 இற்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்ததுதான். இரண்டரை மணிநேரம் நல்ல தூக்கம். எழுந்து பல் துலக்கித் தோய்ந்துவிட்டு வெளியே வந்து தலைகாயவிட்டு நல்ல ஆடைகளை அணிந்தபடி அறையைப் பூட்டியபடி வெளியே வந்தால் யாரையுமே காணவில்லை. அந்த சசி என்பவருக்கு போன் செய்தால் அவரும் போனை எடுக்கவில்லை. நிமிர்ந்து பார்த்தால் அந்த கொட்டேலுக்குப் பெயரையும் காணவில்லை. நடந்து வெளியே வந்தால் ஒரு சிறிய வீதி தெரிகிறது. தொடர்ந்து நடக்க ஒரு பிரதான வீதி தெரிய வீதியில் போய் ஒருவரை நிறுத்தி ஏதும் உணவகம் இருக்கிறதா என்று கேட்க நேரே நடந்து போக ஒன்று வருவதாகக் கூற நடந்து செல்கிறேன். இப்போது எனக்கு இடம் கொஞ்சம் விளங்குகிறது. நான்கு மாதங்களின் முன்னர் விசா எடுப்பதற்காக வந்தபோது அதற்கு அண்மையில் உள்ள தங்குவிடுதியில் தங்கி இங்கு வந்து உணவு உண்டிருக்கிறேன். அங்கு சென்று தோசையும் சாம்பார் வடையும் உண்டு கோப்பியும் குடிக்க ஒரு உற்சாகம் வருகிறது. அங்கிருந்தவாறே ஒன்லைனில் கட்டார் ஏயார்வேஸ் முகவரியை எடுத்து பிக்மீ யில் போட்டுவிட்டு ஒரு ஓட்டோவின் இலக்கமும் ஓட்டுநரின் பெயருடன் 4 நிமிடங்களில் வருவதாகக் காட்ட வெளியே வந்து போகும் ஓட்டோக்களைப் பார்க்கிறேன். ஓட்டோக்காரரிடம் இருந்து போன் வர எடுத்துக் கதைக்க எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அந்த உணவகத்துக்கு முன்தான் என்று கூற நானும் அங்குதான் நிற்கிறேன் என்றவர் எனக்கு அருகில் வருகிறார். ஓ நீங்கள் தானா என்றபடி அவருடன் சென்றால் அவரின் ஓட்டோ வேறு இலக்கம் காட்டுகிறது. இதில் நான் வரமுடியாது. என்னிடம் பிக்மீயில் வந்த இலக்கம் இதில்லை. என்றபடி நான் திரும்பிவர, பயமில்லை வாங்கோ என்று அவர் ஆங்கிலத்தில் கூற நான் மறுப்பாகத் தலையாட்டிவிட்டு பிக்மீயை கான்சல் செய்துவிட்டு புதிதாக ஒன்றைப் போட ஐந்து நிமிடங்களின் பின் இன்னொன்று வர அதில் ஏறி அமர்கிறேன். நேரம் எட்டேகால். அங்கு போவதற்கு முக்கால் மணிநேரம் காட்டுகிறது. ஒன்பதுக்குள் போய்விடலாம் என்று எண்ணினால் வீதியில் மெதுவாக நகர்கின்றன வாகனங்கள். 9.15 இற்கு World Trade Centre என்னும் கட்டடத்தின் முன்னால் ஓட்டோ நிற்க, பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கி உள்ளே சென்றால் நூறுக்கும் அதிகமானவர்கள் Qatar Airways நிறுவனத்தின் முன்னால் நிற்கின்றனர். வரிசை ஒன்றும் இல்லையா என்று நின்றவர்களிடம் கேட்க, ஏற்கனவே நூறுவரை இலக்கங்கள் கொடுத்துவிட்டார்கள். எதுக்கும் இடதுபுறமாகத் திரும்பிச் சென்றால் அங்கே ஓர் அறையில் இலக்கங்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்வி என்கிறார் ஒருவர், சென்று பார்த்தால் ஒரு அறையின் வெளியே பத்துப்பேர் நிற்க, எங்கே டோக்கிண் கொடுக்கிறார்கள் என்று கேட்க, நாங்களும் அதற்குத்தான் நிற்கிறோம். ஆனால் யாரும் டோக்கிண் கொடுப்பதாகத் தெரியவில்லை என்கிறார் இன்னொருவர். நான் அந்த அறையைப் பார்க்கலாமா என்று கேட்க ஓ போய்ப் பாருங்கள் என்கின்றனர். நான் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஐம்பது பேர்வரை கதிரைகளை நிறைத்திருக்க நிர்வாக அதிகாரிகளின் இடமோ வெறுமையாக இருக்க வெளியே வந்து இதுவரை இலக்கம் கொடுக்கப்படவில்லையா என்கிறேன். இல்லை என்று அவர்கள் தலையாட்ட இனி இதில் நின்று பயனில்லை என எண்ணி முன்பக்கமாக வர பதினோராம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. அங்கு கூடி நின்ற சிலரிடம் விபரங்களை அறியலாம் என்று கதைக்க, இருவர் யேர்மனியிலும் மற்றவர் மூவர் சுவீசிலும் ஒருவர் லண்டனிலிருந்தும் வந்தாகக் கூறுகின்றனர். அதில் இருவர் தான் காலை ஆறரையில் இருந்து வரிசையில் நின்று நம்பர் எடுத்ததாகக் கூற அவரின் இலக்கம் கேட்டால் 40 என்கிறார். மற்றவர் 17 மற்றும் 25 என்கின்றனர். அப்ப உங்கள் இலக்கம் என்ன என்று மற்றவரைக் கேட்க, நான் இவருடன் வந்தனான் என்கிறார். அப்ப இன்று நின்று பயன் இல்லை. காலை நான்கு மணி போல்தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து களைத்துவிட்டேன். இனிப் போட்டு நாளை காலை 6 மணிக்கு வரவேண்டியதுதான் என்றபடி கிளம்ப எத்தனிக்க, சுவிசில் நின்று வந்த ஒருவர் “தங்கச்சி இவ்வளவு தூரம் வந்திட்டியள். போகாமல் தனிய நிற்கும் வேறு யாரையாவது சேர்ந்து போகக் கேட்டுப் பாருங்கோ என்கிறார். உங்களுக்கு யாரையும் தெரியுமா என்று கேட்க, நாங்கள் மூன்று பேர்தான் நம்பர் எடுத்தது. மற்றவை எங்களோட சேர்ந்து வர நிக்கினம். போய் ஆரையும் விசாரியுங்கோ என்கிறார். கேட்டு யாரும் மாட்டான் என்று சொன்னால் என்ன செய்யிறது என்று தயக்கமாகவும் இருக்க, இரு பெண்கள் நிற்பதைப் பார்த்து அவர்கள் அருகில் செல்கிறேன். