Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    89365
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3198
    Posts
  3. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3101
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34065
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/27/26 in Posts

  1. 2. கடன்கார கடவுள்கள் ------------------------------------ பணம் கொட்டும் தெய்வம் என்றால் திருப்பதியே உடனேயே நினைவில் வரும். அங்கு நாங்கள் தலைமுடியையும் கொடுத்து, காணிக்கையாக திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமாக அள்ளியும் கொடுக்கின்றோம். மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இந்தியாவில் மொழிவாரியான மாநிலங்கள் உருவாகும் போது, சென்னையை தமிழ்நாடும், திருப்பதியை ஆந்திராவும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லுகின்றார்கள். சரியான முடிவை தமிழர்கள் அன்று எடுத்திருக்கின்றார்கள். சினிமா மோகம் அவ்வளவாக தமிழர்களை அன்று ஆட்டிப் படைக்கவில்லை போல. ஒரு காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. இந்தியர்களும், ஈழத் தமிழர்களும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் உலகெங்கும் கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல செல்வாக்காக இருந்தன அல்லது அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். 'வட அமெரிக்காவில் முதன் முதலாக பஞ்சமுக ஆஞ்சநேயர்...............' என்று கூட ஒரு விளம்பரத்துடன் ஒரு கோவில் இங்கே எனக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் பின்னேயே ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவருக்கு தனியாக கோவில் இருப்பது கூட அப்பொழுது தான் தெரியவந்தது. பின்னர் இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டேன். மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் இங்கு கணிசமான அளவில் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாகவே பழகி வருகின்றார்கள். படிப்பு,வசதி, அதனால் அவர்கள் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்து போன்ற காரணங்கள் இங்கு குழுக்கள் உருவாகுகின்றன என்று நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை தமிழர் ஆரம்பித்த கோவிலுக்கு போகாதது இங்கிருக்கும் பலருக்கு ஒரு விசயமாக இருக்கவில்லை. பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவே வழியில்லை. ஆனால் நாங்கள் பழகிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அது ஒரு பேசுபொருள் ஆகியது. நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்தால் பொதுவாகவே எங்களிடம் பேசுவதற்கு புதிது புதிதாக விடயங்கள் இருப்பதில்லை. கூட்டத்தில் பலரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் பற்றிப் பேசிக் கொள்வார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அந்தக் கதைகள் திரும்ப திரும்ப வரும். இப்படி ஒரு திசையில் மட்டுமே பேச்சுகள் இருக்கும். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து மாட்டுப்பட்டு விட்டால், அடுத்த தடவை அவர் நிச்சயம் வரமாட்டார். எங்கள் ஆட்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. எல்லா விடயங்களிலும் இதே குற்றச்சாட்டு உண்டு. ஆரம்பிக்கப்படும் முயற்சிகளின் அடிப்படை நோக்கத்திலேயே சந்தேகம் வந்தால், எப்படி அவற்றை ஆதரிக்கமுடியும்? முயற்சிகள் மிகவும் பழமையானவையும், தேய்ந்து போனவையாகவும் இருந்தாலும் ஆதரவு என்று மற்றவர்களும் போய் நிற்க முடியாதுதானே. ஒருவர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார் என்றால், இன்று அதை எப்படி ஆதரிக்கமுடியும். இல்லை, இங்கிருந்து ஆரம்பித்து, மேலே போகலாம் என்று காரணம் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் மீண்டும் மீண்டும் இங்கேயே ஆரம்பித்தால், இங்கேயே நின்று கொள்ளவே சாத்தியங்கள் உள்ளன. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கின்றன. நாங்கள் அங்கே அதிகமாக போகா விட்டாலும், அந்தக் கோவில் விளம்பரமாகவே நடந்தது. நல்ல நாட்கள், பெரு நாட்கள் என்று கொண்டாடப்பட்டன. சிலரின் வாழ்வில் அது ஒரு அங்கம் ஆகியது என்று தான் சொல்லவேண்டும். கலை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கடத்துகின்றோம் என்றும் நல்ல பக்க விளைவுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். பின்னர் திடீரென ஒரு நாள், அந்தக் கோவில் பெரும் கடனில் மூழ்கியிருக்கின்றது என்றார்கள். திருப்பதி, மயூராபதி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது இலாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. கடன் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. கடவுளே கடனில் இருப்பார் என்பது நான் நினைத்திருக்காத ஒன்று. அவர் மீது இவர், இவர் மீது அவர் என்று குற்றச்சாட்டுகள் பொதுவெளியிலும் வைக்கப்பட்டது. சிலர் பிரிந்து போய் இன்னொரு கோவிலை ஆரம்பித்தனர். இந்தக் கோவிலும் சில நாட்கள் இயங்கி, இறுதியில் மூடப்பட்டது என்று நினைக்கின்றேன். ஐயர் இங்கிருந்து அங்கு போனார் அல்லது வேறு எங்கோ போனார் என்று ஞாபகம். அங்கே இருந்த கடவுளின் விக்கிரகங்கள் என்ன ஆயின என்று நான் யாரையும் கேட்கவில்லை. இரண்டாவது தடவை மின்னல் தாக்குவது போல இன்னொரு சம்பவம் நடந்தது. ஊரில் உள்ள கோவில் ஒன்றின் திறப்புகளை வங்கி எடுத்துச் சென்று விட்டதாக ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு மண்டபம் கட்ட வங்கியில் கடன் எடுத்திருந்ததகவும், அதை திருப்பிச் செலுத்தாததால் வங்கி இப்படிச் செய்தது என்றும் சொன்னார்கள். ஊரையே காக்கும் தெய்வம் என்று தான் ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படியுமா நடக்கும் என்று ஆச்சரியமும், அதைவிட அதிக வருத்தமும் ஏற்பட்டது. சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல. பின்னர் இன்னும் பல இதே போன்ற கோவில் கதைகள் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இப்படி உலகெங்கும் இருந்து வந்தன. தமிழ்ப் படங்கள் சில வெற்றிப் படங்களாகவும், பலதும் தோல்விப் படங்களாகவும் ஆவது போல, கோவில்களும் வெற்றி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அதே திரைக்கதைகளுடன், அதே உற்சாகத்துடன் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றார்கள், சினிமாக்களையும் கோவில்களையும். பொதுவாகவே மனிதர்களுக்கு மறதி அதிகம் என்பதாலும், எதையும் பின்னிருந்து முன்னாக ஒரு காலக் கோட்டில் இணைத்துப் பார்க்கும் பொறுமை இருப்பதில்லை என்பதாலும், இதுவரையிலும் இல்லாத புது முயற்சிகளாகவே இவை எப்போதும் பார்க்கப்படுகின்றன. (தொடரும்.................)
  2. தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை ------------------------------------------------------- பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல. வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 1. தெய்வத்தின் பாவம் --------------------------------- இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன். பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக் கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது. 'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது. பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது. மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது. அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே. (தொடரும்....................)
