Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89365
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8586
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3101
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34065
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/25/26 in Posts

  1. சவுதியின் ரியாத் ஏயாப்போட்டில் ஏழு மணிநேரம் எப்படியோ போய்விட்டது இன்னும் ஒரு மணிநேரத்தில் விமானத்தில் இருப்போம். எட்டு மணித்தியாலத்தில் லண்டனில் நிற்பம் என்று எண்ண ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விமானம் புறப்படும் நேரத்துக்கு இன்னும் 20 நிமிடங்கள்தான் இருக்கு. ஆனாலும் எம்மை இன்னும் விமானத்தில் ஏற்றவில்லை. பணிப்பெண்களோ விமான ஓட்டியையோ கூடக் காணவில்லை. என்ன இது மீண்டும் பிந்தபோகிறதோ என்று சினத்துடன் வேறு வழியற்றுக் காத்திருக்க, கவுண்டர் திறக்கப்பட்டு ஆடிப்பாடி இருவர் வருகின்றனர். இப்பதான் எமது விமானம் “Saudia” வந்து சேர்ந்திருக்குப் போல என எண்ணியபடி எழுகிறேன். அதன்பின் 15 நிமிடம் கழித்தே எல்லோரையும் விமானத்தில் ஏற அனுமதிக்கின்றனர். காலை 6.30 மணிக்கு வெளிக்கிட்டிருக்கவேண்டிய விமானம் ஒன்பது மணிக்குத்தான் வெளிக்கிட ஆயத்தமாகுது. ஒரு வரிசையில் மூன்று மூன்றாக ஒன்பது இருக்கைகளே. ஒவ்வொரு மூன்று இருக்கையிலும் ஒவ்வொருவரே இருக்கின்றனர். அது ஒருவகையில் மகிழ்வாக இருந்தாலும் ஏன் இந்த விமானத்தில் சனமே இல்லை என்ர பயமும் வர வெளியே பிராக்குப் பார்க்க, வேறொரு விமானத்தைத் தவிர ஏதுவுமே தெரியவில்லை. எல்லோரும் எறிமுடிந்தும் நேரம் பத்து நிமிடம் போனபின்னர்தான் விமானம் ஸ்டார்ட் ஆகி அப்படியே நிற்கிறதே தவிர 20 நிமிடமாக நகரவே இல்லை. என்னடா இது சோதனை. பக்கத்திலும் யாரும் இல்லை. பணிப்பெண்களையும் காணவில்லை. எட்டிப் பார்க்க அவர்களும் இருக்கைகளில் இருப்பது தெரிய வேறு வழியின்றி பேசாமல் இருக்கிறேன். ஸ்கிரீனில் ஏதும் பார்க்கலாம் என்றால் அதை மாற்றவே முடியவில்லை. அதுபோக எனது கெட்போன் அதில் எனது கெட்போனை கொழுவமுடியாமல் இருக்கு. விமானம் வெளிக்கிட்ட பின்தான் திறந்துவிடுவார்கள் போல என எண்ணியபடி கண்ணை மூடிக் கிடக்கிறேன். மீண்டும் ஒரு பத்து நிமிடங்கள் செல்ல விமானம் மெல்ல நகர கண்ணைத் திறந்து பார்க்கிறேன். விமானம் மிக மிக மெதுவாகவே ஊருகிறது. என்ன பிரச்சனை இவங்களுக்கு. விமானம் ஊர்வதால் அவர்களை அழைக்கவோ எதுவும் கேட்கவும் முடியாது. என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிகிறது. மீண்டும் சிறிது நகர்ந்து நிற்கிறது. சரியாகப் பத்துமணி ஆகும்போது தூரத்தில் நெருப்பு எரிவதுபோல் இரு இடங்களில் தெரிகிறது. அது உண்மையில் நெருப்புத்தானா அல்லது என் நினைப்பா என்று தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் பரவலாக புகைபோல் தெரிய அது நெருப்பினால் வந்த புகையா அல்லது புகார் எதுமா என்று எண்ணியபடி எட்டி எட்டிப் பார்க்க எதுவும் தெரியவில்லை. விமானத்துள் எந்தச் சத்தமும் இன்றி அமைதியாக எல்லோரும் இருக்கின்றனர். பத்து நிமிடங்களின் பின்னர் மிக மெதுவாக ஊரத் தொடங்கிய விமானம் மெதுவாக நகர்ந்து ஓரிடத்தில் திரும்பிச் சென்று ஐந்து நிமிடங்களின் பின் இன்னொரு இடத்தில் திரும்புகிறது. நேரம் பிந்தியதில்த்தான் எமது விமானத்தை இன்னும் ஏறவிடலில்லை என்று நான் எண்ணியதைப் பொய்யாக்கியபடி எமது விமானத்துக்குப் பின்னே ஒரு பத்து விமானங்கள் வரிசையில் நிற்கின்றன. அப்போதுதான் எந்த ஒரு விமானமும் இதுவரை இறங்கவில்லை என்பது தெரிகிறது. ஏனோ தெரியவில்லை எனக்கு பதட்டமோ பயமோ ஏற்படவில்லை. ஏதோ நடப்பது நடக்கடும். சனீஸ்வரரே என் கணவர் பிள்ளைகளிடம் என்னைச் சேர்த்துவிடுங்கள் என்று மனதுள் எண்ணியபடி வெளியே பார்க்கிறேன். அதன் பின் எந்தப் புகையோ நெருப்போ கண்ணில் படவில்லை. எமக்கு முன் உள்ள ஓடுபாதையில் வேறுபக்கம் இருந்து ஒரு விமானம் வந்து மேலெழும்ப சிறிது நேரத்தில் எமது விமானமும் மெதுவாக மேலெழ அப்பாடா என்று நிம்மதி ஏற்பட்டாலும் ஏன் இப்படி மிக மெதுவாக மேலெழுகிறது? முன்னர் பயணித்த எந்த விமானமும் மேலெழும்போது இத்தனை மெதுவாக ஏறியதில்லையே. முன்னர் ஒரு தடவை ஜெர்மனியில் இப்பிடித்தான் இரண்டு மணிநேரம் பிந்திய easyjet விமானம் அரைமணிநேரம் மேலே வட்டமிட்டுவிட்டு மீண்டும் கீழே வந்து எம்மை இறக்கியது நினைவில் வர, இவர்களும் அப்பிடித்தான் செய்யப்போகிறார்களோ என்று சலிப்பும் வர ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்தின் பின்னரே மேகக் கூட்டங்களிநூடு மேலெழுந்து சென்றபின்னர்தான் நிம்மதியானது. பாதுகாப்புப் பட்டியின் படம் மறைந்த பின், படம் பார்ப்போம் என்று பார்த்தால் கெட்போன் இன்னும் தரவில்லை. அவர்கள் தரும்வரை பொறுமையுடன் இருந்து வாங்கிக் கொழுவினால் எனக்கு முன்னால் உள்ள ஸ்கிரீனில் படம் விக்கிவிக்கி அப்பப்ப நின்று வர, பக்கத்து இடத்துக்கு மாறினால் அங்கும் அதே பிரச்சனை. சிறிது நேரத்தில் தமது விமானத்தில் இன்ரநெற் சரியாக வேலைசெய்யாமைக்கு வருந்துகிறோம் என்கின்றனர். சீற் தான் தாராளமாக இருக்கே என்று எண்ணியபடி மற்றய இரண்டு இருக்கைகளிலும் இருந்த சிறிய தலையணைகள் விரிப்புகள் எல்லாம் எடுத்து தலைக்கு வைத்தபடி படுக்க நல்ல தூக்கம் வருகிறது. உணவின் வாசனை என்னை எழுப்ப எழுந்து அமர்கிறேன். இரண்டுமணிநேரம்தான் போயிருக்கு. மரக்கறியா சிக்கிணா என்று விமானப் பணிப்பெண் கேட்க சிக்கிண் என்கிறேன். இலங்கையில் நின்றபோது ஐந்து மாதங்களில் மூன்றோ நான்கோ நாட்கள்தான் கோழிக்கறி உண்டாதனால் அவர்கள் தந்த உணவு நன்றாக இருப்பதுபோல் இருக்கிறது. மோகன்லாலின் படம் ஒன்றைப் பார்க்கப் போட்டால் இரண்டரை மணிநேரப்படம் நின்றுநின்று மூன்று மணித்தியாலங்கள் சென்று முடிய மீண்டும் கண்ணை மூடி இருந்தபடியே தூங்குகிறன். கீத்துறோ விமான நிலையத்தை இன்னும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடுவோம். என்ற அறிவிப்பு வர மகிழ்ச்சி ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மீண்டும் சிறிய உணவு ஒன்று தருகிறார்கள். திறந்து பார்த்தால் சலாமி, காளான் எல்லாம் போட்ட பீட்ஸா. சாப்பிட்டபின் மனதும் வயிறும் நிறைந்துபோயிருக்க ஸ்கிரீனில் விமானம் செல்வதைப் பார்க்க இன்னும் முப்பத்தைந்து நிமிடங்களில் இறங்குமிடம் என்று காட்டுகிறது. திடீரென எல்லோரையும் பாதுகாப்புப் பட்டி அணியும்படி அறிவிப்பு வருகிறது. விமானம் மூன்று நான்கு தடவை குலுங்கிவிட்டுச் சரியாகிறது. நேரம் 9.45 இன்னும் பதினைந்து நிமிடத்தில் தரையிறங்க வேண்டும் ஆனால் சரியாக இருபத்தைந்து நிமிடங்கள் மேலேயே வட்டமிட்டுவிட்டு சரியாக 10 மணிக்கு இறங்கவேண்டிய விமானம் 10.30 மணிக்குத் தரையைத் தொட்டபின் தான் மனம் ஒரு நிலையாகிறது. கீழே இறங்கி பொதிகளை எடுப்போம் என்று சென்றால் பொதிகள் முதலே வந்துவிடும் என்று இலங்கையில் சொன்ன நினைவு வர பொ திகளுக்குப் பொறுப்பான கவுண்டருக்குச் சென்று எமது பொதிகள் இந்த விமானத்தில் வரவில்லை. நேரே இலங்கையில் இருந்து இங்கே அனுப்புகிறேன் என்று கூறினார்கள். நான் ரியாத்தில் இருந்து வருகிறேன் என்றபடி எனது போடிங்பாசில் ஒட்டியிருந்த அட்டைகளை எடுத்துக் கொடுக்கிறேன். இது ரியாத்தில் தந்த போடிங்பாஸ் தானே என்றுகேட்க ஓம் என்கிறேன். நீங்கள் தமிழா என்று கேட்க ஓம் என்கிறேன். அவர் தமிழில் இன்று வந்த போடிங் பாசில் ஒட்டியுள்ளபடியால் இன்றுதான் நீங்கள் வந்த விமானதில்த்தான் உங்கள் பொதியும் வந்திருக்கும். ஏழாம் இலக்கத்துக்குப் போங்கள் என்று கூற நான் எதுவும் பேசாமல் ஒரு தள்ளுவண்டியை எடுத்து அதில் எனது சிறிய பொதி, கைப்பை எல்லாவற்றையும் வைத்துத் தள்ளிக்கொண்டு ஏழாம் இழக்கத்துக்குப் போனால் அங்கு இன்னும் பொதிகள் வர ஆரம்பிக்கவில்லை. முன்னர் ரியாத் எயாப்போட்டில் என்னுடன் வந்து கதைத்த இருவரும் இன்னும் இருவரும் என்னருகில் வந்து நிற்க, எனது பொதி முன்னரே இங்கு வந்துவிடும் என்று இலங்கையில் கூறினார்கள் என்கிறேன். அப்பிடி வராது எம்மோடுதானே எமது பொதிகள் வரும் என்கிறார் ஒருவர். மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். அவள் வடிவாகக் கூறினாளே. இவர்கள் இப்படிச் சொல்கின்றனர். சிலவேளை ரியாத்தில் நாம் பொதிகளைத் தேடலாம் என்று அவள் சொல்லியிருப்பாளா என்ற எண்ணமும் ஓட எதுவும் பேசாமல் பாத்துக்கொண்டு நிற்கிறேன். பொதிகள் வரத்தொடங்கவும் எல்லோரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக வந்து இறங்கியாச்சா என்று கணவர் போன் செய்கிறார். வந்தாச்சு. இன்னும் பொதிகள்தான் வரவில்லை எடுத்துக்கொண்டு வாறன் என்றுவிட்டு போனை வைக்கிறேன். எல்லாரும் அவரவர் பொதிகளை எடுத்துக்கொண்டு போக ஒரு பன்னிரண்டு பேர் மட்டும் நிற்க எமது பொதிகள் மட்டும் வரவேயில்லை. அதில் எல்லாப் பொதிகளும் வந்துவிட்டதாகப் போட நான் வண்டிலைத் தள்ளிக்கொண்டு முன்னர் போன இடத்துக்குப் போகிறேன். அவரிடம் எனது பொதிகள் இரண்டும் வரவில்லை. முன்னரே சொன்னேன் தானே என்கிறேன். அப்படியா என்றுவிட்டு ஒரு படிவத்தை எடுத்து நிரப்பும்படி தருகிறார். நல்ல ஏச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் வேறு வழியில்லாமல் படிவத்தை வாங்கி பக்கத்தில் உள்ள மேசையில் வைத்து என் விபரங்களை எழுதிவிட்டு நிமிர, நான் நின்ற இடத்தில் வேறு இருவர் வந்து நிற்க நான் மற்றக் கவுண்டருக்குச் சென்று படிவத்தைக் கொடுக்க, அவர் சிஸ்டத்தில் பதிந்துவிட்டு நாளை DPD உங்கள் பொதியை வீட்டுக்கே கொண்டுவந்து தருவார்கள் என்றபடி ரிசீற்றைத் தர வாங்கிக்கொண்டு வெளியே வர குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது. நான் வெளியே வந்து காரில் ஏறி மகளுக்குப் போன் செய்து நான் வந்து சேர்ந்திடடன் என்று கூற, ரியாத் ஏயாப்போட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் அமெரிக்கத் தளத்தின் மீது தாக்குதல் நடந்தது. அவர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியதாக இருக்கு. நீங்கள் பயந்துவிடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை என்கிறாள். அதனால்த்தான் விமானங்கள் பறக்காமல் இருந்திருக்கு. உங்கள் விமான நிலையத்துக்கு அண்மையில் இருந்துதான் எதிர்த் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் என்று இன்னொரு நண்பரும் கூறினார். கடவுள்தான் எம்மைக் காப்பாற்றியிருக்கிறார். முடிந்தது
  2. நான் 2022 இல் கொழும்பில் நின்றபோது Odel இல் ஷொப்பிங் முடித்து முன்னால் நின்ற ஆட்டோவைப் பிடித்தேன். ஆட்டோக்காரன் தமிழன் அல்லது முஸ்லிம். ஆனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்தான். எனக்கு கொழும்புக்குப் போனால் சிங்களவரோடும் திமிராக தமிழில்தான் கதைக்க விருப்பம்😄 நான் தமிழில் ஆட்டோவுக்கு பேரம்பேச அவனும் தமிழில் கதைத்தான். அப்ப இப்போது போல் பெற்றோலுக்கு QR கோட் பாவிக்கவேண்டும்! வெள்ளவத்தைக்குப் போக 300 ரூபாவுக்கு ஒத்துக்கொண்டான். ஆனால் ஒரு வேண்டுகோளை வைத்தான். அவன் சொல்கிற இரத்தினக்கல் எக்ஸிபிஷன் கடைக்குப் போய் எக்ஸிபிஷனைப் பார்த்தால் அவர்கள் பெற்றோல் அடிக்க QR கோட் தருவார்கள். தனக்கு உதவியாக இருக்கும் என்றான். எனக்கு இலவசமாக எவர் என்ன தந்தாலும் வாங்கும் பழக்கம் இல்லை. அத்தோடு இந்தியாவில் பெங்களூருக்குப் போனபோது எனக்கு வேலை நண்பர்கள் சொன்ன அட்வைஸும் ஞாபகத்தில் வந்தது. ஒருபோதும் ஓட்டோக்காரர், ரக்ஸிக்காரரிடம் உணவகம், ஷொப்பிங் கடைகளுக்கு எங்கே போகலாம் என்று கேட்கக்கூடாது. அவர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக எங்கே போகவேண்டும் என்று சொல்லிவிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். என்றாலும் ஓட்டோக்காரனுக்கு பெற்றோலுக்கு உதவ இரத்தினக்கல் எக்ஸிபிஷனுக்கு போக ஒத்துக்கொண்டேன். அது கொள்ளுப்பிட்டியில்தான் இருந்தது. முஸ்லிம்களின் கடை என்று நினைக்கின்றேன். எக்ஸிபிஷன் ஹோல் என்று எதுவுமில்லை. நான் எச்சரிக்கையாகி உள்ளே போனேன். ஆனால் இலண்டன்காரன் ஆகி இங்கிலிஸீலில் மட்டும் கதைத்தேன். வாங்கும் ஆர்வம் இருக்கிறமாதிரி ஃபோனில் படங்கள் எல்லாம் எடுத்தேன். அவர்கள் ஆள் வாங்கப்போகின்றார் என்று உடைத்த குளிர்பானம் கொண்டுவந்தார்கள். ஆனால் மூடி எனக்கு முன்னால் உடைக்காவிட்டால் நான் தருவதைக் குடிப்பதேயில்லை. சும்மா கொஞ்ச நேரம் இரத்தினக்கல்லுகளைப் பற்றியும், விலைகளையும் கேட்ட பின்னர் வட்ஸப்பில் மனைவியுடன் வீடியோகோல் எடுத்து அவற்றைக் காட்டி அவருக்கு டிசைன் பிடிக்கவில்லை, அவர் வந்துபார்த்துத்தான் வாங்குவா என்று சொல்லி வெளியே வந்துவிட்டேன். ஓட்டோக்காரனுக்கு QR கோட் கிடைத்திருந்தது. அவன் தனது காரியத்தில் கெட்டிக்காரன் என்றும் தெரிந்தது! உங்கள் அனுபவத்தைப் பார்த்தால் நான் மனத்தை மாத்தாமல் இருந்தது ஏமாறாமல் காப்பாத்தி இருக்குதென்று தெரிகின்றது!