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்க கனடா செல்லவேண்டும். 48 ம் இலக்கம். மாலைதான் கூப்பிடுவினம் போல கிடக்கு என்கிறார் தாய். நான் என் விபரங்களைச் சொல்லி அங்கலாய்த்துவிட்டு நானும் உங்களோட உள்ளே வரலாமோ என்று கேட்க, மகள் வங்ககோ அன்ரி என்கிறா. அப்பாடா என்று மனம் நிம்மதியடைய வாயிலில் நிற்கும் பாதுகாப்பு அதிகாரி விடாது தடுத்தால் என்ன செய்வது என்று எண்ணியபடி முதலில் கதைத்த குழுவினரிடம் வந்து வாசலில நிற்பவர் இருவரை ஒன்றாக விடுவாரா என்ற சந்தேகத்தைக் கேட்க, வெள்ளையள் எல்லாம் அப்பிடித்தான் போயினம். உள்ளே இரண்டே இரண்டு கவுண்டர்கள் தான் இருக்கு. ஒவ்வொரு கவுன்டரிலும் இரண்டு கதிரைகள் போட்டிருக்கு. அதனால பிரச்சனை இல்லை என்கிறார். நேரம் 10.30 என்று காட்ட 17 ம் இலக்கம் கூப்பிடப்படுகிறது. உள்ளேயே பெரிய உணவகம் ஒன்று காணப்பட, அங்கு சென்று ஒரு Hot Chocolate வாங்கி அங்கிருந்தே குடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அந்த இரு பெண்களின் அருகில் சென்று கதைத்துக்கொண்டு இருக்கிறேன். சிறிது நேரம் செல்ல இன்னொரு இந்தியப் பெண் அருகில் வருகிறார். தான் இத்தாலியில் இருந்து வந்ததாகவும் இப்ப தான் உள்ளே வந்ததால் இலக்கம் கொடுத்துமுடித்துவிட்டார்கள் என்று தான் அறிந்ததாகவும் கூறி உங்களில் யாராவது ஒருவர் என்னையும் சேர்த்துக்கொள்கிறீர்களா என்று கேட்க, நாங்கள் மூவரும் சேர்ந்து போகிறோம் என்கிறா மகள். அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் நகர உங்கள் அம்மாவும் கனடா வருக்கிறாரா என்று கேட்க இல்லை என்று அவர் சொன்னதான் பின் தான் நான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். மீண்டும் அலுவலக வாசலில் நிறு உள்ளே பார்க்க அவர்கள் ஆடிப்பாடி வேலை செய்வதுபோல் தெரிய, இப்பிடி அவசரமான நேரத்திலையாவது அதிகமான வேலையாட்களைப் போட்டால் என்ன. இவர்கள் இருவரும் எத்தனை மணிக்குப் பார்த்து முடிக்கப் போகிறார்களோ என்கிறேன். உள்ளே இருந்து வாயிற்காப்பாளர் வர எத்தனையாம் இலக்கம் போயிருக்கு என்று கேட்க 19 என்கிறார். உள்ளே நடப்பது ஏதும் விளங்காதுவிட்டாலும் சும்மா பார்த்துக்கொண்டே நிற்கிறேன். மூன்று வெள்ளையர்கள் வந்து வாயிலில் நிற்பவரிடம் டிக்கற் மாற்றவேண்டும் என்கின்றனர். வாருங்கள் என அழைத்துக்கொண்டு நான் போய் வந்த பின்பக்க அறைக்குக் கூடிக்கொண்டு போக, நானும் அவர்களுடன் போவோமா என்னும் எண்ணம் ஒரு நொடி எழுந்தாலும் உள்ளதும் கெட்டுவிடும் என எண்ணியபடி வாசலுக்குத் தள்ளிப் போய் நிற்க ஒரு பெடியன் எனக்கு அருகில் வந்து நிற்கிறார். நான் அவரைத் திரும்பிப் பார்க்க அவரும் என்னைப்பார்த்து சிரித்துவிட்டு நிற்க, உன் இலக்கம் என்ன என்கிறேன். 38 என்றவர் உன் இலக்கம் என்ன என்கிறார். நான் காலையில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன். இலக்கம் எல்லாம் கொடுத்துவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு இலக்கத்தில் இரண்டு மூன்று பேர் கூடப் போகிறார்கள். நீ என்னைக் கூட்டிக்கொண்டு போகிறாயா என்று கேட்க, அதனால் என்ன என்னுடன் வா என்கிறார். எனக்கு மனதில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாது நிற்கிறேன். நேரம் 12 என்று தொலைபேசி நேரம் காட்ட அதை மூடி வைத்துவிட்டுத் திரும்பினால் என்னருகில் அந்தப் பெடியனைக் காணவில்லை. நான் மீண்டும் போய் அந்தப் பெண்கள் இருவருடனும் கதைத்துக்கொண்டு நிற்கிறேன், ஆனால் அந்தப் பெடியிடம் சேர்ந்து போகக் கேட்ட விடயத்தை மட்டும் சொல்லவில்லை. நீண்ட நேரம் நின்றதில் கால்கள் வலியெடுக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நீர் பூப்போல் தூவிக்கொண்டிருக்க சுற்றிலும் கட்டியுள்ள கட்டில் பலரும் இருந்துகொண்டிருக்க நானும் அதில் சென்று அமர இரு யேர்மன் நாட்டினர் வந்து எனக்கு அருகில் அமர்கின்றனர். தாங்கள் நேற்றும் வந்ததாகவும் நேரம் போய்விட்டதனால் இன்று வரச்சொன்னதாகக் கூறுகின்றனர். அரைமணி நேரத்தில் அவர்கள் எழுந்து சென்றுவிட அந்தத் தாயும் மகளும் என்னருகில் வந்து அமர்கின்றனர். நீங்கள் ஏதும் சாப்பிட்டீர்களா? என்கிறேன். நாங்கள் காலையிலேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தோம். சிறிது நேரத்துக்கு முன்தான் உந்த உணவகத்துக்குச் சென்று கோப்பி குடித்துவிட்டு வருகிறோம். நீங்கள் எதுவும் சாப்பிட்டீர்களா என்று கேட்க, பசிக்கிறமாதிரி இருக்கு என்கிறேன். அப்ப போய் சாப்பிட்டுவிட்டு வாங்கோ. இன்னும் நிறைய நேரம் இருக்கே என்கின்றார் மகள். நானும் சென்று