Everything posted by இணையவன்
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
சென்ற மார்ச் மாதமும் அவுஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து செந்றுகொண்டிருந்த போயிங் விமானம் ஒன்று குலுங்கியதால் 50 பேர் காயமடைந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பிரெஞ்சு மூலம் : https://www.lemonde.fr/economie/article/2024/03/11/un-boeing-787-de-latam-airlines-rencontre-un-probleme-technique-cinquante-personnes-blessees_6221350_3234.html
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?
விளைச்சலை அதிகரிக்க பூச்சிநாசினிகளைப் பாவித்தார்கள். இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட விளைச்சல் குறைந்தது. இப்போது இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிரான்ஸில் தேனீ வளர்ப்பு பற்றி விளிப்புணர்வு செய்கிறார்கள். பரிஸில் நான் வேலை செய்யும் 5 மாடிக் கட்டடத்தின் உச்சியில் மொட்டைமாடியில் தேனீ வறர்க்கிறார்கள். வருடத்தில் இரண்டு தடவை இதிலிருந்து கிடைக்கும் தேனை அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்று பராமரிப்புச் செலவை ஈடு செய்கிறார்கள். எனக்கு இலவசமாக தேனீ வளர்ப்புப் பற்றிய செய்முறைப் பயிற்சி வழங்கினார்கள். இப்போது இங்கு தேனீக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது ஆசியாவிலிருந்து வந்துள்ள தேனீ போல் தோற்றமுள்ள ஒரு வித குழவி ஆகும்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
போரின் வீச்சு குறையலாம். ரஸ்ய அதிபர் புதின் மீதும் இதேபோன்று பிடியாணை உள்ளது. அதனால் போர் நின்றுவிடவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் வசிக்கும் நாடுகளுக்கு இவர் சென்றால் அந்த நாடு இவரைக் கைது செய்ய வேண்டும்.
-
இந்த ஆண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஆரம்பித்து வைக்க எலோன் மஸ்க் இலங்கை வருகை?
ஸ்டார்லிங்க் பல சர்ச்சைகளை உண்டக்கியதால் ஐரோப்பாவில் இதற்குக் கணிசமான எதிர்ப்பு உள்ளது. எலன் மஸ்க் தான் விரும்பினால் ஒரு நட்டில் ஸ்டார்லிங்க் மூலம் இணையச் சேவைகளைச் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும் என்று நிரூபித்திருந்தார். ஐரோப்பா சொந்தமாக IRIS² என்ற செய்மதி இணைய வழங்கலை உருவாக்கி வருகிறது. இதனால் ஸ்டார்லிங்க் ஐரோப்பாவில் காலூன்றுவது கடினம். உலகை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போட்டியின் இன்னொரு அங்கம் ஸ்டார்லிங்க்.
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
காஸா மீது மேற்கொண்ட தாக்குதல்க்கள் மூலம் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதே காரணத்துக்காக காஸா தலைவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சுச் செய்தி மூலம் . https://www.lefigaro.fr/international/la-cour-penale-internationale-emet-un-mandat-d-arret-contre-netanyahu-pour-crimes-contre-l-humanite-20240520
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இது மட்டுமில்லை. ஒரு நாட்டின் அதிபர் பயணிக்கும் விமானத்தில் இரகசிய சமிக்ஞைகள் பாதுகாப்பு அணியுடன் இருக்கும். விபத்து ஏற்பட்டாலும் அதன் இடத்தையாவது காட்டும். அத்துடன் ஹெலிகொப்டரின் நகர்வுகள் கண்காணிக்கப்படும். இவருடன் சென்ற ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களும் பத்திரமாக உள்ளன. 40 வருட பழைய டப்பாவில் தனது நாட்டு அதிபரை ஏற்றி அனுப்பியவர்களிடம் இவ்வளவு தொழில்நுட்பம் இருக்காது என்பது புலனாகிறது.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
மொழிபெயர்ப்புக்கு நன்றி ரஞ்சித். இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமைதான் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை ஒரு பகுதி சிங்களவரையாவது சிந்திக்க வைக்கிறது. இது புதிய சிந்தனை அல்ல. விஜய குமாரதுங்க போன்றவர்களும் முன்னெடுத்ததுதான். இன்று இச் சிந்தனையானது தமிழர்களுடன் சமாதானமாகப் போனால் நாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைவரும் முன்னேற்றமடையலாம் என்பதைச் சிங்களவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் உரிமைக்காகப் போரடியது முடிவுக்கு வந்து பல வருடங்களின் பின் சிங்களவர் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுடன் எம்மை நோக்கி வரக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் போராட்டங்கள் மூலம் இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கலாம். இதற்கு முக்கிய இடைஞ்சலாக இருக்கப் போவது இலங்கையின் பௌத்த பீடங்கள் தான்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த Bell 412 ஹெலிக்கொப்டர் 1980 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டது. ஈரானிடமுள்ள பெரும்பான்மையான இராணுவ விமனங்களும் ஹெலிகொப்ரர்களும் 80 ஆண்ட்டுக்கு முற்பட்ட தயாரிப்புகளாகும். பொருளாதாரத் தடைகளினால் இவை சரியான முறையில் பராமரிப்புச் செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
-
முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த மேதகு வே. பிரபாகரன் அவர்கட்கு வீரவணக்கம்
வீரவணக்கம்.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
அப்படியா ? மொனிக்கா தன்னைக் கிளிண்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சொல்கிறார். டேனியல்ஸ் தனது முழு இணக்கத்துடன் ட்றம்புடன் உடலுறவு கொண்டதாகச் சொல்கிறார். உங்களுக்கு இரண்டும் ஒன்றாகத் தெரிந்தால் இதற்குமேல் விவாதிக்க முடியாது.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
🙂 தவிர, நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததோ அல்லது அவர் மௌனமாக இருக்கப் பணம் கொடுத்ததோ தவறில்லை. வழக்கின் மையக் பிரச்சனையும் அதுவல்ல. செய்தியை வாசிக்கவும். 🙂 பில் கிளிண்டன் வழக்கும் இந்த வழக்கும் மாறுபட்டவை 😁
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
இதுதான் எனது முடிவும்.