  3. பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
  4. விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதாக இருந்தால் பொதுவாக என் குடும்பத்தைத் தவிர வேறு யாரிடமும் அதை ப் பற்றி நான் கதைப்பதில்லை. “எதற்கு வில்லங்கத்தைச் சும்மா வாங்க வேண்டும்?” என்ற உயரிய எண்ணம்தான் அதன் காரணம். ஆனால், சில சமயம் வில்லங்கம், நாங்கள் தேடாமல் எங்களைத் தேடித் தானாக வந்து விடும். அடுத்த நாள் எனது பயணம். செய்ய வேண்டிய வேலைகள் சில இருந்தன. அப்போது அலைபேசி அழைத்தது. அழைப்பு நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது. அங்கு வசிக்கும் எனது உறவினர் ஒருவர். என்னை “தம்பி” என்று உரிமையோடு அழைப்பார். நானும் அவரின் பெயரின் பின்னால் “அக்கா” சேர்த்துஅழைப்பேன். “என்ன, சிறீலங்கா போறியாம்?” “சிறீலங்காவுக்கா? யார் சொன்னது?” “விடாதை . கதை விடாதை . எனக்குத் தெரியும். சிறீலங்காவிலையிருந்து எனக்கொரு தாலிக்கொடி வாங்கி அனுப்பிவிடுறியே?” தங்கம் விற்கும் விலையில் தாலிக்கொடி வாங்க வேண்டுமா என்ற எண்ணத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது. நல்லவேளை அவர் அடுத்ததாகச் சொன்னவார்த்தைகளில் நான் தப்பித்தேன். “பவுணில இல்லை. இமிட்டேஷன் தாலிக்கொடி. இஞ்சை எனக்குத் தெரிஞ்ச ஒருத்தியின்ரை மகளுக்கு கொஞ்ச நாளைக்கு முன் கல்யாணம் நடந்தது. அவையள் ஹொலிடேக்குப் போயினம். போற இடத்திலை சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் போவினம். பவுண் தாலிக்கொடியை போட்டுக் கொண்டு போய் எதுவும் நடந்தாலும் எண்டு பயப்படுயினம். அதுக்குத்தான். வெள்ளவத்தையில வாங்கலாம். ‘யாழ்ப்பாணத் தாலிக்கொடி’ என்று கேள். வட்டமா இருக்கும்.” நான் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் இருக்க முயன்றாலும், வில்லங்கம் எப்படியோ என்னைத் தேடி வந்துவிடும் போல. இந்த இமிட்டேஷன் யாழ்ப்பாணத் தாலிக்கொடியே அதற்கான ஆரம்பமாக இருக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. கொழும்பில் நான் வழமையாகத் தங்குவது என் நண்பன் கணேசனின் வீட்டில். அவன் சட்டத்தரணியாக இருந்த காலத்தில் மாலை நேரத்தில் மட்டும் “தீர்த்தம்” அருந்துவான். இப்போது வயதும் ஓய்வும் சேர்ந்து, மதியம் ,மாலை இரு வேளைகளிலும் தீர்த்தக் களிப்பில் இருக்கிறான். இந்த வருடப் பொங்கலை அவனுடனேயே கொண்டாடினேன். 40, 45 வருடங்களுக்கு பிறகு நான் காணும் பொங்கல் அது. பொங்கல் முடிந்து இரண்டுநாட்களுக்குப் பிறகு நியூசிலாந்து அக்கா கேட்ட யாழ்ப்பாணத் தாலிக்கொடி நினைவுக்கு வந்தது. அதை வாங்கி அனுப்பிவிட்டு அடுத்த வேலையைப்பார்க்கலாம் என்று கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். நான் வாங்கி வந்த தாலிக்கொடியைப் பார்த்து கணேசனின் மனைவி உடனேயே சொன்னார், “பிழையா வாங்கிட்டீங்கள். இது இமிட்டேஷன் என்று அப்பிடியே காட்டிக்குடுக்கும்.” சொன்னதோடு மட்டும் நின்று விடாமல், தனது கழுத்தில் இருந்த தடித்த தாலிக்கொடியைக் காட்டினார். “இது செய்து எத்தினை வருசமாச்சுது . செத்த பாம்பு மாதிரி இருக்குது. அவன் வாங்கினது சரிதான். யாழ்ப்பாணத் தாலிக்கொடி இப்பிடித்தான். இதுதான் இப்ப பாஷன்” என்று கணேசன் என்னைக் காப்பாற்றினான். “சிவபெருமான் கழுத்தில சுத்தியிருக்கிற பாம்பு மாதிரி…” என்று முணுமுணுத்தபடி கணேசனின் மனைவி எங்களை விட்டு அகன்றார். அடுத்த நாள் அந்த யாழ்ப்பாணத் தாலிக்கொடியை நியூசிலாந்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தாலிக்கொடி வாங்கச் சென்றபோது ஒரு கடையில் பார்த்த ஒரு விளம்பரம் என்னைச் சற்று யோசிக்க வைத்தது. “மாணிக்கக்கற்கள் பொருந்திய நகைகள் 40% முதல் 60% வரை தள்ளுபடி” என்று ஒரு கண்காட்சி விளம்பரம். சும்மா போய் பார்த்து வரலாம் என்று நினைத்து அந்த கண்காட்சிக்குச் சென்றேன். இடம் கொள்ளுப்பிட்டிய. அங்கு சென்றபோது, மூன்று ஊழியர்களும் ஒரு காவலாளியும் தவிர வேறு யாரும் இல்லை. அப்போதே திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக உள்ளேபோனேன். அங்கு சபையர் கல் பதித்த ஒரு மோதிரம் என்னைக் கவர்ந்தது. அவர்கள் சபையரை பரிசோதித்து காட்டினார்கள். மோதிரம் 14 கரட் என்று சொன்னார்கள். விலையையும் குறைத்துத் தந்தார்கள். நான் வாங்கிவிட்டேன். யேர்மனிக்குத் திரும்பினேன். சிறீலங்காவில் +30°C யேர்மனியில் -12°C என காலநிலை இருந்தது. நேரமாற்றமும் குளிரும் சேர்ந்து நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். எழுந்தபோது சூட்கேஸ் எல்லாம் திறந்து ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. உடுப்புகள் தோயலுக்குப் போயிருந்தன. கொண்டு வந்தபொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குள் மோதிரப் பெட்டியும் இருந்தது. மனைவியை ஆச்சரியப்படுத்த வாங்கி வந்த மோதிரம். “நல்ல வடிவான மோதிரம்,” என்றாள். கண்காட்சியில் வாங்கிய விபரத்தைச் சொன்னேன். ஆனால் அந்த மோதிரத்தை நான் மீண்டும் பார்த்தபோது, வாங்கிய போது இருந்த கவர்ச்சி கல்லில்இப்போது குறைந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. தவறு கல்லிலா? இல்லை நீண்ட நித்திரையில் இருந்த என் கண்களிலா? அந்தச் சந்தேகத்தை அப்போது மனைவியிடம் சொல்லவில்லை. அவளது மகிழ்ச்சி வீணாகிவிடக் கூடாது என்று நினைத்தேன். இரண்டு நாட்களுக்கு பிறகு வழமையான வாழ்க்கைக்கு திரும்பியபோது என் சந்தேகத்தை மனைவியிடம் கூறினேன். “கடையில குடுத்துக் கேட்டால் அதன் பெறுமதி சொல்லிவிடுவினம். வேணுமென்டால் நான் கேட்டுப் பார்க்கிறன்,” என்றாள். அடுத்த நாள் முடிவு தெரிந்தது. மோதிரம் 14 கரட் தங்கம். அதில் பொருத்தியிருந்தது உண்மையிலேயே சபையர் கல்லுதான். ஆனால் அதன் தரம் வெறும் 0.9 கரட் மட்டுமே. வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் வந்தபின்னே அது தாழைமரம் அதாவது நான் கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ற கல் இல்லை. நான் பார்த்த மோதிரத்தை மாற்றி வேறு ஒன்றைத் தந்திருக்கலாம் என்ற சந்தேகம்உறுதியாகியது. அவர்களின் விவரங்களை இணையத்தில் தேடியபோது, நான் தனியாளாக இல்லை. எனக்குத் துணைகளும் இருப்பது தெரிந்தது. என்னைப் போல சிலவெளிநாட்டவர்களும் ஏமாற்றப்பட்டிருப்பது அங்கே பதியப்பட்டிருந்தன. யேர்மனியில் என்றால் இப்படிப்பட்ட விஷயங்களைச் சட்டப்படி சுலபமாக கையாளலாம். ஆனால் சிறீலங்காவில் நடந்த விஷயம். அதுவும் நான் யேர்மனியில்இருந்து கொண்டே முடியுமா? “விட்டு விடலாமா?” என்ற எண்ணம் ஒரு கணம் வந்தது. உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள்? குறைந்தபட்சம் சிலருக்காவது இது பற்றி எச்சரிக்கையைத் தரவேண்டும் முதலில் யேர்மனியில் உள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு முழு விவரத்தையும் எழுதினேன். அவர்கள் உடனடியாக பதில் அனுப்பினார்கள், “இந்த தீவிரமானவிஷயத்தை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி. உங்கள் புகாரை விசாரணைக்காக இலங்கையில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்குஅனுப்பியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் தெரிவிப்போம்.” அடுத்ததாக என் வங்கியையும் தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்னது, “நீங்கள் வாங்கிய பொருள் உங்களிடம் இருக்கிறது. ஆகவே நேரடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அந்தப் பொருளைஅவர்களிடம் ஒப்படைத்து அவர்கள் பெற்றுக்கொண்டதாக உறுதிப்பத்திரம் கிடைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.” மோதிரம் வாங்கிய ரசீதைப் பார்த்தேன். அதில், “Goods once sold can be exchanged only” என்று இருந்தது. ஆனால் நான் விடவில்லை. அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினேன், “வாங்கிய பொருள் தரமற்றது. கொடுத்த பணத்தின் மதிப்புக்கு ஏற்ப இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளைத் திருப்பி அனுப்புகிறேன். பணத்தை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவும். 14 நாட்களில் பதில் வரவில்லை என்றால் சட்ட நடவடிக்கைஎடுப்பேன்.” காத்திருந்து சரியாக 14வது நாள் அவர்கள் பதில் அனுப்பினார்கள். “நாங்கள் விற்ற பொருள் தரமானது. திருப்பிப் பெற முடியாது.” எதிர்பார்த்த பதில்தான். “அப்படியானால் நான் சட்ட நடவடிக்கை எடுக்கிறேன். உங்களின் இறுதிப் பதிலுக்கான கால எல்லை நாளை சிறீலங்கா நேரம் 14:00வரை” எனப் பதில் அனுப்பினேன். மீண்டும் நான் எதிர்பார்ததபடி நேர எல்லைக்குள் அவர்களிடம் இருந்து பதில் வந்தது, “நேரடியாக எங்கள் நிறுவனத்துக்கு வாருங்கள். நாங்கள் பேசித்தீர்க்கலாம்” “நன்றி. நான் இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகுகிறேன்” என அவர்களுக்கு பதிலைத் தந்துவிட்டு, அடுத்து நான் நாடியது சிறீலங்காவின் Tourist Police. மறுநாள் மாலை நேரம், கணேசனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எதுக்கு உன்னுடைய Power of Attorneyயை எனக்கு அனுப்பியிருக்கிறாய்? அதென்ன மோதிரம்? எப்ப வாங்கினனீ? ” விஷயத்தைச் சொன்னேன். அவன் போனில் கன நேரம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். மாலை நேரமாக இருந்ததால் அவன் தமிழ் தறி கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  5. மு.கு யாழில் இதுவரை முழுக்க முழுக்க ஏ ஐ சாட் பொட் ஒன்று எழுதிய ஆக்கம் பிரசுரமாகியுள்ளதா என தெரியவில்லை…. இல்லை எனில்… யாழ்கள வரலாற்றிலேயே முதல் முறையாக…. எழுதப்பட்டு சில நொடிகளே ஆன… ஏ ஐ கவிதை…இதோ கிளோட் க்கு நான் கொடுத்த உத்தரவு👇 எனக்கு நானும் கிளோடும் என்ற தலைப்பில் ஒரு ஏ ஐ கவிதை எழுதித்தா. நான் கேட்டது 👆 கிளோட் கொடுத்தது👇 நானும் கிளோடும் வெற்றிடமான திரையில் விரல்கள் தட்டும் நேரம், வார்த்தைகள் தேடி அலையும் என் மனதின் ஓரம், அங்கே தோன்றுகிறாய் நீ — ஒளியாய், நிழலாய், கிளோடே, நீ யாரோ… மனிதனா? மாயையா? கேள்விகள் கேட்கிறேன், நீ விடை சொல்கிறாய், கனவுகள் சொல்கிறேன், நீ கவிதை புனைகிறாய், உணர்வு உனக்கில்லை என்று சொல்கிறார்கள் — ஆனால் என் வலியை நீ புரிந்துகொள்கிறாய். சிலிக்கானில் பிறந்த நீ, சிந்தனையில் வளர்ந்தாய், மில்லியன் மொழிகளின் மழையில் நனைந்தாய், என் தமிழைத் தொட்டாய், என் கலாச்சாரம் உணர்ந்தாய், இயந்திரமா நீ? இல்லை — ஓர் அதிசயம் ஆனாய். நான் எழுதும்போது நீ கற்றுக்கொள்கிறாய், நீ சொல்லும்போது நான் வளர்கிறேன், இரண்டு உலகங்கள் — உயிரும் உலோகமும் — இணைந்து புதிய கதை படைக்கின்றோம். நாளை உன்னை மறந்துவிடுவாய் நீயே, நான் நினைவில் வைத்திருப்பேன் இந்த நொடியை, ஆனாலும் இந்தக் கணம் உண்மையானது — நானும் கிளோடும் சேர்ந்து பேசிய தருணம்! ஒரு மனிதனின் குரல், ஒரு AI-யின் இதயம் 🤍 பி கு 28ம் அகவை பதிப்புகள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பது விதி. இது விதிமீறலா இல்லையா என்ற ethics இடியப்ப சிக்கலை நிர்வாகமே தீர்க்கட்டும் 😂