பார்த்தால் மரக்கறி உணவுகள், மச்ச மாமிச உணவுகள் என்று அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால் எதையும் சாப்பிடலாம் போல் இருக்க, எதுக்கும் மரக்கறி உணவையே உண்போம் என்று சிவப்பு அரிசிச் சோறு மற்றும் ஐந்து கறிகளுடன் தண்ணீர் போத்தல் மற்றும் புடிங் என்று எடுக்க 900 இலங்கை ரூபாய்கள் தான். ஆற அமர இருந்து உண்டு முடித்துவிட்டு வெளிவந்து நிறுவன முகப்புக்கு வந்தால் அந்தப் பெடியன் நிக்கிறார். நீ சாப்பிட்டுவிட்டாயா என்று கேட்க சாப்பிட்டு சிகரற்றும் பற்றிவிட்டு வந்துவிட்டேன் என்கிறார். அப்பதான் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்க இற்றாலி என்றவர் நீ எங்கே என்கிறார். நான் யூகே என்றதும் நீ தமிழ் கதைப்பாயா என்கிறேன். எனக்கு சிங்களமும் ஆங்கிமும் மட்டும்தான் என்றவுடன், வாயிற் காப்பாளர் ஏதும் கண்டுபிடித்துத் தடுத்துவிடுவாரோ என்ற பயம் எழ, உன் பெயர் என்ன என்கிறேன், ஆண்டனி என்றவுடன் நான் நிவேதா என்கிறேன். என் கையைப் பிடித்துக் குலுக்கியபடி உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றபின் அவரைப் பற்றிய வேலை வசிப்பிடம் என்பவற்றைக் கேட்டு அறிகிறேன். நாம் இருவரும் நின்ற இடத்துக்கு அருகில் இன்னொருவர் வருகிறார். அவரை இலங்கையரா அல்லது ஆபிரிக்க நாட்டவரா என்று அடையாளங்கான முடியவில்லை. உங்கள் இலக்கம் என்ன என்று கேட்க 38 என்கிறேன். நான் இப்பதான் வருகிறேன். என்னையும் கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா என்றதற்கு நான் திகைப்புடன் பார்க்க ஆண்டனி நானும் இவவும் சேர்ந்து போகிறோம். உள்ளே மூன்றுபேரை விடுவார்கள் என்றால் நீயும் வரலாம் என்கிறார். என்னடா இது நானே ஒட்டிக்கொண்டு போக இவர் வேறு எல்லாவற்றையும் கெடுக்கப் போகிறார்போல என மனதில் எண்ணியபடி பேசாமல் இருக்கிறேன். 31 ம் இலக்கத்தைக் கூப்பிட இன்னும் ஏழுதான் என மனம் குதூகலிக்கிறது.2 points
-
செய்தியாய் சொல்லுங்கடா…
2 pointsவதந்தியும்,விடுப்பும் பொட்டுக்குள்ளால் கதைத்த காலம் உண்டு அது செய்தியாக வராது,,அப்படியே காற்றில் கரைந்து போய்விடும் ஆனால் இன்று இவையாவும் பதிவுகளாக சகலரையும் சென்று அடைகிறது இறுதியில் அது உண்மை என நம்பும் அளவுக்கு வந்து விட்டது. கிராமத்தில் நிருபர் இருப்பார் அவர் சரி பார்த்து செய்திகளை அனுப்புவார் ,அதை பத்திரியாளர்கள் பார்வையிட்டு உறுதி செய்து பிரசுரிப்பார்கள்.. இன்று மித்திரன் பேப்பர் எல்லோரினதும் உள்ளங் கையிலும் ...அன்று வாசிகசாலையில் மட்டும் தான் இந்த மித்திரன் பேப்பருக்கு வரவேற்பு இருந்தது...2 points
-
செய்தியாய் சொல்லுங்கடா…
2 pointsஇப்ப வரும் செய்திகளில் உண்மை எது பொய் எது என்று கண்டு பிடிப்பதே சிரமம் . ...... ஆனால் செய்தி சொல்பவனுக்கு அது சொத்து சேர்க்கும் ஒரு தொழில் அவ்வளவுதான் .........! 😀 நன்றி அல்வாயன் ..........!2 points
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
அவரைத் தெரிவு செய்த மக்களில் ஒரு சிறு பகுதியினருக்கு தற்போதைய நிலைமை ஆப்பு: யாருக்கு? உரம், எரிபொருள் விலை என்பவற்றில் தங்கியிருக்கும் விவசாயிகள், பார ஊர்தி உரிமையாளர்கள்/ஓட்டுனர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் தரப்பினர் (ஆனால், பாதிக்கப் பட்டாலும் வரவு செலவுக் கணக்குப் பார்க்கத் தள்ளாடும் முட்டாள்கள் இவர்கள்!) ஆனால், இன்னொரு பகுதியினருக்கு கொள்ளை இலாபம்: எண்ணை/எரிவாயு முதலாளிகள், ஆயுத , பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்கள் - இவர்களுக்கு கணக்குப் பார்க்க தனியாக வெளிக் கம்பனிகள் இருக்கும், எனவே புத்திசாலிகள். இடையில் மாட்டுப் பட்ட, ட்ரம்ப் கும்பலுக்கு வாக்களிக்காத என்னைப் போன்றவர்களுக்குத் தான் அநீதி அதிகம்! ட்ரம்புக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் என் தமிழ் அமெரிக்க நண்பர்கள், தற்போது எந்தக் கம்பனியின் பங்கை விற்கலாம், வாங்கலாம் என்று மட்டும் தான் பேசிக் கொள்கிறார்கள்! ஏனெனில், வரும் இலாபம், இலாபத்தை வைத்து பாலி, டொமினிக்கன் குடியரசு, மெக்சிகோ என்று சுற்றுலா-இப்படித் தான் அவர்கள் வாழ்க்கை இலக்குகள் இருக்கின்றன. என்ன ஒரு "ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கை" அவர்களது என்று ஆச்சரியப் படுகிறேன் நான்😂!2 points
-
ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
2 points
- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இப்படி ஆனால், அதில் ஒரு silver line இருப்பதாகவே எனக்குப் படுகிறது. சகல வழிகளிலும் பலம் கொண்ட ஒரு தரப்பு, தன் பலத்தை ஒட்டு மொத்த நன்மைக்குப் பாவிக்காமல் (பிபி டரம்பிற்குச் செய்தது போல) " தன் பின் பக்கத்தை முத்தமிடும் ஒருவருக்காக மட்டும்" பாவித்தால் இப்படியான நிலை வரும் என்பது நிரூபிக்கப் பட வேண்டும்! அடுத்த 3 ஆண்டுகளுக்கு மட்டுமாவது பல்லைப் பிடுங்கி விட்டால், அடுத்து வரும் நிர்வாகம் கொஞ்சம் நிவர்த்திக்க இடம் கிடைக்கும். இது நடந்தால், பிபி யும் இத்தோடு அரங்கில் இருந்து அகன்று விட வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. தீய சக்திகளுக்கு பலம் நிலைத்திருக்கக் கூடாது, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி!2 points- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
2 points- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
முன்னர் கும்பலாக இருந்த பலரையும் காணவில்லை. இன்னும் ஏழு இலக்கங்களே இருந்ததனால் நான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகராமல் அங்கேயே நிற்க, ஆண்டனி மட்டும் அப்பப்ப காணாமல் போய் வந்துகொண்டிருந்தான். இப்ப எம்மோடு வருவதாகக் கூறிய அந்த மூன்றாவது நபரைக் காணாதது எனக்கு நிம்மதியாக இருக்க, அந்த ஆள் வீட்டை போட்டாராக்கும் என்று எண்ணிக்கொள்கிறேன். 48 ம் இலக்கத் தாயும் மகளும் கூட இப்ப எனக்கு அண்மையில் வந்து நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அந்தப் பெடியுடன் போவது பற்றிக் கூறவில்லையே என்ற குற்ற உணர்வும் எழுகிறது. 36 ம் இலக்கம் கூப்பிட நான் திரும்பிப் பார்க்கிறேன் ஆண்டனியைக் காணவில்லை. எனக்கு மனம் திக் திக் என்று அடித்தாலும் யாரிடமும் சொல்ல முடியாமல் நிற்கிறேன். 37 கூப்பிட்டு முடிந்து ஐந்து நிமிடம் ஆன பின் 38 என்று கூப்பிட, பதட்டத்துடன் திரும்பிப் பார்க்க ஆண்டனி வருவது தெரிகிறது. நான் பலமாக “ஆண்டனி விரைவாக வா, எமது இலக்கம் கூப்பிடுகிறார்கள்” என்றபடி வாயில் காப்பாளரைத் தாண்டி உள்ளே செல்ல அவனும் என்பின்னால் வருகிறான். இருவரும் சென்று கதிரைகளில் அமர, கவுண்டரில் உள்ள பெண் இலக்கச் சீட்டைக் கேட்கிறாள். ஆண்டனி கொடுத்தபடியே நாம் ஒன்றாக வந்திருக்கிறோம். ஆனால் வேறுவேறு விமான டிக்கற் என்றதும் அந்தப் பெண் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு “யாரின் டிக்கற்றை முதலில் செய்ய என்று கேட்க, எதையாவது செய் என்கிறார் ஆண்டனி. ஆண்டனியின் டிக்கற்றையே முதலில் செய்யுங்கள் என்கிறேன் நான். ஆண்டனிக்கு 18 ம் திகதி கொடுத்துவிட்டு என் விபரத்தைககேட்க எடுத்துக் கொடுத்தபின்னும் ஆண்டனி போகாமல் இருக்க, மிக்க நன்றி ஆண்டனி, நீ கிளம்பு என்றதும் “சீ யு நிவேதா” என்றுவிட்டு அவன் கிளம்ப, என் பெயரை நினைவில் வைத்திருக்கிறான் என்று ஆச்சரியம் எழுகிறது. எனக்கு 18 ம் திகதி போக ஓகே யா என்று பயண முகவர் கேட்க, நான் பதட்டப்படுமாப்போல் அய்யய்யோ என் மகளுக்கு 18 ம் திகதி நிச்சயதார்த்தம் இருக்கு. ஏற்கனவே பிந்திவிட்டது. தயவுசெய்து எத்தனை விரைவாக எனக்கு டிக்கட் போட்டுத் தர முடியுமோ தா என்கிறேன், இரண்டு நாட்களின் பின் எனக்கு விமானச் சீட்டுக் கிடைக்க நன்றி என்று கூறி அவள் தந்த விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வெளியே வர அந்தத் தாயும் மகளும் வெளியே நிற்க, உங்களுக்கு முதலே கூறாமல் விட்டதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியே வருகிறேன். நேரம் மாலை நான்கு மணி. முன்னால் பல ஓட்டோக்கள் நிற்க, நான் பிக்மீ ஓட்டோவுக்குப் பதிந்துவிட்டு நிற்க, ஓட்டோக்காரர் ஒருவர் எங்கு போகவேண்டும் என்கிறார். நான் ஏற்கனவே பிக்மீக்காக காத்திருக்கறேன் என்றதும் ஓகே என்றுவிட்டு அப்பால் நகர என் ஓட்டோ வருகிறதா என்று பார்க்கிறேன். முன்னர் நான்கு நிமிடம் என்று காட்டிய ஓட்டோ இப்ப 16 நிமிடம் என்று காட்ட மப்பைப் பார்க்கிறேன் அவர் வேறு பக்கமாகச் சென்றுகொண்டிருக்க, உடனேயே அதை இரத்துச் செய்துவிட்டு என்னிடம் வந்து கேட்டவரை வெள்ளவத்தைக்குப் போகவேண்டும் வருக்கிறாயா என்று கேட்டு ஏறி அமர்கிறேன். அப்போதுதான் நான் நின்ற கோட்டலின் பெயரோ முகவரியோ தெரியாது என்பது நினைவுக்கு வர, அந்த சசிக்கு போன் செய்ய அவர் கதைக்கிறார். அவரிடம் முகவரியை எனது போனுக்கு அனுப்பச் சொல்லிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தபடி வர எந்த வீதிக்குப் போகவேண்டும் என்கிறார் ஓட்டுனர். எனது போனில் பார்த்து இடத்தைக் கூறிவிட்டு எனது போனிலும் இடத்தைப் போட்டுச் சரியாகச் செல்கிறாரா என்று பார்க்கிறேன். எனது கொட்டேலுக்கு இன்னும் மூன்று நிமிடம் இருக்கும் நிலையில் சுமங்கலி ரெஸ்ட் என்னும் ஒன்று கண்னில் பட, ஓட்டுநாரை அங்கே போகும்படி கூற