  3. ஒவ்வாமையுடனும் ஆஸ்மாவுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஓட்டப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்மா முற்றாக மறைந்து விட்டது. ஒவ்வாமை ஓரளவு உள்ளது. பூத்திருக்கும் வயல் ஓரங்களில் தும்மாமல் ஓட முடிகிறது. விஞ்ஞான ரீதியில் ஒவ்வாமைக்கும் ஓட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோ அல்லது வேறு காரணங்களாலோ தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவை ஊசி போட்டிருந்தேன். தொடர்ந்து ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். நான் பாவிப்பது levocetrizine. 5 கிராம் குளிசையில் பாதியை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எடுப்பதுண்டு. மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பாதிக் குளிசை எடுப்பேன்.
  4. பள்ளிக்கூடத்தில் ரீச்சர் இவன் நுள்ளிப் போட்டான் என்று முறையிடுகிற மாதிரி இருக்கிறது. நடைபெறுவது போர். அதுவும் போரைத் தொடங்கியது இஸ்ரேலும் அமெரிக்காவும். எடுத்த எடுப்பிலேயே ஈரானில் பாடசாலையில் குண்டுகள் விழுந்து 150 பள்ளிக் குழந்தைகள் அநியாயமாக இறந்து போனார்கள். குண்டுகளுக்கு குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று வேறுபடுத்திப்பார்க்கத் தெரியாது.காசாவில், பாலஸ்தீனத்தில், லெபனாலில் எத்தனை குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதல்களில் இறந்து போயிருக்கிறார்கள்.அதற்கெல்லாம் யாரிடம் முறையிடுவது. போர் நடக்கின்றது. போரைத் தெடங்கியவர்கள்தான் போரை நிறுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக் கொண்டு போரை நிறுத்தினால் இருபக்கமும் அழிவுகளைத்தடுக்கலாம்.
  5. வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
  6. வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது. ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம். சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......! மலர் .......1.🌻
  7. 'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/
  8. நீங்கள் சொல்வது ஒரு வகையில் மிகச் சரியே. சில விருப்பு, வெறுப்புகள் மனிதர்களை விட்டு அகல்வது இல்லை. இதன் அடிப்படை வெறுப்பு என்றே நினைக்கின்றேன். அமெரிக்காவின் மீதும், மேற்கு நாடுகளின் மீதும் இருக்கும் வெறுப்பே அவர்களை நீங்கள் சொல்லியிருக்கும் அடுத்த பக்கம் என்று ஒன்றுக்கு தள்ளிவிடுகின்றது. இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்பு, இந்தியர்களின் மீதான வெறுப்பும் இவ்வாறானவையே. இங்கு இன்னொரு பார்வையே சம்பந்தப்பட்டவர்களிடம் கிடையாது. ஆனால் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்று மனிதர்கள் கருதுவதில் காலப்போக்கில், வாழும் நாட்களிலேயே, நெகிழ்வுகள் உண்டாகின்றன என்றே தெரிகின்றது. நெகிழ்வே இல்லாமல், கல்தூண் போல இருந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் போல............. ஆகக் குறைந்தது பேரப் பிள்ளைகளின் உலகமும், எங்களின் உலகமும் ஒன்றல்ல என்ற புரிதலாவது கிட்டியிருக்கும் என்று நினைக்கின்றேன்.........................
  9. அண்ணை, பெண்கள் மீதான ஆடைக்கட்டுப்பாடு ஆணின் பயத்தில் இருந்தே வருகிறது என நினைக்கிறேன்.
  10. காய்ந்து, ஆடையின்றி நின்ற மரங்களின் கிளைகளில் மெல்லிய பச்சைத் தளிர்கள் தலை தூக்குகின்றன. குளிர்காலத்தின்சோர்வு விலகி, வெயில் மெதுவாக பூமியைச் சூடேற்றத் தொடங்குகிறது. அதிகாலை நிசப்தத்தை பறவைகளின்கீச்சொலிகள் கிழித்து, அவற்றின் குளிர்காலப் பயணம் முடிந்ததையும் வசந்தம் பிறந்ததையும் அறிவிக்கின்றன. வசந்தம்என்பது வெறும் காலநிலை மாற்றமல்ல, அது மெதுவான, ஆனால் தெளிவான புத்துணர்ச்சியின் தொடக்கம். ஆனால் என்னால் வசந்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியவில்லை. இளம் சூரியஒளியில் சில நிமிடங்கள் நின்று காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால்முடியவில்லை. கொஞ்சம் நடைப்பயிற்சி செய்யலாமென்றாலே தயக்கம். காரணம், ஒவ்வாமை. கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்கள் என்னை ஆட்டிப்படைக்கின்றன. மகரந்தத் தூள்களின் வீச்சை நினைத்தாலேவெளியே செல்லத் தயங்குகிறேன். வீட்டுக்குள் ஒளிந்திருப்பதே எனக்குப் பாதுகாப்பாகத் தோன்றுகிறது. நான் மட்டும்தானா இவ்வாறு அல்லல்படுகிறேன்? யேர்மனியில் சுமார் 15% மக்களுக்கு மகரந்த ஒவ்வாமை இருப்பதாகக்கூறப்படுகிறது. இப்போது காற்றில் Hazel மகரந்தம் அதிகமாக உள்ளது. Alder மகரந்தமும் தோன்றத் தொடங்கியுள்ளது. இன்னும் சிலவாரங்களில் Birch மகரந்தம் பரவவிருக்கிறது. இந்த மூன்றும் எனக்கு ஒவ்வாதவை. மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறேன். “மருந்து எடுத்தால் வாகனம் ஓட்ட வேண்டாம், சோம்பல்தோன்றலாம். நடைப்பயிற்சி என்றால் அதிகாலையில் செல். வெளியே சென்றுவிட்டு வந்தால் தலைக்குக் குளி, உடைகளைமாற்று…” என்று ஏராளமான ஆலோசனைகள். அவற்றை எல்லாம் கடைப்பிடிக்க முயற்சித்தாலும், ஒவ்வொரு வசந்தமும்ஒரு சோதனையாகவே மாறுகிறது. காலநிலை மாற்றமும் மகரந்தங்களின் அளவுகளில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வெப்பநிலையின் திடீர் ஏற்றஇறக்கங்கள் அதிக வீரியமுள்ள மகரந்தங்களை உருவாக்குகின்றன. வறட்சி மற்றும் சுற்றுச்சூழல், மாசு காரணமாகமரங்கள் மனஅழுத்தத்தில் இருப்பதால், அவை அதிக அளவு மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன என ஆராய்ச்சிகள்கூறுகின்றன. இருந்தும், “சுற்றுச்சூழல் பிரச்சினை என்று ஏதாவது உண்டா?” என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். ஏற்கனவே Cetirizine குளிசை ஒன்றை ப் போட்டுவிட்டேன். கொஞ்சம் அசதியாக இருக்கிறது. இப்போது கொஞ்சம்நித்திரை கொண்டு பார்க்கலாம், வசந்தத்தின் மணத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பிக்கவாவது.