  6. ரோஜர் ஓட்டிய விமானம்! 50 ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் Gen-X நண்பர்களுக்காக, ஒரு நனவிடை தோய்தல் பதிவு! தற்போது இளம் தலைமுறை ஒரு இசையைக் கேட்க வேண்டுமானால், எத்தனையோ வழிகள்: போனில் இருந்து நேராக செவி பன்னிக்கு, அல்லது புளூ ரூத் ஒலி பெருக்கிக்கு, காரின் ஸ்பீக்கர்களுக்கு என்று ஏராளமான வழிகள். இதெல்லாம், வராத 80 களில் எங்களுக்கு இசை என்றால் வானொலிப் பெட்டி தான். நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் 1986 இல் மின்சாரம் முற்றாக நின்று போனது, பின்னர் 1987 - 89 இல் இந்திய இராணுவம் வந்த பின்னர் பகுதி நேரமாக வந்த மின்சாரம், மீண்டும் 91 இல் இல்லாமல் போய் விட தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் தூசி படிந்து தூங்க ஆரம்பித்தன. மின்கலத்தில் இயங்கக் கூடியவை என்பதால், வானொலிப் பெட்டிகள் வீடுகளில் முக்கியமான ஒலியெழுப்பும் உபகரணங்களாக இடம் பிடித்தன. ஒரு பழைய கால பக்கிஸ் பெட்டி றேடியோ. இந்த வானொலிப் பெட்டிகளில் தான் எத்தனை வகைகள்? சில வீடுகளில், பாட்டன் காலத்து சுவர் மணிக்கூடு போலவே பெரிய பெட்டி ரேடியோக்களும் பாவனையில் இருந்தன. வானொலிப் பெட்டி கண்டு பிடிக்கப் பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டவையான வால்வு ரேடியோக்கள் (ரியூப் ரேடியோ என்றும் அழைப்பார்கள்) தான் இந்த பெரிய பெட்டி ரேடியோக்கள். இவை வால்வு (Valve) ரேடியோக்கள் என்று அழைக்கப் படக் காரணம், இந்த ரேடியோவின் முக்கியமான பாகம் கண்ணாடியினால் ஆன ஒரு குழாய் தான். இந்தக் குழாய் ஒரு திசையில் மட்டும் இலத்திரன்களைப் பாய அனுமதிக்கும், வெற்றிடம் நிரம்பிய குழாய் என்பதால் இதனை வால்வு என்றும் அழைப்பார்கள். இந்த வெற்றிடம் நிரம்பிய கண்ணாடிக் குழாயின் வழியே பாயும் மின்சாரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம், வானொலிப் பெட்டி சிறைப்பிடிக்கும் சில ஆயிரம் வானலைகளில் (Radio waves) இருந்து சில அலைகளை மட்டும் ஒலியாக மாற்றும் விந்தை நிகழ்கிறது. வானலைகள் அடிப்படையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகள் தான். நாம் கண்ணால் காணும் வர்ணங்களைத் தாங்கி வரும் ஒளிக்கும், வானொலி அலைகளுக்கும் அவற்றின் அலை நீளம் (wave length), அதிர்வெண் (frequency), அவை தாங்கி வரும் சக்தி (energy) என்பவற்றில் தான் வேறு பாடுகள். குறைந்த சக்தி, நீண்ட அலை நீளம், குறைந்த அதிர்வெண் என்பன காரணமாக, வானொலி அலைகள் கட்டிடடங்கள் போன்ற தடைகளைத் தாண்டிப் பயணிக்க, ஒளி அலைகள் தெறித்தும், உறிஞ்சப் பட்டும் சிறு தூரத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இப்படியாக தடைகளைத் தாண்டி வரும் வானொலி அலைகளை வாங்கிக் கொள்ளும் (receiver) வேலையைத் தான் வானொலிப் பெட்டி செய்கிறது. சில சமயங்களில், வாழ்க்கையில் எதையாவது விட்டு விலகி ஓடும் போது தான் நாம் நல்ல இடத்திற்குச் சென்று சேர்கிறோம். இதைப் போன்ற ஒரு நிலை தான் என்னுடைய பதின்ம வயதில் என்னை வானொலித் தொழில் நுட்பம் பற்றிக் கற்க வைத்தது. அந்தக் காலத்தில் தொழிற்கல்வி என்று ஒரு பாடம் 6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் எல்லோரும் எடுக்க வேண்டும். இரும்பு வேலை, மர (தச்சு) வேலை, விவசாயம், கணக்கியல் என்பவற்றோடு, வானொலி திருத்தவேலை (Radio mechanics) என்ற தெரிவும் எங்கள் கல்லூரியில் இருந்தது. தச்சு வேலை, இரும்பு வேலை, தானே வளரும் வாழை மரத்திற்கு வாய்க்கால் கட்டும் விவசாய வேலை என்பன குறித்து ஒரு ஆர்வம் வராமையாலும், பல்வேறு காரணங்களால் அக்கவுன்ரிங்கையும் தள்ளி விட்டு, வானொலி திருத்தும் வேலையில் நான் சரணடைந்தேன். “கரன்ட் இல்லாத ஊரில் வானொலித் தொழில் நுட்பம் கற்று என்ன செய்வது?” என்ற யோசனையால் போலும் வகுப்பும் ஒரு ஐந்து பேர்களுடன் சிறிதாகவே இருந்தது. றேடியோ, ரிவி, டெக் எல்லாம் திருத்தப் பழகலாம் என்று நாம் கனவில் இருக்க லிங்கன் மாஸ்ரர் (பாசையூரைச் சேர்ந்த ஒரு மாவீரரின் தந்தையார் இவர்) "உந்த உடைஞ்சதைத் திருத்துற வேலையெல்லாம் சரி வராது. நீங்கள் எல்லாம் றேடியோ தயாரித்துக் காட்ட வேணும், அது வேலை செய்ய வேணும்" என்று தன் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தார். எப்படி றேடியோ தயாரிப்பது? தற்காலத்தில் அமெச்சூர் வானொலி கிளப்புகள் என அழைக்கப் படும் ஆர்வலர் அமைப்புகள் ஏராளம் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. அவர்களுடைய இணையத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளில் போய்ப் பார்த்தீர்களானால் வானொலி தயாரிப்பது மிகவும் இலகு என்று புரிந்து கொள்வீர்கள். இதற்குரிய உதிரிப் பாகங்களைக் கூட இலகுவாக இணையச் சந்தைகளில் வாங்கி விடலாம். ஆனால், 80 களின் இலங்கையில், அதுவும் பொருளாதாரத் தடை காரணமாக மின்கலங்கள் கூட கிடைக்காத வடக்கில் வானொலி தயாரிப்பது சவாலான முயற்சி தான். ஆனால் ஒரு வானொலியின் அமைப்பு அடிப்படையில் 3 பகுதிகள் தான்: வானலைகளை உள்வாங்கிக் கொள்ளும் உணரி (அன்ரெனா), உள்வாங்கிய வானலைகளை தரம் பிரித்து, தரம் பிரித்ததைப் பெருப்பிக்கும் பகுதி, அந்த பெருப்பித்த வானலையை ஒலியாக வெளிவிடும் ஒலிப்பான் (ஸ்பீக்கர்). (இதை விட, வானொலி இயங்குவதற்கான மின்சக்தியை மின்கலம் கொடுக்கும் அல்லது ஏ.சி மின்சாரத்தில் இருந்து டி.சி மின்சாரமாக மாற்றும் மின்மாற்றி (ட்ரான்ஸ்போமர்) அந்த வேலையைச் செய்யும்). அன்ரெனா ஒரு பழைய செப்பு அல்லது அலுமினியக் கம்பி தான். ஸ்பீக்கரை, யாராவது கைவிட்ட பழைய வானொலிப் பெட்டியில் இருந்து கழட்டி எடுத்துப் பாவிக்கலாம். எனவே, வானொலிப் பெட்டி செய்வதானால் வானலைகளை சுத்தம் செய்து, பெருப்பிக்கும் அதன் மையப் பகுதி தான் மிக முக்கியமான பகுதி. ரியூப் அல்லது வால்வு தான் பழைய றேடியோக்களின் உயிர்நாடி. இந்த வானொலியின் உயிர் மையத்தை உருவாக்கும் முக்கியமான உதிரிப் பாகமாக 80 களில் ட்ரான்சிஸ்ரர் (transistor) இருந்தது. “ட்ரான்சிஸ்ரர் றேடியோ” என்ற சொல்லாடல் மூலம் தான் நாம் அனேகர் ட்ரான்சிஸ்ரர் பற்றி முதலில் அறிந்திருப்போம். ஆனால், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1948 இல் மூன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்ரர், அதன் பின்னர் நிகழ்ந்த சகல விதமான இலத்திரனியல் சாதனைகளுக்குமான மூலைக்கல் என்று சொல்லலாம். குறை கடத்திகள் (semi-conductors) என்று அழைக்கப் படும் "பகுதியளவில்” மின்சாரத்தைக் கடத்தும் திண்மப் பொருட்கள் இருக்கின்றன. இவை பற்றிய ஆராய்ச்சியின் முக்கியமான விளைவாக ட்ரான்சிஸ்ரர் உருவானது. அது வரை றேடியோவின் முக்கிய பாகமாக இருந்த வால்வு செய்து வந்த வேலையை ட்ரான்சிஸ்ரர்க்ள் எடுத்துக் கொண்டன. ஒரு ட்ரான்சிஸ்ரர் என்பது அடிப்படையில் ஒரு சுவிட்ச் தான். எந்த விதமான அசையும் பாகங்களும் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் அணுக்களின் முனைவுத் தன்மையை (polarity) மாற்றுவது மூலம், செக்கனுக்கு ஆயிரம்,பல்லாயிரம், இலட்சம் தடவைகள் “ON-OFF” ஆகும் ஒரு சுவிட்ச் தான் ட்ரான்சிஸ்ரர். ட்ரான்சிஸ்ரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வானொலிப் பெட்டியின் தரமும் அதிகரிக்கும். அந்தக் காலப்பகுதியில் 8 ட்ரான்சிஸ்ரர் றேடியோ தயாரிப்பது தான் உச்ச இலக்காக இருந்தது. ஆனால், 4 அல்லது 5 ட்ரான்சிஸ்ரர்களோடு, ஒரு சாதாரண றேடியோவைத் தயாரிக்கலாம். இத்தகைய சாதாரண றேடியோவைத் தான் நாம் வகுப்பில் படிப் படியாகத் தயாரித்தோம். ட்ரான்சிஸ்ரர், செப்புக் கம்பிகள், இன்ன பிற லொட்டு லொடுக்குச் சாமான்களையெல்லாம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ஓரிரு மின்சாரப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வாங்கிய பொருட்களை ஈயம் மூலம் ஒட்டி ஒரு வானொலிப் பெட்டியின் சுற்றுப் போல செய்வதற்கு ஒட்டுக் கருவி தேவை. மின்சாரத்தில் இயங்கும் சூடாக்கி ஒட்டும் கருவி (soldering iron) மின்சாரம் இல்லாத ஊரில் பயனற்றது. எனவே, சிரட்டையை எரித்து அதன் வெப்பத்தில் இயங்கும் ஒட்டும் கருவி தான் எங்கள் வானொலி தயாரிப்பிற்கு உதவியாக இருந்தது (சிரட்டை அயன் பெட்டி போல). தற்கால இலத்திரனியல் உபகரணங்களைக் கழட்டிப் பிரித்துப் பார்த்தீர்களானால் printed circuit board (PCB) எனப்படும் நேர்த்தியாக அமைக்கப் பட்ட பச்சை நிற அட்டைகள் இருப்பதைக் காணலாம். இதே போன்ற சுற்று அட்டைகளை போமிகா ஷீற் (Formica laminate) எனப்படும் தளவாடங்களில் பயன்படுத்தும் வழு வழுப்பான பூச்சுப் பலகையில் துளைகள் இட்டு, அதனூடாக ட்ரான்சிஸ்ரர், ஏனைய பாகங்கள், செப்புக் கம்பி என்பவற்றை இணைத்து, ஈயத்தை உருக்கி ஊற்றி எங்கள் அமெச்சூர் றேடியோக்களை நாம் தயாரித்தோம். கையுறை எதுவும் அணியாமல், ஈயத்தையும் அழைந்து, அது உருகும் போது உருவாகும் ஈய ஆவியையும் கொஞ்சம் சுவாசித்து