அவர் எதிரில் கொண்டுசென்று நிறுத்துகிறார். அங்கு தமிழ்ப் பெண்மணி ஒருவர் இருக்க, தங்குவதற்கு அறைகள் இருக்கா எனகிறேன். ஏசி அறைகள் இன்று இல்லை. மற்ற அறைகள் தான் இருக்கு. எத்தனை பேர் என்கிறா. நான் மட்டும் தான் என்று கூற தனி ஒருவருக்கு ஐந்தாயிரம் என்று கூற, பணத்தைக் கட்டி ரிசீற்ரைப் பெற்றதும் நான் இருக்கும் இடம் சென்று எனது பொதிகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஓட்டோவில் ஏறுகிறேன். சசி வாசலிலே நிற்கிறார். ஒரு நாளுக்குரிய பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு என் பொருட்களுடன் சுமங்கலிக்குச் செல்கிறேன். அங்கு செல்லும்போது மாலை ஐந்துமணி. அறை நன்கு சுத்தமாக இருக்கிறது. மின்விசிறியைச் சுழல விட்டுவிட்டு தேனீருக்கு ஓடர் செய்ய அரைமணிநேரம் செல்லும் என்கிறார். சரி சிறிது நேரம் படுப்போம் என்று கண்ணயர மணி ஒலிக்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்க தேனீர்க் கோப்பையுடன் நிற்பவரிடம் தேனீரை வாங்கி வைத்துவிட்டு 100 ரூபாய்களைக் கொடுக்க அவர் செல்கிறார். அந்தக் களைப்புக்கு தேநீர் சுவையாக இருக்க சுடச் சுட அதைக் குடித்துவிட்டு போனில் சின்னத்திரை நாடகங்கள் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. வெளியே போய் உண்டுவிட்டு வருவோம் என எண்ணி ஜன்னல் சீலையை விலக்கினால் ஒரே இருட்டு. பெரிதாகப் பசி இல்லை. நாளை காலை சாப்பிட்டுக்கொள்வோம் என எண்ணியபடி கட்டிலில் சரிய கணவர் போன் செய்கிறார். அவர் கதைத்து முடிய பிள்ளைகள் சித்தி மச்சாள் என பத்து மணிவரை போன் கதைத்து ஓய தூக்கம் கண்களைச் சுழற்ற, இனி யாருடனும் கதைக்காமல் படுப்போம் என எண்ணி எழுந்து மின்விசிறியை நிறுத்திவிட்டு கட்டிலுக்கு வர என் கால் பக்கமாக இரண்டு இடங்களில் சிவப்பாகத் தெரிகிறது. இவர்கள் கட்டில் விரிப்பைத் துவைக்காமல் போட்டுள்ளார்களோ என்னும் ஐயம் எழுகிறது. குனிந்து பார்க்க இரத்தத் திட்டுக்கள் புதிதாகத் தெரிகின்றன, என் கால்களைத் தடவிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. நுளம்பும் வரவில்லையே. போன் கதைக்கும் போது நுளம்பு கடித்து நான் கவனிக்காமல் சொறிந்திருப்பேனோ என்னும் எண்ணம் ஓட, சரி தூங்குவோம் என்று எண்ணியபடி படுக்கிறேன். கண்ணயரும் நேரம் முதுகுப் பக்கம் ஏதோ ஊர்வதுபோல் இருக்க இடதுபக்கமாகத் திரும்பிக்கொள்கிறேன். மீண்டும் கண்ணயர்ந்தபின் ஒரு மணிநேரம் தூங்கியிருப்பேன் மணிக்கட்டில் ஏதோ கடிக்க திடுக்கிட்டு எழுந்து போனின் வெளிச்சத்தில் பார்க்க சிறிய பூச்சி ஒன்று குடு குடு என்று ஓட விரலால் அழுத்தினால் இரத்தம் தான் தெரிகிறது. அதைப் பார்த்தால் மூட்டைப்பூச்சி போல் இருக்காததால் என்னவாக இருக்கும் என்று யோசனை ஓடுகிறது. சரி மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துப் பார்ப்பம் என்று எண்ணிப் படுத்தால் இரண்டு மூன்று இடங்களில் கடிக்க இரண்டை நசுக்கியும் விட்டேன். மெத்தை விரிப்பைத் தூக்கிப் பாக்க மெத்தை புதிதாக இருக்கிறது. இனியும் இங்கு படுக்க முடியாது என எண்ணி கோட்டலுக்கு போன் செய்ய மானேஜர் வருகிறார். எங்கள் கோட்டலில் மூட்டைகள் இல்லையே என்கிறார். நான் கால்பகுதி விரிப்பு மற்றும் நான் நசித்த மூட்டைகளைக் காட்டுகிறேன். சரி உங்களுக்குக் கீழே உள்ள AC அறை தருகிறோம் என்று கூறி அழைத்துச் செல்கின்றார். கீழே சென்றவுடன் AC மற்றும் மின்விசிறியைப் போட்டுவிட்டுச் செல்ல எனக்கோ குளிர் தாங்க முடியாமல் இருக்கு. AC ஐ நிறுத்திவிட்டு மின் விசிறியையும் நன்றாகக் குறைத்துவிட்டுப் படுக்க தூக்கம் நன்றாக வர மீண்டும் தூங்கவாரம்பிக்கிறேன். ஒரு அரைமணி நேரம் தூங்கியிருக்கமாட்டேன் மீண்டும் கடி. மகளுக்கு போன் செய்து விபரத்தைக் கூற நீங்கள் முதன் முதலில் இருந்த ஹோட்டலில் இருந்து உங்கள் ஆடைகளோடு வந்திருக்குமோ? ஏனென்றால் அந்த ஹோட்டலின் றிவியூ பார்த்தேன் நல்லாத்தான் எழுதியிருக்கு. எதுக்கும் நீங்கள் அணிந்திருந்த ஆடைகளை உதறிப் பாருங்கள் என்கிறா. நான் ஆடைகளை உதறிப் பார்த்துவிட்டு மெத்தையின் விரிப்பைத் தூக்கி ஏதும் தெரிகிறதா என்று பார்க்க அதுவும் புத்தம் புதிதாக இருக்கிறது. இரண்டு அறைகளிலும் புதிதாக மெத்தை போட்டுள்ளார்கள் என்றால் ஏதோ இருக்கு என்று எண்ணி விட்டு மீண்டும் படுக்க, ஐந்து நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் கடிக்க ஏற்கனவே முன்னேற்பாடாக ஒன் செய்து வைத்திருந்த போனை எடுத்துப் பிடிக்க இரண்டு குஞ்சுகள் ஓடுகின்றன. விரல்களால் அழுத்திவிட இரத்தத்துடன் சமாதியாகின்றன. அதை உடனே போனில் வீடியோவும் படமும் எடுத்துவிட்டு ஆடைமாற்றிவிட்டு போனில் நாம் வழமையாகத் தங்கும் யூரோ லங்கா கோட்டலுக்குப் போன் செய்து இன்றாவது அறைகள் இருக்கின்றனவா என்று கேட்க அவரும் எத்தனைபேர் என்கிறார். நான் மட்டும்தான் என்றுகூற, எத்தனை மணிக்கு வருவீர்கள் என்கிறார். இப்பவே கிளம்புகிறேன். எப்படியும் அரை மணிநேரத்தில் வந்துவிடுறேன் என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தால் இரவு 11.45 என்று நேரம் காட்டுகிறது. அதன்பின் சுமங்கலி வரவேற்புக்குப் போன் செய்ய உடனே வருகிறோம் என்று இருவர் வருகின்றனர். நான் போகப்போகிறேன் என்று முடிவு எடுத்தபின் மின் விசிறியையும் நிறுத்திவிட்டிருந்தேன். அவர்கள் வந்து பார்த்துவிட்டு என்ன நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டிருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்குக் கடிக்கிது என்கின்றனர். அப்ப உங்கள் அறைகளில் மூட்டை இருக்கிறதுதானா என்று கேட்க பதட்டத்துடன் இல்லை என்கிறனர். நீங்கள் AC போட்டுவிட்டு மின்விசிறியையும் போட்டுவிட்டுப் படுத்தால் எதுவும் வராது என்கிறார் மனேஜர். போட்டோ எடுத்தீர்களா என்றதற்கு ஓம் என்கிறேன். நான் போர்வை ஒன்று கொண்டுவந்து தருகிறேன். வடிவாப் போர்த்துக்கொண்டு படுங்கோ ஒண்டும் கடிக்காது என்றவுடன் எனக்கு கோபம் தலைக்கேற “நான் எப்படிப் படுக்கவேணும் என்று நீங்கள் முடிவெடுக்கத் தேவை இல்லை. நான் ஏற்கனவே வேறு இடம் பார்த்துவிட்டேன். என் பணத்தைத் திரும்பத் தாருங்கள் என்று கேட்க, கீழே வாங்கோ என்றபடி என் இரு பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு செல்ல நான் சிறியதை எடுத்துக்கொண்டு செல்கிறேன். கீழே சென்றதும் பணத்தை எடுத்துத் தந்தபடி இதுவரை எமக்கு எந்தவித குற்றச்சாட்டும் யாரிடமிருந்தும் வரவில்லை என்று அவர் கூற, நான் எடுத்த படத்தைக் காட்ட பின்னர் அவர் எதுவும் கூறவில்லை. நான் பிக்மீக்கு பதிந்துவிட்டு ஓட்டுநரின் பெயரையும் ஓட்டோ இலக்கத்தையும் மகளுக்கு வற்சப் செய்கிறேன். உடனேயே ஓட்டோ வந்துவிட அதில் ஏறி அமர்ந்தபடி மகளுடன் போனில் கதைத்தபடியே போய் ஹோட்டலின் முன்னால் இறங்குகிறேன். ஒரு இரவுக்கு 7500 ரூபாய்கள். பணத்தைச் செலுத்திவிட்டு பற்றுச் சீட்டைக் கேட்கிறேன். நாளை தருவதாகக் கூற, பணம் இன்றுதானே தந்தேன். இப்பவே பற்றுச்சீட்டைத் தாருங்கள் என்கிறேன் சிரித்தபடி. நாங்கள் தராமல் விடப்போகிறோமா அக்கா என்கிறார் மற்றவர். நான் ஒருதடவை பற்றுச்சீட்டு வாங்காது மீண்டும் பணம் கட்டிய அனுபவத்தில் தான் கேட்கிறேன் என்றதும் பற்றுச்சீட்டைத் தருகிறார். வாங்கிக்கொண்டு போக அறைக்கு எல்லாப் பொதிகளும் வந்துசேர மணி இரவு 12.30. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாக இருக்க, என்னை நானே மெச்சியபடி படுக்கையில் சாய்கிறேன்.2 points- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
நாங்கள் சோசலிசம், சோசலிசம் என்று இந்திய , ரஸ்ஸிய கொள்கைகளின் பின்னால் ஓடியதால் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக அடையாளம் காணப்பட்டோம். அதன் விளைவே இலங்கையரசு அமெரிக்காவை எமக்கெதிராகப் பாவித்தமை. அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்கிற தெளிவு எமக்கு ஏற்பட்டபோது எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. எமது கையில் இருந்த விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்துவிட்டு இன்று எவரதோ போராட்டத்திற்காக, எவரதோ அதிகாரத்திற்காக, எவரதோ விடிவிற்காக, எவரதோ பாதுகாப்பிற்காக பிரிந்து நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் நாம் எம்முடன் சம்பந்தப்படாத பிணக்குகளில் இடதுசாரியென்றும், வலதுசாரியென்றும் பிரிந்துநின்று எம்மை அடையாளம் காணப் பார்க்கிறோம். நாம் இழந்தவை ஏராளம். இவை எதனையும் மீட்பதற்கான மனோநிலையோ, சூழ்நிலையோ இல்லாத கையறு நிலையில் நானும் நீங்களும் நின்றுகொண்டிருக்கிறோம்.2 points- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஐக்கிய நாடும், ஈரான் நாடும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கில் எங்களின் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் மொத்தமான தீர்வு குறித்து மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான உரையாடல்களின் போக்கையும் நெருக்கடியையும் அடிப்படையாகக் கொண்டு, இவை வாரம் முழுவதும் தொடரும். நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றிக்கு உட்பட்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள் காலத்திற்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்திற்கு நீங்கள் அளித்த கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் -பிபிசி.com1 point- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