  11. 3 பகுதி கட்டுரையும் வாசித்து விட்டேன். கட கடவென்று நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். சிறப்பு!! 👌 உங்களை தங்களோடு கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறேன் என்ற அந்த குடும்பத்துக்கு, நீங்கள் எனக்கு இன்னும் ஒருவர் கூட்டி செல்கிறார் என்று சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. இன்னும் ஒன்று... விமானநிலையத்தில் சந்தித்த பணிப்பெண் வேலைக்கு போகும் அந்த பெண்ணிடம் நிறையவே அவரின் குடும்ப விவகாரங்கள் பேசிவிட்டீர்களோ என்றும் தோன்றியது. ஹோட்டல் கட்டில் விரிப்பில் பொட்டு பொட்டாய் ரத்தம்... வாசிக்கும் பொது கொஞ்சம் வில்லங்கமான சிந்தனை வந்து தொலைத்துவிட்டது. 🤭 சிக்கலான கால கட்டத்தில் தனி ஆளாக Expired ஆனா கிரெடிட் கார்ட்டுடன் "2 x 23kg அரிசிமாவு, பலகாரம், பாறை கருவாடு" சகிதம் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அது புலம்பெயர்ந்த தமிழருக்கேயான கெத்து. 😁
  12. பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000…. 5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்…. பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை…. 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது…. ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.
  13. மிக்க நன்றி அல்வாயன். நீங்கள் சொல்லும் விடயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் அங்கு இருந்ததில்லை, ஆதலால் அவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது. கோவில் கதைகள் போன்று இவை தெரிந்தாலும், இவை மனிதர்களின் கதைகளே...............🤣.
  14. https://www.nature.com/articles/d41586-023-01313-5 👆 இந்தக் கட்டுரை 2023 இல் வெளிவந்தது. இதில் இருக்கும் தவல்களின் படி பார்த்தால், லோகமகாதேவியின் கட்டுரையில் இருப்பது போல எதுவும் எளிதாக, நேரடியாக நடக்கவில்லை. ஒரு படம் மட்டுமே டி.என்.ஏ அமைப்பின் கண்டு பிடிப்பை நிகழ்த்தி விடவில்லை. தனது ஆய்வுக்கு, றோசலின்ட் "B" வடிவத்தை தவிர்த்து விட்டு, "A" வடிவத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவர் நோபல் பரிசுக் குழுவில் உள்ளடக்கப் படாமைக்கான காரணம். இது அவரிடமிருந்து, அவரது அனுமதியின்றித் திருடப் பட்டது என்பது சென்ஷேனல் கதை எழுதுவோரின் வாதமாகவே தெரிகிறது.
  15. அப்படியானால் இது கறுப்பு வெள்ளை ஊழல் கேஸ். இப்படி பட்டவர்களை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களாகவும், ஊழியர்களாகவும் தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்? என்ற கேள்வியைத் தான் ஒருவர் கேட்க வேண்டுமேயொழிய, ஏன் வேலை பிந்துகிறது என்று கேட்க முடியாது.
  16. செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை! வெள்ளி, 27 மார்ச் 2026 05:41 AM வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது. சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/55871
  17. ஜெயமோகனின் மாபெரும் விருது அறிவிப்பும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆபத்தான இடமும் றியாஸ் குரானா 0000000000000000000000 தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயமோகன் ஆகப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் என்பதிலும், அவரது வாசிப்பு வீச்சும், எழுத்து வன்மையும் இணையற்றவை என்பதை நாம் முற்றிலும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 'விஷ்ணுபுரம்' தொடங்கி 'வெண்முரசு' வரை அவர் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான புனைவுலகம் என்பது இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஆழமான கருத்தியலாகும். அவரது எழுத்துக்கள் இந்திய மெய்யியல், அத்வைத தரிசனம், உன்னதவாதம் அத்தோடு ஆதிக்கப் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைத் தனது அடிப்படைத் தத்துவார்த்த அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அவரது நாவல்கள், சிறுகதைகள், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அதுபோலவே விவாதங்களை நாம் வெறும் மேலோட்டமான அழகியலாகவோ அல்லது தனிமனித அகத்தேடலாகவோ மட்டும் சுருக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தரவு சார்ந்த, பொருள்முதல்வாத மேலும் சமூகப் பொருளாதாரக் கோணங்களில் இருந்து ஒரு சமூக விமர்சகனாக இவற்றை நான் அணுகும்போது, ஜெயமோகனின் சிந்தனை முறைக்கு எதிராக மிகக் கடுமையான, ஆழமான, அத்தோடு கட்டமைப்பு ரீதியான விமர்சனங்களை நாம் ஈவிரக்கமின்றி முன்வைக்க வேண்டியுள்ளது. மனித இனம் இந்த உலகை வென்றதற்கு மிக முக்கியக் காரணம், மனிதர்களால் கற்பனையான கதைகளை உருவாக்கி, அதை உண்மை என நம்பி கோடிக்கணக்கானோருடன் இணைந்து செயல்பட முடிந்ததே காரணம் என்ற வரலாற்று யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மதம், தர்மம், சாதி, தேசம், கடவுள் என்பவை சமூகங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் மனித மூளையின் கற்பனையில் உதித்த சமூகக் கருவிகளே தவிர, அவை எக்காலத்திலும் மாறாத பிரபஞ்ச உண்மைகளாகக் கருதப்படக்கூடிய தகுதியற்றவை. இந்தக் கோணத்தில் ஜெயமோகனின் ஆகப்பெரும் படைப்பான 'வெண்முரசு' அத்தோடு அவரது தத்துவார்த்தக் கட்டுரைகளை நாம் அணுகினால் அவர் மீதான மிகக் கடுமையான அரசியல் விமர்சனம் தன்னிச்சையாகவே எழும். ஜெயமோகன் இந்தப் புனைவுகளை வெறும் வரலாற்றுச் சமூகக் கருவிகளாக, அதற்கான கால வெளி சார்ந்த எல்லைகளுக்குள் வைத்துப் பார்க்காமல், அவற்றை பிரபஞ்சத்தின் அறுதி