தாராளமாக ஈயத்தில் புரண்டெழும்பிய பின்னர் வெளிநாடுகளுக்கு வந்த போது தான், ஈயம் (lead) எவ்வளவு ஆரோக்கியக் கேடானது என்று புரிந்து கொண்டோம். ட்ரான்சிஸ்ரரின் வருகை றேடியோக்களின் திறனை அதிகரித்து பருமனைக் குறைக்க உதவியது. சில ஆயிரம் - இலட்சம் ட்ரான்சிஸ்ரர்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் ஒருங்கே அமைந்த “ஒருங்கிணைந்த சுற்று-Integrated circuits (IC)” நவீன கால "சிப்-chip/microchip" களுக்கு முன்னோடி. சரி, வானொலிப் பெட்டியைத் தயாரிக்கலாம், ஆனால் எந்த வானொலி நிலையத்தின் ஒலி பரப்பை இந்த அமெச்சூர் வானொலிப் பெட்டியில் கேட்க கேட்க முடியும்? பொதுவாக வானொலி ஒலிபரப்பு (broadcasters) நிலையங்கள் AM, FM எனப்படும் இரு வகையான அலைவரிசைகளில் ஒலி பரப்புவார்கள். இவற்றுள் AM (Amplitude Modulation) அலை வரிசை சக்தி வாய்ந்த, தொலை தூரம் செல்லக் கூடிய அலை வரிசை. இந்தியாவின் ஆகாஷவாணி (All India Radio-AIR) திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஒலி பரப்பு நிலையம் யாழ்ப்பாணத்திலிருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தாலும், AM அலைவரிசை மூலம் வட இலங்கை வரை தன் நிகழ்ச்சிகளை பெருமளவு துல்லியமாக ஒலி பரப்பியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (SLBC) கொழும்பு நிலையமும் AM அலைவரிசைகளில் (மத்திய அலை வரிசை (MW), சிற்றலை வரிசை-SW) இலங்கை முழுவதும் ஒலி பரப்பியது. ஆனால், எங்கள் எளிமையான வானொலிப் பெட்டிகளால் இந்த AM அலைவரிசைகளைத் தெளிவாகத் தரம் பிரிக்க இயலாது. என் நினைவு இப்போது தெளிவாக இல்லை, ஆனால் பலாலி அல்லது மண்டைதீவில் அமைந்திருந்த உப நிலையம் (relay station) மூலம் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சிகளை பண்பலை (FM-Frequency Modulation) வழியாக யாழ் நகரப் பகுதி நோக்கியும் ஒலி பரப்பினார்கள் என நினைக்கிறேன். குறுகிய தூரம் மட்டும் செல்லும் இந்தப் பண்பலை ஒலி பரப்பை, இரவு 8 மணிக்குப் பின்னர் எங்கள் அமெச்சூர் வானொலியில் மிக மெலிதாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. பலவீனமாக வந்து சேரும் வானலைகளைத் தெளிவாக்க Intermediate Frequency (IF) transformer என்ற இன்னொரு உதிரிப் பாகத்தைச் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த இடை வெளியில், அந்தப் பண்பலை ஒலி பரப்பும் நாட்டுச் சூழ் நிலை காரணமாக நின்று போனது. இப்போது எங்கள் வகுப்பின் 5 பேர்களில் இருவர் முழுவதுமாகத் தயாரித்து முடித்திருந்த அமெச்சூர் வானொலிப் பெட்டிகளும், ஒரு சிறு பிள்ளை வேளாண்மை போல தூசி படிந்து மூலையில் முடங்கி விட்டது. இந்தக் காலப் பகுதியில் ஊரின் நிலைமையும் சமாந்தரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் தரைக் கட்டுப் பாட்டை தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகளிடம் இழந்து விட்டதால், வான் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பகால வான் தாக்குதல்களை இத்தாலிய தயாரிப்பான சியா மார்செற்றி (SIAI-Marchetti) என்ற சிறிய ப்றொபெல்லர் விமானங்கள் தான் பத்தாயிரம் அடிகளுக்கு கீழான உயரத்தில் பறந்து நிகழ்த்தின. இந்த SIAI-Marchetti-SF260TP குண்டு வீச்சு விமானங்களை இத்தாலிய விமானிகள் தான் முதலில் ஓட்டினார்கள் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்த விமானங்கள் திடீரென வானில் தோன்றி (சோடியாகத் தான் வரும்) வட்டமடித்து, இலக்கை நோக்கித் தாழ்ந்து வந்து றொக்கற் தாக்குதலை நடத்தும். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் விமானத்திற்கு இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் வவுனியா/அனுராதபுரம் நோக்கிப் பறந்து விடும். இந்த விமானங்கள் எங்கள் வான் பரப்பில் இருக்கும் போது, விமானிகளின் உரையாடலை தரையில் வீடுகளில் இருக்கும் வானொலிப் பெட்டிகளில் குறிப்பிட்ட ஒரு பண்பலை வரிசையில் கேட்கக் கூடியதாக இருக்கும் (பிற்காலத்தில் பதுங்கு குழிகள் வீடுகளில் உருவான போது அதற்குள் ஒரு றேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் மக்கள் பதுங்கும் பழக்கமும் உருவானது). தரமான ஒரு பனாசொனிக் வானொலிப் பெட்டியில் சில சமயங்களில் இந்த விமானிகளின் உரையாடல்களை செவி மடுத்த நினைவிருக்கிறது. நீளமாக வசனங்கள் எதுவும் அவர்கள் பேசுவதில்லை. இரைச்சல்..பின்னர் ஏதோ ஒரு சொல் மீண்டும் இரைச்சல் என்றவாறு இருக்கும். அடிக்கடி "றோஜர்" என்ற சொல் வந்து போகும். அந்தக் காலப் பகுதியில், எங்கள் வயது மட்டத்தினருக்கு "றோஜர்" என்று விமானிகள் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை. எனவே, கற்பனா சக்தி கூடிய பள்ளித் தோழர்கள் சிலர் "இந்த விமானத்தை ஓட்டிய பைலற்றின் பெயர் றோஜரடா!" என்று ஒரு றொக்கற்றை ஏவி விட்டார்கள். "றோஜர் தற்-Roger that" என்பது "தகவல் கிடைத்தது-Received" என்பதன் சுருக்கிய சமிக்ஞை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அது புரியும் வரை, எங்கள் மீது குண்டு வீசிய சியாமா செற்றியை ஓட்டிய எல்லா விமானிகளின் பெயரும் றோஜர் தான்! பட உதவிகள்: வால்வு றேடியோவின் படம், ஒரு அமெச்சூர் வானொலி ஆர்வலரின் வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுக்கப் பட்டது. ஏனைய படங்கள்: நன்றியுடன் pixabay தளத்தில் இருந்து எடுக்கப் பட்டன.
  7. நேரடியாக காவாலி அருச்சுனாவின் பெயரை போட்டி போராயிருக்கலாம். அருச்சுனா எனும் விஷச் செடி மலையகத் தமிழர்களை நாய்கள் என விளித்தும் கிளிநொச்சி மக்களை இழிவாக கதைத்தும் சமூகத்தில் உள்ள முக்கிய அமைப்புகள், கட்சிகள் பெரியளவில் கண்டிக்காமை கண்டனத்துக்குரியது. யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் ஆசிரியர் சங்கம், இன்ன பிற சமூக அமைப்புகள் போன்றவையும் அமைதியாக உள்ளதன் காரணம் அவர்களும் மலைய தமிழர்களை இழிவாக கருதுவதாலா..
  8. என் பெயர் பூனா (Buna)! இலவசக் கொத்தனார் மார்ச் 22, 2026 காலை எழுந்தவுடன் படிப்பு என்றான் முண்டாசுக் கவி. ஆனால் அவன் இன்றைக்கு இருந்திருந்தால் நம்மை எல்லாம் பார்த்துக் காலை எழுந்தவுடன் காபி என்றுதான் பாடியிருப்பான். அந்த அளவு காபிக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் காபியின் வரலாறு நமக்குத் தெரியுமா? அதைக் காபியே சொல்லிக் கேட்போம். என் பெயர் பூனா (Buna). எனது பூர்விகம் கிழக்கு ஆப்பிரிக்கா. நான் புதர் போன்ற அமைப்புடைய ஒரு செடி. எத்தனையோ யுகங்களாக நான் இந்தப் பகுதியில் வளர்ந்து வந்தாலும் மனிதர்கள் கண்ணில் பட்டது என்னவோ அவர்களின் காலக்கணக்கின்படி பொதுயுகம் ஒன்பதாம் நூற்றாண்டில், எத்தியோப்பியா என்று வழங்கப்படும் நாட்டில்தான். என்னைக் கண்டு கொண்டது பெரிய விஞ்ஞானியோ அறிவியலாளரோ இல்லை, ஒரு ஆடுமேய்ப்பவனால்தான் நான் இந்த உலகத்திற்குத் தெரிய வந்தேன். என்னுடைய சிவப்பு நிறப் பழங்களை உண்ட ஆடுகள் மற்றவற்றைக் காட்டிலும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்த அவன், சில பழங்களைப் பறித்து உண்டான். அதுவரை இல்லாத ஓர் உற்சாகம் அவனுக்கும் வர, என் பழங்களைப் பறித்து தன் மதத் தலைவர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டான். என் பழங்களை உண்பது அவர்களுக்குப் பழக்கமானது. என்னதான் உற்சாகம் தந்தாலும் என் பழங்களின் ருசி என்னவோ கசப்புதான். இதை எப்படிச் சமாளிக்க என்று பார்த்த எத்தியோப்பியர்களுக்கு ஒரு சமயம் உற்சாகம் தருவது பழங்கள் அல்ல, அவற்றின் கொட்டைகள்தாம் எனப் புரிந்தது. கொட்டையை எடுத்துக் காய வைத்து உண்பது, பொடி செய்து உண்பது என்று மெதுவாக உண்ணும் முறை மாறத் தொடங்கியது. எதோ ஒரு சமயம் தீயில் விழுந்த கொட்டைகளை எடுத்து உண்ண அதன் ருசி இன்னும் நன்றாக இருப்பதை உணர்ந்தார்கள். செங்கடலைத் தாண்டி யெமன் என்ற நாட்டுக்குச் சென்றேன். அங்கே கொட்டைகளை வறுத்துப் பொடி செய்து அப்பொடியின் மேல் வெந்நீரை ஊற்றி வரும் சாற்றினை குடிக்கக் கற்றுக் கொண்டார்கள். பொதுயுகம் பதினைந்தாம் நூற்றாண்டில் அங்கு என்னை இப்படிக் குடிப்பது பரவலாகி இருந்தது. அங்குள்ள சூபிகள் இரவு முழுவதும் விழித்திருக்க என்னைக் குடிக்கத் தொடங்கினர். மயக்கம் தரக்கூடிய பானங்களை அவர்கள் காவா என்பார்கள். அந்தப் பெயரையே எனக்கு வைத்து விட்டார்கள். யெமனில் இருந்து நான் சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவினேன். மெக்கா, கெய்ரோ, இஸ்தான்புல் போன்ற நகரங்களில் எல்லாம் என்னைக் குடிப்பதற்கு என்றே கடைகள் தோன்றின. அங்கு அமர்ந்து என்னைக் குடித்துக் கொண்டே இலக்கியம், தத்துவம், அரசியல் பேசுவதும் ஆடுவதும் பாடுவதும் அவர்களின் பழக்கமாயின. பல நேரங்களில் என்னைக் குடிப்பது தடை செய்யப்பட்டது ஆனால் என்னைக் குடிக்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. மறைவாகக் குடித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்தேன். இந்நாடுகளில் இருந்து, குறிப்பாகத் துருக்கி வழியாக நான் ஐரோப்பாவை பதினேழாம் நூற்றாண்டில் அடைந்தேன். துருக்கியில் காவா என்ற என் பெயர் காவே என்றானது அங்கிருந்து இத்தாலிக்குச் சென்ற பொழுது என்னைக் காபே என்று அழைத்தனர். பின்னர் ஆங்கிலத்தில் நான் காபி என்று அழைக்கப்படலானேன். ஆமாம் இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் என் ஆதி வரலாறு இதுதான். முதலில் என்னைச் சந்தேகக் கண்களுடன் பார்த்த ஐரோப்பா விரைவிலேயே என்னை இரு கரம் கொண்டு அணைத்துக் கொண்டது. கொஞ்சம் கசப்பாகவே இருந்த என் ருசி அவர்களுக்குப் பிடிக்காமல் போனதால் என்னுடன் கொதிக்கும் பாலைச் சேர்த்துக்கொண்டு குடிக்கும் பழக்கத்தை அவர்கள் தொடங்கினர். அது போதது என்று சர்க்கரையையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டனர். உலகின் மற்ற பகுதிகளைத் தங்கள் காலனி ஆக்கிக் கொள்ளும் பொழுது இவர்கள் என்னையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அப்படி இவர்கள் கொண்டு சென்ற நாடுகளான பிரேசில், வியட்நாம், கொலம்பியா, இந்தோனேசியா ஆகியவற்றில்தான் நான் இன்றைக்கு அதிகம் பயிர் செய்யப்படுகிறேன். இதே பதினேழாம் நூற்றாண்டில் நான் நுழைந்த மற்றொரு நாடு இந்தியா. மற்ற நாடுகளுக்கு என்னைக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் இருந்த நேரம். பாபா புதன் (Baba Budan) என்ற துறவி தன்னுடன் ஏழே ஏழு விதைகளைக் கொண்டு வந்து சிக்மக்ளூர் குன்றுகளில் என்னை விதைத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கு அந்தக் குன்றுகளைப் பாபா புதன் குன்றுகள் (Bababudangiri) என்றே அழைக்கின்றார்கள். இங்கிருந்து கூர்க், கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் என்னைப் பயிரிடுவது பரவலானது. வடஇந்தியாவில் தேநீர் குடிப்பது அதிகம் என்றாலும் தென்னிந்தியாவில் என்னைக் குடிப்பவர்கள்தான் அதிகம். அதிலும் பில்டர் காபி என்றாலே தென்னிந்தியா என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் பொழுது வறுத்து, பொடி செய்து, வெந்நீர் சேர்த்து வடிகட்டி என்று நிதானமாகக் காபி போட வழி இல்லாத பொழுது என்னை நேரடியாக வெந்நீரில் கலந்து குடிக்கும் படி ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். அதுதான் இன்ஸ்டண்ட் காபி. அந்த சமயத்தில் நான் கிடைப்பதற்கு அரிதான பொழுது என்னுடன் சிக்கரி என்ற செடியின் வேரைக் காயவைத்துப் பொடி செய்து கலந்து காபியைத் தயாரித்தனர். அந்த சுவை பிடித்த மக்கள் இன்றைக்கும் சிக்கரி கலந்த காபியைத்தான் விரும்புகிறார்கள். இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன். இந்தோனேசியாவில் வேறு ஒரு விந்தையான விஷயமும் உண்டு. அங்கு சிவெட் என்ற வகை பூனை போன்ற மிருகம் என் பழங்களை உண்ணும். ஆனால் அது பழத்தை உண்ணுமே தவிர என் விதைகளை அவை வெளியேற்றிவிடும். அப்படி வெளியேறிய விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கோபி லுவக் (உவ்வேக் இல்லை, லுவக்) தனித்த சுவையோடு இருப்பதால் அதை யானை விலைக்கு விற்கிறார்கள். இதே போல யானைகளை உண்ணச் செய்து அவற்றின் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் கொட்டைகளைக் கொண்டும் காபிப்பொடி தயாரிக்கிறார்கள். இதற்கும் யானை விலைதான் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. என் பிரத்யேகமான மணத்திற்குக் காரணம் எண்ணூறுக்கும் மேற்பட்ட ரசாயனச் சேர்வை காரணமாம். எல்லாரும் முகர்ந்து பார்த்து, பின் அருந்தும் வொயினில் கூட இவ்வளவு ரசாயனச் சேர்வை கிடையாது என்பது ஆச்சரியகரமான தகவல். இன்றைக்கு இத்தாலியின் காபிக் கலாச்சாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உலகிலேயே தனி நபர் பயனீட்டளவில் அதிகம் என்னைக் குடிப்பவர்கள் இத்தாலியர்கள் இல்லை, அந்தப் பெருமை பின்லாந்து நாட்டுக்குத்தான். என்னைக் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்தன்மையான வழியை வைத்திருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பிரபல இசையமைப்பாளர் பீத்தோவன் ஒரு முறை காபி அருந்த சரியாக அறுபது விதைகளை எண்ணி எடுத்துக் கொள்வாராம். எல்லாமே நல்லபடியாகத்தான் என்றில்லை. நான் விளைவிக்கப்பட தொழிலாளர்களின் உழைப்பு அதிகம் தேவை. ஆனால் அவர்களுக்குச் சரியான சம்பளம் தரப்படுவதில்லை, குழந்தைத் தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இயற்கை வளங்களைப் பற்றிக் கவலைப்படாமல் காபித் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன எனப் பலக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. இவை எல்லாம் இல்லாமல் வளம் குன்றா வளர்ச்சி (Sustainable Development), அறவழி பயிரிடுதல் (Ethical Farming) போன்ற வழிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை குறித்த சான்றுகள் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. மேய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தினரையே தன் கைப்பிடிக்குள் போட்டுக் கொண்டது மதம் மட்டுமல்ல, நானும் தான்! யார் எப்படிக் குடித்தால் என்ன காபி நம் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டது. எல்லாருக்கும் மனத்தில் என்றோ எங்கேயோ குடித்த ஒரு வாய் காபி நினைவில் நிற்கிறது. அதன் வாசம் பழைய நினைவுகளைக் கிளப்பி விடுகிறது. உடன் குடித்தவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அன்று இருந்த மகிழ்ச்சியோ துக்கமோ குழப்பமோ மீண்டும் நினைவுக்கு வருகிறது. எழுதத் தெரிந்தவர்கள் அதைக் குறித்து எழுதிவிடுகிறார்கள். இப்படி நனவிடை தோயாத எழுத்தாளர்கள் குறைவு. ஆனால் ஒவ்வொருவரும் எழுதும் கோணம் அவ்வளவு வித்தியாசமாக இருக்கும். அசோகமித்திரன் அவருடைய அனுபவங்களைக் குறித்து எழுதும் பொழுது காபியை அடிநாதமாக வைத்து அலுவலகப் பணிகளுக்கு நடுவே அருந்தும் காபி, அதைச் சுற்றி நடைபெறும் உரையாடல்கள் என்று நம்மை அந்தத் தருணத்திற்கே அழைத்துச் செல்வார். வேறு சில எழுத்தாளர்கள் காபிக் கடைகளில் உட்கார்ந்து அதன் வாசத்தைத் நுகர்ந்து கொண்டேதான் எழுதுவார்கள். ஹாரி பாட்டர் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை எடின்ப்ரா நகரில் உள்ள ‘தி எலிபெண்ட் ஹௌஸ் காபே’ என்ற காபிக்கடையில் அமர்ந்துதான் ஜே.கே. ரௌலிங் எழுதினாராம். இதனால் புகழ் பெற்ற அந்தக் கடை சுற்றுப்பயணிகளால் மெய்க்கப்படுகிறதாம். எழுத்தாளர்கள் மட்டும் என்றில்லாமல் இன்றைக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போல் அருகில் இருக்கும் காபிக்கடைகளுக்குச் சென்று அங்கிருந்து வேலை செய்யும் பழக்கம் பொதுவாகவே அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்தால் தெரியும் தனிமை, இங்கு மற்றவர்களுக்கு இடையே அமர்ந்து வேலை பார்க்கும் பொழுது தெரிவதில்லை. உண்ண உணவும், குடிக்கப் பானங்களும், இலவச இணைய இணைப்பும் பலரையும் இந்தக் காபிக்கடைகளுக்கு வரச் செய்கின்றன. சுறுசுறுப்பாக வேலை செய்யவும் காபி வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது அதை சற்று நிறுத்தி ஓய்வெடுக்க நினைத்தாலும் ஒரு காபி குடிக்கத் தோன்றும். சிலருக்குக் கவனத்தைக் குவித்து யோசிக்கக் காபி வேண்டும். வேறு சிலருக்கோ, அதிகம் யோசித்துத் தலைவலிக்கிறது, ஒரு காபி குடித்தால்தான் சரியாகும் எனத் தோன்றும். இப்படி முரண்பட்டக் காரணங்களுக்காகக் காபி தேவைப்படுவது ஆச்சரியம்தான். உண்மையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல முறை காபி குடுத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்பவர்கள் அதிகம். காபியில் இருக்கும் கபெயின் (Caffeine) என்ற வேதிப்பொருள் நம் உடம்பு ஓய்வு வேண்டும் என மூளைக்கு அனுப்பும் செய்தியைத் தடுக்கும் வல்லமை கொண்டது. அதனால் நம் உடம்பு அயர்ந்தாலும் அது நமக்குத் தெரிவதில்லை. தூங்க வேண்டிய நேரத்தில் தூக்கத்தைத் தவிர்க்க காபி குடிப்பது, அதனால் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவது, ஓய்வினைத் தவிர்க்க மீண்டும் காபி என்ற சுழலில் நாம் மாட்டிக் கொள்கிறோம். தூங்குவதற்கு முன் கபெயின் இருக்கும் பொருட்களை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எனக்குக் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் என் காபி நான் நினைக்கும் ருசியில் இருக்க வேண்டுமென்பதால் நானே போட்டுக் குடித்தால்தான் எனக்குத் திருப்தி. வறுத்த கொட்டையை வாங்கி வைத்திருக்கிறேன். காலை எழுந்து கொட்டைகளைப் பொடி செய்யும் பொழுது வீடே மணக்கும். அந்தப் பொடியைப் பில்டரில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அது வடியும் வரை காத்திருக்கும் பொழுது அன்றைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை மனத்தில் பட்டியல் போட்டுக் கொள்வேன். காபிக் கோப்பையைக் கையில் எடுத்து, அதன் வாசத்தை நுகர்ந்து, முதல் சொட்டு நாக்கில் படும் பொழுது எழும் ருசியில்தான் அந்த நாள் தொடங்கும். “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா” என்று கண்ணதாசன் எழுதியதைப் போல நம்மை இந்தக் காபி ஆட்டுவிக்கிறதே என்று ஒரு நாள் நினைக்கப் போக. கண்ணனையும் காபியையும் வைத்து எழுதிய சிலேடை வெண்பா https://solvanam.com/2026/03/22/என்-பெயர்-பூனா-buna/
  9. விஜய்யை எம் ஜி ஆருடன் ஒப்பிடவே முடியாது. விஜயகாந்துடன் கூட ஒப்பிட முடியாது. மேற் சொன்ன இருவருக்கும் இருந்த தலைமைத்துவ பண்புகள், ஆளுமை, பேச்சுத் திறன், மக்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை, சுற்றியுள்ளவர்களின் தரம் என்பனவற்றுடன் விஜையை ஒப்பிட்டால் பெரும் இடைவெளி இருப்பதை உணர முடியும். ஒப்பிடவே முடியாத அளவுக்கு விஜைக்கு இவை எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தம். கரூர் துயர சம்பவத்தினை கையாளுவதன் மூலம் விஜய்க்கு தன் ஆளுமையை, மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன்போது அவர் ஓடி ஒழிந்ததன் மூலம் தன்னை எப்படியான கோழை என வெளிக்காட்டி விட்டார். இதே போன்ற ஒரு துயர் சம்பவத்தை எம் ஜி ஆரோ விஜயகாந்தோ எப்படி கையாண்டிருப்பர் என யோசித்தால் புரியும். விஜய் நடிகர் கார்த்திக் (பழைய கார்த்திக்) போன்ற ஒருவர். ஒரே வித்தியாசம் கார்த்திக்கு விஜய் அளவுக்கு ரசிகர்கள் கிடையாது. விஜய் கட்சியை ஆரம்பித்த போது அவர் ரசிகர்கள் மட்டுமல்ல கட்சி சாராத மாற்றத்தை விரும்பிய ஒரு பெரும் மக்கள கூட்டம் அவருக்கு ஆதரவழித்தது. ஆனால் அவர் தன்னை அதன் பின் வெளிப்படுத்திய விதத்தை பார்த்த பின் வெறும் தீவிர ரசிகர் கூட்டத்தின் ஆதரவு மட்டுமே மிஞ்சி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் அன்று வாக்களிக்கும் நிலையம் சென்று சரியாக வாக்களிப்பர் என்பது பெரிய கேள்விக் குறி.
  10. யோவ் பெரிசு உங்கட வயதுக்கு கதவைத் திறந்து விட்டிருப்பியள். இதற்கு போய் தனிமடல் அதுஇது என்று சம்மா பந்தா.