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
உலகில் அதிகமான உல்லாசப் பயணிகள் செல்லும் பிரான்சுக்கு ஒரு தடவை வாருங்கள். 🙂
-
வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்
துனிசியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரித்து வருகிறது. 2015 இல் இதேபோன்ற கடற்கரை விடுதியில் நுளைந்த ஒருவர் சரமாரியாகச் சுட்டு 39 உல்லாசப் பயணிகளைக் கொன்றிருந்தார். உல்லாசப் பயணிகள் அதிகமுள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளைப் போல் எல்லா இடங்களுக்கும் பயமின்றிச் செல்ல முடியுமா என்பது சந்தேகம். துனிசியாவுக்கு அருகில் இருக்கும் நாடு மொறோக்கோ வித்தியாசமானது. இங்கு புர்க்கா போட்ட பெண்களைக் காண்பது அரிது. தாவணியால் முட்டாக்குப் போடாத பெண்கள் வீதியில் உலாவுவதைச் சதாரணமாகப் பார்க்கலாம். கடற்கரை, பாலைவனச் சோலை, மலை போன்ற அனைத்தையும் பார்க்கலாம். இரண்டுமே முன்னர் பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
அண்மையில் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் உள்ள நண்பர் ஒருவர் தனது வீட்டு உறுதியைத் தொலைத்ததால் ஏதோ செய்து அதனைப் புதுப்பித்திருந்தார். அதனைத் தனது வெளிநாட்டில் பிரஜாவுரிமையோடு வழும் தனது பிள்ளையின் பெயருக்கு மாற்றியிருந்தார். இந்த இரு பத்திரங்களையும் பார்த்தபோது ஒரு சந்தேகம் வந்தது. இதில் ஒட்டப்பட்ட முத்திரை தவிர அரசாங்க இலச்சினை எதிலும் இல்லை. நொத்தாரிசின் பெயர் விலாசம் கூட மொட்டைக் கடிதம் போன்று சாதாரண ஒற்றையில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இது தவிர 4 தானத்தில் ஒரு இலக்கம் போடப்பட்டிருந்தது. கீழ்ப்புறம் அடிக்கப்பட்ட சீல் கூட Land Regisry - Jaffna என்று மட்டுமே இருந்தது. இந்த உறுதிப் பத்திரத்தை எப்படி நம்புவது ? இது என்ன விதத்தில் சட்ட ரீதியான உறுதிப்படுத்தலாக இருக்கும் ?
-
வவுனியா வைரவபுளியங்குளத்தில் மாபெரும் உழவர் சந்தை
வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
6 அல்ல 61 பில்லியன் என்றுதான் செய்தியில் உள்ளது. 🙂 மனதுக்குள் அடக்கி வைத்திருந்ததை வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். இந்த உதவிக்கான வாக்கெடுப்பில் பைடன் கட்சியினர் பெரும்பான்மையாக இல்லாதிருந்தும் ட்றம்ப் தரப்பிலிருந்த 101 பேர் உக்ரெய்னுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு ஏதோ புரிந்ததால்தானே எதிர்த்தரப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 😂
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இந்த ஈரானிய விஜயத்தில் ஈரானிய உள்துறை அமைச்சர் Ahmad Vahidi கூட வந்திருப்பதாகத் தெரிகிறது. ஆர்ஜெடீனா இவரைக் கைது செய்யுமாறு இலங்கையைக் கேட்டுள்ளது. இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குண்டுத் தாக்குதலில் தேடப்பட்டு வருபவர் என்று கூறப்படுகிறது. https://www.rfi.fr/fr/amériques/20240424-argentine-pakistan-sri-lanka-demande-arrêter-ahmad-vahini-ministre-interieur
-
வடக்கில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரிப்பு : மூலச்சக்திகள் யார்?
முன்பு ஒரு திரியில் எழுதியது, யாழில் சில தமிழ் அரசியல்வதிகள், வாள் வெட்டுக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகிய மூன்றும் ஒரு முக்கோணத் தொடர்புடையவை. போதைப்பொருள் பாவனையின் மூல சக்தி பற்றிப் பத்திரிகையில் நேரடியாக எழுத முடியது.
-
என் இந்தியப் பயணம்
கட்டுரைக்கு நன்றி அக்கா. இதிலுள்ள ஒரு பகுதி எனக்கு உபயோகமாக இருக்கலாம். 🙂
-
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெட்ரோல் நெருக்கடி ஏற்படும் அபாயம்
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான். 🙂