உண்மைகளாகவும், மனிதர்கள் எக்காலத்திலும் மீற முடியாத 'தர்மமாகவும்' புனிதப்படுத்துகிறார். ஒரு எழுத்தாளராக அவர் செய்வது மாபெரும் பிற்போக்குத்தனம் என்றே நான் ஆணித்தரமாகக் கருதுகிறேன். மனிதன் கற்பனையான புனைவுகள் அத்தோடு மாயைகளில் இருந்து விடுபட்டு, அறிவியல் மற்றும் சமூக யதார்த்தங்களை நோக்கி நகர வேண்டிய இந்த நவீன காலகட்டத்தில், ஜெயமோகன் தனது அபாரமான மொழி ஆளுமையைப் பயன்படுத்தி, மீண்டும் பழைய இதிகாச மற்றும் மதப் புனைவுகளுக்குள் தமிழ் வாசகர்களைக் கட்டிப்போடும் வேலையைச் செய்கிறார். பல ஆயிரம் பக்கங்களில் அவர் திரும்பத் திரும்ப நிறுவுவது, மனிதர்களைப் பிரித்து ஆளும் பழைய காலக் கற்பனைகளைத்தான். அவரது எழுத்துக்கள், வாசகர்களின் தர்க்க சிந்தனையை மழுங்கடித்து, உணர்ச்சிகரமான கற்பனைகளுக்குள் மனிதனை அடிமையாக்கும் வேலையை மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இந்த தத்துவார்த்த மாயையிலிருந்து விடுபட்டு, சமூகத்தின் விளிம்புநிலை யதார்த்தங்களை நாம் நோக்கினால், இந்தியாவின் வறுமை, விவசாயிகளின் துயரம், அத்தோடு விளிம்புநிலை மக்களின் அன்றாடப் பாடுகள் ஆகியவை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தோல்வியாகவே தரவுகளின் அடிப்படையில் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இந்த யதார்த்தவாதக் கோணத்தில் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலையோ அல்லது பிச்சைக்காரர்கள், பழங்குடியினர் குறித்து அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளையோ வாசிக்கும்போது, அவர் மீது மிகக் கடுமையான அறரீதியான குற்றச்சாட்டு எழுகிறது. ஜெயமோகன் வறுமையையும், மாற்றுத்திறனாளிகளின் நிலை, விளிம்புநிலை மக்களின் தீர்க்க முடியாத துயரத்தையும் ஒரு 'ஆன்மீகத் தரிசனமாக' மடைமாற்றி விடுகிறார். ஏழாம் உலகத்தில் பிச்சைக்காரர்களை வைத்து அவர் உருவாக்கும் தத்துவ விவாதங்கள் இலக்கிய ரீதியாக சுவாரஸ்யமானவையாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாக அவை மிகவும் ஆபத்தானவை. ஒரு பிச்சைக்காரனின் துயரம் என்பது பிரபஞ்சத்தின் ரகசியமோ அல்லது அவனது கர்ம வினையோ கிடையாது. அது ஆளும் வர்க்கத்தின் அரச வளங்கள் சிலரிடம் மட்டும் குவிக்கப்படுவதன் நேரடி விளைவு. ஜெயமோகன் விளிம்புநிலை மக்களின் பட்டினியை உன்னதப்படுத்துவதன் மூலம், அந்தப் பட்டினிக்குக் காரணமான அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தை எந்தவொரு விமர்சனத்திலிருந்தும் தப்ப வைக்கிறார். சுரண்டலைத் தத்துவப்படுத்துவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் ஆகப்பெரிய அறிவுசார் துரோகம். 'அறம்' போன்ற கதைகளில் வரும் மனிதர்களின் தியாகங்கள் கூட, சமூக அமைப்பின் கட்டமைப்பு ரீதியான அநீதிகளைக் கேள்வி கேட்காமல், வெறும் தனிமனித அறமாகச் சுருங்கிவிடுகின்றன என்பதை ஒரு சமூக விமர்சகனாக என்னால் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்ல இயலாது. இந்தச் சுரண்டலின் வேர் எங்குள்ளது என்று நாம் ஆழமாகப் பார்த்தால், பல நூற்றாண்டுப் பொருளாதாரத் தரவுகள் நிறுவுவது ஒன்றே ஒன்றைத்தான். செல்வம் அதுபோலவே அதிகாரம் என்பது தகுதியால் வருவது கிடையாது. அது வாரிசுரிமையாகவும், மூலதனக் குவிப்பாகவும் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்திடமே தங்கிவிடுகிறது. இந்த அமைப்புரீதியான சமத்துவமின்மையே சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கும் அடிப்படைப் காரணம். ஆனால் ஜெயமோகனின் பல கட்டுரைகளில் (குறிப்பாக சாதி, குடி, அத்தோடு வர்ண அமைப்பு குறித்த விவாதங்களில்), அவர் இந்தியச் சமூகப் படிநிலைகளை முற்றிலுமாக நிராகரிக்காமல், அவற்றுக்கு ஒரு பண்பாட்டு அல்லது தொழில் ரீதியான 'சமநிலைக்' காரணம் இருந்தது என்று வாதிடுவதைக் காண முடிகிறது. "வர்ணம் வேறு, சாதி வேறு. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது" என்ற பழமையான, பலமுறை தோற்கடிக்கப்பட்ட வாதத்தை நவீன மொழியில் பலமுறை அவர் தற்காத்துப் பேசியுள்ளார். தகுதியுள்ளவர்களே தலைமை ஏற்க வேண்டும் என்ற சிந்தனை அவரது எழுத்துக்களில் அடிநாதமாக இழையோடும். ஆழமாகப் பார்த்தால், ஜெயமோகனின் சிந்தனை என்பது ஆதிக்க வர்க்கத்தின் சொத்துக் குவிப்பையும், அதிகாரப் பரம்பரையையும் நியாயப்படுத்தும் ஒரு அதிநவீனத் தத்துவச் சால்ஜாப்பு மட்டுமே. 'தகுதியானவர்கள்' என்று அவர் கருதுபவர்கள், தலைமுறைகளாகக் கல்வியையும் நிலத்தையும் தங்களுக்குள் குவித்து வைத்துக்கொண்ட வர்க்கமே தவிர, அவர்கள் பிறப்பால் எவ்வகையிலும் மேன்மையானவர்களும்கூடக் கிடையாது. ஜெயமோகனின் 'பண்பாட்டுத் தொடர்ச்சி' என்ற வாதம், உண்மையில் மூலதன ஆதிக்கத் தொடர்ச்சிக்கான ஒரு பண்பாட்டு முகமூடி மட்டுமே. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, அவர் தொடர்ந்து நவீன அறிவியலையும் உலகளாவிய முன்னேற்றங்களையும் நிராகரிப்பதைக் காண முடியும். உலகம் கடந்த காலத்தை விட இப்போதுதான் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆயுள் காலம், சுகாதாரத் தரவுகள், வன்முறைக் குறைவு ஆகியவற்றின் மூலம் நம்மால் ஆணித்தரமாக நிறுவ முடியும். ஆனால் ஜெயமோகனின் பல எழுத்துக்கள் நவீன உலகை ஒரு சாபக்கேடாகவும், அறிவியல் பகுத்தறிவை ஆன்மாவைத் தொலைத்த இயந்திரத்தனமாகவும் சித்திரிக்கின்றன. அவர் தொடர்ந்து ஒரு 'இழந்த பொற்காலத்தை' நோக்கி வாசகர்களை ஈர்க்கிறார். பழங்காலக் கிராமிய வாழ்க்கை, பண்டைய ஞானிகளின் வாழ்வு முறை ஆகியவை மட்டுமே உன்னதமானவை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார். ஆனால் அவர் உன்னதப்படுத்துகிற அந்தப் பழங்காலம் என்பது சிசு மரணங்கள் மலிந்த, தொற்றுநோய்களால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த, தீண்டாமை மேலும் அடிமைத்தனம் கொடிகட்டிப் பறந்த ஒரு கொடூரமான இருண்ட காலம் என்பதே தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. நவீன அறிவியலும், ஜனநாயக அமைப்புகளும் மட்டுமே மனிதனின் வாழ்நாளை நீட்டித்து, அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளன. (ஒப்பீட்டளவில்) ஜெயமோகனின் நவீனத்துவ மற்றும் அறிவியல் மீதான இந்த அவநம்பிக்கை என்பது, எதார்த்தத் தரவுகளைப் புறக்கணிக்கும் வெற்று உணர்ச்சிவாதமே ஆகும். அவர் தரவுகளின் வெளிச்சத்தைக் காட்டிலும், தொன்மங்களின் இருட்டையே அதிகம் விரும்புகிறார். இந்த இருட்டு, ஆதிக்க சக்திகள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படிப் பயன்படுகிறது என்பதை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். அரசும் பெருநிறுவனங்களும் மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும்போது, மக்கள் அதனை எதிர்த்துப் போராடாமல், ஏதோ ஒரு தத்துவ விசாரணையில் மூழ்கியிருக்கவே அதிகாரம் எப்போதும் விரும்பும். ஜெயமோகன் தன்னை எந்தவொரு நேரடி அரசியல் கட்சிக்கும் சார்பற்றவர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டாலும், அவர் உருவாக்கும் 'இந்துப் பெருமிதம்', 'பாரதீயப் பண்பாட்டு மீட்சி', அத்தோடு 'ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்' ஆகிய கருத்தியல்கள், சமகால வலதுசாரி மற்றும் பெருமுதலாளித்துவ அரசியல் அதிகாரத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. மக்கள் தங்கள் நில உரிமைகள், வேலைவாய்ப்பு, அத்தோடு பொருளாதாரச் சுரண்டல்கள் குறித்துக் கோபம் கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அவர் அவர்களை அத்வைதத்தின் நுட்பங்கள், இதிகாசங்களின் தத்துவங்கள், பண்பாட்டுப் பெருமைகளை நோக்கித் திசை திருப்புகிறார். என் வாசிப்பில், ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆதிக்க வர்க்கம் மக்களுக்குப் புகட்டும் ஒரு பண்பாட்டு மயக்க மருந்தாகவே செயல்படுகின்றன. அந்த வேலையை அவரது எழுத்துக்கள் மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாகவே, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ் சார்புடையவரா என்ற தொடர் விமர்சனத்தையும் நாம் கருத்தியல் ரீதியாக அணுக வேண்டும். அவர் நேரடியாக வலதுசாரி அமைப்புகளிலோ கட்சியிலோ உறுப்பினராக இருந்ததில்லை. (விஷ்ணுபுரம் நாவல் ஆர்.எஸ்.எஸ் காரியாலயங்களில் விற்கப்பட்டன) தன்னை ஒரு காந்தியவாதி என்றும், அத்வைதி என்றுமே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்துத்துவ அரசியலை அவர் பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் உள்ளார். அவர்கள் மதத்தை வெறும் அரசியல் திரட்டலுக்கான கருவியாகச் சுருக்குகிறார்கள் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். ஆனால், அவர் அரசியல் ரீதியாக அவர்களை விமர்சித்தாலும், தத்துவார்த்த ரீதியாக வலதுசாரி அரசியலுக்குத் தேவையான மிகப்பெரிய அறிவுசார் அடித்தளத்தை தமிழ்நாட்டில் உருவாக்குபவர் அவரே என்பது எனது ஆழமான நிலைப்பாடு. இந்தியாவை மொழிகளாலும் தேசிய இனங்களாலும் ஆன ஒரு கூட்டாட்சியாகப் பார்க்காமல், ஒற்றைப் பண்பாட்டு ஆன்மீகத் தேசமாக அவர் முன்வைப்பது இந்து ராஷ்டிர சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. மேலும், தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய சிந்தனைகளைத் தொடர்ந்து தாக்கி, அவற்றுக்கு மாற்றுவடிவமாகப் பாரம்பரிய தர்மத்தையும் அத்வைதத்தையும் அவர் நிறுவுகிறார். இந்தியாவின் வரலாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் போராட்டமாகப் பார்க்காமல், வேதாந்த சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியாகவே முன்வைக்கிறார். ஆக, தற்கால வலதுசாரி அரசுகள் பெருமுதலாளித்துவத்துடன் இணைந்து இயங்கும்போது, ஜெயமோகன் உருவாக்கும் பிரம்மாண்டமான இந்து ஞான மரபு விவாதங்களும், பண்பாட்டுப் பொற்காலம் குறித்த ஏக்கங்களும், அந்த அதிகார வர்க்கத்திற்கு மிகச் சிறந்த கருத்தியல் கவசமாகப் பயன்படுகின்றன. அவர் வலதுசாரி அரசியல் தடையின்றி இயங்குவதற்கான பாதுகாப்பான சமூக மனநிலையைத் தயார் செய்து கொடுக்கிறார். இந்தச் சூழலில், இப்படியான பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துகின்ற ஒருவர், பெருமுதலாளிகள் அதுபோலவே பழமைவாத ஆதரவாளர்களின் பின்புலத்துடன் 'ஒரு கோடி ரூபாய்' என்ற மாபெரும் பணப்பரிசுடன் ஒரு இலக்கிய விருதினை அறிவித்து, இந்தியாவிலேயே மிகப்பெரிய இலக்கிய அதிகார நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்துவது என்பது வெறுமனே இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஒரு மிகத் தீவிரமான அரசியல் மேலாதிக்கச் செயல்பாடாகவே உருவெடுத்துள்ளது. ஆதிக்க வர்க்கம் தங்களது சித்தாந்தத்தை மக்கள் மீது வன்முறையால் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, நுட்பமான இலக்கிய நிறுவனங்கள் மற்றும் விருதுகள் மூலம் தங்களது மதிப்பீடுகளே ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனை முறையாக இருக்க வேண்டும் என மூளைச்சலவை செய்கிறது. ஜெயமோகன் முன்னெடுக்கும் இந்த மாபெரும் அதிகார நிறுவனமும், அதன் அபரிமிதமான பண பலமும் அத்தகைய மேலாதிக்கத்தை நிறுவும் கருவியே ஆகும். ஒரு கோடி ரூபாய் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் கற்பனைக்கெட்டாத