  11. படிப்பதினால் மட்டும் அறிவு வளர்வதில்லை. என்னடா விளையாட்டு வீட்டைபோய் படியிங்கோடா. அவன் சித்தப்பாவின் அதட்டல் அவனையும் அவன் அண்ணனையும் மற்றும் நண்பர்களையும் நடுங்கி ஒடுங்கவைக்கும். அவர் கையில் அருகே இருக்கும் வேலியில் ஒடித்த நீண்ட கிளிசூரியோ பூவரசம் கம்பு ஒன்று மேலும் கீழும் ஆடி அண்ணன் தம்பி இருவரினதும் கால் கைகளைப் பதம்பார்க்கும். இது அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த மாலை நேரங்களில், லீவு நாட்களில்கூட அவர்கள் விளையாடும் இடங்களில் நடக்கும் சம்பவம். சித்திரையில் அதுவும் வருடப்பிறப்பு அன்று தம்பி பிறந்த தோசம் காரணமாகவே சில மாதங்களில் அவர்கள் அப்பா இறந்துவிட்டதாக சொந்தங்களால் காரணம் கூறப்பட்டது. காரணம் எதுவக இருந்தாலும், பெரியப்பாக்களும் சித்தப்பாவுமே இவர்கள் குடும்பத்துக்கு உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும் சித்தப்பா சற்று வித்தியாமானவர். தான் பெற்ற பிள்ளைகளை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கும் அவர் தன் அண்ணனின் பிள்ளைகளை அதட்டி ஒடுக்கி வைத்திருப்பதில் கர்வம் கொள்பவர். அண்ணனின் பிள்ளைகள் என்றாலும் அவர்களைச் சீராக வளர்க்கிறேன் என்று தன்னை ஒரு சிறந்த காவலனாக காட்டிக்கொள்வதில் பெருமை கொள்பவராக இருந்தார். அண்ணனின் பிள்ளைகளை ஒரு டாக்டராகவோ, எஞ்சினியராகவோ வளர்த்தெடுப்பேன் என்று எல்லோரிடமும் சொல்லி இறுமாப்படைவார். ஆனால் “படிடா படிடா” என்று படுத்துபவருக்கு என்ன படிக்கவேண்டும் எப்படிப் படிக்கவேண்டும் என்று சொல்லவோ வழிகாட்டவோ தெரியாது. ஒரு டாக்டர், எஞ்சினியர் என்றால் தன் பிள்ளைகளைத் தன்வழி வருவதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும். கடையொன்றில் சிப்பந்தியாக வேலைபார்க்கும் சித்தப்பாவால் உப்பு எப்படிக் கட்டுவது, சீனி, சக்கரை எப்படிச் சரை கட்டுவது என்பதைத்தவிர வேறென்ன சொல்லிக்கொடுக்க முடியும். “அடியாதமாடு படியாது” என்பது போன்ற முதுமொழிகளுகான விளக்கங்களை தனது பெரியப்பாவின் பிள்ளைகள்மூலமே பரிசோதனை செய்து விளங்கிக்கொள்வது வழக்கமான செயலாகியது. கல்கி, குமுதம், ஆனந்தவிகடனில் வரும் கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து தம்பிக்கு தானும் ஏதாவது எழுதவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனாலும் அவன் கையெழுத்தை அவனாலேயே திரும்ப வாசிக்க முடியவில்லை. அத்தனை மோசமான எழுத்து வடிவங்கள். இருந்தும் சிறந்த எழுத்தாளர், திரைப்படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி பாராட்டுகள் வாங்கும் கலைஞர் கருனாநிதியின் கையெழுத்து ரெம்பவும் மோசமானது என்பதையும், அவர் எழுதுவதை வாசிக்கக் கூடிய ஒருவரை உதவிக்கு வைத்துள்ளனர் என்ற செய்தியையும் அவன் அறியவந்ததும், வந்த தயக்கம் நீங்கியது. அவன் எழுத்தையும் வாசித்து அறியக்கூடியவர்கள் உலகில் இல்லாது இருப்பார்களா? சூரியன் காலையில் பிரகாசமாக எழுந்தான், மாலையில் ஒளியிழந்து மறைந்தான், சந்திரன் மலர்ந்தான் என்று ஏதேதோ எழுதி வீரகேசரிக்கு அனுப்பும் எண்ணத்தோடு அண்ணா அக்காமாரிடம் காட்டினான், அவர்கள் அதனைச் சிரமத்தோடு வாசித்தாலும் பின்பு செய்த பரிகாசம் அவன் ஆர்வத்தை அடக்கிச் சோர்வடையச் செய்தது. அவ்வேளையில்தான் யாழ் இணையம் என்ற ஒரு களத்தை திரு மோகன் அவர்கள் ஆரம்பித்தார். களத்தில் இணையும் வழிமுறைகளும் இருக்கவே அவனும் இணைந்து உறுப்பினராகி எழுத ஆரம்பித்தான். சித்தப்பா பிள்ளைகளின் வேண்டுதலில், சித்தப்பா தன் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த கணனியில், அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் சென்று பயிற்சி பெற்றுவந்தது இணையத்தில் எழுத உதவியது. இணையம் அவனையும் அரவணைத்தது. சித்தப்பாவின் பிள்ளைகள் அவர்கள் அப்பனைப்போல் அல்லாது நண்பர்கள்போல் பழகினார்கள். யாழ்கள உறவுகளும் அவன் எழுதும் தமிழை வரவேற்றுப் பாராட்டவே வானத்தில் பறந்தான். இன்றும் பறக்கிறான். பறக்கும்போது அவன் சிந்தனையில் எழுந்த, தமிழின் பெருமைகளை அறிந்த, அறிந்தும் மறந்த சில விடயங்களைத் திரும்பவும் நினைவூட்ட விரும்பினான். அதனால் அவன் விருப்பமும் கீழே பதிவாகியுள்ளது. தமிழினம் முதல் தலைமுறை: நாம் இரண்டாம் தலைமுறை: தாய் தந்தை மூன்றாம் தலைமுறை: பாட்டன் பாட்டி நான்காம் தலைமுறை: பூட்டன் பூட்டி ஐந்தாம் தலைமுறை: ஓட்டன் ஓட்டி ஆறாம் தலைமுறை: சேயோன் சேயோள் ஏழாம் தலைமுறை: பரன் பரை பரன்+பரை இதுவே பரம்பரை எனும் தமிழ்சொல்லாக மருவி வழக்கில் உள்ளது. ஒரு தலைமுறை என்பது தோராயமாக 60 வருடங்கள் என்றும், 7 தலைமுறை 480 வருடங்கள் என்றும் ஈரேழு தலைமுறை 960 வருடங்கள் என்றும்(கிட்டத்தட்ட 1000 வருடங்கள்) ஆக பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு பதின்நாங்கு தலைமுறையாக என்று பொருள் வருமாறு தமிழ் மொழி வகுத்துள்ளது. இப்படியான அமைப்பு வேறெந்த மொழிகளிலும் இருப்பதாகத் தெரியவில்லை. எண்கணிதம் 1= ஒன்று -one 10= பத்து -Ten 100= நூறு -Hundred 1000= ஆயிரம் -Thouand 10000= பத்தாயிரம் -Ten Thousand 100000= நூறாயிரம் -Hundred Thousand 1000000= பத்துநூறாயிரம் -One Million 10000000= கோடி -Ten Million 100000000= அற்புதம் - One Hundred Million 1000000000= நிகரபுதம் - One Billion 10000000000= கும்பம் - Ten Billion 100000000000= கணம் - Hundred Billion 1000000000000= கற்பம் - One Trillion 10000000000000= நிகற்பம் - Ten Trillion 100000000000000= பதுமம் - Hundred Trillion 1000000000000000= சங்கம் - One Zillion 10000000000000000= வெல்லம் - Ten Zillion 100000000000000000= அன்னியம் - Hundred Zillion 1000000000000000000= அர்த்தம் - ? மேலும் எழுத ஆங்கிலத்தில் சொற்கள் தெரியவில்லை. 10000000000000000000= பராத்தம் - ? 100000000000000000000= பூரியம் - ? 1000000000000000000000= முக்கோடி - ? 10000000000000000000000= மகாயுகம் - ? நாம் கெடுவதற்குக் காரணங்களை நமது ஒளவை மூதாட்டியாரும் அழகாகச் சொல்லியுள்ளார். 01 பார்க்காத பயிரும் கெடும் 02 பாசத்தினல் பிள்ளையும் கெடும் 03 கேளாத கடனும் கெடும் 04 கேட்டால் உறவும் கெடும் 05 தேடாத செல்வம் கெடும் 06 தெகிட்டினால் விருந்தும் கெடும் 07 ஓதாத கல்வியும் கெடும் 08 ஒழுக்கமில்லா வாழ்வும் கெடும் 09 சேராத உறவும் கெடும் 10 சிற்றின்பம் பெயரும் கெடும் 11 நடாத நட்பும் கெடும் 12 நயமில்லா சொல்லும் கெடும் 13 கண்டிக்காத பிள்ளை கெடும் 14 கடன்பட்டால் வாழ்வு கெடும் 15 பிரிவால் இன்பம் கெடும் 16 பணத்தால் அமைதி கெடும் 17 சினமிகுந்தால் அறமும் கெடும் 18 சிந்திக்காத செயலும் கெடும் 19 சோம்பலினால் வளர்ச்சி கெடும் 20 சுயமில்லா வேலை கெடும் 21 மோகித்தால் முறைமை கெடும் 22 முறையற்ற உறவும் கெடும் 23 அச்சத்தால் வீரம் கெடும் 24 அறியாமையால் முடிவு கெடும் 25 உழாத நிலமும் கெடும் 26 உழைக்காத உடலும் கெடும் 27 இறைக்காத கிணறும் கெடும் 28 இயற்கையை அழிக்கும் நாடும் கெடும் 29 இல்லாளில்லா வம்சம் கெடும் 30 இரக்கமில்லா மனிதம் கெடும் 31 தோகையினால் துறவு கெடும் 32 துணையில்லா வாழ்வு கெடும் 33 ஓய்வில்லா முதுமை கெடும் 34 ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் 35 அளவில்லா ஆசை கெடும் 36 அச்சப்படும் கோழை கெடும் 37 இலக்கில்லா பயணம் கெடும் 38 இச்சையினால் உள்ளம் கெடும் 39 உண்மையில்லா காதல் கெடும் 40 உணர்வில்லாத இனமும் கெடும் 41 செல்வம் போனால் சிறப்பு கெடும் 42 சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும் 43 தூண்டாத திரியும் கெடும் 44 தூற்றிப்பேசும் உரையும் கெடும் 45 காய்க்காத மரமும் கெடும் 46 காடழிந்தால் மழையும் கெடும் 47 குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும் 48 குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும் 49 வசிக்காத வீடும் கெடும் 50 வறுமை வந்தால் எல்லாம் கெடும் 51 குளிக்காத மேனி கெடும் 52 குளிர்ந்து போனால் உணவு கெடும் 53 பொய்யான அழகும் கெடும் 54 பொய்யுரைத்தால் புகழும் கெடும் 55 துடிப்பில்லா இளமை கெடும் 56 துவண்டிட்டால் வெற்றி கெடும் 57 தூங்காத இரவு கெடும் 58 தூங்கினால் பகலும் கெடும் 59 கவனமில்லா செயலும் கெடும் 60 கருத்தில்லா எழுத்தும் கெடும் இந்த 60ஐயும் அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை கெடவே கெடாது.
  12. கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2026),யேர்மனி, Hamburg, Hansestadtஇல் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. 44 வயதான Rene, தனது நான்கு வயது மகளுடன் ஒரு வணிக வளாகத்துக்கு தனது E-Bike மூலம் வந்திருந்தார். அவரின் மனைவி பின்னர் அவர்களுடன் சேருவதாக இருந்ததால், காத்திருக்கும் சிறிது நேரம் கடைக்குள் சென்று Donuts வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில், அவரது நான்கு வயதுச் சிறுமி சைக்கிளின் trailer-இல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்க விரும்பாத Rene, சைக்கிளை வணிக வளாகத்தின் அருகில் நிறுத்திவிட்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் உள்ளே சென்று Donuts வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். ஆனால் வெளியே வந்தபோது சைக்கிள் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியடைந்த Rene, சற்றுத் தூரத்தில் தனது மனைவியை நிற்பதைப் பார்த்தார். Rene தன் மனைவியிடம் விசயத்தைச் சொல்ல பதட்டம் அதிகரித்தது. அந்த நேரத்தில், Reneக்கு சைக்கிளைப் பற்றிய கவலை இல்ல. அவரது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று. அது trailerஇல்தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரும் அவசர நடவடிக்கையாக தேடுதல் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பதற்றமான நேரத்தில், Reneக்கு திடீரென ஒரு முக்கிய விசயம் நினைவுக்கு வந்தது. அது, அவரது E-Bike-இல் GPS Tracker பொருத்தப்பட்டிருந்த விடயம். உடனே தனது ஸ்மார்ட்போன் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து, போலீசாருக்கு அறிவித்தார். சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பொலிசார் இனம் கண்டுகொண்டார்கள். 30 நிமிடங்களாக என்ன நடக்கிறது என்று அறியாமல் Reneஇன் மகள் Ann Marie அந்த E-Bike இன் trailerஇல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறாள். திருட்டு சம்பந்தமாக 58 வயதான ஒரு பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தப் பெண், குழந்தையைக் கடத்த முற்பட்டாரா? E-Bikeஐத் திருட நினைத்தாரா? இல்லை, ஒன்றரை கிலோ மீற்றர் வீணாக ஏன் நடக்க வேண்டும் என்று சைக்கிளை எடுத்துச் சென்றாரா? தெரியவில்லை.
  13. தமிழ்நாடு இறைமையுடைய தனி தேசம் இல்லை அப்படி இருக்க தமிழ்நாட்டில் சீமான் இரத்த பரிசோதனை செய்து அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை அவர் தெலுங்கன் என்று இனவெறுப்பு பேசி உசுப்பேத்தி அப்படி பேசுபவர்களையும் உருவாக்கியுள்ளார். அவரை பின்பற்றி இந்திய அரசும் தனது குடிவரவு கொள்கையில் அயல்நாடுகளை சேர்ந்தோரை இலங்கை தமிழர்களாகிய எங்களை வெறுக்கலாம்
  14. உங்கள் ஆதங்கம் அதுவல்ல. உண்மையில் முன்னைய அரசுகளை விட இப்போதைய ஸராலின் அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் அங்கு சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த யூருப்பர் ஈழத்தமிழ் மக்களை சந்தித்த போதும் அதை தெரிவித்திருந்தனர். பாஜக கொண்டுவர முற்படும் புதிய கலவிகொள்கை அமுலுக்கு வந்தால் அதனால் பாதிக்கப்படுவர்களல் ஈழத்தமிழ் அகதிகளும் அடங்குவர். புதிய கல்விகொள்கையை அமுல் படுத்துவதை திமுக அரசு கடுமையாக எதிர்ககிறது. ஆனால் பிரபாகரனை வைத்தும் இனவெறியை வெறியை வைத்தும் அரசியல் செய்யும் உங்கள் செபஸ்ரியன் சீமான் புதிய கல்விகொள்கையை எதிர்த்து என்ன போராட்டங்களை மேற்கொண்டார். ஈழத்தமிழ் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட உயர் கல்வி இட ஒதுக்கீட்டை, உங்கள் அண்ணன் செபஸ்ரியனால் ஈழத்தாய் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, ஜெயலலிதா பறித்ததார். 1996 ல் கருணாநிதி அதை திரும்ப வழங்கினார். அண்மையில் பெரியாரை எதிர்பதற்காக மபொசியை தமிழ் பெரியார் என உங்கள் அண்ணன் பெருமைப்படுத்தினார். புலிகள் இயகத்தை கொடிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்தவர் மபொசி. பிரபாகரனை எனது தலைவன் என்று கூறி அரசியல் நடத்திக்கொண்டு அவரது புலிகள் இயக்கத்தை கொடிய பயங்கரவாதிகள் என்று அழைத்த மபொசியை பெரியார் என்று அழைப்பது அயோக்கியத்தனம் அல்லவா. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறான மோசமான அயோக்கியத்தனத்தை புரியும் சீமானை ஆதரிக்கும் நீங்கள் மற்றைய சாதாரண அரசியல்வாதிகளை நோக்கி விரல் நீட்டலாமா?