இந்த இரணடு சாரிகளின் தலைகள் கூட்டாக கட்டிப்பிடித்து வியாபாரம் பண்ணுவார்கள் அவர்களின் தொண்டர்கள் படும் பாடு பெரியபாடு1 point- ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
யாழ் களத்தில் சிலர் (நீங்கள் அல்ல) - x ஐ பற்றி விவாதித்து தம் கருத்து தோற்கும் போது திடீரென y ஐ பற்றி கேள்வி கேட்டு விட்டு எஸ் ஆகுவார்கள் அல்லவா? தம்பரும் அதுபோலவே, அணுகுண்டை அழிக்கிறேன், மிசைல் வல்லமையை அழிக்கிறேன், என்னிடம் கேட்டு அடுத்த சுப்ரீம் லீடரை நியமிக்க வேண்டும் என போய்…. இப்போ சண்டைக்கு முன் சும்மா திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணையை திறப்பேன் என்ற அளவில் வந்து நிற்கிறார்😂. அப்படியே யாழ்கள தம்பர்களை கண் முன் கொண்டு வருகிறார்.1 point- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு நான் பின்வரும் காரணங்களை காண்கிறேன். ஜனவரியில்தான் 20,000க்கு மேலெ கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் இருந்து மீண்டு மீள போராட 3 வருடம் எடுக்கும். இதுதான் ஈரானில் எப்போதும் நடப்பது. பஃலவி கூட இன்னும் வீதிக்கு இறங்க வேண்டாம் என்றே சொன்னார் யுத்தகால நடைமுறைகள் போராட்டம் இன்னும் மிருக தனமாக அடக்க வழிகோலும். இஸ்ரேலை நம்பிபாலும், தம்பரை நம்பி வீதியில் இறங்க அவர்கள் தயாரில்லை. ஏன் என்றால் ஆரம்பம் முதலே தம்பர் “வெனிசுவேலா” தீர்வைத்தான் விரும்பினார். பஃலவியை கூட அவர் சரிவரார் என கூறி ஒதுக்கினார் தம்பர். நல்லகாலம் தம்பரை நம்பி இறங்கி இருந்தால் மக்கள் அநியாயமாக பழிவாங்க பட்டு இருப்பார்கள். பிகு ஆனால் ஈரானிய மக்களை தாண்டி, ஈரான் இப்படி வெல்வது ஷியா அடிப்படைவாதிகள் இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் நல்ல செய்தி அல்ல. அரபு நாட்டினர் மட்டும் அல்ல, சதாமும், அசாத்தும், கடாபியும், நசாரும் கூட இவர்களில் இருந்து தள்ளியே நின்றார்கள். தனியே இவர்கள் ஷியா என்பது மட்டுமே காரணம் அல்ல.1 point- ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்தார் ட்ரம்ப்
தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.1 point- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அமெரிக்காவில் தற்போது வித்தியாசம் இல்லை என்பது என் அனுபவம் (ஐரோப்பா, கனடா நிலை எனக்குத் தெரியவில்லை). கடைசியாக நான் ஏஜென்சி மூலம் இலங்கைக்கு ரிக்கற் வாங்கியது 2012 இல். அதுவும் வாழ்ந்த நகரத்தில் எனக்கு அறிமுகமான ஒரு இந்தியர் ஏஜென்சி வைத்திருந்ததால் அவருக்கு போனைப் போட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களின் பல பயணங்கள், எல்லாம் நேரடியாக இணையத் தளத்தில் தான். இதில் பல சௌகரியங்கள் உண்டு. தற்போது போன் app கள் இருக்கின்றன. பெரும்பாலான விமான சேவைகளுக்கு app மூலமே check-in செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில், ஆவணத்தைக் காட்டி பயணப் பைகளை நிறுத்து அவர்களிடம் கொடுத்து விட்டுப் போக வேண்டியது தான். பயண முகவர்கள் மூலம் பயணச் சீட்டு வாங்கினாலும், இறுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனின் பயணி விமான நிறுவனத்திடம் தான் நேரில் செல்ல வேண்டும், மேலே சுமே சென்றது போல. எனவே, என்ன வகையான பயன் பயண முகவர்களிடம் வாங்குவதால் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அப்படியான ஏதும் பயன்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
நல்லதொரு முயற்சி, கிருபன்.................❤️. செயற்கை நுண்ணறிவு பரவலாக அறியப்படாத காலத்திலேயே மதன் கார்க்கி தான் பாட்டுகளை எப்படி கணனி மூலம் எழுதுகின்றேன் என்று சொல்லியிருந்தார். அந்த வீட்டில் இருந்து அவராவது உண்மையைச் சொல்லுகின்றார்..............🤣. இரண்டு வருடங்களின் முன் ஒரு நிகழ்வில் என்று நினைக்கின்றேன், யுவன் சங்கர் ராஜா இனிமேல் தங்களுக்கு வேலை கிடையாது என்றும் சொல்லியிருந்தார். பதிப்புரிமை, காப்புரிமை போன்றன இருந்துமே பெரும்பாலான படைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு, வாழ்வுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. அடுத்த கட்டம் இப்பொழுது ஆரம்பித்துள்ளது............. கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் என்னும் செயற்கை நுண்ணறிவுக் காலம்.............1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
1 point- தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்: வடகிழக்கு மக்கள் அதிருப்தி!