ஒரு பெரும் மூலதனம். இந்த மூலதனத்தின் ஈர்ப்பு விசை, தன்னிச்சையாகவே பல இளம் எழுத்தாளர்களைத் தன்பால் ஈர்க்கும். மார்க்சிய, தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட, இந்த அதிகார நிறுவனத்தின் அங்கீகாரத்திற்காகவும், பணப்பரிசுக்காகவும் தங்களது தீவிரமான சமூக விமர்சனங்களை மழுங்கடித்துக்கொண்டு, ஜெயமோகன் வரையறுக்கும் உன்னதவாத மற்றும் ஆன்மீக அளவுகோல்களுக்கு ஏற்பத் தங்களது எழுத்துக்களைச் சமரசம் செய்துகொள்ளும் நிலை உருவாகும். பணத்தின் மூலம் மாற்றுச் சிந்தனைகள் நேரடியாகத் தடை செய்யப்படாமல், அதிகார நிறுவனத்தின் பிரம்மாண்டத்தால் அவை தானாகவே அடங்கிப் போகச் செய்யப்படுகின்றன. சம்மதத்தை உற்பத்தி செய்யும் மிக நுட்பமான தந்திரம் இது. தமிழ் இலக்கியம் என்பது காலம் காலமாக மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மையினர் இலக்கியம், பின்நவீனத்துவம் எனப் பல்வேறு விளிம்புநிலை மக்களின் மாற்றுக்குரல்களால் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஒரு களம். ஆனால், பெரும் பணபலத்தோடு ஒரு அதிகார நிறுவனம் உருவாகும்போது, அது ஒரு குறிப்பிட்ட அழகியலை மட்டுமே உண்மையான இலக்கியம் என்று உலகிற்கு அறிவித்து, மற்றவற்றின் மீது மிக மோசமான ஒரு குறியீட்டு வன்முறையைச் செலுத்துகிறது. ஜெயமோகனைப் பொறுத்தவரை, இந்திய ஞானமரபு, தொன்மங்கள், அத்தோடு ஆன்மீகத் தேடல் ஆகியவற்றைக் கொண்ட காத்திரமான படைப்புகளே ஆகச் சிறந்தவை என்ற அளவுகோல் உள்ளது. இந்த மாபெரும் விருதின் மூலம், இந்த குறிப்பிட்ட பழமைவாத மேலும் இந்துத்துவச் சார்புடைய அழகியலே இந்தியாவிலேயே தலைசிறந்தது என்ற பிம்பம் பண்பாட்டு மூலதனமாக உருவாக்கப்படுகிறது. இது தலித் இலக்கியத்தையோ, பெண்ணிய இலக்கியத்தையோ, பின்நவீனத்துவ இலக்கியத்தையோ நேரடியாகத் தாக்காது. அதற்கீடாக, அவற்றின் அழகியலை, "இது வெறும் பிரச்சாரம்", "இது உன்னதக் கலையென ஏற்கவியலாது" என்று முத்திரை குத்தி, இலக்கிய வரைபடத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. செவ்வியல் என்ற சொல்லுக்குள் ஒரு பெரும் ஆபத்தான வெடிகுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தை அச்சுறுத்தும் தந்திரோபாயம் இதனுள் பொதிந்திருக்கிறது. ஜெயமோகனின் சிந்தனைகளும் எழுத்துக்களும் தனிமனிதனின் அகத் தேடலுக்கும், தமிழ் மொழியின் அழகியலுக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால், ஒரு தீவிரமான விமர்சகனாக அவரை சமூக, வரலாற்று, பொருளாதார நிலைப்பாடுகளின் அடிப்படையில் அளவிடும்போது, அவரது ஒட்டுமொத்த எழுத்தியக்கமும் பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துவதாகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தத்துவார்த்தமாக நியாயப்படுத்துவதாகவும், விளிம்புநிலை மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளை ஆன்மீக இருட்டடிப்புச் செய்வதாகவுமே வெளிப்படுகிறது. அவர் சொற்களால் கட்டும் பிரம்மாண்டமான தத்துவக் கோட்டைகள், எதார்த்தமற்ற புனைவுகளின் அடித்தளத்தில்தான் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது, அந்தப் புனைவுகளை வெறும் வார்த்தைகளைத் தாண்டியும், பல கோடி ரூபாய் மூலதனத்தின் துணையோடும், ஒரு மாபெரும் அதிகார நிறுவனத்தின் வாயிலாகவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலின் மீதும் ஒரு மேலாதிக்கமாக நிலைநிறுத்த அவர் முற்படுகிறார். இது, தமிழின் பன்முகத்தன்மையை அழித்தொழித்து, ஒற்றைப் பரிமாண, ஆதிக்கச் சார்பு இலக்கியச் சூழலை உருவாக்கும் மாபெரும் அரசியல் செயல்பாடாகவே இதைக் கருதி எவ்விதச் சமரசமுமின்றி நாம் முழுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. #ஜெயமோகன் #தமிழ்இலக்கியம் #இலக்கியவிமர்சனம் #பண்பாட்டுஅரசியல் #விருது #கருத்தியல்வன்முறை #விளிம்புநிலைஅரசியல் #tamilliterature #riyasqurana #றியாஸ்குரானா https://www.facebook.com/share/1K7cywzmw4/?mibextid=wwXIfr
  18. கையைவிட்டுப் போன பொதி திரும்ப வந்தால் கண்டபடி எல்லாம் திறக்கக் கூடாதாம். இன்றைய அறிவியல் உலகில் விமானத்தில் வரும் பயனிகளின் பொதிகளையும் மிக நுட்பமாகத் திறந்து போதைப் பொருட்களையும் அதற்குள் வைத்துக் கடத்துகிறார்களாம்.😳
  19. பொருட்கள் எதுவும் தொலையவில்லை. திடுதிப்பெனக் கிளம்பியதில் கருவாடு, கறிவேப்பிலை மற்றும் சில வேண்டவேண்டும் என எண்ணிய பொருட்கள் வாங்கவில்லை. சரி அடுத்ததடவை வாங்குவோம் என மனதைத் தேற்றியாச்சு. 😃
  20. உதாரணம் முருகன் தம்பி பிள்ளையார். அத விட்டுட்டு கீழ உள்ளவர்களிடம் போய் லஞ்சம் கொடுத்து மேலே போகாமல் இருப்பதும் ஒரு கெட்டித்தனம். அடபாவிகளா ஐயர் அம்மாவைக் கூட விட்டு வைக்கலையாடா?
  21. கடவுள் கதைச்சா என்ன சொல்லியிருப்பார்?! தொடருங்கள் அண்ணா.
  22. அது சரிதான் பிரியன் சார்.. இந்த தலைவர்மார் யாரென்று அறியலாமா வல்லிபுரம் அய்யா...சுங்க இலாகா அதிகாரி ...நம்முடன் நல்ல தோஸ்து...மதிப்புகுரியவர்...மயூராபதியின் கோவில் முன்னால்தான் குடியிருந்தனான்...கோவில் தேவைக்காக அந்தவீடு எடுத்தவுடன் ..அதன் 4 வது மாடியில் வீடு வாங்கிவிட்டோம் ...ஒரு வடிவான அய்யரும் அம்மாவும் இருந்தாங்களே... அயல் பொடியளின் ஆக்கினை தாங்காமல் அய்யர் சோல்லாமல் கொள்ளாமல் அம்மாவுடன் ஜெர்மனி போய் ...அங்கு மயூராகணபதி கோவில் நடாத்துகிறார் ..தெரியுமா ... கடவுல் கவனமா கதையெழுதுங்கோ ....வாசிக்க நல்லாத்தான் இருக்கு...
  23. மகிந்தவின் கையாளாக இருந்தவர் அரசதரப்பு சாட்சியாக மாறி இருப்பதால் இந்த கொலை பற்றி மேலதிக தகவல்களை வழங்கலாம்.