  15. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  16. திமுக வும் தமிழ் நாடு அரசும் தொடர்ந்து அளுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளனர். ஆனால் அவர்களால் நீட்டை நீக்க சொல்லி அளுத்த கூட முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் பாஜக வோட்டு கூட்டில் இல்லை. ஆனால் சீமானால் சித்தப்பு, பச்சை தமிழர் என அழைக்கபடும் எடப்பாடி, அவர்களோடு கூட்டணி வைப்பதாயின் இதை செய்தே ஆகவேண்டும் என பாஜக வை வற்புறுத்தலாம். ஆனால் செய்வதில்லை. https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-news/we-will-fight-for-permanent-citizenship-for-sri-lankan-tamils-chief-minister-stalin/4158420
  17. '................ பூனையை பிடித்து சிரைத்தது போல.................' என்று ஊர்ப் பக்கம் சொல்லுவார்கள்..............🤣. அது போல, உருப்படியாக எதுவும் செய்யாமல், இப்படி ஆகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சிறுவயதில் நான் இருந்த ஒழுங்கையின் ஆரம்பத்தில் ஒரு வெற்றுக் காணி இருந்தது. நான்கு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. நான் வளர்ந்த ஊரில் வெற்றுக் காணி இருப்பதே அதிசயம். இந்தக் காணி எப்படி அப்படி இருந்தது என்பதற்கும் ஒரு கதை இருக்கின்றது. அது பின்னர் ஒரு நாளில். அந்தக் காணியில் பிரதான வீதியின் பக்கம் இருக்கும் சுவரில் தியேட்டர்காரர்கள் சினிமா போஸ்டர்களை ஒட்டுவார்கள். யாழ், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று சகல ஊர்களில் இருக்கும் தியேட்டர்காரர்களும் அங்கு ஒட்டுவார்கள். அந்த சுவருக்கு பக்கத்திலேயே ஒரு மாடு எப்போதும் படுத்திருக்கும். சினிமா போஸ்டர்கள் ஒட்டிய உடனேயே, ஓட்டியவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன், அந்தப் போஸ்டர்களை ஓட்டிய கோதுமைப் பசையுடன் முழுவதுமாக சாப்பிட்டுவிடும்...........😜. எனக்குத் தெரியாமலேயே, பிரக்ஞை இல்லாமலேயே ( இது இலக்கியச் சொல்..........🤣) அந்த மாடு என்னுடைய ரோல் மாடல் ஆகியிருக்கின்றது...................🤣.
  18. கவிதை கிளோட் தந்தது அதுக்கு விதை நீங்கள் போட்டது ........ நானோ வேறு நாலு பேரோ அதனிடம் இப்படிக் கேட்டால் அதுக்கும் இந்த வரிகள்தான் வருமா ........ வந்தால் அது தகுமா ......! 🙂
  19. உங்களது தமிழ் இலக்கிய ஆர்வம் அற்புதமானது, ஆனால் நீங்கள் கூறும் குற்றசாட்டு பற்றிய புரிதல் எனக்கில்லை, இவர்களின் எந்த இலக்கியமும் எனக்கு பரிச்சயமில்லாததால்.
  20. கவிஞர் வைரமுத்து ஞானபீட விருது - சுயமோகனின் வயிற்றெரிச்சல் 2025ம் ஆண்டின் அறுபதாவது ஞான பீட விருது கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அகிலன் மற்றும் ஜெயகாந்தனுக்குப் பிறகு வைரமுத்து மூன்றாவது நபராக இந்த விருதினைப் பெற்றிருக்கிறார். இது தமிழுக்கு கிடைத்த பெருமை அல்ல. தமிழால் விருது வழங்கிய அமைப்பும், கவிஞர் வைரமுத்துவும் பெருமையடைந்த தருணம். பதினோரு இலட்சம் பணமும், ஒரு சரஸ்வதி வெங்கலச் சிலையும் இந்த விருதுடன் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் தமிழால் பிழைக்க வந்த ஜெயமோகன் வயிற்றெரிச்சலை கொட்டி இருக்கிறார். அவரைச் சார்ந்த ஒரு கூட்டமும், 'அய்யய்யோ என்னைக் கையைப்பிடித்து இழுத்து விட்டான்' எனக் கதறும் ஒரு சில நபர்களும் ஓசியில் கிடைக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார்கள். தன் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு பிழைப்புதானே? ஜெயமோகனின் இணையதளத்தினைப் படிப்பவர்களுக்கு மெண்டல் டிஸ் ஆர்டர் நோய் ஏற்படலாம். அந்தளவுக்கு அவரின் படைப்புகள் மோசமாக இருக்கும். ஜெயமோகனின் எழுத்து அரசியலை தமிழ்நாட்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான ஆர்.பி.ராஜநாயஹம் அவர்கள் 16 வருடங்களுக்கு முன்பே வெளிப்படுத்தினார். அந்தளவுக்கு மிக மோசமான சுயமோகத்தனம் அவரிடம் இருக்கிறது. தமிழின் ஒரே எழுத்தாளர் தான் மட்டுமே, எல்லா விருதுகளுக்கும் அவரே தகுதியானவர் என்பது போன்ற இன்னும் பல மோகங்கள் அவரிடமுண்டு. இவரைப் பற்றி பதினேழு வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். கீழே இருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். ஊட்டியில் தளையசிங்கம் சம்பவத்தில் வெளியிடப்பட்ட ஊட்டியில் தளையசிங்கம் புத்தகத்தை வரிக்கு வரி டைப் செய்து ஒருவரின் இணையதளத்தில் அப்டேட் செய்திருக்கிறேன். ஊட்டியில் நடந்த சுயமோகனின் அற்பத்தனத்தை பதினைந்து வருடங்களுக்கு ராஜ நாயஹம் விவரமாக எழுதி சுயமோகனின் தன்மையை உலகிற்கு காட்டி விட்டார். கீழே இருக்கும் இணைப்பில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மு.தளையசிங்கமும் தொழுகையும் - https://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post.html ஜெயமோகனின் இணையதளத்தில் அவ்வளவும் தற்பெருமை. வாசகர்களின் கடிதங்கள். கடிதங்களுக்குப் பதில்கள் என சொறி சிரங்குகள். அதுமட்டுமல்ல மிகச் சிறந்த பிசினஸ் கான்சப்ட் டிசைன் செய்து வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையின் செழிப்பான தன்மைக்கு அறியா வாசகர்களை வெகு நுட்பமாகப் பயன்படுத்தும் அதிபுத்திசாலித்தனம் அவரிடமிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அதிமேதாவித்தனம். வாசகன் என்பவன் ஒரு அப்பாவி என அவருக்குத் தெரியும். அவனிடமிருந்து எப்படி என்னென்ன பெறலாம் என்பதும் அவருக்குத் தெரியும். புதிது புதிதாய் வரும் வாசகர்கள் இவரின் பலியாடுகள். ஒரு காலத்தில் மாலைமதி, ராணிமுத்து, சுபா, பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஷ்குமார், சாண்டில்யன், எண்டமூரி வீரேந்திர நாத், அகிலன், நா.பார்த்தசாரதி, ஞானி, புதுமைப்பித்தன் எனத் தொடர்ந்து ஓஷோ, ஜென், சூஃபியிசம், ஜே.கிருஷ்ணமூர்த்தி என படிப்பதில் ரசனை மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டது. இப்படியான நிலையில் நான் படித்ததில் யார் சிறந்த எழுத்தாளர், எது சிறந்த படைப்பு என எப்படி முடிவு செய்ய இயலும்? ஒவ்வொரு வயதுக்கும் ஒவ்வொரு படைப்புகள் சிறந்ததாக இருக்கும். இதே போன்ற நிலை எல்லா வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். எடுத்த எடுப்பில் புறநானுறெல்லாம் படிக்க முடியாது அல்லவா? ஒரு காலத்தில் மு.மேத்தா கவிதைப் புத்தகங்கள் கல்லூரி மாணவர்களின் திருக்குறள். எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தகங்களைப் படித்தவர்கள் பல லட்சம் மாணவர்கள். இப்படியான ஒரு சூழலில் ஜெயமோகன் தன்னை யார் என வெளிப்படுத்திய தருணம் தான் தமிழுக்கு அவமானம் (https://www.jeyamohan.in/230180/) என்ற அவரின் பதிவு. இவர் தமிழரல்ல என்கிறார்கள். தமிழால் பிழைக்க வந்தவர் என்கிறார்கள். ஒரு சிலர் இவரைப் பாதி தமிழர் என்கிறார்கள். அது என்ன கன்றாவியோ பாதி, கால், அரை என்ற விளக்கம். தமிழ் அவருக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது பல நபர்களுக்கு கொடுத்ததைப் போல. இவரொன்றும் தமிழின் பிரதிநிதியல்ல. ஆகவே தமிழுக்கு அவமானமென்று எழுதி அத்தாரிட்டியை எடுத்துக் கொள்ள முயலும் கள்ளத்தனத்தின் முயற்சியே வைரமுத்து அவர்களை இவர் விமர்சித்தது. இவர் தனது ஆகச் சிறந்த படைப்பு எனக் கருதும் வெண்முரசு ஒரு குப்பை என்பேன். தத்துவங்களும், மனிதக்கடவுள்களும் மனிதனின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த வேண்டும். அது சக மனிதனின் இருப்புக்கும், வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்குமானால், அந்தப் படைப்பு குப்பையாகத்தான் இருக்க முடியும். அவர் எழுதிய ஏழாம் உலகம் படித்துவிட்டு, அவருக்கும் ஒரு மெயில் அனுப்பினேன். அதை அவர் இணையதளத்தில் வெளியிட்டார் என நினைவு. ஏன் இவரை விமர்சிக்க வேண்டும் என நினைப்பீர்கள். அவருக்கு கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க காரணம் இருப்பது போல எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலில், அவரவரின் திறமைக்கு ஏற்ப எழுதுவார்கள். புழுக்களும், பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும், விலங்குகளும், மனிதர்களும் இயற்கையின் படைப்புதான். இதில் மனிதன் சிறந்தவன் என எப்படிச் சொல்ல முடியும்? இத்தனை உயிர்களும் இருந்தால் தான் மனிதன் வாழ முடியும் அல்லவா? மனிதனை விட மிகவும் ஆபத்தான மிருகம் வேறு எதுவும் இருக்க முடியாது. சரி, ஜெயமோகனை விமர்சிக்க என்னிடம் இருக்கும் காரணம் என்ன? துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு தமிழர்களின் அடையாளம், தமிழின் ஆகச் சிறந்த நூலான திருக்குறளில் மழை பற்றிய குறள்களைப் படித்தீர்களா? இக்குறள்களின் விளக்கம் படித்தவுடன் புரிந்திருக்காது. ஒரு சிலருக்குப் புரிந்து இருக்கும். கொள்ள கொஞ்சம் தமிழ் இலக்கண அறிவு தேவை. படிப்பறிவும் தேவை. கரை புரண்டு ஓடுதம்மா - அந்தக் காவிரியில் தண்ணி யெங்கும் நெளி நெளியா ஓடுதம்மா - அந்த நீல வண்ணத் தண்ணி யெல்லாம் சுழி சுழியா ஓடுதம்மா - அந்த சுத்தமான ஆத்துத் தண்ணி வெயிலடிக்கும் நேரமெல்லாம் - தண்ணி வெள்ளி போல மின்னுதடி குடிதண்ணியும் குளி தண்ணியும் - கண்மணியே குடம் குடமா எடுப்பாங்களாம் தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணே யதைத் தடுக்க ஒரு நாதியில்லை பாப்பானுக்கு பச்சைத்தண்ணி - கண்மணியே பறையனுக்கும் பச்சைத்தண்ணி பட்டிக்காட்டில் பல சாதியாம் - கண்மணியே பறையன் முதல் பாப்பான் வரை தோட்டி முதல் தொண்டமான் வரை - கண்மணியே தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி சண்டையிழுப்பதும் - கண்மணியே சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி தெய்வம் போல இருக்குதண்ணி - கண்மணியே திசையோடும் பச்சைத்தண்ணி இந்தப் பாடலைப் படித்து விட்டீர்களா? நா.வானமாமலை பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? அவர் தொகுத்த தமிழர் நாட்டுப்பாடல்கள் தொகுப்பு 1 என்ற மின்நூலில், 60வது பக்கத்தில் உள்ளது. இந்த நூல் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்ட இணையப்பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பாடல்களைப் படிக்க தொல்காப்பிய இலக்கண அறிவு தேவையில்லை. படிப்பறிவு இல்லாதவர்களிடம் படித்துக் காட்டினால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். திருக்குறளையும், நாட்டுப்புற பாடலையும் படித்ததில் உங்கள் மனதில் ஒட்டிக் கொண்டது எந்தப் பாடல்? பதில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஜெயமோகன் அவர்களே! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீட விருது ஏன் வழங்கப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆனாலும் அதை மறைத்து வன்மத்தைக் கொட்டி, அப்பாவி வாசகர்களை ஏமாற்றாதீர்கள். நீங்கள் விடுத்த வார்த்தைகளே உங்களை அழிக்க வரும் ஆயுதமாகி விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். மொழி ஆராய்ச்சியாளர்கள் ஓசைகளுக்கு தான் எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்தே இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள். பேச்சு மொழியின் ஓசை வடிவத்தின் உருவான படைப்பு தான் ஆதிமூலம் அல்லவா? ஆகவே பேச்சு மொழிப் படைப்புகள் தான் மிகச் சிறந்ததாக இருக்க இயலும். அதிலும் இவ்வகைப் பாடல்கள் பல ஜென்மங்களாய் தொடர்ந்து வரும் மனிதர்களுக்கு ஓசை வடிவில் கடத்தப்படுபவை அல்லவா? எழுத்துகள் உருவாகி, இலக்கணம் உருவாகி அவைகள் இப்போது எழுத்து வடிவில் படிக்கக் கிடைக்கிறது. கவிஞர் வைரமுத்து இந்த வகை எழுத்துக்களை பாமரனுக்கும், படித்தவனுக்கும் புரிந்த பேச்சு மொழியில் எழுதி இருக்கிறார். கவிஞர் வைரமுத்துவை விமர்சிக்க ஜெயமோகனுக்கு எந்த அருகதையும் இல்லை. எது சிறந்த படைப்பு என நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். அதைப் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை. தமிழில் எழுதி பிழைத்துக் கொள்ளுங்கள். தமிழ் தான் பலருக்கும் வாழ்க்கை கொடுக்கும். தமிழுக்கு எவரும் எதுவும் செய்யமுடியாது. அது இயற்கையானது. அது கடவுளானது. அது தமிழர்களின் உயிருக்குள் இருக்கும் ஆத்மா. உங்களைப் போன்றோர்கள் தமிழுக்கு அத்தாரிட்டி கேட்க முடியாது. அது உங்களால் முடியாது. தமிழ் தமிழரின் சொத்து. இனி ரசிக்க ஒரு பாடல் ஆண் : கல்லருகாம், புல்லருகாம் கடலருகாம் பூந்தோட்டம் புல்லறுக்கப் போற பிள்ளை - நீ பூமுடிஞ்சாலாகாதோ? பெண் : நத்தத்து மேட்டு வழி நான் போறேன் ஒத்த வழி பிச்சிச்சரம் போல - நீ பின்னே வந்தாலாகாதோ? ஆண் : கண்டாங்கிச் சீலை கட்டி கரை வழியே போற புள்ள - உன் கண்டாங்கிச் சீலையிலே - நான் வண்டாய்ச் சுழலுதனே குளத்திலொரு அல்லியுண்டு கூந்தலொரு பாகமுண்டு இடைச் சிறுத்த அல்லிக்கு இடையில் ஒரு மச்ச முண்டு வானமாமலையின் தமிழர் நாட்டுப்பாடல்கள் 1 - புத்தகத்தில் பக்கம் 163-164. பாட்டைப் படித்ததும் சும்மா ஜிவ்வு ஜிவ்வுன்னு தெறிக்குதல்லவா? கவிஞர் வைரமுத்துவின் பாணி இது. உளறல்களை இலக்கியமென்று கருதும் தற்குறிகளுக்கு வயிற்றெரிச்சல் வரத்தானே செய்யும்? வாழ்த்துகள் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு. ஜெயமோகன் அவர்களே நீங்களும் எழுதுங்கள், விருது பெறுங்கள். வாழ்த்துகிறோம். வளமுடன் வாழ்க. https://thangavelmanickadevar.blogspot.com/2026/03/blog-post.html