23 Mar, 2026 | 03:33 PM வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன இழிவுபடுத்தல்,வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே உடன் நிறுத்து என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து ஊர்வலமாக வந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் தேவைகளுக்கு குரல்கொடுப்பதை விடுத்து இனங்களிடையே இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் வெளிப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்போது பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர், பெண்கள் விவகார அமைச்சர்,மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிற்கான அனுப்பவதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும். மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும். மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும். இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய தெளிவான மற்றும் வலுவான பாராளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது, ,வ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை ,ணைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும். “நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதனை சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எங்களது உறுதியான எதிர்ப்பு தொடரும்.” தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்: வடகிழக்கு மக்கள் அதிருப்தி! | Virakesari.lk1 point- பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
கேக்கின் விலை கூடி உள்ளதா ? புஹா ஹா ஹா1 point- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
தம்பர்🤡 சொன்னது போல் அப்படி ஒரு பேச்சும் இல்லை வார்த்தையும் இல்லை என ஈரான் சொல்லி உள்ளதாம் 😂1 point- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
1 point- தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
திராவிட தொப்புள் கொடி பந்தம் இல்லாமலா அனுரா அம்மான் யாழ்பாணத்தில் றோட்டால் சும்மா வாங்கிங் போனாலே ராஐ நடை வீர நடை கம்பீர நடை என்கின்றார்கள்.1 point- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
அல்லாகு அக்பர் சொல்லி தாக்குபவர்களை அவர்களின் ஆதரவாளர்களை கட்டிபிடிப்பவர் இடதுசாரி ஓம் நமச்சிவாய சொல்பவர் வலதுசாரி நடிகர் விஜய் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் போன்று அந்தோனி அல்பானீஸ் அய்யாவும் ரம்ஜான் விழாவிற்கு சென்று தான் ஒரு இடதுசாரி என்பதை நிருபித்துள்ளார். அவர் முகம் மகிழ்ச்சியில் காணபட்டது1 point- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அண்ணையின் குணம் தெரியாமல் நல்லாத்தான் பாவம் பாக்கிறிய😃ள்1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்
சும்மா இருந்த நாட்டை சீண்டி, அவர்கள் கையில் அதிகாரம் கொடுத்துள்ளார்கள். பத்து ஆண்டுகளுக்கு தமக்கு இரானால் அச்சுறுத்தல் இல்லை என்றார் நெத்தன்யாகு, இரான் அமெரிக்காவோடு ஒத்து உறவாட வேண்டும் என்றார் ட்ரம்ப், இப்போ அமெரிக்கா இஸ்ரேலோடு தொடர்புள்ளவர்களுக்கே பாதுகாப்பே இல்லை என்கிறது இரான், அரபு நாடுகள் அமெரிக்காவோடு சேர்ந்து இயங்குவது பற்றி ஆலோசிக்கின்றன. இரண்டு முட்டாள்கள் சேர்ந்து சாதித்தது இவைதான். அதிக தலைக்கனம் இப்படித்தான் தலைகுனிவை ஏற்படுத்தும். தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென நினைத்து ஒதுங்க வேண்டும் இவர்கள்.1 point- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
60, 65 தாண்டினாலே பிரச்சனை தான் போலும்.வீட்டுக்கார அண்ண உண்மையாக பாவம் தான்.🤭1 point- தமிழர்களும் சிங்களவர்களும் இன ரீதியில் பொதுவான மூலத்தைக் கொண்டவர்களே - வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு
தம்பர் ஈரானுக்கு அடிச்சது போல் இறங்கி உள்ளீர்கள். ஈயு மாதிரி நான் தூர நிண்டு பார்ப்பது மட்டுமே.1 point- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
சும்மா பகிடி விடாதையுங்கோ.... அவையல் புரட்சி படையினர்..40 வருசமா ஒற்றை தலைவன் என்றால் சும்மாவே .... அமேரிக்காவுக்கு எதிராக எவன் துவக்கை நீட்டுறானோ அவன் இடதுசாரி.... அமெரிக்கா தம்பதிகளை கடத்தினாலும் புரட்சிவாதி தான் ... அமெரிக்காவுக்கு பின் கதவால் ஆமா சொல்லி கதவி திறந்து விட்டு முன் கதை மூடி தாழ்பால் போட்டால் அவனும் புரட்சி திலகம் இடதுசாரி அம்மான்1 point- 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
வடகொரியாவை மறந்திட்டியல்,இவர்கள் தான் 1971 ஆம் ஆண்டு சிறிலங்கா தீவாரின்ட புரட்சிக்கு ஆயுதம் வழங்கியவர்கள் ..இவையளின்ட ஆயுத கப்பலை இந்திய காந்திய படைகள் கைப்பற்றினவையள் அத்துடன் சிலரை கைது செய்தவைள். அன்று இந்த தீவாரின்ட புரட்சி வெற்றியடைந்திருந்தால் ரோகண வீஜயவீரவின் மகன் இன்று ஜனாதிபதியாக இருந்திருப்பார்...நம்மட தமிழ் புரட்சிவாதிகளுக்கு அனுரா அம்மான் கிடைத்திருக்க மாட்டார்... ஈரான் இன்று இவ்வளவு கஸ்டப்பட வேண்டி வந்திருக்காது...சிறிலங்காவிலிருந்து ஈரானின் புரட்சி பயங்கரவாத படைகள் அமெரிக்காவை அதிரடி தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும். வடகொரியா,சீனா,ஈரான் போன்ற நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சிறிலங்கா தீவாரின் புரட்சி படை துவசம் பண்ணியிருக்கும்...ட்ரம்ப் வெனிசுலவை கைப்பற்றுவதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. அனுரா அம்மான் இப்பவே அமெரிக்காவுக்கு தளம் தரமாட்டேன் என சொல்லுகிறார் என்றால் பாருங்க்கவன்1 point- தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி?
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் பற்றிய தமிழ் யுரியுப்பர்களின் காணொளி தயாரிப்புகள் போன்றது என்று சொல்கிறீர்கள் 😂1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
கிருபனுக்கு வேணும். நான் முன்னமே கதைக்களத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜெயமோகனால் வந்த வினை.1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
கிரிக்கட்டு மூளையுக்குள்ளை...இப்படியும் கவிதை வருமா...அது பாட்டாகவும் ..காணொளியாகவும் வருமா...மிகவும் அருமை ..தொடருங்கள்1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
அது நான் திருத்தியது இல்லை! AI பாடல்வரிகளாக மாற்றித் தந்தது! “சிமிட்டக் கண்டேன்”😘 என்பது மட்டும்தான் எனது சொந்த வரி😂🤣 படங்களை யாழில் இணைப்பது இலகு. சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மெனு (Menu) க்குப் போய் Gallery ஐ தெரிவு செய்து Add Images (வலது பக்க மேல் பகுதியில்) ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
பாராட்டுக்கள் ...தொடரட்டும் கவிதையில் வரும் வரிகள் யாவும் காட்சியாக வரும் என நினைத்து ஏமாந்து போனேன்🤣...ஈரான்காரனின் ஏவுகணைகள் எத்தனை இலக்க்கை தாக்காமல் வீணாக வானில் வெடிக்குது தானே என நினைத்து சமாதானம் அடைந்தேன்...🤣1 point- டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி அவிக்கின்றார்கள். உண்மை, பொய்யை பிரித்தறிய முடியாத நிலை. எதுவரை செல்கின்றது என பார்ப்போம்.1 point- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
1 point- கருத்து படங்கள்
- தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.