  24. இதில் என்ன சந்தேகம்? நேரடியாக தலைவர்மாருடனே தொடர்பு கொள்வது நல்லது தானே.
  25. உண்மையில் பேச்சுவார்த்தைக்காகவே தான் தாக்குதல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? நான் நினைத்தேன் படைக் கட்டுமானங்கள் வந்து சேரும்வரை இழுத்தடிக்கிறார் ரம் என்று.
  26. கள்ளு குடிப்பது தமிழர்களது உணவு உரிமை என்று முழக்கமிட்ட சீமானா குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம் என்று சொன்னார் 😂
  27. அண்ணன் சொன்னது டாஸ்மார்க் சரக்கு அடிபவர்களுக்கு மட்டுமே. அண்ணன் வெளிநாட்டு றெமி மார்ரின், ஜொனி வோக்கர் அடிப்பவராச்சே. ஆகவே வாக்களிக்கலாம்.
  28. நன்றி சோதரி சுமேரியரே! உங்கள் மகிழ்ச்சி என்னையும் பற்றிக்கொண்டது. உங்கள் தந்தை மதிப்புக்குரிய நாகலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் உங்களைச் சந்தித்த பின்பு இப்போதுதான் தொடர்புக்கான பாதையை எமது யாழ்களம் வகுத்துத் தந்துள்ளது. களத்திற்கு நன்றிசெலுத்தி உங்களது பதிவையும் பார்த்தேன் தமிழ் அப்படியே இளமை மாறாது துள்ளி விளையாடுகிறது. உறவுகளும் வாசகர்களும் மகிழ உங்கள் உடல்நலமும் பாதுகாத்துத் தொடர்ந்து யாழில் எழுதுங்கள்.🙌
  29. அத தெரண தமிழ் கருத்துப் படங்கள்.
  30. இந்த வீடியோவில், சமீபத்தில் இஸ்ரேல் வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கப் போகிறோம். 1980-களில் தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போரில் இஸ்ரேல் ஆற்றிய மறைமுகப் பங்கு என்ன என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு ரகசியமாக இஸ்ரேலின் உதவியை நாடியது. ரோந்துப் படகுகள், நவீன துப்பாக்கிகள் என 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை இஸ்ரேல் எப்படி இலங்கைக்கு விற்றது? "விவசாய ஆலோசகர்கள்" என்ற போர்வையில் இஸ்ரேலின் 'மொசாத்' (Mossad) உளவாளிகள் இலங்கையில் எப்படி செயல்பட்டார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து அமெரிக்கா எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் இலங்கை அதிரடிப்படைக்கும் (STF), அதிபர் ஜெயவர்த்தனாவின் பாதுகாவலர்களுக்கும் இஸ்ரேல் ஏன் பயிற்சி அளித்தது? வரலாற்றை மாற்றிய இந்த மறைக்கப்பட்ட உண்மைகளைத் தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள். (ஆதாரம்: இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞர் ஈட்டாய் மேக் (Eitay Mack) 'The Wire' தளத்தில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில்).
  31. மோதல் கட்டுப்பாட்டை மீறும் மட்டும், நீங்கள் "மிக்சர்" சாப்பிட்டுக் கொண்டு இருந்தீர்களா. முற் கூட்டியே... தடுக்கத் தெரியாத நீங்கள் எல்லாம்... வீணாய்ப் போன சபை. உலகில் எந்தப் போரையும், தடுக்கத் தெரியாத உங்களுக்கு... எதற்கு ஐக்கிய நாடுகள் சபை.
  32. அய்..இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது..🤭
  33. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  34. உங்களைப் போல்தான் எனக்கும் இணைந்து பயணித்த அனுபவமாக இருந்தது. ஆனாலும் வழி நெடுக அவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வந்தார். எங்களுக்குத் தரவேயில்லை😁 இந்த மகிழ்ச்சி அவரது வீட்டுக்காரருக்கு இருந்திருக்குமா?
  35. மலர் . ........... 4. இப்பொழுதெல்லாம் இந்தப் பிரச்சினைகளால் விநோத்துக்கும் மணிமேகலைக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்தபடி இருக்கு. இதெல்லாம் மணிமேகலைக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை……அதனால் என்ன செய்வது என்று அவள் யோசிக்கிறாள் …….ஒருநாள் ஒரு ஓய்வான நேரத்தில் விநோத்திடம் விநோ நீ ஒன்றைக் கவனித்தாயா …..! என்ன சொல்லுங்கோ…..! — இப்பொழுதெல்லாம் சாதுக்கள் இவ்வழியே போனாலும் இங்கு பிக்ஷை ஏற்க வருவதில்லை தெரியுமா…..! — ஓமக்கா நானும் அதைக் கவனித்திருக்கிறேன்….. ஆனால் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை…….! — எனக்கும் விளங்குது விநோ ….. நீயும் நானும் வீணாக சண்டை பிடிப்பதில் அர்த்தமில்லை. “ குதித்தோடிவரும் ஆமைக்குஞ்சுகளை தாய்போல் தாவியோடி வந்து தன் அலைக்கரங்களால் அரவணைத்து அழைத்து செல்லும் கடல்போல்” நாங்கள் நினைத்ததை விட எம்மையும் மீறி இந்த “வீதியோரக்கடை” மக்களிடையே பிரபலமாகி விட்டது . அது தானாகவே பலதரப்பட்ட மனிதர்களையும் தனக்குள் ஈர்த்துக் கொண்டிருக்கு அதுதான்……. என்றாலும் விநோ, நாங்கள் இங்கு நடக்கும் தப்பான காரியங்களைத் தடுக்க ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.புரியுதா…… — ஓம் மேகலை, இனிமேல் நானும் முயற்சி செய்கிறேன் …… நீங்களும் கணக்க யோசிக்காதையுங்கோ…….! அன்று மதியம் வரை கடையில் நல்ல வியாபாரம் நடந்து முடிந்து விநோதன் ,மணிமேகலை, சுஜிதா, யுகேந்திரன் மற்றும் அங்கு தொழில் செய்யும் விலைமாதர் இருவரும் ஓய்வாக வாங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள். மணிமேகலை எழுந்துபோய் எல்லோருக்கும் தேநீரும் வடையும் கொண்டுவந்து மேசையில் வைத்து விட்டு அந்த இரு பெண்களையும் பார்த்து நீங்களும் எடுத்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு தானும் தனது தேநீரை எடுத்துக் கொண்டு சென்று வானொலியின் சத்தத்தை கொஞ்சம் அதிகரித்து விட்டு வந்து அவர்களுடன் அமர்ந்து கொள்கிறாள். வெளியே ஓரிரு லொறிகள், பேரூந்துகள் நிக்கின்றன. வானொலியில் எஸ்.பி.பி “என்காதலே என்காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று உருகி உருகிப் பாடுகின்றார். எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று மேகலை சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்கின்றனர். இது இளையராஜா என்று நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, இல்லையக்கா என்று அந்த இரு பெண்களில் ஒருத்தி சொல்லி விட்டு இது ஏ .