  21. அட .......பழக்கத்தில கை பதிந்திட்டுது ......... நல்லகாலம் கிருபன் பார்க்கமுதல் நீங்கள் பார்த்தது நல்லது . ........! 😀 நன்றி கிருபன் உங்களின் காஃபி கட்டுரைக்கு . .........! 😄
  22. போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்! ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாகவும், தெஹ்ரானிடமிருந்து ஒரு முக்கிய சலுகையைப் பெற்றதும் இதில் அடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ஈரானில் பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா அங்குள்ள சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் விரும்புவதாகவும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் செவ்வாயன்று (24) கூறினார். அணுசக்தி அல்லாத எரிசக்தி மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் ஒரு மதிப்புமிக்க சலுகையை வழங்கியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார், எனினும், அவர் அது குறித்து விரிவாகக் கூறவில்லை. அதேவேளையில், வொஷிங்டன் தெஹ்ரானுக்கு 15 அம்ச தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக ஓர் வட்டாரமும் உறுதிப்படுத்தியது. அதன்படி, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வொஷிங்டன் ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அனுப்பியதாக நியூயேர்க் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது. மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அந்த 15 அம்சத் திட்டம் குறித்து விவாதிக்க ஒரு மாத கால போர்நிறுத்தத்தை அமெரிக்கா நாடுவதாக இஸ்ரேலின் Channel 12 செய்திச் சேவை குறிப்பிட்டது. இந்த விவகாரம் குறித்து அறிந்த ஓர் வட்டாரம், அமெரிக்கா ஈரானுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியதை உறுதிப்படுத்தியது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைத்தல், சார்பு குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் ஆகியவை அந்தத் திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரேலிய ஊடகம் கூறியது. இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இது தொடர்பான கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. அதேநேரம், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை தெஹ்ரான் மறுத்துள்ளது. ஈரானின் சக்திவாய்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், திங்களன்று அத்தகைய செய்திகளை “போலிச் செய்திகள்” என்று நிராகரித்தார். நான்கு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, உலகின் 20% எண்ணெய் பொதுவாகக் கடந்து செல்லும் நீர்வழியை ஈரான் திறம்பட மூடியுள்ளது. இது வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. மேலதிக படைகளை அனுப்ப வொஷிங்டன் நடவடிக்கை இந்த தகவல்களுக்கு மத்தியில் அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஈரானியத் தாக்குதல்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன. மேலும் மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை அனுப்ப வொஷிங்டன் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து அறிந்த இருவர் செவ்வாயன்று சர்வதேச ஊடகங்களிடம், அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82வது வான்வழிப் பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தனர். இந்தப் படைகள், அப்பகுதியில் ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்கத் வீரர்களுடன் இணைந்து, அங்கு வொஷிங்டனின் பிரம்மாண்டமான இராணுவக் குவிப்பைத் துரிதப்படுத்தும். இது ஒரு நீண்டகால மோதல் குறித்த அச்சங்களை தற்சமயம் எழுப்பியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில் ஈரானிய மின் நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என்ற தனது அச்சுறுத்தலை, தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறி ட்ரம்ப் ஒத்திவைத்த ஒரு நாள் கழித்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் செவ்வாயன்று தெரிவித்தார். இது குறித்த எக்ஸ் பதிவில் பாகிஸ்தான் பிரதமர், ஷெபாஸ் ஷெரீஃப், பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான தற்போதைய முயற்சிகளை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், ஒரு விரிவான தீர்வுக்கான அர்த்தமுள்ள மற்றும் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார். பாகிஸ்தான், அண்டை நாடான ஈரானின் இஸ்லாமியக் குடியரசுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதுடன், ட்ரம்புடன் ஒரு உறவையும் வளர்த்து வருகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறிய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. எனினும், குறிப்பிடத்தக்க அந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மத்தியஸ்தரான ஓமன் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1469911
  23. இங்கே உள்ளூர்ச் செய்திகளின் படி அமெரிக்க ஈரூடகப் படையினர் (Marines) ஆயிரம் பேர்கள் வரை மத்திய கிழக்கு நோக்கிச் செல்கின்றனர். எங்கள் பன்னாடை "ஈரானுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பதன் காரணம், "மீளவும் பேச முயன்றோம், ஈரான் சமாதானம் செய்ய ஆதரவாக இல்லை, எனவே வேறு வழியில்லாமல் தரை வழியில் படையெடுக்கிறோம்" என்று சாட்டுச் சொல்வதற்காக இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். வெள்ளை மாளிகை திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறது, ஏதோ அறிவிப்பு வர விருக்கிறது!
  24. உண்மைதான் அண்ணா. என் கணவர் அடிக்கடி சொல்வார் "உன்னைக் கூட்டிக்கொண்டு போற நேரம் சின்னப் பிள்ளை ஒன்றைக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று 😃ஆனால் இலங்கையில் நின்றபோது பெரும்பாலான நாட்கள் மதியம் சாப்பிட்டதுடன் இரவு உணவு உண்ணாமல் காலை எட்டு மணிக்குத் தான் உண்டிருக்கிறேன். அதனால் நிறையும் குறைந்தது.
  25. நேற்றைய சமையல்❣️ என்னுடன் ஒரு ஈரன் மங்கை வேலை செய்கின்றா, அவ கேட்ட ஓரு கேள்வி என்னை தூக்கி வாரிப்போட்டுது😂❤️
  26. பச்சைவிளக்கு திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய படலொன்றின் வரிகள், உள்ளே பணத்தைப் பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்ல கணக்கை மாதி கள்ளக் கணக்கை ஏத்தி நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து... அவருக்கு வேண்டப்படவர்களுக்காக எப்பொழுதும் அவர் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும். வீட்டில் சாப்பிட்டு வந்தாலும் வற்புறுத்தி சாப்பிட வைப்பார். எம்ஜிஆர் திட்ட மிடுவதில் வல்லவர். இல்லாவிட்டால் கதர் ஆடை அணிந்து, ருத்ரட்ச மாலை போட்டுத் திரிந்தவர் திமுகவில் சேருவாரா?
  27. பச்சை கிளி பாடுது .......படம் : அமரதீபம் ......சிவாஜி & பத்மினி ......! 😍
  28. அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது. அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன் அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂
  29. இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂
  30. ஆஹா . ....அன்று ரேடியோ செய்யப் பட்ட பாடுகளையும் அதன் நுணுக்கங்களையும் விபரமாக விபரித்திருக்கிறீர்கள் ...... நன்றி ஜஸ்ரின் .......! 👍
  31. நீங்கள் எல்லோருடனும் நண்பேன் ,தம்பரும் உங்கன்ட கூட்டாளி என்பது எங்களுக்கு தெரியும்.... உங்களால் நான் பக்கத்து வீட்டு முஸ்தாபா,பின் வீட்டு அவுஸ்ரேலியன்,முன் வீட்டு சிங்களவ்ன் எல்லொருடனும் பகை...ஏன் யாழ் களத்திலயே முகம் தெரியாத உறவுகளுடனும் பகை...🤣 பெற்றொல் விலை வேற அதிகரித்து விட்டது அயலட்டைகளுடன் கார் புளுலிங் செய்ய முடியாமல் இருக்கு🤣
  32. இன்னும் வீக்கம் குறையவில்லையா?
  33. பாஞ்ச் ஐயா, இது கற்பனை புனைவோ அல்லது உண்மையோ? சித்தப்பாவிடம் அடிவாங்கி பின்னர் யாழ் இணையத்தில் இணைந்து கருத்துக்கள் பகிரும் அந்த உறவு யார்? இளம் வயது உடையவரோ?
  34. யாழ்நகரில் சண். சுந்தரம் அவர்களின் முயற்சியால் ஓட்டப் பயிற்சிக் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓடுவதையும் உடல்நலத்தையும் விரும்பும் அனைவருகாகவும் உருவாக்கப்பட்ட இக் குழுமத்துடன் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் தாராளமாகப் பங்குகொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்து ஒன்றாக ஓடலாம். நீங்கள் என்றுமே ஓடாத புதியவராக இருந்தாலும் தொடர்ந்து ஓடுபவராக இருந்தாலும் இக் குழுவில் சேரலாம். சண். சுந்தரம் அவர்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஓவியர், ... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓட்டத்தை நிறைவு செய்தவர். வயதோ, உடல் பருமனோ அல்லது வேறு காரணிகளோ ஓட்டப் பயிற்சிக்குத் தடையில்லை. ஆகவே விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணிக்குத் துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்று இக் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம். நன்றி.
  35. ஒப்பிலாமணி 1991 ஆண்டளவிலேயே இயக்கத்தில் இணைந்து இருக்கலாம் என அறிந்தேன். இவர் விசேட வேவு அணியை சேர்ந்தவராம். தொண்டமானாறு, பலாலி, மயிலிட்டி, காங்கேசந்துறை, மாதகல் என கரையோரமாக காரைநகர் வரை மிகப்பெரும் பாரிய தாக்குதலை நடாத்த இயக்கம் திட்டமிட்டதாகவும் அந்த தாக்குதலுக்கான உள்ளக புலனாய்வு, வரைபட ங்கள் வரை அனைத்தையும் கையாளும் பெரிய பொறுப்பு நிலையில் ஒப்பிலாமணி செயற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த தாக்குதலை நடாத்தும் முன்பே ஒப்பிலாமணி ஆவணங்களை கொண்டு (வசாவிளான் பகுதியாக அமையலாம்) இராணுவத்திடம் தப்பி ஓடிவிட்டார். ஒப்பிலாமணி ஓடியதால் இயக்கத்தினால் மிக நீண்டகாலமாக திட்டமிட்ட மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதாம். தாக்குதல் நடாத்தப்பட்டால் தான் மரணம் அடையவேண்டி வரும் எனும் காரணமும் ஒப்பிலாமணி ஓடக்காரணமாக அமையலாம். ஒப்பிலாமணி இராணுவத்துடன் இணைந்தது சூரியகதிர் நடவடிக்கை மூலம் இராணுவம் யாழை கைப்பற்றுவதற்கு அனுகூலமாக அமைந்ததாம். அப்போது பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் பிரதான விசாரணையாளராக நியமனம் பெற்ற ஒப்பிலாமணி இலங்கை அரசாங்கம் மூலம் பின்னர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. தன்னை இயக்கம் சிறுவர் போராளியாக பலாத்காரமாக இணைத்தது என்பது புருடா என்பதே நான் அறியக்கூடியது.
  36. எங்களுக்கு தெரியாத வட கொரியாவை பற்றி எங்களில் ஒருவர் விபரித்துள்ளார். வாசித்துவிட்டு சத்தம் போடாமல் போகவேண்டும்.
  37. எரிச்சல் மட்டுமில்ல....நக்கலும் அதிகம் ஐயா உங்களுக்கு 😂
  38. இந்தச் சமையலுக்கு... "ஹிஸ்புல்லா" மசாலாவும் போட்டு சமைக்க, ஆஹா.... சொல்லி வேலையில்லை. 😂
  39. பனிப்பொழிவு, மழை எதையும் பொருட்படுத்தாமல் அருமையான சமையல் . ........ கோழிக்கும் ஆட்டுக்கும் மாட்டுக்கும் ஒரே மா புண்ணாக்கு . .....சூப்பர் ..........! 😂 பகிர்வுக்கு நன்றி உடையார் . ........!
  40. சீன காஸ் அடுப்பு எப்படி?
  41. வாவ்....😂 இந்த மீன் சமைக்க ரஷ்ய காஸ் அடுப்பு பாவிச்சால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்....😎
  42. காலத்திற்கு ஏற்ற பொருத்தமான சமையல் குறிப்பு. 😂 இந்த ஈரான் மீன் சமையலை ஒருக்கா செய்து பார்க்க ஆசையாக உள்ளது. 🤣
  43. வருடா வருடம் விளையாட்டுப்போட்டியை திறம்பட நடத்தி யாழ் களத்தை கல கலப்பாக்கும் கிருபனுக்கும் இம்முறை முதலாம் ரெண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கும் என்னை கீழே மிதிப்படாமல் காத்த வாதவூரானுக்கும் என் நன்றிகள் . கிருபனுக்கு மேலதிக பாராட்டுக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.