ஆர். ஆர் என்று சொல்கிறாள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். வைரமுத்து அப்படி எழுதியிருப்பார். “காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் இனி மீள்வதா, இல்லை வீழ்வதா உயிர் வாழ்வதா இல்லை போவதா அமுதென்பதா, விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா” இந்த வரிகளின் செறிவினில் யுகேந்திரனையும் சுஜிதாவையும் தவிர ஏனையோரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. அங்கு ஒரு கனத்த மௌனம்……யாரு யாரையும் ஆற்றுப்படுத்தவில்லை. அவரவர்களுக்குள்ளும் ஏதேதோ நினைவுகள், வலிகள். பின் சற்று தெளிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சிற்றூண்டியுடன் சினேகமாக உரையாடுகின்றார்கள். இவர்கள் நால்வரின் கடந்த காலங்களும் நால்வருக்கும் ஓரளவேனும் தெரிந்தே இருக்கின்றது. பின்னேர சமையலுக்கு மேகலை ஆயத்தம் செய்ய, யுகேந்திரனும் சுஜிதாவும் விறகு சேகரிக்க காட்டுக்குள் செல்கின்றனர். எல்லோரும் கலைந்து போக மேகலையும் எதோ யோசனையில் நாடியில் கை வைத்தபடி இருக்கிறாள்.விநோதன் தான் இருந்த வாங்கில் அப்படியே கால் நீட்டிப் படுத்திருக்கிறான். அவன் ஒரு காலுடன் மற்றகாலை உரசுவதைப் பார்த்த மேகலை என்னடா கால் வலிக்குதா ….. — ஓம் மேகலை, மலை ஏற்றத்தில் சைக்கிளை உழக்கிக் கொண்டு போனது. அதுதான். — சொன்னால் நீ கேட்பதில்லை. ஸ்கூட்டரை அல்லது வானை எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் தானே. — ஸ்கூட்டரை சுஜியும் வானை யுகேந்திரனும் கொண்டு போய் விட்டார்கள் மேகலை. — ஓ …. அதுக்காகவா அப்போது யுகேந்திரனை நீ கண்டிச்சனி. — ஓம் மேகலை, அவன் வானை கொண்டு போனதுக்காக அல்ல. அவனிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் எடுத்திடலாம். அதற்கிடையில் விபத்து நடந்தாலோ அல்லது போலீசில் பிடிபட்டாலோ பிரச்சினைதானே. அதுதான் கொஞ்சம் பொறுமையாய் இருடா என்று சொன்னனான். — சரி சரி விடு அவன் சின்னப்பொடியன்தானே ….. — மேகலை நீங்கள் அவனுக்கு நிறைய செல்லம் குடுக்கிறீங்கள் …..! — உனக்கென்ன தெரியும், இந்நேரம் இவன் வயதில எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கு எண்டு . (அவள் தனக்குள் நினைப்பதை வெளியில் சொல்லவில்லை). சரி இரு வாறன் என்று சொல்லி எழுந்து சென்று ஒரு சிறிய “நோ எண்ணெய்” போத்தலுடன் வந்து அவனது இரு கால்களிலும் தொடையில் இருந்து பாதம் வரை நன்றாகத் தேய்த்து விட்டு விரல்களையும் ஒவ்வொன்றாய் இழுத்து இழுத்து நெட்டி முறித்து விடுகிறாள். அது அவனுக்கு சுகமாக இதமாக இருக்கின்றது. அவன் பரிவுடன் அவளைப் பார்க்க நினைவுகள் சில வருடங்கள் பின்னே போகின்றது.......! அன்று அவனை இரண்டுபேர் அவன் கை கால்களைக் கட்டி வைத்து அடித்து அந்த ஹாலில் போட்டு விட்டுப் போகிறார்கள். அங்கு சுவரில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஏதோ சமையல் நிகழ்ச்சி போய்கொண்டு இருக்கு. ஒருவர் விதம் விதமாய் உணவுகள் செய்து குடுக்க சிலர் ஒரு வட்ட மேசையை சுற்றி இருந்து சுவை பார்த்து உண்கின்றனர். சற்று நேரத்தில் இவர்களுடன் இன்னும் இருவர் ஒரு பெண்ணை தர தரவென்று தரையோடு இழுத்து கொண்டு வருகிறார்கள்.அவள் ஆடைகள் அலங்கோலமாய் இருக்க அவள் ஈனஸ்வரத்தில் என்னை விடுங்கோடா என்னால் முடியல்லையடா என்று அரற்றுவது இவனுக்கு கேட்கிறது.அவர்கள் இவன் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்தப் பெண்ணை இம்சை செய்கிறார்கள். அவளும் இடைக்கிடை கைகால் கட்டுடன் தரையில் இரத்தம் ஒழுகக் கிடக்கும் இவனையும் பரிதாபத்துடன் பார்க்கிறாள். அவன் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்பாமல் மேலே டீ .வீ யைப் பார்க்க அதில் அவர்கள் கோப்பை நீருக்குள் கிடக்கும் சிகப்பு வைனில் வெந்த சிப்பியை எடுத்து முள்ளுக்கரண்டியால் பிளந்து சதையை குத்தி சாப்பிடுகிறார்கள்..........! மலர் .........🪷 4.
  36. எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.
  37. விசுகரின் எழுத்தில் சில குழப்பங்கள் இருக்கின்றன. மாதாந்த இரத்தப் போக்கை சில ஹோர்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பிற்போடலாம் (period delaying pills). இந்தக் குளிசையை நிறுத்தியவுடன் 3 நாட்களில் மாதாந்த இரத்தப் போக்கு ஆரம்பிக்கும். ஆனால், இந்த நோக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப் படும் மாத்திரை கருத்தடை மாத்திரை அல்ல. இதை எடுத்துக் கொண்டு உடலுறவு கொண்டால், கருத் தரிக்கும். பக்க விளைவுகள் சில உண்டு: உடலில் நீர் சேர்தல் (இதனால் வயிறு ஊதியது போல உணர்தல்), தலை வலி, நிறுத்தியவுடன் அதிக இரத்தப் போக்கோடு மாதாந்த இரத்தப் போக்கு உருவாதல் என்பன பரவலான பக்க விளைவுகள். ஆபத்துக்கள்: இரத்தம் இலகுவாக உறையக் கூடிய கண்டறியப் படாத நோய் நிலை (blood clotting disorders) சிலரில் இருக்கலாம். அத்தகைய நோய் நிலை இருப்போரில் இரத்தக் கட்டிகள், மூளை இரத்த அடைப்பு என்பன ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மட்டுமே இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் இவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  38. suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉
  39. இந்த இடத்தில தான் கிளைமாக்‌ஸ் வருது.
  40. கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் இது வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ....எனினும் கிடைக்கும் இடைவெளியில்... அந்த சிலுசிலுப்பான நேரங்கள் ...சொற்கம்தானே சுவியர் ...இதிலை கவித்திறனைவிட ...உங்கள் ஆத்மார்ந்த அனுபவிப்பு ...கவிதையை உயிரோட்டமாக்குகிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.